1st March 2022 Tnpsc Current Affairs in Tamil & English
1st March 2022 Tnpsc Current Affairs in Tamil & English
Hello aspirants, you can read 1st March 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.
March Daily Current Affairs Pdf
1. தொழிற்துறையில் அன்னிய முதலீட்டை ஊக்குவிப்பது தொடர்பான கொள்கைக்கு சமீபத்தில் ஒப்புதலளித்துள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?
அ) கோவா
ஆ) அஸ்ஸாம்
இ) ஜம்மு-காஷ்மீர்
ஈ) லடாக்
- துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையிலான நிர்வாக கவுன்சில், ஜம்மு-காஷ்மீரில் தொழிற்துறையில் அன்னிய முதலீட்டை மேம்படுத்துவத -ற்கான கொள்கைக்கு ஒப்புதல் அளித்தது. இந்தப் புதிய கொள்கையானது குறைந்தபட்சம் 51 சதவீத வெளிநாட்டு பங்குகளுடன் `100 கோடிக்கும் அதிகமான வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2. இந்தியாவின் COVID-19 தடுப்பூசி மேம்பாடு மற்றும் நிர்வாகப் பயணத்தை ஆவணப்படுத்தும் அறிக்கைகளை வெளியிட்ட நிறுவனம் எது?
அ) போட்டித்தன்மைக்கான நிறுவனம்
ஆ) NITI ஆயோக்
இ) ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்
ஈ) எய்ம்ஸ்
- மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்தியாவின் COVID தடுப்பூசி மேம்பாடு மற்றும் தடுப்பூசி நிர்வாகப் பயணத்தை ஆவணப்படுத்தும் போட்டித்தன்
-மைக்கான நிறுவனத்தின் (இந்திய அத்தியாயம்) இரு அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். - இந்தியாவின் தடுப்பூசி மேம்பாடு குறித்த இவ்வறிக்கை, உள்நாட்டு தடுப்பூசிக்கான ‘PM CARES’ நிதியின் `100 கோடி நிதியுதவி மற்றும் மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கான உலகளாவிய நிறுவனங்களுடன் இந்திய மருந்து நிறுவனங்களின் ஒத்துழைப்பில் கவனம் செலுத்துகிறது. நிர்வாகம் குறித்த அறிக்கை, ‘Co-WIN’ மற்றும் ‘ஆரோக்கிய சேது’ போன்ற செயலிகளில் கவனம் செலுத்துகிறது.
3. ‘ஹெல்த் ஸ்டார் ரேட்டிங்’ என்பது கீழ்காணும் எந்த அமைப்பின் முன்முயற்சியாகும்?
அ) இந்திய உணவு கழகம்
ஆ) FSSAI
இ) நபார்டு
ஈ) NITI ஆயோக்
- இந்திய உணவுப்பாதுகாப்பு & தரநிர்ணய ஆணையத்தின் (FSSAI) வழிகாட்டுதலின்படி, பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு ‘சுகாதார நட்சத்திர மதிப்பீடு’ வழங்கப்படும். நட்சத்திரங்களின் எண்ணிக்கை, பொருள் எவ்வளவு ஆரோக்கியமானது அல்லது ஆரோக்கியமற்றது என்பதைக்குறிக்கும். உணவுப்பொருளிலுள்ள கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இம் மதிப்பீடு செய்யப்படும்.
4. ‘கூட்டுப்பொருள் உற்பத்திக்கான தேசிய உத்தி’யை அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சகம் எது?
அ) மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
ஆ) MSME அமைச்சகம்
இ) வர்த்தகம் & தொழில் அமைச்சகம்
ஈ) அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகம்
- மின்னணுவியல் & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆனது ‘கூட்டுப்பொருள் உற்பத்திக்கான தேசிய உத்தி’ஐ வெளியிட்டது. இவ்வுத்தியின்படி, அடுத்த 3 ஆண்டுகட்குள் உலகளாவிய கூட்டுப்பொருள் உற்பத்தியில் பங்கை 5% ஆக அதிகரிப்பதை இந்தியா நோக்கமாகக்கொண்டுள்ளது.
- முப்பரிமாண (3D) அச்சிடுதல் அல்லது கூட்டுப்பொருள் உற்பத்தியானது பொருள்களின் முன்மாதிரிகள் அல்லது வேலைசெய்யும் மாதிரிகளை உருவாக்க கணினி உதவி வடிவமைப்பைப் பயன்படுத்துகிறது.
5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற Intracortical Visual Prosthesis (ICVP) என்பதுடன் தொடர்புடையது எது?
அ) செயற்கை பார்வைத்திறன்
ஆ) செயற்கை நுண்ணறிவு
இ) ஸ்பைவேர்
ஈ) வழிசெலுத்தல்
- ஆய்வின் முதல் பங்கேற்பாளருக்கு Intracortical Visual Prosthesis (ICVP) வெற்றிகரமாக அறுவை சிகிச்சைமூலம் பொருத்தப்பட்டது. இந்த அமைப்பு பார்வையிழந்தோர்க்கு ஓரளவு பார்வையை மீட்டெடுக்கும் திறன்கொண்டதாக கூறப்படுகிறது. ICVP என்பது விழித்திரை மற்றும் பார்வை நரம்புகளைத்தவிர்த்துவிட்டு மூளையின் பார்வைப்புற
-ணியுடன் நேரடியாக இணைக்கும் ஓர் உள்வைப்பாகும்.
6. 2028 ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் இடம் எது?
அ) பாரிஸ்
ஆ) ரோம்
இ) லாஸ் ஏஞ்சல்ஸ்
ஈ) மாஸ்கோ
- 2028 ஒலிம்பிக் போட்டிகள் அல்லது 2028 கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும். இது ‘LA28’ எனக் குறிப்பிடப்படுகிறது. 2024 ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில் நடைபெறும். அண்மையில், லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள 2028 – கோடைகால ஒலிம்பிக்கில் சர்பிங், ஸ்கேட்போர்டிங் மற்றும் ஸ்போர்ட் கிளைம்பிங் ஆகியவற்றைச் சேர்க்கும் திட்டத்திற்கு பன்னாட்டு ஒலிம்பிக் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது.
7. சௌரி சௌரா கிராமம் இன்றைய எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
அ) பீகார்
ஆ) உத்தர பிரதேசம்
இ) ஒடிஸா
ஈ) மேற்கு வங்கம்
- காலனித்துவ நிர்வாகத்திற்கு எதிராக ‘மகாத்மா’ காந்தியின் ‘ஒத்துழையாமை இயக்கம்’ தொடங்கப்பட்ட போது, இன்றைய உத்தரபிரதேசத்தில் உள்ள சௌரி சௌரா கிராமத்தில் 23 காவலர்களைக் கொன்ற கும்பல் காவல் நிலையத்திற்கு தீவைத்தது.
- அன்னிய பொருட்களுக்கு எதிராகப் போராடிய குழுவைச் சேர்ந்த 3 பேர் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக இது செய்யப்பட்டது. ‘சௌரி சௌரா’ சம்பவத்திற்குப் பிறகு, காந்தி, இயக்கத்தை கைவிட்டு அவ்வன்முறைசம்பவத்தைக் கண்டித்தார்.
8. தென் கோல் பனிப்பாறையானது எந்தச் சிகரத்தின் மிக உயரமான பனிப்பாறை ஆகும்?
அ) எவரெஸ்ட் சிகரம்
ஆ) K2
இ) கஞ்சஞ்சங்கா
ஈ) கிளிமஞ்சாரோ
- ஓர் அண்மைய ஆய்வில், காலநிலை தொடர்பான பனி இழப்பின் அறிகுறிகளுக்காக, எவரெஸ்ட் சிகரத்தின் மிக உயரமான பனிப்பாறையான தென் கோல் பனிப்பாறை
-யை கண்காணிக்க அறிவியலாளர்கள் குழு எவரெஸ்ட் சிகரத்தை அளந்தது. - இது கடல்மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 26000 அடி (8000 மீ) உயரத்தில் உள்ளது. பனிப்பாறையின் மேற்பரப்பில் பனி குவிவதற்கு எடுத்ததைவிட 80 மடங்கு வேகத்தில் அது தனது பனியை இழந்து வருகிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
9. ஆண்டுதோறும், ‘பாகுபாடுகள் ஒழிப்பு நாள் – Zero Discrimination Day’ அனுசரிக்கப்படும் தேதி எது?
அ) மார்ச் 01
ஆ) மார்ச் 02
இ) மார்ச் 03
ஈ) மார்ச் 04
- ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 1 அன்று UNAIDSஆல் உலகம் முழுவதும் ‘பாகுபாடுகள் ஒழிப்பு நாள்’ அனுசரிக்கப்படுகிற -து. 2030ஆம் ஆண்டுக்குள் AIDS’ஐ ஒரு பொதுநல அச்சுறுத்தலாக எண்ணி அதனை முடிவுக்குக்கொண்டு வருவதை நோக்கமெனக்கொண்ட ஐக்கிய நாடுகளின் அமைப்புதான் இந்த UNAIDS.
10. பன்னாட்டு துருவக்கரடிகள் நாள் அனுசரிக்கப்படும் தேதி எது?
அ) பிப்ரவரி 27
ஆ) பிப்ரவரி 28
இ) பிப்ரவரி 25
ஈ) பிப்ரவரி 26
- சர்வதேச துருவக்கரடிகள் நாளானது ஒவ்வோர் ஆண்டும் பிப்.27 அன்று துருவக்கரடியின் பாதுகாப்பு நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கொண்டாடப்படுகிறது. பன்னாட்டு துருவக்கரடிகள் நிறுவனத்தால் இந்நாள் ஏற்பாடு செய்யப்படுகிறது.
- புவி வெப்பமடைதல் மற்றும் உருகிவரும் கடல்பனிக்கட்டி -கள் ஆகியவை துருவக்கரடிகளின் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. செபி தலைவராக மாதவி புரி நியமனம்
இந்திய பங்கு பரிவர்த்தனை ஒழுங்காற்று வாரியத்தின் (SEBI) தலைவராக மாதவி புரி புச் (57) நியமிக்கப்பட்டு உள்ளார். செபி தலைவராக பெண் ஒருவர் பதவியேற்பது இதுவே முதல்முறையாகும்.
நிதி, வங்கித்துறையில் நீண்ட அனுபவமுள்ள மாதவி, தனியார் துறையில் பணியாற்றி செபி தலைமைப் பொறுப்பேற்கும் முதல் நபர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர் இப் பொறுப்பிலிருப்பார் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இப்போது செபி தலைவராக உள்ள முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அஜை தியாகியின் பதவிக்காலம் பிப்ரவரி.28 உடன் முடிவடைந்தது.
2. உலகின் வேகமான பொருளாதார வளர்ச்சிபெறும் நாடு என்ற நிலையை தக்கவைத்துள்ள இந்தியா
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2021-22ஆம் நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 5.4 சதவீதமாக குறைந்துள்ளது. இருந்தபோதும், இதே காலகட்டத்தில் சீனாவின் 4 சதவீத ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (G DP) வளர்ச்சியைக்காட்டிலும் இந்தியா கூடுதல் வளர்ச்சி பெற்றுள்ளதோடு, உலகின் வேகமான பொருளாதார வளர்ச்சிபெறும் மிகப்பெரிய நாடு என்ற நிலையை தொடர் -ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
நிகழ் நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 20.3 சதவீதமாகவும், ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 8.5 சதவீதமாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) இரண்டாவது தேசிய பொருளாதார வளர்ச்சிக்கான முன்கூட்டிய மதிப்பீட்டை வெளியிட்டது.
அதன்படி, 2021-22ஆம் ஆண்டுக்கான நாட்டின் பொருளா -தார வளர்ச்சி 8.9 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்ட முதல் முன்கூட்டிய மதிப்பீட்டைக் காட்டிலும் வளர்ச்சி விகிதம் சற்று குறைவு ஆகும். அப்போது, பொருளாதார வளர்ச்சி 9.2 சதவீதமாக கணிக்கப்பட்டிருந்தது.
அதுபோல, முந்தைய 2020-21 ஆம் நிதியாண்டில், முதல் முன்கூட்டிய மதிப்பீட்டில் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக கணிக்கப்பட்டது. பின், கரோனா பாதிப்பின் தாக்கத்தை கருத்தில்கொண்டு NSO வெளியிட்ட திருத்திய மதிப்பீட்டில் வளர்ச்சி விகிதம் 6.6 சதவீதமாக சரிந்தது.
அந்த வகையில், 2020ஆம் ஆண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 23.8 சதவீதமாகவும், ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 6.6 சதவீதமாகவும் பதிவானது என்று NSO தெரிவித்துள்ளது.
மேலும், நிலையான விலைகளில் GDP 2020-21 3ஆம் காலாண்டில் `36.26 இலட்சம் கோடியாக மதிப்பீடு செய்யப்பட்ட நிலையில், 2021-22ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் `38.22 இலட்சம் கோடியாக மதிப்பீடு செய்யப்பட்டது. இது 5.4 சதவீத வளர்ச்சியைக் காட்டுகிறது என்றும் என்எஸ்ஓ தெரிவித்துள்ளது.
3. உலக ‘பாரா’ வில்வித்தையில் இந்திய வீராங்கனை பூஜா வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.
4. தேசிய ஜூனியர் பேட்மின்ட்டன் தமிழ்நாட்டு அணி சாம்பியன்
திண்டுக்கல் PSNA பொறியியல் கல்லுாரி மற்றும் தமிழ்நாடு பூப்பந்தாட்டக் கழகம் சார்பில் 66ஆவது தேசிய ஜூனியர் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இதில் 17 மாநிலங்களில் இருந்து 800 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி 35 – 31, 35 – 28 என்ற புள்ளி கணக்கில் ஆந்திரா அணியை வீழ்த்தியது. பெண்களுக்கான இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி 35 – 24, 35 – 18 என்ற புள்ளி கணக்கில் ஆந்திரா அணியை வீழ்த்தியது.
சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு அணிகளுக்கு கிரிஸ்டல் சுழற்கோப்பை மற்றும் 3 லட்சம் ரூபாய் ரொக்கப் பரி வழங்கப்பட்டது.
5. உலக டென்னிஸ் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார் மெட்விடேவ்
உலக டென்னிஸ் வீரர்களின் புதிய தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2ஆவது இடம் வகித்த 26 வயது ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ் முதல்முறையாக ‘நம்பர் ஒன்’ அரியணையை அலங்கரித்து இருக்கிறார். கடந்த வாரம் நடந்த மெக்சிகோ ஓபன் டென்னிஸ் போட்டியில் அரை இறுதிக்கு முன்னேறியதன்மூலம் மெட்விடேவ் (8,615 புள்ளிகள்), முதலிடத்தில் இருந்த செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை (8,465 புள்ளிகள்) 2ஆவது இடத்துக்கு தள்ளி முதலிடத்தை சொந்தமாக்கினார்.
ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (7,515 புள்ளிகள்) 3ஆவது இடத்தில் நீடிக்கிறார். மெக்சிகோ ஓபன் போட்டியில் பட்டம் வென்ற ஸ்பெயினின் ரபெல் நடால் (6,515 புள்ளிகள்) ஒரு இடம் உயர்ந்து 4ஆவது இடத்தையும், கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் (6,445 புள்ளிகள்) ஒரு இடம் சரிந்து 5ஆவது இடத்தையும், ரஷிய வீரர் ஆந்த்ரே ரூப்லெவ் (5,000 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி 6ஆவது இடத்தையும், இத்தாலி வீரர் பெரேட்டினி (4,928 புள்ளிகள்) ஒரு இடம் சறுக்கி 7ஆவது இடத்தையும் பிடித்தனர். நார்வேயின் கேஸ்பர் ரூட் (3,915 புள்ளிகள்) 8ஆவது இடத்திலும், கனடாவின் அலியாசிம் (3,883 புள்ளிகள்) 9ஆவது இடத்திலும் தொடருகின்றனர். போலந்தின் ஹூபர்ட் ஹூர்காஸ் (3,496 புள்ளிகள்) ஒரு இடம் உயர்ந்து 10ஆவது இடத்தை பெற்றுள்ளார்.
6. ‘ஆதிச்சநல்லூர் அகழாய்வில் மூன்று காலகட்டங்களை உள்ளடக்கிய 52 முதுமக்கள் தாழிகள்’
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் மூன்று காலகட்டங்களை உள்ளடக்கிய 52 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டு உள்ளதாக, மத்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020ஆம் ஆண்டு அறிவித்திருந்தார்.
7. ‘நான் முதல்வன்’: மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம் தொடக்கம்
மாணவர்கள், இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு திட்டத்தை தனது பிறந்தநாளையொட்டி சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளார்.
‘நான் முதல்வன்’ என்ற தலைப்பிலான திட்டம்மூலம் மாணவர்கள், இளைஞர்களின் திறனை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இளைய சமுதாயத்தை முழுமையா -ன திறமையானவர்களாக மாற்ற ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் பயிற்சிகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘நான் முதல்வன்’ என்ற திறன் மேம்பாட்டுத்திட்டத்தின் கருப்பொருள் ‘உலகை வெல்லும் இளைய தமிழகம்’ என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வி, ஆராய்ச்சி, சிந்தனை, செயலில் திறமையானவர்க -ளாக மாணவகள், இளைஞர்களை மாற்றவே இந்தத் திட்டம் தமிழக அரசு சார்பில் தொடக்கங்கப்பட்டுள்ளது.
8. சேதி தெரியுமா?
பிப்.20: சீனத்தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற குளிர் கால ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தன. 16 தங்கம், 8 வெள்ளி, 13 வெண்கலம் என 37 பதக்கங்களுடன் நார்வே பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.
பிப்.21: இணையம் வழியாக நடைபெற்ற வரும் ஏர்திங்க்ஸ் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது வீரர் பிரக்ஞானந்தா உலகப் புகழ்பெற்ற செஸ் சாம்பியனான நார்வேயைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்செனைத் தோற்கடித்து சாதனை படைத்தார்.
பிப்.22: தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி வென்றது.
பிப்.23: உக்ரைன் மீது போர் நடவடிக்கைகளைத் தொடங்கும்படி ராணுவத்துக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார்.
பிப்.25: உக்ரைன்மீது போர் தொடுத்த ரஷ்யாவுக்கு எதிராக ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரஷ்யா தோற்கடித்தது. இந்தத் தீர்மானத்தின் மீது இந்தியா வாக்களிக்கவில்லை.
பிப்.26: பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒடிஷாவின் முதல் முதல்வர் ஹேமானந்தா பிஸ்வால் (82) காலமானார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், 1989 – 90, 1999 – 2000 காலகட்டத்தில் ஒடிஷா முதல்வராக இருந்தார்.
பிப்.26: நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி’இன் பங்குகளை விற்கும் நோக்கில் தானியங்கி வழிமுறைமூலம் 20 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியது.
9. உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் கங்கா’ செயல்படுவது எப்படி? – ஒரு பார்வை
போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணியை ஒருங்கிணைக்க 4 மத்திய அமைச்சர், உக்ரைன் அண்டை நாடுகளுக்கு செல்கின்றனர்.
போர் நடைபெறும் பகுதியில் சிக்கித்தவிக்கும் இவர்களை மீட்க, மத்திய அரசு தொடர்நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. இந்த மீட்புப்பணிக்கு ‘ஆபரேஷன் கங்கா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் அதன் அண்டை நாடுகளுக்கு சாலை மார்க்கமாக அழைக்கப்பட்டு, பிறகு அங்கிருந்து விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.
இந்நிலையில், இந்திய மாணவர்களுக்கு உதவிடவும் அவர்களை அங்கிருந்து வெளியேற்றி அழைத்து வரும் பணியை ஒருங்கிணைக்கவும் மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் புரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரஜிஜு, வி கே சிங் ஆகியோர் உக்ரைன் அண்டை நாடுகளுக்கு செல்கின்றனர்.
இதனிடையே ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்துக்கு உதவிட ‘OpGanga’ என்ற பிரத்யேக டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
10. உக்ரைனுக்கு சொந்தமான உலகின் பெரிய சரக்கு விமானத்தை தாக்கி அழித்த ரஷ்யா
உக்ரைனுக்குச் சொந்தமான உலகின் மிகப்பெரிய விமானத்தை ரஷ்ய ராணுவம் தாக்கி அழித்து உள்ளது.
தொடர்ந்து 5ஆவது நாளாக நேற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் அதிரடி தாக்குதல் தொடர்ந்துநடைபெற்று வருகிறது. எல்லையோர நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் தொடர்ந்து குண்டு மழைபொழிந்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் தலைநகர் கீவில் பல பகுதிகளில் குண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், கீவ் அருகே உள்ள ஹோஸ்டோமல் விமான நிலையத்தில் ரஷ்ய படையினரின் குண்டு வீச்சால் உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம் அழிக்கப்பட்டதாக உக்ரைனின் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்தார். இந்த விமானம்உக்ரைனுக்குச் சொந்தமானதாகும்.
ஏஎன்-225 ‘மிரியா’ என்று பெயரிடப்பட்ட அந்த விமானம் ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல் மூலம் தகர்க்கப்பட்டு இருக்கிறது.
இதுதொடர்பாக உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா ட்விட்டரில் கூறியதாவது:
உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான மிரியா, ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களால் அழிக்கப்பட்டது. நமது மிரியாவை ரஷ்யா அழித்திருக்கலாம். ஆனால் வலுவான சுதந்திரமான ஜனநாயக ஐரோப்பியநாடு என்ற நமது கனவை அவர்களால் ஒருபோதும் அழிக்க முடியாது. நாம் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான மிரியா விமானம் உக்ரைனின் அன்டோனோ நிறுவனத்தால் கடந்த 1985-ம் ஆண்டுதயாரிக்கப்பட்டது. 30 சக்கரங்கள், 6 இன்ஜின்கள், 290 அடி நீள இறக்கைகளைக் கொண்ட இதில் 4,500 கிலோமீட்டர் வரை தொடர்ந்து பறந்து செல்ல முடியும். கரோனாகால கட்டத்தில் உலகம் முழுவதும் உயிர்காக்கும் தடுப்பூசி மற்றும் மருந்துகளை மிரியா விமானம் எடுத்துச்சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
1. Which state/UT recently approved the Policy on promotion of foreign investment in the industrial sector?
A) Goa
B) Assam
C) Jammu and Kashmir
D) Ladakh
- The Administrative Council (AC) under the chairmanship of Lieutenant Governor Manoj Sinha, approved the policy on promotion of foreign investment in the industrial sector in Jammu and Kashmir. The New Policy aims to facilitate foreign investments higher than Rs 100 crore with a minimum of 51 per cent foreign stakes.
2. Which institution released reports documenting India’s COVID–19 vaccine development and administration journey?
A) Institute for Competitiveness
B) NITI Aayog
C) John Hopkins University
D) AIIMS
- Union Health Minister Mansukh Mandaviya has released two reports from the Institute for Competitiveness (Indian chapter), documenting India’s Covid–19 vaccine development and vaccine administration journey.
- The report on India’s vaccine development focussed on Rs 100 crore support from PM CARES fund for indigenous vaccine and collaboration of Indian pharma companies with global candidates for conducting clinical trials. The report on administration focussed on adoption of mobile apps like Co–WIN and Aarogya Setu.
3. ‘Health Star Rating’ is an initiative of which organisation?
A) Food Corporation of India
B) FSSAI
C) NABARD
D) NITI Aayog
- Under the directions from the Food Safety and Standards Authority of India (FSSAI), packaged food items are set to bear a ‘Health Star Rating’.
- The number of stars will indicate how healthy or unhealthy the item is. The rating will be based on the amount of fats, sugar and salt present in the food item.
4. Which Union Ministry launched the ‘National Strategy for Additive Manufacturing’?
A) Ministry of Electronics and Information Technology
B) Ministry of MSME
C) Ministry of Commerce and Industry
D) Ministry of Science and Technology
- The Ministry of Electronics and Information Technology (MeitY) released the ‘National Strategy for Additive Manufacturing’. As per the strategy, India aims to increase share in global additive manufacturing to 5 per cent within the next three years.
- 3D printing or additive manufacturing uses computer–aided designing to make prototypes or working models of objects.
5. Intracortical Visual Prosthesis (ICVP), seen in the news, is associated with which field?
A) Artificial Vision
B) Artificial Intelligence
C) Spyware
D) Navigation
- The Intracortical Visual Prosthesis (ICVP) has been successfully surgically implanted in the study’s first participant. The system is said to have the potential to restore partial vision to people who have lost their sight. ICVP is an implant that bypasses the retina and optic nerves to connect directly to the brain’s visual cortex.
6. Which is the venue of the 2028 Olympic Games?
A) Paris
B) Rome
C) Los Angeles
D) Moscow
- Los Angeles is the venue of the 2028 Olympic Games or the 2028 Summer Olympic Games. It is being referred as LA28. Paris is the venue of 2024 Olympic Games.
- Recently, the International Olympic Committee has approved a proposal to include surfing, skateboarding and sport climbing among the core sports for the 2028 Summer Games in Los Angeles.
7. Chauri Chaura village is located in which present–day state?
A) Bihar
B) Uttar Pradesh
C) Odisha
D) West Bengal
- When Mahatma Gandhi’s Non–Cooperation Movement was launched against the colonial administration, a mob set the station on fire, killing 23 policemen at Chauri Chaura Village, in present day Uttar Pradesh. It was done in retaliation to the Police firing killing three people from the group of protestors against foreign products.
- After the Chauri Chaura incident, Gandhi called off the movement and condemned the violence.
8. South Col Glacier is the highest–altitude glacier of which Mountain?
A) Mt Everest
B) K2
C) Kangchenjunga
D) Kilimanjaro
- In a recent study, a team of scientists scaled the world’s highest peak to monitor the mountain’s highest–altitude glacier — the South Col Glacier, for signs of climate–related ice loss. It stands at standing nearly 26,000 feet (8,000 meters) above sea level.
- The study revealed that South Col is losing ice roughly 80 times faster than it took for the ice to accumulate on the glacier’s surface.
9. When is the ‘Zero Discrimination Day’ observed annually across the world?
A) March 01
B) March 02
C) March 03
D) March 04
- The ‘Zero Discrimination Day’ is observed annually across the world on March 1, by UNAIDS. UNAIDS is the leading global forum which aims to end AIDS as a public health threat by 2030.
10. When is International Polar Bear Day observed?
A) March 27
B) March 28
C) March 25
D) March 26
- International Polar Bear Day is an annual event celebrated every Feb.27 to raise awareness about the conservation status of the polar bear. International Polar Bear Day is organized by Polar Bears International to raise awareness about the impact of global warming and reduced sea ice on polar bear populations.