MCQ Questions

வளங்கள் 6th Social Science Lesson 12 Questions in Tamil

6th Social Science Lesson 12 Questions in Tamil

12. வளங்கள்

1. சரியான இணையைத் தேர்ந்தெடு.

1. பணமதிப்புள்ள வளங்கள் – (எ.கா) பெட்ரோலியம்

2. பணமதிப்பற்ற வளங்கள் – (எ.கா) காற்று

A) இரண்டும் சரி

B) 1 மட்டும் சரி

C) 2 மட்டும் சரி

D) இரண்டும் தவறு

விடை மற்றும் விளக்கம்

A) இரண்டும் சரி

(குறிப்பு: மனிதனின் தேவையை நிறைவு செய்யும் எந்தவொரு பொருளும் வளமாகும். எல்லா வளங்களுக்கும் மதிப்பு உண்டு. பொருளாதாரத்தில் பண மதிப்புள்ள வளங்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. பணமதிப்பற்ற வளங்கள் எளிதில் கிடைக்கக்கூடியதாக இருக்கும்.)

2. ஒரு பொருளை வளமாக மாற்றுவதற்கான காரணிகள் எவை?

1. பயன்பாடு 2. காலம் 3. தொழில்நுட்பம்

4. பரவல் 5. வளர்ச்சி நிலை

A) 1, 2, 3

B) 1, 4, 5

C) 4, 5

D) 2, 3

விடை மற்றும் விளக்கம்

D) 2, 3

(குறிப்பு: ஒரு பொருளின் பயன்பாட்டினைக் கண்டறிந்த பின்புதான் அப்பொருள் வளமாக மாறுகிறது.)

3. மணல் என்ற இயற்கை வளத்திலிருந்து __________ என்ற தனிமத்தை பிரித்து அதிலிருந்து PV செல்களை பயன்படுத்தி ஒளி மின்னழுத்தக் கலம் தயாரிக்கப்படுகிறது.

A) யுரேனியம்

B) தோரியம்

C) சிலிக்கான்

D) சோடியம்

விடை மற்றும் விளக்கம்

C) சிலிக்கான்

(குறிப்பு: ஒளி மின்னழுத்தக்கலம் சூரிய ஆற்றலை மின்னாற்றலாக மாற்றுகின்றன. PV – Photo Voltaic)

4. வளங்கள் எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விடை மற்றும் விளக்கம்

B) 3

(குறிப்பு: 1. இயற்கை வளங்கள் 2. மனிதனால் உருவாக்கப்பட்ட வளங்கள் 3. மனித வளங்கள்)

5. காற்று, நீர், மண், கனிமங்கள், நம்மைச் சுற்றியுள்ள இயற்கைத் தாவரங்கள் மற்றும் விலங்குகள் அனைத்தும் __________ வளங்கள்.

A) கண்டறியப்பட்ட வளங்கள்

B) மறைந்திருக்கும் வளங்கள்

C) மனித வளங்கள்

D) இயற்கை வளங்கள்

விடை மற்றும் விளக்கம்

D) இயற்கை வளங்கள்

(குறிப்பு: இயற்கையிலிருந்து நேரடியாகப் பெறப்படும் அனைத்து வளங்களும் இயற்கை வளங்கள் எனப்படும்.)

6. இயற்கை வளங்களின் பயன்பாடு கீழ்க்கண்ட எவற்றை சார்ந்திருக்கும்?

1. காணப்படும் இடம்

2. காணப்படும் நிலை

3. பயன்பாட்டிற்கு கொண்டு வரும் தொழில்நுட்பம்

4. தொழிலாளர்கள்

A) அனைத்தும்

B) 1, 2, 4

C) 2, 3, 4

D) 1, 2, 3

விடை மற்றும் விளக்கம்

D) 1, 2, 3

(குறிப்பு: இயற்கை வளங்களை அதன் தோற்றம், வளர்ச்சி நிலை, புதுப்பித்தல், பரவல் மற்றும் உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தலாம்.)

7. தோற்றத்தின் அடிப்படையில் வளங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?

1. உயிரியல் வளங்கள்

2. உயிரற்ற வளங்கள்

3. கண்டறியப்பட்ட வளங்கள்

4. மறைந்திருக்கும் வளங்கள்

A) 1, 3

B) 3, 4

C) 1, 2

D) 2, 4

விடை மற்றும் விளக்கம்

C) 1, 2

(குறிப்பு: உயிருள்ள அனைத்தும் உயிரியல் வளங்கள் எனப்படும். (எ.கா) தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள்.

உயிரில்லாத அனைத்து வளங்களும் உயிரற்ற வளங்கள் எனப்படும். (எ.கா) நிலம், நீர், காற்று மற்றும் கனிமங்கள்)

8. கூற்று 1: பழங்கால மனிதன் மாற்று வளங்களை தேடி புவியைத் தோண்டும்போது முதலில் தாமிரத்தையும் பின்பு இரும்பையும் கண்டுபிடித்தான்.

கூற்று 2: உலகில் காணப்படும் உயிருள்ள பொருள்கள் மனிதனால் அடையாளம் காணப்பட்ட பிறகுதான் உயிரியல் வளங்களாக அறியப்பட்டன.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

விடை மற்றும் விளக்கம்

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

(குறிப்பு: தாமிரம், இரும்பு ஆகியவற்றைத் தேடும் முயற்சியின்போது வேறு சில விலைமதிப்புள்ள உலோகங்களையும் கண்டறிந்து அவற்றினால் அணிகலன்கள் செய்தான். இவ்வாறு சுரங்கத் தொழில் உருவானது.)

9. கீழ்க்கண்டவற்றுள் முதல்நிலை செயல்பாடுகள் எவை?

1. வேட்டையாடுதல் 2. உணவு சேகரித்தல்

3. மீன்பிடித்தல் 4. காட்டு வளங்களை சேகரித்தல்

A) அனைத்தும்

B) 1, 3

C) 1, 2, 4

D) 1, 4

விடை மற்றும் விளக்கம்

A) அனைத்தும்

(குறிப்பு: முதல் நிலைச் செயல்பாடுகளினால் வளங்களில் பற்றாக்குறை ஏற்பட்டதால் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பின் மூலமாக மனிதன் தனது அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து கொண்டான்.)

10. வளர்ச்சி நிலையின் அடிப்படையில் வளங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?

1. புதுப்பிக்கக்கூடிய வளங்கள் 2. புதுப்பிக்க இயலா வளங்கள்

3. கண்டறியப்பட்ட வளங்கள் 4. மறைந்திருக்கும் வளங்கள்

A) அனைத்தும்

B) 1, 2

C) 3, 4

D) 1, 4

விடை மற்றும் விளக்கம்

C) 3, 4

(குறிப்பு: கண்டறியப்பட்ட வளங்கள் தற்போது பயன்படுத்தப்படுவதும் அதனஇருப்பின் அளவும் அறியப்பட்டிருக்கிறது. மறைந்திருக்கும் வளங்கள் என்பது தற்பொழுது அதிக பயன்பாட்டில் இல்லாததும், அதன் அளவு மற்றும் இருப்பிடம் அறியப்படாமல் இருப்பதும் ஆகும்.)

11. கூற்று 1: கடல் ஈஸ்ட்டானது நிலப்பரப்பிலுள்ள ஈஸ்டைவிட மிகுந்த ஆற்றல் உடையது.

கூற்று 2: கடல் ஈஸ்ட் ரொட்டித் தயாரித்தல், மது வடித்தல், திராட்சை ரசம் தயாரித்தல், உயிரி எத்தினால் தயாரித்தல் மற்றும் மருத்துவப்புரதம் தயாரித்தலுக்குப் பயன்படுகிறது.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

விடை மற்றும் விளக்கம்

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

(குறிப்பு: வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடலில் கடல் ஈஸ்ட் (Marine yeast) காணப்படுகிறது.)

12. தவறான கூற்றைத் தேர்ந்தெடு.

A) ஒரு முறை பயன்படுத்தப்பட்ட வளங்கள் பின்னர் கால சுழற்சிக்கு ஏற்ப புதுப்பித்துக் கொள்ள இயலும் தன்மையுடைய வளங்கள் புதுப்பிக்கக் கூடிய வளங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

B) புதுப்பிக்கக்கூடிய வளங்களைத் தவறாக பயன்படுத்தினாலும் குறைவதற்கு வாய்ப்புகள் இல்லை.

C) குறிப்பிட்ட அளவில் உள்ள அனைத்து வளங்களும் புதுப்பிக்க இயலா வளங்கள் ஆகும்.

D) புதுப்பிக்க இயலா வளங்கள் உருவாக நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும்.

விடை மற்றும் விளக்கம்

B) புதுப்பிக்கக்கூடிய வளங்களைத் தவறாக பயன்படுத்தினாலும் குறைவதற்கு வாய்ப்புகள் இல்லை.

(குறிப்பு: புதுப்பிக்கக்கூடிய வளங்களைத் தவறாக பயன்படுத்தும் போது குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு.)

13. கீழ்க்கண்டவற்றுள் பயன்பாட்ற்கு வராத வளம் அல்லது மறைந்திருக்கும் வளம் எது?

A) நிலக்கரி

B) பெட்ரோலியம்

C) கனிமங்கள்

D) காற்றாற்றல்

விடை மற்றும் விளக்கம்

D) காற்றாற்றல்

(குறிப்பு: மனிதன், புதிய பொருள்களை, வளமா அல்லது வளமற்றதா என்று பல ஆய்வுகள் செய்து அறிந்த பின்பு, அவற்றைப் பிரித்தெடுக்க புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி அப்பொருளின் பரவலைக் கண்டறிய முயல்கிறான். இவ்வகை வளங்கள் பயன்பாட்டிற்கு வராத வளங்கள் அல்லது மறைந்திருக்கும் வளங்கள் ஆகும்.)

14. கூற்று 1: ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே காணப்படும் வளங்கள் உள்ளுர் வளங்கள் என்கிறோம்.

கூற்று 2: உலகின் அனைத்துப் பகுதிகளிலும் காணப்படும் வளங்கள் உலகளாவிய வளங்கள் எனப்படும்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

விடை மற்றும் விளக்கம்

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

(குறிப்பு: வளங்கள் அதன் பரவலின் அடிப்படையில், உள்ளுர் வளங்கள் மற்றும் உலகளாவிய வளங்கள் என்று வகைப்படுத்தப்படுகின்றன. உள்ளூர் வளங்கள் – (எ.கா) கனிமங்கள், உலகளாவிய வளங்கள் – (எ.கா) சூரிய ஒளி, காற்று)

15. உரிமையின் அடிப்படையில் வளங்கள் எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விடை மற்றும் விளக்கம்

C) 4

(குறிப்பு: உரிமையின் அடிப்படையில் வளங்களை தனிநபர் வளங்கள், சமூக வளங்கள், நாட்டு வளங்கள், பன்னாட்டு வளங்கள் என்று வகைப்படுத்தலாம்.)

16. தவறான இணையைத் தேர்ந்தெடு.

A) தனிநபர் வளங்கள் – (எ.கா) அடுக்குமாடிக் கட்டடங்கள்

B) சமூக வளங்கள் – (எ.கா) கனிமங்கள்

C) நாட்டு வளங்கள் – இந்தியாவின் வெப்பமண்டல மழைக்காடுகள்

D) பன்னாட்டு வளங்கள் – (எ.கா) திமிங்கல புனுகு

விடை மற்றும் விளக்கம்

B) சமூக வளங்கள் – (எ.கா) கனிமங்கள்

(குறிப்பு: சமூக வளங்கள் – (எ.கா) பூங்கா

தனிநபர் வளங்கள், ஒரு தனி நபருக்கு மட்டுமே சொந்தமானவையாகும்.

சமூக வளங்கள் என்பது ஒரு பகுதியில் வாழும் மக்கள் தங்கள் பகுதியில் உள்ள வளத்தினைப் பயன்படுத்திக் கொள்வர்.

நாட்டு வளங்கள் என்பது ஒரு நாட்டின் அரசியல் எல்லைக்குட்பட்ட நிலப்பகுதிகள் மற்றும் பெருங்கடல் பகுதிகளுக்கு உட்பட்ட வளங்களாகும்.

எந்த ஒரு நாட்டின் எல்லைக்கும் உட்படாத மிகப் பரந்த திறந்தவெளி பெருங்கடல் பகுதியில் காணப்படும் வளங்கள் பன்னாட்டு வளங்கள் எனப்படும்.)

17. “உலகின் பெரும் மருந்தகம்” என்று அழைக்கப்படும் காடுகள் எவை?

A) சதுப்பு நிலக் காடுகள்

B) முட்புதர்க்காடுகள்

C) பசுமை மாறாக் காடுகள்

D) வெப்ப மண்டல மழைக்காடுகள்

விடை மற்றும் விளக்கம்

D) வெப்ப மண்டல மழைக்காடுகள்

(குறிப்பு: இப்பகுதியில் காணப்படும் தாவரங்களில் 25% தாவரங்கள் மருத்துவ குணம் கொண்ட தாவரங்களாகும். (எ.கா) சின்கோனா)

18. கூற்று 1: ஸ்பெர்ம் திமிங்கலத்தில் இருந்து பெறப்படும் ஒரு வகை திடப்பொருளே திமிங்கலப்புனுகு ஆகும்.

கூற்று 2: ஒரு பவுண்டு (0.454 கி.கி) திமிங்கலப் புனுகின் விலை 63,000 அமெரிக்க டாலர் மதிப்புடையதாகும்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

விடை மற்றும் விளக்கம்

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

(குறிப்பு: திமிங்கலப்புனுகு வாசனை திரவியங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.)

19. இயற்கையிலிருந்து புதிய வளங்களை உருவாக்கும் தனிநபர் குழுக்கள் ___________ என அழைக்கப்படுகிறது.

A) ஆராய்ச்சியாளர்கள்

B) சமூக சேவகர்கள்

C) நற்சிந்தனையாளர்கள்

D) மனிதவளம்

விடை மற்றும் விளக்கம்

D) மனிதவளம்

(குறிப்பு: மனிதன் ஒரு இயற்கை வளம்.மனிதன் ஒரு மதிப்புமிகு வளமாக பார்ப்பதற்குக் காரணம் அவனிடம் உள்ள கல்வி, உடல்நலம், அறிவு மற்றும் திறனாகும்.)

20. மூலப்பொருள்களிலிருந்து வேறு பயன்பாட்டுப் பொருள்களாக மாற்றும் செயல்பாடு _________ எனப்படும்.

A) முதல் நிலை செயல்பாடுகள்

B) இரண்டாம் நிலை செயல்பாடுகள்

C) மூன்றாம் நிலை செயல்பாடுகள்

D) நான்காம் நிலை செயல்பாடுகள்

விடை மற்றும் விளக்கம்

B) இரண்டாம் நிலை செயல்பாடுகள்

(குறிப்பு: இயற்கை வளங்கள் தொழில் நுட்பத்தினால் மாற்றுருவாக்கம் செய்யப்பட்டு புதிய பொருள்களாக கிடைக்கின்றன. இவ்வாறு பெறப்பட்ட வளங்கள் மனிதனால் உருவாக்கப்பட்ட வளங்கள் என்று அழைக்கிறோம்.)

21. வங்கி, வணிகம் மற்றும் தகவல் தொடர்புத் துறை ஆகியவை எந்த வகை செயல்பாட்டிற்கு எடுத்துக்காட்டுகளாகும்

A) முதல் நிலை செயல்பாடுகள்

B) இரண்டாம் நிலை செயல்பாடுகள்

C) மூன்றாம் நிலை செயல்பாடுகள்

D) நான்காம் நிலை செயல்பாடுகள்

விடை மற்றும் விளக்கம்

C) மூன்றாம் நிலை செயல்பாடுகள்

(குறிப்பு: முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலையில் கிடைக்கப்படும் பொருள்களை பகிர்வதற்கான போக்குவரத்து மற்றும் வணிக அமைப்பே மூன்றாம் நிலை செயல்பாடுகள் எனப்படும்.)

22. ஒரு நாட்டின் மனித வளம் கீழ்க்கண்ட எவற்றைச் சார்ந்துள்ளது?

1. அந்நாட்டிலுள்ள நிறுவனங்கள்

2. அமைப்புகளின் எண்ணிக்கை

3. தரம்

A) அனைத்தும்

B) 1, 2

C) 2, 3

D) 1, 3

விடை மற்றும் விளக்கம்

விடை: A) அனைத்தும்

23. “வளங்கள் மனிதனின் பேராசைக்கு அன்று, அவனது தேவைக்கு மட்டுமே” என்று கூறியவர்

A) வல்லபாய் படேல்

B) நேரு

C) காந்தி

D) இந்திரா காந்தி

விடை மற்றும் விளக்கம்

C) காந்தி

(குறிப்பு: உலகில் வளங்கள் குறைவதற்கு மனித இனமே காரணம் எனவும் காந்தி கூறுகிறார். ஏனென்றால்,

i) வளங்கள் மிகுதியாக எடுக்கப்படுகின்றன.

ii) மனிதத் தேவைகளும் எல்லையை மீறுகின்றன.)

24. தவறான கூற்றைத் தேர்ந்தெடு.

A) வளத்திட்டமிடுதல் என்பது வளங்களை சரியாக பயன்படுத்தும் திறன் ஆகும்.

B) வளங்களை கவனமாக கையாளுதல் என்பது மறுசுழற்சி எனப்படுகிறது.

C) நிகழ்காலத் தேவைகளையும் பூர்த்தி செய்து வருங்காலத் தலைமுறையினருக்கும் போதுமான வளங்களை விட்டு வைத்து, சமநிலைத் தன்மையோடு ஏற்படும் வளர்ச்சியே நிலையான வளர்ச்சி எனப்படும்.

D) வளங்களை பாதுகாக்க வேண்டுமெனில் குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி செய்தல் ஆகிய மூன்று வழிமுறைகளை (3RS) பின்பற்ற வேண்டும்.

விடை மற்றும் விளக்கம்

B) வளங்களை கவனமாக கையாளுதல் என்பது மறுசுழற்சி எனப்படுகிறது.

(குறிப்பு: வளங்களை கவனமாக கையாளுதல் என்பது வளங்களைப் பாதுகாத்தல் எனப்படுகிறது.)

25. “கேடறியாக் கெட்ட இடத்தும்———-

நாடென்ப நாட்டின் தலை”

என்ற குறளில் கூறப்படுவது

A) அரசின் வரி விதிப்பு முறை

B) மக்களின் பொருளாதார நிலை

C) மக்களின் கல்வி

D) நாட்டின் வளம்

விடை மற்றும் விளக்கம்

D) நாட்டின் வளம்

(குறிப்பு: “கேடறியாக் கெட்ட இடத்தும்———-

நாடென்ப நாட்டின் தலை”

எந்த வகையிலும் கெடுதலை அறியாமல், ஒருவேளை கெடுதல் ஏற்படினும், அதனை சீர்செய்யுமளவிற்கு வளங்குன்றா நிலையில் உள்ள நாடுதான் நாடுகளிலே தலை சிறந்த நாடாகும்.)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!