Tnpsc One Time Registration – Mistakes Correction
Tnpsc One Time Registration – Mistakes Correction
குரூப் 2 அறிவிக்கை விரைவில் வெளியாக உள்ளதால், உங்கள் Tnpsc One Time Registration இல் ஏதேனும் தவறு இருந்தால், மின் அஞ்சல் மூலமாகவோ, தொலைபேசி மூலம் தொடர்புகொண்டோ உடனே சரி செய்யுங்கள். குரூப் 2 அறிவிக்கை வெளியானால், அதிகாரிகளின் அதிக பணிசுமையின் காரணமாக கடைசி நேர விரயம் ஏற்படும்.
இதனை தவிர்க்க இப்போதே உங்கள் விவரங்களை சரிபார்த்து தவறாக இருப்பின் மின் அஞ்சல் மூலமாக சரி செய்யவும்.
ஒன்றுக்கு மேற்பட்ட one time registration account இருந்தால், உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம்.
எனவே உங்கள் பழைய One Time Registration User Name, Password விவரங்கள் இல்லாமல் இருந்தால், உடனே Tnpsc டோல் பிரீ எண்ணை தொடர்புகொண்டு வேண்டிய விவரங்களை கொடுத்து பெறவும்.
சமீபத்தில் ஒரு சகோதரி ஜாதி சான்றிதழ் வழங்கிய தேதி மற்றும் வழங்கிய அதிகாரி ஆகிய விவரங்களை சரி செய்தார். [ டோல் பிரீ எண்ணை தொடர்பு கொண்டு ஜாதி சான்றிதழ் ஸ்கேன் காப்பியை மின் அஞ்சல் மூலமாக அனுப்பி சரி செய்தார்.]
உங்களது விவரங்களை சரிபார்த்து, ஏதேனும் தவறுதலாக இருப்பின் , உடனே தேர்வாணைய அதிகாரிகளை தொடர்பு கொள்ளவும். தற்போது உடனே சரி செய்து தருகிறார்கள்.
மின் அஞ்சல் : contacttnpsc@gmail.com
Toll Free: +91-44-25300300, 1800 425 1002
Father name changed. SELVARAJ. For than corection name. SELVARASU . P