Tnpsc

மக்களாட்சி Online Test 11th Political Science Lesson 5 Questions in Tamil

மக்களாட்சி-11th Political Science Lesson 5 Questions in Tamil-Online Test

Congratulations - you have completed மக்களாட்சி-11th Political Science Lesson 5 Questions in Tamil-Online Test. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
மக்களாட்சி என்ற சொல் எந்த கிரேக்க சொற்களிலிருந்து பெறப்பட்டது?
A
டெமோஸ்
B
கிரேட்டோஸ்
C
அ, ஆ இரண்டும்
D
ஏதுமில்லை
Question 1 Explanation: 
மக்களாட்சி என்ற சொல், கிரேக்க சொற்களான “டெமோஸ்” மற்றும் “கிரேட்டோஸ்” என்ற இரு சொற்களில் இருந்து உருவானது.
Question 2
மக்கள் என்ற பொருளைத் தரும் கிரேக்க சொல்
A
டெமோஸ்
B
கிரேட்டோஸ்
C
அ, ஆ இரண்டும்
D
ஏதுமில்லை
Question 2 Explanation: 
மக்கள் என்ற பொருளைத் தரும் கிரேக்க சொல் டெமோஸ்.
Question 3
கிரேட்டோஸ் என்ற கிரேக்கச் சொல்லின் பொருள்
A
மக்கள்
B
ஆட்சி
C
குடியரசு
D
மக்களாட்சி
Question 3 Explanation: 
கிரேட்டோஸ் என்றால் ஆட்சி என்று பொருள் படும்.
Question 4
தற்போதைய நவீன கால மக்களாட்சி முறை எந்த நாட்டிலிருந்து தோன்றியது
A
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
B
ரஷ்யா
C
இத்தாலி
D
பிரிட்டன்
Question 4 Explanation: 
மக்களாட்சியின் தொடக்கம் பண்டைய கிரேக்கத்தில் இருந்தாலும் தற்போதைய நவீன கால மக்களாட்சி முறையானது பிரிட்டனில் இருந்தே தொடங்கி வந்துள்ளது.
Question 5
ஒரு நாட்டின் மக்களாட்சி எதன் அடிப்படையில் அமைகிறது?.
A
சமூக அமைப்பின் வகைமுறை
B
தேசியம்
C
அ, ஆ இரண்டும்
D
ஏதுமில்லை
Question 5 Explanation: 
ஒரு நாட்டின் சமூக அமைப்பின் வகைமுறை அல்லது தேசியத்தின் அடிப்படையி்ல் அங்கு மக்களாட்சி அமைகிறது.
Question 6
“மக்களாட்சி என்பது ஒரு மகிழ்ச்சியான அரசாங்க வகையாகும். இவ்வகை அரசில் எவ்வளவு குழப்பங்கள் இருந்தாலும் எந்த வித பாகுபாடுமின்றி அனைவரும் சமமாக நடத்தப்படுவதற்கும் அதன் மூலம் சமத்துவ சமுதாயத்திற்குமான வழி உள்ளது.” என்ற கூற்றைக் கூறியவர்
A
பிளாட்டோ
B
அரிஸ்டாட்டில்
C
சாக்ரடீஸ்
D
சாணக்கியர்
Question 7
மக்களாட்சியின் வகையையும், அதன் செயல்பாட்டையும் ஒரு நாட்டின் _______ தீர்மானிக்கிறது.
A
பொருளாதார முறை
B
சமூக அமைப்பு முறை
C
சாதி முறை
D
வேளாண்மை முறை
Question 7 Explanation: 
சுதந்திரம் மற்றும் சமத்துவத்தை உருவாக்க மக்களாட்சி அவசியமாகிறது. மேலும் அரசியல் மற்றும் பிற அமைப்புகள் மூலமாக சமத்துவத்தை நிலைநாட்ட மக்களாட்சி உதவுகிறது.
Question 8
பேச்சு சுதந்திரத்திற்கு முக்கியமான கருவி
A
அரசியலமைப்பு
B
அடிப்படை உரிமைகள்
C
முகவுரை
D
மக்களாட்சி முறை
Question 8 Explanation: 
பேச்சு சுதந்திரத்திற்கு ஒரு முக்கியமான கருவியாக மக்களாட்சி முறை உள்ளது.
Question 9
“சகிப்பின்மையே கூட ஒரு வகையான வன்முறைதான், உண்மையான மக்களாட்சி மலர இதுவே மிகப்பெரிய தடையாகும்.” என்று கூறியவர்
A
மகாத்மா காந்தி
B
அரிஸ்டாட்டில்
C
பிளாட்டோ
D
சாக்ரடீஸ்
Question 10
மக்களாட்சி முறை அரசாங்கத்தில் அதிகார மற்றும் குடிமைப்பொறுப்புகள் யாரிடம் உள்ளது?
A
மக்கள்
B
மக்கள் பிரதிநிதிகள்
C
அ, ஆ இரண்டும்
D
ஏதுமில்லை
Question 10 Explanation: 
மக்களாட்சி முறை அரசாங்கத்தில் அதிகார மற்றும் குடிமைப்பொறுப்புகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடமே உள்ளது.
Question 11
“ஓர் அரசின் மகிமையே  அதன் மக்களாட்சியில் உள்ள சுதந்திரம் தான். எனவே மக்களாட்சியானது இயற்கையாகவே அரசில் சுதந்திரம் இருக்குமாறு உருவாக்கப்பட்டுள்ளது.” என்ற வரையறையை கூறியவர்
A
மகாத்மா காந்தி
B
அரிஸ்டாட்டில்
C
பிளாட்டோ
D
சாக்ரடீஸ்
Question 12
கீழ்க்கண்டவற்றுள் மக்களாட்சியின் பண்புகளாகக் கருதப்படுபவை
  1. மக்களாட்சி என்பது தனிமனித சுதந்திரத்தை காப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட கொள்கைகள் மற்றும் செயல்முறைகள் உள்ள ஓர் ஆட்சி முறையாகும்.
  2. தனிமனித உரிமைகள், மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளை உள்ளடக்கிய பெரும்பான்மையோரின் ஆட்சி என்ற கொள்கை அடிப்படையில் மக்களாட்சி அமைந்துள்ளது.
  3. மக்களாட்சியில் மட்டுமே சுதந்திரமான மற்றும் நேர்மையான அனைத்து குடிமக்களும் பங்கேற்கும் வகையில் தேர்தல் நடைபெறும்.
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
3 மட்டும்
D
மேற்கூறிய அனைத்தும்
Question 12 Explanation: 
மக்களாட்சி என்பது பல்வேறு அரசியல் முறைகளைக் கொண்ட ஒன்றாகும். மக்களாட்சி முறையானது ஒவ்வொரு நாட்டின் அரசியல், சமூக மற்றும் பண்பாட்டு வாழ்வினைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கும்.
Question 13
கீழ்க்கண்டவற்றுள் மக்களாட்சியின் தலையாய பணியாகக் கூறப்படுவது
  1. சட்டத்தின் முன் அனைவரும் சமம், அனைவருக்கும் சமமான சட்ட பாதுகாப்பு
  2. பேச்சுரிமை, மத சுதந்திரம்
  3. அரசியல், பொருளாதார மற்றும் பண்பாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கவும் அவற்றை சமுதாயத்தில் ஏற்பாடு செய்யவுமான உரிமை போன்றவைகளும் மற்றும் மனிதனின் அடிப்படை உரிமைகளை காப்பதுமேயாகும்
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
3 மட்டும்
D
மேற்கூறிய அனைத்தும்
Question 13 Explanation: 
மக்களாட்சியானது, அரசாங்கங்கள் சட்டத்தின் ஆட்சிபடி செயல்படுவதை உறுதி செய்கிறது. மேலும் அனைத்து குடிமக்களும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுவதையும், அவர்களது உரிமைகள் அரசமைப்பு சட்டங்களினால் பாதுகாக்கப்படுவதையும் உறுதிசெய்கிறது.
Question 14
குடிமக்கள் தங்களின் பங்கேற்பின் மூலமாக பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் முறை
A
தொழில்சார் மக்களாட்சி
B
பொருளாதார மக்களாட்சி
C
அரசியல் மக்களாட்சி
D
பொது வாக்கெடுப்பு முறை மக்களாட்சி
Question 14 Explanation: 
அரசியல் மக்களாட்சியில் அரசாங்கத்தில் குடிமக்கள் தங்களின் பங்கேற்பின் மூலமாக பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுப்பர். தேர்ந்தேடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர் ஆவர்..
Question 15
மக்களின் நேரடி ஈடுபாட்டின் மூலமோ அல்லது அவர்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் இயற்றும் சட்டங்களின் மூலமோ மக்களாட்சி செயல்படும் முறை
A
மக்களின் உரிமை
B
மக்களின் துவக்க முறை
C
மக்களின் ஈடுபாடு
D
மக்களின் வாக்கெடுப்பு
Question 15 Explanation: 
மக்களின் நேரடி ஈடுபாட்டின் மூலமோ அல்லது அவர்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் இயற்றும் சட்டங்களின் மூலமோ மக்களாட்சி செயல்படுகிறது. இது மக்களின் துவக்கமுறை (Popular Initiative) என்று அறியப்படுகிறது.
Question 16
சட்டமுன் வரைவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உருவாக்கும் போது அதற்கு மக்கள் தங்கள் வாக்கின் மூலமாக ஒப்புதல் அளிக்கும் முறை
A
மக்களின் உரிமை
B
மக்களின் துவக்க முறை
C
மக்களின் ஈடுபாடு
D
மக்களின் வாக்கெடுப்பு
Question 16 Explanation: 
சட்டமுன்வரைவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உருவாக்கும் போது அதற்கு மக்கள் தங்கள் வாக்கின் மூலமாக ஒப்புதல் அளிக்கின்றனர். இது பொது மக்கள் வாக்கெடுப்பு (Referendum) என்று அறியப்படுகிறது. இது பிரதிநிதித்துவ மக்களாட்சி முறை எனப்படும்.
Question 17
மக்கள் தங்கள் பிரதிநிதிகளை குறிப்பிட்ட சில காலத்திற்கு தேர்ந்தெடுக்கும் மக்களாட்சி முறை
A
நேரடி மக்களாட்சி முறை
B
பிரதிநிதித்துவ மக்களாட்சி முறை
C
மறைமுக மக்களாட்சி முறை
D
ஆ, இ இரண்டும்
Question 17 Explanation: 
மக்கள் தங்கள் பிரதிநிதிகளை குறிப்பிட்ட சில காலத்திற்கு தேர்ந்தெடுக்கிறார்கள். இப்பிரதிநிதிகள் மக்களின் சார்பாகக் கொள்கைகளைத் தீர்மானிக்கிறார்கள். இந்த பிரதிநிதித்துவ மக்களாட்சி முறையே உலகின் பிரதான மக்களாட்சி முறையாக பல்வேறு நாடுகளில் உள்ளது.
Question 18
நேரடி மக்களாட்சி முறை நடைமுறையில் உள்ள நாடு
A
இந்தியா
B
சுவிட்சர்லாந்து
C
ஜெர்மனி
D
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
Question 18 Explanation: 
நேரடி மக்களாட்சி முறையானது கூட்டாட்சி குடியரசான சுவிட்சர்லாந்து நாட்டில் மட்டுமே நடைமுறையில் உள்ளது.
Question 19
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
  1. சமூக, பொருளாதார கொள்கைகளுக்கு ஊக்கம் அளிக்கும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் கருத்துகளின் ஒன்றிணைந்த சேர்க்கையாக சமூக மக்களாட்சி உள்ளது.
  2. சமூக மக்களாட்சி முறையானது பொருளாதாரத்தையும், மக்களின் பங்களிப்பையும் வலுப்படுத்தி சமூக நீதியையும், சமூக சமத்துவத்தையும் மேம்படுத்துகிறது.
  3. சமூக மக்களாட்சியானது பாலினம், பண்பாடு, நம்பிக்கைகள், மரபுகள் மற்றும் விழுமியங்களில் சமூக சமத்துவத்தை நிலைநாட்டுவதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டுள்ளது.
A
கூற்று 1 மட்டும்
B
கூற்று 2 மட்டும்
C
கூற்று 3 மட்டும்
D
மேற்கூறிய அனைத்தும்
Question 20
அமெரிக்காவின் அரசியல் முறையை சிறந்த மக்களாட்சி முறைகளுள் ஒன்று என்று கூறியவர்
A
அலெக்ஸாண்டர்
B
ஜான் வாட்சன்
C
அலெக்ஸ் டி டக்வில்லி
D
அலெக்ஸாண்டர் கன்னிங்காம்
Question 20 Explanation: 
புகழ்பெற்ற பிரெஞ்சு சிந்தனையாளர் அலெக்ஸ் டி டக்வில்லி (Alexis De’ Tocquville) அமெரிக்காவின் அரசியல் முறையை சிறந்த மக்களாட்சி முறைகளுள் ஒன்று என்று புகழ்கிறார். இது பிரபுத்துவ முறைக்கு எதிரானது என்கிறார்.
Question 21
சமத்துவ வளர்ச்சியே சுதந்திரத்திற்கும், சுதந்திரத்தின் வளர்ச்சியே ஒரு நாட்டின் சிறந்த மக்களாட்சிக்கும் அடிப்படை என்று வலியுறுத்தும் மக்களாட்சி
A
தொழில்சார் மக்களாட்சி
B
பொருளாதார மக்களாட்சி
C
சமூக மக்களாட்சி
D
பொது வாக்கெடுப்பு முறை மக்களாட்சி
Question 21 Explanation: 
சமத்துவ வளர்ச்சியே சுதந்திரத்திற்கும், சுதந்திரத்தின் வளர்ச்சியே ஒரு நாட்டின் சிறந்த மக்களாட்சிக்கும் அடிப்படை என்று சமூக மக்களாட்சி வலியுறுத்துகிறது.
Question 22
தொழிற்சாலைகளில் மக்களாட்சி கொள்கைகளின் அடிப்படையில் தொழிலாளர்களின் பாதுகாப்பையும், உரிமைகளையும் மேம்படுத்தி அவர்களைப் பொறுப்புடன் செயலாற்ற வைக்கும் முறை
A
தொழில்சார் மக்களாட்சி
B
பொருளாதார மக்களாட்சி
C
சமூக மக்களாட்சி
D
பொது வாக்கெடுப்பு முறை மக்களாட்சி
Question 22 Explanation: 
முடிவுகள் எடுப்பதில் நிர்வாகத்துடன் தொழிலாளர்கள் இணைந்து செயல்படுவதை தொழில்சார் மக்களாட்சி முறை ஊக்குவிக்கிறது.
Question 23
அனைவருக்குமான சுதந்திரம் மற்றும் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளே மனித உரிமைகளுடனான வாழ்விற்கு அடிப்படை என்று வலியுறுத்தும் மக்களாட்சி
A
தொழில்சார் மக்களாட்சி
B
பொருளாதார மக்களாட்சி
C
சமூக மக்களாட்சி
D
பொது வாக்கெடுப்பு முறை மக்களாட்சி
Question 23 Explanation: 
அனைவருக்குமான சுதந்திரம் மற்றும் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளே மனித உரிமைகளுடனான வாழ்விற்கு அடிப்படை என்று சமூக மக்களாட்சி வலியுறுத்துகிறது. மேலும் ஒவ்வொரு தனிமனிதனையும் அவர்களின் உழைப்பின் மூலம் வாழ்வில் வெற்றி பெற அவனை இயன்றவனாக்குகிறது
Question 24
பொருளாதார சுதந்திரத்தின் மூலமாக, மனிதனின் கண்ணியமான வாழ்விற்கு சமுதாயத்தையும் மற்றும் பொருளாதாரத்தையும் சரியான விகிதத்தில் இணைப்பதே சாத்தியமான வழியாகும் என்று கூறும் மக்களாட்சி
A
தொழில்சார் மக்களாட்சி
B
பொருளாதார மக்களாட்சி
C
சமூக மக்களாட்சி
D
பொது வாக்கெடுப்பு முறை மக்களாட்சி
Question 24 Explanation: 
பொருளாதார சுதந்திரத்தின் மூலமாக, மனிதனின் கண்ணியமான வாழ்விற்கு சமுதாயத்தையும் மற்றும் பொருளாதாரத்தையும் சரியான விகிதத்தில் இணைப்பதே சாத்தியமான வழியாகும் என்று பொருளாதார மக்களாட்சி கூறுகிறது. பொருளாதார உரிமைகளும், சமூக சமத்துவமும் இந்த மக்களாட்சி முறையின் அடிப்படையாக உள்ளது.
Question 25
________ மக்களாட்சி முறையில் மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்த பின் வேறு எந்த முடிவையும் எடுக்கும் அதிகாரமற்றவர்கள்
A
முற்றதிகார மக்களாட்சி முறை
B
பொது வாக்கெடுப்பு முறை மக்களாட்சி
C
சமூக மக்களாட்சி
D
தொழில்சார் மக்களாட்சி
Question 25 Explanation: 
முற்றதிகார மக்களாட்சி முறையில் மக்கள் பிரதிநிதிகளே நாட்டின் அனைத்து முடிவுகளையும் எடுக்கின்றனர்.
Question 26
மக்களின் நலன் என்ற பெயரில் மக்களின் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விடுவதும், பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரத்தை பறித்து ஒட்ட மொத்த மக்களையும் முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போன்ற பண்புகளைக் கொண்டுள்ள மக்களாட்சி
A
முற்றதிகார மக்களாட்சி முறை
B
பொது வாக்கெடுப்பு முறை மக்களாட்சி
C
சமூக மக்களாட்சி
D
தொழில்சார் மக்களாட்சி
Question 26 Explanation: 
முற்றதிகார மக்களாட்சி என்பது நாட்டின் பொருளாதாரத்தின் மேல் முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. மேலும் அதன் மூலம் இது மக்களையும் கட்டுப்படுத்துகிறது.
Question 27
தீவிர முன்னேற்றவாத மக்களாட்சியை சிறந்த மக்களாட்சி என்று புகழ்ந்தவர்
A
எம்.என்.ராய்
B
பிளாட்டோ
C
அரிஸ்டாட்டில்
D
சாக்ரடீஸ்
Question 27 Explanation: 
தீவிர முன்னேற்றவாத மக்களாட்சி முறையை புகழ்பெற்ற இந்திய அரசியல் சிந்தனையாளர் எம்.என்.ராய் அவர்கள் சிறந்த மக்களாட்சி முறை என்று பரிந்துரைத்தார். இந்த முறையில் மட்டுமே உண்மையான மக்களாட்சி மலரும் என்று நம்பினார்.
Question 28
மனித நேயத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள மக்களாட்சி முறை
A
தீவிர முன்னேற்றவாத மக்களாட்சி முறை
B
பொது வாக்கெடுப்பு முறை மக்களாட்சி
C
சமூக மக்களாட்சி
D
தொழில்சார் மக்களாட்சி
Question 28 Explanation: 
தீவிர முன்னேற்றவாத மக்களாட்சி முறையில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் மக்களுக்கு நேரடியாக பதிலளிக்க கடமைப்பட்டவர்கள் ஆவர். தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமியற்றுபவர்களை விட மக்களே அரசியல் அதிகாரத்தின் உண்மையான தலைவர்கள் என்று இது கூறுகிறது
Question 29
மக்களால் தேவைப்பட்டால் அரசாங்கத்தை மாற்றும் அதிகாரத்தைக் கொண்டுள்ள மக்களாட்சி
A
தீவிர முன்னேற்றவாத மக்களாட்சி முறை
B
பொது வாக்கெடுப்பு முறை மக்களாட்சி
C
சமூக மக்களாட்சி
D
தொழில்சார் மக்களாட்சி
Question 29 Explanation: 
மக்களே நாட்டின் மன்னர்கள் ஆவர். ஒவ்வொரு கிராமமும் ஒரு குடியரசு ஆகும். அவைகளின் ஒன்றிணைப்பில் அரசும் மற்றும் அரசாங்கமும் உருவாகின்றன. இந்த கிராம குடியரசுகளே மத்திய மாநில அரசுகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
Question 30
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
  1. பொது வாக்கெடுப்பு முறை மக்களாட்சியில் மக்கள் தங்கள் பிரதிநிதிகளை அல்லது கட்சியை தேர்ந்தெடுத்தல், பொதுவான பிரச்சனைகளில் முடிவெடுத்தல், புதிய அரசியல் அமைப்பைத் தேர்ந்தெடுத்தல் மற்றும் மாகாண சுயநிர்ணயம் போன்றவற்றில் பொது வாக்கெடுப்பின் மூலம் தங்களது நிலைப்பாட்டினை தெரிவிக்கின்றனர்.
  2. மக்கள் விரும்பினால் ஒரு சட்டமுன்வரைவை கொண்டு வருவதற்கும், கொள்கை உருவாக்குவதற்கும் உரிமை பொது வாக்கெடுப்பு முறை மக்களாட்சி முறையில் உள்ளது. ஒரு குறிப்பிட்ட அளவு ஆதரவை மக்கள் தாங்கள் கையெழுத்திட்ட மனு மூலம் தெரிவித்து தாங்கள் விரும்பிய மாற்றங்களை  செய்ய அரசுக்கு பரிந்துரைக்கலாம்.
  3. பொது வாக்கெடுப்பு முறையில் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி சரியாக செயல்படாத போது அல்லது மக்கள் விருப்பத்திற்கு மாறாக செயல்படும் போது, மக்கள் ஒரு குறிப்பிட்ட அளவு கையெழுத்துக்களை அவருக்கு எதிராக சேகரித்து அதன் மூலம் அவரை திரும்ப அழைக்கலாம்.
A
கூற்று 1 மட்டும்
B
கூற்று 2 மட்டும்
C
கூற்று 3 மட்டும்
D
மேற்கூறிய அனைத்தும்
Question 31
மக்களாட்சி என்பது சமூக, பொருளாதார மற்றும் அரசியல் தளத்தில் வாழும் ஓர் நிதர்சனம் அல்லது மெய்மையாகும் என்று கூறியவர்
A
G.D. கோவார்டு கோல்
B
தாமஸ் ஜெஃபரசன்
C
பிளாட்டோ
D
எம். என். ராய்
Question 32
மக்களாட்சியின் தொன்மை கோட்பாடானது எந்த நாட்டிலிருந்து தோன்றியது?
A
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
B
அயர்லாந்து
C
ரஷ்யா
D
பண்டைய கிரேக்க நாடுகள்
Question 32 Explanation: 
கிரேக்கத்தின் புகழ் பெற்ற நகர அரசுகள் யாவும் நேரடியான தேர்தல், பொதுக்கொள்கை மீதான விவாதங்கள், மற்றும் பொதுமக்களே முடிவெடுக்கும் முறை போன்ற மக்களாட்சி விழுமியங்களைக் கொண்டிருந்தன.
Question 33
“மக்களாட்சி அரசாங்கத்தில மேலான அதி்காரம் மக்களிடம் இருக்கும். இந்த அதி்காரத்தை மக்கள் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ தங்கள் பிரதிநிதி்களை தேர்ந்தெடுக்க பயன்படுத்துவர். இங்கு தேர்தல்கள் சீரான இடைவெளியிலும் மற்றும் சுதந்திரமாகவும் நடைபெறும்.” என்ற கருத்தைக் கூறியவர்
A
G.D. கோவார்டு கோல்
B
தாமஸ் ஜெஃபரசன்
C
பிளாட்டோ
D
எம். என். ராய்
Question 34
பண்டைய கிரேக்கத்தில் நேரடியான மக்களாட்சி முறையாக _________ உருவானது
A
பாதுகாக்கும் மக்களாட்சி
B
தொன்மை மக்களாட்சி முறை
C
மார்க்சிய கோட்பாடு
D
குழாம் கோட்பாடு
Question 34 Explanation: 
தொன்மை மக்களாட்சி மமுறையானது ஏதென்ஸ் நகரத்தில்தான் முதன் முதலில் கிமு 800 மற்றும் கிமு 500 க்கும் இடையே உருவானது. ஏதென்ஸ் நகரின் நேரடி மக்களாட்சி முறையில் நகர அரசின் (City State) குடிமக்கள் அனைவரும் சட்டமன்றத்தின் உறுப்பினர்கள் ஆவர்.
Question 35
மக்களாட்சியின் மூன்று தூண்களாகக் கருதப்படுபவை
A
சட்டமன்றம்
B
மக்கள் நீதிமன்றம்
C
நிர்வாகசபை
D
மேற்கூறிய அனைத்தும்
Question 35 Explanation: 
சட்டமன்றம், மக்கள் நீதிமன்றம், நிர்வாகசபை ஆகியவை மக்களாட்சியின் மூன்று தூண்கள் ஆகும்.
Question 36
கீழ்க்கண்ட கூற்றுகளில் எவை சரியானவை?
  1. குடிமக்களின் எண்ணிக்கை அதிகமாக இருத்தல் வேண்டும்.
  2. அனைத்து குடிமக்களையும் அரசியலில் ஈடுபட வைக்கும் அளவிற்கு தொன்மை மக்களாட்சியின் பொருளாதாரம் இருத்தல் வேண்டும்.
A
கூற்று 1 மட்டும் சரி
B
கூற்று 2 மட்டும் சரி
C
கூற்று 1,2 இரண்டும் சரி
D
ஏதுமில்லை
Question 36 Explanation: 
குடிமக்களின் எண்ணிக்கை குறைவாக இருத்தல் வேண்டும். அப்போது தான் அவர்கள் விவாதங்களில் பங்கு பெறவும் முக்கிய பிரச்சனைகளில் வாக்களிக்கவும் இயலும்.
Question 37
உரிமைகள் மற்றும் சலுகைகளை அனைத்து குடிமக்களுக்கும் சமமாக வழங்கும் மக்களாட்சி
A
தொழில்சார் மக்களாட்சி
B
பொது வாக்கெடுப்பு முறை மக்களாட்சி
C
சமூக மக்களாட்சி
D
தொன்மை மக்களாட்சி
Question 37 Explanation: 
தொன்மை மக்களாட்சியின் சிறப்பியல்பே அரசின் அனைத்து நிலைகளிலும் மக்களின் பங்களிப்பு இருப்பதே ஆகும்
Question 38
பொருத்துக.
  1. அமெரிக்க புரட்சி                  -              1748-1832
  2. பிரெஞ்சு புரட்சி                       -              1773-1836
  3.  ஜெரமி பெந்தம்                       -              1806-1873
  4.  ஜேம்ஸ் மில்                               -              1789-1799
  5.  ஜான் ஸ்டுவர்ட் மில்               -              1775–1783
A
2 4 1 3 5
B
1 3 4 2 5
C
2 3 1 4 5
D
3 4 5 2 1
Question 38 Explanation: 
அமெரிக்க மற்றும் பிரெஞ்சு புரட்சி காலங்களில் மக்களாட்சியானது அனைத்து தரப்பு மக்களின் பெரும் கோரிக்கையாக உருவெடுத்தது. ஜெரமி பெந்தம், ஜேம்ஸ் மில் மற்றும் ஜான் ஸ்டுவர்ட் மில் போன்ற பயன்பாட்டுவாத சிந்தனையாளர்கள் பாதுகாக்கும் மக்களாட்சி முறையை ஆதரிக்கின்றனர்.
Question 39
“மக்களாட்சி என்பது மக்களால் நடத்தப்படும் அரசாங்கம், குறிப்பாக பெரும்பான்மை மக்களால் ஆகும்.” என்ற வரையறைக் கூறியவர்
A
G.D. கோவார்டு கோல்
B
தாமஸ் ஜெஃபரசன்
C
பிளாட்டோ
D
எம். என். ராய்
Question 40
கீழ்க்கண்ட கூற்றுகளில் தொன்மை மக்களாட்சியின் விதிகள் யாவை?
  1. அரசியலின் முதன்மை கருத்தியல்களாக மக்களிடையே சமத்துவம், சுதந்திரம், சட்டம் மற்றும் நீதிக்குரிய மதிப்பு ஆகியவை இருத்தல்.
  2. அனைவருக்கும் பொதுவான மற்றும் அனைவரையும் சமமாக நடத்தும் நீதி அமைப்பு சமூகத்தின் எல்லா தளங்களிலும் இருத்தல். எளிதானதாக மற்றும் அனைவருக்குமான சுதந்திர அரசியல் வாழ்க்கை முறையும் இருப்பதாகும்.
A
கூற்று 1 மட்டும்
B
கூற்று 2 மட்டும்
C
அ, ஆ இரண்டும்
D
ஏதுமில்லை
Question 40 Explanation: 
தொன்மை மக்களாட்சியின் சிறப்பியல்பே அரசின் அனைத்து நிலைகளிலும் மக்களின் பங்களிப்பு இருப்பதே ஆகும். மேலும் உரிமைகள் மற்றும் சலுகைகளைத் தொன்மை மக்களாட்சியானது அனைத்து குடிமக்களுக்கும் சமமாக வழங்குகிறது.
Question 41
பாதுகாக்கும் மக்களாட்சி முறையை பரிந்துரைப்பவர்களில் முதன்மையானவர்
A
G.D. கோவார்டு கோல்
B
தாமஸ் ஜெஃபரசன்
C
ஜான் லாக்
D
எம். என். ராய்
Question 41 Explanation: 
பிரிட்டனின் புகழ்பெற்ற அரசியல் சிந்தனையாளரான ஜான் லாக் (1631-1704) பாதுகாக்கும் மக்களாட்சி முறையை பரிந்துரைப்பவர்களின் முதன்மையானவர் ஆவார்.
Question 42
உரிமைகளைப் பாதுகாக்கும் மக்களாட்சி முறை
A
தொழில்சார் மக்களாட்சி
B
பொது வாக்கெடுப்பு முறை மக்களாட்சி
C
சமூக மக்களாட்சி
D
பாதுகாக்கும் மக்களாட்சி
Question 42 Explanation: 
பாதுகாக்கும் மக்களாட்சி முறை மூலம் தனிமனிதர்கள் தங்களது உரிமையையும், சுதந்திரத்தையும் பாதுகாத்துக் கொள்கிறார்கள். பதினேழு மற்றும் பதினெட்டாம் நுற்றாண்டில் தோன்றிய இந்த பாதுகாக்கும் மக்களாட்சி, உரிமைகளை அடிப்படையாகக் கொண்டது. இது நாட்டு மக்களின் மனித உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைக் காப்பதற்கான வழிமுறைகளை கொண்டுள்ளது.
Question 43
“இயற்கை உரிமைகளான வாழ்வதற்கான உரிமை, சுதந்திர உரிமை மற்றும் சொத்துரிமை எந்த அளவுக்கு ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கிறதோ அந்த அளவிற்கு தான் அவர்களின் சுதந்திரமும், வாக்குரிமையும் இருக்கும்” என்று கூறியவர்
A
G.D. கோவார்டு கோல்
B
தாமஸ் ஜெஃபரசன்
C
ஜான் லாக்
D
எம். என். ராய்
Question 44
பயன்பாட்டு வாதத்தின் முக்கிய நோக்கங்கள்
A
தனிமனித சுதந்திரம்
B
உரிமைகளைப் பாதுகாத்தல்
C
அ, ஆ இரண்டும்
D
ஏதுமில்லை
Question 44 Explanation: 
மக்களாட்சியின் அடிப்படை அம்சங்களான தனிமனித சுதந்திரம் மற்றும் உரிமைகளைப் பாதுகாத்தலே பயன்பாட்டு வாதத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும். உரிமைகளைப் பாதுகாத்தலே மக்களாட்சியைப் பாதுகாத்தல் ஆகும்.
Question 45
“மக்களாட்சி மட்டுமே ஒரு மனிதனின் அனைத்து உரிமைகளையும் உறுதியளித்து அவனை பாதுகாப்பதுடன் முன்னேற்றும். உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட பாதுகாக்கும் மக்களாட்சியானது தாராளவாத மக்களாட்சியின் ஓர் அம்சமாகும்.” என்று கூறியவர் / கூறியவர்கள்
A
ஜெரமி பெந்தம்
B
ஜேம்ஸ் மில்
C
ஜான் ஸ்டுவார்ட் மில்
D
மேற்கூறிய அனைவரும்
Question 46
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
  1. பாதுகாக்கும் மக்களாட்சியானது மக்கள் இறையாண்மையில் நம்பிக்கை கொண்டுள்ளது. மக்கள் இறையாண்மை மற்றும் பிரதிநிதித்துவ மக்களாட்சி இரண்டுமே சட்டப்பூர்வமானவை ஆகும்.
  2. குடிமக்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகளைக் காப்பதே ஓர் அரசின் அடிப்படைக் கடமையாகும்.  அதிகாரத்துவம் மக்களுக்குப் பொறுப்புடையதாக உள்ளது. இதை நிறுவ அவ்வப்போது தேர்தல்கள் நடைபெறும்
  3. நீதி, நிர்வாகம் மற்றும் சட்டமன்ற அதிகாரங்களைஅதிகாரப் பிரிவினை செய்தல் மூலமே உரிமைகள், சுதந்திரம் போன்றவற்றைக் காப்பதும், சலுகைகளை அனைவருக்கும் சமமாக அளிப்பதும் சாத்தியமாகும்.
A
கூற்று 1 மட்டும் சரி
B
கூற்று 2 மட்டும் சரி
C
கூற்று 3 மட்டும் சரி
D
அனைத்தும் சரி
Question 47
சமதர்ம சித்தாந்தத்தின் மூலமே அரசியல் அதிகாரம் சாத்தியம் என்றும் இது நாட்டின் வளத்தையும், உற்பத்தி மீதான உரிமையையும் சரி சமமாக மக்களுக்கு பிரித்தளிப்பதன் அடிப்படையில் மட்டுமே நிகழும் என்றும் கூறும் கோட்பாடு
A
மார்க்சிய கோட்பாடு
B
உயர்ந்தோர் குழாம் கோட்பாடு
C
லிங்கன் கோட்பாடு
D
சித்தாந்த கோட்பாடு
Question 47 Explanation: 
பொருளாதார ஏற்றத்தாழ்வே வர்க்க பிரிவினைக்கு அடிப்படை என்றும் உற்பத்தி மற்றும் அதன் விநியோகம் மீதான உரிமையே வர்க்க பிரிவினையை ஏற்படுத்துகிறது என்று மார்க்சிய கோட்பாடு கூறுகிறது.
Question 48
கீழ்கண்ட எந்த மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் மக்களாட்சியில் சமதர்மத்தை ஏற்படுத்த முடியும் என்று ஐரோப்பிய மக்களாட்சிவாதிகள் கருதுகின்றனர்?
  1. மார்க்சிய மக்களாட்சிவாதிகள் அரசை மக்களுக்கு எதிராக குற்றமிழைக்கின்ற ஒரு நிறுவனமாக பார்க்கின்றனர். நாட்டின் இராணுவத்துக்கு பதிலாக குடிமக்கள் அடங்கிய குடிமக்களின் படை ஏற்படுத்தப்படுதல்.
  2. அரசை நடத்துவோர் தேர்ந்தெடுக்கப்படுதல் மற்றும் அவர்கள் செயல்படாத நிலையில் அவர்களைத் திரும்ப அழைத்தல்.
  3. அரசியல் சார்புடைய காவல்துறை முழுவதுமாக நீக்கப்படல், முடியாட்சியை அகற்றுதல்
A
கூற்று 1 மட்டும் சரி
B
கூற்று 2 மட்டும் சரி
C
கூற்று 3 மட்டும் சரி
D
மேற்கூறிய அனைத்தும்
Question 48 Explanation: 
ஐரோப்பாவில் உள்ள மார்க்சிய மக்களாட்சிவாதிகள் தேர்தல் மூலமான மக்களாட்சியின் வலிமையான ஆட்சியை ஆதரிக்கின்றனர். அதுவே சமதர்ம சமுதாயத்தை அடைய அமைதியான மற்றும் சட்டபூர்வவழியாகும்.
Question 49
“மக்களாட்சியே சமதர்மத்திற்கான பாதை ஆகும்” என்று கூறியவர்
A
சாக்ரடீஸ்
B
மகாத்மா காந்தி
C
ஆப்ரகாம் லிங்கன்
D
கார்ல் மார்க்ஸ்
Question 50
“மக்களாட்சி என்பது மக்களால் மக்களுக்காகவே மக்களாலான அரசாங்க முறை ஆகும்.” என்று கூறியவர்
A
சாக்ரடீஸ்
B
மகாத்மா காந்தி
C
ஆப்ரகாம் லிங்கன்
D
கார்ல் மார்க்ஸ்
Question 51
உயர்ந்தோர் குழாம் மக்களாட்சி கோட்பாட்டாளர்களுள் முக்கியமானவர்கள்
A
வில்பிரெடோ பரேட்டோ
B
கெய்டன் மோஸ்கா
C
ராபர்ட் மைக்கேல்
D
மேற்கூறிய அனைவரும்
Question 51 Explanation: 
உயர்ந்தோர் குழாம் மக்களாட்சி கோட்பாட்டாளர்களுள் வில்பிரெடோ பரேட்டோ(1848-1923), கெய்டன் மோஸ்கா(1857-1941) மற்றும் ராபர்ட் மைக்கேல்(1876-1936) ஆகிய மூவரும் முக்கியமானவர்கள் ஆவர்.
Question 52
வில்பிரெடோ பரேட்டோ ஆளும் உயர்ந்தோரின் பண்புகளை உளவியல் ரீதியாக எந்த விலங்குகளுடன் ஒப்பிடுகிறார்?
A
சிங்கம், புலி
B
நரி, சிங்கம்
C
நரி, புலி
D
சிங்கம், சிறுத்தை
Question 52 Explanation: 
பரேட்டோ மக்களை ஆளும் உயர்ந்தோர் மற்றும் ஆளாத உயர்ந்தோர் என்று இரண்டாகப் பிரிக்கிறார். ஆளும் உயர்ந்தோரிடம் ஆட்சி அதிகாரம் உள்ளது. அவர்கள் தங்களது அதிகாரத்தை கல்வி, சமூக நிலை அரசியல் பதவி தொடர்புகள் மற்றும் செல்வம் மூலம் அடைகின்றனர். இவர்களுடைய பண்புகளைப் பரேட்டோ உளவியல் ரீதியாக இரண்டாகப் பிரிக்கிறார் (அ) நரிகள்: தந்திரத்தின் மூலம் மக்களைஏமாற்றி ஆள்வர், சூழ்ச்சியின் மூலமாக மக்களின் ஆதரவை பெறுவர். (ஆ) சிங்கங்கள்: மேலாதிக்கம் பலவந்தப்படுத்துதல் மற்றும் வன்முறை மூலமாக ஆட்சி அதிகாரத்தை அடைவர்.
Question 53
“மக்களாட்சி முறையில் மக்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு நிர்வாகத்தில் மக்களின் அல்லது மக்கள் பிரதிநிதிகளின் பங்கு இருக்கும்படி இருந்தாலும் அவர்களுள் சிறு குழுவினரே அனைவரின் சார்பாகவும் முடிவுகள் எடுத்துக் கொள்கைகளை உருவாக்கி நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.” என்று கூறியவர்
A
வில்பிரெடோ பரேட்டோ
B
கெய்டன் மோஸ்கா
C
ராபர்ட் மைக்கேல்
D
கார்ல் மார்க்ஸ்
Question 53 Explanation: 
மேற்கூறிய வரையறையை சிறுகுழு ஆட்சியின் இரும்புச்சட்டம் (Iron Law of Oligarchy) என்று ராபர்ட் மைக்கேல் கூறுகிறார்.
Question 54
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
  1. பன்மைத்தன்மை என்பது அனைத்தையும் உள் வாங்குகிற, வேறுபட்டவைகளையும் உள்ளடக்கமாகக் கொண்ட ஒரு கருத்தாக்கம் ஆகும். இது சிறுபான்மையினரின் விருப்பங்கள் மற்றும் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கிறது. எனவே இது தாராளவாத மக்களாட்சியின் அடிப்படைப் பண்புகளைக் கொண்டுள்ளதாகக் கூறலாம்.
  2. அதிகாரமானது, அரசு மற்றும் குடிமைச்சமூகத்திடமிருந்து தள்ளி இருக்க வேண்டும் என்றும், பொருளாதாரம், அரசியல் முதலானவை அதி்காரத்திடமிருந்து பிரித்துக வைக்கப்பட வேண்டும் என்று மக்களாட்சியின் பன்மைவாத கோட்பாடு கூறுகிறது.
  3. மக்களாட்சி நடைமுறைகளுக்காக சில அமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று பன்மைவாத கோட்பாடு கூறுகிறது. குறிப்பாக சட்டமன்றத்திற்கு இரு அவைகள், ஆட்சி அமைப்பிற்கு கூட்டாட்சி முறை என சிலவற்றை இந்தக் கோட்பாடு பரிந்துரைக்கிறது.
A
கூற்று 1 மட்டும் சரி
B
கூற்று 2 மட்டும் சரி
C
கூற்று 3 மட்டும் சரி
D
அனைத்தும் சரி
Question 55
உயர்குடி மக்களின் ஆட்சி என்ற கருத்தியலை முன் வைப்பவர்
A
ஜோசப் அலாய்ஸ் சம்பீட்டர்
B
வில்பிரெடோ பரேட்டோ
C
கெய்டன் மோஸ்கா
D
ராபர்ட் மைக்கேல்
Question 55 Explanation: 
ஜோசப் அலாய்ஸ் சம்பீட்டர் (Joseph Alois Schumpeter) (1883-1950) என்பவர் உயர்குடி மக்களின் ஆட்சி என்ற கருத்தியலை முன் வைக்கிறார்.
Question 56
“எளியோருக்கும் வலியோருக்கும் சம வாய்ப்பு வழங்குதல் மக்களாட்சியில் மட்டுமே நடைபெறும் என்பதே என் கருத்து. இது வன்முறையற்ற வழியில் மட்டுமே சாத்தியப்பட வேண்டும்.” என்று கூறியவர்
A
ஜோசப் அலாய்ஸ் சம்பீட்டர்
B
வில்பிரெடோ பரேட்டோ
C
கெய்டன் மோஸ்கா
D
மகாத்மா காந்தி
Question 57
மக்களாட்சியின் சாராம்சமே குழுவாட்சி (Polyarchy) எனப்படும் பல்வேறு சிறுபான்மை சமூகத்தினரும் இணைந்து பணியாற்றும் அரசியல் அமைப்பில் தான் சிறப்பாக வெளிப்படும் என்று கூறியவர்
A
ஜோசப் அலாய்ஸ் சம்பீட்டர்
B
வில்பிரெடோ பரேட்டோ
C
கெய்டன் மோஸ்கா
D
ராபர்ட் டால்
Question 57 Explanation: 
குழுவாட்சி முறையில் அரசாங்கத்தின் அதி்காரம் மற்றும் அதி்கார வரம்பில் அனைத்து மாறுபட்ட குழுக்களும் சுதந்திரமாக செயல்பட முடியும் என்று ராபர்ட் டால் கூறுகிறார்.
Question 58
குழுவாட்சி என்ற கோட்பாட்டினைத் திருத்தம் செய்தவர்
A
ஜோசப் அலாய்ஸ் சம்பீட்டர்
B
வில்பிரெடோ பரேட்டோ
C
கெய்டன் மோஸ்கா
D
ராபர்ட் டால்
Question 58 Explanation: 
ராபர்ட் டாலின் கோட்பாட்டில் பின்பு ஒரு திருத்தம் செய்யப்பட்டது. அமெரிக்காவில் மக்களாட்சி செயல்படும் விதத்தை சிறப்பாக விவரிப்பதற்காக உருக்குலைந்த குழுவாட்சி என்ற கோட்பாட்டினை முன்னிறுத்த அந்த திருத்தத்தை ராபர்ட் டால் செய்தார்.
Question 59
பங்கேற்பாளர்களின் பொதுவிவாதம், அதன் மூலம் அனைவரின் கருத்தையும் உள்ளடக்கிய முடிவுகள் என்ற அம்சங்களைக் கொண்டுள்ள கோட்பாடு
A
பன்மைவாதக் கோட்பாடு
B
உயர்ந்தோர் குழாம் கோட்பாடு
C
மார்க்சிய கோட்பாடு
D
ஆழ்விவாதக் கோட்பாடு
Question 59 Explanation: 
ஜேம்ஸ் மில்லரின் கூற்றுப்படி ஆழ்விவாதக் கோட்பாடானது பங்கேற்பாளர்களின் பொதுவிவாதம், அதன் மூலம் அனைவரின் கருத்தையும் உள்ளடக்கிய முடிவுகள் என்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. இதன் சிறப்பம்சமே மக்கள் பொறுமையாக மாற்றுக்கருத்தை கேட்பதும், அதன் அடிப்படையில் தங்களது கருத்தில் மாற்றங்கள் கொண்டு வருவது ஆகும்.
Question 60
அரசியல் தேர்வானது முறையாக, சட்டப்படியாக இருத்தல் வேண்டும் என்றும், ஒரு தெளிவான இலக்கை நோக்கிய சுதந்திரமான விவாதம் சமமான மற்றும் பகுத்தறியும் நபர்களிடையே நடந்து அதன் அடிப்படையில் அரசியல் தேர்வுகள் இருக்க வேண்டும் என்று கூறியவர்கள்
A
ரால்ஸ்
B
ஹேபர்மாஸ்
C
அ, ஆ இரண்டும்
D
ஏதுமில்லை
Question 61
ஏப்ரல் மாதம் 2006ம் ஆண்டு முழுமையான மக்களாட்சியைக் கொண்டுவர அந்த நாட்டு அரசருடன் போராடிய நாடு
A
ஓமன்
B
நேபாளம்
C
பூடான்
D
கத்தார்
Question 61 Explanation: 
இது நேபாள புரட்சி என்றும் அழைக்கப்படுகிறது.
Question 62
கீழ்க்கண்டவற்றில் நவீன மற்றும் சமகால மக்களாட்சியின் சிறப்பம்சங்கள் யாவை?
  1. எழுதப்பட்ட அரசமைப்பு. ஒவ்வொரு தனி மனிதனுக்கும், சமூக குழுக்களுக்கும், குறிப்பாக எளியோர் மற்றும் மத சிறுபான்மையினோருக்கான அரசமைப்பு உத்திரவாதமளிக்கும் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள்.
  2. அரசின் பல்வேறு அமைப்புக்களுக்கிடையேயான அதிகார பிரிவினை. அரசாங்கம் (நிர்வாகஅதிகாரம்) நாடாளுமன்றம் (சட்டஅதிகாரம்) மற்றும் நீதி அமைப்புகள் (நீதி அதிகாரம்).
  3. கருத்து, பேச்சு, எழுத்து மற்றும் பத்திரிகைச்சுதந்திரம், மத சுதந்திரம். அனைவருக்கும் சமமான மற்றும் பொதுவான வாக்குரிமை (ஒருவருக்கு ஒரு ஓட்டு) மற்றும் வயது வந்தோர் வாக்குரிமை.
A
கூற்று 1 மட்டும் சரி
B
கூற்று 2 மட்டும் சரி
C
கூற்று 3 மட்டும் சரி
D
அனைத்தும் சரி
Question 63
மக்களாட்சி எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?
A
அதிகாரப் போட்டி நிறைந்த அரசியல் அமைப்பு
B
பொதுவாழ்வில் பங்கேற்கும் உரிமை
C
சட்டத்தின் ஆட்சி
D
மேற்கூறிய அனைத்தும்
Question 64
பூடான் நாடு நாடாளுமன்ற மக்களாட்சி முறைக்கு மாறிய ஆண்டு
A
2006
B
2007
C
2008
D
2009
Question 65
நவீன மற்றும் சமகால மக்களாட்சி எங்கு தோன்றியது?
A
ரஷ்யா
B
மேற்கு ஐரோப்பா
C
அயர்லாந்து
D
பிரேசில்
Question 65 Explanation: 
நவீன மற்றும் சமகால மக்களாட்சியானது 18ஆம் நுற்றாண்டின் இறுதியில் மேற்கு ஐரோப்பாவில் தொழிற்புரட்சியின் விளைவாகத் தோன்றியது. அதனுடன் கூடவே தொழிலாளர்கள் எழுச்சியும் சமூக மாற்றமும் தோன்றின.
Question 66
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
  1. பிரதிநிதித்துவ மக்களாட்சியில் தகுதிவாய்ந்த அனைத்து குடிமக்களும் வாக்களித்தலின் மூலம் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
  2. பிரதிநிதித்துவ மக்களாட்சியில் ஒவ்வொரு தொகுதிக்கும் பிரதிநிதிகளை அந்தந்தத் தொகுதி மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். ஒவ்வொரு தொகுதியும் மக்கள் தொகையின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கும்.
  3. பிரதிநிதித்துவ மக்களாட்சி அமைப்பில் எந்த ஒரு குடிமகனும், கட்சி சார்பின்றி தேர்தல்களில் போட்டியிட விரும்பினால் சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்கவும் அனுமதி உண்டு.
A
கூற்று 1 மட்டும் சரி
B
கூற்று 2 மட்டும் சரி
C
கூற்று 3 மட்டும் சரி
D
அனைத்தும் சரி
Question 67
தாராளவாத மக்களாட்சி முறை எங்கு தோன்றியது?
A
அமெரிக்கா
B
மேற்கு ஐரோப்பா
C
அ, ஆ இரண்டும்
D
ஏதுமில்லை
Question 67 Explanation: 
தாராளவாத மக்களாட்சி முறையானது அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவில் தோன்றி பின்பு பல மூன்றாம் உலக நாடுகளில் பரவி தற்போது முன்னாள் சோவியத் ரஷ்ய நாடுகளிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் காலுன்றியுள்ளது.
Question 68
கீழ்க்கண்டவற்றுள் பிரதிநிதித்துவ மக்களாட்சியின் கொள்கைகள் யாவை?
  1. ஒரே சீரான இடைவெளியில் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெறும் தேர்தல்.  வயது வந்தோர் வாக்குரிமை மற்றும் வாக்களித்தலின் ரகசியம் காக்கப்படுதல் அடிப்படையில தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் எனும் ஒரு சுயேச்சையான அமைப்பு.
  2. மக்கள் தேர்ந்தெடுப்பதற்கு வசதியாக பல கட்சிகள் போட்டியிடும் தேர்தல். சுதந்திரமான நீதிமன்றத்தின் மேற்பார்வையில் இயங்கும் தேர்தல் சட்டங்கள்.
  3. பேச்சு மற்றும் கூட்டங்கள் கூடுவதற்கான சுதந்திரம். தேர்தலில் ஒரு வேட்பாளராக பங்கேற்கும் சுதந்திரம்
A
கூற்று 1 மட்டும் சரி
B
கூற்று 2 மட்டும் சரி
C
கூற்று 3இரண்டும் சரி
D
அனைத்தும் சரி
Question 69
தாராளவாத மக்களாட்சி எத்தனைப் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது?
A
இரண்டு
B
மூன்று
C
நான்கு
D
ஐந்து
Question 69 Explanation: 
தாராளவாத மக்களாட்சி அரசானது அதிபர் முறை மக்களாட்சி அல்லது நாடாளுமன்ற முறை மக்களாட்சி என இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.
Question 70
சர்வதேச பூர்வகுடியின மக்கள் நாள்
A
ஆகஸ்ட் 7
B
ஆகஸ்ட் 8
C
ஆகஸ்ட் 9
D
ஆகஸ்ட் 10
Question 70 Explanation: 
உலகம் முழுவதும் 37 கோடிக்கும் அதி்கமாக பூர்வகுடியின மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் தனித்துவமான பண்பாடு மற்றும் அதை வளரச்செய்வது என்று உறுதிமொழி சர்வதேச பூர்வகுடியின மக்கள் நாளான ஆகஸ்டு 9 அன்று மேற்கொள்ளப்பட்டது.
Question 71
பூர்வகுடியின மக்கள் உரிமைக்கான ஐ.நா பிரகடனம் ஐ.நா. பொதுச்சபையில் நிறைவேறிய ஆண்டு
A
2004
B
2005
C
2006
D
2007
Question 71 Explanation: 
செப்டம்பர் மாதம் 2007 ஆம் ஆண்டு பூர்வகுடியின மக்கள் உரிமைக்கான ஐ.நா பிரகடனம் ஐ.நா. பொதுச்சபையில் 143 உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேறியது.
Question 72
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆரராய்க.
  1. பங்கேற்பு மக்களாட்சியானது, சமத்துவம் என்ற நிலையிலிருந்து சம நீதியின் அடிப்படையிலான பங்கு என்ற நிலைநோக்கிச் செல்ல ஊக்குவிக்கிறது. இது மக்களின் பங்களிப்பை அதிகரித்து அரசியல் சமத்துவத்தை ஏற்படுத்தி அதன் மூலம் சமூகத்தையே மக்களாட்சி மயமாக்குகிறது.
  2. பங்கேற்பு மக்களாட்சியின் நோக்கமே ஆர்வமுள்ள மக்களை அரசியல், பொருளாதார மற்றும் சட்ட நடைமுறைகளில் பங்கேற்கச் செய்வதும், மக்களை அரசின் முடிவுகளுக்கு பொறுப்புடையவர்களாக மாற்றுவதுமே ஆகும்.
  3. தற்போதைய பொருளாதார வளர்ச்சிக் காலத்தில் மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளை நீக்கி சமத்துவத்தை ஏற்படுத்த, மக்கள் தங்கள் பங்கேற்புகளை அளிக்கும் வகையில் பங்கேற்பு மக்களாட்சியானது வடிவமைக்கப்பட்டுள்ளது.
A
கூற்று 1 மட்டும் சரி
B
கூற்று 2 மட்டும் சரி
C
கூற்று 3இரண்டும் சரி
D
அனைத்தும் சரி
Question 73
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆரராய்க.
  • (1) ஒரு ஆட்சியானது எந்த அளவிற்கு மற்ற நாடுகளின் குறுக்கீடு இல்லாமல் தன்   நாட்டின்  உள் விவகாரங்கள் மற்றும் வெளியுறவு கொள்கைகளை கையாள முடிகிறதோ அதுவே அதன் இறையாண்மை எனப்படும்.
  • (2) நாட்டின் எல்லைக்குள் எந்த அளவிற்கு மத்திய அரசாங்கத்தின் அதிகாரம் செல்லுபடியாகுமோ அந்த எல்லைகள் ஆட்சி அதிகாரத்துக்குட்பட்டவை எனப்படும்.
  • (3) இரகசிய வாக்கெடுப்பு முறை தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கையில் ஆட்சி அதிகாரம் இருப்பதை இது குறிக்கிறது.
A
கூற்று 1 மட்டும் சரி
B
கூற்று 2 மட்டும் சரி
C
கூற்று 3இரண்டும் சரி
D
அனைத்தும் சரி
Question 74
“அரசியலில் நமக்கு சமத்துவம் இருக்கும். ஆனால் சமூக மற்றும் பொருளாதார வாழ்வில் சமத்துவமற்ற தன்மையே நிலவும்.” என்று கூறியவர்
A
பிளாட்டோ
B
சாக்ரடீஸ்
C
மகாத்மா காந்தி
D
பி. ஆர். அம்பேத்கர்
Question 75
சுதந்திர இந்தியாவின் முதல் பொது தேர்தல் 1951ம் ஆண்டு நடந்த போது களத்தில் எத்தனை அரசியல் கட்சிகள் இருந்தன?
A
52
B
53
C
54
D
55
Question 75 Explanation: 
சமீ்பத்தில் நடந்து முடிந்த 2014ம் ஆண்டு பொது தேர்தலின் போது அரசியல் கட்சி்களின் எண்ணிக்கை 264 ஆக கூடி இருந்தது. இதிலிருந்து அரசியல் நடைமுறை விரிவாகவும் ஆழமாகவும் மாறி வருவது புலனாகிறது.
Question 76
இந்தியாவின் 16வது  பொதுத்தேர்தல் 2014ஆம் ஆண்டு நடந்த போது வாக்காளர்களின் எண்ணிக்கை எத்தனை கோடியாக இருந்தது?
A
50.40 கோடி
B
60.40 கோடி
C
70.40 கோடி
D
81.40 கோடி
Question 76 Explanation: 
சுதந்திர இந்தியாவில் 1951ஆம் ஆண்டு நடந்த முதல் பொதுத்தேர்தலில் 17.30 கோடி இந்திய மக்கள் வாக்களிக்கும் உரிமை பெற்று இருந்தனர். இவர்களில் 44.87 சதவிகிதத்தினரே வாக்களித்தனர். நாட்டின் 16வது பொதுத்தேர்தல் 2014ஆம் ஆண்டு நடந்த போது வாக்காளர்களின் எண்ணிக்கை 81.40 கோடியாக அதிகரித்திருந்தது. இதில் 66.4 சதவிகிதத்தினர் வாக்களித்தனர். இவர்களில் 67.9 சதவீதத்தினர் ஆண்கள் மற்றும் 65.6 சதவீதத்தினர் ஆண்கள். இந்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் எண்ணிக்கையும் 8251 ஆக அதி்கரித்திருந்தது.
Question 77
இந்தியாவில் எந்த ஆண்டு முதல் வாக்குகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலமாக பதிவு செய்யப்படுகின்றன?
A
2001
B
2012
C
2004
D
2014
Question 77 Explanation: 
2004ஆம் ஆண்டு முதல் வாக்குகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலமாக பதிவு செய்யப்படுகின்றன. இந்த இயந்திரங்கள், இந்தியாவிலேயே தயார் செய்யப்படுகின்றன. இவற்றின் துல்லியம், மற்றும் ரகசியம் காக்கப்படுதல் ஆகியவை வெற்றிகரமாக சோதித்தறியப்பட்டுள்ளது
Question 78
இந்தியாவில்  எந்த ஆண்டிலிருந்து 18 வயது பூர்த்தியான அனைத்து குடிமக்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது?
A
1986
B
1987
C
1988
D
1989
Question 78 Explanation: 
நம் நாட்டில் 1989ஆம் ஆண்டிலிருந்து 18 வயது பூர்த்தியான அனைத்து குடிமக்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இது மக்களாட்சி எனும் மகுடத்தில் மேலும் ஒரு சிறகாகும்.
Question 79
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கும்,  பெண்களுக்கும் உள்ளாட்சி அரசாங்க அமைப்புகளான கிராம ஊராட்சிகள்,  நகராட்சிகள் மற்றும் மாநகரட்சிகளில் உறுப்பினர்களாகவும், தலைவர்களாகவும் போட்டியிட இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்திய இந்திய அரசமைப்புச் சட்டத்திருத்தம்
A
71, 72
B
73, 74
C
75, 76
D
77, 78
Question 79 Explanation: 
இந்திய அரசமைப்பின் 73-வது மற்றும் 74-வது சட்டத் திருத்தம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கும், பெண்களுக்கும் உள்ளாட்சி அரசாங்க அமைப்புகளான கிராம ஊராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகரட்சிகளில் உறுப்பினர்களாகவும், தலைவர்களாகவும் போட்டியிட இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது.
Question 80
இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் எத்தனை வருடங்களாக 1951ஆம் ஆண்டில் இருந்தது?
A
46
B
36
C
56
D
66
Question 80 Explanation: 
இந்தியர்களின் சராசரி ஆயுட்காலமானது 36 வருடங்கள் என்று 1951ஆம் ஆண்டில் இருந்தது. இது 2014-ஆம் ஆண்டு கிட்டதட்ட இரட்டிப்பாகி 66 வருடங்கள் என்று உயர்ந்துள்ளது
Question 81
இந்தியாவில், 2014ஆம் ஆண்டு கணக்கின் படி எத்தனை பல்கலைகழகங்கள் உள்ளன?
A
712
B
512
C
812
D
912
Question 81 Explanation: 
1950-51-ல் வெறும் 27 பல்கலைக்கழகங்களும் 578 கல்லூரிகளும் இருந்த இந்தியாவில், 2014ஆம் ஆண்டு கணக்கின் படி சுமார் 712 பல்கலைகழகங்களும் 36,671 கல்லூரிகளுமாக பெருகி வளர்ந்து உள்ளன.
Question 82
1951ம் ஆண்டு இந்தியாவில் எழுத்தறிவு விகிதம் எத்தனை சதவிகிதமாக இருந்தது
A
50.3
B
28.3
C
30.3
D
18.3
Question 82 Explanation: 
இந்தியாவில் எழுத்தறிவு விகிதம் 1951-ல் 18.3 சதவிகிதத்திலிருந்து 2011-ல் 73 சதவிகிதமாக கிட்டத்தட்ட நான்கு மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது.
Question 83
“மக்களாட்சியே சிறந்தது. நான் ஏன் இதை சொல்கிறேன் என்றால் மற்ற எல்லா முறைகளுமே மோசமானவை. மக்களாட்சியில் சில சாதக, பாதக அம்சங்கள் இருந்தாலும் நமக்கு இதைவிட சிறந்தது வேறொன்றுமில்லை. ஆனால் மக்களாட்சியில் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்று கூறுவது மாபெரும் தவறு. பிரச்சனைகள் புத்திகூர்மையினாலும், கடின உழைப்பாலும் மட்டுமே தீரும்.” என்று கூறியவர்
A
ஜவஹர்லால் நேரு
B
பி. ஆர். அம்பேத்கர்
C
மகாத்மா காந்தி
D
சர்தார் வல்லபாய் படேல்
Question 84
கட்டமைப்பு, சீரமைப்பு செயல்திட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு
A
1994
B
1993
C
1992
D
1991
Question 84 Explanation: 
1991ஆம் ஆண்டு தாராளமயம் மற்றும் சந்தை சார்ந்த மாதிரியிலான உலகமயமாதல் என்ற பொருளாதாரத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. இது கட்டமைப்பு, சீரமைப்பு செயல்திட்டம் என்று அழைக்கப்படுகிறது
Question 85
“சமூக மக்களாட்சியை அடிப்படையாக கொள்ளாமல் கொண்டு வரப்படுகிற அரசியல் மக்களாட்சி வெகுகாலம் நீடிக்காது. சமூக மக்களாட்சி என்றால் என்ன? இது ஒரு வாழும் முறை,  இது சுதந்திரம்,  சமத்துவம்  மற்றும் சகோதரத்துவத்தை அடிப்படை விதி்களாக கொண்ட ஒரு வாழ்வு முறையாகும்.” என்று கூறியவர்
A
ஜவஹர்லால் நேரு
B
பி. ஆர். அம்பேத்கர்
C
மகாத்மா காந்தி
D
சர்தார் வல்லபாய் படேல்
Question 86
1950-51-ல் இந்தியாவின் ஒட்டு மொத்த தேசிய வருவாய் எத்தனை லட்சம் கோடியாக இருந்தது?
A
4.92 லட்சம் கோடி
B
3.92 லட்சம் கோடி
C
2.92 லட்சம் கோடி
D
1.92 லட்சம் கோடி
Question 86 Explanation: 
1950-51ல் தனி நபர் வருமானம் 1950-51-ல் எவ்வளவாக இருந்தது? இந்தியாவின் ஒட்டு மொத்த தேசிய வருவாயானது 1950-51-ல் ரூபாய் 2.92 லட்சம் கோடியாக இருந்து 2014-2015-ல் கிட்டத்தட்ட 35 மடங்கு வளர்ந்து ரூபாய் 105.28 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது
Question 87
1950-51ல் தனி நபர் வருமானம் 1950-51-ல் எவ்வளவாக இருந்தது?
A
200 ரூபாய்
B
320 ரூபாய்
C
274 ரூபாய்
D
574 ரூபாய்
Question 87 Explanation: 
தனி நபர் வருமானமும் 1950-51-ல் ரூபாய் 274ஆக இருந்து, 2014- 2015ஆம் ஆண்டு ரூபாய் 88,533 ஆக உயர்ந்துள்ளது.
Question 88
தற்போது நடைமுறையில் இருக்கும் சமூக மற்றும் அரசியல் அமைப்புக்கு எதிரான சிந்தனை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
அதிகாரத்துவம்
B
முதலாளித்துவம்
C
சாதியவாதம்
D
அமைப்பெதிர்வாதம்
Question 89
2014-15 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி எத்தனை டன்களாக இருந்தது?
A
170 கோடி
B
120 கோடி
C
250 கோடி
D
264.77 கோடி
Question 89 Explanation: 
இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 1950-51ஆம் ஆண்டுகளில் 50.8 கோடி டன்களாக இருந்தது. அது 2014-15ஆம் ஆண்டுகளில் 264.77 கோடி டன்களாக கிட்டத்தட்ட ஐந்து மடங்கு உயர்ந்துள்ளது.
Question 90
முன்னுரிமை வர்க்கத்தினரால் ஆளப்படுகின்ற அல்லது ஒப்படைக்கப்பட்டுள்ள ஆட்சி
A
மக்களாட்சி
B
குடியாட்சி
C
தனி நபராட்சி
D
பிரபுக்கள் ஆட்சி
Question 90 Explanation: 
சலுகைகளைக் கொண்டுள்ள சில முன்னுரிமை வர்க்கத்தினரால் ஆளப்படுகின்ற அல்லது ஒப்படைக்கப்பட்டுள்ள ஆட்சி பிரபுக்கள் ஆட்சி எனப்படும்.
Question 91
சுயேச்சையான குழுக்கள் தங்களுக்கென்று ஒரு தனியான தளத்தில் ஆட்சி அதிகாரத்திலிருந்து விலகியே இருப்பது
A
குடிமைச்சமூகம்
B
பொதுச்சமூகம்
C
வகுப்புவாதம்
D
அமைப்பெதிர்வாதம்
Question 91 Explanation: 
குடிமைச்சமூகம் என்பது சுயேச்சையான குழுக்கள் மற்றும் சங்கங்கள் தங்களுக்கென்று ஒரு தனியான தளத்தில் ஆட்சி அதிகாரத்திலிருந்து விலகியே இருக்கும் ஒன்றாகும்.
Question 92
கீழ்க்கண்டவற்றில் சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
  1. அரசமைப்பின் 73-வது மற்றும் 74-வது சட்ட திருத்தத்திற்குப் பிறகும் இந்தியாவின் சில கிராமங்களில் உள்ளாட்சித் தேர்தல் பல ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ளது.
  2. கீழ்நிலையில் மக்களின் சமூகப் பொருளாதார தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான முடிவுகளை மக்களின் பங்களிப்போடு சுய அரசாங்கத்தின் வழியே அவர்கள் மூலமே எடுத்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் கடைநிலை மக்களாட்சி எனப்படும்.
  3. தனி ஒருவரால் ஆளப்படுகின்ற ஆட்சி தன்னிச்சையான மற்றும் தடைகளற்ற முறையில் அதி்காரத்தைப்  பயன்படுத்துதல் சர்வாதிகாரம் எனப்படும்
A
கூற்று 1 மட்டும் சரி
B
கூற்று 2 மட்டும் சரி
C
கூற்று 3 மட்டும் சரி
D
அனைத்தும் சரி
Question 93
அரசின் தலைமைப் பொறுப்பானது பரம்பரையாகவோ அல்லது அரச குடும்பத்தினருள் ஒருவரிடமோ இருக்கும் ஆட்சி முறை
A
முடியாட்சி
B
மக்களாட்சி
C
குடியாட்சி
D
தனிநபராட்சி
Question 93 Explanation: 
முடியாட்சி முறையில் அரசின் தலைமைப் பொறுப்பானது பரம்பரையாகவோ அல்லது அரச குடும்பத்தினருள் ஒருவரிடமோ இருக்கும். முடியாட்சி முழுமையானது அல்லது அரசமைப்பின்படி ஆகும்.
Question 94
மக்கள் பங்கேற்று ஒரு சுய உள்ளாட்சி அரசாங்கத்தை உருவாக்கி அதன் மூலம் தங்கள் அரசியல் நடைமுறைகளையும், தங்கள் தேவைகளுக்கான முடிவுகளையும் எடுக்கும் ஓர் அமைப்பு
A
பஞ்சாயத்து ராஜ்
B
நிதி ஆயோக்
C
கிராம சபை
D
ஊரகச்சாலை
Question 94 Explanation: 
மக்களாட்சி அமைப்பின் கடைநிலையில் அரசமைப்பின்படி செயல்படும் ஓர் அமைப்பு. இதில் மக்கள் தங்களது அரசாங்கத்தை ஏற்படுத்துவர். இதில் மக்கள் பங்கேற்று ஒரு சுய உள்ளாட்சி அரசாங்கத்தை உருவாக்கி அதன் மூலம் தங்கள் அரசியல் நடைமுறைகளையும், தங்கள் தேவைகளுக்கான முடிவுகளையும் எடுக்கின்றனர்.
Question 95
இசைவினால் உருவான ஒரு எல்லைக்குள் இருக்கின்ற நபர்கள் தங்களுக்குள் எந்த மோதலுமின்றியும் ஒருவர் மேல் ஒருவர் மேலாதிக்கம் செய்யாமலும் ஆட்சி செய்தல்
A
குழுவாட்சி
B
மக்களாட்சி
C
குடியாட்சி
D
தனிநபராட்சி
Question 95 Explanation: 
இசைவினால் உருவான ஒரு எல்லைக்குள் விருப்பத்துடனோ அல்லது விருப்பமின்றியோ இருக்கின்ற நபர்கள் தங்களுக்குள் எந்த மோதலுமின்றியும் ஒருவர் மேல் ஒருவர் மேலாதிக்கம் செய்யாமலும் ஆட்சி செய்தல் குழுவாட்சி எனப்படும்.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 95 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!