Tnpsc

குடிமக்களும் குடியுரிமையும் Notes 8th Social Science Lesson 9 Notes in Tamil

8th Social Science Lesson 9 Notes in Tamil

9. குடிமக்களும் குடியுரிமையும்

அறிமுகம்

  • ஒரு நாட்டின் அரசாங்கத்தைப் பற்றியும், மக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றியும் படிக்கும் இயல் குடிமையியல் ஆகும்.
  • குடிமகன் (Citizen) என்ற சொல் ‘சிவிஸ்’ (Civis) என்னும் இலத்தீன் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் பண்டைய ரோமாபுரியில் இருந்த நகர நாடுகளில் ‘குடியிருப்பாளர்’ என்பதாகும்.
  • நகர நாடுகள் அமைப்புகள் மறைந்த பின்னர் இச்சொல் நாடுகளின் உறுப்பினர் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டது.
  • ஒரு நாட்டின் குடிமக்கள் அனைத்து விதமான குடியியல், அரசியல் உரிமைகளை அனுபவிக்க தகுதி உடையவர்கள் ஆவர்.

குடிமகனும் குடியுரிமையும்

  • ஒரு அரசால் வழங்கப்பட்ட சட்ட உரிமைகளையும், சலுகைகளையும் அனுபவிப்பவரும், அதே வேளையில் நாட்டின் சட்டங்களை மதித்து நடப்பவரும், அவருக்கான கடமைகளை நிறுவேற்றுபவருமே அந்நாட்டின் குடிமகன் ஆவார்.
  • குடியுரிமை என்பது ஒரு குடிமகன் அவர் விரும்பும் காலம் வரையில் அந்நாட்டில் சட்டப்படியாக வசிக்கும் உரிமையை வழங்குதலே ஆகும்.

குடியுரிமையின் வகைகள்

குடியுரிமை இரண்டு வகைப்படும்

1. இயற்கை குடியுரிமை : பிறப்பால் இயற்கையாக பெறக்கூடிய குடியுரிமை.

2. இயல்புக் குடியுரிமை : இயல்யாக விண்ணப்பித்து பெறும் குடியுரிமை.

இந்தியக் குடியுரிமைச் சட்டம், 1955

இந்தியக் குடிமகன் தன்னுடைய குடியுரிமையை பெறுதலையும், நீக்குதலையும் பற்றிய விதிகளை இச்சட்டம் கூறுகிறது.

குடியுரிமையை பெறுதல்

  • 1955 ஆம் ஆண்டு இந்தியக் குடியுரிமைச் சட்டம் குடியுரிமை பெறுவதற்கான ஐந்து வழிமுறைகளை பரிந்துரைக்கிறது. அவைகள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகிறன.

1. பிறப்பால் குடியுரிமை பெறுதல்

  • இக்குடியுரிமை பிறப்பிடத்தால் தீர்மானிக்கப்படுகிறது. 1950 ஜனவரி 26 முதல் 1987 ஜூலை வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகளின் பெற்றோர் எந்த நாட்டவராக இருப்பினும் அவர்கள் பிறப்பால் குடியுரிமை பெறுகின்றனர்.
  • 1987 ஜூலை 1 மற்றும் அதற்குப் பின் இந்தியாவில் பிறக்கும் குழந்தையின் பெற்றோரில் ஒருவர் அச்சமயத்தில் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • 2004 டிசம்பர் 3 மற்றும் அதற்குப் பின் இந்தியாவில் பிறந்தவர்கள் பிறப்பால் குடியுரிமை பெறுகின்றனர். அல்லது பெற்றோரில் ஒருவர் இந்தியக் குடிமகனாகவும் மற்றொருவர் சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் இடம்பெயர்ந்தவராக இல்லாதிருந்தால் குடியுரிமை பெறுகின்றனர்.

2. வம்சாவளியால் குடியுரிமை பெறுதல்

  • 1950 ஜனவரி 26 முதல் 1992 டிசம்பர் 10 க்கு முன்னர் வெளிநாட்டில் பிறந்திருந்தாலும் அவருடைய தந்தை இந்தியக் குடிமகனாக இருக்கும் பட்சத்தில் அவர் வம்சாவளி மூலம் இந்தியக் குடியுரிமையைப் பெறுகிறார்.
  • 1992 டிசம்பர் 10 மற்றும் அதற்கு பின்னர் வெளிநாட்டில் பிறந்தவர்களின் பெற்றோரில் எவரேனும் ஒருவர் அச்சமயத்தில் இந்திய குடிமகனாக இருந்தால் அவர் இந்தியக் குடியுரிமையைப் பெறுகிறார்.
  • 2004 டிசம்பர் 3ம் நாள் முதல் வெளிநாட்டில் பிறந்தவர்கள் அவர்களுடைய பிறப்பினை ஒரு வருடத்திற்குள் இந்திய தூதரகத்தில் பதிவு செய்யவில்லை எனில் இந்திய வம்சாவளிக் குடிமகனாக முடியாது.

3. பதிவு செய்தல் மூலம் குடியுரிமை பெறுதல்

  • இந்திய வம்சாவளியைச் சார்ந்த ஒரு நபர் எந்த ஒரு நாட்டில் வசித்தாலும் அல்லது பிரிக்கப்படாத இந்தியாவிற்கு வெளிப்பகுதியில் வசிப்பவராக இருந்தாலும் பதிவு செய்தலின் மூலம் குடியுரிமை பெறலாம்.
  • இந்தியக் குடிமகனை திருமணம் செய்த ஒருவர் பதிவின் மூலம் விண்ணப்பிக்கும் முன் 7 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தவராக இருத்தல் வேண்டும்.

4. இயல்புக் குடியுரிமை

ஒருவர் விண்ணப்பிப்பதன் மூலம் மத்திய அரசு அவருக்கு இயல்பு குடியுரிமைக்கான சான்றிதழை வழங்குகிறது.

  • எந்த ஒரு நாட்டிலும் குடிமகனாக இல்லாத ஒர் இந்தியர் அவர் வசிக்கும் நாட்டின் குடிமகனாவதை தடுக்கும் பொருட்டு இயல்பு குடியுரிமை வழங்கப்படுகிறது.
  • வெளிநாட்டுக் குடியுரிமையை ஒருவர் துறக்கும் பட்சத்தில் அவருக்கு இயல்பு குடியுரிமை வழங்கப்படுகிறது.
  • ஒருவர் இந்தியாவில் வசிக்கும் பட்சத்தில் அல்லது இந்திய அரசுப்பணியில் இருக்கும் பட்சத்தில் (அ) ஆண்டு முழுவதும் இந்தியாவில் தங்கியிருக்கும் பட்சத்தில் இக்குடியுரிமையை பெறுகிறார்.
  • நல்ல பண்புகளையும் இந்திய அரசியலமைப்பில் 8வது அட்டவணையில் குறிப்பிட்டுள்ள ஏத்ந்ந்னும் ஒரு மொழியில் (தற்போது 22 மொழிகள்) போதிய அறிவினையும் பெற்ற ஒருவர் இயல்புக் குடியுரிமையைப் பெற தகுதியுடையவராவார்.

5. பிரதேசங்களை இணைத்தல் மூலம் பெறும் குடியுரிமை

எந்தவொரு வெளிநாட்டுப் பகுதியும் இந்தியாவுடன் இணையும் போது, இந்திய அரசு அப்பகுதி மக்களை இந்திய குடிமக்களாக ஏற்றுக்கொள்கிறது. அந்தகுறிப்பிட்ட நாளில் இருந்து அவர்கள் இந்திய குடிமக்களாகின்றனர்.

உதாரணமாக பாண்டிச்சேரி இந்தியாவுடன் இணைந்தபொழுது, இந்திய அரசு அம்மக்களுக்கு 1962ல் இந்தியக் குடியுரிமைக்கான ஆணையை வழங்கியது.

இந்தியக் குடியுரிமையை இழத்தல்

குடியுரிமை இழப்பு பற்றிய மூன்று வழிமுறைகளை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் இரண்டாவது பகுதியின் 5 முதல் 11 வரையிலான விதிகள் குறிப்பிடுகின்றன.

குடியுரிமையை துறத்தல் (தானாக முன்வந்து குடியுரிமையைத் துறத்தல்)

ஒருவர் வெளி நாட்டின் குடியுரிமையை பெறும்பட்சத்தில் அவரின் இந்தியக் குடியுரிமை அவரால் கைவிடப்படுகிறது.

குடியுரிமை முடிவுக்கு வருதல் (சட்டப்படி நடைபெறுதல்)

ஒர் இந்தியக் குடிமகன் தாமாக முன்வந்து வெளிநாட்டின் குடியுரிமையை பெறும் பட்சத்தில் அவரது இந்தியக் குடியுரிமை தானாகவே முடக்கப்படுகிறது.

குடியுரிமை மறுத்தல் (கட்டாயமாக முடிவுக்கு வருதல்)

மோசடி, தவறான பிரதிநிதித்துவம் அல்லது அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக செயல்படுதல் ஆகியவற்றின் மூலம் இந்தியக் குடியுரிமையை பெறும் ஒருவரின் குடியுரிமையை இந்திய அரசு ஓர் ஆணை மூலம் இழக்கச் செய்கிறது.

நாட்டுரிமை மற்றும் குடியுரிமை

  • பூர்வீகம், பிறப்பு மற்றும் இனம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட நாட்டினர் இயல்பாக பெறும் நிலை நாட்டுரிமை எனப்படும்.
  • சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு ஒரு நாட்டின் அரசாங்கத்தால் தனி ஒருவருக்கும் வழங்கப்படுவது குடியுரிமை எனப்படும்.
  • ஒருவர் தனது நாட்டுரிமையை மாற்ற முடியாது. ஆனால் தனது குடியுரிமையை மாற்ற முடியும்.

ஒற்றைக் குடியுரிமை

  • இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்கு ஒற்றைக் குடியுரிமையை வழங்குகிறது. அதுவே இந்தியக் குடியுரிமை எனப்படுகிறது.
  • ஆனால் அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய கூட்டாட்சி அமைப்பு கொண்டுள்ள நாடுகளில் இரட்டை குடியுரிமை வழங்கப்படுகிறது. (தேசிய குடியுரிமை மற்றும் மாநில குடியுரிமை)
  • இந்திய குடிமக்கள் அனைவரும் இந்தியாவில் எங்கு பிறந்திருந்தாலும், வசித்தாலும் மாநில வேறுபாடின்றி குடியுரிமைக்கான அனைத்து அரசியல் மற்றும் குடிமையியல் உரிமைகளை அனுபவிக்கின்றனர்.
  • முன்னுரிமை வரிசைப்படி குடியரசுத் தலைவர் நாட்டின் முதல் குடிமகன் ஆவார்.

இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்

இந்திய குடிமக்களின் உரிமைகளும், கடமைகளும்

இந்திய அரசியலமைப்புச்சட்டம் கீழ்க்கண்ட உரிமைகளை நமக்கு வழங்குகிறது.

  • அடிப்படை உரிமைகள்
  • மக்களவை தேர்தலுக்கும், மாநில சட்டமன்ற தேர்தலுக்கும் வாக்களிக்கும் உரிமை
  • இந்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் உரிமை. இந்திய பாராளுமன்றம் மற்றும் மாநில சட்ட மன்றங்களில் உறுப்பினராவதற்கான உரிமை.

இந்திய அரசியலமைப்பு 42வது சட்டத்திருத்தத்தின் படி இந்தியக் குடிமக்களுக்கான அடிப்படை கடமைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

(உதாரணமாக : நேர்மையாக வரி செலுத்துதல், மற்றவர்களின் கருத்துக்களுக்கும், நம்பிக்கைகளுக்கும், உரிமைகளுக்கும் மதிப்பளித்தல், நாட்டின் பாதுகாப்பிற்காகச் செயலாற்றுதல், சட்டங்களை மதித்தல் மற்றும் கீழ்படிதல்)

ஒரு நாட்டின் குடிமக்கள் அல்லாதவர்களை இரண்டு வகையினராக நாம் அழைக்கின்றோம் அவை:

1. அந்நியர் (Alien)

ஒரு நாட்டில் வசிக்கும் குடிமகனாக அல்லாத அனைவரும் அந்நியர் எனப்படுவர்.

உதாரணம் : வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டு மாணவர்கள்

2. குடியேறியவர் (Immigrant)

ஒரு நாட்டில் எவ்வித தடையும் இன்றி நிரந்தரமாக வசிப்பதற்கும், பணி புரிவதற்கும் உரிமை பெறும் அந்நியர் குடியேறியவர் எனப்படுகிறார்.

நற்குடிமகனின் பண்புகள்

  • அரசியலமைப்புச் சட்டத்தின்படி நடத்தல்
  • சட்டத்துக்கு கீழ்படிதல்
  • சமுதாயத்திற்கு தன் பங்களிப்பை ஆற்றுதல் மற்றும் குடிமைப் பணியை செயலாற்றுதல்.
  • நற்பண்புகளையும், நீதியையும் நிலைநாட்டுதல்
  • வேற்றுமைகளை மறந்து நடத்தல்

உலகளாவிய குடியுரிமை

  • ஒரு குறிப்பிட்ட நாட்டின் குடிமகன் என்பதைவிட உலகளாவிய சமுதாயத்தில் ஒவ்வொருவரும் அங்கம் என்பதே உலகளாவிய குடியுரிமை ஆகும்.
  • உலக மக்கள் அனைவருக்கும் உரிமைகளும், குடிமைப் பொறுப்புகளும் இயற்கையாகவே உள்ளன.
  • புதிய சமுதாயத்தை உருவாக்குவதில் இன்றைய இளைஞர்களின் ஈடுபாட்டையும், பங்களிப்பையும் பெறுவதே உலகளாவிய குடியுரிமையின் அடிப்படை ஆகும்.

வெளிநாட்டுவாழ் இந்தியர் தினம் (பிரவாசி பாரதிய தினம்)

  • இந்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரவாசி பாரதிய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் இந்தியாவின் வளர்ச்சிக்காக வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களின் பங்களிப்பினை பெறும் வகையில் கொண்டாடப்படுகிறது. இது மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வருகை புரிந்த தினமாக ஜனவரி-9 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

முடிவுரை

நமது அரசியலமைப்புச் சட்டம் ஒற்றைக் குடியுரிமையை வழங்குகிறது. இதன் மூலம் இந்திய மக்கள் அனைவருக்கும் சம உரிமையை வழங்குகிறது. ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கும் பொருட்டு, இந்திய மக்களிடையே சகோதரத்துவத்தையும், ஒற்றுமையையும் நமது அரசியலமைப்பு ஊக்குவிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!