General Tamil Model Question Paper 18
71. “ஆடலரசி”
(அ) மணிமேகலை
(ஆ) மாதவி
(இ) மாதரி
(ஈ) சித்திராபதி
விடை மற்றும் விளக்கம்
(ஆ) மாதவி
72. நாலாயிர திவ்வியப்பிரபந்தத்தைத் தொகுத்தவர்
(அ) மாணிக்கவாசகர்
(ஆ) நாதமுனிகள்
(இ) பொய்கையார்
(ஈ) பூதத்தார்
விடை மற்றும் விளக்கம்
(ஆ) நாதமுனிகள்
73. வேளாண்வேதம் என்று அழைக்கப்படும் நூல்
(அ) நாலடியார்
(ஆ) நான்மணிக்கடிகை
(இ) சிறுபஞ்சமூலம்
(ஈ) பழமொழி
விடை மற்றும் விளக்கம்
(அ) நாலடியார்
74. பொருத்தாதவற்றைச் சுட்டுக:
(அ) நாடி இனிய சொலின்
(ஆ) இனிய உளவாக இன்னாத கூறல்
(இ) காயும் ஒருநாள் கனியாகும்
(ஈ) பண்பின் தலைபிரியாச் சொல்
விடை மற்றும் விளக்கம்
(இ) காயும் ஒருநாள் கனியாகும்
விளக்கம்:
ஏனைய மூன்றும் செய்யுள் அடிகளாகும். மேலும் மூன்றும் நற்பண்புகளைக் குறிக்கும் சொற்றொடர்களாகும். கொள்குறி (இ) சாதாரண சொற்றொடாகும்.
75. “யாருமில்லை தானே கள்வன்”
என்ற வரிகள் இடம் பெற்ற நூல் எது?
(அ) புறநானூறு
(ஆ) குறுந்தொகை
(இ) அகநானூறு
(ஈ) கலித்தொகை
விடை மற்றும் விளக்கம்
(ஆ) குறுந்தொகை
விளக்கம்:
குறுந்தொகை
“யாரு மில்லை தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
தினைத்தா ளன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீ ராரல் பார்க்கும்
குருகு முண்டுதான் மணந்த ஞான்றே”
ஆசிரியர்-கபிலர்.
திணை-குறிஞ்சி.
பொருள்:
“தலைவர் என்னைக் களவில் மணந்த போது அவ்விடத்துச் சான்று கூறத் தக்கர் எவருமிலர். அக்கள்வரே அங்கு இருந்தவரும் ஆவார். அவரே தாம் கூறிய சூளுரையினைப் பொய்த்து விடும்படி செய்வராயின் நான் என்ன செய்ய இயலும்? ஓடும் நீரிலே ஆரல் மீனுக்காகக் காத்திருந்த, தினையின் தாள் போன்ற சிறிய பசுமையான கால்களையுடைய நாரைகளும் இருந்தன. அவ்வளவே” எனத் தலைவி தோழியிடம் கூறுகிறான்.
76. “வாகீசர்” என்று அழைக்கப்பெறுபவர்
(அ) சுந்தரர்
(ஆ) குலசேகர ஆழ்வார்
(இ) மாணிக்கவாசகர்
(ஈ) திருநாவுக்கரசர்
விடை மற்றும் விளக்கம்
(ஈ) திருநாவுக்கரசர்
விளக்கம்:
“வாகீசர்” என அழைக்கப்பெறுபவர் திருநாவுக்கரசர் ஆவார். இவரின் இயற்பெயர் “மருள்நீக்கியார்”. சிலகாலம் அவர் சமணசமயத்தில் இருந்தபோது “தருமசேனர்” என அழைக்கப்பெற்றார். மீண்டும் சைவ சமயத்திற்கு இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட போது, இறைவனால் “நாவுக்கரசு” எனப்பெயர் பெற்றார். இறைவன் சூலைநோயைத் தந்து இவரை ஆட்கொண்டமையால் “ஆளுடைய அரசு” எனப்பட்டார். திருஞான சம்பந்தர் இவரை “அப்பர்” என்றழைத்தார்.
77. மணிமேகலைக்கு அறவுரை வழங்கிய ஆசிரியர்
(அ) அதிரா அடிகள்
(ஆ) இளங்கோ அடிகள்
(இ) அறவண அடிகள்
(ஈ) கவுந்தி அடிகள்
விடை மற்றும் விளக்கம்
(இ) அறவண அடிகள்
விளக்கம்:
அதிரா அடிகள்-பதினொன்றாம் திருமுறையில் உள்ள பிரபந்தங்களை அருளிச் செய்த ஆசிரியர்களுள் ஒருவர் அதிரா அடிகள்.
இளங்கோ அடிகள்- சிலப்பதிகாரத்தின் ஆசிரியர்.
அறவண அடிகள்-மணிமேகலை என்ற காப்பியத்தில் மணிமேகலைக்கு அறவுரை வழங்கிய ஆசிரியர்.
கவுந்தியடிகள்-சிலப்பதிகாரத்தில் கோவலனையும் கண்ணகியையும் வழிநடத்திச் சென்றவர்.
78. பிள்ளைத் தமிழின் இரண்டாம் பருவம்.
(அ) தாலப்பருவம்
(ஆ) செங்கீரைப்பருவம்
(இ) சப்பாணிப்பருவம்
(ஈ) முத்தப்பருவம்
விடை மற்றும் விளக்கம்
(ஆ) செங்கீரைப்பருவம்
விளக்கம்:
பிள்ளைத் தமிழின் 10 பருவங்கள்.
இருபாலருக்கும் பொதுவான பருவங்கள் (7): காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி.
ஆண்பாற் பிள்ளைத்தமிழுக்குரிய இறுதி மூன்று பருவங்கள்: சிற்றில், சிறுபறை, சிறுதேர்.
பெண்பாற் பிள்ளைத்தமிழுக்குரிய இறுதி மூன்று பருவங்கள்: அம்மானை, கழங்கு (நீராடல்), ஊசல்.
79. ‘ஊரோடு தோற்றமும் உரித்தென வழக்கொடு சிவணிய வகைமையான’ என்ற தொல்காப்பிய வரி பிற்பாலத்தில் எந்த்ப பிரபந்தங்களுக்குத் தோற்றுவாயாக அமைந்தது?
(அ) பிள்ளைத் தமிழ்
(ஆ) உலா
(இ) தூது
(ஈ) அந்தாதி
விடை மற்றும் விளக்கம்
(ஆ) உலா
80. ஆண்பால் பிள்ளைத் தமிழில் இல்லாத பருவங்கள்
(அ) தால், சப்பாணி, முத்தம்
(ஆ) சிற்றில், சிறுபறை, சிறுதேர்
(இ) காப்பு, வருகை, அம்புலி
(ஈ) அம்மானை, நீராடல், ஊசல்
விடை மற்றும் விளக்கம்
(ஈ) அம்மானை, நீராடல், ஊசல்