Tnpsc General Tamil Previous Question Paper 15
81. “ஐவர் கடமை” யை உணர்த்தும் நூல்
(அ) புறநானூறு
(ஆ) இனியவை நாற்பது
(இ) ஏலாதி
(ஈ) கார்நாற்பது
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) புறநானூறு
புறநானூறு
“ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே”
– பொன்முடியார்.
ஐவரின் கடமைகள்:
1.பெற்ற மகனைப் பேணிக்காத்தல் தாயின் கடமை.
2.மகனைப் படிக்க வைத்து சான்றோன் ஆக்குதல் தந்தையின் கடமை.
3. போர்புரி வேலை வடித்துக் கொடுத்தல் ஊர்க் கொல்லனின் கடமை.
4. நன்னடத்தை உள்ளவனாக விளங்கச் செய்தல் வேந்தனின் கடமை.
5. வாளைச் சுழற்றிப் போர்க்களத்தில், பகைவேந்தனின் யானையை வீழ்த்திவிட்டு வெற்றியுடன் வருதல் மகனாகிய காளையின் கடமை.
82. தாயுமானவரின் மனைவி பெயர்
(அ) மட்டுவார்குழலி
(ஆ) கெஜவல்லி
(இ) கமலாம்பிகை
(ஈ) செல்லம்மாள்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) மட்டுவார்குழலி
தாயுமானவரின் மனைவி பெயர் மட்டுவார்குழலி; தந்தை பெயர் கேடிலியப்பர்; தாயார் பெயர் கெஜவல்லி அம்மையார். இவரது காலம் கி.பி.18-ஆம் நூற்றாண்டு ஆகும்.
83. “பிரபந்தம்” என்பதன் பொருள்
(அ) நன்கு கட்டப்பட்டது
(ஆ) நன்கு எழுதப்பட்டது
(இ) நன்கு பின்னப்பட்டது
(ஈ) நன்கு செதுக்கப்பட்டது
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) நன்கு கட்டப்பட்டது
“சிற்றிலக்கியம்” என்ற சொல்லாட்சி வருவதற்கு முன் “பிரபந்தம்” என்ற சொல்லே வழக்கிலிருந்தது. “பிரபந்தம்” என்ற வடசொல்லுக்கு “நன்கு கட்டப்பட்டது” என்பது பொருளாகும்.
84. 17-சரியான தமிழ் எண்ணை எழுதுக:
(அ) க0
(ஆ) கரு
(இ) கக
(ஈ) கஎ
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) கஎ
க-1 0-பூஜ்ஜயம் — க0 – 10.
க-1 ரு-5 — கரு-15.
க-1 க-1—கக-11.
க-1 எ-7 — கஎ-17
85. நாலடியார் – நூலின் ஆசிரியர்
(அ) வள்ளுவர்
(ஆ) சுந்தரர்
(இ) விளம்பிநாகனார்
(ஈ) சமண முனிவர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) சமண முனிவர்
பதிணெண்கிழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான “நாலடியார்” என்ற நூலை இயற்றியவர்கள் சமண முனிவர்கள் ஆவர்.
விளம்பிநாகனார் இயற்றிய நூல் “நான்மணிக்கடிகை” ஆகும்.
சுந்தரர் இயற்றிய நூல் “திருத்தொண்டத்தொகை” ஆகும்.
வள்ளுவர் இயற்றிய நூல் “திருக்குறள்” ஆகும்.
86. “சாலைகளில் பல தொழில்கள் பெருக வேண்டும்
சபைகளிலே தமிழெழுத்து முழங்க வேண்டும்”
– என்ற பாடல் வரிகளை இயற்றிய கவிஞர்
(அ) கவிமணி
(ஆ) நாமக்கல் கவிஞர்
(இ) பாரதியார்
(ஈ) பாரதிதாசன்
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) கவிமணி
87. பழங்காலப் பண்பாட்டின் எச்சம் எனக் கருதப்படுபவை
(அ) திரைஇசைப் பாடல்கள்
(ஆ) புதுக்கவிதைகள்
(இ) மரபுசார்ந்த பாடல்கள்
(ஈ) நாட்டுப்புறப் பாடல்கள்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஈ) நாட்டுப்புறப் பாடல்கள்
88. “கலிப்பா” ———– ஓசையைக் கொண்டது
(அ) செப்பல்
(ஆ) அகவல்
(இ) தூங்கல்
(ஈ) துள்ளல்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) துள்ளல்
பாவகை ஓசை
வெண்பா செப்பலோசை
ஆசிரியப்பா அகவலோசை
கலிப்பா துள்ளலோசை
வஞ்சிப்பா தூங்கலோசை
89. பொருத்துக:
பட்டியல் I – பட்டியல் II
அ. ஈரீவளை – 1.பண்புத்தொகை
ஆ. மாமலை – 2. ஏழாம் வேற்றுமைத்தொகை
இ. தண்குடை – 3. உரிச்சொல் தொடர்
ஈ. கையேந்தி – 4. வினைத்தொகை
அ ஆ இ ஈ
அ. 1 3 4 2
ஆ. 3 1 2 4
இ. 2 4 3 1
ஈ. 4 3 1 2
விடை மற்றும் விளக்கம்
விடை: ஈ. 4 3 1 2
90. இன்புற்றார் எய்தும் சிறப்பு – என்ற வரி இடம் பெற்ற நூல்
(அ) சிறுபஞ்சமூலம்
(ஆ) திருக்குறள்
(இ) ஏலாதி
(ஈ) நாலடியார்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) திருக்குறள்
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்துஞ் சிறப்பு.
நூல்: திருக்குறள்.
அதிகார எண்:8.
அதிகாரம்:அன்புடைமை.
பிரிவு: அறத்துப்பால்.
இயல்: இல்லறவியல்.
பொருள்: உலகில் இன்புற்று வாழ்கின்றவர் எய்தும் சிறப்பு, அன்புடையவராய் பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயனே என்று கூறுவர்.