பொருளியல் – ஓர் அறிமுகம் Notes 6th Social Science
6th Social Science Lesson 15 Notes in Tamil
15] பொருளியல் – ஓர் அறிமுகம்
பயிர் செய்கின்றவங்களதான் நாம் விவசாயி என்று சொல்லுகிறோம். கிராமங்களில் விவசாயி என்று சொல்லுகிறோம். கிராமங்களில் விவசாயம் தான் முக்கியத் தொழில். கிராமத்தில் இருந்து அவங்க விவசாயம் செய்து அரிசி, பருப்பு, தானியங்கள், காய்கறிகள் போன்றவற்றை நகரத்தின் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. நாம அதை வாங்கிப் பயன்படுத்துகிறோம்.

கிராமத்துலதான் பெரும்பாலான பொருட்கள் விளைவிக்கப்பட்டுச் சந்தைக்குக் கொண்டு வரப்படுகின்றன.
சந்தை செயல்பாடு:

சந்தையில் விற்கப்படும் பொருட்களைச் சிறு வியாபரிகளும் மக்களும் பணம் கொடுத்து வாங்கிட்டு போகின்றனர். பழைய காலத்தில் பண்டமாற்று முறைன்று ஒன்று இருந்தது ஒரு பண்டத்திற்குப் பதிலாக மற்றொரு பண்டத்தை மாற்றிக் கொள்வது தான் அது. (எ.கா).ஒரு மூட்டை அரிசிக்குப் பதிலாகத் தேவையான அளவு துணியைப் பெற்றக் கொள்வதாகும். ஒருவரிடம் அரிசி அதிகமாக இருக்கும், ஒரு நெசவாளரிடம் துணி அதிகமாக இருக்கும். அரிசி வைத்திருப்பவர் துணையை வாங்க விரும்புவார். ஆனால் துணியை வைத்திருப்பவர் அரிசியை வாங்கத் தயாராக இருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் பரிமாற்றம் நடக்கும்.

பண்டங்களை ஒருவருக்கொருவர் மாற்றிக் கொள்ளும்போது பண்டங்களின் மதிப்பில் ஏற்படும் வேறுபாடு பல பிரச்சனைகளுக்கு வழி வகுத்தது. இப்பிரச்சனையைத் தீர்;க்க கண்டுபிடிக்கப்பட்ட கருவிதான் பணம். பழங்காலத்துல வேட்டையாடிகளாக, உணவு சேகரிப்பாளர்களாக வாழ்ந்து வந்த மக்கள், படிப்படியாக வேளாண்மை செய்யக் கற்றுக் கொண்டனர். இவ்வாறு அவர்கள் வேளாண்மை செய்வதற்கு வசதியாகவே நீர் நிலைகள் அருகே குடி இருப்புகளை அமைத்துக் கொண்டு, அங்கேயே நிரந்தரமாகக் குடியேறினர். இவ்வாறு குடியேறிய இடங்களே கிராமம், ஊர் என்று அழைக்கப்பட்டன. இன்றளவும் விவசாயம் நமது நாட்டின் பொருளாதார ஆணிவேராகத் திகழ்கிறது. மனிதனின் தேவைகளுக்கும் ஆசைகளுக்கும் அளவில்லை. அதன் அடிப்படையிலேயே புதிது புதிதாக தொழில்களைச் செய்யக் கற்றுக் கொண்டான். வேளாண்மை மற்றும் மேய்ச்சலில் ஈடுபடுபவர்கள் விவசாயிகள், உழவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். தொழில்களிலேயே விவசாயம் தான் முதன்மையானது. வுpவசாயம் போலவே இன்னும் சில் தொழில்களையும் முதன்மையான தொழில்கள். விவசாயம், தொழிற்சாலைகள் எல்லாம் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது.
விவசாயம் தான் முதன்மையான வேலையாக இருக்கும். பட்டணம் என்று சொல்லப்படுகின்ற நகரம் போன்று வசதிகள் அங்கே இருக்காது. அதே நேரம் அவர்களுக்குத் தேவையான அடிப்படையானவை கிடைக்கும்படி இருக்கும். சின்னச்சின்ன கடைகள் இருக்கும். அரிசி, பருப்பு மாதிரியே காய்கறி உற்பத்தியும் கிராமங்களில்தான் அதிகம். பால், காபி, டீ போன்ற பானங்களில் சேர்க்கும் சர்க்கரை, ஆலைகளில் தான் உற்பத்தியாகுது. அதுக்கு மூலப்பொருளான கரும்பு கிராமங்களில் தான் விளைகின்றன. மிளகாய் தொடங்கி கடுகு வரை சமையலுக்கான பெரும்பாலான பொருட்கள் கிராமத்துலிருந்து வருது. உற்பத்தி செய்வது மட்டும்தான் அவங்க. அப்பொருட்களை அவர்களிடம் வாங்கி, விற்க நிறைய வியாபர இடை நிலை முகவர்கள் இருப்பதால், விவசாய உற்பத்தியாளர்களுக்குப் போய்ச்சேரும் பணம் குறைவாகத்தான் இருக்கும். கிராமம் தான் உண்மையிலேயே நகரத்தின் நிழல் போல. கிராமங்கள் நம் நாட்டின் முதுகெலும்பு என மகாத்மா காந்தியடிகள் சொல்கின்றார்.
நகரம்:
உலக மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் நகரங்களில் தான் வாழ்கிறார்கள். தமிழ்நாட்டில் 47 சதவீத மக்கள் நகரங்களில் வாழ்கிறார்கள். தமிழ்நாடு உற்பத்தி தொழிலிலும் சேவைத் தொழிலிலும் சிறந்த விளங்கும் மாநிலம். இவை நகரங்களை மையமாகக் கொண்டே இயங்குகின்றன. கிராமங்களைவிட நகரங்களில் வேலை வாய்ப்புகள் அதிகம். சிறுதொழில் செயபவர்கள் தொடங்கி அமைப்பு சாரா தொழிலாளர்கள் வரை நகரத்தில் தான் அதிகமாக இருக்கின்றன.
இப்போ கிராமத்தில் முடி திருத்தகம், துணிகளைத் துவைத்து, இஸ்திரி போட்டுக் கொடுக்கும் சலவை நிலையங்கள் எல்லாம் குறைவாக இருக்கும். ஆனால் நகரத்தில் இந்த மாதிரி சிறுதொழில் செயபவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பார்கள். இப்படி நகரத்தில் கிடைக்கக்கூடிய உபரி வருவாயும் அதிகமாக இருக்கும். நன்கு வடிவமைக்கப்பட்ட சாலைகள், துறைமுகம், விமான நிலையம், ரயில் நிலையங்கள் போன்ற இடங்கள் எல்லாம் ஏற்றுமதி, இறக்குமதி சிறப்பாக நடக்கத் துணை புரிகின்றன. இதற்கு உதவுவதற்கு ஏற்றார் போல வங்கிக் கிளைகள் நகரங்களில் அதிகம். இப்படி அன்றாட பணப்புழக்கத்திற்குப் பெருமளவில் வங்கிகள் உதவி செய்வதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் துணையாக நிற்கின்றன. இவை அனைத்தையும் மூன்றாம் நிலை தொழில்கள் எனலாம்.
கற்றல் வெளிப்பாடுகள்:
குழந்தைகள் “சந்தை” என்பதன் பொருளை புரிந்து கொள்வர். “பண்டமாற்று முறை” பற்றித் தெளிவான கருத்தைப் பெறுவர். பலவிதமான தொழில்களைப் பற்றிய அறிவினைப் பெறுவர்.
கலைச்சொற்கள்:
- நுகர்வோர் – பொருட்களைப் பயன்படுத்துவோர்.
- குடியிருப்புகள் – மனிதர்கள் வாழுமிடம்.
உங்களுக்கு தெரியுமா?
நுகர்வோர் பொருட்கள்:
அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மக்கள் அங்காடியிலிருந்து வாங்கிப் பயன்படுத்தும் பொருட்கள் நுகர்வோர் பொருட்கள் என்று அழைக்கப்படுகின்றன. (எ.கா).அரிசி, துணிகள், மிதிவண்டிகள் போன்றவை.
சேமிப்பு என்பது கையில் கிடைக்கும் வருமானத்தில் நுகர்வுக்குச் செலவு செய்ததுபோக எதிர்காலத் தேவைக்காக ஒதுக்கப்படும் ஒரு தொகையாகும்.
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை யுளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும். – குறள்: 0479.
விளக்கம்: தன் செல்வத்தின் அளவு அறிந்து அதற்கு ஏற்ப வாழாதவனுடைய வாழ்க்கை பல வளங்களும் இருப்பது போலத் தோன்றி உண்மையில் இல்லாதவனாய்ப் பின்பு அப்பொய்த் தோற்றமும் இல்லாமல் அழியும்.
முதல் நிலைத் தொழில்கள்:

உணவுத் தேவைக்கும் தொழில் உற்பத்திக்கும் தேவையான மூலப்பொருள்களை உற்பத்தி செய்வது முதல் நிலை தொழில்கள் எனப்படுகிறது.
- வேளாண்மை.
- கால்நடைகள் வளர்த்தல்.
- மீன் பிடித்தல்.
- கனிமங்கள்,
- தாதுப்பொருட்கள் போன்ற மூலப்பொருள்கள் சேகரித்தல்.
- கனிகள், கொட்டைகள், தேன், மூலிகைகள், ரப்பர், பிசின் போன்றவை சேகரித்தல், மரம் வெட்டுதல்.
இரண்டாம் நிலைத் தொழில்கள்:

முதல் நிலைத் தொழில்கள் மூலம் சேகரிக்கப்படும் மூலப்பொருள்களில் இருந்து இயந்திரங்கள் முதல் அன்றாடத் தேவைக்கான பொருட்கள் வரை பெருமளவில் உற்பத்தி செய்தல் இரண்டாம் நிலை தொழில்கள் என்றும், தொழில் துறை என்றும் அழைக்கப்படுகின்றன.
உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருள்கள், மூலதனம், உடமை ஆகியவற்றின் அடிப்படையில் தொழில்கள் வகைப்படுத்தப்படுகின்றன.
மூலப்பொருள் பயன்பாடு அடிப்படையில் தொழிற்சாலைகளை வகைப்படுத்துதல்:
- வேளாண் அடிப்படைத் தொழிற்சாலைகள் – பருத்தி, சர்க்கரை, உணவுபதப்படுத்துதல்.
- காடுசார்ந்த தொழிற்சாலைகள் – காகிதத் தொழில், மரச்சாமான்கள், கட்டுமானப் பொருள்கள்.
- கனிமத் தொழிற்சாலைகள் – சிமெண்ட், இரும்பு, அலுமினியம் போன்ற தொழிற்சாலைகள்.
- கடல்சார் தொழிற்சாலைகள் – கடல் உணவு பதப்படுத்துதல்.
மூன்றாம் நிலைத் தொழில்கள்:

முன்னர் கூறிய இரண்டு நிலைகளில், குறிப்பாக தொழில் துறையில், பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் உற்பத்திப் பொருள்களை தேவையான மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்கும் தேவையான சேவைகளை வழங்குவதால் இவை சேவைத் துறை தொழில்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. மக்களின் அன்றாடத் தேவைகளையும் சேவைத் துறை வழங்குகிறது.
- போக்குவரத்து – சாலை, ரயில், கடல், ஆகாயப் போக்குவரத்துகள்.
- தொலைத்தொடர்பு – அஞ்சல், தொலைபேசி, தகவல் தொழில் நுட்பம்.
- வர்த்தகம் – பொருள்களைக் கொள்முதல் செய்தல், விற்பனை செய்தல்.
- வங்கி – பணப்பரிமாற்றம், வங்கிச் சேவைகள்.