வேதகால பண்பாடு 12th Ethics Lesson 3 Questions
12th Ethics Lesson 3 Questions
3] வேதகால பண்பாடு
1) ஆரியர்களால் பரப்பப்பட்ட பண்பாடு எது?
A) சிந்துவெளிப் பண்பாடு
B) வேதகாலப் பண்பாடு
C) திராவிடப் பண்பாடு
D) அனைத்தும்
விளக்கம்: இந்தியாவில் சிந்துவெளிப் பண்பாட்டிற்குப் பின் செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்தது, வேதகாலப் பண்பாடு ஆகும். வேதங்களின் அடிப்படையில் சுமார் கி.மு(பெ.ஆ.மு). 1500-ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஆரியர்களால் இப்பண்பாடு பரவியது. வேதங்கள் அவற்றின் ஒப்பற்ற நெறிகள், தத்துவங்கள் போன்றவை இந்தியப் பண்பாட்டின் தொடக்ககால அடையாளமாக இருந்ததுடன் நவீன இந்தியாவின் வளர்ச்சிக்கும் அடித்தளமிட்டன.
2) ஆரியர்கள் அறிமுகப்படுத்திய சிறப்புப் பண்பாட்டு கூறு எது?
A) கூட்டுக்குடும்ப முறை
B) கிராம வாழ்க்கைமுறை
C) இயற்கையை வழிபடுதல்
D) அனைத்தும்
விளக்கம்: ஆரியர்கள் கூட்டுக்குடும்ப முறை, கிராம வாழ்க்கைமுறை, இயற்கையை வழிபடுதல் ஆகிய சிறப்புப் பண்பாட்டுக் கூறுகளை அறிமுகப்படுத்தினர். பிற்கால ஆன்மீக வளர்ச்சியில், வேதகாலப் பண்பாடு முக்கிய பங்காற்றியது.
3) மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவின் வடமேற்குப்பகுதியில் உள்ள எந்த கணவாய் மூலம் முதன்முதலில் ஆரியர்கள் இந்தியாவில் நுழைந்தனர்?
A) கைபர் கணவாய்
B) போலன் கணவாய்
C) A மற்றும் B
D) சொஜிலா கணவாய்
விளக்கம்: ஆரியர்கள் முதன்முதலில் கைபர், போலன் கணவாய்கள் வழியாக மத்திய ஆசியாவிலிருந்து குடியேறினர்.
4) ஆரியர்கள் முதன் முதலில் இந்தியாவின் எந்த இடத்தில் குடியேறினர்?
A) சப்தசிந்து
B) ராவி
C) கங்கை
D) சீனாப்
விளக்கம்: ‘சப்தசிந்து’ என்ற பகுதியில் தான், ஆரியர்கள் முதன் முதலில் குடியேறினர்.
5) ‘சப்தசிந்து’ என்ற சொல்லின் பொருள் என்ன?
A) ஏழு நதிகள் பாயும் பகுதி
B) ஆறு நதிகள் பாயும் பகுதி
C) ஒன்பது நதிகள் பாயும் பகுதி
D) எட்டு நதிகள் பாயும் பகுதி
விளக்கம்: ‘சப்தசிந்து’ என்ற சொல்லிற்கு ‘ஏழு நதிகள் பாயும் பகுதி’ என்பது பொருள். சிந்து, ஜீலம், ராவி, பியாஸ், சட்லஜ், சரஸ்வதி ஆகிய 7 நதிகள் பாயும் பகுதியே ‘சப்தசிந்து’ என்று அழைக்கப்படுகிறது.
6) இந்தியாவின் எந்தப் பகுதி ‘ஆரிய வர்த்தம்’ எனப்பட்டது?
A) சிந்து சமவெளி
B) சப்தசிந்து
C) கங்கைச் சமவெளி
D) பிரம்மபுத்திரா சமவெளி
விளக்கம்: ஆரியர்கள் சப்தசிந்து பகுதிக்குப் பின் கங்கைச் சமவெளியில் குடியேறினர். அப்பகுதி “ஆரிய வர்த்தம்” எனப்பட்டது.
7) சப்தசிந்து பகுதியில் பல்வேறு இனக்குழுக்களாகப் பிரிந்து இருந்த ஆரியர்களின் தொழில் என்ன?
A) வேட்டையாடுதல்
B) வேளாண்மை
C) கால்நடை மேய்த்தல்
D) கொள்ளையடித்தல்
விளக்கம்: இவர்கள் கால்நடை மேய்ப்பதைத் தொழிலாக கொண்டிருந்தனர். இவர்கள் இந்தியாவின் கிழக்கு, வடகிழக்குப் பகுதி நோக்கிப் படிப்படியாக இடம்பெயரத் தொடங்கி பின், கங்கைச் சமவெளியில் நிலையானதொரு வாழ்க்கையை வாழத்தொடங்கினர்.
8) ‘வேதம்’ என்ற பதம் எதிலிருந்து உருவானது?
A) ரிக்
B) வித்
C) யஜுர்
D) ஞானம்
விளக்கம்: ‘வித்’ என்ற சமஸ்கிருத வேர்ச்சொல்லிருந்து ‘வேதம்’ என்ற சொல் தோன்றியது. இதற்கு ‘அறிவுக்களஞ்சியம்’ எனப் பொருள்.
9) வேதங்கள் மொத்தம் எத்தனை வகைப்படும்?
A) 3
B) 4
C) 5
D) 6
விளக்கம்: வேதங்கள் மொத்தம் 4 வகைப்படும். அவை ரிக், யஜுர், சாமம், அதர்வணம்.
10) ‘முற்கால வேதம்’ என அறியப்படுவது எது?
A) ரிக்
B) யஜுர்
C) சாமம்
D) அதர்வணம்
விளக்கம்: ‘ரிக் வேதம்’ முற்கால வேதம் எனவும், யஜுர், சாமம், அதர்வணம் ஆகியவை ‘பிற்கால வேதங்கள்’ எனவும் அறியப்படுகின்றன.
11) வேதகாலம் எத்தனை வகைப்படும்?
A) 2
B) 3
C) 4
D) 7
விளக்கம்: வேதங்களின் அடிப்படையில் வேதகாலம் முன்வேதகாலம், பின்வேதகாலம் என இருவகையாகப் பிரிக்கப்படுகிறது.
12) கூற்றுகளை ஆராய்க.
1. வேதகால இலக்கியங்கள், பிராமணங்கள், ஆராண்யங்கள், உபநிடதங்கள் ஆகியவற்றைக் கொண்டதாகும்.
2. இதிகாசங்கள், புராணங்கள் முதலியவை வேதகாலத்தைப் பற்றி அறிவதற்கான சான்றுகளாகும்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. வேதகால இலக்கியங்கள், பிராமணங்கள், ஆராண்யங்கள், உபநிடதங்கள் ஆகியவற்றைக் கொண்டதாகும்.
2. இதிகாசங்கள், புராணங்கள் முதலியவை வேதகாலத்தைப் பற்றி அறிவதற்கான சான்றுகளாகும்.
13) இந்தியாவின் பண்டையகால வரலாற்றை அறிய உதவும் முதன்மையான சான்று எது?
A) ரிக் வேதம்
B) யஜுர் வேதம்
C) சாம வேதம்
D) அதர்வண வேதம்
விளக்கம்: இந்தியாவின் பண்டைய கால வரலாற்றை அறிய உதவும் முதன்மையான சான்று ரிக் வேதம் ஆகும்.
14) ‘ரிக் வேதம்’ எத்தனை மண்டலங்கள் மற்றும் பாடல்களை கொண்டது?
A) 1028, 10
B) 10, 1033
C) 10, 1028
D) 1012, 10
விளக்கம்: ரிக் வேதம் 10 மண்டலங்களையும், 1028 பாடல்களையும் கொண்டது.
15) ரிக் என்ற சொல்லின் பொருள் என்ன?
A) துதித்தல்
B) வழிபடல்
C) வேதம்
D) A மற்றும் B
விளக்கம்: ரிக் என்ற சொல்லிற்குத் துதித்தல் அல்லது வழிபடல் என்பது பொருள். இறைவனைத் துதிப்பாடல்களால் பாடி வணங்குவதற்குரிய வழிகளைக் கூறுகிறது.
16) ‘காயத்ரி மந்திரம்’ எந்த வேதகாலத்தில் இடம்பெற்றது?
A) ரிக்
B) யஜுர்
C) சாமம்
D) அதர்வணம்
விளக்கம்: அக்னி, பிரஜாபதி, ருத்ரன், வருணன், மித்ரன், இந்திரன் போன்ற தெய்வங்களை வேதகால மக்கள் வழிபட்டதாக ‘ரிக் வேதம்’ கூறுகிறது. இவ்வேதத்தில்தான் ‘காயத்திரி மந்திரம்’ இடம்பெற்றுள்ளது.
17) ரிக்வேதம் சுமார் எத்தனை ஆண்டிற்குமுன் ஆக்கப்பட்டிருக்கலாம் என்று மாக்ஸ்முல்லர் மற்றும் ஐரோப்பிய அறிஞர்கள் கூறுகின்றனர்?
A) கி.மு.1500
B) கி.மு.1400
C) கி.மு.1300
D) கி.மு.1200
விளக்கம்: ரிக்வேதம் சுமார் கி.மு 1200 ஆண்டிற்குமுன் ஆக்கப்பட்டிருக்கலாம் என்று மாக்ஸ்முல்லர் மற்றும் ஐரோப்பிய அறிஞர்கள் கூறுகின்றனர். மேலும், இது பண்டைய கால இந்தியாவின் அரசியல், சமூக, பொருளாதார சமய நிலைகளைப் பற்றியும் குறிப்பிடுகிறது.
18) “யாஜ்” என்ற சொல்லிலிருந்து தோன்றியது எது?
A) ரிக்
B) யஜுர்
C) யாகம்
D) சுக்கில யஜுர் வேதம்
விளக்கம்: ‘யஜ்’ என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து ‘யஜுர்’ என்ற சொல் தோன்றியது. இதற்கு “யாகம்” என்று பொருள்.
19) “சமஸ்கிருதத்தின் முதல் உரைநடை” என்று அழைக்கப்படும் வேதம் எது?
A) ரிக்
B) யஜுர்
C) சாமம்
D) அதர்வணம்
விளக்கம்: யஜுர் வேத நூலில் பாதிக்கு மேற்பட்ட பகுதிகள் உரைநடையில் அமைந்துள்ளன. இவ்வடிப்படையில், “சமஸ்கிருதத்தின் முதல் உரைநடை” என்று இவ்வேதம் அழைக்கப்படுகிறது.
20) மிகச் சிறப்பு வாய்ந்த ருத்ரம் (செய்யுள்) எதில் இடம் பெற்றுள்ளது?
A) ரிக்
B) யஜுர்
C) சாமம்
D) அதர்வணம்
விளக்கம்: மிச் சிறப்பு வாய்ந்த ருத்ரம் (செய்யுள்) யஜுர் வேதத்தில் இடம் பெற்றுள்ளது.
21) ‘வேள்வி செய்யும் முறை’ பற்றிக் கூறும் வேதம் எது?
A) ரிக்
B) யஜுர்
C) சாமம்
D) அதர்வணம்
விளக்கம்: வேள்வி செய்யும் முறை, அசுவமேதயாகம், இராஜசூய யாகம், சமயச் சடங்குகள் ஆகியவை பற்றியும் யஜுர் வேதம் கூறுகிறது. இவ்வேதம் நடைமுறை சடங்குகள் மற்றும் வேள்விக்கான பாடல்களைக் கொண்டுள்ளது.
22) ‘யஜுர் வேதம்’ எத்தனை பிரிவுகள் மற்றும் அத்தியாயங்களைக் கொண்டது?
A) 2, 4
B) 2, 14
C) 2, 44
D) 2, 40
விளக்கம்: யஜுர் வேதம் சுக்ல யஜுர் வேதம், கிருஷ்ண யஜுர் வேதம் என்ற இரு பிரிவுகளையும், 40 அத்தியாயங்களையும் கொண்டுள்ளது.
23) இசையின் அடிப்படையில் அமைந்த வேதம் எது?
A) ரிக்
B) யஜுர்
C) சாமம்
D) அதர்வணம்
விளக்கம்: ‘சாமம்’ என்ற இன்னிசை அடிப்படையில் பாடப்பெற்றதால், இது ‘சாமவேதம்’ என்று அழைக்கப்படுகிறது.
24) இசை, தெய்வம், சோமயாகம் ஆகியவை பற்றி கூறும் வேதம் எது?
A) ரிக்
B) யஜுர்
C) சாமம்
D) அதர்வணம்
விளக்கம்: இசை, தெய்வம், சோமயாகம் ஆகியவை பற்றி சாம வேதம் கூறுகிறது. இது இசை வடிவிலான வேதமந்திரங்களைக் கூறுகிறது. சமவேதம் ஆரியர்களின் இசையார்வத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
25) சாம வேதத்தில் உள்ள பாடல்கள் எத்தனை?
A) 1028
B) 40
C) 1500
D) 1549
விளக்கம்: சாமவேதம் 1549 பாடல்களைக் கொண்டது. இவை இசை வடிவிலான வேதமந்திரங்களைக் கூறுகிறது.
26) உச்சாடனம், மாந்திரீகம் போன்றவற்றைப் பற்றிக் கூறும் வேதம் எது?
A) ரிக்
B) யஜுர்
C) சாமம்
D) அதர்வணம்
விளக்கம்: அதர்வண வேதத்தில் உச்சாடனம் மற்றும் மாந்திரீக்கதால் தீய சக்திகளை வெல்லலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
27) வேதகால மருத்துவமுறைகள் பற்றிய கருத்துகளை கூறும் வேதம் எது?
A) ரிக்
B) யஜுர்
C) சாமம்
D) அதர்வணம்
விளக்கம்: வேதகால மருத்துவமுறைகள் பற்றிய கருத்துக்கள் அதர்வண வேதத்தில் உள்ளன. மந்திரம் உச்சரிக்க வேண்டிய முறைகள் பற்றிய பாடல்களும் இவ்வேதத்தில் உள்ளன.
28) அதர்வண வேதத்தில் எத்தனை பகுதிகளும், பாடல்களும் உள்ளன?
A) 10, 1028
B) 2, 40
C) 20, 731
D) 20, 1549
விளக்கம்: அதர்வண வேதத்தில 20 பகுதிகளும், 731 பாடல்களும் உள்ளன.
29) ‘பிரம்மவேதம்’ என்று அழைக்கப்படுவது எது?
A) ரிக் வேதம்
B) தனுர்வேதம்
C) சில்ப வேதம்
D) அதர்வண வேதம்
விளக்கம்: அதர்வண வேதம் ‘பிரம்ம வேதம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
30) உபவேதங்கள் எத்தனை வகைப்படும்?
A) 2
B) 3
C) 4
D) 6
விளக்கம்: உபவேதங்கள் ஆயர்வேதம், தனுர் வேதம், கந்தர்வவேதம், சில்ப வேதம் என 4 வகைப்படும்.
31) 108 உபநிடதங்களில் முக்கியமானதாக கருதப்படுவது?
A) 10
B) 58
C) 48
D) 45
விளக்கம்: 10 உபநிடதங்கள் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. அவை,
1. ஈசோபநிடதம்
2. கீன உபநிடதம்
3. முண்டக உபநிடதம்
4. மாண்டுக்ய உபநிடதம்
5. ஐத்ரேய உபநிடதம்
6. தைத்ரிய உபநிடதம்
7. பிராசனோபநிடதம்
8. கதோபோநிடதம்
9. சாந்தோக்கிய உபநிடதம்
10. பிருகதரண்யக உபநிடதம்
32) போர்க் கலைப் பற்றிக் குறிப்பிடுவது எது?
A) ரிக்
B) தனுர்வேதம்
C) காந்தர்வம்
D) சில்பவேதம்
விளக்கம்: தனுர்வேதம் என்ற உபவேதம் போர்க்கலையைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
33) இசை, நடனம் ஆகிய நுண்கலைகளைப் பற்றிக் குறிப்பிடுவது எது?
A) காந்தர்வம்
B) யஜுர்
C) சாமம்
D) அதர்வணம்
விளக்கம்: இசை, நடனம் ஆகிய நுண்கலைகள் பற்றி காந்தர்வம் என்ற உபவேதம் குறிப்பிடுகிறது.
34) கட்டடக் கலைப் பற்றி குறிப்பிடுவது எது?
A) ரிக்
B) யஜுர்
C) சில்ப வேதம்
D) அதர்வணம்
விளக்கம்: சில்ப வேதம் என்ற உபவேதம் கட்டக் கலைகள் பற்றிக் குறிப்பிடுகிறது.
35) வேதங்களுக்கான விளக்க உரைகள் எனப்படுபவை எது?
A) உபவேதங்கள்
B) விளக்க உரைகள்
C) பிராமணர்கள்
D) இலக்கியங்கள்
விளக்கம்: வேதங்களுக்கான விளக்க உரைகள் பிராமணங்கள் எனப்படுகின்றன. ஆரியர்கள் வேள்விச் சடங்குகள் செய்யும் முறைகளையும், வழிபாட்டு முறைகளையும், அவற்றிற்கான விளக்கங்களையும் பிராமணங்கள் குறிப்பிடுகின்றன. வேதங்களை ஓதுபவர்களின் கடமைகளையும் இவை குறிப்பிடுகின்றன. மேலும் “வேதங்களிலுள்ள துதிப்பாடல்களுக்குரிய உரைநடை நூல்கள்” எனப்படுகின்றன.
36) ‘ஆரண்யம்’ என்ற சொல்லின் பொருள் என்ன?
A) மலை
B) கடல்
C) காடு
D) அரசவை
விளக்கம்: ‘ஆரண்யம்’ என்ற சொல்லிற்குக் ‘காடு’ என்று பொருள்.
37) காடுகளில் இறையருள் தேடித் தவம் செய்த முனிவர்களால் எழுதப்பட்ட இலக்கியங்கள் எவை?
A) வேதங்கள்
B) உபவேதங்கள்
C) பிராமணங்கள்
D) ஆரண்யங்கள்
விளக்கம்: காடுகளில் இறையருள் தேடித் தவம் செய்த முனிவர்களால் எழுதப்பட்ட இலக்கியங்கள் ஆரண்யங்கள். வேள்வியைச் செய்ய இயலாத முதியோர்கள், துறவிகள் ஆகியோரின் போதனைகள் இதில் முக்கியத்துவம் பெறுகின்றன.
38) வேள்வியைவிட அமைதியான தியானமே மிகவும் மேலானது என்று வலியுறுத்துபவை எவை?
A) வேதங்கள்
B) உபவேதங்கள்
C) பிராமணங்கள்
D) ஆரண்யங்கள்
விளக்கம்: வேள்வியைவிட அமைதியான தியானமே, மிகவும் மேலானது என்று ஆரண்யங்கள் வலியுறுத்துகின்றன. வேதகாலப் பண்பாட்டின் உன்னத நிலையை இவை எடுத்துக்காட்டுகின்றன.
39) அநுபூதி நெறிகள் மற்றும் தத்துவக் கருத்துக்கள் அடங்கிய கருத்துப்பெட்டகம் என்று அழைக்கப்படுபவை எது?
A) வேதங்கள்
B) உபவேதங்கள்
C) பிராமணங்கள்
D) ஆரண்யங்கள்
விளக்கம்: அநுபூதி நெறிகள் மற்றும் தத்துவக் கருத்துகள் அடங்கிய கருத்துப்பெட்டகம் என்று ஆரண்யங்கள் அழைக்கப்படுகின்றன.
40) வேதங்களின் சாரமே__________என்று அழைக்கப்பட்து?
A) உபநிடதம்
B) உபவேதங்கள்
C) பிராமணங்கள்
D) ஆரண்யங்கள்
விளக்கம்: வேதங்களின் சாரமே ‘உபநிடதம்’ என்று அழைக்கப்படுகிறது. உபநிடதம் (உபநிஷத்) என்ற சொல்லிற்கு “அருகில் அமர்தல்” என்று பொருள்.
41) பிரம்மச்சாரியான மாணவன் தன் குருவின் அருகில் பயபக்தியுடன் அமர்ந்து அறிவைப் பெற வேண்டுமென்பதை வலியுறுத்துவது எது?
A) உபநிடதங்கள்
B) உபவேதங்கள்
C) பிராமணங்கள்
D) ஆரண்யங்கள்
விளக்கம்: பிரம்மச்சாரியான மாணவன் தன் குருவின் அருகில் பயபக்தியுடன் அமர்ந்து அறிவைப் பெற வேண்டுமென்பதையே உபநிடதங்கள் வலியுறுத்துகின்றன. இவை கடவுள், ஆன்மா, உலகம், கர்மவினை, வீடுபேறு போன்ற கருத்துக்களை ஆராய்ந்து தெளிவான விளக்கங்களை உலகிற்கு அளிக்கின்றது.
42) மொத்தம் எத்தனை உபநிடதங்கள் உள்ளன?
A) 10
B) 8
C) 48
D) 108
விளக்கம்: வேதத்தத்துவத்தின் விளக்கங்களைக் கூறும் உபநிடதங்கள், பல்வேறு காலங்களில் வாழ்ந்த பல்வேறு ரிஷிகளால் (குரு) தொகுக்கப்பட்டவையாகும். இவை மொத்தம் 108 உள்ளது.
43) எந்த உபவேதம் மருந்து, மூலிகைகளைப் பற்றி கூறுகிறது?
A) அதர்வண வேதம்
B) ஆயுர் வேதம்
C) சில்ப வேதம்
D) தனுர் வேதம்
விளக்கம்: ஆயுர்வேதம் என்ற உபவேதம் மருந்து, மூலிகைகளைப பற்றிக் குறிப்பிடுகிறது. இதேபோல், அதர்வண வேதத்தில் வேதகால மருத்துவ முறைகள் இடம்பெற்றுள்ளன.
44) முக்கியமான 10 உபநிடதங்களுக்கு உரை எழுதியவர் யார்?
A) ஆதி சங்கரர்
B) இராமானுஜர்
C) வித்யாரண்யர்
D) அனைத்தும்
விளக்கம்: முக்கியமான 10 உபநிடதங்களுக்கு ஆதிசங்கரர், இராமானுஜர், வித்யாரண்யர், ஆனந்ததீர்த்தர் ஆகியோர் உரை எழுதியுள்ளனர்.
45) முகலாய இளவரசர் தாராஷீகோ, உபநிடதங்கள் சிலவற்றை எந்த மொழியில் மொழிபெயர்த்தார்?
A) பாலி
B) ஆங்கிலம்
C) பாரசீகம்
D) உருது
விளக்கம்: முகலாய இளவரசர் தாராஷகோ உபநிடதங்கள் சிலவற்றை பாரசீக மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.
46) ‘இந்திய பண்பாட்டு வளர்ச்சியின் உச்சமே உபநிடதங்கள்’ என்று கூறியவர் யார்?
A) அமுர்-டி-ரின் கோர்ட்
B) ஷோபன் ஹோவர்
C) அல்பெருனி
D) கஜினி முகமது
விளக்கம்: இநதிய பண்பாட்டு வளர்ச்சியின் உச்சமே உபநிடதங்கள் என்று அமுர்-டி-ரின் கோர்ட் கூறுகிறார்.
47) கஜினி முகமதுவின் அவைப்புலவர் யார்?
A) அமுர்-டி-ரின் கோர்ட்
B) ஷோபன் ஹோவர்
C) அல்பெருனி
D) கஜினி முகமது
விளக்கம்: ஜெர்மானியரான ஷோன்ஹோவர், கஜினி முகமதுவின் அவைப்புலவர் அல்பருனி ஆகியோர் உபநிடதங்களைப் புகழ்ந்து கூறியுள்ளனர்.
48) “ஆதிசங்கரர், இராமானுஜர் ஆகியோரின் தத்துவங்களை இனறளவும் லட்சக்கணக்கான மக்கள் போற்றுவதற்கு அவை உபநிடதக் கருத்துக்களைக் கொண்டிருப்பதே காரணம்” என்று கூறியவர் யார்?
A) அமுர்-டி-ரின் கோர்ட்
B) ஷோபன் ஹோவர்
C) அல்பெருனி
D) வின்டர்நீட்ஸ்
விளக்கம்: பிற்கால இந்தியத் தத்துவங்கள் யாவும் உபநிடதங்களிலிருந்தே எழுந்தன. ஆதிசங்கரர், இராமானுஜர் ஆகியோரின் தத்துவங்களை இன்றளவும் லட்சக்கணக்கான மக்கள் போற்றுவதற்கு அவை உபநிடதக் கருத்துக்களைக் கொண்டிருப்பதே காரணம் என்று வின்டர்நீட்ஸ் புகழ்ந்து கூறுகிறார்.
49) முன் வேதகாலத்தின் இனக்குழுக்களின் அரசன் என்று அழைக்கப்பட்டவார் யார்?
A) மகாராஜா
B) வேந்தன்
C) இராஜன்
D) குலா
விளக்கம்: முன் வேதகால அரசு பல்வேறு இனக்குழுக்களின் அரசாகும். அவ்வினக்குழுக்களின் அரசு, குறிப்பிட்ட நிலப்பகுதியை ஆட்சி செய்தது. ஒவ்வொரு இனக்குழுவும், தத்தம் ஆட்சிப்பகுதிக்குத் தலைவனை தேர்ந்தெடுத்தன. அவ்வினக்குழுக்களின் தலைவன் அரசன் ஆவான். அவன் இனக்குழுக்களால் “இராஜன்” என்று அழைக்கப்பட்டான்.
50) கிராமங்களில் வாழ்ந்த குடும்பங்களின் தலைவன் எவ்வாறு அழைக்கப்பட்டான்?
A) குலா
B) கிராமினி
C) தலைவன்
D) A மற்றும் C
விளக்கம்: கிராமங்களில் வாழ்ந்த குடும்பங்கள், குலங்கள் எனப்பட்டன. அதன் தலைவர் குலா, குலாதிபதி என்ற பல பெயர்களில் அழைக்கப்பட்டார்.
51) இராஜ்யதர்மம் எவற்றை உள்ளடக்கியது?
A) மன்னனின் அதிகாரம்
B) மன்னனின் கடமையின் எல்லை
C) மன்னனுக்கான விதிமுறைகள்
D) அனைத்தும்
விளக்கம்: தமது குடிமக்களைக் காப்பது மன்னரின் கடமையாகும். தமது கடமையிலிருந்து தவறிய மன்னனை பதவியிலிருந்து இனக்குழுவே திரும்ப அழைத்துக் கொள்ளும். அரசனின் அன்றாடப் பணிகளின் எல்லை வரையறுக்கப்பட்டது. மன்னரின் அதிகாரம், அவரது கடமையின் எல்லை, விதிமுறைகள் ஆகியவை இராஜ்யதர்மம் எனப்பட்டது. அரசன் தன்னிச்சையாகச் செயல்படமுடியாமல் செய்ய குழு ஏற்படுத்தப்பட்டது. நிலங்கள் மன்னனுக்கு மட்டுமே சொந்தமானதல்ல அவரது இனக்குழுவிற்குச் சொந்தமானது. ஆனால் பிற்காலத்தில் இனக்குழு மன்னனை தேர்ந்தெடுக்கும் நிலை மாறி அரசப்பதவி பரம்பரைப் பதவியானது. மன்னனின் முடிசூட்டுவிழா மக்களால் முக்கிய விழாவாகக் கொண்டாடப்பட்டது.
52) முன் வேதகாலத்தில் அரசனுக்கு நிர்வாகத்தில் உதவ யார் யார் ஆலோசனைக் குழுவில் நியமிக்கப்பட்டனர்?
1. புரோகிதர்
2. சேனானி
3. கிராமணி
A) 1
B) 1, 2
C) 1, 3
D) 1, 2, 3
விளக்கம்: முன் வேதகாலத்தில் அரசனுக்கு நிர்வாகத்தில் உதவ புரோகிதர் என்ற அரசகுரு, சேனானி என்ற படைத்தலைவர், கிராமணி என்ற கிராமநிர்வாக அதிகாரி ஆகியோர் கொண்ட ஆலோசனைக் குழு ஏற்படுத்தப்பட்டது.
53) முன் வேதகாலத்தில் யார் தலைசிறந்த அரசகுருவாகத் திகழ்ந்தார்?
A) வசிஷ்டர்
B) விஸ்வாமித்திரர்
C) A மற்றும் B
D) வால்மீகி
விளக்கம்: முன் வேதகாலத்தில் வசிஷ்டர், விஸ்வாமித்திரர் போன்றோர் தலைசிறந்த அரசகுருவாகத் திகழ்ந்தனர். அரசவையின் விழாக்களைக் கொண்டாடுவது முதல், அரசன் போருக்குச் செல்லும் நாள் எது என்பதைத் தீர்மானிக்கும் வரையிலான திட்டத்தை இவர்கள் வகுத்தனர்.
54) முன் வேதகாலத்தில் அரசனின் படைகளில் அதிக முக்கியத்துவம் பெற்றது எது?
A) குதிரைப்படை
B) காலாட்படை
C) தேர்ப்படை
D) B மற்றும் C
விளக்கம்: முன் வேதகாலத்தில் அரசனின் படைகள் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டன. தன் இராணுவத்தின் மேலாண்மைப் பணியில் மன்னர் தன் முழு கவனத்தையும் கொண்டிருந்தார். காலாட்படையும் தேர்ப்படையும் அரசரின் படைகளில் அதிக முக்கியத்துவம் பெற்றன. போர்க்காலங்களில் 2, 3, 4 குதிரைகள் பூட்டிய தேர்களை போர்களில் வில், அம்பு, ஈட்டி, வேல் போல் ஆயுதங்களைப் பயன்படுத்தினர்.
55) முன் வேதக் காலத்தில் நீதி வழங்கும் முறைக்குத் தலைவன் யார்?
A) மன்னன்
B) இராஜகுரு
C) புரோகிதர்
D) A மற்றும் B
விளக்கம்: மன்னனே நீதி வழங்கும் முறைக்குத் தலைவன். நிர்வாகத்தில் மன்னன் நீதி வழங்க புரோகிதர்கள் அவருக்கு உதவினர். திருடுதல், கொள்ளையடித்தல், வழிப்பறி செய்தல், பசுவைக் கடத்தல் போன்றவை பெருங்குற்றங்களாகக் கருதப்பட்டு, அத்தகைய குற்றங்களைச் செய்தோர் கடுமையாகத் தண்டிக்கபட்டனர்.
56) முன் வேதகாலத்தில் அரசனுக்கு நிர்வாகத்தில் உதவிய சபை எது?
A) விதாதா
B) சபா
C) சமிதி
D) அனைத்தும்
விளக்கம்: முன் வேதகாலத்தில் அரசனுக்கு நிர்வாகத்தில் உதவ விதாதா, சபா, சமிதி போன்ற சபைகள் இருந்தன.
57) முன்வேதகாலத்தில் எந்த சபையில் ஆண், பெண் ஆகிய இருபாலரும் முக்கியத்துவம் பெற்றனர்?
A) விதாதா
B) சபா
C) சமிதி
D) அனைத்தும்
விளக்கம்: விதாதாவில் ஆண், பெண் ஆகிய இருபாலரும் முக்கியத்துவம் பெற்றனர். இச்சபையில் கலை நிகழ்ச்சிகளும் சமய விவாதங்களும் நடைபெற்றன.
58) எது மூத்தோர் சபை?
A) விதாதா
B) சபா
C) சமிதி
D) அனைத்தும்
விளக்கம்: சபா என்பது மூத்தோர் சபையாகும். பலதுறைகளிலும் சிறந்து விளங்கிய அனுபவமிக்க அறிஞர்கள் இச்சபையில் இடம்பெற்றிருந்தனர். அரசனுக்கு இவர்கள் ஆலோசனைகளையும் கூறினர்.
59) எது பொதுமக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட சபை?
A) விதாதா
B) சபா
C) சமிதி
D) அனைத்தும்
விளக்கம்: சமிதி என்பது, பொதுமக்களின் பிரதிநிதிகள் கொண்ட சபையாகும்.
60) எந்த சபை ஆட்சி நிர்வாகத்தின் அதிகார மையமாகத் திகழ்ந்தது?
A) விதாதா
B) சபா
C) சமிதி
D) அனைத்தும்
விளக்கம்: சமிதியே ஆட்சி நிர்வாகத்தின் அதிகார மையமாகத் திகழ்ந்தது. விதாதா, சபா, சமிதி ஆகிய மூன்று சபைகளுள் சமிதியே அதிகாரமிக்கது. இம்மூன்று சபைகளும் அரசனுக்கு ஆலோசனைகளை வழங்கியதன் மூலம் சிறப்பான நிர்வாகத்திற்கு வழி வகுத்தன.
61) முன் வேதகாலச் சமூகத்தின் அடிப்படை எது?
A) கிராமம்
B) குடும்பம்
C) நாடு
D) அரசன்
விளக்கம்: முன் வேதகாலச் சமூகத்தின் அடிப்படை குடும்பம் ஆகும். குடும்பத்தின் தலைவன் தந்தை ஆவார்.
62) கூற்றுகளை ஆராய்க.
1. நகர நாகரீக அடிப்படையிலான ஆரிய சமூகத்தில் ஆண்வழி மரபிற்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது.
2. குடும்ப தலைவர் இறந்தாலோ அல்லது நோய்வாய்ப்பட்டாலே குடும்பத்தின் மூத்த ஆண் வாரிசு குடும்பப் பொறுப்பை ஏற்று நடத்த வேண்டும்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: ஆரியர்களின் நாகரீகம் கிராம நாகரீகம் ஆகும்.
63) கிராமத்தின் தலைவர் முன்வேதகாலத்தில் எவ்வாறு அறியப்பட்டார்?
A) குலா
B) குலாபதி
C) குருகபதி
D) கிராமணி
விளக்கம்: குலா, குலாபதி, கிருகபதி – குடும்ப தலைவன்.
கிராமணி – கிராமத்தின் தலைவர்.
64) சரியான கூற்றைத் தேர்வு செய்க.
A) பல குடும்பங்கள் சேர்ந்த பகுதி கிராமம் எனப்பட்டது. கிராமத்திற்கு தலைவர் கிராமணி எனப்பட்டார்
B) ஆரிய மக்கள் சமூகம், கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையை பின்பற்றியது. அரசக் குடும்பங்களைத் தவிர, பெரும்பாலும் ஒருதார மணமுறையே வழக்கிலிருந்தது
C) முன்வேதகாலச் சமூகத்தில் பெண்ணடிமை முறையோ உடன்கட்டையேறுதல் செயலோ, குழந்தைத் திருமணமோ இல்லை
D) அனைத்தும் சரி
விளக்கம்: பல குடும்பங்கள் சேர்ந்த பகுதி கிராமம் எனப்பட்டது. கிராமத்திற்கு தலைவர் கிராமணி எனப்பட்டார்
ஆரிய மக்கள் சமூகம், கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையை பின்பற்றியது. அரசக் குடும்பங்களைத் தவிர, பெரும்பாலும் ஒருதார மணமுறையே வழக்கிலிருந்தது
முன்வேதகாலச் சமூகத்தில் பெண்ணடிமை முறையோ உடன்கட்டையேறுதல் செயலோ, குழந்தைத் திருமணமோ இல்லை
65) முன் வேதகாலத்தில் சமூக நிலையைப் பொருத்தவரை, தொழில் அடிப்படையில் சமுதாய பிரிவுகள் இருந்தன என ரிக் வேதத்தின் எத்தனையாவது மண்டலத்திலுள்ள புருஷசூக்தம் என்ற பாடல் கூறுகிறது?
A) 9-வது
B) 10-வது
C) 8-வது
D) 18-வது
விளக்கம்: முன் வேதகாலத்தில் சமூக நிலையைப் பொருத்தவரை தொழிலின் அடிப்படையில் சமுதாயப் பிரிவுகள் இருந்தன என ரிக் வேதத்தின் 10-வது மண்டலத்திலுள்ள புருஷசூத்கம் என்ற பாடல் கூறுகிறது. மக்கள் செய்த தொழில்களின் அடிப்படையில் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன.
66) தவறானக் கூற்றைத் தேர்க.
A) வேதகாலச் சமூகத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் மதிக்கப்பெற்றனர். பெண்கள் பொதுநிகழ்ச்சிகளிலும் அரச சபை, விவாதங்களிலும் கலந்து கொண்டனர்.
B) அபலா, கோசா, விஸ்வவாரா, லோபமுத்ரா போன்ற பெண்கள் கல்வி, கேள்விகளில் சிறப்பான நிலையில் முன்னேறி இருந்தனர்.
C) திருமணம், தூய்மையான சமயச் சடங்காகவும், புனிதமாகவும் பிரிக்க முடியாத ஒன்றாகவும் மதித்துப் போற்றப்பட்டது
D) பெற்றோர் மற்றும் மணப்பெண்ணின் இசைவு பெற்று திருமணம் நடைபெற்றது. எனினும் அரச குடும்பத்தில் சுயம்வரம் முறை வழக்கிலில்லை
விளக்கம்: பெற்றோர் மற்றும் மணப்பெண்ணின் இசைவு பெற்று திருமணம் நடைபெற்றது. அரச குடும்பத்தில் சுயம்வரம் முறை வழக்கிலிருந்தது. இக்கால (முன்வேதகால) மகளிர் அறிவும் பண்பாடும் ஒருங்கே அமையப்பெற்றவராக விளங்கினர். மணமக்கள் அக்னி சாட்சியாக வலம் வருதல், திருமணத்தில் முக்கிய நிகழ்வாகக் கருதப்பட்டது.
67) சரியான கூற்றைத் தேர்வு செய்க.
A) முன் வேதகால கல்விமுறை, மனப்பாட முறையிலான கல்வி முறையாகும். அதாவது துதிப்பாடல்களை வாய்வழியே ஒப்புவிப்பதாகும். எழுத்தைவிட ஒலி முக்கியமானதாகக் கருதப்பட்டது.
B) முன்வேதகால கல்வியானது, இருவிதமான குறிக்கோள்களை மையமாகக் கொண்டு செயல்பட்டது. அதன்படி, தன்னைத்தானே அறிந்துகொள்ளுதல், மணக்கட்டுப்பாட்டின் மூலம் அறியாமையிலிருந்து விடுபடுதல். அவ்வாறு விடுபட ஆன்மீகத்தின் வழியை நாடுதல்
C) ஆன்மீகக் கல்வியைப் போதிக்கும் குருக்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டதன் மூலம், முன் வேதகால கல்வியானது மாணவர்களின் உயிர், உள்ளம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு வழி வகை செய்தது. இவ்வேதகால கல்வியின் குறிக்கோள் பேரறிவு ஆன்ம விடுதலை போன்றவற்றை அடைவதேயாகும்
D) அனைத்தும் சரி
விளக்கம்: முன் வேதகால கல்விமுறை, மனப்பாட முறையிலான கல்வி முறையாகும். அதாவது துதிப்பாடல்களை வாய்வழியே ஒப்புவிப்பதாகும். எழுத்தைவிட ஒலி முக்கியமானதாகக் கருதப்பட்டது.
முன்வேதகால கல்வியானது, இருவிதமான குறிக்கோள்களை மையமாகக் கொண்டு செயல்பட்டது. அதன்படி, தன்னைத்தானே அறிந்துகொள்ளுதல், மணக்கட்டுப்பாட்டின் மூலம் அறியாமையிலிருந்து விடுபடுதல். அவ்வாறு விடுபட ஆன்மீகத்தின் வழியை நாடுதல்
ஆன்மீகக் கல்வியைப் போதிக்கும் குருக்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டதன் மூலம், முன் வேதகால கல்வியானது மாணவர்களின் உயிர், உள்ளம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு வழி வகை செய்தது. இவ்வேதகால கல்வியின் குறிக்கோள் பேரறிவு ஆன்ம விடுதலை போன்றவற்றை அடைவதேயாகும்
68) முன் வேதகால இசைக்கருவிகளில் பொருந்தாததைத் தேர்வு செய்க.
A) தாரை
B) மத்தளம்
C) வீணை
D) யாழ்
விளக்கம்: முன் வேதகாலத்தில் நடனமாடுதல், இசை, வேட்டை, தேர்ப்பந்தயம் போன்றவை முக்கியமான பொழுதுபோக்குகளாகத் திகழ்ந்தன. முரசு, தாரை, மத்தளம், யாழ், புல்லாங்குழல் போன்றவை இசைக் கருவிகளாகத் திகழ்ந்தன.
69) முன் வேதகால மக்களின் உணவுகளில் பொருந்தாதது எது?
A) நெல்
B) கோதுமை
C) பார்லி
D) தேன்
விளக்கம்: முன் வேதகால மக்கள் எளிய வாழ்க்கை முறையை மேற்கொண்டனர். கோதுமை, பார்லி முதலான தானியங்கள், பழ வகைகள், பால் மற்றும் பால் பொருள்களான தயிர், நெய், வெண்ணெய் அவற்றுடன் இறைச்சி போன்றவற்றை உண்டனர். தேன் அவர்களின் உணவில் சேர்க்கப்பட்டது.
70) எங்கிருந்த முஜாவத் என்ற பகுதியிலிருந்து சோம, சுரா பானங்களை முன்வேதகால மக்கள் தயாரித்தனர்?
A) ஆரவல்லி மலை
B) விந்திய மலை
C) இமய மலை
D) சாத்புரா மலை
விளக்கம்: இமயமலையில் இருந்த “முஜாவத்” என்ற பகுதியில் வளரும் ஒருவிதச் செடியிலிருந்து சோம, சுரா ஆகிய பானங்களை தயாரித்து அருந்தினர். யாகங்களிலும், இத்தகைய பானங்கள் முக்கிய இடம்பெற்றன.
71) முன் வேதகால மக்களின் ஆடை எது?
A) வாசல்
B) பரிதானா
C) வஸ்திரம்
D) அனைத்தும்
விளக்கம்: முன்வேத கால மக்கள் பருத்தி, கம்பளி, விலங்குகளின் தோல் ஆகியவற்றாலான ஆடைகளை அணிந்தனர். ஆடைகளை வாசஸ், பரிதானா, வஸ்திரம் போன்ற பெயர்களில் அழைத்தனர்.
72) கூற்றுகளை ஆராய்க.
1. முன்வேத கால மக்கள் அதிவாசஸ் என்ற கீழாடையை அணிந்தனர்.
2. முன்வேத கால மக்கள் நிவி என்ற மேலாடையை அணிந்தனர்
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: முன் வேதகால மக்கள் அதிவாசஸ் என்ற மேலாடையும், நிவி என்ற கீழாடையும் அணிந்தனர். ஆடைகளில் தங்க வேலைப்பர்டுகள் செய்யப்பட்டன. அழகிய பூவேலைப்பாடுகள் வண்ணச்சாயங்கள் முக்கியத்துவம் பெற்றன.
73) முன்வேதகால மக்கள் கர்ணசோபனா என்ற அணிகலன்களை அணிந்தனர். கர்ணசோபனா என்பது எதைக் குறிக்கும்?
A) கழுத்தணி
B) காதணி
C) ஒட்டியாணம்
D) வளையல்
விளக்கம்: முன்வேதகாலத்தில் மக்கள் தங்கத்தாலான அட்டி, காப்பு, ஒட்டியாணம், காதணிகள், கழுத்தணிகள் போன்ற ஆபரணங்களை அணிந்தனர். வெள்ளி போன்ற உலோகங்களாலும் ஆபரணங்கள் செய்யப்பட்டன. அவர்கள் அணிந்த காதணி ‘கர்ணசோபனா’ எனப்பட்டது
74) முன் வேதகால ஆபரணங்களில் முக்கியத்துவம் பெற்றது எது?
A) கை வளையல்
B) சிலம்பு
C) காப்பு
D) A மற்றும் B
விளக்கம்: முன் வேதகால ஆபரணங்களில் கை வளையல்கள் மற்றும் சிலம்பு போன்றவைகள் முக்கியத்துவம் பெற்றன. பெண்கள் கைப்பட்டைகள், கணுக்காலில் அணியும் அணிகலன்கள் போன்றவற்றை அணிந்திருந்தனர். ஆண்களைப் போல பெண்களும் கை கால்களில் அணிகலன்களை அணிந்தனர்.
75) முன் வேதகால மக்களின் பொருளாதார மதிப்பு, எதைக் கொண்டு கணக்கிடப்பட்டது?
A) கால்நடைகளின் எண்ணிக்கை
B) பண்டங்கள்
C) நிலம்
D) அனைத்தும்
விளக்கம்: முன்வேதகால மக்கள் கால்நடைகளுடன் ஒவ்வொரு பகுதியிலுள்ள மேய்ச்சல் நிலங்களைத் தேடி அலைந்தனர். கால்நடைகளின் எண்ணிக்கையை வைத்தே அவர்களின் பொருளாதார மதிப்பு நிர்ணயிக்கப்பட்டது. முன் வேதகால மக்கள் வைத்திருந்த கால்நடைகள், பண்டமாற்றுமுறை அடிப்படையில் வியாபாரப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டன. பசுக்கள், குதிரைகள், ஆடுகள் போன்றவை முன் வேத கால மக்களால் வளர்க்கப்பட்டன. கால்நடைகளை கவர்வதற்காகவே போர்கள் நடத்தப்பட்டதாக ரிக் வேதம் கூறுகிறது.
76) எது பசுக்களைத் தேடி அலைபவர்களைக் குறிக்கிறது?
A) காவிஸ்தி
B) கோமத்
C) ஷேத்ரா
D) க்ருஷி
விளக்கம்: “காவிஸ்தி” என்ற சொல் பசுக்களைத் தேடி அலைபவர்களைக் குறிக்கிறது.
77) பசுக்களின் உரிமையாளர் எவ்வாறு அழைக்கபட்டார்?
A) காவிஸ்தி
B) கோமத்
C) ஷேத்ரா
D) க்ருஷி
விளக்கம்: பசுக்களின் உரிமையாளர் “கோமத்” எனப்பட்டார். (சமஸ்கிருதத்தில் கோ-பசு, மத்-வைத்திருப்பவர்) அடர்ந்த காடுகளைத் திருத்திய முன் வேதகால மக்கள் அவற்றை வேளாண் நிலங்களாக மாற்றினர். கால்நடைகளுக்குத் தேவையான நிலங்களாக மாற்றினர். கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்களின் மூலப்பொருட்களையும், கோதுமை, பார்லி போன்ற தானியங்களையும் பருத்தி எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றையும் அவர்கள் பயிரிட்டனர்.
78) வேளாண்மை செய்யக்கூடிய நிலம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
A) காவிஸ்தி
B) கோமத்
C) ஷேத்ரா
D) க்ருஷி
விளக்கம்: வேளாண்மை செய்யக்கூடிய, நிலம் ‘ஷேத்ரா’ எனறழைக்கப்பட்டது. கிருஷி என்ற சொல் உழவு என்பதை குறிக்கிறது.
79) “விவசாயி” எவ்வாறு அழைக்கப்பட்டார்?
A) சார்கனி
B) பாணி
C) பகவான்
D) அயஸ்
விளக்கம்: விவசாயி “சார்கனி” எனப்பட்டார். விதைக்கப்பட்டதை அறுவடை செய்தல் பற்றியும் முன்வேதகால மக்கள் அறிந்துள்ளனர். எருதுகளை நுகத்தடியில் இணைத்து நிலத்தை நன்கு, உழுது வேளாண்மை செய்தனர். நீர்ப்பாசனத்திற்குரிய நீர், கிணறு, கால்வாய்கள், ஏரிகள் மூலம் பெறப்பட்து. மக்கள் பொரும்பாலும் மழையையே நம்பியிருந்தனர்.
80) செம்பை குறிக்கும் சொல் எது?
A) கார்கனி
B) பாணி
C) பகவான்
D) அயஸ்
விளக்கம்: ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் “அயஸ்” என்ற சொல் செம்பு போன்ற உலோகங்களைக் குறிப்பிடுகிறது.
81) உலோக வேலைப்பாட்டுத் தொழில்களைச் செய்வோரைக் குறிக்கும் சொல் எது?
A) அயஸ்
B) பாணி
C) கர்மரா
D) பகவாண்ரா
விளக்கம்: ‘கர்மரா’ என்ற சொல் உலோக வேலைப்பாட்டுத் தொழில்களைச் செய்வோரைக் குறிப்பிடுகிறது. மாட்டுவண்டியில் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு சென்று வாணிகம் செய்யும் வணிகர்கள் “பாணி” எனப்பட்டனர். நெசவுத்தொழில், தச்சுத்தொழில், மட்பாண்ட உற்பத்தித் தொழில் போன்றவையும் முக்கியத்துவம் பெற்றன. வணிகத்தின் பெரும்பகுதி நிலவழியே நடைபெற்றது.
82) குஜராத்தில் எந்த இடத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் முன்வேத காலத்தைச் சேர்ந்த மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன?
A) அகமதாபாத்
B) காந்தி நகர்
C) பகவான் புரா
D) லோத்தல்
விளக்கம்: குஜராத் அருகில் ‘பகவான்புரா’ என்ற இடத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் முன்வேத காலத்தைச் சேர்ந்த மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம் மட்பாண்டங்களை உற்பத்தி செய்வதில் முன் வேதகால மக்கள் தேர்ச்சிபெற்றிருந்தனர் என்று அறிய முடிகிறது.
83) முன் வேதகாலத்தில் எத்தனை வகையாக கடவுள்களை வகைப்படுத்தினர்?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: முன் வேதகாலத்தில் மக்கள் இயற்கையை மையப்படுத்திச் சமய நம்பிக்கையைக் கொண்டிருந்தனர். அதன்படி இக்காலத்தில் 3 வகையாகக் கடவுள்களை வகைப்படுத்தினர். அவை,
1. விண்ணுலகத் தெய்வங்கள்
2. வாயுமண்டலத் தெய்வங்கள்
3. மண்ணுலகத் தெய்வங்கள்
84) பொருத்துக.
1. இந்திரன், வாயு, மாருதி, பர்ஜனியன் – 1. மண்ணுலக கடவுள்
2. வருணன், அஸ்வினி, சூரியன், சாவித்ரி, மித்ரன், பூஷன் – 2. அண்டவெளிக் கடவுள்
3. பிருத்வி, சோமன், அக்னி – 3. வாயுவெளிக் கடவுள்
A) 3, 2, 1
B) 2, 1, 3
C) 2, 3, 1
D) 1, 3, 2
விளக்கம்: இந்திரன், வாயு, மாருதி, பர்ஜனியன் – அண்டவெளிக் கடவுள்
வருணன், அஸ்வினி, சூரியன், சாவித்ரி, மித்ரன், பூஷன் – வாயுவெளிக் கடவுள்
பிருத்வி, சோமன், அக்னி – மண்ணுலகக் கடவுள்
85) இந்திரரைப் பற்றி ரிக் வேதத்தில் எத்தனை பாடல்களை உள்ளன?
A) 250
B) 200
C) 300
D) 150
விளக்கம்: ரிக் வேதத்தில் இந்திரனைப் பற்றி சுமார் 250 பாடல்கள் உள்ளன.
86) ரிக் வேதத்தில் ‘அக்னி’ பற்றி எத்தனை பாடல்கள் உள்ளன?
A) 250
B) 200
C) 300
D) 150
விளக்கம்: இந்திரனுக்கு அடுத்த நிலையில் ‘அக்னி’ முன்வேத கால மக்களால் வழிபடபட்டார். ரிக் வேதத்தில் அக்னி பற்றி 200 பாடல்கள் உள்ளன.
87) தேவர்களையும் மக்களையும் இணைக்கும் இணைப்புப்பாலமாக வழிபடப்பட்ட கடவுள் யார்?
A) அதிதி
B) இந்திரன்
C) அக்னி
D) வருணன்
விளக்கம்: தேவர்களையும் மக்களையும் இணைக்கும் இணைப்புப் பாலமாக அக்னியை வழிபட்டனர். இந்திரனுக்கும், அக்னிக்கும் அடுத்த நிலையில் வருணன் முன் வேத கால மக்களால் வழிபடப்பட்டார்.
88) விடியலின் கடவுளாக கருதப்பட்டவர் யார்?
A) அதிதி
B) உஷப்
C) மாருதி
D) A மற்றும் B
விளக்கம்: அதிதி, உஷப் (விடியலின் கடவுள்) போன்ற பெண் கடவுளர்களும் முன்வேத மக்கள் வழிபட்டனர் என்று ரிக் வேதம் கூறுகிறது.
89) ‘ருத்ரன்’ என்பது யாரைக் குறிக்கும்?
A) பிரம்மன்
B) திருமால்
C) சிவபெருமான்
D) முருகன்
விளக்கம்: ‘ருத்ரன்’ என்பது சிவபெருமானைக் குறிக்கும். சிவபெருமான் பற்றிய சில குறிப்புகள் வேத இலக்கியங்களில் காணப்படுகின்றன.
90) முன்வேத காலத்தில் வலிமையின் கடவுளாக வழிபடப்பட்டவர் யார்?
A) ருத்ரன்
B) மாந்தி
C) இந்திரன்
D) மாருதி
விளக்கம்: ‘மாருதி’ வலிமையின் கடவுளாக வழிபடப்பட்டார். முன்வேத கால மக்கள் நடத்தும் வேள்விகளில் இந்திரனுக்கும் அக்னிக்கும் அதிக முக்கியத்துவம் தரப்பட்டது.
91) கூற்றுகளை ஆராய்க.
1. பால், நெய், தானியங்கள், இறைச்சி, சோமபானம் போன்றவைகளை முன் வேதகால மக்கள் இறைவனுக்கு வைத்துப் பூஜை செய்தனர்.
2. கிராம தெய்வ வழிபாடும் முன்வேதகால மக்களால் பின்பற்றப்பட்டது
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. பால், நெய், தானியங்கள், இறைச்சி, சோமபானம் போன்றவற்றை முன் வேதகால மக்கள் இறைவனுக்கு வைத்துப் பூஜை செய்தனர்.
2. கிராம தெய்வ வழிபாடும் முன்வேதகால மக்களால் பின்பற்றப்பட்டது
92) நம்பிக்கைப் பண்பு மற்றும் கோபப்பண்பிற்கு கடவுளராக வழிபடப்பட்டவர் யார்?
A) மன்யூ, சாரதா
B) மன்யூ, மாருதி
C) சாரதா, மாருதி
D) சாரதா, மன்யூ
விளக்கம்: நம்பிக்கைப் பண்பிற்கு ‘சாரதா’கோபப்பண்பிற்கு ‘மன்யூ’ ஆகியோர் கடவுளராக வழிபடப்பட்டனர்.
93) கூற்றுகளை ஆராய்க.
1. இந்திரனை குதிரையாக உருவகப்படுத்தினர் முன்வேதகால மக்கள்
2.சூரியனை காளையாக உருவகப்படுத்தினர் முன்வேதகால மக்கள்
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: முன்வேதகால மக்கள், இந்திரனைக் காளையாகவும், சூரியனைக் குதிரையாகவும் உருவகப்படுத்தும் வழிபாட்டு முறையைப் பின்பற்றினர்.
94) “இரட்டையர் துதிப்பாடல்கள்” எந்த வேதத்தில் கூறப்பட்டுள்ளது?
A) ரிக்
B) யஜுர்
C) சாம
D) அதர்வண
விளக்கம்: ரிக்வேதத்தில் கூறப்பட்ட இரட்டையர் துதிப்பாடல்கள் தயா, பிருத்வி, வித்ரா, வருணன், அஸ்வினி தேவதைகள் ஆகிய கடவுளர்கள் பற்றிக் கூறுகின்றன.
95) ரிக்வேதக்கால காயத்ரி மந்திரம் எந்த கடவுளுக்குரியது?
A) இந்திரன்
B) சூரியன்
C) பசுபதி
D) அம்மன்
விளக்கம்: சூரியனை மனமுருகி வழிபடும் துதிப்பாடலான காயத்ரி மந்திரம் ரிக்வேதகாலத்தில் முக்கியத்துவம் பெற்றது.
96) தவறானதைத் தேர்வு செய்க.
A) ரிக்வேதத்தைத் தொடர்ந்து, சாம, யஜுர், அதர்வண வேதங்களும் இலக்கியச் செறிவுமிக்க பிராமணங்கள், ஆரண்யங்கள், உபநிடதங்கள் தோன்றிப் பண்பாட்டை உயர்வடையச் செய்த காலமே பின்வேதகாலம் .
B) ஆரியர்கள் காலத்தில் எழுத்துமுறை இல்லாமையால் மனப்பாடமாகவே இலக்கியங்களைப் பயின்றனர்.
C) நினைவாற்றல் வழியாக வரும் அறிவுக் கருவூலமாக வந்தவை சூத்திரங்கள்
D) சூத்திரங்கள் வேதங்களின் ஒரு பகுதியாகும்.
விளக்கம்: சூத்திரங்கள் வேதங்களின் ஒரு பகுதி அல்ல. அவை வேதங்களோடு நெருங்கிய உறவுடையவை.
97) சூத்திரங்கள் எத்தனை வகைப்படும்?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: சூத்திரங்கள் 3 வகைப்படும்.
1. தரும சூத்திரம்
2. ச்ரௌத்த சூத்திரம்
3. கிருஹ்ய சூத்திரம்
98) ஆரியர்களின் நம்பிக்கைகளைக் குறிக்கும் சூத்திரம் எது?
A) தரும சூத்திரம்
B) ச்ரௌத்த சூத்திரம்
C) கிருஹ்ய சூத்திரம்
D) கல்பம்
விளக்கம்: தரும சூத்திரம் – ஆரியர்களின் நம்பிக்கைகளை குறிப்பிட்டுள்ளது.
99) எந்த சூத்திரம் யாகங்கள் மற்றும் சடங்குகள் செய்யும் முறைகளைக் குறிக்கிறது?
A) தரும சூத்திரம்
B) ச்ரௌத்த சூத்திரம்
C) கிருஹ்ய சூத்திரம்
D) கல்பம்
விளக்கம்: ச்ரௌத்த சூத்திரம் – யாகங்கள் மற்றும் சடங்குகள் செய்யும் முறைகளைக் குறிக்கிறது.
100) ஆரியர்களின் வாழ்க்கை முறையைக் குறிக்கும் சூத்திரம் எது?
A) தரும சூத்திரம்
B) ச்ரௌத்த சூத்திரம்
C) கிருஹ்ய சூத்திரம்
D) கல்பம்
விளக்கம்: கிருஹ்ய சூத்திரம் – ஆரியர்களின் வாழ்க்கை முறையைக் குறிப்பிடுகின்றது.
101) வேத அங்கங்களான இலக்கியங்கள் எத்தனை?
A) 3
B) 4
C) 5
D) 6
விளக்கம்: பின் வேத காலத்தில் வேத அங்கங்களான இலக்கியங்கள் ஆறும் தோன்றி வளர்ச்சியடைந்தன. அவை,
1. சிட்சை
2. கல்பம்
3. வியாகரணம்
4. நிருக்தம்
5. ஜோதிடம்
6. சந்தம்
102) பொருத்துக.
அ. சிட்டை – 1. இலக்கணம்
ஆ. கல்பம் – 2. சடங்கியல், சமய ஒழுக்கம்
இ. வியாகரணம் – 3. ஒலியியல்
A) 3, 2, 1
B) 2, 3, 1
C) 3, 1, 2
D) 2, 1, 3
விளக்கம்: சிட்டை – ஒலியியல்
கல்பம் – சடங்கியல். சமயஒழுக்கம்
வியாகரணம் – இலக்கணம்
103) பொருத்துக.
அ. நிருக்தம் – 1. சீர்
ஆ. ஜோதிடம் – 2. சொல்லாக்க விளக்கம்
இ. சந்தம் – 3. வானநூல்
A) 3, 2, 1
B) 3, 1, 2
C) 2, 3, 1
D) 2, 1, 3
விளக்கம்: நிருக்தம் – சொல்லாக்க விளக்கம்
ஜோதிடம் – வானநூல்
சந்தம் – சீர்
104) “ஸ்மிருதிகள்” எனப்படுபவை எவை?
A) உயர்ந்த உள்ளங்களின் சிந்தனைத் தொகுப்புகள்
B) சூத்திரங்கள் தரும சாஸ்திரங்கள்
C) இதிகாசங்கள்
D) அனைத்தும்
விளக்கம்: உயர்ந்த உள்ளங்களின் சிந்தனைத் தொகுப்புகள், சூத்திரங்கள், தரும சாஸதிரங்கள், இதிகாசங்கள், புராணங்கள் என்பன ஸ்மிருதிகளாகும். இவை எழுதப் பெற்றவை. இதில் தரும சாஸ்திரம் என்பது சட்டம், சமுதாய நடைமுறைகளை விவரிக்கின்றன. பல்வேறு சாதிக் கடமைகளையும், பல்வேறு நிறுவனங்களையும் (அமைப்புகளை) விளக்குகின்றன. நடைமுறை வாழ்வில் குற்றம் குற்றங்களுக்குரிய தண்டனை முறை, குழந்தைத் தத்தெடுப்பு மரபுரிமையாகச் சொத்தைப் பெறும் சட்ட உரிமைகள் போன்றவை இவற்றுள் விவரிக்கப்பட்டுள்ளன.
105) பின்வேத காலத்தில் இந்திய நிலப்பரப்பு, எத்தனை பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது?
A) 2
B) 3
C) 4
D) 6
விளக்கம்: ஆரியவர்த்தம், மத்ய தேசம், தட்சிணபதம் என இந்திய நிலப்பரப்பு 3 பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.
106) பொருத்துக.
அ. ஆரிய வர்த்தம் – 1. மத்ய இந்தியா
ஆ. மத்ய தேசம் – 2. தென்னிந்தியா
இ. தட்சிணபதம் – 3. கங்கை சமவெளி மற்றும் வடஇந்தியா
A) 3, 1, 2
B) 2, 1, 3
C) 3, 2, 1
D) 2, 3, 1
விளக்கம்: ஆரிய வர்த்தம் – கங்கைச் சமவெளி மற்றும் வட இந்தியா
மத்ய தேசம் – மத்ய இந்தியா
தட்சிணபதம் – தென்னிந்தியா
107) ஆரியவர்த்தம், மத்ய தேசம், தட்சிணபதம் ஆகிய மூன்று பகுதிகளிலுள்ள அரசுகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
A) மகாஜனபதம்
B) ஜனா
C) ஜனபதா
D) B மற்றும் C
விளக்கம்: இம்மூன்று பகுதிகளிலுள்ள அரசுகள் ஜனா, ஜனபதா போன்ற பெயர்களில் அழைக்கப்பட்டன. அரசர்கள் மிகுந்த அதிகாரங்களைப் பெற்றிருந்தனர். பின்னர் ஏற்பட்ட பரந்து விரிந்த அரசுகளின் உருவாக்கம், தலைவன் அல்லது அரசனின் பெருஞ்செல்வாக்கையும் அதிகாரத்தையும் அதிகப்படுத்தி அவனை வல்லாட்சியாளனாக வெளிப்படுத்தியது. அரசர்களும் இனக்குழுக்கள் மற்றும் சிற்றரசர்கள் மீது தங்களின் அதிகாரத்தைச் செலுத்தினர்.
108) பிரதேசத்தைக் குறிக்கும் ‘இராஷ்டிரம்’ என்ற பகுதியைப் பின் வேதகாலத்தில் மிகச் சிறந்த மன்னர்களான யார் யார் ஆட்சி செய்தனர்?
A) பரிஷத், ஜனமேஜயன்
B) பரிஷத், பிரவாஹனன்
C) பிரவாஹனன், ஜெய்வலி
D) ஜெய்வலி, ஜனமேஜயன்
விளக்கம்: அரசன் ஆட்சி செய்த ஒவ்வொரு பகுதியின் பெரும் இனக்குழுவின் பெயரும் நாளடைவில் அது அவர்கள் ஆட்சி செய்த பகுதியின் பெயராக மாற்றப்பட்டது. பிரதேசத்தைக் குறிக்கும் ‘இராஷ்டிரம்’ என்ற பகுதியைப் பின் வேத காலத்தில் மிகச் சிறந்த மன்னர்களான பரிஷத், ஜனமேஜயன் போன்றோர் ஆட்சி செய்தனர். பாசோலப் பகுதியை ஆட்சி செய்த பிரவாஹன ஜெய்வலி, பின் வேதகாலத்தின் தலைசிறந்த மன்னராகத் திகழ்ந்தார்.
109) கூற்றுகளை ஆராய்க.
1. முன் வேதகாலத்தில் செல்வாக்கு பெற்றிருந்த விதாதா, சபா, சமிதி ஆகிய சபைகள் பின் வேதகாலத்தில் செல்வாக்கிழந்தன.
2. அதே நேரத்தில் அமைச்சரவை ஏற்படுத்தப்பட்டது. அதில் புரோகிதர், சம்ஹரஹத்ரி, பகதூகன், சுதன், ஷக்த்ரி, கிராமணி, சேனானி, சடபதி, சட்சிவன் போன்றோர் முக்கியத்துவம் பெற்றிருந்தனர்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. முன் வேதகாலத்தில் செல்வாக்கு பெற்றிருந்த விதாதா, சபா, சமிதி ஆகிய சபைகள் பின் வேதகாலத்தில் செல்வாக்கிழந்தன.
2. அதே நேரத்தில் அமைச்சரவை ஏற்படுத்தப்பட்டது. அதில் புரோகிதர், சம்ஹரஹத்ரி, பகதூகன், சுதன், ஷக்த்ரி, கிராமணி, சேனானி, சடபதி, சட்சிவன் போன்றோர் முக்கியத்துவம் பெற்றிருந்தனர்.
110) பொருத்துக.
அ. புரோகிதர் – 1. கருவூல அதிகாரி
ஆ. சம்ஹரஹத்ரி – 2. வரி வசூலிப்பவர்
இ. பகதூகன் – 3. தேரோட்டி
ஈ. சுதன் – 4. அரசகுரு
A) 4, 3, 2, 1
B) 1, 3, 4, 2
C) 2, 4, 1, 3
D) 4, 1, 2, 3
விளக்கம்: புரோகிரதர் – அரசகுரு
சம்ஹரஹத்ரி – கருவூல அதிகாரி
பகதூகன் – வரிவசூலிப்பவர்
சுதன் – தேரோட்டி
111) பொருத்துக.
அ. ஷக்த்ரி – 1. படைத்தளபதி
ஆ. கிராமணி – 2. கிராமத்தின் தலைவன்
இ. சேனானி – 3. 100 கிராமத்தை ஆள்பவர்
ஈ. சடபதி – 4. அமைச்சர்
உ. சட்சிவன – 5. அரண்மனைக் காவல் அதிகாரி
A) 5, 2, 1, 3, 4
B) 5, 2, 1, 4, 3
C) 5, 2, 4, 1, 3
D) 5, 4, 1, 3, 2
விளக்கம்: ஷக்த்ரி – அரண்மனைக் காவல் அதிகாரி
கிராமணி – கிராமத்தின் தலைவன்
சேனானி – படைத்தளபதி
சடபதி – 100 கிராமங்களை ஆள்பவர்
சட்சிவன் – அமைச்சர்
112) மக்களின் வருமானத்தில் அரசால் ஆறில் ஒரு பங்கு வரி வசூல் செய்யப்பட்டதாக கூறும் வேதம் எது?
A) ரிக்
B) யஜுர்
C) சாம
D) அதர்வண
விளக்கம்: மக்களின் வருமானத்தில் அரசால் ஆறில் ஒரு பங்கு வரி வசூல் செய்யப்பட்டதாக அதர்வண வேதம் கூறுகிறது.
113) பின் வேத காலத்தில் அரசனால் மேற்கொள்ளப்பட்ட முக்கிய யாகம் எது?
A) இராஜசூய யாகம்
B) அசுவமேத யாகம்
C) வாஜபேய யாகம்
D) அனைத்தும்
விளக்கம்: அரசன் தன் அதிகாரத்தையும் செல்வாக்கையும் நிலைநாட்ட யாகங்களை மேற்கொண்டார். அவற்றில் இராஜசூய யாகம், அசுவமேத யாகம், வாஜபேய யாகம் போன்றவை முக்கியமானவை. அமைச்சரவை மட்டுமின்றி அரசனுக்கு நிர்வாகத்தில் உதவ அமைச்சர்கள் இருந்தனர். அரசனின் கிராம முறைகளை கிராம சபைகளே மேற்க்கொண்டன. இந்த சபைகள் உள்ளுர் வழக்குகளை விசாரித்து தீர்ப்புக் கூறின.
114) பின் வேதகாலத்தில் அரசன் தன் செல்வாக்கைத் தொடர்ந்து நிலைநாட்ட ஆண்டின் முக்கிய நாட்களில் செய்த யாகம் எது?
A) இராஜசூய யாகம்
B) அசுவமேத யாகம்
C) வாஜபேய யாகம்
D) அனைத்தும்
விளக்கம்: அரசன் தன் செல்வாக்கைத் தொடர்ந்து நிலைநாட்ட ஆண்டின் முக்கிய நாட்களான அவரது பிறந்தநாள், திருமணநாள், போரில் வெற்றிபெற்ற நாட்களில் செய்த யாகமே இராஜசூய யாகமாகும்.
115) ‘அசுவம்’ என்ற வடமொழிச் சொல்லின் பொருள் என்ன?
A) யானை
B) கழுதை
C) குதிரை
D) பசு
விளக்கம்: ‘அசுவம்’ என்ற வடமொழிச் சொல்லின் பொருள் குதிரை.
116) ‘சதம்’ என்ற என்பது எத்தனை?
A) 50
B) 100
C) 90
D) 130
விளக்கம்: சதம் – நூறு. மனித நிறை வாழ்வு என்பது 100 ஆண்டுகளைக் குறிக்கும். இந்நூற்றாண்டுக்கால வாழ்வு 4 பகுதிகளாக அல்லது நிலைகளாகப் பிரிக்கப்படுகிறது. இதனை ‘ஆசிரம்’ என்று குறிப்பிட்டனர். அவை,
1. பிரம்மச்சரியம்
2. கிருகஸ்தம்
3. வனப்பிரஸ்தம்
4. சன்னியாசம்.
117) வாஜ்பேயம் என்பது என்ன?
A) தேர்ப்பந்தயம்
B) குதிரைப்பந்தயம்
C) யானைப்பந்தயம்
D) அனைத்தும்
விளக்கம்: வாஜ்பேயம் என்பது தேர்ப்பந்தயத்தைக் குறிக்கும். இந்த தேர்ப்பந்தயத்தில் அசரன் செலுத்தும் தேரே வெற்றிபெறும்.
118) வாஜபேய யாகம் பற்றி குறிப்பிடும் நூல் எது?
A) சப்த பிராமணம்
B) சதபத பிராமணம்
C) நவ பிராமணம்
D) எதுவுமில்லை
விளக்கம்: வாஜபேய யாகம் பற்றி “சதபத பிராமணம்” என்ற நூல் விளக்குகிறது.
119) பின் வேதகாலத்தில் வர்ணாஸ்ரம முறைப்படி மக்கள் எத்தனை சமூகங்கங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தனர்?
A) 3
B) 4
C) 6
D) 8
விளக்கம்: பின் வேதகாலச் சமூகம், வர்ணாஸ்ரம முறைச் சமூகமாகக் காணப்பட்டது. அம்முறைப்படி மக்களிடையே,
1. பிராமணர்
2. சத்ரியர்
3. வைசியர்
4. சூத்திரர் ஆகிய சமூகப்பிரிவினர் இருந்தனர்.
120) கல்வி கற்பது, சமயச் சடங்குகள் செய்வது, உலக நன்மைக்கு இறைவனை தியானிப்பது ஆகியவை யாருடைய வாழ்வியல் ஒழுக்கமாகும்?
A) சத்திரியர்கள்
B) வைசியர்கள்
C) சூத்திரர்கள்
D) பிராமணர்கள்
விளக்கம்: கல்வி கற்பது, சமயச் சடங்குகள் செய்வது, வெகுமதிகளைப் பெறுவது, சமுதாயத்திற்கு நல்வழி, உலக நன்மைக்காக இறைவனை தியானிப்பது இவர்களது வாழ்வியல் ஒழுக்கமாகும்.
121) ஆளுந்தன்மை உடையவராகத் திகழந்தவர் யார்?
A) சத்திரியர்கள்
B) வைசியர்கள்
C) சூத்திரர்கள்
D) பிராமணர்கள்
விளக்கம்: சத்திரியர்கள்: நாட்டை ஆள்வதும், நாட்டைக் காப்பதும் இவர்களுக்குரிய கடமைகளாகும். இவர்கள் வீரம் பொருந்தியராகவும் ஆளுந்தன்மை உடையவராகவும் திகழ்ந்தனர். தன்னலம் கருதாமல் பிறரைக் காக்கும் கடமை உணர்வு மிக்கவர்களாக திகழ்ந்தனர்.
122) நேர்மையாக வாணிகம் செய்து அறவழியில் பொருளீட்டுவதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர்கள் யார்?
A) சத்திரியர்கள்
B) வைசியர்கள்
C) சூத்திரர்கள்
D) பிராமணர்கள்
விளக்கம்: வாணிகத்திலும், பொருளாதார நடவடிக்கைகளிலும் ஈடுபாடு உடையவர்கள் வைசியர்கள், நேர்மையாக வாணிகம் செய்து அறவழியில் பொருளீட்டுவதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தனர்.
123) தமக்கு இடப்பட்ட பணியை நிறைவேற்றி முடித்தவர்கள் யார்?
A) சத்திரியர்கள்
B) வைசியர்கள்
C) சூத்திரர்கள்
D) பிராமணர்கள்
விளக்கம்: பிராமணர், சத்ரியர் மற்றும் வைசியர்களுக்கு வேண்டிய பணிகளைச் செய்வது சூத்திரர்களின் பணிகளாகும். தமக்கு இடப்பட்ட பணியை நிறைவேற்றி முடித்தனர்.
124) மனிதனின் நிறை வாழ்வு என்பது எத்தனை ஆண்டுகளாக பின்வேதகாலத்தில் கருதப்பட்டது?
A) 150
B) 125
C) 100
D) 75
விளக்கம்: மனிதனின் நிறை வாழ்வு என்பது 100 ஆண்டுகளாகக் கருதப்பட்டது. அதனாலேயே பெரியோர்கள் அசீர்வாதிக்கும்போது, சமஸ்கிருதத்தில் “ஸதமனம் பவது” (நூற்றாண்டு வாழ்வாயாக) என்று வாழ்த்துகின்றனர்.
125) அரசனின் பட்டத்துக் குதிரை எங்கெல்லாம் தங்கு தடையின்றி ஓடுகிறதோ அப்பகுதிகள் அனைத்தும் அரசனது ஆட்சிக்குட்பட்ட பகுதியாக கருதப்பட்டது. இவ்வெற்றியை யாகம் வளர்த்துக் கொண்டாடுவது_______ஆகும்?
A) இராஜசூய யாகம்
B) அசுவமேத யாகம்
C) வாஜபேய யாகம்
D) அனைத்தும்
விளக்கம்: அரசனின் பட்டத்துக் குதிரை எங்கெல்லாம் தங்கு தடையின்றி ஓடுகிறதோ அப்பகுதிகள் அனைத்தும் அரசனது ஆட்சிக்குட்பட்ட பகுதியாக கருதப்பட்டது. இவ்வெற்றியை யாகம் வளர்த்துக் கொண்டாடுவது அசுவமேதயாகமாகும்.
126) தன்னடக்க நிலை என்பது எது?
A) பிம்மச்சரியம்
B) கிருகஸ்தம்
C) வனப்பிரஸ்தம்
D) சன்னியாசம்
விளக்கம்: தன்னடக்க நிலை அல்லது மாணவப் பருவம் ஆசிரியர்களுக்குக் கட்டுப்பட்டு அவர்களுக்குப் பணிவிடைகளைச் செய்து, பயின்று, சமயச் சடங்குகளைச் செய்து, நன்னடத்தை உடையவராய் திகழும் மாணவப் பருவமே பிரம்மச்சரியமாகும்.
127) எந்த வயதிற்கு இடைப்பட்ட காலம் “கிருகஸ்தம்” எனப்படுகிறது?
A) 0-25
B) 25-50
C) 50-75
D) 75-100
விளக்கம்: இல்லற வாழ்வில் ஈடுபட்டு அறம் பிறழாமல் தான தர்மங்களைச் செய்து வாழ்தல், மக்களைப் பெற்றெடுத்துக் கல்வி புகட்டி நன்னிலை அடையச் செய்தல், அவர்களுக்கு மணம் செய்வித்து நல்வாழ்வு வாழச் செய்வதுமான காலம் 25-க்கு மேற்பட்டு 50 வயதிற்கு உட்பட்ட காலமே “கிருகஸ்தம்” ஆகும்.
128) துறவற வாழ்க்கைக்கு ஆயத்தப்படுத்துதல் நிலை எது?
A) பிம்மச்சரியம்
B) கிருகஸ்தம்
C) வனப்பிரஸ்தம்
D) சன்னியாசம்
விளக்கம்: இல்லற வாழ்வில் கடமைகளை முறையாகச் செய்து முடித்தப்பின் காட்டிற்குச் சென்று தவ வாழ்வினை மேற்கொள்ளுதல் “வனப்பிரஸ்தம்” ஆகும். பொருளாசையை முற்றும் துறத்தலும், பாச பந்தங்களிலிருந்து படிப்படியாக விடுபடுதலும், முக்காலத்தில் ஆற்ற வேண்டிய கடமைகளாகும். சுருங்கக் கூறின் இந்நிலை துறவற வாழ்க்கைக்கு ஆயத்தப்படுத்துதல் ஆகும். 50 வயதுக்கு மேல், 75 வயதுக்கு உட்பட்ட காலமாகும்.
129) “முற்றும் துறந்த நிலை” எது?
A) பிம்மச்சரியம்
B) கிருகஸ்தம்
C) வனப்பிரஸ்தம்
D) சன்னியாசம்
விளக்கம்: பந்த பாசங்களினின்று விடுபட்டுத் தன்னை வருத்தித் துறவு மேற்கொள்ளுதல் ஆகும். இக்காலத்தில் இடம்விட்டு இடம்சென்று, இல்லற வாழ்க்கையைத் துறந்து, கடவுளைத் தியானிப்பதும், தான் அறிந்த உண்மைகளையும் நீதிகளையும் மக்களுக்கு உபதேசிப்பதும் ஆகும். சமய வாழ்வில் மக்களை ஈடுபடச் செய்தல், ‘முற்றும் துறந்த நிலையே’ சந்நியாசமாகும். இது 75 வயதுக்கு மேற்பட்ட காலமாகும்.
130) தவறானக் கூற்றைத் தேர்வு செய்க.
A) பின் வேத காலத்தில் குழந்தைத் திருமணம், பலதாரத் திருமணமுறை குறைவு.
B) பின் வேத காலத்தில் சாதியக் கட்டுபாடுகள் அதிகரிப்பு. கலப்புத் திருமணங்களும் அதிகரித்தன.
C) முன்வேத காலத்தை விட மிக அதிகமாகச் சமூகத்திலும் குடும்பத்திலும் ஆணாதிக்கம் அதிகரித்தது.
D) எண்வகைத் திருமணமுறை வழக்கிலிருந்தாலும் “பிராஜாபத்யம்” என்ற நிச்சயிக்கப்பட்ட திருமண முறையே சமூகத்தால் மதிக்கப்பட்டது.
விளக்கம்: பின் வேத காலத்தில் குழந்தைத் திருமணம், பலதாரத் திருமணமுறை அதிகரிப்பு.
131) பின்வேதகாலத்தில் எத்தனை வகை திருமண முறைகள் வழக்கிலிருந்தன?
A) 6
B) 8
C) 9
D) 12
விளக்கம்: பின்வேதகாலத்தில் எண்வகை திருமண முறைகள் வழக்கிலிருந்தன. அவை,
1. பிரம்மம்
2. பிரஜாபத்யம்
3. தெய்வம்
4. அர்ஷம்
5. காந்தர்வம்
6. அசுரம்
7. பைசாசம்
8. இராட்சசம்
132) முன் வேதகாலத்தை ஒப்பிடும்போது பின் வேதகாலத்தில் பெண்கள் நிலையில் தவறானதைத் தேர்வு செய்க.
A) பெண்களுக்குக் கல்வி கற்கும் உரிமை சொத்துரிமை வீட்டிற்கு வெளியே நடைபெறும் பொது விழாக்களில் பங்கேற்கும் உரிமை, கணவனைத் தானே தேர்ந்தெடுக்கும் உரிமை ஆகியவை மறுக்கப்பட்டன.
B) பெண்களின் கற்புநெறி போற்றப்பட்டது.
C) அரச குடும்பத்தினருக்கும் உயர்குடிப் பெண்களுக்கும் அனைத்து உரிமைகளும் கிடைத்தன.
D) அபலா, கோசா, விஸ்வவாரா, லோபமுத்ரா போன்ற பெண்கள் பின்வேத காலத்தில் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினர்.
விளக்கம்: அபலா, கோசா, விஸ்வவாரா, லோபமுத்ரா போன்ற பெண்கள் முன்வேதக் காலத்தில் கல்வியில் சிறந்த பெண்களாவர். கார்கி, மைத்ரேயி போன்ற பெண்கள் பின் வேதகாலத்தில் கல்வியில் சிறந்த பெண்களாவர்.
133) ‘விரிஹி’ என்ற சொல் எதைக் குறிக்கும்?
A) நெல்
B) கோதுமை
C) பார்லி
D) கொள்ளு
விளக்கம்: பின் வேதகாலத்தில் வேளாண்மை முக்கியத் தொழிலாகும். அடர்ந்த காடுகள் அழிக்கப்பட்டு, அவை விளைநிலங்களாக ஆக்கப்பட்டன. இவ்விளைநிலங்களில் நெல், கோதுமை, பார்லி போன்றவை பயிரிடப்பட்டன.
134) ‘யவா’ என்பது எதைக் குறிக்கும்?
A) நெல்
B) கோதுமை
C) பார்லி
D) கொள்ளு
விளக்கம்: பார்லி ‘யவா’ என்ற சொல்லாலும் குறிப்பிடப்பட்டது. இயற்கை உரமாகும் முறை, பெருங்கலப்பையைக் கொண்டு உழவு செய்யும் முறை போன்றவை பின்வேதகாலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.
135) பின் வேதகாலத்தில் இருந்தே பெருங்கலப்பைகளில் அதிகபட்சமாக எத்தனை எருதுகளைப் பூட்டி உழவை மேற்கொள்ளும் வசதி இருந்தது?
A) 6
B) 8
C) 12
D) 24
விளக்கம்: பெருங்கலப்பைகளில் 6, 8, 12, 24 எருதுகளைப் பூட்டி உழவை மேற்கொள்ளும் வசதி இருந்தது என பின் வேதகால மக்கள் உழவு செய்யும் முறையினைப் பற்றி “சதபத பிராமணம்” என்ற நூல் கூறுகிறது.
136) பின் வேதகால மக்கள் நெல் பயிரிட்டத்தற்கான ஆதாரங்கள் எங்கு கிடைத்தன?
A) அயோத்தியா
B)ஆதிச்சநல்லூர்
C) கீழடி
D) அஸ்தினாபுரம்
விளக்கம்: ஆண்டுக்கு இரு போகச் சாகுபடி செய்யும் முறையை பின் வேதகால மக்கள் பின்பற்றினர். பின் வேதகால மக்கள் நெல் பயிரிட்டதற்கான ஆதாரங்கள் அஸ்தினாபுரத்தில் கிடைத்துள்ளன.
137) பின் வேதகால மக்களின் சடங்குகளில் முக்கியத்துவம் பெற்ற பொருள் எது?
A) அரிசி
B) மஞ்சள்
C) சந்தனம்
D) அனைத்தும்
விளக்கம்: பின் வேதகால மக்களின் சமயச்சடங்குகளில் ‘அரிசி’ முக்கியத்துவம் பெற்றது.
138) வேளாண்மைக்கு அடுத்த நிலையில்________தொழில், பின் வேதகாலத்தில் முக்கியத்துவம் பெற்றது?
A) மண்பாண்டத்தொழில்
B) நெசவுத்தொழில்
C) கால்நடை வளர்ப்பு
D) மீன்பிடித்தொழில்
விளக்கம்: வேளாண்மைக்கு அடுத்த நிலையில் நெசவுத்தொழில் முக்கியத்துவம் பெற்றது. பருத்தி, கம்பளி ஆகியவற்றால் ஆடைகள் தயாரிக்கப்பட்டன. வேளாண்மை, நெசவுத்தொழிலைத் தொடர்ந்து மண்பாண்ட உற்பத்தியும் பின் வேதகாலத்தில் முக்கியத்துவம் பெற்றது.
139) ‘பருத்தி’ என்பதைக் குறிக்கும் சொல் எது?
A) வர்ணா
B) கர்பசா
C) அஷ்பசர்ணி
D) பிஸ்காஜ்
விளக்கம்: பருத்தி ‘கர்பசா’ என்ற சொல்லால் அழைக்கப்படுகிறது.
140) “வர்ணா” என்பது யாரைக் குறிக்கும்?
A) விவசாயி
B) நெசவாளர்
C) கால்நடை வளர்ப்போர்
D) மட்பாண்டம் செய்வோர்
விளக்கம்: ஆடைகளை நெய்யும் நெசவாளர்கள் “வர்ணா” என்றழைக்கப்பட்டனர்.
141) வேளாண்மையின் துணைத்தொழிலாகக் கருதப்பட்டது எது?
A) மீன் பிடித்தல்
B) ஏரிகளை தூறுவாருதல்
C) கால்நடை மேய்த்தல்
D) தோட்டப்பயிர் வளர்ப்பு
விளக்கம்: பின் வேதகாலத்தில் ஒருவரிடம் இருக்கும் கால்நடைகளை வைத்தே அவனது செல்வம் நிர்ணயிக்கப்பட்டது. கால்நடை மேய்த்தல் வேளாண்மையின் துணைத் தொழிலாகும்.
142) காதோரம் துளையிடப்பட்ட பசுக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
A) காப்சா
B) பிஸ்காஜ்
C) வப்தா
D) அஷ்டகர்ணி
விளக்கம்: ‘அஷ்டகர்ணி’ எனப்பட்ட காதோரம் துளையிடப்பட்ட பசுக்களுக்கு பின் வேத காலத்தில் அதிக மதிப்பிருந்தது.
143) யானைகள், அவற்றின் பயன்பாடுகள் பற்றி எந்த வேதம் குறிப்பிடுகிறது?
A) ரிக்
B) யஜுர்
C) சாம
D) அதர்வண
விளக்கம்: யானைகள், அவற்றின் பயன்பாடுகள் பற்றி அதர்வண வேதம் குறிப்பிடுகிறது.
144) ‘பிஸ்காஜ்’ எனப்பட்டவர்கள் யார்?
A) உலோக வேலை செய்வோர்
B) முடித்திருத்துவோர்
C) மருத்துவர்
D) கயிறு திரிப்போர்
விளக்கம்: பின் வேதகாலத்தில் வில், அம்பு செய்வோர், கயிறு திரிப்போர், தோலாடை செய்வோர், கல்லுடைப்போர், உலோக வேலை செய்வோர், சலவை செய்வோர், முடித்திருத்துவோர், மருத்துவர் போன்ற பல பிரிவினர் வாழ்ந்தனர். ‘பிஸ்காஜ்’ எனப்பட்டவர்கள் மருத்துவர்கள்.
145) ‘வாப்தா’ எனப்பட்டவர்கள் யார்?
A) உலோக வேலை செய்வோர்
B) முடித்திருத்துவோர்
C) மருத்துவர்
D) கயிறு திரிப்போர்
விளக்கம்: பின்வேதகாலத்தில் ‘பிஸ்காஜ்’ எனப்பட்ட மருத்துவர், ‘வப்தா’ எனப்பட்ட முடித்திருத்துவோர் முக்கியத்துவம் பெற்றனர்.
146) பின் வேதகாலத்தில் ‘கேத்ரி’ என்ற இடத்திலிருந்து, எவ்வகை உலோகத்தை மக்கள் பெற்றனர்
A) Cu
B) Ag
C) Au
D) Fe
விளக்கம்: பின் வேதக்காலத்தில் ‘கேத்ரி’ என்ற இடத்திலிருந்து தாமிரத்தை(Cu) வெட்டி எடுத்தனர்.
147) பின் வேதகாலத்தில் ‘கேத்ரி’ என்று அழைக்கப்பட்ட இடம் தற்போது எந்த மாநிலத்தில் உள்ளது?
A) குஜராத்
B) இராஜஸ்தான்
C) கோவா
D) ஒடிசா
விளக்கம்: ராஜஸ்தானில் ‘கோத்ரி’ என்ற இடத்திலிருந்த சுரங்கத்திலிருந்து பின்வேதகால மக்கள் தாமிரத்தை(ஊர) பெற்றனர். தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களின் பயனை அறிந்திருந்தனர்.
148) பின் வேதகாலத்தில் பண்டமாற்று முறையிலான வாணிபம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
A) பிரபனா
B) அஷ்டகர்னி
C) பிஸ்காஜ்
D) ஸ்ரஸ்தின்
விளக்கம்: பின் வேதகாலததில் பண்டமாற்று முறையிலான வாணிபம் நடைபெற்றது. இம்முறை ‘பிரபனா’ என்றும் அழைக்கப்பட்டது.
149) பின்வேதகாலத்தில் செல்வந்த வணிகர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
A) பிரபனா
B) அஷ்டகர்னி
C) பிஸ்காஜ்
D) ஸ்ரஸ்தின்
விளக்கம்: ஸ்ரஸ்தின் என்றழைக்கப்பட்ட செல்வந்த வணிகர்கள் பின் வேதகாலத்தில் வைசியராக இருந்தனர்.
150) பின் வேதகாலத்தில் ஸ்ரஸ்தின் எனப்பட்ட வைசியர்கள் ஏற்படுத்திய வாணிகச் சங்கம் எது?
A) கணங்கள், நிஷ்கா
B) சிரணிகள், சதமானா
C) கணங்கள், சிரணிகள்
D) நிஷ்கா, சதமானா
விளக்கம்: ஸ்ரஸ்தின்கள் கணங்கள், சிரணிகள் போன்ற வாணிகச் சங்கங்களை ஏற்படுத்திக் கொண்டனர்.
151) பின் வேதகாலத்தில், மக்கள் வரி மூலமே அரசு நடைபெற்றதாக கூறும் வேதம் எது?
A) ரிக்
B) யஜுர்
C) சாம
D) அதர்வண
விளக்கம்: மக்களின் வரி மூலமே அரசு நடைபெற்றதாக அதர்வண வேதம் கூறுகிறது.
152) வாசனை திரவியம், சக்கரை, தந்தம் போன்றவற்றை பின் வேதகால மக்கள் எந்த நாட்டிற்கு ஏற்றுமதி செய்தனர்?
A) அரேபியா
B) பாரசீக வளைகுடா
C) இந்தோனேசியா
D) அனைத்தும்
விளக்கம்: வாசனை திரவியங்கள், சக்கரை, தந்தம், மெல்லிய துணிகள் போன்றவற்றை பின் வேதகால மக்கள் அரேபியா, பாரசீக வளைகுடா, இந்தோனேசியா போன்ற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்தனர்.
153) பின் வேதகாலத்தில், அயல்நாட்டு வாணிபத்தில் முக்கியத்துவம் பெற்ற நாணயத்துண்டுகள் எவை?
A) கணம், நிஷ்கா
B) சிரணி, சதமானா
C) கணம், சிரணி
D) நிஷ்கா, சதமானா
விளக்கம்: அயல்நாட்டு வாணிகத்தில் நிஷ்கா, சதமானா, போன்ற நாணயத்துண்டுகள் பின் வேத காலத்தில் முக்கியத்துவம் பெற்றன.
154) பின் வேதகால மக்கள் வணங்கிய மும்மூர்த்திகள் யார்?
A) சிவன், பசுபதி, வேல்
B) பசுபதி, முருகன், தாய்
C) பிரம்மா, முருகன், பசுபதி
D) பிரம்மா, விஷ்ணு, சிவன்
விளக்கம்: பின் வேதகாலத்தில் சடங்குகள், ஆன்ம தத்துவக் கோட்பாடுகள், துறவுநிலை போன்றவை சமய வாழ்க்கையில் மாற்றங்களைத் தோற்றுவித்தன. இக்கால மக்கள், ‘பிரம்மா’, ‘விஷ்ணு’, ‘சிவன்’ ஆகிய மும்மூர்த்திகளை வணங்கினர்.
155) கூற்றுகளை ஆராய்க.
1. பின் வேதகால மக்கள் மனத்தையும், ஆன்மாவையும் தூய்மைப்படுத்த தவம் பெருந்துணை புரிவதாகக் கருதினர்.
2. பேரறிவையும், மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட நிலையையும் அடைய தவம் உதவுவதாகக் கருதினர். எனவே, தவம் செய்வது சிறப்பானதாகக் கருதப்பட்டது.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. பின் வேதகால மக்கள் மனத்தையும், ஆன்மாவையும் தூய்மைப்படுத்த தவம் பெருந்துணை புரிவதாகக் கருதினர்.
2. பேரறிவையும், மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட நிலையையும் அடைய தவம் உதவுவதாகக் கருதினர். எனவே, தவம் செய்வது சிறப்பானதாகக் கருதப்பட்டது.
156) கூற்றுகளை ஆராய்க.
1. பின் வேதகால மக்களின் வழிபாட்டில் சடங்குகளுடன் தத்துவக் கருத்துகளும் பெருகின. ஆன்மா, இறைவன், நரகம், மறுபிறவி, கர்மவினை, சொர்க்கம், வீடுபேறு போன்றவை இவர்களின் தத்துவத்தில் இடம்பெற்றன.
2. மக்கள் இத்தகைய தத்துவக் கருத்துக்களை உணர்ந்து பின்பற்றி நற்கதியடைந்தனர். அரசர்களும் ஆட்சியாளரும் இதில் ஈடுபடவில்லை எனினும் இத்தத்துவக் கருத்துக்கள் வளரத் துணை புரிந்தனர்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: அரசரும், ஆட்சியாளரும் தத்துவக் கருத்தில் ஈடுபட்டனர். மேலும், அது வளரத் துணைபுரிந்தனர்.
157) தவறான கூற்றைத் தேர்வு செய்க.(பின்வேதகால கருத்துப்படி)
A) ஆன்மா உயிரின் அழியாத அடிப்படைக்கூறு, இவ்வுண்மையை உபநிடதங்கள் ஏற்றுக்கொள்கின்றன.
B) ‘ஆன்மாவின் முக்கிய குறிக்கோள் அழிவற்ற பரப்பிரம்மத்தை அடைவது’. இதை உபநிடதங்கள் ஏற்கவில்லை.
C) ‘ஆன்மாவின் முக்கிய குறிக்கோள் அழிவற்ற பரப்பிரம்மத்தை அடைவது’. இதை உபநிடதங்கள் ஏற்கவில்லை.
D) பரப்பிரமத்தை அடைய உலக ஆசைகளும், ஆணவமுமே தடைகளாக உள்ளன என்ற கருத்து, அக்காலத்தே நிலவியது.
விளக்கம்: ‘ஆன்மாவின் முக்கிய குறிக்கோள் அழிவற்ற பரப்பிரம்மத்தை அடைவது’. இதை உபநிடத வாக்கியமான “தத்வமஸி” “நீ தான்அது” என்பதும் “அகம் பிரம்மாஸ்மி” “நான் பிரம்மம்” என்பதாகும்.
158) பின் வேதகாலத்தில் வினையானது எத்தனை வகையாகப் பிரிக்கப்பட்டது?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: இக்காலத்தில் அவரவர் செய்கின்ற வினைக்கேற்ப வாழ்வு அமையும் என்ற கருத்து நிலவியது. வினையாவது நல்வினை, தீவினை என இருவகைப்பட்டது. இவ்விரு வினைகளில் இருந்து விடுபட்டு, வீடுபேற்றை அடைவதே இன்றியமையாதது எனக்கருதப்பட்டது. இந்நிலை அடையாதவருக்குச் செய்வினைக்கேற்ப மறுபிறவி உண்டு என்ற கோட்பாடு இருந்தது. இவ்வாறு பின்வேத காலத்தில் மக்களின் வாழ்க்கை முறை சமயம், தத்துவக் கோட்பாடுகள், அக்கால மக்களின் பண்பாட்டுக் கருவூலங்களாக அமைந்திருந்தன.
159) பின்வேத காலத்திற்குப் பின் ஆரியர்களின் வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டுவது எது?
A) இதிகாசங்கள்
B) புராணங்கள்
C) காப்பியங்கள்
D) சமயநூல்கள்
விளக்கம்: பின்வேத காலத்திற்குப் பிறகு ஆரியர்களின் வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டுவது சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட இதிகாசங்களான இராயமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகும்.
160) இராமாயணத்தை சமஸ்கிருதத்தில் இயற்றியவர் யார்?
A) வால்மீகி
B) கம்பர்
C) துளிசதாசர்
D) வேதவியாசர்
விளக்கம்: இராமாயணம் எழுதியவர்கள்:
சமஸ்கிருதம் – வால்மீகி
தமிழ் – கம்பர்
ஹிந்தி – துளசிதாசர்
161) மகாபாரதத்தை எழுதியவர் யார்?
A) வால்மீகி
B) கம்பர்
C) துளிசதாசர்
D) வேதவியாசர்
விளக்கம்: மகாபாரதம் வேதவியாசரால் எழுதப்பட்டது. இது ஆரியர்களுக்கிடையேயான பூசல்களை விவரிக்கின்றது. மகாபாரதம், இராமாயணம் ஆகியவை கி.மு.500-கி.மு.200-க்கும் இடையில் தோன்றியிருக்ககூடும் என மெக்டோனால்டு என்ற ஐரோப்பியர் கூறுகிறார். இவ்விரு இதிகாசங்களும் அக்காலத்தில் இந்தியாவில் நிலவிய அரசியல் சமூக, பொருளாதார சமய நிலைகளைப் பற்றிய குறிப்புகளைக் கொடுக்கின்றன.
162) இவ்வுலகில் பண்பாட்டை வெளிப்படுத்தியுள்ள இலக்கியங்களுள் தலைசிறந்ததாகக் கருதப்படுவது எது?
A) இராமாயணம்
B) மகாபாரதம்
C) ஐம்பெருங்காப்பியம்
D) சங்க இலக்கியங்கள்
விளக்கம்: இவ்வுலகில் பண்பாட்டை வெளிப்படுத்தியுள்ள இலலக்கியங்களுள் இராமாயணம் தலைசிறந்ததாகக் கருதப்படுகிறது. மகாவிஷ்ணுவின் அவதாரமான இராமனுக்கும், மிகச்சிறந்த சிவபக்தனான இராவணனுக்கும் இடையே நிலவிய போராட்டங்கள் மற்றும் போர்களும் இராமாணயத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன.
163) கோசல நாட்டின் தலைநகர் எது?
A) அஸ்தினாபுரம்
B) இலங்கை
C) அயோத்தி
C) பம்பா
விளக்கம்: கோசல நாட்டின் தலைநகரான அயோத்தியை ஆட்சி செய்த தசரதனுக்குக் கோசலை, சுபத்ரை, கைகேயி ஆகிய மனைவியர் இருந்தனர். இவர்களின் மூத்த புதல்வனே இராமன்.
164) கோசல நாடு எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?
A) சரயு நதி
B) பம்பா நதி
C) சபரி நதி
D) சரஸ்வதி நதி
விளக்கம்: கோசல நாடு ‘சரயு’ நதிக்கரையில் அமைந்துள்ளது.
165) இராமாயணத்தில் வரும் பரதனின் தாய் யார்?
A) சீதை
B) கோசலை
C) சுபத்ரா
D) கைகேயி
விளக்கம்: தன மகன் பரதன், நாட்டை ஆட்சி செய்ய வேண்டுமென கைகேயி விரும்பினாள். ஏற்கனவே தசரதன் தனக்குக் கொடுத்த வாக்குறுதியைத் தக்க நேரத்தில் பயன்படுத்திய கைகேயி, அயோத்தியின் மன்னனாகப் பரதன் முடிச் சூட காரணமானான்.
166) இராமன் எந்த மன்னனின் மகளை திருமணம் செய்து கொண்டார்?
A) தசரதன்
B) சுக்ரீவன்
C) ஜனகன்
D) விபீஷ்ணன்
விளக்கம்: இராமன் மிதிலையின் மன்னன் ஜனகரின் மகளான சீதையைச் ‘சிவதனுசு’ என்ற வில்லுடைக்கும் போட்டியில் வெற்றி பெற்றுத் திருமணம் செய்து கொண்டார்.
167) இராமன், சீதை, இலட்சுமணன் ஆகியோர் எத்தனை ஆண்டுகள் வனவாசம் சென்றனர்?
A) 12
B) 14
C) 7
D) 16
விளக்கம்: இரமன், சீதை, இலட்சுமணன் ஆகிய மூவரும் 14 ஆண்டுகள் வனவாசம் சென்றனர்.
168) இராவணனின் தங்கை யார்?
A) மண்டோதரி
B) சபரி
C) சூர்ப்பனகை
D) சீதை
விளக்கம்: இராவணனின் தங்கை சூர்ப்பனகை இராமன் மீது கொண்ட காதலால் சீதையை இராவணன் கவர்ந்து சென்றான்.
169) சூர்ப்பனகையின் மூக்கை அறுத்தவர் யார்?
A) அனுமன்
B) சத்ருகனன்
C) வீமனன்
D) இலட்சுமணன்
விளக்கம்: சூர்பனகையின் மூக்கினை இராமனின் தம்பி இலட்சுமணன் அறுத்ததாகவும் கூறப்படுகிறது.
170) கிட்கிந்தைப் பகுதியின் அரசன் யார்?
A) வாலி
B) சுக்ரீவன்
C) வாயு
D) கேசரி
விளக்கம்: கிட்கிந்தைப் பகுதியின் அரசனாகிய வாலியின் சகோதரன் சுக்ரீவன், அனுமன், ஜாம்பவான் ஆகியோர் சீதையை மீட்க இராமனுக்கு உதவி புரிந்தனர்
171) ‘வான புத்திரன்’ என்று அழைக்கப்படுபவர் யார்?
A) வாலி
B) சுக்ரீவன்
C) அனுமன்
D) கேசரி
விளக்கம்: வாயு அஞ்சனை தம்பதியின் வானர புத்திரன் அனுமன் ஆவார்.
172) சீதை இராவணனின் காவலில் எந்த இடத்தில் சிறை வைக்கப்பட்டார்?
A) இலங்கை அரண்மணை
B) இலங்கை பிருந்தாவனம்
C) இலங்கை அசோகவனம்
D) இலங்கை அந்தபுரம்
விளக்கம்: சீதை இலங்கையின் அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டார். இதை கண்டறிந்த அனுமன் இராவணனின் அவைக்கே சென்று அவனை எச்சரித்துவிட்டு சீதை இருக்குமிடத்தை இராமனிடம் கூறினார்
173) இராமனிடம் தஞ்சமடைந்த இராவணனின் தம்பி யார்?
A) இந்திரஜித்
B) மகாபலி
C) வீடணன்
D) கும்பகர்ணன்
விளக்கம்: இராவணனின் தகாத செயலால் அவனது தம்பி வீடணன் இராமனிடம் தஞ்சமடைந்தான்.
174) “எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் பணிவு கொள்ளுதல் அவசியம் அதுவே மேன்மையைத் தரும்” என்ற வாழ்வியல் பண்பாட்டு நெறியை உணர்த்துவது எது?
A) இராமாயணம்
B) மகாபாரதம்
C) விஷ்ணுபுராணம்
D) கந்தப்புராணம்
விளக்கம்: இராமன், தசரதன் என்ற அயோத்திய மன்னனுக்கு மகனாகப் பிறந்தாலும், ஆடம்பர வாழ்க்கை, இளைவரசனுக்குரிய அதிகாரப்போக்கு இவற்றை விரும்பாமல் எளிய வாழ்க்கை வாழ்ந்தார். சாதாரண மக்களுக்குரிய அனைத்து துன்பங்களையும் அனுபவித்தார். தமது நாட்டின் குடிமக்களை மிகவும் நேசித்தார்.
175) இராமாயணத்தில் வரும் இராமனின் குலகுரு யார்?
A) வசிஷ்டர்
B) விசுவாமித்திரர்
C) பரந்தாமர்
D) வீடணன்
விளக்கம்: தன் குலகுருவான வசிஷ்டர், தன் வாழ்வின் குரு(குருகுல வாழ்வு) விசுவாமித்திரர் ஆகியோரிடம் இராமன் கற்றுக் கொண்ட வீதம் ஆசிரியர் மாணவர் உறவுமுறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான முன்னுதாரணமாகும்
176) பொருத்துக.
அ. இராமாயணம் – 1. கம்பர்
ஆ. இராமாவதாரம் – 2. துளசதாசர்
4. இராமசரிதமானஸ் – 3. வால்மீகி
A) 3, 2, 1
B) 3, 1, 2
C) 2, 3, 1
D) 1, 3, 2
விளக்கம்: வால்மீகி எழுதிய இராமாயணத்தை கவிச்சக்கரவர்த்தி கம்பர் தமிழலில் கி.பி(பொ.ஆ) 12 நூற்றாண்டில் கம்பராமாயணம் என்ற நூலாக மொழி பெயர்த்தார். கம்பர், தொடக்கத்தில் இந்நூலிற்கு இட்ட பெயர் இராமவதாரம் என்பதாகும். இதே நூலை துளசிதாசர் என்பவர் இராமசரிதமானஸ் என்ற பெயரில் ஹிந்தியில் மொழி பெயர்த்தார்.
177) தந்தையின் வாக்கிற்கு ஒரு மகன் எவ்வாறு மதிப்பளிக்க வேண்டும். எவ்வாறு மகன் தந்தைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற வாழ்வியல் பண்பாட்டு நெறியைப் போதிக்கும் நூல் எது?
A) மகாபாரதம்
B) இராமாயணம்
C) மணிமேகலை
D) சிலப்பதிகாரம்
விளக்கம்: தசரதன் தன் மகன் இராமனை வனவாசம் செய் என உத்தரவிட்டதும் மறுப்பேதுமின்றி இராமன் காட்டுக்குச் சென்ற நிகழ்வு, தந்தையின் வாக்கிற்கு ஒரு மகன் எவ்வாறு மதிப்பளிக்க வேண்டும். எவ்வாறு மகன் தந்தைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற வாழ்வியல் பண்பாட்டு நெறியைப் போதிக்கிறது.
178) சகோதரர்களுக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வேண்டும். பதவிக்காகச் சண்டையிட்டு நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தக் கூடாது என்ற உயர்ந்த வாழ்வியல் பண்பாட்டு நெறியைக் கூறும் நூல் எது?
A) மகாபாரதம்
B) இராமாயணம்
C) மணிமேகலை
D) சிலப்பதிகாரம்
விளக்கம்: இராமனுக்கு முறைப்படி கிடைக்க வேண்டிய அயோத்தியின் அரசப் பதவியைத் தன் தம்பி பரதனுக்கு விட்டுக்கொடுத்த செயல் பரதன் மீது இராமன் கொண்டிருந்த நம்பிக்கையையும் சகோதரப்பாசத்தையும் வெளிக்காட்டுகிறது.
179) பதவி ஒருவருக்குத் தகுதியின் அடிப்படையில் மட்டுமே வர வேண்டும் என்ற வாழ்வியல் நெறியை உணர்த்துவது எது?
A) மகாபாரதம்
B) இராமாயணம்
C) மணிமேகலை
D) சிலப்பதிகாரம்
விளக்கம்: தனக்குக் கிடைத்த அரசப் பதவிக்குரிய அரியணையில் தான் அமராமல் இராமனின் பாதுகையை (காலனி) அதன் மேல் வைத்து அரசாட்சி செய்த பரதனின் செயல், அவன் இராமனின் மீது கொண்டிருந்த பணிவையும், அரச நெறிமுறைகளின்படி தான் நாட்டை ஆளத்தகுதியற்றவர் என்ற உண்மை நிலையை அவன் உணர்ந்ததை இராமாயணம் தெரிவிக்கின்றது.
180) பெண்களைத் தாயாக மதித்துப் போற்ற வேண்டும் என்ற வாழ்வியல் நெறியை உணர்த்தும் நூல் எது?
A) இராமாயணம்
B) மகாபாரதம்
C) சீவகசிந்தாமணி
D) வளையாபதி
விளக்கம்: அண்ணனின் மனைவியைத் தாய்க்கு நிகராக பாவிப்பது இந்தியப் பண்பாடு ஆகும். தன் அண்ணன் இராமனின் மனைவியான சீதையை, இராமனின் தம்பி இலட்சுமணன் தாயாகவே பாவித்தான். இதை இராமாயணம் உணர்த்துகிறது.
181) கடவுள் மீது பக்தன் கொண்டிருக்கும் உண்மையான அன்பும் பக்தியும் வீடுபேற்றிற்கு வழி என்னும் வாழ்வியல் நெறியை உணர்த்துவது எது?
A) இராமாயணம்
B) மகாபாரதம்
C) சீவகசிந்தாமணி
D) வளையாபதி
விளக்கம்: வாயு, அஞ்சனை தம்பதிகளின் மகனான அனுமன், இராமன் மீது அளவற்ற பக்தியும் அன்பும் கொண்ட நிகழ்வு நெகிழ்ச்சியானது. அசோகவனத்தில் சீதையிடம், தான் இராமனின் தூதன் என்பதை நிரூபிக்க தன் மார்பைப் பிளந்து மனத்தில்(இதயத்தில்) இராமனை பூஜித்த நிகழ்வினைக் காட்டிய அனுமனின் செயல் கடவுள் மீது பக்தன் கொண்டிருந்த உண்மையான அன்பும் பக்தியும் வீடுபேற்றிகு வழி என்னும் வாழ்வியல் நெறியை உணர்த்துகிறது.
182) “பிறர் மனைவியை நேசிப்பவன் யாராக இருந்தாலும் அவனுக்கும் அவன் வம்சத்தின் அழிவிற்கும் அதுவே காரணமாகிவிடும்” என்பதற்கு யாருயை செயலே உதாரணம்?
A) இராமன்
B) தசரதன்
C) வீடணன்
D) இராவணன்
விளக்கம்: இராவணன் சீதை மீதான மோகத்தால் அழிந்தான் என்ற உண்மை இராமாயணம் மூலம் உணர்த்தப்படுகிறது.
183) எந்த பதவியும் யாருக்கும் நிலையானதல்ல என்ற வாழ்வியல் நெறியை உணர்த்தும் நூல் எது?
A) சிலப்பதிகாரம்
B) மகாபாரதம்
C) சிவபுராணம்
D) இராமாயணம்
விளக்கம்: 14 ஆண்டு வனவாசம் முடிந்து அயோத்திக்குத் திரும்பிய இராமனை அவரது தம்பி பரதன் வரவேற்ற நிகழ்வு பதவி ஆசை தனக்கில்லை என்ற பரதனின் பெருந்தன்மையை இராமாயணம் விளக்குகிறது.
184) “தவறு செய்யும் கணவனைத் திருத்த வேண்டியது மனைவியின் கடமை” என்ற வாழ்வியல் பண்பாட்டு நெறியை உணர்த்துவது எது?
A) சிலப்பதிகாரம்
B) மகாபாரதம்
C) சிவபுராணம்
D) இராமாயணம்
விளக்கம்: சீதையை இராவணன் கடத்தித் தன் அரண்மனையின் அருகிலுள்ள அசோக வனத்தில் சிறை வைத்தவுடன் தாங்கள் செய்வது தவறு என அவனுக்கு அவன் மனைவி மண்டோதரி அறிவுரை கூறித் திருத்த முயன்றார்.
185) வேதங்களில் காணப்படும் கருத்துக்கள் யாவும் எதில் இடம்பெற்றிருக்கிறது?
A) சிலப்பதிகாரம்
B) மகாபாரதம்
C) சிவபுராணம்
D) இராமாயணம்
விளக்கம்: வேதங்களில் காணப்படும் கருத்துக்கள் யாவும் மகாபாரதத்தில் இடம்பெற்றிருப்பது இதன் சிறப்பிற்குச் சான்றாகும். வேதவியாசர் என்பவரால் இது எழுதுப்பட்டது.
186) கௌவரவர்கள் எத்தனை பேர்?
A) 100
B) 4
C) 5
D) 27
விளக்கம்: பாண்டவர்கள் ஐந்து பேருக்கும், கௌரவர்கள் 100 பேருக்கும் இடையேயான போராட்டத்தை மகாபாரதம் விளக்குகிறது.
187) பஞ்ச பாண்டவர்களுள் பொருந்தாதவர் யார்?
A) அர்ஜுனன்
B) நகுலன்
C) சத்ருகணன்
D) வீமன்
விளக்கம்: பஞ்ச பாண்டவர்கள் – தருமன், வீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன்
கௌரவர்கள் – துரியோதனன், துச்சாதனன் உள்ளிட்ட 100 பேர்கள்.
188) பஞ்ச பாண்டவர்களில் மூத்தவனான தருமன் யாருடன் சூதாடித் தோற்று, தான் சேர்த்த செல்வங்களை இழந்தார்?
A) இராவணன்
B) துரியோதனன்
C) துச்சாதனன்
D) சகுனி
விளக்கம்: பஞ்ச பாண்டவர்களில் மூத்தவனான தருமன் சகுனியுடன் சூதாடித் தோற்று, தான் சேர்த்த செல்வங்களைச் சகுனியிடம் இழந்தான். தன் மனைவி பாஞ்சாலியையும் பந்தயமாக வைத்துத் தருமன் சூதாட்டத்தில் இழந்தான்.
189) பாஞ்சாலியை சபையிலேயே துகிலுரித்தவன் யார்?
A) துரியோதனன்
B) துச்சாதனன்
C) கிருஷ்ணன்
D) சகுனி
விளக்கம்: துரியோதனின் சொல் கேட்டுப் பாஞ்சாலியைத் துச்சாதனன் சபையிலேயே துகிலுரித்தான். பாஞ்சாலி, தன் மானம் காக்க கடவுளான கண்ணணைப் பிரார்த்திக்கிறாள். இதனால், கண்ணன் அருள்புரிந்து ஆடையை நீளச்செய்கிறார்.
190) ‘குருஷேத்ர போர்’ எந்த புராணத்துடன் தொடர்புடையது?
A) மகாபாரதம்
B) இராமாயணம்
C) சிலப்பதிகாரம்
D) சீவக சிந்தாமணி
விளக்கம்: பாஞ்சாலியை அவமானப்படுத்திய கௌரவர்களைப் பாண்டவர்கள் ஐவரும் கண்ணன் அருளோடு “குருஷேத்திர போரில்” பழிவாங்கிய நிகழ்வை மகாபாரதம் கூறுகிறது.
191) மகாபாரதம் எத்தனை பருவங்களை உடையது?
A) 12
B) 14
C) 16
D) 18
விளக்கம்: மகாபாரதம் இந்தியாவின் ஈடு இணையற்ற இருபெரும் இதிகாசங்களில் ஒன்று. இது 18 பருவங்கள் கொண்டது.
192) மகாபாரதம் எத்தனை செய்யுள்களைக் கொண்டது?
A) 10000
B) 100000
C) 72000
D) 120000
விளக்கம்: மகாபாரதம் 18 பருவங்கள் மற்றும் 1லட்சம் செய்யுள்கள் கொண்ட மிகப்பெரிய நூலாகும்.
193) வில்லிபாரம் எந்த நூலைத் தழுவி எழுதப்பட்டது?
A) இராமாயணம்
B) பெரியபுராணம்
C) விவிலியம்
D) மகாபாரதம்
விளக்கம்: சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட மகாபாரதத்தை தழுவி வில்லிப்புத்தூரார் வில்லிப்பாரதம் என்ற பெயரில் தமிழில் எழுதினார்.
194) “வியாசர் விருந்து” எந்த நூலைத் தழுவி எழுதப்பட்டது?
A) இராமாயணம்
B) பெரியபுராணம்
C) விவிலியம்
D) மகாபாரதம்
விளக்கம்: மூதறிஞர் ராஜாஜி “வியாசர் விருந்து” என்ற நூலை மகாபாரதத்தை மையமாகக் கொண்டு எழுதினார்.
195) “பாஞ்சாலி சபதம்” நூலின் ஆசிரியர் யார்?
A) பாரதி
B) பாரதிதாசன்
C) சுரதா
D) செல்லப்பா
விளக்கம்: மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்களின் மனைவியான பாஞ்சாலியின் கதாபாத்;திரத்தை மையமாக வைத்து மகாகவி சுப்ரமணிய பாரதியார் “பாஞ்சாலி சபதம்” என்ற நூலை எழுதினார். இறைத்தத்துவங்களையும், ஒழுக்கங்களையும் கிளைக்கதைகள் மூலம் உணர்த்தும் மகாபாரதம் நமது பண்பாட்டை வெளிப்படுத்துகிறது.
196) அரசனிடம் நற்பண்பு இல்லையென்றால் அவனும் கெட்டு அவனது நாடும் கெட்டழியும் என்பதற்கு யாருடைய வாழ்வே உதாரணம்?
A) தருமன்
B) இராமன்
C) சுக்ரீவன்
D) வீடணன்
விளக்கம்: சகுனியுடன் சூதாடி செல்வங்களையெல்லாம் இழந்த தருமன் தம் நாட்டையும் இழந்தான்.
197) உடல் வலிமையுடன், சிறந்த சிந்தனையுடன் கூடிய மனவலிமையும் ஒருவரது வாழ்வு சிறக்க அவசியம் என்பதற்கு யாருடைய வாழ்க்கை உதாரணமாகிறது?
A) தருமன்
B) துரியோதனன்
C) துச்சாதனன்
D) பீமன்
விளக்கம்: உடல் வலிமை கொண்ட ஒருவன் அவ்வலிமையை மட்டும் வைத்துக்கொண்டு எதுவும் செய்யமுடியாது. சிறந்த சிந்தனையுடன் கூடிய மனவலிமை அவசியம் என்று பீமனின் வாழ்க்கையை மற்றவர்க்கு ஒரு வாழ்க்கை நெறியாக மகாபாரதம் கூறுகிறது.
198) “வீரம்”, “விவேகம்”, “குரு பக்தி”, இறை பக்தியுடையவர்க்கு வெற்றிமேல் வெற்றி கிடைக்கும் என்ற வாழ்வியல் நெறியை யாருடைய வாழ்க்கை மூலம் மகாபாரதம் உணர்த்துகிறது?
A) தருமன்
B) பீமன்
C) அர்ச்சுனன்
D) நகுலன்
விளக்கம்: துரோணரின் தலைசிறந்த மாணவர்களில் ஒருவனான அர்ச்சுனன் வில்வித்தையில் சிறந்த வீரன் மட்டுமின்றி மிகச்சிறந்த விவேகியாகவும் இருந்தார்.
199) சூரியன், குந்திதேவி தம்பதியின் மகனாகப் பிறந்தவர் யார்?
A) தருமன்
B) பீமன்
C) அர்ச்சுனன்
D) கர்ணன்
விளக்கம்: சூரியன், குந்திதேவி தம்பதியின் மகனாகப் பிறந்து, அவர்களாலேயே புறக்கணிக்கப்பட்டு, தேரோட்டி ஒருவரால் வளர்க்கப்பட்ட கர்ணன் மிகச்சிறந்த வீரரும், கொடை வள்ளலுமாவார். தம் திறமையால் துரியோதனின் ஆதரவைப் பெற்று “அங்க நாட்டு” மன்னனாக்கப்பட்டார். துரியோதனன் தீய குணமுடையவனாக இருந்தாலும் செஞ்சோற்றுக்கடனைத் தீர்க்க குருஷேத்ரப் போரில்(அர்ஜுனனை எதிர்த்து நடைபெற்ற போர்) கர்ணன் வீரமரணமடைந்தார்.
200) தன் நற்குணம், கொடைத்திறனை நல்லவர் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தலாம். தீயோர்களிடத்தில் நற்பண்புடையவர்களின் செயலானது விழலுக்கிறைந்த நீர்போலாகும் என்ற கருத்து யாருடைய வாழ்க்கை மூலம் மகாபாரத்தில் உணர்த்தப்படுகிறது?
A) அர்ஜுனன்
B) தருமன்
C) பீஷ்மர்
D) கர்ணன்
விளக்கம்: தன் நற்குணம், கொடைத்திறனை நல்லவர் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தலாம். தீயோர்களிடத்தில் நற்பண்புடையவர்களின் செயலானது விழலுக்கிறைந்த நீர்போலாகும் என்ற கருத்து கர்ணன் வாழ்க்கை மூலம் மகாபாரத்தில் உணர்த்தப்படுகிறது.
201) ஓர் ஆசான் தனக்கு தெரிந்த கலையைத் தீயவர்க்கு பயன்படுத்தியதன் வினையை அவரே அனுபவித்தார் என்ற வாழ்வியல் பண்பாட்டு நெறியை யார் மூலம் மகாபாரதம் உணர்த்துகிறது?
A) வால்மீகி
B) விஸ்வாமித்திரர்
C) பீஷ்மர்
D) துரோணச்சாரியார்
விளக்கம்: பீஷ்மர், துரோணர் ஆகிய இருவருமே சிறந்த ஆசிரியர்கள். ஆனால் துச்சாதனன் பாஞ்சாலியின் துகிலுரித்தபோது அவனைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தாலும், துரியோதனனுக்கு உதவியதாலும், குருஷேத்திரப் போரில் அர்ஜுனனால் பீஷ்மர் தோற்கடிக்கப்பட்டார்.
202) தலைசிறந்த குருவால் எத்தனை மாணவர்களையும் நற்பண்புடையவர்களாக மாற்றிமுடியும் என்ற உயரிய தத்துவத்தை யார் வழி நின்று, மகாபாரதம் வாழ்வியல் பண்பாட்டு நெறியை விளக்குகிறது?
A) வால்மீகி
B) விஸ்வாமித்திரர்
C) பீஷ்மர்
D) துரோணச்சாரியார்
விளக்கம்: அர்ஜுனன் ஆசிரியராக இருந்து துரோணர், குருஷேத்திரப்போரில் அவனது வெற்றிக்கு உதவினார்.
203) தன் சகோதரனுக்கு விதுரன் கூறிய அறிவுரைகளின் தொகுப்பு_______எனப்படுகிறது?
A) விதுரநீதி
B) திருதநீதி
C) ராஷ்டிரநீதி
D) தருமநீதி
விளக்கம்: தன் சகோதரன் திருதராஷ்டிரனுக்கு விதுரன் கூறிய அறிவுரைகளின் தொகுப்பு விதுரநீதி எனப்படுகிறது.
204) “தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தருமம் வெல்லும்” என்று உரைக்கும் நூல் எது?
A) இராமாயணம்
B) மகாபாரதம்
C) பெரியபுராணம்
D) விவிலியம்
விளக்கம்: சகுனி தன்னுடைய சூழ்ச்சியால் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே போர் ஏறபடுத்திய செயலால் தானே அழிந்தான். இதன் மூலம் தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தருமம் வெல்லும் என்பது புலனாகிறது.
205) அர்ஜுனனுக்கு கண்ணன் கூறிய அறிவுரைகளின் தொகுப்பு எது?
A) விவிலியம்
B) திருக்குறள்
C) திருக்குரான்
D) பகவத் கீதை
விளக்கம்: இது இந்துக்களின் ஒப்பற்ற புனித நூலாகும். மனித வாழ்விற்க்குத் தேiவாயன ஒப்பற்ற வாழ்வியல் மற்றும் பண்பாட்டு நெறிகளையும் பகவத்கீதை கூறுகிறது
206) மகாபாரதம் கூறும் கருத்துக்கள் எவை?
A) மனித வாழ்வை நெறிப்படுத்தவே பாரதம் எழுந்தது எனவும், அறவழியில் நடக்கவும், மனிதனைச் சிந்திக்க வைக்கவும் செய்கிறது.
B) சான்றோர்கள் இன்பத்தையும், துன்பத்தையும் ஒன்றாக எண்ணுவர்.
C) எப்போதும் அறவழியைக் கைவிடக்கூடாது என்றும் கடைமையக் செய் பலனை எதிர் பாராதே என்று வாழ்வியல் தத்துவ நெறியை மகாபாரதம் வெளிப்படுத்துகிறது
D) அனைத்தும்
விளக்கம்: மனித வாழ்வை நெறிப்படுத்தவே பாரதம் எழுந்தது எனவும், அறவழியில் நடக்கவும், மனிதனைச் சிந்திக்க வைக்கவும் செய்கிறது.
சான்றோர்கள் இன்பத்தையும், துன்பத்தையும் ஒன்றாக எண்ணுவர்.
எப்போதும் அறவழியைக் கைவிடக்கூடாது என்றும் கடைமையக் செய் பலனை எதிர் பாராதே என்று வாழ்வியல் தத்துவ நெறியை மகாபாரதம் வெளிப்படுத்துகிறது
207) விதுரநீதியில் கூறப்படும் கருத்து எது?
A) அடங்கிப்போன பகையைத் தூண்டி வளர்க்கக்கூடாது
B)அதிகம் பேசுபவரால் பொருட்செறிவுடனும் புதுமையுடனும் பேச முடியாது
C) பாணங்களால் பட்ட புண் ஆறிவிடும். ஆனால் கொடிய வார்த்தைகளால் சொல்லப்பட்ட சிந்தனையாகிய புண் எப்போதும் ஆறாது.
D) அனைத்தும்
விளக்கம்: அடங்கிப்போன பகையைத் தூண்டி வளர்க்கக்கூடாது
அதிகம் பேசுபவரால் பொருட்செறிவுடனும் புதுமையுடனும் பேச முடியாது
பாணங்களால் பட்ட புண் ஆறிவிடும். ஆனால் கொடிய வார்த்தைகளால் சொல்லப்பட்ட சிந்தனையாகிய புண் எப்போதும் ஆறாது.
208) கூற்றுகளை ஆராய்க.
1. பிறர் போற்றும்போது மகிழ்ச்சியும், தூற்றும்போது வருத்தமும் அடையாமல் யார் இருக்கிறார்களோ அவர்களே பண்டிதர்கள் ஆவர்
2. அதிக அகந்தை, அதிக கோபம் ஆகியவை பெருங்குற்றம் ஆகும்.
3. கூற்று 1 மற்றும் 2 ஆகியவை மகாபாரதத்தில் விதுரநீதியாக இடம்பெற்று வாழ்வியல் பண்பாட்டு நெறியாக அமைந்துள்ளன.
A) 1, 2 மட்டும் சரி
B) 1 மட்டும் சரி
C) 1, 2, 3 தவறு
D) 1, 2, 3 சரி
விளக்கம்: 1. பிறர் போற்றும்போது மகிழ்ச்சியும், தூற்றும்போது வருத்தமும் அடையாமல் யார் இருக்கிறார்களோ அவர்களே பண்டிதர்கள் ஆவர்
2. அதிக அகந்தை, அதிக கோபம் ஆகியவை பெருங்குற்றம் ஆகும்.
3. கூற்று 1 மற்றும் 2 ஆகியவை மகாபாரதத்தில் விதுரநீதியாக இடம்பெற்று வாழ்வியல் பண்பாட்டு நெறியாக அமைந்துள்ளன.
209) “புராணம்” என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?
A) லத்தீன்
B) கிரேக்கம்
C) சமஸ்கிருதம்
D) பாலி
விளக்கம்: “புராணம்” என்ற சொல் சமஸ்கிருத மொழியிலிருந்து பெறப்பட்டதாகும். இதற்கு பழைமை என்பது பொருள். புராணத்தில் பழைய தெய்வக்கதைகள், வரலாற்றுச் செய்திப் பட்டியல்கள், மரபுரைக் கோவைகள் ஆகியவை அடங்கியுள்ளன. மேலும் ஆன்மீக உணர்வைப் பெறுவதற்கான சமயம், தத்துவம், யோகம், அநுமதி நெறிகள் போன்றவற்றைப் பற்றிய உரையாடல்கள் நிரம்பிய அறிவுக் கருவூலமாகவும் புராணங்கள் திகழ்கின்றன. காப்பியங்களுக்குப்பின் இந்தியாவின் பண்பாட்டைச் சிறப்படையச் செய்தவை புராணங்கள் ஆகும். புராணங்கள் உபநிடதங்களைப் போல பழமையானவை என்று கூறப்படுகிறது.
210) ஆர்.எஸ்.சர்மா குறிப்பிடும் புராணகாலம் எது?
A) கி.பி 100-கி.பி.1000
B) கி.பி 300-கி.பி.700
C) கி.பி 300-கி.பி.1000
D) கி.மு 300-கி.மு.1000
விளக்கம்: புராணங்கள் எப்போது தோன்றியது என்று அறுதியிட்டுக் கூற இயலாது. புராணக் காலம் கி.பி 300 லிருந்து கி.பி.1000க்கு உட்பட்டது என்று ஆர்.எஸ். சர்மா குறிப்பிடுகிறார். கி.பி. 4-ஆம் நூற்றாண்டிற்கும் கி.பி.(பொ.ஆ) 6-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலம் புராணங்களின் காலம் என்று வேறு சிலர் கருதுகின்றனர்.
211) புராணங்களில் மிகவும் பழமையானதாகக் கருதப்படுவது எது?
A) கிருஷ்ண புராணம்
B) கந்தப்புராணம்
C) வாயு புராணம்
D) பெரிய புராணம்
விளக்கம்: வாயுபுராணம் கி.பி. 4-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது. மனித வாழ்வியல் தத்துவ உண்மைகளை பாரமரர்கள் புரிந்துகொள்ள கடினமானவையாக இருந்தன. எனவே, அவை பாமரர்களையும் எளிமையாகச் சென்றடையும் வகையில் நீதிக் கதைகள் வடிவில் தொகுக்கப்பட்டன. அவ்வாறு தொகுக்கப்பட்ட கதைகள் வாழ்வில் பேருண்மைகளை அனைவருக்கும் உணர்த்தின. இக்கருத்துக்களை உண்மையை வெளிக்கொணர்தல் என்ற அடிப்படையில் புராணங்களாக தொகுக்கப்பட்டன.
212) “புராணம்” எத்தனை லட்சணங்களைக் கொண்டுள்ளது?
A) 4
B) 5
C) 6
D) 8
விளக்கம்: புராணம் 5 வகைப் பண்புகளைக் (பஞ்ச லட்சணங்களை) கொண்டதாக கூறப்படுகிறது. அவை,
1. அக்காலச் சம்பவங்கள்(வரலாறு)
2.படைப்பு (அண்டப்படைப்பியல்)
3. உலகப்படைப்பின் விரிவும், ஒடுக்கவும் (அண்டப்படைப்பிற்குக் கீழுள்ள படைப்பு)
4. சூரியகுல, சந்திரகுல அரசர்களில் வம்ச விளக்கம் (அரசப் பரம்பரைகளின் பட்டியல்)
5. ஆதி வம்சாவழி (பரம்பரை வம்சவழி)
213) புராணங்களில் தொகுப்பை உலகிற்குத் தெளிவுப்படுத்தியவர் யார்?
A) சுதபுராணிகர்
B) வேதவியாசர்
C) மும்மூர்த்தி
D) கம்பர்
விளக்கம்: வேதவியாசர் என்ற முனிவர் புராணக் கதைகளைத் தொகுத்தார் என்றும், புராணங்களை எழுதியவரும் இவரே என்ற மற்றொரு கருத்தும் நிலவுகிறது. புராணங்களின் தொகுப்பை உலகிற்குத் தெளிவுப்படுத்தியவர், ‘சுதபுராணிகர்’ எனக் கூறுகின்றனர்.
214) கூற்றுகளை ஆராய்க.
1. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுளர்களும் மற்றும் அக்னி, சூரியன் போன்ற கடவுளர்களும் வேதங்களிலும், காப்பியங்களிலும் பேசப்பட்டனர்.
2. புராணங்கள் மும்மூர்த்திகளின் அடிப்படையில் சிவபுராணம், விஷ்ணுபுராணம், பிரம்மபுராணம் எனப் பிரிக்கப்பட்டன.
A) 1 சரி
B) 2 சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுளர்களும் மற்றும் அக்னி, சூரியன் போன்ற கடவுளர்களும் வேதங்களிலும், காப்பியங்களிலும் பேசப்பட்டனர்.
2. புராணங்கள் மும்மூர்த்திகளின் அடிப்படையில் சிவபுராணம், விஷ்ணுபுராணம், பிரம்மபுராணம் எனப் பிரிக்கப்பட்டன.
215) புராணங்கள் மொத்தம் எத்தனை?
A) 4000
B) 64
C) 63
D) 18
விளக்கம்: புராணங்கள் மொத்தம் 18. அவற்றில் சிவபுராணம், விஷ்ணு புராணம், பிரம்ம புராணம், அக்னி மற்றும் சூரிய புராணம் ஆகியவை அடங்கும்.
216) பொருத்துக.
அ. சிவபுராணம் – 1. 10
ஆ. விஷ்ணு புராணம் – 2. 1
இ. பிரம்ம புராணம் – 3. 2
ஈ. அக்னி புராணம் – 4. 4
A) 4, 3, 2, 1
B) 1, 4, 3, 2
C) 1, 4, 3, 2
D) 1, 2, 3, 4
விளக்கம்: சிவபுராணம் – 10
விஷ்ணு புராணம் – 4
பிரம்ம புராணம் – 2
அக்னி புராணம் – 1
சூரிய புராணம் – 1
217) பொருத்தமற்றதைத் தேர்வு செய்க
A) வாயு புராணம்
B) பவிஷ்ய புராணம்
C) இலிங்க புராணம்
D) நாரதீயப் புராணம்
விளக்கம்: நாரதீயப் புராணம் என்பது விஷ்ணுப் புராணமாகும். மற்றவை சிவபுராணங்கள்.
சிவபுராணங்கள் 10 (சிவபெருமானின் பெருமையைக் கூறும் 10 புராணங்கள்)
1. சிவ புராணம் (எ) வாயு புராணம்
2. பவிஷ்ய புராணம்
3. மார்க்கண்டேய புராணம்
4. இலங்க புராணம்
5. வராக புராணம்
6. மத்சய புராணம்
7. ஸ்கந்தப் புராணம்
8. கூர்ம புராணம்
9. வாமன புராணம்
10. பிரம்மாண்ட புராணம்
218) பொருத்தமற்றதைத் தேர்வு செய்க
A) வைணவம்
B) பாகவதம்
C) நாரதீயம்
D) பதுமம்
விளக்கம்: ‘பதுமம்’ என்பது பிரம்ம புராணம் ஆகும். மற்றவை விஷ்ணு புராணங்கள்.
விஷ்ணு புராணங்கள் 4 (விஷ்ணுவின் பெருமைகளை கூறும்)
1.வைணவம் எனப்படும் விஷ்ணு புராணம்
2. பாகவதம் எனப்படும் பாகவதப் புராணம்
3. நாரதீயம் எனப்படும் நாரதப் புராணம்
4. காருடம் எனப்படும் காருடப் புராணம்
219) பிரம்ம புராணம் எது?
A) பிரமம்
B) பதுமம்
C) ஆக்னேயம்
D) A மற்றும் B
விளக்கம்: 1. பிரமம் எனப்படும் பிரம்ம புராணம்
2. பதுமம் எனப்படும் பத்ம புராணம்
220) அக்னியின் பெருமைகளைக் கூறும் புராணம் எது?
A) பிரமம்
B) பதுமம்
C) ஆக்னேயம்
D) பிரமை வர்த்தம்
விளக்கம்: அக்னியின் பெருமையைக் கூறும் புராணம் ஆக்னேயம் எனப்படும்
221) சூரியனின் பெருமையைக் கூறும் புராணம் எது?
A) பிரமம்
B) பதுமம்
C) ஆக்னேயம்
D) பிரமை வர்த்தம்
விளக்கம்: சூரியனின் பெருமையைக் கூறும் புராணம் “பிரமை வர்த்தம்” எனப்படும்
222) தமிழிலுள்ள சிவபுராணங்கள் எத்தனை?
A) 2
B) 4
C) 3
D) 6
விளக்கம்: பிற்காலத்தில் தமிழில் தோன்றியவை தமிழ்ப்புராணங்கள் என்றழைக்கப்படுகிறது. பெருமாள் மனித உருவில் தோன்றி சிவனடியார்க்குத் தீட்சை அளித்தும், துயரங்களைப் போக்கவும் செய்தார். அவரது இச்செயல்களைத் திருவிளையாடல் எனவும், இவற்றை தமிழில் 4 புராணங்களாக “சுவாமி சிவானந்தர்” கூறுகிறார். அவை,
1. சிவபுராணம்
2. பெரிய புராணம்
3. சிவபராக்கிரமம்
4. திருவிளையாடற்புராணம்
223) மகாபுராணங்கள் எத்தனை?
A) 12
B) 18
C) 7
D) 2
விளக்கம்: பதினெண் புராணங்களை “மகா புராணங்கள்” என்றும் அழைப்பர். இவற்றைத் தவிர பதினெட்டு உப புராணங்களும் உள்ளன. அவை,
1. சூரிய புராணம்
2. கல்கி புராணம்
3. துர்வாச புராணம்
4. கபில புராணம்
5. நந்திகேஸ்வர புராணம்
6. பசுபதி புராணம்
7. கணேச புராணம்
8. சனத்குமார் புராணம்
9. வாசிஷ்ட புராணம்
10. பராசர புராணம்
11. பிருகத்தர்ம புராணம்
12. மாணவ புராணம்
13. காளிகா புராணம்
14. நரசிம்ம புராணம்
15. பார்ச்சவே புராணம்
16. கம்ப புராணம்
17. பராண புராணம்
18. முத்கலா புராணம்
224) தவறானதைத் தேர்க.
A) புராணகால இலக்கியமானது ஆழ்ந்த இந்து சமயக் கருத்துக்களைக் கொண்டதாகவும், பருப்பொருள் தத்துவங்களாகவும், அறிவுpயலாகவும் போற்றப்படுகிறது
B) சமயம், தத்துவம், அறிவியல் இவை சம்மபந்தமாக வெளிப்பட்ட பழங்கால மக்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளையும் அவற்றில் புரியாத கடினமான கருத்துக்களையும் மிகச் சுவையாகவும் உவமான, உவமேயங்களின் மூலம் விளக்கி மக்களின் மனத்தில் பதியச் செய்வது புராணங்களின் முக்கிய நோக்கமாகும்.
C) வேதக் கட்டளைகளான ‘உண்மை பேசு’ (ஸ்த்யம் வத), தருமத்தைச் செய்(தர்ம சர) என்பனவற்றை நீதிக்கதைகள் மூலம் விளக்கிக் கடைபிடிக்கச் செய்தன.
D) வாழ்வைச் சீர்ப்படுத்தும் சமய ஞானமும், கடவுள் பக்தியும் கலந்த தெய்வீக உணர்வினைத் தருவதும் புராணங்களாகும்.
விளக்கம்: வேதக் கட்டளைகளான ‘உண்மை பேசு’ (தர்ம சர), தருமத்தைச் செய் (ஸ்த்யம் வத) என்பனவற்றை நீதிக்கதைகள் மூலம் விளக்கிக் கடைபிடிக்கச் செய்தன.
225) சரியானதைத் தேர்வு செய்க
A) புராணங்கள் பழமைவாய்ந்தவை என்றும் சமயக் கருத்துகளை மட்டுமே பிரதிபலித்தன எனவும் கொள்ளுதல் தவறு
B) புராணக் கதைகள் வாழ்வின் பல்வேறு நிலைகளில் மக்களுக்குப் பயன்படும் அரிய உண்மைகளை எளிமையாக ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கூறியுள்ளன.
C) புராணங்களில் குறிப்பிடப்படும் தெய்வங்கள் அவற்றின் அவதாரங்கள் மூலம் நிகழ்த்திய அருஞ்செயல்களைக் கூறுகின்றன. அத்துடன், அரசியல், மருத்தும், சடங்குகள், சமூக விதிமுறைகள், வேதாந்தம், தத்துவம், சமயம் என்ற பல்வேறு நிலைகளும் நீண்ட விளக்கங்களைத் தருகின்றன.
D) அனைத்தும் சரி
விளக்கம்: புராணங்கள் பழமைவாய்ந்தவை என்றும் சமயக் கருத்துகளை மட்டுமே பிரதிபலித்தன எனவும் கொள்ளுதல் தவறு
புராணக் கதைகள் வாழ்வின் பல்வேறு நிலைகளில் மக்களுக்குப் பயன்படும் அரிய உண்மைகளை எளிமையாக ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கூறியுள்ளன.
புராணங்களில் குறிப்பிடப்படும் தெய்வங்கள் அவற்றின் அவதாரங்கள் மூலம் நிகழ்த்திய அருஞ்செயல்களைக் கூறுகின்றன. அத்துடன், அரசியல், மருத்தும், சடங்குகள், சமூக விதிமுறைகள், வேதாந்தம், தத்துவம், சமயம் என்ற பல்வேறு நிலைகளும் நீண்ட விளக்கங்களைத் தருகின்றன.
226) சரியானதை; தேர்வு செய்க
A) புராணங்கள் பண்டைய நாகரீகத்தின் சிறப்புக் கூறுகள் எனப்படும் உறுதிப் பொருள்களாகிய அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றைப் பற்றி தெளிவான கருத்துக்களைத் தருகின்றன.
B) படைப்பு, அநுபூதி நெறி விஷ்ணு புராணத்தில் கூறப்படும் “பரமாத்மாவிற்கு மேலானது எதுவுமில்லை”; என்ற உயரிய கருத்துக்கள் புராணங்களில் இடம்பெற்றுள்ளன.
C) கர்ம வினைகளிலிருந்தும், அவற்றின் விளைவுகளிலிருந்தும் விடுபட்டு, அமைதி பெறுவதற்கான வழிமுறைகளைப் புராணங்கள் கூறுகின்றன
D) அனைத்தும் சரி
விளக்கம்: பண்டைய நாகரீகத்தின் சிறப்புக் கூறுகள் எனப்படும் உறுதிப் பொருள்களாகிய அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றைப் பற்றி தெளிவான கருத்துக்களைத் தருகின்றன.
படைப்பு, அநுபூதி நெறி விஷ்ணு புராணத்தில் கூறப்படும “பரமாத்மாவிற்கு மேலானது எதுவுமில்லை”; என்ற உயரிய கருத்துக்கள் புராணங்களில் இடம்பெற்றுள்ளன.
கர்ம வினைகளிலிருந்தும், அவற்றின் விளைவுகளிலிருந்தும் விடுபட்டு, அமைதி பெறுவதற்கான வழிமுறைகளைப் புராணங்கள் கூறுகின்றன
227) சரியானதைத் தேர்வு செய்க.
A) அக்கால மக்களின் வாழ்க்கைமுறை, அரச முறை முதலியவற்றை அறிய பெருந்துணை புரிகின்றன.
B) புராணங்கள், “கடவுள் எங்கும் இருக்கிறார், அவருக்குப் பல திருநாமங்கள் உண்டு, புனித இதயத்தில் கடவுள் இருக்கிறார்” என்ற கருத்தை விளக்கிக் கூறுகின்றன.
C) புத்தன், சத்தியம், தாமம், புலனடக்கம், தெய்வத்தின் சகிப்புத்தன்மை, தன்னம்பிக்கை ஆகிய குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். இக்குணங்களுக்கு எடுத்துக்காட்டு இராமன், கண்ணன், அர்ஜுனன், அனுமம், சபரி, கஜேந்திரன்
D) அனைத்தும் சரி
விளக்கம்: அக்கால மக்களின் வாழ்க்கைமுறை, அரச முறை முதலியவற்றை அறிய பெருந்துணை புரிகின்றன.
புராணங்கள், “கடவுள் எங்கும் இருக்கிறார், அவருக்குப் பல திருநாமங்கள் உண்டு, புனித இதயத்தில் கடவுள் இருக்கிறார்” என்ற கருத்தை விளக்கிக் கூறுகின்றன.
புத்தன், சத்தியம், தாமம், புலனடக்கம், தெய்வத்தின் சகிப்புத்தன்மை, தன்னம்பிக்கை ஆகிய குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். இக்குணங்களுக்கு எடுத்துக்காட்டு இராமன், கண்ணன், அர்ஜுனன், அனுமம், சபரி, கஜேந்திரன்
228) அரிச்சந்திர நாடகத்தைப் பார்த்து யார் சிறந்த மனிதனாக உருவானதாக வரலாறு கூறுகிறது?
A) காந்தியடிகள்
B) இராமகிருஷ்ணர்
C) விவேகானந்தர்
D) சிவாஜி
விளக்கம்: மேலும், புராணக் கதைகளைக் கேட்டு இராமகிருஷ்ணர், விவேகானந்தர், சிவாஜியும் சிறந்த மனிதர்களாக உருவானதாக வரலாறு கூறுகின்றது. பொதுவாக மக்கள் தம் வாழ்வின் உயரிய நெறிகளை எளிதாகப் புரிந்துக்கொண்டு, பின்பற்ற உதவுவன புராணங்கள்.
229) சிவபெருமானுக்குக் கண் பொருத்திய கண்ணப்பரின் இயற்பெயர் என்ன?
A) அப்பர்
B) சுந்தரர்
C) திண்ணனார்
D) திருமூலர்
விளக்கம்: நாயன்மார்களுள் ஒருவரான திண்ணனார் தம் இறை பக்தி மிகுதியால் சிவபெருமானின் கண்ணில் இருந்து வழியப் பெற்ற இரத்தத்தைக் நிறுத்த, தம் ஒரு கண்ணைப் பெயர்த்து வைத்ததாகவும், மேலும் மற்றொரு கண்ணிலிருந்து இரத்தம் வர, உடனே மறு கண்ணைப் பெயர்த்து அப்பி இறைவனின் துயரைப் போக்கியதால் “கண்ணப்பர்” எனப் பெயர்பெற்றதாகவும் அறிகிறோம்.
230) சரியானக் கூற்றை தேர்வு செய்க.
A) வேதங்களில் கூறப்பட்டுள்ள அரிய உண்மைகள் இன்றைய உலகில் அறிவியல் உண்மைகளோடு மிகவும் ஏற்புடையதாய் காணப்படுகிறது. மேலும், இன்றைய வாழ்வில் அடிப்படைப் பண்பாட்டுக் கூறுகளையும் பிரதிபலிக்கின்றன.
B) புவியின் வயது, விண்வெளியில் எல்லைகள், சூரியனின் உட்பகுதி வானநூல் பற்றிய கருத்துகளை வேதங்கள் கூறுகின்றன. இவை அனைத்தும் இன்றைய அறிவியல் உலகால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும்.
C) ஆயுர்வேதம் எனப்படும் மருத்துவ இயல், தனுர்வேதம் எனப்படும் போர்க்கலை, கந்தர்வ வேதம் எனப்படும் நுண்கலை ஆகிய மூன்று வேதங்களாலும், இதிகாசங்களாலும் விளக்கப்படுகின்றன. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளும் இதனை ஏற்றுக்கொள்கின்றன.
D) அனைத்தும் சரி
விளக்கம்: வேதங்களில் கூறப்பட்டுள்ள அரிய உண்மைகள் இன்றைய உலகில் அறிவியல் உண்மைகளோடு மிகவும் ஏற்புடையதாய் காணப்படுகிறது. மேலும், இன்றைய வாழ்வில் அடிப்படைப் பண்பாட்டுக் கூறுகளையும் பிரதிபலிக்கின்றன.
புவியின் வயது, விண்வெளியில் எல்லைகள், சூரியனின் உட்பகுதி வானநூல் பற்றிய கருத்துகளை வேதங்கள் கூறுகின்றன. இவை அனைத்தும் இன்றைய அறிவியல் உலகால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும்.
ஆயுர்வேதம் எனப்படும் மருத்துவ இயல், தனுர்வேதம் எனப்படும் போர்க்கலை, கந்தர்வ வேதம் எனப்பணுடும் நுண்கலை ஆகிய மூன்று வேதங்களாலும், இதிகாசங்களாலும் விளக்கப்படுகின்றன. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளும் இதனை ஏற்றுக்கொள்கின்றன.
231) கூற்றுகளை ஆராய்க.
1. ஆயுர்வேத மருத்துவம் ஆன்மீகத்தையும், மருத்துவத்தையும் இணைக்கிறது.
2. மூலிகை மருத்துவம் பற்றிய தெளிவான அறிவை ஆயுர்வேதம் கூறுகிறது
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. ஆயுர்வேத மருத்துவம் ஆன்மீகத்தையும், மருத்துவத்தையும் இணைக்கிறது.
2. மூலிகை மருத்துவம் பற்றிய தெளிவான அறிவை ஆயுர்வேதம் கூறுகிறது
232) வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செய்தி எது
A) உலோகவியல் பற்றிய கருத்துக்கள்
B) காலக் கணக்கிற்கு உதவும் கணித அறிவு
C) விண்வெளியில் காணப்படும் பல்வேறு கிரகங்கள், நட்சத்திரங்கள் பற்றிய விளக்கமான செய்திகள்
D) அனைத்தும் சரி
விளக்கம்: உலோகவியல் பற்றிய கருத்துக்கள்
காலக் கணக்கிற்கு உதவும் கணித அறிவு
விண்வெளியில் காணப்படம் பல்வேறு கிரகங்கள், நட்சத்திரங்கள் பற்றிய விளக்கமான செய்திகள்
233) “நியாய வைசேடிகம்” என்ற தத்துவம் எதைப் பற்றியது?
A) அணு விஞ்ஞானம்
B) புவியியல்
C) தனிமனித வாழ்க்கை
D) சமூக வாழ்க்கை
விளக்கம்: “நியாய வைசேடிகம்” என்ற தத்துவம் அணு விஞ்ஞானம், அணுவின் அமைப்பையும், தன்மையையும், ஆற்றலையும் குறிப்பிடுகிறது
234) வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செய்தி எது?
1. இந்தியாவின் இருப்பிடம், வல்லுநர்களால் கூறப்பட்டுள்ள அட்ச, தீர்க்க ரேகைகள் மற்றும் கிரகணத்தை முன் கூட்டியே கணக்கிடும் கலை.
2. தனிமனித வாழ்க்கை, சமூகவாழ்க்கை, தனிமனிதன் சமூகத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் மற்றும் பொதுமக்களின் கடமைகள் பற்றியச் செய்திகள்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. இந்தியாவின் இருப்பிடம், வல்லுநர்களால் கூறப்பட்டுள்ள அட்ச, தீர்க்க ரேகைகள் மற்றும் கிரகணத்தை முன் கூட்டியே கணக்கிடும் கலை.
2. தனிமனித வாழ்க்கை, சமூகவாழ்க்கை, தனிமனிதன் சமூகத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் மற்றும் பொதுமக்களின் கடமைகள் பற்றியச் செய்திகள்.
ஆகியவை வேதத்தில் இடம்பெற்றுள்ளன.
235) கூற்றுகளை ஆராய்க.
1. வேத உபநிடதங்களை ஏற்கும் “சனாபதன தர்மம்” என்ற இந்து மதத்திற்கு ஒரு குறிப்பிட்ட நூல் மட்டுமே புனித நூலாக அமையவில்லை.
2. வேதம், உபநிடதம், பகவத் கீதை, புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவை மனித இயல்புகளுக்குத் தக்கபடி வாழ்க்கை நெறிமுறை மற்றும் தத்துவங்களைப் போதிக்கிறது.
3. வேதங்களில் யாகங்களும் எளிதில் புரிந்துகொள்ள முடியாத தத்துவ உண்மைகளும் காணப்படுகின்றன. எனவே, உபநிடதங்களை அனைவரும் புரிந்துகொண்டு, நடைமுறை வாழ்க்கை மேற்கொள்ள பகவத்கீதை, புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் வழிகாட்டுகின்றன.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) 3 மட்டும் சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: 1. வேத உபநிடதங்களை ஏற்கும் “சனாபதன தர்மம்” என்ற இந்து மதத்திற்கு ஒரு குறிப்பிட்ட நூல் மட்டுமே புனித நூலாக அமையவில்லை.
2. வேதம், உபநிடதம், பகவத் கீதை, புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவை மனித இயல்புகளுக்குத் தக்கபடி வாழ்க்கை நெறிமுறை மற்றும் தத்துவங்களைப் போதிக்கிறது.
3. வேதங்களில் யாகங்களும் எளிதில் புரிந்துகொள்ள முடியாத தத்துவ உண்மைகளும் காணப்படுகின்றன. எனவே, உபநிடதங்களை அனைவரும் புரிந்துகொண்டு, நடைமுறை வாழ்க்கை மேற்கொள்ள பகவத்கீதை, புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் வழிகாட்டுகின்றன.