Book Back QuestionsTnpsc

வளங்கள் Book Back Questions 6th Social Science Lesson 12

6th Social Science Lesson 12

12] வளங்கள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

ஒரு பொருளின் பயன்பாட்டினைக் கண்டறிந்த பின்பு தான் அப்பொருள் வளமாக மாறுகிறது. மனிதனின் தேவைகள் நாளுக்கு நாள் மாறுபடும் பொழுது அதை நிறைவு செய்கின்ற வளங்களும் மாறுகிறது. ஒரு பொருளை வளமாக மாற்றுவதற்கான காரணிகள் காலமும் தொழில் நுட்பமும் ஆகும். உதாரணமாக நிலக்கரியும், பெட்ரோலியமும் குறைந்து கொண்டே வரும் இக்கால கட்டத்தில், புதிய கண்டுபிடிப்பான சூரியத் தகடுகள், சூரிய ஆற்றலை மின்னாற்றலாக மாற்ற உதவுகிறது எனவே தற்போது இது ஒரு சிறந்த வளமாகவே நீடிக்கிறது.

கடல் ஈஸ்ட்டானது (Marine Yeast) நிலப்பரப்பிலுள்ள ஈஸ்டைவிட (Terrestrial Yeast) மிகுந்த ஆற்றல் உடையது. இச்சத்தை ரொட்டி தயாரித்தல், மது வடித்தல், திராட்சை ரசம் தயாரித்தல், உயிரி எத்தினால் தயாரித்தல் மற்றும் மருத்துவப்புரதம் தயாரித்தலுக்குப் பயன்படுகிறது.

வெப்ப மண்டல மழைக்காடுகள் “உலகின் பெரும் மருந்தகம்” (world’s largest pharmacy) என அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் காணப்படும் தாவரங்களில் 25% தாவரங்கள் மருத்துவ குணம் கொண்ட தாவரங்களாகும் (எ. கா) சின்கோனா.

ஸ்பெர்ம் திமிங்கலத்தில் இருந்து பெறப்படும் ஒரு வகை திடப்பொருளே திமிங்கலப் புனுகு ஆகும். ஒரு பவுண்டு (0. 454 கி. கி) திமிங்கலப்புனுகின் விலை 63, 000 அமெரிக்க டாலர் மதிப்புடையதாகும். இது வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.

பொருத்துக:

1. இயற்கை வளம் – கனிமங்கள்

2. பன்னாட்டு வளம் – நிலையான வளர்ச்சி

3. குறைத்தல், மறு பயன்பாடு மறுசுழற்சி – காற்று

4. புதுப்பிக்க இயலாதது – உற்பத்தி செய்தல்

5. உலகளாவிய வளம் – திமிங்கலப் புனுகு

6. இரண்டாம் நிலை செயல்பாடுகள் – காடு

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. கரும்பிலிருந்து _________ தயாரிக்கப்படுகிறது.

2. வளங்களை __________ கையாளுதல் வளங்களின் பாதுகாப்பு எனப்படுகிறது.

3. குறிப்பிட்ட பகுதிகளில் காணப்படும் வளங்கள் __________ எனப்படுகிறது.

4. தற்போது பயன்படுத்தப்படும் வளங்கள் __________ என்று அழைக்கப்படுகிறது.

5. __________ வளம் மிகவும் மதிப்பு மிக்க வளமாகும்.

6. இயற்கை வளங்களைச் சேகரித்தல் ___________ எனப்படுகிறது.

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. வாக்கியம்: வெப்ப மண்டலப் பகுதிகளில் அனல் மின்னாற்றலுக்குப் பதிலாக சூரிய ஒளி ஆற்றல் ஒரு சிறந்த மாற்று ஆகும்.

புரிதல் 1: நிலக்கரியும் பெட்ரோலியமும் குறைந்து கொண்டே வருகிறது.

புரிதல் 2: சூரிய ஆற்றல் என்றும் குறையாது.

சரியான விடையைத் தேர்ந்தெடு:

(அ) புரிதல் 1 மட்டும் சரி

(ஆ) புரிதல் 2 மட்டும் சரி

(இ) புரிதல் 1 மற்றும் 2 தவறு

(ஈ) புரிதல் 1 மற்றும் 2 சரி

2. வாக்கியம்: வளங்களைப் பாதுகாக்காவிடில் மனித இனம் அழிந்து விடும்.

புரிதல் 1: வளங்களைப் பாதுகாக்க வேண்டாம்.

புரிதல் 2: வளங்களைப் பாதுகாக்க வேண்டும்.

சரியான விடையைத் தேர்ந்தெடு:

(அ) புரிதல் 1 மட்டும் சரி

(ஆ) புரிதல் 2 மட்டும் சரி

(இ) புரிதல் 1 மற்றும் 2 தவறு

(ஈ) புரிதல் 1 மற்றும் 2 சரி

3. வாக்கியம்: மனிதன் விவசாயம் செய்ய தீர்மானித்தான்.

புரிதல் 1: உணவு சேகரித்து வந்த மனிதனுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது.

புரிதல் 2: மனிதன் சேகரித்த உணவு ஊட்டமிக்கதாக இல்லை.

சரியான விடையைத் தேர்ந்தெடு:

(அ) புரிதல் 1 மட்டும் சரி

(ஆ) புரிதல் 2 மட்டும் சரி

(இ) புரிதல் 1 மற்றும் 2 தவறு

(ஈ) புரிதல் 1 மற்றும் 2 சரி

வளங்களைப் பாதுகாக்க மூன்று பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி என்ற சொற்களைச் சரியான இடத்தில் எழுதுக:

1. நீ இளம் வயதில் பயன்படுத்திய மிதிவண்டியை உனது பக்கத்து வீட்டு குழந்தைக்குக் கொடுத்தல் __________

2. கழிப்பறையில் குறைவான நீரைப் பயன்படுத்துதல் __________

3. பயன்படுத்திய நெகிழிப் பொருள்களை உருக்கிச் சாலை அமைத்தல் __________

பொருத்துக: (விடைகள்)

1. இயற்கை வளம் – காடு

2. பன்னாட்டு வளம் – திமிங்கலப் புனுகு

3. குறைத்தல், மறு பயன்பாடு, மறுசுழற்சி – நிலையான வளர்ச்சி

4. புதுப்பிக்க இயலாதது – கனிமங்கள்

5. உலகளாவிய வளம் – காற்று

6. இரண்டாம் நிலை செயல்பாடுகள் – உற்த்தி செய்தல்

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. சர்க்கரை 2. கவனமாக 3. உள்ளுர் வளங்கள் 4. கண்டறியப்பட்ட

5. மனித 6. வளத்திட்டமிடல்

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க: (விடைகள்)

1. புரிதல் 1 மற்றும் 2 சரி

2. புரிதல் 2 மட்டும் சரி

3. புரிதல் 1 மற்றும் 2 தவறு

வளங்களை பாதுகாப்பதற்கான மூன்று பரிந்துரைகள்: (விடைகள்)

1. மறுசுழற்சி 2. குறைத்தல் 3. மறுபயன்பாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!