Tnpsc General Tamil Previous Question Paper 15
31. பொருத்துக:
அ. ஒப்புரவு – 1.சான்றாண்மை
ஆ. சால்பு – 2. உதவுதல்
இ. மாற்றார் – 3. உரைகல்
ஈ. கட்டளை – 4. பகைவர்
அ ஆ இ ஈ
அ. 2 4 1 3
ஆ. 4 3 2 1
இ. 3 1 4 2
ஈ. 2 1 4 3
விடை மற்றும் விளக்கம்
விடை: ஈ. 2 1 4 3
32. “சரசுவதி பண்டாரம்” என அழைக்கப்படுவது
(அ) தமிழ் நூல்
(ஆ) பிற நூல்
(இ) புத்தகசாலை
(ஈ) பாடல் வகை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) புத்தகசாலை
“புத்தகசாலை” என்னும் பொருளைத் தரும் சொற்கள்:
பண்டாரம், சரசுவதி பண்டாரம், புத்தக பண்டாரம், ஏடகம், கவடிச்சாலை, கவடியகம், நூலகம், நூல் நிலையம்.
33. “நோய்க்கு மருந்து இலக்கியம்” என்று கூறியவர்
(அ) உ.வே. சாமிநாதர்
(ஆ) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
(இ) மறைமலையடிகள்
(ஈ) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்
விடை: (ஆ) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
34. “தென்னாட்டின் ஜான்சிராணி” என்று காந்தியடிகள் அழைத்தது யாரை?
(அ) வேலுநாச்சியார்
(ஆ) அஞ்சலையம்மாள்
(இ) அப்புஜத்தம்மாள்
(ஈ) ருக்மணி
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) அஞ்சலையம்மாள்
அஞ்சலையம்மாள் இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனைகளுள் ஒருவராவார். இவர் கடலூரில் 1890-இல் பிறந்தவர். நீலன் சிலையை அகற்றும் போராட்டம், உப்பு காய்ச்சும் போராட்டம், தனியாள் போராட்டம், வெள்ளையனே வெளியேறு போராட்டம் முதலியவற்றில் கலந்து கொண்டு சிறை சென்றார். விடுதலைப் போராட்டத்திற்காக தன் சொத்துக்கள் அனைத்தையும் விற்று செலவு செய்தார். நீலன் சிலையை அகற்றும் போராட்டத்தில் கலந்து கொண்டதால் ஆங்கிலேய அரசு இவரையும் இவரது ஒன்பது வயது மகள் அம்மா கண்ணுவையும் கைது செய்து சிறையில் அடைத்தது. சிறையிலிருந்த அம்மாகண்ணுவை காந்தியடிகள் வெளியே கொண்டு வந்து, தன்னுடைய வார்தா ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று “லீலாவதி” எனப் பெயரிட்டு படிக்க வைத்தார். காந்தியடிகள் ஒருமுறை கடலூருக்கு வந்த பொழுது, அவரைச் சந்திப்பதற்கு ஆங்கிலேய அரசு அஞ்சலையம்மாளுக்குத் தடை விதித்தது. அதனால், அவர் பர்தா வேடமணிந்து குதிரை வண்டியில் காந்தியடிகளை ஏற்றிச் சென்றார். எனவே காந்தியடிகள் அஞ்சலையம்மாளைத் “தென்னாட்டின் ஜான்ஸிராணி” என்றழைத்தார்.
35. ஆற்றுணா வேண்டுவது இல் – இவ்வடியின் பொருள்
(அ) கற்றவனுக்குச் சோறு வேண்டா
(ஆ) கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா
(இ) கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டும்
(ஈ) கல்லாதவனுக்குக் கட்டுச்சோறு வேண்டாம்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா
பழமொழி நானூறு
ஆற்றவும் கற்றார் அறிவுடையார்; அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை; அந்நாடு
வேற்றுநாடு ஆகா; தமவேயாம்; ஆயினால்
ஆற்றுணா வேண்டுவது இல்.
– முன்றுறை அரையனார்.
பொருள்: கற்க வேண்டிய நூல்களை நிறைவாகக் கற்றவர் அறிவுடையவர் ஆவார். அவருடைய புகழ் நான்கு திசைகளிலும் பரவும். அவருடைய புகழ் பரவாத நாடு இல்லை. அந்த நாடுகள் எல்லாம் வேற்று நாடுகள் இல்லை. தம்முடைய நாடுகளே. எனவே, அந்நாடுகளுக்குச் செல்லும் போது வழி நடை உணவை, அவர் எடுத்துச் செல்ல வேண்டிய தேவையில்லை.
36. “வருகை” என்பது ——— பருவத்தைக் குறிக்கும்
(அ) மூன்றாவது
(ஆ) ஆறாவது
(இ) ஐந்தாவது
(ஈ) ஏழாவது
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) ஆறாவது
இருபாலாருக்கு பொதுவான பருவங்கள் (7):
காப்பு, செங்கீரை
, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி,
ஆண்பால் பிள்ளைத் தமிழுக்குரிய இறுதி மூன்று பருவங்கள்:
சிற்றில், சிறுபாறை, சிறுதேர்.
பெண்பால் பிள்ளைத் தமிழுக்குரிய இறுதி மூன்று பருவங்கள்:
அம்மானை, கழங்கு (நீராடல்), ஊசல்.
37. முதன்முதலாக மக்களுக்காக (பொது) நூலகத்தை அமைத்த நாடு
(அ) கிரீஸ்
(ஆ) ரோம்
(இ) இத்தாலி
(ஈ) ஏதென்ஸ்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) கிரீஸ்
கிரீஸ் நகர அரசுகளே முதன்முதலாக மக்களுக்கான நூல்நிலையங்களை அமைந்தன.
38. “விசும்பு” என்னும் சொல்லின் பொருள்
(அ) ஆகாயம்
(ஆ) துளி
(இ) மழைத்துளி
(ஈ) மேகம்
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) ஆகாயம்
39. “பெண்களெல்லாம் அரம்பையர் போல் ஒளிரு நாடு” எனற் வரிகள் இடம் பெற்ற நூல்
(அ) பாஞ்சாலி சபதம்
(ஆ) மகாபாரதம்
(இ) இராமாயணம்
(ஈ) பகவத் கீதை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) பாஞ்சாலி சபதம்
பாஞ்சாலி சபதம் – சூழ்ச்சிச் சருக்கம்
பேரறமும் பெருந்தொழிலும் பிறங்கு நாடு
பெண்களெல்லாம் அரம்பையர்போல் ஒளிரு நாடு
வீரமொடு மெய்ஞ்ஞானந் தவங்கள் கல்வி
வேள்வியெனு மிவையெல்லாம் விளங்கு நாடு
– பாரதியார்.
பொருள்: பாண்டவர்கள் ஆட்சி செய்யும் இந்திர மாநகர், சிறப்புமிக்க அறச்செயல்களாலும் பெருமைமிகு தொழில் வளத்தாலும் சிறப்புற்ற நாடு; பெண்கள், தேவமகளிர் போல் ஒளிர்கினற் நாடு; வீரம், மெய்யறிவு, தவம், கல்வி, வேள்வி ஆகிய இவையனைத்தும் நிறைந்த நாடு.
40. “உரைநடைக் காலம்” என அழைக்கப்படும் நூற்றாண்டு
(அ) பதினேழாம்
(ஆ) பதினெட்டாம்
(இ) பத்தொன்பதாம்
(ஈ) இருபதாம்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஈ) இருபதாம்