பொதுக்கருத்து மற்றும் கட்சி முறை Notes 11th Political Science
11th Political Science Lesson 10 Notes in Tamil
பொதுக்கருத்து மற்றும் கட்சி முறை
அறிமுகம்
இந்த அலகு உலகின் பல்வேறு நாடுகளில் பின்பற்றப்படும் கட்சி முறைகளின் பொருள் மற்றும் அதன் பரிணாம வளர்ச்சியினை பற்றி கவனம் செலுத்துகிறது. நவீன மக்களாட்சியில் கட்சி முறைகளின் தோற்றத்தை ஆராய்வதுடன், அரசியல் கட்சிகளின் இயல்பு, பண்புகள், வகைகள் மற்றும் குறிப்பாக மக்களாட்சியில் அதன் செயல்பாடுகளை விளக்க முயல்கிறது. இந்த பொது பின்னணியில் இருந்து குறிப்பாக தமிழ்நாட்டை கவனத்தில் கொண்டு, தேசிய மற்றும் மாநில அளவில் உள்ள க்ட்சி முறைகளின் பரிணாம வளர்ச்சியை பற்றி கவனம் செலுத்துகிறது. மேலும் இந்த அலகில் பொதுக்கருத்தின் பொருள், அதன் முக்கியத்துவம் மற்றும் ஓர் மக்களாட்சியின் திறன்மிக்க செயல்பாட்டில் அதன் பங்கினை பற்றி விளக்குகிறது.
பொதுக்கருத்தினை வரையறுத்தல்
பொதுக்கருத்து ஓர் உளவியல் மற்றும் சமூகத்தில் உள்ள அனைவரின் நம்பிக்கைக்கும், இசைவான தனிநபரின் நடத்தை சார்ந்த சமூக செயல்முறையாகும். சுருக்கமாக, இது மக்களின் கூட்டுப்பார்வை, அவர்களுடைய அணுகுமுறை மற்றும் கருத்துக்கள் ஆகும்.
இது அரசாங்கம் , அரசியல் குறித்த முன்னுரிமைகள் சார்ந்த மக்களின் கூட்டு விருப்பமாகும். மக்களாட்சி என்பது அனைவரின் ஒன்றிணைந்த தனிகருத்துகளும், பொதுக்கருத்துகளும், தனிநபர்க் கருத்துகளை விட முக்கியத்துவம் வாய்ந்தது என்ற கூற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஒன்றிணைந்த குழுக்கள் , அரசாங்க தலைவர்கள் , ஊடக உயர்குடியினர் ஆகியோர் பொதுக்கருத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தவும், கட்டுப்படுத்தவும் முடியும் என்று வேறு சிலர் கூறுகின்றனர்.
பொதுமக்களின் கருத்துகளின் மீது ஊடகங்களின் தாக்கம் உள்ளது. உண்மையில் மக்களாட்சி அதன் அதிகாரத்தை மக்களிடமிருந்து பெறுகின்றது. பொதுக்கருத்து என்பது ஒரு தனிநபரின் கருத்து அல்ல, அந்நபர் மிகவும் மதிக்கப்படும் நபராகவும் இருக்கலாம். இது ஒரு தனிப்பட்ட கருத்தும் அல்ல. அவர் எத்தகைய நிபுணத்துவத்தைப் பெற்றிருப்பினும், பொதுக்கருத்து என்பது ஒரு பொது விவகாரத்தில் ஒன்றோ அல்லது பல பிரிவு மக்களோ ஒருங்கிணைந்த , ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்தாகும். இது உண்மையில் பொதுக்கருத்தாகும்.
பொதுக்கருத்தின் பங்கு
மக்களாட்சி வெற்றிகரமாக செயல்படுவதற்கு பொதுக்கருத்து என்பது ஓர் அத்தியாவசிய கூறாகும். அங்கே குடிமக்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கப்படுகிறது. மக்களின் கருத்துகளைப் புறக்கணித்து எந்த ஒரு அரசாங்கமும் நிலைத்திருக்க முடியாது.
தேசத்துடனான காந்தியின் உரையாடல்
மகாத்மா காந்திக்கு தண்டியாத்திரை என்பது வன்முறையற்ற ஒரு போராட்ட ஆயுதம் மட்டும் அல்ல, அது செல்லும் வழியிலுள்ள மக்களுடன் பேசுவதற்கும், தொடர்பு கொள்வதற்குமான ஒரு வழி முறையாக இருந்தது.
லாகூரில் ராவி ஆற்றின் கரையில் 1929ஆம் ஆண்டு டிசம்பர் 31ல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் 44-வது மாநாட்டில் முழு சுதந்திரத்திற்கான கோரிக்கை விடுக்கப்பட்டு சுதந்திரத்திற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டிற்கு ஜவஹர்லால் நேரு தலைமை தாங்கினார்., மாநாட்டில் மகாத்மா காந்தி தீர்மானத்தை நிறைவேற்றும்பொழுது மறக்க முடியாத ஒரு சொற்பொழிவாற்றினார். காந்தி வெறுமனே அந்த உரையை வழங்குவதுடன் இல்லாமல். மார்ச் 12, 1930 அன்று சபர்மதி ஆசிரமத்திலிருந்து புகழ்பெற்ற தண்டி யாத்திரையை துவக்கினார். ஏப்ரல் 6, 1930 அன்று குஜராத்தின் கடலோர கிராமமான தண்டியில் உப்பு சத்தியாகிரகப் போராட்டம் உச்ச நிலையை அடைந்தது.
காந்திக்கு தண்டி யாத்திரை மீதும், உப்பு சத்தியாகிரத்தின் மீதும் ஒரு தெளிவான எண்ணமும், செயல்திட்டமும் இருந்தது. அவர் அந்த யாத்திரை கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும் என்பதற்காக அதிக எண்ணிக்கையையும் விரும்பவில்லை. அதேசமயம் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாத சிறிய எண்ணிக்கையையும் ஆதரிக்கவில்லை. இதனால் வல்லபாய் பட்டேலின் மாபெரும் எண்ணிக்கையிலான பேரணி டில்லியை நோக்கி அணிவகுக்கும் பரிந்துரைடை நிராகரித்தார். அதே சமயம் இணை அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்ற நேருவின் அன்பான கருத்தையும் அவர் ஏற்கவில்லை. மாறாக 78 அர்பணிப்பு நிறைந்த ஒழுக்கமான சத்தியாகிரகிகளுடன் சபர்மதியிலிருந்து தண்டி கிராமத்திற்கு உப்பு சத்தியாகிரகத்தை நடத்துவதற்கான யாத்திரையை முன்மொழிந்தார்.
காந்தி சத்தியாகிரகத்தின் சின்னமாக உப்பைத் தேர்ந்தெடுத்தார். ஏனென்றால் அது நாட்டின் உணவு நுகர்வில் மிகவும் பொதுவான அளவில் இருந்தது. செல்வந்தர்களுக்கு உப்பு சுவைக்கு தேவைப்பட்டது. பரம ஏழை உப்பைத் தண்ணீரில் கலந்து கொள்வதன் மூலம் அவர்களது உலர்ந்த ரொட்டியை அந்த உப்புநீர் கலவையில் நனைத்து உணவாக்கிக் கொள்ள முடியும். இது செல்வந்தர்களின் சுவையான காரக்குழம்பிற்கு மாற்றாக ஏழைகளுக்கு இருந்தது.
தண்டியாத்திரையின் போது சில உற்சாகமிகு அபிமானிகள் காந்திக்கும் அவரது சக சத்தியாகிரகிகளுக்கும் அதிக எண்ணிக்கையில் பழம், பால் போன்றவைகளை கொண்டு வந்தனர். இருப்பினும் காந்தி தங்கள் யாத்திரையில் ஏழைகளுக்காக போராடுவதற்கான உன்னதமான நோக்கில் ஈடுபட்டுள்ளவர்கள் இத்தகைய ஆடமொஅர விருந்தோம்பலில் தங்களைத் தாங்களே ஈடுபடுத்திக்கொள்ளக்கூடாது என்ற அடிப்படையில் அவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். காந்தி தண்டியாத்திரையை அநீதிக்கு எதிரான வன்முறையற்ற ஒரு போராட்ட ஆயுதமாக மட்டுமல்லாமல், அணிவகுப்பு வழியிலான மக்களுடன் உரையாடலுக்கும் தொடர்புக்குமான வழியாகவும் பார்த்தார். தண்டிக்கு செல்லும் வழியில், காந்தி மற்றும் அவருடன் வந்த சத்தியாகிரகிகள் பல்வேறு கிராமங்களில் இரவில் ஓய்வெடுத்தனர். சத்தியாகிரகிகள், கிராமங்களில் வசிப்பவர்கள் உடன் வந்த பத்திரிக்கையாளர்கள், ஆகியோருடன் சத்தியாகிரத்தின் பின்னணி மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல பிரச்சனைகள் பற்றி பேசுவதற்கு இந்த இடைப்பட்ட காலத்தை அவர் பயன்படுத்தினார். அவர் இந்த தண்டி யாத்திரையை விழிப்புணர்வு மேற்கொள்ளும் முறையாக பார்த்தார். யாத்திரை நடந்த 25 நாட்களில் மக்களுடன் இந்த வகையான உரையாடலை நிகழ்த்திக் கொண்டிருந்தார். யாத்திரையினால் ஈர்க்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள் ஒவ்வொரு நாளும் விரிவான அறிக்கையை அனுப்பினர். இவை பத்திரிகைகள் மற்றும் இதழ்களில் வெளியிடப்பட்டன. இவ்வாறு தண்டி யாத்திரையில் காந்தி பேசியது தேசத்துடனான உரையாடலாக மாறியது.
ஓர் உண்மையான பொதுக்கருத்தை உருவாக்குவதற்குத் தடையாக இருப்பவை:
மக்களின் கருத்துக்கள் மற்றும் சிந்தனைகளின் உண்மையான பிரதிபலிப்பாக பொதுக்கருத்து இருக்க வேண்டும். இருப்பினும் உண்மையான பொதுக்கருத்திற்கு சில தடைகள் உள்ளன.
சுயநல விருப்பங்கள் (தேசத்தை விட மேலானது எனது நலன்)
மக்கள் தங்களின் சுயநலத்தினை முன்னிறுத்தி தங்கள் நாட்டினுடைய விவகாரங்களைக் காட்டிலும் தனிப்பட்ட விவகாரங்களில் முன்னேற்றத்தை காண்பதற்கு நகரச்செய்கிறது. ஒற்றுமை, அர்ப்பணிப்பு, ஒருமைப்பாடு மற்றும் தேசத்தின் முன்னேற்றம் தொடர்பான முக்கிய பிரச்சனைகளை மக்கள் உணருமாறு செய்ய வேண்டும்.
எழுத்தறிவின்மை
கல்வியறிவு உடைய பொறுப்புள்ள பொதுமக்கள், பயமோ அல்லது தயவோ இல்லாமல் தங்கள் உரிமையைக் கையாள்வதன் மூலம் நல்ல உரிமையைக் கையாள்வதன் மூலம் நல்ல குடிமக்களை உருவாக்குகின்றனர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கல்வியறிவற்ற மக்கள் பெரும்பாலும் கட்சித் தொண்டர்களால் தவறாக வழிநடத்தப்பட்டு உணர்வுகள், ஆதாயங்கள் மற்றும் வாக்குவன்மை (பேச்சாற்றல்) ஆகியவற்றால் ஏமாற்றப்படுகிறார்கள். ஒரு தரமான பொதுக்கருத்து என்பது அறிவும் கருத்துச் சுதந்திரம் இருக்கும் சூழலில் தான் உருவாக முடியும்.
அ) வறுமை: எந்தவொரு நாட்டிலும் ஏழைகள் அரசியல் தலைவர்களின் பொய்யான வாக்குறுதியால் எளிதில் கவரப்பட்டு, தங்களது வாக்குகளை அவர்களுக்கு அளித்துவிடுகின்றனர். வறுமையை ஒழிப்பதன் மூலம் மட்டுமே ஓர் தரமான குறிக்கோளுடைய பொதுக்கருத்து என்பது சாத்தியமாகும்.
ஆ) இனவாத மற்றும் சாதி அடிப்படையிலான பாகுபாடு:
சாதி, சமயம் மற்றும் மதம் ஆகியவற்றின் அடிப்படையிலான பாகுபாட்டைத் தூண்டும் விவாதங்கள் மக்களிடையே பிளவுகளை உருவாக்குகின்றன. அவை பெரும்பாலும் அரசியல் கட்சிகளால் தங்களின் நன்மைக்காக கையாளப்படுகின்றன. நாட்டில் பயனுள்ள வகையில் செயலாற்றிக் கொண்டிருக்கும் மக்களாட்சியை சமூக நல்லிணக்கமின்மை சீரழிக்கின்றது.
இ) பேச்சு மற்றும் ஊடக சுதந்திரம்:
நடுநிலையான, குறிக்கோள்மிக்க மற்றும் சுதந்திரமிக்க ஊடகமும், தனிமனித பேச்சுரிமைக்கு மதிப்பளிக்கின்ற சட்டமன்றமும் ஆரோக்கியமான கருத்துக்களை உருவாக்குவதில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. மக்களின் சுதந்திரத்தை மதித்து செய்தி அறிக்கைகளை பொறுப்புடன் வெளியிடுகின்ற ஊடகங்கள் பொதுமக்களின் கருத்தை முதிர்வுடன் உருவாக்குவதற்கான முக்கியமான அடிப்படை ஆகும்.
அரசியல் கட்சிகளின் வரையறை
அரசியல் கட்சிகள் மக்களாட்சி முறை அமைப்புக்கு இன்றியமையாத கருவியாகும். அவைகள் திட்டவட்டமான லட்சியங்கள் மற்றும் செயல்திட்டத்துடன் உருவாக்கப்படுகின்றன. அவை பொது மக்களிடம், சமுதாயம் மற்றும் அரசுக்கு உள்ள பிரச்சனைகளைப் பற்றி விழிப்பூட்டுவதுடன் மாற்றுத் திட்டங்களையும் பரிந்துரைக்கின்றன. பரப்புரையின் மூலம் மக்கள் அரசியல் பிரச்சினைகளை அறியும்படி செயல்திட்டங்களுக்கான ஆதரவையும் பெறுகின்றன.
சட்டமன்றங்களில் வாக்காளர்களின் பிரதிநிதிகளாக ஒருங்கிணைக்கப்பட்ட கருத்துகள எடுத்துரைக்கின்றனர். நாடாளுமன்ற மக்களாட்சியில் சட்டமன்றத்தில் பெரும்பான்மை இடங்களை வென்ற கட்சி அல்லது கட்சிகளின் கூட்டணி அமைச்சரவையை உருவாக்குகிறது. (எ.கா) இங்கிலாந்து, இந்தியா. குடியரசுத் தலைவர் முறை மக்களாட்சி நாடுகளில் தலைமை நிர்வாகிகள் (அதிபர்) கட்சி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் (எ.கா. அமெரிக்கா, பிரான்ஸ்). எந்தவொரு முறைமையிலும் அரசியல் கட்சிகள் அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் இடையில் பாலமாக செயல்படுகின்றனர். மக்களாட்சியில் பொதுக்கருத்துக்கள் அரசியல் கட்சிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு இடையே தொடர்ச்சியான போட்டி உள்ளதுடன் இந்த போட்டி மக்களாட்சியினை முதிர்ந்த செயல்பாட்டை உறுதி செய்கிறது.
- ஓர் மக்களாட்சியில் அரசியல் கட்சிகளின் மூலமாகவே பொதுக்கருத்துக்கள் வழிநடத்தப்படுகின்றன.
அரசியல் கட்சிகளின் பணிகள்
ஒரு மக்களாட்சியில் அரசியல் கட்சிகள், அரசாங்கம் மற்றும் பொதுமக்கள் தொடர்பு கொள்ள ஒரு ஒருங்கிணைந்த இணைப்பாக செயல்படுகின்றன.
அரசியல் கட்சிகள் மக்களை அரசியல் முன்முயற்சிகள் மற்றும் பொது அனுபவங்களை நோக்கி நகர்த்தும் அடித்தளமாக செயல்படுகின்றன. அரசியல் கட்சிகள் வாக்குகளை அணிதிரட்டும் நோக்கத்துடன் மக்களின் அரசியல் சிந்தனை மற்றும் கருத்துக்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
அரசியல் பொருளாதார மற்றும் சமூக செயல்பாட்டிற்கான ஓர் தளத்தை வழங்குவதம் மூலம் எதிர்கால மாநில மற்றும் தேசிய தலைமைகளுக்கு பயிற்சிக் களமாக செயல்படுகின்றன. நீண்ட காலமாக அவர்கள் கட்சிக்குள்ளேயும், எதிர்க்கட்சிகளிலிருந்தும் கடுமையான விவாதம் மற்றும் வினா எழுப்புவதன் மூலம் தங்களின் நடவடிக்கைகளுக்குக் கட்சித்தலைவர்கள் பொறுப்புணர்வுடன் இருக்கிறார்கள். இவ்வாறு மக்களுக்கு பலதரப்பட்ட வேட்பாளர்களையும், கொள்கைகளையும் தேசத்தில் நிலவுகின்ற பல்வேறு பிரச்சனைகளுக்கான அணுகுமுறைகளையும் கட்சிகள் வழங்கியுள்ளன.
மக்களாட்சியில் அவர்களுடைய நம்பிக்கையானது மாற்றம் மற்றும் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான அறிவை வலுவூட்டுகின்றது. இதன்மூலம் மக்களில் பெரும்பான்மையினர் அவர்களின் ஆட்சி வழிவகையில் தாங்கள் விரும்பும் ஓர் மாற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.
கட்சி முறை:
கட்சி முறை என்பது அரசாங்கங்களை நடத்துவதற்கும் , நிலைநிறுத்துவதற்கும் உதவுகிறது. மேலும் அவை மக்களாட்சியின் திறன் வாய்ந்த செயல்பாட்டிற்கும் தேவையானதாக இருக்கின்றன. கட்சிமுறை என்பது அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிரான கட்டுப்பாடுகள் மற்றும் அதிகாரச் சமநிலையை வழங்கும் முறையாகும். பொது மக்களிடையே ஆதரவைப் பெறுவதன் மூலம் கட்சிக்குள்ளேயே தலைமைத்துவத்திற்கும், கலந்துரையாடலுக்கும் ஓர் கட்டமைப்பினை அந்தந்த கட்சிகளின் குறிக்கோள் மற்றும் செயல்திட்டப்படி வழங்குவதன் மூலம் அது நிலையான மற்றும் நல் ஆட்சிக்கு உதவும்.
- ஓர் அரசியல் கட்சி என்பது மக்களின் ஒன்றிணைந்த ஒரு குழுவாக தேர்தலில் போட்டியிட்டு அரசாங்கத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றுகிறது. அவர்கல் சமுதாயத்திற்கான கூட்டு நலனை ஊக்குவிப்பதற்கான சில கொள்கைகளையும், திட்டங்களையும் ஒப்புக்கொள்கிறார்கள். (சின்னங்கள் அல்லது பல்வேறு அரசியல் கட்சிகளின் கொடி) ஓர் அரசியல் கட்சியின் மூன்று கூறுகள் – தலைவர் – செயல் உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள்.
கட்சி முறைகளின் வகைகள்
பல்வேறு வகையான கட்சி முறைகள் உலகெங்கிலும் உள்ள பல்வேறு பகுதிகளிலும் நடைமுறையில் உள்ள குறிப்பிட்ட கூறுகளை பொறுத்து பரிணாமவளர்ச்சியில் உருவாகியுள்ளன. ஓர் மக்களாட்சியின் தரமானது எப்படி அரசாங்கம் அதன் மக்களை பிரதிநிதித்துவம் செய்கிறது. எப்படி அரசாங்கம் அதன் மக்களுக்கு பொறுப்புடன் இருக்கிறது, எப்படி மனித உரிமைகள் மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் சமூக நிலையிலும், வாய்ப்புக்களிலும் சமத்துவத்தை உறுதி செய்வதுடன், அரசியல் பங்கேற்பில் மக்களுக்கு சமமான வாய்ப்புகளையும் ஏற்படுகிறது. பல விதமான கட்சி முறைகள் இந்த சிக்கல்களை பல்வேறு வழிகளில் அணுகுவதன் மூலமாக பின்பற்றப்படும் மக்களாட்சியின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது.
அ. ஒரு கட்சி முறை
ஒரு கட்சி முறையில் ஓர் அரசியல் கட்சி அரசாங்கத்தை உருவாக்கும் உரிமையை பெறுகிறது. இது எழுதப்பட்ட அல்லது எழுதப்படாத அரசமைப்பிலிருந்து பெரும்பாலும் பெறப்படுகிரது. ஒரு கட்சி முறையின் கீழ் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் குறைவான பங்கேற்பு மற்றும் பலவீனமான பொறுப்புடைமை உள்ளது. (எ.கா) சிங்கப்பூர், (வடகொரியா), கொரிய தொழிலாளர் கட்சி, வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி (வியட்நாம்), கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சி (கியூபா), கம்யூனிஸ்ட் கட்சி (சீனா). ஒரு கட்சி முறையானது மக்களாட்சியிலான வெளிப்பாடுகளுக்கு போதுமான வாய்ப்புகளை வழங்காததுடன் மாற்றத்திற்கான பரவலான வரையெல்லையையும் வழங்கவில்லை. உதாரணத்திற்கு 1920-களில் தேசியவாத இராணுவத்தை ஆதரித்து பாசிச இயக்கங்கள் ஹிட்லரின் தலைமையில் ஜெர்மனியிலும், முசோலினியின் கீழ் இத்தாலியிலும், ஜெனரல் பிராங்கோவின் கீழ் ஸ்பெயினிலும் அதிகாரத்தை கைப்பற்றியதுடன் அரசியல் கட்சிகள் உருவாவதைத் தடைசெய்தன.
ஆ) இரு கட்சி முறை
இரு கட்சி முறையில், இரண்டு அரசியல் கட்சிகள் வேறுபட்ட நலன்களுடன், பெரும்பான்மையை பெற்று அரசாங்கத்தை அமைப்பதற்கான சம வாய்ப்பைக் கொண்டுள்ளன. இரு கட்சி முறையிலும் பெரும்பான்மை பெறும் கட்சி ஆளும் கட்சியாகவும் சிறுபான்மை கட்சி, எதிர்க்கட்சியாகவும் உருவாக்கின்றன. இரு கட்சி முறையில் அரசியல் தலைவர்களிடம், மிக அதிக பொறுப்புணர்வும், அதிக அரசியல் பங்கேற்பும் உள்ளது. எதிர் கட்சிகள் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் மூலமாக தங்களை நீக்கும் அச்சுறுத்தல் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக இருப்பதனால் ஆட்சியில் இருப்பவர்கள் அதிக அளவிலான பொறுப்பான நடத்தை மற்றும் செயல்பாட்டினை மேற்கொள்கின்றனர்.
அரசியல் சூழ்நிலை பெரிதும் துருவப்படுத்தப்படுவதால், ஓர் கட்சி அதிகாரத்தை இழந்தபின் தேசிய நலன்களுக்கு திஈங்கு விளைவிக்கக்கூடிய கடுமையான மாற்றங்கள் ஏற்படலாம். இருகட்சி முறையின் எடுத்துக்காட்டாக அமெரிக்கா (மக்களாட்சிவாதிகள்/ குடியரசுவாதிகள்) மற்றும் இங்கிலாந்து – (பழமைவாதிகள் மற்றும் தாராளவாதிகள்).
எவ்வாறாயினும், எந்தவொரு நாட்டிலும், கட்சிகளின் எண்ணிக்கையில் எந்த அரசமைப்பு சார்ந்த கட்டுப்பாடும் இல்லை. அரசமைப்பு நடைமுறைகள் மற்றும் மக்களின் அரசியல் முதிர்ச்சியே இரு கட்சி முறையின் தோற்றத்திற்கு வழிவகுக்கின்றது.
இ. பல கட்சி முறை
பல கட்சி முறையில், பல அரசியல் கட்சிகள் இருப்பதுடன் பெரும்பான்மை பெற்ற கட்சி அல்லது பெரும்பான்மை பெறாத ஒரே நோக்கமுடைய பல கட்சிகளுடனான கூட்டணியின் மூலாமகவும் மக்கள் ஆதரவை வென்றெடுத்து அரசாங்கத்தை உருவாக்குகின்றன. இந்த முறையில் அரசியல் தலைவர்கள் தொடர்ந்து தங்கள் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களால் உற்றுநோக்கப்படுவதுடன் அரசியல் சமநிலையையும் நிலை நாட்டுகின்றனர். அவர்கள் மக்களுக்கு அதிக பொறுப்பு உள்ளவர்களாகின்றனர். பல கட்சிமுறை வாக்காளர்களுக்கு அரசியல் பங்கேற்பில் பல்வேறு வழிகளையும், பெரிய அளவிலான தேசிய மேம்பாட்டிற்குரிய அரசியல் மாற்றங்களைக் கொண்டு வரும் திறமையையுன் வழங்குகிறது.
பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் உள்ள விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை பல கட்சி முறையிலும் கூட்டணி அமைச்சரவைகளிலும் முடிவடைகிறது. கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, சுவீடன் ஆகிய நாடுகள் பல கட்சி முறையிலான நாடுகளின் எடுத்துக்காட்டுகள் ஆகும்.
மக்களாட்சியில் அரசியல் கட்சிகள் பங்கு
மக்களாட்சியின் தரம் மற்றும் செயல்திறனை உறுதி செய்கின்றன விதமாக அரசியல் கட்சிகளின் இருப்பு இருக்கின்றன. அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற கூட்டாட்சிகளில் உள்ள பன்முக பண்பாடு மற்றும் பன்மை சமூகங்களில் அமைதி ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக பராமரிப்பது அவசியம் ஆகின்றது. ஒரு கட்சி முறையில் விரைந்து முடிவெடுக்கவும், ஒத்திச்சைவு நடவடிக்கைகளுக்கு அதிக நெழிழ்வுத் தன்மையைக் கொண்டிருக்கும்போது இந்த முடிவுகள் பரந்துபட்ட மக்களின் கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்தாது. இதனால் அரசாங்கத்திற்கு எதிரான அதிக எதிர்ப்பையும் பேதங்களையும் அது உருவாக்கும்.
கட்சியின் கட்டமைப்பு மற்றும் தலைமையின் இயல்பு காரணமாக இரு கட்சி மூறைமையில் , பொதுவாக பொது கொள்கைகளிலும் முடிவுகளிலும், ஒத்துழைப்புக்கு மாறாக அரசியல் துருவப்படுத்தப்படுகிறது. பலகட்சி முறையில் கூட்டணி கட்சிகளிடையே கவனமாக கருத்தில் கொண்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் அதன் செயல்திறன் உள்ளது. மேலும் விவாதங்களினால் பரஸ்பர அடிப்படையிலான ஒருமித்த கருத்தை அடைவதன் மூலமும் பெரும்பாலும் பிரச்சனைகள் தீர்க்கப்படுகின்றன. எனவே அரசியல் கட்சிகள் மக்களுடைய உரிமைகளையும், சுதந்திரங்களையும் காப்பாற்ற வேண்டியது முக்கியமான ஒரு மக்களாட்சியின் உந்து சக்திகள் ஆகும். பயனுள்ள குடியுரிமை பயிற்சி மற்றும் அதிக குடிமக்கள் பங்கேற்பு மூலம் மக்களாட்சி நாடுகளில் உள்ள இளைஞர்கள் அரசியல் கட்சிகளின் பெரிய பங்கினை வகிக்க முடியும். இதனால் உலக நாடுகளில் முதிர்ச்சியடைந்த மற்றும் பரந்த மக்களாட்சிமயமாக்கலை வளர்க்க முடியும்.
மக்களாட்சியில் அரசியல் கட்சிகளின் பங்கு
- அரசியல் கட்சிகள் என்றால் என்ன?
- அரசியல் கட்சியின் பொதுப்பதவிகளுக்காக வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து தேர்தலில் நிறுத்துகின்றன.
- அவை கட்சியின் பெயரில் அரசாங்க அதிகாரிகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, ஒருதரப்படுத்த முயற்சி செய்கின்றன.
- பல அரசியல் அறிஞர்கள் கட்சிகள் மக்களாட்சிக்கு அவசியம் என்று நம்புகிறார்கள்.
- அரசியல் கட்சி என்பது மக்களது இறையாண்மை மற்றும் பெரும்பான்மை ஆட்சியின் பிரதான கருவியாக ஒரு சிலரால் கருதப்படுகிறது.
- அரசியல் கட்சிகள் ஒழுங்காக வேலை செய்யும் பொழுது, மக்களின் இறையாண்மைக்கான அவசியமான கருவிகளாக அவை இருக்கலாம்.
- அரசியல் கட்சிகளே மக்களாட்சியின் உந்து சக்திகள் ஆகும்.
- பொதுக்கருத்தினை உருவாக்குவதற்கு அரசியல்வாதிகள் தங்களது பேச்சாற்றல் மற்றும் தலைமைத் திறன்களைப் பயன்படுத்துகின்றனர்.
நவீன கட்சி முறை
அ. இங்கிலாந்தில் கட்சி முறை
இங்கிலாந்தில் முடியாட்சியின் நிலை மற்றும் அதன் பங்கினை பற்றிய பிரச்சனைகள், கருத்துக்கள் துருவப்படுத்தப்படுவது இரண்டு கட்சிகளின் தோற்றத்திற்கு வழிவகுத்தது.
அவையாவன:
- டோரீஸ் அல்லது பழமைவாதிகள்
- விக்ஸ் அல்லது தாராளவாதிகள்
20ஆம் நூற்றாண்டில் தொழிலாளர் கட்சி தாராளவாதிகளை விட பெரிய சக்தியாக மாறியது.
ஆ. ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கட்சி முறை
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் நிறுவனத் தலைவர், அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றுக்கு இடையேயான பிரிவினைவாத மோதல்களைத் துடைத்தெறிய விரும்பினர். இருப்பினும் அமெரிக்க சுதந்திரத்திற்குப் பின்னர், ஜார்ஜ் வாஷிங்டனின் பதவிக்காலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட அமெரிக்க தேசத்தில் முதலில் உருவான கட்சிகளில் வலுவான தேசிய அரசாங்கத்தை ஆதரிக்கும் கூட்டாட்சிக் கட்சியும், மாநில தன்னாட்சி உரிமையை ஆதரிக்கும் கட்சியாக குடியரசுக் கட்சியும் இருந்தன. 1828-ல் மக்களாட்சியிலான குடியரசுக் கட்சி என்ற பெயர் மக்களாட்சிக் கட்சியாக மாற்றப்பட்டது. இது அரசின் உரிமைகளை வென்றது. 1854-ல் குடியரசுக் கட்சி கொத்தடிமை முறைக்கு எதிராக தனது போராட்டக் களத்தை அமைத்துக் கொண்டதுடன் அமெரிக்க குடியரசுத் தலைவராக ஆபிரகாம் லிங்கன் பதவிவகித்ததால் அதிக முன்னுரிமையைப் பெற்றது. அமெரிக்காவில் இரு கட்சி முறை என தீர்வு காணப்பட்டதிலிருந்து, குடியரசு கட்சி மற்றும் மக்களாட்சிக் கட்சிகள் அமெரிக்க அரசியல் களத்தில் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. இருப்பினும் மூன்றாவது கட்சி வேட்பாளர் அவ்வப்போது வெளிப்பட்டு மறைந்தனர்.
இ. ஐரோப்பாவில் கட்சி முறை
பிரெஞ்சு புரட்சிக்குப் பின்னர் (1789), ஐரோப்பிய நாடுகளில் மக்களாட்சி சக்திகள் பலம் பெற்று அரசியல் கட்சிகள் தோன்றின. ஐரோப்பிய கண்டத்தில் அரசியல் கட்சிகள், பழமைவாதிகள், தாராளவாதிகள் மற்றும் கிறிஸ்துவ மக்களாட்சிவாதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். 19ஆம் நூற்றாண்டில் சமதர்ம இயக்கங்கள் பிரபலமடைந்து சமூக மக்களாட்சி அல்லது தொழிலாளர் கட்சிகள் உருவாயின. அவை பிரபலமடைந்து தொழிற்சங்க ஆதரவைப் பெற்றன. சோவியத் ரஷ்யாவில், போல்ஷிவிக் கட்சி 1917-ல் நடந்த பொதுடைமைப் புரட்சியினை நடத்தி சோவியத் யூனியன் என்ற பிரபலமான சோவியத் சோசலிச குடியரசுகளை உருவாக்கியது. COMINTERN (கம்யூனிஸ்ட் இன்டர்நேஷனல்) அமைப்பு பிற நாடுகளில் பொதுவுடைமைக் கட்சிகளை ஆதரிப்பதன் மூலம் உலக பொது உடமைப் புரட்சியை ஊக்குவிக்கும் பணியை மேற்கொள்ள நிறுவப்பட்டது. பனிப்போர் முடிவுக்கு பின் பொதுவுடைமைக் கட்சி ரஷ்யாவில் அதன் புகழை இழந்தது. இருப்பினும், சில பொது உடமைக் கட்சிகள் இன்னும் மக்களாட்சி அரசுகளுக்குள் அரசாங்கக் கொள்கைகளில் செல்வாக்கு செலுத்துகின்றன. பொதுவுடைமை கட்சிகள் இன்றும் தொடர்ந்து
சீனா மற்றும் வட கொரியாவில் எதேச்சதிகார அரசாங்கங்களை கட்டுப்படுத்துகின்றன.
மக்களாட்சி அரசியல் முறைமைகள் தங்கள் குடிமக்களின் அடிப்படையான சமூக-பொருளாதார விழுமியங்களை பிரதிபலிப்பதாகவும், பெரும்பாலும் பரிவும் எதிர்செயலுமாக இருக்கின்றன. எப்போதும் மதிப்புகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்வதுடன் அவை அரசியல் கட்சிகளின் மாறுபட்ட நோக்கங்கள் மூலம் மக்களின் அரசியல் கருத்துக்களில் பிரதிபலிக்கின்றன. 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பாவில் தாக்கத்தை ஏற்படுத்திய பாதிக்கும் சமூக பொருளாதார காரணிகள் தேசியவாத மற்றும் குறுகிய மனப்பான்மை கொண்ட கட்சிகளின் எழுச்சி மூலம் பிரதிபலிக்கப்பட்டன. அவை புலம்பெயர்தோருக்கு எதிராக அவர்களின் உணர்வுகளுக்காக குரல் கொடுத்தல் மற்றும் அகதிகளின் வருகை என்பதனை ஐரோப்பிய கலாச்சாரம், பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக பார்த்தனர்.
இரு கட்சி முறை
- உலகம் முழுவதும் அரிதானது ஆகும்.
- தேசிய மற்றும் உள்ளாட்சி அளவில் சமமான நிலையில் உள்ளது.
- தேர்தல் அமைப்பு (முறைமை).
- வெற்றி பெற்றவர் அனைத்தையும் எடுத்துக்கொள்வர்.
- வீணாக்கப்பட்ட வாக்கு.
- முன்னுரிமை அடிப்படையிலான அமைப்பு.
- தேர்தலுக்கு முன் பரந்த கூட்டணிகள் அமைக்கப்படுகின்றன.
- வாக்காளர்களின் கருத்து.
- மூன்றாவது கட்சியினருக்கு வாக்குச் சீட்டில் இடம்பெறுவது கடினமாக உள்ளது.
ஈ. தென்னாப்பிரிக்காவின் கட்சி முறை
ஆப்பிரிக்க நாடுகளில், அரசியல் கட்சிகள் முதலில் காலனித்துவத்துக்கு எதிராக போராடுவதற்காக உருவாக்கப்பட்டது. காலனித்துவத்திலிருந்து விடுதலை அடைந்த ஆப்பிரிக்க நாடுகளில் , அரசியல் கட்சிகள் இராணுவவாதத்திற்கு எதிராக கடுமையாக போராடுகின்றன.
தென்னாப்பிரிக்காவின் அரசமைப்பு
- 18 வயதில் அனைவருக்கும் வாக்குரிமை
- பொதுவான வாக்களர் பட்டியல்
- வழக்கமான தேர்தல்
- பொறுப்புணர்வு, பாதிலுரைத்தல் மற்றும் வெளிப்படையான அரசாங்கத்தை உறுதிப்படுத்த பல கட்சி முறை மக்களாட்சி அவசியம்.
இந்தியாவில் கட்சி முறை
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான சுதந்திர போராட்டத்தினாலும், தேசியவாதத்தின் எழுச்சியினாலும் இந்தியாவில் கட்சி முறைகள் வெளிப்பட்டன. இந்திய அரசியல் இன்று பல கட்சி முறையை கொண்டதாக இருப்பினும் இந்திய வரலாற்றில் நிஈண்ட காலமாக, ஒரே கட்சி அரசியல் அரங்கில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இந்திய தேசிய காங்கிரசு (INC) 1885 ஆம் ஆண்டில் ஆலன் ஆக்டோவியன் ஹியூம் (A.O.Hume) என்பவரால் நிறுவப்பட்டது. இது சட்டமன்ற மற்றும் அரசியல் பிரிவுகளில் இந்தியர்களின் அரசியல் பங்கேற்பிற்கான அடித்தளமாக இருந்தது. இது படிப்படியாக பல்வேறு நிலைகளில் சீர்திருத்தங்களைக் கோரியது. ஒத்துழையாமை இயக்கத்திற்கு (1921 – 23) பின்னர், இந்திய தேசிய காங்கிரசு (INC) முழுமையான அரசியல் சுதந்திரத்தை கோரியது.
20-ஆம் நூற்றாண்டில், வகுப்புவாதத்தை செயல்திட்டமாக கொண்ட கட்சிகள், அதாவது 1906ஆம் ஆண்டு இந்தியாவில் முஸ்லிம் லீக் மற்றும் 1916-இல் இந்து மகாசபை போன்ற கட்சிகள் உருவாகின. சென்னை மாகாணத்தில், தென்னிந்திய சுதந்திரவாதக் கூட்டமைப்பு (நீதிக்கட்சி) பிராமணரல்லாதோரின் (திராவிடர்கள்) நலன்களை பிரதிபலிக்க உருவக்கப்பட்டது. எனினும் இந்திய தேசிய காங்கிரசில் நகர்ப்புற , உயர்குடி சாதியினர், பெரும்பாலும் மேற்கத்திய கல்வி கற்றவர்களையே பிரதிநிதித்துவப்படுத்தியதுடன், ஆங்கிலேய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு தளத்தை வழங்கியது. படிப்படியாக இந்திய தேசிய காங்கிரசு இந்தியாவின் அரசியல் கட்சியின் முறயின் வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்கினை வகித்தது. 1905-இல் வங்கப் பிரிவினைக்குப் பிறகு, இந்திய தேசிய காங்கிரசில் மிதவாதிகள் (மனுக்களின் கொள்கை) மற்றும் தீவிரவாதிகள் (ஆக்கிரமிப்பு உத்தி) என பிரிவினை ஏற்பட்டது.
1906-ஆம் ஆண்டில் முஸ்லீம் லீக்கின் உருவாக்கம் முரண்பாடான அரசியல் பேரம் பேசும் வெளிப்படையான காலமாக உருவானதோடு, இந்திய கட்சி முறையின் உண்மையான தொடக்கத்தை பிரதிபலித்தது.
அரசியல் அரங்கில் மகாத்மா காந்தியின் வருகையை தொடர்ந்து, அவரின் அகிம்சையின் மீதான தார்மீக –நெறிமுறைக் கவனமுடன் கூடிய, அரசியல் லட்சியங்கள் மற்றும் வழி முறைகளில் இந்திய தேசிய காங்கிரசு (INC) என்பது அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த ஏழை விவசாயிகள் மற்றும் பின்தங்கிய பிரிவினர்களையும் , பிரதிநிதித்துவப்படுத்தியது.
சித்தரஞ்சன் தாஸ் 1922-இல் தொடங்கிய சுயராஜ்ய கட்சி, 1934-இல் ஆச்சார்யா நரேந்திர தேவ் தொடங்கிய காங்கிரசு சோசலிஸ்ட் கட்சி மற்றும் 1920-இல் எம்.என். ராயின் (M.N.Roy) முயற்சியால் தொடங்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவைகள் இதர முக்கிய அரசியல் கட்சிகள் ஆகும். அரசியல் பரப்புரைகளில் ஈடுபடும் பல அரசியல் கட்சிகள் தேர்தல்களில் போட்டியிடாமல் இருந்தன. இத்தகையவை அழுத்த குழுக்களாகச் செயல்பட்டன.
1977-ஆம் ஆண்டு வரை பொதுவுடைமை கட்சி, சோசலிஸ்ட் கட்சிகள் மற்றும் வலதுசாரி ஜனசங்கம் ஆகியவை தேசிய அளவில் குறிப்பிடத்தக்க எதிர்கட்சிகளாக இருந்தன. 1977 வரை , எந்த ஒரு கட்சியும் தேசிய அளவில் இந்திய தேசிய காங்கிரசுக்கு மாற்றாக வர இயலவில்லை. எனவே, ஜெயப்பிரகாஷ் நாராயணனின் தலைமையின் கீழ் பல தேசிய கட்சிகள், ஓர் பெரிய தேசிய அளவிலான மாற்றுக் கட்சியை உருவாக்க இணைந்தன. 1977-ஆம் ஆண்டில் ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. 1980-க்குப் பிறகு, இந்த கட்சிகள் ஒன்றியிருக்கும் திறனையும், ஒற்றுமையையும் இழந்து விட்டன, பாரதீய ஜனதா கட்சி என்ற புதிய பெயருடன் ஜனசங்கம் புத்துயிர் பெற்றது. இதற்கிடையில் கன்ஷிடாமின் பகுஜன் சமாஜ் கட்சி சமூக நீதியை பிரதானதிட்டமாக கொண்ட ஒரு தேசியக் கட்சியாக உருவாகியது. கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் திரிபுரா போன்ற சில மாநிலங்களில் பொதுவுடமை கட்சி (மார்க்சிஸ்ட்) மிகவும் சக்திவாய்ந்ததாக ஆனது.
1990-களில் இந்திய அரசியல் கூட்டணி அரசாங்கங்களுக்கான காலமாக இருந்தது. இந்திய அரசியல் முறைமை என்பது சமகால இந்தியாவில் காணப்பட்ட பலதரப்பட்ட பண்பாட்டு சமூக உறவு, பன்முகத்தன்மை, அதிக போட்டித்திறனோடு அதிக அளவில் மக்களாட்சி மயமாக்கப்பட்ட பிரதிநிதித்துவம் பெற்றது. பழைய கட்சிகள் வழக்கற்று செயலற்றதாகவும் மாறிவிட்டன. மேலும் புதிய கட்சிகள் மாறிவரும் சவால்களை எதிர்கொள்ள முயற்சித்தன.
1990-களில் இருந்து கூட்டாட்சி அரசுயல் முறையை நாம் காண்பதுடன் பிராந்தியக் கட்சிகள் பெரிய செல்வாக்கைப் பெற்றுள்ளதையும் மத்திய அரசின் ஆதிக்கத்திற்கு எதிராக பிரதேச உணர்வுகளை பிரதிநிதிப்படுத்துவதையும் நாம் காண்கிறோம். தற்போதைய காலத்தில், பிராந்திய அளவிலான கூட்டணிகள் கூட்டாட்சி அரசியலுக்கு ஆதரவாக்க் குரல் கொடுக்கும் போக்கு இருப்பதைக் காணலாம். இதற்குக் காரணமாக அரசியலில் பிரதேசமயமாக்கலும், குறிப்பிட்ட பகுதிகளில் அதிக ஆதரவைக் கொண்டிருக்கும் கட்சிகளும் உள்ளன.
மண்டலக் கட்சிகள்
பஞ்சாப்பில் சிரோமணி அகாலி தளம், உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதிக் கட்சி, ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சி, பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம், மேற்கு வங்காளத்தில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு, தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, அசாமில் அசாம் கண பரிசத், மகாராஷ்டிராவில் சிவசேனா, ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டுக்கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை முக்கிய பிராந்தியக் கட்சிகளாக உள்ளன.
வாக்களர்களிடையே அரசியல் விழிப்புணர்வு அதிகரிக்கையில், பிரதேச, சமூக மற்றும் மத அடையாளங்களுடன் அதிக அணி திரட்டலும் உள்ளது. அரசியல்குழுக்களின் அமைப்பில் பார்க்கும்போது ஒரு பிராந்தியத்திற்கும் இன்னொன்றிற்கும் இடையில் உள்ள அரசியல் மற்றும் சமூக குழுக்களின் பண்புகள் போன்றவற்றில் பரந்த வேறுபாடு உள்ளது.
2009 தேர்தலில் நாடாளுமன்றத்தில் இடங்களை பெற்ற கட்சிகள் | 2014 தேர்தலில் நாடாளுமன்றத்தில் இடங்களைப் பெற்ற கட்சிகள் |
இந்திய தேசிய காங்கிரசு | பாரதிய ஜனதா கட்சி |
பாரதிய ஜனதா கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
இந்திய பொதுவுடைமை கட்சி (மார்க்சிஸ்ட்) | அனைத்திந்திய அண்ண திராவிட முன்னேற்றக் கழகம் |
சமாஜ்வாதி கட்சி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு |
பகுஜன் சமாஜ் கட்சி | சிஜூ ஜனதா தளம் |
திராவிட முன்னேற்றக் கழகம் | சிவசேனா |
சிவசேனா | தெலுங்கு தேசம் கட்சி |
ராஷ்டிரிய ஜனதாதளம் | தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி |
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | யுவஜன ஸ்ரமிக ருது காங்கிரசு கட்சி |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | தேசியவாத காங்கிரசு கட்சி |
தமிழ்நாட்டில் கட்சி முறை
தமிழ்நாட்டில், பெரும்பாலான இந்திய மாநிலங்களைப் போலவே தொடக்கத்தில் சுதந்திர போராட்ட காலத்தில் காங்கிரசு கட்சி ஆதிக்கம் செலுத்தியது. இருப்பினும் சாதி அடுக்குமுறையில் சிக்கல்கள் மற்றும் அதிகரிக்கும் வடக்கு, தெற்கு பிரிவினையின் எழுச்சி ஆகியவை மாநிலத்தில், காங்கிரசினுடைய புகழைக் குலைத்தன. திடாவிட இயக்கம் பெரியார், ஈ.வெ.ராமசாமியின் கீழ் தமிழ்நாட்டில் புத்துயிர் பெற்று திராவிட உரிமைகள், சுயமரியாதை, கண்ணியம் ஆகியவற்றின் வலியுறுத்தல் மற்றும் வடக்கு எதிர்ப்பு , இந்தி எதிர்ப்பு, பிராமணர் ஆதிக்கத்திறன் எதிரான சமூக கொண்டு ஆகியவற்றினால் பிரபலமடைந்தது.
தமிழ்நாட்டில் கட்சி அமைப்பு முறையானது சுதந்திர இந்தியாவின் அரசியலில் மாநில கட்சிகளின் ஒப்புயர்வற்ற நிலைக்கு முன் மாதிரியாக உள்ளது. இந்த மேம்பாட்டிற்கு மிகவும் தெளிவான சமூக-பொருளாதார, பண்பாடு மற்றும் வரலாற்று காரணங்கள் உள்ளன. காலனித்துவ காலம்முதல் பகுத்தறிவு மற்றும் சமூக நீதி இயக்கங்களின் நீண்ட வரலாறு மற்றும் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து திராவிட சிந்தனையை அணி திரட்டுதல் போன்றவை தமிழக அரசியலின் தன்மையையும் , மாநில அரசியலில் அரசியல் கட்சி முறையின் எதிர்காலத்தையும் தீர்மானித்தது எனலாம்.
மக்களாட்சியில் அரசியல் கட்சிகளின் பங்கு
ஓர் மக்களாட்சியின் திறன்மிக்க செயல்பாட்டிற்கு, முரண்பாடான விருப்பங்களைப் பிரதிபலிப்பு செய்யும் அரசியல் கட்சிகளின் இருப்பது கட்டாயமாகும். பல்வேறு விருப்பங்களையும், கொள்கைகளையும் பரிந்துரைக்கையில் பெரும்பாலான அரசியல் கட்சிகள், வலதுசாரி (பழமைவாதம் , பாரம்பரியம் மற்றும் முதலாளித்துவம்) அல்லது இடதுசாரி சிந்தனையை (சமத்துவ –சார்பு, தாராளவாதம் மற்றும் தொழிலாளர் நலனை) பின்பற்றுகின்றன. மக்களாட்சிக்கான லட்சியத்தை அடைவதற்கு அரசியல் கட்சிகள் அவசியமானவை என்பது உண்மையே என்றாலும், மக்களாட்சி கோட்பாடற்ற, தனிப்பட்ட கட்சிகளின் வளர்ச்சி மற்றும் சர்வாதிகார தலைமையின் கீழ் தனிப்பட்ட கட்சிகளின் எழுச்சி என்பது மக்களாட்சிக்கு ஒரு முக்கியமான சவால் ஆகும். இந்தியா போன்ற பல பன்முக பண்பாடு, மொழி, மத மற்றும் பொருளாதார வேற்றுமை கொண்ட நாடுகளில், நாட்டில் ஒவ்வொரு மூலையிலிருந்தும் மக்களின் பல்வேறுபட்ட நலன்களை அரசியல் கட்சிகள் மட்டுமே பிரதிபலிக்கின்றன. இத்தகைய முதிர்ச்சியடைந்த, மதச்சார்பற்ற நிலைப்பாட்டை மேற்கொள்வது இந்தியா போன்ற மக்களாட்சி நாடுகளுக்குப் பொருத்தமானது, இல்லையெனில், இந்தியாவின் மதிப்புயர்வான ஒற்றுமை மற்றும் நிலைத்தன்மையை பாதுகாக்க முடியாது. நாட்டின் நலனிற்காக பொறுப்புணர்வு மற்றும் கொள்கை ரீதியான கட்சிகள், மக்களாட்சி அமைப்புகளின் நிலைத்தன்மைக்காக தங்கள் கடமையையும், செயல்பாட்டையும் கையாளுவதில் முதிர்ச்சி மற்றும் பொறுப்புணர்வை காட்டுகின்றன.
மக்களாட்சியில் எதிர்க்கட்சிகளின் பங்கு
கட்சி முறை மற்றும் மக்களாட்சி ஆகியவற்றிக்கு இடையிலான உறவு, மக்களாட்சியில் எதிர்கட்சிகளின் பங்கு பற்றிய விவாதம் இல்லாமல் முழுமையடையாது. நாட்டில் ஓர் சக்தி வாய்ந்த எதிர்கட்சி அல்லது கட்சிகள் இல்லாமல் மக்களாட்சிக்கு எந்த அர்த்தமும் இல்லை. மக்களாட்சியின் தன்மை ஆளும் கட்சியின் வலிமையினால் மட்டுமே நிர்ணயிக்கப்படுவது அல்ல, எதிர்க்கட்சியின் பங்கு மற்றும் அதன் செயல்பாட்டிலும் உள்ளது.
உண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் அமைச்சர் பதவிக்கான தகுதியையும், சலுகைகளையும் பெறுகிறார். ஓர் பலவீனமான எதிர்க்கட்சி பொறுப்புணர்வற்ற அரச்சாங்கத்திற்கு அல்லது பெரும்பான்மையின் கொடுங்கோண்மைக்கு வழிவிடுகிறது.
அழுத்தக்குழுக்கள் அல்லது தன்னலக்குழுக்கள் ஆகியவை முக்கியப் பிரச்சனைகள் மற்றும் நிகழ்வுகளில் ஓர் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவை பொதுவான அரசியல் மற்றும் சமூக நலன்களைக் கொண்ட குழுக்களாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. அவை வெளியிலிருந்து வரும் முடிவுகளின் மீது செல்வாக்கு செலுத்துகின்றன. அழுத்தக் குழுக்கள் குறிப்பிட்ட நலன்களுக்காக தன்னார்வ உறுப்பினர்கள் மூலம் ஆதரவு திரட்டுகின்றன. அரசியல் கட்சிகள் போலன்றி, அழுத்தக்குழுக்கள் தேர்தலில் போட்டியிடுவதில்லை.
அழுத்தக்குழுக்கள் அல்லது தன்னலக்குழுக்கள் ஆகியவை முக்கியப் பிரச்சனைகள் மற்றும் நிகழ்வுகளில் ஓர் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவை பொதுவான அரசியல் மற்றும் சமூக நலன்களைக் கொண்ட குழுக்களாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. அவை வெளியிலிருந்து வரும் முடிவுகளின் மீது செல்வாக்கு செலுத்துகின்றன. அழுத்தக் குழுக்கள் குறிப்பிட்ட நலன்களுக்காக தன்னார்வ உறுப்பினர்கள் மூலம் ஆதரவு திரட்டுகின்றன. அரசியல் கட்சிகள் போலன்றி, அழுத்தக்குழுக்கள் தேர்தலில் போட்டியிடுவதில்லை.
அழுத்தக்குழுக்கள் பல பொதுக் கொள்கை சிக்கல்களால் பல்வேறு வழிமூறைகளை பின்பற்றி அரசாங்கத்தின்மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே அவை அழுத்தக் குழுக்கள் என்று அழைக்கப்படுகின்றன. தொழில் சார்ந்த அழுத்தக் குழுக்கள் என்பவை வணிக நலன்களை, தொழிற்சங்கங்கள், விவசாயிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் , மருத்துவர்கள், பண்பாட்டுக் குழுக்கள் மற்றும் நிறுவன குழுக்கள் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கலாம். மக்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கிடையிலான தொடர்பு மற்றும் தொடர்புக்கான ஆதாரமாக செயல்படுவதன் மூலம் இந்திய அரசியல் முறைமையில் அழுத்தக்குழுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவர்கள் பொதுமக்களின் சமூக, பொருளாதார சிக்கல்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, அரசாங்கத்தின் நிர்வாகக் கொள்கைகள் மீது செல்வாக்கு செலுத்துகிறார்கள்.
தலைமைப் பண்பும், கற்றலும் ஒன்றோடு ஒன்று இன்றியமையாதவை. – ஜான்.எஃப். கென்னடி
தேர்தலியல்
தேர்தல் பற்றிய ஆய்வு மற்றும் புள்ளிவிவர பகுப்பாய்வே தேர்தலியல் ஆகும். பொதுக் கருத்துக் கணிப்புகள், தேர்தலியல் ஓர் முக்கியப் பங்கினை வகிக்கின்றன. தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் மற்றும் தேர்தல் முடிவுகள் ஆகியவை இதில் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. கருத்துக்கணிப்புகள் மற்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் ஆகியவை தேர்தல்களில் வாக்காளர் விருப்பத்தின் முக்கிய குறியீடாக இருக்கின்றன.
இரண்டுக்கும் இடையேயான பிரதான வேறுபாடு, வாக்காளர் வாக்களிக்கும் முன் நடத்தப்படும் கருத்துக்கணிப்பு மற்றும் வாக்குப்பதிவு நடைபெறுகையில் வாக்காளர் வாக்களித்த பின் வாக்குச்சாவடிக்கு வெளியே நடத்தப்படும் கருத்துக்கணிப்பு என்பதாகும். தேர்தலுக்குப் பின் வெளிவரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளைம் விட நம்பகமானதாகக் கருதப்படுகிறது. கருத்துக்கணிப்புகளின் முடிவு உண்மையில் தேர்தல் முடிவுகளை ஒத்திருக்கலாம் அல்லது தவறாகலாம். இருப்பினும், அவை உறுதியற்ற யாருக்கு வாக்களிப்பது என்பதனை தீர்மானிக்காத வாக்காளர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருப்பதுடன் அனைத்து கட்சிகளுக்கும் வாக்களிப்பு நடைமுறைகளில் சமநிலையை உருவாக்குவதற்கு முக்கியமானதாக இருக்கிறது.