MCQ Questions

தேர்தல், அரசியல் கட்சிகள், அழுத்தக்குழுக்கள் 9th Social Science Lesson 6 Questions in Tamil

9th Social Science Lesson 6 Questions in Tamil

6. தேர்தல், அரசியல் கட்சிகள், அழுத்தக்குழுக்கள்

1. பாராளுமன்ற தேர்தல் சம்பந்தமான அரசியலமைப்பில் வரையறுக்கப்பட்ட அனைத்து விவகாரங்களைப் பெறுவதற்கான சட்டம் இயற்றும் அமைப்பு

அ) மாநில சட்டமன்றம்

ஆ) நாடாளுமன்றம்

இ) மாநில சட்டமன்றமும், நாடாளுமன்றமும்

ஈ) எதுவுமில்லை

குறிப்பு: பாராளுமன்ற தேர்தல் சம்பந்தமான வாக்காளர்களின் பட்டியல் தயாரித்தல், தொகுதிகளை வரையறை செய்தல் உட்பட அரசியலமைப்பில் வரையறுக்கப்பட்ட பிற அனைத்து விவகாரங்களைப் பெறுவதற்கான சட்டம் இயற்றும் அமைப்பு நாடாளுமன்றம்

2. VVPAT – Voters Verified Paper Audit Trial – ஐ பொதுத்தேர்தலில் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்திய ஆண்டு

அ) 2004

ஆ) 2014

இ) 2002

ஈ) 2012

குறிப்பு: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒருவர் தாம் செலுத்திய வாக்குச்சரியானபடி பதிவாகி உள்ளதா என்று VVPAT – Voters Verified Paper Audit Trial – வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கைச் சோதனை மூலம் அறிந்து கொள்ளலாம்.

3. இந்தியக்குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

அ) இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மூலமாக

ஆ) பாராளுமன்றத்தின் இரு அவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மூலமாக

இ) அ, ஆ இரண்டும்

ஈ) ஏதுமில்லை

குறிப்பு: மேற்கூறிய தேர்தல் குழாம் மூலமாக இந்தியக் குடியரசுத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். பாராளுமன்ற இரு அவைகள் மற்றும் மாநில சட்டமன்றங்களில் நியமிக்கப்படும் நியமன உறுப்பினர்கள் இக்குழுவில் இடம் பெற மாட்டார்கள்.

4. மாநில சட்டசபைத் தேர்தல் சம்பந்தமான சட்டங்களை இயற்றும் அமைப்பு

அ) மாநில சட்டமன்றம்

ஆ) நாடாளுமன்றம்

இ) மாநில சட்டமன்றமும், நாடாளுமன்றமும்

ஈ) எதுவுமில்லை

குறிப்பு: மாநில சட்டசபைத் தேர்தல் சம்பந்தமான வாக்காளர்களின் பட்டியல் தயாரித்தல், தொகுதிகளை வரையறை செய்தல் போன்றவற்றை அரசியலமைப்பிற்குட்பட்டு தேவையான மாற்றங்களை மாநில சட்டசபை சட்டங்களை இயற்றலாம்.

5. NOTA-வை அறிமுகப்படுத்திய 14வது நாடு எது?

அ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஆ) இங்கிலாந்து

இ) இந்தியா

ஈ) இத்தாலி

குறிப்பு: 2014ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இந்தியா அறிமுகப்படுத்தியது.

6. தமிழ்நாட்டில் யாருடைய காலத்தில் குடவோலை முறை பின்பற்றப்பட்டது?

அ) சோழர்கள்

ஆ) பாண்டியர்கள்

இ) சேரர்கள்

ஈ) காகத்தியர்கள்

குறிப்பு: தமிழ்நாட்டில் சோழர்கள் காலத்தில் குடவோலை என்னும் தேர்தல் முறை பின்பற்றப்பட்டது

7. இந்திய தேர்தல் ஆணையம் எத்தனை உறுப்பினர்களை உள்ளடக்கியது?

அ) 1

ஆ) 2

இ) 3

ஈ) 4

குறிப்பு: ஒரு தலைமை தேர்தல் ஆணையரையும், இரண்டு தேர்தல் ஆணையர்களையும் இந்திய தேர்தல் ஆணையம் உள்ளடக்கியது. இவர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் முதல் 65 வயது வரை.

8. தேசிய அளவில் அரசாங்கத்தின் தலைவர் யார்?

அ) ஆளுநர்

ஆ) குடியரசுத்தலைவர்

இ) முதலமைச்சர்

ஈ) பிரதமர்

குறிப்பு: இந்திய பாராளுமன்றத்தின் கீழவையான மக்களவை உறுப்பினர்களால் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

9. NOTA-வை விளக்கும் சட்டவிதி எண் எது?

அ) 49-O

ஆ) 46-O

இ) 42-O

ஈ) 44-O

குறிப்பு: . NOTA- None Of The Above ஒரு மக்களாட்சி நடைபெறும் நாட்டில் உள்ள வாக்காளர்கள், தேர்தலில் போட்டியிடும் எவரையும் தேர்வு செய்ய விருப்பம் இல்லை எனில் இந்த பொத்தானை வாக்கு இயந்திரத்தில் தேர்வு செய்யலாம். இந்திய தேர்தல் நடத்தை விதிகள், 1961ல் சட்டவிதி எண் 49-O இம்முறை பற்றி விளக்குகிறது./

10. இந்திய தேர்தல் முறை எந்த நாட்டின் தேர்தல் முறையினை பின்பற்றி ஏற்றுக்கொண்டுள்ளது?

அ) ரஷ்யா

ஆ) கனடா

இ) இங்கிலாந்து

ஈ) அமெரிக்கா

குறிப்பு: தேர்தல் என்பது தமக்கான பொது சேவகர் ஒருவரை மக்கள் வாக்களித்து தேர்வு செய்யும் முறை. இந்தியா போன்ற பிரதிநிதித்துவ நாடுகளில் தேர்தல் முறை முக்கியப்பங்கு வகிக்கிறது.

11. தேசிய வாக்காளர் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

அ) ஜனவரி 15

ஆ) ஜனவரி 12

இ) ஜனவரி 9

ஈ) ஜனவரி 25

குறிப்பு: 1950, ஜனவரி 25ம் நாள் இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கப்பட்ட நாள் தேசிய வாக்காளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

12. எதிர்க்கட்சித் தலைவர் _______ தகுதியை மக்களாட்சி முறையிலான அனைத்து அரசாங்கங்களிலும் பெறுகிறார்.

அ) சபாநாயகர்

ஆ) ஆளுநர்

இ) கேபினட் அமைச்சர்

ஈ) தலைமை கணக்கு அதிகாரி

குறிப்பு: எதிர்க்கட்சித் தலைவர் பொது நடவடிக்கைகளைப் பாதிக்கும் ஆளும் கட்சியின் தவறான கொள்கைகளை எதிர்ப்பதோடு, மக்களாட்சி முறையிலான அனைத்து அரசாங்கங்களிலும் கேபினட் அமைச்சர் தகுதியை பெறுகிறார்.

13. பொது நலன்களைப் பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் தீவிரமாக செயல்படும் அமைப்புகள் _____

அ) அழுத்தக்குழுக்கள்

ஆ) நலக்குழுக்கள்

இ) தனிப்பட்ட நலக்குழுக்கள்

ஈ) மேற்கூறிய அனைத்தும்

குறிப்பு: அரசின் மீது அழுத்தம் செலுத்தி அரசின் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வரும்படி நெருக்கம் தருவதால் இவை அழுத்தக்குழுக்கள் அல்லது நலக்குழுக்கள் அல்லது தனிப்பட்ட நலக்குழுக்கள் என்றழைக்கப்படுகின்றன.

14. மக்களாட்சி அரசாங்கத்தில் மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் இடையே பாலமாக செயல்படுவது _____

அ) அரசியல்கட்சிகள்

ஆ) தன்னார்வலர் அமைப்புகள்

இ) தேர்தல் ஆணையம்

ஈ) மேற்கூறிய அனைத்தும்

குறிப்பு: அரசியல்கட்சி என்பது அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்காகத் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிகழ்ச்சி நிரல்களையும், குறிப்பிட்டக் கொள்கைகளையும் கொண்ட மக்கள் குழுவின் அமைப்பு.

15. 2017ம் ஆண்டு நிலவரப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ள தேசியக்கட்சிகளின் எண்ணிக்கை

அ) 10

ஆ) 9

இ) 8

ஈ) 7

குறிப்பு: தேசியக்கட்சி என்பது குறைந்தது 4 மாநிலங்களிலாவது மாநிலக்கட்சி என்ற தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.

16. பொருத்துக

(1) ஒரு கட்சி முறை – இந்தியா, இலங்கை, பிரான்ஸ், இத்தாலி

(2) இரு கட்சி முறை – சீனா, கியூபா, முன்னாள் சோவியத் யூனியன்

(3) பல கட்சி முறை – அமெரிக்க ஐக்கிய நாடுகள், இங்கிலாந்து

அ) 1 2 3

ஆ) 2 1 3

இ) 3 1 2

ஈ) 3 2 1

குறிப்பு: ஒரே ஒரு கட்சி மட்டும் பங்கு பெறுவது – ஒரு கட்சி முறை; இரு முக்கிய கட்சிகள் மட்டும் பங்கு பெறுவது – இரு கட்சி முறை; இரண்டுக்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கு பெறுவது பல கட்சி முறை.

17. இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு தேசியக்கட்சி எனும் பங்கு பெற கீழ்க்கண்ட எந்த முறையை நிறைவு செய்திருத்தல் வேண்டும்?

(1) மக்களவை தேர்தலிலோ அல்லது மாநில சட்டசபைத் தேர்தலிலோ குறைந்தபட்சம் 4 மாநிலங்களில் பதிவான மொத்த செல்லத்தகுந்த வாக்குகளில் குறைந்தபட்சம் 6% பெற்றிருக்க வேண்டும்..

(2) மக்களவையில் 2 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 3க்கும் மேற்பட்ட மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

(3) குறைந்தபட்சம் 4 மாநிலங்களில் மாநிலக்கட்சியாக அங்கீகாரம் பெற வேண்டும்.

அ) 1 மட்டும் சரி

ஆ) 2 மட்டும் சரி

இ) 3 மட்டும் சரி

ஈ) அனைத்தும் சரி

குறிப்பு: இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு தேசியக்கட்சி எனும் பங்கு பெற மேற்கூறிய முறைகளில் ஏதேனும் ஒன்றை நிறைவு செய்திருத்தல் வேண்டும்.

18. தற்போதைய நவீன இந்தியா நடைமுறைக்கு வந்த ஆண்டு

அ) 1947

ஆ 1948

இ) 1949

ஈ) 1950

குறிப்பு: தற்போதைய நவீன இந்தியா ஆகஸ்ட் 15, 1947ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது.

19. தன்னிச்சையான தேர்தல் ஆணையம் அமைத்திட வழிவகை செய்யும் இந்திய அரசியலமைப்பின் சரத்து

அ) 280

ஆ) 364

இ) 262

ஈ) 324

குறிப்பு: நாட்டின் சுதந்திரமான, நியாயமான தேர்தலை உறுதி செய்திட, தன்னிச்சையான தேர்தல் ஆணையம் அமைத்திட இந்திய அரசியலமைப்பின் பிரிவு 324-ன் படி வழிவகை செய்கிறது.

20. அரசியல்கட்சி என்பது எத்தனை அங்கங்களைக் கொண்டது?

அ) 2

ஆ) 3

இ) 4

ஈ) 5

குறிப்பு: அரசியல்கட்சிகள் தலைவர், செயற்குழு உறுப்பினர்கள், தொண்டர்கள் எனும் 3 முக்கிய அங்கங்களைக் கொண்டுள்ளன.

21. பின்வருவனவற்றில் எவை எதிர்க்கட்சி தலைவரின் செயல்பாடுகளாக உள்ளது?

(1) மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறார்.

(2) பொதுக்கணக்குக்குழுவின் தலைவராக இவர் அரசுத்துறைகளின் செயல்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்குவதோடு மக்கள் நலனுக்ககாகச் செலவிடப்படும் பொதுப்பணத்தை ஆய்வு செய்கிறார்.

அ) 1 மட்டும்

ஆ) 2 மட்டும்

இ) 1, 2 இரண்டும்

ஈ) ஏதுமில்லை

குறிப்பு: மக்களாட்சியில் எதிர்க்கட்சிகள் ஒரு பொறுப்பான பங்கினையும், மக்களின் நியாயமானக் கோரிக்கைகள் மற்றும் விருப்பத்தையும் பிரதிபலிக்கிறது.

22. அழுத்தக்குழுக்கள் என்ற சொல் எந்த நாட்டில் உருவாக்கப்பட்டது?

அ) ரஷ்யா

ஆ) கனடா

இ) இங்கிலாந்து

ஈ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

குறிப்பு: அரசின் கொள்கையில் செல்வாக்குச் செலுத்துவதன் மூலம் குறிப்பிட்ட நலன்களைப் பெறச் செயல்படும் நலக்குழுக்கள் அழுத்தக்குழுக்கள் ஆகும்.

23. உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடு எது?

அ) இங்கிலாந்து

ஆ) முன்னாள் சோவியத் யூனியன்

இ) இந்தியா

ஈ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

குறிப்பு: இந்தியா ஒரு சமத்துவ, மதச்சார்பற்ற, மக்களாட்சி குடியரசு நாடாகும்.

24. இந்திய அரசியலமைப்பில் தேர்தல் ஆணையத்தை பற்றிக் குறிப்பிடும் சரத்துகள்

அ) 148 – 151

ஆ) 324 – 329

இ) 300 – 310

ஈ) 128 – 147

குறிப்பு: இந்திய அரசியலமைப்பில் பகுதி 15-ல் காணப்படும் 324 – 329 வரையிலான பிரிவுகளில் தேர்தல் ஆணையத்தை பற்றிக் குறிப்பிடுகின்றன.

25. இந்தியாவின் அரசியல் கட்சிகள் எத்தனை முக்கியப் பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன?

அ) 5

ஆ) 4

இ) 3

ஈ) 2

குறிப்பு: இந்தியாவின் அரசியல் கட்சிகளானது செல்வாக்குப் பெறும் பிரதாசத்திற்கு ஏற்ப தேசியக்கட்சிகள் மற்றும் மாநிலக்கட்சிகள் என இரண்டு முக்கியப் பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்விரு கட்சிகளும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என்ற பிரிவுகளைக் கொண்டுள்ளது.

26. தவறான கூற்றைத் தேர்ந்தெடு.

(1) இந்தியாவில் தற்போது அதிக எண்ணிக்கையிலான அழுத்தக்குழுக்கள் உள்ளன.

(2) அழுத்தக்குழுக்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரெஞ்சு, ஜெர்மனி போன்ற நாடுகளில் இருப்பதைப்போல் இந்தியாவில் வளர்ச்சியடையவில்லை.

(3) அழுத்தக்குழுக்கள் அரசியல்கட்சிகளின் கொள்கையைக் கொண்டுள்ளன.

அ) கூற்று 1 தவறு

ஆ) கூற்று 2 தவறு

இ) கூற்று 3 தவறு

ஈ) எதுவுமில்லை

குறிப்பு: அழுத்தக்குழுக்கள் அரசியல்கட்சிகளிலிருந்து வேறுபட்டவை. தேர்தலில் போட்டியிடுவதில்லை. அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற விளைவதும் இல்லை. எந்த அரசியல் கட்சியுடனும் சேருவதில்லை. அரசியலின் மற்றொரு முகம் அழுத்தக்குழுக்கள் ஆகும்.

27. இந்தியாவில் எத்தனை வகையான தேர்தல்கள் நடத்தப்படுகின்றன?

அ) 5

ஆ) 2

இ) 4

ஈ) 3

குறிப்பு: இந்தியாவில் 2 வகையான தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. அவை நேரடித் தேர்தல் மற்றும் மறைமுகத் தேர்தல். முதல் தேர்தல் 1951ம் ஆண்டு தொடங்கி 1952 வரை நடைபெற்றது.

28. பிராந்தியக் கட்சிகள் என்று அழைக்கப்படுபவை எவை?

அ) தேசியக்கட்சி

ஆ) மாநிலக்கட்சி

இ) அ மற்றும் ஆ

ஈ) ஏதுமில்லை

குறிப்பு: 7 தேசியக்கட்சிகளைத் தவிர நாட்டின் பெரும்பான்மையான முக்கிய கட்சிகளை மாநிலக்கட்சிகளாக தேர்தல் ஆணையம் வகைப்படுத்தியிருக்கிறது. இக்கட்சிகள் பிராந்தியக் கட்சிகள் என்று அழைக்கப்படுகின்றன.

29. சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

(1) அனைத்து அரசியல் கட்சிகளும் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தல் வேண்டும்.

(2) இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளையும் சமமாகப் பாவித்த போதிலும் தேசியக்கட்சிகளுக்கும், மாநிலக்கட்சிகளுக்கும் சில சிறப்புச் சலுகைகளை வழங்குகிறது..

(3) இக்கட்சிகளுக்கு தனித்தனிச் சின்னங்கள் வழங்கப்படுகின்றன. இச்சின்னத்தை கட்சியின் உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாம்.

அ) கூற்று 1 தவறு

ஆ) கூற்று 2 தவறு

இ) கூற்று 3 தவறு

ஈ) எதுவுமில்லை

குறிப்பு: ஒரு கட்சியின் அதிகாரப் பூர்வ வேட்பாளர் மட்டுமே அக்கட்சியின் சின்னத்தை உபயோகப்படுத்த முடியும்.

30. சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

(1) நாட்டில் சட்டங்கள் இயற்றுவதில் அரசியல் கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. முறையாக சட்டங்கள் நாடாளுமன்றங்களிலும், சட்டமன்றங்களிலும் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன.

(2) அழுத்தக்குழுக்கள் அரசாங்கத்தினை அமைத்து வழிநடத்துகின்றன.

(3) மக்கள் கருத்திற்கு அரசியல் கட்சிகள் வடிவம் கொடுக்கின்றன. மேலும் அவை முக்கிய நிகழ்வுகளை மக்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றன.

அ) கூற்று 1 தவறு

ஆ) கூற்று 2 தவறு

இ) கூற்று 3 தவறு

ஈ) எதுவுமில்லை

குறிப்பு: அரசியல் கட்சிகள் அரசாங்கத்தினை அமைத்து வழிநடத்துகின்றன.

31. இளம் பதாகா சங்கம் என்பது

அ) அழுத்தக்குழுக்கள்

ஆ) அரசியல்கட்சிகள்

இ) தேர்தல் ஆணையம்

ஈ) எதுவுமில்லை

குறிப்பு:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!