சமூக – சமய சீர்திருத்த இயக்கங்கள் 12th Ethics Lesson 7 Questions
12th Ethics Lesson 7 Questions
7. சமூக – சமய சீர்திருத்த இயக்கங்கள்
1) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) கி.பி. (பொ.ஆ.) 10-ஆம் நூற்றாண்டுமுதல் 17-ஆம் நூற்றாண்டுவரை இந்தியாவில் பக்தி இயக்கங்கள் தோன்றின.
ⅱ) இவ்வியக்கங்கள் இடைக்கால இந்திய வரலாற்றில் சமூக மற்றும் சமய மறுமலர்ச்சியில் முக்கிய பங்காற்றின.
ⅲ) வங்காளத்தில் சமூகசமயச் சீர்திருத்த இயக்கம் இராஜாராம் மோகன்ராய் என்பவரால் தொடங்கப்பட்டு, அதன்பின் இந்தியா முழுவதும் பல சீர்திருத்த இயக்கங்கள் தோற்றுவிக்கப்பட்டு, சமூக – சமய, மறுமலர்ச்சிக்கு வித்திட்டன.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: கி.பி. (பொ.ஆ.) 7-ஆம் நூற்றாண்டுமுதல் 17-ஆம் நூற்றாண்டுவரை இந்தியாவில் பக்தி இயக்கங்கள் தோன்றின. இவ்வியக்கங்கள் இடைக்கால இந்திய வரலாற்றில் சமூக மற்றும் சமய மறுமலர்ச்சியில் முக்கிய பங்காற்றின. இதன் தொடர்ச்சியாக வங்காளத்தில் சமூகசமயச் சீர்திருத்த இயக்கம் இராஜாராம் மோகன்ராய் என்பவரால் தொடங்கப்பட்டு, அதன்பின் இந்தியா முழுவதும் பல சீர்திருத்த இயக்கங்கள் தோற்றுவிக்கப்பட்டு, சமூக – சமய, மறுமலர்ச்சிக்கு வித்திட்டன.
2) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) ஆங்கிலேய ஆட்சியில் இந்திய அரசர்களின் நிருவாகம் சீராக காணப்பட்டது.
ⅱ) இந்தியர்கள் மேலைநாட்டு நாகரிகத்தைப் பின்பற்றினர்.
ⅲ) கிறித்துவ சமயப்பரப்புக் குழுவினர்களும், இந்திய ஆட்சியாளர்களும், இந்தியரின் மொழிகளையும், இலக்கியங்கள், பண்பாடு, கலைகள் போன்றவற்றைப் போற்றினர்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவில் தோன்றிய சமூக-சமயச் சீர்திருத்த இயக்கங்கள்: இந்தியாவின் நிலை: ஆங்கிலேய ஆட்சியில் இந்திய அரசர்களுக்கிடையே நிருவாகத்தில் பல சீர்கேடுகள் காணப்பட்டன. இந்தியர்கள் மேலைநாட்டு நாகரிகத்தைப் பின்பற்றினர். கிறித்துவ சமயப்பரப்புக் குழுவினர்களும், இந்திய ஆட்சியாளர்களும், இந்தியரின் மொழிகளையும், இலக்கியங்கள், பண்பாடு, கலைகள் போன்றவற்றைப் போற்றினர். ஆனால், அதன் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை.
3) கூற்று: 18-மற்றும் 19-ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் சமூகநிலை உலக நாடுகளுக்கிடையில் பின்தங்கியிருந்தது.
காரணம்: நம் மக்களின் அறியாமை, அன்னிய ஆட்சியாளர்களின் பேராசை போன்றவை நம்நாட்டுக் கலைகள் அழியக் காரணமாயிற்று.
(அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
(ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
(இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
(ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
விளக்கம்: 18-மற்றும் 19-ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் சமூகநிலை உலக நாடுகளுக்கிடையில் பின்தங்கியிருந்தது. குறிப்பாக அரசியல், பொருளாதார, சமூக, சமய, பண்பாடு, இலக்கியம், கல்வி போன்ற துறைகளில் வளர்ச்சி பெறவில்லை, ஏற்கெனவே இருந்த வளர்ச்சி படிப்படியாகக் குறைந்து கொண்டே சென்றது. நம் மக்களின் அறியாமை, அன்னிய ஆட்சியாளர்களின் பேராசை போன்றவை நம்நாட்டுக் கலைகள் அழியக் காரணமாயிற்று. புற்றீசல்போல படர்ந்த மேலைநாட்டு நாகரிகம், நம்முடைய பண்பாட்டை மறக்கச் செய்தது. எனினும்,
4) கூற்று: தீண்டாமை, உடன்கட்டை ஏறுதல் (சதி), பெண்சிசுக் கொலை, பர்தாமுறை, தேவதாசிமுறை, ஆடவர் கடல்கடக்காமை, இன்னபிற மூடப்பழக்க வழக்கங்களைக் களைய சமூக, சமயத்தில் பல இயக்கங்கள் தோன்றின.
காரணம்: 19-ஆம் நூற்றாண்டில் மேலைநாட்டுக் கல்வி பயின்றதன் விளைவாக நமது பண்பாடு, இலக்கியம் போன்றவை மீண்டும் துளிர்த்து எழுவதற்கு படித்த இளைஞர்கள் முயற்சி செய்தார்கள்.
(அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
(ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
(இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
(ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
விளக்கம்: 19-ஆம் நூற்றாண்டில் மேலைநாட்டுக் கல்வி பயின்றதன் விளைவாக நமது பண்பாடு, இலக்கியம் போன்றவை மீண்டும் துளிர்த்து எழுவதற்கு படித்த இளைஞர்கள் முயற்சி செய்தார்கள். எனவே தீண்டாமை, உடன்கட்டை ஏறுதல் (சதி), பெண்சிசுக் கொலை, பர்தாமுறை, தேவதாசிமுறை, ஆடவர் கடல்கடக்காமை, இன்னபிற மூடப்பழக்க வழக்கங்களைக் களைய சமூக, சமயத்தில் பல இயக்கங்கள் தோன்றின. இக்காலத்தையே சமூக-சமய விழிப்புணர்வுக் காலம் என்கிறோம்.
5) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) ஆங்கிலேய ஆட்சியின் விரிவாக்கக் கொள்கை, இந்திய மன்னர்களிடையே அரசியல் ஒற்றுமை ஏற்படக் காரணமாக அமைந்தது.
ⅱ) டல்ஹெளசி காலத்தில் கொண்டு வரப்பட்ட வாரிசு இழப்புக்(Doctrine of Lapse) கொள்கையினால் பாதிக்கப்பட்டவர்கள், மீண்டும் தத்தெடுக்கும் உரிமை கொண்டுவர பாடுபட்டனர்.
ⅲ) இந்து வாரிசு தத்தெடுக்கும் சட்டத்தை மாற்றி அமைத்ததின் விளைவாக, இந்து அரசர்கள் ஒன்றிணைந்து தமது நாட்டின் பண்பாட்டைக் காப்பாற்ற ஆங்கிலேய அரசுக்கு ஆதரவாக ஒன்று திரண்டனர்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: சமூக-சமய சீர்திருத்த இயக்கங்கள் தோன்றக் காரணங்கள்:
அரசியல் ஒற்றுமை: ஆங்கிலேய ஆட்சியின் விரிவாக்கக் கொள்கை, இந்திய மன்னர்களிடையே அரசியல் ஒற்றுமை ஏற்படக் காரணமாக அமைந்தது. டல்ஹெளசி காலத்தில் கொண்டு வரப்பட்ட வாரிசு இழப்புக்(Doctrine of Lapse) கொள்கையினால் பாதிக்கப்பட்டவர்கள், மீண்டும் தத்தெடுக்கும் உரிமை கொண்டுவர பாடுபட்டனர். இந்து வாரிசு தத்தெடுக்கும் சட்டத்தை மாற்றி அமைத்ததின் விளைவாக, இந்து அரசர்கள் ஒன்றிணைந்து தமது நாட்டின் பண்பாட்டைக் காப்பாற்ற ஆங்கிலேய அரசுக்கு எதிராக ஒன்று திரண்டனர்.
6) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) இந்தியாவில் அச்சு இயந்திரம் ஐரோப்பியர்களால் அறிமுகம் செய்யப்பட்டதால் செய்தித் தாள்கள் மற்றும் வார இதழ்கள் வெளிவந்தன.
ⅱ) பல்வேறு மொழிகளில் செய்தித்தாள் மற்றும் புத்தகங்களும் அச்சிடப்பட்டன.
ⅲ) அமிர்தபஜார் பத்திரிக்கா, தி இந்து, சுதேசமித்திரன், இந்தியா, கேசரி, மராத்தா போன்ற செய்தித்தாள்கள் நம் நாட்டின் பண்பாட்டை அறிந்துகொள்ள உதவியாக அமைந்தன.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: இந்திய செய்தித்தாள்கள்: இந்தியாவில் அச்சு இயந்திரம் ஐரோப்பியர்களால் அறிமுகம் செய்யப்பட்டதால் செய்தித் தாள்கள் மற்றும் வார இதழ்கள் வெளிவந்தன. பல்வேறு மொழிகளில் செய்தித்தாள் மற்றும் புத்தகங்களும் அச்சிடப்பட்டன. அமிர்தபஜார் பத்திரிக்கா, தி இந்து, சுதேசமித்திரன், இந்தியா, கேசரி, மராத்தா போன்ற செய்தித்தாள்கள் நம் நாட்டின் பண்பாட்டை அறிந்துகொள்ள உதவியாக அமைந்தன.
7) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
ⅰ) இந்தியாவில் ஆங்கிலக்கல்வி அறிமுகம் செய்யப்பட்டதால் மேலைநாட்டு கருத்துகளான ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம், தேசியஉணர்வு போன்றவை மேலோங்கின.
ⅱ) கி.பி (பொ.ஆ.) 1833-ஆம் ஆண்டு மெக்காலே பிரபுவின் (Macaulay) முயற்சியால் ஆங்கிலம் இந்தியாவில் பயிற்று மொழியாக்கப்பட்டது,
ⅲ) கி.பி (பொ.ஆ.) 1854 ஆம் ஆண்டு சார்லஸ் உட்(Charles wood) அறிக்கையின் படி கல்கத்தா, பம்பாய், சென்னை ஆகிய இடங்களில் பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
ⅳ) இப்பல்கலைக்கழகங்கள் வாயிலாக, ஆங்கில வழிக்கல்வி இந்தியர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்டன.
a) ⅰ), ⅲ), ⅳ)
b) ⅰ), ⅱ), ⅲ)
c) ⅱ), ⅲ)
d) ⅱ), ⅲ), ⅳ)
விளக்கம்: மேலைநாட்டுக் கல்வி: இந்தியாவில் ஆங்கிலக்கல்வி அறிமுகம் செய்யப்பட்டதால் மேலைநாட்டு கருத்துகளான ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம், தேசியஉணர்வு போன்றவை மேலோங்கின. கி.பி (பொ.ஆ.) 1835-ஆம் ஆண்டு மெக்காலே பிரபுவின் (Macaulay) முயற்சியால் ஆங்கிலம் இந்தியாவில் பயிற்று மொழியாக்கப்பட்டது, கி.பி (பொ.ஆ.) 1854 ஆம் ஆண்டு சார்லஸ் உட்(Charles wood) அறிக்கையின் படி கல்கத்தா, பம்பாய், சென்னை ஆகிய இடங்களில் பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இப்பல்கலைக்கழகங்கள் வாயிலாக, ஆங்கில வழிக்கல்வி இந்தியர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்டன. இதன் விளைவாக மேலை நாடுகளுக்குக் கல்வி கற்கவும், பணி நிமித்தமாகவும், வெளிநாடு சென்று இந்தியா திரும்பியவர்கள், தங்கள் நாட்டின் சமூக நிலைமையை அறிந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முற்பட்டனர்.
8) இந்தியாவில் கிறித்துவ சமயப்பரப்புக் குழுக்கள் தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
ⅰ) இந்தியாவில் கிறித்துவ சமயப்பரப்புக் குழுக்கள் கல்வி நிறுவனங்களை நிறுவி, அதன் மூலம் தங்கள் சமயத்தையும், பண்பாட்டையும் புகுத்தின.
ⅱ) இக்குழுக்கள் இந்து சமயத்தில் உள்ள குறைபாடுகள், மூடநம்பிக்கைகள் மற்றும் சமுதாய ஏற்றத்தாழ்வுகளைக் களைய முற்பட்டன.
a) ⅰ) மட்டும்
b) ⅱ) மட்டும்
c) ⅰ) மற்றும் ⅱ)
d) இரண்டும் தவறு
விளக்கம்: கிறித்துவ சமயப் பரப்புக் குழுக்களின் தாக்கம்: இந்தியாவில் கிறித்துவ சமயப்பரப்புக் குழுக்கள் கல்வி நிறுவனங்களை நிறுவி, அதன் மூலம் தங்கள் சமயத்தையும், பண்பாட்டையும் புகுத்தின. இக்குழுக்கள் இந்து சமயத்தில் உள்ள குறைபாடுகள், மூடநம்பிக்கைகள் மற்றும் சமுதாய ஏற்றத்தாழ்வுகளைக் களைய முற்பட்டன.
9) கூற்று: முற்போக்குச் சிந்தனை, பொருளாதாரம், தொழில்துறை போன்ற நிலைகளில் முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியிருந்தது.
காரணம்: 19-ஆம் நூற்றாண்டில், இந்தியா உலகநாடுகளின் அறிவியல் தொழில்நுட்பத்தோடு இணைந்திருந்தது.
(அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
(ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
(இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
(ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
விளக்கம்: அறிவியல் தொழில் நுட்பம்: 19-ஆம் நூற்றாண்டில், இந்தியா உலகநாடுகளின் அறிவியல் தொழில்நுட்பத்தோடு இணைந்திருந்தது. இதனால், முற்போக்குச் சிந்தனை, பொருளாதாரம், தொழில்துறை போன்ற நிலைகளில் முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியிருந்தது. (எ.கா.) தொலைத் தொடர்பு, போக்குவரத்துத் துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் மற்றும் உலக நாகரிக மாற்றங்கள் இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்தின.
10) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
ⅰ) மாக்ஸ்முல்லர் (Max Muller) மற்றும் வில்லியம் ஜோன்ஸ் (william Jones) போன்றோர் இந்தியாவின் கடந்த கால பண்பாடுகளை மறு உயிர்பிப்பு செய்தனர்.
ⅱ) இந்தியாவின் பாரம்பரிய நூல்களைக் கற்றுணர்ந்து இந்தியப் பண்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்தனர்
ⅲ) இலக்கியம், சமயம் சார்ந்த நூல்களை கிழக்கத்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்தனர்.
ⅳ) படித்த இந்தியர்கள் மேற்கத்திய நாகரிகத்திற்கு எதிராக இந்திய நாகரிகத்தை மேம்படுத்த விரும்பினர்.
a) ⅰ), ⅱ), ⅳ)
b) ⅰ), ⅱ), ⅲ)
c) ⅱ), ⅲ)
d) ⅱ), ⅲ), ⅳ)
விளக்கம்: அயல் நாட்டவரின் பங்களிப்பு: மாக்ஸ்முல்லர் (Max Muller) மற்றும் வில்லியம் ஜோன்ஸ் (william Jones) போன்றோர் இந்தியாவின் கடந்த கால பண்பாடுகளை மறு உயிர்பிப்பு செய்தனர். இந்தியாவின் பாரம்பரிய நூல்களைக் கற்றுணர்ந்து இந்தியப் பண்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்தனர். அவர்கள் இலக்கியம், சமயம் சார்ந்த நூல்களை மேற்கத்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்தனர். இஃது உலகளவில் வரவேற்பையும், அங்கீகாரத்தையும் பெற்றுத்தந்தது. படித்த இந்தியர்கள் தங்கள் நாட்டின் பண்பாட்டை அறிந்து கொண்டனர். அவர்கள் மேற்கத்திய நாகரிகத்திற்கு எதிராக இந்திய நாகரிகத்தை மேம்படுத்த விரும்பினர்.
11) கூற்று: இராஜாராம்மோகன்ராய் அராபிக், பாரசீகம், சமஸ்கிருதம், வங்கம், ஆங்கிலம், பிரெஞ்சு, இந்தி, இலத்தீன், கிரேக்கம் மற்றும் ஹீப்ரு போன்ற மொழிகளைக் கற்றார்.
காரணம்: உலக சமயங்களைப் பற்றி அறியவும் சமயங்களின் கோட்பாடுகளை அறியவும், சமயங்கள் தோன்றிய இடங்களைக் காணவும், உலக மொழிகளைக் கற்றறிந்தார்.
(அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
(ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
(இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
(ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
விளக்கம்: பிரம்ம சமாஜம் இராஜாராம் மோகன்ராய் கி.பி. (பொ.ஆ.) 1772 – 1833:
19-ஆம் நூற்றாண்டில் ச மூ க – ச ம ய ச் சீர்திரு த்த வாதி க ளி ல் மு த ன்மை யான வ ர் இராஜாராம்மோகன்ராய் ஆவார். இவர் கி.பி. (பொஆ.) 1772 -இல் வங்காளத்தில் பிறந்தார். வைதீக இந்து குடும்பத்தில் பிறந்தவராயிருந்தும் தமது 15-வது வயதில் ‘உருவ வழிபாடு மறைநூல்களின் கருத்துக்கு எதிரானது, மாறானது ‘என்று வங்கமொழியில் எழுதி வெளியிட்டு, எல்லாருடைய கவனத்தையும் கவர்ந்தார். உலக சமயங்களைப் பற்றி அறியவும் சமயங்களின் கோட்பாடுகளை அறியவும், சமயங்கள் தோன்றிய இடங்களைக் காணவும், உலக மொழிகளைக் கற்றறிந்தார். இவர் அராபிக், பாரசீகம், சமஸ்கிருதம், வங்கம், ஆங்கிலம், பிரெஞ்சு, இந்தி, இலத்தீன், கிரேக்கம் மற்றும் ஹீப்ரு போன்ற மொழிகளைக் கற்றார். கி.பி. (பொ.ஆ.)
12) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
ⅰ) இராஜாராம்மோகன்ராய் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தவை கி.பி. (பொ.ஆ.)1811-ஆம் ஆண்டு நடந்த தன் அண்ணனின் மனைவிக்கு நடந்த சதி என்கின்ற உடன்கட்டை ஏறுதல் நிகழ்வேயாகும்.
ⅱ) 1820-இல் இயேசுவின் போதனைகளைத் திறனாய்வு செய்து இயேசுவின் கொள்கைகள், “அமைதிக்கும் ஆனந்தத்திற்கும் வழிகாட்டி” என்ற நூலை வெளியிட்டார்.
a) ⅰ) மட்டும்
b) ⅱ) மட்டும்
c) ⅰ) மற்றும் ⅱ)
d) இரண்டும் தவறு
விளக்கம்: 1820-இல் இயேசுவின் போதனைகளைத் திறனாய்வு செய்து இயேசுவின் கொள்கைகள், “அமைதிக்கும் ஆனந்தத்திற்கும் வழிகாட்டி” என்ற நூலை வெளியிட்டார். இராஜாராம்மோகன்ராய் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தவை கி.பி. (பொ.ஆ.)1811-ஆம் ஆண்டு நடந்த தன் அண்ணனின் மனைவிக்கு நடந்த சதி என்கின்ற உடன்கட்டை ஏறுதல் நிகழ்வேயாகும்.
13) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
ⅰ) ராம்மோகன்ராய் என்பவருக்கு ‘இராஜா‘ என்ற பட்டம் அளித்தவர், முகலாய அரசர் மூன்றாம் அக்பர் ஷா (1806-1835) ஆவார்.
ⅱ) இதன்பின் இவர் இராஜாராம்மோகன்ராய் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.
a) ⅰ) மட்டும்
b) ⅱ) மட்டும்
c) ⅰ) மற்றும் ⅱ)
d) இரண்டும் தவறு
விளக்கம்: ராம் மோகன்ரா ய் என்பவருக்கு ‘இராஜா‘ என்ற பட்டம் அளித்தவர், முகலாய அரசர் இரண்டாம் அக்பர் ஷா (1806-1835) ஆவார். இதன்பின் இவர் இராஜாராம்மோகன்ராய் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.
14) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) கி.பி. (பொ.ஆ.) 1828ல் பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தவர் இராஜாராம்மோகன்ராய் ஆவார்.
ⅱ) இச்சமாஜம் இந்துசமயத்தில் உள்ள சமூக சீர்கேடுகளையும் மூடநம்பிக்கைகளையும் களைந்து “ஒரே கடவுள்“ என்ற கொள்கையின் அடிப்படையில் பொது சமயத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தியது.
ⅲ) 1820-இல் இவர் கல்கத்தாவில் ஆத்மியசபாவைத் தோற்றுவித்தார்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: பிரம்ம சமாஜத்தின் தோற்றம்: கி.பி. (பொ.ஆ.) 1828 பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தவர் இராஜாராம்மோகன்ராய் ஆவார். இவர் இந்து சமயத்தில் காணப்பட்ட பல்வேறு மூடநம்பிக்கைகளை நீக்க பாடுபட்டார். 1815-இல் இவர் கல்கத்தாவில் ஆத்மியசபாவைத் தோற்றுவித்தார். இதுவே பின்னர் 1828-இல் பிரம்மசமாஜமாக மாறியது. இச்சமாஜம் இந்துசமயத்தில் உள்ள சமூக சீர்கேடுகளையும் மூடநம்பிக்கைகளையும் களைந்து “ஒரே கடவுள்“ என்ற கொள்கையின் அடிப்படையில் பொது சமயத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தியது.
15) பிரம்ம சமாஜத்தின் கோட்பாடுகள் தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
ⅰ) ‘தூய உள்ளமும் தூய வாழ்வும் உய்யும் வழி‘ என்பதே பிரம்ம சமாஜத்தின் அடிப்படை தத்துவமாகும்’.
ⅱ) இச்சங்கம் பல கடவுள் சங்கம் என்று அழைக்கப்பட்டது.
ⅲ) ஒரு கடவுள் கொள்கையை நிலைநாட்டுவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
ⅳ) இறைவன் மனித குலத்திற்குப் பொதுவானவர். அதே போன்று சமயமும் மனித குலத்திற்குப் பொதுவானது.
a) ⅰ), ⅲ), ⅳ)
b) ⅰ), ⅱ), ⅲ)
c) ⅱ), ⅲ)
d) ⅱ), ⅲ), ⅳ)
விளக்கம்: பிரம்ம சமாஜத்தின் கோட்பாடுகள்: ‘தூய உள்ளமும் தூய வாழ்வும் உய்யும் வழி‘ என்பதே பிரம்ம சமாஜத்தின் அடிப்படை தத்துவமாகும். இச்சங்கம் ஒரே கடவுள் சங்கம் என்று அழைக்கப்பட்டது. ஒரு கடவுள் கொள்கையை நிலைநாட்டுவதே இதன் முக்கிய நோக்கமாகும். பலகடவுள், கர்ம விதி, மறுபிறப்பு முதலியவற்றை ஏற்கவில்லை. இறைவன் மனித குலத்திற்குப் பொதுவானவர். அதே போன்று சமயமும் மனித குலத்திற்குப் பொதுவானது.
16) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
ⅰ) பிரம்மசமாஜக் கோட்பாட்டின்படி, ஆத்ம பலம்பெறும் எவரும் இறைநெறியில் நிற்பர்.
ⅱ) பிரம்மசமாஜம் உருவ வழிபாட்டில் நம்பிக்கை கொண்டிருந்தது.
ⅲ) பிரம்மசமாஜத்தின் உறுப்பினர்கள் “பிரமோக்கள்” என்றழைக்கப்பட்டனர்.
ⅳ) இவர்கள் வழிபட்ட கடவுளுக்கு பெயரோ, சிலையோ கிடையாது.
a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)
b) ⅰ), ⅱ), ⅲ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ), ⅳ)
விளக்கம்: பிரம்மசமாஜக் கோட்பாட்டின்படி, ஆத்ம பலம்பெறும் எவரும் இறைநெறியில் நிற்பர். இந்நெறியில் உயர்வு தாழ்வு இல்லை. பிரம்மச மா ஜம் எந்தவொரு உருவ வழிபாட்டிலும் நம்பிக்கை கொள்ளவில்லை. பிரம்மசமாஜத்தின் உறுப்பினர்கள் “பிரமோக்கள்” என்றழைக்கப்பட்டனர். இவர்கள் வழிபட்ட கடவுளுக்கு பெயரோ, சிலையோ கிடையாது.
17) சதி (அ) உடன்கட்டை ஏறும் பழக்கத்தை தடுக்க முற்பட்ட ஆட்சியாளர்கள் யாவர்?
ⅰ) இந்தியாவை ஆண்ட ஆப்கானிய சுல்தான்கள்
ⅱ) முகலாய மன்னர்கள்
ⅲ) போர்ச்சுகீசிய ஆளுநரான அல்புகர்க்
ⅳ) மராத்தியர்கள்
a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)
b) ⅰ), ⅱ), ⅲ)
c) ⅱ), ⅲ)
d) ⅱ), ⅲ), ⅳ)
விளக்கம்: பிரம்ம சமாஜத்தின் சமூக பணிகள்: சதி (உடன்கட்டை ஏறுதல்) கணவன் இறந்ததும் மனைவி கணவரின் சிதையில் பாய்ந்து இறக்கும் நிகழ்ச்சியே சதி (அ) உடன்கட்டை ஏறுதல் என்றழைக்கப்படுகிறது. இந்தியாவில் அந்நியர் படையெடுப்பு காலத்திலிருந்து இப்பழக்கம் இருந்து வந்தது. இதனை இந்தியாவை ஆண்ட ஆப்கானிய சுல்தான்கள், முகலாய மன்னர்கள் மற்றும் போர்ச்சுகீசிய ஆளுநரான அல்புகர்க் ஆகியோர் இப்பழக்கத்தை தடுக்க முற்பட்டனர்.
18) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) மனைவி இறந்தால் கணவன் உடன்கட்டை ஏறாமாலிருப்பது போல், கணவன் இறந்தால் மனைவி மட்டும் உடன்கட்டை ஏறுவது எவ்வகையில் நியதி என்று கேட்டு பெண் சமத்துவத்திற்காக ராய் போராடினார்,
ⅱ) ரிப்பன் பிரபு இந்தியாவின் தலைமை ஆளுநராகப் பதவி வகித்த போது சதிக்குத் தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டது.
ⅲ) கி.பி. (பொ.ஆ.) 1829 ஆம் ஆண்டு டிசம்பர் 4 எண் XVII ன் படி) சதி தண்டனைக்குரிய குற்றமாகும் என்று அறிவிக்கப்பட்டது.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: இராஜாராம் மோகன்ராய் சதியை எதிர்த்து கி.பி (பொ.ஆ.) 1818-இல் தீவிர சமூக இயக்கத்தைத் தொடங்கி சதி, சாத்திரங்களுக்கும் மறைகளுக்கும் மாறானதென்றும், மனைவி இறந்தால் கணவன் உடன்கட்டை ஏறாமாலிருப்பது போல், கணவன் இறந்தால் மனைவி மட்டும் உடன்கட்டை ஏறுவது எவ்வகையில் நியதி என்று கேட்டு பெண் சமத்துவத்திற்காகப் போராடினார், வில்லியம் பெண்டிங் பிரபு இந்தியாவின் தலைமை ஆளுநராகப் பதவி வகித்த போது சதிக்குத் தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி கி.பி. (பொ.ஆ.) 1829 ஆம் ஆண்டு டிசம்பர் 4 எண் XVII ன் படி) சதி தண்டனைக்குரிய குற்றமாகும் என்று அறிவிக்கப்பட்டது.
19) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) வைதீக இந்துக்கள் சதிக்குத் தடைச்சட்டத்திற்கு எதிராக இங்கிலாந்து பாராளுமன்றத்தில் முறையிட்டனர்.
ⅱ) இராஜராம்மோகன்ராய் சட்டத்தை ஆதரித்தும் செயல்படுத்துமாறும் வாதிட்டார்.
ⅲ) சட்டம் நிறைவேற்றப்பட்டு, இந்திய சமுதாயத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: வைதீக இந்துக்கள் சதிக்குத் தடைச்சட்டத்திற்கு எதிராக இங்கிலாந்து பாராளுமன்றத்தில் முறையிட்டனர். இராஜராம்மோகன்ராய் சட்டத்தை ஆதரித்தும் செயல்படுத்துமாறும் வாதிட்டார். சட்டம் நிறைவேற்றப்பட்டு, இந்திய சமுதாயத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
20) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
ⅰ) ஆங்கில கிழக்கிந்திய ஆட்சியில் கிறித்துவ சமய பரப்புக் குழுவினர், வித்யா சாகர் தலைமையில் வங்காளத்தில் சதியை ஒழிக்க முயற்சி மேற்கொண்டனர்.
ⅱ) கி.பி (.ஆ) 1815 மற்றும் கி.பி(பொ.ஆ.) 1818-ஆம் ஆண்டுகளில் வங்காளத்தில் அதிக அளவில் சதி ஒழிப்பு முயற்சிகள் நடைபெற்றன.
ⅲ) வில்லியம் கேரி (William Carey) மற்றும் இராஜாராம்மோகன்ராய் முயற்சியினால் வங்காள மாகாணத்தில் கி.பி(பொ.ஆ.) 1829-ஆம் ஆண்டில் சதி ஒழிக்கப்பட்டது.
ⅳ) கி.பி(பொ.ஆ.) 1861-இல் விக்டோரியா மகாராணி ஆட்சிக்காலத்தில் இந்தியா முழுவதும் இக்கொடிய சமூகப்பழக்கம் தடை செய்யப்பட்டது.
a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)
b) ⅰ), ⅱ), ⅲ)
c) ⅱ), ⅲ)
d) ⅱ), ⅲ), ⅳ)
விளக்கம்: ஆங்கில கிழக்கிந்திய ஆட்சியில் கிறித்துவ சமய பரப்புக் குழுவினர், வில்லியம்கேரி தலைமையில் வங்காளத்தில் சதியை ஒழிக்க முயற்சி மேற்கொண்டனர். கி.பி (.ஆ) 1815 மற்றும் கி.பி(பொ.ஆ.) 1818-ஆம் ஆண்டுகளில் வங்காளத்தில் அதிக அளவில் சதி ஒழிப்பு முயற்சிகள் நடைபெற்றன. வில்லியம் கேரி (William Carey) மற்றும் இராஜாராம்மோகன்ராய் முயற்சியினால் வங்காள மாகாணத்தில் கி.பி(பொ.ஆ.) 1829-ஆம் ஆண்டில் சதி ஒழிக்கப்பட்டது. கி.பி(பொ.ஆ.) 1861-இல் விக்டோரியா மகாராணி ஆட்சிக்காலத்தில் இந்தியா முழுவதும் இக்கொடிய சமூகப்பழக்கம் தடை செய்யப்பட்டது.
21) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) வரலாற்றாசிரியர் , வில்லியம்கேரி கூற்றுப்படி, பெண் குழந்தைகள் பிறந்தவுடன் கொன்று விடும் வழக்கம் இராஜபுத்திர குடும்பத்தில் காணப்பட்டது.
ⅱ) இராஜபுத்திரர்கள் குறிப்பிட்ட தங்கள் குலப் பிரிவுக்குள்ளேயே திருமணம் செய்துகொண்டனர்.
ⅲ) தங்களது குல மரபு இரத்தத்தைத் தூய்மையுடையதாய் வைத்துக்கொள்ள அதிக பெண் குழந்தைகள் பிறந்தால் கொன்று விடுவார்கள்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: பெண்சிசுக்கொலை: வரலாற்றாசிரியர் கர்னல் டாட்(Col Tod) கூற்றுப்படி, பெண் குழந்தைகள் பிறந்தவுடன் கொன்று விடும் வழக்கம் இராஜபுத்திர குடும்பத்தில் காணப்பட்டது. இராஜபுத்திரர்கள் குறிப்பிட்ட தங்கள் குலப் பிரிவுக்குள்ளேயே திருமணம் செய்துகொண்டனர். மற்ற பிரிவில் மணம் செய்விக்கும் (அ) செய்து கொள்ளும் பழக்கமில்லை. தங்களது குல மரபு இரத்தத்தைத் தூய்மையுடையதாய் வைத்துக்கொள்ள அதிக பெண் குழந்தைகள் பிறந்தால் கொன்று விடுவார்கள். இது நாளடைவில் பெண் குழந்தை பிறந்தாலே கொன்று விடும் பழக்கமாக மாறியதாகக் கர்னல் டாட் குறிப்பிடுகிறார். 1795-இல் வங்காளத்தில் பெண்சிசு கொலைக்கு தடைச் சட்டம் கொண்டு (வங்கம் நெறிமுறைப்படுத்தும் சட்டப்படி 1795 XXI-இன் பிரிவு) வரப்பட்டது.
22) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) இந்தியச் சமுதாயத்தில் ஓர் ஆண் பல பெண்களை மணத்தல் பரவலாகக் காணப்பட்டது.
ⅱ) வைதீக இந்துக்கள் பலதார மணத்திற்கு ஆதரவளித்து வாதிட்டனர்.
ⅲ) ஒரு வயிற்றில் பிறக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சொத்து, வாழ்வுமுறை, பண்பாடு முதலியவற்றில் சமஉரிமை உண்டு என்பதனை வலியுறுத்தி இவற்றிற்குச் சான்றாக, வேத நூல்களை ராய் மேற்கோள் காட்டினார்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: பலதார மணம்: இந்தியச் சமுதாயத்தில் ஓர் ஆண் பல பெண்களை மணத்தல் பரவலாகக் காணப்பட்டது. இம்முறையை இராஜாராம்மோகன்ராய் கடுமையாகச் சாடினார். வைதீக இந்துக்கள் பலதார மணத்திற்கு ஆதரவளித்து அவரிடம் வாதிட்டனர். ஒரு வயிற்றில் பிறக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சொத்து, வாழ்வுமுறை, பண்பாடு முதலியவற்றில் சமஉரிமை உண்டு என்பதனை வலியுறுத்தி இவற்றிற்குச் சான்றாக, வேத நூல்களை மேற்கோள் காட்டினார். எனினும், முழுமையான சட்டம் வருவதற்கு நாம் பலகாலம் காத்திருக்கவேண்டியிருந்தது.
23) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) மனைவி இறந்தால் கணவனின் மறுதாரத்தை ஏற்றுக்கொள்ளும் சமுதாயம், கணவன் இறந்தால் மனைவி மறுமணம் செய்து கொள்வதை ஏன் ஏற்கக்கூடாது என்று இராஜாராம்மோகன்ராய் வாதிட்டார்.
ⅱ) கணவனை இழந்த இளம்பெண்கள் கைம்மை நோன்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1827-இல் விதவை மறுமணச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
ⅲ) இச்சட்டப்படி, கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்வதற்கும் சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும் உரிமைப் பெற்றனர்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: விதவை மணம், குழந்தைத் திருமணம்: மனைவி இறந்தால் கணவனின் மறுதாரத்தை ஏற்றுக்கொள்ளும் சமுதாயம், கணவன் இறந்தால் மனைவி மறுமணம் செய்து கொள்வதை ஏன் ஏற்கக்கூடாது என்று இராஜாராம்மோகன்ராய் வாதிட்டார். எனவே, பெண்கள் மறுமணம் செய்து கொள்வதை ஆதரித்தார். இராஜாராம்மோகன்ராய் இறப்பிற்குப் பின் குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்பட்டு கணவனை இழந்த இளம்பெண்கள் கைம்மை நோன்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1856-இல் விதவை மறுமணச்சட்டம் (widow Remarriage act 1856) கொண்டுவரப்பட்டது. இச்சட்டப்படி, கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்வதற்கும் சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும் உரிமைப் பெற்றனர்.
24) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) இச்சமாஜத்தைச் சார்ந்தோர் ஒருகடவுள் வழிபாட்டைத்தான் பின்பற்றவேண்டும்.
ⅱ) ஒன்றேகுலம் ஒருவனே தேவன் என்றும், மக்கள் அனைவரையும் சகோதர சகோதரியாக வாழவேண்டுமென்று இவர்கள் வலியுறுத்தினார்கள்.
ⅲ) இந்து சமயத்தைவிட்டு விலகாமல் அதேநேரத்தில் மேலைநாட்டில் தோன்றிய நல்ல கருத்துகளையும் ஏற்றுக்கொண்டு, பரந்த உணர்வுடன் செயல்பட, பிரம்மசமாஜம் விரும்பியது.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: பிரம்ம சமாஜத்தின் சமயப்பணிகள்: இச்சமாஜத்தைச் சார்ந்தோர் ஒருகடவுள் வழிபாட்டைத்தான் பின்பற்றவேண்டும். இறைவனை இரு கைகளால் மட்டுமன்றி இதயத்தாலும் வழிபடவேண்டும். ஒன்றேகுலம் ஒருவனே தேவன் என்றும், மக்கள் அனைவரையும் சகோதர சகோதரியாக வாழவேண்டுமென்று இவர்கள் வலியுறுத்தினார்கள். இந்து சமயத்தைவிட்டு விலகாமல் அதேநேரத்தில் மேலைநாட்டில் தோன்றிய நல்ல கருத்துகளையும் ஏற்றுக்கொண்டு, பரந்த உணர்வுடன் செயல்பட, பிரம்மசமாஜம் விரும்பியது. இச்சமாஜம் மக்களுக்கு பயனற்ற சமுதாய பழக்கவழக்கங்களைச் சட்டத்திற்குப் புறம்பானது என்று சாடியது.
25) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
ⅰ) பிரம்ம சமாஜம் எல்லா மதத்திலும் உள்ள மூடக்கருத்துகளை வெறுத்தாலும் மதங்களையோ, கடவுளையோ, வெறுக்கவோ மறுக்கவோ இல்லை.
ⅱ) எல்லா மதத்தையும் பற்றி இராஜாராம்மோகன்ராய் ஊன்றிக் கற்று உண்மையைத் தெளிந்தார்.
ⅲ)’இயேசுநாதரின் கட்டளை’ என்ற நூலில் ஏசுநாதரின் ஒழுக்கங்களையும், அன்பான வாழ்க்கையையும், அனைவருக்கும் ஏற்ற கொள்கைகளையும் பாராட்டுகிறார்.
ⅳ) இந்து மதத்திலுள்ள உருவ வழிபாட்டு முறைகளையும் கர்மவிதி, மறுபிறப்பு, உயர்வு, தாழ்வு ஆகியவற்றை வெறுக்கிறார். ஆனால் அதனிடமுள்ள ஆத்மசாந்தியைப் போற்றுகிறார்
a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)
b) ⅰ), ⅱ), ⅲ)
c) ⅱ), ⅲ)
d) ⅱ), ⅲ), ⅳ)
விளக்கம்: பிரம்ம சமாஜம் எல்லா மதத்திலும் உள்ள மூடக்கருத்துகளை வெறுத்தாலும் மதங்களையோ, கடவுளையோ, வெறுக்கவோ மறுக்கவோ இல்லை. எல்லா மதத்தையும் பற்றி இராஜாராம்மோகன்ராய் ஊன்றிக் கற்று உண்மையைத் தெளிந்தார். இவர் ‘இயேசுநாதரின் கட்டளை’ என்ற நூலில் ஏசுநாதரின் ஒழுக்கங்களையும், அன்பான வாழ்க்கையையும், அனைவருக்கும் ஏற்ற கொள்கைகளையும் பாராட்டுகிறார். இஸ்லாமிய மதத்திலுள்ள ஒரே கடவுள் கொள்கையைப் போற்றுகிறார். இந்து மதத்திலுள்ள உருவ வழிபாட்டு முறைகளையும் கர்மவிதி, மறுபிறப்பு, உயர்வு, தாழ்வு ஆகியவற்றை வெறுக்கிறார். ஆனால் அதனிடமுள்ள ஆத்மசாந்தியைப் போற்றுகிறார்.
26) கூற்று: .பி. (பொ.ஆ.) 1856-இல் விதவைகள் மறுமணச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
காரணம்: விதவைத் திருமணத்தை விரிவுபடுத்த, தீவிர இயக்கத்தைத் தோற்றுவித்தவர், ஈஸ்வரசந்திர வித்யாசாகர் ஆவார். இலட்சகணக்கான விதவைகள், மறுமணத்திற்கு ஆதரவு அளித்தார்.
(அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
(ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
(இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
(ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
விளக்கம்: இராஜாராம் மோகன்ராய்க்குப்பின் பிரம்ம சமாஜத்தின் செயல்பாடுகள்: இராஜாராம்மோகன்ராய்க்குப்பின் பிரம்மசமாஜம் சமூகத்திற்குப் பெரும் தொண்டாற்றியது. விதவைத் திருமணத்தை விரிவுபடுத்த, தீவிர இயக்கத்தைத் தோற்றுவித்தவர், ஈஸ்வரசந்திர வித்யாசாகர் ஆவார். இலட்சகணக்கான விதவைகள், மறுமணத்திற்கு ஆதரவு அளித்தார். இதன் பயனாக கி.பி. (பொ.ஆ.) 1856-இல் விதவைகள் மறுமணச் சட்டம் கொண்டு வரப்பட்டது. கேசவசந்திரசென் என்பவர் முயற்சியால் கி.பி. (பொ.ஆ.) 1872-இல் சிறப்பு திருமண சட்டம் நிறைவேற்றப்பட்டது.
27) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) விதவைகள் மறுமணச் சட்டம் குழந்தைத் திருமணத்தையும், பலதாரத் திருமணத்தையும் தண்டனைக்குரிய குற்றம் என்றது.
ⅱ) 1901-இல் பரோடா அரசு குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டத்தை கொண்டுவந்தது.
ⅲ) கி.பி (பொ.ஆ.) 1930-இல் இந்திய அரசால் ‘சாரதாச்சட்டம்’ (Saradha Act 1930) கொண்டுவரப்பட்டு பெண்ணின் திருமண வயது, 14-ஆக உயர்த்தப்பட்டது.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: விதவைகள் மறுமணச் சட்டம் குழந்தைத் திருமணத்தையும், பலதாரத் திருமணத்தையும் தண்டனைக்குரிய குற்றம் என்றது. கி.பி.(பொ.ஆ.) 1901-இல் பரோடா அரசு குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டத்தை கொண்டுவந்தது. கி.பி (பொ.ஆ.) 1930-இல் இந்திய அரசால் ‘சாரதாச்சட்டம்’ (Saradha Act 1930) கொண்டுவரப்பட்டு பெண்ணின் திருமண வயது, 14-ஆக உயர்த்தப்பட்டது. பண்டிதகார்வே என்பவர் பூனாவில் விதவை பெண்களுக்கென இல்லத்தை நிறுவினார். பெண்ணுரிமைகளை பாதுகாக்க, படிப்படியாகப் பல சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
28) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
ⅰ) இந்து சமயத்தைச் சீர்திருத்திய செம்மல்
ⅱ) இந்திய மறுமலர்ச்சியின் தந்தை
ⅲ) இந்தியாவின் விடிவெள்ளி
ⅳ) இந்திய தேசியத்தின் முன்னோடி
a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)
b) ⅰ), ⅱ), ⅲ)
c) ⅱ), ⅲ)
d) ⅱ), ⅲ), ⅳ)
விளக்கம்: இராஜாராம் மோகன்ராய் – மதிப்பீடு இவர் ஒரு சமுதாயச் சீர்திருத்தவாதி மட்டுமல்லாமல், சிறந்த நாட்டுப்பற்று உடையவராகவும் திகழ்ந்தார். இவரை இந்து சமயத்தைச் சீர்திருத்திய செம்மல், இந்திய மறுமலர்ச்சியின் தந்தை, இந்தியாவின் விடிவெள்ளி, இந்திய தேசியத்தின் முன்னோடி, இந்தியாவின் புத்துலகச்சிற்பி என்றும் போற்றுகின்றனர். மக்களிடையே, அரசியல் விழிப்புணர்வைத் தோற்றுவிக்க முயன்றார்.
29) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) இந்தியருக்குத் தாய்மொழிப்பற்றும் தன்னம்பிக்கையும் வளர சம்வாத்கௌமுகி (கி.பி(பொ.ஆ.) 1821) என்னும் வங்கமொழி வாரப்பத்திரிகையொன்றைத் தொடங்கினார்.
ⅱ) பாரசீக வாரப்பத்திரிகையான(Mirat-ul-Akbar) மிராத்-உல்-அக்பர் என்ற பத்திரிகையைத் தொடங்கினார்.
ⅲ) இவர் கி.பி (பொ.ஆ.) 1833-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் நாள் பிரிஸ்டலில் மறைந்தார்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: இந்தியருக்குத் தாய்மொழிப்பற்றும் தன்னம்பிக்கையும் வளர சம்வாத்கௌமுகி (கி.பி(பொ.ஆ.) 1821) என்னும் வங்கமொழி வாரப்பத்திரிகையொன்றைத் தொடங்கினார். பாரசீக வாரப்பத்திரிகையான(Mirat-ul-Akbar) மிராத்-உல்-அக்பர் என்ற பத்திரிகையைத் தொடங்கினார். இவர் கி.பி (பொ.ஆ.) 1833-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் நாள் பிரிஸ்டலில் மறைந்தார். “இவர் உலகிலேயே நவீன முறையில், முதன்முதலாகச் சமயஒற்றுமை நோக்கு உணர்ச்சியினை உண்டாக்கப் பாடுபட்டார்“ என்று வரலாற்றாசிரியர் சர்மோனியர் வில்லியம் குறிப்பிடுகிறார்.
30) “பரந்த மனித சமயத்தைக் கண்டவர் இராஜராம்மோகன்ராய்“ என்று குறிப்பிடும் வரலாற்றாசிரியர்?
a) பண்டிதகார்வே
b) சீல்
c) சர்மோனியர் வில்லியம்
d) நிக்கல்சன்
விளக்கம்: உலக மனிதாபிமானத்தை ஆன்மிகம், அரசியல் ஆகியவற்றுடன் இணைத்து “பரந்த மனித சமயத்தைக் கண்டவர் இராஜராம்மோகன்ராய்“ என்று வரலாற்றாசிரியர் சீல் என்பவர் குறிப்பிடுகிறார். எனவே இந்திய மறுமலர்ச்சியின் தந்தையாகிய இராஜாராம்மோகன்ராய் இந்திய வரலாற்றில் இவரது காலத்தில் சமூகம், சமயம், அரசியல் ஆகிய துறைகளில் சீர்திருத்தம் மலரக் காரணமாகத் திகழ்ந்தார்.
31) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
ⅰ) ‘ஆரியா’ என்ற சமஸ்கிருத சொல்லின் பொருள், ‘அறிவார்ந்தோர் அமைப்பு‘, (Noble Society) மற்றும் ‘கடவுளின் குழந்தை’ (Arya means son of God) என்பதாகும்.
ⅱ) அனைத்து ஆன்மாக்களும் கடவுளின் குழந்தைகள் என்றும், அவை கடவுளுக்குக் கீழ்ப்படிதல் வேண்டும் என்பதும் தயானந்தரின் கருத்துகளாகும்.
a) ⅰ) மட்டும்
b) ⅱ) மட்டும்
c) ⅰ) மற்றும் ⅱ)
d) இரண்டும் தவறு
விளக்கம்: ஆரிய சமாஜம்: கி.பி. (பொ.ஆ.) 1875 ஆரிய சமாஜம் –சொல் விளக்கம்: ‘ஆரியா’ என்ற சமஸ்கிருத சொல்லின் பொருள், ‘அறிவார்ந்தோர் அமைப்பு‘, (Noble Society) மற்றும் ‘கடவுளின் குழந்தை’ (Arya means son of God) என்பதாகும். அனைத்து ஆன்மாக்களும் கடவுளின் குழந்தைகள் என்றும், அவை கடவுளுக்குக் கீழ்ப்படிதல் வேண்டும் என்பதும் தயானந்தரின் கருத்துகளாகும்.
32) தயானந்த சரஸ்வதி தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றுகளை தேர்ந்தெடு?
ⅰ) இவர் கத்தியவாரில் உள்ள மூர்வி என்னுமிடத்தில் கி.பி(பொ.ஆ.) 1824-இல் பிறந்தார்.
ⅱ) மதுராவிற்குச் சென்று அங்கு சுவாமி விரஜானந்தரின் சீடரானார்.
ⅲ) 1875-இல் பம்பாயை தலைமை இடமாகக் கொண்டு ஆரிய சமாஜத்தைத் தொடங்கினார்.
ⅳ) வேதநூல்களை சத்தியார்த்தபிரகாஷ், சமஸ்கிருதத்திலும் வேத பாஷ்யங்கள், யஜுர் வேதம் போன்றவற்றை இந்தியிலும் மொழிபெயர்த்தார்.
a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)
b) ⅰ), ⅱ), ⅲ)
c) ⅱ), ⅲ)
d) ⅱ), ⅲ), ⅳ)
விளக்கம்: ஆரியசமாஜம், தயானந்த சரஸ்வதியால் கி . பி (பொ. ஆ) 1875-இ ல் தோற்றுவிக்கப்பட்டது. இவருடைய இயற்பெயர் மூல்சங்கர் (Mulsankar). இவர் கத்தியவாரில் உள்ள மூர்வி என்னுமிடத்தில் கி.பி(பொ.ஆ.) 1824-இல் பிறந்தார். மதுராவிற்குச் சென்று அங்கு சுவாமி விரஜானந்தரின் சீடரானார். வேத நூல்களை ஆழ்ந்து படித்தார். கி.பி (பொ.ஆ.) 1875-இல் பம்பாயை தலைமை இடமாகக் கொண்டு ஆரிய சமாஜத்தைத் தொடங்கினார். பிறகு அது லாகூருக்கு மாற்றப்பட்டது. இவர் வேதநூல்களை மொழிபெயர்த்தார். அவற்றைச் சத்தியார்த்தபிரகாஷ் இந்தியிலும், வேத பாஷ்யங்கள், யஜுர் வேதம் போன்றவற்றைச் சமஸ்கிருதத்திலும் மொழிபெயர்த்தார்.
33) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) வேதங்களின் பகுதிகளான பிராமணங்கள், சம்ஹிதைகள் மற்றும் உபவேதங்களில் காணப்படும் கருத்துகளே ஆரிய சமாஜத்தின் கருவூலங்களாகும்.
ⅱ) தயானந்த சரஸ்வதி மேற்கத்திய அறிவாலும், பண்பாட்டாலும் மாற்றம் பெற்றவர்.
ⅲ) “வேதங்களை நோக்கிச் செல்” (Go Back to Vedas) என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டவர்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: வேதங்களின் பகுதிகளான பிராமணங்கள், சம்ஹிதைகள் மற்றும் உபவேதங்களில் காணப்படும் கருத்துகளே ஆரிய சமாஜத்தின் கருவூலங்களாகும். மேற்கத்திய அறிவாலும், பண்பாட்டாலும் சிறிதும் மாற்றம் பெறாதவர். “வேதங்களை நோக்கிச் செல்” (Go Back to Vedas) என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டவர். அவர், தம் வாழ்நாளை வேதசமயத்தைப் பரப்புவதிலும் இந்து சமய, சமுதாயப் பணிகளைச் செய்வதிலும் ஈடுபட்டார்.
34) கீழ்க்கண்டவற்றுள் ஆரிய சமாஜத்தின் கோட்பாடுகளைத் தேர்ந்தெடு.
ⅰ) அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்பதால் அவர்களிடம் சாதி, சமய, இனவேறுபாடுகள் கொண்டிருப்பது அர்த்தமற்றதாகும்.
ⅱ) தியானம், தன்னலமற்ற நற்செயல்கள் மூலமாகவும் கடவுளின் அருளைப் பெறமுடியும்
ⅲ) இறைவன் எங்கும் நிறைந்தவன். அவனுக்கு முதலும் இல்லை; முடிவுமில்லை.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
.விளக்கம்: ஆரிய சமாஜத்தின் கோட்பாடுகள்: அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்பதால் அவர்களிடம் சாதி, சமய, இனவேறுபாடுகள் கொண்டிருப்பது அர்த்தமற்றதாகும். தியானம், தன்னலமற்ற நற்செயல்கள் மூலமாகவும் கடவுளின் அருளைப் பெறமுடியும். இறைவன் எங்கும் நிறைந்தவன். அவனுக்கு முதலும் இல்லை; முடிவுமில்லை.
35) கீழ்க்கண்டவற்றுள் ஆரிய சமாஜத்தின் கோட்பாடு அல்லாததைத் தேர்ந்தெடு.
a) இறைவன், ஆத்மா, பிரகிருதி ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன.
b) ஆன்மா அழியாது, ஆன்மா பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை, கடவுளைப் போன்றே ஆன்மாவும் நிலையானது.
c) ஆன்மாவுக்கு முடிவு காலம் உண்டு..
d) இது பல்வேறு பிறப்பு மற்றும் இறப்புகளின் மூலம் மேன்மையடைகிறது.
விளக்கம்: இறைவன், ஆத்மா, பிரகிருதி ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன. ஆன்மா அழியாது, ஆன்மா பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை, கடவுளைப் போன்றே ஆன்மாவும் நிலையானது. ஆன்மாவின் பயணம் முடிவற்றது. இது பல்வேறு பிறப்பு மற்றும் இறப்புகளின் மூலம் மேன்மையடைகிறது.
36) கீழ்க்கண்டவற்றுள் ஆரிய சமாஜத்தின் கோட்பாடுகளைத் தேர்ந்தெடு.
ⅰ) தீபம் ஏற்றுதல் என்பது, அதன் ஒளியின் எதிர்காலத்தில் நற்செயல்களைச் செய்வதற்குத் திட்டமிடலாகும்.
ⅱ) இறைவனிடம் தமது குறைகளை முறையிட பிரதிநிதியும் தேவை.
ⅲ) உலகிலும், அண்டக்கோள்களிலும் எல்லாப்படைப்புகளிலும் எங்கும் காணப்படும் கடவுளைப் பரபிரம்மம் என்கிறோம்.
ⅳ) மனம், வாக்கு, உடல் ஆகியவற்றில் தூய்மை வேண்டும்.
a) ⅰ), ⅲ), ⅳ)
b) ⅰ), ⅱ), ⅲ)
c) ⅱ), ⅲ)
d) ⅱ), ⅲ), ⅳ)
விளக்கம்: தீபம் ஏற்றுதல் என்பது, அதன் ஒளியின் எதிர்காலத்தில் நற்செயல்களைச் செய்வதற்குத் திட்டமிடலாகும். இறைவனிடம் தமது குறைகளை முறையிட எந்தவொரு பிரதிநிதியும் தேவையில்லை. உலகிலும், அண்டக்கோள்களிலும் எல்லாப்படைப்புகளிலும் எங்கும் காணப்படும் கடவுளைப் பரபிரம்மம் என்கிறோம். மனம், வாக்கு, உடல் ஆகியவற்றில் தூய்மை வேண்டும்.
37) கீழ்க்கண்டவற்றுள் ஆரிய சமாஜத்தின் கோட்பாடுகளைத் தேர்ந்தெடு.
ⅰ) நேர்வழியில் செல்வத்தை சேர்த்து நேர்மையோடு வாழ்பவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும், நெறி தவறாத ஆட்சியாளர்களும், தூயவாழ்வு நடத்துபவர்களும் மண்ணில் வாழும் விண்ணவர்கள் ஆவர்.
ⅱ) ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம். ஆன்மாவிற்கு பாலின வேறுபாடுகள் கிடையாது.
ⅲ) அறவழியில் வாழ்பவர்கள் துதித்தல், தியானித்தல், யோகத்தில் மூழ்குதல் ஆகிய நற்செயல்களை செய்யத்தேவை இல்லை.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: நேர்வழியில் செல்வத்தை சேர்த்து நேர்மையோடு வாழ்பவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும், நெறி தவறாத ஆட்சியாளர்களும், தூயவாழ்வு நடத்துபவர்களும் மண்ணில் வாழும் விண்ணவர்கள் ஆவர். இவர்கள் இறைவனோடு நேரடியாக ஐக்கியமானவர்கள், இவர்கள் வாழும் வழிகளே அறவழிகளாகும். ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம். ஆன்மாவிற்கு பாலின வேறுபாடுகள் கிடையாது. அறவழியில் வாழ்பவர்கள் துதித்தல், தியானித்தல், யோகத்தில் மூழ்குதல் ஆகிய நற்செயல்களால் இறைவனை அடைவார்கள். இதன் முடிவில் தன்னில் இறைவனையும், இறைவனில் தன்னையும் காணலாம். புனிதப்பயணம், கோயில்வழிபாடு, விழாக்களைக் கொண்டாடுதல் முதலியவை தேவையற்றவையென்றாலும் மனப்பக்குவம்பெற இவையாவும் துணை நிற்கின்றன.
38) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
ⅰ) ஒருவன் மறுபிறப்பு, கர்மவிதி ஆகியவற்றில் நம்பிக்கை கொள்ளவேண்டும்.
ⅱ) நாம் செய்யும் செயல்களே அவற்றைத் தீர்மானிக்கின்றன என்பது ஆரிய சமாஜத்தின் நம்பிக்கையாகும்.
a) ⅰ) மட்டும்
b) ⅱ) மட்டும்
c) ⅰ) மற்றும் ⅱ)
d) இரண்டும் தவறு
விளக்கம்: ஒருவன் மறுபிறப்பு, கர்மவிதி ஆகியவற்றில் நம்பிக்கை கொள்ளவேண்டும். சொர்க்கமும் நரகமும் இப்புவியில்தான் உள்ளன. நாம் செய்யும் செயல்களே அவற்றைத் தீர்மானிக்கின்றன என்பது ஆரிய சமாஜத்தின் நம்பிக்கையாகும்.
39) பின்வருவனவற்றுள் ஆரிய சமாஜத்தின் சமுதாயப் பணிகளைத்தேர்ந்தெடு.
ⅰ) “மறை செழித்த நாடே எம்மகேஸ்வரன் வீடு“ இதனை வணங்குதலே இறைவனை வணங்குதல் என்று தயானந்தர் கூறினார்.
ⅱ) ‘இந்தியா இந்தியருக்கே‘ (India for Indians) என்று கூறிச் சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
ⅲ) பல நகரங்களில் ஆசிரமங்கள் நிறுவப்பட்டு ஆண், பெண், குழந்தைகள் பேணிப் பாதுகாக்கப்பட்டுக் கல்வியறிவு அளிக்கப்படுகிறது.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: ஆரிய சமாஜத்தின் சமுதாயப் பணிகள்: “மறை செழித்த நாடே எம்மகேஸ்வரன் வீடு“ இதனை வணங்குதலே இறைவனை வணங்குதல் என்று தயானந்தர் கூறினார். ‘இந்தியா இந்தியருக்கே‘ (India for Indians) என்று கூறிச் சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பல நகரங்களில் ஆசிரமங்கள் நிறுவப்பட்டு ஆண், பெண், குழந்தைகள் பேணிப் பாதுகாக்கப்பட்டுக் கல்வியறிவு அளிக்கப்படுகிறது.
40) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) ஆரியசமாஜம் தீண்டாமை , சாதிப்பாகுபாடுகள், குழந்தைத்திருமணம் போன்றவற்றை ஆதரித்தது.
ⅱ) ஆரிய சமாஜம் ஆண்களையும், பெண்களையும் சமுதாயத்தின் இரு கண்களாகவே கருதியது.
ⅲ) விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ஆதரவற்ற இல்லங்கள் பல அமைக்கப்பட்டுள்ளன.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: ஆரியசமாஜம் தீண்டாமை , சாதிப்பாகுபாடுகள், குழந்தைத்திருமணம் போன்றவற்றை எதிர்த்தது. ஆரிய சமாஜம் ஆண்களையும், பெண்களையும் சமுதாயத்தின் இரு கண்களாகவே கருதியது. விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ஆதரவற்ற இல்லங்கள் பல அமைக்கப்பட்டுள்ளன. இவர்களுக்குத் தொழிற்கல்வி அளித்து வாழ்விற்குத் தேவையான வருமானத்தைத் தாமே ஈட்டிக்கொள்ள வழிவகுக்கின்றன.
41) கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) மக்களின் மூலம் குடிநீர்வசதி, மருத்துவ வசதி, யோகா போன்றவற்றை வழங்குதல்.
ⅱ) சமுதாயத்தில் மிகவும் தீயப்பழக்கமாகக் குழந்தைத் திருமணம் இருந்தது.
ⅲ) இந்து சமுதாயத்தில் காணப்பட்ட பலதாரமணத்தை ஆரியசமாஜம் தொடர்ந்து எதிர்த்துள்ளது.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: தொண்டர்படையின் மூலம் குடிநீர்வசதி, மருத்துவ வசதி, யோகா போன்றவற்றை வழங்குதல். சமுதாயத்தில் மிகவும் தீயப்பழக்கமாகக் குழந்தைத் திருமணம் இருந்தது. இதனால் எண்ணற்ற பெண்கள் இளம்வயதிலேயே விதவையாகும் நிலை ஏற்பட்டது. இந்த நடைமுறையை இவ்வியக்கம் முற்றிலுமாக எதிர்த்தது. இந்து சமுதாயத்தில் காணப்பட்ட பலதாரமணத்தை ஆரியசமாஜம் தொடர்ந்து எதிர்த்துள்ளது.
42) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) ஆரியசமாஜம் தோன்றுவதற்கு முன் பிற சமயங்களுக்குச் சென்ற எவரும், மீண்டும் இந்து சமயக் கோட்பாடுகளை ஏற்று இந்துவாக மாறமுடியாத நிலை இருந்தது.
ⅱ) சுத்தி இயக்கத்தின் (Sudhi Movement) மூலம் பிற சமயத்தில் உள்ள இந்துக்களைத் தன் சமயத்தில் மீண்டும் இணைத்துக்கொண்டது.
a) ⅰ) மட்டும்
b) ⅱ) மட்டும்
c) ⅰ) மற்றும் ⅱ)
d) இரண்டும் தவறு
விளக்கம்: ஆரியசமாஜம் தோன்றுவதற்கு முன் பிற சமயங்களுக்குச் சென்ற எவரும், மீண்டும் இந்து சமயக் கோட்பாடுகளை ஏற்று இந்துவாக மாறமுடியாத நிலை இருந்தது. சுத்தி இயக்கத்தின் (Sudhi Movement) மூலம் பிற சமயத்தில் உள்ள இந்துக்களைத் தன் சமயத்தில் மீண்டும் இணைத்துக்கொண்டது.
43) பின்வருவனவற்றுள் ஆரிய சமாஜத்தின் சமுதாயப் பணிகளைத்தேர்ந்தெடு.
ⅰ) இந்து சமயத்தில் நிலவி வந்த காலத்திற்குப் பொருந்தாதச் சடங்குகளைக் களையவும், வேதசமயத்திற்குப் புத்துயிர் அளிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ⅱ) வேதகாலச் சமூகத்தில் மிகவும் நம்பத்தகுந்த செய்திகள் உள்ளடங்கி இருப்பதால், அவற்றை நூற்றுக்கணக்கான போதகர்களும், துறவிகளும் நாடு முழுமைக்கும் பரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ⅲ) சமஸ்கிருதத்தில் மட்டும் கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டன.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: ஆரிய சமாஜத்தின் செயல்பாடுகள்: இந்து சமயத்தில் நிலவி வந்த காலத்திற்குப் பொருந்தாதச் சடங்குகளைக் களையவும், வேதசமயத்திற்குப் புத்துயிர் அளிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. வேதகாலச் சமூகத்தில் மிகவும் நம்பத்தகுந்த செய்திகள் உள்ளடங்கி இருப்பதால், அவற்றை நூற்றுக்கணக்கான போதகர்களும், துறவிகளும் நாடு முழுமைக்கும் பரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழிகளில் மக்களுக்குப் புரியும்வகையில் கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டன.
44) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) இந்தியாவில் கி.பி. (பொ .ஆ.) 1886-ஆம் ஆண்டு லாகூரில் தேவ ராஜ் தலைமையில் தயானந்த ஆங்கிலோ வேதப்பள்ளிகள் தொடங்கப்பட்டன.
ⅱ) இச்சமாஜம், தயானந்த ஆங்கிலோ வேதப்பள்ளிகளையும் (DAV, Dayananda Anglo Vedic School) கல்லூரிகளையும் நடத்தி வருகின்றது.
ⅲ) பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் தனித்தனியாகக் கல்வி பயிலவும், இருபாலரும் சேர்ந்து கல்வி பயில்வதற்கென, கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: கல்வி நிறுவனங்களை உருவாக்குதல்: இந்தியாவில் கி.பி. (பொ .ஆ.) 1886-ஆம் ஆண்டு லாகூரில் ஹன்ஸ்ராஜ் தலைமையில் தயானந்த ஆங்கிலோ வேதப்பள்ளிகள் தொடங்கப்பட்டன. இச்சமாஜம், தயானந்த ஆங்கிலோ வேதப்பள்ளிகளையும் (DAV, Dayananda Anglo Vedic School) கல்லூரிகளையும் நடத்தி வருகின்றது. பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் தனித்தனியாகக் கல்வி பயிலவும், இருபாலரும் சேர்ந்து கல்வி பயில்வதற்கென, கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்களில் ஆங்கிலம் முதன்மை மொழியாகவும் இந்தி, சமஸ்கிருதம் இரண்டாம் மொழியாகவும் கற்பிக்கப்படுகின்றன. இதனை, தயானந்த ஆங்கிலோ வேதக்கல்வி நிறுவனங்களின் மேற்பார்வை அமைப்பு (DAVCMC, Dayananda Anglo Vedic College managing Committee) நிர்வகித்து வருகிறது. இது ஓர் அரசுசாரா நிறுவனமாகும். பிஜி, நேபாளம், மொரீசியஸ், சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் இந்த அமைப்பு செயல்பட்டு வருகின்றது.
45) சுவாமி தயானந்த சரஸ்வதி தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) கடந்த காலப்பண்பாட்டிற்கும் நிகழ்காலப்பண்பாட்டிற்கும் பாலமாகத் திகழ்ந்தார்.
ⅱ) மொழி, நாகரிகம், பண்பாடு இவை மூன்றையும் உலகிலேயே சிறந்தவையாக இவர் கருதினார்.
ⅲ) சுயராஜ்ஜியம் என்று கூறி விடுதலை உணர்வை மக்களிடையே தோற்றுவித்தார்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: சுவாமி தயானந்த சரஸ்வதி – மதிப்பீடு சுவாமி தயானந்தர் சிறந்த சமூக சீர்திருத்தவாதிகளுள் ஒருவராவார். இவர் கடந்த காலப்பண்பாட்டிற்கும் நிகழ்காலப்பண்பாட்டிற்கும் பாலமாகத் திகழ்ந்தார். வேதசமயம், நாகரிகம், பண்பாடு இவை மூன்றையும் உலகிலேயே சிறந்தவையாக இவர் கருதினார். இவர் சுயராஜ்ஜியம் என்று கூறி விடுதலை உணர்வை மக்களிடையே தோற்றுவித்தார். இக்கருத்து பிற்காலத்தில் ‘சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை’ என்ற திலகரின் கூற்றுக்கு அடிப்படையாக அமைந்தது.
46) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
ⅰ) “சத்யமேவ ஜெயதே” என்ற சமஸ்கிருத சொல்லின் பொருள் வாய்மையே வெல்லும் என்பதாகும்.
ⅱ) இவ்வார்த்தை முண்டக உபநிடதத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
a) ⅰ) மட்டும்
b) ⅱ) மட்டும்
c) ⅰ) மற்றும் ⅱ)
d) இரண்டும் தவறு
விளக்கம்: “சத்யமேவ ஜெயதே” என்ற சமஸ்கிருத சொல்லின் பொருள் வாய்மையே வெல்லும் என்பதாகும். இவ்வார்த்தை முண்டக உபநிடதத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
47) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) வாய்மையே வெல்லும் என்னும் ராயின் தாரகமந்திரம் அகிம்சை முறையில் போராடிச் சுதந்திரம் பெற இந்தியரை ஆயத்தப்படுத்தியது.
ⅱ) ஆரிய சமாஜத்தை நிறுவிய 8 ஆண்டுகளிலேயே இவர் இயற்கை எய்தினார்.
ⅲ) இவரது மறைவுக்குப் பிறகு ஆரியசமாஜம் இருபிரிவுகளாகப் பிரிந்தது.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: வாய்மையே வெல்லும் என்னும் தயானந்தரின் தாரகமந்திரம் அகிம்சை முறையில் போராடிச் சுதந்திரம் பெற இந்தியரை ஆயத்தப்படுத்தியது. ஆரிய சமாஜத்தை நிறுவிய 8 ஆண்டுகளிலேயே இவர் இயற்கை எய்தினார். இவரது மறைவுக்குப் பிறகு ஆரியசமாஜம் இருபிரிவுகளாகப் பிரிந்தது. இவர் இந்துசமயத்தின் மார்ட்டின் லூதர் என்று அழைக்கப்பட்டார். இவரை 19-ஆம் நூற்றாண்டில் தோன்றிய இந்திய மறுமலர்ச்சியின் தந்தையென இரவீந்திரநாத் தாகூர் போற்றுகிறார்.
48) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) இராமகிருஷ்ணர் கி.பி. (பொ.ஆ.) 1826-ஆம் ஆண்டு பிப்ரவரி 18-ஆம் நாள் கல்கத்தாவில் உள்ள ஹுக்ளி நதிக்கரையில் கமர்புக்கூர் என்ற இடத்தில் பிறந்தார்.
ⅱ) இவரது இயற்பெயர் கடாதரசட்டர்ஜி ஆகும்.
ⅲ)இவர் தக்னேஷ்வரத்திலுள்ள காளிகோயில் பூசாரியாகப் பணிபுரிந்தார்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: இராமகிருஷ்ண பரமஹம்சர் கி.பி. (பொ.ஆ.) 1836 -1886:
இராமகிருஷ்ணர் கி.பி. (பொ.ஆ.) 1836-ஆம் ஆண்டு பிப்ரவரி 18-ஆம் நாள் கல்கத்தாவில் உள்ள ஹுக்ளி நதிக்கரையில் கமர்புக்கூர் என்ற இடத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் கடாதரசட்டர்ஜி ஆகும். இவர் தக்னேஷ்வரத்திலுள்ள காளிகோயில் பூசாரியாகப் பணிபுரிந்தார். இக்கோயில் மிகப்பெரிய செல்வந்தரான ராணி ராஸ்மோனி என்பவரால் கட்டப்பட்டது. துணைவியார் சாரதாதேவி அம்மையார் இவருடைய சமயப்பணியில் உற்றத்துணையாக இருந்தார். இவர் தயானந்த சரஸ்வதியின் சமகாலத்தவர் ஆவார்.
49) பின்வருவனவற்றுள் இராமகிருஷ்ணரின் ஆன்மிக கருத்துகளைத்தேர்ந்தெடு.
ⅰ) இறையனுபவம் அற்ற தத்துவ உரையாடல்களைத் தவிர்த்தார்.
ⅱ) இறைவனை அடைய வேண்டுமென்ற ஏக்கம், இறைவனிடத்தில் அன்பு இவற்றைப் பெறவேண்டும் என்பதையும், அனைத்துத் திருவுருவச் சிலைகளிலும் ஆண்டவன் நிறைந்திருப்பதைக் காணலாம் என்பதும் இவருடைய கருத்தாகும்.
ⅲ) இறைவனை அடைய உருவ வழிபாடு ஒரு வழி, அதுவே முடிந்த முடிவு என்றும் கூறினார்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: இராமகிருஷ்ணரின் ஆன்மிக கருத்துகள்: இறையனுபவம் அற்ற தத்துவ உரையாடல்களைத் தவிர்த்தார். இறைவனை அடைய வேண்டுமென்ற ஏக்கம், இறைவனிடத்தில் அன்பு இவற்றைப் பெறவேண்டும் என்பதையும், அனைத்துத் திருவுருவச் சிலைகளிலும் ஆண்டவன் நிறைந்திருப்பதைக் காணலாம் என்பதும் இவருடைய கருத்தாகும். இறைவனை அடைய உருவ வழிபாடு ஒரு வழி, அதுவே முடிந்த முடிவு அன்று என்றும் கூறினார். இவர் எல்லாச் சமயங்களின் சாரத்தையும் அறிந்து, உண்மைகளை உணர்ந்து, வாழ்ந்து காட்டிய ஞானி ஆவார்.
50) இராமகிருஷ்ணரை ‘இறைவனும் மனிதனும் கலந்த வியத்தகு கலவை‘ என்று குறிப்பிடுபவர் யார்?
a) விவேகானந்தர்
b) அன்னிபெசன்ட்
c) திலகர்
d) அண்ணா துரை
விளக்கம்: இனிய நடையில் கதைகள், நீதிக் கதைகள், அன்றாட நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்டு, சமய தத்துவக் கருத்துகளை அனைவருக்கும் புரியும் வண்ணம் போதித்தார். நாம் தாகத்தைத் தீர்க்கும் தண்ணீரை நீர், பானி, வாட்டர் போன்ற பல்வேறு மொழிகளில் கூறினாலும் அவை ஒரே பொருளைக் குறிப்பது போல், இறைவன் அரி, அல்லா, ஏசு, காளி, மாதா போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றார் என்றுகூறி, உலக பொதுச் சமயத்திற்கும், உலக ஒற்றுமைக்கும் வழிவகுத்தார். எனவே இராமகிருஷ்ணரை ‘இறைவனும் மனிதனும் கலந்த வியத்தகு கலவை‘ என விவேகானந்தர் குறிப்பிடுகின்றார் .
51) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) சுவாமி விவேகானந்தர் வேதாந்தத் தத்துவத்தின் செல்வாக்குமிக்க ஆன்மிகத் தலைவர்களுள் குறிப்பிடத்தக்கவராவார்.
ⅱ) வேதாந்தத் தத்துவங்களை மேற்கத்திய நாடுமுழுவதும் பரப்பி, ஏழை எளியோருக்கு சேவை செய்யவேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருந்தார்.
ⅲ) விவேகானந்தர் கல்கத்தாவில் கி.பி. (பொ.ஆ.) 1863-இல் விஸ்வநாத் தத்தா- புவனேஸ்வரிதேவிக்கு மகனாகப் பிறந்தார்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: சுவாமி விவேகானந்தர்: கி.பி. (பொ.ஆ) 1863 – 1902 சுவாமி விவேகானந்தர் வேதாந்தத் தத்துவத்தின் செல்வாக்குமிக்க ஆன்மிகத் தலைவர்களுள் குறிப்பிடத்தக்கவராவார். இந்திய மக்களுக்கு ஆன்மிக ஒளியைப் புகட்டுவதில் பெரும்பங்கு வகித்தார், வேதாந்தத் தத்துவங்களை மேற்கத்திய நாடுமுழுவதும் பரப்பி, ஏழை எளியோருக்கு சேவை செய்யவேண்டும் என்ற கொள்கையைக்கொண்டிருந்தார் . விவேகானந்தர் கல்கத்தாவில் கி.பி. (பொ.ஆ.) 1863-இல் விஸ்வநாத் தத்தா- புவனேஸ்வரிதேவிக்கு மகனாகப் பிறந்தார்.
52) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
ⅰ) இராஜ யோகம் , கர்மயோகம், பக்தியோகம், ஞானயோகம் போன்றவற்றின் மூலம் மோட்சத்தை அடையலாம் என்று தமது கர்ம நெறிகள் என்ற நூலில் விவேகானந்தர் கூறியுள்ளார்.
ⅱ) இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா, இவர் துறவியாக மாறிய போது தமது இயற்பெயரை விவேகானந்தர் என்று மாற்றிக்கொண்டார்.
a) ⅰ) மட்டும்
b) ⅱ) மட்டும்
c) ⅰ) மற்றும் ⅱ)
d) இரண்டும் தவறு
விளக்கம்: இ ரா ஜ யோக ம் , கர்மயோகம், பக்தியோகம், ஞானயோகம் போன்றவற்றின் மூலம் மோட்சத்தை அடையலாம் என்று தமது யோகநெறிகள் என்ற நூலில் விவேகானந்தர் கூறியுள்ளார்.
இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா, இவர் துறவியாக மாறிய போது தமது இயற்பெயரை விவேகானந்தர் என்று மாற்றிக்கொண்டார்.
53) விவேகானந்தர் தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) இவர் இளம்வயதிலேயே இசைக்கருவி வாசிப்பது, தியானம் செய்வது போன்ற பயிற்சிகளை மேற்கொண்டார்.
ⅱ) சமூகத்தில் நிலவிய சாதி, சமய பாகுபாடு மற்றும் மூடப்பழக்கங்கள் பற்றிப் பல கேள்விகள் மற்றும் சந்தேகங்களை எழுப்பினார்.
ⅲ) கேசவசந்திரசென் தலைமையில் இயங்கிய பிரம்மசமாஜத்தில் உறுப்பினரானார்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: இவர் இளம்வயதிலேயே இசைக்கருவி வாசிப்பது, தியானம் செய்வது போன்ற பயிற்சிகளை மேற்கொண்டார். சமூகத்தில் நிலவிய சாதி, சமய பாகுபாடு மற்றும் மூடப்பழக்கங்கள் பற்றிப் பல கேள்விகள் மற்றும் சந்தேகங்களை எழுப்பினார். இவர் மேற்கத்திய தத்துவங்கள், அளவையியல்(Logic) மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறுகளைப் படித்தார். கேசவசந்திரசென் தலைமையில் இயங்கிய பிரம்மசமாஜத்தில் உறுப்பினரானார். இராமகிருஷ்ணரை நேரில் சந்தித்து ஆசிப்பெற்றுத் தமது குருவாக ஏற்றுக்கொண்டார். அத்வைத வேதாந்தத்தில் ஐந்து ஆண்டுகள் பயிற்சி மேற்கொண்டார். இராமகிருஷ்ணர் இறப்பிற்குப்பின், அவர் பெயரில் மடம் மற்றும் தொண்டு நிறுவனங்களைத் தொடங்கினார்.
54) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) விவேகானந்தர் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு வாரணாசி, அயோத்தி, ஆக்ரா, பிருந்தாவன் மற்றும் ஆழ்வார்கள் வாழ்ந்த இடங்களைத் தரிசித்தார்.
ⅱ) தம் சுற்றுப் பயணத்தின்போது அரண்மனை, குடிசைகள் போன்ற இடங்களில் தங்கினார்.
ⅲ) 1893–ஆம் ஆண்டு கன்னியாகுமரிக்குச் சென்று பாறையின் மீது அமர்ந்து தியானத்தைத் தொடங்கினார்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: விவேகானந்தர் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு வாரணாசி, அயோத்தி ஆக்ரா, பிருந்தாவன் மற்றும் ஆழ்வார்கள் வாழ்ந்த இடங்களைத் தரிசித்தார். தம் சுற்றுப் பயணத்தின்போது அரண்மனை, குடிசைகள் போன்ற இடங்களில் தங்கினார். அனைத்துச் சமூக மக்களையும் சந்தித்தார். சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு மற்றும் சாதிய வேறுபாடுகளைக் கண்டித்தார். இந்தியாவை உயிருள்ள ஒரு தேசமாக உருவாக்க வேண்டுமென்றால், தேசிய புத்துயிர்ப்பு அவசியம் என்பதை உணர்ந்தார். 1892–ஆம் ஆண்டு கன்னியாகுமரிக்குச் சென்று பாறையின் மீது அமர்ந்து தியானத்தைத் தொடங்கினார். அவர் அமர்ந்து தியானம் செய்த பாறையே விவேகானந்தர் பாறை என்ற பெயரில் இன்றும் உள்ளது.
55) விவேகானந்தர் தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) 1897-ஆம் ஆண்டு நவம்பர் 11-ஆம் நாள் அமெரிக்காவின் சிகாகோ நகரில் உலக சமய மாநாடு மதகுரு கிப்பன்ஸ் தலைமையில் நடைபெற்றது.
ⅱ) பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்களும், ஆன்மிக குருமார்களும், பல சமயங்களைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.
ⅲ) அப்போது எல்லாரும் வியக்கும் வகையில், சாதி சமயங்களைத் துறந்து எனது அருமை அமெரிக்க சகோதர சகோதரிகளே என்று தமது பேச்சைத் தொடங்கினார்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: விவேகானந்தரும் சிகாகோ உலக சமய மாநாடும் (World Religious Conference)
1893-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் நாள் அமெரிக்காவின் சிகாகோ நகரில் உலக சமய மாநாடு மதகுரு கிப்பன்ஸ் தலைமையில் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்களும், ஆன்மிக குருமார்களும், பல சமயங்களைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர். அப்போது எல்லாரும் வியக்கும் வகையில், சாதி சமயங்களைத் துறந்து எனது அருமை அமெரிக்க சகோதர சகோதரிகளே என்று தமது பேச்சைத் தொடங்கினார். உலகின் மிக முக்கியமான சொற்பொழிவுகளில் ஒன்றாக இப்போதும் அது குறிப்பிடப்படுகிறது.
56) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
ⅰ) கி.பி. (பொ.ஆ.) 1897-இல் சுவாமி விவேகானந்தரும் மன்னர் பாஸ்கரசேதுபதியும் கன்னியாகுமரியில் சந்தித்தது வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும்.
ⅱ) இந்தச் சந்திப்புதான், சுவாமி விவேகானந்தர் அமெரிக்க உலக சமய மாநாட்டிற்குச் செல்ல வழிகோலியது எனலாம்.
a) ⅰ) மட்டும்
b) ⅱ) மட்டும்
c) ⅰ) மற்றும் ⅱ)
d) இரண்டும் தவறு
விளக்கம்: கி.பி. (பொ.ஆ.) 1892-இல் சுவாமி விவேகானந்தரும் மன்னர் பாஸ்கரசேதுபதியும் மதுரையில் சந்தித்தது வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். இந்தச் சந்திப்புதான், சுவாமி விவேகானந்தர் அமெரிக்க உலக சமய மாநாட்டிற்குச் செல்ல வழிகோலியது எனலாம். அனைத்து மக்களின் அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன் என்று கூறி அவரது உரையில் சமய ஒற்றுமை, ஆன்மிகம் போன்றவைகளை எடுத்துரைத்தார். உலகில் எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம் இறுதியில் கடலில் சென்று சங்கமாம் பான்மையினைப் போன்றுலகோர் பின்பற்றும் தன்மை யாலே துங்கமிகு நெறி பலவாய் நேராயும் வளைவாயும் தோன்றினாலும், அங்கு அவை தாம் எம்பெரும்! ஈற்றில் உனை அடைகின்ற ஆறே யன்றோ! என்று மாநாட்டில் கூறி உலக சமய ஒற்றுமையைத் தெளிவுபடுத்தினார்.
57) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) விவேகானந்தர் 1896-இல் லண்டன் நகரில் வேதாந்த சங்கம் (Vedanta Society) என்ற சமய மன்றத்தைத் தொடங்கினார்.
ⅱ) பின் கி.பி. (பொ.ஆ.) 1897-இல் வங்காளத்தில் உள்ள பேலூரில் இராமகிருஷ்ண இயக்கம் தொடங்கப்பட்டது.
ⅲ) இந்தியப் பண்பாட்டை உலகெங்கும் பரப்புவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: இராமகிருஷ்ண இயக்கம்: கி.பி. (பொ.ஆ.) 1897 (Ramakrisha mission) விவேகானந்தர் 1896-இல் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் வேதாந்த சங்கம் (Vedanta Society) என்ற சமய மன்றத்தைத் தொடங்கினார். பின் கி.பி. (பொ.ஆ.) 1897-இல் வங்காளத்தில் உள்ள பேலூரில் இராமகிருஷ்ண இயக்கம் தொடங்கப்பட்டது. இந்தியப் பண்பாட்டை உலகெங்கும் பரப்புவதே இதன் முக்கிய நோக்கமாகும். ஏழ்மை மற்றும் மூடநம்பிக்கைகளை அறவே நீக்கப் பாடுபடுவது இவ்வியக்கத்தின் முக்கிய கொள்கைகளாக இருந்தன. இந்த இயக்கம் ஆன்மிக வளர்ச்சியில் நாட்டம் கொண்டோருக்குப் பயிற்சி அளித்து அவர்களைக் கல்வி, சமய, சமுதாயப் பணிகளைச் செய்யவும் வேதாந்தக் கருத்துகளைப் பரப்பவும் பாடுபட்டு வருகிறது.
58) கீழ்க்கண்டவற்றுள் இராமகிருஷ்ண இயக்கத்தின் நோக்கங்களும் குறிக்கோள்களும் எ வை?
ⅰ) துறவறம் மற்றும் மனித சேவையே இதன் முக்கிய நோக்கமாகும்.
ⅱ) வேதாந்தக் கொள்கைகள் அடங்கிய கல்வியை அளித்தல்.
ⅲ) கல்வியோடு கலைகள், அறிவியல், தொழில்கள் பிறவற்றையும் மேம்பாடு அடையச்செய்தல்.
ⅳ) பொதுமக்களுக்கு கல்வியைப் புகட்டும் பணியினைத் தொடர்ந்து செய்தல் கிராம முன்னேற்றத்திற்குப் பாடுபடுதல்.
a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)
b) ⅰ), ⅱ), ⅲ)
c) ⅱ), ⅲ)
d) ⅱ), ⅲ), ⅳ)
விளக்கம்: இராமகிருஷ்ண இயக்கத்தின் நோக்கங்களும் குறிக்கோள்களும்: துறவறம் மற்றும் மனித சேவையே இதன் முக்கிய நோக்கமாகும். வேதாந்தக் கொள்கைகள் அடங்கிய கல்வியை அளித்தல். கல்வியோடு கலைகள், அறிவியல், தொழில்கள் பிறவற்றையும் மேம்பாடு அடையச்செய்தல். பொதுமக்களுக்கு கல்வியைப் புகட்டும் பணியினைத் தொடர்ந்து செய்தல் கிராம முன்னேற்றத்திற்குப் பாடுபடுதல். இவ்வியக்கம் இனம், மொழி, நாடு, சமய வேறுபாடின்றி பூகம்பம் வெள்ளம், தீ, தொற்றுநோய் போன்றவை ஏற்படும் காலங்களில் மக்களுக்குச் சேவையாற்றுதல்.
59) கீழ்க்கண்டவற்றுள் இராமகிருஷ்ண இயக்கத்தின் நோக்கம் அல்லது குறிக்கோள்களை தேர்ந்தெடு.
ⅰ) இவ்வியக்கம் கல்வி, உடல்நலம், கிராமப்புற வளர்ச்சி, மலைவாழ்மக்கள் முன்னேற்றம், இளைஞர் நலன் போன்றவற்றிற்காகப் பாடுபட்டுவருகிறது.
ⅱ) இந்தியா முழுவதும் மருத்துவமனைகள், அறக்கட்டளைகள் நிறுவி, மக்கள் நலன் காக்கும் பணிகள், தாய்சேய் மருத்துவமனைகள், முதியோர், ஆதரவற்றோர் இல்லங்கள், செவிலியர் பயிற்சிப் பள்ளிகள் போன்றவற்றின் மூலம் சேவை செய்து வருகின்றன.
ⅲ) இவ்வியக்கம் தம் நோக்கங்களை நி றைவேற் றி, எவற்றை விரும்பத்தக்கதெனச் சிந்திக்கின்றதோ அதற்குரிய சஞ்சிகைகளை, பருவ இதழ்களை, நூல்களை, ஆண்டு பிரசுரங்களை அச்சடித்துப் பதிப்பித்து விற்றல் அல்லது இலவசமாக வழங்கல் போன்ற பணிகளையும் செய்து வருகிறது.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: இராமகிருஷ்ண இயக்கத்தின் சமூகத் தொண்டுகள்: இவ்வியக்கம் கல்வி, உடல்நலம், கிராமப்புற வளர்ச்சி, மலைவாழ்மக்கள் முன்னேற்றம், இளைஞர் நலன் போன்றவற்றிற்காகப் பாடுபட்டுவருகிறது. இந்தியா முழுவதும் மருத்துவமனைகள், அறக்கட்டளைகள் நிறுவி, மக்கள் நலன் காக்கும் பணிகள், தாய்சேய் மருத்துவமனைகள், முதியோர், ஆதரவற்றோர் இல்லங்கள், செவிலியர் பயிற்சிப் பள்ளிகள் போன்றவற்றின் மூலம் சேவை செய்து வருகின்றன. இவ்வியக்கம் தம் நோக்கங்களை நி றைவேற் றி, எவற ்றை விரும்பத்தக்கதெனச் சிந்திக்கின்றதோ அதற்குரிய சஞ்சிகைகளை, பருவ இதழ்களை, நூல்களை, ஆண்டு பிரசுரங்களை அச்சடித்துப் பதிப்பித்து விற்றல் அல்லது இலவசமாக வழங்கல் போன்ற பணிகளையும் செய்து வருகிறது.
60) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
ⅰ) ஒரிசாவிலுள்ளச் சுந்தரவனப்பகுதியில் சூரிய ஒளியைப் பயன்படுத்தி, மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் தோன்றுவதற்கு முக்கிய பங்கு வகித்தது.
ⅱ) இந்தியா முழுவதும் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள், தொழிற்கல்வி பயிற்சி மையங்களை நிறுவிக் கல்வி வளர்ச்சிக்கு இன்றும் பாடுபட்டு வருகிறது.
a) ⅰ) மட்டும்
b) ⅱ) மட்டும்
c) ⅰ) மற்றும் ⅱ)
d) இரண்டும் தவறு
விளக்கம்: மேற் குவங்காளத்திலு ள்ள ச் சுந்தரவனப்பகுதியில் சூரிய ஒளியைப் பயன்படுத்தி, மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் தோன்றுவதற்கு முக்கிய பங்கு வகித்தது. இந்தியா முழுவதும் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள், தொழிற்கல்வி பயிற்சி மையங்களை நிறுவிக் கல்வி வளர்ச்சிக்கு இன்றும் பாடுபட்டு வருகிறது. இவ்வாறாக, இராமகிருஷ்ண இயக்கம் உலகெங்கும் உயர்ந்த பணிகளை ஆற்றிவருகிறது.
61) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) அன்பே தூய்மையானது, அன்பே அறிவு, அன்பே பலம் என்று விவேகானந்தர் இளைஞர்களுக்குப் போதித்தார்.
ⅱ) பெரும் சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளைக் கடந்தாக வேண்டும் அவை. ஏளனம், எதிர்ப்பு, அகங்காரம் என்பன.
ⅲ) உண்மைக்காக எதையும் துறக்கலாம்; ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கலாகாது.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: விவேகானந்தரின் பொன்மொழிகள்: உண்மையே தூய்மையானது, உண்மையே அறிவு, உண்மையே பலம் என்று விவேகானந்தர் இளைஞர்களுக்குப் போதித்தார். பெரும் சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளைக் கடந்தாக வேண்டும் அவை. ஏளனம், எதிர்ப்பு, அகங்காரம் என்பன. உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே, நீ சாதிக்கப் பிறந்தவன். துணிந்து நில், எதையும் வெல். உண்மைக்காக எதையும் துறக்கலாம்; ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கலாகாது. பொய்சொல்லித் தப்பிக்க நினைக்காதே, உண்மையைச் சொல்லி மாட்டிக்கொள். ஏனென்றால், பொய் வாழவிடாது, உண்மை சாகவிடாது.
62) பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவி சாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது என்று கூறியவர் யார்?
a) விவேகானந்தர்
b) அன்னிபெசன்ட்
c) திலகர்
d) இராம கிருஷ்ணர்
விளக்கம்: வீரர்களே, கன வு களி லி ரு ந் து விழித்தெழுங்கள்; தளைகளிலிருந்து விடுபடுங்கள். உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது. என்னிடம் வலிமைமிக்க நூறு இளைஞர்களைத் தாருங்கள். நான் வளமான பாரதத்தை உருவாக்கிக் காட்டுகிறேன். விழுமின், எழுமின் குறிக்கோளை அடையும்வரை நில்லாது உழைமின், பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவி சாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது என்று கூறினார்.
63) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) பிரம்மஞான சபை யை ஹெலினா பெட்ரோவ்னா பிளாவாட்ஸ்கி அம்மையாரும், கர்னல் ஆல்காட் என்பவரும் 1877-இல் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நிறுவினர்.
ⅱ) இச்சபை தியோஸ்சோபி இயக்கம் என்றும் அழைக்கப்படுகின்றது.
ⅲ) இச்சொல் இலத்தீன் வார்த்தைகளான தியோஸ், சோபாஸ் என்ற இரு சொற்களின் தொகுப்பேயாகும்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅱ) மட்டும்
c) ⅲ) மட்டும்
d) ⅰ), ⅲ)
விளக்கம்: பிரம்மஞான சபை (Theosophical Society): கி.பி. (பொ.ஆ.) 1875 பிரம்மஞான சபை ஹெலினா பெட்ரோவ்னா பிளாவாட்ஸ்கி அம்மையாரும், கர்னல் ஆல்காட் என்பவரும் 1875-இல் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நிறுவினர். இச்சபை தியோஸ்சோபி இயக்கம் என்றும் அழைக்கப்படுகின்றது. இச்சொல் கிரேக்க வார்த்தைகளான தியோஸ், சோபாஸ் என்ற இரு சொற்களின் தொகுப்பேயாகும்.
64) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) ‘தியோஸ்’ என்றால் ‘கடவுள்’ என்றும் ‘சோபாஸ்’ என்றால் ‘அறிவு’ என்றும் பொருள்படும்.
ⅱ) எனவே, கடவுள் பக்தி மற்றும் உண்மை அறிவைப் பெறுவதற்காகப் பிரம்மஞானசபை நிறுவப்பட்டது.
ⅲ) 1882-இல் இதன் தலைமையிடம் சென்னை அடையாறில் தொடங்கப்பட்டது.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: ‘தியோஸ்’ என்றால் ‘கடவுள்’ என்றும் ‘சோபாஸ்’ என்றால் ‘அறிவு’ என்றும் பொருள்படும். எனவே, கடவுள் பக்தி மற்றும் உண்மை அறிவைப் பெறுவதற்காகப் பிரம்மஞானசபை நிறுவப்பட்டது. 1882-இல் இதன் தலைமையிடம் சென்னை அடையாறில் தொடங்கப்பட்டது. இவ்வியக்கத்தின் வெற்றிக்கு அன்னிபெசன்ட் அம்மையார் பெரிதும் உதவினார். பின்னர் இவ்வியக்கத்திற்குத் தலைமைப் பொறுப்பையும் ஏற்றார்.
65) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) அன்னிபெசன்ட் கி. பி. (பொ. ஆ) 1847 – ஆம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்தார்.
ⅱ) இவர் 1899 – ஆம் ஆண்டு இந்தியா வந்தார்.
ⅲ) 1898 – ஆம் ஆண்டு காசியில் மத்திய இந்துக் கல்லூரியைத் தொடங்கினார்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: அன்னிபெசன்ட் கி. பி. (பொ. ஆ.): 1847 – ஆம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்தார். இவர் 1897 – ஆம் ஆண்டு இந்தியா வந்தார். 1898 – ஆம் ஆண்டு காசியில் மத்திய இந்துக் கல்லூரியைத் தொடங்கினார். பின்னாளில் அது பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகமாக வளர்ச்சிப் பெற்றது. சுயமரியாதையும் நம்பிக்கையும் பெருமையும் கொண்டதாக எதிர்காலத்திலும் இருந்தது. அம்மையார் உபநிடதங்களின் அறிவுச்சாரம், கீதை, வீரகாவியங்கள், புராணங்கள், தர்மசாத்திரங்கள், ஸ்மிருதிகள், கதைகள், தொல்மரபுகள் ஆகியவற்றை இந்து, பௌத்த சமயங்களிலிருந்து எடுத்து அதற்கு மிக எளிய உயர்ந்த விளக்கங்களை அளித்தார்.
66) பின்வருவனவற்றுள் பிரம்ம ஞானசபையின் நோக்கத்தை தேர்ந்தெடு.
ⅰ) உலக சகோதரத்துவத்தை வளர்த்தல்.
ⅱ) பழங்கால சமயம் , இலக்கியம், தத்துவம், விஞ்ஞானம் ஆகியவற்றை ஆழ்ந்து கற்றல்.
ⅲ) இயற்கை நியதிகளை ஆராய்ந்து மனிதனுக்குள்ளே மறைந்து கிடக்கும் ஆன்மிக ஆற்றல்களை வெளிக்கொண்டு வருவதே இச்சபையின் முக்கிய நோக்கமாகும்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: பிரம்ம ஞானசபையின் நோக்கம்: உலக சகோதரத்துவத்தை வளர்த்தல்.
பழங்கால சமயம் , இலக்கியம், தத்துவம், விஞ்ஞானம் ஆகியவற்றை ஆழ்ந்து கற்றல். இயற்கை நியதிகளை ஆராய்ந்து மனிதனுக்குள்ளே மறைந்து கிடக்கும் ஆன்மிக ஆற்றல்களை வெளிக்கொண்டு வருவதே இச்சபையின் முக்கிய நோக்கமாகும்.
67) பிரம்ம ஞானசபை தொடர்பான பின்வருவனவற்றுள் தவறான விடையைத்தேர்ந்தெடு.
a) இந்து சமயக்கோட்பாடுகளான கர்மவினை, மறுபிறவி, ஆன்மாவின் அழியாத இயல்பு, யோகநிலைகள், கடவுளின் அவதாரங்கள் போன்றவை இந்துக்களின் அகக்கண்களைத் திறக்கச் செய்தன.
b) அறிவியல் வளர்ச்சியால் ஏற்பட்ட மேலைநாட்டுப் பொருளாதாரக் கோட்பாட்டை ஆதரித்தது.
c) வேதகால பெருமைகளை நிகழ்காலத்தில் கொண்டு வருவதையே நோக்கமாகக் கொண்டு இயங்கியது.
d) இவ்வியக்கம் சாதி, இனம், ஆண்-பெண் பாகுபாடு போன்றவற்றை எதிர்த்தது.
விளக்கம்: இந்து சமயக்கோட்பாடுகளான கர்மவினை, மறுபிறவி, ஆன்மாவின் அழியாத இயல்பு, யோகநிலைகள், கடவுளின் அவதாரங்கள் போன்றவை இந்துக்களின் அகக்கண்களைத் திறக்கச் செய்தன. அறிவியல் வளர்ச்சியால் ஏற்பட்ட மேலைநாட்டுப் பொருளாதாரக் கோட்பாட்டை வன்மையாகக் கண்டித்தது. வேதகால பெருமைகளை நிகழ்காலத்தில் கொண்டு வருவதையே நோக்கமாகக் கொண்டு இயங்கியது. இவ்வியக்கம் சாதி, இனம், ஆண்-பெண் பாகுபாடு போன்றவற்றை எதிர்த்தது.
68) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) சாதிஒழிப்பு, பெண்கல்வி, நாட்டுவிடுதலை போன்றவற்றிற்காக, நாடு முழுவதும் சொற்பொழிவுகளை அன்னிபெசன்ட் நிகழ்த்தினார்.
ⅱ) இவருடைய வீரமிக்க உணர்ச்சிமிக்க சொற்பொழிவுகள் ‘இந்தியனே வணக்கம்’ என்னும் நூலாக வெளியிடப்பட்டது.
ⅲ) 1914-இல் ‘பொது வாழ்வு’ என்னும் வார வெளியீட்டையும் பின் ‘நவ இந்தியா’ என்ற நாளிதழையும் தொடங்கினார்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: பிரம்மஞான சபையின் சமூகத்தொண்டுகள்: சாதிஒழிப்பு, பெண்கல்வி, நாட்டுவிடுதலை போன்றவற்றிற்காக, நாடு முழுவதும் சொற்பொழிவுகளை அன்னிபெசன்ட் நிகழ்த்தினார். இவருடைய வீரமிக்க உணர்ச்சிமிக்க சொற்பொழிவுகள் ‘இந்தியனே விழித்தெழு’ என்னும் நூலாக வெளியிடப்பட்டது. 1914-இல் ‘பொது வாழ்வு’ என்னும் வார வெளியீட்டையும் பின் ‘நவ இந்தியா’ என்ற நாளிதழையும் தொடங்கினார். இவ்விரு பத்திரிகைகளும் பகுத்தறிவு வாதங்களையும், மனிதாபிமான அறங்களையும் எடுத்துக்கூறி இந்தியாவிற்குத் தன்னாட்சி வேண்டுமென வலியுறுத்தின.
69) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) பிரம்ம ஞானசபையின் கிளைகள் உலகெங்கும் உள்ளன.
ⅱ) மேலை நாட்டுச் சமயங்களில் காணப்படும் அறிவுக் கருவூலங்களின் மதிப்பை வெளிக்கொணர இச்சபை பெரும் பங்காற்றியது
ⅲ) இச்சபை மறைவியல் கல்விப் பணியை இந்தியாவில் மட்டுமின்றி மேலை நாட்டிலும் பரவச்செய்தது.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: பிரம்ம ஞானசபையின் கிளைகள் உலகெங்கும் உள்ளன. கீழை நாட்டுச் சமயங்களில் (இந்துசமயம், பௌத்தசமயம்) காணப்படும் அறிவுக் கருவூலங்களின் மதிப்பை வெளிக்கொணர இச்சபை பெரும் பங்காற்றியது. இச்சபை மறைவியல் கல்விப் பணியை இந்தியாவில் மட்டுமின்றி மேலை நாட்டிலும் பரவச்செய்தது. பிரம்மஞான சபை பல கல்வி நிறுவனங்களை நிறுவியுள்ளது. அவற்றில் ஆல்காட் நினைவுப் பள்ளி (The Olcott Memorial School). ஆல்காட் நினைவு இடைநிலைப் பள்ளி (The Olcott Memorial High School) போன்றவையாகும். இங்கு மாணவர்களுக்குக் கல்வி, சீருடைகள், புத்தகம், இலவச உணவு போன்றவை வழங்கப்படுகின்றன. மேலும், பால்ய விவாகத்தடை, மதுவிலக்கு, அறம் சார்ந்த சமயக் கல்வியைப் பள்ளியில் போதித்தல், மகளிர் கல்வியைப் பரப்புதல், எழுத்தறிவின்மையை அகற்றுதல் மற்றும் பர்தாமுறையை ஒழித்தல் போன்ற அரும்பணிகளை இவ்வியக்கம் செய்து வந்தது.
70) இராமலிங்க அடிகளார் குறித்த பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) ஆன்மநேய ஒருமைப்பாடு எங்கும் தழைக்க, இவ்வுலகமெல்லா ம் உண்மை நெறி பெற்றிட எவருக்கும் இறைவன் ஒருவரே, எவ்விடத்தும் எவ்வுயிருக்கும் இலங்கும் சிவம் ஒன்றே அவரே அருட்பெருஞ்சோதி என்று கூறினார்.
ⅱ) திரு அருட்பிரகாச வள்ளலார் என்று போற்றப்படும் வடலூர் இராமலிங்க அடிகளார் 1825-அக்டோபர் 5-ம் நாள் இராமையா – சின்னம்மையாருக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார்.
ⅲ) சிறு வயதில் இருந்தே இறைவனால் ஆட்கொள்ளப் பெற்று நூற்றுக்கணக்கான அருட்பாடல்களை அருளினார்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: சமரச சுத்த சன்மார்க்க சங்கம் இராமலிங்க அடிகளார் கி.பி. (பொ.ஆ.) 1823-1874:
ஆன்மநேய ஒருமைப்பாடு எங்கும் தழைக்க, இவ்வுல கமெல்லா ம் உண்மை நெறி பெற்றிட எவருக்கும் இறைவன் ஒருவரே, எவ்விடத்தும் எவ்வுயிருக்கும் இலங்கும் சிவம் ஒன்றே அவரே அருட்பெருஞ்சோதி என்று கூறினார். திரு அருட்பிரகாச வள்ளலார் என்று போற்றப்படும் வடலூர் இராமலிங்க அடிகளார் 1823-அக்டோபர் 5-ம் நாள் இராமையா – சின்னம்மையாருக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார். சிறு வயதில் இருந்தே இறைவனால் ஆட்கொள்ளப் பெற்று நூற்றுக்கணக்கான அருட்பாடல்களை அருளினார். அவ்வாறு அருளிய பாடல்களின் தொகுப்பே திருவருட்பா ஆகும்.
71) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) வள்ளலார் தாம் கண்டு அடைந்த வழியை நாம் எல்லாரும் பெறவே 1865 – இல் சத்திய தரும சாலையை நிறுவினார்.
ⅱ) இச்சன்மார்க்க வழி மூலமாக நாம் பெறவேண்டிய அனைத்து ஆன்ம பயனும் பெறலாம்.
ⅲ) மனிதனைத் துன்பத்திலிருந்து மீட்டு ஜீவகாருண்ய ஒழுக்கத்தின் வழிநடத்தி, மனிதன் தெய்வ நிலையை அடையச் செய்விப்பதே சமரசசுத்தசன்மார்க்க சங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: வள்ளலார் தாம் கண்டு அடைந்த வழியை நாம் எல்லாரும் பெறவே 1865 – இல் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். இச்சன்மார்க்க வழி மூலமாக நாம் பெறவேண்டிய அனைத்து ஆன்ம பயனும் பெறலாம். மேலும் இந்த ஊன் உடம்பு ஒளி உடம்பாகி ஒளிரும் என்கிறார். மனிதனைத் துன்பத்திலிருந்து மீட்டு ஜீவகாருண்ய ஒழுக்கத்தின் வழிநடத்தி, மனிதன் தெய்வ நிலையை அடையச் செய்விப்பதே சமரசசுத்தசன்மார்க்க சங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.
72) வள்ளலார் குறித்த கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
ⅰ) சாதிகளிலோ மதங்களிலோ பேதமுற்று அலைந்து வீணே அழியும் இந்த உலகத்தவருக்கு ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை என்னும் சாதனத்தைக் கொண்டு வந்தவர்.
ⅱ) அமைதியான இயற்கையை ஒட்டிய வாழ்வு பெறவும் நிலையான அழியாத மெய்வாழ்வு பெறவும் வழிவகுத்துக் கொடுத்துள்ளார்.
a) ⅰ) மட்டும்
b) ⅱ) மட்டும்
c) ⅰ) மற்றும் ⅱ)
d) இரண்டும் தவறு
விளக்கம்: சாதிகளிலோ மதங்களிலோ பேதமுற்று அலைந்து வீணே அழியும் இந்த உலகத்தவருக்கு ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை என்னும் சாதனத்தைக் கொண்டு வந்தவர். அமைதியான இயற்கையை ஒட்டிய வாழ்வு பெறவும் நிலையான அழியாத மெய்வாழ்வு பெறவும் வழிவகுத்துக் கொடுத்துள்ளார்.
73) கீழ்க்கண்டவற்றுள் வள்ளலார் பதிப்பித்த நூல்களைத்தேர்ந்தெடு.
ⅰ) சின்மய தீபிகை
ⅱ) ஒழிவிலொடுக்கம்
ⅲ) தொண்டை மண்டலச் சதகம்
ⅳ) மனுமுறை கண்ட வாசகம்
a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)
b) ⅰ), ⅱ), ⅲ)
c) ⅱ), ⅲ)
d) ⅱ), ⅲ), ⅳ)
விளக்கம்: இராமலிங்க அடிகளாரின் படைப்புகள்: வள்ளலார் பதிப்பித்தவை: சின்மய தீபிகை, ஒழிவிலொடுக்கம், தொண்டை மண்டலச் சதகம். உரைநடைகள்: மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம்,
74) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) வள்ளலார் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகின்றது.
ⅱ) இஃது ஏழு திருமுறைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது
ⅲ) இராமலிங்க அடிகளாரின் தலைமைச் சீடரானத் தொழுவூர் வேலாயுதனாரால் முதல் நான்கு திருமுறைகள் வெளியிடப்பட்டன
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: செய்யுள்: திருவருட்பா: வள்ளலார் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகின்றது. இஃது ஆறு திருமுறைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. இராமலிங்க அடிகளாரின் தலைமைச் சீடரானத் தொழுவூர் வேலாயுதனாரால் முதல் நான்கு திருமுறைகள் வெளியிடப்பட்டன. பின்னர் ஐந்தாம், ஆறாம் திருமுறைகள் வெளியிடப்பட்டன.
75) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே, அவற்றைத் துன்புறுத்தக் கூடாது.
ⅱ) சிறு தெய்வ வழிபாடு வேண்டும்.
ⅲ) பசித்தவர்களுக்குச் சாதி, சமயம், இனம், மொழி போன்ற வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: வள்ளலாரின் சமய நெறிகள்: எவ்வுயிரையும் கொல்லக்கூடாது. எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே, அவற்றைத் துன்புறுத்தக் கூடாது. சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலியிடுதல் கூடாது. பசித்தவர்களுக்குச் சாதி, சமயம், இனம், மொழி போன்ற வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும். கடவுள் ஒருவரே அவர் அருட்பெருஞ்ஜோதி ஆவார். மனித இனத்திற்குச் செய்யும் தொண்டே முக்தியை அடைவதற்கான வழி. இறைவனை அருட்பெருஞ்ஜோதியாக உணர்ந்து, குறுகிய சமய எல்லைக் கோடுகளைக் கடந்து, சமய ஒருமைப்பாடு காணவேண்டும்.
76) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) இசைக்கருவிகள் தவிர்த்து மனம் ஒன்றிடல் வேண்டும்
ⅱ) சன்மார்க்க ஒழுக்கநெறிகளான செயல் ஒழுக்கம், ஜீவஒழுக்கம், ஆன்மஒழுக்கம் போன்றவை முக்கிய ஒழுக்கங்களாகும்.
ⅲ) உருவ வழிபாடும் கிராம தேவதைகள் வழிபாடும் தேவை.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: இசைக்கருவிகள் தவிர்த்து மனம் ஒன்றிடல் வேண்டும். சன்மார்க்க ஒழுக்கநெறிகளான செயல் ஒழுக்கம், ஜீவஒழுக்கம், ஆன்மஒழுக்கம் போன்றவை முக்கிய ஒழுக்கங்களாகும். மனிதத் தொண்டாற்றல் மூலம் வாழ்வில் முழுப் பயனைப்பெற்று இறையோடு ஒன்றவேண்டும். சமயத்தில் சடங்குகள் பொருளற்றவை என்றுகூறி, வைதீக முறையைத் தவிர்த்து வழிபட வேண்டும். உருவ வழிபாடும் கிராம தேவதைகள் வழிபாடும் தேவையற்றவை.
77) வள்ளலார் குறித்த பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) ச மூகப்பிரிவும் சா தி ப்பி ரி வு ம் பொருளற்றவை, அறியாமையின் வெளித்தோற்றங்களைச் சுட்டிக்காட்டி, சமூக அமைப்பில் மாற்றம் தேவையென்றார்.
ⅱ) ஜீவகாருண்ய ஒழுக்கம் மூலம் ஆன்மநேய ஒருமைப்பாட்டை உலகத்தோர் அடையலாம் என்றார். ⅲ) மனிதப் பிறவிகளிடத்தும் பிற உயிர்களிடத்தும் அன்பு காட்டவேண்டும் என்றார்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: சமூக நெறிகள்: ச மூகப்பிரிவும் சா தி ப்பி ரி வு ம் பொருளற்றவை, அறியாமையின் வெளித்தோற்றங்களைச் சுட்டிக்காட்டி, சமூக அமைப்பில் மாற்றம் தேவையென்றார். ஜீவகாருண்ய ஒழுக்கம் மூலம் ஆன்மநேய ஒருமைப்பாட்டை உலகத்தோர் அடையலாம் என்றார். மனிதப் பிறவிகளிடத்தும் பிற உயிர்களிடத்தும் அன்பு காட்டவேண்டும் என்றார்.
78) பின்வருவனவற்றுள் வள்ளலார் வழங்கிய இளம் சமூகத்தினருக்கான நெறிகளை தேர்ந்தெடு.
ⅰ) நல்லோர் மனத்தை நடுங்கச் செய்யாதே
ⅱ) பசித்தோர் முகத்தைப் பார்த்திராதே
ⅲ) குருவை வணங்க, தயங்கி நிற்காதே
ⅳ) வெயிலுக்கு ஒதுங்க, விருட்சம் அழிக்காதே
a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)
b) ⅰ), ⅱ), ⅲ)
c) ⅱ), ⅲ)
d) ⅱ), ⅲ), ⅳ)
விளக்கம்: இளம் சமூகத்தினருக்கான நெறிகள்:
நல்லோர் மனத்தை நடுங்கச் செய்யாதே
பசித்தோர் முகத்தைப் பார்த்திராதே
குருவை வணங்க, தயங்கி நிற்காதே
வெயிலுக்கு ஒதுங்க, விருட்சம் அழிக்காதே
தாய் மொழியைத் தள்ளி நடக்காதே என்று கூறினார்.
இராமலிங்கஅடிகள் மனிதருள்ளும் விலங்குகளினுள்ளும் செடி, கொடிகளினுள்ளும் ஆத்மாவின் ஒளியைக் கண்டார். மறைகளால் கூறப்படும் வேள்வி முறைகளும் மற்ற சடங்குகளுமில்லாமல் அன்பெனும் உள்ளத்தால் ஆண்டவனை அடையலாம் என்றும் அவன் ஒளிமயமானவன் என்று கூறினார். சாதி சமய வேறுபாடின்றி சமரசசுத்தசன்மார்க்க நோக்கை மக்களிடையே பரவச் செய்தார்.
79) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
ⅰ) 19-ஆம் நூற்றாண்டில் தோன்றிய ஞான குருக்களில் நாராயணகுருவும் ஒருவர்.
ⅱ) இவர் கேரளாவில் உள்ள தி ரு வ ன ந்த பு ர த் தி ற் கு அருகே செம்பழுந்தி கிராமத்தில் பிறந்தவர்.
ⅲ) நானு ஆசான் என்று அழைக்கப்பட்டார்.
ⅳ) ஸ்ரீ நாராயணகுரு திருக்குறள், ஈசோ வாஸ்யோ உபநிடதம், ஒளிவில் ஒடுக்கம் ஆகிய நூல்களை தெலுங்கில் மொழிபெயர்த்துள்ளார்.
a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)
b) ⅰ), ⅱ), ⅲ)
c) ⅱ), ⅲ)
d) ⅱ), ⅲ), ⅳ)
விளக்கம்: பிற சீர்திருத்தவாதிகள்
ஸ்ரீ நாராயணகுரு கி.பி. (பொ.ஆ.) 1856 – 1928:
19-ஆம் நூற்றாண்டில் தோன்றிய ஞான குருக்களில் நாராயணகுருவும் ஒருவர். இவர் கேரளாவில் உள்ள தி ரு வ ன ந்த பு ர த் தி ற் கு அருகே செம்பழுந்தி கிராமத்தில் பிறந்தவர். பொதுவாக, நானு ஆசான் என்று அழைக்கப்பட்டார். ஆசான் என்றால் ஆசிரியர் என்று பொருள்படும். ஸ்ரீ நாராயணகுரு திருக்குறள், ஈசோ வாஸ்யோ உபநிடதம், ஒளிவில் ஒடுக்கம் ஆகிய நூல்களை மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ளார். அவரது காலத்தில் வாழ்ந்த மக்கள் இரண்டு பிரிவாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். அவர்கள் அவர்ணர், சவர்ணர் என்றும் குறிப்பிடப்பட்டனர்.
80) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) அவர்ணர்கள் கல்வி கற்கக்கூடாது, சாஸ்திரங்களைக் கற்கக்கூடாது, கோயில்களை நிறுவக்கூடாது, பூஜைகளைச் செய்யக்கூடாது என்ற சவர்ணர்களின் அடக்குமுறைக்கு முடிவு கட்ட நாராயணகுரு உறுதி பூண்டார்.
ⅱ) திருவனந்தபுரத்திற்கு அருகில் அருவிப்புரத்தில் கோயில் கட்டி சவர்ணர்கள் மட்டுமே பிரதிஷ்டை செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டை உடைத்தெறிந்தார்.
ⅲ) 1908-இல் நாராயண தர்மபரிபாலன யோகம் என்ற அமைப்பை நிறுவி இதன் மூலம் ஆன்மிகம், கல்வி, சமூகத்தொண்டு ஆகிய பணிகளைச் செய்துவந்தார்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: அவர்ணர்கள் கல்வி கற்கக்கூடாது, சாஸ்திரங்களைக் கற்கக்கூடாது, கோயில்களை நிறுவக்கூடாது, பூஜைகளைச் செய்யக்கூடாது என்ற சவர்ணர்களின் அடக்குமுறைக்கு முடிவு கட்ட நாராயணகுரு உறுதி பூண்டார். எனவே, திருவனந்தபுரத்திற்கு அருகில் அருவிப்புரத்தில் கோயில் கட்டி சவர்ணர்கள் மட்டுமே பிரதிஷ்டை செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டை உடைத்தெறிந்தார். கி. பி. (பொ.ஆ.) 1903-இல் நாராயண தர்மபரிபாலன யோகம் என்ற அமைப்பை நிறுவி இதன் மூலம் ஆன்மிகம், கல்வி, சமூகத்தொண்டு ஆகிய பணிகளைச் செய்துவந்தார்.
81) ஸ்ரீ நாராயண குரு தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) ஈழவ சமுதாயத்தில் காணப்படும் தீண்டாமை முறையை ஒழித்து, அனைத்து சமூகத்தையும் சமநிலைப்படுத்தப் பாடுபட்டார்.
ⅱ)எண்ணற்ற கோயில்களைக் கட்டி, அனைத்து மக்களையும் வழிபடச் செய்தார்.
ⅲ) சமுதாயப் பிரச்சினைகளான திருமணச் சடங்குகள், மதவழிபாட்டுமுறையை எதிர்த்துப் போராடினார்
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: ஸ்ரீ நாராயண குருவின் சமூகத் தொண்டுகள்: ஈழவ சமுதாயத்தில் காணப்படும் தீண்டாமை முறையை ஒழித்து, அனைத்து சமூகத்தையும் சமநிலைப்படுத்தப் பாடுபட்டார். எண்ணற்ற கோயில்களைக் கட்டி, அனைத்து மக்களையும் வழிபடச் செய்தார். சமுதாயப் பிரச்சினைகளான திருமணச் சடங்குகள், மதவழிபாட்டுமுறையை எதிர்த்துப் போராடினார். இவருடைய கருத்து – ஒரே சாதி, ஒரே சமயம், மனித குலத்திற்கு ஒரே கடவுள் என்பதாகும் (One caste one religion and one god for mankind).
82) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
ⅰ) 1820-1891 வங்காளத்தில் சமூக-சமய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் ஈஸ்வர சந்திர வித்யாசாகர் ஆவார்.
ⅱ) பொதுவாக வங்காளத்தில் வைதீக இந்துக் குடும்பத்தில் காணப்பட்ட சமூகக் கொடுமைகளை எதிர்த்தவர்.
ⅲ) 1856-இல் கொண்டு வரப்பட்ட விதவைகள் மறுமணச்சட்டத்திற்க்கு காரணமாயிருந்தவர்.
ⅳ) இவர் இந்தி அகரவரிசையை மறு உருவாக்கம் செய்தார்.
a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)
b) ⅰ), ⅱ), ⅲ)
c) ⅱ), ⅲ)
d) ⅱ), ⅲ), ⅳ)
விளக்கம்: ஈஸ்வர சந்திர வித்யாசாகர்: கி.பி. (பொ.ஆ.) 1820-1891 வங்காளத்தில் சமூக-சமய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் ஈஸ்வர சந்திர வித்யாசாகர் ஆவார். 1820-இல் வங்காளத்தில் பிறந்தவர். இவர் எழுத்தாளர், தத்துவஞானி, கல்வியாளர் மற்றும் சீர்திருத்தவாதியாகத் திகழ்ந்தவர். பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப்பாடுபட்டவர். பொதுவாக வங்காளத்தில் வைதீக இந்துக் குடும்பத்தில் காணப்பட்ட சமூகக் கொடுமைகளைஎதிர்த்தவர். 1856-இல் கொண்டு வரப்பட்ட விதவைகள் மறுமணச்சட்டத்திற்க்கு காரணமாயிருந்தவர். இவர் வங்க அகரவரிசையை மறு உருவாக்கம் செய்தார். இவர் புகழைப் போற்றும் விதமாக வங்காளத்தில் ஹீக்ளி பாலத்திற்கு வித்யாசாகர் பாலம் என்று பெயர் சூட்டப்பட்டது.
83) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) மறுமணத்திற்கு ஈஸ்வர சந்திர வித்தியாசாகரும், மகாதேவ் ரானடேவும் விதவைகளுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.
ⅱ) இந்நிலையில் விதவைகள் மறுமணச்சட்டம் 1856-இல் டல்ஹௌசி பிரபுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கானிங் பிரபு ஆட்சிக்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
ⅲ) இதன்படி, 1858 விதி எண் XV-ன் படி இந்து விதவைகள் மறுமணச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: மறுமணத்திற்கு ஈஸ்வர சந்திர வித்தியாசாகரும், மகாதேவ் ரானடேவும் விதவைக ளுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். இந்நிலையில் விதவைகள் மறுமணச்சட்டம் 1856-இல் டல்ஹௌசி பிரபுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கானிங் பிரபு ஆட்சிக்காலத்தில் இதன்படி, 1856 விதி எண் XV-ன் படி இந்து விதவைகள் மறுமணச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
84) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) ஜோதிபா பூலே புத்வார் பீத் என்ற இடத்தில் பெண்கள் பள்ளியைத் தொடங்கினார்.
ⅱ) அனைத்துப் பிரிவினருக்கும் பொதுவான அனாதை இல்லங்களைத் தோற்றுவித்தார்.
ⅲ) ஹண்டர் கல்விக் குழுவிடம் தாழ்த்தப்பட்டோருக்குக் கல்வி அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அறிக்கை சமர்ப்பித்தார்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: ஜோதிபா பூலே கி.பி. (பொ.ஆ.) 1827-1890:
ஜோதிபா பூலே மராத்திய மாநிலத்தில் பூனாவில் பி றந்த வ ர் . பூ த் த ொ டு க் கு ம் கு டு ம்ப த் தி ல் பிறந்தமையால் பூலே என்று அழைக்கப்பட்டார். இவர் புத்வார் பீத் என்ற இடத்தில் பெண்கள் பள்ளியைத் தொடங்கினார். ஸ்காட்டிஷ் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்த பூலே விவசாயிகளுக்காக இரவு நேரப்பள்ளியைத் தொடங்கினார். அனைத்துப் பிரிவினருக்கும் பொதுவான அனாதை இல்லங்களைத் தோற்றுவித்தார். ஹண்டர் கல்விக் குழுவிடம் தாழ்த்தப்பட்டோருக்குக் கல்வி அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அறிக்கை சமர்ப்பித்தார். 1873-இல் சத்தியசோதக்சமாஜம் என்ற அமைப்பை தோற்றுவித்தார். இதற்கு உண்மை அறியும் சங்கம் என்று பொருள். இவ்வமைப்பின் முக்கிய நோக்கம் பெண்கல்வி, குழந்தைத் திருமணத்தைத் தடை செய்தல், விதவைகள் மறுமணம், அனாதைப் பாதுகாப்பு, அனைத்து மக்களுக்கும் சமஉரிமை பெறவும், மனித உரிமையைப் பாதுகாக்கவும், மக்களுக்கு சமூகநீதி கிடைக்கவும் வழிவகை செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.
85) அயோத்திதாசப் பண்டிதர் தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) இவர் த மி ழ் – பௌத்த மறுமலர்ச்சி இ யக்கத்தைத் தோற்றுவித்தவர் ஆவார்.
ⅱ) இயற்பெயர் காத்தவராயன் என்பதாகும்.
ⅲ) அத்வைத கோட்டுபாடுகளில் நம்பிக்கை கொண்டவர்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: அயோத்திதாசப் பண்டிதர் கி.பி. (பொ.ஆ.) 1845-1914:
நவீன இந்தியாவின் சீர்திரு த்ததி க ளு ள் அயோத்திதாசப்பண் டி த ரு ம் ஒருவராவார். இவர் த மி ழ் – பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்தைத் தோற்றுவித்தவர் ஆவார். இவருடைய இயற்பெயர் காத்தவராயன் என்பதாகும். அத்வைத கோட்டுபாடுகளில் நம்பிக்கை கொண்டவர். வாழ்க்கையின் நடைமுறையில் உள்ள சம்பிரதாயங்களை எதிர்த்தவர். பௌத்த சமயக் கோட்பாடுகளான அன்பு, கருணை, சகோதரத்துவம் போன்றவை சமூகத்தில் மலரப் பாடுபட்டார்.
86) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) 1907-இல் இராய புரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு அன்றைய காலணா மதிப்பில் ஒரு பைசாத் தமிழன் என்ற செய்தித்தாளை அயோத்திதாசப் பண்டிதர் வெளியிட்டார்.
ⅱ) இச்செய்தித்தாளில் பௌத்தக் கோட்பாடுகள், அரசின் செய்திகள், பெண்கல்வி, வானிலை, பண்டங்கள் விலை, விழிப்புணர்வுச் செய்திகள் போன்றவை வெளியிடப்பட்டன.
ⅲ) பின் ஒரு பைசாத் தமிழன் செய்தித்தாள் பெயர் மாற்றம் செய்யப்பட்டுத் தமிழன் என்ற பெயரோடு வெளிவந்தது.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: 1907-இல் இராயப்பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு அன்றைய காலணா மதிப்பில் ஒரு பைசாத் தமிழன் என்ற செய்தித்தாளை வெளியிட்டார். இச்செய்தித்தாளில் பௌத்தக் கோட்பாடுகள், அரசின் செய்திகள், பெண்கல்வி, வானிலை, பண்டங்கள் விலை, விழிப்புணர்வுச் செய்திகள் போன்றவை வெளியிடப்பட்டன. பின் ஒரு பைசாத் தமிழன் செய்தித்தாள் பெயர் மாற்றம் செய்யப்பட்டுத் தமிழன் என்ற பெயரோடு வெளிவந்தது. இச்செய்தித்தாள் பெண்கல்விக்கு முக்கியத்துவம் அளித்து பெண்சமுதாய முன்னேற்றத்திற்குக் காரணமாயிற்று.
87) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) அயோத்திதாசப் பண்டிதர், வல்லக்காளத்தி அயோத்திதாசப்பண்டிதரிடம் (1836-1900) கல்வி கற்றார்.
ⅱ) தமிழ், சித்த மருத்துவம், தத்துவம் ஆகியவை பயின்றார்.
ⅲ) தம் குருவின்மீது கொண்ட மதிப்பால் காத்தவராயன் என்ற தமது இயற்பெயரை அயோத்திதாசர் என மாற்றிக்கொண்டார்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: அயோத்திதாசப் பண்டிதர், வல்லக்காளத்தி அயோத்திதாசப்பண்டிதரிடம் (1836-1900) கல்விகற்றார். தமிழ், சித்த மருத்துவம், தத்துவம் ஆகியவை பயின்றார். தம் குருவின்மீது கொண்ட மதிப்பால் காத்தவராயன் என்ற தமது இயற்பெயரை அயோத்திதாசர் என மாற்றிக்கொண்டார்.
88) கந்துகூரி வீரேசலிங்கம் தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) “தெலுங்கு மறுமலர்ச்சி இயக்கத்தின் தந்தை“ என்று அழைக்கப்பட்டவர்.
ⅱ) இவர் 1850-இல் தெலுங்கானாவில் உள்ள ராஜமுந்திரி என்ற இடத்தில் பிறந்தவர்.
ⅲ) பெண்கல்வி, வரதட்சணை ஒழிப்பு, விதவைத் திருமணம் போன்றவற்றை ஆதரித்துச் சீர்திருத்தங்களைத் தொடங்கி வைத்தார்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: கந்துகூரி வீரேசலிங்கம் கி.பி. (பொ.ஆ.) 1848-1919:
“தெலுங்கு மறுமலர்ச்சியின் இயக்கத்தின் தந்தை“ என்று அழைக்கப்பட்டவர். இவர் 1848-இல் ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரி என்ற இடத்தில் பிறந்தவர். இவர் சமூக சீர்திருத்தவாதி மற்றும் எழுத்தாளர் ஆவார். பெண்கல்வி, வரதட்சணை ஒழிப்பு, விதவைத் திருமணம் போன்றவற்றை ஆதரித்துச் சீர்திருத்தங்களைத் தொடங்கி வைத்தார். பெண்கல்வியை ஊக்குவிக்க 1876-இல் ‘விவேகவர்த்தினி’ என்ற செய்திதாளைத் தொடங்கினார்.
89) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) கந்துகூரி வீரேசலிங்கம் 1874-இல் பொதுப்பள்ளியை நிறுவி சமூக முன்னேற்றம் அடையச் செய்தார்.
ⅱ) 1908-இல் ஹித்காரினி பள்ளியையும் தொடங்கினார்.
ⅲ) தெலுங்கானாவில் விதவைகள் திருமணத்தை 1881-இல் நடத்திவைத்தார்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: 1874-இல் பொதுப்பள்ளியை நிறுவி சமூக முன்னேற்றம் அடையச் செய்தார். 1908-இல் ஹித்காரினி பள்ளியையும் தொடங்கினார். ஆந்திராவில் விதவைகள் திருமணத்தை 1881-இல் நடத்திவைத்தார்.
90) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) தந்தைப் பெரியார் என்று போற்றப்படும் ஈ.வெ. ராமசாமி 18789-ஆம் ஆண்டு நவம்பர் 17-இல் ஈரோட்டில் பிறந்தவர்.
ⅱ) பெரியாரால் சுயமரியாதை இயக்கம் 1925-இல் தோற்றுவிக்கப்பட்டது.
ⅲ) பெரியார் 1929 முதல் 1932 வரை மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ் போன்ற நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு தம்முடைய சுயமரியாதைக் கொள்கைகளை விளக்கிக்கூறினார்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: ஈ.வெ. ராமசாமி கி.பி. (பொ.ஆ.) 1879-1973: தந்தைப் பெரியார் என்று போற்றப்படும் ஈ.வெ. ராமசாமி 1879-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-இல் ஈரோட்டில் பிறந்தவர். குடியரசு, புரட்சி, விடுதலை போன்ற இதழ்கள் மூலம் தமது சுயமரியாதைக் கொள்கைகளை வெளியிட்டார். பெரியாரால் சுயமரியாதை இயக்கம் 1925-இல் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வியக்கத்தின் மூலம் மூடப்பழக்க வழக்கங்களைச் சமூகத்திலிருந்து அகற்றுவது, தீண்டாமை, மூடநம்பிக்கைகள், பெண்களைத் தாழ்வாக கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து குரல் கொடுத்தார். பெரியார் 1929 முதல் 1932 வரை மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ் போன்ற நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு தம்முடைய சுயமரியாதைக் கொள்கைகளை விளக்கிக்கூறினார். இவருடைய சமுதாய பங்களிப்பைப் பாராட்டி யுனஸ்கோ (UNESCO) நிறுவனம் (1973) பெரியாரைப் ‘புத்துலக தொலைநோக்காளர்‘ தென்னிந்தியாவின் சாக்ரடிஸ் எனப் பாராட்டி விருது வழங்கியது.
91) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) பெரியார் கேரளாவில் உள்ள வைக்கம் என்ற இடத்தில் தீண்டாமை ஒழிப்பிற்காகத் திருவாங்கூர் மன்னருக்கு எதிராகப் போராடி வெற்றிகண்டார்.
ⅱ) பெரியார் தமது பகுத்தறிவு, சுயமரியாதைக் கருத்துகளைப் பரப்புவதற்காகத் தமிழகமெங்கும் நாடகங்கள், ஊர்வலங்கள், போராட்டங்கள் ஆகியவற்றை நடத்தினார்.
ⅲ) பெரியாரால் உருவாக்கப்பட்ட சுயமரியாதைத் திருமண முறை எல்லோராலும் போற்றப்பட்டது.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: பெரியாரின் முதலாவது சமுதாயப் போராட்டம்: கேரளாவில் உள்ள வைக்கம் என்ற இடத்தில் தீண்டாமை ஒழிப்பிற்காகத் திருவாங்கூர் மன்னருக்கு எதிராகப் போராடி வெற்றிகண்டார். கலப்புத் திருமணத்தையும் சீர்திருத்த திருமணத்தையும் ஆதரித்தார். பெயருக்குப் பின்னால் வரும் சாதியின் பெயரை ஒழிக்கப் பாடுபட்டார். பெரியார் தமது பகுத்தறிவு, சுயமரியாதைக் கருத்துகளைப் பரப்புவதற்காகத் தமிழகமெங்கும் நாடகங்கள், ஊர்வலங்கள், போராட்டங்கள் ஆகியவற்றை நடத்தினார். பெரியாரால் உருவாக்கப்பட்ட சுயமரியாதைத் திருமண முறை எல்லோராலும் போற்றப்பட்டது. சமூகநீதி, சமத்துவம், பெண்கல்வி, பெண்விடுதலை, வரதட்சணை ஒழிப்பு போன்றவற்றிற்காகப் போராடியுள்ளார். தேவதாசி முறையை எதிர்த்துப் போராடினார். சமூகத்தில் சமத்துவம் காண விரும்பினார்.
92) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) இந்திய நாட்டின் பாரம்பரியப் பெருமைகளை உலகறியச் செய்யும் வண்ணம் வேத நூல்களையு ம் , வேதங்களையும், உபநிடதங்களையும், சமஸ்கிருத மொழியிலிருந்து தங்கள் மொழியில் கீழை நாட் டி ன ர் மொழிபெயர்த்தனர்.
ⅱ) இந்து சமயத்தில் நிலவிவந்த பல்வேறு சமூகத் தீமைகள், மூடப்பழக்க வழக்கங்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் போன்றவற்றை மக்கள் அறியத் தொடங்கினர்.
ⅲ) 19-ஆம் நூற்றாண்டில் நிலவிவந்த மிகக் கொடுமையான ’சதி’ என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கத்திற்குத் தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டது.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: சமூக சமயச் சீர்திருத்த இயக்கங்களின் விளைவுகள்: இந்திய நாட்டின் பாரம்பரியப் பெருமைகளை உலகறியச் செய்யும் வண்ணம் வேத நூல்களையு ம் , வேதங்களையும், உபநிடதங்களையும், சமஸ்கிருத மொழியிலிருந்து தங்கள் மொழியில் மேலைநாட் டி ன ர் மொழிபெயர்த்தனர். இது நம் நாட்டின் உயரிய பண்பாட்டை உலகறியச் செய்தது. இந்து சமயத்தில் நிலவிவந்த பல்வேறு சமூகத் தீமைகள், மூடப்பழக்க வழக்கங்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் போன்றவற்றை மக்கள் அறியத் தொடங்கினர். 19-ஆம் நூற்றாண்டில் நிலவிவந்த மிகக் கொடுமையான ’சதி’ என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கத்திற்குத் தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட சமூகச் சட்டங்கள் மூலம் பெண்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது. (எ.கா.) பெண் சிசுக் கொலை தடுப்புச் சட்டம், விதவைமறுமணச் சட்டம், பர்தா முறை ஒழிப்பு மற்றும் பெண்களின் திருமணவயதை உயர்த்த பல்வேறு சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இதில் 1930-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சாரதாச் சட்டம் சமய சமூகச் சீர்திருத்த இயக்கங்களுக்குக் கிடைத்த ஒட்டு மொத்த வெற்றியாகும்.
93) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) நம் நாட்டு இலக்கியங்கள், கல்வெட்டுகள், நாணயங்கள் புதைபொருள் ஆய்வுகள் மூலம் கிடைத்த பொருள்களைக்கொண்டு மேலைநாட்டு வரலாற்றாசிரியர்கள் இந்திய வரலாற்றை பல ஆதாரங்களுடன் எழுதினார்கள்.
ⅱ) இந்திய நாட்டின் நுண்கலைகளான இசை, ஓவியம், சிற்பம், நாட்டியம், கட்டடக்கலை ஆகியவற்றைச் சமூக, சமயச் சீர்திருத்த இயக்கங்கள் உலகறியச் செய்தன.
ⅲ) நம் நாட்டின் நுண்கலைகள் மேலைநாட்டினர் மூலம் உலகளவில் பரவின.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: நம் நாட்டு இலக்கியங்கள், கல்வெட்டுகள், நாணயங்கள் புதைபொருள் ஆய்வுகள் மூலம் கிடைத்த பொருள்களைக்கொண்டு மேலைநாட்டு வரலாற்றாசிரியர்கள் இந்திய வரலாற்றை பல ஆதாரங்களுடன் எழுதினார்கள். இவை நம்நாட்டின் பண்பாடு உலகளவில் பரவ முக்கிய காரணமாக அமைந்தன.
இந்திய நாட்டின் நுண்கலைகளான இசை, ஓவியம், சிற்பம், நாட்டியம், கட்டடக்கலை ஆகியவற்றைச் சமூக, சமயச் சீர்திருத்த இயக்கங்கள் உலகறியச் செய்தன. நம் நாட்டின் நுண்கலைகள் மேலைநாட்டினர் மூலம் உலகளவில் பரவின.
இந்தியர்கள் அறிவியல் ஆய்வுகளில் ஈடுபடத் தொடங்கினர். ஆரியபட்டர் எழுதிய ஆரியபட்டீயம் என்ற நூல் அறிவியல் ஆராய்ச்சிக்கு வித்திட்டது.
94) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற மனப்பான்மைக்குச் சீர்திருத்த இயக்கங்கள் வித்திட்டன.
ⅱ) இந்தியாவில் நடைபெற்று வந்த அறிவியல் ஆதாரமற்ற சமயச் சடங்குகளையும் வழிபாட்டு முறைகளையும் நீக்க சமூக-சமயச் சீர்திருத்த இயக்கங்கள் பாடுபட்டன.
ⅲ) ஆங்கில இலக்கியத்தில் உள்ள புதினம், கவிதை, நாடகம் முதலானவை இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டன.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற மனப்பான்மைக்குச் சீர்திருத்த இயக்கங்கள் வித்திட்டன. தனிமனிதச் சுதந்திரமின்மை, பிறப்பால் உயர்வு, தாழ்வு போன்ற சமூகப் பிரச்சனைகளை நீங்கின.
இந்தியாவில் நடைபெற்று வந்த அறிவியல் ஆதாரமற்ற சமயச் சடங்குகளையும் வழிபாட்டு முறைகளையும் நீக்க சமூக-சமயச் சீர்திருத்த இயக்கங்கள் பாடுபட்டன.
மொழித்துறையில் வியக்கத்தகு முன்னேற்றம் ஏற்பட்டது. ஆங்கில இலக்கியத்தில் உள்ள புதினம், கவிதை, நாடகம் முதலானவை இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டன. ஆங்கில முறையில் பின்பற்றப்பட்ட விமர்சனமுறை இந்திய மொழிகளில் எதிரொலித்தன. இலக்கியத்துறையில் உலகம் போற்றும் இலக்கிய மேதைகள் உருவாயினர்.
95) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) 1835-இல் சார்லஸ் உட் கல்விக் கொள்கை உருவாவதற்கும், 1854-இல் மெக்காலே கல்விக் கொள்கை உருவாவதற்கும் அதனால், நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்விமுறை பரவலாவதற்கும் 19-ஆம் நூற்றாண்டின் சமூக–சமயச் சீர்திருத்த வாதிகள் ஆங்கிலேயர்களுக்கு உதவினர்.
ⅱ) இதனால், மேற்கத்தியத் தத்துவங்களும், இலக்கியங்களும், அறிவியலும் தாய்நாட்டின் பழைமையான வரலாற்றையும் இந்தியர்கள் அறிந்தனர்.
a) ⅰ) மட்டும்
b) ⅱ) மட்டும்
c) ⅰ) மற்றும் ⅱ)
d) இரண்டும் தவறு
விளக்கம்: 1835-இல் மெக்காலே கல்விக் கொள்கை உருவாவதற்கும், 1854-இல் சார்லஸ் உட் கல்விக் கொள்கை உருவாவதற்கும் அதனால், நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்விமுறை பரவலாவதற்கும் 19-ஆம் நூற்றாண்டின் சமூக–சமயச் சீர்திருத்த வாதிகள் ஆங்கிலேயர்களுக்கு உதவினர். இதனால், மேற்கத்தியத் தத்துவங்களும், இலக்கியங்களும், அறிவியலும் தாய்நாட்டின் பழைமையான வரலாற்றையும் இந்தியர்கள் அறிந்தனர்.
96) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) ஆங்கிலமொழி வளர்ச்சி பெற்றதைப் போன்று வட்டார மொழிகளும் வளர்ச்சி பெற்றன.
ⅱ) வட்டார மொழிகளில் புதிய சிந்தனைகளின் அடிப்படையில் பல இலக்கியங்கள் தோன்றின.
ⅲ) தொழில்துறையில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டு புதிய தொழிற்சாலைகளும், நூற்பாலைகளும் உருவாக்கப்பட்டன.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
விளக்கம்: ஆங்கிலமொழி வளர்ச்சி பெற்றதைப் போன்று வட்டார மொழிகளும் வளர்ச்சி பெற்றன. வட்டார மொழிகளில் புதிய சிந்தனைகளின் அடிப்படையில் பல இலக்கியங்கள் தோன்றின. விவேகானந்தரின் ஆன்மிகச் சிந்தனைகள், ஐரோப்பிய நாடுகளைக் கவர்ந்தன. இதன்காரணமாக சகோதரி நிவேதிதா இவருடைய சீடரானார். இன்றைய இந்தியாவில் இந்தியர்களிடையே தேசிய உணர்வு, தாய்மொழி உணர்வு, சமய சகிப்புத் தன்மை, சமய சமத்துவத்திற்கான கோட்பாடுகள் போன்றவற்றை இந்தியர்கள் மனத்தில் விதைத்தது சமூக சமய சீர்த்திருத்த இயக்கங்களே ஆகும். இன்றைய நாகரிக உலகில் மற்ற நாடுகளோடு பல்வேறு துறைகளில் இந்தியர்கள் உலக நாடுகளுக்குச் சமமாக அறிவிலும் ஆற்றலிலும் முன்னேற வழிவகுத்தது. தொழில்துறையில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டு புதிய தொழிற்சாலைகளும், நூற்பாலைகளும் உருவாக்கப்பட்டன.
தயானந்த சரஸ்வதியின் இந்தியா இந்தியருக்கே என்ற முழக்கம், தேசிய உணர்வு தோன்ற முக்கிய காரணமாக அமைந்தது. சுதந்திரப் போராட்டவீரர்களும், இலக்கியவாதிகளும் தோன்ற, இச்சீர்திரு த்த இயக்கங்கள் காரணமாயிற்று.