சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கிய வரலாறு – Tamil Literature from Sangam age till Contemporary times Part 1 Pdf Questions With Answers
சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கிய வரலாறு – Tamil Literature from Sangam age till Contemporary times Part 1 Pdf Questions With Answers
1. “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்” – இப்பாடலடிகளில் இடம்பெற்றுள்ள ‘நடலை’க்கு இணையான ஆங்கிலச் சொல்லை எழுதுக:
(அ) Affection
(ஆ) Affliction
(இ) Attraction
(ஈ) Addition
விளக்கம்:
நடலை – துன்பம்
2. “இழுக்க லுடையழி ஊற்றுக்கோலற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்” – அடிக்கோடிட்ட சொல்லுக்கு
இணையான ஆங்கிலப் பதத்தினைத் தேர்க:
(அ) An assistant
(ஆ) Supporter
(இ) Staff
(ஈ) Friends
விளக்கம்:
வினாவில் கொடுக்கப்பட்டுள்ள குறளின் பொருள்: நல்லொழுக்கம் உடைய சான்றோரின் வாய்ச்சொற்கள், வழுக்கும் சேற்றில் உதவும் ஊன்றுகோல் போல் வாழ்க்கையில் நமக்கு எப்போதும் உதவியாக இருக்கும்.
ஊன்றுகோல் – Supporter
Assistant – உதவியாளர்
Staff – அலுவலர்
Friends – நண்பர்கள்
3. திரு.விக.இயற்றிய “பொதுமை வேட்டல்” என்னும் நூலில் உள்ள பாக்களின் எண்ணிக்கை ——–
(அ) நானூற்று முப்பது
(ஆ) இருநூற்று ஒன்று
(இ) முந்நூற்று ஆறு
(ஈ) நானூற்று எழுபது
விளக்கம்:
“பொதுமை வேட்டல்” என்ற நூலின் ஆசிரியர் திரு.வி.க. இந்நூலின் மைக்கருத்து நாடு, மதம், இனம், மொழி, நிறம் அனைத்தையும் கடந்து உலகத்தையே ஒரு குடும்பமாக கருதுவதாகும். இந்நூலின் 44 தலைப்புகளில் 430 பாக்கள் உள்ளன.
4. 17. பொருத்துக:
பட்டியல் I – பட்டியல் II
(அ) களவழி நாற்பது – 1. நிலையாமை
(ஆ) முதுமொழிக் காஞ்சி – 2. வேளாண் வேதம்
(இ) நாலடியார் – 3. ஆறு மருந்து
(ஈ) ஏலாதி – 4. புறப்பொருள்
குறியீடுகள்:
அ ஆ இ ஈ
(அ) 3 1 2 4
(ஆ) 2 3 4 1
(இ) 1 3 4 2
(ஈ) 4 1 2 3
விளக்கம்:
களவழி நாற்பது, போர்க்கள கொடுமைகளைப் பற்றி விளக்கும் புறப்பொருள் நூலாகும். முதுமொழிக்காஞ்சி வாழ்க்கையின் நிலையாமை பற்றிக் கூறுகிறது. நாலடியாரின் மற்றொரு பெயர் “வேளாண் வேதம்”. ஏலாதி கூறும் ஆறு மருந்துப் பொருள்களாவன. ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ, மிளகு, திப்பிலி, சுக்கு.
5. “நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுள்” என்று பாடத் தொடங்கிய புலவர் யார்?
(அ) கம்பர்
(ஆ) கபிலர்
(இ) இளங்கோவடிகள்
(ஈ) சீத்தலைச் சாத்தனார்
விளக்கம்:
கண்ணகியின் வரலாற்றை சீத்தலை சாத்தனார் மூலம் அறிந்த இளங்கோவடிகள், “சிலப்பதிகாரம்” என்னும் பெயரால் நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்” என்று கூறினார்.
6. நிகண்டுகளில் மிகப் பழமையானது ——–
(அ) சேந்தன் திவாகரம்
(ஆ) சூடாமணி நிகண்டு
(இ) அகராதி
(ஈ) இதில் எதுவுமில்லை
விளக்கம்:
“திவாகர நிகண்டு” என்னும் நூல் கி.பி.8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திவாகர் முனிவரால் இயற்றப்பட்டது. அக்காலத்தில் இருந்த “சேந்தன்” என்னும் அரசனின் வேண்டுகோளுக்கு இணங்க இயற்றப்பட்டதால் இந்நூல் “சேந்தன் திவாகரம்” எனப்படுகிறது. தமிழில் இன்றுள்ள திகண்டுகளில் இதுவே காலத்தால் முந்தையது. “சூடாமணி நிகண்டு” 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மண்டலபுருடர் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது.
7. “முருகு பொருநராறு பாணிரண்டு முல்லை”
இத்தொடரில் “பாணிரண்டு” என்ற தொடரால் குறிக்கப்படும் நூல்கள் எவை?
(அ) அகநானூறு, புறநானூறு
(ஆ) முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு
(இ) திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை
(ஈ) சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை
விளக்கம்:
பத்துப்பாட்டு எவையெவை என விளங்கும் வெண்பா,
“முருகுபொருநராறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி – மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத தொடும் பத்து”
இப்பாடலில் “முருகு” என்பது திருமுருகாற்றுப்படை, பொருநராறு என்பது பொருநராற்று படை, பாணிரண்டு என்பவை சிறுபாணாற்றுப்படை மற்றும் பெரும்பாணாற்றுப்படை “கடாம்” என்பது மலைபடுகடாம் ஆகியவற்றை குறிக்கின்றன. மேலும் மதுரைக்காஞ்சி, முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநெல்வாடை ஆகியவையும் பத்துப்பாட்டு நூல்களாகும்
8. அகராதி என்னும் சொல்லை முதன் முதலாக கையாண்டவர் யார்?
(அ) திருமூலர்
(ஆ) வீரமாமுனிவர்
(இ) திருநாவுக்கரசர்
(ஈ) கம்பர்
9. திருக்குறளை நாற்பதாண்டுகள் படித்துச் சுவைத்த போப், அதனை ஆங்கிலத்தில் எந்த ஆண்டு மொழிபெயர்த்து வெளியிட்டார்?
(அ) 1786
(ஆ) 1858
(இ) 1808
(ஈ) 1886
விளக்கம்:
ஜி.யூ.போப் அவர்கள் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1886-இல் வெளியிட்டார்.
10. பொருந்தாத தொடரைக் குறிப்பிடுக:
(அ) கலம்பகம்-பதினெட்டு உறுப்புகள்
(ஆ) சிற்றிலக்கியங்கள்-தொண்ணூற்றாறு
(இ) பிள்ளைத்தமிழ்-பத்துப்பருவங்கள்
(ஈ) பரணி-100 தாழிசைகள்
விளக்கம்:
இரண்டடித் தாழிசையால் பாடப்படுவது பரணி இலக்கியமாகும்.
11. சித்துகளின் எண்ணிக்கை
(அ) பன்னிரண்டு
(ஆ) பதினெட்டு
(இ) பத்து
(ஈ) எட்டு
விளக்கம்:
சித்துகளின் எண்ணிக்கை 8.
அணிமா-அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்
மகிமா-மலையைப் போல் பெரிய தேகத்தை அடைதல்
இலகிமா-காற்றைப்போல் இலேசாக மாறுதல்
கரிமா-மலைகளாலும் காற்றாலும் அசைக்க முடியாத அளவு கனமாக இருத்தல்
பிராப்தி-மனத்தினால் நினைத்த யாவற்றையும் அடைதல்
பிராகாமியம்-தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல்
ஈசத்துவம்-நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்துதல்
வசித்துவம்-அனைத்தையும் தன் வசப்படுத்துதல்
12. அடிவரையறை அறிந்து சரியான விடையைக் குறிப்பிடுக:
(1) 3-6 (2) 4-8 (3) 9-12 (4) 13-31
(அ) ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு
(ஆ) அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு
(இ) குறுந்தொகை, ஐங்குறுநூறு, நற்றிணை, அகநானூறு
(ஈ) நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, குறுந்தொகை
விளக்கம்:
ஐங்குறுநூறு-3-6 அடி. குறுந்தொகை- 4-8 அடி. நற்றிணை- 9-12 அடி. அகநானூறு- 13-31 அடி
13. பொருத்துக
பட்டியல் I – பட்டியல் II
அ. பேதையர் நட்பு – 1. உடுக்கை இழந்தகை
ஆ. பண்புடையார் தொடர்பு – 2. வளர்பிறை
இ. அறிவுடையார் நட்பு – 3. நவில் தோறும்
ஈ. இடுக்கண் களையும் நட்பு – 4. தேய்பிறை
குறியீடுகள்:
அ ஆ இ ஈ
(அ) 4 3 2 1
(ஆ) 3 4 2 1
(இ) 4 3 1 2
(ஈ) 1 2 3 4
விளக்கம்:
பேதையார் நட்பு தேய்பிறை போல் தேய்ந்து போகும் தன்மையுடையது. அறிவுடையார் நட்பு வளர்பிறை போல் வளரும் தன்மையுடையது. பண்புடையார் நட்பு நூலின் நற்பொருள் கற்க கற்க இன்பம் தருவதைப் போன்றது. உடை நெகிழ்ந்தவனது கை உடனே உதவி மானத்தைக் காப்பது போல நண்பனுக்கு துன்பம் வந்தால் அப்பொழுதே சென்று துன்பத்தை விரைந்து நீக்குவதுதான் சிறந்த நட்பு.
14. “ஆயிடை அணங்கின் கற்பும் ஐய நின்னருளும் செய்ய தூய
நல்லறனும் என்றிங்கிணையன தொடர்ந்து காப்ப”
இவ்வரிகளில் சீதையை அழியாமல் காப்பற்றியவை எவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது?
(அ) அன்பும் பண்பும்
(ஆ) அறிவும் ஆற்றலும்
(இ) அறனும் மறனும்
(ஈ) கற்பும் அருளும்
15. “வளன்” என்ற சொல்லால் குறிக்கப்படுபவன் யார்?
(அ) தாவீது
(ஆ) கோலியாத்து
(இ) சூசையப்பர்
(ஈ) சவுல் மன்னன்
விளக்கம்:
தேம்பாவணியில் “வளன்” என்று குறிப்பிடப்படுபவர் சூசையப்பர் ஆவார். இந்நூலை இயற்றியவர் வீரமாமுனிவர். இயேசு பெருமானின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது இந்நூல், யோசோப்பு என்றும் சூசை என்றும் ஒலிபெயர்க்கப்பட்ட ஜோசப் என்னும் பெயரை வீரமாமுனிவர் “வளன்” என்று தமிழ்ப்படுத்தியுள்ளார்.
16. கடலைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள்:
(அ) ஆழி, அம்பி, ஆர்கலி
(ஆ) பௌவம், முந்நீர், பரிசல்
(இ) ஆழி, ஆர்கலி, பௌவம்
(ஈ) வாரணம், பரவை, புணை
விளக்கம்:
கடலைக் குறிக்கும் தமிழ்ச்சொற்கள்: ஆழி, ஆர்கலி, முந்நீர், வாரணம், பௌவம், பரவை. புணரி, அம்பி, பரிசல், புணை-படகு.
17. பொருத்தமான விடையைக் கண்டறி:
“தமிழுக்குக் கதி” என்று போற்றப்படும் நூல்கள்
(அ) பாட்டும் தொகையும்
(ஆ) சிலம்பும் மேகலையும்
(இ) இராமாயணமும் குறளும்
(ஈ) பாரதமும் இராமாயணமும்
விளக்கம்:
தமிழுக்குக் கதி என்று போற்றப்படும் நூல்கள்: க-கம்பராமாயணம், தி-திருக்குறள். மேற்கண்ட கூற்றினைக் கூறியவர் செல்வ கேசவராய முதலியார் ஆவார்.
18. பொருத்துக:
பட்டியல் I – பட்டியல் II
(அ) கண் வனப்பு – 1. செல்லாமை
(ஆ) எண் வனப்பு – 2. இத்துணையாம்
(இ) பண் வனப்பு – 3. கண்ணோட்டம்
(ஈ) கால் வனப்பு – 4. கேட்டார் நன்றென்றல்
குறியீடு:
அ ஆ இ ஈ
(அ) 3 2 4 1
(ஆ) 3 1 2 4
(இ) 1 2 4 3
(ஈ) 2 3 4 1
விளக்கம்:
சிறுபஞ்சமூலம்: கண்வனப்புக் கண்ணோட்டம், கால்வனப்புச் செல்லாமை
எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல் – பண்வனப்புக்
கேட்டார்நன் றென்றல், கிளர்வேந்தன் தன்னாடு
வாட்டான்நன் றென்றல் வனப்பு. – காரியாசான்
19. ஆற்றுப்படுத்தல் என்பதன் பொருள்
(அ) அன்பு காட்டுதல் (ஆ) ஆறுதல் கூறுதல் (இ) வழிகாட்டுதல் (ஈ) ஆதரவு தருதல்
விளக்கம்:
ஆற்றுப்படுத்துதல்-வழிகாட்டுதல். பத்துப்பாட்டு நூல்களுள் திருமுருகாற்றுப் படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை (மலைப்படுகடாம்), ஆகிய நூல்கள் மன்னரிடம் பரிசில் பெற்ற ஒருவர் மற்றொருவரை மன்னரிடம் ஆற்றுப் படுத்துவதாக (வழிகாட்டுவதாக) அமைந்துள்ளன.
20. ஐஞ்சிறுகாப்பியம்-இவற்றுள் பொருந்தா நூலைக் கண்டறி.
(அ) உதயண குமார காவியம்
(ஆ) இராவண காவியம்
(இ) நாக குமார காவியம்
(ஈ) யசோதர காவியம்
விளக்கம்:
ஐஞ்சிறுகாப்பியங்கள்: சூளாமணி, நீலகேசி, உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்.
21. பொருத்துக:
புலவர் – நூல்
(அ) உமறுப்புலவர் – 1. தொன்னூல் விளக்கம்
(ஆ) கம்பர் – 2. நரிவிருத்தம்
(இ) திருத்தக்கதேவர் – 3. சிலை எழுபது
(ஈ) வீரமாமுனிவர் – 4. முதுமொழிமாலை
குறியீடுகள்:
(அ) (ஆ) (இ) (ஈ)
(அ) 4 2 3 1
(ஆ) 4 3 2 1
(இ) 3 1 4 2
(ஈ) 2 4 1 3
22. “உறுமிடத் துதவா உவர்நிலம்” என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?
(அ) புறநானூறு
(ஆ) அகநானூறு
(இ) ஐங்குறுநூறு
(ஈ) திருக்குறள்
விளக்கம்:
புறநானூறு
அறுகுளத் துகுத்து மகல்வயற் பொழிந்தும்
உறுமிடத் துதவா துவர்நில மூட்டியும்
வரையா மரபின் மாரி போலக்
கடாஅ யானைக் கழற்கால் பேகன்
கொடைமடம் படுத லல்லது
படைமடம் படான்பிறர் படைமயக் குறினே. – பரணர். மேற்கண்ட பாடல் வையாவிக் கோப்பெரும் பேகன் என்னும் குறுநில மன்னனை பரணர் புகழ்ந்து பாடியதாகும்
23. “கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்
கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப்போக” – எனப் பாடியவர்
(அ) வள்ளலார் (ஆ) பாரதியார் (இ) பெருந்தேவனார் (ஈ) பாரதிதாசனார்
24. “உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கரியவன்” – எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?
(அ) கந்தபுராணம்
(ஆ) திருமந்திரம்
(இ) பெரியபுராணம்
(ஈ) திருவிளையாடற்புராணம்
விளக்கம்:
பெரிய புராணத்தின் முதல் செய்யுள்:
‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன்; அம்பலத்து ஆடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவோம்” – சேக்கிழார்
25. “வள்ளுவனைப் பெற்றதாற் பெற்றதே புகழ் வையகமே” – பாடியவர் யார்?
(அ) பாரதியார் (ஆ) சுரதா (இ) தாரா பாரதி (ஈ) பாரதிதாசன்
26. “இம்மென்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும், அம்மென்றால் ஆயிரம் பாட்டும்” பாடவல்ல ஆசுகவி யார்?
(அ) காளமேகப்புலவர் (ஆ) பாரதியார் (இ) இளஞ்சூரியர் (ஈ) முது சூரியர்
விளக்கம்:
ஆசுகவி என்பவர் “பாடு” என்று கூறியவுடன் பாடுபவர்.
27. தவறான கூற்றைத் தேர்வு செய்க:
(அ) “மானிடவர்க்கு என்று பேச்சுப்படில் வாழ்கில்லேன்”-ஆண்டாள்
(ஆ) “வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்”-குலசேகர ஆழ்வார்
(இ) “கருவினும் கருவாய் பெருந்தவம் புரிந்த கருத்தனைப் பொருந்துதல் கருத்தே”-எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
(ஈ) “ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி”-மாணிக்கவாசகர்
விளக்கம்:
“கருவினும் கருவாய் பெருந்தவம் புரிந்த கருத்தனைப் பொருந்துதல் கருத்தே”-உமறுப்புலவர் (சீறாப்புரணம்)
28. பொருத்துக:
(அ) சிலப்பதிகாரம் 1. சீர்திருத்தக் காப்பியம்
(ஆ) மணிமேகலை 2. சொற்போர் காப்பியம்
(இ) சீவகசிந்தாமணி 3. குடிமக்கள் காப்பியம்
(ஈ) குண்டலகேசி 4. வருணனைக் காப்பியம்
குறியீடுகள்:
(அ) (ஆ) (இ) (ஈ)
(அ) 3 1 4 2
(ஆ) 3 2 4 1
(இ) 2 1 3 4
(ஈ) 4 3 1 2
29. சரசுவதி என்று சித்தர்கள் எதனைக் குறிப்பிடுகின்றனர்?
(அ) காசினிக்கீரை (ஆ) வல்லாரைக் கீரை (இ) பசலைக்கீரை (ஈ) அகத்திக் கீரை
30. நடிப்புச் செவ்வியும் இலக்கியச் செவ்வியும் ஒருங்கே அமையப்பெற்ற காப்பியம் எது?
(அ) சிலப்பதிகாரம் (ஆ) பாஞ்சாலி சபதம் (இ) மனோன்மணீயம் (ஈ) மணிமேகலை
31. பாரதியின் படைப்பில் இசையின் பெருமை பேசும் நூல் எது?
(அ) கண்ணன் பாட்டு (ஆ) குயில் பாட்டு (இ) பாப்பா பாட்டு (ஈ) பாஞ்சாலி சபதம்
32. “புதுநெறிகண்ட புலவர்” என்று போற்றப்பட்டவர்
(அ) இராமலிங்க அடிகளார்
(ஆ) தாயுமானவர்
(இ) திரு.வி.க.
(ஈ) கவிமணி
விளக்கம்:
இராமலிங்க அடிகளாரை “புதுநெறிகண்ட புலவர்” என்று போற்றியவர் பாரதியார்
33. பொருத்துக:
பட்டியல் I – பட்டியல் II
(அ) அன்பிலார் – 1. ஆர்வமுடைமை
(ஆ) அன்புடையார் – 2. உயிர்நிலை
(இ) அன்பு ஈனும் – 3. என்பும் உரியர் பிறர்க்கு
(ஈ) அன்பின் வழியது – 4. எல்லாம் தமக்குரியர்
குறியீடுகள்:
(அ) (ஆ) (இ) (ஈ)
(அ) 2 3 4 1
(ஆ) 4 3 1 2
(இ) 1 4 2 3
(ஈ) 3 2 1 4
34. கம்பநாடகத்தின் யாப்பு வண்ணங்களின் எண்ணிக்கை
(அ) 100
(ஆ) 80
(இ) 96
(ஈ) 108
விளக்கம்:
கம்பராமாயணத்தின் கம்பர் 96 ஓசை வகைகளைக் கையாண்டுள்ளார். “வரமிகு கம்பன் சொன்ன வண்ணமும் தொண்ணாற்றாறே’ என்ற கணக்கீடு உள்ளது.
35. “பண்ணொடு தமிழொப்பாய்” எனத் தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல்
(அ) திருவாசகம்
(ஆ) தேவாரம்
(இ) திருக்கோவையார்
(ஈ) திருமந்திரம்
36. பொருந்தாத தொடரைக் கண்டறி:
(அ) அடக்கம் அமரருள் உய்க்கும்
(ஆ) கற்க கசடற
(இ) தீதும் நன்றும் பிறர்தர வாரா
(ஈ) செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்
விளக்கம்:
ஏனைய மூன்றும் திருவள்ளுவரின் கூற்றுகளாகும்.
புறநானூறு – 192
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா – கணியன் பூங்குன்றனார்
37. பொருத்துக:
கூற்று – கூறியவர்
(அ) தேரா மன்னா செப்புவது உடையேன் – 1. மணிமேகலை
(ஆ) தீயும் கொல்லாத் தீவினை யாட்டியேன் – 2. கோவலன்
(இ) சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக்குக – 3. கண்ணகி
(ஈ) சீறடிச் சிலம்பு கொண்டுபோய் மாறிவருவன் – 4. ஆதிரை
குறியீடுகள்:
(ஆ) (ஆ) (இ) (ஈ)
(அ) 3 4 1 2
(ஆ) 3 4 2 1
(இ) 4 3 2 1
(ஈ) 1 2 3 4
38. 63 தனியடியார் வரலாற்றைக் கூறும் நூல் எது?
(அ) கந்தபுராணம்
(ஆ) திருவிளையாடற்புராணம்
(இ) பெரியபுராணம்
(ஈ) தணிகை புராணம்
39. “வையக மெல்லா மெமதென் றெழுதுமே” என்ற புகழ்ச்சிக்குரிய மன்னன் யார்?
(அ) சேரன்
(ஆ) பல்லவன்
(இ) சோழன்
(ஈ) பாண்டியன்
விளக்கம்:
“முத்தொள்ளாயிரம்” என்ற நூல் சேர, சோழ, பாண்டிய மன்னர்களைப் பற்றி புகழ்ந்து பாடுவதாகும்.
பாண்டிய மன்னனின் சிறப்பு: “நெருங்கி அமைந்த இலை போன்ற வடிவிலான வேலையுடைய பாண்டிய மன்னனின் யானையானது பகை மன்னரின் அகன்ற மார்பினை ஓலையாகக் கொண்டு தன் கூரிய தந்தத்தினை எழுத்தாணியாக்கி, “செல்வம் நிலைத்த உலகமெல்லாம் எம் பாண்டியருக்கே உரியது” என எழுதியது”
40. “கற்பனைக் களஞ்சியம்” – என்று போற்றப்படுபவர்
(அ) தண்டபாணி தேசிகர்
(ஆ) அமிர்தகவிராயர்
(இ) சவ்வாதுப்புலவர்
(ஈ) சிவப்பிரகாச சுவாமிகள்
விளக்கம்:
கற்பனைக் களஞ்சியம் என்று போற்றப்படுபவர் சிவப்பிரகாச சுவாமிகள். இவருடைய பிற சிறப்புப் பெயர்கள் சிற்றிலக்கியப் புலவர், நன்னெறி சிவப்பிரகாசர், துறைமங்கலம் சிவப்பிரகாசர்.
இவர் இயற்றிய நூல்களுள் சில:
நால்வர் நான்மணி மாலை, சோணாசலமாலை, திருச்செந்தூர் நீரோட்டக யமக அந்தாதி (உதடு ஒட்டாமல் பாடப்படும் ஒருவகை பா), திருவெங்கை உலா, சதமணி மாலை, பிரபுலிங்க லீலை, பழமலை அந்தாதி, கொச்சகக் கலிப்பா, நெஞ்சுவிடு தூது நன்னெறி.
41. சேரமான் பெருமாள் நாயனார் பாடாத நூல் எது?
(அ) பொன் வண்ணத்தந்தாதி
(ஆ) திருவாரூர் மும்மணிக்கோவை
(இ) போற்றிக் கலிவெண்பா
(ஈ) ஞான உலா
விளக்கம்:
போற்றிக் கலிவெண்பாவின் ஆசிரியர் நக்கீரர், வினாவில் கொடுக்கப்பட்டுள்ள நான்கு நூல்களும் 11-ஆம் திருமுறையில் அமைந்துள்ளன.
42. பின்வருவனவற்றுள் எது சமண இலக்கியம் இல்லை?
(அ) சீவசிந்தாமணி
(ஆ) சூளாமணி
(இ) குண்டலகேசி
(ஈ) நீலகேசி
விளக்கம்:
குண்டலகேசி-பௌத்த காப்பியம், ஏனைய மூன்றும் சமணக் காப்பியங்களாகும்.
43. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
கூற்று A : 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று கலம்பகம்.
காரணம் R : பலவகைப் பாக்களையும் கலந்து பாடுவது, கலம்பகம், அகமும் புறமும் கலந்து பாடப்படுவது கலம்பகம்.
(அ) A சரி ஆனால் R தவறு
(ஆ) A தவறு ஆனால் R சரி
(இ) A மற்றும் R இரண்டும் சரி
(ஈ) A மற்றும் R இரண்டும் தவறு
விளக்கம்:
கலம்பகம் 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்றாகும். பல்வகைப் பொருள்களைப் பற்றி பாடல்களைக் கலந்து இயற்றப்பெறும் நூல் கலம்பகம் எனப்படும். 18 உறுப்புகளைக் கொண்டது. தமிழில் முதன் முதலில் தோன்றிய கலம்பக வகை நூல் கலம்பகம் ஆகும்.
44. நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது – இக்குறட்பாலில் “நுணங்கிய” என்னும் பொருளுணர்த்தும் ஆங்கிலச்சொல்
(அ) SILENCER
(ஆ) INTELLIGENT
(இ) SIGNOR
(ஈ) SILVER-TONGUED
விளக்கம்:
நுணங்கிய-நுட்பமான அறிவு. நுட்பமான அறிவு-Intelligent.
45. “மனைக்கு விளக்கம் மடவார் மடவார்
தனக்குத் தகைசால் புதல்வர்” – இப்பாடல் ஆசிரியரைக் கண்டறிந்து எழுதுக:
(அ) விளம்பி நாகனார்
(ஆ) சமண முனிவர்
(இ) முன்றுறை அரையனார்
(ஈ) நல்லாதனார்
விளக்கம்:
விளம்பிநாகனார் எழுதிய “நான்மணிக்கடிகை” என்ற நூலில் வினாவில் கொடுக்கப்பட்டுள்ள பாடலடிகள் அமைந்துள்ளன.
46. அற நூல்களிலிருந்து ஆய்ந்தெடுத்துத் “தமிழ்ச் செய்யுட் கலம்பகம்” – என்னும் நூலாகத் தொகுத்து விளக்கம் அளித்தவர்
(அ) H.A.கிருஷ்ணப்பிள்ளை
(ஆ) வீரமாமுனிவர்
(இ) ஜி.யூ.போப்
(ஈ) கால்டுவெல்
விளக்கம்:
ஜி.யூ.போப் அவர்கள் உயர்ந்த பண்பாடுகளை விளக்கும் 600 செய்யுள்களை நீதிநூல்களில் இருந்து தேர்ந்தெடுத்து “தமிழ்ச் செய்யுட் கலம்பகம்” என்னும் நூலாகத் தொகுத்ததுடன் அதன் பாக்களுக்கு விளக்கமும் கொடுத்துள்ளார்.
47. பொருளறிந்து பொருத்துக:
I II
(அ) பிடர்தலை ஏறியவர் 1. துர்க்கை
(ஆ) எழுவருள் இளையவர் 2. பத்ரகாளி
(இ) இறைவனை நடனமாடச் செய்தவர் 3. பிடாரி
(ஈ) தாருகன் மார்பைப் பிளந்தவர் 4. கொற்றவை
அ ஆ இ ஈ
(அ) 4 3 2 1
(ஆ) 3 4 1 2
(இ) 4 3 1 2
(ஈ) 2 1 4 3
விளக்கம்:
சிலப்பதிகாரம் (மதுரைக்காண்டம்-வழக்குரை காதை)
பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி
வெற்றிவேல் தடக்கைக் கொற்றவை அல்லள்
அறுவர்க் கிளைய நங்கை இறைவனை
ஆடல்கண் டருளிய அணங்கு சூருடைக்
கானகம் உகந்த காளி தாருகன்
வாயிற்காப்போன் கூற்று
இடம்: பாண்டிய மன்னன் அவை
பீறிட்டு எழும் குருதி ஒழுகும் பிடர்த்தலை பீடத்தில் ஏறிய இளங்கொடியாகிய கொற்றவையும் அல்லள்; கன்னியர் எழுவருள் இளையவளாகிய பிடாரியும் அல்லள்; இறைவனை நடனமாடச் செய்த பத்ரகாளியும் அல்லள்; தாருகன் என்ற அசுரனின் பரந்த மார்பைப் பிளந்த துர்க்கையும் அல்லள்.
48. “மதியிலி அரசர் நின் மலரடி பணிகலர்
வானகம் ஆள்வாரே” – இப்பாடலுக்குரிய அரசன் ————-
(அ) இராஜராஜ சோழன்
(ஆ) நந்திவர்மன்
(இ) நரசிம்வர்மன்
(ஈ) சுந்தர பாண்டியன்
விளக்கம்:
நந்தி மன்னனின் வீரம் குறித்து நந்திக் கலம்பத்தில்,
“மதியிலி அரசர்நின் மரலடி பணிகிலர்
வானகம் ஆள்வாரே” – என்ற அடிகள் அமைந்துள்ளன.
பொருள்: அறிவில்லாதவரான அரசர், உன்னுடைய தாமரை மலர் போன் திருவடிகளை வணங்காதவராகித் தேவர் உலகத்தை ஆள்பவராவர்.
49. சாதுவன் வாணிகம் செய்யும் பொருட்டுக் கடல் கடந்து சென்ற
குறிப்பு – இடம் பெற்ற நூல் எது?
(அ) சீவகசிந்தாமணி
(ஆ) சிலப்பதிகாரம்
(இ) குண்டலகேசி
(ஈ) மணிமேகலை
50. நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின் – என்னும் குறள் கூறும் கருத்தின் அடிப்படையில் பின்வருவனவற்றில் எதைக் குறிக்கும்?
(அ) மருத்துவ அறிவு
(ஆ) அணுவியல் அறிவு
(இ) மண்ணியல் அறிவு
(ஈ) நீரியல் அறிவு
விளக்கம்:
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தொழிலி
தான் நல்கா தாகி விடின். – திருக்குறள்: 17
பொருள்: மேகம் கடலிலிருந்து நீரை முகந்து சென்று மீண்டும் அதனிடத்திலே பெய்யாதொழியுமானால், அப்பெரிய கடலும் தன் வளம் குன்றிப்போகும்.
நீரியல் அறிவு: நீர் மழையாக மண்ணிற்கு வருவதும் ஆவியாகி விண்ணிற்கு செல்வதுமான சுழற்சி கூறப்பட்டுள்ளது. மழையில்லையேல் புவியின் தட்பவெப்பநிலை மாறும்.