TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 19th July 2024

1. NASAஇன் CHAPEA திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?

அ. செவ்வாய்க்கான புதிய ஊர்தி வடிவமைப்புகளைச் சோதிப்பது

. செவ்வாய் கோளின் மேற்பரப்பில் ஆண்டு முழுவதும் தங்குவதை உருவகப்படுத்துவது

இ. புதிய விண்வெளி உடைகளை உருவாக்குவது

ஈ. செவ்வாய் கோளில் சூரியவொளித் தகடுகளின் செயல்திறனைச் சோதிப்பது

  • NASAஇன் CHAPEA திட்டமானது உணவு முறை மற்றும் மனித நலத்தை மதிப்பிடுவதற்காக செவ்வாய் கோளின் மேற்பரப்பில் ஆண்டு முழுவதும் தங்குவதை உருவகப்படுத்துகிறது. ஜான்சன் விண்வெளி மையத்தில் 1700 ச.அடி பரப்பில் அமைக்கப்பட்டிருந்த செவ்வாய் டூன் ஆல்பா வாழ்விடத்தில் ஓராண்டு தங்கியபிறகு, ஒரு குழுவினர் வெளி வந்தனர். CHAPEA பணிசார்ந்த 4 குழு உறுப்பினர்கள் முப்பரிமாண முறையில்-அச்சிடப்பட்ட கட்டமைப்பில் வசித்து வந்தனர். இதன்மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகள் எதிர்கால விண்வெளிப் பயணங்களுக்கு உதவும்.

2. கீழ்க்காணும் எந்த மாநிலத்தில் கர்ச்சி பூஜை கொண்டாடப்படுகிறது?

அ. அஸ்ஸாம்

ஆ. நாகாலாந்து

இ. திரிபுரா

ஈ. சிக்கிம்

  • ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் வரும் அமாவாசையின் எட்டாவது நாளில் கொண்டாடப்படும் திரிபுராவின் முக்கிய திருவிழாவான கர்ச்சி பூஜைக்கு இந்தியப்பிரதமர் அண்மையில் வாழ்த்துகளைத் தெரிவித்தார். “பாவங்களைப் போக்குதல்” என்று பொருள்படும் இந்தத்திருவிழா, அரச பூசாரி சாண்டாய் பதினான்கு தெய்வங்களை வழிபடுவதை உள்ளடக்கியுள்ளது. பழைய அகர்தலாவில் உள்ள சதுர்தசா தேவதா திருக்கோவிலில் நடைபெறும் ஏழு நாள் திரு விழாவில் சைத்ரா ஆற்றில் தெய்வங்களின் தலைகளை குளிப்பாட்டுவதும், திருக்கோவிலுக்குத் திரும்புவதும் இத் திருவிழாவில் அடங்கும்.

3. ஒவ்வோர் ஆண்டும், ‘உலக இளையோர் திறன்கள் நாளாக’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. ஜூலை.15

ஆ. ஜூலை.16

இ. ஆகஸ்ட்.15

ஈ. ஆகஸ்ட்.16

  • ஜூலை.15 அன்று அனுசரிக்கப்படும் உலக இளையோர் திறன்கள் நாள் என்பது 2014இல் ஐநாஆல் நிறுவப்பட்ட ஒரு நாளாகும். இது இளையோரை வேலைவாய்ப்பு, நல்ல வேலை மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றிற்கான திறன்களுடன் தயார்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. “Youth Skills for Peace and Development” என்பது நடப்பு 2024ஆம் ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும். இது அமைதியை ஊக்குவிப்பதிலும், வளங்குன்றா வளர்ச்சிக்கு உந்துதலிலும் இளையோரின் முக்கிய பங்கை எடுத்துக்காட்டுகிறது. இளையோரின் திறன்மேம்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் ஓர் உலகளாவிய தளமாகச் செயல்படுகிறது.

4. கீழ்க்காணும் எந்த அமைச்சகத்தின்கீழ், துடிப்பான கிராமங்கள் திட்டம் செயல்பட்டு வருகிறது?

அ. உள்துறை அமைச்சகம்

ஆ. வெளியுறவு அமைச்சகம்

இ. பாதுகாப்பு அமைச்சகம்

ஈ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

  • அருணாச்சல பிரதேசம், இமாச்சல பிரதேசம், சிக்கிம், உத்தரகண்ட் மற்றும் லடாக் ஆகிய மாநிலங்களில் வடக்கு எல்லையில் உள்ள கிராமங்களின் வளர்ச்சிக்காக 2023இல் அங்கீகரிக்கப்பட்ட துடிப்புமிக்க கிராமங்கள் திட்டத்தின் செயலாக்கத்தை மத்திய உள்துறை அமைச்சர் மதிப்பாய்வு செய்தார். உள்துறை அமைச்சகத்தின் தலைமையிலான இந்த நடுவண் நிதியுதவி திட்டம், திறன் மேம்பாடு, வாழ்வாதார உருவாக்கம், சுற்றுலா மற்றும் நிதி உள்ளடக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. எல்லைப்புற நிர்வாகத்தில் சமூகப்பங்கேற்பை அதிகரிப்பதன்மூலம் எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்துவதை இந்தத்திட்டம் தனது நோக்கமாகக்கொண்டுள்ளது.

5. மஞ்சீரா வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. இராஜஸ்தான்

. தெலுங்கானா

இ. அஸ்ஸாம்

ஈ. இமாச்சல பிரதேசம்

  • தெலுங்கானாவில் உள்ள மஞ்சீரா வனவிலங்கு சரணாலயம், மாநிலத்தின் முதல் ராம்சர் தளமாக மாறும் வகையில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேடக் மாவட்டத்தில் அமைந்துள்ள இது, முதலில் முதலைகள் சரணாலயமாக இருந்து வந்தது; தற்போது பாதிக்கப்படக்கூடிய அகன்மூக்கு முதலை உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட பறவையினங்கள் அங்கு உள்ளன. மஞ்சீரா ஆற்றை அடுத்து மனிதனால் உருவாக்கப்பட்ட நீர்த்தேக்கம் ஐதராபாத் & செகந்திராபாத் நகரங்களுக்குப் பாசனம் மற்றும் குடிநீர் வசதியை வழங்குகிறது.

6. அண்மையில், ஐநா காலநிலை நிதிய வாரியத்தை நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ள நாடு எது?

அ. மலேசியா

ஆ. பிலிப்பைன்ஸ்

இ. இந்தோனேசியா

ஈ. இந்தியா

  • தட்பவெப்பநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவுவதில் குறிப்பிடத்தக்க படியான, “இழப்பு மற்றும் சேதம்” நிதியத்தின் வாரியத்தை நடத்துவதற்கு பிலிப்பைன்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. புவி வெப்பமயமாதலால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிதியுதவி செய்வதில் கவனஞ்செலுத்தும் ஐநா பேச்சுவார்த்தையின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. உலக வங்கி தற்காலிகமாக நான்காண்டுகளுக்கு நிதியை மேற்பார்வையிடும். உலகளாவிய தட்ப வெப்பநிலை கொள்கை விவாதங்களை மேம்படுத்துவதை பிலிப்பைன்ஸ் நோக்கமாகக் கொண்டுள்ளது.

7. அண்மையில், கேப்டன் அபிலாஷ் ராவத் மற்றும் அவரது எண்ணெய்க் கப்பல் மார்லின் லுவாண்டா குழுவினரின், ‘செங்கடல் பணியில் விதிவிலக்கான துணிச்சலுக்காக’ விருது வழங்கிய அமைப்பு எது?

அ. உலக வானிலை அமைப்பு

ஆ. பன்னாட்டு கடல்சார் அமைப்பு

இ. உலக வங்கி

ஈ. UNEP

  • பன்னாட்டு கடல்சார் அமைப்பானது (IMO) நடப்பு 2024ஆம் ஆண்டிற்கான, மாலுமிகளுக்கான விருதுகளில் இந்திய மாலுமிகளின் துணிச்சலையும் சிறந்த செயல்பாடுகளையும் அங்கீகரித்து விருதுகளை அறிவித்துள்ளது.
  • இந்தியாவைச் சேர்ந்த கேப்டன் அவிலாஷ் ராவத்தையும் எண்ணெய்க்கப்பல் மார்லின் லுவாண்டாவின் இந்தியக் குழுவினரையும் அங்கீகரித்து, அவர்களின் அசாதாரண உறுதிப்பாட்டிற்காக IMO கவுன்சில் விருது வழங்குகிறது. 2024 ஜன.26 அன்று சரக்குகளை ஏற்றிச்சென்ற மார்லின் லுவாண்டா, சூயஸிலிருந்து இஞ்சியோனுக்குச் செல்லும் வழியில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையால் தாக்கப்பட்டது. இதனால் அது தீப்பிடித்தது, கடுமையான தீ ஆபத்துக்கு உள்ளானது. கேப்டன் அவிலாஷ் ராவத் தீயணைப்பு முயற்சிகளில் விரைவாகவும் துணிச்சலாகவும் ஈடுபட்டு பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்தார். அதற்காக அவரும் அவரது குழுவினரும் அங்கீகரிக்கப்படுகின்றனர். IMOஇன் இந்த விருது இந்திய மாலுமிகளின் அசாதாரண துணிச்சலையும் சிறந்த தொழிற்முறை செயல்பாட்டையும் எடுத்தியம்புகிறது.

8. அண்மையில், எந்த நகரத்தில் இந்தியப்பிரதமரால் இந்திய செய்தித்தாள் சங்க கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது?

அ. மும்பை

ஆ. போபால்

இ. சண்டிகர்

ஈ. பாட்னா

  • அண்மையில் இந்தியப்பிரதமர் நரேந்திர மோதியால் மும்பையில் INS கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. இது இந்திய செய்தித்தாள் சங்கத்தின் (INS) குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் குறிக்கிறது. கடந்த 1927இல் உருவான இது, 1939ஆம் ஆண்டில் இந்திய மற்றும் கிழக்குச் செய்தித்தாள் சங்கமாக மாற்றி நிறுவப்பட்டது. INS, பத்திரிகைகளுக்கான மைய அமைப்பாகச் செயல்படுகிறது. இந்தியா மற்றும் ஆசியாவில், பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துதல் மற்றும் செய்தித்தாள்கள் மற்றும் பருவ இதழ்களுக்கான புள்ளிவிவரங்களை அங்கீகரிப்பதில் கவனம் செலுத்துகிறது. அதன் உறுப்பினர்களில் அச்சு-ஊடக உரிமையாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் உள்ளனர்.

9. அண்மையில், இந்தியா, எந்த நாட்டுடன் நான்கு சமூக மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?

அ. மார்ஷல் தீவுகள்

ஆ. சாலமன் தீவுகள்

இ. பப்புவா நியூ கினி

ஈ. நியூசிலாந்து

  • 4 சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்போது, ​​இந்தியாவிற்கும் மார்ஷல் தீவுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை வெளியுறவு அமைச்சர் Dr S ஜெய்சங்கர் வலியுறுத்தினார். தட்பவெப்பநிலை மாற்றம், இயற்கைப் பேரிடர்கள், வறுமையொழிப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றில் பசிபிக் தீவுகளை ஆதரிப்பதற்கான இந்தியாவின் பொறுப்பை அவர் எடுத்துரைத்தார். Dr S ஜெய்சங்கர், பசிபிக் தீவுகள் குறிப்பிடத்தக்க கடல்சார் நாடுகள் என்றும் அவர்களுடனான கூட்டுறவை இந்தியா எப்போதும் மதிப்பதாகவும் கூறினார்.

10. 2024 – உலக பாரம்பரிய இளந்தொழில்நுட்பவியலாளர்கள் மன்றத்தை நடத்துகிற அமைச்சகம் எது?

அ. வெளியுறவு அமைச்சகம்

ஆ. உள்துறை அமைச்சகம்

இ. கலாச்சார அமைச்சகம்

ஈ. பாதுகாப்பு அமைச்சகம்

  • UNESCOஇன் மதிப்புமிக்க உலக பாரம்பரியக் குழுவின் கூட்டம், இந்தியாவின் சார்பில், முதன்முறையாக 2024 ஜூலை.21-31 வரை புது தில்லியில் நடத்தப்படவுள்ளது. உலக பாரம்பரியக் குழுவின் 46ஆவது அமர்வின் ஒருங்கிணைந்த அம்சமாகவும், UNESCOஇன் உலக பாரம்பரியக் கல்வித்திட்டத்தின் கட்டமைப்புக்கு உட்பட்டும், நடுவண் கலாச்சார அமைச்சகம், உலக பாரம்பரிய இளம் தொழில்நுட்பவியலாளர்கள் அமைப்பின் 2024-க்கான கூட்டத்தை நடத்தவுள்ளது.
  • இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையின் துணை அமைப்பான பண்டித தீனதயாள உபாத்யாயா தொல்லியல் பயிற்சி நிறுவனம், “21ஆம் நூற்றாண்டில் உலக பாரம்பரியம்: திறனுருவாக்கம் மற்றும் இளைஞர்களுக்கான வாய்ப்புகளை ஆராய்தல்” என்ற தலைப்பில் இளந்தொழில்நுட்பவியலாளர்கள் கூட்டத்தை நடத்துகிறது. பல்வேறு நாடுகளிலிருந்து வந்துள்ள 50 (இந்தியாவிலிருந்து 20, பிறநாடுகளிலிருந்து 30) பேர் தங்களது படைப்புகளை சமர்ப்பிக்கவுள்ளனர்.

11. அண்மையில், ‘ஓர் அறிவியலாளர்-ஒரு தயாரிப்பு’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள ஆராய்ச்சி நிறுவனம் எது?

அ. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR)

ஆ. இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (IISER)

இ. தேசிய உயிரி-மருத்துவ மரபணுத்தொகுதிக்கல்வி நிறுவனம் (NIBMG)

ஈ. பொருளாதார வளர்ச்சி நிறுவனம்

  • வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பில் ஆராய்ச்சியை மேம்படுத்தும் வகையில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR) தனது ‘ஓர் அறிவியலாளர் – ஒரு தயாரிப்பு’ என்ற திட்டத்தை ஜூலை.16 அன்று அறிமுகப்படுத்தியது. தில்லியில் அதன் 96ஆவது நிறுவனநாள் கொண்டாட்டத்தின்போது, ​​ICAR 323 புதிய பயிர் வகைகளை அறிவித்தது; இதில் 289 தட்பவெப்பநிலை-எதிர்ப்பு மற்றும் 27 உயிர்-வலுவூட்டப்பட்ட வகைகள் அடங்கும். இந்த நிகழ்ச்சியை நடுவண் வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் தொடங்கி வைத்தார்.

12. அண்மையில், ஒரே நாளில் 11 இலட்சம் மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்த இந்திய நகரம் எது?

அ. கோயம்புத்தூர், தமிழ்நாடு

ஆ. இந்தூர், மத்திய பிரதேசம்

இ. கோழிக்கோடு, கேரளா

ஈ. அமராவதி, ஆந்திர பிரதேசம்

  • மத்திய பிரதேச மாநில அரசு இந்தூர் நகரத்தில் ஒரே நாளில் 11 இலட்சம் மரக்கன்றுகளை நட்டு புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது. முதலமைச்சர் மோகன் யாதவ், கின்னஸ் சாதனை நூல் குழுவிடமிருந்து இதற்கானச் சான்றிதழைப் பெற்றார். ஜூன்.05ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதியால் தொடங்கப்பட்ட, “தாயின் பெயரில் ஒரு மரம்” என்ற இயக்கத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பங்கேற்றார். இந்தியாவின் தூய்மையான நகரமான இந்தூரில் இந்த இயக்கத்தின்கீழ், 51 இலட்சம் மரக்கன்றுகள் நடப்படும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. புதிய மாநகராட்சிகள் உருவாக்கத்துக்கான நிபந்தனைகள் தளர்வு: திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்.

புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய நான்கு நகராட்சிகளையும் மாநகராட்சிகளாக தரமுயர்த்துவதற்கு, ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த மக்கள்தொகை, வருமான அளவுகளை குறைத்து மாநகரா -ட்சிகளாக தரமுயர்த்துவதற்கான நகர்ப்புற உள்ளாட்சி சட்டத்திருத்த மசோதா பேரவையில் தாக்கல்செய்யப்பட்டது. அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சி சட்டப்பிரிவில் மக்கள்தொகையாக இருந்த 3 இலட்சம் என்பது 2 இலட்சமாகவும், சம்பந்தப்பட்ட பகுதியின் ஆண்டு வருமானம் `30 கோடியிலிருந்து `20 கோடியாகவும் குறைக்கப்பட்டு திருத்தம் செய்யப்பட்டது.

2. தமிழ்நாடு நாள் விழா.

தமிழ்நாடு நாள் விழா கடந்த ஈராண்டுகளாக சென்னையில் கொண்டாடப்பட்டது. நடப்பாண்டு ‘பேரறிஞர்’ அண்ணா பிறந்த மண்ணில் நடத்த வேண்டும் என முடிவுசெய்யப்பட்டது. சென்னை மாகாணம் என்று இருந்த நமது மாநிலத்தின் பெயரை ‘தமிழ்நாடு’ என்று மாற்றவேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் ‘பேரறிஞர்’ C N அண்ணாதுரையால் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த நாள் 18.7.1967. இந்த நாள் வெளிப்படாமல் உள்ளது என்பதை அறிந்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் ‘தமிழ்நாடு நாள்’ விழாவாகக் கொண்டாட வேண்டும் என தமிழ்வளர்ச்சித்துறைக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து தமிழ்வளர்ச்சித்துறையும், செய்தித்துறையும் இணைந்து தமிழ்நாடு நாள் விழாவாக நடப்பாண்டு 3ஆவது ஆண்டாக காஞ்சிபுரத்தில் ‘தமிழ்நாடு நாளைக்’ கொண்டாடின.

1. What is the primary objective of the NASA’s CHAPEA mission?

A. To test new Mars rover designs

B. To simulate year-long stays on the surface of Mars

C. To develop new space suits

D. To test solar panel efficiency on Mars

  • NASA’s CHAPEA project simulates year-long Mars missions to assess food systems and human health. After a year in the 1,700 sq ft Mars Dune Alpha habitat at Johnson Space Center, a crew emerged. CHAPEA missions involve four crew members living in a 3D-printed structure that mimics a realistic Mars habitat. The data collected will aid future space missions, focusing on physical and behavioral health patterns.

2. Kharchi Puja is celebrated in which state?

A. Assam

B. Nagaland

C. Tripura

D. Sikkim

  • The Prime Minister of India recently extended wishes for Kharchi Puja, a key festival in Tripura celebrated in July-August on the eighth day of the new moon. The festival, meaning “cleansing of sins,” involves the worship of fourteen deities by the Royal priest, Chantai. Held at the Chaturdasha Devata temple in old Agartala, the seven-day festival includes bathing the deities’ heads in the Saidra river and returning them to the temple.

3. Which day is observed as ‘World Youth Skills Day’ every year?

A. July.15

B. July.16

C. August.15

D. August.16

  • World Youth Skills Day, observed on July 15th, was established by the UN in 2014. It emphasizes the importance of equipping young people with skills for employment, decent work, and entrepreneurship. The 2024 theme, “Youth Skills for Peace and Development,” highlights the vital role of youth in promoting peace and driving sustainable development. This day serves as a global platform to raise awareness about youth skill development.

4. Vibrant Village Programme comes under which ministry?

A. Ministry of Home Affairs

B. Ministry of External Affairs

C. Ministry of Defence

D. Ministry of Rural Development

  • Union Home Minister reviewed the implementation of the Vibrant Village Programme (VVP), approved in 2023 for the development of villages along the northern border in Arunachal Pradesh, Himachal Pradesh, Sikkim, Uttarakhand, and Ladakh. This centrally sponsored scheme, led by the Ministry of Home Affairs, focuses on skill development, livelihood generation, tourism, and financial inclusion. The program aims to enhance border security through increased community participation in border management.

5. Manjeera Wildlife Sanctuary is located in which state?

A. Rajasthan

B. Telangana

C. Assam

D. Himachal Pradesh

  • The Manjeera Wildlife Sanctuary in Telangana is being studied to potentially become the state’s first Ramsar site. Located in the Medak district, it was originally a crocodile sanctuary and now hosts over 70 bird species, including the vulnerable mugger crocodile. Following the Manjeera River, the man-made reservoir supports irrigation and drinking water for Hyderabad and Secunderabad.

6. Recently, which country has been chosen to host UN Climate Fund Board?

A. Malaysia

B. Philippines

C. Indonesia

D. India

  • The Philippines has been selected to host the board of the “Loss and Damage” fund, a significant step in aiding communities affected by climate change. This decision arose during UN talks focused on financial support for nations impacted by global warming. The World Bank will temporarily oversee the fund for four years. The Philippines aims to enhance global climate policy discussions, given its vulnerability to natural disasters.

7. Which organization recently awarded Captain Abhilash Rawat and his crew of oil tanker ‘Marlin Luanda for Exceptional Bravery in Red Sea Mission?

A. World Meteorological Organization

B. International Maritime Organisation

C. World Bank

D. UNEP

  • Captain Avhilash Rawat and his crew from the oil tanker Marlin Luanda have received the 2024 International Maritime Organisation (IMO) Award for Exceptional Bravery at Sea.
  • They were recognized for their determination during a rescue mission in the Red Sea, where they encountered a serious fire after an anti-ship missile strike, allegedly from Iranian-backed Houthi rebels. The award highlights the skill and bravery of Indian seafarers, as noted by India’s Directorate General of Shipping.

8. Recently, Prime Minister of India inaugurated Indian Newspaper Society (INS) Towers in which city?

A. Mumbai

B. Bhopal

C. Chandigarh

D. Patna

  • Prime Minister recently inaugurated the INS Towers in Mumbai, marking a significant development for the Indian Newspaper Society (INS), which originated in 1927 and was established as the Indian & Eastern Newspaper Society in 1939. The INS serves as a central organization for the press in India and Asia, focusing on protecting press freedom and authenticating circulation figures for newspapers and periodicals. Its members include owners and publishers of print media.

9. Recently, India signed an agreement with which country to implement four Community Development Projects?

A. Marshall Islands

B. Solomon Islands

C. Papua New Guinea

D. New Zealand

  • External Affairs Minister Dr S Jaishankar emphasized the long-standing friendly relations between India and the Marshall Islands during the MoU signing for Four Community Development Projects. He highlighted India’s responsibility to support Pacific Islands in sustainable development, addressing climate change, natural disasters, poverty alleviation, and healthcare. Dr Jaishankar affirmed that the Pacific Islands are significant ocean countries and valued India’s partnership with them.

10. Which ministry is hosting the 2024 World Heritage Young Professionals Forum?

A. Ministry of External Affairs

B. Ministry of Home Affairs

C. Ministry of Culture

D. Ministry of Defence

  • India is hosting the UNESCO World Heritage Committee meeting for the first time from July 21-31, 2024, in New Delhi. The Ministry of Culture is organizing the 2024 World Heritage Young Professionals Forum, themed “World Heritage in the 21st Century”. The forum, held at the Pt Deendayal Upadhyaya Institute of Archaeology, will see 50 young professionals globally presenting to enhance their skills in heritage protection and sustainable development.

11. Recently, which research institute has been launched the ‘One-Scientist-One Product’ program?

A. Indian Council of Agricultural Research (ICAR)

B. Indian Institute of Science Education and Research (IISER)

C. National Institute of Biomedical Genomics (NIBMG)

D. Institute of Economic Growth

  • The Indian Council of Agricultural Research (ICAR) launched its ‘One Scientist-One Product’ programme on July 16, enhancing research in agriculture and animal husbandry. During its 96th foundation day celebration in Delhi, ICAR announced 323 new crop varieties, including 289 climate-resilient and 27 bio-fortified types. The programme was inaugurated by Union Agriculture Minister Shivraj Singh Chouhan.

12. Recently, which Indian city created a world record by planting 11 lakh saplings in a day?

A. Coimbatore, Tamil Nadu

B. Indore, Madhya Pradesh

C. Kozhikode, Kerala

D. Amaravati, Andhra Pradesh

  • The Madhya Pradesh government set a new Guinness World Record by planting over 11 lakh saplings in one day in Indore. Chief Minister Mohan Yadav received the certificate from the Guinness Book of Records team. Union Home Minister Amit Shah also participated in the “Ek Ped Maa Ke Naam” campaign, launched by Prime Minister Narendra Modi on June 5. Indore, India’s cleanest city, will see 51 lakh saplings planted under this drive.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!