Tnpsc

சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கிய வரலாறு – Tamil Literature from Sangam age till Contemporary times Part 4 Pdf Questions With Answers

சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கிய வரலாறு – Tamil Literature from Sangam age till Contemporary times Part 4 Pdf Questions With Answers

1. “அம்மானை” பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?

அ. அம்மானை என்பது மகளிர் விளையாட்டு வகைகள் ஒன்று

ஆ. அம்மானை ஆடும்போது மகளிர் பாடும் பாட்டுக்கு “அம்மானை வரி” என்பது பெயர்.

இ. பாடிக்கொண்டே பந்துகளை உருட்டி விளையாடுவது “பந்து விளையாடல்” ஆகும்.

ஈ. அம்மானைப் பாடலில் ஒரு கருத்து, வினா எழுப்பி அக்கருத்தை மறுத்தல், இரண்டுக்கும் பொருந்தும் வகையில் ஒரு செய்தி முடிவில் ஒரு நீதி இடம் பெறும்.

(அ) அ மற்றும் இ (ஆ) ஆ மற்றும் அ (இ) இ மற்றும் ஈ (ஈ) ஈ மற்றும் அ

விளக்கம்:

“அம்மானை” என்பது பெண்கள் விளையாடும் ஒரு வகை விளையாட்டு. மூவர் வட்டமாக அமர்ந்து கல்லை மேலெறிந்து பிடித்தாடுவதாகும். விளையாடும் போது முதலாமவர் ஒரு கருத்தைக் கூறித் தொடங்க, இரண்டாமவர் மூன்றாவரிடம் அதுபற்றி வினவ மூன்றாமவர் அதற்கு விடை கூறுவதாக முடியும். செய்யுளில் இவ்வகைப் பாடல்கள் “கலம்பகம்” என்ற சிற்றிலக்கிய வகையில் இரண்டாவது உறுப்பாகும்.

2. கடற்பயணத்தின் சிறப்பை – அவை விளக்கும் நூலோடு பொருத்துக:

அ. விளைந்து முதிர்ந்த விழுமுத்து 1. பட்டினப்பாலை

ஆ. பொன்னுக்கு ஈடாக மிளகு ஏற்றுமதி 2. புறநானூறு

இ. காற்றின் போக்கை அறிந்து கலம் செலுத்தினர் 3. மதுரைக்காஞ்சி

ஈ. கட்டுத்தறியில் கட்டிய யானை அசைவதுபோல் 4. அகநானூறு

நாவாய் அசைந்தது

அ ஆ இ ஈ

(அ) 4 3 2 1

(ஆ) 3 4 2 1

(இ) 1 2 3 4

(ஈ) 3 4 1 2

விளக்கம்:

கொற்கை: பாண்டிய மன்னர்களுக்குரிய துறைமுகம் “கொற்கை” ஆகும். இங்கு முத்துக்குளித்தல் மிகச்சிறப்பாக நடைபெற்றததையும் இங்கிருந்து அயல்நாடுகளுக்கு முத்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டதையும் “விளைந்து முதிர்ந்த விழுமுத்து” என்று சிறப்பித்து மதுரைக் காஞ்சியில் கூறப்பட்டுள்ளது.

முசிறி: இது சேரமன்னர்களுக்குரிய துறைமுகம். அங்கு “கள்ளி” என்னும் பெரிய ஆற்றில் யவனர்களின் மரங்கலங்கள் பொன்னைச் சுமந்து வந்து அதற்கீடாக மிளகைச் சுமந்து செல்லும் என்று அகநானூறு குறிப்பிடுகிறது.

புகார்: இது சோழமன்னர்களின் துறைமுக நகரமாகும். “புகார் நகரத்தில் நிறுத்தப்பட்டிருந்த நாவாய்கள் அலைகளால் அசைவது கட்டுத் தறியில் கட்டப்பட்ட யானை அசைவது போலிருந்தது” என்று பட்டினப்பாலை கூறுகிறது. “கரிகாலனின் முன்னோர் காற்றின் போக்கை அறிந்து கலம் செலுத்தினர்” என்று புறநானூறு கூறுகிறது.

3. திருவிளையாடல் புராணம் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?

அ. மதுரையில் எழுந்தருளியுள்ள சோமசுந்தரக் கடவுள் செய்த அறுபத்து மூன்று திருவிளையாடல்களை விளக்கிக் கூறும் பழைய வரலாற்று நூல் “திருவிளையாடல் புராணம்”

ஆ. திருவிளையாடல் புராணத்தைப் பாடிய பரஞ்சோதி முனிவர் வடமொழியையும், தமிழையும் நன்கு கற்றுணர்ந்த சான்றோர்.

இ. திருவிளையாடல் புராணம், மதுரைக் காண்டம், கூடல் காண்டம், திருவாலவாய்க் காண்டம் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது.

ஈ. திருவிளையாடல் புராணத்தில் அறுபத்தைந்து படலங்களும் மூவாயிரத்து இருநூறு பாடல்களும் உள்ளன.

(அ) அ மற்றும் இ சரியானவை (ஆ) ஆ மற்றும் இ சரியானவை

(இ) இ மற்றும் ஈ சரியானவை (ஈ) அ மற்றும் ஈ சரியானவை

விளக்கம்:

சுந்தரபுராணத்தின் ஒரு பகுதியான ஆலாசிய மான்மியத்தை அடிப்படையாகக் கொண்டு திருவிளையாடல் புராணம் இயற்றப்பட்டது. மொத்தம் 64 திருவிளையாடல்களை இந்நூல் விளக்குகிறது. மதுரைக் காண்டம்-18 படலங்கள். கூடற்காண்டம்-30 படலங்கள். திருவாலவாய்க் காண்டம்-16 படலங்கள். மொத்தம்-64 படலங்கள். இந்நூலில் 3363 பாடல்கள் உள்ளன.

4. பொருத்துக:

பட்டியல்-I பட்டியல்-II

அ. தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்தியங்குவது 1. தண்டியலங்கார மேற்கோள்

ஆ. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே 2. கிரௌல்

இ. தன்னேரில்லாத தமிழ் 3. கால்டுவெல்

ஈ. தமிழ் என்னை ஈர்த்தது; குறளோ என்னை இழுத்தது 4. தொல்காப்பியம்

அ ஆ இ ஈ

(அ) 2 3 1 4

(ஆ) 3 4 2 1

(இ) 3 4 1 2

(ஈ) 4 3 2 1

விளக்கம்:

தமிழ்மொழி பிறமொழித் துணையின்றி தனித்தியங்குவது என கால்டுவெல் மெய்ப்பித்தார். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதியவர் கால்டுவெல். “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” தொல்காப்பியம் – சொல்லதிகாரம் – பெயரியலில் முதல் நூற்பாவாகும்.

5. பொருத்துக:

நூல் ஆசிரியர்

அ. சிறுபாணாற்றுப்படை 1. முடத்தாமக் கண்ணியார்

ஆ. திருமுருகாற்றுப்படை 2. நல்லூர் நத்தத்தனார்

இ. பொருநராற்றுப்படை 3. கடியலூர் உருத்திரங் கண்ணனார்

ஈ. பெரும்பாணாற்றுப்படை 4. நக்கீரர்

அ ஆ இ ஈ

(அ) 4 3 2 1

(ஆ) 2 4 1 3

(இ) 3 1 4 2

(ஈ) 1 2 3 4

விளக்கம்:

சிறுபாணாற்றுப்படை: ஒய்மானாட்டு நல்லியக்கோடனிடம் பரிசில் பெற விரும்பிய பாணன் ஒருவனை அவனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது சிறுபாணாற்றுப்படை. இதன் ஆசிரியர் நல்லூர் நத்தத்தனார். திருமுருகாற்றுப்படை: பத்துப்பாட்டில் இந்நூலே கடவுள் வாழ்த்து போல முதலாவதாக அமைந்துள்ளது. இதனை இயற்றியவர் நக்கீரர். பதினோராம் திருமுறையில் சைவர்கள் இதனையும் சேர்த்துள்ளனர். பொருநராறுப்படை: இந்நூல் கரிகாற் பெருவளத்தானிடம் பரிசில் பெற்ற பொருநன் ஒருவன் பரிசில் பெற விரும்பும் பிறிதொரு பொருநனை ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது. இதளை இயற்றியவர் முடத்தாமக் கண்ணியார். பெரும்பாணாற்றுப்படை: இந்நூல் பரிசில் பெற்ற பேரியாழ்ப் பாணன் ஒருவன் பரிசில் பெற்ற விரும்பும் மற்றொரு பெரும்பாணனைத் தொண்டைமான் இளந்திரையனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது. இதனை இயற்றியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்.

6. பொருத்துக:

அகநாநூற்றின் பாட்டு வைப்பு முறை திணை

அ. 10, 20, 30, 40, ….. 1. முல்லைத் திணை

ஆ. 6, 16, 26, 36…. 2. நெய்தல் திணை

இ. 4, 14, 24, 34, …. 3. குறிஞ்சித் திணை

ஈ. 2, 8, 12, 18,… 4. மருதத் திணை

அ ஆ இ ஈ

(அ) 4 2 3 1

(ஆ) 2 3 1 4

(இ) 2 1 4 3

(ஈ) 2 4 1 3

விளக்கம்:

அகநானூறு பாடல்கள் வைப்புமுறை 1,3,5,7 … என ஒற்றைப்படை எண்களாக வருவன பாலைத் திணைப் பாடல்கள். 2,8,12,18… என வருவன குறிஞ்சித்திணைப் பாடல்கள். 4,14,24,34… என வருவன முல்லைத்திணைப் பாடல்கள். 6,16,26,36… என வருவன மருதத்திணைப் பாடல்கள். 10,20,30 என வருவன நெய்தல் திணைப் பாடல்கள். இந்நூலை தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மர் ஆவார். தொகுப்பித்தோன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி ஆவான்.

7. கீழ்க்கண்ட கூற்றுகளில் எவை சரியானவை?

அ. கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர் இராமாவதாரம்

ஆ. இரணியன் வதைப்படலம் வான்மீகி இராமாயணத்தில் இடம்பெறவில்லை

இ. மரயாசனகப் படலம் கம்பராமாயணத்தில் இல்லாதது.

ஈ, கம்பர் நூறு பாடல்களுக்கு ஒரு முறை தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலைப் போற்றி உள்ளார்

(அ) அ, ஆ சரியானவை (ஆ) ஆ, இ சரியானவை

(இ) இ, ஈ சரியானவை (ஈ) அ, ஈ சரியானவை

விளக்கம்:

கம்பர் ஆயிரம் பாடல்களுக்கு ஒருமுறை தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலைப் போற்றிப் பாடியுள்ளார்.

8. நபிகள் நாயகத்தின் திருவாழ்வு முழுமையும் பாடி முடித்தவர் யார்?

(அ) பனு அகமது மரைக்காயர் (ஆ) சீதக்காதி

(இ) உமறுப்புலவர் (ஈ) செய்கு அப்துல் காதிர் மரைக்காயர்

விளக்கம்:

உமறுப்புலவர் இயற்றிய சீறாப்புராணத்தில் நபிகள் நாயகத்தின் வாழ்வு முற்றிலுமாய்ப்பாடி முடிக்கப்படவில்லை. பனு அகமது மரைக்காயர் என்பவர் தாம் பெருமானாரின் தூய வாழ்வு முழுவதையும் பாடி முடித்தார். அது “சின்னச் சீறா” என்று வழங்கப்படுகிறது.

9. பொருந்தா ஒன்றைத் தேர்க. கண்ணதாசன் பாடல்கள்

(அ) “முத்தான முத்தல்லவோ மிதந்து வந்த முத்தல்லவோ”

(ஆ) “சின்னப்பயலே, சின்னப்பயலே சேதி கேளடா”

(இ) “ஆடி அடங்கும் வாழ்க்கையடா”

(ஈ) “அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்”

விளக்கம்:

“சின்னப்பயலே, சின்னப்பயலே சேதி கேளடா” என்ற பாடலை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள்.

10. “இராசராச சோழனுலா” வைப் பாடியவர்

(அ) ஒட்டக்கூத்தர் (ஆ) புகழேந்திப் புலவர் (இ) காளமேகப் புலவர் (ஈ) குமரகுருபரர்

விளக்கம்:

இராசராச சோழனுலாவைப் பாடியவர் ஒட்டக்கூத்தர். கூத்தர் என்பதே இவரின் இயற்பெயர். ஒட்டம்(பந்தயம்) வைத்துப் பாடுவதில் வல்லவர். ஆதலால் இவர் ஒட்டக்கூத்தர் எனப்பட்டார். இவரது காலம் 12-ஆம் நூற்றாண்டு ஆகும். இவர், விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன் ஆகிய மூன்று மன்னர்களின் அவையிலும் செல்வாக்கோடு விளங்கியவர். ஆம்மூவரைப் பற்றியும் அவர் பாடிய மூன்று உலாக்களும் “மூவரூலா” எனப்படுகிறது. இவரது சிறப்புப்பெயர்களாவன. “கவிச்சக்கரவர்த்தி” “கவிராட்சசன்” “காளக்கவி” “சர்வக்ஞகவி” என்பவையாகும். இவர் இயற்றிய பிற நூல்களாவன, தக்கயாகப்பரணி, ஈட்டி எழுபது, அரும்பைத் தொள்ளாயிரம், காங்கேயன் நாலாயிரக் கோவை, குலோத்துங்கச் சோழன் பிள்ளைத் தமிழ் என்பனவாம். சமகாலப் புலவர்கள்-கம்பர், புகழேந்தி புலவர்

11. பொருத்துக:

பட்டியல்-I பட்டியல்-II

(அ) மாணிக்கவாசகர் 1. திருத்தொண்டத் தொகை

(ஆ) ஆண்டாள் 2. தாண்டகவேந்தர்

(இ) சுந்தரர் 3. திருக்கோவை

(ஈ) திருநாவுக்கரசர் 4. நாச்சியார் திருமொழி

அ ஆ இ ஈ

(அ) 3 4 1 2

(ஆ) 2 3 4 1

(இ) 1 4 3 2

(ஈ) 4 3 1 2

12. “முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை” என்று கூறியவர்

(அ) தொல்காப்பியர் (ஆ) பவணந்தி முனிவர்

(இ) தண்டியடிகள் (ஈ) புலவர் குழந்தை

விளக்கம்:

“முந்நீர் வழக்கம் மகடூஉ வோடு இல்லை” தொல்காப்பியம்-பொருளதிகாரம் – அகத்திணையியலில் பொருள்வயிற்பிரிவின் கீழ் கூறப்பட்டுள்ளது. பொருள்: கடல்வழிப் பயணம் செல்லும்போது பெண்டிரை அழைத்துச் செல்வதில்லை.

13. “இருட்டறையில் உள்ளதடா உலகம்” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?

(அ) பாரதியார் (ஆ) பாரதிதாசன் (இ) கவிமணி (ஈ) நாமக்கல் கவிஞர்

விளக்கம்:

இருட்டறையில் உள்ளதடா உலகம் – சாதி

இருக்கின்ற தென்பானும் இருக்கிறானே!

மருட்டுகின்ற மதத் தலைவர் வாழ்கின்றாரே!

வாயடியும் கையடியும் மறைவ தெந்நாள்

சுருட்டுகின்றார் தம் கையில் கிடைத்தவற்றை!

சொத்தெல்லாம் தமக்கென்று

சொல்வார் தம்மை வெருட்டுவது பகுத்தறிவே!

இல்லையாயின்

விடுதலையும் கெடுதலையும் ஒன்றோயாகும்

– பாரதிதாசன்.

சாதியை முக்கியமாகக் கருதும் சமூகத்தைத் தாக்கி புரட்சிக் கவிஞர் எழுதிய கவிதை.

14. மரபுக் கவிதையில் வேர் பார்த்தவர், புதுக் கவிதையில் மலர் பார்த்தவர் என்று பாராட்டப்படுபவர்

(அ) முடியரசன் (ஆ) வாணிதாசன் (இ) சுரதா (ஈ) அப்துல் ரகுமான்

15. பொருத்துக:

நூல் ஆசிரியர்

அ. பாண்டியன் பரிசு 1. பாரதியார்

ஆ. குயில்பாட்டு 2. நாமக்கல் கவிஞர்

இ. ஆசிய ஜோதி 3. பாரதிதாசன்

ஈ. சங்கொலி 4. கவிமணி

அ ஆ இ ஈ

(அ) 4 2 1 3

(ஆ) 1 3 2 4

(இ) 3 1 4 2

(ஈ) 2 4 3 1

16. “தொண்டர்சீர் பரவுவார்” என்று போற்றப்படுபவர்

(அ) சுந்தரர் (ஆ) கம்பர் (இ) சேக்கிழார் (ஈ) மாணிக்கவாசகர்

17. எட்டுத்தொகை நூல்களுள் அகப் புறப்பாடல்களைக் கொண்ட நூல் எது?

(அ) பதிற்றுப்பத்து (ஆ) பரிபாடல் (இ) கலித்தொகை (ஈ) ஐங்குறூநூறு

18. “முத்தொள்ளாயிரம்” பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?

அ. மூன்று+தொள்ளாயிரம்-முத்தொள்ளாயிரம். சேர, சோழ, பாண்டிய வேந்தர்களைப் பற்றிய மூன்று தொள்ளாயிரம் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூல் “முத்தொள்ளாயிரம்”

ஆ. முத்தொள்ளாயிரத்தில் இரண்டாயிரத்து எழுநூறு பாடல்கள் உள்ளன.

இ. முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் புகழேந்திப் புலவர்

ஈ. சேர, சோழ, பாண்டியரின் ஆட்சிச் சிறப்பு வீரம், நாட்டு வளம் பற்றிப் பாடிய பாடல் தொகுப்பே முத்தொள்ளாயிரம்

(அ) அ, இ சரியானவை (ஆ) அ, ஈ சரியானவை

(இ) ஆ, இ சரியானவை (ஈ) இ, ஈ சரியானவை

விளக்கம்:

முத்தொள்ளாயிரம் மூவேந்தர்களைப் பற்றிய 900 பாடல்களைக் கொண்ட நூலாகும். இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. இந்நூலின் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.

19. திருக்கோட்டியூர் நம்பியால் “எம்பெருமானார்” என்று அழைக்கப்பட்டவர் யார்?

(அ) நாதமுனிவர் (ஆ) இராமானுஜர்

(இ) திருவரங்கத்தமுதனார் (ஈ) மணவாள மாமுனிகள்

20. மூன்றடிச் சிறுமையும் ஆறடிப் பெருமையும் கொண்ட சங்க அகநூல்

(அ) நற்றிணை (ஆ) கலித்தொகை (இ) ஐங்குநுறூறு (ஈ) குறுந்தொகை

21. நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் பெயர்

(அ) நந்தவர்மன் (ஆ) ஜெயங்கொண்டார்

(இ) குமரகுருபரர் (ஈ) பெயர் தெரியவில்லை

22. “விற்பெருந்தடந்தோள் வீர!” இப்பாடலடி யாரைக் குறிக்கிறது?

(அ) இலக்குவன் (ஆ) இராமன் (இ) குகன் (ஈ) அனுமன்

23. திருவேங்கடத்தந்தாதி என்னும் நூலை இயற்றியவர்

(அ) நம்மாழ்வார் (ஆ) பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்

(இ) குலசேகராழ்வார் (ஈ) திருமங்கையாழ்வார்

விளக்கம்:

திருவேங்கடம் என்னும் திருப்பதி மலையில் எழுந்தருளியுள்ள திருமாலைக் குறித்து பாடப்பட்ட அந்தாதி வகை நூல் திருவேங்கடத்தந்தாதி ஆகும். இந்நூலை இயற்றியவர் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார். இந்நூல், இவர் பாடிய அஷ்டப்பிரபந்தம் என்னும் எட்டு நூல்களுள் ஒன்றாகும்.

24. ஐங்குநுறூற்றில் முல்லைத் திணைப் பாடல்களைப் பாடியவரின் பெயரைத் தெர்ந்தெடு

(அ) பேயனார் (ஆ) கபிலர் (இ) ஓதலாந்தையார் (ஈ) ஓரம்போகியார்

விளக்கம்:

ஐங்குறூநூறு என்னும் நூல் ஐம்பெரும் புலவர்களால் பாடப்பட்டனவாகும்.

மருதத்திணை-ஓரம்போகியார்.

நெய்தல் திணை-அம்மூவனார்.

குறிஞ்சித்திணை-கபிலர்.

பாலைத்திணை-ஓதலாந்தையார்.

முல்லைத்திணை-பேயனார்.

25. கீழே காணப்பெறுபவனவற்றுள் எவை சரியற்றவை என்று கூறுக

அ. அகப்பொருள் பற்றிய, “நற்றிணை” நூலில், புறப்பொருள் செய்திகளும், தமிழக வரலாற்று குறிப்புகளும் அறவே இடம் பெற்றிராதது குறிக்கத்தக்கது.

ஆ. நற்றிணைச் செய்யுட்கள் எட்டடிச் சிறுமையும், பன்னிரண்டடிப் பெருமையும் கொண்டவை.

இ. நற்றிணைச் செய்யுட்கள் அகவற்பாவால் ஆனவை.

ஈ. நற்றிணையைத் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த மாறன் வழுதி என்னும் பாண்டிய மன்னன் ஆவான்.

(அ) அ மற்றும் இ சரியற்றவை (ஆ) ஆ மற்றும் ஈ சரியற்றவை

(இ) இ மற்றும் ஈ சரியற்றவை (ஈ) அ மற்றும் ஆ சரியற்றவை

விளக்கம்:

நற்றிணையில் உள்ள பாடல்கள் 9 அடிச்சிற்றெல்லையும் 12 அடி பேரெல்லையும் கொண்டவை.

ஓரறிவு உயிர்களைக் கூட விரும்பும் உயரிய பண்பு, விருந்தோம்பல், அறவழியில் பொருளீட்டல் முதலான தமிழர்தம் உயரிய பண்புகளை எடுத்தியம்பும் நூல் இது.

26. பொருந்தாத இணையினைக் காண்க:

அ. களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே-புறநானூறு

ஆ. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்-திருக்குறள்

இ. கூடலில் ஆய்ந்த ஒண்தீந்தமிழன்-சிலப்பதிகாரம்

ஈ. பண்ணொடு தமிழொப்பாய்-தேவாரம்

விளக்கம்:

கூடலில் ஆய்ந்த ஒண்தீந்தமிழன்-திருவாசகம்

27. “திரிகடுகம்” பற்றிய கூற்றுகளில் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக:

அ. திரிகடுகம் நூற்று இரண்டு வெண்பாக்களைக் கொண்டது.

ஆ. திரிகடுகத்தின் ஆசரியர் நல்லாதனார்

இ. திரிகடுகம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.

ஈ. சுக்கு, மிளகு, திப்பிலியால் ஆன மருந்துக்கு பெயர் திரிகடுகம்

விளக்கம்:

திரிகடுகம்-காப்புச் செய்யுள் விடுத்து 100 பாடல்கள் உள்ளன.

28. பொருத்துக:

பட்டியல் I பட்டியல் II

அ. “பாடு” எனக்கூறியவுடன் பாடுபவர் 1. சித்திரகவி

ஆ. ஓசைநலம் சிறக்கப் பாடுபவர் 2. வித்தாரக்கவி

இ. தொடர்நிலைச் செய்யுள் பாடுபவர் 3. ஆசுகவி

ஈ. சொல்லணி அமைத்துப் பாடுபவர் 4. மதுரகவி

அ ஆ இ ஈ

(அ) 3 4 2 1

(ஆ) 4 3 1 2

(இ) 2 1 4 3

(ஈ) 3 2 1 4

விளக்கம்:

கொடுத்த பொருளில் அடுத்த கணமே கவி பாட வல்லவர்-ஆசுகவி

சொல்லணி அமைத்துப் பாடுவதில் வல்லவர்-சித்திரகவி

விரிவாக, தொடர்நிலைச்செய்யுள் வடிவில் பாடுவதில் வல்லவர்-வித்தாரகவி

ஓசைநலம் சிறக்க இனிமையாகப் பாடுவதில் வல்லவர்-மதுரகவி

29. பொருத்துக:

வரிசை I வரிசை II

அ. கொலையே, களவே, காமத்தீ விழைவு 1. உள்ளம் தன்னில் தோன்றுவன

ஆ. பொய்யே, குறளை, கடுஞ்சொல், பயனில்சொல் 2. என்பது இயல்பே

இ. வெஃகல், வெகுளல், பொல்லாக்காட்சி 3. உடம்பில் தோன்றுவன

ஈ. பிறந்தார், மூத்தார், பிணி நோயுற்றார், இறந்தார் 4. சொல்லில் தோன்றுவன

அ ஆ இ ஈ

அ. 3 2 1 4

ஆ. 3 4 1 2

இ. 3 1 2 4

ஈ. 3 2 4 1

விளக்கம்:

ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான, மணிமேகலையில் ஆபுத்திரன் நாடு அடைந்த காதையில் அமைந்துள்ள அறவண அடிகளில், கூற்றாகும். உடம்பில், உள்ளத்தில், சொல்லில் தோன்றும் குற்றங்கள் பற்றி அவர் எடுத்துரைக்கும் பாடலடிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

30. பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்தில் பாடப்பட்ட மன்னன்

(அ) தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை (ஆ) பல்யானை செல்கெழுகுட்டுவன்

(இ) செல்வக்கடுங்கோ வாழியாதன் (ஈ) கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்

விளக்கம்:

தகடூர் எறிந்த பொருஞ்சேரல் இரும்பொறை-எட்டாம் பத்து.

பல்யானைசெல்கெழு குட்டுவன்-மூன்றாம்பத்து.

செல்வங்கடுங்கோ வாழியாதன்-ஏழாம் பத்து.

கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்-ஐந்தாம் பத்து.

31. “முத்தொள்ளாயிரம்” பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் பொருத்தமற்றதைக் சுட்டுக

அ. முத்தொள்ளாயிரப் பாடல்களில் “புறத்திரட்டு” என்னும் நூலின் வாயிலாக 108 வெண்பாக்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

ஆ. பழைய உரைநூல்களில் மேற்கோளாக 22 பாடல்கள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன.

இ. பழந்தமிழர் பண்பாடு, தமிழக மூவேந்தர்கள், அவர்தம் படைகள், வீரர்கள், போரியல் முறைகள் சொல்லப்பட்டுள்ளன.

ஈ. சுவை மிகுந்த விருத்தப்பாக்கள் கற்பனைக் களஞ்சிமாகத் திகழ்கின்றன.

விளக்கம்:

இந்நூல் முழுமையும் வெண்பா யாப்பில் அமைந்துள்ளது.

32. தமிழார்வத்தின் காரணமாகத் தம் பெயரை பரிதிமாற்கலைஞர் என மாற்றி அமைத்துக் கொண்டவர்

(அ) மறைமலையடிகள் (ஆ) சூரியநாராயண சாஸ்திரி

(இ) ரா.இராகவையங்கார் (ஈ) சிங்கார வேலு முதலியார்

33. “தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த்” என்று பாராட்டப்படுபவர் யார்?

(அ) சுரதா (ஆ) அப்துல் ரகுமான் (இ) வாணிதாசன் (ஈ) தாரா பாரதி

34. சாகித்திய அகாடெமி பரிசுப்பெற்ற ரா.பி.சேதுப்பிள்ளையின் நூல் எது?

(அ) கள்ளர் சரித்திரம் (ஆ) தமிழ் இலக்கிய வரலாறு

(இ) தமிழின்பம் (ஈ) முத்தொள்ளாயிர விளக்கம்

35. பொருத்துக:

ஆசிரியர் சிறுகதை

அ. வ.வே.சு.ஐயர் 1. பஞ்சதந்திரக்கரைகள்

ஆ. தாண்டவராய முதலியார் 2. மங்கையர்கரசியின் காதல்

இ. செல்வ கேசவராய முதலியார் 3. காணாமலே காதல்

ஈ. கு.ப.ரா 4. அபிநயக் கதைகள்

அ ஆ இ ஈ

(அ) 1 2 4 3

(ஆ) 2 4 3 1

(இ) 3 1 2 4

(ஈ) 2 1 4 3

36. புகைப்பழக்கத்தைக் கதைக்கருவாகக் கொண்ட “மெல்ல மெல்ல மற” என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?

(அ) இலட்சுமி (ஆ) சுஜாதா (இ) சுபா (ஈ) தாமரை

37. “மணநூல்” இந்நூலின் ஆசிரியர் யார்?

(அ) இளங்கோவடிகள் (ஆ) சீத்தலைச் சாத்தனார்

(இ) திருத்தக்கத் தேவர் (ஈ) திருவள்ளுவர்

விளக்கம்:

திருத்தக்கத்தேவர் இயற்றிய சீவகசிந்தாமணியின் மற்றொரு பெயர் “மணநூல்” ஆகும்.

38. பொருத்துக:

அ. அம்பை 1. வலம்புரி

ஆ. அனுராதா ரமணன் 2. காளி

இ. திலகவதி 3. காலச்சுமைதாங்கி

ஈ. பாக்யா 4. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை

அ ஆ இ ஈ

(அ) 4 3 2 1

(ஆ) 1 2 3 4

(இ) 1 2 4 3

(ஈ) 1 3 2 4

39. கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக

(அ) சிலப்பதிகாரம், மணிமேகலை (ஆ) இன்னா நாற்பது, இனியவை நாற்பது

(இ) இராமாயணம், மகாபாரதம் (ஈ) பாண்டியன் நெடுஞ்சொழியன், கபிலர்

விளக்கம்:

சிலப்பதிகாரம், மணிமேகலை-ஐம்பெருங்காப்பியங்கள்,

இன்னாநாற்பது, இனியவைநாற்பது-பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்

இராமாயணம், மகாபாரதம்-இதிகாசங்கள்.

முதல் காரணம்: கபிலர்-புலவர்,

பாண்டியன் நெடுஞ்செழியன்-மன்னன்.

இரண்டாம் காரணம்: கபிலருடன் தொடர்புடைய மன்னன் பாரி ஆவார்.

40. திருக்குறள்-பொருட்பாலின் இயல்கள்

(அ) பாயிரவியல், துறவறவியல், ஒழிபியல் (ஆ) அரசியல், அங்கவியல், ஒழிபியல்

(இ) அரசியல், இல்லறவியல், களவியல் (ஈ) பாயிரவியல், அங்கவியல், கற்பியல்

விளக்கம்:

நிலைகள் கூறுகள்
பால் அறம் பொருள் இன்பம்
இயல் பாயிரம் இல்லறம் துறவறம் அரசு அங்கம் ஒழிபு களவு கற்பு
அதிகாரம் 4 20 14 25 32 13 7 18
குறள் 40 200 140 250 320 130 70 180

41. குறுந்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர்

(அ) பாரதம் பாடிய பெருந்தேவனார் (ஆ) பெருங்குன்றூர்க் கிழார்

(இ) பொருந்தில் இளங்கீரனார் (ஈ) காக்கைப்பாடினியார்

விளக்கம்:

குறுந்தொகை என்ற நூலுக்கு கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ. இந்நூலின் பாடல்கள் நான்கடி சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும் உடையவை. ஆனால் ஒன்பதடியில் இருபாடல்கள் (307, 391) அமைந்துள்ளன. கடவுள் வாழ்த்து நீங்கலாக இந்நூலில் 401 பாடல்கள் உள்ளன.

42. அதியமான் நெடுமானஞ்சியின் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர்.

(அ) வெள்ளிவீதியார் (ஆ) ஒளவையார்

(இ) காக்கைப்பாடினியார் (ஈ) நக்கண்ணையார்

விளக்கம்:

அதியமான் நெடுமானஞ்சி தகடூரை ஆண்ட குறுநில மன்னன். கடையெழு வள்ளல்களில் ஒருவன். இம்மன்னனின் அரசவைக்கு தம் புலமையால் பெருமை சேர்த்தவர் ஒளவையார். உண்டாரை நெடுங்காலம் வாழ வைக்கும் நெல்லிக்கனியை மலைப் பிளவுகளையெல்லாம் தாண்டிச் சென்று, கொண்டு வந்து அதனை ஒளவை உண்ணுமாறு கொடுத்தவன் அதியமான்.

43. கீழே தரப்பெறுவனவற்றுள் எவை சரியற்றவை?

அ. குறுந்தொகைச் செய்யுட்கள் குறைந்த அளவாக மூன்று அடிகளையும், அதிக அளவாக ஏழு அடிகளையும் கொண்டு இருக்கின்றன.

ஆ. குறுந்தொகைச் செய்யுட்களைத் தொகுத்தவர் பூரிக்கோ.

இ. குறுந்தொகைக்கு நக்கீர தேவநாயனார் கடவுள் வாழ்த்துச் செய்யுளைப் பாடியுள்ளார்.

ஈ, குறுந்தொகையில் கடவுள் வாழ்த்துடன் நானூற்றொரு பாடல்கள் உள்ளன.

(அ) ஆ, இ சரியற்றவை (ஆ) அ, ஈ சரியற்றவை

(இ) அ, இ சரியற்றவை (ஈ) இ, ஈ சரியற்றவை

விளக்கம்:

குறுந்தொகை என்ற நூலுக்கு கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ. இந்நூலின் பாடல்கள் நான்கடி சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும் உடையவை. ஆனால் ஒன்பதடியில் இருபாடல்கள் (307, 391) அமைந்துள்ளன. கடவுள் வாழ்த்து நீங்கலாக இந்நூலில் 401 பாடல்கள் உள்ளன.

44. “புலவரேறு” என்று சிறப்பிக்கப் பெற்றவர்

(அ) நக்கண்ணையார் (ஆ) நாமக்கல் கவிஞர்

(இ) வரத நஞ்சையப்பிள்ளை (ஈ) கபிலர்

விளக்கம்:

அ.வரதநஞ்சையப் பிள்ளை.

காலம்-01.09.1877 முதல் 11.07.1956 வரை.

சிறப்பு: தமிழ், வடமொழி, தெலுங்கு ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார். கணிதம், ஜோதிடம் ஆகிய கலைகளில் வல்லவராயிருந்தார் “புலவரேறு” என்று சிறப்பிக்கப்பட்டார்.

இயற்றிய நூல்கள்: தமிழரசி குறவஞ்சி, தமிழ்த்தாய் திருப்பணி, கருணீக புராணம்.

விருது-கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் நமச்சிவாய முதலியார் தலைமையில் “தங்கத்தோடா” என்ற விருதினைப் பெற்றவர்.

45. “தோடுடைய செவியன், விடமுண்ட கண்டன்”

என்ற தொடரால் குறிக்கப்படுபவர்

(அ) உமையொரு பாகனாம் சிவபெருமான் (ஆ) குழலூதும் கோவிந்தனாம் கண்ணன்

(இ) மராமரம் ஏழினைத் துளைத்த இராமன் (ஈ) மாமரம் தடிந்த தணிகை வேலன்

விளக்கம்:

திருஞானசம்பந்தர் அருளிச்செய்த திருபிரமபுரம் (சீர்காழி) தோவரத் திருப்பதிகம், முதலாம் திருமுறை 1-ஆவது திருப்பதிகம்.

“தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்

காடுடையசுட லைப்பொடிபூசி என் உள்ளங்கவர் கள்வன்”

பொருள்: காதில் தோடு அணிந்து எருதின்மேல் ஏறி வெண்மையான மதியை சூடி, சுடுகாட்டில் உள்ள சாம்பலை உடல் எல்லாம் பூசி என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன்.

இரண்டாம் திருமுறை 1-ஆவது பாடல்.

வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன் மிக நல்ல வீணை தடவி

மாசறு திங்கள் கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்,

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே

ஆசறுநல்ல நல்ல வைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

பொருள்: மூங்கில் போன்ற தோளினை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனும் விடம் உண்ணட கண்டனும் ஆகிய சிவபிரான் திங்கள், கங்கை ஆகியவற்றை முடிமேல் அணிந்தவனாய் மகிழ்ச்சியுற்ற நிலையில் வீணையை மீட்டிக் கொண்டு என் உளம் புகுந்து தங்கியுள்ள காரணத்தால், ஞாயிறு, திங்கள் முதலான ஒன்பான் கோள்களும் குற்றமற்ற நலத்தைச் செய்வனவாம். அவை அடியார்களுக்கும் மிகவும் நல்லனவே செய்யும்.

46. கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?

அ. பழந்தமிழரின் போர் வாழ்வு, மன்னர்களின் அறச்செயல், வீரம், கொடை, ஆட்சிச் சிறப்பு, கல்விப்பெருமை, புலவரது பெருமிதம் மக்களின் நாகரிகம், பண்பாடு பற்றியறியப் புறநானூற்றுச் செய்யுட்கள் உதவுகின்றன.

ஆ. புற வாழ்வு பற்றிய நானூறு செய்யுட்களின் தொகுப்பு, புறநானூறு.

இ. புறநூனூற்றில் அதிக செய்யுட்களைப் பாடியவர் ஒளவையார்

ஈ. அறியாது முரசு கட்டிலில் தூங்கிய பெண்ணைக் கொன்றமையால் “பெண் கொலை புரிந்த மன்னன்” என்று தூற்றப்படும் செய்தி சொல்லப்பட்டுள்ளது.

(அ) அ, இ, ஈ சரியானவை (ஆ) அ, ஆ, ஈ சரியானவை

(இ) அ, ஆ, இ சரியானவை (ஈ) ஈ, இ, ஆ சரியானவை

47. பொருத்துக:

நூல் நூலாசிரியர்

(அ) பெருமாள் திருமொழி 1. காரைக்கால் அம்மையார்

(ஆ) திருத்தொண்டத் தொகை 2. ஆண்டாள்

(இ) அற்புதத் திருவந்தாதி 3. சுந்தரர்

(ஈ) நாச்சியார் திருமொழி 4. குலசேகர ஆழ்வார்

அ ஆ இ ஈ

(அ) 4 2 3 1

(ஆ) 3 4 1 2

(இ) 2 1 4 3

(ஈ) 4 3 1 2

48. கீழ்க்காணும் நூல்களுள் இலக்கண நூல் அல்லாதது

(அ) தொல்காப்பியம் (ஆ) தேம்பாவணி (இ) தண்டியலங்காரம் (ஈ) வீரசோழியம்

விளக்கம்:

தேம்பாவணியின் ஆசிரியர் வீரமாமுனிவர். இந்நூல் இயேசு பெருமானின் வளர்ப்புத் தந்தையான சூசையப்பரைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்ட இலக்கிய நூலாகும்.

49. கீழ்க்காணும் கூற்றுகளில் பொருத்தமற்றதைத் தேர்வு செய்க.

அ. ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் காடு, மலைகளில் வாழ்ந்தவர்கள் சித்தர்கள்.

ஆ. பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகுணிச் சித்தர் என்பன எல்லாமே காரணப் பெயர்கள்

இ. எளிய சொற்களில் அறிவுரைகளைக் கூறியவர்கள் சித்தர்கள்.

ஈ. இரும்பைப் பொன்னாக்கும் இரசவாத வித்தை கற்று உலகில் செல்வராக வாழச் சித்தர்கள் அவாவினர்.

50. “கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே “கற்றவர்களின் சிறப்பைப் போற்றும் இவ்வடிகள் இடம்பெறும் நூல்.

(அ) அகநானூறு (ஆ) புறநானூறு (இ) நற்றிணை (ஈ) கலித்தொகை

விளக்கம்:

புறநானூறு 183-வது பாடல்

உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்

பிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றே!

பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும்

சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்;

ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்

மூத்தோன் வருக என்னாது, அவருள்

அறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும்;

வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

மேற்பால் ஒருவனம் அவன்கண் படுமே.

பாடியவர்-ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்.

திணை-பொதுவியல்.

துறை-பொருண்மொழிக்காஞ்சி.

பொருள்: ஆசிரியருக்குத் துன்பம் நேரும் போது உதவ வேண்டும். அவருக்கு நிறைந்த செல்வம் கொடுக்க வேண்டும். அவரைப் பின்பற்றி நடப்பதற்கு தயங்கக் கூடாது. இப்படிக் கல்வி கற்பது முறையாகும். இது பெரிதும் நன்மை பயக்கும். ஏனென்றால், தன் வயிற்றில் பிறந்த உடன்பிறப்புக் கொண்ட பலரில் சிறப்புப் பெற்றிருப்பவனிடம் தாயின் மனமும் திரிந்து செல்லும். ஒரே குடியில் பிறந்த பலரில் மூத்தவனை வருக என அழைக்காமல் அவர்களில் அறிவுடையவன் வழியில் அரசாட்சியும் நடைபெறும். பிறப்பால் நான்கு பிரிவுகள் உண்டு. அவற்றில் கீழ்க்குலத்தில் பிறந்த ஒருவன் கற்றிருந்தால் மேற்குலத்தில் பிறந்தவனும் அவனிடம் அடக்கமாவான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!