Tnpsc General Tamil Previous Question Paper 15
71. உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தமிழாகத் தான் இருத்தல் வேண்டும் என்ற மொழியியல் அறிஞர்
(அ) கால்டுவெல்
(ஆ) நோம் சாம்சுகி
(இ) கபில் சுவலபில்
(ஈ) மாக்சு முல்லர்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) நோம் சாம்சுகி
72. “தமிழரசி குறவஞ்சியை” இயற்றியவர்
(அ) நாமக்கல் கவிஞர்
(ஆ) ஞானியரடிகள்
(இ) பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்
(ஈ) வரத நஞ்சையப்பிள்ளை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) வரத நஞ்சையப்பிள்ளை
“தமிழரசி குறவஞ்சி’ என்ற நூலை இயற்றியவர் அ.வரதநஞ்சையப்பிள்ளை ஆவார். இவரது காலம் 01.09.1877 முதல் 11.07.1956 வரையாகும். இவரது சிறப்புப் பெயர்கள் ஞானதீபக் கவிராயர், அண்ணாவியார் என்பனவாகும். வடமொழி, தெலுங்கு ஆகிய மொழிகளில் புலமைபெற்றிருந்தார். சுரந்தைத் தழிழ்ச் சங்கத்தில் “ஆசிரியர்” பட்டம் பெற்றவர். சுரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் நமச்சிவாய முதலியார் தலைமையில் “தங்கத்தோடா” பரிசளிக்கப் பெற்றார். தமிழவேள் உமாமகேசுவரனார் இவரிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இவர் தமிழரசி குறவஞ்சியை இயற்றினார். அந்நூலைக் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் வெள்ளி விழாவின் போது ஞானியாரடிகள் தலைமையில் அரங்கேற்றினார். தமிழரசி குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவன் சுவாமிமலையில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் ஆவார்.
73. “தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த” இவ்வரிகள் இடம் பெற்றுள் பாடல்
(அ) அகநானூறு
(ஆ) புறநானூறு
(இ) பதிற்றுப்பத்து
(ஈ) சிலப்பதிகாரம்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) பதிற்றுப்பத்து
“தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த” என்ற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் பதிற்றுப்பத்து ஆகும். இவ்வரிகள் பண்டைத் தமிழரின் பொறியியல் அறிவினை எடுத்துக் காட்டுகின்றன. பழந்தமிழகத்தில் கரும்பைப் பிழிவதற்கு எந்திரங்கள் இருந்தன என்பதை அவ்வரிகள் கூறுகின்றன.
74. “நீ மீண்டும் தோன்றிய பாரதியடா” என்று கல்யாண சுந்தரத்தை பாராட்டியவர்
(அ) மருதகாசி
(ஆ) சுரதா
(இ) உடுமலை நாராயண கவி
(ஈ) தோழர் ஜீவானந்தம்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) தோழர் ஜீவானந்தம்
தேனாறு பாயுது செங்கதிரும் சாயுது. ஆனாலும் மக்கள் வயிறு காயுது” என்ற பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடலைக் கேட்ட ஜீவானந்தம் அவர்கள் “நீ மீண்டும் தோன்றிய பாரதியடா” என்று கல்யாண சுந்தரத்தைப் பாராட்டினார்
75. “தேசியம் காத்த செம்மல்” என்று பாராட்டப் பெற்றவர் யார்?
(அ) திரு.வி.க
(ஆ) மறைமலையடிகள்
(இ) பெருஞ்சித்திரனார்
(ஈ) முத்துராமலிங்கர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) முத்துராமலிங்கர்
“தேசியம் காத்த செம்மல்” என்று பாராட்டப்பெறுபவர் முத்துராமலிங்த் தேவர் ஆவார். இவருக்கு இப்பட்டத்தை வழங்கியவர் திரு.வி.கல்யாண சுந்தரனார் ஆவார்.
76. “தன்னே ரிலாத தமிழ்” – இத்தொடர் இடம்பெற்ற நூல்
(அ) திருக்குறள்
(ஆ) தொல்காப்பியம்
(இ) தண்டியலங்காரம்
(ஈ) நன்னூல்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) தண்டியலங்காரம்
“ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி”
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரோன் றேனையது
தன்னே ரிலாத் தமிழ்”
– தண்டியலங்காரம்.
77. “உலகின் முதல் இரு முறைமைகளைப் பற்றிய உரையாடல்” என்னும் நூல் வெளிவந்த ஆண்டு
(அ) 1638
(ஆ) 1642
(இ) 1632
(ஈ) 1616
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) 1632
78. நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற – இதில் பயின்று வரும் அணி
(அ) இரட்டுறமொழிதல் அணி
(ஆ) சொற்பொருட் பின்வரு நிலையணி
(இ) தற்குறிப்பேற்ற அணி
(ஈ) பிறிதுமொழிதல் அணி
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) பிறிதுமொழிதல் அணி
பிறிதுமொழிதல் அணி
புலவன் தான் கருதிய பொருளை அப்படியே கூறாமல் மறைத்து, அதனை விளக்குவதற்கு அதனைப் போன்ற பிறிதொன்றினைக் கூறி விளக்குவதற்கு பிறிதுமொழிதல் அணி என்று பெயராகும்.
எ.கா: நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற
– திருக்குறள் 495.
அதிகாரம் – இடனறிதல்.
கூறப்பட்ட கருத்து: ஆழமான நீரினுள் முதலை மற்ற உயிர்களை வெல்லும். ஆனால் நீரிலிருந்து நீங்கி வெளியே வந்தால் அந்த முதலையை பிற உயிர்கள் கொன்று விடும்.
விளக்க வந்த கருத்து: நாம் நம் பலமறிந்து அதற்கேற்ற களமறிந்து எதிரிகளை எதிர்கொள்ள வேண்டும். களமறியாமல் நமது பலத்தை வெளிக்காட்ட முடியாத இடத்தைத் தேர்வு செய்தால் அது பகைவருக்கு சாதகமாகி விடும்.
79. “பகுததறிவுக் கவிராயர்” எனத் தமிழக மக்களால் அழைக்கப்படுபவர்
(அ) பெரியார்
(ஆ) அண்ணா
(இ) பாரதியார்
(ஈ) உடுமலை நாராயண கவி
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) உடுமலை நாராயண கவி
“பகுத்தறிவுக் கவிராயர்” எனத் தமிழக மக்களால் அழைக்கப்பட்டவர் உடுமலை நாராயண கவி ஆவார். பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் சமுதாயப் பாடல்களை எழுதி சீர்திருத்தக் கருத்துகளை பரப்பியதால் இவரை தமிழக மக்களால் பகுத்தறிவுக் கவிராயர் என அழைக்கப்பட்டார்.
80. “ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம்
ஓதலில் சிறந்தன்(று) ஒழுக்கம் உடைமை” – இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்
(அ) அறவுரைக்கோவை
(ஆ) புறநானூறு
(இ) நன்னெறி
(ஈ) நற்றிணை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) அறவுரைக்கோவை
“அறவுரைக்கோவை” எனப்படுவது முதுமொழிக்காஞ்சி என்ற நூலாகும். இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். நீதி நூல்களில் மிகச் சிறிய நூல் இதுவாகும். பத்து பத்துப் பாக்களாக அமைந்துள்ள 10 அதிகாரங்கள் உடைய நூலாகும். ஒவ்வொரு பத்தின் முதலடியும் “ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம்” எனத் தொடங்குகிறது. இந்நூலை இயற்றியவர் கூடலூர்க்கிழார் ஆவார்.