TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 22nd July 2024

1. தெகிரி புனல்மின்னுற்பத்தி நிலையம் அமைந்துள்ள ஆற்றுப்படுகை எது?

அ. மந்தாகினி

. பாகீரதி

இ. இராமகங்கை

ஈ. டோன்ஸ் ஆறு

  • உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தெகிரி கர்வாலில் பாகீரதி ஆற்றில் 2400 மெகாவாட் திறன்கொண்ட புனல்மின் உற்பத்தி வளாகம் கட்டப்பட்டு வருகிறது. இதில் தெகிரி புனல்மின்னுற்பத்தி நிலையம், கோட்டேஷ்வர் புனல்மின் உற்பத்தித் திட்டம் மற்றும் தெகிரி நீரேற்றித்தேக்கம் ஆகியவை அடங்கும்.
  • பாகீரதி ஆறானது கங்கோத்ரி பனிப்பாறையிலிருந்து உருவாகி தேவபிரயாகில் கங்கையாக மாறுகிறது. முதன்மை ஆறுகளில் கேதார கங்கை மற்றும் ஜாத் கங்கை ஆகியவை அடங்கும். பாகீரதியில் செயல்படும் அணைகளில் மனேரி, ஜோஷியரா, கோட்டேஷ்வர் மற்றும் தெகிரி அணைகள் அடங்கும்.

2. ஹரேலா திருவிழா கொண்டாடப்படுகிற மாநிலம் எது?

அ. ஆந்திர பிரதேசம்

ஆ. உத்தரகாண்ட்

இ. இராஜஸ்தான்

ஈ. கேரளா

  • ஜூலை.16 அன்று, உத்தரகண்டில் கொண்டாடப்படும் ஹரேலா திருவிழாவோடு சவான் தொடங்குகிறது. இமாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளிலும் கொண்டாடப்படும் இந்தப் பாரம்பரிய இந்து பண்டிகை குறிப்பாக உத்தரகாண்டின் குமாவுன் பகுதியில் கொண்டாடப்படுகிறது. ஹரேலா அமைதி, செழிப்பு மற்றும் இயற்கையின் கொண்டாட்டத்தை குறிக்கிறது. இது கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. கடவுளின் கருணையோடு ஏராளமான அறுவடைகள் மற்றும் செழிப்புகளைப் பெற இவ்விழா கொண்டாடப்படுகிறது.

3. அல்வா விழா என்பது எந்த ஆவணத்தை வெளியிடுவதுடன் தொடர்புடையதாகும்?

அ. ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை

ஆ. மத்திய பட்ஜெட்

இ. பொருளாதார ஆய்வறிக்கை

ஈ. NITI ஆயோக்கின் ஆண்டறிக்கை

  • மத்திய பட்ஜெட் 2024-25க்கான இறுதிக்கட்டத் தயாரிப்பைக் குறிக்கும் ஒரு பாரம்பரிய ‘அல்வா சடங்கு’ விழாவில் நடுவண் நிதியமைச்சர் பங்கேற்றார். ஜூலை.23 அன்று இது வெளியிடப்படவுள்ளது. இந்த விழா நிதி அமைச்சக அதிகாரிகளுக்கு, ‘அல்வா’ வழங்குவதை உள்ளடக்கியது. பட்ஜெட் ஆவணங்களை அச்சிடுவதற்கான தொடக்க நிலையாக இது பார்க்கப்படுகிறது. நிதியமைச்சகத்தின் வடபகுதியின் அடித்தளத்தில் தங்கியிருக்கும் அதிகாரிகள், ரகசியக் காப்பிற்காக ஓர் அறைக்குள் வைத்து பூட்டப்படுகிறார்கள். 1950ஆம் ஆண்டு நிகழ்ந்த பட்ஜெட் கசிவிற்குப் பின் இந்த நடைமுறை உருவானது.

4. அண்மையில் நடுவண் உள்துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட, நாட்டின் முதல் இலவச போதைப்பொருள் ஒழிப்பு உதவி மையத்தின் பெயர் என்ன?

அ. விக்ராந்த்

ஆ. நிஷ்சய்

இ. மனஸ்

ஈ. காவேரி

  • இந்தியா தனது முதல் தேசிய இலவச போதைப்பொருள் ஒழிப்பு சேவை மையமான ‘1933’ஐ, MANAS (Madak Padarth Nisedh Asuchna Kendra) என்ற பெயரில் மின்னஞ்சல் சேவையுடன் ஜூலை.18 அன்று அறிமுகப்படுத்தியது. NARCO-ஒருங்கிணைப்பு மையக்கூட்டத்தின்போது நடுவண் உள்துறை அமைச்சர் அமித் ஷா இதனை தொடக்கி வைத்தார். போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைப் புகாரளிப்பதற்கும் உதவிபெறுவதற்கும் குடிமக்களுக்கு 24/7 சேவை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

5. முதன்மை அறிவியல் ஆலோசகரால் அண்மையில் வெளியிடப்பட்ட, “இந்தியாவிற்கான மின்சார வாகனப்போக்கு வரவு R&D செயல் திட்டத்தின்” முதன்மை நோக்கம் என்ன?

அ. மின்சார வாகனங்களின் விலையை குறைப்பது

. மின்சார வாகனங்களில் (EVs) உலகளாவிய தலைமையை அடைவது

இ. மின்சார வாகன விற்பனையை ஊக்குவிப்பது

ஈ. மின்சார வாகனங்களுக்கான உற்பத்தி அலகுகளை நிறுவுவது

  • “இந்தியாவுக்கான மின்சார வாகனப் போக்குவரவு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செயல்திட்ட” அறிக்கையை, நடுவணரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் வெளியிட்டார். இந்தச் செயல்திட்டத்தின் படி, நான்கு கட்டங்களாக ஆராய்ச்சித் திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளது: ஆற்றல் சேமிப்பு மின்கலங்கள், மின்சார வாகன மதிப்பீடு, பொருட்கள் & மறுசுழற்சி, மின்னேற்றம் & மறு எரிபொருளிடல் போன்றவற்றிற்கான தெளிவான வழிமுறைகளை வழங்குதல். 2030ஆம் ஆண்டளவில் கரியமில வாயு உமிழ்வின் தீவிரத்தை 45% குறைக்கவும், 2047ஆம் ஆண்டளவில் ஆற்றல் சுதந்திரம் அடையவும் 2070ஆம் ஆண்டில் கரியமில வாயு வெளியேற்றமே இல்லாத நாடு என்ற நிலையை எட்டவும் இந்தியா இலக்கு வைத்துள்ளது.

6. விண்வெளி ஆராய்ச்சிக் குழுவின் (COSPAR) 45ஆவது அறிவியல் பேரவையை முதன்முறையாக நடத்திய நாடு எது?

அ. நேபாளம்

ஆ. தென் கொரியா

இ. பூடான்

ஈ. மாலத்தீவுகள்

  • விண்வெளி ஆராய்ச்சிக்குழுவின் (COSPAR) 45ஆவது அறிவியல் மாநாடு தென்கொரியாவின் பூசானில் நடந்தது. தென்கொரியா முதன்முறையாக இந்த மாநாட்டை நடத்துகிறது. 60 நாடுகளைச் சேர்ந்த 3,000 பங்கேற்பாளர்களை ஈர்த்த இந்த நிகழ்வு, தென் கொரியாவின் விண்வெளி ஆய்வு மற்றும் பன்னாட்டு ஒத்துழைப்புக்கான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. விண்வெளி ஆய்வு மற்றும் லட்சிய எதிர்கால திட்டங்களை மேம்படுத்துவதில் உலகளாவிய ஆர்வத்தின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், முதன்மை விண்வெளி நிறுவனங்களின் தலைவர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.

7. அண்மையில், இந்தியாவின் முதல் வெளிநாட்டில் இயங்கும் மக்கள் மருந்தகத்தை, நடுவண் வெளியுறவுத்துறை அமைச்சர் S ஜெய்சங்கர், கீழ்க்காணும் எந்த நாட்டில் திறந்து வைத்தார்?

அ. வியட்நாம்

ஆ. இந்தோனேசியா

இ. மொரிஷியஸ்

ஈ. மலேசியா

  • வெளியுறவுத்துறை அமைச்சர் S ஜெய்சங்கர் மொரிஷியஸில் இந்தியாவின் முதல் வெளிநாட்டு மக்கள் மருந்தகத்தை திறந்து வைத்தார்; அப்போது அந்நாட்டு பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத் உடன் இருந்தார். இந்தத் திட்டம், மலிவு விலையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகளை, மொரிஷியஸில் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடு விற்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 16,000 பேருக்கு இரண்டாம்நிலை சுகாதார சேவையை வழங்கும் இந்திய உதவியால் நிதியளிக்கப்பட்டு கிராண்ட் போயிஸ் கிராமத்தில் கட்டப்பட்ட ஒரு மருத்துவ மனையையும் S ஜெய்சங்கர் திறந்து வைத்தார்.

8. 2024 – உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீரர் யார்?

அ. சௌர்யா பாவா

ஆ. முகமது ஜகாரியா

இ. குஷ் குமார்

ஈ. அனாகத் சிங்

  • 2024 ஜூலை.17 அன்று அமெரிக்காவின் ஹூஸ்டனில் நடந்த WSF உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில், அரையிறுதியில் எகிப்தின் முகமது ஜகாரியாவிடம் தோல்வியடைந்த பிறகு, ஷௌர்யா பாவா வெண்கலப்பதக்கம் வென்றார். 2014ஆம் ஆண்டில் குஷ் குமார் வெண்கலம் வென்றதைத் தொடர்ந்து, இந்தப்போட்டி வரலாற்றில் ஓர் இந்திய வீரர் பெறும் இரண்டாவது பதக்கம் இதுவாகும். இந்திய வீராங்கனை அனாகத் சிங், காலிறுதியில் எகிப்தின் நாடியன் எல்கம்மாமியிடம் தோல்வியடைந்து பதக்கத்தைத் தவறவிட்டார்.

9. ‘ஆபரேஷன் நான்ஹே ஃபரிஷ்டே’ என்பதுடன் தொடர்புடைய அமைப்பு எது?

அ. DRDO

ஆ. ரெயில்வே பாதுகாப்புப் படை

இ. ISRO

ஈ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

  • ரெயில்வே பாதுகாப்புப் படை (RPF) 2018ஆம் ஆண்டு தொடங்கிய ஆபரேஷன் ‘Nanhe Farishtey’இன்கீழ் கடந்த ஏழு ஆண்டுகளில் இந்திய ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் இடரிலிருந்த 84,119 குழந்தைகளை மீட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது ஓடிப்போன, கைவிடப்பட்ட, வறிய, ஊனமுற்ற, அல்லது கடத்தப்பட்ட குழந்தைகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறது. மீட்கப்பட்ட குழந்தைகள் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்ப -டுகின்றனர். 2022இல், RPF அதிகபட்சமாக 17,756 குழந்தைகளை மீட்டுள்ளது.

10. அண்மையில், கல்வி அமைச்சகம் மற்றும் UGCஆல் தொடங்கப்பட்ட ASMITA திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?

அ. கல்வி முறையில் இந்திய மொழிகளை மேலும் ஆழமாக ஊக்குவிப்பது மற்றும் ஒருங்கிணைப்பது

ஆ. அனைத்து பாடங்களையும் ஆங்கிலத்திலிருந்து இந்திய மொழிகளுக்கு மாற்றுவது

இ. இந்தியாவில் அயல்நாட்டு மொழிகளை ஊக்குவிப்பது

ஈ. புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்வது

  • ஐந்தாண்டுகளுக்குள் இந்திய மொழிகளில் 22,000 நூல்களை உருவாக்குவதற்காக கல்வி அமைச்சகமும் UGC உம் இணைந்து ‘ASMITA’ திட்டத்தைத்தொடங்கியுள்ளன. ASMITA (Augmenting Study Materials in Indian Languages through Translation and Academic Writing) கல்வி வளங்களை மேம்படுத்துவதையும் கல்வி அமைப்பில் இந்திய மொழிகளை ஒருங்கிணைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. பதிமூன்று மைய பல்கலைக்கழகங்கள் இந்தக் கூட்டு முயற்சியை வழிநடத்தும். UGC நூல் எழுதும் செயல்முறைக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையை உருவாக்கி, தரம் மற்றும் அணுகலை உறுதிசெய்யும்.

11. அண்மையில், நாடு முழுவதும் உருளைக்கிழங்குப் பயிரைப் பாதித்த பின்னழுகல் நோய் என்றால் என்ன?

அ. பாக்டீரியா தொற்று

ஆ. பூஞ்சை நோய்

இ. வைரஸ் தொற்று

ஈ. பூச்சித்தொல்லை

  • மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனம் (CPRI) வானிலை மாற்றங்களால் உருளைக்கிழங்கில் பின்னழுகல் நோய்த் தாக்குதலுக்கு அதிக ஆபத்து இருப்பதாக ஓர் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. ‘Phytophthora infestans’ பூஞ்சையால் ஏற்படும் பின்னழுகல், தக்காளி மற்றும் உருளைக்கிழங்கை பாதிக்கும் ஒரு தீவிர பூஞ்சை நோயாகும். இது பாதிக்கப்பட்ட பயிரைப் பிடுங்கி நடுதல், தன்னிச்சையாக வளரும் செடி மற்றும் சில களைகள்மூலம் பரவுகிறது; இதன் வித்துகள் காற்றில் நீண்டதூரம் பயணிக்கின்றன. இந்த நோய் குளிர்ந்த, ஈரமான காலநிலையில் பரவுகிறது, மீண்டும் மீண்டும் தொற்று சுழற்சிகளை ஏற்படுத்துகிறது.

12. ஜெர்டன் கல்குருவி என்பது இந்தியாவின் எந்தப் பகுதியில் வாழும் ஓர் இரவுநேரப் பறவையாகும்?

அ. மேற்குத்தொடர்ச்சி மலைகள்

ஆ. கிழக்குத்தொடர்ச்சி மலைகள்

இ. வடகீழைப்பகுதி

ஈ. லடாக்

  • ஜெர்டன் கல்குருவி என்பது மிகவும் அருகிவிட்ட ஓர் இரவுநேரப் பறவையாகும்; இந்தியாவின் கிழக்குத்தொடர்ச்சி மலைகளில் குறிப்பாக ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் மட்டுமே இது காணப்படுகிறது. இதன் அறிவியல் பெயர்: Rhinoptilus bitorquatus ஆகும். அழிந்துவிட்டதாக கருதப்பட்டு பின்னர் 1986இல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட இது, புதர் காடுகளுக்குள் திறந்த திட்டுகளில் வாழ்கிறது. அதன் சாம்பல்-பழுப்பு நிற இறகுகள், பெருங்கண்கள் மற்றும் தனித்துவமான கீச்சிடல்களால் இது அடையாளம் காணப்படுகிறது. இது தனது பார்வையாலேயே தனது இரையை வேட்டையாடும் திறன் பெற்றது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தொடர்ந்து 7ஆவது முறையாக பட்ஜெட் தாக்கல்: சாதனை படைக்கும் நிர்மலா சீதாராமன்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஏழாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து வரலாற்றுச் சாதனை படைக்கவுள்ளார். இதன்மூலம் தொடர்ச்சியாக ஐந்து முறை முழு பட்ஜெட்டும், ஒருமுறை இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை அவர் முறியடிக்கவுள்ளார். பிரதமர் நரேந்திர மோதியின் 2ஆவது பதவிக்காலத்தில் நாட்டின் முழுநேர நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் கடந்த 2019ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

முதல் பட்ஜெட்: நாடு விடுதலை அடைந்து பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவியேற்ற பின்பு முதல் பட்ஜெட்டை அப்போதைய நிதியமைச்சர் R K சண்முகம் தாக்கல் செய்தார்.

பட்ஜெட் தேதி மற்றும் நேரம்: கடந்த 2016ஆம் ஆண்டுவரை பிப்ரவரி மாதத்தின் இறுதிநாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நடைமுறை கடந்த 2017ஆம் ஆண்டு மாற்றப்பட்டு பிப்ரவரி மாதத்தின் முதல் நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் கடந்த 1999ஆம் ஆண்டுக்கு முன்னதாக மாலை 4 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இந்நடைமுறையை மாற்றி 1999ஆம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சராக பதவி வகித்த யஸ்வந்த் சின்ஹா காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தார்.

அன்றிலிருந்து தற்போது வரை காலை 11 மணிக்கே நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

2. இந்தியாவில் முதியவர்கள் எண்ணிக்கை 2050க்குள் இரட்டிப்பாகும்.

இந்தியாவில் முதியவர்கள் எண்ணிக்கை 2050ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாகும் என ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை (UNFPA) அமைப்பு தெரிவித்துள்ளது. நாட்டில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் மக்கள்தொகை 2050ஆம் ஆண்டுக்குள் 34.6 கோடி பேருடன் இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் 10 முதல் 19 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 25.2 கோடி பேர் உள்ளனர்.

2050இல் 50% நகரமயம்: வரும் 2050ஆம் ஆண்டுக்குள் இந்தியா 50 சதவீத அளவுக்கு நகரமயமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3. சென்னானூர் அகழாய்வில் தமிழி எழுத்துப்பொறிப்புக்கொண்ட பானை ஓடுகள் கண்டெடுப்பு.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் அகழாய்வுத்தளத்தில் புதிய கற் காலப்பண்பாட்டைக் கண்டறிய அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இங்கு உடைந்த நிலையில் புதிய கற்காலக்கருவி கண்டெடுக்கப்பட்டது. மேலும், சுடுமண் முத்திரை, சங்கு வளையல் துண்டுகள், கண்ணாடி வளையல் துண்டுகள், வட்டச்சில்லுகள், தக்களி போன்ற சங்ககாலம் என்றழைக்கப்படும் தொடக்க வரலாற்றுக் காலத்தைச் சார்ந்த தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

தற்போது, சென்னானூர் அகழாய்வில் 90 செமீ – 108 செமீ வரையிலான ஆழத்தில் தமிழி எழுத்துப்பொறிக்கப்பட்ட 3 பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பானை ஓடுகளில் முறையே [ந்]தை பாகஅந், ஊகூர், [சா]த்தன் எனப் பொறிக்கப்பட்டுள்ளன. பாறைகளில் பொறிக்கப்பட்ட தமிழி எழுத்துக் கல்வெட்டுகளில் வேள்ஊர், மதிரை, இவகுன்றம், நெல்வெளிஇய், இலஞ்சி, கருஊர், முசிறி, வெள்அறைய், தேனூர், அகழ்ஊர், கோகூர் போன்ற ஊர்ப் பெயர்கள் காணப்படுகின்றன. ஆனால் பானை ஓடுகளில் பெரும்பாலும் ஆட்பெயர்கள் இடம்பெற்றுள்ளன. உறையூர் பானை ஓட்டில் மூலனபேடு என்ற ஊர்ப்பெயர் கிடைக்கப்பெற்றது. தற்பொழுது சென்னானூர் பானை ஓட்டில் ஊகூர் என்ற ஊர்ப்பெயர் கிடைக்கப்பெற்றுள்ளது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

1. Tehri Hydro Power Plant is located on which river basin?

A. Mandakini

B. Bhagirathi

C. Ramganga

D. Tons

  • A 2400 MW Hydro Power Complex is under construction in Tehri Garhwal, Uttarakhand, on the Bhagirathi River. It includes the Tehri Hydro Power Plant, Koteshwar Hydro Electric Project, and Tehri Pumped Storage Plant. The Bhagirathi River originates from the Gangotri Glacier and becomes the Ganga at Devprayag. Key tributaries include Kedar Ganga and Jadh Ganga. Operational dams on Bhagirathi include Maneri, Joshiyara, Koteshwar, and Tehri Dams.

2. Harela Festival is celebrated in which state?

A. Andhra Pradesh

B. Uttarakhand

C. Rajasthan

D. Kerala

  • On July 16, Sawan begins, marked by the Harela festival in Uttarakhand. This traditional Hindu festival, also celebrated in parts of Himachal Pradesh, is especially popular in Uttarakhand’s Kumaun region. Harela symbolizes peace, prosperity, and the celebration of nature. It holds cultural and environmental importance, representing prayers for abundant harvests and prosperity through divine blessings.

3. Halwa ceremony is associated with releasing of which document?

A. RBI’s Annual Report

B. Union Budget

C. Economic Survey

D. NITI Aayog’s Annual Report

  • The Union Finance Minister recently participated in a traditional ‘halwa’ ceremony, marking the final stage of preparation for the Union Budget 2024-25, set to be unveiled on July 23. This ritual involves serving ‘halwa’ to finance ministry officials and signifies the initiation of budget document printing. Officials enter a ‘lock-in’ period for confidentiality, staying in the Finance Ministry’s North Block basement. This practice stems from a 1950 budget leak, leading to strict secrecy measures.

4. What is the name of nation’s first toll-free narcotics helpline, recently launched Ministry of Home Affairs?

A. Vikrant

B. Nischay

C. Manas

D. Kaveri

  • India launched its first national toll-free anti-narcotics helpline, ‘1933’, along with an email service called MANAS (Madak Padarth Nisedh Asuchna Kendra) on July 18. Announced by Union Home Minister Amit Shah during the Narco-Coordination Centre meeting, the helpline aims to offer citizens a 24/7 platform to report drug-related crimes and seek assistance.

5. What is the primary aim of “e-mobility R&D Roadmap for India”, recently launched by the Principal Scientific Adviser?

A. To reduce the price of electric vehicles

B. Achieving global leadership in electric vehicles (EVs)

C. To promote electric vehicle sales

D. To establish manufacturing units for electric vehicles

  • India’s “e-mobility R&D Roadmap” launched by the Principal Scientific Adviser aims to achieve global leadership in electric vehicles (EVs) within five years. It identifies key areas like Energy Storage Cells, EV Aggregates, Materials and Recycling, and Charging and Refueling for intensive research. India targets a 45% reduction in emission intensity by 2030, energy independence by 2047, and net-zero emissions by 2070, emphasizing EV adoption, indigenous energy storage, and renewable energy for charging infrastructure.

6. Which country recently hosted the 45th Scientific Assembly of the Committee on Space Research (COSPAR) for the first time?

A. Nepal

B. South Korea

C. Bhutan

D. Maldives

  • The 45th Scientific Assembly of the Committee on Space Research (COSPAR) took place in Busan, South Korea, marking the country’s first hosting of this global conference.
  • Attracting 3,000 participants from 60 nations, the event highlighted South Korea’s dedication to space exploration and international collaboration. Distinguished attendees included leaders from major space agencies, underscoring the significance of global interest in advancing space research and ambitious future projects.

7. Recently, External Affairs Minister S Jaishankar inaugurated India’s first overseas Jan Aushadi Kendra in which country?

A. Vietnam

B. Indonesia

C. Mauritius

D. Malaysia

  • External Affairs Minister S. Jaishankar inaugurated India’s first overseas Jan Aushadi Kendra in Mauritius, joined by Prime Minister Pravind Kumar Jugnauth. This project aims to provide affordable, Made-in-India medicines, enhancing healthcare in Mauritius. Jaishankar also inaugurated a Mediclinic in Grand Bois village, funded by Indian assistance, offering secondary healthcare to 16,000 residents.

8. Which Indian player won bronze medal at World Junior Squash Championship 2024?

A. Shaurya Bawa

B. Mohamad Zakaria

C. Kush Kumar

D. Anahat Singh

  • Shaurya Bawa won a bronze medal at the WSF World Junior Squash Championships 2024 in Houston, USA, on July 17, 2024, after losing in the semifinals to Egypt’s Mohamed Zakaria. This marks the second medal for an Indian male player in the tournament’s history, following Kush Kumar’s 2014 bronze. Indian female player Anahat Singh missed a medal, losing in the quarter-finals to Egypt’s Nadien Elhammamy.

9. ‘Operation Nanhe Farishtey’ is related to which organization?

A. DRDO

B. Railway Protection Force

C. ISRO

D. Ministry of women and child development

  • The Railway Protection Force (RPF) has rescued 84,119 children at risk in Indian railway stations and trains over the past seven years under Operation Nanhe Farishtey, launched in 2018. The operation focuses on runaway, abandoned, impoverished, disabled, or kidnapped children, protecting them from crime syndicates. Rescued children are handed over to the District Child Welfare Committee. In 2022, RPF rescued the highest number, 17,756 children

10. What is the primary objective of ASMITA Project, recently launched by Ministry of Education and UGC?

A. To promote and integrate Indian languages more deeply into the education system

B. To replace English with Indian languages in all subjects

C. To promote foreign languages in India

D. To build new universities

  • The Ministry of Education and UGC launched the ASMITA Project to develop 22,000 books in Indian languages within five years. ASMITA (Augmenting Study Materials in Indian Languages through Translation and Academic Writing) aims to enhance educational resources and integrate Indian languages into the education system. Thirteen nodal universities will lead this collaborative effort, with UGC creating a standard operating procedure for the book-writing process, ensuring quality and accessibility.

11. What is late blight disease, which recently affected the potato crop across the country?

A. Bacterial infection

B. Fungal disease

C. Viral infection

D. Pest infestation

  • The Central Potato Research Institute (CPRI) issued an advisory warning of a high risk of late blight disease in potatoes due to weather changes. Late blight, caused by Phytophthora infestans, is a serious fungal disease affecting tomatoes and potatoes. It spreads via infected transplants, volunteer plants, and certain weeds, with spores traveling long distances in storms. The disease thrives in cool, wet weather, causing repeated infection cycles.

12. Jerdon’s Courser is a nocturnal bird endemic to which region of India?

A. Western Ghats

B. Eastern Ghats

C. North Eastern Region

D. Ladakh

  • Jerdon’s Courser, a critically endangered nocturnal bird, is endemic to the Eastern Ghats of India, specifically Andhra Pradesh and Telangana. Scientific name: Rhinoptilus bitorquatus. Rediscovered in 1986 after being thought extinct, it inhabits open patches within scrub-forests. Recognizable by its grey-brown plumage, large eyes, and distinctive calls, it hunts insects by sight.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!