இந்தியப்பண்பாட்டின் இயல்புகள் 12th Ethics Lesson 1 Questions
12th Ethics Lesson 1 Questions
1] இந்தியப்பண்பாட்டின் இயல்புகள்
1) கூற்றுகளை ஆராய்க.
1. இந்திய பண்பாடு தனிச்சிறப்புடையது, பழைமையையும், பண்பாட்டுப் பாரம்பரியத்தையும் கொண்டது.
2. உலகளாவிய பண்பாட்டுக் கூறுகளைத் தன்னிடத்தே கொண்டும், உலகிலுள்ள மற்ற நாடுகள் பின்பற்றத்தக்க வகையிலும் சிறப்புற்று விளங்குகிறது.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. இந்திய பண்பாடு தனிச்சிறப்புடையது, பழைமையையும், பண்பாட்டுப் பாரம்பரியத்தையும் கொண்டது.
2. உலகளாவிய பண்பாட்டுக் கூறுகளைத் தன்னிடத்தே கொண்டும், உலகிலுள்ள மற்ற நாடுகள் பின்பற்றத்தக்க வகையிலும் சிறப்புற்று விளங்குகிறது.
2) பண்பாடு என்னும் சொல் எதிலிருந்து தோன்றியது?
A) பண்படுத்துதல்
B) பண்பாடு
C) செம்மைப்படுத்துதல்
D) சீர்ப்படுத்துதல்
விளக்கம்: ‘பண்படு’ என்னும் தமிழ்ச் சொல்லிலிருந்தே பண்பாடு தோன்றியது. பண்படுத்துதல் என்பதற்குச் செம்மைப்படுத்துதல் அல்லது சீர்படுத்துதல் என்பது பொருள். பண்படுத்துதல் என்னும் சொல் வழக்கு நிலத்தைப் பண்படுத்துவதற்கும் உள்ளத்தைப் பண்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
3) ‘Cultura’ என்ற இலத்தீன் சொல்லுக்கு பொருள் என்ன?
A) சூழலுக்கு ஏற்ற வளர்ச்சி
B) பண்படு
C) பண்பாடு
D) கலாச்சாரம்
விளக்கம்: ‘Cultura’ என்ற இலத்தீன் சொல்லுக்குச் “சூழலுக்கு ஏற்ற வளர்ச்சி” என்று பொருள். இச்சொல்லின் திரிபே ‘Culture’ என ஆங்கிலத்தில் கூறப்படுகிறது.
4) Culture என்னும் சொல்லுக்கு இணையாகப் ‘பண்பாடு’ என்னும் தமிழ்ச் சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் யார்?
A) எஸ். வையாபுரியார்
B) டி.கே. சிதம்பரநாதனார்
C) அண்ணாமலைச்செட்டியார்
D) திரு.வி.க
விளக்கம்: 1937-ல் Culture என்னும் சொல்லுக்கு இணையாகப் ‘பண்பாடு’ என்னும் தமிழ்ச் சொல்லை டி.கே.சிதம்பரநாதனார் பயன்படுத்தியதாகப் பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை குறிப்பிடுகிறார்.
5) சரியான கூற்றை தேர்வு செய்க.
A) பண்பாடு என்பது பண்பட்ட, பக்குவப்பட்ட, சீரான, நேரிய வழியில் செல்லும் ஒழுக்கவியல் கோட்பாடாகும்.
B) இன்று நாம் பண்பாடு என்னும் சொல்லால் குறிப்பிடுவதை நம் முன்னோர்கள் பண்பு, பண்புடைமை, சால்பு, சால்புடைமை, சான்றாண்மை போன்ற சொற்களால் குறிப்பிட்டுள்ளனர்.
C) இச்சொற்கள் வெவ்வாறு இடங்களில் வேறு சில பண்பாட்டுடன் தொடர்புடைய பொருள்களைக் குறித்தாலும் பல இடங்களில் பண்பாட்டையே குறிக்கிறது.
D) அனைத்தும் சரி
விளக்கம்: 1.பண்பாடு என்பது பண்பட்ட, பக்குவப்பட்ட, சீரான, நேரிய வழியில் செல்லும் ஒழுக்கவியல் கோட்பாடாகும்.
2. இன்று நாம் பண்பாடு என்னும் சொல்லால் குறிப்பிடுவதை நம் முன்னோர்கள் பண்பு, பண்புடைமை, சால்பு, சால்புடைமை, சான்றாண்மை போன்ற சொற்களால் குறிப்பிட்டுள்ளனர்.
3. இச்சொற்கள் வெவ்வாறு இடங்களில் வேறு சில பண்பாட்டுடன் தொடர்புடைய பொருள்களைக் குறித்தாலும் பல இடங்களில் பணடபாட்டையே குறிக்கிறது.
6) ‘பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்’ என்று கூறும் நூல் எது?
A) புறநானூறு
B) கலித்தொகை
C) திருக்குறள்
D) நற்றிணை
விளக்கம்: ‘பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்’ என்று கூறும் நூல் கலித்தொகை.
7) ‘பண்புடையார்ப் பட்டுண்டு உலகு’ என்று குறிப்படுபவர் யார்?
A) நக்கீரர்
B) ஒளவையார்
C) வள்ளுவர்
D) கம்பர்
விளக்கம்: ‘பண்புடையார்ப் பட்டுண்டு உலகு’ என்று வள்ளவர் குறிப்பிடுகிறார்.
8) தவறானதைத் தேர்வு செய்க.
A) பண்பாடு என்பது, விழுமியங்களின் தொகுதி.
B) அது கலை, இலக்கியம், சமயம், சமூக நிறுவனங்கள் மற்றும் தனிமனிதச் செயல்பாடுகள் மூலம் வெளிப்படுகிறது.
C) பண்பாடு என்பது, மனிதனின் அகம்.அதை, வெளிப்படுத்தினால் நாகரீகம்.
D) நாகரீகம் நிலைத்து நிற்கும். பண்பாடு மாறுதலுக்கு உள்ளாகும்.
விளக்கம்: நாகரீகம் மாறுதலுக்கு உள்ளாகும். பண்பாடு நிலைத்து நிற்கும்.
9) சரியானக் கூற்றை தேர்வு செய்க.
A) ஓர் இனத்தாரின் பண்பாட்டை அறிந்துகொள்ள எழுத்திலக்கியங்கள் பயன்படுவதைப் போல, நாட்டுப்புற இலக்கியங்களும் பயன்படும்.
B) பண்பாடு, உடையோரைச் சான்றோர் என்றும், ஒழுக்கமுடையோர் என்றும், மாசற்ற காட்சிகளை உடையோர் என்றும் தமிழிலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
C) பண்பாடு என்பது, ஓர் இனத்தாரின் கொள்கைகள், கோட்பாடுகள், நோக்கங்கள், வாழ்க்கைமுறைகள், பழக்கவழக்கம், சமூகச்சட்டம், சமயங்கள், வழிபாட்டு முறைகள், களவு, கற்பு, அக, புறத்திணை மரபுகள், இலக்கிய மரபுகள், அரசியலமைப்புகள், ஆடை, அணிகலன்கள், திருவிழாக்கள், உணவுமுறை, பொழுதுபோக்கு விளையாட்டுகள் ஆகிய எல்லாவற்றையும் ஒருங்கே பெற்ற அமைப்பதாகும்.
D) அனைத்தும் சரி.
விளக்கம்: நாட்டுப்புற பாடல்கள், நாடோடி இலக்கியங்கள், பழமொழிகள், விடுகதைகள், முதுமொழிகள், இசை, நாடகம், நாட்டியம், செந்தமிழ், கொடுந்தமிழ் அமைப்புகள், வளர்ச்சிகள் ஆகியவற்றிலும் பண்பாட்டின் கூறுகளைக் காணலாம். மேலும், ஓவியம், சிற்பம், கட்டடக்கலை போன்ற கலைகளிலும் அவரவரின் பண்பாடு வெளிப்படும்.
10) “மக்கள் தலைமுறை தலைமுறையாகக் குழுவாகச் சேர்ந்து கற்ற நடத்தை முறைகளும், பழக்கங்களும், மரபுகளும் சேர்ந்ததே பண்பாடு” என்று கூறும் நூல் எது?
A) திருக்குறள்
B) ஆங்கில அகராதி
C) தொல்காப்பியம்
D) வாழ்வியற்களஞ்சியம்
விளக்கம்: “மக்கள் தலைமுறை தலைமுறையாகக் குழுவாகச் சேர்ந்து கற்ற நடத்தை முறைகளும், பழக்கங்களும், மரபுகளும் சேர்ந்ததே பண்பாடு” என்று கூறும் நூல் வாழ்வியற்களஞ்சியம்.
11) “பயிற்சி, அனுபவம் ஆகியவற்றின் மூலம் உடல், உள்ளம், உணர்வு ஆகியன அடையும் வளர்ச்சியே பண்பாடு” என்று கூறும் நூல் எது?
A) திருக்குறள்
B) ஆங்கில அகராதி
C) தொல்காப்பியம்
D) வாழ்வியற்களஞ்சியம்
விளக்கம்: “பயிற்சி, அனுபவம் ஆகியவற்றின் மூலம் உடல்;, உள்ளம், உணர்வு ஆகியன அடையும் வளர்ச்சியே பண்பாடு” என்று ஆங்கில அகராதி கூறுகிறது.
12) “பண்பாடு அல்லது கலாச்சாரம் என்பது, சமயம், பாரம்பரியம், பொருளாதாரம் ஆகியவற்றைக்கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது” என்று கூறியவர் யார்?
A) விவேகானந்தர்
B) தேவநேயப்பாவாணர்
C) பசெ. வைத்தியலிங்கம்
D) ஈ.பி. டெய்லர்
விளக்கம்: “பண்பாடு அல்லது கலாச்சாரம் என்பது, சமயம், பாரம்பரியம், பொருளாதாரம் ஆகியவற்றைக்கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது” என்று கூறியவர் விவேகானந்தர்.
13) “பண்படுவது பண்பாடு, பண்படுதல் என்பது சீர்ப்படுதல் அல்லது திருந்துதல். திருந்திய நிலத்தைப் பணப்பட்ட அல்லது பண்படுத்தப்பட்ட நிலமென்றும், திருந்திய, தமிழைப் பண்பட்ட செந்தமிழ் என்றும், திருந்திய உள்ளத்தைப் பணப்பட்ட உள்ளமென்றும் சொல்வது வழக்கம்” என்று கூறியவர் யார்?
A) விவேகானந்தர்
B) தேவநேயப்பாவாணர்
C) ப.செ. வைத்தியலிங்கம்
D) ஈ.பி. டெய்லர்
விளக்கம்: “பண்படுவது பண்பாடு, பண்படுதல் என்பது சீர்ப்படுதல் அல்லது திருந்துதல். திருந்திய நிலத்தைப் பணப்பட்ட அல்லது பண்படுத்தப்பட்ட நிலமென்றும், திருந்திய, தமிழைப் பண்பட்ட செந்தமிழ் என்றும், திருந்திய உள்ளத்தைப் பணப்பட்ட உள்ளமென்றும் சொல்வது வழக்கம்” என்று கூறியவர் தேவநேயப் பாவாணர்.
14) “பண்பாடு என்பது, பொதுவாக நாகரீகத்தில் அடங்கியதாகும். காலப்போக்கில் மக்கள் தம் வளர்ச்சியின் மனநல ஆக்கமே பண்பாடாகப் பெயர் பெறுகின்றது” என்று கூறியவர் யார்?
A) விவேகானந்தர்
B) தேவநேயப்பாவாணர்
C) செ. வைத்தியலிங்கம்
D) ஈ.பி. டெய்லர்
விளக்கம்: “பண்பாடு என்பது, பொதுவாக நாகரீகத்தில் அடங்கியதாகும். காலப்போக்கில் மக்கள் தம் வளர்ச்சியின் மனநல ஆக்கமே பண்பாடாகப் பெயர் பெறுகின்றது” என்று கூறியவர் செ. வைத்தியலிங்கம்.
15) “மனிதன் சமுதாயத்தில் ஓர் அங்கத்தினண். இந்நிலையில் அவன் அடைந்துள்ள அறிவு, நம்பிக்கை, கலை ஒழுக்கக் கோட்பாடுகள், சட்டம், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை தன்னுள் அடக்கிய ஒரு முழுமையான தொகுப்பே பண்பாடு” என்று கூறியவர் யார்?
A) விவேகானந்தர்
B) தேவநேயப்பாவாணர்
C) பசெ. வைத்தியலிங்கம்
D) ஈ.பி. டெய்லர்
விளக்கம்: “மனிதன் சமுதாயத்தில் ஓர் அங்கத்தினண். இந்நிலையில் அவன் அடைந்துள்ள அறிவு, நம்பிக்கை, கலை ஒழுக்கக் கோட்பாடுகள், சட்டம், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை தன்னுள் அடக்கிய ஒரு முழுமையான தொகுப்பே பண்பாடு” என்று கூறியவர் ஈ.பி. டெய்லர்.
16) “மக்களின் சிந்தனையும், செயலும், நடவடிக்கையும் ஒவ்வோர் இனத்தவரிடமிருந்து வேறுபட்டுக் காணப்படுவது பண்பாடாகும்” என்று கூறியவர் யார்?
A) ரூத் பெனிடிக்ட்
B) வால்டேர்
C) எல்வுட் மற்றும் பிரௌன்
D) சி.சி. நார்த்
விளக்கம்: “மக்களின் சிந்தனையும், செயலும், நடவடிக்கையும் ஒவ்வோர் இனத்தவரிடமிருந்து வேறுபட்டுக் காணப்படுவது பண்பாடாகும்” என்று கூறியவர் ரூத் பெனிடிக்ட் ஆவார்.
17) “அவரவர் அன்றாடப் பணிகளை நேர்மையான மனநிலையுடனும் நேர்மையான நோக்குடனும், மகிழ்ச்சியுடனும் செய்வதில்தான் பண்பாடு மிளிர்கிறது” என்று கூறியவர் யார்?
A) ரூத் பெனிடிக்ட்
B) வால்டேர்
C) எல்வுட் மற்றும் பிரௌன்
D) சி.சி. நார்த்
விளக்கம்: “அவரவர் அன்றாடப் பணிகளை நேர்மையான மனநிலையுடனும் நேர்மையான நோக்குடனும், மகிழ்ச்சியுடனும் செய்வதில்தான் பண்பாடு மிளிர்கிறது” என்று கூறியவர் வால்டேர்.
18) “பண்பாடு என்பது இயற்கையின் மீதும் தன்மீதும் மனிதன் கொண்டிருக்கும் கட்டுப்பாடு, மனிதனுடைய உடை, ஆயுதங்கள், கருவிகள், மறைவிடம், ஆன்மீகம், மொழி, இலக்கியம் போன்றவற்றை உள்ளடக்கியது” என்று கூறியவர் யார்?
A) ரூத் பெனிடிக்ட்
B) வால்டேர்
C) எல்வுட் மற்றும் பிரௌன்
D) சி.சி. நார்த்
விளக்கம்: “பண்பாடு என்பது இயற்கையின் மீதும் தன்மீதும் மனிதன் கொண்டிருக்கும் கட்டுப்பாடு, மனிதனுடைய உடை, ஆயுதங்கள், கருவிகள், மறைவிடம், ஆன்மீகம், மொழி, இலக்கியம் போன்றவற்றை உள்ளடக்கியது” என்று கூறியவர் எல்வுட் மற்றும் பிரௌன் ஆவார்.
19) “மனிதன் தன்னுடைய தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்ள உருவாக்கிய கருவி பண்பாடு” என்று கூறியவர் யார்?
A) ரூத் பெனிடிக்ட்
B) வால்டேர்
C) எல்வுட் மற்றும் பிரௌன்
D) சி.சி. நார்த்
விளக்கம்: “மனிதன் தன்னுடைய தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்ள உருவாக்கிய கருவி பண்பாடு” என்று கூறியவர் சி.சி.நார்த் ஆவார்.
20) “ஒருவர் தம் குணங்களை நிரப்புவதிலும், தம்மைச் சூழ்ந்த சமுதாயத்தில் நலன்களைப் பேணுவதிலும் பேரவா கொண்டிருக்கும் நிலை பண்பாடாகும்” என்று கூறியவர் யார்?
A) மேத்யூ ஆர்னால்டு
B) மாலினோசுக்கி
C) ஆடம்சன் ஓபல்
D) கே.எம். முன்சி.
விளக்கம்: “ஒருவர் தம் குணங்களை நிரப்புவதிலும், தம்மைச் சூழ்ந்த சமுதாயத்தில் நலன்களைப் பேணுவதிலும் பேரவா கொண்டிருக்கும் நிலை பண்பாடாகும்” என்று கூறியவர் மேத்யூத் ஆர்னால்டு ஆவார்.
21) “பண்பாடு என்பது மக்களால் ஆக்கப்பெற்ற கருவி. இந்த ஊடகத்தைக் கொண்டே மக்கள் அவர்களின் தேவைகளை நிறைவு செய்து கொள்கின்றனர்” என்று கூறியவர் யார்?
A) மேத்யூ ஆர்னால்டு
B) மாலினோசுக்கி
C) ஆடம்சன் ஓபல்
D) கே.எம். முன்சி.
விளக்கம்: “பண்பாடு என்பது மக்களால் ஆக்கப்பெற்ற கருவி. இந்த ஊடகத்தைக் கொண்டே மக்கள் அவர்களின் தேவைகளை நிறைவு செய்து கொள்கின்றனர்” என்று கூறியவர் மாலினோசுக்கி.
22) “பண்பாடு என்பது மக்கள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து செயற்படும்போது உண்டாகும் நடத்தை முறைகளின் சேர்மமாகும். இஃது, அந்தந்தச் சமூகத்திற்கு மட்டுமே உரியது. உயிரியல் நிலையில் மரபுரிமையாக வராதது” என்று கூறியவர் யார்?
A) மேத்யூ ஆர்னால்டு
B) மாலினோசுக்கி
C) ஆடம்சன் ஓபல்
D) கே.எம். முன்சி.
விளக்கம்: “பண்பாடு என்பது மக்கள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து செயற்படும்போது உண்டாகும் நடத்தை முறைகளின் சேர்மமாகும். இஃது, அந்தந்தச் சமூகத்திற்கு மட்டுமே உரியது. உயிரியல் நிலையில் மரபுரிமையாக வராதது” என்று கூறியவர் ஆடம்சன் ஓபல்.
23) “பண்பாடு என்பது, சீரிய வாழ்வுமுறை, இவ்வாழ்வுமுறை, மக்கள் நம்பிக்கை வைத்துள்ள அடிப்படை மதிப்பீடுகளினால் ஊக்குவிக்கப்படுகிறது” என்று கூறியவர் யார்?
A) மேத்யூ ஆர்னால்டு
B) மாலினோசுக்கி
C) ஆடம்சன் ஓபல்
D) கே.எம். முன்சி.
விளக்கம்: “பண்பாடு என்பது, சீரிய வாழ்வுமுறை, இவ்வாழ்வுமுறை, மக்கள் நம்பிக்கை வைத்துள்ள அடிப்படை மதிப்பீடுகளினால் ஊக்குவிக்கப்படுகிறது” என்று கூறியவர் கே.எம்.முன்சி ஆவார்.
24) “தனிச் சிறப்புக்கூறுகள் நிறைந்த, தனி இனச் சமுதாயத்தினரின் பண்புகளே பண்பாடு எனக் குறிப்பிடத்தக்கனவாகும்” என்பது யாருடைய கருத்து?
A) ரூத் பெனிடிக்ட்
B) பிரௌன்
C) அமெரிக்க மானிடவியலாளர்கள்
D) கே.எம். முன்சி
விளக்கம்: “தனிச் சிறப்புக்கூறுகள் நிறைந்த, தனி இனச் சமுதாயத்தினரின் பண்புகளே பண்பாடு எனக் குறிப்பிடத்தக்கனவாகும்” என்பது அமெரிக்க மானிடவியலாளர்களின் கருத்து ஆகும்.
25) “காலக் கண்ணாடிகள்” எனச் சிறப்பித்துக் கூறப்படுபவை எவை?
A) இலக்கியங்கள்
B) தொல்பொருள்
C) அயல்நாட்டுக் குறிப்புகள்
D) அனைத்தும்
விளக்கம்: ஒவ்வொரு காலகட்டத்திலும் நடந்த நிழ்வுகளை அறிந்துகொள்ள இலக்கியங்கள் துணைபுரிகின்றன. அதனால்தான் அவை, காலக் கண்ணாடிகள் எனச் சிறபித்துக் கூறப்பெறுகின்றன.
26) நம் பண்பாட்டுக் கூறுகளின் சிறந்த வாயில்களாக அமைந்துள்ளவை எவை?
A) இலக்கியங்கள்
B) தொல்பொருள்
C) அயல்நாட்டுக் குறிப்புகள்
D) அனைத்தும்
விளக்கம்: நம் பண்பாட்டுக் கூறுகளின் சிறந்த வாயில்களாக அமைந்துள்ளவை இலக்கியங்கள் ஆகும்.
27) “மனித வாழ்க்கையைப் பிரதிபலித்துக்காட்டும் காலக் கண்ணாடியே இலக்கியம், ஆதலால், காலத்தின் கோலத்தை அந்தந்தக் கால இலக்கியங்களில் காணலாம்” – இவ்வாறு கூறியவர் யார்?
A) கே.எம். முன்ஷி
B) ஆடம்சன் ஓபல்
C) சி.சி. நார்த்
D) ஜி.இ. டெரெவெலியான்
விளக்கம்: “மனித வாழ்க்கையைப் பிரதிபலித்துக்காட்டும் காலக் கண்ணாடியே இலக்கியம், ஆதலால், காலத்தின் கோலத்தை அந்தந்தக் கால இலக்கியங்களில் காணலாம்” – ஜி.இ. டெரெவெலியான்.
28) இலக்கியச் சான்றுகளை எத்தனைப் பிரிவுகளாகப் பகுத்துக் காணலாம்?
A) 6
B) 8
C) 4
D) 5
விளக்கம்: இலக்கியச் சான்றுகளை 8 பிரிவுகளாகப் பகுத்துக் காணலாம். அவை,
1. வேதங்கள்
2. இதிகாசங்கள்
3. தரும சாத்திரங்கள்
4. பௌத்த சமய இலக்கியங்கள்
5. சமண நூல்கள்
6. தனி இலக்கியங்கள்
7. நாட்டுப்புற இலக்கியங்கள்
8. புராணங்கள்.
29) இலக்கியச் சான்றுகளில் மிகவும் தொன்மை வாய்ந்தவை எவை?
A) இதிகாசங்கள்
B) சமண நூல்கள்
C) வேதங்கள்
D) தரும சாத்திரங்கள்
விளக்கம்: இலக்கியச் சான்றுகளில் மிகவும் தொன்மை வாய்ந்தவை வேதங்கள். ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய 4 வேதங்களும் அக்காலத்தில் பின்பற்றப்பட்ட சடங்குகள், முறைகள் ஆகியவற்றை விளக்கியுள்ளன.
30) எவை ஆரியர்களின் வழிபாடு, நம்பிக்கைகள் பற்றியும் ஆரண்யங்கள், உபநிடதங்கள் முதலியன அக்கால ஞானிகள், துறவிகள் ஆகியோரின் தத்துவப் பார்வை பற்றியும் எடுத்துரைக்கின்றன?
A) வேதங்கள்
B) பிராமணங்கள்
C) A மற்றும் B
D) புராணம்
விளக்கம்: இவை வானநூல், மருத்தும், மொழிநூல் போன்றவற்றில் அவர்கள் பெற்றிருந்த செல்வாக்கைப் பற்றியும் கூறுகின்றன. வேள்விகளின் வகைகளையும், இல்லற, துறவறத்தாரின் வாழ்க்கை நெறிமுறைகளையும் நன்கு விவரிக்கின்றன.
31) இந்தியாவின் இருபெரும் இதிகாசங்கள் எவை?
A) சிலப்பதிகாரம், இராமாயணம்
B) மணிமேகலை, இராமாயணம்
C) மகாபாரதம், இராமாயணம்
D) மகாபாரதம், மணிமேகலை
விளக்கம்: இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களாக இராமாயணமும், மகாபாரதமும் விளங்குகின்றன. இவற்றின் வாயிலாக நாடோடிகளாக வாழ்ந்த ஆரியர்கள், தங்களுக்கெனக் குடியிருப்புகளை ஏற்படுத்திக் கொண்டு வாழ்ந்தமையை அறிய முடிகிறது.
32) ‘நான்கு வருணமுறை’ எப்போது தோன்றியது?
A) முன்வேதக் காலம்
B) பின்வேதக்காலம்
C) புதிய கற்காலம்
D) எதுவுமில்லை
விளக்கம்: பின்வேத காலத்தில் தோன்றிய ‘நான்கு வருணமுறை’ இதிகாசக் காலத்தில் வலிமை பெற்றன.
33) மனு, யஜ்ன வல்கியர், விஷ்ணு பிரகஸ்பதி, நாரதர் ஆகியோர் எழுதியவற்றை எவ்வாறு அழைக்கிறோம்?
A) தனி இலக்கியம்
B) இதிகாசம்
C) தரும சாத்திரம்
D) இலக்கியம்
விளக்கம்: வரலாற்றுச் சான்றுகளாகவும், பண்பாட்டுச் சான்றுகளாகவும், தரும சாத்திரங்கள் விளங்குகின்றன. மனு, யஜ்ன வால்கியர், விஷ்ணு, பிரகஸ்பதி, நாரதர் ஆகியோர் எழுதியவற்றையே தரும சாத்திர நூல்கள் என்கிறோம். இந்நூல்களின் வாயிலாக நீதி, தண்டனை வழங்கப்பட்ட முறைகள், அக்காலச் சட்டத்திட்டங்கள், சமுதாய அமைப்புக்கேற்ற நெறிமுறைகள் ஆகியவற்றை அறியமுடிகிறது.
34) பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் எத்தனை நூல்கள் அறக்கருத்துகளை வலியுறுத்துகின்றன?
A) 9
B) 10
C) 11
D) 12
விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் 11 நூல்கள் அறக்கருத்துகளை வலியுறுத்துகின்றன. “உலப் பொதுமறை” என அனைவராலும் போற்றப்படும் ‘திருக்குறள்’ எக்காலத்துக்கும் ஏற்புடையதாய் உலக மக்களின் வாழ்வியலுக்கு உகந்த அறநெறிகளை எடுத்துரைக்கிறது.
35) ‘நாலடியார்’ யாரால் இயற்றப்பட்டது?
A) ஆழ்வார்கள்
B) நாயன்மார்கள்
C) சேக்கிழார்
D) சமணமுனிவர்
விளக்கம்: சமணமுனிவர்களால் பாடப்பெற்ற ‘நாலடியார்’ என்னும் நூல் அறக்கருத்துக்களை வெளிப்படுத்துகிறது. இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். அறநெறிச்சாரம் என்னும் நூல் பண்பாட்டுக் கருத்துக்களைப் புலப்படுத்துகிறது.
36) பின்பற்றத்தக்க பண்பாட்டுக் கூறுகளை எளிய ஓரடிப் பாடலாக வெளிப்படுத்தும் ஒளவையாரின் நூல் எது?
A) ஆத்திச்சூடி
B) மூதுரை
C) நன்னூல்
D) A மற்றும் B
விளக்கம்: ஒளவையாரின் நீதி நூல்களுள் ஆத்திச்சூடி குறிப்பிடத்தக்கது. பின்பற்றத்தக்க பண்பாட்டுக் கூறுகளை எளிய ஓரடிப் பாடலாக வெளிப்படுத்துகிறது. அவருடைய பிற நீதிநூல்கள், வாழ்வில் போற்ற வேண்டிய அறநெறிகளை வலியுறுத்துகின்றன.
37) பௌத்த சமய இலக்கியங்கள் எந்த மொழியில் எழுதப்பட்டவை?
A) பாலி
B) பிராகிருதம்
C) A மற்றும் B
D) தமிழ்
விளக்கம்: புத்தரின் அறிவுரைகளையும் கருத்துக்களையும் எடுத்துரைப்பவை பௌத்த சமய இலக்கியங்களாகும். பாலி, பிராகிருதம் ஆகிய மொழிகளில் இவை எழுதப்பட்டுள்ளன.
38) பௌத்த சமய நூல்கள் எத்தனை பிரிவாக உள்ளன?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: பௌத்த சமய நூல்கள் முப்பிரிவாக உள்ளன. அவை
- சுத்த பீடகம்
- விநய பீடகம்
- அபிதம்ம பீடகம்.
39) பொருத்துக.
அ. சுத்த பீடகம் – 1.புத்தரின் அறிவுரைகள்
ஆ. விநய பீடகம் – 2. ஞான ஒழுக்க முறைகள்
இ. அபிதம்ம பீடகம் – 3. புத்தரின் தத்துவங்கள்
A) 3, 2, 1
B) 2, 3, 1
C) 1, 3, 2
D) 1, 2, 3
விளக்கம்: சுத்த பீடகம்: புத்தரின் அறிவுரைகளைக் கூறுகிறது.
விநய பீடகம்: பௌத்த துறவிகளுக்கான சட்டத்திட்டங்கள் ஞான ஒழுக்க முறைகள் ஆகியவற்றைப் பற்றிக் கூறுகிறது.
அபிதம்ம பீடகம்: புத்தரின் தத்துவங்களை கூறுகிறது.
40) அபிதம்ம பீடகம், புத்தரின் தத்துவங்களை மிகச்சிறந்த முறையில் எத்தனை படலங்களில் விரித்துரைக்கிறது?
A) 6
B) 5
C) 11
D) 7
விளக்கம்: அபிதம்ம பீடகம், புத்தரின் தத்துவங்களை மிகச் சிறந்த முறையில் ஏழு படலங்களில் விரித்துரைக்கிறது. மலிந்தபன்ஹா, லலிதவிஸ்தரா, வைபுல்ய சூத்திரங்கள், நேத்திபிரகர்ணம், பேதக உபதேசம் போன்றவை சில புத்த சமய நூல்களாகும். தமிழ்நாட்டில் பௌத்த சமயம் பரவியிருந்ததை மணிமேகலை முதலான காப்பியங்கள் வாயிலாக அறியலாம்.
41) ‘ஆகம சித்தாந்தங்கள்’ என்ற அழைக்கப்படும் நூல் எது?
A) பௌத்த சமய இலக்கியம்
B) இதிகாசம்
C) தனி இலக்கியம்
D) சமண நூல்கள்
விளக்கம்: சமண நூல்கள், ஆகம சித்தாந்தங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை அங்கங்களாகப் பகுக்கப்பட்டுச் சமண சமயக் கோட்பாடுகளை விளக்குகின்றன.
42) சமண சமயம் எத்தனை பிரிவுகளாக உள்ளது?
A) 2
B) 3
C) 4
C) 5
விளக்கம்: சமண சமயம் சுவேதாம்பரர், திகம்பரர் என இரு பிரிவாகப் பிரிந்தாலும் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த நூல்கள் தோன்றின. தமிழில் எழுதப்பட்ட சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம் முதலான பல்வேறு காப்பியங்களும் இலக்கண நூல்களும் சமணத்தின் தத்துவங்களை அறிய உதவுகின்றன.
43) 67 வகை உணவுகள் பற்றிய குறிப்புகள் எந்த நூலில் காணப்படுகிறது?
A) அகநானூறு
B) புறநானூறு
C) ஐங்குறுநூறு
D) ஏலாதி
விளக்கம்: 10 வகை ஆடைகள், 28 வகை அணிகலன்கள், 67 வகை உணவுகள் பற்றிய குறிப்புகள் புறநானூற்றில் காணப்படுகிறது. மேலும், கடையெழு வள்ளல்களின் கொடைத்திறம், பாணர், விறலியர், கூத்தர் போன்றோரின் கலைத்திறத்தையும் வெளிப்படுத்துகிறது.
44) பாரதப்போரின்போது, உதியன் சேரலாதன் என்னும் மன்னன், வீரர்களுக்கு உணவு கொடுத்த செய்தியை கூறும் நூல் எது?
A) அகநானூறு
B) புறநானூறு
C) ஐங்குறுநூறு
D) ஏலாதி
விளக்கம்: பாரதப்போரின்போது, உதியன் சேரலாதன் என்னும் மன்னன், வீரர்களுக்கு உணவு கொடுத்த செய்தியை கூறும் நூல் புறநானூறு ஆகும்.
45) ‘உடன்கட்டை ஏறல்’ பற்றியக் குறிப்பு எந்த நூலில் காணப்படுகிறது?
A) அகநானூறு
B) புறநானூறு
C) ஐங்குறுநூறு
D) ஏலாதி
விளக்கம்: இறந்தவரைத் தாழியில் வைத்துப் புதைத்தல், நடுகல், கணவர் இறப்பிற்குப் பின் மங்கையர் அணிகலன்களைக் களைதல், கைம்மை நோன்பு நோற்றமை, உடன்கட்டை ஏறல் பற்றியக் குறிப்புகள் புறநானூற்றில் காணப்படுகிறது.
46) தமிழர் திருமண முறைகளைப் பற்றி குறிப்பிடும் நூல் எது?
A) அகநானூறு
B) புறநானூறு
C) ஐங்குறுநூறு
D) நற்றிணை
விளக்கம்: எட்டுத்தொகையுள் ஒன்றான அகநானூற்றின் வாயிலாகத் தமிழர் திருமண முறைகளைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது.
47) ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் பொதுமை நோக்கத்தைக் குறிப்பிடும் நூல் எது?
A) அகநானூறு
B) புறநானூறு
C) ஐங்குறுநூறு
D) நற்றிணை
விளக்கம்: ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் பொதுமை நோக்கத்தைக் குறிப்பிடும் நூல் புறநானூறு ஆகும்.
48) ‘அன்பின் சிறப்பைப்’ பற்றிக் கூறும் நூல் எது?
A) அகநானூறு
B) புறநானூறு
C) ஐங்குறுநூறு
D) நற்றிணை
விளக்கம்: ‘அன்பின் சிறப்பைப்’ பற்றிக் கூறும் நூல் ஐங்குறுநூறு ஆகும்.
49) இல்லற வாழ்வில் மேற்க்கொள்ள வேண்டிய விருந்தோம்பும் பண்பு, பெரியோரை மதித்தல், வறுமையிலும், செம்மை போன்ற பண்புகளைப் பற்றிக் கூறும் நூல் எது?
A) அகநானூறு
B) புறநானூறு
C) ஐங்குறுநூறு
D) நற்றிணை
விளக்கம்: இல்லற வாழ்வில் மேற்க்கொள்ள வேண்டிய விருந்தோம்பும் பண்பு, பெரியோரை மதித்தல், வறுமையிலும், செம்மை போன்ற பண்புகளைப் பற்றி நற்றிணை குறிப்பிடுகிறது.
50) ‘மார்கழி நோன்பு’ குறித்த செய்திகளைக் கூறும் நூல் எது?
A) அகநானூறு
B) புறநானூறு
C) கலித்தொகை
D) A மற்றும் B
விளக்கம்: மார்கழி நோன்பு குறித்த செய்திகளைக் கலித்தொகை குறிப்பிட்டுள்ளது.
51) ‘ஏட்டில் எழுதா இலக்கியங்கள்’ எனப்படுபவை எவை?
A) தனி இலக்கியம்
B) சமண நூல்
C) பௌத்த நூல்
D) நாட்டுப்புற இலக்கியம்
விளக்கம்: ஏட்டில் எழுதா இலக்கியங்கள் எனப் போற்றப்படுபவை நாட்டுப்புற இலக்கியங்களாகும். இவை, ஒரு நாட்டு மக்களின் வரலாறு, நாகரீகம், பண்பாடு, பழக்கவழங்கள் போன்றவற்றை எடுத்தியம்புகின்றன.
52) ‘இலக்கியங்கள், காலங்காட்டும் கண்ணாடிகளாக விளங்க, நாட்டுப்புற இலக்கியங்கள் சமுதாய வளர்ச்சியைக்காட்டும் கண்ணாடிகளாக விளங்குகின்றன’ எனக் கூறியவர் யார்?
A) சு.சக்திவேல்
B) நா. பிச்சமூர்த்தி
C) சி.மணி
D) சி.சு.செல்லப்பா
விளக்கம்: ‘இலக்கியங்கள், காலங்காட்டும் கண்ணாடிகளாக விளங்க, நாட்டுப்புற இலக்கியங்கள் சமுதாய வளர்ச்சியைக்காட்டும் கண்ணாடிகளாக விளங்குகின்றன’ என்ற பேராசிரியர் சு.சக்திவேல் தமது ‘நாட்டுப்புற இயல் ஆய்வு’ என்னும் நூலில் கூறுகிறார்.
53) நாட்டுப்பறவியலைக் குறிக்கும் Folklore என்ற சொல்லை வில்லியம் ஜான் தாமசு என்பவர் எப்போது உருவாக்கினார்?
A) 1846
B) 1946
C) 1976
D) 1856
விளக்கம்: ‘பழங்கால பண்பாட்டின் எச்சம் (Cultural Survival) நாட்டுப்புறவியல்’ என்பது அவரது கருத்தாகும். நாட்டுப்புற இலக்கியங்கள், மக்களின் நம்பிக்கைகள், தெய்வ வழிபாடுகள், திருவிழாக்கள், விளையாட்டுகள், மருத்துவ முறைகள் முதலானவற்றை அறிந்துகொள்ள உதவுகின்றன. இவ்வகை இலக்கியங்களில் பாடல்கள், கதைகள், கதைப்பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள், புராணக்கதைகள் போன்றவையும் அடங்கும். இவையாவும் பண்பாட்டுச் சிறப்புகளை வெளிப்படுத்துகின்றன.
54) பாமரர் பாடல்களைக் குறிக்கும் ‘பண்ணத்தி’ என்ற சொல்லை குறிப்பிடுபவர் யார்?
A) தொல்காப்பியர்
B) திருவள்ளுவர்
C) கம்பர்
D) கபிலர்
விளக்கம்: தொல்காப்பியர் குறிப்பிடும் ‘பண்ணத்தி’ என்பது பாமரர் பாடல்களைக் குறித்தது. பழமையான பாடல்களிலுள்ள பொருளையே தனக்கானப் பாடுபொருளாகக் கொண்டு பாட்டும் உரையும் போன்று செய்யப்படுவனவற்றைப் பண்ணத்தி என்றனர்.
55) பண்ணத்தி – பிரித்தெழுதுக.
A) பண்+பத்தி
B) பண்ணு+அத்தி
C) பண்+அத்தி
D) பண்+நத்தி
விளக்கம்: பண்+நத்தி=பண்ணத்தி என்பது பண்ணை விரும்புவது எனப் பொருள்படும் (பண்-பாடல்). மக்களின் வாழ்க்கையில் தாலாட்டுப் பாடல்கள் முதல் ஒப்பாரிப் பாடல் வரை அனைத்து நிகழ்வுகளும் நாட்டுப்புறப் பாடல்களில் எதிரொலிக்கின்றன.
56) “சந்திரரே சூரியரே……” எனத் தொடங்கும் பாடல் எவ்வகைப் பாடல்?
A) நாட்டுப்புறப் பாடல்
B) தனிப்பாடல்
C) சிலேடை
D) எதுவுமில்லை.
விளக்கம்: ‘சந்திரரே சூரியரே
சாமி பகவானே
இந்திரரே வாசுதேவா
இப்ப மழை பெய்யவேணும்
மந்தையிலே மாரியாயி
மலைமேல மாயவரே
இந்திரரே சூரியரே
இப்ப மலை பெய்யவேணும்’ = என்ற நாட்டுப்புற பாடல், மக்கள் இயற்கையைத் தெய்வமாகப் போற்றியுள்ளார் என்பதை உணர்த்துகிறது.
57) ‘பிள்ளை பதினாறும் பெற்றல்
பெருவாழ்வு வாழ்ந்திருங்கள்
………………………’ என்ற பாடல் எவ்வகை பாடல்?
A) திருமணப் பாடல்
B) தாலாட்டுப்பாடல்
C) ஒப்பாரிப்பாடல்
D) திருவிழாப்பாடல்
விளக்கம்: ‘ பிள்ளை பதினாறும் பெற்றுப்
பெருவாழ்வு வாழ்ந்திருங்கள்
மக்கள் பதினாறும் பெற்று
மங்களமாய் வாழந்திருங்கள்
ஆல்போல் தழைத்து
அருகுபோல் வேரூன்றி
நலமுடனே எல்லாரும்
ஞானமுடன் வாழந்திடுவீர்’ என்ற பாடல் திருமண நிகழ்வொன்றில் பாடப்படும் பாடலாகும். இவ்வாறு மக்களின் வாழ்வில் ஒவ்வொரு நிகழ்விலும் பாடப்படும் நாட்டுப்புறப் பாடல்கள், அவர்களின் பண்பாட்டுச் சிந்தனைகளை வெளிப்படுத்துகின்றன.
58) எது ஒரு கதைக்களஞ்சியமாக திகழ்கிறது?
A) இந்தியா
B) தமிழ்நாடு
C) இலங்கை
D) குமரி
விளக்கம்: இந்திய நாட்டில் பல்வேறு இடங்களில் வாழ்ந்த தொல்பழங்குடிமக்கள், உலகத்தைப் பற்றியும் உலகத்தோற்றத்தைப் பற்றியும் கதைகளாகப் புனைந்துள்ளனர். இவையே காலப்போக்கில் கற்பனைக் கதைகளாகவும், இதிகாசங்களாகவும், புராணங்களகாவும் தோற்றம் பெற்றன. பழங்காலச் சமுதாயத்தை அறிய இவ்வகைக் கதைகள் நமக்கு உதவுகின்றன. எனவே இந்தியா ஒரு கதைக்களஞ்சியமாக திகழ்கிறது.
59) ‘பொருள் மரப்பில்லாப் பொய்ம்மொழி யானும் பொருளோடு புணர்ந்த நகைமொழி யானும்’ என்ற பாடல் இடம்பெற்ற நூல் எது?
A) திருக்குறள்
B) நாலடியார்
C) தொல்காப்பியம்
D) கலித்தொகை
விளக்கம்: ‘பொருள் மரப்பில்லாப் பொய்ம்மொழி யானும் பொருளோடு புணர்ந்த நகைமொழி யானும்’ என்னும் தொல்காப்பிய நூற்பா, பழங்காலத்திலேயே கதைகள் வழக்கிலிருந்தன என்பதைச் சுட்டுகிறது.
60) இளம் வயதில் தம் தாயிடம் கேட்ட கதைகள் மூலமே தான் சிறந்த வீரராக உருப்பெற்றவர் யார்?
A) ராஜராஜ சோழன்
B) போதிதர்மர்
C) இளங்கோவடிகள்
D) சிவாஜி
விளக்கம்: பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்ட கதைகள், வளரும் குழந்தைகளுக்கு நன்னெறி ஊட்டுவதற்காக, நீதிக்கதைகளாகவும் தோற்றம் பெற்றன. மராட்டிய வீரர் சிவாஜி, இளம்வயதில் தம் தாயிடம் கேட்ட கதைகள் மூலமே தான் சிறந்த வீரராக உருவாக உதவின.
61) யார் தம் இளம்வயதில் கேட்ட அரிச்சந்திரன் கதையே அவர்தம் வாழ்நாள் முழுவதும் வாய்மையைக் கடைபிடிக்க உதவியது?
A) காந்தி
B) நேரு
C) படேல்
D) நேதாஜி
விளக்கம்: அண்ணல் காந்தியடிகள், தம் இளம்வயதில் கேட்ட அரிச்சந்திரன் கதையே அவர்தம் வாழ்நாள் முழுவதும் வாய்மையைக் கடைபிடிக்க உதவியது. விக்கிரமாதித்தன் கதைகள், பஞ்ச தந்திரக் கதைகள், மரியாதை ராமன் கதைகள், தெனாலிராமன் கதைகள், இராயர் அப்பாஜி கதைகள், புத்தர் ஜாதகக் கதைகள், அக்பர் பீர்பால் கதைகள், மதன காமராசன் கதைகள் நாட்டுப்புறக் கதைகளாகும்.
62) காப்பியங்கள் தோன்றுவதற்கு மூலக்காரணமாக அமைந்துள்ள பாடல்கள் எவை?
A) கதைப்பாடல்கள்
B) இசைப்பாடல்கள்
C) புராணங்கள்
D) எதுவுமில்லை
விளக்கம்: காப்பியங்கள் தோன்றுவதற்கு மூலக்காரணமாக கதைப்பாடல்கள் அமைந்துள்ளன. இதிகாசத் துணுக்குகள் கிராம தேவதைகளின் கதைகள், சமூகக் கதைகள், வரலாற்றுக் கதைகள் ஆகியன கதைப்பாடல்களாக இடம்பெறுகின்றன. கதையைப் பாடலாகப் பாடுவதே கதைப்பாடல். குறிப்பிட்டதொரு பண்பாட்டில், குறிப்பிட்டதொரு சூழலில் ஒரு பாடகரோ, ஒரு குழுவினரோ சேர்ந்து மக்கள்முன் எடுத்துரைத்து இசையுடன் நிகழ்த்துகின்ற பாடலே கதைப்பாடலாகும். இவ்வகைக் கதைப்பாடல், ஒரு கதையைக்கொண்டோ, பல உள்கதைக்கொண்டோ அமையலாம். இப்பாடல்கள், மக்களின் பேச்சுவழக்கிலேயே அமைந்திருந்தன.
63) கதைப்பாடலுக்குத் தமிழில்________என்றும் பெயருண்டு?
A) சிற்றில்
B) சிறுபறை
C) சிறுதேர்
D) அம்மானை
விளக்கம்: கதைப்பாடலுக்குத் தமிழில் ‘அம்மானை’ என்றும் பெயருண்டு.
64) எந்த நூலில் ‘அம்மானை’ என்ற சொல் முதன்முதலாகக் கையாளப்பட்டுள்ளது?
A) தொல்காப்பியம்
B) சிலப்பதிகாரம்
C) மணிமேகலை
D) அகத்தியம்
விளக்கம்: சிலப்பதிகாரத்தில் ‘அம்மானை’ என்ற சொல் கையாளப்பட்டுள்ளது.
65) கதைப்பாடல் எத்தனை பகுதிகளைக் கொண்டுள்ளது?
A) 2
B) 3
C) 4
D) 6
விளக்கம்: கதைப்பாடல் 4 பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை காப்பு அல்லது வழிபாடு, வணக்கம், வரலாறு மற்றும் வாழி.
66) நடந்த நிகழ்வைக் கதைப்பாடலாகப் பாடுவது எது?
A) காப்பு
B) வணக்கம்
C) வரலாறு
D) வாழி
விளக்கம்: காப்பு அல்லது வழிபாடு – இறைவனை வழிபட்டுப் பாடலைத் தொடங்குதல்.
குரு வணக்கம் – தனக்குப் பாடல் சென்ன குருவுக்கு வணக்கம் செய்து பாடுவது.
வரலாறு – நடந்த நிகழ்வைக் கதைப்பாடலாகப் பாடுவது.
வாழி – இறுதியாகக் கதை கேட்போரும் மற்றோரும் கடவுளர் அனைவரின் அருளும் பெற்று வாழ்க என வாழ்த்துவது.
67) கூற்றுகளை ஆராய்க.
1. காப்பு அல்லது வழிபாடு, குரு வணக்கம், வரலாறு, வாழி ஆகியவை நாட்டுப்புறக் கதைப்பாடல்களில் இடம்பெறுகின்றன.
2. முத்துப்பாட்டன் கதை, நல்லத்தங்காள் கதை, காத்தவராயன் கதைப்பாடல், வீரபாண்டியக் கட்டபொம்மு பாடல், பஞ்சு பாண்டவர் வனவாசம், கான்சாகிபு சண்டை, சுடலை மாடன் கதை, வில்லுப்பாட்டு போன்றவை சில வரலாற்றுக் கதைப்பாடல்களாகும்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: மேலும் கதைப்பாடல்களில் அக்காலச் சமுதாயநிலை புலப்படுகிறது. பழங்குடி மக்களின் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை அறிந்துகொள்ள முடிகிறது. மாந்தரின் உயர்ந்த பண்பாட்டுக் கூறுகளையும், சமூகத்தின் சீர்கேடுகளையும் இப்பாடல்கள் விளக்குகின்றன. இவை, வீரகாவியங்களாக சித்தரிக்கப்படுகின்றன. இப்பாடல்களில் இடம்பெறும் கதைப்பாடல்கள், இறந்த பிறகு தெய்வங்களாகப் போற்றப்படுகின்றன.
68) மக்களின் பண்பாட்டு உயர்வைக் கணக்கிட்டுக்காட்டும் அளவுகோளாக விளங்குவது எது?
A) கதைப்பாடல்கள்
B) பழமொழிகள்
C) நாட்டுப்புறபாடல்கள்
D) புராணங்கள்
விளக்கம்: தொன்மைக்காலம் முதல் வழங்கிவரும் பழமொழிகள் மக்களின் பண்பாட்டு உயர்வைக் கணக்கிட்டுக்காட்டும் அளவுகோளாக விளங்குகின்றன. மக்களைக் கட்டுக்கோப்பாக வைப்பதற்கு இக்காலத்தில் அறநூல்களும் சட்டத்திட்டங்களும் உள்ளன. ஆனால் இவை எதுவுமே இல்லாத தொன்மைக் காலத்தில், கட்டுக்கோப்பான நன்னெறியில் மக்களை வாழவைப்பதற்குப் பழமொழிகளே அடிப்படையாக அமைந்தன.
69) சமூகப் பண்புகளுள் தலைசிறந்தது எது?
A) கொடை
B) வீரம்
C) பண்பு
D) ஒழுக்கம்
விளக்கம்: சமூகப் பண்புகளுள் தலைசிறந்தது ஒழுக்கமாகும். சமுதாயத்தில் மக்கள் நல்லொழுக்கத்துடன் வாழவேண்டும் என்பதை, ‘ஒழுக்கம் உயர்வுதரும், ஒழுக்கம் உயர்குலத்தினும் உயர்வு’ போன்ற பழமொழிகள் உணர்த்துகின்றன.
70) ‘பழுத்தமரமும் செழித்தசெல்வமும் பசியற்றவே’ என்னும் பழமொழி உணர்த்துவது எதை?
A) ஒழுக்கம்
B) உதவி
C) விருந்தோம்பல்
D) A மற்றும் B
விளக்கம்: பிறருக்கு கொடுத்து உதவவேண்டும் என்ற நற்பண்பினைப் ‘பழுத்தமரமும் செழித்தசெல்வமும் பசியற்றவே’ என்னும் பழமொழி உணர்த்துகிறது.
71) ‘அன்போடு அளிக்கும் கஞ்சி அறுசுவை உணவை மிஞ்சும்’ என்ற பழமொழி எதை உணர்த்துகிறது?
A) ஒழுக்கம்
B) உதவி
C) விருந்தோம்பல்
D) A மற்றும் B
விளக்கம்: விருந்தோம்பலின் பண்பை, அன்போடு அளிக்கும் கஞ்சி அறுசுவை உணவை மிஞ்சும்’ என்ற பழமொழி விளக்குகிறது.
72) பொருந்தாத பழமொழியைத் தேர்வு செய்க.
A) கெடுவான் கேடு நினைப்பான்
B) தினை விதைத்தவன் தினை அறுப்பான். வினை விதைத்தவன் வினை அறுப்பான்
C) முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
D) உப்பிட்டவரை உள்ளளவும் நினை
விளக்கம்: முதல் 3 பழமொழிகளும் நல்லெண்ணம் கொண்டு, அறநெறியில் வாழவேண்டியதன் தேவையை எடுத்துரைக்கிறது. ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்பது உண்பதற்கு முன் இலையில் உப்பு இடுவதும், உண்ட வீட்டுக்கு இரண்டகம் (தீங்கு) செய்யக்ககூடாது என்றும் உணர்த்துகிறது.
73) ‘கரும்பு கட்டோடு இருந்தால், எறும்பால் ஒன்றும் செய்ய இயலாது’ என்ற பழமொழி உணர்த்துவது எதை?
A) ஒற்றுமை
B) வீரம்
C) அவலம்
D) சுவை
விளக்கம்: “சோற்றுக்குமுன் உப்பு, பேச்சுக்குமுன் பழமொழி” என்பது பழங்கால வழக்கில் இருந்தது. அக்காலத்தில் பஞ்சாயத்துகளில் ஊர்த்தலைவர் பழமொழியைச் சொல்லிவிட்டுத்தான் வழக்கு பற்றி ஆராயத் தொடங்குவார். அண்ணன், தம்பிக்குள் ஏதேனும் சிக்கல் என ஒரு வழக்கை ஆராயத் தொடங்கும் முன், “கரும்பு கட்டோடு இருந்தால், எறும்பால் ஒன்றும் செய்ய இயலாது” என்று சொல்லிவிட்டுத்தான் பேசத் தொடங்குவாராம். இதனால், தங்களுக்குள் அண்ணன் தம்பிகள் மனந்திருந்தி, ஒற்றுமையுடன் வாழ்வதற்குப் பழமொழியே துணை செய்வதாய் அமைந்திருந்தது.
74) கூற்றுகளை ஆராய்க.
1. சிறந்த கருத்தைச் சொல்வது பழமொழி.
2. உயர்ந்த பண்பாட்டை வலியுறுத்துவது பொன்மொழி.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு.
விளக்கம்: பழமொழியும் பொன்மொழியும் வெவ்வேறானவை. சிறந்த கருத்தைச் சொல்வது பொன்மொழி, உயர்ந்த பண்பாட்டை வலியுறுத்துவது பழமொழி. பழமொழியிலும், எதுகை, மோனை நயங்கள் உள்ளதால், அவை கேட்போர் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிடுகின்றன.
75) நம் நாட்டுப் பண்பாட்டுக்குச் சிறப்புச் சேர்ப்பது எப்பண்பு?
A) விருந்தோம்பல்
B) தாம்பல்
C) பெரியோரை மதித்தல்
D) வீரம்
விளக்கம்: நம் நாட்டுப் பண்பாட்டுக்குச் சிறப்புச் சேர்ப்பது முதியோர்களை மதித்தல் என்னும் பண்பாகும். முதியோர் இருக்கும் வீட்டில் கலகம் ஏற்படாது என்றும் அவர்கள் குடும்ப ஒற்றுமையைப் பாதுகாப்பார்கள் என்றும் பழமொழிகளில் கூறப்பட்டுள்ளது. ‘மூத்தோர் சொல் முது நெல்லிக்கனி’ என்ற பழமொழி மூத்தோரை மதிக்க வேண்டும் என்னும் நல்ல பண்பாட்டை வலியுறுத்துகின்றது. ஆகவே, பழமொழிகள் நாட்டின் பண்பாட்டையும் நாகரீகத்தையும் வரலாற்றையும் உள்ளடக்கிய கருத்துக் கருவூலங்களாகத் திகழ்கின்றன.
76) வைதீக சமயத்தின் வளர்ச்சி, அதன் தத்துவங்கள் உருவ வழிபாடுகள், மூடநம்பிக்கைள், சாத்திரங்கள் போன்றவற்றை எதன் வாயிலாக அறியமுடிகிறது?
A) ஓவியம்
B) அகராதி
C) புராணங்கள்
D) செப்பேடுகள்
விளக்கம்: பண்டைய தொல்கதைகளையே புராணங்கள் என்கிறோம். இவை கற்பனை கலந்து இருந்தாலும், இந்தியப் பண்பாட்டை அறிந்துக் கொள்ள உதவுகின்றன. நம் நாட்டிலுள்ள கோவில்கள், அவற்றில் நடைபெறும் விழாக்கள், மக்கள் பின்பற்றும் நோன்புகள், சடங்குகள் ஆகிய யாவும் புராணங்களை அடிப்படையாகக் கொண்டவையே. வாயு புராணம், விஷ்ணு புராணம், மச்ச புராணம், பிரம்ம புராணம், பவிஷிய புராணம் முதலின அவற்றுள் சிலவாகும்.
77) “ஒவ்வொரு புராணமும் ஏதோ ஓர் உண்மையைக் கூற விழைகிறது” என்று குறிப்பிடுபவர் யார்?
A) ஈ.பி. டெய்லர்
B) மாக்ஸ்முல்லர்
C) கெல்லட்
D) பாரதி
விளக்கம்: “ஒவ்வொரு புராணமும் ஏதோ ஓர் உண்மையைக் கூற விழைகிறது” என்று கூறியவர் மாக்ஸ்முல்லர்.
78) “புராணக் கதைகள், தங்களை உருவாக்கிய மக்களைப் பற்றியும் பயன்படுத்துவோரைப் பற்றியும் கூறுகிறது” என்று கூறியவர் யார்?
A) ஈ.பி. டெய்லர்
B) மாக்ஸ்முல்லர்
C) கெல்லட்
D) பாரதி
விளக்கம்: புராணக் கதைகள், தங்களை உருவாக்கிய மக்களைப் பற்றியும் பயன்படுத்துவோரைப் பற்றியும் கூறுகிறது” என்ற கூறியவர் ஈ.பி. டெய்லர். புராணங்களில் இயற்கை கடந்த கதைகள் இடம்பெற்றன. கடவுளர்கள், தேவர்கள், விலங்குள், பறவைகள் ஆகிய பல்வேறு உயிரினங்களைப் பிணைத்து இயங்குகின்ற கதைகளே புராணங்கள் எனப்பட்டன. அறிவியல் வளர்ச்சியில்லாத காலத்தில் மாந்தர் எதிர்கொண்ட சிக்கல்கள், முரண்பாடுகள், இயற்கைமீது கொண்ட அச்சம் ஆகியவற்றுக்குத் தீர்வு காணும் கருவியாகப் புராணக் கதைகள் அமைந்தன.
79) பொருத்துக.
அ. வானம் – 1. இறப்பின் குறியீடு
ஆ. பூமி – 2. வாழ்வின் குறியீடு
இ. பௌர்ணமி – 3. பெண்
ஈ. அமாவாசை – 4. ஆண்
A) 4, 3, 2, 1
B) 4, 3, 1, 2
C) 3, 4, 2, 1
D) 3, 4, 1, 2
விளக்கம்: இயற்கையாக நடைபெறும் நிகழ்வுகளான சூரியக்கிரகணகம், சந்திரகிரகணம் போன்றவற்றைத் தங்கள் வாழ்வியல் அனுபவங்களின் அடிப்படையில் சிந்தித்துள்ளனர். வானத்தை ஆணாகவும், பூமியைப் பெண்ணாகவும், முழுநிலவை வாழ்வின் குறியீடாகவும், மதிமறைவை இறப்பின் குறியீடாகவும் கருதினர் புராணக்கால மக்கள்.
80) மழை மிகுதியாகப் பெய்யும்போது எது தோன்றினால் மழை நின்றுவிடும் எனப் புராணக்கதை கூறுகிறது?
A) சூரியக் கிரகணம்
B) சூரியன்
C) சந்திரக்கிரணம்
D) வானவில்
விளக்கம்: சூரியனையும், சந்திரனையும் பாம்பு தீண்டுவதால் கிரகணம் நிகழ்வதாகத் தென்மைக் கதை வழங்குகிறது. வானவில்லைக் கடவுளின் மந்திர வில்லாக கருதுகின்றனர். மழை மிகுதியாகப் பெய்யும்போது, இந்த மந்திர வில் தோன்றினால் மழை நின்றுவிடும் எனப் புராணக்கதைக் கூறுகிறது.
81) அறிவியல் காலத்துக்கு முற்பட்ட செய்திகளை அறிந்துக் கொள்வதோடு, சமூகப்பண்பாடு வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யவும் பயன்படுபவை எவை?
A) சிற்பங்கள்
B) ஓவியங்கள்
C) புராணங்கள்
D) செப்பேடுகள்
விளக்கம்: அனைத்து உயிரினங்களும் வெள்ளத்தால் அழிக்கப்பட்டுப் பின்னர், கடவுளால் மீண்டும் படைக்கப்பட்டன எனக் கருத்துருவாக்கம் உள்ள புராணக்கதைகள் உலகெங்கும் உள்ளன. நாட்டுப்புறத் தெய்வங்கள் மக்களைவிட ஆற்றல் பெற்றவை. மனிதப் பண்புகள் கொண்டவை. மனித உலகில் மக்களோடு இணைந்து வாழ்பவை. அவர்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்குத் தீர்வுகாண உதவுபவை என்ற கருத்துருவாக்கம் புராணங்களில் மிகுதியாகக் காணப்படுகின்றன. இவை நாட்டுப்புற மக்களின் நம்பிக்கைகள், தெய்வ வழிபாடு, சமயச் சடங்குகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை உணர்த்துகின்றன. அறிவியல் காலத்துக்கு முற்பட்ட செய்திகளை அறிந்துக்கொள்வதோடு, சமூகப்பண்பாட்டு வரலாற்றை மீட்டுருவாக்கும் செய்யவும் இவை பயன்படுகின்றன. மகாபுரணம், கந்தபுராணம், விநாயகப் புராணம் போன்றவை புராணக் கதைகளுள் சிலவாகும்.
82) கூற்றுகளை ஆராய்க.
1. பண்பாடு நெகிழ்வுத்தன்மையுடையது
2. பண்பாடு நெகிழவுத்தன்மையற்றது.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: ஒவ்வொரு சமுதாயத்திற்கும் குறிப்பிடத்தக்க பண்பாட்டு இயல்புகள் உள்ளன. அவை, காலங்காலமாகப் பின்பற்றப்படும் மரபுகள், சமூக நல்லிணக்கக் கொள்கைகள், பழக்கவழக்கங்கள், கற்றல் நிலைகள், ஆகியவற்றைக் கொண்டுள்ளன. மேலும், பன்னெடுங்காலமாகக் கடைபிடித்துவரும் வாழ்வியல் பண்புகளோடு கால மாற்றத்துக்கு ஏற்ப புதிதாக உருவாக்கிக் கொள்ளப்படும் வாழ்வியல் பண்புகளையும் புறக்கணிப்பதில்லை. அதனால்தான், பண்பாடு நெகிழ்வுத் தன்மையுடையதாக விளங்குகிறது.
83) சமுதாயத்திலுள்ள ஒவ்வொருவரும் உயர்ந்த எண்ணங்களுடனும் சிறந்த கொள்கைகளுடனும் வாழவேண்டும் என்பது எதன் நோக்கம்?
A) பண்பாடு
B) கலாச்சாரம்
C) நாகரீகம்
D) பழமொழி
விளக்கம்: சமுதாயத்தின் ஒவ்வொருவரும் உயர்ந்த எண்ணங்களுடனும் சிறந்த கொள்கைகளுடனும் வாழவேண்டும் என்பது பண்பாட்டின் அடிப்படை நோக்கமாகும். மனித நடத்தையில் மாற்றத்தையும் பெருமையையும் உண்டாக்கும் பண்பாடு, அவனது தேவைகளையும் நிறைவு செய்கிறது.
84) இந்தியப் பண்பாட்டின் குறிப்பிடத்தக்க இயல்புகளில் பொருந்தாததைத் தேர்வு செய்க
A) நிலைத்த தன்மை
B) நெகிழாகத் தன்மை
C) அனுபவ அறிவு
D) முழுவளர்ச்சிக்கு உதவுதல்
விளக்கம்: இந்தியப் பண்பாட்டின் குறிப்பிடத்தக்க இயல்புகள் பின்வருமாறு:
1. நிலைத்த தன்மை
2. நெகிழுந்தன்மை
3. நடைமுறை வாழ்விற்குப் பயன்படுதல்
4. முழவளர்ச்சிக்கு உதவுதல்
5. அனுபவ அறிவு.
85) பண்பாட்டுச் சிறப்புக்குப் பெருமை சேர்ப்பது எது?
A) நிலைத்த தன்மை
B) நெகிழுந்த தன்மை
C) அனுபவ அறிவு
D) அனைத்தும்
விளக்கம்: பண்பாட்டுச் சிறப்புக்குப் பெருமை சேர்ப்பது அதன் நிலைத்த தன்மையாகும். புறவளர்ச்சி எனக் குறிப்பிடப்படும் நாகரீகம், மாறும் தன்மையுடையது. ஆனால், அக வளர்ச்சியாகிய பண்பாடு என்றும் மாறாதது. தலைமுறை தலைமுறையாக ஒரு சமுதாயத்தினரிடமிருந்து அடுத்த சமுதாயத்துக்குக் கொண்டு செல்லப்படுவது பண்பாடாகும்.
86) எது மாற்றத்துக்கு உட்பட்டாலும் தன் அடையாளத்தை விட்டுச்செல்லும்?
A) நாகரீகம்
B) பண்பாடு
C) கலாச்சாரம்
D) அனைத்தும்
விளக்கம்: பண்பாடு நெகிழுந்தன்மை கொண்டது. ஏதேனும் ஒன்றை விடாப்பிடியாகப் பற்றிக்கொள்ளாமல், சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் வளைந்துகொடுக்கும் தன்மையுடையது. நாகரீகம் எந்த நிலையிலும், எந்த நேரத்திலும் முழுமையாக தன்மை மாற்றிக்கொள்ளும். ஆனால், பண்பாடு மாற்றத்துக்கு உட்பட்டாலும் தன் அடையாத்தை விட்டுச் செல்லும் என்பதை உணரமுடியாது.
87) தனி மனிதனையும் சமுதாயத்தையும், முன்னேற்றுவதற்கு உதவவும் குறிக்கோள்களை அடையவும் எது வழிசெய்கிறது?
A) நாகரீகம்
B) பண்பாடு
C) கலாச்சாரம்
D) A மற்றும் B
விளக்கம்: அன்றாட நடைமுறை வாழ்வில் பண்பாடு உறுதுணையாக இருக்கிறது. தனி மனிதனையும் சமுதாயத்தையும், முன்னேற்றுவதற்கு உதவவும் குறிக்கோள்களை அடையவும் பண்பாடு வழிசெய்கிறது.
88) ஒரு மனிதனின் முழுமையான வளர்ச்சி என்பது எதை சார்ந்தது?
A) உடல்
B) உள்ளம்
C) A மற்றும் B
D) எதுவுமில்லை
விளக்கம்: ஒரு மனிதனின் முழுமையான வளர்ச்சி என்பது உடல் மற்றும் உள்ளம் சார்ந்தது. இவ்விரண்டையும் பெறுவதற்குப் பண்பாடு உதவுகிறது. இதன்மூலம், சமுதாயத்தில் உள்ளவரோடு இணக்கமாக வாழும் பண்பினையும் இயற்கையோடு பொருந்தி வாழும் இயல்பினையும் பெற்றுச் சிறந்த குடிமக்களாகத் திகழ, இந்தியப் பண்பாடு உதவுகிறது.
89) ஒரு தலைமுறையினர் தமக்கு முந்திய தலைமுறையினரிமிருந்து கற்றுக்கொண்ட வாழ்வியல் திறன்களையும் வாழ்க்கை முறைகளையும் தங்களின் செம்மையான வாழ்வியலுக்குப் பயன்படுத்த எது உதவுகிறது?
A) அகராதி
B) இலக்கியம்
C) அனுபவ அறிவு
D) அனைத்தும்
விளக்கம்: ஒரு தலைமுறையினர் தமக்கு முந்தைய தலைமுறையினரிடமிருந்து கற்றுக்கொண்ட வாழ்வியல் திறன்களையும் வாழ்க்கை முறைகளையும் தங்களின் செம்மையான வாழ்வியலுக்குப் பயன்படுத்த அனுபவ அறிவு உதவுகிறது.
90) தவறானக் கூற்றைத் தேர்வு செய்க
A) இந்தியப் பண்பாடு தொன்மையானது. பன்முகத்தன்மை கொண்டது.
B) பல நூற்றாண்டுகளாகப் பல்வேறுப்பட்ட சமூகங்களை, சமயங்களைச் சேர்ந்த மக்கள் நல்லிணக்கத்துடனும், ஒற்றுமையாகவும் வாழும் சூழலைக் கொண்டது.
C) பல வரலாற்று அனுபவங்களிலிருந்து பல்வேறு நிகழ்வுகளிலிருந்தும் இன்றையப் பண்பாடு பெறப்படவில்லை.
D) தகவல்தொடர்பு, இணையம், மக்கள் ஊடகங்கள் போன்ற நவீனத் தொழில்நுட்பங்கள் போன்றவற்றால் இன்றையப் பண்பாட்டுப் பரவல்களின் தன்மையும் அளவும் முந்தைய காலங்களைவிட மிகவேகமாக வளர்ந்துவிட்டன.
விளக்கம்: பல வரலாற்று அனுபவங்களிலிருந்தும் பல்வேறு நிகழ்வுகளிலிருந்தும் இன்றையப் பண்பாடு பெறப்பட்டது.
91) நம் நாட்டிற்குப் பெருமையும் சிறப்பும் சேர்க்கும் இன்றியமையாத பண்பாட்டுச் சிறப்புக்கூறுகள் எவை?
A) ஆன்மீக அடிப்படை, அழியாத்தன்மை
B) சகிப்புத்தன்மையும் நல்லிணக்கமும்
C) மனிதநேயம், தத்துவக்கோட்பாடுகள்
D) அனைத்தும்
விளக்கம்: பண்பாட்டின் சிறப்புக்கூறுகளாவன, ஆன்மீக அடிப்படை, அழியாத்தன்மை, சகிப்புத்தன்மை, நல்லிணக்கம், மனிதநேயம், தத்துவக்கோட்பாடுகள்.
92) இந்தியப் பண்பாட்டின் ஆணிவேராக விளங்குவது எது?
A) ஆன்மீகம்
B) மனிதநேயம்
C) கிராமம்
D) அனைத்தும்
விளக்கம்: இந்தியப் பண்பாட்டின் ஆணிவேராக ஆன்மீகம் விளங்குகிறது. ஆன்மீகம் ஒருமைப்பாட்டை உணர்த்தி, இணக்கத்தன்மை பெறுவதை இந்தியப்பண்பாடு வலியுறுத்துகிறது. இந்தியாவிலுளள ஆலயங்கள் பக்தி இயக்கத்தின் பெருமையை பறை சாற்றுகின்றன.
93) அனைத்துச் சமயங்களும் எதன் தூய்மையை வலியுறுத்துகின்றன?
A) உடல் தூய்மை
B) உள்ளத் தூய்மை
C) ஆன்மத் தூய்மை
D) அனைத்தும்
விளக்கம்: நம் நாட்டில் பல சமயங்களைப் பின்பற்றுவோறும் வாழ்கின்றனர். ஆன்மீகம் அனைத்துச் சமயங்களும் உடல், உள்ளம், ஆன்மா ஆகியவற்றின் தூய்மையை வலியுறுத்துகின்றன.
94) ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்பது யாருடைய வாக்கு?
A) மாணிக்கவாசகர்
B) அப்பர்
C) சுந்தரர்
D) திருமூலர்
விளக்கம்: ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பது திருமூலரின் கூற்று ஆகும். அவரின் கூற்றுப்படி சமயங்கள் ஒற்றுமையுடன் வாழச் செய்கின்றன. மேலும் சமயங்கள் அழிவுக்குக் காரணமாக விளங்கும் ஆசையை விட்டொழித்துத் தூய இறையாண்மையைப் புரிந்துகொள்ளச் செய்கின்றன. தருமம், தருமநெறி, மறுபிறவி, அவதாரக் கோட்பாடு போன்றவற்றைப் புறக்கணிக்காமல் போற்றுகின்றன. எனவே, சமயமும், பண்பாடும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன.
95) ‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே’ என்று பாடியவர் யார்?
A) தாயுமானவர்
B) அப்பர்
C) சுந்தரர்
D) திருமூலர்
விளக்கம்: ‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே’ என்று தாயுமானவர் கூறுவது, ஆன்மீகத்தின் உயர்சிந்தனையாகும்.
96) உலகில் சிறந்த பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டனவாக எதைக் கூறுவர்?
A) கிரேக்கம்
B) ரோம்
C) பாபிலோன்
D) அனைத்தும்
விளக்கம்: உலகில் சிறந்த பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டனவாகக் கிரேக்கம், ரோம், பாபிலோன், எகிப்து, பாரசீகம் ஆகியவற்றைக் கூறுவர். (எ.கா). எகிப்தில் மிகப்பெரிய அளவில் உருவாக்கப்பட்ட பிரமிடுகள் இக்காலத்தில் மீண்டும் உருவாக்கப்படவில்லை. ஆனால் நம் இந்தியப் பண்பாடு தொன்மை மிக்கது. காலங்காலமாக ஒரு தலைமுறையினரிடமிருந்து அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லப்படுவதால் என்றும் நிலைபெற்று அழியாத்தன்மை கொண்டு விளங்குகிறது.
97) கூற்றுகளை ஆராய்க.
1. இந்திய நாட்டில் பல்வேறு சமயம், மொழி, இனம், பழக்கவழக்கம், நம்பிக்கை எனப் பல வேறுபாடுகள் காணப்பட்டாலும் அனைவரும் இந்தியர் என்னும் ஒற்றுமை உணர்வை மேலோங்கச் செய்வது அதன் பண்பாட்டுச் சிறப்பாகும்.
2. நாட்டைப் பாதுகாப்பதில் ஒற்றுமையுடன் செயல்படும் எண்ணம், நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கிறது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழும் உயர்ந்த எண்ணம், சகிப்புத்தன்மையை உருவாக்கி அனைவரையும் ஒன்றிணைத்து செயல்பட வைக்கிறது.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. இந்திய நாட்டில் பல்வேறு சமயம், மொழி, இனம், பழக்கவழக்கம், நம்பிக்கை எனப் பல வேறுபாடுகள் காணப்பட்டாலும் அனைவரும் இந்தியர் என்னும் ஒற்றுமை உணர்வை மேலோங்கச் செய்வது அதன் பண்பாட்டுச் சிறப்பாகும்.
2. நாட்டைப் பாதுகாப்பதில் ஒற்றுமையுடன் செயல்படும் எண்ணம், நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கிறது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழும் உயர்ந்த எண்ணம், சகிப்புத்தன்மையை உருவாக்கி அனைவரையும் ஒன்றிணைத்து செயல்பட வைக்கிறது.
98) நம்மிடம் பிறர் அன்புகாட்ட வேண்டும் என்று எண்ணுவதுபோல் தாமும் பிறரிடத்து அன்புசெலுத்த வேண்டும் என்ற உணர்வு எதன் அடிப்படையாகும்?
A) வீரம்
B) மனிதநேயம்
C) பண்பாடு
D) அனைத்தும்
விளக்கம்: நம்மிடம் பிறர் அன்புகாட்ட வேண்டும் என்று எண்ணுவதுபோல் தாமும் பிறரிடத்து அன்புசெலுத்த வேண்டும் என்ற உணர்வே மனிதநேயத்திற்கு அடிப்படையாகும் எனவேஇத்தகைய மனப்பக்குவம் கொண்டவரையே பண்பாடுடையோர் எனப் போற்றுவர். இனம், மொழி, சமயம் ஆகியவற்றைக் கடந்து ஒவ்வொருவரும் பிறரிடம் அன்பு செலுத்த வேண்டும் என்ற உயரிய மனிதநேயப் பண்பும், பொதுமையை வரவேற்கும் பண்பும், இந்தியப் பண்பாட்டுக்கு மேலும் சிறப்பைத் தருகின்றன.
99) இந்தியப் பண்பாட்டின் சிறப்புக்கு, வலிமை சேர்ப்பவை எவை?
A) மனிதநேயம்
B) ஆன்மீக அடிப்படை
C) அழியாத்தன்மை
D) தத்துவக்கோட்பாடுகள்
விளக்கம்: இந்திய பண்பாட்டின் சிறப்புக்கு, அதன் தத்துவக் கருத்துக்களும் கோட்பாடுகளும் வலிமை சேர்க்கின்றன. பழைமை வாய்ந்த பண்பாட்டுச் சிறப்புமிக்க நம் இந்திய நாட்டில் ஞானிகள், முனிவர்கள் ரிஷிகள், சித்தர்கள் முதலான அருளாளர்களின் உயர்சிந்தனைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. மனிதனின் புறச்சிந்தனையும், அகச்சிந்தனையும் தூய்மைபடுத்தி, அவற்றின் வளர்ச்சிக்கு தத்துவக் கருத்துகள் உதவுகின்றன.
100) மேன்மையாக சிந்தனைகள் எல்லாப் பகுதியிலிருந்து நம்மிடம் வரட்டும் என்று கூறும் வேதம் எது?
A) ரிக்
B) யஜுர்
C) சாம
D) அதர்வண
விளக்கம்: வேதங்கள், உபநிடதங்கள், காவியங்கள், புராணங்கள், பகவத்கீதை போன்ற தத்துவ மறைகள் மனிதப் பண்பாட்டின் சிறப்புகளை வெளிப்படுத்துகின்றன. சமணம், பௌத்தம், கிறித்துவம், இஸ்லாம் முதலிய சமயங்களில் தோன்றிய பக்தி இலக்கியங்கள் தத்துவத்தின் மறைபொருளை விளக்கிச் சொல்கின்றன. ‘மேன்மையான சிந்தனைகள் எல்லாப் பகுதியிலிருந்தும் நம்மிடம் வரட்டும்’ என்று ‘ரிக் வேதம்’ கூறுகிறது. அதற்கேற்ப அனைத்துப் பண்பாடுகளிலும் உள்ள நல்ல கருத்துகளை உள்வாங்கி, உலக அரங்கில் உயர்ந்து நிற்பது நம் இந்தியப் பண்பாடாகும்.
101) அருளின் அடிப்படை எனப்படுவது எது?
A) அன்பு
B) சத்தியம்
C) அகிம்சை
D) சாந்தம்
விளக்கம்: ஒருவர் மீது ஒருவர் செலுத்தும் பாசமே அன்பு எனப்படும். இஃது இரக்கம், பரிவு, கருணை போன்ற பல சொற்களால் அழைக்கப்படுகிறது. அருளின் அடிப்படையே அன்பாகும்.
102) எம்மூன்றும் உள்ளடக்கிய சொல் சத்தியமாகும்?
A) உண்மை, மேன்மை, வாய்மை
B) வாய்மை, காய்மை, மெய்மை
C) உண்மை, வாய்மை, மெய்மை
D) எதுவுமில்லை
விளக்கம்: சத்தியம் என்பது உண்மை எனப்படுகிறது. உள்ளத்திலிருந்து வருவது உண்மையெனவும், வாயிலிருந்து வருவதால் வாய்மை எனவும், உடலால் வருவது மெய்மை ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய சொல் சத்தியமாகும்.
103) இப்பிரபஞ்சம் இயங்கி கொண்டிருப்பது எதன் அடிப்படையில்?
A) கருணை
B) அன்பு
C) அகிம்சை
D) தர்மம்
விளக்கம்: இப்பிரபஞ்சம் இயங்கி கொண்டிருப்பதே தர்மத்தின் அடிப்படையில் ஆகும். பிறருக்கு உதவுவது(வறியவருக்கு) தமிழில் அறம், ஈகை எனப் பொருள் கொள்ளப்படுகிறது.
104) கொல்லாமை என்பது_______ஆகும்?
A) கருணை
B) அன்பு
C) அகிம்சை
D) தர்மம்
விளக்கம்: கொல்லாமை என்பதே அகிம்சையாகும். எண்ணம், சொல், செயல் இவைகளின் மூலம் பிறருக்குத் துன்பம் செய்யாமை.
105) ஒருவன் இறைவனிடத்தில் தன்மை அர்ப்பணிக்கும்பொழுது________கிடைக்கிறது,
A) சாந்தம்
B) கருணை
C) அன்பு
D) சத்தியம்
விளக்கம்: மன நிம்மதியே சாந்தமாகும். மன நிம்மதியே மன அமைதிக்கு வழிவகுக்கிறது. ஒருவன் இறைவனிடத்தில் தன்மை அர்பணிக்கும்பொழுது சாந்தம் கிடைக்கிறது.
106) “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பது யாருடைய கருத்து?
A) சுரதா
B) பாரதி
C) கண்ணதாசன்
D) கணியன் பூங்குன்றனார்
விளக்கம்: மனித சமூகத்தில் அனைவரும் சகோதரரே. எல்லோரும் ஓரினம், எல்லாரும் ஓர்நிறை என்பது நம் சகோதரத்துவத்தை எடுத்து இயம்புவதேயாகும். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கணியன் பூங்குன்றனாரின் கருத்தும் இதுவே.
107) பிற உயிர்களிடத்துக் காட்டும் அன்பு எவ்வாறு அழைக்கப்படும்?
A) அன்பு
B) பாசம்
C) கருணை
D) அறம்
விளக்கம்: பிற உயிர்களிடத்து காட்டும் அன்பே கருணை. மரம், செடி, கொடி, புழு, பூச்சி, விலங்கு போன்ற அனைத்து உயிர்களிடத்தும் செலுத்தப்படும் இரக்கமே கருணையாகும்.
108) இந்தியப் பண்பாட்டின் சிறப்புக் கூறுகளில் அழிவில்லாத மதிப்பீடுகளின் நிலையில் பொருந்தாததைத் தேர்வு செய்க.
A) அன்பு
B) கருணை
C) வாய்மை
D) சாந்தம்
விளக்கம்: அன்பு, சத்தியம், தர்மம், அகிம்சை, சாந்தம், சகோதரத்துவம், கருணை ஆகியவை அழிவில்லாத மதிப்பீடுகளின் நிலைகளாகும்.
109) பொருத்துக.
அ. பழைய கற்காலம் – 1. கரடுமுரடான கற்கருவி
ஆ. புதிய கற்காலம் – 2. கூர்மை மற்றும் வழுவழுப்பான கற்கருவி
இ. உலோகக் காலம் – 3. செம்பு
A) 1, 3, 2
B) 1, 2, 3
C) 3, 2, 1
D) 2, 3, 1
விளக்கம்: பழைய கற்காலம் – கரடுமுரடான கற்கருவி
புதிய கற்காலம் – கூர்மை மற்றும் வழுவழுப்பான கற்கருவி
உலோகக் காலம் – செம்பு
110) மனித நாகரீக வளர்ச்சியின் படிநிலைகளை ஏறுவரிசையில் எழுதுக.
A) வேட்டையாடல், பயிர்த்தொழில், கால்நடை வளர்ப்பு, நெசவு தொழில்
B) வேட்டையாடல், கால்நடை வளர்ப்பு, பயிர்த்தொழில், நெசவுத்தொழில்
C) வேட்டையாடல், கால்நடை வளர்ப்பு, நெசவுத்தொழில், பயிர்த்தொழில்
D) கால்நடை வளர்ப்பு, வேட்டையாடல், நெசவுத்தொழில், பயிர்த்தொழில்
விளக்கம்: தொடக்க காலத்தில், வேட்டையாடியே வாழ்ந்த மனிதன் படிப்படியாக கால்நடை வளர்ப்பு, பயிர்த்தொழில் நெசவுத் தொழில் என பல தொழில்களில் ஈடுபட்டான். பின் பொருளாதார முன்னேற்றத்தால் வசதியான வீடு, அணிகலன், நெடுஞ்சாலை ஊர்தி, மின்னஞ்சல் போன்ற தனது அன்றாடத் தேவைகளின் அடிப்படையில் வாழ்க்கை வசதிகளை பெருக்கிக் கொண்டான். இப்படித் தேவைகளின் வளர்ச்சியே நாகரீக வளர்ச்சியாகும்.
111) நாகரிகம் என்ற சொல் எந்த சொல்லடியாகப் பிறந்தது?
A) நகர்
B) கிராமம்
C) மாநகர்
D) நிகர்
விளக்கம்: நாகரிகம் என்ற சொல் நகர் என்னும் சொல்லடியாகப் பிறந்தது.
112) நகரம் – பிரித்தெழுதுக.
A) நக+அரம்
B) நகர்+அகம்
C) நகர்+அரம்
D) எதுவுமில்லை
விளக்கம்: நகர்+அகம் – நகரம். நகரீகம் – நாகரிகம் என திரிந்துள்ளது. சிற்றூர் மக்களினும் நகர மக்கள் புறவாழ்விற்குரிய வசதிகள் அனைத்தும் பெற்று விளங்குகிறார்கள். நகர வாழ்க்கையே நாகரிக வாழ்க்கை என்பது கருத்து. நாகரிகம் நகரும் தன்மையுடையது. புறவளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருவதைக் காண்கிறோம்.
113) எது அகவளர்ச்சியாகிய ஆன்மீக உயர் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைகிறது?
A) நாகரிகம்
B) பண்பாடு
C) கலாச்சாரம்
D) அனைத்தும்
விளக்கம்: நாகரிகமும் பண்பாடும் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய இரு மாறுபட்ட கூறுகள் எனலாம். நாகரிகம் என்பது புறவளர்ச்சியாகிய ஆன்மீக உயர் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைகிறது.
114) மனித வாழ்வின் இரு அடிப்படைக் கூறுகள் எவை?
A) உடல், உயிர்
B) கருணை, அன்பு
C) வீரம், கொடை
D) நன்மை, தீமை
விளக்கம்: மனித வாழ்வின் இரு அடிப்படைக் கூறுகள் முறையே உடலும் உயிரும். இதில் நாகரிகத்தை உடல் எனவும், பண்பாட்டை உயிர் எனவும் கூறலாம். அதாவது நாகரிகம் என்பது, புறவளர்ச்சியையும், பண்பாடு என்பது அகவளர்ச்சியையும் குறிக்கிறது. எனவே ‘உடலின்றி உயிர் அமையாது’ என்பதற்கேற்ப நாகரிகமும் பண்பாடும் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய இரு அடிப்படைக் கூறுகள் எனலாம்.
115) கூற்றுகளை ஆராய்ந்து தவறானதைத் தேர்வு செய்க.
A) புறவளர்ச்சியைக் குறிக்கும் நாகரிகத்தின் காலத்தை, தன்மையை அளவிட்டுக் கூறலாம்.
B) சூழ்நிலைக்கேற்ப மாறுபடுகின்ற அகமாற்றத்தை ஏற்படுத்தும் பண்பாட்டை அளவிட முடியாது.
C) நாகரிக வளர்ச்சி வேகமானது. பண்பாடு ஒரு முறையான, சீரான, வளர்ச்சியைக் கொண்டது.
D) நாகரீக மாற்றங்கள் பின்பற்றக் கடினமானது. பண்பாட்டு மாற்றங்கள் பின்பற்ற எளிமையானது.
விளக்கம்: நாகரிக மாற்றங்கள், வளர்ச்சிகள் உலகில் எந்த நாட்டில் எந்த இடத்தில் ஏற்பட்டாலும் அவற்றை எவ்வித கடினமும் இல்லாமல் எளிதாக எல்லோரும் அறிந்து பின்பற்றலாம். பண்பாடு என்பது மிகுந்த முயற்சியின் அடிப்படையில் மனம் ஒன்றியவர்கள், ஒருமித்தக் கருத்துடையவர்கள் மட்டுமே பின்பற்றக் கூடியது. நாகரிகத்திற்கும், பண்பாட்டிற்குமிடையே வேறுபாடுகள் காணப்படினும் சிறந்த புற வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட நாகரிகம் இல்லையெனில் சிறந்த பண்பாட்டைக் காண இயலாது.
116) இந்திய நாட்டின் பண்பாட்டுக் கூறுகளையும், சிறப்புகளையும் இளம்தலைமுறையினருக்கு கொண்டு சேர்ப்பதில், எவை பெரும்பங்காற்றுகின்றன?
A) கல்வி நிறுவனங்கள்
B) தொழில்
C) NGO-க்கள்
D) அனைத்தும்
விளக்கம்: இந்திய நாட்டின் பண்பாட்டுக் கூறுகளையும் சிறப்புகளையும், இளம் தலைமுறையினருக்கு கொண்டு சேர்ப்பதில் கல்வி நிறுவனங்கள் பெரும்பங்காற்றுகின்றன. பண்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியும், அதனைப் பாதுகாக்கும் முறைகளையும் எடுத்துரைக்கின்றன.
117) பண்பாட்டுக் கல்வியின் பயன் எது?
A) வாழ்வின் உறுதிப்பொருள்களை அறியச்செய்தல்
B) வாழ்வில் உண்மைகளை அறியச்செய்தல்
C) சரியான நெறிமுறைகளைப் பின்பற்றச் செய்தல்
D) அனைத்தும்
விளக்கம்: சிக்கல்களுக்கு தீர்வு காணச் செய்தல், இயற்கையோடு இணைந்து வாழச்செய்தல் ஆகியவையும் பண்பாட்டுக் கல்வியின் பயன்களாகும்.
118) வாழ்வின் உறுதிப் பொருள்கள் எத்தனை?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: அறம், பொருள், இன்பம், வீடு என்பன வாழ்வின் உறுதிப்பொருள்களாகும். அவற்றை அறிந்து அறவாழ்வு வாழ பண்பாட்டுக் கல்வி உதவுகிறது.
119) வாழ்வியல் உண்மைகள் எனப்படுவது எது?
A) பிறரை மதித்தல்
B) கைம்மாறு கருதாது உதவுதல்
C) எந்நிலையிலும் வாய்மைக் கடைபிடித்தல்
D) அனைத்தும்
விளக்கம்: பிறரை மதித்தல், கைம்மாறு கருதாது உதவுதல், எந்நிலையிலும் வாய்மையைக் கடைபிடித்தல், சகிப்புத் தன்மையுடன் விட்டுக்கொடுத்து வாழ்தல் போன்ற பல வாழ்வியல் உண்மைகளை அறிய பண்பாட்டுக் கல்வி உதவுகிறது.
120) “உணவே மருந்து மருந்தே உணவு” என்பது யாருடைய வாழ்வியல் பார்வை?
A) தமிழர்
B) திராவிடர்
C) ஆரியர்
D) கிரேக்கர்
விளக்கம்: நம் முன்னோர்கள் இயற்கையைத் தெய்வமாகப் போற்றியும் இயற்கை உணவுமுறைகள், இயற்கை மருத்துவ முறைகள் ஆகியவற்றைக் கடைபிடித்தும் நெடுநாள் நோயின்றி வாழ்ந்தனர் என்பதை நம் வேதங்களும், புராணங்களும் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. “உணவே மருந்து மருந்தே உணவு” என்ற தமிழரின் வாழ்வியல் பார்வை இங்கு நோக்கத்தக்கது. திருக்குறள் முதலான அறநூல்களில் அரசியல் பொருளாதாரம், மருத்துவம் போன்ற பல கருத்துகள் அமைந்துள்ளன. இந்நூல்களைக் கற்பதனால், பிரச்சினைகளுக்கு எளிதாகத் தீர்வு காணச் செய்யலாம்.