Tnpsc General Tamil Previous Question Paper 15
41. இவற்றுள் எத்தொடர் வள்ளலார் கூறாதத் தொடராகும்?
(அ) குருவை வணங்க கூசி நிற்காதே
(ஆ) நல்லோர் மனதை நடுங்கச் செய்யாதே
(இ) கோனோக்கி வாழும் குடிபோல் நிற்காதே
(ஈ) பசித்தோர் முகத்தைப் பாராதிராதே
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) கோனோக்கி வாழும் குடிபோல் நிற்காதே
42. “உலாமடல்” என்னும் நூலின் ஆசிரியர்
(அ) ஒட்டக்கூத்தர்
(ஆ) ஜெயங்கொண்டார்
(இ) கம்பர்
(ஈ) பெருஞ்சித்திரனார்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) ஜெயங்கொண்டார்
கலிங்கத்துப்பரணி என்ற காப்பியத்தை இயற்றியவர் ஜெயங்கொண்டார். இவர் முதன்முதலில் “பரணி” பாடிய பெருமைக்குரியவர். இவர் இயற்றிய பிற நூல்கள் இசையாயிரம், உலாமடல் ஆகியவையாகும்.
43. உதடுகள் இரண்டும் பொருந்துவதனால் பிறக்கும் எழுத்துகள்
(அ) க் ங்
(ஆ) ஞ்ட்
(இ) ய் ர்
(ஈ) ப் ம்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) ப் ம்
ப், ம் – மேல் உதடும் கீழ் உதடும் பொருந்த இவை தோன்றும்.
க், ங் – இவ்விரு மெய்களும் நாவினது முதற்பகுதி அண்ணத்தைத் தொடுவதால் தோன்றுகின்றன.
ச், ஞ் – இவ்விரு மெய்களும் இடைநா, நடு அண்ணத்தைத் தொடுவதனால் பிறக்கின்றன.
ட், ண் – இவை நாவினது நுனி, அண்ணத்தின் நுனியைத் தொடுவதனால் பிறக்கின்றன.
ய் – இது நாக்கின் அடிப்பகுதி, மேல்வாயின் அடிப்பகுதியைப் பொருந்துவதனால் தோன்றுகிறது.
ர், ழ் – இவை மேல் வாயை நாக்கின் நுனி தடவுவதனால் பிறக்கின்றன.
44. உ.வே.சா. அவர்களின் தமிழ்ப் பணியைப் பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள்
(அ) கால்டுவெல் – கெல்லட்
(ஆ) கமில் கவலபில் – மாக்கமுல்லர்
(இ) ஜி.யூ.போப் – சூலியஸ் வின்சோன்
(ஈ) ஹிப்பாலஸ் – பிளைநி
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) ஜி.யூ.போப் – சூலியஸ் வின்சோன்
45. கண்ணன் என்பது ———– பகுபதம் ஆகும்.
(அ) பொருட்பெயர்
(ஆ) சினைப்பெயர்
(இ) பண்புப்பெயர்
(ஈ) வினைப்பெயர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) சினைப்பெயர்
பொன்னன் – பொருட்பெயர்.
குற்றாலத்தான் – இடப்பெயர்.
அமாவாசையான் – காலப்பெயர்.
கண்ணன் – சினைப்பெயர்.
நல்லன் – பண்புப்பெயர்.
இன்சொல்லன் – தொழிற்பெயர்.
46. நான், யான் என்பன
(அ) தன்மை ஒருமைப் பெயர்கள்
(ஆ) தன்மைப் பன்மைப் பெயர்கள்
(இ) படர்க்கைப் பெயர்கள்
(ஈ) முன்னிலைப் பெயர்கள்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) தன்மை ஒருமைப் பெயர்கள்
நான், யான் – தன்மை ஒருமைப் பெயர்கள்.
நாங்கள், யாங்கள் – தன்மைப் பன்மைப் பெயர்கள்.
அவன், அவள், அவர்கள் – படர்க்கைப் பெயர்கள்.
நீ, நீங்கள் – முன்னிலைப் பெயர்கள்.
47. “உயிர்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி கூறும நூல்”
(அ) திருக்குறள்
(ஆ) பதிற்றுப்பத்து
(இ) புறநானூறு
(ஈ) திருவாசகம்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) திருவாசகம்
திருவாசகம்.
புல்லாகிப் பூடாய்ப் புழவாய்மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப்பாம்பாகி
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்
எம்பெருமான் மெய்யே உன் பொன்னடிகள்
கண்டு இன்று வீடு உற்றேன்.
– மாணிக்கவாசகர்.
மேற்கண்ட பாடலில் ஓரறிவு முதல் ஆறறிவு வரையுள்ள பரிணாம வளர்ச்சி பற்றிக் கூறப்பட்டுள்ளது.
48. மேரி கியூரி – பியரி கியூரி இணையர் இணைந்து நோபல் பரிசு பெற்ற ஆண்டு எது?
(அ) 1911
(ஆ) 1934
(இ) 1903
(ஈ) 1905
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) 1903
அறிவியல் மேதை ஏ.எச்.பெக்காரல் என்பருடன், மேரி கியூரியும் அவரது கணவர் பியரி கியூரியும் இயற்பியலில் ஆராய்ச்சியை மேற்கொண்டனர். முதலில் கணவன்-மனைவி இருவரும் பொலோனியம் என்னும் தனிமப் பொருளைக் கண்டுபிடித்தனர். அதன் பிறகு 2 ஆண்டுகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து, ரேடியம் என்னும் தனிமப் பொருளைக் கண்டுபிடித்தனர். இவ்விரண்டு அரிய கண்டுபிடிப்புகளுக்காக ஏ.எச்.பெக்காரலுக்கும் பியரி கியூரி-மேரி கியூரி இணையருக்கும் 1903-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பிரித்து வழங்கப்பட்டது. நோபல் பரிசு வரலாற்றில் பரிசு பெற்ற முதற்பெண்மணி மேரி கியூரி ஆவார். கணவர் இறந்த பின்பு வேதியியலில் ஆராய்ச்சிகள் பல செய்து ரேடியத்தின் அணு எடையைக் கண்டுபிடித்தார். அதற்காக அவருக்கு 1911-ஆம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
49. தமிழக அரசின் முல் அரசவைக் கவிஞர்யார்?
(அ) கவிஞர் முத்துலிங்கம்
(ஆ) கவியரசர் கண்ணதாசன்
(இ) கவிஞர் வெ.இராமலிங்கனார்
(ஈ) கவிஞர் பாரதிதாசன்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) கவிஞர் வெ.இராமலிங்கனார்
தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் நாமக்கல் இராமலிங்கனார் ஆவார். இவரை அரசவைக் கவிஞராக நியமித்தவர் அன்றைய தமிழக முதலமைச்சர் இராஜாஜி ஆவார். இவர் அரசவைக் கவிஞராக நியமனம் பெற்றபோது, “இந்த சமயத்தில் பாரதி இல்லையே என்று ஏங்கினேன். அந்தக்குறையை நீங்கள் நீக்கிவிட்டீர்கள்” என்று இராஜாஜி கூறினார்
50. அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கிய ஆண்டு எது?
(அ) 1956
(ஆ) 1986
(இ) 1990
(ஈ) 1927
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) 1990