General Tamil Model Question Paper 18
21. கோலியாத்தை அழக்க் தாவீதன் பயன்படுத்தாதது
(அ) கவண்
(ஆ) வாள்
(இ) எறிஈட்டி
(ஈ) கல்
விடை மற்றும் விளக்கம்
(இ) எறிஈட்டி
விளக்கம்:
தேம்பாவணி-“வளன் செனித்த படலம்”
இப்பகுதியில் கோலியாத்தை தாவீது அழித்த நிகழ்வு கூறப்பட்டுள்ளது. தாவீது, ஒரு கவணும் ஐந்து கற்களும் கொண்டு போர் முனைக்குச் சென்றான். தாவீதன் கல்லையெடுத்ததும் கவணிடைப் பூட்டியதும் யாரும் காண்கிலர், கோலியாத்து கருமேகம் போல் வீழ்ந்ததனையே கண்டனர். பின்னர் தாவீது வாளையெடுத்து கோலியாத்தின் தலையைக் கொய்தான்.
22. ஐம்புலன் அடக்கத்திற்கு உவமையாகக் கூறப்படுவது எது?
(அ) யானை
(ஆ) ஆமை
(இ) நரி
(ஈ) பரி
விடை மற்றும் விளக்கம்
(ஆ) ஆமை
விளக்கம்:
“ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து”
– திருக்குறள் (126)
பொருள்: ஒரு பிறப்பில் ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனால், அஃது அவனுக்கு பல பிறப்புகளிலும் காப்பாக அமையும்.
23. “திருக்கை வழக்கம்” என்னும் நூலின் ஆசிரியர் யார்?
(அ) நக்கீரர்
(ஆ) ஒட்டக்கூத்தர்
(இ) இளங்கோவடிகள்
(ஈ) கம்பர்
விடை மற்றும் விளக்கம்
(ஈ) கம்பர்
விளக்கம்:
கம்பர் எழுதிய நூல்கள்:
கம்பராமாயணம், சடகோபரந்தாதி, ஏரெழுபது, சிலையெழுபது, திருக்கை வழக்கம், சரசுவதி அந்தாதி.
24. “நான்மணிக்கடிகை” என்னும் சொல்லில் கடிகை என்பதன் பொருள்
(அ) தோள் வளை
(ஆ) கை வளை
(இ) கால் வளை
(ஈ) கழுத்தணி
விடை மற்றும் விளக்கம்
(அ) தோள் வளை
விளக்கம்:
நான்மணிக்கடிகை-நான்கு+மணி+கடிகை.
கடிகை-தோள்வளை.
நான்கு மணிகள் பதிக்கப்பெற்ற தோள்வளை போல் நான்கு நீதி மணிகளால் நிலைநாட்டப்பட்ட பாடல்களைக் கொண்ட நூல். இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூலின் ஆசிரியர் விளம்பி நாகனார்.
25. திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் பாடியவர்.
(அ) மாணிக்கவாசகர்
(ஆ) சுந்தரர்
(இ) சம்பந்தர்
(ஈ) அப்பர்
விடை மற்றும் விளக்கம்
(அ) மாணிக்கவாசகர்
விளக்கம்:
பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையில் திருவாசகமும், திருக்கோவையாரும் அமைந்துள்ளன. இந்நநூல்களை இயற்றியவர் மாணிக்கவாசகர். இவரின் சிறப்புப் பெயர் திருவாதவூரார். இவர் இயற்றிய மற்றொரு நூல் “திருவெம்பாவை” ஆகும். அரிமர்த்தன பாண்டிய மன்னனிடம் தலைமை அமைச்சராகப் பணியாற்றியவர் மாணிக்கவாசகர்.
26. ஐம்பெருங்காப்பியம் -இவற்றுள் பொருந்தா நூலைக் கண்டறிக:
(அ) சிலப்பதிகாரம்
(ஆ) கம்பராமாயணம்
(இ) மணிமேகலை
(ஈ) சீவகசிந்தாமணி
விடை மற்றும் விளக்கம்
(ஆ) கம்பராமாயணம்
விளக்கம்:
ஐம்பெருங்காப்பியங்கள்: சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, கம்பராமாயணம்-காப்பிய வகையாகும்.
27. முக்கூடற்பள்ளு எவ்விலக்கிய வகையைச் சார்ந்தது?
(அ) வனப்பு
(ஆ) சமயம்
(இ) நீதி
(ஈ) புலன்
விடை மற்றும் விளக்கம்
(ஈ) புலன்
விளக்கம்:
வனப்பியல்: அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு புலன், இழைபு.
புலன்: வழக்குச் சொற்களால், தளிவாகப் புரியும் வண்ணம், ஆராய்ந்து தெரிய வேண்டாத நிலையில் அமையும் செய்யுள் “புலன்” என்று கூறுவர். முக்கூடற்பள்ளு “புலன்” வகை இலக்கியம்.
28. தம் வீட்டிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் திருநாவுக்கரசர் எனப் பெயர் சூட்டியவர்.
(அ) அப்பூதியடிகள்
(ஆ) மாறநாயனார்
(இ) திருநீலகண்டர்
(ஈ) சுந்தரர்
விடை மற்றும் விளக்கம்
(அ) அப்பூதியடிகள்
விளக்கம்:
63 நாயன்மார்களில் ஒருவர் அப்பூதியடிகள், திங்களுரில் தோன்றிய அப்பூதியடிகள், திருநாவுக்கரசரைப் பார்க்காமலேயே அவர் மீது பேரன்பு கொண்டிருந்தார். அவர் மீது கொண்ட அன்பின் காரணமாக தன் குழந்தை, இல்லம், தண்ணீர்ப்பந்தல், அன்னச்சத்திரம், கடைகள் என அனைத்திற்குமே “திருநாவுக்கரசு” என்னும் பெயரையே சூட்டி மகிழ்ந்தார்.
பெரியபுராணம்.
“களவு, பொய் காமம், கோபம் முதலிய குற்றம் காய்ந்தார்
வளமிகு மனையின் வாழ்க்கை நிலையினார் மனைப்பால் உள்ள
அளவைகள், நிறைகோல், மக்கள், ஆவொடு மேதி மற்றும்
உள எலாம் அரசின் நாமம் சாற்றும் அவ்வொழக லாற்றார்”
– சேக்கிழார்.
பொருள்: அப்பூதியடிகள் களவு, பொய், காமம், சினம் முதலிய குற்றங்கள் நீங்கியவர்; வளமிக்க இல்லற வாழ்க்கை வாழுபவர்; தம் வீட்டிலுள்ள அளவுக் கருவிகள், நிறுக்கும் கோல், குழந்தைகள், பசுக்கள், எருமைகள், மற்றைய பொருள்கள் எல்லாவற்றிற்கும் திருநாவுக்கரசு என்னும் திருப்பெயரையே வைத்து வழங்கி வருபவர்.
29. எட்டுத் தொகை யில் இடம் பெறாத நூல் எது?
(அ) நற்றிணை
(ஆ) மதுரைக்காஞ்சி
(இ) ஐங்குநுறூறு
(ஈ) பதிற்றுப்பத்து
விடை மற்றும் விளக்கம்
(ஆ) மதுரைக்காஞ்சி
விளக்கம்:
மதுரைக்காஞ்சி-பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும்.
30. “மறைவழி” – என்னும் ஆங்கிலக் கதையைத் தழுவிய நூல்
(அ) மனோன்மணீயம்
(ஆ) இரட்சணிய மனோகரம்
(இ) மானசல்லோசம்
(ஈ) தேம்பாவணி
விடை மற்றும் விளக்கம்
(அ) மனோன்மணீயம்
விளக்கம்:
மனோன்மணீயம்: இந்நூல் இராவ்பகதூர் பெ.சுந்தரம் பிள்ளை அவர்களால் இயற்றப்பெற்ற நூலாகும். பாண்டிய நாட்டு மன்னாகிய சீவகவழுதியின் மகள் மனோன்மணியின் வரலாற்றைக் கூறும் நாடக நூலாகும். இந்நாடக நூல் அங்கிலத்தில் லிட்டன் பிரபு என்பார் இயற்றிய இரகசிய வழி (மறைவழி) என்னும் நூலைத் தழுவி எழுதப் பெற்றதாகும்.