MCQ Questions

மனித உரிமைகளும், ஐக்கிய நாடுகள் சபையும் 8th Social Science Lesson 16 Questions in Tamil

8th Social Science Lesson 16 Questions in Tamil

16. மனித உரிமைகளும், ஐக்கிய நாடுகள் சபையும்

1. பின்வரும் கூற்றை ஆராய்க.

(1) மனித உரிமைகள் பிறப்பின் அடிப்படையில் இயற்கையாக அமையப்பெற்ற அடிப்படை உரிமைகள் ஆகும்.

(2) வாழ்வியல் உரிமைகள் அனைத்து நாடுகளுக்கும் ஒரே மாதிரியானவை.

அ) 1 மட்டும் சரி ஆ) 2 மட்டும் சரி இ) 1, 2 சரி ஈ) எதுவுமில்லை

விளக்கம்:

வாழ்வியல் (அ) சிவில் உரிமைகள் நாட்டிற்கு நாடு அல்லது அரசாங்கத்திற்கு அரசாங்கம் வேறுபடுகின்றன.

2. இந்து வாரிசுச்சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு

அ) 1856 ஆ) 1956 இ) 1955 ஈ) 1961

விளக்கம்:

  • 1856 – இந்து விதவை மறுமணச்சட்டம்
  • 1955 – இந்து திருமணச்சட்டம்
  • 1961 – வரதட்சணைத் தடைச்சட்டம்

3. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் ______

அ) பிரதமர்

ஆ) ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி

இ) ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

ஈ) குடியரசுத்தலைவர்

விளக்கம்:

  • பதவிக்காலம் – 5 ஆண்டுகள் (அ) 70 வயது வரை
  • இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் 1993ம் ஆண்டு அக்டோபர் 12ம் நாள் நிறுவப்பட்டது.

4. 1995ம் ஆண்டு பெய்ஜிங்கில் எத்தனையாவது உலக மகளிர் மாநாடு நடைபெற்றது?

அ) 1 ஆ) 2 இ) 3 ஈ) 4

விளக்கம்:

  • பெண்களின் உரிமைகளை அங்கீகரிப்பதற்கும், உலகளவில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு தளத்தை இம்மாநாடு உருவாக்கியது.
  • இம்மாநாட்டின் இலக்குகளை நடைமுறைப்படுத்துவதற்காக யுனிபெம் என்றழைக்கப்படும் பெண்களுக்கான ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு நிதி அமைப்பு 1995 முதல் செயல்பட்டு வருகிறது.

5. உலக மனித உரிமைகள் அறிவிப்பு ஐ.நா.வின் பொதுச்சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு

அ) 1945 ஆ) 1943 இ) 1948 ஈ) 1946

6. பொருத்துக

(1) ஆங்கில உரிமைகள் மசோதா – 1789

(2) அமெரிக்க அரசியலமைப்புச்சட்டம் – 1689

(3) ஹேபியஸ் கார்பஸ் சட்டம் – 1791

(4) பிரான்சிஸ் அறிவிப்பு – 1679

அ) 4 2 1 3

ஆ) 4 1 2 3

இ) 3 4 1 2

ஈ) 3 1 4 2

7. மக்கள் அனைவரும் தங்கள் சொந்த மதத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு என்ற ஆணையை அறிவித்தவர்

அ) அக்காடியன் ஆ) பிராங்ளின் இ) எலினார் ரூஸ்வெல்டின் ஈ) மகா சைரஸ்

விளக்கம்:

  • பண்டைய பாரகசீகத்தின் முதல் மன்னன் – மகா சைரஸ்.
  • அக்காடியன் என்ற மொழியில் மேற்கூறிய ஆணை கியூனிபார்ம் எழுத்துக்களில் சிலிண்டர் வடிவிலான சுட்ட களிமண்ணால் பதிவு செய்யப்பட்டன. இதற்கு சைரஸ் சிலிண்டர் என்று பெயர்.

8. தமிழ்நாட்டில் மாநில மனித உரிமைகள் ஆணையம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு

அ) ஏப்ரல் 17, 1997 ஆ) ஏப்ரல் 18, 1992 இ) ஏப்ரல் 17, 1997 ஈ) ஏப்ரல் 18, 1998

விளக்கம்:

  • மாநில அளவில் செயல்படுகிறது. ஒரு தலைவர் மற்றும் மூன்று உறுப்பினர்களைக் கொண்டது.

9. கீழ்க்கண்டவற்றில் சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

(1) மனித உரிமைகள் 6 முதன்மை பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

(2) மனித உரிமைகள் பிரகடனத்தில் 27 சட்டப்பிரிவுகள் உள்ளன.

(3) உலக மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10

அ) 1 மட்டும் சரி ஆ) 2 மட்டும் சரி இ) 3 மட்டும் சரி ஈ) எதுவுமில்லை

விளக்கம்:

மனித உரிமைகள் 5 முதன்மை பிரிவுகளையும், பிரகடனத்தில் 30 சட்டப்பிரிவுகளையும் உள்ளடக்கியது.

10. 6 வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்ப கால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வியை வழங்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்தப் பிரிவைச் சார்ந்தது?

அ) பிரிவு 45 ஆ) பிரிவு 39 F இ) பிரிவு 24 ஈ) ஏதுமில்லை

விளக்கம்:

பிரிவு 39 F – ஆரோக்கியமாக குழந்தைகள் வளர வழிவகைச்செய்கிறது.

பிரிவு 24 – குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடை செய்கிறது.

11. பின்வரும் கூற்றை ஆராய்க.

(1) மனித உரிமைகளானது தனி நபர்கள் மற்றும் சமூகம் தொடர்பானவை.

(2) மனித உரிமைகள் மக்கள் சுதந்திரமாக மற்றும் விருப்பப்படி வாழ்வதை உறுதி செய்வதுடன் இயல்பாக பெறும் அனைத்து உரிமைகளையும் குறிப்பிடுகிறது.

அ) 1 மட்டும் சரி ஆ) 2 மட்டும் சரி இ) 1, 2 சரி ஈ) எதுவுமில்லை

12. பொருத்துக

(1) தொழிற்சாலைச்சட்டம் – 1952

(2 மகப்பேறு நலச்சட்டம் – 1951

(3) தோட்டத்தொழிலாளர்கள் சட்டம் – 1948

(4) சுரங்கச்சட்டம் – 1961

அ) 4 2 1 3

ஆ) 4 1 2 3

இ) 3 4 1 2

ஈ) 3 4 2 1

விளக்கம்: மேற்கூறிய அனைத்து சட்டங்களும் பெண் தொழிலாளர்களைப் பாதுகாக்கிறது.

13. கீழ்க்கண்டவற்றில் தவறான கூற்றைத் தேர்ந்தெடு.

(1) அமைதி, பாதுகாப்பு, நிலையான வளர்ச்சி ஆகியவைகள் மனித உரிமைகளுக்கான அடிப்படைகள் ஆகும்.

(2) முதுமை காலத்தில் பாதுகாப்பும், ஆதரவும் மனித உரிமைகளாக கருதப்படுவதால் இந்து வாரிசுச்சட்டம் இயற்றப்பட்டது.

(3) வன்கொடுமை தடுப்புச்சட்டம் 2005ல் இயற்றப்பட்டது.

அ) 1 மட்டும் தவறு ஆ) 2 மட்டும் தவறு

இ) 3 மட்டும் தவறு ஈ) அனைத்தும் தவறு

விளக்கம்: முதுமை காலத்தில் பாதுகாப்பும், ஆதரவும் மனித உரிமைகளாக கருதப்படுவதால் இயற்றப்பட்ட சட்டம் – பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலவாழ்வுச்சட்டம்

14. மனித உரிமைகள் பற்றிய சிந்தனை எந்த உலகப்போருக்குப்பின் வலுவாக எழுச்சி பெற்றது?

அ) பானிபட் போர் ஆ) முதல் உலகப்போர்

இ) இரண்டாம் உலகப்போர் ஈ) ஏதுமில்லை

விளக்கம்: தனிநபர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் போதுமானதாக இல்லை என்பதை இரண்டாம் உலகப்போரின்போது நடந்த கொடுமைகள் தெளிவுபடுத்தின.

15. பெண்களுக்கான சர்வதேச உரிமைகள் மசோதா ஐ.நா. பாதுகாப்பு சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு

அ) 1979 ஆ) 1978 இ) 1977 ஈ) 1976

விளக்கம்: அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குவதற்கான மசோதா பெண்களுக்கான சர்வதேச உரிமைகள் மசோதா என்றைழக்கப்படுகிறது.

16. பொருத்துக

(1) பெண்களை கேலி செய்வதற்கு எதிரான சட்டம் – 1978

(2 பெண்களை அநாகரிகமாக சித்தரித்தலுக்கெதிரான சட்டம் – 1979

(3) சர்வதேச பெண்கள் ஆண்டு – 1997

(4) சர்வதேச குழந்தைகள் ஆண்டு – 1999

அ) 4 2 1 3

ஆ) 4 1 2 3

இ) 3 4 1 2

ஈ) 3 4 2 1

17. இந்தியாவில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட 24 மணி நேர கட்டணமில்லா அவசரத் தொலைத்தொடர்பு சேவை _______

அ) ஆம்புலன்ஸ் சேவை ஆ) தீயணைப்பு சேவை

இ) காவலன் சேவை ஈ) குழந்தைகளுக்கான உதவி மையம்

விளக்கம்: குழந்தைகளுக்கான உதவி மைய எண் 1098

18. கீழ்க்கண்டவற்றில் சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

(1) ஆம்னஸ்டி இன்டர்நேஷனல், குழந்தைகள் பாதுகாப்பு நிதியம், மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆகியவை மனித உரிமை நிறுவனங்கள் ஆகும்.

(2) தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியை தலைவராகக் கொண்டுள்ளது.

(3) தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு உறுப்பினராக உச்ச நீதிமன்ற நீதிபதியையும், ஒரு உறுப்பினராக உயர் நீதிமன்ற நீதிபதியையும், இரு உறுப்பினர்களாக மனித உரிமைகள் தொடர்பான அறிவு அனுபவம் பெற்றவர்களையும் மற்றும் நேரிணை உறுப்பினர்களைக் கொண்டுள்ளது

அ) 1 மட்டும் சரி ஆ) 2 மட்டும் சரி இ) 3 மட்டும் சரி ஈ) அனைத்தும் சரி

விளக்கம்: மேற்கூறிய நேரிணை உறுப்பினர்கள் பின்வரும் தேசிய ஆணையங்களின் தலைவர்களாவர் – சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம், பட்டியல் சமூகத்திற்கான தேசிய ஆணையம், பழங்குடியினருக்கான தேசிய ஆணையம், பெண்களுக்கான தேசிய ஆணையம்.

19. குழந்தைகள் உரிமைகள் தொடர்பான மாநாட்டின் அறிக்கை எப்போது வெளியிடப்பட்டது

அ) நவம்பர் 20, 1989 ஆ) நவம்பர் 20, 1987 இ) நவம்பர் 20, 1986 ஈ) நவம்பர் 20, 1985

விளக்கம்: நவம்பர் 20, 1989-ல் நடைபெற்ற குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் பிரிவு-1ன் படி 18 வயதுக்குட்பட்ட அனைவரும் குழந்தை எனப்படுவர். குழந்தை ஒரு முக்கிய தேசியச் சொத்தாகும்.

20. தேசிய மனித உரிமைகள் ஆணையம் எத்தனை பிரிவுகளைக் கொண்டது?

அ) 6 ஆ) 7 இ) 4 ஈ) 5

விளக்கம்: சட்டப்பிரிவு, புலனாய்வுப்பிரிவு, ஆராய்ச்சி மற்றும் திட்டப்பிரிவு, பயிற்சி அளித்தல் பிரிவு. நிர்வாகப்பிரிவு

21. கீழ்க்கண்டவற்றில் சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

(1) அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களின் தொகுப்பானது ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஆரம்பித்தது.

(2) மனித உரிமைகள் என்பது இனம், பாலினம், தேசிய இனம், இனக்குழுக்களின் தன்மை, மொழி மற்றும் சமய வேறுபாடின்றி அனைத்து மனிதர்களுக்குமான இயல்பான உரிமைகள் ஆகும்..

(3) மனித உரிமைகள் கொண்டுள்ள அடிப்படை மதிப்புகள் கண்ணியம், நீதி, சமத்துவம்

அ) 1,3 மட்டும் சரி ஆ) 1,2 மட்டும் சரி இ) 2,3 மட்டும் சரி ஈ) அனைத்தும் சரி

விளக்கம்:

அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களின் தொகுப்பானது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஆரம்பித்தது.

22. பொருத்துக

(1) சிறார் நீதிச்சட்டம் – 1986

(2 போக்சோ சட்டம் – 2000

(3) குழந்தைத்தொழிலாளர் சட்டம் – சட்டப்பிரிவு 21A

(4) கல்வி உரிமைச்சட்டம் – 2012

அ) 4 2 1 3

ஆ) 2 4 1 3

இ) 3 4 1 2

ஈ) 3 4 2 1

விளக்கம்: கல்வி உரிமைச்சட்டம் – 6 முதல் 14 வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்குவதாகும்.

23. ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்ட ஆண்டு

அ) 1945 ஆ) 1943 இ) 1948 ஈ) 1946

விளக்கம்: அக்டோபர் 24, 1945 அன்று ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்டது.

24. மாநிலப்பட்டியல், பொதுப்பட்டியல் ஆகியவற்றின் கீழுள்ள துறைகள் தொடர்பான மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் ஆணையம்

அ) தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆ) மாநில மனித உரிமைகள் ஆணையம்

இ) யுனிஃபெர்ம் ஈ) பொருளாதார மற்றும் சமூக சபை

விளக்கம்: இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் மாநிலப்பட்டியல், பொதுப்பட்டியல் அமைந்துள்ளது.

25. கீழ்க்கண்டவற்றில் சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

(1) ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகளுக்கான சட்டத்தை உருவாக்கியது.

(2) ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக்கான ஆணையத்தை நிறுவியது. இதற்கு பிராங்களின் டி ரூஸ்வெல்டின் தலைமை ஏற்றிருந்தார்

(3) அமைதி, பாதுகாப்பு, மேம்பாடு, மனிதாபிமான உதவி மற்றும் சமூக பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அனைத்துக் கொள்கைகளிலும் திட்ட்ங்களிலும் முக்கிய கருப்பொருளாக மனித உரிமைகள் விளங்குகின்றன.

அ) 1,3 மட்டும் சரி ஆ) 1,2 மட்டும் சரி இ) 2,3 மட்டும் சரி ஈ) அனைத்தும் சரி

விளக்கம்:

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக்கான ஆணையத்தை நிறுவியது. இதற்கு முன்னாள் அமெரிக்க அதிபர் பிராங்களின் டி ரூஸ்வெல்டின் மனைவி எலினார் ரூஸ்வெல்டின் தலைமை ஏற்றிருந்தார்

26. உலக மனித உரிமைகள் அறிவிப்பு ஐ.நா.பொதுச்சபையால் எந்த நாட்டில் அறிவிக்கப்பட்டது?

அ) அமெரிக்கா ஆ) இங்கிலாந்து இ) பிரான்ஸ் ஈ) இத்தாலி

விளக்கம்: உலக மனித உரிமைகள் அறிவிப்பு – UDHR- (Universal Declaration of Human Rights) ஐ.நா.பொதுச்சபையால் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் 1948 டிசம்பர் 10ம் நாள் பொதுச்சபை தீர்மானம் 217Aன் படி அறிவிக்கப்பட்டது. உலக மனித உரிமைகள் அறிவிப்பு நவீன சர்வதேச மகாசாசனம் என்றழைக்கப்படுகிறது. இது 185க்கும் மேற்பட்ட நாடுகளின் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

27. உலக மனித உரிமைகள் அறிவிப்பு எத்தனைக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

அ) 300 ஆ) 200 இ) 100 ஈ) 500

விளக்கம்: உலகில் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள ஆவணம்

28. கீழ்க்கண்டவற்றில் சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

(1) மனித உரிமைகளை உலக அளவில் அறிவித்தது ஐ.நா.பொதுச்சபையாகும்.

(2) மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக ஓர் ஆணையத்தை அமைக்க ஐக்கிய நாடுகளின் சபையின் முக்கிய அங்கமான பொருளாதார மற்றும் சமூக சபை அதிகாரம் பெற்றது.

(3) ஒரு தேசம் நினைத்தால் தனி நபருக்கான மனித உரிமைகளை பறிக்க முடியும்

அ) 1,2 மட்டும் சரி ஆ) 2,3 மட்டும் சரி இ) 1,3 மட்டும் சரி ஈ) அனைத்தும் சரி

விளக்கம்: எந்த ஒரு தேசமும் தனி நபருக்கான மனித உரிமைகளை பறிக்க முடியாது.

ஐக்கிய நாடுகளின் சபையின் முக்கிய அங்கம் – பொருளாதார மற்றும் சமூக சபை (ECOSOC – United Nations Economic and Social Council)

29. ஒரு குறிப்பிட்ட நாட்டில் அல்லது மாநிலத்தில் குடியுரிமை பெறுவதன் மூலம் ஒருவர் அனுபவிக்கும் உரிமைகள் _________

அ) மனித உரிமைகள் ஆ) சமூக உரிமைகள்

இ) சிவில் உரிமைகள் ஈ) அரசியல் உரிமைகள்

விளக்கம்: சிவில் உரிமைகள் சமூகத்தினால் உருவாக்கப்படுகின்றன. அந்தந்த நாடுகள் பல்வேறு வகையான சிவில் உரிமைகள் மூலம் சுதந்திரங்களை வழங்கவோ அல்லது மறுக்கவோ முடியும்

30. பொருத்துக

(1) நியாயமற்ற முறையில் கைது செய்யாமை – கலாச்சார உரிமை

(2 தகவல்களைப் பெறும் உரிமை – வாழ்வியல் உரிமை

(3) கல்வி மற்றும் சுகாதார உரிமைகள் – பொருளாதார உரிமை

(4) நியாயமான ஊதியத்திற்கான உரிமை – சமூக உரிமை

(5) மொழியைப் பேசுவதற்கான உரிமை – அரசியல் உரிமை

அ) 5 1 4 3 2

ஆ) 2 4 1 3 5

இ) 5 4 1 2 3

ஈ) 3 4 2 1 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!