General Tamil Model Question Paper 18
61. “தொண்டர் சீர் பரவுவர்”
என அழைக்கப்படுபவர்
(அ) சேக்கிழார்
(ஆ) கம்பர்
(இ) சுந்தரர்
(ஈ) சம்பந்தர்
விடை மற்றும் விளக்கம்
(அ) சேக்கிழார்
விளக்கம்:
பெருமையுடைய சிவனடியார்களின் வரலாற்றை எழுதியதால், தொண்டர்களின் பெருமையை (சீர்) பரப்பியவர் என்ற பொருள் அமையுமாறு “தொண்டர் சீர்பரவுவார்” என்று சேக்கழார் அழைக்கப்பட்டார்
62. “திருமந்திரம்” சைவத்திருமுறைகளுள் ———– திருமுறை ஆகும்
(அ) பதினோராம்
(ஆ) பத்தாம்
(இ) பன்னிரண்டாம்
(ஈ) எட்டாம்
விடை மற்றும் விளக்கம்
(ஆ) பத்தாம்
விளக்கம்:
சைவத் திருமுறைகள்
1,2,3 – திருஞானசம்பந்தர் (தேவாரம்)
4,5,6 – திருநாவுக்கரசர் (தேவாரம்)
7 – சுந்தரர் (தேவாரம்)
8 – மாணிக்க வாசகர் (திருவாசகம், திருக்கோவையார்)
9 – ஒன்பதின்மர் (திருமாளிகைத் தேவர், சேந்தனார், கண்டராதித்தர்,
கருவூர்த்தேவர், வேணாட்டடிகள்) திருவாலியமுதனார், புருடோத்தம நம்பி, சேதிராயர், பூந்துருத்தி நம்பிகாடநம்பி-திருவிசைப்பா, திருப்பல்லாண்டு.
10 – திருமூலர் (திருமந்திரம்)
11 – பன்னிருவர் (ஆலவாய் உடையார், காரைக்கால் அம்மையார், ஐயடிகள்
காடவர்கோன், சேரமான் பெருமான், நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர், இளம்பெருமான், அதிராவடிகள், பட்டனத்தடிகள், நம்பியாண்டார் நம்பி-பிரபந்தமாலை (40 நூல்கள்)
12 – சேக்கிழார் (பெரியபுராணம்)
63. பொருத்தமான விடை:
“மேழி” – என்பதன் பொருள்
(அ) கலப்பை
(ஆ) மோதிரம்
(இ) உழவர்
(ஈ) மேகம்
விடை மற்றும் விளக்கம்
(அ) கலப்பை
விளக்கம்:
மேழி பிடிக்கும்கை வேல்வேந்தர் நோக்கும்கை
ஆழி தரித்தே அருளும்கை – சூழ்வினையை
நீக்கும்கை என்றும் நிலைக்கும்கை நீடுழி
காக்கும்கை காராளர் கை.
-கம்பர்
மேழி-கலப்பை, ஏர்.
உழவரின் கைகள் கலப்பை பிடித்து உழவு செய்கின்ற கைகளாகும்.
64. ஆண்டாளின் வளர்ப்புத் தந்தை யார்?
(அ) நம்மாழவார்
(ஆ) பெரியாழ்வார்
(இ) பூத்ததாழ்வார்
(ஈ) பேயாழ்வார்
விடை மற்றும் விளக்கம்
(ஆ) பெரியாழ்வார்
விளக்கம்:
பெரியாழ்வார் திருவில்லிபுத்தூரில் பிறந்தவர். நந்தவனம் அமைத்து நாள்தோறும் அரங்கனுக்கு தொண்டு செய்து வாழ்ந்தவர் பெரியாழ்வார். இவரின் இயற்பெயர் விஷ்ணுசித்தர். இவரின் வளர்ப்பு மகள் ஆண்டாள். ஆண்டாளின் இயற்பெயர் கோதையாகும்.
65. சீர் எதுகை அமைந்த தொடரைக் கண்டறிக:
(அ) வருக மற்றிவண் தருக ஈங்கென
(ஆ) கள்வனைக் கோறல் கடுங்கோலன்று
(இ) இந்துவின் நுதலாளோடு இளவலெ டினிதேறா
(ஈ) வேதனைக் வந்தாலும் விலகிப் போகும்
விடை மற்றும் விளக்கம்
(அ) வருக மற்றிவண் தருக ஈங்கென
விளக்கம்:
அடிதோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது அடி எதுகையாகும். ஒரே சீரில் இரண்டாமெழுத்து ஒன்றிவருவது சீர் எதுகையாகும்.
வருக மற்றிவண் தருகு ஈங்கென
66. பரணி இலக்கியத்திற்குரிய பாவகையைக் குறிப்பிடுக:
(அ) நேரிசை வெண்பா
(ஆ) ஆசிரிய விருத்தம்
(இ) கலித்தாழிசை
(ஈ) கலிவிருத்தம்
விடை மற்றும் விளக்கம்
(இ) கலித்தாழிசை
67. “அம்மானை” என்பது ——– விளையாடும் விளையாட்டு
(அ) பெண்கள்
(ஆ) ஆண்கள்
(இ) குழந்தைகள்
(ஈ) இளைஞர்கள்
விடை மற்றும் விளக்கம்
(அ) பெண்கள்
68. சந்திப்பிழையை நீக்குக:
(அ) தமிழக அரசின் அரசவை கவிஞராகத் திகழ்ந்தார்
(ஆ) தமிழக அரசின் அரசவைக் கவிஞராக திகழ்ந்தார்.
(இ) தமிழக அரசின் அரசவை கவிஞராக திகழ்ந்தார்
(ஈ) தமிழக அரசின் ரசவைக் கவிஞராகத் திகழ்ந்தார்
விடை மற்றும் விளக்கம்
(ஈ) தமிழக அரசின் ரசவைக் கவிஞராகத் திகழ்ந்தார்
69. மீனாட்சியம்மையே சிறுமியாக வந்து முத்துமாலையை யாருக்குப் பரிசாக அளித்தார்?
(அ) திருமலைநாயக்கர்
(ஆ) பரஞ்சோதி முனிவர்
(இ) குமரகுருபரர்
(ஈ) சீத்தலை சாத்தனார்
விடை மற்றும் விளக்கம்
(இ) குமரகுருபரர்
70. “சால்பு” என்பதன் பொருள் யாது?
(அ) பேராண்மை
(ஆ) மோலண்மை
(இ) சான்றாண்மை
(ஈ) வேளாண்மை
விடை மற்றும் விளக்கம்
(இ) சான்றாண்மை