General TamilGeneral Tamil Previous Questions

Tnpsc General Tamil Previous Question Paper 15

Tnpsc General Tamil Previous Question Paper 15

Tnpsc General Tamil Previous Question Paper 15: Tnpsc Aspirants can use this opportunity to check Tnpsc General Tamil Previous Question Papers For Tnpsc Exam Preparation. General Tamil Previous Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Previous Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.

1. தமிழகத்தின் மிகப் பழமையான குடைவரைக் கோயில் எங்குள்ளது?

(அ) பிள்ளையார்ப்பட்டி

(ஆ) பெருமாள் பட்டி

(இ) கங்குவார்ப் பட்டி

(ஈ) செல்லப்பிராட்டி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) பிள்ளையார்ப்பட்டி

பிள்ளையார்பட்டி என்னும் ஊரின் குடைவரைக் கோயிலே தமிழகத்தில் இன்று காணப்பெறும் குடைவரைக் கோயில்களும் மிகப் பழைமையானதாகும். இக்கோயில் பாண்டியர்களின் படைப்பாகும். கி.மு.6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தாகும். இதனை அடுத்துதான் தமிழகத்தின் பல பகுதிகளில் பல்லவர்கள். பிற்கால பாண்டியர்கள், அதியர், முத்தரையர் ஆகியோரால் குடைவரைக் கோயில்கள் அமைக்கப்பட்டன. கி.பி-9-ஆம் நூற்றாண்டோடு குடைவரைக் கோயில்கள் அமைக்கும் பணி நின்று விட்டது.

2. ஆனந்த விகடன் இதழில் தம் வாழ்க்கை வரலாற்றைத் தொடராக எழுதியவர்.

(அ) உ.வே.சாமிநாதன்

(ஆ) ம.பொ.சிவஞானம்

(இ) திரு.வி.கல்யாண சுந்தரனார்

(ஈ) தாரா பாரதி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) உ.வே.சாமிநாதன்

உ.வே.சாமிநாதர் தம் வாழ்க்கை வரலாற்றை “என் சரிதம்” என்ற பெயரில் ஆனந்த விகடன் இதழில் தொடராக எழுதினார்.

3. நல்ல பாம்பின் நஞ்சு மூலம் தயாரிக்கப்படும் வலி நீக்கி மருந்து எது?

(அ) ஆஸ்பிரின்

(ஆ) கோப்ராக்சின்

(இ) குளோரோபார்ம்

(ஈ) தைராக்சின்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) கோப்ராக்சின்

நல்ல பாம்பின் நஞ்சு, கோப்ராக்சின் (Cobroxin) என்னும் வலிநீக்கி மருந்து செய்யப்பயன்படுகிறது.

4. “சண்பக பாண்டியன்” என்னும் பெயர் பெற்ற பாண்டிய மன்னன்

(அ) வங்கிய சேகர பாண்டியன்

(ஆ) கூன் பாண்டியன்

(இ) சூடாமணி பாண்டியன்

(ஈ) பொற்கை பாண்டியன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) சூடாமணி பாண்டியன்

வங்கிய சூடாமணி பாண்டியன் மதுரையின் அரசாட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், இறைவனுக்கு சண்பகமாலை சூட்டி வழிபடக் கருதி சண்பக நந்தவனத்தை ஏற்படுத்தினான். இதனால் இவனுக்கு “சண்பக பாண்டியன்” என்னும் பெயர் வழங்கலாயிற்று. இம்மன்னன் குறித்த விவரங்கள் திருவிளையாடற்புராணம். திருவாலவாய்க் காண்டத்தில் “தருமிக்குப் பொற்கிழி அளித்த படலத்தில்” கூறப்பட்டுள்ளன. நக்கீரர் இம்மன்னனின் அவையில் தலைமை அமைச்சராக இருந்தார். இம்மன்னன் முன்னிலையில்தான் நக்கீரர் இறைவனுடன் வாதம் செய்து, “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்று கூறினார்.

5. “மேவும் மென்மை மூக்கு உரம் பெறும் வன்மை”

– இத்தொடரின் உரம் என்பதன் பொருள்

(அ) உயிர்

(ஆ) கழுத்து

(இ) வாய்

(ஈ) மார்பு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) மார்பு

ஆவி இடைமை இடமிடறு ஆகும்

மேவும் மென்மை மூக்கு உரம் பெறும் வன்மை

– நன்னூல் 75.

12 உயிர் எழுத்துகளும், இடையின எழுத்துகள் ஆறும் கழுத்திலிருந்து பிறக்கின்றன. மெல்லின எழுத்துகள் ஆறும் மூக்கிலிருந்து பிறக்கின்றன. வல்லின எழுத்துகள் ஆறும் மார்பிலிருந்து பிறக்கின்றன.

உரம்-மார்பு.

6. தழையா வெப்பம் தழைக்கவும் எனும் தொடரில் தழை என்பது

(அ) பெயர்ச்சொல்

(ஆ) ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்

(இ) வினைச்சொல்

(ஈ) உரிச்சொல்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) வினைச்சொல்

7. தமிழகத்தின் “வேர்ட்ஸ் வொர்த்” எனப் புகழப்படுபவர்

(அ) பாரதிதாசன்

(ஆ) கம்பதாசன்

(இ) பூங்குன்றனார்

(ஈ) வாணிதாசன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) வாணிதாசன்

8. சம்புவின் கனி எனக்குறிக்கப்படுவது

(அ) மாம்பழம்

(ஆ) நாவல் பழம்

(இ) கொய்யாப்பழம்

(ஈ) பலாப்பழம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) நாவல் பழம்

விவேகசிந்தாமணி

தேன்நுகர் வண்டு மதுதனை உண்டு

தியங்கியே கிடந்ததைக் கண்டு

தான்அதைச் சம்பு வின்கனி என்று

தடங்கையில் எடுத்துமுன் பார்த்தான்.

– ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.

பொருள்: தேனை உண்டுவிட்டு வண்டு மயங்கிக் கிடக்கிறது. மயங்கிக் கிடந்த வண்டை நாவற்பழமென நினைத்து மங்கை ஒருத்தி தன் கையில் எடுத்துப் பார்த்தாள்.

9. “சந்திரன் சுவர்க்கி” என்ற வள்ளலால் ஆதரிக்கப்பட்ட புலவர்

(அ) புகழேந்திப் புலவர்

(ஆ) உமறுப்புலவர்

(இ) காளமேகப் புலவர்

(ஈ) அழகிய சொக்கநாதப்புலவர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) புகழேந்திப் புலவர்

நளவெண்பாவை இயற்றியவர் புகழேந்திப்புலவர் ஆவார். இவரை ஆதரித்த வள்ளல் சந்திரன் சுவர்க்கி. உமறுப்புலவரை ஆதரித்த மன்னன் சீதக்காதி ஆவார். காளமேகப்புலவரை ஆதரித்த கல்யாணிச் சாளுவ திருமலைராயன். அழகிய சொக்கநாதப் புலவரை ஆதரித்த வள்ளல் முத்துசுவாமி துரை ராசேந்திரன்.

10. திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்த வெளியிட்டவர் யார்?

(அ) உ.வே.சா

(ஆ) பாவாணர்

(இ) ஞானப்பிரகாசம்

(ஈ) ஞானக்கூத்தன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) ஞானப்பிரகாசம்

திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்து வெளியிட்டவர் தஞ்சாவூர் மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம் ஆவார். அச்சிடப்பட்ட ஆண்டு கி.பி.1812

General Tamil Study Materials

General Tamil Previous Questions Pdf

11. “கடம்” என்ற சொல்லின் பொருள்

(அ) முகம்

(ஆ) கைகள்

(இ) உடம்பு

(ஈ) இடுப்பு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) உடம்பு

கள்ளவேடம் புனையாதே – பல

கங்கையிலே உன் கடம் நனையாதே

– கடுவெளிச் சித்தர்.

பொருள்: போலியான வேடங்களைப் போடாதே!

புண்ணிய நதிகளைத் தேடிச் சென்று முழுகாதே!

கடம் – உடம்பு.

12. அகத்துறுப்பு என்பது

(அ) பல்

(ஆ) மனத்தின் உறுப்பு அன்பு

(இ) இதயம்

(ஈ) வயிறு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) மனத்தின் உறுப்பு அன்பு

திருக்குறள்-அன்புடைமை

புறத்துறுப் பெல்லாம் எவன் செய்யும் யாக்கை

அகத்துறுப்பு அன்பி லவர்க்கு

– குறள்-79.

பொருள்: உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு அதன் புறத்து உறுப்புகளால் யாதொரும் பயனும் இராது.

13. “தமிழ் பிறமொழி துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமின்றி தழைத்தோங்கவும் செய்யும்”

– என்று கூறிய அறிஞர்

(அ) தேவநேயப் பாவாணர்

(ஆ) பாரதிதாசன்

(இ) கால்டுவெல்

(ஈ) ஜி.யூ.போப்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) கால்டுவெல்

தமிழின் தூய்மை: “தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமின்றித் தழைத்தோங்கவும் செய்யும்”

– கால்டுவெல் கூற்று.

14. தமிழக அரசின் பரிசு பெற்ற முடியரசனின் காவியம் எது?

(அ) சகலகலாவல்லி மாலை

(ஆ) பூங்கொடி

(இ) மணிக்கொடி

(ஈ) உரிமை வேட்கை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) பூங்கொடி

கவிஞர் முடியரசன் ‘பூங்கொடி’ என்னும் காவியத்திற்காக 1966-இல் தமிழக அரசின் பரிசினைப் பெற்றார்.

15. “நற்கலை” என்று அழைக்கப்படும் கலை

(அ) நாடகக்கலை

(ஆ) சிற்பக்கலை

(இ) ஓவியக்கலை

(ஈ) அழுகுக்கலை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) நாடகக்கலை

நாடகக் கலையை ‘நற்கலை’ என்று கவிமணி தேசிய விநாயகம் குறிப்பிட்டுள்ளார். மேலும் நாடக சாலையை நற்கலாசாலை என்றும் குறிப்பிட்டுள்ளார்.. நாடகச் சாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ?

– கவிமணி

கொடுக்கப்பட்டுள்ள 4 கொள்குறிகளும் தவறானவை.

16. “கால்டுவெல்” தமிழகத்தில் வாழ்ந்த இடம்

(அ) புளியங்குடி

(ஆ) சிறுகூடல் பட்டி

(இ) மாங்குளம்

(ஈ) இடையன்குடி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) இடையன்குடி

இராபர்ட் கால்டுவெல்

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கால்டுவெல் 1841-இல் தமிழகம் வந்து, திருநெல்வேலியில் உள்ள இடையன்குடி என்ற ஊரில் தனது சமயப் பணியையும் தமிழ்ப்பணியையும் தொடங்கினார். இடையன்குடி என்ற ஊரில் 50 ஆண்டுகள் வாழ்ந்தார். 1891-இல் தனது சமயப் பணியிலிருந்து ஓய்வு பெற்று கொடைக்கானல் சென்று தங்கியிருந்த போது இயற்கை எய்தினார். அவர்தம் உடல் இடையன்குடிக்கு கொண்டுவரப்பட்டு, அவர் எடுப்பித்த கோயிலில் அடக்கம் செய்யப்பட்டது,

17. பொருத்துக:

திணை பொழுது

அ. குறிஞ்சி – 1. எற்பாடு

ஆ. முல்லை – 2. நண்பகல்

இ. மருதம் – 3. மாலை

ஈ. நெய்தல் – 4. யாமம்

உ. பாலை – 5. வைகறை

அ ஆ இ ஈ உ

அ. 4 3 5 1 2

ஆ. 2 1 4 5 3

இ. 5 4 1 2 3

ஈ. 3 1 2 4 5

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

அ. 4 3 5 1 2

அகப்பொருள் திணைகள் ஐந்து அவற்றிற்கான பெரும்பொழுதுகள், சிறுபொழுதுகள் தனித்தனியே வகைப்படுத்தப்பட்டுள்ளன. பெரும்பொழுது என்பது ஓர் ஆண்டின் கூறுபாடுகள் ஆகும். அவை, சிறுபொழுது என்பது ஒரு நாளின் கூறுபாடுகள் ஆகும்.

1.காலை – காலை 6 மணி முதல் 10 மணி வரை

2. நண்பகல் – காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

3. எற்பாடு – பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை

4. மாலை – மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை

5. யாமம் – இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை

6. வைகறை – இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை

ஐந்திணைகளுக்கும் உரிய முதற்பொருள்:

திணை நிலம் பெரும் பொழுது சிறுபொழுது
குறிஞ்சி மலையும் மலை சார்ந்த இடமும் குளிர்காலம், முன்பனிக் காலம் யாமம்
முல்லை காடும் காடு சார்ந்த இடமும் கார்காலம் மாலை
மருதம் வயலும் வயல் சார்ந்த இடமும் ஆறுபெரும் பொழுதுகள் வைகறை
நெய்தல் கடலும் கடல் சார்ந்த இடமும் ஆறுபெரும் பொழுதுகள் எற்பாடு
பாலை மணலும் கடல் சார்ந்த இடமும் இளவேனில், முதுவேனில், பின்பணி நண்பகல்

18. “எற்பாடு” என்னும் சொல்லில் “பாடு” என்பதன் பொருள்

(அ) தயார் செய்தல்

(ஆ) பாட்டு பாடுதல்

(இ) மறையும் நேரம்

(ஈ) துன்பப்படுதல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) மறையும் நேரம்

எற்பாடு – எல்+பாடு

எல்-ஞாயிறு

பாடு-மறையும் நேரம்

19. “வயிரமுடைய நெஞ்சு வேணும்” – எனக்கூறிய கவிஞர்

(அ) பாரதிதாசன்

(ஆ) கவிமணி

(இ) பாரதியார்

(ஈ) அழ.வள்ளியப்பா

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) பாரதியார்

பாப்பா பாட்டு

உயிர்களிடத்து அன்பு வேணும் – தெய்வம்

உண்மை என்று தானறிதல் வேண்டும்

வயிரமுடைய நெஞ்சு வேணும் – இது

வாழும் முறைமை யடிபாப்பா!

– பாரதியார்.

20. “ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்

மின்னேர் தனியாழி வெங்கதிரோன்றேனையது” – என்ற பாடல் இடம் பெறும் நூல்.

(அ) மாறனலங்காரம்

(ஆ) காரிகை

(இ) தண்டியலங்காரம்

(ஈ) நன்னூல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) தண்டியலங்காரம்

“ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி

ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்

மின்னோர் தனியாழி வெங்கதிரோன் றேனையது

தன்னே ரிலாத் தமிழ்”

– தண்டியலங்காரம்

1 2 3 4 5 6 7 8 9Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin