MCQ Questions

அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி 9th Social Science Lesson 5 Questions in Tamil

9th Social Science Lesson 5 Questions in Tamil

5. அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி

1. பின்வரும் கூற்றை ஆராய்க.

(1) இந்தியாவில் நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள் ஆகிய நிலைகளில் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

(2) இரண்டு ஆங்கிலோ – இந்தியர்களைக் குடியரசுத்தலைவர் மக்களவைக்கு நியமனம் செய்கிறார்.

(3) நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுத்தேர்தல்கள் மூலம் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

அ) 1 தவறு

ஆ) 2 தவறு

இ) 3 தவறு

ஈ) எதுவுமில்லை

விளக்கம்: நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுத்தேர்தல்கள் மூலம் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

2. இந்தியாவில் முதல் தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமர் யார்?

அ) இந்திரா காந்தி

ஆ) ஜவஹர்லால் நேரு

இ) லால் பகதூர் சாஸ்திரி

ஈ) மொரார்ஜி தேசாய்

விளக்கம்: இந்தியாவின் முதல் தேர்தல் 1951ம் ஆண்டு தொடங்கி 1952 வரை நடைபெற்றது.

3. இந்தியாவில் நடைபெற்ற முதல் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மொத்தம் எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது?

அ) 367

ஆ) 467

இ) 464

ஈ) 364

விளக்கம்: இந்தியாவில் நடைபெற்ற முதல் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மொத்தம் 489 இடங்களில் 364 இடங்களில் வெற்றி பெற்றது.

4. கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளில் சிறப்பாகச் சேவை புரிந்த எத்தனை பேரை மாநிலங்களவைக்கு குடியரசுத்தலைவர் நியமனம் செய்கிறார்?

அ) 11

ஆ) 12

இ) 13

ஈ) 14

விளக்கம்: நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்கு கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளில் சிறப்பாகச் சேவை புரிந்த 12 பேரை குடியரசுத்தலைவர் நியமனம் செய்கிறார்.

5. எந்த ஆண்டில் புதுடெல்லியில் உள்ள இந்தியாவின் நாடாளுமன்றக் கட்டிடம் வடிவமைக்கப்பட்டது?

அ) 1914-1915

ஆ) 1916-1917

இ) 1912-1913

ஈ) 1918-1919

விளக்கம்: எட்வின் லுட்டியன்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் புது டெல்லியில் உள்ள இந்தியாவின் நாடாளுமன்றக் கட்டிடத்தை 1921ல் கட்ட தொடங்கி 1927ல் முடித்தனர்.

6. சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

(1) நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களை மக்கள் தேர்தல்கள் மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கிறார்கள்.

(2) சமூகம் என்பது ஒரே இடத்தில் பொதுவானப் பண்பு நலன் கொண்டு வாழும் மக்கள் குழு.

(3) அரசாங்கம் என்பது ஒரு நாடு அல்லது அரசினை நிர்வகிப்பதற்கான அதிகாரம் கொண்ட மக்கள் குழு.

அ) கூற்று 1 தவறு

ஆ) கூற்று 2 தவறு

இ) கூற்று 3 தவறு

ஈ) எதுவுமில்லை

விளக்கம்: நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

7. இந்திய வரலாற்றின் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்ற ஆண்டு

அ) 1924

ஆ) 1923

இ) 1920

ஈ) 1922

விளக்கம்: இம்பீரியல் கவுன்சில் எனும் மத்திய சட்டசபைக்கும், மாகாண சட்டசபைக்கும் தேவையான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1920 பிரிட்டிஷ் இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றது

8. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் மக்களவையின் பொதுத்தேர்தல் எந்த ஆண்டு தொடங்கி எந்த ஆண்டு வரை நடைபெற்றது?

அ) 1957-1958

ஆ) 1950-1951

இ) 1951-1952

ஈ) 1953-1954

விளக்கம்: 1951- அக்டோபர் 25 தொடங்கி 1952- பிப்ரவரி 21 வரை நடைபெற்றது. இந்தியா குடியரசு நாடாக ஜனவரி 26, 1950 அன்று அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் பொதுத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் நடத்துகிறது.

9. தவறான கூற்றைத் தேர்ந்தெடு.

(1) மக்களாட்சியில் இறுதி அதிகாரம் பெற்றவர்கள் மக்கள்.

(2) குடியரசுத்தலைவரால் ராஜ்யசபைக்கு 12 உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

(3) அனைவருக்கும் வாக்குரிமையை வழங்குவது சமூகச்சமத்துவம்.

அ) கூற்று 1 தவறு

ஆ) கூற்று 2 தவறு

இ) கூற்று 3 தவறு

ஈ) எதுவுமில்லை

விளக்கம்: மக்களாட்சியில் இறுதி அதிகாரம் பெற்றவர்கள் நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதிகள். (மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் இறுதி முடிவை மேற்கொள்ளும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள். இந்தியாவின் நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கியது.)

10. பின்வரும் கூற்றை ஆராய்க

(1) வேத காலத்திற்கு முன்பாகவே இந்தியாவில் மக்களாட்சி முறை அமைப்புகள் இருந்தன.

(2) உள்ளாட்சி அமைப்பின் அடிப்படை அலகு சுயாட்சி பெற்ற பஞ்சாயத்துக்கள் ஆகும்.

அ) கூற்று 1 மட்டும் சரி

ஆ) கூற்று 2 மட்டும் சரி

இ) கூற்று 1,2 சரி

ஈ) எதுவுமில்லை

விளக்கம்: உள்ளாட்சி அமைப்பின் அடிப்படை அலகு சுயாட்சி பெற்ற கிராமக்குழுக்கள் ஆகும்.

11. சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

(1) வயது வந்த அனைவருக்கும் சம மதிப்புடைய வாக்குரிமையை மக்களாட்சி முறை அளிக்கிறது.

(2) கட்டுப்பாடான மற்றும் எதிர்மறையான தேர்தல்கள் மக்களாட்சி முறையில் பின்பற்றப்படுகிறது.

அ) கூற்று 1 மட்டும் சரி

ஆ) கூற்று 2 மட்டும் சரி

இ) கூற்று 1, 2 சரி

ஈ) எதுவுமில்லை

விளக்கம்: மக்களாட்சி முறையில் சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல்கள் நடைபெறுகின்றன.

12. மக்களாட்சி முறை எத்தனை வகைப்படும்?

அ) ஐந்து

ஆ) நான்கு

இ) மூன்று

ஈ) இரண்டு

விளக்கம்: மக்களாட்சி முறை இரண்டு வகைப்படும். (1) நேரடி மக்களாட்சி – பொது விவகாரங்களில் மக்களே நேரடியாக முடிவெடுக்கக்கூடிய அரசு முறை (2) மறைமுக மக்களாட்சி (பிரதிநிதித்துவ மக்களாட்சி) – பொது விவகாரங்களில் மக்கள் தங்களது விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மூலம் வெளிப்படுத்தும் அரசாங்க வகை.

13. சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

(1) மக்களாட்சிமுறை அடிப்படை உரிமைகளையும், தனிநபர் சுதந்திரத்தையும் பாதுகாக்கிறது.

(2) மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளுக்கு இறுதி முடிவை மேற்கொள்ளும் அதிகாரம் மக்களாட்சி முறையில் கிடையாது.

அ) கூற்று 1 சரி

ஆ) கூற்று 2 சரி

இ) கூற்று 1,2 சரி

ஈ) எதுவுமில்லை

விளக்கம்: மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளே இறுதி முடிவை மேற்கொள்ளும் அதிகாரத்தை மக்களாட்சி முறையில் பெற்றிருக்கிறார்கள்

14. உள்ளாட்சி அமைப்பின் அடிப்படை அலகாக சுயாட்சி பெற்ற கிராமக்குழுக்கள் பண்டையக்காலத்தில் இருந்ததாக எந்த நூல் கூறுகிறது?

அ) இந்தியாவின் குரல்

ஆ) ராஸ்தர் கோப்தர்

இ) அர்த்தசாஸ்திரம்

ஈ) தென்னிந்திய வரலாறு

விளக்கம்: அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் சாணக்கியர்

15. பொருத்துக

(1) அர்த்தசாஸ்திரம் – அமெரிக்க ஐக்கிய நாடுகள், பிரான்ஸ்

(2) சோழர்கள் – இந்தியா, இங்கிலாந்து

(3) நாடாளுமன்ற அரசாங்க முறை – குடவோலை முறை

(4) அதிபர் அரசாங்க முறை – சாணக்கியர்

அ) 4 2 1 3

ஆ) 4 3 2 1

இ) 3 4 1 2

ஈ) 3 1 4 2

16. சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

(1) மக்களாட்சி அரசாங்க அமைப்புகள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.

(2) சுதந்திரம், சமத்துவம், விடுதலை, பொறுப்புடைமை, வெளிப்படைத் தன்மை, நம்பிக்கை ஆகிய மதிப்பீடுகள் மக்களாட்சியின் வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.

அ) கூற்று 1 சரி

ஆ) கூற்று 2 சரி

இ) கூற்று 1,2 சரி

ஈ) எதுவுமில்லை

விளக்கம்: மக்களாட்சி அரசாங்க அமைப்புகள் இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. (1) நாடாளுமன்ற அரசாங்க முறை (2) அதிபர் அரசாங்க முறை.

17. கீழ்க்கண்ட கூற்றை ஆராய்க

(1) மக்களாட்சி வகைகள் என்பது மக்கள் சமமாகப் பங்கேற்க அனுமதியளிக்கும் சமூக அமைப்பு அல்லது அரசாங்க வகைகளைக் குறிக்கிறது.

(2) அன்னிய அதிகாரத்தின் கட்டுப்பாடோ, இடையூறோ இல்லாமலிருப்பது சமூகச்சமத்துவம்.

அ) கூற்று 1 சரி

ஆ) கூற்று 2 சரி

இ) கூற்று 1,2 சரி

ஈ) எதுவுமில்லை

விளக்கம்: அன்னிய அதிகாரத்தின் கட்டுப்பாடோ, இடையூறோ இல்லாமலிருப்பது இறையாண்மை

18. பொருத்துக

(1) நடுவண் அரசு – ராஜ்யசபா

(2) மாநில அரசு – ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி

(3) உள்ளாட்சி அமைப்புகள் – லோக் சபா

(4) கீழவை – சட்டமன்றம்

(5) மேலவை – நாடாளுமன்றம்

அ) 4 2 1 3 5

ஆ) 4 3 2 1 5

இ) 3 4 1 2 5

ஈ) 5 3 4 2 1

19. இந்திய அரசின் தலைவர் _____

அ) பிரதமர்

ஆ) குடியரசுத்தலைவர்

இ) ஆளுநர்

ஈ) மக்கள்

விளக்கம்: குடியரசுத்தலைவர் இந்திய நாட்டின் முதல் குடிமகனாகவும், இந்திய அரசின் தலைவராகவும் செயல்படுகிறார்.

20. இந்தியாவில் மக்களாட்சி எத்தனை முக்கிய கொள்கைகளின் அடிப்படையில் இயங்குகிறது?

அ) 5

ஆ) 6

இ) 7

ஈ) 8

விளக்கம்: இறையாண்மை, சமதர்மம், சமயச்சார்பின்மை, மக்களாட்சி, குடியரசு ஆகியவை ஆகும்.

21. இந்திய அரசியலமைப்பு எந்த ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது?

அ) 1948

ஆ) 1949

இ) 1947

ஈ) 1946

விளக்கம்: இந்திய அரசியலமைப்பு நவம்பர் 26, 1949ல் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஜனவரி 26, 1950-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. எனவே, ஜனவரி 26, 1950 இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது.

22. பொருத்துக

(1) லோக் சபா – இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து

(2) ராஜ்யசபா – மக்களவை

(3) நேரடி மக்களாட்சி – மாநிலங்களவை

(4) மறைமுக மக்களாட்சி – பண்டைய கிரேக்க அரசுகள், சுவிட்சர்லாந்து

அ) 4 1 2 3

ஆ) 4 3 2 1

இ) 3 4 1 2

ஈ) 3 4 2 1

23. குடியரசு என்ற சொல் எந்த நாட்டில் வடிவமைக்கப்பட்டது?

அ) இந்தியா

ஆ) சுவிட்சர்லாந்து

இ) பிரேசில்

ஈ) ரோம்

விளக்கம்: பொ.ஆ.மு. 500ம் ஆண்டு ரோம் நாட்டில் குடியரசு என்ற சொல் வடிவமைக்கப்பட்டது. இச்சொல் res publica எனும் லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் பொது விவகாரம்.

24. கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க.

(1) அரசாங்கம் என்பது பல அமைப்புகளை உள்ளடக்கியது. அவை உயர் குடியாட்சி, முடியாட்சி, தனிநபர் ஆட்சி, சிறு குழு ஆட்சி, மதகுருமார்கள் ஆட்சி, மக்களாட்சி மற்றும் குடியரசு.

(2) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மட்டுமே மக்களாட்சி முறையில் ஆட்சி செய்ய முடியும்.

(3) மக்களாட்சி முறையில் மக்கள் தாங்கள் விரும்பும் கருத்துக்களையோ, போராட்டங்களை நடத்தவோ, அமைப்பை ஏற்படுத்தவோ உரிமையில்லை.

அ) கூற்று 1 தவறு

ஆ) கூற்று 2 தவறு

இ) கூற்று 3 தவறு

ஈ) எதுவுமில்லை

விளக்கம்: மக்களாட்சி முறையில் மக்கள் தாங்கள் விரும்பிய கருத்துகளைத் தெரிவிக்கவும், போராட்டங்களை நடத்தவும், ஓர் அமைப்பை ஏற்படுத்தவும் உரிமை உண்டு.

25. ஏதென்ஸ் நாட்டில் எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் மக்களாட்சி முறை தோன்றியது?

அ) 1500

ஆ) 2500

இ) 1000

ஈ) 2000

விளக்கம்: ஏதென்ஸ் உட்பட பண்டைய கிரேக்க நாட்டின் ஒரு சில நகர அரசுகளில் 2500 ஆண்டுகளுக்கு முன்பாகவே மக்களாட்சி முறை தோன்றியது.

26. ஒரு நபரால் அமைக்கப்படும் அரசாங்கம்

அ) தனிநபர் ஆட்சி

ஆ) சிறு குழு ஆட்சி

இ) முடியாட்சி

ஈ) மக்களாட்சி

விளக்கம்: ஒரு நபர் அரசர் அல்லது அரசியாக இருக்கலாம். முடியாட்சி அரசியலமைப்பு முடியாட்சி என்றும் அழைக்கப்படுகிறது.

27. Democracy – டெமாக்ரசி என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?

அ) இலத்தீன்

ஆ) கிரேக்கம்

இ) பாரசீகம்

ஈ) உருது

விளக்கம்: Democracy என்ற சொல் demos மற்றும் cratia எனும் இரு கிரேக்க சொற்களிலிருந்து பெறப்பட்டது. டெமாகிரஸி என்ற சொல்லின் பொருள் மக்கள் அதிகாரம்.

28. மக்களிடமே அல்லது அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளிடமும் உயரிய அதிகாரம் இருக்கின்ற அரசாங்க முறை

அ) குடியரசு

ஆ) தனிநபராட்சி

இ) சிறுகுழு ஆட்சி

ஈ) மதகுருமார்களின் ஆட்சி

விளக்கம்: இவ்வகை அரசாங்கத்தில் ஒரு முடிமன்னரைக் காட்டிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட (அ) நியமிக்கப்பட்ட குடியரசுத்தலைவர் இருப்பார்.

29. பொருத்துக

(1) உயர் குடியாட்சி – இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ்

(2) முடியாட்சி – இந்தியா, ஆஸ்திரேலியா

(3) தனிநபர் ஆட்சி – சோவியத் யூனியன், சீனா, வெனிசுலா

(4) சிறு குழு ஆட்சி – வாட்டிகன்

(5) மதகுருமார்களின் ஆட்சி – வடகொரியா, சவுதி அரேபியா

(6) மக்களாட்சி – இங்கிலாந்து, ஸ்பெயின்

(7) குடியரசு – பூடான், ஓமன், கத்தார்

அ) 4 1 2 3 5 6 7

ஆ) 6 7 4 5 3 1 2

இ) 3 4 1 2 7 6 5

ஈ) 3 4 2 1 5 7 6

30. பின்வரும் கூற்றை ஆராய்க.

(1) உலகின் பல நாடுகள் பல்வேறு வகையான அரசாங்க அமைப்புகளை பின்பற்றி வந்தாலும், இன்றைய உலகம் தனிநபர் ஆட்சியையே விரும்புகிறது.

(2) அதிகாரம் யாரிடம் உள்ளது என்பதைப் பொறுத்து ஒரு நாட்டின் ஆட்சி அமைகிறது.

அ) கூற்று 1 தவறு

ஆ) கூற்று 2 தவறு

இ) கூற்று 1,2 தவறு

ஈ) எதுவுமில்லை

விளக்கம்: உலகின் பல நாடுகள் பல்வேறு வகையான அரசாங்க அமைப்புகளை பின்பற்றி வந்தாலும், இன்றைய உலகம் மக்களாட்சியையே விரும்புகிறது

31. “மக்களால் மக்களுக்காக மக்கள் நடத்தும் ஆட்சி மக்களாட்சி” என்ற வரையறையைக் கூறியவர்

அ) ஜவஹர்லால் நேரு

ஆ) ஆப்ரகாம் லிங்கன்

இ) மகாத்மா காந்தி

ஈ) ராஜாஜி

விளக்கம்: ஆப்ரகாம் லிங்கன் குடியரசுத்தலைவராக இருந்த நாடு அமெரிக்க ஐக்கிய நாடுகள்.

32. சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

(1) சாதி, சமயம், இனம், பால், கல்வித்தகுதி என எவ்வித பாரபட்சமும் இன்றி சமமான வாக்குரிமையை ஒவ்வொரு இந்தியக்குடிமகனும் பெற்றுள்ளனர்.

(2) 21 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியக்குடிமகனும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுள்ளனர்.

(3) இந்திய அரசு பகுதி கூட்டாட்சி அமைப்பு பெற்றுள்ள நாடு.

அ) கூற்று 1,3 சரி

ஆ) கூற்று 2,3 சரி

இ) கூற்று 1,2 சரி

ஈ) அனைத்தும் சரி

விளக்கம்: 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியக்குடிமகனும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுள்ளனர்.

33. பொருத்துக.

1. உயர்குடியினரால் நடத்தப்பட்டு அமைக்கப்படும் அரசாங்கம் – மதகுருமார் ஆட்சி

2. மதகுருமார்கள் தம்மை கடவுளாகவோ அல்லது கடவுளின் பெயரால், மதகுருமார்களே அமைக்கும் அரசாங்கம் – தனிநபராட்சி

3. முழு அதிகாரம் கொண்ட ஒரு நபரால் அமைக்கப்படும் அரசாங்கம் – சிறுகுழு ஆட்சி

4. மக்களின் சிறிய குழு ஒன்று ஒரு நாட்டையோ அல்லது அமைப்பையோ கட்டுப்படுத்துவது – உயர்குடியாட்சி

அ) 4 1 2 3

ஆ) 4 3 1 2

இ) 2 3 4 1

ஈ) 3 4 2 1

34. “ஒரு உண்மையான மக்களாட்சியை 20 பேர் குழுவாக அமர்ந்து கொண்டு செயல்படுத்த முடியாது. இது கீழ்நிலையிலுள்ள ஒவ்வொரு கிராம மக்களால் செயல்படுத்துவதாகும்” என்ற வரையறையைக் கூறியவர்

அ) ஜவஹர்லால் நேரு

ஆ) ஆப்ரகாம் லிங்கன்

இ) மகாத்மா காந்தி

ஈ) ராஜாஜி

35. இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவையில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற ________ குடியரசுத்தலைவர் நியமிக்கிறார்.

அ) ஆளுநர்

ஆ) சட்டமன்ற உறுப்பினர்கள்

இ) அமைச்சரவை

ஈ) பிரதம அமைச்சர்

விளக்கம்: இந்தியா நாடாளுமன்ற மக்களாட்சி முறையைக் கொண்டுள்ள நாடு. இந்திய நாடாளுமன்றத்தின் கீழவை மக்களவை என்றும் அழைக்கப்படுகிறது. உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா.

36. மக்கள் தங்களது பிரதிநிதிகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல் மூலம் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் முறை

அ) தனிநபராட்சி

ஆ) சிறுகுழு ஆட்சி

இ) மக்களாட்சி முறை

ஈ) உயர்குடியாட்சி

விளக்கம்:

  • ஒரு நாட்டின் தகுதியுள்ள குடிமக்களால் வாக்களிக்கப்பட்ட தனிநபரோ அல்லது குழுவாகவோ தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் அமைக்கப்படும் அரசாங்கமாகவும், மக்கள் தங்கள் ஆட்சியாளர்களை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ள அனுமதியளிக்கும் ஆட்சி முறையாகவும் மக்களாட்சி முறை செயல்படுகிறது.
  • நாட்டு மக்களின் கைகளில் ஆட்சி அதிகாரம் உள்ளது என்பதை மக்களாட்சி முறை உணர்த்துகிறது.
  • ஒரு நாட்டின் மக்கள் உயர்ந்த அதிகாரங்களைப் பெற்று அமைக்கும் ஆட்சி முறையாக மக்களாட்சி முறை செயல்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!