General Tamil Model Question Paper 16
61. தமிழகத்தை எழுபத்திரண்டு பாளையங்களாகப் பிரித்து ஆண்டவர்கள்
(அ) பாண்டியர்கள்
(ஆ) நாயக்கர்கள்
(இ) சேரர்கள்
(ஈ) சோழர்கள்
விடை மற்றும் விளக்கம்
(ஆ) நாயக்கர்கள்
62. “நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழில் நிறுத்துவோர்” – என ஓவியருக்கு இலக்கண உரை வகுத்தவர்
(அ) தொல்காப்பியர்
(ஆ) அடியார்க்கு நல்லார்
(இ) நச்சினார்க்கினியர்
(ஈ) அகத்தியர்
விடை மற்றும் விளக்கம்
(இ) நச்சினார்க்கினியர்
63. சரியான விடையைத் தேர்ந்தெடு
கீழ் உள்ளவற்றுள் தமிழ்நாட்டில் பறவைகள் புகலிடங்களுள் ஒன்று
(அ) திருநின்றவூர்
(அ) கரூர்
(இ) வடுவூர்
(ஈ) பேரூர்
விடை மற்றும் விளக்கம்
(இ) வடுவூர்
64. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனாரின் பட்டப்பெயர்
(அ) புரட்சிக் கவிஞர்
(ஆ) உவமைக் கவிஞர்
(இ) மக்கள் கவிஞர்
(ஈ) இயற்கைக் கவிஞர்
விடை மற்றும் விளக்கம்
(இ) மக்கள் கவிஞர்
65. தோம்பாவணியியல் “வளன்” என்னும் பெயர்ச்சொல்லால் குறிக்கப்படுபவர்
(அ) இயேசு கிறிஸ்து
(ஆ) சூசை மாமுனிவர்
(இ) தாவீது
(ஈ) கோலியாத்து
விடை மற்றும் விளக்கம்
(ஆ) சூசை மாமுனிவர்
66. “நான் தனியாக வாழவில்லை; தமிழோடு வாழ்கிறேன்” எனக் கூறியவர்
(அ) நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை
(ஆ) இராமலிங்க அடிகளார்
(இ) திரு.வி.கல்யாண சுந்தரனார்
(ஈ) பேரறிஞர் அண்ணா
விடை மற்றும் விளக்கம்
(இ) திரு.வி.கல்யாண சுந்தரனார்
67. பேராயக் (காங்கிரஸ்) கட்சியிலிருந்து விலகிய பின், தந்தை பெரியார் தம்மை இணைத்துக் கொண்ட இயக்கம்
(அ) நீதிக்கட்சி
(ஆ) சுயராஜ்ஜியக் கட்சி
(இ) திரவிடர் கழகம்
(ஈ) பொதுவுடைமைக் கட்சி
விடை மற்றும் விளக்கம்
(அ) நீதிக்கட்சி
68. கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள் யாருடைய ஞானாசிரியர்?
(அ) பெ.சுந்தரம் பிள்ளை
(ஆ) தெ.பா.மீனாட்சி சுந்தரம் பிள்ளை
(இ) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
(ஈ) ரா.பி.சேதுப்பிள்ளை
விடை மற்றும் விளக்கம்
(அ) பெ.சுந்தரம் பிள்ளை
விளக்கம்:
பாண்டிய நாட்டு மன்னாகிய சீவகவழுதியின் மகள் மனோன்மணியின் வரலாற்றைக் கூறும் நாடக நூல் “மனோன்மணீயம்” ஆகும். இந்நூல் ஆங்கிலத்தில் லிட்டன் பிரபு என்பார் இயற்றிய “இரகசிய வழி” என்னும் நூலைத் தழுவி இயற்றப்பபெற்றதாகும். இது செய்யுள் வடிவிலான நாடக நூலாகும். இதன் ஆசிரியர் பெ.சுந்தரம்பிள்னை ஆவார். இவர் நெல்லையில் ஓர் உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றிய போது கோடக நல்லூர் சுந்தர முனிவரை ஞானாசிரியராகக் கொண்டு தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டு அவரின் மாணவரானார்.
69. புத்தபிரானின் பாதத்தில் எத்தனை சக்கர ரேகை உண்டு எனச் சாத்தனார் புகழ்கிறார்?
(அ) 100
(ஆ) 1,000
(இ) 500
(ஈ) 900
விடை மற்றும் விளக்கம்
(ஆ) 1,000
விளக்கம்:
மணிமேகலை காப்பியத்தில் “மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய பாதை”யில் 12-வது பாடல் மணிமேகலா தெய்வம் புத்தர் பிரானைப் போற்றி வணங்கியதாக அமைந்துள்ளது.
“ஆயிர வாரத்து ஆழியந் திருந்தடி,
நாவா யிரமிலேன் ஏத்துவது எவனோ?
– சீத்தலைச் சாத்தனார்.
பொருள்: ஆயிரம் ஆரக்கால்களோடு கூடிய சக்கர ரேகையினை உடைய உன் அழகிய திருவடிகளை ஆயிரம் நாவுகள் இல்லாமல் ஒரே நாவினைக் கொண்ட நான் புகழ்ந்து பாராட்டுவது எவ்வாறு?
70. “களையாத துன்பம் இக்காரிகைக்குக் காட்டி வளையாத செங்கோல் வளைந்தது இதுவென் கொல்” – இங்ஙனம் கூறியவர்.
(அ) மதுரை மக்கள்
(ஆ) கவுந்தி அடிகள்
(இ) சீத்தலைச் சாத்தனார்
(ஈ) கண்ணகி
விடை மற்றும் விளக்கம்
(அ) மதுரை மக்கள்
விளக்கம்:
“களையாத துன்பம் இக்காரிகைக்குக் காட்டி
வளையாத செங்கோல் வளைந்தது
இதுவென் கொல்”
சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டத்தின்கண் அமைந்துள்ள ஊர் சூழ்வரியில் மேற்கண்ட பாடலடிகள் அமைந்துள்ளன.
பொருள்: அழுது புலம்புகின்ற கண்ணகியைக் கண்டு கலங்கிய மதுரை நகரத்து மக்கள், “எவராலும் நீக்க முடியாத இத்துன்பத்தினை இக்காரிகைக்குச் செய்து என்றும் வளையாத செங்கோலானது வளைந்தது. இஃது எக்காரணத்தால் நிகழ்ந்ததோ? என்று கூறி புலம்புகின்றனர்