General Tamil Model Question Paper 18
11. திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால், இரண்டனையும் வீரமாமுனிவர் இந்த மொழியில் மொழிபெயர்த்தார்
(அ) இலத்தீன்
(ஆ) பிரெஞ்சு
(இ) ஜெர்மன்
(ஈ) ஸ்பானிஷ்
விடை மற்றும் விளக்கம்
(அ) இலத்தீன்
12. “முந்தையிலிருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்”
– என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல்
(அ) நற்றிணை
(ஆ) ஐங்குறுநூனூறு
(இ) குறுந்தொகை
(ஈ) கலித்தொகை
விடை மற்றும் விளக்கம்
(அ) நற்றிணை
விளக்கம்:
“புதல்வன் ஈன்ற பூங் கண் மடந்தை
முலை வாய் உறுக்கும் கைபோல், காந்தட் குலைவாய் தோயும்
கொழு மடல் வாழை
அம் மடல் பட்ட அருவித் தீம் நீர்
செம் முக மந்தி ஆடும் நாட!
முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின், நஞ்சும் உண்பர் நனி
நாகரிகர்;”
நற்றிணை-355-ஆவது பாடல்.
திணை-குறிஞ்சி.
ஆசிரியர்-பெயர் அறியப்படவில்லை.
பொருள்: புதல்வனைப் பெற்றெடுத்த நீலமலர் போன்ற கண்ணையுடைய மடந்தை தன் கொங்கையைத் தன் கையால் பிடித்துப் புதல்வன் வாயில் வைத்துப் பால் ஊட்டுவாள். அப்போது அக்குழந்தை பாலைப் பருகுவது போலக் காந்தள் பூங்கொத்தொடு பொருந்திய கொழுவிய வாழை மடலின் இனிய நீரைச் சிவந்த முகமுள்ள பெண் குரங்கு பருகி நிற்கும். அத்தகு மலை நாடனே! நட்புடைய நல்ல கண்ணோட்முடையார் முன் நஞ்சைக் கலந்து கொடுத்து உண்ணச் சொன்னாலும் அவர்கள் அதனை உண்டு நல்ல கண்ணோட்டமுடையார் என்பதை மெய்ப்பிப்பர்.
13. இளங்கோவடிகளின் பெற்றோர் எக்குலத்தைச் சார்ந்தவர்கள்?
(அ) தாய் சேரர் குலம்-தந்தை பாண்டியர் குலம்
(ஆ) தாய் சோழர் குலம்-தந்தை சேரர் குலம்
(இ) தாய் பாண்டியர் குலம்-தந்தை சோழர் குலம்
(ஈ) தாய் பல்லவர் குலம்-தந்தை சாளுக்கியர் குலம்
விடை மற்றும் விளக்கம்
(ஆ) தாய் சோழர் குலம்-தந்தை சேரர் குலம்
விளக்கம்:
இளங்கோவடிகள். இயற்பெயர்-குடக்கோச் சேரல்.
தந்தை-இமயவரம்பன் நெடுஞ்சேரலாதான் (சேரமன்னன்).
தாய்-நற்சோணை (சோழநாட்டு இளவரசி).
தமையன்-சேரன் செங்குட்டுவன்
14. திருமந்திரம் நூலின் பாடல் எண்ணிக்கை
(அ) இரண்டாயிரம்
(ஆ) ஆறாயிரம்
(இ) ஏழாயிரம்
(ஈ) மூவாயிரம்
விடை மற்றும் விளக்கம்
(ஈ) மூவாயிரம்
விளக்கம்:
சைவத் திருமுறைகளில் பத்தாவது திருமுறை “திருமந்திரம்” ஆகும். இதன் வேறு பெயர் “தமிழ் மூவாயிரம்” ஆகும். ஏனெனில் இந்நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை மூவாயிரம் ஆகும்.
ஆசிரியர்-திருமூலர்.
இந்நூலின் புகழ்பெற்ற தொடர் – “ஒன்றே குலம் ஒருவனே தேவன்”
15. “ஐந்குறுநூறு” – செய்யுளின் அடிவரையறை:
(அ) 4-8 அடிகள்
(ஆ) 9-12 அடிகள்
(இ) 3-6 அடிகள்
(ஈ) 13-31 அடிகள்
விடை மற்றும் விளக்கம்
(இ) 3-6 அடிகள்
விளக்கம்:
ஐந்குறுநூறு. ஐந்து+குறுமை+நூறு-ஐங்குநுறூறு.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகைத் திணை குறித்த குறுகிய நூறு நூறு பாட்டுகளாகத் தொகுக்கப்பட்ட நூல் இது. ஆதலின் இந்நூல் ஐந்குறுநூறு எனப் பெயர் பெற்றது. இந்நூலின் மூன்றடிச் சிறுமையும் ஆறடிப் பேரெல்லையும் உடைய ஐந்நூறு ஆசிரியப்பாக்கள் உள்ளன. அதனால், அளவாலும் பொருளாலும் இந்நூல் இப்பெயர் பெற்றது.
16. தவறான ஒன்றைத் தேர்க:
(அ) சிறுமல்லி
(ஆ) சிறுவழுதுணை
(இ) பெருமல்லி
(ஈ) ஏலம்
விடை மற்றும் விளக்கம்
(ஈ) ஏலம்
விளக்கம்:
ஏலாதியில் கூறப்பட்டுள்ள மருந்துகள்:
ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ, மிளகு, திப்பிலி, சுக்கு.
சிறுபஞ்சமூலத்தில் கூறப்பட்டுள்ள மருந்துகள்:
கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சில்,
ஏலம் என்பது சிறுபஞ்மூலத்தில் அமையவில்லை.
17. பொருத்துக:
அ. சிலப்பதிகாரம் – 1. திருத்தக்கதேவர்
ஆ. மணிமேகலை – 2. ஆசிரியர் பெயர் தெரியவில்லை
இ. சீவகசிந்தாமணி – 3. இளங்கோவடிகள்
ஈ. வளையாபதி – 4. சீத்தலை சாத்தனார்
அ ஆ இ ஈ
அ. 4 3 2 1
ஆ. 3 4 1 2
இ. 2 1 3 4
ஈ. 1 2 4 3
விடை மற்றும் விளக்கம்
ஆ. 3 4 1 2
18. “திவ்யகவி” – பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் இயற்பெயர்
(அ) மாதவன்
(ஆ) மணவாள மாமுனிகள்
(இ) அழகிய மணவாளதாசர்
(ஈ) மதுசூதனன்
விடை மற்றும் விளக்கம்
(இ) அழகிய மணவாளதாசர்
விளக்கம்:
பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் இயற்பெயர் அழகிய மணவாளதாசர். சோழ நாட்டிலுள்ள திருமங்கை என்பது இவருடைய ஊராகும். காலம் கி.பி.17-ஆம் நூற்றாண்டாகும். வடமொழியிலும் தென்மொழியிலும் வல்லவரான இவர் கிபி.1623 முதல் கி.பி1659 வரை மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரிடம் அரசு அலுவலராகப் பணிபுரிந்தார். பின்னர் திருவரங்கத்தில் தங்கியிருந்து இறைத்தொண்டில் ஈடுபட்டார். இவர் இயற்றிய எட்டு நூல்களின் தொகுதி “அஷ்டபிரபந்தம்” எனப்படுகிறது.
19. “பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்”
என்ற புறநானூற்றுப் பாடலைப் பாடியவர் யார்?
(அ) கணியன் பூங்குன்றனார்
(ஆ) ஒளவையார்
(இ) பிசிராந்தையார்
(ஈ) கண்ணகனார்
விடை மற்றும் விளக்கம்
(ஈ) கண்ணகனார்
விளக்கம்:
“பொன்னும், துகிரும் முத்தும், மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்,
இடைபடச் சேய ஆயினும், தொடை புணர்ந்து,
அருவிலை நன்கலம் அமைக்கும் காலை
ஒருவழித் தோன்றியாங்கு – என்றும்
சான்றோர் சான்றோர் பாலர் ஆப;
சாலார் சாலார் பாலர் ஆகுபவே”
– புறநானூறு-218-ஆம் பாடல்
ஆசிரியர்-கண்ணகனார்.
பிசிராந்தையார் வடக்கிருந்தபோது இயற்றப்பட்ட பாடல்.
பொருள்: பொன்னும் பவளமும் முத்தும் நிலைபெற்ற மலை தந்த விருப்பத்திற்குரிய மணியும் ஒன்றற்கொன்று இடையே இடத்தால் தொலைவில் இருந்தாலும், இவற்றை ஒன்றுபடுத்தி, அரிய மதிப்புடைய நல்ல அணிகலன்களைச் செய்யுங்காலத்து ஓரிடத்து வந்து சேர்ந்தாற்போல, எந்நாளும் பெரியோர் பெரியோர் பக்கத்திலே இருப்பர். பெருமையில்லாதவர், பெருமைபியல்லாதவர் பக்கத்திலேயே இருப்பர்.
20. எட்டுத்தொகை நூல்களுள் அதிகமான அடிவரையறை கொண்ட நூல் எது?
(அ) நற்றிணை
(ஆ) அகநானூறு
(இ) புறநானூறு
(ஈ) குறுந்தொகை
விடை மற்றும் விளக்கம்
(ஆ) அகநானூறு
விளக்கம்:
எட்டுத்தொகை நூல்களுள் அதிகமான அடிவரையறை கொண்ட நூல் அகநானூறு ஆகும். 13 அடிகள் முதல் 31 அடிகள் வரை அமைந்துள்ளதால், இந்நூல் “நெடுந்தொகை” எனவும் வழங்கப்பெறும்.