சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கிய வரலாறு – Tamil Literature from Sangam age till Contemporary times Part 3 Pdf Questions With Answers
சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கிய வரலாறு – Tamil Literature from Sangam age till Contemporary times Part 3 Pdf Questions With Answers
1. “கடவுள் வல்கை யோடுனை மாய்த்துடல்
புட்கிரை யாக ஒல்செய்வேன்”
– இந்த வீரவரிகள் இவரால் கூறப்பட்டன.
(அ) தாவீது (ஆ) கோலியாத்து (இ) சவுல் மன்னன் (ஈ) சூசை
விளக்கம்:
தேம்பாவணி-வளன் செனித்த படலம்-தாவீதின் வீரமொழி
வெல்வை வேல்செயு மிடலதுன் மிடலடா நானோ
எல்வையா தரவியற் றெதிரி லாத்திறக் கடவுள்
வல்கை யோடுனை மாய்த்துடல் புட்கிரையாக
ஓல்செய் வேனெனா வுடைகவண் சுழற்றின னினையோன்
– வீரமாமுனிவர்.
2. திருக்காவலூர்க் கலம்பகம் இவரால் எழுதப்படவில்லை
(அ) வீரமாமுனிவர் (ஆ) தைரியநாத சாமி
(இ) கொன்ஸ்டான் ஜோசப் பெஸ்கி (ஈ) ஜி.யூ.போப்
விளக்கம்:
வீரமாமுனிவர் திருக்காவலூர்க் கலம்பகத்தை இயற்றினார். அவரது இயற்பெயர் கொன்ஸ்டான் ஜோசப் பெஸ்கி. முதலில் அவர் தைரியநாத சுவாமி என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார். அது வடமொழிப் பெயர் என அறிந்த பின் தூய தமிழில் வீரமாமுனிவர் எனப் பெயரை மாற்றிக் கொண்டார்.
ஜி.யூ.போப் தொகுத்த நூலின் பெயர் “தமிழ்செய்யுட் கலம்பகம்” ஆகும்.
3. திருக்குறள், திருவாசகம், நாலடியார் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
(அ) கால்டுவெல் (ஆ) ஜி.யூ.போப் (இ) ஜோசப் பெஸ்கி (ஈ) தெ.நொபிலி
4. பொருத்துக:
நூல் ஆசிரியர்
(அ) ஆசாரக்கோவை 1. கூடலூர்க்கிழார்
(ஆ) கார் நாற்பது 2. விளம்பிநாகனார்
(இ) முதுமொழிகாஞ்சி 3. கண்ணங்கூத்தனார்
(ஈ) நான்மணிக்கடிகை 4. பெருவாயின் முள்ளியார்
அ ஆ இ ஈ
(அ) 3 1 2 4
(ஆ) 4 3 1 2
(இ) 3 2 4 1
(ஈ) 1 3 2 4
5. பொருத்துக:
(அ) திருநாவுக்கரசர் 1. எட்டாம் திருமுறை
(ஆ) சம்பந்தர் 2. ஏழாம் திருமுறை
(இ) சுந்தரர் 3. முதல் மூன்று திருமுறை
(ஈ) மாணிக்கவாசகர் 4. 4,5,6-ஆம் திருமுறைகள்
அ ஆ இ ஈ
(அ) 4 3 2 1
(ஆ) 1 2 3 4
(இ) 3 4 2 1
(ஈ) 2 1 4 3
6. “தமிழ்ச் செய்யுட் கலம்பகம்” என்ற நூலைத் தொகுத்தவர்
(அ) வீரமாமுனிவர் (ஆ) எல்லீஸ் (இ) ஜி.யூ.போப் (ஈ) கால்டுவெல்
7. பாரத சக்தி மகா காவியம் இயற்றியவர்
(அ) சேமசுந்தர பாரதியார் (ஆ) சுத்தானந்த பாரதியார்
(இ) மகாகவி பாரதியார் (ஈ) பாரதிதாசன்
விளக்கம்:
பாரத சக்தி மகாகாவியத்தை இயற்றியவர் சுத்தானந்த பாரதியார் ஆவார். இதன் முதற்பதிப்பு 1948-இல் வெளி வந்தது. இக்காவியம் 50,000 அடிகளால் ஆனது.
8. “வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே” எனப் பாடியவர்
(அ) பாரதியார் (ஆ) பாரதிதாசன் (இ) கவிமணி (ஈ) நாமக்கல் கவிஞர்
விளக்கம்:
“வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே” பாரதிதாசன்.
“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” – பாரதியார்
9. பொருத்துக:
நூல் நூலாசிரியர்
அ. சிலப்பதிகாரம் 1. திருத்தக்கதேவர்
ஆ. மணிமேகலை 2. நாதகுத்தனார்
இ. சீவகசிந்தாமணி 3. இளங்கோவடிகள்
ஈ. குண்டலகேசி 4. சீத்தலைச்சாத்தனார்
அ ஆ இ ஈ
(அ) 2 3 1 4
(ஆ) 3 4 1 2
(இ) 3 4 2 1
(ஈ) 4 1 3 2
10. பொருத்துக:
அ. திருக்கோவையார் 1. சேக்கிழார்
ஆ. திருப்பாவை 2. மாணிக்கவாசகர்
இ. கலிங்கத்துப்பரணி 3. ஆண்டாள்
ஈ. பெரியபுராணம் 4. செயங்கொண்டார்
அ ஆ இ ஈ
(அ) 1 2 3 4
(ஆ) 2 3 4 1
(இ) 4 2 1 3
(ஈ) 2 3 1 4
11. “புதுநெறிகண்ட புலவர்” – என்று பாரதியாரால் போற்றப்பட்ட சிறப்புக்குரியவர் எவர்?
(அ) சேக்கிழார் (ஆ) தாயுமானவர்
(இ) மாணிக்கவாசகர் (ஈ) இராமலிங்க அடிகளார்
12. “இமயம் எங்கள் காலடியில்” என்ற கவிதைத் தொகுப்பு யாரால் எழுதப்பட்டது?
(அ) சிற்பி பாலசுப்பிரமணியம் (ஆ) தாரா பாரதி
(இ) ஆலந்தூர் கோ.மோகனரங்கன் (ஈ) சுரதா
விளக்கம்:
“இமயம் எங்கள் காலடியில்”என்ற கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் ஆவார். இந்நூல் தமிழக அரசின் பரிசினைப் பெற்றுள்ளது. “நல்ல உலகம் நாளை மலரும்” என்ற நூல் இவருடைய மற்றொரு கவிதைத் தொகுப்பு நூலாகும்.
13. “உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்” என வழங்கப்பெறும் நூல் எது?
(அ) மணிமேகலை (ஆ) சிலப்பதிகாரம் (இ) வளையாபதி (ஈ) குண்டலகேசி
விளக்கம்:
சிலப்பதிகாரத்தின் சிறப்புப் பெயர்கள்: உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், ஒற்றுமைக்காப்பியம், மூவேந்தர் காப்பியம், குடிமக்கள் காப்பியம், சிலம்பு, தமிழின் முதல் காப்பியம், சமுதாயக் காப்பியம், சிறப்பதிகாரம்.
14. திருக்குறள் பாயிர இயலில் அமைந்துள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
(அ) ஐந்து (ஆ) நான்கு (இ) இரண்டு (ஈ) மூன்று
விளக்கம்:
திருக்குறள்-பாயிரவியலில் நான்கு அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவையாவன: கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை மற்றும் அறன் வலியுறுத்தல்
15. கலித்தொகையில் நெய்தற்கலியின் ஆசிரியர் யார்?
(அ) பெருங்கடுங்கோ (ஆ) கபிலர் (இ) நல்லந்துவனார் (ஈ) நல்லுருத்திரன்
விளக்கம்:
கலித்தொகை
திணை பாடியவர்
குறிஞ்சி கபிலர்
முல்லை சோழன் நல்லுருத்திரன்
மருதம் மருதன் இளநாகனார்
நெய்தல் நல்லந்துவனார்
பாலை பெருங்கடுங்கோ
16. கம்பராமாயணத்தின் ஐந்தாவது காண்டம்
(அ) ஆரண்ய காண்டம் (ஆ) சுந்தர காண்டம் (இ) கிட்கிந்தா காண்டம் (ஈ) யுத்த காண்டம்
விளக்கம்:
கம்பராமாயணம்:
1. பாலகாண்டம். 2. அயோத்தியா காண்டம். 3. ஆரண்ய காண்டம். 4. கிட்கிந்தா காண்டம். 5. சுந்தர காண்டம். 6. யுத்த காண்டம்
17. ரூபாயத் – என்ற சொல்லின் பொருள்
(அ) பணம் (ஆ) பாட்டு (இ) மூன்றடிச்செய்யுள் (ஈ) நான்கடிச் செய்யுள்
விளக்கம்:
“ரூபாயத்” என்றால் நான்கடிச் செய்யுள் என்பது பொருளாகும். இக்கவிதை நூலை எழுதியவர் பாரசீகத்தைச் சேர்ந்த உமர்கய்யாம் ஆவார். தமிழில் இக்கவிதை நூலை கவிமணி தேசிகவிநாயகனார் மொழிபெயர்த்துள்ளார்.
18. “கோதைவில் குரிசில் அன்னான்”
– இப்பாடலடி யாரைக் குறிக்கிறது?
(அ) சிவன் (ஆ) இராமன் (இ) அருச்சுனன் (ஈ) இலக்குவன்
விளக்கம்:
“கோதைவில் குரிசில் அன்னான்”
பொருள்: கோதண்டம் என்னும் வில்லேந்திய, ஆடவரில் நல்லவனாகிய இராமபிரான். கம்பராமாயணம்-அயோத்தியாக் காண்டம் (குகப்படலம்).
19. பொருந்தாத இணையினைக் காண்க:
(அ) யாதும் ஊரே யாவரும் கேளிர்-கணியன் பூங்குன்றனார்.
(ஆ) கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது – நாமக்கல் கவிஞர்
(இ) மங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டும்-கவிமணி
(ஈ) தேனொக்கும் செந்தமிழே நீ கனி-பாரதியார்
விளக்கம்:
“தேனொக்கும் செந்தமிழே நீ கனி நான் கிளி,
வேறென்னவேண்டும் இனி!” – பாரதிதாசன்
20. “தமிழ் செய்யுள் கலம்பகம்” இது யார் தொகுப்பு?
(அ) மறைமலை அடிகளார் (ஆ) திரு.வி.க (இ) க.சு.பிள்ளை (ஈ) ஜி.யூ.போப்
விளக்கம்:
ஜி.யூ.போப் அவர்கள், உயர்ந்த பண்பாடுகளை விளக்கும் 600 செய்யுள்களை நீதி நூல்களில் இருந்து ஆய்ந்தெடுத்து “தமிழ்ச்செய்யுட்கலம்பகம்” என்னும் நூலாகத் தொகுத்ததுடன் அந்தப் பாக்களுக்கு விளக்கங்களும் கொடுத்துள்ளார்.
21. “உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி
அடல்உறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வர்” என்னும் ——- வாக்கும் அறுவை மருத்துவத்தை மெய்ப்பிக்கின்றன.
(அ) சீத்தலைச்சாத்தனார் (ஆ) மாணிக்கவாசகர் (இ) கம்பர் (ஈ) திருமூலர்
22. “தற்குற்றம் வருவது ஓரான் புனைமலர்ச் சார்பால் அன்றி
அற்குற்ற சூழற்கு நாற்றம் இல்லையே என்றான் ஐயன்”
– இதில் “அல்கு” என்பதன் பொருள்.
(அ) மருள் (ஆ) இருள் (இ) உருள் (ஈ) திரள்
விளக்கம்:
அல்கு-இருள்
23. “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே”
– எனும் சொற்றொடர் இடம் பெறும் நூல்?
(அ) அகநானூறு (ஆ) புறப்பொருள் வெண்பாமாலை
(இ) நாலடியார் (ஈ) நற்றிணை
விளக்கம்:
“பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கொலிநீர் – கையகலக்
கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
முற்றோன்றி மூத்தகுடி” – புறப்பொருள் வெண்பாமாலை.
கரந்தைப்படலம் – 35-வது பாடல்
24. “தமிழ் மொழித் தூய்மை” இயக்கம் – தோன்றிய நூற்றாண்டு
(அ) 21-ஆம் நூற்றாண்டின் தொடக்கம்
(ஆ) 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கம்
(இ) 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கம்
(ஈ) 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கம்
25. கீழுள்ள நூல் பட்டியலில் பொருந்தா நூல் எது?
(அ) வேதியர் ஒழுக்கம் (ஆ) சதுரகராதி
(இ) தொன்னூல் விளக்கம் (ஈ) தமிழியக்கம்
விளக்கம்:
ஏனைய மூன்று நூல்களும் வீரமாமுனிவரால் இயற்றப்பட்டவை. “தமிழியக்கம்” என்ற நூல் பாவேந்தர் பாரதிதாசனால் எழுதப்பட்டது.
26. “He is a Prince among the Tamil Poets”
(தமிழ்க் கவிஞர்களின் இளவரசன்) என்று வீரமாமுனிவர் பாராட்டிய புலவர்
(அ) இளங்கோவடிகள் (ஆ) கம்பர் (இ) பாரதியார் (ஈ) திருத்தக்கத்தேவர்
27. “திருவாசகம்” யாரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது?
(அ) ரேணியஸ் (ஆ) ஜி.யூ.போப் (இ) எல்லீசர் (ஈ) லாசரஸ்
விளக்கம்:
ஜி.யூ.போப் அவர்கள் தமது 80-வது வயதில் கி.பி.1900-ஆம் ஆண்டில் திருவாசகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்டார்.
28. பொருத்துக:
நூல் ஆசிரியர் பெயர்
(அ) திரிகடுகம் 1. விளம்பிநாகனார்
(ஆ) சிறுபஞ்சமூலம் 2. கணிமேதாவியார்
(இ) ஏலாதி 3. நல்லாதனார்
(ஈ) நான்மணிக்கடிகை 4. காரியாசான்
அ ஆ இ ஈ
(அ) 1 4 2 3
(ஆ) 3 2 1 4
(இ) 3 4 2 1
(ஈ) 4 1 3 2
29. “Pilgrims Progress” என்னும் நூலினைத் தழுவி எழுதிய தமிழ் நூல் எது?
(அ) மனோன்மணியம் (ஆ) தேம்பாவணி
(இ) சீறாப்புராணம் (ஈ) இரட்சணிய யாத்திரிகம்
விளக்கம்:
ஜான்பன்யன் என்னும் புகழ்பெற்ற ஆங்கில நூலாசிரியர் இயற்றிய “பில்கிரிம்ஸ் புரோகிரஸ்” என்னும் நூலைத் தழுவி, ஹென்றி ஆல்பர்ட் கிருட்டிணபிள்ளை “இரட்சணிய யாத்ரீகம்” என்ற நூலை எழுதினார்.
30. “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” இந்நூலுக்குச் சொந்தமானவர்
(அ) கா.சு.பிள்ளை (ஆ) ரா.பி.சேதுப்பிள்ளை
(இ) தேவநேய பாவாணர் (ஈ) கால்டுவெல்
31. “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே”
– எனும் பாடலடிகள் யாருடையது?
(அ) புரட்சிக்கவிஞர் (ஆ) தேசியக்கவி (இ) காந்தியக் கவிஞர் (ஈ) கவிமணி
32. “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” இக்கூற்றுக்குரியவர் யார்?
(அ) கம்பர் (ஆ) கணியன் பூங்குன்றனார் (இ) ஒளவையார் (ஈ) இளங்கோவடிகள்
33. “துறவை மேல் நெறி” என்று உச்சத்தில் வைத்துப் படைக்கபட்டவை எவை?
(அ) சங்க இலக்கியங்கள் (ஆ) அற இலக்கியங்கள்
(இ) பக்தி இலக்கியங்கள் (ஈ) காப்பியங்கள்
34. பின்வருவனவற்றுள் வீரமாமுனிவர் எழுதாத நூல் எது?
(அ) தேம்பாவணி (ஆ) கித்தேரி அம்மாள் அம்மாணை
(இ) செந்தமிழ் இலக்கணம் (ஈ) ஆசாரக்கோவை
விளக்கம்:
ஆசாரக்கோவை-பெருவாயின் முள்ளியார்
35. சங்கம் மருவிய கால நூல்களைக் கீழ்க்கணக்கு எனக்கூறும் பாட்டியல் நூல் எது?
(அ) சிதம்பரப் பாட்டியல் (ஆ) நவநீதப் பாட்டியல்
(இ) பன்னிரு பாட்டியல் (ஈ) சுவாமிநாநாதப் பாட்டியல்
36. “ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந்தகைத்து”
– எனும் குறளில் வள்ளுவர் எழுத்தாளும் உவமை எது?
(அ) ஆட்டுக்கடா (ஆ) வேங்கை (இ) குதிரை (ஈ) நாய்
விளக்கம்:
ஊக்கமுடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து – குறள்:486
பொருள்: ஊக்கம் மிகுந்தவன் போருக்குச் செல்லாமல் அடங்கியிருப்பது. போரிடும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்காகப் பின்வாங்கும் தன்மையாது.
பொருதகர்-ஆட்டுக்கடா
37. “உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்” என்றவர்
(அ) இராமலிங்க அடிகளார் (ஆ) தாயுமானவர் (இ) திருநாவுக்கரசர் (ஈ) சுந்தரர்
38. இவற்றில் எது திருவள்ளுவருக்கு வழங்காத பெயர்?
(அ) மாதானுபங்கி (ஆ) பெருநாவலர் (இ) தேவர் (ஈ) காளிங்கர்
39. “மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற”
– மேற்கண்ட குறட்பாவில் இடம்பெறும் “ஆகுல” என்ற சொல்லிற்கான ஆங்கிலச் சொல்லைத் தேர்க:
(அ) OVER LOOK (ஆ) OVER POWER (இ) OVATION (ஈ) OVIPARUS
விளக்கம்:
ஆகுல-ஆரவாரத்தன்மை, Ovation-ஆரவாரம்.
40. “சேரிமொழியாற் செவ்விதிற் கிளந்து
தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற்
புலனென மொழிப புலன் உணர்ந்தோரே” என்று கூறியவர் யார்?
(அ) நற்கவிராச நம்பி (ஆ) பவணந்தி முனிவர்
(இ) ஐயனாரிதனார் (ஈ) தொல்காப்பியர்
விளக்கம்:
தொல்காப்பியர் குறிப்பிடும் “புலன்” என்னும் இலக்கியவகை “பள்ளு” என்ற இலக்கியவகைக்குப் பொருந்தும் என்பர்.
41. பொருத்துக:
பட்டிபயல் I பட்டியல் II
(அ) சரதம் 1. நிலா முற்றம்
(ஆ) சூளிகை 2. நாடு
(இ) மகோததி 3. வாய்மை
(ஈ) அவனி 4. கடல்
அ ஆ இ ஈ
(அ) 3 1 4 2
(ஆ) 2 1 3 4
(இ) 3 2 1 4
(ஈ) 1 4 3 2
விளக்கம்:
இராசராச சோழனுலா பாடல் எண்: 9 & 10
“தரைகொண்ட வேற்றரசர் தஞ்சென்னிப் பொன்னிக்
கரைகண்ட போர் முரசங் காணீர் – சரதப்
பவித்ர விசயப் படைப்பரசு ராமன்
கவித்த வபிடேகங் காணீர்”
- ஓட்டக்கூத்தர்
பொருள்: போரில் தோற்ற வேற்று நாட்டு மன்னர், முன்னர்த் தாம் இழந்த நாட்டினைப் பெற்றுக் கொண்டதற்காகத் தம் தலையில் மண் சுமந்து காவிரி அணை கட்டுமாறு செய்த போர் முரசத்தைக் காணுங்கள். வாய்மை, தூய்மை, வெற்றி ஆகியவற்றினை உடைய படையாகிய மழுவாயுதத்தைக் கைக்கொண்ட பரசுராமன் சூட்டிய கிரீடத்தைக் காணுங்கள்.
சரதம்-வாய்மை
பாடல் எண் 1
“மாளிகையும் சாலையு மாலயமு மண்டபமும்
சூளிகையு மெம்மருங்குந் தோரணமும்”
– ஓட்டக்கூத்தர்.
பொருள்: இராசராச சோழன் தெருவில் உலா வந்தவோது அவனைக் காணப் பல்வேறு குலமங்கையரும் மாளிகைகளிலும் சாலையிலும் கோயிலிலும் மண்டபத்திலும் நிலா முற்றங்களிலும் கூடியிருந்தனர்.
சூளிகை-நிலாமுற்றம்
பாடல் எண்:5
“வட்ட மகோததி வேவ வொருவாளி
விட்ட திருக்கொற்ற விற்காணீர்
– ஒட்டக்கூத்தர்.
பொருள்: உலகை வட்டமாய்ச் சூழ்ந்துள்ள பெருங்கடல் காய்ந்து வற்றுமாறு, முன்பு வளைத்து ஓர் அம்பினை விடுத்த சிறந்த வெற்றி பொருந்திய வில்லினைப் பாரீர்.
மகோததி-பெருங்கடல்
42. பொருந்தாத இணையினைக் காண்க:
(அ) “இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” – பாரதிதாசன்
(ஆ) “யாதும் ஊரே யாவரும் கேளிர்” – கணியன் பூங்குன்றனார்
(இ) “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்”- இளங்கோவடிகள்
(ஈ) “அழுது அடியடைந்த அன்பர்” – திருமூலர்
விளக்கம்:
“அழுது அடியடைந்த அன்பர்”
– மாணிக்கவாசகர்.
திருப்பெருந்துறை இறைவனை மெய்யுருகப் பாடிக் கசிந்து கண்ணீர் மல்கிஅ ழுது தொழுதவர் மாணிக்கவாசகர். அதனால் இவரை “அழுது அடியடைந்த அன்பர்” என்பர்.
43. “நல்லது செய்தல் ஆற்றீ ராயினும் அல்லது
செய்தல் ஓம்புமின்” – இவ்வடிகள் பெற்றுள்ள நூல்
(அ) பதிற்றுப்பத்து (ஆ) பரிபாடல் (இ) புறநாநூறு (ஈ) குறுந்தொகை
விளக்கம்:
“நல்லது செய்தல் ஆற்றீ ராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்” – என்ற அடிகள் புறநானூற்றில் அமைந்துள்ள பாடலடிகள் ஆகும். “பல்சான்றீரே பல்சான்றீரே” எனத்தொடங்கும் இப்பாடலை நரிவெரூஉத் தலையார் இயற்றியுள்ளார். இவர் சங்ககாலப் புலவர் என்பதைத் தவிர, வேறு தகவல்கள் கிடைக்கவில்லை. இவரின் பாடல்கள் புறநானூறு தவிர குறுந்தொகையிலும் திருவள்ளுவமாலையிலும் இடம் பெற்றுள்ளன.
பாடலின் பொருள்: உயிருடன் வாழும்போதே நல்லவற்றை செய்ய வேண்டும். அஃது இயலாத போது தீயதைச் செய்தலையாவது கைவிட வேண்டும்.
44. திருக்குறள் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?
அ. திரு+குறள் – திருக்குறள்: மேன்மை பொருந்திய குறள் வெண்பாக்களால் ஆகிய நூல் ஆதலின் “திருக்குறள்” எனப்பெயர் பெற்றது.
ஆ. நான்மறை, ஐம்பால், சதுர்வேதம் என்றும் திருக்குறளை கூறுவர்.
இ. திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளன.
ஈ. திருவள்ளுவருடைய காலம் கி.மு.32 என்றும் கூறுவர். இந்த ஆண்டைத் தொடக்கமாகக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
(அ) ஆ, ஈ சரியானவை (ஆ) அ, இ சரியானவை
(இ) இ, ஈ சரியானவை (ஈ) ஆ, இ சரியானவை
விளக்கம்:
திருக்குறளின் வேறுபெயர்கள்: முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ்மறை, பொதுமறை, திருவள்ளுவரின் காலம் கி.மு.31 என்றும் அறிஞர் சிலர் கூறுவர். இதைக் கணக்கில் கொண்டு திருவள்ளுவராண்டு கணக்கிடப்படுகிறது.
45. “நாடக இயல்” எனும் நூலை இயற்றியவர் யார்?
(அ) பரிதிமாற் கலைஞர் (ஆ) பம்மல் சம்மந்த முதலியார்
(இ) கிருஷ்ணசாமிப் பாவலர் (ஈ) விபுலானந்த அடிகள்
விளக்கம்:
“நாடக இயல்” என்ற நூல் பரிதிமாற்கலைஞரால் செய்யுள் வடிவில் இயற்றப்பட்ட நூலாகும். “சூரியநாராயண சாஸ்திரி” என்ற தனது பெயரைத் தனித்தமிழில் “பரிதிமாற் கலைஞர்” என இவர் மாற்றிக் கொண்டார். மேலும் ரூபாவதி, கலாவதி போன்ற நற்றமிழ் நாடகங்களையும், “மானவிஜயம்” என்ற இலக்கிய நாடகத்தையும் இயற்றியுள்ளார்.
46. “ஏலாதி” பற்றி கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
அ. பாடல்தோறும் ஆறு கருத்துகளை விளக்கிக் கூறும் அற இலக்கியம் “ஏலாதி”
ஆ. “ஏலாதி” நூல் தற்சிறப்புப்பாயிரம், சிறப்புப்பாயிரம் உட்பட நூறு செய்யுட்களைக் கொண்டது.
இ ஏலக்காய், இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் ஆறு பொருள்கள் சேர்ந்த மருந்து உடல்பிணி போக்கி நலம் செய்யும்.
ஈ. அதுபோல் ஏலாதியில் ஒவ்வொரு செய்யுளிலும் சொல்லப்பட்ட எட்டு கருத்துகளும் மக்களது மனநோயாகிய அறியாமையைப் போக்கித் தெளிவு தருவன.
(அ) ஆ மற்றும் இ (ஆ) இ மற்றும் ஈ (இ) அ மற்றும் இ (ஈ) அ மற்றும் ஈ
விளக்கம்:
ஏலாதி-இதனை இயற்றியவர் கணிமேதவியார். இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர். தற்சிறப்புப் பாயிரம் மற்றும் கடவுள் வாழ்த்து ஆகியவற்றைத் தவிர்த்து 80 பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலும் ஆறு கருத்துகளைக் கொண்டுள்ளது.
ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் ஆறு பொருள்களும் உடல் பிணியை நீக்குவதுபோல் ஏலாதியில் ஒவ்வொரு பாடலிலும் கூறப்பட்டுள்ள ஆறு கருத்துகளும் மக்களின் அறியாமையை நீக்க வல்லமை.
47. பொருந்தா இணையைக் கண்டறிக:
வழிபாட்டுப் பாடல்கள் ஆசிரியர்
(அ) இயேசு பெருமான் 1. எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
(ஆ) சிவபெருமான் 2. சுந்தரர்
(இ) புத்தபிரான் 3. நீலகேசி
(ஈ) நபிகள் நாயகம் 4. உமறுப்புலவர்
விளக்கம்:
“நீலகேசி” ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றாகும்.
குண்டலகேசி என்ற பௌத்த காப்பியத்திற்கு எதிராக எழுந்த சமண சமயக்காப்பியமாகும். இந்நூலின் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை. இந்நூல் 10 சருக்கங்களையும் 894 செய்யுள்களையும் கொண்டது. இதன் மற்றொரு பெயர் நீலகேசித் தெருட்டு, ஐந்து வகை மனிதர்களைப் பற்றி இந்நூலில் கூறப்பட்டுள்ளது.
48. திருக்குற்றாலக் குறவஞ்சி பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
அ. திருக்குற்றாலக் குறவஞ்சி நூலை இயற்றிய திரிகூடராசப்பக் கவிராயர் “மேலகரம் என்றும் ஊரில் பிறந்தவர்
ஆ. திருக்குற்றால நாதர் உலா வரும்போது அவரைக் கண்டு ஒரு பெண் அவர் மீது அன்பு கொண்டு நலிவதையும் அவளுக்குக் குறத்தி குறி சொல்வதும், குற்றாலக் குறவஞ்சியின் மையக் கதைப்பொருள் ஆகும்.
இ. குறவஞ்சி தொண்ணூறு வகைச் சிற்றிலக்கியங்களில் ஒன்று.
ஈ. “வசந்தவல்லி திருமணம்” எனவும் இந்நூல் வழங்கப்படுகிறது.
(அ) அ மற்றும் ஆ சரியானவை (ஆ) இ மற்றும் ஈ சரியானவை
(இ) ஆ மற்றும் இ சரியானவை (ஈ) அ மற்றும் ஈ சரியானவை
விளக்கம்:
“குறவஞ்சி” 96 வகை சிறிலக்கியங்களுள் ஒன்றாகும்.
49. “மயங்கி மறுகிற் பிணங்கி வணங்கி
உயங்கி யொருவர்க் கொருவர்” – இப்பாடலடியின் ஆசிரியர் யார்?
(அ) பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் (ஆ) கம்பர் (இ) குமரகுருபரர் (ஈ) ஒட்டக்கூத்தர்
விளக்கம்:
“மயங்கி மறுகிற் பிணங்கி வணங்கி உயங்கி யொருவர்க்கொருவர்”
இப்பாடலடியின் ஆசிரியர் ஒட்டக்கூத்தர். ஒட்டக்கூத்தர் இயற்றிய “மூவர் உலா” என்ற நூலின் ஒரு பகுதியான இராசராச சோழனுலா என்ற பகுதியில் இப்பாடலடிகள் அமைந்துள்ளன.
பாடலின் பொருள்: இராசராச சோழன் தெருவில் உலாவந்த போது அவனைக் காணவந்த பல்வேறு குலமங்கையர் மாளிகை, ஆடரங்கு, மண்டபம், சாளரம், செய்குன்று முதலிய எல்லா இடங்களிலும் குழுமியிருந்தனர். இவர்கள் தாங்கள் இருக்குமிடம் தெரியாதபடி ஒருவரையொருவர் பற்றி, மனமயங்கி, தெருவிலும் மாறுபட்டுக் கை குவித்து வணங்கி, ஒருவரோடு ஒருவர் நெருக்கத்தால் வருந்தி இருந்தனர் மறுகில்-தெருவில், பிணங்கி-மாறுபட்டு, உயங்கி-நெருக்கத்தால்
50. “ஒற்றுமைக் காப்பியம்” என்னும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
(அ) பெரியபுராணம் (ஆ) மணிமேகலை
(இ) கம்பராமாயணம் (ஈ) சிலப்பதிகாரம்
விளக்கம்:
ஒற்றுமைக் காப்பியம் எனப்படுவது சிலப்பதிகாரம் ஆகும். இந்நூலின் சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்களின் பெருமைகள் மற்றும் அவர்களின் தலைநகரங்களாகிய புகார், மதுரை, காஞ்சி ஆகியவற்றின் சிறப்புகள் பற்றி கூறப்பட்டுள்ளன. இந்நூலை இயற்றிய இளங்கோவடிகள் சேர, மன்னரின் இளவல் என்றாலும் சோழ, பாண்டிய நாடுகளின் சிறப்பு பற்றிக் கூறியமையாலும், இவர் சமண சமயத்தைச் சார்ந்திருந்தாலும் பிற மதங்களை இழித்துரையாமையாலும் இந்நூல்ஒற்றுமைக் காப்பியம் எனப்பட்டது.