Advanced Tamil Questions

கவிதையியல் 12th Advanced Tamil Unit 1 Questions

12th Advanced Tamil Unit 1 Questions

1] கவிதையியல்

1) பேசுபவர், எதிர் வினையாற்றுபவர் ஆகிய இருவருக்குமான உரையாடல் வடிவம் எது?

A) கவிதை

B) கதை

C) நாடகம்

D) கட்டுரை

விளக்கம்: கவிதை, கதை, நாடகம், கட்டுரை என்ற நான்கும் இலக்கிய வடிவங்களான உள்ளன.

பேசுபவர், எதிர் வினையாற்றுபவர் ஆகிய இருவருக்குமான உரையாடல் வடிவம் நாடகம் ஆகும்.

2) சீன மொழியின் செவ்வியல் இலக்கியக் காலகட்டம் எது?

A) கி.மு 1ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 2ஆம் நூற்றாண்டு வரை

B) கி.மு 5ஆம் நூற்றாண்டு முதல் கி.மு 4ஆம் நூற்றாண்டு வரை

C) கி.மு 8ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 3ஆம் நூற்றாண்டு வரை

D) கி.மு 4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 8ஆம் நூற்றாண்டு வரை

விளக்கம்: கி.மு 1ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 2ஆம் நூற்றாண்டு வரை – இலத்தீன்

கி.மு 5ஆம் நூற்றாண்டு முதல் கி.மு 4ஆம் நூற்றாண்டு வரை – கிரேக்கம்

கி.மு 8ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 3ஆம் நூற்றாண்டு வரை -சீன மொழி

கி.மு 4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 8ஆம் நூற்றாண்டு வரை – சமஸ்கிருதம்

3) சங்கப்புலவர்களில் பெண்பாற்புலவர்கள் எண்ணிக்கை எத்தனை?

A) 49

B) 47

C) 48

D) 51

விளக்கம்: தமிழின் செவ்வியல் தன்மைக்குச் சான்றாக சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. பாட்டும் தொகையுமான பதினெட்டு நூல்களும் சங்க இலக்கியங்கள் என அறியப்படுகின்றன. பாட்டு என்பது பத்துப்பாட்டையும், தொகை என்பது எட்டுத்தொகையையும் குறிக்கும். இவற்றைப் பதினெண்மேற்கணக்கு நூல்கள் என்பர். இவை தமிழ்மக்களின் அக மற்றும் புற வாழ்வியல் கூறுகளை அறிய உதவுகின்றன.

சங்கப்பாடல்களின் எண்ணிக்கை 2381. இவற்றுள் அகத்திணைப்பாடல்கள் 1862. புறத்திணைப்பாடல்கள் 519. சங்கப்புலவர் எண்ணிக்கை 473. பெண்பாற்புலவர்களின் எண்ணிக்கை 49.

4) சிறுபஞ்சமூலத்திற்கு பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.

A) சிறுவழுதுணை

B) பெருவழுதுணை

C) நெருஞ்சி

D) பெருமல்லி

விளக்கம்: மருந்து பொருட்களாலான நூல்கள்:

சிறுபஞ்சமூலம் – நெருஞ்சி, கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி

ஏலாதி- ஏலம், இலவங்கம், நாககேசுரம், திப்பிலி, சுக்கு, மிளகு.

திரிகடுகம் – சுக்கு, மிளகு, திப்பிலி.

5) புதிய ஆத்திச்சூடியை எழுதியவர் யார்?

A) ஒளவையார்

B) பாரதிதாசன்

C) நாமக்கல் கவிஞர்

D) பாரதியார்

விளக்கம்: புதிய ஆத்திச்சூடி – பாரதியார்

6) சிலம்பின் சிறுநகை என்ற காப்பியத்தை எழுதியவர் யார்?

A) முடியரசன்

B) சுத்தானந்த பாரதி

C) சாலை இளந்திரையன்

D) புலவர் குழந்தை

விளக்கம்: பழங்காப்பிய மரபைப் பின்பற்றிய காப்பியங்களும், புதுக்கவிதை போன்ற புதிய மரபைப் பின்பற்றிய காப்பியங்களும் இருபதாம் நூற்றாண்டில் படைக்கப்பட்டன. சாலை இளந்திரையன் சிலம்பின் சிறுநகை என்ற காப்பியத்தை இயற்றினார். இது பழங்காப்பிய மரபைப் பின்பற்றி படைக்கப்பட்டது.

7) கவிதையின் வடிவம், உள்ளடக்கம், வெளிப்பாட்டு முறை என அனைத்துக் கூறுகளையும் விளக்குவது எது?

A) நன்னூல்

B) தொல்காப்பியம்

C) அகத்தியம்

D) தண்டியலங்காரம்

விளக்கம்: இலக்கியவியல் பற்றிய பேச்சு என்பது தமிழில் செய்யுளாகவே தொடங்குகிறது. தொல்காப்பியச் செய்யுள் கவிதையின் வடிவம், உள்ளடக்கம், வெளிப்பாட்டு முறை என அனைத்துக் கூறுகளையும் விளக்குகிறது.

8) திருப்பதிகம் என்ற நூலை எழுதியவர் யார்?

A) குலசேகராழ்வார்

B) தொண்டரடிப்பொடியாழ்வார்

C) பெரியாழ்வார்

D) திருபாணாழ்வார்

விளக்கம்: குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி

தொண்டரடிப்பொடியாழ்வார் – திருமலை, திருப்பள்ளியெழுச்சி

பெரியாழ்வார் – திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி

திருபாணாழ்வார் – திருப்பதிகம்

9) தமிழின் தொல்லிலக்கணமான தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களில் ஐவகை இலக்கணங்களைக் கூறுகிறது?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: தமிழின் தொல்லிலக்கணமான தொல்காப்பியம் மூன்று அதிகாரங்களில் ஐவகை இலக்கணங்களைக் கூறுகிறது.

1. எழுத்து அதிகாரம் – எழுத்துக்களின் ஒலி மற்றும் வரிவடிவங்களின் தோற்றம், வகை, அளவு, எழுத்துகள் சொல்லாக மாறுதல், சொற்கள் புணர்தல் போன்றவை விளக்கப்படுகின்றன.

2. சொல் அதிகாரம் – சொற்களின் வகை, உருபுகள், சொற்கள் இணைந்து தொடராக மாறுதல் போன்றவை விளக்கப்படுகின்றன.

3. பொருள் அதிகாரம் – நேர்ப்பொருள் தரும் சொற்றொடர் பற்றிப் பேசாமல் புனைவாக உருவாக்கப்படும் சொற்றொடர்களின் மொழியையும் அதன் பொருளையும் பேசுகின்றது.

10) காலம், இடம், பாத்திரங்கள் ஆகிய மூவோர்மைகள் இலக்கியத்தின் அடிப்படைக் கூறுகள் என்பது யாருடைய வரையறை?

A) தண்டி

B) ஷேக்ஸ்பியர்

C) அரிஸ்டாட்டில்

D) தொல்காப்பியர்

விளக்கம்: காலம், இடம், பாத்திரங்கள் ஆகிய மூவோர்மைகள் இலக்கியத்தின் அடிப்படைக்கூறுகள் என்பது அரிஸ்டாட்டிலின் வரையறை. இம்மூன்றிற்கும் இடையேயுள்ள வினையோர்மைகள் பற்றிய இக்கோட்பாடே உலக இலக்கியத்தின் அடிப்படை.

11) படைப்பாளன் தன் கருத்துக்களை உணர்ச்சிகளோடு வெளிப்படுத்தும் வடிவம் எது?

A) கவிதை

B) கதை

C) கட்டுரை

D) நாடகம்

விளக்கம்: கவிதை, கதை, நாடகம், கட்டுரை என்ற நான்கும் இலக்கிய வடிவங்களாக உள்ளன. இவ்வடிவங்களுக்குள் பல வகைகள் உள்ளன.

கவிதை – படைப்பாளன் தன் கருத்துக்களை உணர்ச்சிகளோடு வெளிப்படுத்தும் வடிவம்.

நாடகம் – பேசுபவர், எதிர் வினையாற்றுபவர் ஆகிய இருவருக்குமான உரையாடல் வடிவம்

கதை – படைப்பாளரே அனைத்துப் பாத்திரங்களையும் இயங்கச் செய்யும் வடிவம்

கட்டுரை – படைப்பாளன் தன் கருத்துக்களை முன்னிலைப்படுத்தி எழுதும் வடிவம்.

12) தொல்காப்பியர் கூறும் செய்யுள் உறுப்புகள் 34 ஆகும். இதில் பொருந்தாதது எது?

A) எச்சம்

B) தொன்மை

C) தோல்

D) தளை

விளக்கம்: தொல்காப்பியர் செய்யுளின் உறுப்புகள் 34 என்று குறிப்பிடுகிறார்.

அவை, மாத்திரை, எழுத்து, அசை, சீர், அடி, தொடை, யாப்பு, தூக்கு, மரபு, பா, நோக்கு, கூற்று, அளவு, திணை, கைகோள், கேட்போர், களன், காலம், பயன், மெய்ப்பாடு, எச்சம், முன்னம், பொருள், துறை, மாட்டு. வண்ணம், அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு.

13) ஏலாதி என்ற அறநூலை எழுதியவர் யார்?

A) கணிமேதாவியார்

B) கூடலூர் கிழார்

C) முன்றுறையரையனார்

D) பெருவாயின் முள்ளியார்

விளக்கம்: ஆசாரக்கோவை – பெருவாயின்முள்ளியார்

பழமொழி நானூறு – முன்றுறையரையனார்

ஏலாதி – கணிமேதாவியார்

முதுமொழிக்காஞ்சி – கூடலூர்கிழார்.

14) பின்வருவனவற்றில் ஒளவையார் பாடாத நூல் எது?

A) ஆத்திச்சூடி

B) நீதிபேதம்

C) கொன்றை வேந்தன்

D) நல்வழி

விளக்கம்: ஒளவையார் பாடிய நூல்கள்:

ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி

நீதி பேதம் – வேதநாயகர்

15) கூற்றுகளை ஆராய்க.

1. டெல்லி சுல்தான்கள் படையெடுப்பின் காரணமாகத் தமிழகத்தில் இசுலாம் பரவியது.

2. இசுலாமியப் பாடல்கள் மொழிபெயர்ப்புப் பாடல்களாகவும், நேரடிப் பாடல்களாகவும் இருவகைகளில் பாடப்பெற்றன.

3. 17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் மேலைநாட்டவர் பெருமளவில் தமிழகத்திற்கு வருகைபுரிந்தனர். அவர்களுள் கிறித்துவ மதபோதகர்களும் அடங்குவர்.

4. தமிழில் கிறித்துவ இலக்கியங்கள் பல்கிப்பெருக காரணம், தமிழகத்திற்கு வந்த கிறித்துவ மதப்போதகர்களின் பன்மொழிப் புலமை, பல்துறை அறிவு மற்றும் தமிழின்வழி தங்கள் சமயக் கருத்துக்களைப் பரப்பியதே ஆகும்.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) 4 மட்டும் தவறு

விளக்கம்: 15-ஆம் நூற்றாண்டின் இறுதியில் மேலைநாட்டவர் பெருமளவில் தமிழகத்திற்கு வருகைபுரிந்தனர். அவர்களுள் கிறித்துவ மதபோதகர்களும் அடங்குவர்.

16) இராவண காவியம் என்ற காப்பியத்தை இயற்றியவர் யார்?

A) கவிமணி தேசிக விநாயகம்

B) கண்ணதாசன்

C) சுத்தானந்த பாரதி

D) புலவர் குழந்தை

விளக்கம்: பழங்காப்பிய மரபைப் பின்பற்றிய காப்பியங்களும், புதுக்கவிதை போன்ற புதிய மரபைப் பின்பற்றிய காப்பியங்களும் இருபதாம் நூற்றாண்டில் படைக்கப்பட்டன. புலவர் குழந்தை எழுதிய இராவண காப்பியம் பழங்காப்பிய மரபைப் பின்பற்றி படைக்கப்பட்டவை.

17) கூற்று: திரிகடும் என்ற நூலை எழுதியவர் கணிமேதாவியார்.

காரணம்: சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் கலந்த மருந்து உடல்நோயைத் தீர்ப்பது போல, இந்நூலின் ஒவ்வொரு செய்யுளிலும் உள்ள மூன்று கருத்துக்கள் உள்ளத்து நோயைத் தீர்ப்பதால் இந்நூல் திரிகடும் எனப் பெயர் பெற்றது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும்சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று.அதில் முதலாவதாக அமைந்த நூல் திரிகடுகம் ஆகும். இது சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் கலந்த மருந்து உடல்நோயைத் தீர்ப்பது போல, இந்நூலின் ஒவ்வொரு செய்யுளிலும் உள்ள மூன்று கருத்துக்கள் உள்ளத்து நோயைத் தீர்ப்பதால் இந்நூல் திரிகடும் எனப் பெயர் பெற்றது. 100 வெண்பாக்களைக் கொண்ட இந்நூலின் ஆசிரியர் நல்லாதனார் ஆவார்.

18) ஏலாதிக்கு பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க

A) நாககேசுரம்

B) திப்பிலி

C) சிறுமல்லி

D) இலவங்கம்

விளக்கம்: மருந்து பொருட்களாலான நூல்கள்:

சிறுபஞ்சமூலம் – நெருஞ்சி, கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி

ஏலாதி – ஏலம், இலவங்கம், நாககேசுரம், திப்பிலி, சுக்கு, மிளகு.

திரிகடுகம் – சுக்கு, மிளகு, திப்பிலி.

19) கூற்றுகளை ஆராய்க.

1. சங்ககாலச் சமுதாயம் இயற்கை சார்ந்த சமுதாயமாக விளங்கியது.

2. சங்ககாலத்தில் திணைநிலைச்சமூகம் நிலைபெற்றிருந்தது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. சங்ககாலச் சமுதாயம் இயற்கை சார்ந்த சமுதாயமாக விளங்கியது.

2. சங்ககாலத்தில் திணைநிலைச்சமூகம் நிலைபெற்றிருந்தது.

20) இலத்தீன் மொழியின் செவ்வியல் இலக்கியக் காலகட்டம் எது?

A) கி.மு1ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 2ஆம் நூற்றாண்டு வரை

B) கி.மு5ஆம் நூற்றாண்டு முதல் கி.மு 4ஆம் நூற்றாண்டு வரை

C) கி.மு8ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 3ஆம் நூற்றாண்டு வரை

D) கி.மு4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 8ஆம் நூற்றாண்டு வரை

விளக்கம்: கி.மு 1ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 2ஆம் நூற்றாண்டு வரை – இலத்தீன்

கி.மு 5ஆம் நூற்றாண்டு முதல் கி.மு 4ஆம் நூற்றாண்டு வரை – கிரேக்கம்

கி.மு 8ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 3ஆம் நூற்றாண்டு வரை – சீன மொழி

கி.மு 4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 8ஆம் நூற்றாண்டு வரை – சமஸ்கிருதம்.

21) படைப்பாளரே அனைத்துப் பாத்திரங்களையும் இயங்கச் செய்யும் வடிவம் எது?

A) கவிதை

B) கதை

C) கட்டுரை

D) நாடகம்

விளக்கம்: கவிதை, கதை, நாடகம், கட்டுரை என்ற நான்கும் இலக்கிய வடிவங்களாக உள்ளன. இவ்வடிவங்களுக்குள் பல வகைகள் உள்ளன.

கவிதை – படைப்பாளன் தன் கருத்துக்களை உணர்ச்சிகளோடு வெளிப்படுத்தும் வடிவம்.

நாடகம் – பேசுபவர், எதிர் வினையாற்றுபவர் ஆகிய இருவருக்குமான உரையாடல் வடிவம்

கதை – படைப்பாளரே அனைத்துப் பாத்திரங்களையும் இயங்கச் செய்யும் வடிவம்

கட்டுரை – படைப்பாளன் தன் கருத்துக்களை முன்னிலைப்படுத்தி எழுதும் வடிவம்.

22) புறவடிவத்தில் உள்ள வேறுபாடுகளின் அடிப்படையில் பா எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: செய்யுளியலில் ஒரு பாவின் உறுப்புகள் 34 என வரையறை செய்துள்ள தொல்காப்பியம் அடிகளின் அளவு, அடிவரையறை, உண்டாக்கப்படும் ஒலியளவு போன்றவற்றையும் விரிவாகப் பேசுகின்றது. அவற்றைப் பாக்களின் புறவடிவம் எனக் கொள்ளலாம். புறவடிவத்தில் உள்ள வேறுபாடுகளின் அடிப்படையில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என வகைப்படுத்தப்படுவதை இவ்வியல் வழி அறிகிறோம்.

23) இளம்பூரனார் கீழ்க்காணும் எந்த நூலுக்கு உரை எழுதியுள்ளார்?

A) அகத்தியம்

B) தண்டியலங்காரம்

C) தொல்காப்பியம்

D) நன்னூல்

விளக்கம்: இளம்பூரனார் தொல்காப்பியத்திற்கு உரை எழுதியுள்ளார். பாக்களின் புறவடிவத்தைச் செய்யுளில் கூறிய தொல்காப்பியர், அதன் உள்ளடகத்தைப் பொருளதிகாரத்தின் முதல் ஐந்து இயல்களில் கூறியுள்ளார். கவிதை எப்படி உருவாக்குவது? எப்படி வாசிப்பது? என்பதற்கான விரிவான பதில் தொல்காப்பியத்தில் கிடைக்கிறது.

24) கூற்றுகளை ஆராய்க.

1. சங்க இலக்கியங்களின் காலம் கி.மு.6ஆம் நூற்றாண்டு முதல் கி.பி2-ஆம் நூற்றாண்டு வரையான காலம் என்பர்.

2. ஐங்குநூற்றில் முல்லைத்திணைப் பாடல்களை எழுதியவர் பேயனார் ஆவார்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. சங்க இலக்கியங்களின் காலம் கி.மு.6ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 2-ஆம் நூற்றறாண்டு வரையான காலம் என்பர்.

2. ஐங்குநூற்றில் முல்லைத்திணைப் பாடல்களை எழுதியவர் பேயனார் ஆவார்.

25) தொல்காப்பியர் கூறும் செய்யுள் உறுப்புகள் 34 ஆகும். இதில் பொருந்தாதது எது?

A) மெய்ப்பாடு

B) யாப்பு

C) தோள்

D) விருந்து

விளக்கம்: தொல்காப்பியர் செய்யுளின் உறுப்புகள் 34 என்று குறிப்பிடுகிறார்.

அவை, மாத்திரை, எழுத்து, அசை, சீர், அடி, தொடை, யாப்பு, தூக்கு, மரபு, பா, நோக்கு, கூற்று, அளவு, திணை, கைகோள், கேட்போர், களன், காலம், பயன், மெய்ப்பாடு, எச்சம், முன்னம், பொருள், துறை, மாட்டு. வண்ணம், அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு.

26) கூத்தாற்றுப்படை என்று அழைக்கப்படும் நூல் எது?

A) பட்டினப்பாலை

B) மலைபடுகடாம்

C) முல்லைப்பாட்டு

D) நெடுநல்வாடை

விளக்கம்: கூத்தாராற்றுப்படை என்று அழைக்கப்படும் நூல் மலைபடுகடாம் ஆகும். இது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும். இது புறம் சார்ந்த நூல் ஆகும்.

27) கூற்றுகளை ஆராய்க.

1. தன்மனத்திற்குள் தோன்றும் அகநிலைப்பட்ட புணர்தல், இருத்தல், இரங்கல், ஊடல், பிரிதல். ஒருதலைக்காமம், பொருந்தாக்காமம் ஆகிய உணர்வுகளை உரிப்பொருளாகக் கொண்டு அகக்கவிதைகள் எழுதப்படுகின்றன.

2. புறவாழ்க்கை குறித்து எழுதப்படுவனவற்றைப் புறத்திணைகள் என்று தொல்காப்பியர் வரையறுத்துள்ளார்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. தன்மனத்திற்குள் தோன்றும் அகநிலைப்பட்ட புணர்தல், இருத்தல், இரங்கல், ஊடல், பிரிதல். ஒருதலைக்காமம், பொருந்தாக்காமம் ஆகிய உணர்வுகளை உரிப்பொருளாகக் கொண்டு அகக்கவிதைகள் எழுதப்படுகின்றன. இவற்றை அகத்திணைகள் என தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்

2. புறவாழ்க்கை குறித்து எழுதப்படுவனவற்றைப் புறவாழ்க்கை என்று தொல்காப்பியர் வரையறுத்துள்ளார்.

28) அரிஸ்டாட்டில் பாத்திரங்களையும் அவற்றின் செயல்களையும் கீழ்க்காணும் எதனை மையப்படுத்தியே அமைத்துள்ளார்?

A) முதற்பொருள்

B) கருப்பொருள்

C) உரிப்பொருள்

D) மேற்காணும் அனைத்தும்

விளக்கம்: முதற்பொருள் என்பதும் நிலமும் பொழுதும். இலக்கிய உருவாக்கத்தை நாடகத்தின் வழியாக விளக்கும் அரிஸ்டாட்டில் இவ்விரண்டையும் மையப்படுத்துகிறார். பாத்திரங்களையும் அவற்றின் செயல்களையும் முதற்பொருளை மையப்படுத்தியே அமைத்துள்ளார்.

29) கூற்றுகளை ஆராய்க.

1. ஓரை என்றால் ‘ஒலி எழுப்புதல்’ என்று பொருள்.

2. ஓரை என்பது சங்ககால இளம் மகளிர் விளையாடிய விளையாட்டுகளில் ஒன்றாகும்.

3. இது ஆரவாரம் எழுமாறு ஆடப்படும் ஆட்டங்களைக் குறித்ததாகக் கொள்ளலாம்.

4. கடலலை பாயும் மணலிலும், ஆற்று மணலிலும், சேற்று நிலத்திலும், முற்றத்தில் பரப்பபட்ட மணலிலும் ஓரை விளையாடப்பட்டதைச் சங்கப்பாடல்கள் தெரிவிக்கின்றன.

A) 1, 4 சரி

B) 2, 3 சரி

C) 1, 2, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. ஓரை என்றால் ‘ஒலி எழுப்புதல்’ என்று பொருள்.

2. ஓரை என்பது சங்ககால இளம் மகளிர் விளையாடிய விளையாட்டுகளில் ஒன்றாகும்.

3. இது ஆரவாரம் எழுமாறு ஆடப்படும் ஆட்டங்களைக் குறித்ததாகக் கொள்ளலாம்.

4. கடலலை பாயும் மணலிலும், ஆற்று மணலிலும், சேற்று நிலத்திலும், முற்றத்தில் பரப்பபட்ட மணலிலும் ஓரை விளையாடப்பட்டதைச் சங்கப்பாடல்கள் தெரிவிக்கின்றன.

30) தவறான கூற்றை தெரிவு செய்க

A) அறமும், நீதியும் சங்க காலத்தில் போற்றப்பட்டன.

B) கழுமலத்தில் நடைபெற்ற போரில் சோழன் கோச்செங்கணான், சேரன் கணைக்கால் இரும்பொறையை வென்று சிறையிலிட்டதால், அவனை மீட்க பொய்கையார் பாடிய நூல் களவழி நாற்பது ஆகும்.

C) சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன.

D) முதுமொழிக்காஞ்சி என்ற நூலை எழுதியவர் கூடலூர் கிழார்

விளக்கம்: அறமும், நீதியும் சங்கம் மருவிய காலத்தில் போற்றப்பட்டன.

கழுமலத்தில் நடைபெற்ற போரில் சோழன் கோச்செங்கணான், சேரன் கணைக்கால் இரும்பொறையை வென்று சிறையிலிட்டதால், அவனை மீட்க பொய்கையார் பாடிய நூல் களவழி நாற்பது ஆகும்.

சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன.

முதுமொழிக்காஞ்சி என்ற நூலை எழுதியவர் கூடலூர் கிழார்

31) செய்யுளியலில் ஒரு பாவின் உறுப்புகள் எத்தனை என தொல்காப்பியம் வரையறை செய்துள்ளது?

A) 18

B) 24

C) 34

D) 48

விளக்கம்: செய்யுளியலில் ஒரு பாவின் உறுப்புகள் 34 என வரையறை செய்துள்ள தொல்காப்பியம் அடிகளின் அளவு, அடிவரையறை, உண்டாக்கப்படும் ஒலியளவு போன்றவற்றையும் விரிவாகப் பேசுகின்றது. அவற்றைப் பாக்களின் புறவடிவம் எனக் கொள்ளலாம்.

32) 100 வெண்பாக்களைக் கொண்ட மருந்து பெயர் கொண்ட அறநூலை எழுதியவர் யார்?

A) நல்லாதனார்

B) காரியாசான்

C) கணிமேதாவியார்

D) சமண முனிவர்கள்

விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று.அதில் முதலாவதாக அமைந்த நூல் திரிகடுகம் ஆகும். இது சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் கலந்த மருந்து உடல்நோயைத் தீர்ப்பது போல, இந்நூலின் ஒவ்வொரு செய்யுளிலும் உள்ள மூன்று கருத்துக்கள் உள்ளத்து நோயைத் தீர்ப்பதால் இந்நூல் திரிகடும் எனப் பெயர் பெற்றது. 100 வெண்பாக்களைக் கொண்ட இந்நூலின் ஆசிரியர் நல்லாதனார் ஆவார்.

33) படைப்பாளன் தன் கருத்துக்களை முன்னிலைப்படுத்தி எழுதும் வடிவம் எது?

A) கவிதை

B) கதை

C) கட்டுரை

D) நாடகம்

விளக்கம்: கவிதை, கதை, நாடகம், கட்டுரை என்ற நான்கும் இலக்கிய வடிவங்களாக உள்ளன. இவ்வடிவங்களுக்குள் பல வகைகள் உள்ளன.

கவிதை – படைப்பாளன் தன் கருத்துக்களை உணர்ச்சிகளோடு வெளிப்படுத்தும் வடிவம்.

நாடகம் – பேசுபவர், எதிர் வினையாற்றுபவர் ஆகிய இருவருக்குமான உரையாடல் வடிவம்

கதை – படைப்பாளரே அனைத்துப் பாத்திரங்களையும் இயங்கச் செய்யும் வடிவம்

கட்டுரை – படைப்பாளன் தன் கருத்துக்களை முன்னிலைப்படுத்தி எழுதும் வடிவம்

34) திரிகடுகத்திற்கு பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க

A) ஏலம்

B) சுக்கு

C) மிளகு

D) திப்பிலி

விளக்கம்: மருந்து பொருட்களாலான நூல்கள்:

சிறுபஞ்சமூலம் – நெருஞ்சி, கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி

ஏலாதி – ஏலம், இலவங்கம், நாககேசுரம், திப்பிலி, சுக்கு, மிளகு.

திரிகடுகம் – சுக்கு, மிளகு, திப்பிலி.

35) செவ்வியல் என்ற சொல்லை பிரித்து எழுதுக.

A) செம்மை+இயல்

B) செழுமை+இயல்

C) செவ்வை+இயல்

D) செ+இயல்

விளக்கம்: உலகளவில் ‘செவ்வியல்’ என்ற பொருளில் ‘கிளாசிசம்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலச்சொல்லாக ‘கிளாசிகஸ்’ என்ற இலத்தீன் சொல் உள்ளது. தமிழில் செவ்வியல் என்பதன் மூலச்சொல் ‘செம்மை’ என்பதாகும். செம்மை, இயல் என்ற இரு சொற்கள் இணைந்து செவ்வியல் என்ற சொல் உருவானது.

36) முதுமொழிக்காஞ்சி என்ற நூலை எழுதியவர் யார்?

A) கணிமேதாவியார்

B) கூடலூர் கிழார்

C) முன்றுறையரையனார்

D) பெருவாயின் முள்ளியார்

விளக்கம்: ஆசாரக்கோவை – பெருவாயின்முள்ளியார்

பழமொழி நானூறு – முன்றுறையரையனார்

ஏலாதி – கணிமேதாவியார்

முதுமொழிக்காஞ்சி – கூடலூர்கிழார்.

37) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.

A) திருமுருகாற்றுப்படை

B) பொருநராற்றுப்படை

C) சிறுபாணாற்றுப்படை

D) நெடுநல்வாடை

விளக்கம்: அகம்: குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை.

புறம்: திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் (கூத்தாற்றுப்படை), மதுரைக்காஞ்சி.

38) பின்வருவனவற்றில் வேதநாயகர் பாடாத நூல் எது?

A) நீதி சிந்தாமணி

B) பெண்மதிமாலை

C) நீதிநூல்

D) நீதி பேதம்

விளக்கம்: நீதி சிந்தாமணி – வேதகிரியார்

பெண்மதிமாலை, நீதிநூல், நீதிபேதம் – வேதநாயகர்.

39) ஒரு பாவில் அல்லது கவிதையில் மூன்று கூறுகள் இடம்பெறுதல் சிறப்பு. அவற்றில் முக்கியமானது எது?

A) முதற்பொருள்

B) கருப்பொருள்

C) உரிப்பொருள்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: ஒரு பாவில் அல்லது கவிதையில் மூன்று கூறுகள் இடம்பெறுதல் சிறப்பு. அவை

1. முதற்பொருள்

2. கருப்பொருள்

3. உரிப்பொருள்.

இம்மூன்றில் உரிப்பொருள் முக்கியமானது ஆகும்

40) தொல்காப்பியர் கூறும் செய்யுள் உறுப்புகள் 34 ஆகும். இதில் பொருந்தாதது எது?

A) புலன்

B) தினை

C) கேட்போர்

D) களன்

விளக்கம்: தொல்காப்பியர் செய்யுளின் உறுப்புகள் 34 என்று குறிப்பிடுகிறார்.

அவை, மாத்திரை, எழுத்து, அசை, சீர், அடி, தொடை, யாப்பு, தூக்கு, மரபு, பா, நோக்கு, கூற்று, அளவு, திணை, கைகோள், கேட்போர், களன், காலம், பயன், மெய்ப்பாடு, எச்சம், முன்னம், பொருள், துறை, மாட்டு. வண்ணம், அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு.

41) விவேக சிந்தாமணி என்ற நூலை எழுதியவர் யார்?

A) உலகநாதர்

B) சிவப்பிரகாசர்

C) முனைப்பாடியார்

D) பெயர் அறிய முடியவில்லை

விளக்கம்: விவேக சிந்தாமணியை எழுதியவர் பெயரை அறியமுடியவில்லை.

உலகநாதர் – உலகநீதி

சிவப்பிரகாசர் – நன்னெறி

முனைப்பாடியார் – அறநெறிச்சாரம்

42) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.

A) குயில்பாட்டு

B) கண்ணன்பாட்டு

C) பாஞ்சாலி சபதம்

D) பாண்டியன் பரிசு

விளக்கம்: பழங்காப்பிய மரபைப் பின்பற்றிய காப்பியங்களும், புதுக்கவிதை போன்ற புதிய மரபைப் பின்பற்றிய காப்பியங்களும் இருபதாம் நூற்றாண்டில் படைக்கப்பட்டன.

கண்ணன்பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் – பாரதியார்

பாண்டியன் பரிசு – பாரதிதாசன்

43) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.

A) சமஸ்கிருதம்

B) இலத்தீன்

C) ஹீப்ரு

D) குஜராத்தி

விளக்கம்: தமிழ், சீனம், சமஸ்கிருதம், இலத்தீன், ஹீப்ரு, கிரேக்கம் போன்ற செவ்வியல் மொழிகள் அனைத்தும் எழுத்து வடிவத்தைப் பெற்ற பின்னரே செவ்வியல் இலக்கியங்களை உருவாக்கின.

44) தமிழில் செவ்வியல் என்ற சொல்லின் மூலச்சொல் ___________ என்பதாகும்?

A) செழுமை

B) செம்மை

C) வளமை

D) வளம்

விளக்கம்: உலகளவில் ‘செவ்வியல்’ என்ற பொருளில் ‘கிளாசிசம்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலச்சொல்லாக ‘கிளாசிகஸ்’ என்ற இலத்தீன் சொல் உள்ளது. தமிழில் செவ்வியல் என்பதன் மூலச்சொல் ‘செம்மை’ என்பதாகும்.

45) கிரேக்க மொழியின் செவ்வியல் இலக்கியக் காலகட்டம் எது?

A) கி.மு1ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 2ஆம் நூற்றாண்டு வரை

B) கி.மு5ஆம் நூற்றாண்டு முதல் கி.மு 4ஆம் நூற்றாண்டு வரை

C) கி.மு8ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 3ஆம் நூற்றாண்டு வரை

D) கி.மு4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 8ஆம் நூற்றாண்டு வரை

விளக்கம்: கி.மு 1ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 2ஆம் நூற்றாண்டு வரை – இலத்தீன்

கி.மு 5ஆம் நூற்றாண்டு முதல் கி.மு 4ஆம் நூற்றாண்டு வரை – கிரேக்கம்

கி.மு 8ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 3ஆம் நூற்றாண்டு வரை – சீன மொழி

கி.மு 4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 8ஆம் நூற்றாண்டு வரை – சமஸ்கிருதம்

46) பெருமாள் திருமொழி என்ற நூலை எழுதியவர் யார்?

A) குலசேகராழ்வார்

B) தொண்டரடிப்பொடியாழ்வார்

C) பெரியாழ்வார்

D) திருபாணாழ்வார்

விளக்கம்: குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி

தொண்டரடிப்பொடியாழ்வார் – திருமலை, திருப்பள்ளியெழுச்சி

பெரியாழ்வார் – திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி

திருபாணாழ்வார் – திருப்பதிகம்

47) மணிமேகலைப் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

A) கோவலுனுக்கும் மாதவிக்கும் பிறந்த பெண் மணிமேகலை

B) தனக்கு நேர்ந்த கதி தன் மகளுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவளையும் தன்னைப்போலவே சமண துறவியாக்கி இருந்தாள் மாதவி.

C) வஞ்சிமாநகர் வந்து கண்ணகி கோட்டத்தில் கண்ணியை வணங்குகிறாள்

D) கதைக்களம், பாத்திரங்கள், கருத்துக்கள் இரண்டிலும் தொடர்வதால் சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் இரட்டைக்காப்பியம் என்பர்.

விளக்கம்: கோவலுனுக்கும் மாதவிக்கும் பிறந்த பெண் மணிமேகலை

தனக்கு நேர்ந்த கதி தன் மகளுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவளையும் தன்னைப்போலவே பௌத்தத் துறவியாக்கி இருந்தாள் மாதவி.

வஞ்சிமாநகர் வந்து கண்ணகி கோட்டத்தில் கண்ணியை வணங்குகிறாள்

கதைக்களம், பாத்திரங்கள், கருத்துக்கள் இரண்டிலும் தொடர்வதால் சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் இரட்டைக்காப்பியம் என்பர்.

48) கூற்று: பரணி என்ற சிற்றிலக்கிய வகை தோற்றம் பெறுவதற்கு காரணமான நூல் களவழி நாற்பது ஆகும்.

காரணம்: யானைப் போர் பற்றி களவழி நாற்பது நூல் குறிப்பிடுகிறது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: யானைப் போர் பற்றி களவழி நாற்பது நூலில் குறிப்பிடப்படுவதால் பரணி என்ற சிற்றிலக்கிய வகை தோற்றம் பெறுவதற்கு இந்நூலே காரணம் என்பர். இதிலுள்ள ஒவ்வொரு பாடலின் இறுதி சொல்லும் ‘அட்டக்களத்து’ என்று முடிவது இதன் சிறப்பு.

49) கூற்றுகளை ஆராய்க.

1. பாரதியின் வாழ்க்கை வரலாற்றைப் புதுக்கவிதை வடிவில் கவிராஜன் கதை என்னும் பெயரில் காப்பியமாகப் படைத்துள்ளார் வைரமுத்து.

2. கவிஞர் வாலி இராமயணத்தை அவதார புருஷன் என்ற பெயரிலும், மகாபாரதத்தை பாண்டவர் பூமி என்ற பெயரிலும் புதுக்கவிதை வடிவில் காப்பியமாக்கியுள்ளார்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும்சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. பாரதியின் வாழ்க்கை வரலாற்றைப் புதுக்கவிதை வடிவில் கவிராஜன் கதை என்னும் பெயரில் காப்பியமாகப் படைத்துள்ளார் வைரமுத்து.

2. கவிஞர் வாலி இராமயணத்தை அவதார புருஷன் என்ற பெயரிலும், மகாபாரதத்தை பாண்டவர் பூமி என்ற பெயரிலும் புதுக்கவிதை வடிவில் காப்பியமாக்கியுள்ளார்.

50) பெரியபுராணம் பற்றிய தவறான கூற்றை தெரிவு செய்க.

A) பெரியபுராணம் எனப்படும் திருத்தொண்டர் புராணம் பெருங்காப்பிய இலக்கணங்கள் பொருந்தியும் சில நெகிழ்ச்சிகளை உள்வாங்கியும் இயற்றப்பெற்ற சைவக் காப்பியமாகும்.

B) நம்பியாண்டார் நம்பி எழுதிய ‘திருத்தொண்டர்தொகை’ சுந்தரர் எழுதிய ‘திருத்தொண்டர் திருவந்தாதி’ ஆகிய நூல்களை முதல் நூலாகக் கொண்டு இந்நூல் இயற்றப்பட்டது.

C) இது 63 அடியார் பெருமக்களை மையமாகக் கொண்டு திகழ்கின்றது.

D) இந்நூல் பெரும்பிரிவாக இரண்டு காண்டங்களையும், உட்பிரிவாக 13 சருக்கங்களையும் உடையது.

விளக்கம்: சுந்தரர் எழுதிய ‘திருத்தொண்டர்தொகை’ நம்பியாண்டார்நம்பி எழுதிய ‘திருத்தொண்டர் திருவந்தாதி’ ஆகிய நூல்களை முதல் நூலாகக் கொண்டு இந்நூல் இயற்றப்பட்டது.

51) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.

A) ஏலாதி

B) சிறுபஞ்சமூலம்

C) திரிகடுகம்

D) நான்மணிக்கடிகை

விளக்கம்: மருந்து பொருட்களாலான நூல்கள்:

சிறுபஞ்சமூலம் – நெருஞ்சி, கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி

ஏலாதி – ஏலம், இலவங்கம், நாககேசுரம், திப்பிலி, சுக்கு, மிளகு.

திரிகடுகம் – சுக்கு, மிளகு, திப்பிலி.

52) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.

A) குறிஞ்சிப்பாட்டு

B) முல்லைப்பாட்டு

C) பட்டினப்பாலை

D) கூத்தாராற்றுப்படை

விளக்கம்: அகம்: குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை.

திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் (கூத்தாற்றுப்படை), மதுரைக்காஞ்சி.

53) எங்கு நடைபெற்ற போரில் சோழன் கோச்செங்கணான், சேரன் கணைக்கால் இரும்பொறையை வென்று சிறையிலிட்டதால், அவனை மீட்க பொய்கையார் பாடியதே களவழி நாற்பது?

A) வெண்ணி

B) தலையங்கானம்

C) கழுமலம்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: கழுமலத்தில் நடைபெற்ற போரில் சோழன் கோச்செங்கணான், சேரன் கணைக்கால் இரும்பொறையை வென்று சிறையிலிட்டதால், அவனை மீட்க பொய்கையார் பாடியதே களவழி நாற்பது ஆகும்.

54) உலக மொழியியல் அறிஞர்கள் சங்ககால இலக்கியங்களைச் செவ்வியல் இலக்கியங்களாக ஏற்றுக்கொண்டுள்ளனர். சங்க இலக்கியங்களின் காலம் எது?

A) கி.மு6ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 2ஆம் நூற்றாண்டு வரையான காலம்

B) கி.மு3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 3ஆம் நூற்றாண்டு வரையான காலம்

C) கி.மு2ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 2ஆம் நூற்றாண்டு வரையான காலம்

D) கி.மு2ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 6ஆம் நூற்றாண்டு வரையான காலம்

விளக்கம்: உலக மொழியியல் அறிஞர்கள் சங்ககால இலக்கியங்களைச் செவ்வியல் இலக்கியங்களாக ஏற்றுக்கொண்டுள்ளனர். சங்க இலக்கியங்களின் காலம் கி.மு.6ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 2ஆம் நூற்றாண்டு வரையான காலம் என்பர்.

55) பொருத்துக.

அ. முதல் மூன்று திருமுறைகள்- 1. திருஞான சம்பந்தர்

ஆ. 4, 5, 6-ஆம் திருமுறைகள்- 2. திருநாவுக்கரசர்

இ. ஏழாம் திருமுறை- 3. சுந்தரர்

ஈ. எட்டாம் திருமுறை- 4. மாணிக்கவாசகர்

A) 4, 3, 2, 1

B) 1, 2, 3, 4

C) 2, 3, 1, 4

D) 2, 3, 4, 1

விளக்கம்: முதல் மூன்று திருமுறைகள் – திருஞான சம்பந்தர்

4, 5, 6-ஆம் திருமுறைகள்- திருநாவுக்கரசர்

ஏழாம் திருமுறை- சுந்தரர்

எட்டாம் திருமுறை- மாணிக்கவாசகர்

56) தொல்காப்பியர் கூறும் செய்யுள் உறுப்புகள் 34 ஆகும். இதில் பொருந்தாதது எது?

A) இளைபு

B) மெய்ப்பாடு

C) எச்சம்

D) முன்னம்

விளக்கம்: தொல்காப்பியர் செய்யுளின் உறுப்புகள் 34 என்று குறிப்பிடுகிறார்.

அவை, மாத்திரை, எழுத்து, அசை, சீர், அடி, தொடை, யாப்பு, தூக்கு, மரபு, பா, நோக்கு, கூற்று, அளவு, திணை, கைகோள், கேட்போர், களன், காலம், பயன், மெய்ப்பாடு, எச்சம், முன்னம், பொருள், துறை, மாட்டு. வண்ணம், அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு.

57) உலகளவில் ‘செவ்வியல்’ என்ற பொருளில் ‘கிளாசிசம்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலச்சொல்லாக ‘கிளாசிகஸ்’ உள்ளது. இது எம்மொழிச்சொல்?

A) கிரேக்கம்

B) இலத்தீன்

C) அரபு

D) ஆங்கிலம்

விளக்கம்: உலகளவில் ‘செவ்வியல்’ என்ற பொருளில் ‘கிளாசிசம்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலச்சொல்லாக ‘கிளாசிகஸ்’ என்ற இலத்தீன் சொல் உள்ளது. தமிழில் செவ்வியல் என்பதன் மூலச்சொல் ‘செம்மை’ என்பதாகும்.

58) சங்க புலவர்களின் எண்ணிக்கை எத்தனை?

A) 479

B) 473

C) 483

D) 489

விளக்கம்: தமிழின் செவ்வியல் தன்மைக்குச் சான்றாக சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. பாட்டும் தொகையுமான பதினெட்டு நூல்களும் சங்க இலக்கியங்கள் என அறியப்படுகின்றன. பாட்டு என்பது பத்துப்பாட்டையும், தொகை என்பது எட்டுத்தொகையையும் குறிக்கும். இவற்றைப் பதினெண்மேற்கணக்கு நூல்கள் என்பர். இவை தமிழ்மக்களின் அக மற்றும் புற வாழ்வியல் கூறுகளை அறிய உதவுகின்றன.

சங்கப்பாடல்களின் எண்ணிக்கை 2381. இவற்றுள் அகத்திணைப்பாடல்கள் 1862. புறத்திணைப்பாடல்கள் 519. சங்கப்புலவர் எண்ணிக்கை 473. பெண்பாற்புலவர்களின் எண்ணிக்கை 49.

59) சமஸ்கிருத மொழியின் செவ்வியல் இலக்கியக் காலகட்டம் எது?

A) கி.மு1ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 2ஆம் நூற்றாண்டு வரை

B) கி.மு5ஆம் நூற்றாண்டு முதல் கி.மு 4ஆம் நூற்றாண்டு வரை

C) கி.மு8ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 3ஆம் நூற்றாண்டு வரை

D) கி.மு4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 8ஆம் நூற்றாண்டு வரை

விளக்கம்: கி.மு 1ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 2ஆம் நூற்றாண்டு வரை – இலத்தீன்

கி.மு 5ஆம் நூற்றாண்டு முதல் கி.மு 4ஆம் நூற்றாண்டு வரை – கிரேக்கம்

கி.மு 8ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 3ஆம் நூற்றாண்டு வரை – சீன மொழி

கி.மு 4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 8ஆம் நூற்றாண்டு வரை – சமஸ்கிருதம்

60) செவ்வியல் இலக்கியங்களை படைக்க இன்றியமையாதது எது?

A) இலக்கணம்

B) எழுத்து வடிவம்

C) மிகுந்த சொல் வளம்

D) மேற்காணும் அனைத்தும்

விளக்கம்: எழுத்து உருவான பின்னரே ஒரு மொழி முழுமை அடைகிறது. அதன் பின்னரே அது வளர்ந்து செழுமையுற்றுச் செவ்வியல் இலக்கியங்களைப் படைக்கும் திறன் பெறுகிறது. செவ்வியல் இலக்கியங்களை படைக்க இன்றியமையாதது, எழுத்து வடிவமே ஆகும்.

61) ஆசாரக்கோவை என்ற அற நூலை எழுதியவர் யார்?

A) கணிமேதாவியார்

B) கூடலூர் கிழார்

C) முன்றுறையரையனார்

D) பெருவாயின் முள்ளியார்

விளக்கம்: ஆசாரக்கோவை– பெருவாயின்முள்ளியார்

பழமொழி நானூறு– முன்றுறையரையனார்

ஏலாதி– கணிமேதாவியார்

முதுமொழிக்காஞ்சி- கூடலூர்கிழார்.

62) நன்னெறி என்ற நூலை எழுதியவர் யார்?

A) உலகநாதர்

B) சிவப்பிரகாசர்

C) முனைப்பாடியார்

D) அதிவீரராமபாண்டியர்

விளக்கம்: உலகநாதர்- உலகநீதி

சிவப்பிரகாசர்- நன்னெறி

முனைப்பாடியார்- அறநெறிச்சாரம்

அதிவீரராமபாண்டியர்- நறுந்தொகை

63) வீரத்தாய் என்ற காப்பியத்தை எழுதியவர் யார்?

A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) புலவர் குழந்தை

D) சாலை இளந்திரையன்

விளக்கம்: பழங்காப்பிய மரபைப் பின்பற்றிய காப்பியங்களும், புதுக்கவிதை போன்ற புதிய மரபைப் பின்பற்றிய காப்பியங்களும் இருபதாம் நூற்றாண்டில் படைக்கப்பட்டன. பாரதிதாசனின் பாண்டியன் பரிசு, புரட்சிக்கவி, வீரத்தாய் போன்ற காப்பியங்கள் பழங்காப்பிய மரபைப் பின்பற்றி படைக்கப்பட்டவை.

64) பெரியபுராணம் பற்றிய கூற்றகளை ஆராய்க.

1. சுந்தரரைக் காப்பியத் தலைவராகக் கொண்டு இந்நூல் அமைகின்றது.

2. சுந்தரரின் சிறப்பு, சைவ அடியார்களின் சிறப்பு, சிவபெருமானின் அருள்திறம், அடியார்களின் வரலாறு, இறைவன் அவர்களை ஆட்கொண்ட விதம், அடியார்கள் இறைவனை வழிபட்டு முக்தி பெற்ற தன்மை ஆகியன இந்நூல் முழுவதும் எடுத்துக் கூறப்படுவதால் சேக்கிழார் இந்நூலிற்கு திருத்தொண்டர் மாக்கதை எனப் பெயரிட்டார்.

3. செயற்கரிய செயல் புரிந்த அடியார்களின் சிறப்பினை உரைப்பதால் சான்றோர் பெரிய புராணத்தை பெரியர் புராணம் என அழைத்தனர்.

4. பெரியர் புராணம் காலப்போக்கில் பெரியபுராணம் என்று வழங்கப்பட்டது.

A) 1, 2 சரி

B) 1, 3, 4 சரி

C) 1, 2, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. சுந்தரரைக் காப்பியத் தலைவராகக் கொண்டு இந்நூல் அமைகின்றது.

2. சுந்தரரின் சிறப்பு, சைவ அடியார்களின் சிறப்பு, சிவபெருமானின் அருள்திறம், அடியார்களின் வரலாறு, இறைவன் அவர்களை ஆட்கொண்ட விதம், அடியார்கள் இறைவனை வழிபட்டு முக்தி பெற்ற தன்மை ஆகியன இந்நூல் முழுவதும் எடுத்துக் கூறப்படுவதால் சேக்கிழார் இந்நூலிற்கு திருத்தொண்டர் மாக்கதை எனப் பெயரிட்டார்.

3. செயற்கரிய செயல் புரிந்த அடியார்களின் சிறப்பினை உரைப்பதால் சான்றோர் பெரிய புராணத்தை பெரியர் புராணம் என அழைத்தனர்.

4. பெரியர் புராணம் காலப்போக்கில் பெரியபுராணம் என்று வழங்கப்பட்டது.

65) சங்கப்புலவர்களில் அதிக பாடல்களை பாடியவர் யார்?

A) கணியன் பூங்குன்றனார்

B) கபிலர்

C) நல்லூர் நத்தத்தனார்

D) மேற்காணும் யாருமில்லை

விளக்கம்: 235 பாடல்களைப் பாடி முதலிடத்தைப் பெறுபவர் கபிலர் ஆவார்.

66) கூற்றுகளை ஆராய்க.

1. சங்ககாலப் புவலர்களைச் ‘சான்றோர்’ எனச்சுட்டுவது தமிழ் மரபு.

2. பாட்டும் தொகையுமான பதினெட்டு நூல்களும் சங்க இலக்கியங்கள் எனப்பட்டன.

A)1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. சங்ககாலப் புவலர்களைச் ‘சான்றோர்’ எனச்சுட்டுவது தமிழ் மரபு.

2. பாட்டும் தொகையுமான பதினெட்டு நூல்களும் சங்க இலக்கியங்கள் எனப்பட்டன.

67) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.

A) நற்றிணை

B) குறுந்தொகை

C) ஐங்குறுநூறு

D) பரிபாடல்

விளக்கம்: மேற்காணும் அனைத்தும் எட்டுத்தொகை நூல் ஆகும்.

அகம் – நற்றிணை, குறுந்தொகை, ஐந்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு

புறம் – பதிற்றுப்பத்து, புறநானூறு.

அகப்புறம் – பரிபாடல்

68) பிரபந்த மரபியல், பிரபந்தத் தீபிகை, சதுரகராதி, தொன்னூல் விளக்கம் ஆகியன சிற்றியலக்கியம் 96 எனக் குறிப்பிடுகின்றன. இதில் சதுரகராதி, தொன்னூல் ஆகிய நூல்களை எழுதியவர் யார்?

A) வீரமாமுனிவர்

B) ஜி.யூ.போப்

C) கால்டுவெல்

D) ஈராஸ் பாதிரியார்

விளக்கம்: சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தையும் எண்ணிக்கையும் பாட்டியல் நூல்கள் கூறுகின்றன. ஒவ்வொரு பாட்டியல் நூலும் சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கையைக் கூறுமிடத்து வேறுபடுகின்றன. இருப்பினும் பிரபந்த மரபியல், பிரபந்தத் தீபிகை, சதுரகராதி, தொன்னூல் விளக்கம் ஆகியன 96 எனக் குறிப்பிடுகின்றன. இதில் சதுரகராதி, தொன்னூல் ஆகிய நூல்களை எழுதியவர் வீரமாமுனிவர்.

69) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.

A) சிறுபஞ்சமூலம்- காரியாசான்

B) நாலடியார்- சமணமுனிவர்கள்

C) நான்மணிக்கடிகை- விளம்பிநாகனார்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: சிறுபஞ்சமூலம் – காரியாசான்

நாலடியார்- சமணமுனிவர்கள்

நான்மணிக்கடிகை- விளம்பிநாகனார்.

70) செம்மை என்பதற்கு பலவாறாக பொருள்கொள்ளலாம். இதில் பொருந்தாதது எது?

A) நற்சீரடைதல்

B) ஒழுங்குபடுத்துதல்

C) பண்படுத்துதல்

D) மேற்காணும் எதுவுமில்லை.

விளக்கம்: செவ்வியல் என்பதன் மூலச்சொல் ‘செம்மை’ என்பதாகும். செம்மை, இயல் என்ற இரு சொற்கள் இணைந்து செவ்வியல் என்ற சொல் உருவானது. செம்மை என்பதற்குச் செப்பம், செவ்வை, செவ்வி, நற்சீரடைதல், ஒழுங்குபடுத்துதல், பண்படுத்துதல் என்றெல்லாம் பொருள்கொள்ளலாம்.

71) எப்போது ஒரு மொழி முழுமை அடைகிறது?

A) எழுத்து உருவான பின்

B) இலக்கியம் உருவான பின்

C) இலக்கணம் உருவான பின்

D) சொல் உருவான பின்

விளக்கம்: எழுத்து உருவான பின்னரே ஒரு மொழி முழுமை அடைகிறது. அதன் பின்னரே அது வளர்ந்து செழுமையுற்றுச் செவ்வியல் இலக்கியங்களைப் படைக்கும் திறன் பெறுகிறது.

72) சங்கப்பாடல்களில் புறத்திணைப்பாடல்கள் எத்தனை?

A) 1862

B) 519

C) 2381

D) 473

விளக்கம்: தமிழின் செவ்வியல் தன்மைக்குச் சான்றாக சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. பாட்டும் தொகையுமான பதினெட்டு நூல்களும் சங்க இலக்கியங்கள் என அறியப்படுகின்றன. பாட்டு என்பது பத்துப்பாட்டையும், தொகை என்பது எட்டுத்தொகையையும் குறிக்கும். இவற்றைப் பதினெண்மேற்கணக்கு நூல்கள் என்பர். இவை தமிழ்மக்களின் அக மற்றும் புற வாழ்வியல் கூறுகளை அறிய உதவுகின்றன.

சங்கப்பாடல்களின் எண்ணிக்கை 2381. இவற்றுள் அகத்திணைப்பாடல்கள் 1862. புறத்திணைப்பாடல்கள் 519. சங்கப்புலவர் எண்ணிக்கை 473. பெண்பாற்புலவர்களின் எண்ணிக்கை 49.

73) கூற்றுகளை ஆராய்க.

1. சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தையும் எண்ணிக்கையையும் பாட்டில் நூல்கள் கூறுகின்றன.

2. ஒவ்வொரு பாட்டில் நூலும் சிற்றியலங்கியங்களின் எண்ணிக்கையைக் கூறுமிடத்து வேறுபடுகின்றன.

3. பிரபந்த மரபியல், பிரபந்தத் தீபிகை, சதுரகராதி, தொன்னூல் விளக்கம் ஆகியன சிற்றிலக்கியங்கள் 96 எனக் குறிப்பிடுகின்றன.

4. அம்மானை என்பது மகளிர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்றாகும்

A) 1, 2 மட்டும் சரி

B) 2, 3 மட்டும் சரி

C) 2, 4 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தையும் எண்ணிக்கையையும் பாட்டில் நூல்கள் கூறுகின்றன.

2. ஒவ்வொரு பாட்டில் நூலும் சிற்றியலங்கியங்களின் எண்ணிக்கையைக் கூறுமிடத்து வேறுபடுகின்றன.

3. பிரபந்த மரபியல், பிரபந்தத் தீபிகை, சதுரகராதி, தொன்னூல் விளக்கம் ஆகியன சிற்றிலக்கியங்கள் 96 எனக் குறிப்பிடுகின்றன.

4. அம்மானை என்பது மகளிர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்றாகும்

74) கழுமலத்தில் நடைபெற்ற போரில் சோழன் கோச்செங்கணான், சேரன் கணைக்கால் இரும்பொறையை வென்று சிறையிலிட்டதால், அவனை மீட்க பொய்கையார் பாடிய நூல் எது?

A) களவழி நாற்பது

B) திணைமாலை நூற்றைம்பது

C) ஐந்திணை ஐம்பது

D) திணைமொழி ஐம்பது

விளக்கம்: பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் புறப்பொருள் சார்ந்த ஒரே நூல் களவழி நாற்பது. களத்தை ஏர்க்களம், போர்க்களம் என்று இரு வகைப்படுத்துவர்.

ஏர்க்களம் – நெல் முதலானவற்றை அடித்து தூற்றும் களத்தைப் பாடுவது.

போர்க்களம் – போர்களத்தைப் பாடுவது.

களவழி நாற்பது – போர்க்களத்தைப் பாடும் நூல் ஆகும்.

கழுமலத்தில் நடைபெற்ற போரில் சோழன் கோச்செங்கணான், சேரன் கணைக்கால் இரும்பொறையை வென்று சிறையிலிட்டதால், அவனை மீட்க பொய்கையார் பாடியதே களவழி நாற்பது ஆகும்.

75) தவறான கூற்றை ஆராய்க.

A) சதம் என்பது நூறு எனப் பொருள்படும். நூறு பாடல்களைக் கொண்ட சிற்றிலக்கியம் சதகம் எனப்பட்டது.

B) சிற்றிலக்கிய வகைகளில் எளிமையும் இனிமையும் வாய்ந்த ஓர் இலக்கியம் அம்மானை ஆகும்.

C) செங்கீரை, பிள்ளைத்தமிழில் இரண்டாவது பருவமாகும். பொருள் புரிந்து கொள்ளமுடியாத வகையில் குழந்தை ங்க ங்க என்று ஓசை எழுப்பக் கேட்டுத் தாய் மகிழும் பருவமாகும்.

D) தொட்டில் பிள்ளை தலையை உயர்த்திக் கையை ஊன்றி உடம்பை அசைத்து ஆடுதலைச் செங்கீரைப்பருவம் என்பர்.

விளக்கம்: சிற்றிலக்கிய வகைகளில் எளிமையும் இனிமையும் வாய்ந்த ஓர் இலக்கியம் பள்ளு ஆகும்.

76) திருமலை, திருப்பள்ளியெழுச்சி என்ற நூலை எழுதியவர் யார்?

A) குலசேகராழ்வார்

B) தொண்டரடிப்பொடியாழ்வார்

C) பெரியாழ்வார்

D) திருபாணாழ்வார்

விளக்கம்: குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி

தொண்டரடிப்பொடியாழ்வார் – திருமலை, திருப்பள்ளியெழுச்சி

பெரியாழ்வார் – திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி

திருபாணாழ்வார் – திருப்பதிகம்

77) கடவுளரையோ அரசரையோ பிறரையோ குழந்தையாகக் கருதி அவர்தம் குழந்தைப் பருவத்தைப் பாடும் சிற்றிலக்கியம் எது?

A) கோவை

B) அந்தாதி

C) பள்ளு

D) பிள்ளைத்தமிழ்

விளக்கம்: கடவுளரையோ அரசரையோ பிறரையோ குழந்தையாகக் கருதி அவர்தம் குழந்தைப் பருவத்தைப் பத்துப்பருவங்களாகப் பகுத்துப் பருவத்திற்குப் பத்து ஆசிரிய விருத்தங்களாகப் பாடுவது பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும்.

78) பொருத்துக.

அ. 1, 2, 3 திருமுறைகள்- 1.மாணிக்கவாசகர்

ஆ. 4, 5, 6 திருமுறைகள் – 2. சுந்தரர்

இ. 7-ஆம் திருமுறை- 3. திருநாவுக்கரசர்

ஈ. 8-ஆம் திருமுறை- 4. திருஞானசம்பந்தர்

A) 4, 3, 1, 2

B) 4, 3, 2, 1

C) 1, 2, 3, 4

D) 1, 2, 4, 3

விளக்கம்: 1, 2, 3 திருமுறைகள் – திருஞானசம்பந்தர்

4, 5, 6 திருமுறைகள்- திருநாவுக்கரசர்

7-ஆம் திருமுறை- சுந்தரர்

8-ஆம் திருமுறை- மாணிக்கவாசகர்

79) திருவிருத்தம் என்ற நூலை எழுதியவர் யார்?

A) திருமழிசையாழ்வார்

B) நம்மாழ்வார்

C) பேயாழ்வார்

D) பூதத்தாழ்வார்

விளக்கம்: திருமழிசையாழ்வார் – நான்காம் திருவந்தாதி, திருச்சந்த விருத்தம்

நம்மாழ்வார் – திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி

பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி

பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி

80) பெரிய திருமடல், சிறிய திருமடல் என்ற நூலை எழுதியவர் யார்?

A) ஆண்டாள்

B) நம்மாழ்வார்

C) திருமங்கையாழ்வார்

D) மதுரகவியாழ்வார்

விளக்கம்: ஆண்டாள் – நாச்சியார் திருமொழி, திருப்பாவை

நம்மாழ்வார் – திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி

திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல்.

மதுரகவியாழ்வார் – திருப்பதிகம்

81) கூற்றுகளை ஆராய்க.

1. மணிமேகலை இளங்கோவடிகள் முன்பாகவும், சிலப்பதிகாரம் சீத்தலைச் சாத்தனார் முன்பாகவும் அரங்கேற்றப்பட்டதாகக் கூறுவர்.

2. கி.பி.2-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இளங்கோவடிகளைச் சேரன் செங்குட்டுவனின் தம்பி என்பர்.

3. மணிமேகலை ஒரு பௌத்தசமயக் காப்பியமாகும்.

4. உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே – மணிமேகலை

A) 1, 2 சரி

B) 2, 3 சரி

C) 1, 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. மணிமேகலை இளங்கோவடிகள் முன்பாகவும், சிலப்பதிகாரம் சீத்தலைச் சாத்தனார் முன்பாகவும் அரங்கேற்றப்பட்டதாகக் கூறுவர்.

2. கி.பி.2-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இளங்கோவடிகளைச் சேரன் செங்குட்டுவனின் தம்பி என்பர்.

3. மணிமேகலை ஒரு பௌத்தசமயக் காப்பியமாகும்.

4. உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே – மணிமேகலை.

82) நீதிநெறிவிளக்கம் என்ற நூலை எழுதியவர் யார்?

A) அதிவீரராமபாண்டியர்

B) முனைப்பாடியார்

C) குமரகுருபரர்

D) சிவப்பிரகாசர்

விளக்கம்: அறநெறிச்சாரம்- முனைப்பாடியார்

நறுந்தொகை- அதிவீரராமபாண்டியர்

நீதிநெறிவிளக்கம்- குமரகுருபரர்

நன்னெறி- சிவப்பிரகாசர்.

83) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க

A) கலித்தொகை

B) அகநானூறு

C) குறுந்தொகை

D) பதிற்றுப்பத்து

விளக்கம்: மேற்காணும் அனைத்தும் எட்டுத்தொகை நூல் ஆகும்.

அகம்- நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு

புறம்- பதிற்றுப்பத்து, புறநானூறு.

அகப்புறம்- பரிபாடல்.

84) கவியோகி என்று அழைக்கப்பட்டவர் யார்?

A) புலவர் குழந்தை

B) பாரதிதாசன்

C) சுந்தானந்த பாரதியார்

D) சாலை இளந்திரையன்

விளக்கம்: பழங்காப்பிய மரபைப் பின்பற்றிய காப்பியங்களும், புதுக்கவிதை போன்ற புதிய மரபைப் பின்பற்றிய காப்பியங்களும் இருபதாம் நூற்றாண்டில் படைக்கப்பட்டன. கவியோகி சுத்தானந்த பாரதியின் பராசக்தி மகாகாவியம் என்ற காப்பியம் பழங்காப்பிய மரபைப் பின்பற்றி படைக்கப்பட்டது.

85) இராமாயணத்தை அவதார புருஷன் என்ற பெயரில் புதுகவிதை வடிவில் காப்பியமாக்கியவர் யார்?

A) வைரமுத்து

B) கவிஞர் வாலி

C) கண்ணதாசன்

D) புலவர் குழந்தை

விளக்கம்: யாப்பு வடிவத்தை உடைத்து வளர்த்தெடுக்கப்பட்ட புதுக்கவிதைகளிலும் காப்பியங்கள் தற்காலத்தில் படைக்கப்படுகின்றன. கவிஞர் வாலி இராமயணத்தை அவதார புருஷன் என்ற பெயரிலும், மகாபாரதத்தை பாண்டவர் பூமி என்ற பெயரிலும் புதுக்கவிதை வடிவில் காப்பியமாக்கியுள்ளார்.

86) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.

A) நெருஞ்சி

B) கண்டங்கத்திரி

C) சிறுவழுதுணை

D) நாககேசுரம்

விளக்கம்: மருந்து பொருட்களாலான நூல்கள்:

சிறுபஞ்சமூலம் – நெருஞ்சி, கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி

ஏலாதி- ஏலம், இலவங்கம், நாககேசுரம், திப்பிலி, சுக்கு, மிளகு.

திரிகடுகம்- சுக்கு, மிளகு, திப்பிலி.

87) ஒன்பதாம் திருமுறையை எழுதியவர் எத்தனை பேர்?

A) 40

B) 9

C) 12

D) 7

விளக்கம்: ஒன்பதாம் திருமுறை திருவிசைப்பா, திருப்பல்லாண்டு எனப்படும். இந்நூலை திருமாளிகைத்தேவர் உள்ளிட்ட ஒன்பது பேர் எழுதியுள்ளனர்.

88) ஆண்பாற் பிள்ளைத்தமிழுக்கு பொருந்தாத பருவம் எது?

A) தால்

B) சிற்றில்

C) சப்பாணி

D) அம்மானை

விளக்கம்: கடவுளரையோ அரசரையோ பிறரையோ குழந்தையாகக் கருதி அவர்தம் குழந்தைப் பருவத்தைப் பத்துப்பருவங்களாகப் பகுத்துப் பருவத்திற்குப் பத்து ஆசிரிய விருத்தங்களாகப் பாடுவது பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும். இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும்.

ஆண்பாற்பிள்ளைத்தமிழ் – காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுதேர், சிறுபறை.

பெண்பாற்பிள்ளைத்தமிழ் – காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, அம்மானை, நீராடல், ஊசல்.

89) சங்கப்பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?

A) 2389

B) 3281

C) 2381

D) 3289

விளக்கம்: தமிழின் செவ்வியல் தன்மைக்குச் சான்றாக சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. பாட்டும் தொகையுமான பதினெட்டு நூல்களும் சங்க இலக்கியங்கள் என அறியப்படுகின்றன. பாட்டு என்பது பத்துப்பாட்டையும், தொகை என்பது எட்டுத்தொகையையும் குறிக்கும். இவற்றைப் பதினெண்மேற்கணக்கு நூல்கள் என்பர். இவை தமிழ்மக்களின் அக மற்றும் புற வாழ்வியல் கூறுகளை அறிய உதவுகின்றன.

சங்கப்பாடல்களின் எண்ணிக்கை 2381. இவற்றுள் அகத்திணைப்பாடல்கள் 1862. புறத்திணைப்பாடல்கள் 519. சங்கப்புலவர் எண்ணிக்கை 473. பெண்பாற்புலவர்களின் எண்ணிக்கை 49.

90) திருப்பல்லாண்டு என்ற நூலை எழுதியவர் யார்?

A) குலசேகராழ்வார்

B) தொண்டரடிப்பொடியாழ்வார்

C) பெரியாழ்வார்

D) திருபாணாழ்வார்

விளக்கம்: குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி

தொண்டரடிப்பொடியாழ்வார் – திருமலை, திருப்பள்ளியெழுச்சி

பெரியாழ்வார் – திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி

திருபாணாழ்வார் – திருப்பதிகம்

91) பொருத்துக.

அ. 9-ஆம் திருமுறை- 1. திருத்தொண்டர் புராணம்

ஆ. 10-ஆம் திருமுறை- 2. 40 நூல்களின் தொகுப்பு

இ. 11-ஆம் திருமுறை- 3. திருமந்திரம்

ஈ. 12-ஆம் திருமுறை- 4. திருவிசைப்பா, திருப்பல்லாண்டு

A) 1, 2, 3, 4

B) 4, 3, 2, 1

C) 4, 3, 1, 2

D) 4, 2, 1, 3

விளக்கம்: 9-ஆம் திருமுறை – திருவிசைப்பா, திருப்பல்லாண்டு;

10-ஆம் திருமுறை – திருமந்திரம்

11-ஆம் திருமுறை – 40 நூல்களின் தொகுப்பு

12-ஆம் திருமுறை – திருத்தொண்டர் புராணம்

92) பெரிய திருவந்தாதி என்ற நூலை எழுதியவர் யார்?

A) ஆண்டாள்

B) நம்மாழ்வார்

C) திருமங்கையாழ்வார்

D) மதுரகவியாழ்வார்

விளக்கம்: ஆண்டாள் – நாச்சியார் திருமொழி, திருப்பாவை

நம்மாழ்வார் – திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி

திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல்.

மதுரகவியாழ்வார் – திருப்பதிகம்.

93) கவிராஜன் கதை என்னும் தற்கால காப்பியம் யாரை பற்றி எழுதப்பட்டது?

A) வைரமுத்து

B) பாரதி

C) கவிஞர் வாலி

D) கவிமணி

விளக்கம்: யாப்பு வடிவத்தை உடைத்து வளர்த்தெடுக்கப்பட்ட புதுக்கவிதைகளிலும் காப்பியங்கள் தற்காலத்தில் படைக்கப்படுகின்றன. பாரதியின் வாழ்க்கை வரலாற்றைப் புதுக்கவிதை வடிவில் கவிராஜன் கதை என்னும் பெயரில் காப்பியமாகப் படைத்துள்ளார் வைரமுத்து.

94) சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தையும் எண்ணிக்கையையும் கூறும் நூல் எது?

A) பாட்டியல் நூல்கள்

B) தண்டியலங்காரம்

C) தொல்காப்பியம்

D) நன்னூல்

விளக்கம்: சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தையும் எண்ணிக்கையும் பாட்டியல் நூல்கள் கூறுகின்றன. ஒவ்வொரு பாட்டியல் நூலும் சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கையைக் கூறுமிடத்து வேறுபடுகின்றன. இருப்பினும் பிரபந்த மரபியல், பிரபந்தத் தீபிகை, சதுரகராதி, தொன்னூல் விளக்கம் ஆகியன 96 எனக் குறிப்பிடுகின்றன.

95) கலம்பகம் என்ற சொல்லில் பகம் என்பதன் பொருள் என்ன?

A) 12

B) 6

C) 18

D) 3

விளக்கம்: அம்மானை, கார், ஊசல், கைக்கிளை, புயவகுப்பு முதலான 18 உறுப்புகள் அமையப் பாடப்படுவது கலம்பகம்.

கலம் – 12. பகம் – 6.

96) பரணி என்பது கீழ்க்காணும் யாருடைய பெயரால் பாடப்படும்?

A) போரில் வெற்றி பெற்ற அரசனின் பெயரால்

B) போரின் வெற்றிக்கு காரணமான அரசனின் பெயரால்

C) போரில் வெற்றி பெற்ற நாட்டில் பெயரால்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: போரில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிபெறும் வீரனின்மேல் பாடப்படுவது பரணி. போரில்தோற்ற அரசனது நாட்டின் பெயரால் இந்நூல் வழங்கப்பெறும்.

97) பதினோராம் திருமுறை என்பது எத்தனை நூல்களின் தொகுப்பு?

A) 35

B) 40

C) 30

D) 45

விளக்கம்: பதினோராம் திருமுறை என்பது நாற்பது நூல்களின் தொகுப்பு ஆகும். இதனை காரைக்கால் அம்மையார் உள்ளிட்ட 12 பேர் எழுதியுள்ளனர்.

98) கூற்றுகளை ஆராய்க.

1. காப்பியத்தின் பெரும்பிரிவு- காண்டம், இலம்பகம், பருவம்

2. காப்பியத்தின் உட்பிரிவு- சருக்கம், காதை, படலம்

3. தமிழில் தோன்றிய முதல் பெருங்காப்பியம் கம்பராமாயணம்

4. சிலப்பதிகாரத்திலுள்ளது போல காண்டம் என்னும் பெரும்பிரிவுகள் மணிமேகலையில் இல்லை

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) 4 மட்டும் தவறு

விளக்கம்: 1. காப்பியத்தின் பெரும்பிரிவு – காண்டம், இலம்பகம், பருவம்

2. காப்பியத்தின் உட்பிரிவு- சருக்கம், காதை, படலம்

3. தமிழில் தோன்றிய முதல் பெருங்காப்பியம் சிலப்பதிகாரம்

4. சிலப்பதிகாரத்திலுள்ளது போல காண்டம் என்னும் பெரும்பிரிவுகள் மணிமேகலையில் இல்லை

99) _________________என்னும் பொருளில் ‘பக்தி’ என்னும் சொல் இன்று பயன்படுத்தப்படுகிறது?

A) கடவுளை வணங்குதல்

B) கடவுளிடம் தன்னை அர்ப்பணித்தல்

C)A மற்றும் B

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: கடவுளை வணங்குதல், கடவுளிடம் தன்னை அர்ப்பணித்தல் என்னும் பொருளில் இன்று ‘பக்தி’என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது. கடவுளின் மீது மனிதன் கொண்ட நம்பிக்கையைப் பக்தி என்பர். பக்தியால் அன்பு பெருகி உயிர் தூய நிலையை அடைகிறது. கடவுளின் மீது மனிதன் கொண்டுள்ள எல்லைகடந்த அன்பே ‘பக்தி’ என்ற பொருளில் தமிழிலக்கியங்களில் மிகுதியும் கையாளப்படுகின்றது.

100) யாருடைய ஆட்சிக்காலம் பக்தி இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்காலம் என்று அழைக்கப்படுகிறது?

A) பாண்டியர்கள் காலம்

B) களப்பிரர்கள் காலம்

C) பல்லவர்கள் காலம்

D) சோழர்கள் காலம்

விளக்கம்: பக்திக்கு முக்கியத்துவம் அளித்தவர்கள் பல்லவர்கள். இந்த எழுச்சிக்கு ஆதரவளித்த பல்லவர் ஆட்சிக்காலம் பக்தி இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்காலம் எனப்படுகிறது. பக்தி இயக்கத்தால் தமிழகத்தில் தமிழுக்கு மீண்டும் புதுப்பொலிவு ஏற்பட்டது.

101) “உயிர், உடல், பொருள், இளமை ஆகியன நிலையாக நில்லாமல் மறைந்துவிடக் கூடியன. இவற்றை உணர்ந்து அறத்தைச் செய்பவனாக மனித மாற வேண்டும்” என்று வலியுறுத்தும் சமயம் எது?

A) சைவம், வைணவம்

B) சமணம், பௌத்தம்

C) கிறித்துவம்

D) இசுலாம்

விளக்கம்: சமண பௌத்த சமயங்கள், “உயிர், உடம்பு, பொருள், இளமை ஆகியன நிலையாக நில்லாமல் மறைந்துவிடக் கூடியன. இவற்றை உணர்ந்து அறத்தைச் செய்பவனாக மனித மாறவேண்டும்” என்று வலியுறுத்துகின்றன.

102) திருப்பாவை என்ற நூலை எழுதியவர் யார்?

A) ஆண்டாள்

B) நம்மாழ்வார்

C) திருமங்கையாழ்வார்

D) மதுரகவியாழ்வார்

விளக்கம்: ஆண்டாள் – நாச்சியார் திருமொழி, திருப்பாவை

நம்மாழ்வார் – திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி

திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல்.

மதுரகவியாழ்வார் – திருப்பதிகம்

103) பொருத்துக.

அ. ஒன்பதாம் திருமுறை- 1. சேக்கிழார்

ஆ. பத்தாம் திருமுறை- 2. திருமூலர்

இ. பதினோராம் திருமுறை- 3. காரைக்கால் அம்மையார்

ஈ. பன்னிரண்டாம் திருமுறை- 4. திருமாளிகைத்தேவர்

A) 4, 2, 3, 1

B) 4, 3, 2, 1

C) 1, 3, 2, 4

D) 1, 2, 3, 4

`விளக்கம்: ஒன்பதாம் திருமுறை – திருமாளிகைத்தேவர் உள்ளிட்ட ஒன்பது பேர்

பத்தாம் திருமுறை- திருமூலர்

பதினோராம் திருமுறை- காரைக்கால் அம்மையார்

பன்னிரண்டாம் திருமுறை- சேக்கிழார்

104) கீழ்க்காணும் கலம்பக உறுப்புகளில் மகளிர் விளையாடும் விளையாட்டு எது?

A) அம்மானை

B) கார்

C) ஊசல்

D) கைக்கிளை

விளக்கம்: அம்மானை, கார், ஊசல், கைக்கிளை, புயவகுப்பு முதலான 18 உறுப்புகள் அமையப் பாடப்படுவது கலம்பகம்.

கலம் – 12. பகம் – 6.

அவற்றுள், ‘அம்மானை’ என்பது மகளிர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று. பாட்டுடைத் தலைவனின் புகழை ஒரு பெண் புகழ்ந்து பாட, மற்றொரு பெண் அது தொடர்பாக ஒரு வினா கேட்டு மூன்றாம் பெண் ஒரு கருத்தைக் கூறி அதை முடிப்பது அம்மானை என்னும் விளையாட்டு.

105) பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்கள் எத்தனை?

A) 6

B) 1

C) 11

D) 18

விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் 11 ஆகும்.

புற நூல்கள் – 1.

அக நூல்கள்- 6.

106) கூற்றுகளை ஆராய்க.

1. குணாட்டியர் என்பவர் பிருகத்கதா எனும் நூலைப் பைசாச மொழியில் இயற்றினர். இக்காப்பியமே பெருங்கதையின் மூல நூலாகக் கருதப்படுகிறது.

2. பெருங்கதை சமண சமயக்காப்பியமாகும். இந்நூல் ஆறு காண்டங்களை உடையது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. குணாட்டியர் என்பவர் பிருகத்கதா எனும் நூலைப் பைசாச மொழியில் இயற்றினர். இக்காப்பியமே பெருங்கதையின் மூல நூலாகக் கருதப்படுகிறது.

2. பெருங்கதை சமண சமயக்காப்பியமாகும். இந்நூல் ஆறு காண்டங்களை உடையது.

107) பத்தாம் திருமுறை _________________________என்று அழைக்கப்படுகிறது?

A) திருவாசகம்

B) திருவிசைப்பா

C) திருமந்திரம்

D) திருப்பல்லாண்டு

விளக்கம்: திருவாசகம் – எட்டாம் திருமுறை

திருவிசைப்பா- ஒன்பதாம் திருமுறை

திருமந்திரம்- பத்தாம் திருமுறை

திருப்பல்லாண்டு- ஒன்பதாம் திருமுறை.

108) திருப்பதிகம் என்ற நூலை எழுதியவர் யார்?

A) குலசேகராழ்வார்

B) தொண்டரடிப்பொடியாழ்வார்

C) பெரியாழ்வார்

D) திருபாணாழ்வார்

விளக்கம்: குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி

தொண்டரடிப்பொடியாழ்வார் – திருமலை, திருப்பள்ளியெழுச்சி

பெரியாழ்வார்- திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி

திருபாணாழ்வார்- திருப்பதிகம்

109) “உலக இன்பங்களைத் துய்த்தவாறே இறைவனிடத்தில் பக்தி செலுத்தலாம், இறைவன் அன்பின் வடிவானவன், அன்பு ஒன்றே அவனை அடையும்வழி” என இல்லறத்திற்கும் முதன்மை கொடுத்தவர்கள் யார்?

A) நாயன்மார்கள்

B) ஆழ்வார்கள்

C) சித்தர்கள்

D) A மற்றும் B

விளக்கம்: நாயன்மார்களும் ஆழ்வார்களும் தோன்றி, “உலக இன்பங்களைத் துய்த்தவாறே இறைவனிடத்தில் பக்தி செலுத்தலாம், இறைவன் அன்பின் வடிவானவன், அன்பு ஒன்றே அவரை அடையும் வழி” என இல்லறத்திற்கும் முதன்மை கொடுத்தனர்.

110) திருஞானசம்பந்தர் என்பவர் கீழ்க்காணும் எந்த நெறியை பின்பற்றினார்?

A) அடிமை நெறி

B) பிள்ளமை நெறி

C) நாயகன் நெறி

D) நாயகி நெறி

விளக்கம்: திருநாவுக்கரசர், குலசேகராழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார் போன்றோர் அடிமை நெறியையும், திருஞானசம்பந்தர் பிள்ளமை நெறியையும் பின்பற்றினர்.

111) தவறான ஒன்றை தெரிவு செய்க

A) பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் புறப்பொருள் சார்ந்த ஒரே நூல் – களவழி நாற்பது ஆகும்.

B) களத்தை ஏர்க்களம், போர்க்களம் என்று இருவகையாகப் பிரிப்பர்

C) நெல் முதலானவற்றை அடித்து தூற்றும் களத்தைப் பாடுவது – ஏர்க்களம்

D) களவழி நாற்பது – ஏர்க்களத்தைப் பாடும் நூல் ஆகும்.

விளக்கம்: பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் புறப்பொருள் சார்ந்த ஒரே நூல் களவழி நாற்பது. களத்தை ஏர்க்களம், போர்க்களம் என்று இரு வகைப்படுத்துவர்.

ஏர்க்களம் – நெல் முதலானவற்றை அடித்து தூற்றும் களத்தைப் பாடுவது.

போர்க்களம் – போர்களத்தைப் பாடுவது.

களவழி நாற்பது – போர்க்ளத்தைப் பாடும் நூல் ஆகும்.

112) தோழமை நெறியை பின்பற்றியவர் யார்?

A) சுந்தரர்

B) திருநாவுக்கரசர்

C) குலசேகராழ்வார்

D) மாணிக்கவாசகர்

விளக்கம்: சுந்தரர், திருமழிசையாழ்வார் போன்றோர் தோழமை நெறியையும், மாணிக்கவாசகர், திருமங்கையாழ்வார் போன்றோர் நாயகன் நாயகி நெறியையும் பின்பற்றினர்

113) ‘திருத்தொண்டத்தொகை’ என்னும் நூலை எழுதியவர் யார்?

A) நம்பியாண்டார் நம்பி

B) சுந்தரர்

C) சேக்கிழார்

D) மேற்காணும் யாருமில்லை

விளக்கம்: பெரியபுராணம் (திருத்தொண்டர் புராணம்) – சேக்கிழார்.

திருத்தொண்டத்தொகை- சுந்தரர்

திருத்தொண்டர் திருவந்தாதி- நம்பியாண்டார் நம்பி

114) திருப்பதிகம் என்ற நூலை எழுதியவர் யார்?

A) ஆண்டாள்

B) நம்மாழ்வார்

C) திருமங்கையாழ்வார்

D) மதுரகவியாழ்வார்

விளக்கம்: ஆண்டாள் – நாச்சியார் திருமொழி, திருப்பாவை

நம்மாழ்வார் – திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி

திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல்.

மதுரகவியாழ்வார் – திருப்பதிகம்

115) கூற்று: பெரியபுராணம் தேசிய இலக்கியம் எனப்படும்.

காரணம்: இந்திய நாட்டு மக்கள் அனைவரும் பின்பற்றக்கூடிய கருத்துகளைக் கொண்டுள்ளது

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: ஆண், பெண் வேறுபாடின்றிப் பல இனங்களையும், தொழில் பிரிவுகளையும் சார்ந்த சிவனடியார்களைப் பற்றிய நூலாக அமைந்துள்ளதால் இந்நூலைத் தேசிய இலக்கியம் என்று சான்றோர்கள் பாராட்டுவர்.

116) திருச்சந்த விருத்தம் என்ற நூலை எழுதியவர் யார்?

A) திருமழிசையாழ்வார்

B) நம்மாழ்வார்

C) பேயாழ்வார்

D) பூதத்தாழ்வார்

விளக்கம்: திருமழிசையாழ்வார் – நான்காம் திருவந்தாதி, திருச்சந்த விருத்தம்

நம்மாழ்வார் – திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி

பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி

பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி

117) சங்கப்பாடல்களுள் அகத்திணைப் பாடல்கள் எத்தனை?

A) 1862

B) 1381

C) 519

D) 473

விளக்கம்: தமிழின் செவ்வியல் தன்மைக்குச் சான்றாக சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. பாட்டும் தொகையுமான பதினெட்டு நூல்களும் சங்க இலக்கியங்கள் என அறியப்படுகின்றன. பாட்டு என்பது பத்துப்பாட்டையும், தொகை என்பது எட்டுத்தொகையையும் குறிக்கும். இவற்றைப் பதினெண்மேற்கணக்கு நூல்கள் என்பர். இவை தமிழ்மக்களின் அக மற்றும் புற வாழ்வியல் கூறுகளை அறிய உதவுகின்றன.

சங்கப்பாடல்களின் எண்ணிக்கை 2381. இவற்றுள் அகத்திணைப்பாடல்கள் 1862. புறத்திணைப்பாடல்கள் 519. சங்கப்புலவர் எண்ணிக்கை 473. பெண்பாற்புலவர்களின் எண்ணிக்கை 49.

118) கூற்று: சீவக சிந்தாமணி மணநூல் என்று அழைக்கப்படுகிறது.

காரணம்: காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை ஆகிய எட்டுப் பெண்களை சீவகன் மணப்பது பற்றி கூறுகிறது.

A)கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்குகிறது.

விளக்கம்: காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை ஆகிய எட்டுப் பெண்களை சீவகன் மணப்பதனால், இந்நூல் மணநூல் என்றும் அழைக்கப்படுகிறது. இறுதியில் சீவகன் துறவறம் பூண்டு முக்தி அடைகிறான்.

119) அனைத்துவிதமான சிறந்த குணங்களைச் செல்வமெனக் கொண்டு, மூவுலகும் போற்ற அழிவற்ற இன்பம் நல்கும் தேவாதி தேவனின் திருவடியைப் போற்றுவோம் என்று கூறும் சமயம் எது?

A) சமணம்

B) பௌத்தம்

C) கிறித்துவம்

D) ஜைனம்

விளக்கம்: அனைத்துவிதமான சிறந்த குணங்களைச் செல்வமெனக் கொண்டு, மூவுலகும் போற்ற அழிவற்ற இன்பம் நல்கும் தேவாதி தேவனின் திருவடியைப் போற்றுவோம் என்று சமண சமயக் காப்பியமான சீவகசிந்தாமணியில் திருத்தக்கத்தேவர் குறிப்பிடுகிறார்.

120) கூற்றுகளை ஆராய்க.

1. சைவத்திருமுறையில் பத்தாம் திருமுறை பெரியபுராணம் ஆகும்.

2. திருத்தொண்டர் புராணத்தை எழுதிய ஆசிரியரின் இயற்பெயர் அருண்மொழித்தேவர்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: பெரியபுராணம் எனப்படும் திருத்தொண்டர் புராணத்தை எழுதியவர் சேக்கிழார். இவரின் இயற்பெயர் அருண்மொழித்தேவர். பெரியபுராணம் 12-ஆம் திருமுறையாக இடம்பெற்றுள்ளது.

121) பொருத்துக.

அ. பொய்கையாழ்வார்- 1. இரண்டாம் திருவந்தாதி

ஆ. பூதத்தாழ்வார்- 2. முதல் திருவந்தாதி

இ. பேயாழ்வார்- 3. நான்காம் திருவந்தாதி

ஈ. திருமழிசையாழ்வார்- 4. மூன்றாம் திருவந்தாதி

A) 2, 1, 3, 4

B) 2, 1, 4, 3

C) 3, 4, 1, 2

D) 4, 3, 1, 2

விளக்கம்: பொய்கையாழ்வார் – முதல் திருவந்தாதி

பூதத்தாழ்வார்- இரண்டாம் திருவந்தாதி

பேயாழ்வார்- மூன்றாம் திருவந்தாதி

திருமழிசையாழ்வார்- நான்காம் திருவந்தாதி

122) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.

A) முதல் மூன்று திருமுறைகள்

B) 4, 5, 6-ஆம் திருமுறைகள்

C) ஏழாம் திருமுறை

D) எட்டாம் திருமுறை

விளக்கம்: 1, 2, 3 திருமுறைகள் – தேவாரம்

4, 5, 6 திருமுறைகள்- தேவாரம்.

7-ஆம் திருமுறை- தேவாரம்

எட்டாம் திருமுறை- திருவாசகம், திருக்கோவையார்.

123) அறம் என்ற சொல்லை பிரித்து எழுதுக?

A) அறு+அம்

B) அற+அம்

C) அற+ம்

D) அறு+ம்

விளக்கம்: ‘அறம்’ என்ற சொல்லை அறு+அம் எனப்பிரித்துத் தீமைமை அறுப்பது, நீக்குவது என்றும் அறுதி செய்வது, கடமைகளை வரையறுப்பது என்றும் பொருள் கொள்வர். பொதுவாகச் சான்றோர் விலக்கியன ஒழித்தலும், விதித்தன செய்தலும் அறம் எனப்பெறும் .

124) நாலடி நான்மணி நானாற்ப தைத்திணைமுப்

பால்கடுகம் கோவை பழ்மொழிஎன்ற வரியில் நானாற்பது என்பது கீழ்க்காணும் எதைக் குறிக்கவில்லை?

A) இன்னா நாற்பது

B) இனியவை நாற்பது

C) காற் நாற்பது

D) களவழிநாற்பது

விளக்கம்: நாலடி நான்மணி நானாற்ப தைத்திணைமுப்

பால்கடுகம் கோவை பழ்மொழி – மாமூலம்

இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே

கைந்நிலைய வாம் கீழ்க்கணக்கு.

நானாற்பது என்பது இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது என்பதைக் குறிக்கும்.

125) கூற்றுகளை ஆராய்க.

1. கழுமலத்தில் நடைபெற்ற போரில் சோழன் கோச்செங்கணான், சேரன் கணைக்கால் இரும்பொறையை வென்று சிறையிலிட்டதால், அவனை மீட்க பொய்கையார் பாடிய நூல் களவழி நாற்பது.

2. யானைப் போர் பற்றி குறிப்பிடப்படுவதால் பரணி என்ற சிற்றிலக்கிய வகை தோற்றம் பெறுவதற்கு இந்நூலே காரணம் என்பவர்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. கழுமலத்தில் நடைபெற்ற போரில் சோழன் கோச்செங்கணான், சேரன் கணைக்கால் இரும்பொறையை வென்று சிறையிலிட்டதால், அவனை மீட்க பொய்கையார் பாடிய நூல் களவழி நாற்பது.

2. யானைப் போர் பற்றி குறிப்பிடப்படுவதால் பரணி என்ற சிற்றிலக்கிய வகை தோற்றம் பெறுவதற்கு இந்நூலே காரணம் என்பவர்.

126) தோழமை நெறியை பின்பற்றியவர் யார்?

A) திருமழிசையாழ்வார்

B) திருநாவுக்கரசர்

C) குலசேகராழ்வார்

D) மாணிக்கவாசகர்

விளக்கம்: சுந்தரர், திருமழிசையாழ்வார் போன்றோர் தோழமை நெறியையும், மாணிக்கவாசகர், திருமங்கையாழ்வார் போன்றோர் நாயகன் நாயகி நெறியையும் பின்பற்றினர்

127) இறைவனை ஆண்டான், தந்தை, சக, ஞான என பல பரிணாமங்களில் கண்டு போற்றியவர்கள்?

A) ஆழ்வார்கள்

B) நாயன்மார்கள்

C) சித்தர்கள்

D) A மற்றும் B

விளக்கம்: ஆழ்வார்களும், நாயன்மார்களும் இறைவனை, ஆண்டான், தந்தை, தோழன், நாயகன் என பல பரிமாணங்களில கண்டு போற்றினர். இவற்றையே தாச, சற்புத்திர, சக, ஞான மார்க்கங்கள் என்று குறிப்பிடுகின்றனர்.

128) சேக்கிழார் தாம் இயற்றிய நூலுக்கு இட்ட பெயர் என்ன?

A) திருத்தொண்டர் புராணம்

B) திருத்தொண்டர் திருவந்தாதி

C) திருத்தொண்டர் மாக்கதை

D) திருத்தொண்டத்தொகை

விளக்கம்: சுந்தரரைக் காப்பியத் தலைவராகக் கொண்டு பெரியபுராணம் அமைகின்றது. சுந்தரரின் சிறப்பு, சைவ அடியார்களின் சிறப்பு, சிவபெருமானின் அருள்திறம், அடியார்களின் வரலாறு, அவர்கள் கடைப்பிடித்த தொண்டு நெறி, இறைவன் அவர்களை ஆட்கொண்ட விதம், அடியார்கள் இறைவனை வழிபட்டு முக்தி பெற்ற தன்மை ஆகியன இந்நூல் முழுதும் எடுத்துக் கூறப்படுவதால் சேக்கிழார் இந்நூலிற்கு திருத்தொண்டர் மாக்கதை எனப் பெயரிட்டார்.

129) கூற்று: வால்மீகி எழுதிய நூல் இராமாயணம்.

காரணம்: இராமனின் வரலாற்றைக் கூறும் நூலாதலின் இராமாயணம் எனப்பட்டது

A) கூற்று சரி காரணம் தவறு

B) கூற்று தவறு காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: இராமனின் வரலாற்றைக் கூறும் நூலாதலின் இராமாயணம் எனப்பட்டது. இதன் காலம் கி.பி.12-ஆம் நூற்றாண்டு ஆகும்.

130) கம்பராமாயணம் எத்தனை காண்டங்களை உடையது?

A) 2

B) 7

C) 6

D) 5

விளக்கம்: கம்பராமாயணம் ஆறு காண்டங்களை உடையது. அவை,

1. பால காண்டம்

2. அயோத்திய காண்டம்

3. ஆரண்யா காண்டம்

4. கிட்கிந்தா காண்டம்

5. சுந்தர காண்டம்

6. யுத்த காண்டம்

131) தவறான கூற்றை தெரிவு செய்க.

A) காதலும் வீரமும் சங்க காலத்தில் போற்றப்பட்டன.

B) பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் புறப்பொருள் சார்ந்த ஒரே நூல் களவழி நாற்பது ஆகும்.

C) ஏலாதியின் ஆசிரியர் கணிமேதாவியார்

D) பழமொழி நானூறு என்ற நூலின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார் ஆவார்

விளக்கம்: காதலும் வீரமும் சங்க காலத்தில் போற்றப்பட்டன.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் புறப்பொருள் சார்ந்த ஒரே நூல் களவழி நாற்பது ஆகும்.

ஏலாதியின் ஆசிரியர் கணிமேதாவியார்

பழமொழி நானூறு என்ற நூலின் ஆசிரியர் மூன்றுறையரையனார் ஆவார்.

பெருவாயின் முள்ளியார் இயற்றியது – ஆசாரக்கோவை ஆகும்.

132) பெரியபுராணம் கீழ்க்காணும் எதனை முதல் நூலாகக் கொண்டு இயற்றப்பட்டது?

A) திருத்தொண்டத்தொகை

B) திருத்தொண்டர் புராணம்

C) A மற்றும் B

D) திருத்தொண்டர் வரலாறு

விளக்கம்: சுந்தரர் எழுதிய ‘திருத்தொண்டத்தொகை’, நம்பியாண்டார் நம்பி எழுதிய ‘திருத்தொண்டர் திருவந்தாதி’ ஆகிய நூல்களை முதல் நூலாகக் கொண்டு பெரியபுராணம் எனப்படும் திருத்தொண்டர் புராணம் எழுதப்பட்டது.

133) பாட்டுடைத் தலைவனின் புகழை ஒரு பெண் புகழ்ந்து பாட, மற்றொரு பெண் அது தொடர்பாக ஒரு வினா கேட்டு மூன்றாம் பெண் ஒரு கருத்தைக் கூறி அதை முடிக்கும் விளையாட்டு எது?

A) அம்மானை

B) கார்

C) ஊசல்

D) கைக்கிளை

விளக்கம்: அம்மானை, கார், ஊசல், கைக்கிளை, புயவகுப்பு முதலான 18 உறுப்புகள் அமையப் பாடப்படுவது கலம்பகம்.

கலம் – 12. பகம் – 6.

அவற்றுள், ‘அம்மானை’ என்பது மகளிர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று. பாட்டுடைத் தலைவனின் புகழை ஒரு பெண் புகழ்ந்து பாட, மற்றொரு பெண் அது தொடர்பாக ஒரு வினா கேட்டு மூன்றாம் பெண் ஒரு கருத்தைக் கூறி அதை முடிப்பது அம்மானை என்னும் விளையாட்டு.

134) போரில் ஆயிரம் யானைக் கொன்று வெற்றிபெறும் வீரனின்மேல் பாடப்படும் சிற்றிலக்கியம் எது?

A) பள்ளு

B) பரணி

C) கோவை

D) தூது

விளக்கம்: போரில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிபெறும் வீரனின்மேல் பாடப்படுவது பரணி. போரில்தோற்ற அரசனது நாட்டின் பெயரால் இந்நூல் வழங்கப்பெறும்.

135) தவறான கூற்றை ஆராய்க.

A) கலம்பம் – கலம்+பகம். கலம் – 12. பகம் – 6.

B) பாட்டுடைத் தலைவனின் புகழை ஒரு பெண் புகழ்ந்து பாட, மற்றொரு பெண் அது தொடர்பான ஒரு வினா கேட்டு, மூன்றாம் பெண் ஒரு கருத்தைக் கூறி அதை முடிப்பது அம்மானை ஆகும்.

C) தஞ்சாவூரைச் சேர்ந்த சந்திரவாணன், பாண்டிவள நாட்டைச்சார்ந்த குலசேகர பாண்டியனின் அமைச்சராக விளங்கினான்.

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: கலம்பம் – கலம்+பகம். கலம் – 12. பகம் – 6.

பாட்டுடைத் தலைவனின் புகழை ஒரு பெண் புகழ்ந்து பாட, மற்றொரு பெண் அது தொடர்பான ஒரு வினா கேட்டு, மூன்றாம் பெண் ஒரு கருத்தைக் கூறி அதை முடிப்பது அம்மானை ஆகும்.

தஞ்சாவூரைச் சேர்ந்த சந்திரவாணன், பாண்டிவள நாட்டைச்சார்ந்த குலசேகர பாண்டியனின் அமைச்சராக விளங்கினான்.

136) அயோத்தி நகரத்து அரசனான தசரதனுக்கு இராமன், பரதன், இலக்குவன், சத்ருக்கன் ஆகிய நான்கு பிள்ளைகள் பிறப்பதும், இராமன் வில்லை வளைத்துச் சீதையை மணம் முடிப்பதும் இடம்பெற்றுள்ள காண்டம் எது?

A) பால காண்டம்

B) அயோத்தியா காண்டம்

C) ஆரண்யா காண்டம்

D) கிட்கிந்தா காண்டம்

விளக்கம்: அயோத்தி நகரத்து அரசனான தசரதனுக்கு இராமன், பரதன், இலக்குவன், சத்ருக்கன் ஆகிய நான்கு பிள்ளைகள் பிறப்பதும், இராமன் வில்லை வளைத்துச் சீதையை மணம் முடிப்பதும் இடம்பெற்றுள்ள காண்டம் பால காண்டமாகும்.

137) நாயகன் நாயகி நெறியை பின்பற்றியவர் யார்?

A) சுந்தரர்

B) திருநாவுக்கரசர்

C) குலசேகராழ்வார்

D) மாணிக்கவாசகர்

விளக்கம்: சுந்தரர், திருமழிசையாழ்வார் போன்றோர் தோழமை நெறியையும், மாணிக்கவாசகர், திருமங்கையாழ்வார் போன்றோர் நாயகன் நாயகி நெறியையும் பின்பற்றினர்

138) சரியான வரிசையை தேர்வு செய்க.

A) காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி

B) காப்பு, செங்கீரை, சப்பாணி, தால், முத்தம், வருகை, அம்புலி

C) காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், அம்புலி, வருகை

D) காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, வருகை, முத்தம், அம்புலி,

விளக்கம்: கடவுளரையோ அரசரையோ பிறரையோ குழந்தையாகக் கருதி அவர்தம் குழந்தைப் பருவத்தைப் பத்துப்பருவங்களாகப் பகுத்துப் பருவத்திற்குப் பத்து ஆசிரிய விருத்தங்களாகப் பாடுவது பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும். இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும்.

ஆண்பாற்பிள்ளைத்தமிழ் – காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுதேர், சிறுபறை.

பெண்பாற்பிள்ளைத்தமிழ் – காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, அம்மானை, நீராடல், ஊசல்.

139) அனைத்துவிதமான சிறந்த குணங்களைச் செல்வமெனக் கொண்டு, மூவுலகும் போற்ற அழிவற்ற இன்பம் நல்கும் தேவாதி தேவனின் திருவடியைப் போற்றுவோம் என்று குறிப்பிடும் காப்பியம் எது?

A) வளையாபதி

B) குண்டலகேசி

C) மணிமேகலை

D) சீவகசிந்தாமணி

விளக்கம்: அனைத்துவிதமான சிறந்த குணங்களைச் செல்வமெனக் கொண்டு, மூவுலகும் போற்ற அழிவற்ற இன்பம் நல்கும் தேவாதி தேவனின் திருவடியைப் போற்றுவோம் என்று சமண சமயக் காப்பியமான சீவகசிந்தாமணியில் திருத்தக்கத்தேவர் குறிப்பிடுகிறார்.

140) கம்பராமாயணம் ஆறு காண்டங்களை கொண்டது. இதில் அனுமனை பற்றி கூறும் காண்டம் எத்தனையாவதாக இடம்பெற்றுள்ளது?

A) 5

B) 6

C) 4

D) 2

விளக்கம்: கம்பராமாயணம் ஆறு காண்டங்களை உடையது. அவை,

1. பால காண்டம்

2.அயோத்திய காண்டம்

3. ஆரண்யா காண்டம்

4. கிட்கிந்தா காண்டம்

5. சுந்தர காண்டம்

6. யுத்த காண்டம்

ஐந்தாவது காண்டமாக உள்ள சுந்தர காண்டம் அனுமனைப் பற்றி கூறும் காண்டமாகும்

141) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க

A) ஆண்டான் -தாச

B) தந்தை- சற்புத்திர

C) தோழன்-சக

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: ஆழ்வார்களும், நாயன்மார்களும் இறைவனை, ஆண்டான், தந்தை, தோழன், நாயகன் என பல பரிமாணங்களில் கண்டு போற்றினர். இவற்றையே தாச, சற்புத்திர, சக, ஞான மார்க்கங்கள் என்று குறிப்பிடுகின்றனர்.

142) பொருந்தாதவரை தேர்வு செய்க.

A) திருநாவுக்கரசர்

B) குலசேகராழ்வார்

C) தொண்டரடிப்பொடியாழ்வார்

D) திருஞானசம்பந்தர்

விளக்கம்: திருநாவுக்கரசர், குலசேகராழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார் போன்றோர் அடிமை நெறியையும், திருஞானசம்பந்தர் பிள்ளமை நெறியையும் பின்பற்றினர்.

143) கூற்றுகளை ஆராய்க

1. பண்டமாற்றும் காசுகளைப் பயன்படுத்துதல் வணிகத்தின் அடிப்படையாக விளங்கின.

2. பழந்தமிழர்கள் நெறிபிறழாது, துலாக்கோல்போல் நடுவுநிலை நின்று வணிகம் செய்து வந்தனர் என்பதை பட்டினப்பாலை வழியே கடியலூர் உருத்திரங்கண்ணனார் உணர்த்துகிறார்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. பண்டமாற்றும் காசுகளைப் பயன்படுத்துதல் வணிகத்தின் அடிப்படையாக விளங்கின.

2. பழந்தமிழர்கள் நெறிபிறழாது, துலாக்கோல்போல் நடுவுநிலை நின்று வணிகம் செய்து வந்தனர் என்பதை பட்டினப்பாலை வழியே கடியலூர் உருத்திரங்கண்ணனார் உணர்த்துகிறார்.

144) கையேயி கேட்ட இரண்டு வரங்களால் இராமன் காடடைவது எந்த காண்டத்தில் இடம்பெற்றுள்ளது?

A) ஆரண்யா காண்டம்

B) அயோத்தியா காண்டம்

C) கிட்கிந்தா காண்டம்

D) யுத்த காண்டம்

விளக்கம்: கைகேயி கேட்ட இரண்டு வரங்களால் இராமன் காடடைவது அயோத்தியா காண்டத்தில் இடம்பெற்றுள்ளது.

145) இராமனைப் பிரிந் சீதையின் நிலை, அனுமனின் ஆற்றல் ஆகியன பற்றி கூறும் காண்டம் எது?

A) யுத்த காண்டம்

B) கிட்கிந்தா காண்டம்

C) சுந்தர காண்டம்

D) அயோத்தியா காண்டம்

விளக்கம்: இராமனைப் பிரிந்த சீதையின் நிலை, அனுமனின் ஆற்றல் ஆகியன பற்றி கூறும் காண்டம் சுந்தர காண்டமாகும்.

146) கம்பராமாயணத்தையும், திருக்குறளையும் ‘தமிழுக்குக் கதி’ என்று என்று கூறியவர் யார்?

A) ஒட்டக்கூத்தர்

B) கம்பர்

C) திருமணம் செல்வ கேசவராயர்

D) ஒளவையார்

விளக்கம்: கம்பராமாயணத்தின் சிறப்பு கருதியும், திருக்குறளின் பெருமை கருதியும் இவ்விரு நூல்களையும் ‘தமிழுக்குக் கதி’ என்று திருமணம் செல்வ கேசவராயர் கூறியுள்ளார்.

147) கம்பராமாயணம் ஒரு_____________நூலாகும்?

A) முதல் நூல்

B) மொழிபெயர்ப்பு நூல்

C) வழி நூல்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: தமிழில் தொடர்ச்சியாகச் செல்வாக்குப் பெற்று விளங்கும் காப்பியங்களுள் ஒன்றாகத் திகழ்வது கம்பராமாயணமாகும். இது கம்பரால் இயற்றப்பட்டது. வடமொழியில் வான்மீகி இயற்றிய இராமாயணத்தைத் தழுவி எழுதப்பட்டது இந்நூல். வழி நூலாயினும் கம்பர் தமக்கே உரிய கருப்பொருள் சிதையாமல் இயற்றியுள்ளார். கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இட்ட பெயர் இராமவதாரம்.

148) இராவணன் சீதையைக் கவர்ந்து செல்வது பற்றி கூறும் கம்பராமாயணத்தின் காண்டம் எது?

A) அயோத்தியா காண்டம்

B) யுத்த காண்டம்

C) ஆரண்யா காண்டம்

D) பால காண்டம்

விளக்கம்: கம்பராமாயணம் ஆறு காண்டங்களை கொண்டது. இராவணன் சீதையைக் கவர்ந்து செல்வது பற்றி கூறும் காண்டம் ஆரணிய காண்டமாகும்.

149) சீதையைத் தேடிச்செல்லும் இராமன் வாலியைக் கொன்று சுக்ரீவன், அனுமன் நட்பைப் பெறுவது பற்றி கூறும் காண்டம் எது?

A) கிட்கிந்தா காண்டம்

B) சுந்தர காண்டம்

C) யுத்த காண்டம்

D) அயோத்தியா காண்டம்

விளக்கம்: சீதையைத் தேடிச் செல்லும் இராமன் வாலியைக் கொன்று சுக்ரீவன், அனுமன் நட்பைப் பெறுவது கிட்கிந்தா காண்டத்தில் கூறப்பட்டுள்து. கம்பராமாயணம் ஆறு காண்டங்களையும் 118 படலங்களையும் கொண்டுள்ளது.

150) எத்தனை கட்டளைக் கலித்துறையால் பாடப்பட்டது கோவை என்னும் சிற்றிலக்கிய வகை?

A) 100

B) 200

C) 300

D) 400

விளக்கம்: அகப்பொருளுக்குரிய துறைகள் பலவற்றை 400 கட்டளைக் கலித்துறையால் சங்கிலித்தொடர் போலப் பாடப்பட்டது கோவையாகும். கடவுளரையோ அரசரையோ படைத்தலைவரையோ வள்ளல்களையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்படுவது.

151) மணிமேகலையின் தாய் கீழ்க்காணும் எதனுடன் தொடர்புடையவர்?

A) பௌத்தம்

B) சமணம்

C) சீக்கியம்

D) ஜெராஸ்டிரியம்

விளக்கம்: கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த பெண் மணிமேகலை. தனக்கு நேர்ந்த கதி தன் மகளுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவளையும் தன்னைப் போலவே பௌத்தத் துறவியாக்கி இருந்தாள் மாதவி.

152) உழவுத் தொழில் செய்யும் மக்களின் வாழ்க்கையைப் பாடும் சிற்றிலக்கியம் எது?

A) தூது

B) உலா

C) சதகம்

D) பள்ளு

விளக்கம்: சிற்றிலக்கிய வகைகளில் எளிமையும் இனிமையும் வாய்ந்த ஓர் இலக்கியம் பள்ளு இலக்கியம் ஆகும். உழவுத் தொழில் செய்யும் மக்களின் வாழ்க்கையைப் பாடும் இலக்கியம் பள்ளு இலக்கியம் எனப்படும்.

153) திருவாசிரியம், திருவாய்மொழி என்ற நூலை எழுதியவர் யார்?

A) ஆண்டாள்

B) நம்மாழ்வார்

C) திருமங்கையாழ்வார்

D) மதுரகவியாழ்வார்

விளக்கம்: ஆண்டாள் – நாச்சியார் திருமொழி, திருப்பாவை

நம்மாழ்வார் – திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி

திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல்.

மதுரகவியாழ்வார் – திருப்பதிகம்

154) சரியான வரிசையை தேர்வு செய்க.

A) சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, அம்மானை, நீராடல், ஊசல்.

B) சப்பாணி, வருகை, முத்தம், அம்புலி, அம்மானை, நீராடல், ஊசல்.

C) சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, நீராடல், அம்மானை, ஊசல்.

D) சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, அம்மானை, ஊசல், அம்மானை.

விளக்கம்: கடவுளரையோ அரசரையோ பிறரையோ குழந்தையாகக் கருதி அவர்தம் குழந்தைப் பருவத்தைப் பத்துப்பருவங்களாகப் பகுத்துப் பருவத்திற்குப் பத்து ஆசிரிய விருத்தங்களாகப் பாடுவது பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும். இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும்.

ஆண்பாற்பிள்ளைத்தமிழ் – காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுதேர், சிறுபறை.

பெண்பாற்பிள்ளைத்தமிழ் – காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, அம்மானை, நீராடல், ஊசல்.

155) தவறான கூற்றை தெரிவு செய்க.

A) ஏமாங்கத நாட்டின் தலைநகர் இராசமாபுரம் ஆகும். இந்நாட்டை ஆண்ட மன்னன் சச்சந்தன் ஆவார்

B) சச்சந்தன் மனைவி விசயை. இவரின் மகன் சீவகன்

C) ஏமாங்கத நாட்டின் அமைச்சர் அச்சணந்தி

D) சீவகன் பிறந்தபோது அவன்தாய் சிந்தாமணியே என அழைத்தாள்.

விளக்கம்: ஏமாங்கத நாட்டின் அமைச்சர் கட்டியங்காரன். இவர் ஏற்ற நேரத்தில் அரசனைக் கொன்று ஆட்சியைப் பிடித்துக் கொண்டார்.

156) சூளாமணி பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. திவிட்டன், விசயன் ஆகிய இருமன்னர்களைப் பற்றிய வரலாற்றைக் கூறும் ஒரு சமணநூல்

2. திவிட்டனின் தந்தை பயாபதி மன்னன் “உயர்ந்து உலகின் முடிக்கோர் சூளாமணியானான்” என்பதனால் இந்நூலுக்கு சூளாமணி எனப் பெயர் வழங்கிற்று என்பர்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. திவிட்டன், விசயன் ஆகிய இருமன்னர்களைப் பற்றிய வரலாற்றைக் கூறும் ஒரு சமணநூல்

2. திவிட்டனின் தந்தை பயாபதி மன்னன் “உயர்ந்து உலகின் முடிக்கோர் சூளாமணியானான்” என்பதனால் இந்நூலுக்கு சூளாமணி எனப் பெயர் வழங்கிற்று என்பர்.

157) தோழமை நெறியை பின்பற்றியவர் யார்?

A) சுந்தரர்

B) திருநாவுக்கரசர்

C) குலசேகராழ்வார்

D) திருமங்கையாழ்வார்

விளக்கம்: சுந்தரர், திருமழிசையாழ்வார் போன்றோர் தோழமை நெறியையும், மாணிக்கவாசகர், திருமங்கையாழ்வார் போன்றோர் நாயகன் நாயகி நெறியையும் பின்பற்றினர்.

158) வட இந்தியப் பகுதிகளைக் களமாகக் கொண்டு தமிழ்ச் சாயலோடு படைக்கப்பெற்ற முதல் தமிழ்க் காப்பியம் எது?

A) கம்பராமாயணம்

B) மகாபாரதம்

C) வளையாபதி

D) பெருங்கதை

விளக்கம்: வடஇந்தியப் பகுதிகளைக் களமாகக் கொண்டு தமிழ்ச் சாயலோடு படைக்கப்பெற்ற முதல் தமிழ்க் காப்பியம் பெருங்கதை. இக்காப்பியத்தை இயற்றியவர் கொங்குவேளிர் ஆவார்.

159) மணிமேகலைக்கு பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.

A) இயற்கை காட்சிகளும் வருணைனைகளும் அமைந்துள்ளன.

B) கதைத்தலைவியால் பெயர் பெற்றது இந்நூல்

C) பரத்தையொழிப்பு, மதுவொழிப்பு, சிறையொழிப்பு என்னும் கருத்துக்களைக் கூறும் சமுதாய சீர்திருத்தக்காப்பியமாக இந்நூல் விளங்குகிறது.

D) அரங்க அமைப்பு முறைகள் பற்றிய செய்திகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

விளக்கம்: அரங்க அமைப்பு முறைகள் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ள நூல் – சிலப்பதிகாரம் ஆகும்.

160) பெரியபுராணம் எத்தனை அடியார் பெருமக்களை மையமாக் கொண்டு திகழ்கின்றது?

A) 72

B) 64

C) 63

D) 9

விளக்கம்: பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர் புராணம் பெருங்காப்பிய இலக்கணங்கள் பொருந்தியும் சில நெகிழ்ச்சிகளை உள்வாங்கியும் இயற்றப்பட்ட சைவக் காப்பியமாகும். இது 63 அடியார் பெருமக்களை மையமாகக் கொண்டு திகழ்கின்றது.

161) மனித வாழ்க்கையைச் சமைத்துப் பக்குவப்படுத்துவதே சமயத்தின் நோக்கம் என்று கூறியவர் யார்?

A) குன்றக்குடி அடிகளார்

B) மு.வ

C) தமிழன்பன்

D) இளங்குமரனார்

விளக்கம்: நிலத்தின் கடினத்தன்மையை இளக்கி நெகிழச்செய்து பயன்படு பொருள்களின் விளைவுக்குத் தகுதியாக்குவது உழவு. சுவையுடையனவாக, ஆனால், ஒன்றோடொன்று மாறுபட்ட சுவையுடையனவாகிய பொருள்களைச் சுவைத்தற்குரிய சுவையுடையனவாக ஆக்குவது சமைத்தல். மனித உள்ளங்களை இன்ப அன்பின் விளைநிலமாகத் தகுதிப்படுத்திப் பக்குவப்படுத்தும் தத்துவத்திற்கு, வாழ்க்கை முறைக்குச் சமயம் என்பது பெயர். மனித வாழ்க்கையைச் சமைத்துப் பக்குவப்படுத்துவதே சமயத்தின் நோக்கம் – குன்றக்குடி அடிகளார்.

162) கூற்றுகளை ஆராய்க.

1. வாழ்க்கையில் வெறுப்புற்ற பத்தரை ஒரு சமணப் பள்ளியை அடைந்து துறவறம் ஏற்கிறாள்.

2. பத்தரை சாரிபுத்தரிடம் வாதத்தில் தோற்றுப் புத்தசமயத்தை தழுவுகிறாள்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. வாழ்க்கையில் வெறுப்புற்ற பத்தரை ஒரு சமணப் பள்ளியை அடைந்து துறவறம் ஏற்கிறாள்.

2. பத்தரை சாரிபுத்தரிடம் வாதத்தில் தோற்றுப் புத்தசமயத்தை தழுவுகிறாள்.

163) சிற்றியலக்கிய வகைகளில் எளிமையும் இனிமையும் வாய்ந்த ஓர் இலக்கியம் எது?

A) கலம்பகம்

B) சதகம்

C) தாண்டகம்

D) பள்ளு

விளக்கம்: சிற்றிலக்கிய வகைகளில் எளிமையும் இனிமையும் வாய்ந்த ஓர் இலக்கியம் பள்ளு இலக்கியம் ஆகும். உழவுத் தொழில் செய்யும் மக்களின் வாழ்க்கையைப் பாடும் இலக்கியம் பள்ளு இலக்கியம் எனப்படும்.

164) தவறான கூற்றை தேர்வு செய்க.

A) யசோதர காவியம் ஐந்து சருக்கங்களையும் 320 பாடல்களையும் கொண்டது.

B) அபயருசி என்பான் ஒளதய நாட்டு மன்னன் மாரிதத்தனுக்குத் தம் பழம்பிறப்பு வரலாறு உணர்த்திச் சமண நெறிப்படுத்தியதே யசோதரக் காப்பியம் ஆகும்.

C) பெருங்காப்பியத்திற்கு இணையாக போற்றப்படுகின்ற சூளாமணியை இயற்றியவர் தோலாமொழித்தேவர் ஆவார்.

D) சூளாமணி ஐந்து காண்டங்களையும் 2131 விருத்தப்பாக்களையும் கொண்டது.

விளக்கம்: சூளாமணி 12 காண்டங்களையும் 2131 விருத்தப்பாக்களையும் கொண்டது.

165) தவறாக பொருந்தியுள்ளதை தேர்க.

A) குலசேகராழ்வார்- அடிமை நெறி

B) சுந்தரர்- தோழமை நெறி

C) மாணிக்க வாசகர்- நாயகன் நாயகி நெறி

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: அடிமை நெறி – திருநாவுக்கரசர், குலசேகராழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார்

பிள்ளைமை நெறி – திருஞானசம்பந்தர்

தோழமை நெறி – சுந்தரர், திருமழிசையாழ்வார்

நாயகன், நாயகி நெறி – மாணிக்கவாசகர், திருமங்கையாழ்வார்

166) பெரியபுராணத்தின் காப்பியத் தலைவர் யார்?

A) திருஞானசம்பந்தர்

B) திருநாவுக்கரசர்

C) சுந்தரர்

D) மாணிக்கவாசகர்

விளக்கம்: சுந்தரரைக் காப்பியத் தலைவராகக் கொண்டு பெரியபுராணம் அமைகின்றது. சுந்தரரின் சிறப்பு, சைவ அடியார்களின் சிறப்பு, சிவபெருமானின் அருள்திறம், அடியார்களின் வரலாறு, அவர்கள் கடைப்பிடித்த தொண்டு நெறி, இறைவன் அவர்களை ஆட்கொண்ட விதம், அடியார்கள் இறைவனை வழிபட்டு முக்தி பெற்ற தன்மை ஆகியன இந்நூல் முழுவதும் எடுத்துக் கூறப்படுவதால் சேக்கிழார் இந்நூலிற்கு திருத்தொண்டர் மாக்கதை எனப் பெயரிட்டார்.

167) கூற்று: திருக்குறள், கம்பராமாயணம் ஆகிய நூல்கள் தமிழுக்கு கதி என்று திருமணம் செல்வ கேசவராயர் கூறியுள்ளார்.

காரணம்: திருக்குறளின் பெருமை, கம்பராமாயணத்தின் சிறப்பு

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: கம்பராமாயணத்தின் சிறப்பு கருதியும், திருக்குறளின் பெருமை கருதியும் இவ்விரு நூல்களையும் ‘தமிழுக்குக் கதி’ என்று திருமணம் செல்வ கேசவராயர் கூறியுள்ளார்.

168) நானாற்பது என்று குறிப்பிடப்படும் நூல்களில் அக நூல் எது?

A) கார் நற்பது

B) களவழி நாற்பது

C) இன்னா நாற்பது

D) இனியவை நாற்பது

விளக்கம்: நானாற்பது என்று அழைக்கப்படும் நான்கு நூல்களாவன:

1. இன்னா நாற்பது

2. இனியவை நாற்பது

3. கார் நாற்பது

4. களவழி நாற்பது.

இவற்றுள் இன்னா நாற்பது மற்றும் இனியவை நாற்பது அறநூல்கள்

கார் நாற்பது அக நூல்.

களவழி நாற்பது புற நூல்.

169) சிலப்பதிகாரம் பற்றிய கூற்றுகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க.

A) குடிமக்கள் காப்பியம், முத்தமிழ்க்காப்பியம், நாடகக் காப்பியம், தேசிய காப்பியம் முதலான சிறப்புப்பெயர்களால் அழைக்கப்படுகிறது.

B) பூம்புகார், மதுரை, வஞ்சிமாநகர் பற்றி வரலாற்றுச் செய்திகளையும், அக்காலச் சமுதாய அமைப்பு, ஆடல் வகைகள், இசைக் கருவிகள், கல்வி, வணிகம் பற்றிய குறிப்புகளையும் கூறுகிறது.

C) மூவேந்தர் ஆட்சிமுறை பற்றிய செய்திகளை கூறுகிறது.

D) காப்பிய நாயகனே இக்காப்பியத்தில் முதன்மைப்படுத்தப்படுகிறார்.

விளக்கம்: சிலப்பதிகாரத்தில் காப்பிய நாயகியே முதன்மைப்படுத்தப்படுகிறாள்.

170) அற்புதத்திருவந்தாதி என்னும் நூலை எழுதியவர் யார்?

A) திருஞானசம்பந்தர்

B) காரைக்கால் அம்மையார்

C) காக்கைபாடினியார்

D) திருநாவுக்கரசர்

விளக்கம்: தன்னைச் சரணடைந்த அடியவர்களைக் காத்தருளும் தயாளனாக இறைவன் விளங்குவதை அற்புதத்திருவந்தாதியில் காரைக்காலம்மையார் எடுத்துக்கூறுகிறார்.

171) இராமபிரான் வில்லை வளைத்துச் சீதையை மணம் முடிப்பது பற்றி கூறும் காண்டம் எது?

A) பால காண்டம்

B) அயோத்தியா காண்டம்

C) சுந்தர காண்டம்

D) கிட்கிந்தா காண்டம்

விளக்கம்: அயோத்தி நகரத்து அரசனான தசரதனுக்கு இராமன், பரதன், இலக்குவன், சத்ருக்கன் ஆகிய நான்கு பிள்ளைகள் பிறப்பதும், இராமபிரான் வில்லை வளைத்துச் சீதையை மணம் முடிப்பதும் இடம்பெற்றுள்ள காண்டம் பால காண்டமாகும்.

172) மனித உள்ளங்களை இன்ப அன்பின் விளைநிலமாகத் தகுதிப்படுத்திப் பக்குவப்படுத்தும் தத்துவத்திற்கு, வாழ்க்கை முறைக்குச் சமயம் என்பது பெயர் என்று கூறியவர் யார்?

A) குன்றக்குடி அடிகளார்

B) மு.வ

C) தமிழன்பன்

D) இளங்குமரனார்

விளக்கம்: நிலத்தின் கடினத்தன்மையை இளக்கி நெகிழச்செய்து பயன்படு பொருள்களின் விளைவுக்குத் தகுதியாக்குவது உழவு. சுவையுடையனவாக, ஆனால், ஒன்றோடொன்று மாறுபட்ட சுவையுடையனவாகிய பொருள்களைச் சுவைத்தற்குரிய சுவையுடையனவாக ஆக்குவது சமைத்தல். மனித உள்ளங்களை இன்ப அன்பின் விளைநிலமாகத் தகுதிப்படுத்திப் பக்குவப்படுத்தும் தத்துவத்திற்கு, வாழ்க்கை முறைக்குச் சமயம் என்பது பெயர். மனித வாழ்க்கையைச் சமைத்துப் பக்குவப்படுத்துவதே சமயத்தின் நோக்கம் – குன்றக்குடி அடிகளார்.

173) இறைவனையே குழந்தையாகக் கருதி தாலாட்டுப் பாடல்கள் பல பாடியவர் யார்?

A) குலசேகராழ்வார்

B) ஆண்டாள்

C) பெரியாழ்வார்

D) நம்மாழ்வார்

விளக்கம்: பெரியாழ்வார் இறைவனைக் குழந்தையாகக் கருதி தாலாட்டுப் பாடல்கள் பல பாடியுள்ளார்.

பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள் இறைவனையே தன் தலைவனாகப் பாவித்து வாழ்ந்தார்.

174) திருவெழுக்கூற்றிருக்கை என்ற நூலை எழுதியவர் யார்?

A) ஆண்டாள்

B) நம்மாழ்வார்

C) திருமங்கையாழ்வார்

D) மதுரகவியாழ்வார்

விளக்கம்: ஆண்டாள் – நாச்சியார் திருமொழி, திருப்பாவை

நம்மாழ்வார் – திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி

திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல்.

மதுரகவியாழ்வார் – திருப்பதிகம்.

175) கம்பராமாயணத்தின் ஏழாவது காண்டத்தை எழுதியவர் யார்?

A) ஒளவையார்

B) கபிலர்

C) கம்பர்

D) ஒட்டக்கூத்தர்

விளக்கம்: கம்பராமாயணம் ஆறு காண்டங்களை உடையது. அவை,

1. பால காண்டம்

2. அயோத்திய காண்டம்

3. ஆரண்யா காண்டம்

4. கிட்கிந்தா காண்டம்

5. சுந்தர காண்டம்

6. யுத்த காண்டம்

இந்நூலின் ஏழாவது காண்டத்தை எழுதியவர் ஒட்டக்கூத்தர் ஆவார்.

176) திருத்தொண்டர் திருவந்தாதி என்னும் நூலை எழுதியவர் யார்?

A) நம்பியாண்டார் நம்பி

B) சுந்தரர்

C) சேக்கிழார்

D) மேற்காணும் யாருமில்லை

விளக்கம்: பெரியபுராணம்(திருத்தொண்டர் புராணம்) – சேக்கிழார்.

திருத்தொண்டத்தொகை – சுந்தரர்

திருத்தொண்டர் திருவந்தாதி – நம்பியாண்டார் நம்பி.

177) கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இட்ட பெயர் என்ன?

A) கம்பராமாயணம்

B) இராமவதாரம்

C) ராமாயணம்

D) இராமநாடகம்

விளக்கம்: தமிழில் தொடர்ச்சியாகச் செல்வாக்குப் பெற்று விளங்கும் காப்பியங்களுள் ஒன்றாகத் திகழ்வது கம்பராமாயணமாகும். இது கம்பரால் இயற்றப்பட்டது. வடமொழியில் வான்மீகி இயற்றிய இராமாயணத்தைத் தழுவி எழுதப்பட்டது இந்நூல். வழி நூலாயினும் கம்பர் தமக்கே உரிய கருப்பொருள் சிதையாமல் இயற்றியுள்ளார். கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இட்ட பெயர் இராமவதாரம்.

178) கூற்று: 15-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தில் கிறித்துவ இலக்கியங்கள் தமிழில் பல்கிப்பெருகின.

காரணம்: கிறித்துவ மதப்போதகர்கள் பன்மொழிப் புலமையும் பல்துறை அறிவும் மிக்க தமிழ்மக்களிடம் இரண்டறக்கலந்து தமிழைக் கற்றனர்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: 15-ஆம் நூற்றாண்டின் இறுதியில் மேலைநாட்டவர் பெருமளவில் தமிழகத்திற்கு வருகை புரிந்தனர். அவர்களுள் கிறித்துவ மதபோதகர்களும் அடங்குவர். அவர்கள் பன்மொழிப் புலமையும் பல்துறை அறிவும் மிக்க தமிழ்மக்களிடம் இரண்டறக்கலந்து தமிழைக் கற்றனர். தமிழின்வழி தங்கள் சமயக் கருத்துக்களைப் பரப்பினர். இதன் விளைவாக கிறித்துவ இலக்கியங்களும் தமிழில் பல்கிப்பெருகின.

179) மணிமேகலை பற்றிய கூற்றுகளில் சரியான கூற்றை தேர்வு செய்க.

A) வான்வழியே பறத்தல், பசியாதிருத்தல், தன் உருவை மாற்றிக்கொள்ளுதல் ஆகியவற்றிற்கான மந்திரங்களையும், அள்ள அள்ளக் குறையாது அமுதுசுரக்கும் அமுத சுரபியையும் பெறுகிறார் மணிமேகலை.

B) பூம்புகாருக்குத் திரும்பிய மணிமேகலை அறத்தொண்டு ஆற்றுகிறாள்.

C) மணிமேகலையால் சிறைக்கோட்டம் அறக்கோட்டமாகிறது.

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: வான்வழியே பறத்தல், பசியாதிருத்தல், தன் உருவை மாற்றிக்கொள்ளுதல் ஆகியவற்றிற்கான மந்திரங்களையும், அள்ள அள்ளக் குறையாது அமுதுசுரக்கும் அமுத சுரபியையும் பெறுகிறார் மணிமேகலை.

பூம்புகாருக்குத் திரும்பிய மணிமேகலை அறத்தொண்டு ஆற்றுகிறாள்.

மணிமேகலையால் சிறைக்கோட்டம் அறக்கோட்டமாகிறது.

180) யார் சிவபெருமானிடம், இப்பிறப்பு மட்டுமல்லாமல் எப்பிறப்பிலும் உனக்கு நான் அடிமை, நின் திருநாமமே எனது படைக்கலம் எனக் குறிப்பிட்டார்?

A) திருநாவுக்கரசர்

B) திருஞானசம்பந்தர்

C) சுந்தரர்

D) மாணிக்கவாசகர்

விளக்கம்: திருநாவுக்கரசர் சிவபெருமானிடம், இப்பிறப்பு மட்டுமல்லாமல் எப்பிறப்பிலும் உனக்கு நான் அடிமை, நின் திருநாமமே எனது படைக்கலம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

181) கூற்று: சேக்கிழாரின் நூலுக்கு சான்றோர் பெரியர் புராணம் என்று பெயரிட்டனர்.

காரணம்: செயற்கரிய செயல் புரிந்த அடியார்களின் சிறப்பினை உரைக்கும் நூல்

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: சேக்கிழார் தாம் இயற்றிய நூலுக்கு திருத்தொண்டர் மாக்கதை எனப் பெயரிட்டார். செயற்கரிய செயல் புரிந்த அடியார்களின் சிறப்பினை உரைப்பதால் இதனைச் சான்றோர்கள் பெரியர் புராணம் என்று கூற, காலப் போக்கில் இந்நூல் பெரியபுராணம் என்று வழங்கப்பட்டது.

182) கம்பராயமாயணம் எத்தனை படலங்களை கொண்டது?

A) 100

B) 118

C) 105

D) 97

விளக்கம்: கம்பராமாயணம் ஆறு காண்டங்களை உடையது. அவை,

1. பால காண்டம்

2. அயோத்திய காண்டம்

3. ஆரண்யா காண்டம்

4. கிட்கிந்தா காண்டம்

5. சுந்தர காண்டம்

6. யுத்த காண்டம்

இந்நூல் 118 படலங்களையும் உள்ளடக்கியது.

183) உஞ்சையினி நாட்டின் வளத்தையும் பெருமையையும் கூறும் நூல் எது?

A) உதயண குமார காவியம்

B) நாக குமார காவியம்

C) யசோதர காவியம்

D) நீலகேசி

விளக்கம்: உதயணகுமார காவியம் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றாகும். இந்நூலில் ஆறு காண்டங்கள் உள்ளன. இக்காப்பியத்தின் முதற்பகுதி உதயணன் வரலாற்றையும், பிற்பகுதி அவனது மகனாகிய நரவாகனனது வரலாற்றையும் கூறுகிறது. இக்காப்பியத்தில் 367 பாடல்கள் உள்ளன. இந்நூல் பெருங்கதை என்னும் காப்பியத்திலிருந்து வேறுபட்டது. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. உஞ்சையினி நாட்டின் வளத்தையும் பெருமையையும் இந்நூல் எடுத்தியம்புகிறது.

184) அபயருசி கூறும் அறிவுரையின்படி வாழ்பவர் அதன் பயனாக வீடுபேற்றை அடைவர் என்று கூறும் நூல் எது?

A) உதயண குமார காவியம்

B) நாக குமார காவியம்

C) யசோதர காவியம்

D) நீலகேசி

விளக்கம்: அபயருசி கூறும் அறிவுரையின்படி வாழ்பவர் அதன் பயனாக வீடுபேற்றை அடைவர் என்று ஐஞ்சிறுங்காப்பியங்களில் ஒன்றான யசோதர காவியம் கூறுகிறது.

185) அறம் னன்னும் சொல்லைப் பிரித்து எழுதுக

A) அறு+அம்

B) அ+றம்

C) அற+அம்

D) அற+ம்

விளக்கம்: ‘அறம்’ என்ற சொல்லை அறு+அம் எனப்பிரித்துத் தீமை அறுப்பது, நீக்குவது என்றும் அறுதி செய்வது, கடமைகளை வரையறுப்பது என்றும் பொருள் கொள்வர். பொதுவாகச் சான்றோர் விலக்கியன ஒழித்தலும், விதித்தன செய்தலும் அறம் எனப்பெறும்.

186) காதலும் வீரமும் சங்க காலத்தில் போற்றப்பட்டன. அதைப்போல அறமும் நீதியும் கீழ்க்காணும் எக்காலத்தில் பெரிதும் போற்றப்பட்டன?

A) பல்லவர்கள் காலம்

B) களப்பிரர்கள் காலம்

C) சங்கம் மருவிய காலம்

D) பாண்டியர்கள் காலம்

விளக்கம்: அறநூல்களைச் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்துப் பாராட்டுவது தமிழின் மரபு. கி.பி.3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.6-ஆம் நூற்றாண்டு வரை அறம் வலியுறுத்தும் நீதிநூல்கள் தமிழில் பலவிதமான வடிவங்களிலும் வெளிப்பாட்டு முறைகளிலும் எழுதப்பெற்றுள்ளன. காதலும் வீரமும் சங்க காலத்தில் போற்றப்பட்டதைப் போலவே அறமும் நீதியும் சங்கம் மருவிய காலத்தில் பெரிதும் போற்றப்பட்டன.

187) இறைவனையே தன் தலைவனாகக் கருதி வாழ்ந்தவர் யார்?

A) பெரியாழ்வார்

B) ஆண்டாள்

C) நம்மாழ்வார்

D) குலசேகராழ்வார்

விளக்கம்: இறைவனைக் குழந்தையாகக் கருதி தாலாட்டுப் பாடல்கள் பல பாடியுள்ளார் பெரியாழ்வார்.

அவர்தம் வளர்ப்பு மகளான ஆண்டாள் இறைவனையே தன் தலைவனாகப் பாவித்து வாழ்ந்தாள்.

188) சிவபெருமானை தலைவராகக் கொண்டு பன்னிரு திருமுறைகள் பாடப்பட்டன. பன்னிரு திருமுறையை எத்தனை பேர்கள் பாடியுள்ளனர்?

A) 27

B) 12

C) 24

D) 9

விளக்கம்: சிவபெருமானைத் தலைவராகக் கொண்ட 27 அடியார்கள் பாடிய பதிகங்கள் பன்னிரு திருமுறைகள் என்றும், திருமாலைத் தலைவராகக் கொண்ட 12 ஆழ்வார்கள் பாடிய பாசுரங்கள் நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் என்றும் அழைக்கப்பட்டன.

189) சுவையுடையனவாக, ஆனால், ஒன்றோடொன்று மாறுபட்ட சுவையுடையனவாகிய பொருள்களைச் சுவைத்தற்குரிய சுவையுடையனவாக ஆக்குவது சமைத்தல் என்று கூறியவர் யார்?

A) குன்றக்குடி அடிகளார்

B) மு.வ

C) தமிழன்பன்

D) இளங்குமரனார்

விளக்கம்: நிலத்தின் கடினத்தன்மையை இளக்கி நெகிழச்செய்து பயன்படு பொருள்களின் விளைவுக்குத் தகுதியாக்குவது உழவு. சுவையுடையனவாக, ஆனால், ஒன்றோடொன்று மாறுபட்ட சுவையுடையனவாகிய பொருள்களைச் சுவைத்தற்குரிய சுவையுடையனவாக ஆக்குவது சமைத்தல். மனித உள்ளங்களை இன்ப அன்பின் விளைநிலமாகத் தகுதிப்படுத்திப் பக்குவப்படுத்தும் தத்துவத்திற்கு, வாழ்க்கை முறைக்குச் சமயம் என்பது பெயர். மனித வாழ்க்கையைச் சமைத்துப் பக்குவப்படுத்துவதே சமயத்தின் நோக்கம் – குன்றக்குடி அடிகளார்.

190) ஆரண்ய காண்டம் என்பது கம்பராமாயணத்தின் எத்தனையாவது காண்டமாகும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: கம்பராமாயணம் ஆறு காண்டங்களை உடையது. அவை,

1. பால காண்டம்

2. அயோத்திய காண்டம்

3. ஆரண்யா காண்டம்

4. கிட்கிந்தா காண்டம்

5. சுந்தர காண்டம்

6. யுத்த காண்டம்

191) பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மூன்றாவதாக அமைந்த மருந்து நூலில் எத்தனை வெண்பாக்கள் இடம் பெற்றுள்ளன?

A) 100

B) 102

C) 80

D) 150

விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று. அதில் மூன்றாவதாக அமைந்தது ஏலாதி. ஏலம், இலவங்கப்பட்டை, நாககேசரம், மிளகு, திப்பிலி, சுக்கு ஆகிய ஆறும் கலந்த மருந்து உடலுக்குறுதி சேர்ப்பதுபோல, செய்யுள்தோறும் உள்ளத்திற்கு உறுதி சேர்க்கும் ஆறு கருத்துகளைக் கொண்டதால் இந்நூல் ஏலாதி எனப்பெயர் பெற்றது. 80 வெண்பாக்களைக் கொண்ட இந்நூலை இயற்றியவர் கணிமேதாவியார் ஆவார்.

192) யசோதர காவியம் _____________சருக்கங்களையும்____________பாடல்களையும் கொண்டது?

A) 5, 320

B) 4, 320

C) 5, 310

D) 4, 310

விளக்கம்: யசோதர காவியம் யசோதரன் என்ற மன்னனின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது. இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இது ஐந்து சருக்கங்களையும் 320 பாடல்களையும் கொண்டது. அபயருசி என்பான் ஒளதய நாட்டு மன்னன் மாரிதத்தனுக்குத் தம் பழம்பிறப்பு வரலாறு உணர்த்திச் சமய நெறிப்படுத்தியதே இக்காப்பியக் கதை.

193) பதினெண் கீழ்க்கணக்கு பற்றி கூறும் பழம்பாடலில் திருக்குறள் கீழ்க்காணும் எந்த பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது?

A) வாயுறை வாழ்த்து

B) பொய்யாமொழி

C) முப்பால்

D) தமிழ்வேதம்

விளக்கம்: நாலடி நான்மணி நானாற்ப தைத்திணைமுப்

பால்கடுகம் கோவை பழ்மொழி – மாமூலம்

இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே

கைந்நிலைய வாம் கீழ்க்கணக்கு.

மேற்காணும் பாடல் பதினெண் கீழ்க்கணக்கு பாடலை குறிக்கும் பழம்பாடலாகும். இதில் திருக்குறள் முப்பால் என்னும் பெயரில் குறிக்கப்பட்டுள்ளது.

194) பெருங்கதை எந்த வகையான “பா”-வில் பாடப்பட்டுள்ளது?

A) வெண்பா

B) ஆசிரியப்பா

C) கலிப்பா

D) வஞ்சிப்பா

விளக்கம்: ஆசிரியப்பாவின் நேர்த்தியான வடிவமைப்பில் பல கருத்துக்களைச் செம்மையாக பெருங்கதை என்னும் நூலில் கொங்குவேளிர் குறிப்பிட்டுள்ளார்.

195) பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் எத்தனை?

A) 6

B) 1

C) 11

D) 18

விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் 11 ஆகும்.

புற நூல்கள் – 1.

அக நூல்கள்- 6.

196) கீழ்க்காணும் எதன் காரணமாக தமிழகத்தில் இசுலாம் பரவியது?

A) பாமினி சுல்தான்களின் ஆட்சி

B) டெல்லி சுல்தான்களின் படையெடுப்பு

C) முகலாயப் படையெடுப்பு

D) முகமது கஜினி, முகமது கோரியின் படையெடுப்பு

விளக்கம்: முகலாயப் படையெடுப்பின் காரணமாகத் தமிழகத்தில் இசுலாம் பரவியது. இசுலாமியக் கவிஞர்கள் தமிழ்மரபினைப் பின்பற்றி இறைவனையும், இறைவனின் திருத்தூதரான நபிகள் நாயகத்தையும் போற்றிப் பரவினர்.

197) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க

A) உதயணன் கதை

B) கொங்குவேள் மாக்கதை

C) பெருங்கதை

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: இந்தியப் பகுதிகளைக் களமாகக் கொண்டு தமிழ்ச் சாயலோடு படைக்கப்பெற்ற முதல் தமிழ்க் காப்பியம் பெருங்கதை. இக்காப்பியத்தை இயற்றியவர் கொங்குவேளிர் ஆவார். உதயணன் என்னும் காவியத் தலைவனின் வாழ்க்கை விவரித்துக் கூறுகிறது இந்நூல். இதற்குக் கொங்குவேள் மாக்கதை, உதயணன் கதை என்ற வேறு பெயர்களும் உள்ளன.

198) சமயத்தின் அடிப்படையில் பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.

A) சூளாமணி

B) குண்டலகேசி

C) உதயணகுமார காவியம்

D) நாககுமார காவியம்

விளக்கம்: அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு உறுதிப்பொருள்களுள் ஒன்றோ, சிலவோ குறைந்து, பெருங்காப்பிய இலக்கணத்திற்கு மாறுபட்டு வருவது சிறுகாப்பியமாகும். உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி என்பவை ஐஞ்சிறு காப்பியங்களாகும். இவ்வைந்தும் சமண சமயக் காப்பியங்களாகும்.

199) நாககுமார காவியம் என்ற காவியத்தின் மற்றொரு பெயர் என்ன?

A) நாகபஞ்சமி பாடல்

B) நாகபஞ்சமி கதை

C) நாகபஞ்சமி இசை

D) நாகபஞ்சமி காவியம்

விளக்கம்: நாககுமார காவியம் அல்லது நாகபஞ்சமி கதை எனப்படும் இந்நூல், தமிழில் தோன்றிய சிறு காப்பியங்களில் ஒன்றாகும். இதை எழுதியவர் யாரெனத் தெரியவில்லை. 170 விருத்தப்பாக்களால் ஆன இந்நூல் ஐந்து சருக்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இது சமணசமயக் கொள்கைகளை விளக்க முற்படுகிது. இளமைக் காலத்தில் இன்பம் துய்ப்பதிலேயே தனது காலத்தைக் கழித்த நாககுமரன் தனது இறுதிக் காலத்தில் வாழ்வின் நிலையாமையை உணர்ந்து துறவு மேற்கொள்வதே இக்கதை.

200) அறம் என்ற சொல்லின் பொருள்களில் பொருந்தாதது எது?

A) தீமையை அறுப்பது

B) தீமையை நீக்குவது

C) கடமைகளை வரையறுப்பது

D) இறுதி செய்வது

விளக்கம்: ‘அறம்’ என்ற சொல்லை அறு+அம் எனப்பிரித்துத் தீமை அறுப்பது, நீக்குவது என்றும் அறுதி செய்வது, கடமைகளை வரையறுப்பது என்றும் பொருள் கொள்வர். பொதுவாகச் சான்றோர் விலக்கியன ஒழித்தலும், விதித்தன செய்தலும் அறம் எனப்பெறும்.

201) மணிமேகலை கீழ்க்காணும் எதனுடன் தொடர்புடையது?

A) சமணம்

B) பௌத்தம்

C) இந்து

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: பௌத்தசமயக் காப்பியமாகத் திகழும் மணிமேகலை கோவலனுக்கும், மாதவிக்கும் பிறந்த மகளாகிய மணிமேகலையின் வரலாற்றைக் கூறுகிறது. இதன் ஆசிரியர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.

202) திருவாசிரியம் என்ற நூலை எழுதியவர் யார்?

A) ஆண்டாள்

B) நம்மாழ்வார்

C) திருமங்கையாழ்வார்

D) மதுரகவியாழ்வார்

விளக்கம்: ஆண்டாள் – நாச்சியார் திருமொழி, திருப்பாவை

நம்மாழ்வார் – திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி

திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல்.

மதுரகவியாழ்வார் – திருப்பதிகம்

203) நிலத்தின் கடினத்தன்மையை இளக்கி நெகிழச்செய்து பயன்படு பொருள்களின் விளைவுக்குத் தகுதியாக்குவது உழவு என்று கூறியவர் யார்?

A) குன்றக்குடி அடிகளார்

B) மு.வ

C) தமிழன்பன்

D) இளங்குமரனார்

விளக்கம்: நிலத்தின் கடினத்தன்மையை இளக்கி நெகிழச்செய்து பயன்படு பொருள்களின் விளைவுக்குத் தகுதியாக்குவது உழவு. சுவையுடையனவாக, ஆனால், ஒன்றோடொன்று மாறுபட்ட சுவையுடையனவாகிய பொருள்களைச் சுவைத்தற்குரிய சுவையுடையனவாக ஆக்குவது சமைத்தல். மனித உள்ளங்களை இன்ப அன்பின் விளைநிலமாகத் தகுதிப்படுத்திப் பக்குவப்படுத்தும் தத்துவத்திற்கு, வாழ்க்கை முறைக்குச் சமயம் என்பது பெயர். மனித வாழ்க்கையைச் சமைத்துப் பக்குவப்படுத்துவதே சமயத்தின் நோக்கம் – குன்றக்குடி அடிகளார்.

204) சரியான வரிசையை தேர்வு செய்க

A) பால காண்டம், அயோத்தியா காண்டம், கிட்கிந்தா காண்டம், ஆரண்யா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம்

B) பால காண்டம், ஆரண்யா காண்டம், அயோத்தியா காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம்

C) பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்யா காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம்

D) பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்யா காண்டம், சுந்தர காண்டம், கிட்கிந்தா காண்டம், யுத்த காண்டம்

விளக்கம்: கம்பராமாயணம் ஆறு காண்டங்களை உடையது. அவை,

1. பால காண்டம்

2. அயோத்திய காண்டம்

3. ஆரண்யா காண்டம்

4. கிட்கிந்தா காண்டம்

5. சுந்தர காண்டம்

6. யுத்த காண்டம்

205) அபயருசி என்பான் ஒளதய நாட்டு மன்னன் மாரிதத்தனுக்குத் தம் பழம்பிறப்பு வரலாறு உணர்த்திச் சமய நெறிப்படுத்திய காப்பிய கதை எது?

A) உதயண குமார காவியம்

B) நாக குமார காவியம்

C) யசோதர காவியம்

D) நீலகேசி

விளக்கம்: யசோதர காவியம் யசோதரன் என்ற மன்னனின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது. இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இது ஐந்து சருக்கங்களையும் 320 பாடல்களையும் கொண்டது. அபயருசி என்பான் ஒளதய நாட்டு மன்னன் மாரிதத்தனுக்குத் தம் பழம்பிறப்பு வரலாறு உணர்த்திச் சமய நெறிப்படுத்தியதே இக்காப்பியக் கதை.

206) உதயணகுமார காவியம் எத்தனை காண்டங்களை கொண்டது?

A) 2

B) 3

C) 5

D) 6

விளக்கம்: உதயணகுமார காவியம் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றாகும். இந்நூலில் ஆறு காண்டங்கள் உள்ளன. இக்காப்பியத்தின் முதற்பகுதி உதயணன் வரலாற்றையும், பிற்பகுதி அவனது மகனாகிய நரவாகனனது வரலாற்றையும் கூறுகிறது. இக்காப்பியத்தில் 367 பாடல்கள் உள்ளன. இந்நூல் பெருங்கதை என்னும் காப்பியத்திலிருந்து வேறுபட்டது. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

207) பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் புறப்பொருள் சார்ந்த ஒரே நூல் எது?

A) கார் நாற்பது

B) களவழி நாற்பது

C) இன்னா நாற்பது

D) இனியவை நாற்பது

விளக்கம்: பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் புறப்பொருள் சார்ந்த ஒரே நூல் களவழி நாற்பது. களத்தை ஏர்க்களம், போர்க்களம் என்று இரு வகைப்படுத்துவர்.

ஏர்க்களம் – நெல் முதலானவற்றை அடித்து தூற்றும் களத்தைப் பாடுவது.

போர்க்களம் – போர்களத்தைப் பாடுவது.

களவழி நாற்பது – போர்க்களத்தைப் பாடும் நூல் ஆகும்.

208) கூற்றுகளை ஆராய்க.

1. இன்னது துன்பம் தரும் என்று கூறும் 40 வெண்பாக்களால் ஆன நூல் இன்னா நாற்பது – கபிலர்

2. இன்னது இன்னது இன்பம் பயக்கும் என 40 வெண்பாக்களைக் கொண்ட நூல் இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார்

3. 15-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கபிலர் என்னும் புலவரால் இயற்றப்பட்ட நூல் கபிலர் அகவல் ஆகும்.

4. அதிவீரராமபாண்டியர் இயற்றிய நறுந்தொகை, அறக்கருத்துக்களை எடுத்துரைக்கும் ஓரடிப்பாக்களால் ஆன நூல் ஆகும்.

A) 1, 2 சரி

B) 3, 4 சரி

C) 1, 2, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. இன்னது துன்பம் தரும் என்று கூறும் 40 வெண்பாக்களால் ஆன நூல் இன்னா நாற்பது – கபிலர்

2. இன்னது இன்னது இன்பம் பயக்கும் என 40 வெண்பாக்களைக் கொண்ட நூல் இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார்

3. 15-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கபிலர் என்னும் புலவரால் இயற்றப்பட்ட நூல் கபிலர் அகவல் ஆகும்.

4. அதிவீரராமபாண்டியர் இயற்றிய நறுந்தொகை, அறக்கருத்துக்களை எடுத்துரைக்கும் ஓரடிப்பாக்களால் ஆன நூல் ஆகும்.

209) பதினெண் கீழ்க்கணக்கு பற்றி கூறும் பழம்பாடலில் மாமூலம் என்பது கீழ்க்காணும் எதைக் குறிக்கிறது?

A) சிறுபஞ்சமூலம்

B) ஆசாரக்கோவை

C) திரிகடுகம்

D) பெரிய மூலம்

விளக்கம்: நாலடி நான்மணி நானாற்ப தைத்திணைமுப்

பால்கடுகம் கோவை பழ்மொழி – மாமூலம்

இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே

கைந்நிலைய வாம் கீழ்க்கணக்கு.

இதில் மாமூலம் என்பது சிறுபஞ்ச மூலத்தைக் குறிக்கிறது.

210) பொதுவாக சான்றோர் அறம் என்ற சொல்லைக் கீழ்க்கண்டவாறு எவ்வாறு பொருள் கொள்வர்?

A) விலக்கியன ஒழித்தல்

B) விதித்தன செய்தல்

C) A மற்றும் B

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: ‘அறம்’ என்ற சொல்லை அறு+அம் எனப்பிரித்துத் தீமை அறுப்பது, நீக்குவது என்றும் அறுதி செய்வது, கடமைகளை வரையறுப்பது என்றும் பொருள் கொள்வர். பொதுவாகச் சான்றோர் விலக்கியன ஒழித்தலும், விதித்தன செய்தலும் அறம் எனப்பெறும் என்று பொருள் கொள்வர்.

211) சிறுபஞ்சமூலத்தின் ஒவ்வொரு பாடலிலும் எத்தனை கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன?

A) 4

B) 3

C) 5

D) 2

விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று. அதில் இரண்டாவதாக அமைந்த நூல் சிறுபஞ்சமூலம் ஆகும். கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்தின் வேர்கள் கலந்த மருந்து உடலை வலுப்படுத்துவதுபோல, இந்நூலின் ஒவ்வொரு செய்யுளிலும் அமைந்த ஐந்து கருத்துக்கள் வாழ்வுக்கு வலிமை சேர்ப்பதால் இந்நூல் சிறுபஞ்சமூலம் எனப் பெயர் பெற்றது.

212) காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்று குற்றங்களையும் நீக்கும் தூய அறிவுமிக்க நூலை அருளிய புத்தரைப் போற்றும் நூல் எது?

A) மணிமேகலை

B) வளையாபதி

C) குண்டலகேசி

D) சீவகசிந்தாமணி

விளக்கம்: மணிமேகலை, பௌத்த சமயக் கருத்துக்களைப் பரப்பும் சிறந்ததோர் நூலாக விளங்குகிறது. இது காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்று குற்றங்களையும் நீக்கும் தூய அறிவுமிக்க நூலை அருளிய புத்தரைப் போற்றுகிறது.

213) நாலடி நானூறு என்ற நூலின் ஆசிரியர் யார்?

A) பிசிராந்தையார்

B) மாயூரம் வேதநாயகம் பிள்ளை

C) சமண முனிவர்கள்

D) ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை

விளக்கம்: திருக்குறளுக்கு அடுத்த நிலையில் வைத்து எண்ணத்தக்கது நாலடியார் ஆகும். நாலடி, நாலடி நானூறு, வேளாண்வேதம் என்று வெவ்வேறு பெயர்களாலும் இந்நூல் சுட்டப்படுகின்றது. சமண முனிவர்களால் பாடப்பட்ட 400 வெண்பாக்களின் தொகுப்பே இந்நூல்.

214) கூற்றுகளை ஆராய்க.

1. பதினெண் கீழ்க்கண்கு நூல்களில் அமைந்த அறநூல்கள், பிற்காலத்தில் தோன்றிய அறநூல்கள் எனத் தமிழின்கண் அமைந்த அறநூல்களை இருபிரிவாகப் பிரிக்கலாம்.

2. இனியவை நாற்பது – கபிலர்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. பதினெண் கீழ்க்கண்கு நூல்களில் அமைந்த அறநூல்கள், பிற்காலத்தில் தோன்றிய அறநூல்கள் எனத் தமிழின்கண் அமைந்த அறநூல்களை இருபிரிவாகப் பிரிக்கலாம்.

2. இனியவை நாற்பது – கபிலர்

215) கூற்று: பெருங்கதை, உதயணன் கதை என்றும் அழைக்கப்படுகிறது.

காரணம்: உதயணன் என்னும் காவியத்தலைவனின் வரலாற்றை கூறுகிறது

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: இந்தியப் பகுதிகளைக் களமாகக் கொண்டு தமிழ்ச் சாயலோடு படைக்கப்பெற்ற முதல் தமிழ்க் காப்பியம் பெருங்கதை. இக்காப்பியத்தை இயற்றியவர் கொங்குவேளிர் ஆவார். உதயணன் என்னும் காவியத் தலைவனின் வாழ்க்கையை விவரித்துக் கூறுகிறது இந்நூல். இதற்குக் கொங்குவேள் மாக்கதை, உதயணன் கதை என்ற வேறு பெயர்களும் உள்ளன.

216) தவறான கூற்றை தெரிவு செய்க

A) தமிழில் விருத்தப்பாவால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் சீவக சிந்தாமணி ஆகும்.

B) வடமொழியில் எழுந்த கத்திய சிந்தாமணியின் மொழிபெயர்ப்பே இந்நூல் என்பர்.

C) சமண சமயக் காப்பியமாகத் திகழும் இந்நூல் கி.பி.7ஆம் நூற்றாண்டில் திருத்தக்க தேவரால் இயற்றப்பட்டது.

D) திருத்தக்கத் தேவரை ‘தமிழ்க் கவிஞர்களுள் அரசன்’ ன வீரமாமுனிவர் போற்றுகிறார்.

விளக்கம்: சீவக சிந்தாமணி என்பதுவடமொழியில் எழுந்த கத்திய சிந்தாமணியின் தழுவலே இந்நூல் என்பர்.

217) சங்கம் மருவிய காலத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எழுதப்பட்டன. இதில் பதினெண் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) 11

B) 14

C) 10

D) 18

விளக்கம்: சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன.

218) வளையாபதி பற்றிய கூற்றுகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க.

A) ஐம்பெருங்காப்பியங்களுள் இறுதியாக வைத்து எண்ணப்படுவது வளையாபதி ஆகும்.

B) வளையாபதி நூல் முழுவதும் கிடைக்கப்பெறவில்லை

C) பௌத்த சமயத்தைச் சார்ந்த இந்நூலின் ஆசிரியர் பெயரும் தெரியவில்லை.

D) புறத்திரட்டுத்தொகை நூலில் வளையாபதியின் பாடல்களாக 66 செய்யுள்கள் காணப்படுகின்றன.

விளக்கம்: சமண சமயத்தைச் சார்ந்த இந்நூலின் ஆசிரியர் பெயரும் தெரியவில்லை.

219) உதயண குமாரனின் மகன் பெயர் என்ன?

A) நரவாகனன்

B) குணாட்டியார்

C) திவிட்டன்

D) விசயன்

விளக்கம்: உதயணகுமார காவியம் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றாகும். இந்நூலில் ஆறு காண்டங்கள் உள்ளன. இக்காப்பியத்தின் முதற்பகுதி உதயணன் வரலாற்றையும், பிற்பகுதி அவனது மகனாகிய நரவாகனனது வரலாற்றையும் கூறுகிறது. இக்காப்பியத்தில் 367 பாடல்கள் உள்ளன. இந்நூல் பெருங்கதை என்னும் காப்பியத்திலிருந்து வேறுபட்டது. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

220) யசோதர காவியத்தின் ஆசிரியர் யார்?

A) யசோதரன்

B)அபயருசி

C) மாரிதத்தன்

D) ஆசிரியர் பெயர் தெரியவில்லை

விளக்கம்: யசோதர காவியம் யசோதரன் என்ற மன்னனின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது. இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இது ஐந்து சருக்கங்களையும் 320 பாடல்களையும் கொண்டது. அபயருசி என்பான் ஒளதய நாட்டு மன்னன் மாரிதத்தனுக்குத் தம் பழம்பிறப்பு வரலாறு உணர்த்திச் சமய நெறிப்படுத்தியதே இக்காப்பியக் கதை.

221) அறமும் நீதியும் சங்கம் மருவிய காலத்தில் பெரிதும் போற்றப்பட்டன. அதைப்போல காதலும் வீரமும் கீழ்க்காணும் எக்காலத்தில் போற்றப்பட்டன?

A) சங்க காலம்

B) பல்லவர்கள் காலம்

C) சோழர்கள் காலம்

D) பாண்டியர்கள் காலம்

விளக்கம்: அறநூல்களைச் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்துப் பாராட்டுவது தமிழின் மரபு. கி.பி.3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.6-ஆம் நூற்றாண்டு வரை அறம் வலியுறுத்தும் நீதிநூல்கள் தமிழில் பலவிதமான வடிவங்களிலும் வெளிப்பாட்டு முறைகளிலும் எழுதப்பெற்றுள்ளன. காதலும் வீரமும் சங்க காலத்தில் போற்றப்பட்டதைப் போலவே அறமும் நீதியும் சங்கம் மருவிய காலத்தில் பெரிதும் போற்றப்பட்டன.

222) சிலப்பதிகாரம் பற்றிய கூற்றுகளில் தவறான கூற்றை தெரிவு செய்க.

1. மாசாத்துவான் மகனாகிய கோவலனுக்கும் மாநாய்கன் மகளாகிய கண்ணகிக்கும் திருமணம் – பூம்புகார்

2. கற்புக்கடம்பூண்ட தெய்வமாகிய மனைவி கண்ணகியை அடைந்த கோவலன், அவள் காற்சிலம்புகளை மூலதனமாகக் கொண்டு இழந்த செல்வத்தை மீண்டும் திரட்ட செல்வது – மதுரைமாநகர்

3. கண்ணகி தெய்வமாக்கப்படுவது – சேரநாடு

4. இந்நூல் செந்தமிழ்க் காப்பியங்களுள் சிறந்தது மட்டுமன்று, உலக மகாகாவியங்களில் ஒன்றாகும் என்று ஜி.யூ.போப் பாராட்டுகிறார்.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) 4 மட்டும் தவறு

விளக்கம்: செந்தமிழ்க் காப்பியங்களுள் சிறந்தது மட்டுமன்று, உலக மகாகாவியங்களில் ஒன்றாகும் என்று ஜி.யூ.போப் பாராட்டுவது சீவக சிந்தாமணி ஆகும்.

223) 80 வெண்பாக்களைக் கொண்ட மருந்து நூலை இயற்றியவர் யார்?

A) கணிமேதாவியார்

B) பெருவாயின் முள்ளியார்

C) நல்லாதனார்

D) காரியாசான்

விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று. அதில் மூன்றாவதாக அமைந்தது ஏலாதி. ஏலம், இலவங்கப்பட்டை, நாககேசரம், மிளகு, திப்பிலி, சுக்கு ஆகிய ஆறும் கலந்த மருந்து உடலுக்குறுதி சேர்ப்பதுபோல, செய்யுள்தோறும் உள்ளத்திற்கு உறுதி சேர்க்கும் ஆறு கருத்துகளைக் கொண்டதால் இந்நூல் ஏலாதி எனப்பெயர் பெற்றது. 80 வெண்பாக்களைக் கொண்ட இந்நூலை இயற்றியவர் கணிமேதாவியார் ஆவார்.

224) நறுந்தொகை என்னும் நூலை இயற்றியவர் யார்?

A) அதிவீரராமபாண்டியர்

B) ஒளவையார்

C) வ.சுப.மாணிக்கம்

D) பாரதியார்

விளக்கம்: அதிவீரராமபாண்டியர் இயற்றிய நறுந்தொகை, அறக்கருத்துகளை எடுத்துரைக்கும் ஒரு அடிப் பாக்களால் ஆன நூல் ஆகும்.

225) எழுத்தறி வித்தவ னிறைவ னாகும் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

A) நல்வழி

B) திருக்குறள்

C) பழமொழி நானூறு

D) நறுந்தொகை

விளக்கம்: “எழுத்தறி வித்தவ னிறைவ னாகும்

கல்விக் கழகு கசடற மொழிதல்

நாளுங் கிழமையும் நலிந்தோர்க் கில்லை

கேளுங் கிளையுங் கெட்டோர்க் கில்லை” – நறுந்தொகை

226) நீதி நூல்-ஐ இயற்றியவர் யார்?

A) ஒளவையார்

B) மாயூரம் வேதநாயகர்

C) கபிலர்

D) அதிவீரராமபாண்டியர்

விளக்கம்: இளம் வயதே கற்பதற்கு ஏற்ற வயது என்று கூறியவர் மாயூரம் வேதநாயகர் ஆவார். இவர் இயற்றிய நூல் நீதி நூல் ஆகும்.

227) நானாற்பது என்று குறிப்பிடப்படும் நூல்களில் அற நூல்கள் எத்தனை?

A) 1

B) 2

C) 4

D) 3

விளக்கம்: நானாற்பது என்று அழைக்கப்படும் நான்கு நூல்களாவன:

1. இன்னா நாற்பது

2. இனியவை நாற்பது

3.கார் நாற்பது

4. களவழி நாற்பது.

இவற்றுள் இன்னா நாற்பது மற்றும் இனியவை நாற்பது அறநூல்கள்

கார் நாற்பது அக நூல்.

களவழி நாற்பது புற நூல்.

228) பழமொழி நானூறு என்ற நூலை இயற்றியவர் யார்?

A) நல்லாதனார்

B) மூன்றுறையரையனார்

C) கணிமேதாவியார்

D) நப்பசலையார்

விளக்கம்: நாலடியார் போன்றே 400 வெண்பாக்களால் ஆனது பழமொழி நானூறு. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி அமையப் பாடப்பட்டிருப்பதால் இந்நூல் இப்பெயர் பெற்றது. இந்நூலை இயற்றியவர் முன்றுறையரையனார் ஆவார்.

229) கபிலர் அகவல் என்னும் நூல் இயற்றிய கபிலர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?

A) 15

B) 14

C) 17

D) 12

விளக்கம்: 15-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கபிலர் என்னும் புலவரால் இயற்றப்பட்ட நூல் கபிலர் அகவல். இந்நூல் கூறும் நீதி எக்காலத்திற்கும் பொருத்தமுடையதாக உள்ளது.

230) ஏலாதியின் ஒவ்வொரு பாடலிலும் எத்தனை கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன?

A) 4

B) 5

C) 6

D) 3

விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று. அதில் மூன்றாவதாக அமைந்தது ஏலாதி. ஏலம், இலவங்கப்பட்டை, நாககேசரம், மிளகு, திப்பிலி, சுக்கு ஆகிய ஆறும் கலந்த மருந்து உடலுக்குறுதி சேர்ப்பதுபோல, செய்யுள்தோறும் உள்ளத்திற்கு உறுதி சேர்க்கும் ஆறு கருத்துகளைக் கொண்டதால் இந்நூல் ஏலாதி எனப்பெயர் பெற்றது. 80 வெண்பாக்களைக் கொண்ட இந்நூலை இயற்றியவர் கணிமேதாவியார் ஆவார்.

231) பொருள், இன்பம், இடுக்கண் வந்த காலத்து அஞ்சாமை, பிறிதோர் உயிரின் துன்பங்கண்டு இரங்குதல், நிலையான அறம் ஆகிய ஐந்தும் உடையவன் நல்ல அரசனாகச் செயலாற்றுவதற்குரிய தகுதியுடையவனாகிறான் என்று கூறும் நூல் எது?

A) ஏலாதி

B) திரிகடுகம்

C) நல்வழி

D) சிறுபஞ்சமூலம்

விளக்கம்: பொருள், இன்பம், இடுக்கண் வந்த காலத்து அஞ்சாமை, பிறிதோர் உயிரின் துன்பங்கண்டு இரங்குதல், நிலையான அறம் ஆகிய ஐந்தும் உடையவன் நல்ல அரசனாகச் செயலாற்றுவதற்குரிய தகுதியுடையவனாகிறான் என்று கூறும் நூல் சிறுபஞ்சமூலம் ஆகும்.

232) திருக்குறளுக்கு அடுத்த நிலையில் வைத்து எண்ணத்தக்க நூல் எது?

A) நாண்மணிக்கடிகை

B) திரிகடுகம்

C) ஆசாரக்கோவை

D) நாலடியார்

விளக்கம்: திருக்குறளுக்கு அடுத்த நிலையில் வைத்து எண்ணத்தக்கது நாலடியார் ஆகும். நாலடி, நாலடி நானூறு, வேளாண்வேதம் என்று வெவ்வேறு பெயர்களாலும் இந்நூல் சுட்டப்படுகின்றது. சமண முனிவர்களால் பாடப்பட்ட 400 வெண்பாக்களின் தொகுப்பே இந்நூல்.

233) நிலையில்லாப் பொருளைத் தேடியலையும் மனித வாழ்வைப் பொருளற்றது என்று கூறும் நூல் எது?

A) நாண்மணிக்கடிகை

B) திரிகடுகம்

C) ஆசாரக்கோவை

D) நாலடியார்

விளக்கம்: நிலையாமை என்னும் கருத்தை அறவிலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. நிலையில்லாப் பொருளைத் தேடியலையும் மனித வாழ்வைப் பொருளற்றது என்கிறது நான்மணிக்கடிகை. நான்மணிக்கடிகை 104 வெண்பாக்களைக் கொண்டு விளம்பிநாகனாரால் இயற்றப்பெற்றது.

234) கூற்றுகளை ஆராய்க

1. சங்க பாடல்களின் எண்ணிக்கை 2381.

2. சங்க பாடல்களில் அகத்திணைப் பாடல்கள் 519

3. சங்க பாடல்களில் புறத்திணைப் பாடல்கள் 1862.

4. சங்கபாடல்கள் என்பது பதினெண்மேற்கணக்கு நூல்கள் ஆகும்.

A) 1, 4 மட்டும் சரி

B) 1, 3 சரி

C) 2, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: தமிழின் செவ்வியல் தன்மைக்குச் சான்றாக சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. பாட்டும் தொகையுமான பதினெட்டு நூல்களும் சங்க இலக்கியங்கள் என அறியப்படுகின்றன. பாட்டு என்பது பத்துப்பாட்டையும், தொகை என்பது எட்டுத்தொகையையும் குறிக்கும். இவற்றைப் பதினெண்மேற்கணக்கு நூல்கள் என்பர். இவை தமிழ்மக்களின் அக மற்றும் புற வாழ்வியல் கூறுகளை அறிய உதவுகின்றன.

சங்கப்பாடல்களின் எண்ணிக்கை 2381. இவற்றுள் அகத்திணைப்பாடல்கள் 1862. புறத்திணைப்பாடல்கள் 519. சங்கப்புலவர் எண்ணிக்கை 473. பெண்பாற்புலவர்களின் எண்ணிக்கை 49.

235) நாககுமார காவியம் பற்றிய கூற்றுகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க.

A) இதன் வேறு பெயர் நாகபஞ்சமி கதை ஆகும்.

B) இந்நூல் 4 சருக்கங்கள் மற்றும் 170 விருத்தப்பாக்களால் ஆனது.

C) இது சமண சமயக் கொள்கைகளை விளக்க முற்படுகிறது

D) இளமைக் காலத்தில் இன்பம் துய்ப்பதிலேயே தனது காலத்தைக் கழித்த நாககுமாரன் தனது இறுதிக் காலத்தில் வாழ்வின் நிலையாமை உணர்ந்து துறவு மேற்கொள்வதே இக்கதை ஆகும்

விளக்கம்: இந்நூல் 5 சருக்கங்கள் மற்றும் 170 விருத்தப்பாக்களால் ஆனது.

236) தமக்கு உதவியவர்களுக்கு அவரின் பகைவரோடு சேர்ந்து தீங்கிழைப்பது எதனை போன்றது என பழமொழி நானூறு குறிப்பிடுகிறது?

A) தான் தங்கியிருந்த கிளையின் அடியை வெட்டி வீழ்த்தி உயிர்விடுதல்

B) சிங்கத்தின் குகையில் தனியே சிக்கிகொள்ளுதல்

C) ஊன்று கோல் இன்றி ஆற்றில் இறங்குதல்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: தமக்கு உதவியவர்களுக்கு அவரின் பகைவரோடு சேர்ந்து தீங்கிழைப்பது, ஒருவன் உணர்வின்றித் தான் தங்கியிருந்த கிளையின் அடியை வெட்டி வீழ்த்தி உயிர்விடுதலைப் போன்றதாகும்.

237) அரங்க அமைப்பு பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ள காப்பியம் எது?

A) சிலப்பதிகாரம்

B) மணிமேகலை

C) வளையாபதி

D) குண்டலகேசி

விளக்கம்: சிலப்பதிகாரத்தில் காப்பிய நாயகியான கண்ணகியே முதன்மைப்படுத்தப்படுகிறாள். சிலப்பதிகாரம் குடிமக்கள் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், நாடகக் காப்பியம், தேசிய காப்பியம் முதலான சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறது. அரங்க அமைப்பு பற்றிய செய்திகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

238) உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல் எது?

A) திருக்குறள்

B) விவிலியம்

C) கிழவனும் கடலும்

D) போரும் அமைதியும்

விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் இடம்பெற்றுள்ள அறநூல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மையென. மணிமுடியாக விளங்கும் திருக்குறள் உலகம் போற்றும் பொதுமறை. இது அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருண்மைகளை உடையது. விவிலியத்திற்கு அடுத்தபடியாக உலகின் பெரும்பான்மையான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பெருமையுடையது.

239) கூற்று: மூன்றுறையரையனாரால் பாடப்பெற்ற நூல் பழமொழி நானூறு ஆகும்.

காரணம்: ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி அமையப் பாடப்பெற்றிருப்பதனால் இது பழமொழி நானூறு என்று அழைக்கப்படுகிறது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

விளக்கம்: நாலடியார் போன்றே 400 வெண்பாக்களால் ஆனது பழமொழி நானூறு. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி அமையப் பாடப்பட்டிருப்பதால் இந்நூல் இப்பெயர் பெற்றது. இந்நூலை இயற்றியவர் முன்றுறையரையனார் ஆவார்

240) நாலடியார் என்ற நூலை தொகுத்தவர் யார்?

A) சமண முனிவர்கள்

B) பதுமனார்

C) மூன்றுறையரையனார்

D) நப்பசலையார்

விளக்கம்: திருக்குறளுக்கு அடுத்த நிலையில் வைத்து எண்ணத்தக்கது நாலடியார் ஆகும். நாலடி, நாலடி நானூறு, வேளாண்வேதம் என்று வெவ்வேறு பெயர்களாலும் இந்நூல் சுட்டப்படுகின்றது. சமண முனிவர்களால் பாடப்பட்ட 400 வெண்பாக்களின் தொகுப்பே இந்நூல். இதனைத் தொகுத்தவர் பதுமனார் ஆவார்.

241) தமிழின்கண் அமைந்த அறநூல்களை எத்தனைப் பிரிவாகப் பிரிக்கலாம்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: பதினெண்கீழ்க்கணக்கு, நூல்களில் அமைந்த அறநூல்கள், பிற்காலத்தில் தோன்றிய அறநூல்கள் எனத் தமிழின்கண் அமைந்த அறநூல்களை இருபிரிவாகப் பிரிக்கலாம்.

242) பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் எத்தனை?

A) 6

B) 1

C) 11

D) 18

விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் 11 ஆகும்.

புற நூல்கள் – 1.

அக நூல்கள்- 6.

243) வாழ்க்கையின் எல்லா இன்னல்களுக்கும் காரணமான அறியாமையாகிய மயக்கத்தைத் தீர்ப்பது____________________என நாலடியார் குறிப்பிடுகிறது.

A) அறிவு

B) அறம்

C) கல்வி

D) செல்வம்

விளக்கம்: வாழ்க்கையின் எல்லா இன்னல்களுக்கும் காரணமாக அறியாமையாகிய மயக்கத்தைத் தீர்ப்பது கல்வி என்று நாலடியார் குறிப்பிடுகிறது. நாலடியாரை எழுதியவர்கள் சமண முனிவர்கள். தொகுத்தவர் பதுமனார்.

244) தனக்கு உதவி செய்தவர்களுக்குத் தீங்கு செய்வது தனக்கே தீங்கு செய்துகொள்வதற்கு ஒப்பாகும் என்ற கருத்தை கூறும் நூல் எது?

A) நாலடியார்

B) திருக்குறள்

C) பழமொழி நானூறு

D) நல்வழி

விளக்கம்: தனக்கு உதவி செய்தவர்களுக்குத் தீங்கு செய்வது தனக்கே தீங்கு செய்துகொள்வதற்கு ஒப்பாகும் என்ற கருத்தை பழமொழி நானூற்றுப் பாடல் குறிப்பிடுகிறது.

245) கூற்றுகளை ஆராய்க.

1. காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை ஆகிய எட்டுப் பெண்களை மணப்பதால், சீவகசிந்தாமணி மணநூல் என அழைக்கப்படுகிறது.

2. சீவகன் இறுதியில் துறவறம் பூண்டு முக்தி அடைகிறான்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை ஆகிய எட்டுப் பெண்களை மணப்பதால், சீவகசிந்தாமணி மணநூல் என அழைக்கப்படுகிறது.

2. சீவகன் இறுதியில் துறவறம் பூண்டு முக்தி அடைகிறான்.

246) சீவக சிந்தாமணி செந்தமிழ்க் காப்பியங்களுள் சிறந்தது மட்டுமன்று, உலக மகாகாவியங்களில் ஒன்றாகும் என்று கூறியவர் யார்?

A) வீரமாமுனிவர்

B) கால்டுவெல்

C) ஜி.யூ.போப்

D) ஈராஸ் பாதிரியார்

விளக்கம்: சமணசமயக் காப்பியமாகத் திகழும் இந்நூல் கி.பி.7-ஆம் நூற்றாண்டில் திருத்தக்கத்தேவரால் இயற்றப்பட்டது. திருத்தக்கத்தேவரை ‘தமிழ்க் கவிஞர்களுள் அரசன்’ என்று வீரமாமுனிவர் போற்றுகிறார். சீவக சிந்தாமணி செந்தமிழ்க் காப்பியங்களுள் சிறந்தது மட்டுமன்று, உலக மகாகாவியங்களில் ஒன்றாகும் என்று ஜி.யூ.போப் பாராட்டுகின்றார்.

247) பெருங்கதை பற்றிய கூற்றுகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க.

A) வடஇந்தியப் பகுதிகளைக் களமாகக் கொண்டு தமிழ்ச் சாயலோடு படைக்கப்பெற்ற இரண்டாவது தமிழ்க் காப்பியம் பெருங்கதை ஆகும்.

B) பெருங்கதையின் ஆசிரியர் கொங்குவேளிர் ஆவார்.

C) உதயணன் என்னும் காவியத் தலைவனின் வாழ்க்கையை விவரித்துச் சொல்கிறது.

D) இதற்குக் கொங்குவேள் மாக்கதை, உதயணன் கதை என்ற வேறு பெயர்களும் உள்ளன.

விளக்கம்: வடஇந்தியப் பகுதிகளைகக் களமாக் கொண்டு தமிழ்ச் சாயலோடு படைக்கப்பெற்ற முதல் தமிழ்க் காப்பியம் பெருங்கதை ஆகும்.

248) பெருவாயின் முள்ளியார் கீழ்க்காணும் எந்த நூலை எழுதியுள்ளார்?

A) ஏலாதி

B) சிறுபஞ்சமூலம்

C) திரிகடுகம்

D) ஆசாரக்கோவை

விளக்கம்: ஆசாரமாகிய ஒழுக்க விதிகளைக் கோவையாகக் கொண்டு 100 வெண்பாக்களால் ஆன நூல் ஆசாரக்கோவை. இதன் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார் ஆவார்.

249) உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இரண்டாம் நூல் எது?

A) விவிலியம்

B) போரும் அமைதியும்

C) திருக்குறள்

D) கம்பராமாயணம்

விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் இடம்பெற்றுள்ள அறநூல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மையென. மணிமுடியாக விளங்கும் திருக்குறள் உலகம் போற்றும் பொதுமறை. இது அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருண்மைகளை உடையது. விவிலியத்திற்கு அடுத்தபடியாக உலகின் பெரும்பான்மையான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பெருமையுடையது.

250) இருநானூறு என்று அழைக்கப்படும் நூல் எது?

A) நானாநாற்பது

B) இனியவை நாற்பது

C) இன்னா நாற்பது

D) நாலடியார்

விளக்கம்: திருக்குறளுக்கு அடுத்த நிலையில் வைத்து எண்ணத்தக்கது நாலடியார் ஆகும். நாலடி, நாலடி நானூறு, வேளாண்வேதம் என்று வெவ்வேறு பெயர்களாலும் இந்நூல் சுட்டப்படுகின்றது. சமண முனிவர்களால் பாடப்பட்ட 400 வெண்பாக்களின் தொகுப்பே இந்நூல்.

251) உதயணகுமார காவியத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளன?

A) 367

B) 368

C) 369

D) 366

விளக்கம் உதயணகுமார காவியம் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றாகும். இந்நூலில் ஆறு காண்டங்கள் உள்ளன. இக்காப்பியத்தின் முதற்பகுதி உதயணன் வரலாற்றையும், பிற்பகுதி அவனது மகனாகிய நரவாகனனது வரலாற்றையும் கூறுகிறது. இக்காப்பியத்தில் 367 பாடல்கள் உள்ளன. இந்நூல் பெருங்கதை என்னும் காப்பியத்திலிருந்து வேறுபட்டது. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

252) உதயண குமார காவியத்தை எழுதியவர் யார்?

A) உதயணன்

B) கொங்குவேளிர்

C) தோலாமொழித்தேவர்

D) பெயர் தெரியவில்லை

விளக்கம்: உதயணகுமார காவியம் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றாகும். இந்நூலில் ஆறு காண்டங்கள் உள்ளன. இக்காப்பியத்தின் முதற்பகுதி உதயணன் வரலாற்றையும், பிற்பகுதி அவனது மகனாகிய நரவாகனனது வரலாற்றையும் கூறுகிறது. இக்காப்பியத்தில் 367 பாடல்கள் உள்ளன. இந்நூல் பெருங்கதை என்னும் காப்பியத்திலிருந்து வேறுபட்டது. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

253) பதினெண் கீழ்க்கணுக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் எத்தனை?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று. அவை, திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி ஆகும்.

254) தமக்கு உதவியவர்களுக்கு அவரின் பகைவரோடு சேர்ந்து தீங்கிழைப்பது, ஒருவன் உணர்வின்றித் தான் தங்கியிருந்த கிளையின் அடியை வெட்டி வீழ்த்தி உயிர்விடுதலைப் போன்றது என்று குறிப்பிடும் நூல் எது?

A) திருக்குறள்

B) நாலடியார்

C) நான்மணிக்கடிகை

D) பழமொழி நானூறு

விளக்கம்: தமக்கு உதவியவர்களுக்கு அவரின் பகைவரோடு சேர்ந்து தீங்கிழைப்பது, ஒருவன் உணர்வின்றித் தான் தங்கியிருந்த கிளையின் அடியை வெட்டி வீழ்த்தி உயிர்விடுதலைப் போன்றதாகும் என்று பழமொழி நானூறு நூல் கூறுகிறது.

255) தொல்காப்பியர் போன்றே உலக அளவில் இலக்கிய வாசிப்பிற்கு வழிகாட்டும் நூலை எழுதியவர் யார்?

A) அரிஸ்டாட்டில்

B) டால்டாய்ஸ்

C) ஷேக்ஸ்பியர்

D) வில்லியம் ஸ்மித்

விளக்கம்: தொல்காப்பியர் போன்றே உலக அளவில் இலக்கிய வாசிப்பிற்கு வழிகாட்டும் நூலான கவிதையியலை எழுதியவர் அரிஸ்டாட்டில். நாடகத்தை எவ்வாறு வாசிக்கலாம்? நாடக உருவாக்கம் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை இந்நூலில் விளக்கியுள்ளார்.

256) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க

A) கண்ணதாசன்- ஆட்டனத்தி ஆதிமந்தி, இயேசு காவியம், மாங்கனி

B) முடியரசன்- பூங்கொடி, வீரகாவியம்

C) கவியோகி சுத்தானந்த பாரதி – பராசக்தி மகாகாவியம்

D) வைரமுத்து- பாண்டவர் பூமி

விளக்கம்: பாரதியின் வாழ்க்கை வரலாற்றைப் புதுக்கவிதை வடிவில் கவிராஜன் கதை என்னும் பெயரில் காப்பியமாகப் படைத்துள்ளார் வைரமுத்து.

மகாபாரதத்தை பாண்டவர் பூமி என்னும் பெயரில் புதுக்கவிதை வடிவில் படைத்துள்ளார் கவிஞர் வாலி.

257) உதயண குமார காவியம் பற்றிய கூற்றுகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க.

A) இந்நூலில் ஆறு காண்டங்கள் உள்ளன

B) இக்காப்பியத்தின் முற்பகுதி உதயணன் வரலாற்றையும், பிற்பகுதி அவனது மகனாகிய நரவாகனனது வரலாற்றையும் கூறுகிறது.

C) இக்காப்பியத்தில் மொத்தம் 376 பாடல்கள் உள்ளன.

D) இந்நூல் பெருங்கதை என்னும் காப்பியத்திலிருந்து வேறுபட்டது.

விளக்கம்: உதயணகுமார காவியத்தில் மொத்தம் 367 பாடல்கள் உள்ளன.

258) காப்பியத்திற்கு இலக்கணம் வகுத்த நூல் எது?

A) தொல்காப்பியம்

B) சிலப்பதிகாரம்

C) நன்னூல்

D) தண்டியலங்காரம்

விளக்கம்: கி.பி.12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய ‘தண்டியலங்காரம்’ காப்பியத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளது. ‘பெருங்காப்பிய நிலை பேசுங்காலை’ எனத் தொடங்கும் நூற்பா காப்பிய இலக்கணத்தைக் கூறுகிறது.

259) ஆசாரக்கோவையில் எத்தனை பாடல்கள் உள்ளன?

A) 100

B) 102

C) 104

D) 80

விளக்கம்: ஆசாரமாகிய ஒழுக்க விதிகளைக் கோவையாகக் கொண்டு 100 வெண்பாக்களால் ஆன நூல் ஆசாரக்கோவை. இதன் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார் ஆவார்.

260) முதுமொழிக் காஞ்சியில் எத்தனை வெண்பாக்கள் உள்ளன?

A) 100

B) 104

C) 80

D) 102

விளக்கம்: பல மணிகளைக் கோவையாகக் கொண்டு அமைவது மகளிர் அணியும் காஞ்சி என்னும் அணிகலன். அதுபோல பல முதுமொழிகளைக் கோவையாகக் கொண்ட 100 வெண்பாக்களை உடைய நூல் முதுமொழிக்காஞ்சி. இதன் ஆசிரியர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் ஆவார்.

261) எந்த நூற்றாண்டு முதல் எந்த நூற்றாண்டு வரை அறம் வலியுறுத்தும் நூல்கள் தமிழில் பலவிதமான வடிவங்களிலும் வெளிப்பாட்டு முறைகளிலும் எழுதப்பெற்றுள்ளன?

A) கி.மு.3 முதல் கி.பி.6

B) கி.பி.3 முதல் கி.பி.6

C) கி.மு.6 முதல் கி.மு.3

D) கி.மு.6 முதல் கி.பி.3

விளக்கம்: அறநூல்களைச் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்துப் பாராட்டுவது தமிழின் மரபு. கி.பி.3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.6-ஆம் நூற்றாண்டு வரை அறம் வலியுறுத்தும் நீதிநூல்கள் தமிழில் பலவிதமான வடிவங்களிலும் வெளிப்பாட்டு முறைகளிலும் எழுதப்பெற்றுள்ளன. காதலும் வீரமும் சங்க காலத்தில் போற்றப்பட்டதைப் போலவே அறமும் நீதியும் சங்கம் மருவிய காலத்தில் பெரிதும் போற்றப்பட்டன.

262) பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று அதில் இரண்டாவதாக அமைந்த நூல் எது?

A) திரிகடுகம்

B) சிறுபஞ்சமூலம்

C) ஏலாதி

D) ஆசாரக்கோவை

விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று. இதில் இரண்டாவதாக அமைந்த நூல் சிறுபஞ்சமூலம் ஆகும்.

263) மணிமொழிக்கோவை என்று குறிப்பிடப்படும் நூல்கள் எத்தனை?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களான நான்மணிக்கடிகை, முதுமொழிக்காஞ்சி, ஆசாரக்கோவை ஆகிய மூன்றையும் மணிமொழிக்கோவை என்பர்.

264) நான்மணிக்கடிகை என்ற நூலின் பெயர்க்காரணத்திற்கு பொருத்தமான ஒன்றை தெரிவு செய்க.

A) நான்கு மணிகள் பதிக்கப்பெற்ற கடிகை என்னும் அணிகலன் போல ஒவ்வொரு செய்யுளிலிலும் நான்கு அரிய கருத்துக்களைக் கொண்டுள்ளது.

B) நான்கு மருந்துப் பொருள் போல ஒவ்வொரு செய்யுளிலிலும் நான்கு அரிய கருத்துக்களைக் கொண்டுள்ளது.

C) நான்கு திசை போல ஒவ்வொரு செய்யுளிலிலும் நான்கு அரிய கருத்துக்களைக் கொண்டுள்ளது.

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களான நான்மணிக்கடிகை, முதுமொழிக்காஞ்சி, ஆசாரக்கோவை ஆகிய மூன்றையும் மணிமொழிக்கோவை என்பர். நான்கு மணிகள் பதிக்கப்பெற்ற கடிகை என்னும் அணிகலன் போல ஒவ்வொரு செய்யுளிலிலும் நான்கு அரிய கருத்துக்களைக் கொண்டுள்ளதால் இந்நூல் நான்மணிக்கடிகை எனப் பெயர் பெற்றது. இந்நூல் 104 வெண்பாக்களைக் கொண்டு விளம்பிநாகனாரால் இயற்றப்பெற்றது.

265) எந்த நூற்றாண்டில் தோன்றிய ‘தண்டியலங்காரம்’ காப்பியத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளது?

A) கி.பி. 10

B) கி.பி.12

C) கி.பி. 14

D) கி.பி. 17

விளக்கம்: கி.பி.12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய ‘தண்டியலங்காரம்’ காப்பியத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளது. ‘பெருங்காப்பிய நிலை பேசுங்காலை’ எனத் தொடங்கும் நூற்பா காப்பிய இலக்கணத்தைக் கூறுகிறது.

266) சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோவடிகள் எந்த சமயத்தை சார்ந்தவர்?

A) பௌத்தம்

B) சமணம்

C) சீக்கியம்

D) இந்து

விளக்கம்: சிலப்பதிகாரத்தை எழுதியவர் இளங்கோவடிகள். இவர் சமண சமயத்தை சார்ந்தவர். கி.பி.2-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இளங்கோவடிகளைச் சேரன் செங்குட்டுவனின் தம்பி என்பர்.

267) சிலப்பதிகாரம் எத்தனை காதைகளை கொண்டுள்ளது?

A) 3

B) 30

C) 13

D) 10

விளக்கம்: சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களையும், “மங்கல வாழ்த்துப் பாடல்” தொடங்கி “வரந்தரு காதை” ஈறாக முப்பது காதைகளையும் உடையது.

268) மணிமேகலைக்கு மணிமேகலா தெய்வம் மூன்று மத்திரங்களை கற்றுக்கொடுத்தது. இதில் பொருந்தாதது எது?

A) பழம்பிறப்பை உணர்த்தல்

B) வான்வழியே பறத்தல்

C) பசியாதிருத்தல்

D) தன் உருவை மாற்றிக்கொள்ளுதல்

விளக்கம்: இந்திரவிழா காணவந்த மணிமேகலா தெய்வம் மணிமேகலையைத் தூக்கிக்கொண்டு சென்று, மணிபல்லவத்தீவில் சேர்க்கிறது. அங்கு தோன்றிய புத்த பீடிகையைத் தொழுது, தன் பழம்பிறப்பு பற்றி அறிகிறாள். மணிமேகலை, வான்வழியே பறத்தல், பசியாதிருத்தல், தன் உருவை மாற்றிக்கொள்ளுதல் ஆகியவற்றிற்கான மந்திரங்களையும், அள்ள அள்ளக் குறையாது அமுதுசுரக்கும் அமுத சுரபியையும் பெறுகிறாள். பூம்புகாருக்குத் திரும்பிய மணிமேகலை அறத்தொண்டு ஆற்றுகிறாள்.

269) திரிகடுகம் என்ற நூலில் திரி என்ற சொல்லின் பொருள் என்ன?

A) நன்மை

B) மருந்துப்பொருள்

C) நற்கருத்துக்கள்

D) மூன்று

விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று.அதில் முதலாவதாக அமைந்த நூல் திரிகடுகம் ஆகும். இது சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் கலந்த மருந்து உடல்நோயைத் தீர்ப்பது போல, இந்நூலின் ஒவ்வொரு செய்யுளிலும் உள்ள மூன்று கருத்துக்கள் உள்ளத்து நோயைத் தீர்ப்பதால் இந்நூல் திரிகடும் எனப் பெயர் பெற்றது. 100 வெண்பாக்களைக் கொண்ட இந்நூலின் ஆசிரியர் நல்லாதனார் ஆவார்.

270) சிறுபஞ்சமூலத்திற்கு பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க

A) கண்டங்கத்திரி

B) சிறுவழுதுணை

C) பெருவழுதுணை

D) நெருஞ்சி

விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று. அதில் இரண்டாவதாக அமைந்த நூல் சிறுபஞ்சமூலம் ஆகும். கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்தின் வேர்கள் கலந்த மருந்து உடலை வலுப்படுத்துவதுபோல, இந்நூலின் ஒவ்வொரு செய்யுளிலும் அமைந்த ஐந்து கருத்துக்கள் வாழ்வுக்கு வலிமை சேர்ப்பதால் இந்நூல் சிறுபஞ்சமூலம் எனப் பெயர் பெற்றது.

271) நான்மணிக்கடிகையின் ஆசிரியர் யார்?

A) நல்லாதனார்

B) பெருவாயின் முள்ளியார்

C) விளம்பிநாகனார்

D) புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்

விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களான நான்மணிக்கடிகை, முதுமொழிக்காஞ்சி, ஆசாரக்கோவை ஆகிய மூன்றையும் மணிமொழிக்கோவை என்பர். நான்கு மணிகள் பதிக்கப்பெற்ற கடிகை என்னும் அணிகலன் போல ஒவ்வொரு செய்யுளிலிலும் நான்கு அரிய கருத்துக்களைக் கொண்டுள்ளதால் இந்நூல் நான்மணிக்கடிகை எனப் பெயர் பெற்றது. இந்நூல் 104 வெண்பாக்களைக் கொண்டு விளம்பிநாகனாரால் இயற்றப்பெற்றது.

272) கி.பி.12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய ‘தண்டியலங்காரம்’ காப்பியத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளது. இந்நூல் மூன்றினுள் ஒன்று முதலில் வரவேண்டும் என்று குறிப்பிடுகிறது. இதில் பொருந்தாதது எது?

A) இயற்கையை வாழ்த்துதல்

B) தெய்வத்தினை வணங்குதல்

C) உரைக்கும் பொருள் உணர்தல்

D) காப்பிய தலைவன், தலைவியை அறிமுகம் செய்தல்

விளக்கம்: கி.பி.12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய ‘தண்டியலங்காரம்’ காப்பியத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளது. இதன்படி பெருங்காப்பியத்தில் இயற்கையை வாழ்த்துதல், தெய்வத்தினை வணங்குதல், உரைக்கும் பொருள் உணர்த்தல் என்னும் மூன்றினுள் ஒன்று முதலில் வரவேண்டும்.

273) கீழ்க்கண்டவற்றில் எது கால வெள்ளத்தில் அழிந்துபோன காப்பியங்கள் ஆகும்?

A) வளையாபதி

B) மணிமேகலை

C) சிலப்பதிகாரம்

D) சீவகசிந்தாமணி

விளக்கம்: சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி ஆகிய ஐந்தும் ஐம்பெருங்காப்பியங்கள். இவற்றில் சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டும் சங்கம் மருவிய கால இலக்கியங்கள். பின்னர் வரும் சீவகசிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி சோழர் காலத்தைச் சார்ந்தவை.அவற்றுள் குண்டலகேசியும் வளையாபதியும் காலவெள்ளத்தில் அழிந்து போன காப்பியங்கள் ஆகும்.

274) முதுமொழிக்காஞ்சி என்னும் நூலை இயற்றியவர் யார்?

A) நல்லாதனார்

B) பெருவாயின் முள்ளியார்

C) விளம்பிநாகனார்

D) புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்

விளக்கம்: பல மணிகளைக் கோவையாகக் கொண்டு அமைவது மகளிர் அணியும் காஞ்சி என்னும் அணிகலன். அதுபோல பல முதுமொழிகளைக் கோவையாகக் கொண்ட 100 வெண்பாக்களை உடைய நூல் முதுமொழிக்காஞ்சி. இதன் ஆசிரியர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் ஆவார்.

275) தமிழில் தோன்றிய முதல் பெருங்காப்பியம் எது?

A) மணிமேகலை

B) சிலப்பதிகாரம்

C) அகத்தியம்

D) கம்பராமாயணம்

விளக்கம்: தமிழில் தோன்றிய முதல் பெருங்காப்பியம் சிலப்பதிகாரம். இக்காப்பியம் நெஞ்சை அள்ளும் சுவையுடையது. சிலம்பால் உருவான நிகழ்வுகளையும் வரலாற்றையும் கூறுவதால் சிலப்பதிகாரம் எனப்பெயர் பெற்றது.

276) அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருள்களைப் பெருங்காப்பியம் வலியுறுத்திப் பாட வேண்டும். இந்நான்கினுள் ஒன்றோ, பலவோ குறைந்து வருவதை சிறுகாப்பியம் என்று கூறியவர் யார்?

A) தண்டியாசிரியர்

B) அகத்தியர்

C) தொல்காப்பியர்

D) பவணந்தி முனிவர்

விளக்கம்: அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருள்களைப் பெருங்காப்பியம் வலியுறுத்திப் பாட வேண்டும். இந்நான்கினுள் ஒன்றோ, பலவோ குறைந்து வருவதைத் தண்டியாசிரியர் சிறுகாப்பியமென்று கூறுகிறார்.

277) பெருங்காப்பியம் எத்தனை வகையான மெய்ப்பாடுகளை கூறும் வகையில் இதன் உள்ளடக்கம் அமைதல் வேண்டும்?

A) 4

B) 5

C) 6

D) 8

விளக்கம்: எண்வகை மெய்ப்பாடுகளைக் கூறும் வகையில் பெருங்காப்பிய உள்ளடக்கம் அமைதல் வேண்டும். பெருங்காப்பியங்கள், எதையும், குறைவின்றிச் செய்துமுடிக்கும் வலிமை வாய்ந்த தன்னிகர் இல்லாத் தலைவனைப் பெற்று அமைதல் வேண்டும்.

278) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க

A) காண்டம்

B) இலம்பகம்

C) பருவம்

D) காதை

விளக்கம்: காப்பியத்தின் பெரும்பிரிவிற்குக் காண்டம், இலம்பகம், பருவம் எனவும் உட்பிரிவிற்குச் சருக்கம், காதை, படலம் எனவும் பெயரிடுவர்.

279) கோவலனுக்கும் கண்ணகிக்கும் திருமணம் நடைபெற்ற இடம் எது?

A) மதுரை

B) பூம்புகார்

C) கொற்கை

D) தொண்டி

விளக்கம்: பூம்புகாரில் மாசாத்துவான் மகனாகிய கோவலனுக்கும் மாநாய்கன் மகளாகிய கண்ணகிக்கும் திருமணம் நடைபெறுகிறது. சில ஆண்டுகள் இனிமையாக இல்லறத்தை நடத்துகின்றனர். இந்நிலையில் ஆடல், பாடல், அழகு என்ற மூன்றிலும் குறைவுபடாத மாதவி என்ற பெண் கோவலன் வாழ்வில் குறுக்கிடுகிறாள். அவளுடன் சில காலம் வாழ்ந்த கோவலன் ஊழ்வினையால் அவளைப் பிரிந்து விடுகிறான்.

280) சிறுபஞ்சமூலம் என்ற சொல்லில் மூலம் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) முதல்

B) வேர்

C) ஐந்து

D) ஆரம்பம்

விளக்கம்: மூலம் என்ற சொல்லின் பொருள் வேர் என்பதாகும். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று. அதில் இரண்டாவதாக அமைந்த நூல் சிறுபஞ்சமூலம் ஆகும். கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்தின் வேர்கள் கலந்த மருந்து உடலை வலுப்படுத்துவதுபோல, இந்நூலின் ஒவ்வொரு செய்யுளிலும் அமைந்த ஐந்து கருத்துக்கள் வாழ்வுக்கு வலிமை சேர்ப்பதால் இந்நூல் சிறுபஞ்சமூலம் எனப் பெயர் பெற்றது.

281) நான்மணிக்கடிகை எத்தனை வெண்பாக்களைக் கொண்டு விளம்பிநாகனாரால் இயற்றப்பெற்றது?

A) 100

B) 80

C) 102

D) 104

விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களான நான்மணிக்கடிகை, முதுமொழிக்காஞ்சி, ஆசாரக்கோவை ஆகிய மூன்றையும் மணிமொழிக்கோவை என்பர். நான்கு மணிகள் பதிக்கப்பெற்ற கடிகை என்னும் அணிகலன் போல ஒவ்வொரு செய்யுளிலும் நான்கு அரிய கருத்துக்களைக் கொண்டுள்ளதால் இந்நூல் நான்மணிக்கடிகை எனப் பெயர் பெற்றது. இந்நூல் 104 வெண்பாக்களைக் கொண்டு விளம்பிநாகனாரால் இயற்றப்பெற்றது.

282) திரி என்றால் மூன்று என்று பொருள். திரிகடும் எத்தனை வெண்பாக்களை கொண்ட அற நூல்?

A) 300

B) 100

C) 130

D) 400

விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று.அதில் முதலாவதாக அமைந்த நூல் திரிகடுகம் ஆகும். இது சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் கலந்த மருந்து உடல்நோயைத் தீர்ப்பது போல, இந்நூலின் ஒவ்வொரு செய்யுளிலும் உள்ள மூன்று கருத்துக்கள் உள்ளத்து நோயைத் தீர்ப்பதால் இந்நூல் திரிகடும் எனப் பெயர் பெற்றது. 100 வெண்பாக்களைக் கொண்ட இந்நூலின் ஆசிரியர் நல்லாதனார் ஆவார்.

283) சிறுபஞ்சமூலம் எத்தனை பாடல்களால் ஆனது?

A) 100

B) 80

C) 102

D) 150

விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று. அதில் இரண்டாவதாக அமைந்த நூல் சிறுபஞ்சமூலம் ஆகும். கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்தின் வேர்கள் கலந்த மருந்து உடலை வலுப்படுத்துவதுபோல, இந்நூலின் ஒவ்வொரு செய்யுளிலும் அமைந்த ஐந்து கருத்துக்கள் வாழ்வுக்கு வலிமை சேர்ப்பதால் இந்நூல் சிறுபஞ்சமூலம் எனப் பெயர் பெற்றது. 102 வெண்பாக்களைக் கொண்ட இந்நூலின் ஆசிரியர் காரியாசான் ஆவார்.

284) கூற்று: தமிழில் தோன்றிய முதல் பெருங்காப்பியம் மணிமேகலை

காரணம்: சிலம்பால் உருவான நிகழ்வுகளையும் வரலாற்றையும் கூறுவதாலேயே சிலப்பதிகாரம் எனப்பெயர் பெற்றது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: தமிழில் தோன்றிய முதல் பெருங்காப்பியம் சிலப்பதிகாரம். இக்காப்பியம் நெஞ்சை அள்ளும் சுவையுடையது. சிலம்பால் உருவான நிகழ்வுகளையும் வரலாற்றையும் கூறுவதால் சிலப்பதிகாரம் எனப்பெயர் பெற்றது.

285) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க

A) சிலப்பதிகாரம்

B) சீவகசிந்தாமணி

C) வளையாபதி

D) குண்டலகேசி

விளக்கம்: சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி ஆகிய ஐந்தும் ஐம்பெருங்காப்பியங்கள். இவற்றில் சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டும் சங்கம் மருவிய கால இலக்கியங்கள். பின்னர் வரும் சீவகசிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி சோழர் காலத்தைச் சார்ந்தவை.

286) கூற்று 1: காப்பிய இலக்கணத்தோடு பெரும்பாலும் பொருந்தியும் சிறுபான்மை மாறுபட்டும் அமைந்திருப்பவை தொடர்நிலைச்செய்யுள் என அழைக்கப்படுகின்றன.

கூற்று 2: எண்வகை மெய்ப்பாடுகளை கூறும் வகையில் பெருங்காப்பியத்தின் உள்ளடக்கம் அமைதல் வேண்டும்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: காப்பிய இலக்கணத்தோடு பெரும்பாலும் பொருந்தியும் சிறுபான்மை மாறுபட்டும் அமைந்திருப்பவை தொடர்நிலைச்செய்யுள் என அழைக்கப்படுகின்றன.

எண்வகை மெய்ப்பாடுகளை கூறும் வகையில் பெருங்காப்பியத்தின் உள்ளடக்கம் அமைதல் வேண்டும்.

287) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க

A) சருக்கம்

B) காதை

C) படலம்

D) இலம்பகம்

விளக்கம்: காப்பியத்தின் பெரும்பிரிவிற்குக் காண்டம், இலம்பகம், பருவம் எனவும் உட்பிரிவிற்குச் சருக்கம், காதை, படலம் எனவும் பெயரிடுவர்.

288) உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று அழைக்கப்படும் நூல் எது?

A) மணிமேகலை

B) சிலப்பதிகாரம்

C) குண்டலகேசி

D) நீலகேசி

விளக்கம்: தமிழில் தோன்றிய முதல் பெருங்காப்பியம் சிலப்பதிகாரம். இக்காப்பியம் நெஞ்சை அள்ளும் சுவையுடையது. சிலம்பால் உருவான நிகழ்வுகளையும் வரலாற்றையும் கூறுவதால் சிலப்பதிகாரம் எனப்பெயர் பெற்றது. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று இந்நூல் அறியப்படுகிறது.

289) எந்த நாட்டை நோக்கிச் சென்ற கண்ணகி, தெய்வமாக்கப்படுகிறாள்?

A) சேர நாடு

B) சோழ நாடு

C) பாண்டிய நாடு

D) பல்லவ நாடு

விளக்கம்: கற்புக்கடம்பூண்ட தெய்வமாகிய கண்ணகி சேரநாடு நோக்கிச் சென்றாள். அங்கு அவள் தெய்வமாக்கப்படுகிறாள்.

290) தமிழில் விருத்தப்பாவால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் சீவக சிந்தாமணி ஆகும். இது எம்மொழியில் எழுந்த கத்திய சிந்தாமணியின் தழுவல்?

A) வடமொழி

B) தெலுங்கு

C) இந்தி

D) கன்னடம்

விளக்கம்: தமிழில் விருத்தப்பாவால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் சீவக சிந்தாமணி ஆகும். வடமொழியில் எழுந்த கத்திய சிந்தாமணியின் தழுவலே இந்நூல் ஆகும்.

291) சிறுபஞ்சமூலம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

A) காரியாசான்

B) கணிமேதாவியார்

C) நல்லாதனார்

D) நப்பசலையார்

விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று. அதில் இரண்டாவதாக அமைந்த நூல் சிறுபஞ்சமூலம் ஆகும். கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்தின் வேர்கள் கலந்த மருந்து உடலை வலுப்படுத்துவதுபோல, இந்நூலின் ஒவ்வொரு செய்யுளிலும் அமைந்த ஐந்து கருத்துக்கள் வாழ்வுக்கு வலிமை சேர்ப்பதால் இந்நூல் சிறுபஞ்சமூலம் எனப் பெயர் பெற்றது. 102 வெண்பாக்களைக் கொண்ட இந்நூலின் ஆசிரியர் காரியாசான் ஆவார்.

292) பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மூன்றாவதாக அமைந்த மருந்து நூல் எது?

A) சிறுபஞ்சமூலம்

B) திரிகடுகம்

C) ஏலாதி

D) நல்வழி

விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று. அதில் மூன்றாவதாக அமைந்தது ஏலாதி. ஏலம், இலவங்கப்பட்டை, நாககேசரம், மிளகு, திப்பிலி, சுக்கு ஆகிய ஆறும் கலந்த மருந்து உடலுக்குறுதி சேர்ப்பதுபோல, செய்யுள்தோறும் உள்ளத்திற்கு உறுதி சேர்க்கும் ஆறு கருத்துகளைக் கொண்டதால் இந்நூல் ஏலாதி எனப்பெயர் பெற்றது. 80 வெண்பாக்களைக் கொண்ட இந்நூலை இயற்றியவர் கணிமேதாவியார் ஆவார்.

293) சிலப்பதிகாரம் எத்தனை காண்டங்களை கொண்டுள்ளது?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களையும், முப்பது காதைகளையும் கொண்டுள்ளது.

மூன்று காண்டங்கள்:

1. புகார்க்காண்டம்

2. மதுரைக்காண்டம்

3. வஞ்சிக்காண்டம்

294) சிலப்பதிகாரத்தில் முதன்மைப்படுத்தப்படுபவர் யார்?

A) கோவலன்

B)கண்ணகி

C) மாதரி

D) மாதவி

விளக்கம்: சிலப்பதிகாரத்தில் காப்பிய நாயகியான கண்ணகியே முதன்மைப்படுத்தப்படுகிறாள். சிலப்பதிகாரம் குடிமக்கள் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், நாடகக் காப்பியம், தேசிய காப்பியம் முதலான சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறது.

295) சீவக சிந்தாமணி எந்த நூற்றாண்டில் இயற்றப்பட்டது?

A) கி.பி.6-ஆம் நூற்றாண்டு

B) கி.பி.7-ஆம் நூற்றாண்டு

C) கி.பி.8-ஆம் நூற்றாண்டு

D) கி.பி.9-ஆம் நூற்றாண்டு

விளக்கம்: சமணசமயக் காப்பியமாகத் திகழும் சீவக சிந்தாமணி கி.பி.7-ஆம் நூற்றாண்டில் திருத்தக்கத்தேவரால் இயற்றப்பட்டது.

296) திருத்தக்கத்தேவரை ‘தமிழ்க் கவிஞர்களுள் அரசன்’ என்று போற்றியவர் யார்?

A) ஜி.யூ.போப்

B) வீரமாமுனிவர்

C) கால்டுவெல்

D) திருத்தணி சரவண பெருமாள்

விளக்கம்: சமணசமயக் காப்பியமாகத் திகழும் சீவக சிந்தாமணி கி.பி.7-ஆம் நூற்றாண்டில் திருத்தக்கத்தேவரால் இயற்றப்பட்டது. திருத்தக்கத்தேவரை ‘தமிழ்க் கவிஞர்களுள் அரசன்’ என்று வீரமாமுனிவர் போற்றுகிறார்.

297) சீவக சிந்தாமணியில் எத்தனை பாடல்கள் உள்ளன?

A) 3145

B) 3415

C) 3514

D) 3451

விளக்கம்: சீவக சிந்தாமணி நாமகள் இலம்பகம் முதல் முக்தி இலம்பகம் வரை 13 இலம்பகங்களையும், 3145 பாடல்களையும் கொண்டது. காப்பிய இலக்கணம் முழுமையும் பொருந்தும் இந்நூல் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு உறுதிப் பொருள்களையும் பேசுகிறது.

298) கூற்று: சிலப்பதிகாரம், மணிமேகலை-ஐ இரட்டைக் காப்பியங்கள் என்று கூறுவர்

காரணம்: இரண்டு நூல்களின் ஆசிரியர்களும் சமகாலத்தவர்

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: கதைக்களம், பாத்திரங்கள், கருத்துக்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டிலும் தொடர்வதால் இவ்விரண்டையும் இரட்டைக்காப்பியம் என்பர்.

299) சிலப்பதிகாரம் உணர்த்தும் உண்மைகள் எத்தனை?

A) 2

B) 4

C) 3

D) 5

விளக்கம்: “அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்

உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்

ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்” என்னும் முப்பெரும் உண்மைகளை இந்நூல் கூறுகிறது.

300) சரியான கூற்றை தெரிவு செய்க

A) மணிமேகலை இளங்கோவடிகள் முன்பாகவும், சிலப்பதிகாரம் சீத்தலைச் சாத்தனார் முன்பாகவும் அரங்கேற்றப்பட்டது.

B) சிலப்பதிகாரம் இளங்கோவடிகள் முன்பாகவும், மணிமேகலை சீத்தலைச்சாத்தனார் முன்பாகவும் அரங்கேற்றப்பட்டது.

C) மணிமேகலை திருத்தக்கத்தேவர் முன்பாகவும், சிலப்பதிகாரம் சீத்தலைச்சாத்தனார் முன்பாகவும் அரங்கேற்றப்பட்டது

D) சிலப்பதிகாரம் திருத்தக்கத்தேவர் முன்பாகவும், மணிமேகலை இளங்கோவடிகள் முன்பாகவும் அரங்கேற்றம் செய்யப்பட்டது

விளக்கம்: மணிமேகலை இளங்கோவடிகள் முன்பாகவும், சிலப்பதிகாரம் சீத்தலைச்சாத்தனார் முன்பாகவும் அரங்கேற்றப்பட்டதாகக் கூறுவர்.

301) மணிமேகலையில் எத்தனை காண்டங்கள் உள்ளது?

A) 3

B) 6

C) 7

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: சிலப்பதிகாரத்தில் உள்ளது போல் மணிமேகலையில் காண்டம் என்னும் பெரும்பிரிவுகள் எதுவும் இல்லை.

302) மணிமேகலை காப்பியத்தின் வேறுபெயர் என்ன?

A) மணிமேகலை வாழ்வு

B) மணிமேகலை துறவு

C) அறநெறி காப்பியம்

D) துறவு காப்பியம்

விளக்கம்: மணிமேகலையின் துறவு வாழ்க்கைப் பற்றி கூறுவதால் மணிமேகலை காப்பியம், மணிமேகலை துறவு என்றும் அழைக்கப்படுகிறது.

303) சிலப்பதிகாரத்திற்கு பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க?

A) குடிமக்கள் காப்பியம்

B) முத்தமிழ்க் காப்பியம்

C) நாடகக் காப்பியம்

D) தமிழகக் காப்பியம்

விளக்கம்: சிலப்பதிகாரத்தில் காப்பிய நாயகியான கண்ணகியே முதன்மைப்படுத்தப்படுகிறாள். சிலப்பதிகாரம் குடிமக்கள் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், நாடகக் காப்பியம், தேசிய காப்பியம் முதலான சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறது.

304) கூற்று: சிலப்பதிகாரம் முத்தமிழ்க் காப்பியம் என்று குறிப்பிடப்படுகிறது.

காரணம்: இக்காப்பியம் மூவேந்தர் ஆட்சிமுறை பற்றிய செய்திகளை கூறுகிறது

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு. காரணம் சரி

C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: சிலப்பதிகாரத்தில் காப்பிய நாயகியான கண்ணகியே முதன்மைப்படுத்தப்படுகிறாள். சிலப்பதிகாரம் குடிமக்கள் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், நாடகக் காப்பியம், தேசிய காப்பியம் முதலான சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறது. மூவேந்தர் ஆட்சிமுறை பற்றிய செய்திகளையும் கூறுகிறது.

305) சீவக சிந்தாமணி ஆசிரியரின் காலம் என்ன?

A) கி.பி.7-ஆம் நூற்றாண்டு

B) கி.பி.6-ஆம் நூற்றாண்டு

C) கி.பி.8-ஆம் நூற்றாண்டு

D) கி.பி.5-ஆம் நூற்றாண்டு

விளக்கம்: சமணசமயக் காப்பியமாகத் திகழும் இந்நூல் கி.பி.7-ஆம் நூற்றாண்டில் திருத்தக்கத்தேவரால் இயற்றப்பட்டது. திருத்தக்கத்தேவரை ‘தமிழ்க் கவிஞர்களுள் அரசன்’ என்று வீரமாமுனிவர் போற்றுகிறார்.

306) மணிமேகலை 30 காதைகளை கொண்டுள்ளது. இதில் முதல் காதை எது?

A) விழாவறை காதை

B) நாமகள் காதை

C) முக்தி காதை

D) பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை

விளக்கம்: மணிமேகலை பௌத்த சமயக் காப்பியம் ஆகும். இதில் விழாவறை காதை முதல் பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை ஈறாக முப்பது காதைகள் உள்ளன.

307) கூற்று: மணிமேகலையை பௌத்த துறவியாக்கியவர் மாதவி

காரணம்: தனக்கு நேர்ந்த கதி தன் மகளுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த பெண் மணிமேகலை. தனக்கு நேர்ந்த கதி தன் மகளுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவளையும் தன்னைப் போலவே பௌத்தத் துறவியாக்கி இருந்தாள் மாதவி.

308) தமிழில் விருத்தப்பாவால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் எது?

A) சிலப்பதிகாரம்

B) மணிமேகலை

C) சீவக சிந்தாமணி

D) வளையாபதி

விளக்கம்: தமிழில் விருத்தப்பாவால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் சீவக சிந்தாமணி ஆகும். வடமொழியில் எழுந்த கத்திய சிந்தாமணியின் தழுவலே இந்நூல் ஆகும்.

309) தவறான கூற்றை தெரிவு செய்க.

A) செம்மை, இயல் என்ற இரு சொற்கள் இணைந்து செவ்வியல் என்ற சொல் உருவானது.

B) இலத்தீன் மொழியில் செவ்வியல் காலகட்டம் என்பது கி.பி1ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 2-ஆம் நூற்றாண்டு வரை ஆகும்.

C) செம்மை, என்பதற்குச் செப்பம், செவ்வை, செவ்வி, நற்சீரடைதல், ஒழுங்குபடுத்துதல், பண்படுத்துதல் என்றெல்லாம் பொருள்கொள்ளலாம்.

D) செவ்வியல் இலக்கியங்களைப் படைக்க இன்றியமையாதது, எழுத்து வடிவமே ஆகும்.

விளக்கம்: செம்மை, இயல் என்ற இரு சொற்கள் இணைந்து செவ்வியல் என்ற சொல் உருவானது.

இலத்தீன் மொழியில் செவ்வியல் காலகட்டம் என்பது கி.மு 1ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 2-ஆம் நூற்றாண்டு வரை ஆகும்

செம்மை, என்பதற்குச் செப்பம், செவ்வை, செவ்வி, நற்சீரடைதல், ஒழுங்குபடுத்துதல், பண்படுத்துதல் என்றெல்லாம் பொருள்கொள்ளலாம்.

செவ்வியல் இலக்கியங்களைப் படைக்க இன்றியமையாதது, எழுத்து வடிவமே ஆகும்.

310) கூற்று: மணிமேகலை சமுதாய சீர்த்திருத்தக்காப்பியமாக விளங்குகிறது.

காரணம்: , பரத்தையொழிப்பு, மதுவொழிப்பு, சிறையொழிப்பு என்னும் கருத்துக்களைக் கூறுகிறது

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: மணிமேகலையில் இயற்கைக் காட்சிகளும், வருணனைகளும் அமைந்துள்ளன. கதைத்தலைவியால் பெயர் பெற்றது இந்நூல். பரத்தையொழிப்பு, மதுவொழிப்பு, சிறையொழிப்பு என்னும் கருத்துக்களைக் கூறும் சமுதாய சீர்திருத்தக்காப்பியமாக இந்நூல் விளங்குகிறது.

311) கூற்றுகளை ஆராய்க

கூற்று 1: தமிழில் செவ்வியல் என்பதன் மூலச்சொல் ‘செம்மை’ என்பதாகும்.

கூற்று 2: கிரேக்க மொழியின் செவ்வியல் இலக்கியக் காலகட்டம் என்பது கி.மு.5ஆம் நூற்றாண்டு முதல் 4ஆம் நூற்றாண்டு வரையாகும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: கூற்று 1: தமிழில் செவ்வியல் என்பதன் மூலச்சொல் ‘செம்மை’ என்பதாகும்.

கூற்று 2: கிரேக்க மொழியின் செவ்வியல் இலக்கியக் காலகட்டம் என்பது கி.மு.5ஆம் நூற்றாண்டு முதல் 4ஆம் நூற்றாண்டு வரையாகும்.

312) ‘தமிழ்கவிஞர்களுள் அரசன்’ என்று போற்றப்படுபவர் யார்?

A) சீத்தலைச் சாத்தனார்

B) இளங்கோவடிகள்

C) திருத்தக்கதேவர்

D) தோலாமொழித்தேவர்

விளக்கம்: சமணசமயக் காப்பியமாகத் திகழும் சீவக சிந்தாமணி கி.பி.7-ஆம் நூற்றாண்டில் திருத்தக்கத்தேவரால் இயற்றப்பட்டது. திருத்தக்கத்தேவரை ‘தமிழ்க் கவிஞர்களுள் அரசன்’ என்று வீரமாமுனிவர் போற்றுகிறார்.

313) “நாளுங் கிழமையும் நலிந்தோர்க் கில்லை” என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

A) மூதுரை

B) நல்வழி

C) பழமொழி நானூறு

D) நறுந்தொகை

விளக்கம்: “எழுத்தறி வித்தவ னிறைவ னாகும்

கல்விக் கழகு கசடற மொழிதல்

நாளுங் கிழமையும் நலிந்தோர்க் கில்லை

கேளுங் கிளையுங் கெட்டோர்க் கில்லை” – நறுந்தொகை.

314) செல்வம் வரும்போது மகிழ்வதுமில்லை. வறுமையுற்றபோது வருந்துவதுமில்லை என்னும் நெறியை உணர்த்தும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

A) வளையாபதி

B) குண்டலகேசி

C) மணிமேகலை

D) சிலப்பதிகாரம்

விளக்கம்: செல்வம் வரும்போது மகிழ்வதுமில்லை. வறுமையுற்றபோது வருந்துவதுமில்லை என்னும் நெறியை உணர்த்தும் பாடல் இடம்பெற்றுள்ள காப்பியம் குண்டலகேசியாகும்.

315) நீலகேசி உரையில் குண்டலகேசியின் செய்யுள் எத்தனை கிடைக்கப்பெற்றுள்ளது?

A) 19

B) 18

C) 180

D) 190

விளக்கம்: அழிந்துபோன தமிழ்க் காப்பியங்களுள் ஒன்று குண்டலகேசி. இது பௌத்த சமய நூல். நாதகுத்தனார் என்ற புலவரால் இயற்றப்பட்டது. புறத்திரட்டில் குண்டலகேசியின் பாடல்களாகப் 19 செய்யுள்களும், நீலகேசி உரையில் 180 பாக்களும் இன்று கிடைக்கின்றன. இவற்றைக் கொண்டும், வேறு சில குறிப்புகள் மூலமும் குண்டலகேசியின் கதையமைப்பை அறியமுடிகிறது.

316) எங்கு மணிமேகலை அறத்தொண்டு ஆற்றினாள்?

A) தொண்டி

B) பூம்புகார்

C) மணிப்பல்லவத்தீவு

D) கொற்கை

விளக்கம்: இந்திரவிழா காணவந்த மணிமேகலா தெய்வம் மணிமேகலையைத் தூக்கிக்கொண்டு சென்று, மணிபல்லவத்தீவில் சேர்க்கிறது. அங்கு தோன்றிய புத்த பீடிகையைத் தொழுது, தன் பழம்பிறப்பு பற்றி அறிகிறாள் மணிமேகலை, வான்வழியே பறத்தல், பசியாதிருத்தல், தன் உருவை மாற்றிக்கொள்ளுதல் ஆகியவற்றிற்கான மந்திரங்களையும், அள்ள அள்ளக் குறையாது அமுதுசுரக்கும் அமுத சுரபியையும் பெறுகிறாள். பூம்புகாருக்குத் திரும்பிய மணிமேகலை அறத்தொண்டு ஆற்றுகிறாள்.

317) பெரியபுராணத்தில் எத்தனை காண்டங்கள் உள்ளது?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: 63 அடியார் பெருமக்களை மையமாகக்கொண்டு இயற்றப்பட்ட பெரியபுராணம் பெரும் பிரிவாக இரண்டு காண்டங்களும், உட்பிரிவாக 13 சருக்கங்களையும் கொண்டுள்ளது.

318) சீவக சிந்தாமணி நாமகள் இலம்பகம் முதல் முக்தி இலம்பகம் வரை எத்தனை இலம்பகங்களால் ஆனது?

A) 10

B) 13

C) 17

D) 18

விளக்கம்: சீவக சிந்தாமணி நாமகள் இலம்பகம் முதல் முக்தி இலம்பகம் வரை 13 இலம்பங்களையும், 3145 பாடல்களையும் கொண்டது. காப்பிய இலக்கணம் முழுமையும் பொருந்தும் இந்நூல் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு உறுதிப் பொருள்களை பற்றி பேசுகிறது.

319) இனியவை நாற்பது நூலின் ஆசிரியர் யார்?

A) பூதஞ்சேந்தனார்

B) கபிலர்

C) கூடலூர் கிழார்

D) விளம்பிநாகனார்

விளக்கம்: இன்னது இன்னது இன்பம் பயக்கும் என 40 வெண்பாக்களைக் கொண்டு பூதஞ்சேந்தனரால் பாடப்பட்ட நூல் இனியவை நாற்பது ஆகும்.

320) குணாட்டியர் என்பவர் பிருகத்கதா எனும் நூலைப் பைசாச மொழியில் இயற்றினார். இக்காப்பியத்தை மூல நூலாகக் கொண்டு தமிழில் இயற்றப்பட்ட காப்பியம் எது?

A) தண்டியலங்காரம்

B) வளையாபதி

C) பெருங்கதை

D) நீலகேசி

விளக்கம்: குணாட்டியர் என்பவர் பிருகத்கதா எனும் நூலைப் பைசாச மொழியில் இயற்றினார். இக்காப்பியமே பெருங்கதையின் மூல நூலாகக் கருதப்படுகிறது. பெருங்கதை சமண சமயக்காப்பியமாகும். இந்நூல் ஆறு காண்டங்களை உடையது.

321) “கல்விக் கழகு கசடற மொழிதல்” என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

A) மூதுரை

B) நல்வழி

C) நறுந்தொகை

D) பழமொழி நானூறு

விளக்கம்: “எழுத்தறி வித்தவ னிறைவ னாகும்

கல்விக் கழகு கசடற மொழிதல்

நாளுங் கிழமையும் நலிந்தோர்க் கில்லை

கேளுங் கிளையுங் கெட்டோர்க் கில்லை” – நறுந்தொகை.

322) கூற்று: தமிழ் இலக்கியங்கள் முழுவதுமே அற இலக்கியங்கள் எனலாம்.

காரணம்: சங்க இலக்கியம், காப்பியங்கள், அறநூல்கள், சிற்றிலக்கியங்கள், புராணங்கள் என்றெல்லாம் பல பிரிவுகள் இருப்பினும். அவற்றின் பாடுபொருளின் மையம் ஏதோ ஓர் அறமாகவே இருக்கிறது..

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: தமிழ் இலக்கியங்கள் முழுவதுமே அற இலக்கியங்கள் எனலாம். சங்க இலக்கியம், காப்பியங்கள், அறநூல்கள், சிற்றிலக்கியங்கள், புராணங்கள் என்றெல்லாம் பல பிரிவுகள் இருப்பினும். அவற்றின் பாடுபொருளின் மையம் ஏதோ ஓர் அறமாகவே இருக்கிறது.

323) கூற்றுகளை ஆராய்க.

1. சமஸ்கிருத மொழியின் செவ்வியல் இலக்கிய காலகட்டம் என்பது கி.மு.8-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.3 ஆம் நூற்றாண்டு வரையான காலகட்டமாகும்.

2. சீன மொழியின் செவ்வியல் இலக்கியக் காலகட்டம் என்பது கி.பி.4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.8ஆம் நூற்றாண்டு வரையான காலமாகும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. சீன மொழியின் செவ்வியல் இலக்கிய காலகட்டம் என்பது கி.மு.8-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.3 ஆம் நூற்றாண்டு வரையான காலகட்டமாகும்.

2. சமஸ்கிருத மொழியின் செவ்வியல் இலக்கியக் காலகட்டம் என்பது கி.பி.4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.8ஆம் நூற்றாண்டு வரையான காலமாகும்.

324) தவறான கூற்றை தெரிவு செய்க.

A) சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் கலந்த மருந்து உடல்நோயைத் தீர்ப்பது போல, இந்நூலின் ஒவ்வொரு செய்யுளிலும் உள்ள மூன்று கருத்துக்கள் உள்ளத்து நோயை தீர்க்கும் – திரிகடுகம்

B) கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்தின் வேர்கள் கலந்த மருந்து உடலை வலுப்படுத்துவதுபோல, இந்நூலின் ஒவ்வொரு செய்யுளிலும் அமைந்த ஐந்து கருத்துகள் வாழ்வுக்கு வலிமை சேர்க்கும் – சிறுபஞ்சமூலம்

C) ஏலம், இலவங்கப்பட்டை, நாககேசரம், மிளகு, திப்பிலி, சுக்கு ஆகிய ஆறும் கலந்த மருந்து உடலுக்குறுதி சேர்ப்பதுபோல, செய்யுள்தோறும் உள்ளத்திற்கு உறுதி சேர்க்கும் ஆறு கருத்துக்கள் – ஏலாதி

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் கலந்த மருந்து உடல்நோயைத் தீர்ப்பது போல, இந்நூலின் ஒவ்வொரு செய்யுளிலும் உள்ள மூன்று கருத்துக்கள் உள்ளத்து நோயை தீர்க்கும் – திரிகடுகம்

கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்தின் வேர்கள் கலந்து மருந்து உடலை வலுப்படுத்துவதுபோல, இந்நூலின் ஒவ்வொரு செய்யுளிலும் அமைந்த ஐந்து கருத்துகள் வாழ்வுக்கு வலிமை சேர்க்கும் – சிறுபஞ்சமூலம்

ஏலம், இலவங்கப்பட்டை, நாககேசரம், மிளகு, திப்பிலி, சுக்கு ஆகிய ஆறும் கலந்த மருந்து உடலுக்குறுதி சேர்ப்பதுபோல, செய்யுள்தோறும் அமைந்து ஆறு கருத்துக்கள் உள்ளத்திற்கு உறுதி சேர்க்கும் ஆறு கருத்துக்கள் – ஏலாதி

325) கூற்றுகளை ஆராய்க.

1. உலகளவில் ‘செவ்வியல்’ என்ற பொருளில் ‘கிளாசிசம்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலச்சொல்லாக ‘கிளாசிகஸ்’ என்ற இலத்தீன் சொல் உள்ளது.

2. தமிழ், சீனம், சமஸ்கிருதம், இலத்தீன், ஹீப்ரு, கிரேக்கம் போன்ற செவ்வியல் மொழிகள் அனைத்தும் எழுத்து வடிவத்தைப் பெற்ற பின்னரே செவ்வியல் இலக்கியங்களை உருவாக்கின.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. உலகளவில் ‘செவ்வியல்’ என்ற பொருளில் ‘கிளாசிசம்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலச்சொல்லாக ‘கிளாசிகஸ்’ என்ற இலத்தீன் சொல் உள்ளது.

2. தமிழ், சீனம், சமஸ்கிருதம், இலத்தீன், ஹீப்ரு, கிரேக்கம் போன்ற செவ்வியல் மொழிகள் அனைத்தும் எழுத்து வடிவத்தைப் பெற்ற பின்னரே செவ்வியல் இலக்கியங்களை உருவாக்கின.

326) தவறான கூற்றை தெரிவு செய்க

A) திருக்குறளுக்கு அடுத்த நிலையில் வைத்து எண்ணத்தக்கது நாலடியார்

B) இதன் வேறுபெயர்கள் நாலடி, நாலடி நானூறு, வேளாண்வேதம் ஆகும்.

C) இது சமண முனிவர்களால் பாடப்பட்ட 400 பாடல்களால் ஆன நூல் ஆகும்.

D) தனக்கு உதவி செய்தவர்களுக்குத் தீங்கு செய்வது தனக்கே தீங்கு செய்துகொள்வதற்கு ஒப்பாகும் என்ற கருத்தை கூறும் நூல் நாலடியார் ஆகும்

விளக்கம்: தனக்கு உதவி செய்தவர்களுக்குத் தீங்கு செய்வது தனக்கே தீங்கு செய்துகொள்வதற்கு ஒப்பாகும் என்ற கருத்தை கூறும் நூல் பழமொழி நானூறு.

தமக்கு உதவியவர்களுக்கு அவரின் பகைவரோடு சேர்ந்து தீங்கிழைப்பது, ஒருவன் உணர்வின்றித் தான் தங்கியிருந்த கிளையின் அடியை வெட்டி வீழ்த்தி உயர்விடுதலைப் போன்றதாகும். – பழமொழி நானூறு.

327) கரிகால் பெருவளத்தானின் கொடைச்சிறப்பை முடத்தாமக்கண்ணியார் கீழ்க்காணும் எந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்?

A) சிறுபாணாற்றுப்படை

B) பொருநராற்றுப்படை

C) மலைபடுகடாம்

D) பட்டினப்பாலை

விளக்கம்: பொருநராற்றுப்படையில் கரிகால் பெருவளத்தானின் கொடைச்சிறப்பை முடத்தாமக்கண்ணியார் கூறியுள்ளார்.

328) பொய்ப்பொருளைப் பற்றாது, சான்றோர் மொழிந்த துறவொழுக்கத்தைப் பின்பற்றுவதே சிறப்புடையது என்பதை உணர்த்தும் காப்பியம் எது?

A) குண்டலகேசி

B) வளையாபதி

C) சிலப்பதிகாரம்

D) மணிமேகலை

விளக்கம்: எந்நிலையிலும் மாந்தர்கள் கீழ்மையைத் தருகின்ற பொய்ப்பொருளைப் பற்றாது, சான்றோர் மொழிந்த துறவொழுக்கதைப் பின்பற்றுவதே சிறப்புடையது என்பதை உணர்த்தும் பாடல் இடம்பெற்றுள்ள காப்பியம் வளையாபதி ஆகும்.

329) தவறான கூற்றை தெரிவு செய்க.

A) நாலடியாரை தொகுத்தவர் பதுமனார்

B) நாலடியார் போன்றே 400 வெண்பாக்களால் ஆனது பழமொழி நானூறு ஆகும்.

C) ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி அமையப் பாடப்பட்டிருப்பதால் இந்நூல் பழமொழி நானூறு என பெயர் பெற்றது.

D) பழமொழி நானூறு நூலை இயற்றியவர் பெருவாயின் முள்ளியார்

விளக்கம்: பழமொழி நானூறு – முன்றுறையரையனார்.

ஆசாரக்கோவை – பெருவாயின் முள்ளியார்.

330) கூற்றுகளை ஆராய்க.

1. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று

2. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் – 11, அகநூல்கள் – 6, புற நூல் – 1

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று

2. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் – 11, அகநூல்கள் – 6, புற நூல் – 1

331) பெருங்கதை எச்சமய காப்பியம்?

A) சமணம்

B) பௌத்தம்

C) சைவம்

D) சீக்கியம்

விளக்கம்: குணாட்டியர் என்பவர் பிருகத்கதா எனும் நூலைப் பைசாச மொழியில் இயற்றினார். இக்காப்பியமே பெருங்கதையின் மூல நூலாகக் கருதப்படுகிறது. பெருங்கதை சமண சமயக்காப்பியமாகும். இந்நூல் ஆறு காண்டங்களை உடையது.

332) கூற்றுகளை ஆராய்க.

1. களவழி நாற்பது நூலில் உள்ள ஒவ்வொரு பாடலின் இறுதி சொல்லும் ‘பொருதகளத்து’ என்று முடிவது இதன் சிறப்பு.

2. டால்டாய்ஸ்-ன் போரும் அமைதியும் என்ற நூலிற்கு அடுத்தபடியாக உலகின் பெரும்பான்மையான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பெருமையுடைய நூல் – திருக்குறள்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. களவழி நாற்பது நூலில் உள்ள ஒவ்வொரு பாடலின் இறுதி சொல்லும் ‘பொருதகளத்து’ என்று முடிவது இதன் சிறப்பு.

2. விவிலியத்திற்கு அடுத்தபடியாக உலகின் பெரும்பான்மையான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பெருமையுடைய நூல் – திருக்குறள்

333) பெண்பாற் பிள்ளைத்தமிழுக்குரிய பருவங்களில் பொருந்தாது எது?

A) வருகை

B) அம்புலி

C) சிற்றில்

D) வருகை

விளக்கம்: கடவுளரையோ அரசரையோ பிறரையோ குழந்தையாகக் கருதி அவர்தம் குழந்தைப் பருவத்தைப் பத்துப்பருவங்களாகப் பகுத்துப் பருவத்திற்குப் பத்து ஆசிரிய விருத்தங்களாகப் பாடுவது பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும். இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும்.

ஆண்பாற்பிள்ளைத்தமிழ் – காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுதேர், சிறுபறை.

பெண்பாற்பிள்ளைத்தமிழ் – காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, அம்மானை, நீராடல், ஊசல்.

334) புறத்திரட்டு வாயிலாக வளையாபதியின் பாடல்கள் எத்தனை காணப்படுகின்றன?

A) 19

B) 180

C) 66

D) 72

விளக்கம்: ஐம்பெரும் காப்பியங்களில் இறுதியாக வைத்து எண்ணப்படுவது வளையாபதி. இந்நூல் முழுமையும் இன்று கிடைக்கவில்லை. சமணசமயத்தைச் சார்ந்த இந்நூலின் ஆசிரியர் பெயரும் தெரியவில்லை. புறத்திரட்டுத்தொகை நூலில் வளையாபதியின் பாடல்களாக 66 செய்யுள்கள் காணப்படுகின்றன. விருத்தப் பாக்களாக அமைந்த வளையாபதிப் பாடல்கள் கள்ளாமை, கொல்லாமை, பொய்யாமை, இளமை நிலையாமை ஆகியன குறித்துப் பேசுகின்றன.

335) கூற்றுகளை ஆராய்க.

1.பழந்தமிழர், திருமணத்திற்கு முந்தைய காதல் வாழ்வை, “களவொழுக்கம்” என்றும், திருமணத்திற்குப் பிறகு அவர்களின் இல்லற வாழ்வை, “கற்பொழுக்கம்” என்றும் போற்றியுள்ளனர்.

2. தொல்காப்பியர் கூறும் உவகை என்னும் மெய்ப்பாடு தோன்றுவதற்குரிய நான்கு வகைக் களங்களுள் ஒன்றை விளையாட்டு.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1.பழந்தமிழர், திருமணத்திற்கு முந்தைய காதல் வாழ்வை, “களவொழுக்கம்” என்றும், திருமணத்திற்குப் பிறகு அவர்களின் இல்லற வாழ்வை, “கற்பொழுக்கம்” என்றும் போற்றியுள்ளனர்.

2. தொல்காப்பியர் கூறும் உவகை என்னும் மெய்ப்பாடு தோன்றுவதற்குரிய நான்கு வகைக் களங்களுள் ஒன்றை விளையாட்டு.

336) செம்மை என்ற சொல்லை பலவாறாக பொருள் கொள்ளலாம். இதில் பொருந்தாதது எது?

A) செவ்வி

B) செப்பம்

C) செவ்வை

D) பயன்படுத்துதல்

விளக்கம்: செவ்வியல் என்பதன் மூலச்சொல் ‘செம்மை’ என்பதாகும். செம்மை, இயல் என்ற இரு சொற்கள் இணைந்து செவ்வியல் என்ற சொல் உருவானது. செம்மை என்பதற்குச் செப்பம், செவ்வை, செவ்வி, நற்சீரடைதல், ஒழுங்குபடுத்துதல், பண்படுத்துதல் என்றெல்லாம் பொருள்கொள்ளலாம்.

337) காப்பியங்களில் நாட்டுவளம், நகர்வளம் பாடுவதில் புதியமரபை ஏற்படுத்திக் கொடுத்த காப்பியம் எது?

A) சீவக சிந்தாமணி

B) வளையாபதி

C) குண்டலகேசி

D) மணிமேகலை

விளக்கம்: காப்பியங்களில் நாட்டுவம், நகர்வளம் பாடுவதில் புதியமரபை ஏற்படுத்திக் கொடுத்த காப்பியம் சீவக சிந்தாமணி ஆகும். இயற்கை காட்சிகள், அவை பற்றிய வருணனை, போர்முறைகள், தமிழர்தம் பழக்க வழக்கங்கள், உவமை நயங்கள், அரசியல் சூழ்ச்சிகள், சமணக்கொள்ளை விளக்கங்கள் பற்றி பேசுகிறது சிந்தாமணிக் காப்பியம்.

338) புறத்திரட்டில் குண்டலகேசியின் செய்யுள் எத்தனை கிடைக்கப்பெற்றுள்ளது?

A) 19

B) 18

C) 180

D) 190

விளக்கம்: அழிந்துபோன தமிழ்க் காப்பியங்களுள் ஒன்று குண்டலகேசி. இது பௌத்த சமய நூல். நாதகுத்தனார் என்ற புலவரால் இயற்றப்பட்டது. புறத்திரட்டில் குண்டலகேசியின் பாடல்களாகப் 19 செய்யுள்களும், நீலகேசி உரையில் 180 பாக்களும் இன்று கிடைக்கின்றன. இவற்றைக் கொண்டும், வேறு சில குறிப்புகள் மூலமும் குண்டலகேசியின் கதையமைப்பை அறியமுடிகிறது.

339) ஐம்பெருங்காப்பியங்களில் இறுதியாக வைத்து எண்ணப்படுவது எது?

A) வளையாபதி

B) குண்டலகேசி

C) சீவக சிந்தாமணி

D) சிலப்பதிகாரம்

விளக்கம்: ஐம்பெரும் காப்பியங்களில் இறுதியாக வைத்து எண்ணப்படுவது வளையாபதி. இந்நூல் முழுமையும் இன்று கிடைக்கவில்லை. சமணசமயத்தைச் சார்ந்த இந்நூலின் ஆசிரியர் பெயரும் தெரியவில்லை.

340) கூற்றுகளை ஆராய்க.

1. கூடவொழுக்கம் என்ற அதிகாரம் பொதுவாகப் பிறரை ஏமாற்றி வாழும் அனைவரையும் பற்றியது என்றாலும் போலித்துறவியரை மனத்தில் கொண்டே வரையப்பட்டவை.

2. தமக்கு உதவியவர்களுக்கு அவரின் பகைவரோடு சேர்ந்து தீங்கிழைப்பது, ஒருவன் உணர்வின்றித் தான் தங்கியிருந்த கிளையின் அடியை வெட்டி வீழ்த்தி உயிர்விடுதலைப் போன்றதாகும் என்று கூறும் நூல் நாலடியார் ஆகும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. கூடவொழுக்கம் என்ற அதிகாரம் பொதுவாகப் பிறரை ஏமாற்றி வாழும் அனைவரையும் பற்றியது என்றாலும் போலித்துறவியரை மனத்தில் கொண்டே வரையப்பட்டவை.

2. தமக்கு உதவியவர்களுக்கு அவரின் பகைவரோடு சேர்ந்து தீங்கிழைப்பது, ஒருவன் உணர்வின்றித் தான் தங்கியிருந்த கிளையின் அடியை வெட்டி வீழ்த்தி உயிர்விடுதலைப் போன்றதாகும் என்று கூறும் நூல் பழமொழி நானூறு ஆகும்.

341) தவறான கூற்றை ஆராய்க.

A) களத்தை ஏர்க்களம், போர்க்களம் என்று இருவகைப்படுத்துவர்

B) ஏர்களம் – நெல் முதலானவற்றை அடித்து தூற்றும் களத்தைப் பாடுவது

C) போர்க்களம் – பகைவரை அழிக்கும் போர்களத்தைப்பாடுவது

D) களவழி நாற்பது என்பது ஏர்க்ளத்தைப் பாடும் நூல் ஆகும்

விளக்கம்: களவழி நாற்பது என்பது போர்க்களத்தைப் பாடும் நூல் ஆகும். கழுமலத்தில் நடைபெற்ற போரில் சோழன் கோச்செங்கணான், சோழன் கணைக்கால் இரும்பொறையை வென்று சிறையிலிட்டதால், அவனை மீட்க பொய்கையார் பாடியதே இந்நூல்.

342) யாருடைய காலத்தில் எழுந்த பக்தி இலக்கியங்கள் தனித்தனித் பாடல்களாகவும் பிரபந்தங்களாகவும் வெளிப்பட்டன?

A) பல்லவர்கள் காலம்

B) பாண்டியர்கள் காலம்

C) சோழர்கள் காலம்

D) களப்பிரர்கள் காலம்

விளக்கம்: பக்திக்கு முக்கியத்துவம் அளித்தவர்கள் பல்லவர்கள். இந்த எழுச்சிக்கு ஆதரவளித்த பல்லவர் ஆட்சிக்காலம் பக்தி இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்காலம் எனப்படுகிறது. பக்தி இயக்கத்தால் தமிழகத்தில் தமிழுக்கு மீண்டும் புதுப்பொலிவு ஏற்பட்டது. இக்காலத்தில் எழுந்த பக்தி இலக்கியங்கள் தனித்தனிப் பாடல்களாகவும் பிரபந்தங்களாகவும் வெளிப்பட்டன.

343) குண்டலகேசி பற்றிய கூற்றில் தவறானது எது?

A) அழிந்துபோன தமிழ்க்காப்பியங்களில் ஒன்று

B) இது பௌத்த சமய நூல்

C) நாதகுத்தனார் என்ற புலவரால் இயற்றப்பட்டது

D) புறத்திரட்டில் 180 பாக்களும், நீலகேசி உரையில் 19 செய்யுள்களும் இன்று கிடைக்கின்றன.

விளக்கம்: குண்டலகேசி:

அழிந்துபோன தமிழ்க்காப்பியங்களுள் ஒன்று. இது பௌத்த சமய நூல். நாதகுத்தனார் என்ற புலவரால் இயற்றப்பட்டது. புறத்திரட்டில் குண்டலகேசியின் பாடல்களாகப் 19 செய்யுள்களும், நீலகேசி உரையில் 180 பாக்களும் இன்று கிடைக்கின்றன. இவற்றைக் கொண்டும், வேறு சில குறிப்புகள் மூலமும் குண்டலகேசியின் கதையமைப்பை அறியமுடிகிறது.

344) கூற்றுகளை ஆராய்க.

1. மலைபடுகடாம் நூலில் கரிகால் பெருவளத்தானின் கொடைச்சிறப்பைக் கூறியவர் முடத்தாமக்கண்ணியார் ஆவார்.

2. தன் மன்னன் இறந்ததற்கு குடிமக்களும் சான்றோரும் வீரர்களும் வருந்திப் பாடுவது கையறுநிலை என்னும் துறையாகும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. பொருநராற்றுப்படை என்ற நூலில் கரிகால் பெருவளத்தானின் கொடைச்சிறப்பைக் கூறியவர் முடத்தாமக்கண்ணியார் ஆவார்.

2. தன் மன்னன் இறந்ததற்கு குடிமக்களும் சான்றோரும் வீரர்களும் வருந்திப் பாடுவது கையறுநிலை என்னும் துறையாகும்.

345) காப்பியங்களில் நாட்டுவளம், நகர்வளம் பாடுவதில் புதியமரபை ஏற்படுத்திக் கொடுத்த காப்பியம் எது?

A) வளையாபதி

B) சீவக சிந்தாமணி

C) குண்டலகேசி

D) மணிமேகலை

விளக்கம்: காப்பியங்களில் நாட்டுவளம், நகர்வளம் பாடுவதில் புதியமரபை ஏற்படுத்திக் கொடுத்த காப்பியம் சீவக சிந்தாமணி ஆகும்.

346) வளையாபதி காப்பியத்தின் ஆசிரியர் யார்?

A) நாதகுத்தனார்

B) தோலாமொழித்தேவர்

C) திருத்தக்கதேவர்

D) ஆசிரியர் பெயர் தெரியவில்லை

விளக்கம்: ஐம்பெரும் காப்பியங்களில் இறுதியாக வைத்து எண்ணப்படுவது வளையாபதி. இந்நூல் முழுமையும் இன்று கிடைக்கவில்லை. சமணசமயத்தைச் சார்ந்த இந்நூலின் ஆசிரியர் பெயரும் தெரியவில்லை.

347) தவறான கூற்றை தெரிவு செய்க.

A) பழந்தமிழர் வணிகத்தை உள்நாட்டு வணிகம், அயல்நாட்டு வணிகம் என வகைப்படுத்தினர்.

B) அயல்நாட்டு வணிகம் – இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் பருத்தி, பட்டாலான ஆடைகளை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்றது.

C) உள்நாட்டு வணிகம் பெரும்பாலும் நிலம் சார்ந்த பொருள்களையும் தொழில்களையும் அடிப்படையாக கொண்டிருந்தது.

D) அறம் என்ற சொல்லை அற+அம் எனப்பிரித்துத் தீமையை அறுப்பது, நீக்குவது என்றும் அறுதி செய்வது என்றும் பொருள் கொள்வர். பொதுவாகச் சான்றோர் விலக்கியன ஒழித்தலும், விதித்தன செய்தலும் அறம் எனப்பெறும்

விளக்கம்: அறம் என்ற சொல்லை அறு+அம் எனப்பிரித்துத் தீமையை அறுப்பது, நீக்குவது என்றும் அறுதி செய்வது என்றும் பொருள் கொள்வர். பொதுவாகச் சான்றோர் விலக்கியன ஒழித்தலும், விதித்தன செய்தலும் அறம் எனப்பெறும்.

348) சீவகனை எடுத்து வளர்த்தவர் யார்?

A) சச்சந்தன்

B) கந்துகடன்

C) கட்டியங்காரன்

D) அச்சணந்தி

விளக்கம்: கந்துகடன் என்று வணிகன் சீவகனை எடுத்து வளர்க்கிறான். அச்சணந்தி என்ற ஆசிரியர் சீவகனுக்குப் பல்வேறு கலைகளையும் கற்பிக்கிறார்.

349) திருவாய்மொழி என்ற நூலை எழுதியவர் யார்?

A) ஆண்டாள்

B) நம்மாழ்வார்

C) திருமங்கையாழ்வார்

D) மதுரகவியாழ்வார்

விளக்கம்: ஆண்டாள் – நாச்சியார் திருமொழி, திருப்பாவை

நம்மாழ்வார் – திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி

திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல்.

மதுரகவியாழ்வார் – திருப்பதிகம்

350) தவறான கூற்றை தெரிவு செய்க.

A) போரில் புறப்புண் பெற்றவர்கள், வடக்கிருந்து உயிர்நீத்தலைப் புகழெனக் கருதினர்

B) வடக்கிருந்து உயிர் நீத்தலைச் சிறந்த வீரமாக ஒக்கூர் மாசத்தியார் பாடினார்

C) வெண்ணிப்பறந்தலைப் போரில் கரிகாலனிடம் புறப்புண்பட்டு அதற்காக நாணி அப்போர்க் களத்திலேயே வடக்கிருந்து உயிர் துறந்தவர் பெருஞ்சேரலாதன் ஆவார்

D) கி.பி.3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.6ஆம் நூற்றாண்டு வரை அறம் வலியுறுத்தும் நீதிநூல்கள் தமிழில் பலவிதமான வடிவங்களிலும் வெளிப்பாட்டு முறைகளிலும் எழுதப்பெற்றுள்ளன.

விளக்கம்: போரில் புறப்புண் பெற்றவர்கள், வடக்கிருந்து உயிர்நீத்தலைப் புகழெனக் கருதினர்

வடக்கிருந்து உயிர் நீத்தலைச் சிறந்த வீரமாக வெண்ணிக்குயத்தியார். பாடினார்

வெண்ணிப்பறந்தலைப் போரில் கரிகாலனிடம் புறப்புண்பட்டு அதற்காக நாணி அப்போர்க் களத்திலேயே வடக்கிருந்து உயர் துறந்தவர் பெருஞ்சேரலாதன் ஆவார்

கி.பி..3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.6ஆம் நூற்றாண்டு வரை அறம் வலியுறுத்தும் நீதிநூல்கள் தமிழில் பலவிதமான வடிவங்களிலும் வெளிப்பாட்டு முறைகளிலும் எழுதப்பெற்றுள்ளன.

351) எம்மொழியில் இயற்றப்பட்ட இராமாயணத்தை தழுவி இராமவதாரம் இயற்றப்பட்டது?

A) ஹிந்தி

B) வடமொழி

C) தெலுங்கு

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: தமிழில் தொடர்ச்சியாகச் செல்வாக்குப் பெற்று விளங்கும் காப்பியங்களுள் ஒன்றாகத் திகழ்வது கம்பராமாயணமாகும். இது கம்பரால் இயற்றப்பட்டது. வடமொழியில் வான்மீகி இயற்றிய இராமாயணத்தைத் தழுவி எழுதப்பட்டது இந்நூல். வழி நூலாயினும் கம்பர் தமக்கே உரிய கருப்பொருள் சிதையாமல் இயற்றியுள்ளார். கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இட்ட பெயர் இராமவதாரம்.

352) கூற்று 1: சீவகன் பிறந்தபோது அவன் தாய் விசயை சிந்தாமணியே என அழைத்தாள்.

கூற்று 2: அக்குழந்தை தும்மியபோது ‘சீவ’ என்ற வாழ்த்தொலி கேட்டது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: சீவகன் பிறந்த போது, அவன் தாய் விசயை சிந்தாமணியே என அழைத்தாள். அக்குழந்தை தும்மியபோது ‘சீவ’ என்ற வாழ்த்தொலி கேட்டது. அதனால் அவன் சீவகன் என்று அழைக்கப்பட்டான். சீவகனின் வரலாற்றைக் கூறும் நூலாதலின் ‘சீவக சிந்தாமணி’ எனப்பெயர் பெற்றது.

353) வளையாபதி கீழ்க்காணும் எது குறித்து பேசவில்லை?

A) கள்ளாமை

B) கொல்லாமை

C) பொய்யாமை

D)திருடாமை

விளக்கம்: ஐம்பெரும் காப்பியங்களில் இறுதியாக வைத்து எண்ணப்படுவது வளையாபதி. இந்நூல் முழுமையும் இன்று கிடைக்கவில்லை. சமணசமயத்தைச் சார்ந்த இந்நூலின் ஆசிரியர் பெயரும் தெரியவில்லை. புறத்திரட்டுத்தொகை நூலில் வளையாபதியின் பாடல்களாக 66 செய்யுள்கள் காணப்படுகின்றன. விருத்தப் பாக்களாக அமைந்த வளையாபதிப் பாடல்கள் கள்ளாமை, கொல்லாமை, பொய்யாமை, இளமை நிலையாமை ஆகியன குறித்துப் பேசுகின்றன.

354) தமிழின் தொல்லிலக்கணமான தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களில் ஐவகை இலக்கணங்களை கூறுகிறது?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: தமிழின் தொல்லிலக்கணமான தொல்காப்பியம் மூன்று அதிகாரங்களில் ஐவகை இலக்கணங்களைக் கூறுகிறது.

எழுத்து அதிகாரம்: எழுத்துக்களின் ஒலி மற்றும் வரிவடிவங்களின் தோற்றம், வகை, அளவு, எழுத்துகள் சொல்லாக மாறுதல், சொற்கள் புணர்தல் போன்றவை விளக்கப்படுகின்றன.

சொல் அதிகாரம் – சொற்களின் வகை, உருபுகள், சொற்கள் இணைந்து தொடராக மாறுதல் போன்றவை விளக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் நேர்ப்பொருளைத் தரக்கூடிய பேச்சுமொழிக்கும் எழுத்து மொழிக்கும் உரியன.

பொருள் அதிகாரம்: நேர்ப்பொருள் தரும் சொற்றொடர் பற்றிப் பேசாமல் புனைவாக உருவாக்கப்படும் சொற்றொடர்களின் மொழியையும் அதன் பொருளையும் பேசுகின்றது. தொல்காப்பியர் காலத்தில் புனைவாக உருவாக்கப்படும் மொழி, பா-ஆகவும், பாடல்-ஆகவும், பாட்டு-ஆகவும் அறியப்பட்டன. பா, பாடல், பாட்டு ஆகியவை எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும்? அதற்குள் இடம்பெற வேண்டிய கூறுகள் எவை, அக்கூறுகளின் வழியாகக் கிடைக்கும் நுட்பங்கள் என்ன? என்பதையெல்லாம் பொருளதிகாரம் விரிவாக விளக்குகிறது. இவையே பினனர் பாவியல் எனவும் கவிதையியல் எனவும் வரையறுக்கப்பட்டன.

355) ஏமாங்கத நாட்டின் தலைநகர் எது?

A) இராசமாபுரம்

B) அவந்தி

C) பூம்புகார்

D) கோசலம்

விளக்கம்: ஏமாங்கத நாட்டின் தலைநகர் இராசமாபுரம். இந்நாட்டை ஆண்ட மன்னன் சச்சந்தன் ஆவார். தன் மனைவி விசயையோடு அரண்மனை அந்தப்புரத்திலே தங்கியிருக்க, நாட்டைக் கவனித்து வந்த அமைச்சன் கட்டியங்காரன் ஏற்ற நேரத்தில் அரசனைக் கொன்று ஆட்சியைப் பிடித்துக் கொண்டான்.

356) தவறாக கூற்றை தெரிவு செய்க.

A) திரிகடுகம்- 100 வெண்பாக்கள்

B) சிறுபஞ்சமூலம்- 102 வெண்பாக்கள்

C) ஏலாதி- 120 வெண்பாக்கள்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: திரிகடுகம்- 100 வெண்பாக்கள்

சிறுபஞ்சமூலம்- 102 வெண்பாக்கள்

ஏலாதி- 80 வெண்பாக்கள்.

357) யாரிடம் தோற்று பத்திரை புத்தசமயத்தை தழுவுகிறாள்?

A) சச்சந்தன்

B) சாரிபுத்திரர்

C) கட்டியங்காரன்

D) அச்சணந்தி

விளக்கம்: பத்திரை ஒரு சமணப்பள்ளியை அடைந்து துறவறம் ஏற்கிறாள். பின்னர் சாரிபுத்திரிடம் வாதத்தில் தோற்றுப் புத்தசமயத்தைத் தழுவுகிறாள்.

358) ஒரு பாவில் அல்லது கவிதைகளில் எத்தனை கூறுகள் இடம்பெறுதல் சிறப்பு?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: ஒரு பாவில் அல்லது கவிதையில் மூன்று கூறுகள் இடம்பெறுதல் சிறப்பு. அவை

1. முதற்பொருள்

2. கருப்பொருள்

3. உரிப்பொருள்.

இம்மூன்றில் உரிப்பொருள் முக்கியமானது ஆகும்.

359) கூற்றுகளை ஆராய்க.

A) நானாற்பது என்று அழைக்கப்படும் நூல்கள் – இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது.

B) இன்னா நாற்பது, இனியவை நாற்பது – அறநூல்கள்.

C) கார் நாற்பது – அகநூல்

D) நான்மணிக்கடிகை 102 வெண்பாக்களைக் கொண்ட நூல் ஆகும்.

விளக்கம்: நானாற்பது என்று அழைக்கபடும் நான்கு நூல்களாவன இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது. இவற்றுள்,

இன்னா நாற்பது, இனியவை நாற்பது – அற நூல்கள்.

கார் நாற்பது – அக நூல்.

களவழி நாற்பது – புறநூல்.

நான்மணிக்கடிகை என்பது 104 வெண்பாக்களைக்கொண்டு விளம்பிநாகனாரால் இயற்றப்பட்ட நூல் ஆகும்.

360) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க

A) மருமக்கள்வழி மான்மியம்

B) ஆட்டனத்தி ஆதிமந்தி

C) இயேசு காவியம்

D) மாங்கனி

விளக்கம்: ஆட்டனத்தி ஆதிமந்தி, இயேசு காவியம், மாங்கனி – கண்ணதாசன்.

மருமக்கள்வழி மான்மியம் – கவிமணி தேசிய விநாயகம்.

361) பதினெண் கீழ்க்கணுக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்களில் முதலாவதாக அமைந்த நூல் எது?

A) திரிகடுகம்

B) ஆசாரக்கோவை

C) ஏலாதி

D) சிறுபஞ்சமூலம்

விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று.அதில் முதலாவதாக அமைந்த நூல் திரிகடுகம் ஆகும். இது சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் கலந்த மருந்து உடல்நோயைத் தீர்ப்பது போல, இந்நூலின் ஒவ்வொரு செய்யுளிலும் உள்ள மூன்று கருத்துக்கள் உள்ளத்து நோயைத் தீர்ப்பதால் இந்நூல் திரிகடும் எனப் பெயர் பெற்றது. 100 வெண்பாக்களைக் கொண்ட இந்நூலின் ஆசிரியர் நல்லாதனார் ஆவார்.

362) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க

A) திரிகடுகம்- நல்லாதனார்

B) இனியவை நாற்பது- பூதஞ்சேந்தனார்

C) இன்னா நாற்பது- கபிலர்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: இன்னா நாற்பது- கபிலர்

இனியவை நாற்பது- பூதஞ்சேந்தனார்

திரிகடுகம்- நல்லாதனார்.

363) பழமொழி நானூறு என்ற நூலை எழுதியவர் யார்?

A) கணிமேதாவியார்

B) கூடலூர் கிழார்

C) முன்றுறையரையனார்

D) பெருவாயின் முள்ளியார்

விளக்கம்: ஆசாரக்கோவை – பெருவாயின்முள்ளியார்

பழமொழி நானூறு-முன்றுறையரையனார்

ஏலாதி- கணிமேதாவியார்

முதுமொழிக்காஞ்சி- கூடலூர்கிழார்.

364) மணிமேகலைப் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

A) இந்நூலின் வேறுபெயர் மணிமேகலைத் துறவு ஆகும்.

B) இந்திரவிழா காணவந்த மணிமேகலா தெய்வம் மணிமேகலையைத் தூக்கிக்கொண்டு சென்று, மணிபல்லவத்தீவில் சேர்க்கிறது.

C) மணிபல்லவத்தீவில் தோன்றிய புத்த பீடிகையைத் தொழுது, தன் பழம்பிறப்பு பற்றி அறிகிறாள் மணிமேகலை.

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: மணிமேகலை நூலின் வேறுபெயர் மணிமேகலைத் துறவு ஆகும்.

இந்திரவிழா காணவந்த மணிமேகலா தெய்வம் மணிமேகலையைத் தூக்கிக்கொண்டு சென்று, மணிபல்லவத்தீவில் சேர்க்கிறது.

மணிபல்லவத்தீவில் தோன்றிய புத்த பீடிகையைத் தொழுது, தன் பழம்பிறப்பு பற்றி அறிகிறாள் மணிமேகலை.

365) இசுலாமியப் பாடல்கள் எத்தனை வகையாகப் பாடப்பட்டன?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: முகலாயப் படையெடுப்பின் காரணமாகத் தமிழகத்தில் இசுலாம் பரவியது. இசுலாமியக் கவிஞர்கள் தமிழ்மரபினைப் பின்பற்றி இறைவனையும், இறைவனின் திருத்தூதரான நபிகள் நாயகத்தையும் போற்றிப் பரவினர். இசுலாமியப் பாடல்கள் மொழிபெயர்ப்புப் பாடல்களாகவும், நேரடிப் பாடல்களாகவும் இருவகைகளில் பாடப்பெற்றன.

366) கூற்றுகளை ஆராய்க.

1. மணிமேகலை மீது விருப்பம் கொண்ட உதயண்குமாரன், காயசண்டிகையின் உருவத்திலிருந்த மணிமேகலையைப் பின்தொடர்வதாகக் கருதிய காயசண்டிகையின் கணவன் உதயண்குமாரனைக் கொன்றுவிடுகிறான்.

2. இதனால் சிறைக்கோட்டத்தில் வைக்கப்பட்ட மணிமேகலை தன் அறச்செயல்களால் விடுதலை அடைகிறாள்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. மணிமேகலை மீது விருப்பம் கொண்ட உதயண்குமாரன், காயசண்டிகையின் உருவத்திலிருந்த மணிமேகலையைப் பின்தொடர்வதாகக் கருதிய காயசண்டிகையின் கணவன் உதயண்குமாரனைக் கொன்றுவிடுகிறான்.

2. இதனால் சிறைக்கோட்டத்தில் வைக்கப்பட்ட மணிமேகலை தன் அறச்செயல்களால் விடுதலை அடைகிறாள்.

367) பெருங்காப்பிய இலக்கணங்கள் பொருந்தியும் சில நெகிழ்ச்சிகளை உள்வாங்கியும் இயற்றப்பெற்ற சைவக் காப்பியம் எது?

A) பெரியபுராணம்

B) கம்பராமாயணம்

C) சிலப்பதிகாரம்

D) மகாபாரதம்

விளக்கம்: பெரியபுராணம் எனப்படும் திருத்தொண்டர் புராணம் பெருங்காப்பிய இலக்கணங்கள் பொருந்தியும் சில நெகிழ்ச்சிகளை உள்வாங்கியும் இயற்றப்பெற்ற சைவக் காப்பியமாகும்.

368) வடஇந்தியப் பகுதிகளைக் களமாகக் கொண்டு தமிழ்ச் சாயலோடு படைக்கப்பெற்ற முதல் தமிழக காப்பியத்தை இயற்றியவர் யார்?

A) கம்பர்

B) வியாசர்

C) பாரதியார்

D) கொங்குவேளிர்

விளக்கம்: வடஇந்தியப் பகுதிகளைக் களமாகக் கொண்டு தமிழ்ச் சாயலோடு படைக்கப்பெற்ற முதல் தமிழ்க் காப்பியம் பெருங்கதை. இக்காப்பியத்தை இயற்றியவர் கொங்குவேளிர் ஆவார். உதயணன் என்னும் காவியத் தலைவனின் வாழ்க்கையை விவரித்துக் கூறுகிறது இந்நூல். இதற்குக் கொங்குவேள் மாக்கதை, உதயணன் கதை என்ற வேறு பெயர்களும் உள்ளன.

369) தவறான கூற்றை தெரிவு செய்க.

A) குண்டலகேசி அழிந்துப்போன தமிழ்க் காப்பியங்களில் ஒன்று ஆகும்.

B) இது பௌத்த சமய நூல் ஆகும்.

C) நாதகுத்தனார் என்ற புலவரால் இயற்றப்பட்டது

D) புறத்திரட்டில் குண்டலகேசியில் பாடல்களாகப் 180 பாடல்களும், நீலகேசி உரையில் 19 பாக்களும் இன்று கிடைக்கின்றன.

விளக்கம்: புறத்திரட்டில் குண்டலகேசியில் பாடல்களாகப் 19 பாடல்களும், நீலகேசி உரையில் 180 பாக்களும் இன்று கிடைக்கின்றன.

370) திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் என்ற நூலை எழுதியவர் யார்?

A) ஆண்டாள்

B) நம்மாழ்வார்

C) திருமங்கையாழ்வார்

D) மதுரகவியாழ்வார்

விளக்கம்: ஆண்டாள் – நாச்சியார் திருமொழி, திருப்பாவை

நம்மாழ்வார் – திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி

திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல்.

மதுரகவியாழ்வார் – திருப்பதிகம்.

371) நாககுமார காவியம் என்னும் நூல் _____________விருத்தப்பாக்களையும், ______________சருக்கங்களையும் கொண்டுள்ளது?

A) 170, 5

B) 170, 6

C) 320, 5

D) 320, 6

விளக்கம்: நாககுமார காவியம் அல்லது நாகபஞ்சமி கதை எனப்படும் இந்நூல், தமிழில் தோன்றிய சிறு காப்பியங்களில் ஒன்றாகும். இதை எழுதியவர் யாரெனத் தெரியவில்லை. 170 விருத்தப்பாக்களால் ஆன இந்நூல் ஐந்து சருக்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இது சமணசமயக் கொள்கைகளை விளக்க முற்படுகிறது. இளமைக் காலத்தில் இன்பம் துய்ப்பதிலேயே தனது காலத்தைக் கழித்த நாககுமாரன் தனது இறுதிக் காலத்தில் வாழ்வின் நிலையாமையை உணர்ந்து துறவு மேற்கொள்வதே இக்கதை.

372) கூற்றுகளை ஆராய்க.

1. விருத்தப் பாக்களாக அமைந்த வளையாபதிப் பாடல்கள் கள்ளாமை, கொல்லாமை, பொய்யாமை, இளமை நிலையாமை ஆகியன குறித்துப் பேசுகின்றன.

2. ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் சமண சமயக் காப்பியம் ஆகும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. விருத்தப் பாக்களாக அமைந்த வளையாபதிப் பாடல்கள் கள்ளாமை, கொல்லாமை, பொய்யாமை, இளமை நிலையாமை ஆகியன குறித்துப் பேசுகின்றன.

2. ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் சமண சமயக் காப்பியம் ஆகும்.

373) இன்னா நாற்பது நூலை இயற்றியவர் யார்?

A) பூதஞ்சேந்தனார்

B) கபிலர்

C) கூடலூர் கிழார்

D) விளம்பிநாகனார்

விளக்கம்: இன்னது துன்பம் தரும் என்று கூறும் 40 வெண்பாக்களால் ஆன நூல் இன்னா நாற்பது ஆகும். இந்நூலின் ஆசிரியர் கபிலர் ஆவார்.

374) இரட்சணிய யாத்திரிகப் பாடலை எழுதியவர் யார்?

A) உமறுப்புலவர்

B) அபுல்காசிம் மரைக்காயர்

C) ஜி.யூ.போப்

D) எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை

விளக்கம்: இயேசு பெருமான் மனிதகுலத்தின் உயர்வுக்காக உயிர் நீத்த திருச்சிலுவை, கிறித்துவ நம்பிக்கைக்கு, அடிப்படையாக விளங்குகிறது. சிலுவையில் அறையப்பட்ட போதும் பகைவர்க்கு அருளிய இயேசுவே உலக இரட்சகர். இதற்கு வேறு சான்றுகள் வேண்டுமா? என அன்பு மேலிடும் இரட்சணிய யாத்திரிகப் பாடல் வழியே எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை வினவுகிறார்.

375) பாண்டிவள நாட்டைச்சார்ந்த குலசேகர பாண்டியனின் அமைச்சராக விளங்கியவர் சந்திரவாணன். இவர் எந்த ஊரைச் சார்ந்தவர்?

A) தஞ்சாவூர்

B) புதுக்கோட்டை

C) இராமநாதபுரம்

D) சிவகங்கை

விளக்கம்: தஞ்சாவூரில் பிறந்த சந்திரவாணன், பாண்டிவள நாட்டைச்சார்ந்த குலசேகர பாண்டியனின் அமைச்சராக விளங்கினார். இவர் புலவர்களைப் புரக்கும் வள்ளலாக விளங்கினமையால் பொய்யாமொழிப்புலவர் இவர் பெயரில் தஞ்சைவாணன் கோவையை எழுதினார்.

376) நீலகேசி பற்றிய கூற்றுகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க.

A) சமணநூலான நீலகேசி குண்டலகேசிக்கு மறுப்புநூலாக இயற்றப்பட்டது.

B) தமிழில் தோன்றிய முதல் தருக்க நூல் இதுவெனக் கூறலாம்.

C) நீலகேசி திரட்டு என அழைக்கப்படும் இது 12 சருக்கங்களையும், 895 விருத்தப்பாக்களையும் கொண்டுள்ளது.

D) தெய்வங்களுக்கு உயிர்ப்பலி இடுதல் தீமையே என்பதை நீலகேசி எடுத்துரைக்கிறது.

விளக்கம்: நீலகேசி திரட்டு என அழைக்கப்படும் இது 10 சருக்கங்களையும், 895 விருத்தப்பாக்களையும் கொண்டுள்ளது.

377) மணிமொழிக் கோவை என்று குறிப்பிடப்படும் நூல்களுக்கு பொருந்தாதது எது?

A) நான்மணிக்கடிகை

B) முதுமொழிக்காஞ்சி

C) ஆசாரக்கோவை

D) பழமொழிநானூறு

விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களான நான்மணிக்கடிகை, முதுமொழிக்காஞ்சி, ஆசாரக்கோவை ஆகிய மூன்றையும் மணிமொழிக்கோவை என்பர்.

378) சீறாப்புராணத்தை எழுதியவர் யார்?

A) அபுல்காசிம் மரைக்காயர்

B) அப்துல்காதர்

C) உமறுப்புலவர்

D) எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை

விளக்கம்: சீறாப்புராணத்தை எழுதிய உமறுப்புலவர் முகம்மது நபிகளின் அருளில் ஆட்பட்டு பக்திமை தோன்ற வியந்து போற்றுகின்றார்.

379) அகப்பொருளுக்குரிய துறைகள் பலவற்றை 400 கட்டளைக் கலித்துறையால் சங்கிலித்தொடர் போலப் பாடப்படும் சிற்றிலக்கிய நூல் எது?

A) தூது

B) அந்தாதி

C) பள்ளு

D) கோவை

விளக்கம்: அகப்பொருளுக்குரிய துறைகள் பலவற்றை 400 கட்டளைக் கலித்துறையால் சங்கிலித்தொடர் போலப் பாடப்பட்டது கோவையாகும். கடவுளரையோ அரசரையோ படைத்தலைவரையோ வள்ளல்களையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்படுவது.

380) ஐம்பெருங்காப்பியம் பற்றிய கூற்றுகளில் தவறான கூற்றை தெரிவு செய்க

A) சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி ஆகியவை சோழர் காலத்தைச் சார்ந்தவை ஆகும்.

B) குண்டலகேசி, வளையாபதி – காலவெள்ளத்தில் அழிந்து போன காப்பியங்கள்

C) ‘பெருங்காப்பிய நிலை பேசுங்காலை’ எனத் தொடங்கும் தொல்காப்பிய நூற்பா காப்பிய இலக்கணத்தைக் கூறுகிறது.

D) காப்பிய இலக்கணத்தோடு பெரும்பாலும் பொருந்தியும் சிறுபான்மை மாறுபட்டும் அமைந்தவை தொடர்நிலைச் செய்யுள் எனப்படும்

விளக்கம்: சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி ஆகியவை சோழர் காலத்தைச் சார்ந்தவை ஆகும்.

குண்டலகேசி, வளையாபதி – காலவெள்ளத்தில் அழிந்து போன காப்பியங்கள்

‘பெருங்காப்பிய நிலை பேசுங்காலை’ எனத் தொடங்கும் தண்டியலங்கார நூற்பா காப்பிய இலக்கணத்தைக் கூறுகிறது.

காப்பிய இலக்கணத்தோடு பெரும்பாலும் பொருந்தியும் சிறுபான்மை மாறுபட்டும் அமைந்தவை தொடர்நிலைச் செய்யுள் எனப்படும்.

381) கம்பராமாயணம் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. இந்நூல் ஆறு காண்டங்களை உடையது.

2. 118 படலங்களை உடையது.

3. இக்காப்பியத்தின் ஏழாவது காண்டமாக விளங்கும் உத்தர காண்டத்தை எழுதியவர் கம்பருக்கு பின் வாழ்ந்தவரான ஒட்டக்கூத்தர் ஆவார்.

4. இந்நூலின் சிறப்பு கருதியும் திருக்குறளின் பெருமை கருதியும் இவ்விரு நூல்களையும் “தமிழுக்குக் கதி” என்று திருமணம் செல்வ கேசவராயர் கூறியுள்ளார்.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) 4 மட்டும் தவறு

விளக்கம்: இக்காப்பியத்தின் ஏழாவது காண்டமாக விளங்கும் உத்தர காண்டத்தை எழுதியவர் கம்பரின் சமகாலத்தவரான ஒட்டக்கூத்தர் ஆவார்.

382) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.

1. பால காண்டம் – அயோத்தி நகரத்து அரசனான தசரதனுக்கு இராமன், பரதன், இலக்குவன், சத்ருக்கன் ஆகிய நான்கு பிள்ளைகள் பிறப்பதும், இராமன் வில்லை வளைத்துச் சீதையை மணம் முடிப்பது ஆகியவை இடம்பெற்றுள்ளது.

2. அயோத்தியா காண்டம் – கைகேயி கேட்ட இரண்டு வரங்களால் இராமன் காடடைவது

3. ஆரணியா காண்டம் – இராவணன் சீதையைக் கவர்ந்து செல்வது

4. கிட்கிந்தா காண்டம் – சீதையைத் தேடிச் செல்லும் இராமன், வாலியைக் கொன்று சுக்ரீவன், அனுமன் நட்பைப் பெறுவது.

A) 1, 2 சரி

B) 1, 2, 3 சரி

C) 1, 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. பால காண்டம் – அயோத்தி நகரத்து அரசனான தசரதனுக்கு இராமன், பரதன், இலக்குவன், சத்ருக்கன் ஆகிய நான்கு பிள்ளைகள் பிறப்பதும், இராமன் வில்லை வளைத்துச் சீதையை மணம் முடிப்பது ஆகியவை இடம்பெற்றுள்ளது.

2. அயோத்தியா காண்டம் – கைகேயி கேட்ட இரண்டு வரங்களால் இராமன் காடடைவது

3. ஆரணியா காண்டம் – இராவணன் சீதையைக் கவர்ந்து செல்வது

4. கிட்கிந்தா காண்டம் – சீதையைத் தேடிச் செல்லும் இராமன், வாலியைக் கொன்று சுக்ரீவன், அனுமன் நட்பைப் பெறுவது.

383) கூற்றுகளை ஆராய்க.

1. இராமனைப் பிரிந்த சீதையின் நிலை, அனுமனின் ஆற்றல் ஆகியன – சுந்தர காண்டம்

2. சீதையை மீட்பது – யுத்த காண்டம்

A)1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. இராமனைப் பிரிந்த சீதையின் நிலை, அனுமனின் ஆற்றல் ஆகியன – சுந்தர காண்டம்.

2. சீதையை மீட்பது -யுத்த காண்டம்.

384) திருவாசிரியம் என்ற நூலை எழுதியவர் யார்?

A) திருமழிசையாழ்வார்

B) நம்மாழ்வார்

C) பேயாழ்வார்

D) பூதத்தாழ்வார்

விளக்கம்: திருமழிசையாழ்வார் – நான்காம் திருவந்தாதி, திருச்சந்த விருத்தம்.

நம்மாழ்வார் – திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி.

பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி.

பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி.

385) பெரியபுராணம் பற்றிய தவறான கூற்றை தெரிவு செய்க.

A) இது சைவத்திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது

B) இந்நூலின் ஆசிரியர் சேக்கிழார் ஆவர்.

C) சேக்கிழாரின் இயற்பெயர் அருண்மொழித்தேவர் ஆகும்.

D) ஆண், பெண் வேறுபாடின்றிப் பல இனங்களையும், தொழில் பிரிவுகளையும் சார்ந்த சிவனடியார்களைப் பற்றிய நூலாக அமைந்துள்ளதால் இந்நூலைத் தேசிய இலக்கியம் என்று சான்றோர்கள் பாராட்டுவர்.

விளக்கம்: சைவத்திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாக உள்ளது திருமந்திரம். இந்நூலின் வேறுபெயர் தமிழ் மூவாயிரம் ஆகும்.

பெரியபுராணம் என்பது சைவத்திருமுறைகளில் 12-வது திருமுறையாக இடம்பெற்றுள்ளது.

386) மகாபாரதத்தை “பாண்டவர் பூமி” என்ற பெயரில் புதுக்கவிதை வடிவில் காப்பியமாக்கியவர் யார்?

A) வைரமுத்து

B) கவிஞர் வாலி

C) கண்ணதாசன்

D) முடியரசன்

விளக்கம்: யாப்பு வடிவத்தை உடைத்து வளர்த்தெடுக்கப்பட்ட புதுக்கவிதைகளிலும் காப்பியங்கள் தற்காலத்தில் படைக்கப்படுகின்றன. பாரதியின் வாழ்க்கை வரலாற்றைப் புதுக்கவிதை வடிவில் கவிராஜன் கதை என்னும் பெயரில் காப்பியமாகப் படைத்துள்ளார் வைரமுத்து. கவிஞர் வாலி இராமாயணத்தை அவதார புருஷன் என்ற பெயரிலும், மகாபாரத்தை பாண்டவர் பூமி என்ற பெயரிலும் புதுக்கவிதை வடிவில் காப்பியமாக்கியுள்ளார்.

387) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.

A) பாரதியார்- பாஞ்சாலி சபதம், குயில்பாட்டு

B) பாரதிதாசன்- பாண்டியன் பரிசு, புரட்சிக்கவி, வீரத்தாய்

C) கவிமணி தேசிய விநாயகம்- மருமக்கள் வழி மான்மியம்

D) புலவர் குழந்தை- சிலம்பின் சிறுகதை

விளக்கம்: புலவர் குழந்தை- இராவண காவியம்

சாலை இளந்திரையன்- சிலம்பின் சிறுகதை

388) நானாற்பது நூல்களில் புற நூல் எது?

A) இன்னா நாற்பது

B) இனியவை நாற்பது

C) கார் நாற்பது

D) களவழி நாற்பது

விளக்கம்: நானாற்பது என்று அழைக்கப்படும் நான்கு நூல்களாவன:

1. இன்னா நாற்பது

2. இனியவை நாற்பது

3.கார் நாற்பது

4. களவழி நாற்பது.

இவற்றுள் இன்னா நாற்பது மற்றும் இனியவை நாற்பது அறநூல்கள்

கார் நாற்பது அக நூல்.

களவழி நாற்பது புற நூல்.

389) தவறான கூற்றை தெரிவு செய்க.

A) பல்லவர்கள் காலம் பக்தி இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்காலம் எனப்படுகிறது.

B) சோழர்கள் காலத்தில் எழுந்த பக்தி இலக்கியங்கள் தனித்தனிப் பாடல்களாகவும் பிரபந்தங்களாகவும் வெளியிடப்பட்டன.

C) “உயிர், உடம்பு, பொருள், இளமை ஆகியன நிலையாக நில்லாமல் மறைந்துவிடக் கூடியன. இவற்றை உணர்ந்து அறத்தைச் செய்பவனாக மனிதன் மாறவேண்டும்” – சமண பௌத்த சமயங்கள்

D) இறைவனை ஆண்டான், தந்தை, தோழன், நாயகன் முறையே தாச, சற்புத்திர, சக, ஞான மார்க்கங்கள் என்று குறிப்பிடுகின்றனர்.

விளக்கம்: பல்லவர்கள் காலத்தில் எழுந்த பக்தி இலக்கியங்கள் தனிதனிப் பாடல்களாகவும் பிரபந்தங்களாகவும் வெளியிடப்பட்டன.

390) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க

A) அடிமை நெறி – திருநாவுக்கரசர், குலசேகராழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார்

B) பிள்ளைமை நெறி – திருஞானசம்பந்தர்

C) தோழமை நெறி – சுந்தரர், திருமழிசையாழ்வார்

D) நாயகன் நாயகி நெறி – பெரியாழ்வார்

விளக்கம்: நாயகன் நாயகி நெறி – திருமங்கையாழ்வார்

பெரியாழ்வார் இறைவனைக் குழந்தையாகக் கருதி தாலாட்டுப் பாடல்கள் பல பாடியுள்ளார்.

391) கூற்றுகளை ஆராய்க.

1. பெரியாழ்வார் இறைவனைக் குழந்தையாகக் கருதி தாலாட்டுப் பாடல்கள் பல பாடியுள்ளார்.

2. அவர்தம் வளர்ப்பு மகளான ஆண்டாள் இறைவனையே தன் தலைவனாகப் பாவித்து வாழ்ந்தாள்.

3. சிவனைத் தலைவனாக் கொண்ட 63 அடியார்கள் பாடிய பதிகங்கள் பன்னிரு திருமுறைகள் என்று அழைக்கப்பட்டன.

4. திருமாலைத் தலைவராகக் கொண்ட 12 ஆழ்வார்கள் பாடிய பாசுரங்கள் நாலாயிரத் திவ்விப்பிரபந்தம் என்று அழைக்கப்பட்டன

A) 1, 2 சரி

B) 1, 2, 4 சரி

C) 2, 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. பெரியாழ்வார் இறைவனைக் குழந்தையாகக் கருதி தாலாட்டுப் பாடல்கள் பல பாடியுள்ளார்.

2. அவர்தம் வளர்ப்பு மகளான ஆண்டாள் இறைவனையே தன் தலைவனாகப் பாவித்து வாழ்ந்தாள்.

3. சிவனைத் தலைவனாக் கொண்ட 27 அடியார்கள் பாடிய பதிகங்கள் பன்னிரு திருமுறைகள் என்று அழைக்கப்பட்டன.

4. திருமாலைத் தலைவனாகக் கொண்ட 12 ஆழ்வார்கள் பாடிய பாசுரங்கள் நாலாயிரத் திவ்விப்பிரபந்தம் என்றுஅழைக்கப்பட்டன

392) பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்ற நூலை எழுதியவர் யார்?

A) திருமழிசையாழ்வார்

B) நம்மாழ்வார்

C) பேயாழ்வார்

D) பூதத்தாழ்வார்

விளக்கம்: திருமழிசையாழ்வார் – நான்காம் திருவந்தாதி, திருச்சந்த விருத்தம்

நம்மாழ்வார் – திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி

பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி

பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி

393) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.

A) தமிழ்

B) சீனம்

C) கிரேக்கம்

D) அரபு

விளக்கம்: தமிழ், சீனம், சமஸ்கிருதம், இலத்தீன், ஹீப்ரு, கிரேக்கம் போன்ற செவ்வியல் மொழிகள் அனைத்தும் எழுத்து வடிவத்தைப் பெற்ற பின்னரே செவ்வியல் இலக்கியங்களை உருவாக்கின.

394) தமிழ் இலக்கியங்கள் எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: தமிழ் இலக்கியங்கள் பேரிலக்கியம், சிற்றிலக்கியம் என இரு வகைப்படும். பாட்டுடைத் தலைவனின் வாழ்வில், சிறுகூறினை மட்டும் எடுத்துக்கொண்டு அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் நான்கு உறுதிப்பொருள்களுள் ஒன்று அமையப்பாடுவது சிற்றிலக்கியம். இது 96 வகைப்படும். அவற்றுள், அந்தாதி, கலம்பகம், பரணி, கோவை, சதகம், பிள்ளைத்தமிழ், பள்ளு, குறவஞ்சி, உலா, தூது ஆகியன பெரும்பாலும் வழக்கில் உள்ளன.

395) பொருத்துக.

அ. 9-ஆம் திருமுறை- 1. திருமாளிகைத்தேவர் உள்ளிட்ட ஒன்பது வேர்

ஆ. 10-ஆம் திருமுறை- 2. காரைக்காலம்மையார் உள்ளிட்ட பன்னிரண்டு பேர்

இ. 11-ஆம் திருமுறை- 3. திருமூலர்

ஈ. 12-ஆம் திருமுறை- 4. சேக்கிழார்

A) 1, 2, 3, 4

B) 1, 3, 4, 2

C) 4, 2, 3, 1

D) 1, 3, 2, 4

விளக்கம்: 9-ஆம் திருமுறை – திருமாளிகைத்தேவர் உள்ளிட்ட ஒன்பது வேர்

10-ஆம் திருமுறை – திருமூலர்

11-ஆம் திருமுறை – காரைக்காலம்மையார் உள்ளிட்ட பன்னிரண்டு பேர்

12-ஆம் திருமுறை – சேக்கிழார்.

396) தவறான கூற்றை தெரிவு செய்க.

A) திருநாவுக்கரசர் சிவபெருமானிடம், இப்பிறப்பு மட்டுமல்லாமல் எப்பிறப்பிலும் உனக்கு நான் அடிமை என்று பாடியுள்ளார்.

B) தன்னைச்சரணடைந்த அடியவர்களைக் காத்தருளும் தயாளனாக இறைவன் விளங்குவதை அற்புதத்திருவந்தாதியில் ஒளவையார் எடுத்துக்கூறுகிறார்.

C) வில்லிபுத்தூரர் நகர் நம்பி விஷ்ணு சித்தர் ஆவார்

D) பெரியாழ்வாரின் மற்றொரு பெயர் விஷ்ணுசித்தர்.

விளக்கம்: தன்னைச்சரணடைந்த அடியவர்களைக் காத்தருளும் தயாளனாக இறைவர் விளங்குவதை அற்புதத்திருவந்தாதியில் காரைக்காலம்மையார் எடுத்துக்கூறுகிறார்.

397) அருங்கலச் செப்பு என்ற நூலை எழுதியவர் யார்?

A) முனைப்பாடியார்

B) அதிவீரராமபாண்டியர்

C) சிவப்பிரகாசர்

D) பெயரை அறிய இயலவில்லை

விளக்கம்: அருங்கலச் செப்பு- பெயர் அறிய இயலவில்லை

முனைப்பாடியார்- அறநெறிச்சாரம்

அதிவீரராமபாண்டியர் – நறுந்தொகை

சிவப்பிரகாசர்- நன்னெறி.

398) தவறான கூற்றை தெரிவு செய்க.

A) ஒரு பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ, அடியோ அடுத்த பாடலின் அல்லது அடுத்த அடியின் தொடக்கமாகக் கொண்டு பாடப்படுவது அந்தாதி ஆகும்.

B) அம்மானை, கார், ஊசல், கைக்கிளை, புயவகுப்பு முதலான 18 உறுப்புகள் அமையப் பாடப்படுவது கலம்பகம் ஆகும்.

C) போரில் ஆயிரம் யானைக் கொன்று வெற்றிபெறும் வீரனின்மேல் பாடப்படுவது பரணி. இந்நூல் போரில் வென்ற அரசனது நாட்டின் பெயரால் வழங்கப்பெறும்

D) அகப்பொருளுக்குரிய துறைகள் பலவற்றை 400 கட்டளைக் கலித்துறையால் சங்கிலித்தொடர் போலப் பாடப்பட்டது கோவையாகும்.

விளக்கம்: போரில் ஆயிரம் யானைக் கொன்று வெற்றிபெறும் வீரனின்மேல் பாடப்படுவது பரணி. இந்நூல் போரில் தோற்ற அரசனது நாட்டின் பெயரால் வழங்கப்பெறும்.

399) பெரியபுராணத்தில் எத்தனை உட்பிரிவுகள் உள்ளன?

A) 10

B) 2

C) 13

D) 5

விளக்கம்: 63 அடியார் பெருமக்களை மையமாகக்கொண்டு இயற்றப்பட்ட பெரியபுராணத்தில் பெரும் பிரிவாக இரண்டு காண்டங்களும், உட்பிரிவாக 13 சருக்கங்களையும் கொண்டுள்ளது.

400) கூற்றுகளை ஆராய்க.

1. தமிழ் இலக்கியத்தில் சொல்லப்படும் அகப்பொருள் அல்லது புறப்பொருள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அடிப்படையாக் கொண்டு நூறு பாடல்களால் பாடப்படுவதே சதகம் ஆகும்.

2. குலசேகரப் பாண்டியன் புலவர்களைப் புரக்கும் வள்ளலாக விளங்கினமையால் பொய்யாமொழிப்புலவர் இவர் பெயரில் தஞ்சைவாணன் கோவையை எழுதினார்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. தமிழ் இலக்கியத்தில் சொல்லப்படும் அகப்பொருள் அல்லது புறப்பொருள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அடிப்படையாக் கொண்டு நூறு பாடல்களால் பாடப்படுவதே சதகம் ஆகும்.

2. குலசேகரப் பாண்டியன் புலவர்களைப் புரக்கும் வள்ளலாக விளங்கினமையால் பொய்யாமொழிப்புலவர் இவர் பெயரில் தஞ்சைவாணன் கோவையை எழுதினார்.

401) வேளாண் வேதம் என்று அழைக்கப்படும் நூல் எது?

A) திரிகடுகம்

B) திருக்குறள்

C) நாலடியார்

D) நல்வழி

விளக்கம்: திருக்குறளுக்கு அடுத்த நிலையில் வைத்து எண்ணத்தக்கது நாலடியார் ஆகும். நாலடி, நாலடி நானூறு, வேளாண்வேதம் என்று வெவ்வேறு பெயர்களாலும் இந்நூல் சுட்டப்படுகின்றது. சமண முனிவர்களால் பாடப்பட்ட 400 வெண்பாக்களின் தொகுப்பே இந்நூல்.

402) பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் முதலில் வைத்துப் போற்றப்படும் நூல் எது?

A) திருக்குறள்

B) நாலடியார்

C) திரிகடுகம்

D) இனியவை நாற்பது

விளக்கம்: நாலடி நான்மணி நானாற்ப தைத்திணைமுப்

பால்கடுகம் கோவை பழ்மொழி – மாமூலம்

இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே

கைந்நிலைய வாம் கீழ்க்கணக்கு.

இதில் முதலில் வைத்துப் போற்றப்படுவது நாலடியார் ஆகும்.

403) சீவக சிந்தாமணி பற்றிய கூற்றுகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க.

A) சீவக சிந்தாமணி செந்தமிழ்க் காப்பியங்களில் சிறந்தது மட்டுமன்று, உலக மகாகாவியங்களில் ஒன்றாகும் என்று வீரமாமுனிவர் பாராட்டுகிறார்.

B) சீவகசிந்தமணியில் நாமகள் இலம்பகம் முதல் முக்தி இலம்பகம் வரை 13 இலம்பகங்கள் உள்ளன.

C) சீவக சிந்தாமணி 3145 பாடல்களை கொண்டது

D) காப்பியம் இலக்கணம் முழுமையும் பொருந்தும் இந்நூல் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு உறுதிப் பொருள்களையும் பேசுகிறது.

விளக்கம்: சீவக சிந்தாமணி செந்தமிழ்க் காப்பியங்களில் சிறந்தது மட்டுமன்று, உலக மகாகாவியங்களில் ஒன்றாகும் என்று ஜி.யூ.போப் பாராட்டுகிறார்.

404) நூறு பாடல்களை கொண்ட சிற்றிலக்கியம் எது?

A) கோவை

B) அந்தாதி

C) பள்ளு

D) சதகம்

விளக்கம்: தமிழ் இலக்கியத்தில் சொல்லப்படும் அகப்பொருள் அல்லது புறப்பொருள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அடிப்படையாகக் கொண்டு நூறு பாடல்களால் பாடப்படுவதே சதகம். சதகம் என்பது பாட்டியல் நூல்களில் சொல்லப்படும் இலக்கணம். சதம் என்பது நூறு எனப் பொருள்படும். நூறு பாடல்களைக் கொண்ட சிற்றிலக்கியம் சதகம் எனப்பட்டது.

405) சீவக சிந்தாமணி பற்றிய கூற்றுகளில் தவறான கூற்றை தெரிவு செய்க.

A) சீவகன் தும்மியபோது ‘சீவ’ என்ற வாழ்த்தொலி கேட்டது. அதனால் அவன் சீவகன் என்று அழைக்கப்பட்டான்.

B) சீவகனின் வரலாற்றைக் கூறும் நூலாதலின் இது சீவக சிந்தாமணி எனப்பட்டது.

C) கந்துக்கடன் என்ற வணிகன் சீவகனை எடுத்து வளர்க்கிறார்.

D) கட்டியங்காரன் என்ற ஆசிரியர் சீவகனுக்குப் பல்வேறு கலைகளையும் கற்பிக்கிறார்.

விளக்கம்: அச்சணந்தி என்ற ஆசிரியர் சீவகனுக்குப் பல்வேறு கலைகளையும் கற்பிக்கிறார்.

கட்டியங்காரன் என்பவர் சச்சந்தனின் அமைச்சர். ஏற்ற நேரம் பார்த்து சச்சந்தனை கொன்று ஆட்சியைப்பிடித்தவர். தன்னிகரில்லாத் தலைவனாக விளங்கும் சீவகன் தன் ஆற்றலால் பல்வேறு வீரச் செயல்களைப் புரிந்து, கட்டியங்காரனைப் போரில் வீழ்த்தி மீண்டும் தன் நாட்டைப் பெறுகிறான்.

406) ஏலாதிக்கு பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.

A) ஏலம்

B) மிளகு

C) இலவங்கப்பட்டை

D) சிறுநாவற்பூ

விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று. அதில் மூன்றாவதாக அமைந்தது ஏலாதி. ஏலம், இலவங்கப்பட்டை, நாககேசரம், மிளகு, திப்பிலி, சுக்கு ஆகிய ஆறும் கலந்த மருந்து உடலுக்குறுதி சேர்ப்பதுபோல, செய்யுள்தோறும் உள்ளத்திற்கு உறுதி சேர்க்கும் ஆறு கருத்துகளைக் கொண்டதால் இந்நூல் ஏலாதி எனப்பெயர் பெற்றது. 80 வெண்பாக்களைக் கொண்ட இந்நூலை இயற்றியவர் கணிமேதாவியார் ஆவார்.

407) சிலப்பதிகாரம் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. சிலம்பால் உருவான நிகழ்வுகளையும், வரலாற்றையும் கூறுவதால் சிலப்பதிகாரம் எனப் பெயர் பெற்றது.

2. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று இந்நூல் அறியப்படுகிறது.

3. இந்நூல் புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என்ற மூன்று காண்டங்களை உடையது.

4. “மங்கல வாழ்த்துப்பாடல்” தொடங்கி “வரந்தரு காதை” ஈறாக முப்பது காதைகளை உடையது.

A) 1, 4 சரி

B) 2, 3 சரி

C) 1, 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. சிலம்பால் உருவான நிகழ்வுகளையும், வரலாற்றையும் கூறுவதால் சிலப்பதிகாரம் எனப் பெயர் பெற்றது.

2. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று இந்நூல் அறியப்படுகிறது.

3. இந்நூல் புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என்ற மூன்று காண்டங்களை உடையது.

4. “மங்கல வாழ்த்துப்பாடல்” தொடங்கி “வரந்தரு காதை” ஈறாக முப்பது காதைகளை உடையது.

408) பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை பற்றி கூறும் பழம் பாடலில் கடைசியாக வைத்துப் போற்றப்படும் நூல் எது?

A) ஏலாதி

B) கைந்நிலை

C) இந்நிலை

D) சிறுபஞ்சமூலம்

விளக்கம்: நாலடி நான்மணி நானாற்ப தைத்திணைமுப்

பால்கடுகம் கோவை பழ்மொழி – மாமூலம்

இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே

கைந்நிலைய வாம் கீழ்க்கணக்கு.

என்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல் பற்றி கூறும் பழம்பாடலாகும். இதில் கடைசியாக வைத்து போற்றப்படும் நூல் கைந்நிலையாகும்.

409) நான்மணிக்கடிகை பற்றிய கூற்றுகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க

A) இந்நூல் மணிமொழிக்கோவை என அழைக்கப்படும் மூன்று நூல்களுள் ஒன்றாகும்

B) நான்கு மணிகள் பதிக்கப்பெற்ற கடிகை என்னும் அணிகலன் போல ஒவ்வொரு செய்யுளிலும் நான்கு அரிய கருத்துக்களைக் கொண்டுள்ளதால் இந்நூல் நான்மணிக்கடிகை எனப் பெயர் பெற்றது.

C) இந்நூல் 102 வெண்பாக்களைக் கொண்டது

D) இந்நூல் விளம்பிநாகனாரால் இயற்றப்பெற்றது

விளக்கம்: இந்நூல் மணிமொழிக்கோவை என அழைக்கப்படும் மூன்று நூல்களுள் ஒன்றாகும்

நான்கு மணிகள் பதிக்கப்பெற்ற கடிகை என்னும் அணிகலன் போல ஒவ்வொரு செய்யுளிலும் நான்கு அரிய கருத்துக்களைக் கொண்டுள்ளதால் இந்நூல் நான்மணிக்கடிகை எனப் பெயர் பெற்றது.

இந்நூல் 104 வெண்பாக்களைக் கொண்டது.

இந்நூல் விளம்பிநாகனாரால் இயற்றப்பெற்றது.

410) முதுமொழிக்காஞ்சி பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

A) பல மணிகளைக் கோவையாகக் கொண்டு அமைவது மகளிர் அணியும் காஞ்சி என்னும் அணிகலன் ஆகும்.

B) பல முதுமொழிகளைக் கோவையாகக் கொண்ட 100 வெண்பாக்களை உடைய நூல் முதுமொழிக்காஞ்சி ஆகும்

C) இதன் ஆசிரியர் கூடலூர் கிழார்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: பல மணிகளைக் கோவையாகக் கொண்டு அமைவது மகளிர் அணியும் காஞ்சி என்னும் அணிகலன் ஆகும்.

பல முதுமொழிகளைக் கோவையாகக் கொண்ட 100 வெண்பாக்களை உடைய நூல் முதுமொழிக்காஞ்சி ஆகும்.

இதன் ஆசிரியர் கூடலூர் கிழார்.

411) கூற்றுகளை ஆராய்க.

1. ஆசாரமாகிய ஒழுக்க விதிகளைக் கோவையாகக் கொண்டு 100 வெண்பாக்களால் ஆன நூல் ஆசாரக்கோவை ஆகும்.

2. இந்நூலை இயற்றியவர் பெருவாயின் முள்ளியார் ஆவார்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. ஆசாரமாகிய ஒழுக்க விதிகளைக் கோவையாகக் கொண்டு 100 வெண்பாக்களால் ஆன நூல் ஆசாரக்கோவை ஆகும்.

2. இந்நூலை இயற்றியவர் பெருவாயின் முள்ளியார் ஆவார்.

412) கூற்றுகளை ஆராய்க.

1. கி.பி.12ஆம் நூற்றாண்டில் தோன்றிய ‘தண்டியலங்காரம்’ காப்பியத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளது.

2. சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டும் சங்கம் மருவிய கால இலக்கியங்கள்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. கி.பி.12ஆம் நூற்றாண்டில் தோன்றிய ‘தண்டியலங்காரம்’ காப்பியத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளது.

2. சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டும் சங்கம் மருவிய கால இலக்கியங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!