Tnpsc
ஊரக பொருளாதாரம் Online Test 11th Economics Lesson 4 Questions in Tamil
ஊரக பொருளாதாரம்-11th Economics Lesson 4 Questions in Tamil-Online Test
Congratulations - you have completed ஊரக பொருளாதாரம்-11th Economics Lesson 4 Questions in Tamil-Online Test.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஊரக பகுதிகளுக்கு அடிப்படை அலகாக அமைவது
மாநகராட்சி | |
நகராட்சி | |
மாவட்டம் | |
வருவாய் கிராமம் |
Question 1 Explanation:
(குறிப்பு: ஊரக பகுதி என்பது நகரங்கள் மற்றும் மாநகரங்களுக்கு வெளியே அமைந்துள்ள பகுதி ஆகும்.)
Question 2 |
- கூற்று 1: ஊரக பொருளாதாரம் என்பது கிராமங்களையும், ஊரக சமுதாயம் என்பது கிராமங்களில் வாழும் மக்களையும் குறிக்கும்.
- கூற்று 2: வேளாண்மையில் பின் தங்கிய நிலை, குறைந்த வருமானம், குறைவான வேலைவாய்ப்புகள், வறுமை, குறைந்த உள்கட்டமைப்பு வசதிகள், குறைவான எழுத்தறிவு, குறைவான தொழிலாளர் உற்பத்தித்திறன், வேளாண் பொருட்களுக்கு குறைந்த விலை, கடன்கள் ஆகியவை ஊரக பகுதிகளில் காணப்படும் பிரச்சனைகள் ஆகும்.
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 2 Explanation:
(குறிப்பு: ஊரக பொருளாதாரம் பொருளாதார கொள்கைகளை பயன்படுத்தி, ஊரக பகுதிகளை வளர்ச்சியடையச் செய்வதைக் குறிக்கிறது.)
Question 3 |
- கூற்று 1: வேலையின்மை, பருவகால வேலையின்மை மற்றும் குறை வேலையுடைமை ஆகியன கிராமப்புறங்களில் நிலவுகின்றன.
- கூற்று 2: வேலையின்மை என்பது தொழிலாளர்கள் வேலை செய்ய தகுதியும் விருப்பமும் இருந்தும் வேலை கிடைக்காமல் இருப்பது ஆகும்.
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 4 |
தேவைக்கு அதிகமாக மிகுதியான தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது _____________ வேலையின்மை எனப்படும்.
பருவகால வேலையின்மை | |
அமைப்பு வேலையின்மை | |
தொழில்நுட்ப வேலையின்மை | |
மறைமுக வேலையின்மை |
Question 4 Explanation:
(குறிப்பு: மறைமுக வேலையின்மை என்பது தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டாலும் உற்பத்தியளவு அதிகரிக்காத நிலையை குறிக்கும்.)
Question 5 |
2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் _______________ கிராமங்கள் உள்ளன.
4,60,867 | |
5,40,807 | |
6,86,407 | |
6,40,867 |
Question 5 Explanation:
(குறிப்பு: இந்தியாவின் 121 கோடி மொத்த மக்கள்தொகையில், 68.84 சதவீத மக்கள் ஊரகங்களில் வசிக்கின்றனர்.)
Question 6 |
2011-12 ன் மதிப்பீட்டின்படி ஊரகப் பகுதிகளில் ____________ மக்கள் ஏழையாகவும், வறுமைக் கோட்டிற்கு கீழும் வசிக்கின்றனர்.
12 கோடி | |
20 கோடி | |
22 கோடி | |
25 கோடி |
Question 6 Explanation:
(குறிப்பு: வறுமை என்பது அடிப்படைத் தேவைகளான உணவு உடை, இருப்பிடம் போன்றவற்றை பூர்த்தி செய்ய முடியாத நிலையாகும்.)
Question 7 |
கீழ்க்கண்டவற்றுள் ஊரக மக்களின் அதிக கடன் சுமைக்கான காரணங்களாக கருதப்படுபவை எவை?
- வறுமை
- குறைவேலையுடைமை
- குறை ஊதிய வேலை
- பருவகால உற்பத்தி
- குறைந்த அங்காடி வசதிகள்
அனைத்தும் | |
1, 3, 4 | |
1, 2, 4, 5 | |
1, 3, 5 |
Question 7 Explanation:
(குறிப்பு: விவசாய நிலம் சார்ந்த மற்றும் நிலம் சாரா வேலைவாய்ப்புகளில் தேக்கநிலையும் ஊரக மக்களின் வறுமைக்கு காரணமாக அமைகிறது.)
Question 8 |
"ஓர் இந்திய உழவன் கடனிலே பிறந்து கடனிலே வாழ்ந்து, கடனிலேயே இறந்து அவன் சந்ததிக்கும் கடனையே விட்டுச் செல்கிறான்." என்று கூறியவர்
அமர்த்தியாகுமார் சென் | |
J.M. கீன்ஸ் | |
H.W. சிங்கர் | |
சர் மால்கம் டார்லிங் |
Question 8 Explanation:
(குறிப்பு: சர் மால்கம் டார்லிங் என்பவர் புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் ஆவார்.)
Question 9 |
- கூற்று 1: எதிரிடையான இரண்டு அம்சங்கள் நிலவுவதே இரட்டைத் தன்மை ஆகும்.
- கூற்று 2: வளர்ந்த மற்றும் பின் தங்கிய நிலை, அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத நிலை, பாரம்பரிய மற்றும் நவீன நிலை, ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் ஒழுங்குபடுத்தப்படா நிலை, ஏழை மற்றும் பணக்காரர், திறமைமிக்கவர் மற்றும் திறமையற்றவர் போன்ற முரண்பாடான சூழல்கள் ஊரக பகுதிகளில் நிலவுகின்றன.
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 10 |
ஒருபுறம் கிராமங்கள் காலியாகவும் மறுபுறம் நகரங்கள் நெரிசலாகவும் மாறுவதை "இரட்டை நஞ்சாக்கல்" என குறிப்பிட்டவர்
சுமாசர் | |
J.M. கீன்ஸ் | |
H.W. சிங்கர் | |
சர் மால்கம் டார்லிங் |
Question 10 Explanation:
(குறிப்பு: இரட்டை நஞ்சாக்கல் போன்ற தற்போதைய வளர்ச்சி வகை முறை அபாயகரமானது என்று சுமாசர் அவரின் 'சிறியது அழகு’ என்ற நூலில் விளக்குகிறார்.)
Question 11 |
"ஊரக மேம்பாடு என்பது குறிப்பிட்ட ஊரக மக்களின் பொருளாதார மற்றும் சமூக வாழ்க்கை முறையை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட உத்தி" என்பது யாருடைய கூற்று
ஐக்கிய நாடுகள் சபை | |
ஐரோப்பிய யுனியன் | |
உலக வங்கி | |
சார்க் |
Question 11 Explanation:
(குறிப்பு: ஊரக மேம்பாடு என்பது ஊரக மக்களின் சமூக நலம் மற்றும் வாழும் சூழ்நிலையை மேம்படுத்துதல் போன்ற ஒட்டு மொத்த முன்னேற்றத்தைக் குறிப்பதாகும்.)
Question 12 |
கிராமப்புறங்களில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த PURA என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்
ஜவஹர்லால் நேரு | |
இந்திராகாந்தி | |
இராஜேந்திர பிரசாத் | |
அப்துல் கலாம் |
Question 12 Explanation:
(குறிப்பு: ஊரக பகுதிகளை முன்னேற்றுவதன் மூலம் பயன்படுத்தாத மற்றும் குறைவாக பயன்படுத்தி வரும் இயற்கை வளங்களை முழுமையாக பயன்படுத்த இயலும்.)
Question 13 |
சரியான இணையைத் தேர்ந்தெடு.
- மனித மேம்பாட்டுக் குறியீடு – HDI
- மகளிர் வல்லமைக் குறியீடு – WEI
- பாலின வேறுபாட்டுக் குறியீடு – GDI
- இயல் தர வாழ்க்கைக் குறியீடு – PQLI
- மொத்த தேசிய மகிழ்ச்சிக் குறியீடு – GNHI
அனைத்தும் சரி | |
1, 2, 4, 5 சரி | |
2, 3, 4 சரி | |
1, 3, 4, 5 சரி |
Question 13 Explanation:
(குறிப்பு: மேற்கண்ட பொருளாதாரக் குறியீடுகளை மேம்படுத்துவதன் மூலம் உலக அரங்கில் இந்தியாவின் நிலையை மேம்படுத்த இயலும்.)
Question 14 |
கீழ்க்கண்டவற்றுள் ஊரக பொருளாதாரத்தின் மக்கள் தொடர்புடைய பிரச்சினைகள் எவை?
- எழுத்தறிவின்மை
- போதிய தொழில்நுட்ப அறிவின்மை
- நம்பிக்கை குறைவு
- பற்றுகள், நம்பிக்கைகள்
அனைத்தும் | |
2, 3, 4 | |
1, 2, 3 | |
1, 3, 4 |
Question 15 |
ஊரக பொருளாதாரத்தின் வேளாண்மை சார்ந்த பிரச்சனைகளாக கருதப்படுபவை எவை?
- உள்ளீடுகள் கிடைக்காமை
- பற்றாக்குறைவான பணியாளர்கள் மற்றும் சேவைகள்
- பன்முக திறன் கொண்ட பணியாளர்கள் இன்மை
- நிலங்கள் துண்டாடப்பட்டு சிறிது சிறிதாக இருத்தல்
- வங்கி மற்றும் காப்பீடு வசதிகள் இன்மை
1, 2, 4 | |
1, 2, 3 | |
2, 3, 4 | |
1, 3, 4 |
Question 15 Explanation:
(குறிப்பு: வேளாண்மை சார்ந்த பிரச்சனைகள்
எதிர்பார்த்த அளவில் விழிப்புணர்வு, வேளாண் அறிவு, திறன் மற்றும் மனப்போக்கு போன்றவை இன்மை.
உள்ளீடுகள் கிடைக்கப்றொமை
அங்காடிப்படுத்தும் வசதிகள் குறைவு
பற்றாக்குறையான பணியாளர்கள் மற்றும் சேவைகள்
பன்முக திறன் கொண்ட பணியாளர்கள் இன்மை
நிலங்கள் துண்டாடப்பட்டு சிறிது சிறிதாக இருத்தல்
சிறு நிலங்கள் மற்றும் சிறு சிறு துண்டுகளாக்கப்பட்ட நிலவுடைமைகள்
ஊரக பகுதிகளில் தங்கி பணியாற்றுவதற்கு போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இன்மை
பழமையான தொழில்நுட்ப முறைகள் மற்றும் நவீன தொழில் நுட்பங்களை குறைவாக பயன்படுத்துதல்
குறைவான அரசு முதலீடு மற்றும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விளை பொருட்களுக்கு விலையை நிர்ணயம் செய்ய இயலாமை.)
Question 16 |
கீழ்க்கண்டவற்றுள் பொருளாதாரம் சார்ந்த ஊரக பிரச்சினைகள் எவை?
- அதிக செலவு பிடிக்கும் தொழில் நுட்பங்கள் மற்றும் உள்ளீடுகளை பயன்படுத்த இயலாமை
- நலிவடைந்த ஊரக தொழிற்சாலைகள்
- குறைவான வருமானம்
- கடன் சுமை
- நிலவுடைமை, சொத்துகளில் உள்ள ஏற்றத்தாழ்வு
அனைத்தும் | |
1, 2, 4, 5 | |
2, 3, 4, 5 | |
1, 3, 4 |
Question 17 |
பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச் சத்து உணவு எடுத்துக்கொள்ளுதல் அளவு அடிப்படையில் கிராமங்களில் வாழும் மக்கள் நாள் ஒன்றுக்கு _____________ கலோரி அளவு மற்றும் அதற்குக் குறைவாக எடுத்துக்கொள்பவர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் ஆவர்.
1, 200 | |
1,800 | |
2,400 | |
2,600 |
Question 17 Explanation:
(குறிப்பு: வறுமைக் கோடு என்பது மக்களின் வருமானம் அல்லது நுகர்வு நிலையை பொறுத்து வறுமை கோட்டிற்கு மேல் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என அனுமானிக்கும் கோடு ஆகும்.)
Question 18 |
திட்டக்குழுவின் கணக்கீட்டின்படி 2009 - 2010ல் ஊரக பகுதியில் வறுமையில் உள்ள மக்கள் சதவீதம்
33.80% | |
44.50% | |
54.10% | |
51.20% |
Question 18 Explanation:
(குறிப்பு: 2009-10ல் மொத்த வறுமை சதவீதம் 33.80.)
Question 19 |
ஊரக பகுதிகளில் உள்ள தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவினரில் 2005 ஆம் ஆண்டில் _____________ சதவீதம் பேர் ஊரக வறுமையில் இருந்தனர்.
40% | |
50% | |
80% | |
90% |
Question 20 |
இந்தியாவில் 2015ஆம் ஆண்டில் _______________ மக்கள் கிராமங்களில் வாழ்கின்றனர்.
50 கோடி | |
80 கோடி | |
85 கோடி | |
90 கோடி |
Question 20 Explanation:
(குறிப்பு: இவர்களில் கால் பகுதி கிராம மக்கள் (22 கோடி மக்கள்) வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கின்றனர்.)
Question 21 |
உலக ஏழை மக்களின் தொகையில் ___________ சதவீதம் இந்தியாவில் உள்ளனர்.
12% | |
18% | |
20% | |
22% |
Question 21 Explanation:
(குறிப்பு: இந்தியாவில் மக்கட்தொகை வளர்ச்சி வீதத்தைக் காட்டிலும் ஏழைகளின் அளவு வீதத்தை குறைப்பதில் வெற்றி பெற்றுள்ளோம்.)
Question 22 |
ஊரக வறுமையை தீர்மானிக்கும் காரணங்களில் தவறானது எது?
பண்ணை சாராத தொழில்களில் வேலைவாய்ப்பின்மை | |
பணவீக்கம் | |
குறைந்த உற்பத்தித் திறன் | |
பொதுத்துறைகளில் அதிக முதலீடு |
Question 22 Explanation:
(குறிப்பு: ஊரக வறுமைக்கான காரணங்கள்
நிலங்கள் சரியாக பிரிக்கப்பபடாமை
பண்ணை சாராத தொழில்களில் வேலைவாய்ப்பின்மை
பொதுத்துறைகளில் முதலீடு இன்மை
பணவீக்கம்
குறைந்த உற்பத்தி திறன்
வளர்ச்சியின் நன்மைகளில் உள்ள சமனற்ற நிலை
குறைந்த பொருளாதார வளர்ச்சி வீதம்
பெரிய தொழிற்சாலைகளுக்கே முக்கியத்துவம்
சமூக குறைபாடுகள்)
(குறிப்பு: ஊரக வறுமைக்கான காரணங்கள்
நிலங்கள் சரியாக பிரிக்கப்பபடாமை
பண்ணை சாராத தொழில்களில் வேலைவாய்ப்பின்மை
பொதுத்துறைகளில் முதலீடு இன்மை
பணவீக்கம்
குறைந்த உற்பத்தி திறன்
வளர்ச்சியின் நன்மைகளில் உள்ள சமனற்ற நிலை
குறைந்த பொருளாதார வளர்ச்சி வீதம்
பெரிய தொழிற்சாலைகளுக்கே முக்கியத்துவம்
சமூக குறைபாடுகள்)
(குறிப்பு: ஊரக வறுமைக்கான காரணங்கள்
நிலங்கள் சரியாக பிரிக்கப்பபடாமை
பண்ணை சாராத தொழில்களில் வேலைவாய்ப்பின்மை
பொதுத்துறைகளில் முதலீடு இன்மை
பணவீக்கம்
குறைந்த உற்பத்தி திறன்
வளர்ச்சியின் நன்மைகளில் உள்ள சமனற்ற நிலை
குறைந்த பொருளாதார வளர்ச்சி வீதம்
பெரிய தொழிற்சாலைகளுக்கே முக்கியத்துவம்
சமூக குறைபாடுகள்)
Question 23 |
தவறான இணையைத் தேர்ந்தெடு
20 அம்சத் திட்டம் - 1975 | |
ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் (IRDP) – 1976 | |
ஊரக இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு பயிற்சி (TRYSEM) – 1979 | |
வேலைக்கு உணவுத் திட்டம் (FWP) – 1980 |
Question 23 Explanation:
(குறிப்பு: வேலைக்கு உணவுத் திட்டம் (FWP) – 1977)
Question 24 |
தவறான இணையைத் தேர்ந்தெடு.
தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் (NREP) - 1980 | |
ஊரக நிலமற்றோர் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (RLEGP) – 1983 | |
ஜவஹர் வேலைவாய்ப்புத் திட்டம் (JRY) – 1988 | |
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் (MGNREGS) – 2006 |
Question 24 Explanation:
(குறிப்பு: ஜவஹர் வேலைவாய்ப்புத் திட்டம் (JRY) – 1989)
Question 25 |
பொருத்துக.
- தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் i) 2009
- தேசிய ஊரக வாழ்வாதார திட்டம் ii) 2005
- தேசிய ஊரக நலத்திட்டம் iii) 2011
- ராஜீவ் ஆவாஸ் யோஜனா iv) 2013
iii i ii iv | |
ii iii iv i | |
iii i ii iv | |
iv iii ii i |
Question 26 |
சரியான இணையைத் தேர்ந்தெடு.
- ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற மறுசீரமைப்புத் திட்டம் (JNNURM) - 2005
- இந்திரா ஆவாஸ் யோஜனா - 1984
- பாரத் நிர்மான் யோஜனா – 2005
- பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் சதக் (PMAGSY) – 2010
அனைத்து சரி | |
1, 3, 4 சரி | |
1, 2, 4 சரி | |
2, 3, 4 சரி |
Question 26 Explanation:
(குறிப்பு: இந்திரா ஆவாஸ் யோஜனா: 1985 - 1986)
Question 27 |
பணிக்கான படிப்பு என்ற ஆய்விற்காக பீட்டர் டயமண்ட், டேல் மார்டின்கன் மற்றும் கிறிஸ்டோர் பிசாரிட்ஸ் ஆகிய பொருளாதார அறிஞர்கள் நோபல் பரிசு பெற்ற ஆண்டு
2008 | |
2009 | |
2010 | |
2011 |
Question 27 Explanation:
(குறிப்பு: பீட்டர் டயமண்ட், டேல் மார்டின்கன் மற்றும் கிறிஸ்டோர் பிசாரிட்ஸ் ஆகியோர் உருவாக்கிய முறைக்கு அல்லது கோட்பாட்டிற்கு DMP முறை என்று பெயர். பொருளாதார கொள்கைகள் மற்றும் ஒழுங்கு முறைகள் எப்படி வேலையின்மை, வேலைக்கான காலியிடங்கள் மற்றும் கூலி ஆகியவற்றை பாதிக்கிறது என அறிந்து கொள்ள DMP முறை உதவுகிறது.)
Question 28 |
இந்தியாவின் மொத்த வேலையின்மை _____________ சதவீதம் ஆகும்.
7.5% | |
7.8% | |
8.2% | |
8.5% |
Question 28 Explanation:
(குறிப்பு: வேலையின்மை என்பது நடைமுறையிலுள்ள ஊதிய விகிதத்தில், தனிநபரால் வேலை செய்ய விருப்பப்பட்டும் கிடைக்கப் பெறாத நிலையாகும். இதனால் மனிதவளம் மிகவும் வீணாகிறது மற்றும் குறைவாக பயன்படுத்தப்படுகிறது.)
Question 29 |
2016, அக்டோபர் 4 நிலவரப்படி இந்தியாவின் ஊரக வேலையின்மை _____________சதவீதமாகும்.
6.5% | |
6.8% | |
7.5% | |
7.8% |
Question 29 Explanation:
(குறிப்பு: 2016ஆம் ஆண்டு ஊரக வேலையின்மை நகர்ப்புற வேலையின்மையை (10.1%) விட குறைவு ஆகும்.)
Question 30 |
ஊரக வேலையின்மை எத்தனை வகைப்படும்?
5 | |
2 | |
3 | |
4 |
Question 30 Explanation:
(குறிப்பு:
வெளிப்படையான வேலையின்மை
மறைமுக வேலையின்மை அல்லது குறை வேலையுடைமை
பருவகால வேலையின்மை)
Question 31 |
வேலைக்குத் தயாராக இருந்தும் எந்த வேலையும் கிடைக்காமல் வேலையில்லாத நிலையில் இருப்பது ____________ வேலையின்மை எனப்படும்.
மறைமுக வேலையின்மை | |
வெளிப்படையான வேலையின்மை | |
பருவகால வேலையின்மை | |
தொழில்நுட்ப வேலையின்மை |
Question 31 Explanation:
(குறிப்பு: விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஊரக கைவினைஞர்கள் மற்றும் கற்றவர்கள் ஆகியோர் வெளிப்படையான வேலையின்மை வகையை சார்ந்தவர்கள்.)
Question 32 |
ஊரக பகுதிகளில் மறைமுக வேலையின்மை _______________ விழுக்காடு வரை காணப்படுகிறது.
15 - 25 | |
25 – 30 | |
30 – 35 | |
35 – 40 |
Question 32 Explanation:
(குறிப்பு: சிறு மற்றும் குறு விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் கிராமப்புற கைவினைஞர்கள் ஆகியோரிடையே குறைவேலையுடைமை காணப்படுகிறது.)
Question 33 |
வேளாண் தொழிலாளர் விசாரணைக்குழு அறிக்கையின் படி _____________ சதவீத வேளாண் தொழிலாளர்கள் குறை வேலையுடைமையில் உள்ளனர்.
75 | |
78 | |
82 | |
84 |
Question 33 Explanation:
(குறிப்பு: குறை வேலையுடைமையில் உள்ள வேளாண் தொழிலாளர்கள் சராசரியாக ஆண்டுக்கு 82 நாட்கள் வேலையின்றி உள்ளனர்.)
Question 34 |
கீழ்க்கண்டவற்றுள் ஊரக வேலையின்மைக்கான காரணங்கள் எவை?
- திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் இன்மை
- துணை தொழில்களின்மை
- வேளாண்மையை இயந்திரமயமாக்கல்
- மூலதன செறிவு தொழில்நுட்பம்
- கல்விமுறையில் உள்ள குறைபாடுகள்
அனைத்தும் | |
2, 3, 5 | |
1, 2, 4, 5 | |
1, 3, 4, 5 |
Question 35 |
- கூற்று 1: ஊரக பகுதிகளில், ஊரக மக்களால் நடத்தப்படும் அனைத்து தொழிற்சாலைகளும் ஊரக தொழிற்சாலைகள் ஆகும்.
- கூற்று 2: உள்ளூரில் கிடைக்கும் கச்சாப்பொருட்கள், திறன்கள் மற்றும் சிறிய அளவிலான முதலீடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஊரக தொழிற்சாலைகள் அமைகின்றன.
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 35 Explanation:
(குறிப்பு: ஊரக தொழிற்சாலைகளின் வகைகள்
குடிசைத் தொழில்கள்
ஊரக தொழில்கள்
சிறு தொழில்கள்
குறுந்தொழில்கள்
வேளாண் சார்ந்த தொழில்கள்)
Question 36 |
சிறு தொழில்கள் குறித்த கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடு.
- நகர்புற மையங்களுக்கு அருகிலேயே பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன.
- உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அங்காடிகளுக்கு பண்டங்களை உற்பத்தி செய்கின்றன.
- விளையாட்டு உபகரணங்கள் தயாரித்தல், சோப்பு தயாரித்தல், மின் விசிறி தயாரித்தல், காலணிகள் தயாரித்தல், தையல் இயந்திரங்கள் மற்றும் கைத்தறி நெசவு முதலியன சிறு தொழில் நிறுவனங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி |
Question 37 |
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிச் சட்டத்தின்படி சேவை சார்ந்த தொழிற்சாலைகள் _____________ அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன.
உற்பத்தி | |
தொழிலாளர்களின் எண்ணிக்கை | |
கருவிகள் மீதான முதலீடு | |
ஏற்றுமதி |
Question 37 Explanation:
(குறிப்பு: குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி சட்டம் 2006ன் படி உற்பத்தி தொழிற்சாலைகள் முதலீட்டின் அடிப்படையிலும், சேவை சார்ந்த தொழிற்சாலைகள் கருவிகள் மீதான முதலீட்டின் அடிப்படையிலும் பிரிக்கப்படுகின்றன.)
Question 38 |
கீழ்க்கண்டவற்றுள் வேளாண் சார்ந்த தொழிற்சாலை அல்லாதது எது?
ஜவுளி தொழிற்சாலை | |
சர்க்கரை ஆலை | |
காகித ஆலை | |
சலவை சோப்பு தயாரித்தல் |
Question 38 Explanation:
(குறிப்பு: தாவர எண்ணெய் ஆலை, தேயிலை மற்றும் காபி தொழிற்சாலைகள் ஆகியவையும் வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் ஆகும்.)
Question 39 |
இந்தியாவில் 2015ஆம் ஆண்டு சமூக பொருளாதார மற்றும் சாதி ரீதியான கணக்கீட்டின்படி ______________ சதவீத மக்கள் ஊரக பகுதிகளில் வசிக்கின்றனர்.
62% | |
68% | |
73% | |
75% |
Question 39 Explanation:
(குறிப்பு: இதில் 18.5% மக்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள், 11% மக்கள் பழங்குடியினர்.)
Question 40 |
தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு (NSSO, 2002-2003) புள்ளிவிவரப்படி, ________________ சதவீத ஏழைகள் அரசுடமை வங்கிகளில் கடன் பெறுகின்றனர்.
20% | |
30% | |
40% | |
50% |
Question 40 Explanation:
(குறிப்பு: அகில இந்திய கடன் மற்றும் முதலீட்டு ஆய்வு (AIDIS 2002)ன் படி 1991 ல் 66.3% ஆக இருந்த அமைப்புக் கடன் 2002ல் 57.1% ஆக குறைந்தது. இந்த குறைவு அமைப்புசாரா கடன்களின் அதிகரிப்பை காட்டுகிறது.)
Question 41 |
தவறான கூற்றைத் தேர்ந்தெடு. (ஊரக கடன்களின் இயல்புகள்)
இந்தியாவில் ஏறக்குறைய 4 ல் 3 பகுதி ஊரக குடும்பங்கள் கடனில் மூழ்கி உள்ளனர். | |
சிறு விவசாயிகளுக்கு கடன் சுமை அதிகம். | |
விவசாய தொழிலாளர்களை காட்டிலும் மற்ற தொழிலாளர்கள் மிகுந்த கடனாளிகளாக உள்ளனர். | |
பெரும்பாலான கடன்கள் குறுகிய கால கடன்கள் மற்றும் உற்பத்தி இயல்பற்றவை ஆகும். |
Question 41 Explanation:
(குறிப்பு: விவசாய தொழிலாளர்கள் மற்ற தொழிலாளர்களைக் காட்டிலும் மிகுந்த கடனாளிகளாக உள்ளனர்.)
Question 42 |
பின்வருவனவற்றுள் ஊரக கடன்களுக்கான காரணங்கள் எவை?
- விவசாயிகளின் ஏழ்மை நிலை
- பருவமழை பொய்த்தல்
- நிலங்கள் தொடர்பான வழக்குகள்
- வட்டிக்குகடன் தருவோர் மற்றும் அதிக வட்டிவீதம்
அனைத்தும் | |
1, 2, 4 | |
2, 3, 4 | |
1, 3, 4 |
Question 43 |
- கூற்று 1: இந்திய அரசாங்கம் 1965 ஆம் ஆண்டு ஊரக வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து ஆராய, ஊரக வங்கிகளில் பணிபுரிந்தவர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின்படி, வட்டார ஊரக வங்கிகள் செயல்படுத்தப்பட்டன.
- கூற்று 2: சிறு மற்றும் குறு விவசாயிகள், வேளாண் தொழிலாளர்கள், கிராம கைவினைஞர்கள் மற்றும் சிறு நிறுவனங்களுக்கு கடன் மற்றும் பிற உதவிகளை வழங்குவதன் மூலம் ஊரக பொருளாதாரம் மேம்பாடு அடைய வட்டார ஊரக வங்கிகள் பரிந்துரைக்கப்பட்டன.
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 43 Explanation:
(குறிப்பு: இந்திய அரசாங்கம் 1975 ஆம் ஆண்டு ஊரக வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து ஆராய, ஊரக வங்கிகளில் பணிபுரிந்தவர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின்படி, வட்டார ஊரக வங்கிகள் செயல்படுத்தப்பட்டன.)
Question 44 |
தற்போது இந்தியாவில் உள்ள வட்டார ஊரக வங்கிகளின் எண்ணிக்கை
54 | |
58 | |
64 | |
68 |
Question 44 Explanation:
(குறிப்பு: மத்திய மாநில அரசுகள் மற்றும் வணிக வங்கிகளின் கூட்டு முயற்சியால் உருவானதே வட்டார ஊரக வங்கிகள் ஆகும்.)
Question 45 |
- கூற்று 1: பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கு மட்டுமே வட்டார ஊரக வங்கிகள் கடன் வழங்குகிறது.
- கூற்று 2: வட்டார ஊரக வங்கியின் வட்டி வீதமானது தனியார் வங்கிகளின் வட்டி வீதத்தைப் போல் இருக்கும்.
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 45 Explanation:
(குறிப்பு: வட்டார ஊரக வங்கியின் வட்டி வீதமானது கூட்டுறவு சங்கங்களின் வட்டி வீதத்தைப் போல் இருக்கும்.)
Question 46 |
இந்தியாவில் 2009ஆம் ஆண்டில் குறு கடன் வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை ___________ ஆக இருந்தது.
50 | |
120 | |
150 | |
180 |
Question 46 Explanation:
(குறிப்பு: குறுநிதியானது குறுங்கடன் வழங்கும் நிறுவனங்கள் மூலம் வழங்கப்படுகிறது. இதில் சிறிய, இலாப நோக்கமில்லாத நிறுவனங்களிலிருந்து பெரிய வங்கிகள் வரை அடங்கும். அரசு சாராத நிறுவனங்கள் இவ்வகை கடன் வழங்குவதில் முன்னோடியாக விளங்குகின்றன.)
Question 47 |
சுயஉதவிக் குழுக்கள் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
சுய உதவிக்குழு என்பது ஒரே மாதிரியான சமூக பொருளாதாரப் பின்னணி கொண்ட 20 பெண்கள் வரை (சராசரியாக 14 பேர்) கொண்ட தன்னிச்சையான அமைப்பு ஆகும். | |
இதன் உறுப்பினர்கள் மாதந்தோறும் சிறுதொகையான ரூ.10 முதல் ரூ.50 வரை வங்கியில் சேமிக்கின்றனர். தொடர்ந்து இவ்வாறு 6 மாதங்கள் சேமித்த பிறகு சிறிய தொகைகளாக குழுவிலுள்ள தேவைப்படும் உறுப்பினர்களுக்கு வட்டிக்கு வழங்குகின்றனர். | |
செயல்பாடுகளை வைத்து சுயஉதவிக் குழுக்கள் வங்கி இணைப்பு திட்டத்தில் (SBLP) சேர்க்கப்படுகிறார்கள். | |
வங்கி இணைப்புத் திட்டம் 1982ல் ஆரம்பிக்கப்பட்டது |
Question 47 Explanation:
(குறிப்பு: சுய உதவிக் குழுக்களுக்கான வங்கி இணைப்புத் திட்டம் 1992 ல் ஆரம்பிக்கப்பட்டது.)
Question 48 |
2010 மார்ச் முடிவில் வங்கி இணைப்புத் திட்டத்தின் _____________ சுயஉதவிக் குழுக்கள் கீழ் வங்கிகளில் சேமிப்பு கணக்கை வைத்திருந்தனர்
5.45 மில்லியன் | |
6.42 மில்லியன் | |
6.95 மில்லியன் | |
7.89 மில்லியன் |
Question 48 Explanation:
(குறிப்பு: 2009 - 10ஆம் ஆண்டின்படி 1.59 மில்லியன் புதிய சுய உதவிக் குழுக்கள் வங்கி இணைப்பு திட்டத்தில் கடன் பெறும் வசதியோடு இணைக்கப்பட்டன. மற்றும் வங்கிகள் மூலம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.14,453 கோடி கடனாக வழங்கப்பட்டது.)
Question 49 |
NABARD வங்கியின் கணக்கீட்டின்படி _________________ சுய உதவிக் குழுக்கள் இந்தியாவில் உள்ளன.
1.2 மில்லியன் | |
2.0 மில்லியன்1 | |
1.8 மில்லியன் | |
2.2 மில்லியன் |
Question 49 Explanation:
(குறிப்பு: இதில் 33 மில்லியன் உறுப்பினர்கள் வங்கி இணைப்புத் திட்டத்தின் கீழ் வங்கிக்கடன் பெற்றுள்ளனர்.)
Question 50 |
SHGs வங்கி இணைப்புத் திட்டம் கீழ்க்கண்ட எந்த மாநிலங்களுக்கு முன்னுரிமை வழங்குகிறது?
- ஆந்திரபிரதேசம
- தமிழ்நாடு
- கேரளர
- கர்நாடகா
- மஹாராஷ்டிரா
1, 2, 3, 4 | |
2, 3, 4, 5 | |
1, 3, 4, 5 | |
1, 2, 4, 5 |
Question 51 |
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
- NABARDன் SHG வங்கி இணைப்பு திட்டத்தின்படி உறுப்பினர்கள் கடனை சரியாக திருப்பி செலுத்திய பதிவை வைத்திருக்கும் சுய உதவிக் குழுக்கள் வங்கியில் கடன் பெற இயலும்.
- 2005-2006 ஆண்டில் தென் மாநிலங்களான ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகியவை வெற்றிகரமாக செயல்பட்டுள்ளன.
- இம்மாநிலத்தில் 60% சுய உதவிக் குழுக்கள் வங்கி இணைப்பு கடன் வசதியை பெற்றுள்ளன.
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி |
Question 52 |
சிறிய அலகு முன்னேற்றம் மற்றும் மறுநிதியளிக்கும் முகவர் வங்கி (MUDRA) தொடங்கப்பட்ட ஆண்டு
ஏப்ரல் 4, 2015 | |
ஏப்ரல் 8, 2015 | |
ஏப்ரல் 4, 2016 | |
ஏப்ரல் 8, 2016 |
Question 52 Explanation:
(குறிப்பு: MUDRA என்பது ஒரு பொதுத்துறை சார்ந்த நிதி நிறுவனம் ஆகும். இது சிறு, குறு நிதி நிறுவனங்களுக்கும், வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கும் மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் (MSMEs) கடன் வழங்குகிறது.)
Question 53 |
அனைத்து சிறு நிதி வழங்கும் நிறுவனங்களை பதிவு செய்தல் மற்றும் அதன் செயல்பாடுகளை தரம் நிர்ணயம் செய்தல் மற்றும் முறையான ஒப்புதல் வழங்குதல் ஆகியவை கீழ்க்கண்ட எந்த வங்கியின் நோக்கம்
NABARD | |
MUDRA | |
RRB | |
SBI |
Question 54 |
முத்ரா வங்கியின் முதன்மை நோக்கங்களில் தவறானது எது?
- குறுங்கடன் வாங்குபவரையும், பெறுபவரையும் ஒழுங்குப்படுத்துதல் மற்றும் குறுங்கடன் வழங்குவதில் நிலைத்த தன்மையை ஏற்படுத்துதல்.
- சிறு தொழில் புரிபவர்கள், சில்லறை வியாபாரிகள், சுய உதவிக்குழுக்கள் மற்றும் தனிநபர்களுக்கு கடன் வழங்கும் சிறு நிதி நிறுவனங்களுக்கு, மேலும் நிதி மற்றும் கடன் வசதியை ஏற்படுத்தி தருதல்.
- சிறு தொழில்களை மேற்கொள்வதற்கு வழங்கப்படும் கடன்களுக்கு உத்திரவாதம் வழங்குவதற்காக கடன் உத்திரவாத திட்டம் (CGS) ஆரம்பித்தல்.
- கடன் வழங்குதல், கடன்பெறுதல் மற்றும் பகிர்ந்தளிக்கப்படும் மூலதனத்தை மேற்பார்வையிடல் ஆகியவற்றுக்கு பொருத்தமான தொழில்நுட்ப உதவிகளை அறிமுகப்படுத்துதல்
1 மட்டும் தவறு | |
2, 3 தவறு | |
4 மட்டும் தவறு | |
எதுவுமில்லை |
Question 55 |
- கூற்று 1: இந்தியாவை விட இலங்கை உடல் நலதரத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளது.
- கூற்று 2: உடல் நலதரத்தில் இந்தியாவை பொறுத்தவரையில் கேரளா மாநிலம் தமிழ்நாட்டை விட சிறப்பாக உள்ளது.
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 55 Explanation:
(குறிப்பு: தங்கள் மக்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் வழங்குதலும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதலும் மற்றும் மக்களின் உடல்நலத்தை மேம்படுத்துதலுமே அரசின் முதன்மையான கடமையாகும் என்று இந்திய அரசியலமைப்பு தெளிவாக வலியுறுத்துகிறது.)
Question 56 |
தேசிய ஊரக நல அமைப்பு (NRHM) ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு
ஏப்ரல் 8, 2004 | |
ஏப்ரல் 12, 2004 | |
ஏப்ரல் 8, 2005 | |
ஏப்ரல் 12, 2005 |
Question 56 Explanation:
(குறிப்பு: நலிவடைந்த ஊரக மக்களுக்காக குறைந்த விலையில் எளிதில் பெறக்கூடிய தரமான ஆரோக்கிய வசதிகளை ஏற்படுத்தி தருவது NRHMன் நோக்கம் ஆகும்.)
Question 57 |
- கூற்று 1: இனப்பெருக்கம், தாய்மைப் பேறு, சிசு மற்றும் குழந்தை மற்றும் வளர் இளம் பருவத்தினரின் நலனுக்காக பல்வேறு பணிகளை NRHM மேற்கொள்கிறது.
- கூற்று 2: மகப்பேறு மற்றும் குழந்தை நலன் ஆகியவற்றுக்கு NRHM முக்கியத்துவம் வழங்குகிறது.
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 58 |
இந்தியாவின் ஊரக சாலை பகுதி_____________ கி.மீ ஆகும்.
22.50 இலட்சம் | |
26.50 இலட்சம் | |
28.50 இலட்சம் | |
32.50 இலட்சம் |
Question 58 Explanation:
(குறிப்பு: இதில் 13.5 சதவீதம் பகுதிகளில் மட்டுமே சாலைகள் போடப்பட்டுள்ளன.)
Question 59 |
- கூற்று 1: இந்தியாவின் சாலை தொடர்பு வசதி அமைப்புகள் உலகிலேயே பெரிய அமைப்புகளுள் ஒன்றாகும்.
- கூற்று 2: 1950-51ல் 4 இலட்சம் கி.மீட்டர் நீளமாக இருந்த இந்தியச் சாலைகளின் நீளம் 2018ல் 14 இலட்சம் கி.மீட்டர் ஆகும்.
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 59 Explanation:
(குறிப்பு: 2018ல் இந்திய சாலைகளின் நீளம் 34 இலட்சம் கி.மீட்டர் ஆகும்.)
Question 60 |
NSSO புள்ளி விவரத்தின் படி _____________ சதவீத குடும்பங்கள் ஓர் அறையையே வீடாகக் கொண்டுள்ளன.
34 | |
36 | |
38 | |
40 |
Question 60 Explanation:
(குறிப்பு: 36 சதவீத குடும்பங்கள் இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் வாழ்வதாக NSSO புள்ளி விவரம் குறிப்பிடுகிறது.)
Question 61 |
2017 மார்ச் முடிவில் இந்தியாவின் _____________ சதவீத கிராமங்கள் முழுமையாக மின் தொடர்பைப் பெற்றிருந்தன.
98.25 | |
98.50 | |
99.25 | |
99.75 |
Question 61 Explanation:
(குறிப்பு: வேளாண் உற்பத்தியை அதிகப்படுத்த இந்தியாவின் பல மாநிலங்களில் மின் வசதி இலவசமாக வழங்கப்படுகிறது மற்றும் ஊரக பகுதிகளில் மின் கட்டண வீதம் மிகக் குறைவாக உள்ளது.)
Question 62 |
31.3.2017 நிலவரப்படி 100 சதவீத மின்வசதி பெற்ற மாநிலங்களில் தவறானது எது?
குஜராத் | |
ஆந்திரா | |
தெலுங்கானா | |
கர்நாடகா |
Question 62 Explanation:
(குறிப்பு: 31.3.2017 நிலவரப்படி கீழ்க்கண்ட 20 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் முழுமையான அதாவது 100 சதவீத மின்வசதி அடையப்பட்டுள்ளது. அவை சண்டிகர், டெல்லி, ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், டாமன் மற்றும் டையூ, தாத்ரா மற்றும் நாகர் ஹவேளி, கோவா, குஜராத், மஹாராஷ்டிரா, ஆந்திரபிரதேசம், கேரளா, லட்சத்தீவு, புதுச்சேரி, தமிழ்நாடு, தெலுங்கானா, அந்தமான் நிக்கோபர் தீவுகள் மற்றும் திரிபுரா ஆகியவை ஆகும்.)
Question 63 |
கீழ்க்கண்டவற்றுள் ஊரக பகுதிகளில் மின்மயமாக்கலை பாதிக்கும் காரணிகள் எவை?
- நிதிப்பற்றாக்குறை
- மாநிலங்களுக்கு இடையேயுள்ள பிரச்சனைகள்
- சீரற்ற நிலப்பரப்பு
- மின் அனுப்புகையில் ஏற்படும் இழப்பு
- மின்திருட்டு
அனைத்தும் | |
2, 3, 4 | |
2, 4, 5 | |
1, 2, 3 |
Question 64 |
ஊரக பகுதிகளுக்கு மின் அனுப்புகையில் ஏற்படும் இழப்பு
12% | |
18% | |
22% | |
25% |
Question 65 |
ஸ்லேட்டர் என்பவர் ‘சில தென்னிந்திய கிராமங்கள்’ என்ற புத்தகத்தை வெளியிட்ட ஆண்டு
1915 | |
1916 | |
1917 | |
1918 |
Question 65 Explanation:
(குறிப்பு: கிரில்பெர்ட் ஸ்லேட்டர் என்பவர் மெட்ராஸ் பல்கலைக் கழகத்தின் முதல் பொருளாதார பேராசிரியர். இவர் வடமலைபுரம் (ராமநாதபுரம்), கங்கைகொண்டான் (திருநெல்வேலி), பாலக்குறிச்சி (தஞ்சாவூர்) மற்றும் துசி (வட ஆற்காடு) ஆகிய தமிழ்நாட்டில் உள்ள சில கிராமங்களை ஆய்வு செய்து 'சில தென்னிந்திய கிராமங்கள்’ என்ற புத்தகத்தை வெளியிட்டார்.)
Question 66 |
ஸ்லேட்டர் ஆய்வு செய்த கிராமங்களை கீழ்க்கண்ட எந்த ஆண்டுகளில் பல்வேறு ஆராய்ச்சி குழுவினரும் ஆய்வு செய்தனர்
- 1930 2. 1940 3. 1950 4. 1960 5. 1970
1, 2, 3 | |
1, 3, 4 | |
2, 3, 5 | |
2, 4, 5 |
Question 66 Explanation:
(குறிப்பு: ஸ்லேட்டர் ஆய்வு செய்த கிராமங்களில் இரண்டு கிராமங்கள் மட்டும் 21ம் நூற்றாண்டுக்கு முந்தைய காலகட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டதாகும்.)
Question 67 |
PURA என்பதன் விரிவாக்கம்
Provision of Urban forum for Rural Areas | |
Prohibition of Urban facilities for Rural Areas | |
Prohibition of Urban folum for Rare Areas | |
Provision of Urban facilities for Rural Areas |
Question 67 Explanation:
(குறிப்பு: PURA – ஊரகப் பகுதிகளில் நகர்ப்புற வசதிகளை ஏற்படுத்தி தரும் திட்டம்)
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 67 questions to complete.
sir,
how can i attend from 6th to till now online test one by one from our website..
if i’m open the 6th stand social science online test only few of open then asking log in id sir…
but i don’t have id….kindly help me sir…every day i follow our website sir….pls do help me sir..
It is paid service, you should subscribe for 5000 sir – life time course and access
sir,
Is there any possible to pay the fees by instalment,because i’m from poor family consider me sir…