MCQ Questions

சமயச்சார்பின்மையைப் புரிந்து கொள்ளுதல் 8th Social Science Lesson 15 Questions in Tamil

8th Social Science Lesson 15 Questions in Tamil

15. சமயச்சார்பின்மையைப் புரிந்து கொள்ளுதல்

1) இந்தியாவை பிறப்பிடமாக கொண்டிருக்காத சமயம் கீழ்க்கண்டவற்றுள் எது?

A) இந்து

B) சமணம்

C) இஸ்லாம்

D) புத்தம்

(குறிப்பு – இந்து, சமணம், புத்தம் மற்றும் சீக்கிய சமயங்களின் பிறப்பிடமாக இந்தியா திகழ்கிறது. இஸ்லாமின் பிறப்பிடம் இந்தியா அல்ல)

2)’ இந்தியா பல்வேறு நம்பிக்கைகளை சமமாக போற்றி மதிக்கப்படும் இடமாக இருப்பதோடு ஒரே தேசிய கண்ணோட்டத்தை கொண்டிருக்கும்’ என்னும் கூற்று யாருடையது?

A) ஜவஹர்லால் நேரு

B) மகாத்மா காந்தி

C) முகமது அலி ஜின்னா

D) இவர் யாருமல்ல

(குறிப்பு – மேற்கண்ட கூற்றை கூறியவர் ஜவஹர்லால் நேரு ஆவார். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக இருந்தவர் திரு ஜவஹர்லால் நேரு ஆவார்)

3) சமய சார்பின்மை (Secularism) என்ற சொல் எந்த மொழியிலிருந்து எடுக்கப்பட்டது?

A) லத்தீன்

B) கிரேக்கம்

C) பிரெஞ்சு

D) இவை எதுவும் அல்ல

(குறிப்பு – சமய சார்பின்மை என்ற சொல் லத்தீன் வார்த்தையான செக்குலம் (Saeculum) என்பதிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் காலம் அல்லது உள்ளுணர்வு காலம் என்பதாகும்)

4) செக்யூலரிஸம் (Secularism) என்ற பதத்தை உருவாக்கியவர் யார்?

A) ஜார்ஜ் ஜேக்கப்

B) வில்லியம் பியூலே

C) வில்லியம் ஹென்றி

D) ஜார்ஜ் மேத்யூ

(குறிப்பு – ஆங்கில பத்திரிக்கை எழுத்தாளரான ஜார்ஜ் ஜேக்கப் ஹோல்யோக் என்பவர் செக்யூலரிஸம் என்ற பதத்தை உருவாக்கினார்)

5) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. சமய சார்பின்மை என்பது அரசையும் மதத்தையும் தனித்தனியாக பிடிக்கும் கோட்பாடு ஆகும்.

II. சமய சார்பின்மை என்பது அனைத்து சமய சமூகங்களுடன் அரசு கொண்டுள்ள நடுநிலைத்தன்மை மற்றும் சமத்துவ கொள்கை ஆகும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – அரசானது சமய விவகாரங்களிலும் அல்லது சமயமானது அரசின் நடவடிக்கைகளில் தலையிடாது இருத்தல் என்பது இதன் பொருளாகும்)

6) “சமயம் நமக்கு பகைமையை போதிக்கவில்லை நாம் அனைவரும் இந்தியர்கள் மற்றும் இந்தியா நமது வீடு” என்பது எந்த கவிஞரின் கூற்றாகும்?

A) கவிஞர் அப்துல் கோ ரகுமான்

B) கவிஞர் இக்பால்

C) கவிஞர் கவிமணி

D) இவர் யாரும் அல்ல

(குறிப்பு – சமயம் நமக்கு பகைமையை போதிக்கவில்லை நாம் அனைவரும் இந்தியர்கள் மற்றும் இந்தியா நமது வீடு என்பது கவிஞர் இக்பாலின் சமயசார்பின்மை பற்றிய எளிய வாக்கியம் ஆகும்)

7) அரசானது எந்த ஒரு மதத்தை சார்ந்த பிரிவினருக்கு எதிராக குற்றம் சாட்டாது என மூன்றாம் நூற்றாண்டிலேயே அறிவித்த முதல் பேரரசர் யார்?

A) அசோகர்

B) ராஜராஜ சோழன்

C) குலோத்துங்க சோழன்

D) இவர் யாரும் அல்ல

( குறிப்பு – பேரரசர் அசோகர் தனது பன்னிரண்டாவது பாறை அரசாணையில் அனைத்து மத பிரிவினருடன் சகிப்புத் தன்மையோடு இருக்க வேண்டும் என்பதை அறிவித்திருக்கிறார்)

8) சமய சார்பற்ற நாட்டின் பண்புகளில் அல்லாதவை எது?

A) எந்த சமயத்தையும் பின்பற்ற அரசு அனுமதி அளித்தல்

B) அரசு எந்த ஒரு சமயத்திற்கும் மற்றவற்றிற்க்கு மேலாக முன்னுரிமை அளிக்காது இருத்தல்.

C) சமய விவகாரங்களில் அரசு தலையிடுதல்

D) சமய விவகாரங்களில் அரசு நடுநிலைமை கொண்டிருத்தல்

(குறிப்பு – சமய விவகாரங்களில் அரசு தலையிடாது இருத்தல், சமய சார்பற்ற நாட்டின் பண்புகள் ஆகும்)

9) கீழ்க்காணும் கூற்றுகளில் எது தவறானது?

A) எவ்வித சமய நம்பிக்கை கொண்டிருந்தாலும் அரசு பணியில் நுழைய தகுதி வாய்ந்தவர்கள் ஆவர்.

B) கல்விக்கூடங்களில் முற்றிலும் சமய போதனைகள் இருத்தல் கூடாது

C) எந்த ஒரு சமயத்திற்கும் ஆதரவாக எந்த வரிகளும் வசூலிப்பது இல்லை

D) சமய நடைமுறைகள் மற்றும் நம்பிக்கைகள் அடிப்படையில் அரசு பாகுபாடு காட்டுதல்.

(குறிப்பு – சமய நடைமுறைகள் மற்றும் நம்பிக்கைகள் அடிப்படையில் அரசு பாகுபாடு காட்டுதல் கூடாது. இதுவே ஒரு நாட்டின் சமயசார்பின்மை ஆகும் )

10) மத சகிப்புத்தன்மை கொள்கையை பின்பற்றிய முகலாய அரசர் யார்?

A) அக்பர்

B) ஹுமாயுன்

C) அவுரங்கசீப்

D) பாபர்

(குறிப்பு – முகலாய பேரரசர் அக்பர் மத சகிப்புத்தன்மை கொள்கையைப் பின்பற்றினார். அவருடைய தீன் இலாஹி மற்றும் சுல் இ குல் என்னும் நூல்களின் வழியே அனைத்து சமயத்தினர் இடையே அமைதி மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை எடுத்துரைத்தார்)

11) தீன் இலாஹி என்ற நூலை எழுதியவர் யார்?

A) அக்பர்

B) ஹுமாயுன்

C) அவுரங்கசீப்

D) பாபர்

(குறிப்பு – தீன் இலாஹி என்ற நூலை எழுதியவர் பேரரசர் அக்பர் ஆவார். தீன் இலாஹி என்பதன் பொருள் தெய்வீக நம்பிக்கை என்பது ஆகும்)

12) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. சமய சார்பின்மை என்பது அரசியல் அமைப்பின் ஒரு அங்கமாகும்.

II. சமய சார்பற்ற என்ற சொல்லானது 1950ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட நமது அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – சமய சார்பின்மை என்பது அரசியல் அமைப்பின் ஒரு அங்கமாகும். எனினும் அரசியலமைப்பு எழுதப்பட்ட போது, சமய சார்பற்ற என்ற சொல்லானது அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை)

13) சமய சார்பற்ற என்ற சொல்லானது இந்திய அரசியல் அமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு எது?

A) 1976ஆம் ஆண்டு

B) 1978ஆம் ஆண்டு

C) 1986ஆம் ஆண்டு

D) 1988ஆம் ஆண்டு

(குறிப்பு – சமயசார்பற்ற என்ற சொல் இந்திய அரசியலமைப்பின் 1976 ஆம் ஆண்டு சேர்த்துக்கொள்ளப்பட்டது. இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் சமயசார்பற்ற என்ற ஒரு சொல் சேர்க்கப்பட்டுள்ளது)

14) எந்த அரசியலமைப்பின் சட்டத் திருத்தத்தின்படி சமயசார்பற்ற என்ற சொல் அரசமைப்பில் சேர்க்கப்பட்டது?

A) 42வது

B) 46வது

C) 36வது

D) 48வது

(குறிப்பு – அரசியலமைப்பு சட்ட திருத்தம் 42இன்படி, சமயசார்பற்ற என்ற சொல் இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் சேர்க்கப்பட்டது)

15) இந்தியாவில் சமய சுதந்திரம் நாட்டு குடிமக்கள் மட்டுமின்றி இந்தியாவில் வாழும் வெளிநாட்டவருக்கு வழங்கப்படுகிறது. இது எந்த வழக்கின் மூலம் உச்ச நீதிமன்றத்தால் சுட்டிக்காட்டப்பட்டது?

A) பம்பாய் மாநிலம் – ரத்திலால் வழக்கு

B) கேசவானந்த பாரதி வழக்கு

C) பர்பாரி யூனியன் வழக்கு

D) இவை எதுவும் இல்லை

(குறிப்பு – 1954 ஆம் ஆண்டு நடைபெற்ற பம்பாய் மாநிலம் – ரத்திலால் வழக்கில் மேன்மைமிகு உச்ச நீதிமன்றத்தால் செய்ய சுதந்திரம் இந்திய குடிமக்கள் மட்டுமின்றி வெளிநாட்டு அவருக்கும் வழங்கப்படுகிறது என்பது சுட்டிக்காட்டப்பட்டது)

16) கஜுராஹோவில் காணப்படும் இந்து கோவிலில் காணப்படும் அம்சம் எது?

A) இந்து பாணியிலான கோபுரம்

B) சமண விதானம், புத்தர் ஸ்தூபி

C) இஸ்லாமிய பாணியிலான குவிமாடம்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – கஜுராஹோவில் காணப்படும் 19ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இந்து கோவில், இந்து பாணியிலான கோபுரம் சமாதானம் புத்த ஸ்தூபி மற்றும் இஸ்லாமிய பாணியிலான குவிமாடம் ஆகியவற்றைக் கொண்டு, சமயசார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது)

17) பொறுத்துக

I. பிரிவு 15 – a) எந்த ஒரு சமயத்தினை இயக்கவும் பின்பற்றவும் உரிமை வழங்குதல்

II. பிரிவு 16 – b) சமய விவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்திரம்

III. பிரிவு 25(1) – c) சமயம் இனம் சாதி பாலினம் அல்லது பிறப்பிடம் ஆகியவற்றில் பாகுபாடு காட்ட தடை.

IV. பிரிவு 26 – d) பொது வேலை வாய்ப்பில் சமமான வாய்ப்பு அளித்தல்.

A) I-c, II-d, III-a, IV-b

B) I-a, II-d, III-b, IV-c

C) I-c, II-a, III-b, IV-d

D) I-d, II-b, III-a, IV-c

(குறிப்பு – அரசியலமைப்பு பிரிவுகளில் மேற்கண்ட பிரிவுகள் சமயசார்பின்மை குறித்து இந்திய அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதை விவரிக்கின்றது)

18) தவறான இணை எது?

A) பிரிவு 27 – ஒரு குறிப்பிட்ட சமயத்தையும் ஆதரிக்க அரசானது எந்த ஒரு குடிமகனையும் வரி செலுத்துமாறு வற்புறுத்தக் கூடாது.

B) பிரிவு 28 – கல்விநிலையங்களில் சமய போதனைகள் கூடாது

C) பிரிவு 29(1) – அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பாகுபாடு காட்ட தடை

D) பிரிவு 25 – சமய விவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்திரம்.

(குறிப்பு – சமய விவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்திரமானது பிரிவு 26 இல் வருகிறது)

19) சமய சார்பற்ற கல்வி கீழ்க்காணும் எந்த நோக்கங்களுக்காக தேவைப்படுகிறது?

I. இளைஞர்களை நல்ல குடிமக்களாக்க பயிற்சி அளிப்பதற்கு

II. உருகிய மனப்பான்மையைப் போக்குவதற்கும் சக்தி வாய்ந்த ஆற்றல் மற்றும் அறிவான நோக்கத்தினை உருவாக்குவதற்கு

III. தார்மீக மற்றும் மனிதநேய பார்வையை குறைப்பதற்கு

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II மட்டும் சரி

D) III மட்டும் சரி

(குறிப்பு – சமய சார்பற்ற கல்வி தார்மீக மற்றும் மனிதநேய பார்வையை உருவாக்குவதற்காக தேவைப்படுகிறது)

20) யார் தன்னுடைய கல்லறையில் இந்து சமயம், இஸ்லாம் உள்ளிட்ட பல்வேறு சமயங்களை சார்ந்த கூறுகள் இடம் பெற வேண்டும் என்று விரும்பினார்?

A) அக்பர்

B) ஹுமாயுன்

C) பாபர்

D) அவுரங்கசீப்

(குறிப்பு – அக்பர் தனது கல்லறையில் இஸ்லாம் இந்து சமயம் உள்ளிட்ட பல்வேறு சமயங்களை சார்ந்த கூறுகள் இடம் பெற வேண்டும் என்று விரும்பினார். அக்பரின் கல்லறை ஆக்ராவுக்கு அருகில் சிக்கந்தர் என்ற இடத்தில் உள்ளது)

21) கீழ்க்காணும் கூற்றுகளில் எது தவறானது?

I. இந்தியா ஒரு சமய சார்பற்ற நாடு என்பது ஒரு சமய மேலாதிக்கத்தை தடுக்க பல்வேறு வழிகளில் செயல்படுகிறது.

II. சமய சார்பற்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட அடிப்படை உரிமைகளுக்கு இந்திய அரசியலமைப்பு உத்திரவாதம் அளிக்கிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – இந்தியா ஒரு சமய சார்பற்ற நாடு மேலும், சமய சார்பற்று கொள்கைகளை அடிப்படை உரிமைகளாக அரசியலமைப்பில் சுட்டிக்காட்டுகிறது)

22) இந்தியாவின் சமயசார்பின்மை குறித்த தவறான கூற்று எது?

I. இந்தியாவுக்கு என இந்து சமயம் பொதுவாக இருப்பினும் பிற சமயங்களை அது போற்றி மதிக்கிறது.

II. இந்திய அரசானது எந்த ஒரு சமயத்தையும் ஏற்படுத்தவோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு சிறப்பு ஆதரவினையோ அளிப்பதில்லை.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – இந்தியாவிற்கு என தனி சமயம் எதுவும் இந்தியாவில் இல்லை. எனவே முதல் கூற்று தவறானது)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!