General Tamil Model Question Paper 16
21. “ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே”
– எனும் பாடலடிகள் இடம்பெற்ற நூல்
(அ) குறுந்தொகை
(ஆ) புறநானூறு
(இ) பதிற்றுப்பத்து
(ஈ) பத்துப்பாட்டு
விடை மற்றும் விளக்கம்
(ஆ) புறநானூறு
விளக்கம்:
புறநானூறு —312ஆம் பாடல்
“ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கி, களிறு எறிந்து
பெயர்தல் காளைக்குக் கடனே.
ஆசிரியர்:பொன்முடியார்.
திணை:வாகை.
துறை:மூதின்முல்லை
22. “மேற்கணக்கு நூல்கள்” என்று அழைக்கப்படுபவை
(அ) எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும்
(ஆ) நீதி இலக்கியம்
(இ) பக்தி இலக்கியம்
(ஈ) இக்கால இலக்கியம்
விடை மற்றும் விளக்கம்
(அ) எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும்
விளக்கம்:
மேற்கணக்கு நூல்கள்: எட்டுத்தொகை, பத்துப்பாட்டு.
எட்டுத்தொகை – நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், அகநானூறு, புறநானூறு, கலித்தொகை. (பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு புலவர்களால் பாடப்பட்டவை)
பத்துப்பாட்டு:
நூல் ஆசிரியர்
திருமுருகாற்றுப்படை 1.நக்கீரர்
பொருநராற்றுப்படை 2. முடத்தாமக் கண்ணியார்
பெரும்பாணாற்றுப்படை 3. கடியலூர் உருத்திரங்கண்ணனார்
சிறுபாணாற்றுப்படை 4. நல்லூர் நத்தத்தனார்
மலைபடுகடாம் (அ) கூத்தராற்றுப்படை 5. பெருங்கௌசிகனார்
முல்லைப்பாட்டு 6. நப்பூதனார்
குறிஞ்சிப்பாட்டு 7. கபிலர்
பட்டினப்பாலை 8. கடியலூர் உருத்திரங்கண்ணனார்
நெடுநல்வாடை 9. நக்கீரர்
மதுரைக்காஞ்சி 10. மாங்குடி மருதனார்
23. ஐராவதீசுவரர் கோயிலைக் கட்டிய அரசன்
(அ) இரண்டாம் இராசராசன்
(ஆ) இராசேந்திரன்
(இ) குலோத்துங்கன்
(ஈ) கிள்ளி வளவன்
விடை மற்றும் விளக்கம்
(அ) இரண்டாம் இராசராசன்
விளக்கம்:
கும்பகோணத்தின் தென்புறம் பாயும் நதி அரிசிலாறு (அரசலாறு) ஆகும். அரிசிலாற்றின் தென்கரையில் தாரசுரம் உள்ளது. அங்குள்ள ஐராவதீசுவரர் ஆலயத்தை இரண்டாம் இராசராச சோழன் கட்டினார். யுனெஸ்கோ இக்கோயிலை மரபு அடையாளச் சின்னமாக அறிவித்துள்ளது.
24. பறவைகள் இடம்விட்டு இடம் பெயர்வதை ———- என்பர்.
(அ) இடம் பெயர்தல்
(ஆ) புலம் பெயர்தல்
(இ) வலசை போதல்
(ஈ) ஊர்விட்டு ஊர் செல்லல்
விடை மற்றும் விளக்கம்
(இ) வலசை போதல்
விளக்கம்:
பருவநிலை மாற்றத்தால் பறவைகள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்வது “வலசை போதல்” என அழைக்கப்படுகிறது.
25. சிறுபஞ்சமூலத்தில் கடவுள் வாழ்த்துடன் எத்தனை வெண்பாக்கள் உள்ளன?
(அ) தொண்ணூறு
(ஆ) தொண்ணூற்றேழு
(இ) நூறு
(ஈ) ஐம்பது
விடை மற்றும் விளக்கம்
(ஆ) தொண்ணூற்றேழு
விளக்கம்:
சிறுபஞ்சமூலம் என்ற நூலை எழுதியவர் காரியாசான். இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர். கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சில் ஆகியவற்றின் வேர்கள் சேர்ந்து மருந்தாகி நோய்களைத் தீர்ப்பது போல, இந்நூற் பாடல் ஒவ்வொன்றிலும் அமைந்துள்ள ஐந்தைந்து அரிய கருத்துகள் ஒவ்வொருவரின் கடமைகளைக் கூறுகின்றன. கடவுள் வாழ்த்துடன் சேர்த்து 97 பாடல்கள் உள்ளன.
26.”நவ்வி” எனும் சொல்லின் பொருள்
(அ) மான்
(ஆ) நாய்
(இ) நரி
(ஈ) செந்நாய்
விடை மற்றும் விளக்கம்
(அ) மான்
27. தமிழில் காணும் முதல் சித்தர்
(அ) திருமூலர்
(ஆ) அருணகிரிநாதர்
(இ) தாயுமானவர்
(ஈ) வள்ளலார்
விடை மற்றும் விளக்கம்
(அ) திருமூலர்
28. பொருத்துக:
அ. வண்டு – 1.குனுகும்
ஆ. புறா – 2. அலப்பும்
இ. பூனை – 3. முரலும்
ஈ. குரங்கு – 4. சீறும்
அ ஆ இ ஈ
அ. 3 1 4 2
ஆ. 1 2 4 3
இ. 2 4 3 1
ஈ. 4 3 2 1
விடை மற்றும் விளக்கம்
அ. 3 1 4 2
29. தென்னாப்பிரிக்க நாட்டில் இந்தியரின் நலனுக்காகப் போராடிய வீரத்தமிழ் மங்கை
(அ) ஈ.வெ.ரா.மணியம்மை
(ஆ) கஸ்தூரிபாய்
(இ) வேலுநாச்சியார்
(ஈ) தில்லையாடி வள்ளியம்மை
விடை மற்றும் விளக்கம்
(ஈ) தில்லையாடி வள்ளியம்மை
விளக்கம்:
தில்லையாடி வள்ளியம்மை:
தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்கள் காந்தியடிகளின் தலைமையில் தமது வாழ்வுரிமையை மீட்க அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரது வீரம் செறிந்த உரையால் ஈர்க்கப்பட்டு சிறுமி வள்ளியம்மை தம் இளம் வயதிலேயே அறப்போராட்டத்தில் பங்கேற்று அதன் விளைவாக சிறை சென்றார். சிறையில் அனுபவித்த கொடுமைகளால் உடல்நலம் பாதிக்கப்பட்டு தம் 16-வது அகவையில் (1913, பிப்ரவரி 22) மரணமடைந்தார்.
தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம் என்ற தமது நூலில் காந்தியடிகள், “தென்னாப்பிரிக்க வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும்” என்று கூறியுள்ளார்.
30. மணிமேகலையில் உள்ள காதைகளின் எண்ணிக்கை
(அ) 10
(ஆ) 20
(இ) 30
(ஈ) 40
விடை மற்றும் விளக்கம்
(இ) 30
விளக்கம்:
மணிமேகலை, ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாகும். கோவலன்-மாதவி ஆகியோரின் மகளாகிய மணிமேலையின் வரலாற்றைக் கூறும் காப்பியமாதலின், இந்நூல் இப்பெயர் பெற்றது. “மணிமேகலை துறவு” என்றும் இது வழங்கப்பெறும். மணிமேகலையும், சிலப்பதிகாரமும் ஒரே கதைத் தொடர்புடையன. எனவே, இவை “இரட்டைக்காப்பியங்கள்” என வழங்கப்பெறும். இது 30 காதைகளை உடையது. இதன் ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார்