Ethics Questions

இந்தியப் பண்பாட்டிற்கு பேரரசுகளின் கொடை 12th Ethics Lesson 5 Questions

12th Ethics Lesson 5 Questions

5] இந்தியப் பண்பாட்டிற்கு பேரரசுகளின் கொடை

1) இந்தியாவில் ஏற்படுத்தப்பட்ட முதல் பேரரசு எது?

A) மௌரியப் பேரரசு

B) குப்தப் பேரரசு

C) முகலாயப் பேரரசு

D) பாமனிப் பேரரசு

விளக்கம்: இந்தியாவில் ஏற்படுத்தப்பட்ட முதல் பேரரசான மௌரியப் பேரரசு காலத்தில் இருந்து கலை, கட்டடக்கலை, ஆட்சிமுறை போன்றவற்றில் வியக்கத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. மேலும் புதிய ஆட்சிமுறையைத் தொடங்கி வைத்தனர்.

2) எந்தப் பேரரசு, மௌரியப் பேரரசுக் கூறுகளை விரிவுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியது?

A) விஜயநகரப் பேரரசு

B) குப்தப் பேரரசு

C) பாமினிப் பேரரசு

D) முகலாயப் பேரரசு

விளக்கம்: குப்தப் பேரரசு, மௌரியப் பேரரசுக் கூறுகளை விரிவுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியது. இது இந்தியக் பண்பாட்டிற்கும், இந்து சமயத்திற்கு அளப்பரிய பணியினை ஆற்றியுள்ளது.

3) யாருடைய அறிவியல் நோக்கு இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கு வித்திட்டன?

A) மௌரியர்கள்

B) குப்தர்கள்

C) முகலாயர்கள்

D) குஷாணர்கள்

விளக்கம்: குப்தர்களின் அறிவியல்நோக்கு இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கு வித்திட்டன. குப்தப் பேரரசின் காலம், வரலாற்றில் ‘பொற்காலம்’ எனக் கருதப்படுகிறது.

4) யார் காலத்தில் பௌத்த சமயமும், கலை, கட்டடக் கலையும் உலகநாடுகளுக்குப் பரவியது

A) மௌரியர்

B) குப்தர்

C) முகலாயர்

D) குஷாணர்

விளக்கம்: குஷாணர்கள் காலத்தில் பௌத்த சமயமும், கலை, கட்டடக்கலையும் உலகநாடுகளுக்குப் பரவியது.

5) “தேவி சந்திரகுப்தம்” என்ற நூலை எழுதியவர் யார்?

A) கௌடில்யர்

B) சாணக்கியர்

C) மெகஸ்தனிஸ்

D) விசாகதத்தர்

விளக்கம்: ‘தேவி சந்திரகுப்தம்’ என்ற நூலை விசாகதத்தர் எழுதினார். இது மௌரியர்களின் ஆட்சி பற்றி அறிய உதவுகிறது.

6) யார் குடைவரைக் கோயில்கள், ஒற்றைக்கல் இரதங்கள் ஆகியவற்றை உருவாக்கி, இந்தியப் பண்பாட்டின் பாரம்பரியத்தைப் பாதுகாத்தனர்?

A) சேரர்

B) சோழர்

C) பாண்டியர்

D) பல்வலர்

விளக்கம்: பல்லவர்கள் குடைவரைக் கோயில்கள், ஒற்றைக்கல் இரதங்கள் ஆகியவற்றை உருவாக்கி இந்தியப் பண்பாடு, பாரம்பரியத்தைப் பாதுகாத்தனர்.

7) சாணக்கியர் எழுதிய நூல் எது?

A) அர்த்த சாஸ்திரம்

B) முத்ரா ராட்சதம்

C) தேவி சந்திரகுப்தம்

D) இண்டிகா

விளக்கம்: மௌரியர்களின்; ஆட்சிமுறை குறித்த தகவல்களை, சாணக்கியர் (கௌடில்யர்) எழுதிய அர்த்தசாஸ்திரம் என்ற நூல் தெரிவிக்கிறது.

8) யாருடைய காலத்தில் பொருளாதாரத்தில் வியக்கத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது?

A) முற்காலச் சோழர்

B) பிற்காலச் சோழர்

C) முற்காலப் பாண்டியர்

D) பிற்காலப் பாண்டியர்

விளக்கம்: பிற்காலப் பாண்டியர் காலத்தில், பொருளாதாரத்தில் வியக்கத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. வாணிபக் குழுக்கள், அயல்நாட்டு வாணிபம் மூலம் உள்நாட்டு வருவாயைப் பெருக்கின.

9) இன்று நாம் பின்பற்றறும் அளவை முறைகளுக்கு முன்னோடி யார் கால அளவைகளே ஆகும்?

A) முற்காலச் சோழர்கள்

B) பிற்காலச் சோழர்கள்

C) பல்வலர்

D) பாண்டியர்கள்

விளக்கம்: இன்று நாம் பின்பற்றும் அளவை முறைகளுக்கு முன்னோடி, பாண்டியர் கால அளவைகளே ஆகும்.

10) யாருடைய காலத்தில் கன்னடமொழி மறுமலர்ச்சி பெற்றது?

A) ராஷ்டிரகூடர்கள்

B) ஹெய்சாளர்கள்

C) A மற்றும் B

D) சாளுக்கியர்கள்

விளக்கம்: ராஷ்டிரகூடர்கள், ஹெய்சாளர்கள் காலத்தில் கன்னடமொழி மறுமலர்ச்சி பெற்றது. மேலும், சாளுக்கியர் காலத்தில் அவர்கள் நாட்டிலிருந்து கணபதி வழிபாடு “காணபத்யம்” என்ற புதிய சமயப்பிரிவாக தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

11) யாருடைய நிர்வாகக் கூறுகள் தற்கால இந்தியாவில் பிர்கா, பஞ்சாயத்து போன்ற நிருவாக முறைக்கு காரணமாகும்?

A) இராஷ்டிகூடர்கள்

B) சாளுக்கியர்

C) முகலாயர்

D) பாபர்

விளக்கம்: முகலாயப் பேரரசின் நிருவாகக் கூறுகளே தற்கால இந்தியாவின் பிர்கா, பஞ்சாயத்து போன்ற நிருவாக முறைக்கு காரணமாகும்.

12) பழங்கால இந்தியாவின் ஆட்சிமுறை, சமூக, பொருளாதார, சமய நிலைகளின் வளர்ச்சிக்கும் நுண்கலைகளின் உருவாக்கத்திற்கும் அடித்தளமிட்டவர்கள் யார்?

A) மௌரியர்கள்

B) சாளுக்கியர்கள்

C) மொகலாயர்கள்

D) இராஜபுத்திரர்கள்

விளக்கம்: பழங்கால இந்தியாவின் ஆட்சிமுறை, சமூக, பொருளாதார, சமய நிலைகளின் வளர்ச்சிக்கும் நுண்கலைகளின் உருவாக்கத்திற்கும் மௌரியர்களே அடித்தளமிட்டனர். மௌரிய மன்னர்களுள் சந்திரகுப்தர், பிந்துசாரர், அசோகர் ஆகியோர் இந்தியப் பண்பாட்டிற்கு அளித்த கொடை குறிப்பிடத்தக்கது.

13) சாணக்கியர் என அழைக்கப்பட்டவர் யார்?

A) கௌடில்யர்

B) விசாகதத்தர்

C) மெஸ்தனிஸ்

D) அசோகர்

விளக்கம்: கௌடில்யர் ‘சாணக்கியர்’ எனவும் அழைக்கப்பட்டார். இவர் மௌரியர்கள் காலத்தைச் சேர்ந்தவர்.

14) ஆட்சிமுறை, கலை, கட்டடக்லை, இலக்கியம், சமயச் சகிப்புத்தன்மை போன்றவற்றைப் பரப்புவதில் மற்றப் பேரரசர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்கள் யார்?

A) சேரர்

B) சோழர்

C) பாண்டியர்

D) பல்லவர்

விளக்கம்: பல்லவர்களுக்குப் பின் வந்த சோழர்கள் ஆட்சிமுறை, கலை, கட்டடக்கலை, இலக்கியம், சமயச் சகிப்புத்தன்மை போன்றவற்றைப் பரப்புவதில் மற்றப் பேரரசுகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தனர்.

15) மெஸ்தனிஸ் எழுதிய நூல் எது?

A) அர்த்த சாஸ்திரம்

B) முத்ரா ராட்சதம்

C) தேவி சந்திரகுப்தம்

D) இண்டிகா

விளக்கம்: கிரேக்கப் பயணி மெஸ்தனிஸ் எழுதிய இண்டிகா என்ற நூல் மௌரியர்களின் ஆட்சியைப் பற்றி அறிய உதவுகிறது.

16) “முத்ரா ராட்சசம்” என்ற நூலின் ஆசிரியர் யார்?

A) கௌடில்யர்

B) சாணக்கியர்

C) மெகஸ்தனிஸ்

D) விசாகதத்தர்

விளக்கம்: ‘முத்ரா ராட்சசம்’ என்ற நூலை விசாகதத்தர் எழுதினார். இது மௌரியர்களின் ஆட்சி பற்றி அறிய உதவுகிறது.

17) எந்த நாட்டிலிருந்து தமிழகத்தில் கணபதி வழிபாடு, காணாபத்யம் என்ற புதிய சமயப்பிரிவாக அறிமுகப்படுத்தப்பட்டது?

A) குஷாணர் நாடு

B) பாண்டிய நாடு

C) சாளுக்கிய நாடு

D) சேர நாடு

விளக்கம்: சாளுக்கிய நாட்டிலிருந்து தமிழகத்தில் கணபதி வழிபாடு, ‘காணாபத்யம்’ என்ற புதிய சமயப்பிரிவாக அறிமுகப்படுத்தப்பட்டது.

18) கூற்றுகளை ஆராய்க.

1. மௌரியர்களின் ஆட்சியைப் பற்றி அறிய அர்த்தசாஸ்திரம், முத்ரா ராட்சசம், தேவி சந்திரகுப்தம், இண்டிகா போன்ற நூல்கள் உதவுகின்றன.

2. மேலும் மகாவம்சம், தீபவம்சம் போன்ற பௌத்த நூல்கள், மாமன்னர் அசோகரின் கல்வெட்டுகள், நாணயங்கள் போன்றவையும் சான்றுகளாக உள்ளன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1.மௌரியர்களின் ஆட்சியைப் பற்றி அறிய அர்த்தசாஸ்திரம், முத்ரா ராட்சசம், தேவி சந்திரகுப்தம், இண்டிகா போன்ற நூல்கள் உதவுகின்றன.

2. மேலும் மகாவம்சம், தீபவம்சம்; போன்ற பௌத்த நூல்கள், மாமன்னர் அசோகரின் கல்வெட்டுகள், நாணயங்கள் போன்றவையும் சான்றுகளாக உள்ளன.

19) எது மௌரிய ஆட்சிமுறையின் ‘வேதம்’ என அழைக்கப்படுகிறது?

A) அர்த்த சாஸ்திரம்

B) தேவி சந்திரகுப்தம்

C) இண்டிகா

D) மகாவம்சம்

விளக்கம்: அர்த்த சாஸ்திரம் என்ற நூலில் மௌரியர்களின் ஆட்சிமுறை குறித்த தகவல்களைத் தெரிவிக்கிறது. இந்நூல் மௌரிய ஆட்சிமுறையின் ‘வேதம்’ எனப்படுகிறது.

20) மன்னனின் நிர்வாகமுறை எவ்வாறு இருக்க வேண்டும் என்ற வரையறையைத் தரும் நூல் எது?

A) அர்த்த சாஸ்திரம்

B) தேவி சந்திரகுப்தம்

C) இண்டிகா

D) மகாவம்சம்

விளக்கம்: அர்த்த சாஸ்திரம், மன்னனின் நிர்வாகமுறை எவ்வாறு இருக்க வேண்டுமென்று வரையறையைத் தருகிறது. நாட்டில் தர்மத்தையும் நீதியையும் நிலைநாட்ட வேண்டியது மன்னனின் கடமையாகும். அரசனின் இக்கடமைகள் “இராஜ்ய தர்மம்” எனப்பட்டது.

21) மௌரியர் ஆட்சிக்காலத்தில், அரசனுக்கு நிர்வாகத்தில் உதவி செய்ய எத்தனை உறுப்பினர்கள் கொண்ட குழு இருந்தது?

A) 6

B) 8

C) 10

D) 12

விளக்கம்: மௌரிய நிர்வாகத்தில் அரசனுக்கு உதவ 12 உறுப்பினர்கள் கொண்ட குழு இருந்தது. நாட்டில் தர்மத்தையும் நீதியையும் நிலைநாட்ட வேண்டியது மன்னர்களின் கடமையாகும்.

22) மௌரியப் பேரரசு எத்தனை பெரும் மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது?

A) 3

B) 4

C) 5

D) 6

விளக்கம்: மௌரியப் பேரரசு 4 பெரும் மாகாணங்களாப் பிரிக்கப்பட்டது. தட்சசீலம், உஜ்ஜனி, தோசாலி, சுவர்ணகிரி ஆகிய நகரங்கள் அம்மாகாணங்களின் தலைநகரங்களாக விளங்கின.

23) மௌரிய மாகாணங்களை ஆட்சி செய்தவர் யார்?

A) ராஜீர்கள்

B) மாகாண வருவாய்த்துறை அதிகாரி

C) மகாமாத்திரர்கள்

D) கன்னிதத்தா

விளக்கம்: மௌரிய மாகாணங்களை “மகாமாத்திரர்கள்” என்றழைக்கப்பட்ட ஆளுநர்கள் ஆட்சி செய்தனர். மேலும் அரசனுக்கு உதவ அமைச்சரவை குழு ஒன்று இருந்தது.

24) கூற்றுகளை கவனி.

1. மௌரியர் ஆட்சிக்காலத்தில் அரசனுக்கு உதவ அமைச்சரவைக் குழு ஒன்று இருந்தது.

2. அக்குழுவில் புரோகிதர், சேனாதிபதி, சன்னிதத்தா, சம்ஹர்தர், பிரதிஹாரர், பிரசஸ்தா, நியாயதீஷ், அந்தபாலா, பௌர், அதவர்வம்சிகா, துர்க்கபாலா ஆகியோர் முக்கிய இடம் வகித்தனர்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. மௌரியர் ஆட்சிக்காலத்தில் அரசனுக்கு உதவ அமைச்சரவைக் குழு ஒன்று இருந்தது.

2. அக்குழுவில் புரோகிதர், சேனாதிபதி, சன்னிதத்தா, சம்ஹர்தர், பிரதிஹாரர், பிரசஸ்தா, நியாயதீஷ், அந்தபாலா, பௌர், அதவர்வம்சிகா, துர்க்கபாலா ஆகியோர் முக்கிய இடம் வகித்தனர்.

25) பொருத்துக.

அ. மகாமாத்திரர்கள் – 1. அரசகுரு

ஆ. புரோகிதர் – 2. மாகாண ஆளுநர்

இ. சேனாதிபதி – 3. கருவூல அதிகாரி

ஈ. சன்னிதத்தா – 4. படைத்தலைவர்

A) 2, 1, 4, 3

B) 1, 2, 4, 3

C) 3, 4, 2, 1

D) 1, 4, 3, 2

விளக்கம்: மகாமாத்திரர்கள் – மாகாண ஆளுநர்

புரோகிதர் – அரசகுரு

சேனாதிபதி – படைத்தலைவர்

சன்னிதத்தா – கருவூல அதிகாரி

26) பொருத்துக

அ. சம்ஹர்தர் – 1. தலைமை நீதிபதி

ஆ. பிரதிஹாரா – 2. காவல்துறை தலைவர்

இ. பிரசஸ்தா – 3. மன்னனின் தனி உதவியாளர்

ஈ. நியாயதீஷ் – 4. வரி வசூல் செய்பவர்

A) 2, 1, 4, 3

B) 1, 2, 4, 3

C) 3, 4, 2, 1

D) 1, 4, 3, 2

விளக்கம்: சம்ஹர்தர் – வரி வசூல் செய்பவர்

பிரதிஹாரா – மன்னனின் தனி உதவியாளர்

பிரசஸ்தா – காவல்துறை தலைவர்

நியாயதீஷ் – தலைமை நீதிபதி

27) பொருத்துக.

அ. அந்தபாலா – 1. பெண் பாதுகாவல் அதிகாரி

ஆ. பௌர் – 2. கோட்டை பாதுகாவல் அதிகாரி

இ. அத்வர்வம்சிகா – 3. எல்லைப்புற பாதுகாவல் அதிகாரி

ஈ. துர்க்கபாலா – 4. தலைநகர ஆளுநர்

A) 4, 3, 2, 1

B) 3, 4, 1, 2

C) 4, 3, 1, 2

D) 1, 3, 4, 2

விளக்கம்: அந்தபாலா – எல்லைப்புற பாதுகாவல் அதிகாரி

பௌர் – தலைநகர ஆளுநர்

அத்வர்வம்சிகா – பெண் பாதுகாவல் அதிகாரி

துர்க்கபாலா – கோட்டை பாதுகாவல் அதிகாரி

28) மாகாண வருவாய்த்துறை அதிகாரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?(மௌரியர் ஆட்சியில்)

A) ராஜீகர்கள்

B) ஸ்தானிகர்

C) யுக்தர்கள்

D) நியாயதீஷ்

விளக்கம்: ராஜீகர்கள் – மாகாண வருவாய்த்துறை அதிகாரிகள் என மௌரியர் கால ஆட்சிமுறையில் அழைக்கப்பட்டனர். மௌரியர் காலத்தில் 4 பெரும் மாகணங்கள் உருவாக்கப்பட்டன.

29) மௌரிய ஆட்சியில் மாவட்டங்களை நிர்வகித்தவர் யார்?

A) ராஜீகர்கள்

B) ஸ்தானிகர்

C) யுக்தர்கள்

D) நியாயதீஷ்

விளக்கம்: மௌரிய மாகாணங்கள் பல மாவட்டகளாகப் பிரிக்கப்பட்டன. அம்மாவட்டங்களை ‘ஸ்தானிகர்’ என்ற தலைமை அதிகாரி நிர்வகித்தார்.

30) மௌரிய ஆட்சியில் மாவட்ட ஆட்சியருக்கு உதவ_______________என்ற துணை அதிகாரிகள் இருந்தார்?

A) ராஜீகர்கள்

B) ஸ்தானிகர்

C) யுக்தர்கள்

D) நியாயதீஷ்

விளக்கம்: மாவட்ட ஆட்சியருக்கு உதவ ‘யுக்தர்கள்’ என்ற துணை அதிகாரிகள் மௌரிய ஆட்சியில் இருந்தார். மாவட்ட தலைமை அதிகாரி ‘ஸ்தானிகர்’ எனப்பட்டார்.

31) மௌரியரின் ஆட்சியில் நகரங்களின் நிர்வாகத்தைக் கண்காணித்த அதிகாரி யார்?

A) ராஜீகர்கள்

B) ஸ்தானிகர்

C) யுக்தர்கள்

D) நகரிகா

விளக்கம்: நகரங்களின் நிர்வாகத்தைக் கண்காணித்த அதிகாரி ‘நகரிகா’எனப்பட்டார். நகரத்தன்மை அதிகாரிகளின் பணிகள் பற்றி மெகஸ்தனிஸ், கௌடில்யர் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.

32) மௌரியர்களின் தலைநகரான பாடலிபுத்திரம் எத்தனை குழுக்களால் நிர்வகிக்கப்பட்டது?

A) 5

B) 6

C) 30

D) 12

விளக்கம்: மௌரியர்களின் தலைநகரான பாடலிபுத்திரம் தலா 5 உறுப்பினர்களைக் கொண்ட 6 குழுக்களால் நிர்வகிக்கப்பட்டது. கிராம நிர்வாகத்தைக் கிராமணி என்ற அதிகாரி கவனித்தார்.

33) மௌரிய ஆட்சியில் 10 முதல் 15 கிராமங்களைச் சேர்த்து நிர்வகித்தவர்____________எனப்பட்டார்?

A) கிராமணி

B) நகரிகா

C) கோபன்

D) குதபுருஷர்

விளக்கம்: மௌரியர் ஆட்சியில் கிராம நிர்வாகத்தை ‘கிரமணி’ என்ற தலைவர் நிர்வகித்தார். இதேபோல் 10 முதல் 15 கிராமங்களைச் சேர்த்து நிர்வகித்தவர் ‘கோபன்’ எனப்பட்டார்.

34) மௌரிய ஆட்சியில் படைநிர்வாகத்தை கவனித்தவர் யார்?

A) பிரசஸ்தா

B) சேனாதிபதி

C) நியாயதீஷ்

D) பிரதிஹாரா

விளக்கம்: படை நிர்வாகத்தைச் ‘சேனாதிபதி’ என்ற தலைமைதளபதி கவனித்தார். யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை போன்ற படைகள் முக்கியத்துவம் பெற்றன.

35) ‘பிளனி’ எந்த நாட்டு அறிஞர்?

A) இந்தியா

B) இங்கிலாந்து

C) கிரேக்கம்

D) பிரான்சு

விளக்கம்: கிரேக்க நாட்டறிஞர் பிளனி என்பவர் மௌரியரின் படையில் 6, 00, 000-காலாட்படையினர், 30, 000-குதிரைப்படையினர் 9, 000-யானைப்படை வீரர்கள் 8, 000- தேர்ப்படை வீரர்கள் இருந்ததாக குறிப்பிடுகிறார்.

36) கூற்றுகளை ஆராய்க.

1. மௌரியர் ஆட்சியில் கடற்படை மற்றும் போக்குவரத்து நிலைப்படை ஆகியவையும் இருந்தன

2. மௌரியர் ஆட்சியில் சேனாதிபதியின் கீழ் படைகளை ‘ஆயுதகரஅத்யஷா’ என்ற அதிகாரிகள் மேற்பார்வையிட்டனர்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. மௌரியர் ஆட்சியில் கடற்படை மற்றும் போக்குவரத்து நிலைப்படை ஆகியவையும் இருந்தன.

2. மௌரியர் ஆட்சியில் சேனாதிபதியின் கீழ் படைகளை ‘ஆயுதகரஅத்யஷா’ என்ற அதிகாரிகள் மேற்பார்வையிட்டனர்.

37) ‘பத்ரபாகு’ என்ற சமணத்துறவியால் சமணத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்ட மௌரிய அரசர் யார்?

A) சந்திரகுப்த மௌரியர்

B) சாணக்கியர்

C) சமுத்திரகுப்தர்

D) சிசுபாலர்

விளக்கம்: சந்திரகுப்த மௌரியர் ‘பத்ரபாகு’ என்ற சமணத்துறவியால் சமணத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டபின் அரசப்பதவியைத் துறந்து நாடு முழுவதும் சமண சமயத்தைப் பரப்பினார்

38) கூற்றுகளை ஆராய்க.

A) மௌரியர் காலத்தில் நிறுவப்பட்ட உரிமையியல் நீதிமன்றங்கள் தர்மஸ்தானியம் என்று அழைக்கப்பட்டன.

B) மௌரியர் காலத்தில் நிறுவப்பட்ட குற்றவியல் நீதிமன்றங்கள் கண்டக சோதனங்கள் என்று அழைக்கப்பட்டன.

C) நீதிபதிகள் ‘தர்மாதிகாரி’ என்றழைக்கப்பட்டார்.

D) அனைத்தும் சரி

விளக்கம்: மௌரியர் காலத்தில் நிறுவப்பட்ட உரிமையியல் நீதிமன்றங்கள் தர்மஸ்தானியம் என்று அழைக்கப்பட்டன.

மௌரியர் காலத்தில் நிறுவப்பட்ட குற்றவியல் நீதிமன்றங்கள் கண்டக சோதனங்கள் என்று அழைக்கப்பட்டன.

நீதிபதிகள் ‘தர்மாதிகாரி’ என்றழைக்கப்பட்டார்.

39) மௌரியர் காலத்தில் வசூலிக்கப்பட்ட நிலவரி எவ்வளவு?

A) விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு

B) விளைச்சலில் பத்தில் ஒரு பங்கு

C) விளைச்சலில் பன்னிரண்டில் ஒரு பங்கு

D) விளைச்சலில் நான்கில் ஒரு பங்கு

விளக்கம்: மௌரியர் காலத்தில் நிலவரியே முதன்மையான வரியாக இருந்தது. விளைச்சலில் வருவாயில் ஆறில் ஒரு பங்கு வரியாக வசூலிக்கப்பட்டது. நீர்ப்பாசனவரி, படகுவரி, வனவரி, சுரங்கவரி என பல வரிகள் வசூலிக்கப்பட்டன.

40) மௌரியர் காலத்தில் அயல்நாட்டு வாணிகத்தை முறைப்படுத்தும் விதமாக விதிக்கப்பட்ட வரி என்ன?

A) பாகா

B) பலி

C) சுங்கவரி

D) வணிக வரி

விளக்கம்: மௌரியர் காலத்தில், அயல்நாட்டு வாணிகத்தை முறைப்படுத்தும் விதமாகச் சுங்கவரி விதிக்கப்பட்டது. நிலவரி ‘பாகா’ என்ற பெயரிலும், பழங்கள் மீதான வரி ‘பலி’ என்ற பெயரிலும் அழைக்கப்பட்டது.

41) மௌரியர் கால ஒற்றர்களைக் ‘குதபுருஷர்கள்’ என்றழைத்தவர் யார்?

A) சந்திரகுப்த மௌரியர்

B) பிந்துசாரர்

C) அசோகர்

D) கௌடில்யர்

விளக்கம்: மௌரியர் மன்னர்களான சந்திரகுப்த மௌரியர், பிந்துசாரர் ஆகியோர் ஒற்றர்களை நியமித்து நாட்டைக் கண்காணித்தனர். அசோகர் ஒற்றர் முறையைப் பரவலாக்கினார். மௌரியர் கால ஒற்றர்களைக் ‘குதபுருஷர்கள்’ என்றழைத்தவர் கௌடில்யர்.

42) மௌரியர் காலச் சமூகநிலையில சரியானக் கூற்றைத் தேர்க.

A) மௌரியர் காலத்தில், சமூகத்தில் நிலவியிருந்த வர்ணாஸ்ரமமுறை மேலும் வலுவடைந்தது.

B) இந்தியாவில் அலெக்சாந்தரின் படையெடுப்பிற்குப் பின்னர் கிரேக்கர்கள் இந்தியர்களுடன் மண உறவு கொண்டனர். இதனால் இந்தோ-கிரேக்கம் என்ற புதிய சமூகப் பிரிவு தோன்றியது.

C) கிரேக்கப் பண்பாட்டுப் பேறுகள் இந்தியப் பண்பாட்டுக் கூறுகளுடன் ஒன்றிணைந்தன.

D) அனைத்தும் சரி

விளக்கம்: மௌரியர் காலத்தில், சமூகத்தில் நிலவியிருந்த வர்ணாஸ்ரமமுறை மேலும் வலுவடைந்தது.

இந்தியாவில் அலெக்சாந்தரின் படையெடுப்பிற்குப் பின்னர் கிரேக்கர்கள் இந்தியர்களுடன் மண உறவு கொண்டனர். இதனால் இந்தோ-கிரேக்கம் என்ற புதிய சமூகப் பிரிவு தோன்றியது.

இதனால் கிரேக்கப் பண்பாட்டுப் பேறுகள் இந்தியப் பண்பாட்டுக் கூறுகளுடன் ஒன்றிணைந்தன.

43) சாரநாத் கற்றூணில் உள்ள எந்த விலங்கு புத்தரின் சாதனைகளைக் குறிக்கிறது?

A) சிங்கம்

B) குதிரை

C) யானை

D) எருது

விளக்கம்: சாரநாத் கற்றூணில் காணப்படும் சிங்கம், சாக்கியர்களின் சின்னமாக விளங்கும். இது, சித்தார்த்தரின் (புத்தரின்) சாதனைகளைக் குறிக்கிறது.

44) மௌரியர் காலத்தில் புகழ்பெற்றிருந்த பல்கலைக்கழகம் எது?

A) தட்சசீலம்

B) தஞ்சாவூர்

C) நாளந்தா

D) பனாரஸ்

விளக்கம்: மௌரியர் காலத்தில் புகழ்பெற்றிருந்த தட்சசீலப்பல்கலைக்கழகம் பல கல்வியாளர்களையும் ஆட்சியாளர்களையும் உருவாக்கியது.

45) மௌரியர் காலச் சமூகநிலையில் தவறான கூற்றைத் தேர்க.

A) மௌரியர் காலத்தில் பெண்ணாதிக்கச் சமூகம் வலுப்பெற்றது.

B) உயர்குடிப் பெண்கள் சுயம்வரம் உள்ளிட்ட உரிமைகளைப் பெற்றிருந்தனர்.

C) அச்சமூக மக்கள் பருத்தி, கம்பளி போன்ற ஆடைகளை உடுத்தினர்.

D) அவர்கள் தங்கம், வெள்ளி போன்ற அணிகலன்களையும் அணிந்தனர்.

விளக்கம்: மௌரியர் காலத்தில் ஆணாதிக்கச் சமூகம் வலுப்பெற்றது. ஆனால், உயர்குடிப் பெண்கள் சுயம்வரம் உள்ளிட்ட உரிமைகளைப் பெற்றிருந்னர். அச்சமூக மக்கள் பருத்தி, கம்பளி போன்ற ஆடைகளை உடுத்தினர். அவர்கள் தங்கம், வெள்ளி போன்ற அணிகலன்களையும் அணிந்தனர்.

46) மௌரியர் காலத்தில் அரசின் விவசாயப் பண்ணைகளை நிர்வகித்த அதிகாரி யார்?

A) நியார்கஸ்

B) சித்தியஷா

C) நகரிகா

D) கிராமணி

விளக்கம்: மௌரியர் காலத்தில் வேளாண்மை முக்கியத் தொழிலாக இருந்தது. விளைச்சல் அடிப்படையில் மக்களின் பருவ மற்றும் ஆண்டு வரிகள் விதிக்கப்பட்டன. அரசின் விவசாயப் பண்ணைகளைச் ‘சித்தியஷா’ என்ற அதிகாரி நிர்வகித்தார்.

47) மௌரியர் கால கைத்தொழில்கள், மட்பாண்ட உற்பத்தித் தொழில் போன்றவை பற்றிப் புகழ்ந்து குறிப்பிடும் கிரேக்கர் யார்?

A) நியார்கஸ்

B) சித்தியஷா

C) நகரிகா

D) மெகஸ்தனிஸ்

விளக்கம்: நியார்கஸ் என்ற கிரேக்கர் மௌரியர் கால கைத்தொழில்கள், மட்பாண்ட உற்பத்தித் தொழில் போன்றவை பற்றிக் புகழ்ந்து குறிப்பிடுகிறார்.

48) மௌரியர் காலத்தில் பெண்கள் பல்வேறு விதமான காதாணிகளை உற்பத்தி செய்ததாக குறிப்பிடுபவர் யார்?

A) நியார்கஸ்

B) அர்ரியன்

C) நகரிகா

D) மெகஸ்தனிஸ்

விளக்கம்: பெண்கள் பல்வேறு விதமான காதணிகளை அணிந்திருந்தாகவும் உற்பத்தி செய்ததாகவும் அர்ரியன் என்பவர் குறிப்பிடுகிறார்.

49) மௌரியர் காலத்தில் எந்த பீடபூமியிலிருந்து இரும்பு, செம்பு, வெள்ளி போன்ற உலோகங்கள் வெட்டி எடுக்கப்பட்டன?

A) தக்காண பீடபூமி

B) மாளவ பீடபூமி

C) சோட்டநாக்பூர் பீடபூமி

D) லடாக் பீடபூமி

விளக்கம்: கனிம வளங்கள் நிறைந்திருந்த சோட்டநாக்பூர் பீடபூமியிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட இரும்பு, செம்பு, வெள்ளி போன்ற உலோகங்களைக் கொண்ட ஆயுதங்களும், அணிகலன்களும் தயாரிக்கப்பட்டன.

50) கூற்றுகளை ஆராய்க.

1. மௌரியர் காலத்தில் உலோக வேலை செய்வோர், தச்சுவேலை செய்வோர், மீன்பிடித் தொழில் செய்வோர் போன்றோர்கள் சமூகநிலையிலும், பொருளாதார நிலையிலும் முக்கியத்துவம் பெற்றிருந்தனர்.

2. சுரங்கத் தொழிலை அரசே ஏற்று நடத்தியது

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. மௌரியர் காலத்தில் உலோக வேலை செய்வோர், தச்சுவேலை செய்வோர், மீன்பிடித் தொழில் செய்வோர் போன்றோர்கள் சமூகநிலையிலும், பொருளாதார நிலையிலும் முக்கியத்துவம் பெற்றிருந்தனர்.

2. சுரங்கத் தொழிலை அரசே ஏற்று நடத்தியது.

51) சாரநாத் கற்றூணில் உள்ள எந்த விலங்கு புத்தரின் துறவு வாழ்க்கையை குறிக்கிறது?

A) சிங்கம்

B) குதிரை

C) யானை

D) எருது

விளக்கம்: சாரநாத் கற்றூணில் காணப்படும் குதிரை, சித்தார்த்தர் (புத்தர்) ஆசைகளைத் துறந்து, அரண்மனையைவிட்டு வெளியேறிய நிகழ்வைக் குறிக்கிறது.

52) மௌரியர் காலத்தில் சிறப்பு பெற்றிருந்த துறைமுகம் எது?

A) ஸ்ரேனி

B) தாமிரலிப்தி

C) கர்சபனா

D) பனா

விளக்கம்: தாமிரலிப்தி என்ற துறைமுகம் சிறப்பு பெற்றது. பருத்தி, கம்பளியாலான ஆடைகள் முத்துக்கள் போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன. தங்கம், வெள்ளி போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன.

53) மௌரியர் காலத்தில் வணிகர்கள் பயன்படுத்திய தங்க நாணயம் எது?

A) நிஷ்கா

B) தாமிரலிப்தி

C) கர்சபனா

D) பனா

விளக்கம்: மௌரியர் காலத்தில் வணிகர்கள் கிரீஸ், சிரியா, எகிப்து போன்ற நாடுகளுடன் வாணிப உறவு வைத்திருந்தனர். வணிக பரிமாற்றத்தில் ‘நிஷ்கா’ என்ற தங்க நாணயம் பயன்படுத்தப்பட்டது.

54) மௌரியர் காலத்தில் வணிகர்கள் பயன்படுத்திய வெள்ளி நாணயம் எது?

A) நிஷ்கா

B) தாமிரலிப்தி

C) கர்சபனா

D) பனா

விளக்கம்: மௌரியர் காலத்தில் வணிகர்கள் நிஷ்கா என்ற தங்க நாணயமும், மயில், குன்று, வளர்பிறை பொறிக்கப்பட்ட ‘பனா’ என்ற வெள்ளி நாணயமும், ‘கர்சபனா’ என்றழைக்கப்பட்டன செப்பு நாணயமும் பயன்படுத்தினர்.

55) மௌரியர்கள் கால சமயநிலை பற்றிய கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க.

A) இந்து, சமணம், பௌத்தம் ஆகிய சமயங்களை மக்கள் பின்பற்றினர்

B) கிருஷ்ணர், பலராமன், சிவபெருமான், இந்திரன் போன்ற கடவுளை மக்கள் வழிபட்டனர்.

C) கங்கை, யமுனை போன்ற நதிகளைத் தாயாகக் கருதி மக்கள் வழிபட்டனர்

D) அனைத்தும் சரி

விளக்கம்: இந்து, சமணம், பௌத்தம் ஆகிய சமயங்களை மக்கள் பின்பற்றினர். கிருஷ்ணர், பலராமன், சிவபெருமான், இந்திரன் போன்ற கடவுளை மக்கள் வழிபட்டனர். கங்கை, யமுனை போன்ற நதிகளைத் தாயாகக் கருதி மக்கள் வழிபட்டனர்.

56) மௌரியர் கால நீதிமன்றங்கள் பற்றி தனது நூலில் குறிப்பிபட்டுள்ளவர் யார்?

A) மெகஸ்தனிஸ்

B) கௌடில்யர்

C) அசோகர்

D) A மற்றும் B

விளக்கம்: மௌரியர் கால நீதிமன்றங்கள் பற்றிக் கௌடில்யர் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். இவரது நூல் அர்த்தசாஸ்திரம் ஆகும். இவர் சாணக்கியர் எனவும் அழைக்கப்படுகிறார்.

57) சந்திரகுப்த மௌரியர் எந்த இடத்தில் உயிர் துறந்தார்?

A) மைசூர்

B) சிரவணபெலகோலா

C) சந்திரபாஸ்டி

D) சல்லேகனம்

விளக்கம்: சந்திரகுப்த மௌரியர், தற்போதைய கர்நாடகத்தின் சிரவணபெலகோலா (மைசூருக்கு அருகில்) என்ற இடத்தில் உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தார். அவரது இறப்பிற்குப்பின் ‘சந்திரபாஸ்டி’ என்ற இடத்தில் அவருக்குக் கோயில் கட்டப்பட்டது.

58) கூற்று: சல்லேகானம்- இது பௌத்தத்துறவிகள் பின்பற்றும் உண்ணா நோன்பு முறை

காரணம்: தம் வாழ்வைத் தாமாகவே முடித்துக் கொள்ள விரும்பும் துறவிகள் வடதிசையை நோக்கி உண்ணா நோன்பிருந்து உயிர்நீங்கும் வரை கடுந்தவம் செய்வதை இந்நோன்பு முறை குறிப்பிடுகிறது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு. மேலும் காரணம் சரியான விளக்கம்

C) கூற்று தவறு. மேலும் காரணம் சரியான விளக்கமல்ல

D) கூற்று சரி. மேலும் காரணம் சரியான விளக்கமல்லை

விளக்கம்: சல்லேகானம் – இது சமணத்துறவிகள் பின்பற்றும் உண்ணா நோன்பு முறை. தம் வாழ்வைத் தாமாகவே முடித்துக் கொள்ள விரும்பும் துறவிகள் வடதிசையை நோக்கி உண்ணா நோன்பிருந்து உயிர்நீங்கும் வரை கடுந்தவம் செய்வதை இந்நோன்பு முறை குறிப்பிடுகிறது.

59) கலிங்கப்போர் எப்போது நடைபெற்றது?

A) கி.பி.261

B) கி.பி.361

C) கி.மு.261

D) கி.மு.361

விளக்கம்: கி.மு(பொ.ஆ.மு) 261-இல் நடைபெற்ற கலிங்கப்போரில் அசோகர் வெற்றிபெற்றார். கலிங்கம் என்பது தற்போதைய ஒடிசா மாநிலமாகும்.

60) அசோகர் யாரால் பௌத்த சமயத்திற்கு மாற்றப்பட்டார்?

A) ஸ்ரேனி

B) பத்ரபாகு

C) உபகுப்தர்

D) எவருமில்லை

விளக்கம்: கி.மு(பொ, ஆ.மு) 261-இல் நடைபெற்ற கலிங்கப்போர் வெற்றிக்குப்பின் அசோகர், உபகுப்தர் என்ற சமயத்துறவிகளால் பௌத்த சமயத்திற்கு மாற்றப்பட்டார்.

61) பௌத்த சமயத்தையும் அறக்கருத்துகளையும் பரப்பும் ‘தர்மமகாமாத்திரர்கள்’ என்ற அதிகாரிகளை நியமித்தவர் யார்?

A) சந்திர குப்ரதர்

B) அசோகர்

C) பாபர்

D) சாணக்கியர்

விளக்கம்: அசோகர், பௌத்த சமயத்தையும், அறக்கருத்துக்களையும் பரப்ப ‘தர்மமகாமாத்திரர்கள்’ என்ற அதிகாரிகளை நியமித்தார். பௌத்த சமயத்தை மக்களின் சமயமாக பரப்புவதில் ஈடுபட்டார்.

62) அசோகர் தன் தலைநகரான பாடலிபுத்திரத்தில் எத்தனையாவது புத்த சமய மாநாட்டை நடத்தினார்?

A) முதல்

B) இரண்டாம்

C) மூன்றாம்

D) நான்காம்

விளக்கம்: அசோகர் தன் தலைநகரான பாடலிபுத்திரத்தில் ‘மெக்காலி புத்ததிசா’ என்பவர் தலைமையில் மூன்றாம் புத்த சமய மாநாட்டைக் கூட்டினார். மேலும் திபெத், சீனா, பர்மா போன்ற நாடுகளுக்குப் பௌத்த சமயத்தைப் பரப்ப துறவிகளை அனுப்பினார்.

63) இலங்கையில் பௌத்த சமயத்தைப் பரப்ப தன் மகன் மற்றும் மகளை அங்கு அனுப்பியவர் யார்?

A) சந்திருகுப்த மௌரியர்

B) அசோகர்

C) பாபர்

D) சாணக்கியர்

விளக்கம்: இலங்கையில் பௌத்த சமயத்தைப் பரப்ப தன் மகன் மகேந்திரனையும், மகள் சங்கமித்திரையையும் அனுப்பினார் அசோகர். பௌத்த சமயம் உலக சமயமாக மாற்றப்படுவதில், அசோகர் முக்கிய பங்கு வகித்தார்.

64) கூற்றுகளை ஆராய்க.

1. அசோகர், புத்தரின் வாழ்வுடன் தொடர்புடைய லும்பினி, ரும்மிண்டி, நீக்லிவா, கயா, குசிநரகம் ஆகிய இடங்களுக்குச் சென்று வழிபட்டார்.

2. அசோகர் பரப்பிய அவரது கோட்பாடுகள் “அசோக தம்மம்” எனப்பட்டன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. அசோகர், புத்தரின் வாழ்வுடன் தொடர்புடைய லும்பினி, ரும்மிண்டி, நீக்லிவா, கயா, குசிநரகம் ஆகிய இடங்களுக்குச் சென்று வழிபட்டார்.

2. அசோகர் பரப்பிய அவரது கோட்பாடுக்ள “அசோக தம்மம்” எனப்பட்டன.

65) அசோக கோட்பாடுகளில் (அசோக தம்மம்) சரியானதைத் தேர்வு செய்க.

A) தாய் தந்தைக்குப் பணிவிடை செய்தல். அகிம்சையைக் கடைபிடித்தல், உண்மையை நேசித்தல், ஆசிரியர்களைப் போற்றுதல், உறவினரை மதிப்புடன் நடத்துதல்

B) சமயக் சடங்குகளைத் தவிர்ப்பதுடன், திருவிழாக்களில் விலங்குகள் பலியிடப்படுவதைத் தவிர்த்தல் தடுத்தல்

C) தர்மயாத்திரை மேற்கொண்டு தர்மத்தை பரப்புதல்

D) அனைத்தும் சரி

விளக்கம்: தாய் தந்தைக்குப் பணிவிடை செய்தல். அகிம்சையைக் கடைபிடித்தல், உண்மையை நேசித்தல், ஆசிரியர்களைப் போற்றுதல், உறவினரை மதிப்புடன் நடத்துதல்

சமயக் சடங்குகளைத் தவிர்ப்பதுடன், திருவிழாக்களில் விலங்குகள் பலியிடப்படுவதைத் தவிர்த்தல் தடுத்தல்

தர்மயாத்திரை மேற்கொண்டு தர்மத்தை பரப்புதல்

66) அசோகர் கோட்பாடுகளில் (அசோக தம்மம்) சரியானதைத் தேர்வு செய்க

A) பணியாளர்களையும், கைதிகளையும் அரசின் அதிகாரிகள் மனிதாபிமானத்துடன் நடத்துதல்.

B) மன்னரையும், பிராமணர்களையும், சான்றோர்களையும் போற்றுதல், சமய சகிப்புத்தன்மையைக் கடைபிடித்தல்

C) போரைத்தவிர்த்து ‘தர்மத்தின் வழி நடந்து, வாழ்வில் வெற்றி பெறுதல்’

D) அனைத்தும் சரி

விளக்கம்: பணியாளர்களையும், கைதிகளையும் அரசின் அதிகாரிகள் மனிதாபிமானத்துடன் நடத்துதல்.

மன்னரையும், பிராமணர்களையும், சான்றோர்களையும் போற்றுதல், சமய சகிப்புத்தன்மையைக் கடைபிடித்தல்

போரைத்தவிர்த்து ‘தர்மத்தின் வழி நடந்து, வாழ்வில் வெற்றி பெறுதல்’

போன்றவற்றைக் கடைபிடித்தல்

67) மௌரியர் காலத்தில், இந்தியக் கிழக்குப் பகுதியில் எந்த மொழி அரசாங்க மொழியாக இருந்தது?

A) சமஸ்கிருதம்

B) பாலி

C) பிராகிருதம்

D) தமிழ்

விளக்கம்: மௌரியரின் ஆட்சிக்காலத்தில் சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம் போன்ற மொழிகள் வட இந்தியா முழுவதும் சிறப்புப் பெற்றிருந்தன. தமிழ் தென்முனையில் வழக்கிலிருந்தது. இந்திய கிழக்குப் பகுதியில் பிராகிருத மொழியே அரசாங்க மொழியாக இருந்தது.

68) மௌரியர் காலத்தில் இலக்கியத்திற்குச் சமஸ்கிருதமும், பேச்சுவழக்கிற்கு எந்த மொழியும் பயன்படுத்தப்பட்டன?

A) சமஸ்கிருதம்

B) பாலி

C) பிராகிருதம்

D) தமிழ்

விளக்கம்: மௌரியர் காலத்தில் இலக்கியத்திற்குச் சமஸ்கிருதமும், பேச்சுவழக்கிற்கு பாலி மொழியும் மக்களிடத்தில் எளிமையாக கையாளப்பட்டன.

69) மௌரியக் கால இலக்கியப் படைப்புளை பொருத்துக

அ. கௌடில்யர் – 1. வாசவதத்தா நாட்டிய தாரா (நாட்டிய கலை)

ஆ. பத்ரபாகு – 2. அஸ்டத்யாயி

இ. வ்யாதி – 3. வியாக்கரணம் (இலக்கணம்)

ஈ. பாணினி – 4. கல்பசூத்திரம்

உ. சுபந்து – 5. அர்த்த சாஸ்திரம்

A) 5, 4, 3, 2, 1

B) 5, 4, 2, 3, 1

C) 5, 4, 1, 3, 2

D) 5, 3, 4, 1, 2

விளக்கம்: கௌடில்யர் – அர்த்த சாஸ்திரம்

பத்ரபாகு – கல்பசூத்திரம்

வ்யாதி – வியாக்கரணம் (இலக்கணம்)

பாணினி – அஸ்டத்யாயி

சுபந்து – வாசவதத்தா நாட்டிய தாரா (நாட்டிய கலை).

70) பொருத்துக.

அ. பிங்கலர் – 1. சந்த சூத்திரங்கள்

ஆ. வாமனர் – 2. காவியலங்கார சூத்திரவிருத்தி

இ. சிலாஸின் கிருசாஸ்வர் – 3. நாடக சூத்திரங்கள்

ஈ. பௌத்த சமயநூல் – 4. திரிபீடகங்கள்

உ. வேதாந்த நூல்கள் – 5. கிருஹ்ய சூத்திரம்

A) 1, 2, 4, 5, 3

B) 1, 4, 3, 2, 5

C) 5, 2, 4, 1, 3

D) 1, 2, 3, 4, 5

விளக்கம்: பிங்கலர் – சந்த சூத்திரங்கள்

வாமனர் – காவியலங்கார சூத்திரவிருத்தி

சிலாஸின் கிருசாஸ்வர் – நாடக சூத்திரங்கள்

பௌத்த சமயநூல் – திரிபீடகங்கள்

வேதாந்த நூல்கள் – கிருஹ்ய சூத்திரம்.

71) மௌரியர் காலத்தில் இறந்தவர்களின் (பௌத்த ஞானிகள் மற்றும் பௌத்த அரசர்கள்) நினைவாக எழுப்பப்பட்ட வட்ட வடிவக் குவிமாடம் கொண்ட கட்டிடங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

A) ஸ்தூபிகள்

B) சைத்தியங்கள்

C) விகாரங்கள்

D) கோயில்மாடம்

விளக்கம்: மௌரியர் காலத்தில் இறந்தவர்கள் (பௌத்த ஞானிகள், பௌத்த சமயத்தைப் பின்பற்றிய அரசர்கள்) நினைவாக எழுப்பப்பட்ட வட்ட வடிவக் குவிமாடம் கொண்ட கட்டிடங்கள் ‘ஸ்தூபிகள்’ எனப்பட்டன. மௌரியர்கள் ஸ்தூபிகள் அமைப்பதில் அதிக ஆர்வம் காட்டினர். அவர்கள் காலத்தில் ஸ்தூபிகள் கட்டப்பட்டன.

72) பௌத்தர்களின் தியானக் கூடங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

A) ஸ்தூபிகள்

B) சைத்தியங்கள்

C) விகாரங்கள்

D) கோயில்மாடம்

விளக்கம்: பௌத்தர்களின் தியானக் கூடங்கள் “சைத்தியங்கள்” எனப்பட்டன. பௌத்த குருமார்களின் விடுதிகள் ‘விகாரங்கள்’ எனப்பட்டன.

73) சாஞ்சி ஸ்தூபி எங்குள்ளது?

A) உத்திரப்பிரதேசம்

B) மகாராஷ்டிரா

C) மத்திய பிரதேசம்

D) குஜராத்

விளக்கம்: அசோகர் காலத்தில் மத்தியப் பிரதேசத்திலுள்ள போபால் அருகே சாஞ்சி என்ற இடத்தில் கட்டப்பட்ட ஸ்தூபி புகழ்பெற்றதாகும். இது அடர்வெண்சாம்பல் நிறக்கற்களால் கட்டப்பட்டது.

74) சாஞ்சி ஸ்தூபியின் உயரம் என்ன?

A) 121 அடி

B) 121.5 அடி

C) 77 அடி

D) 77.5 அடி

விளக்கம்: சாஞ்சி ஸ்தூபி 121.5 அடி அகலமும், 77.5 அடி உயரமும் கொண்டது. இதன் 4 பக்கங்களிலும் உயரமான நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தூண்கள் யாவும் சிற்பக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். கல்லாலான ஸ்தூபிகளையும், குகைக் கோயில்களையும் கட்டடங்களையும் மெருகேற்றிப் பளபளப்பாக இன்றும் கண்ணாடிபோல் மின்னும் வகையில் செய்துள்ளனர்.

75) அசோகர் தனது எத்தனையாவது தூண் கல்வெட்டில் “தர்மமானது நெடுநாள் வாழும் பொருட்டு எங்கெல்லாம் கற்றூண்களும் கற்பாறைகளும் காணப்படுகின்றனவோ அங்கெல்லாம் தர்ம ஆணைகள் பொறிக்கப்படுவதாக” என்று கூறியுள்ளார்?

A) 3-வது

B) 5-வது

C) 7-வது

D) 9-வது

விளக்கம்: அசோகர் தன்னுடைய 7-வது தூண் கல்வெட்டில் “தர்மமானது நெடுநால் வாழும் பொருட்டு எங்கெல்லாம் கற்றூண்களும் கற்பாறைகளும் காணப்படுகின்றனவோ அங்கெல்லாம் தர்ம ஆணைகள் பொறிக்கப்படுவதாக” என்று கூறியுள்ளார். ஆகவே, பல இடங்களில் காணப்படும் தூண்களின் அமைப்பையும், இடத்தையும் கருதி, அங்கெல்லாம் கல்வெட்டுகளையும் பொறிக்கச் செய்தார்.

76) சாஞ்சி, ஸ்தூபியைப் பின்பற்றி மற்றொரு ஸ்தூபி எந்த இடத்தில் அசோகரால் கட்டப்பட்டது?

A) சீனா

B) திபெத்

C) சாரநாத்

D) இலங்கை

விளக்கம்: சாஞ்சி ஸ்தூபியைப் பின்பற்றி மற்றொரு ஸ்தூபி இலங்கையிலுள்ள அனுராதபுரத்தில் கட்டப்பட்டது. சாரநாத், லௌரியாநந்தன்கர், இராம்பூர்வா போன்ற இடங்களில் எழுப்பப் பெற்றக் கற்றூண்கள் சிறப்பானவை. இத்தூண்களில் திமிலுடன் கூடிய எருது, சிஙக்ம் போன்றவற்றிலான உருவங்கள் பொறிக்கபப்பட்டுள்ளன.

77) சாரநாத் கற்றூண் யாருடைய படைப்பு?

A) சந்தேலர்

B) மௌரியர்

C) முகலாயர்

D) ஆங்கிலேயர்

விளக்கம்: மௌரியர் தங்கள் கலை, கட்டடக்கலையால் மிகவும் புகழ்பெற்றனர். சாரநாத்தில் காணப்படும் கற்றூண் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது அசோகரது காலத்தில் கட்டப்பட்டது.

78) சாரநாத் கற்றூண் பற்றிய சரியான கூற்றைத் தேர்க.

A) இத்தூணின் அடிப்பகுதி கவிழ்ந்த நிலையிலுள்ளது. ஒரு தாமரை மலர் அல்லது மணி போல் உள்ளது.

B) அதற்கு மேல் 4 சக்கரங்களைப் பக்கவாட்டில் கொண்ட வட்ட வடிவ முரசு போன்ற அமைப்பு காணப்படுகிறது.

C) முரசின் மேல்பகுதியில் 4 சிங்கங்கள் ஒன்றையொன்று பின்புறம் ஒட்டி நிற்பதுபோல அமைந்துள்ளன.

D) அனைத்தும் சரி

விளக்கம்: இத்தூணின் அடிப்பகுதி கவிழ்ந்த நிலையிலுள்ளது ஒரு தாமரை மலர் அல்லது மணி போல் உள்ளது.

அதற்கு மேல் 4 சக்கரங்களைப் பக்கவாட்டில் கொண்ட வட்ட வடிவ முரசு போன்ற அமைப்பு காணப்படுகிறது.

முரசின் மேல்பகுதியில் 4 சிங்கங்கள் ஒன்றையொன்று பின்புறம் ஒட்டி நிற்பதுபோல அமைந்துள்ளன.

79) சாரநாத் கற்றூணில் காணப்படும் ‘தர்ம சக்கரம்’ எத்தனை ஆரங்களை உடையது?

A) 12

B) 18

C) 24

D) 32

விளக்கம்: தர்ம சக்கரம் 24 ஆரங்கள் உடையது. மேலும், அதன் 4 பக்கங்களிலும் சிங்கம், குதிரை, எருது மற்றும் யானை உருவங்களும் காணப்படுகின்றன. மௌரியர்கால புகழை வெளிப்படுத்தும் இந்தக் கலைப்படைப்பு, நமது நாட்டின் தேசிய சின்னத்திலும் பணத்தாள் மற்றும் நாணயங்களிலும் இடம்பெற்றுள்ளது. தர்மசக்கரம் நம் தேசியக் கொடியை அலங்கரிக்கிறது.

80) புத்தரின் அன்னை மாயாதேவி கனவில் வெள்ளை யானையைக் கண்டதை நினைவுப்படுத்துவதால் சாரநாத் கற்றூணில் அமைந்த விலங்கு எது?

A) சிங்கம்

B) குதிரை

C) யானை

D) எருது

விளக்கம்: சாரநாத் கற்றூணில் யானை, திமிலுடன் கூடிய எருது, குதிரை, சிங்கம் ஆகிய விலங்குகளின் உருவங்கள் ஓடும் நிலையில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மூலம் புத்தர் வாழ்வில் நடந்த 4 முக்கிய நிகழ்வுகள் குறிப்பிடப்படுகின்றன. அதில் ‘யானை’ புத்தரின் அன்னை மாயாதேவி கனவில் வெள்ளை யானை கண்டதை நினைவுப்படுத்துகிறது.

81) சாரநாத் கற்றூணில் உள்ள எந்த விலங்கு புத்தரின் இளமைக்கால ஆசைகளைத் தெரிவிக்கிறது?

A) சிங்கம்

B) குதிரை

C) யானை

D) எருது

விளக்கம்: சாரநாத் கற்றூணில் காணப்படும் திமிலுடன் கூடிய எருது, இளவரசர் சித்தார்த்தரின் (புத்தர்) இளமைக்கால ஆசைகளைத் தெரிவிக்கிறது.

82) மௌரியர் காலத்தில் வணிகர்கள் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்ட வணிகக்குழுக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

A) ஸ்ரேனி

B) தாமிரலிப்தி

C) கர்சபனா

D) பனா

விளக்கம்: வணிகர்கள் தங்களுக்குள் ‘ஸ்ரேனி’ என்ற வணிகக் குழுக்களை ஏற்படுத்திக் கொண்டனர். தட்சசீலம் கௌசாம்பி, பாடலிபுத்திரம், உஜ்ஜனி போன்ற நகரங்கள், மௌரியர் கால முக்கிய வணிக மையங்களாகத் திகழ்ந்தன.

83) மௌரியர் காலத்தில், இந்தியச் சமூகத்தில் தத்துவஞானிகள் தோட்டக்காரர்கள் போன்ற 7 பிரிவினர் இருந்ததாகக் குறிப்பிடுபவர் யார்?

A) மெகஸ்தனிஸ்

B) கௌடில்யர்

C) அசோகர்

D) விசாதத்தர்

விளக்கம்: மெகஸ்தனிஸ் இந்தியச் சமூகத்தில் தத்துவஞானிகள், தோட்டக்காரர்கள், கால்நடை வளர்ப்போர், கைவினைஞர்கள், இராணுவ வீரர்கள், கண்காணிப்பாளர்கள், மதிப்பீட்டாளர்கள் ஆகிய 7 பிரிவினர் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.

84) ‘தசரதன்’ யாருடைய பெயரன்?

A) அசோகர்

B) பாயர்

C) ஹமாயூன்

D) ஜஹாங்கீர்

விளக்கம்: அசோகர் மற்றும் அவரது பெயரன் தசரதன் ஆகியோரால் அவர்களுக்கு கொடையாக அளிக்கப்பட்டுள்ள ‘பராபர்குகைகள்’ நம் நாட்டின் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாகத் திகழ்கின்றன.

85) இந்தியப் பண்பாட்டிற்கு மௌரியரின் கொடை என்ன?

A) மௌரியர்களின் ஆட்சி முறையில் மைய அரசு தலைமைச் செயலகம், மாநில அரசுகளின் நிதி, நீதி நிருவாகம், பொதுப்பணித்துறை, நகராட்சி முறை போன்றன நமக்கு அளிக்கப்பட்ட கொடையாகும்.

B) தட்சசீலம் உஜ்ஜயினி, காசி போன்ற மௌரியர் கால பல்கலைக்கழகங்கள் இன்றும் நமது பண்பாட்டு மையமாக சிறந்து விளங்குகின்றன.

C) இந்து தர்மக் கோட்பாடுகளையும் அன்பு, அஹிம்சை போன்ற பௌத்த சமய நெறிகளையும் வெளிநாடுகளில் பரப்பி, இந்தியப் பண்பாட்டிற்குப் பெருமை சேர்த்தனர்.

D) அனைத்தும் சரி

விளக்கம்: மௌரியர்களின் ஆட்சி முறையில் மைய அரசு தலைமைச் செயலகம், மாநில அரசுகளின் நிதி, நீதி நிருவாகம், பொதுப்பணித்துறை, நகராட்சி முறை போன்றன நமக்கு அளிக்கப்பட்ட கொடையாகும்.

தட்சசீலம் உஜ்ஜயினி, காசி போன்ற மௌரியர் கால பல்கலைக்கழகங்கள் இன்றும் நமது பண்பாட்டு மையமாக சிறந்து விளங்குகின்றன.

இந்து தர்மக் கோட்பாடுகளையும் அன்பு, அஹிம்சை போன்ற பௌத்த சமய நெறிகளையும் வெளிநாடுகளில் பரப்பி, இந்தியப் பண்பாட்டிற்குப் பெருமை சேர்த்தனர்.

86) இந்தியப் பண்பாட்டிற்கு மௌரியரின் கொடை என்ன?

A) மௌரியர் கல்வி, கலை, இலக்கிய வளர்ச்சியில் கவனம் செலுத்தியது போன்று, பிராகிருதம் (ஆட்சிமொழி), சமஸ்கிருதம் (இலக்கியமொழி), பாலி (எளிய மக்கள் போசும் மொழி) போன்ற மொழிகளின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்தனர்.

B) கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம், இலக்கண நூலான கியாக்கரணம் போன்ற நூல்கள் இந்தியப் பண்பாட்டிற்கு மௌரியர் காலத்தில் வழங்கப்பட்ட கொடைகளாகும்.

C) அசோகரின் தர்மக்ககோட்பாடுகளான அகிம்சை, சத்தியம், தயை (இரக்கம்), தானம் போன்றவை இந்தியப் பண்பாட்டிற்கு வழங்கப்பட்ட கொடையாகும்.

D) அனைத்தும் சரி

விளக்கம்: மௌரியர் கல்வி, கலை, இலக்கிய வளர்ச்சியில் கவனம் செலுத்தியது போன்று, பிராகிருதம் (ஆட்சிமொழி), சமஸ்கிருதம் (இலக்கியமொழி), பாலி (எளிய மக்கள் போசும் மொழி) போன்ற மொழிகளின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்தனர்.

கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம், இலக்கண நூலான கியாக்கரணம் போன்ற நூல்கள் இந்தியப் பண்பாட்டிற்கு மௌரியர் காலத்தில் வழங்கப்பட்ட கொடைகளாகும்.

அசோகரின் தர்மக்ககோட்பாடுகளான அகிம்சை, சத்தியம், தயை(இரக்கம்), தானம் போன்றவை இந்தியப் பண்பாட்டிற்கு வழங்கப்பட்ட கொடையாகும்.

87) யூச்சி மரபைச் சார்ந்தவர்கள் யார்?

A) மௌரியர்

B) குஷாணர்

C) சாளுக்கியர்

D) சந்தேலர்

விளக்கம்: குஷாணர்கள் என்போர் யூச்சி என்ற மரபைச் சார்ந்தவர்கள். இவர்களின் காலம் இந்தியப் பண்பாட்டு வரலாற்றில் கட்டடக்கலையில் சிறப்புற்று விளங்கிய காலமாகும்.

88) குஷாணர்களில் தலைச்சிறந்த மன்னர் யார்?

A) கனிஷ்கர்

B) முதலாம் காட்பீசஸ்

C) வாசுதேவர்

D) இரண்டாம் காட்பீசஸ்

விளக்கம்: குஷாணர்களில் தலைச்சிறந்த மன்னர் ‘கனிஷ்கர்’ இவரது காலத்தில் இந்தியப் பண்பாட்டில் காந்தாரக்கலையும், பௌத்த சமயமும் வளர்ச்சி பெற்றிருந்தன.

89) எந்த நூல் குஷாணர்களின் சமய நிலையைப் பற்றித் தெரிவிக்கிறது?

A) இண்டிகா

B) அர்த்தசாஸ்திரம்

C) மகாவம்சம்

D) மகாவிபாஷம்

விளக்கம்: குஷாணர் காலப் பண்பாட்டுக்கான சான்றுகள்:

1. குஷாணர் வெளியிட்ட நாணயங்கள்

2. பௌத்த சமய நூலான மகாவிபாஷம், குஷாணர்களின் சமய நிலையைப் பற்றித் தெரிவிக்கிறது.

3. காந்தாரக்கலை குஷாணர்களின் கலையையும், பண்பாட்டையும் வெளிப்படுத்துகிறது.

4. சீனப்பயணி யுவான்சுவாங்கின் பயணக்குறிப்புதான், அவர்களின் காலவரிசையை அறிந்துகொள்ள உதவியாக உள்ளன.

90) குஷாண மரபை (யூச்சி மரபு) தோற்றுவித்தவர் யார்?

A) முதரலாம் காட்பீசஸ்

B) கனிஷ்கர்

C) இரண்டாம் காட்பீசஸ்

D) வாசுதேவர்

விளக்கம்: முதலாம் காட்பீசஸ் – மரபைத் தோற்றுவித்தவர்

கனிஷ்கர் – புகழ்பெற்ற மன்னர்

வாசுதேவர் – கடைசி மன்னர்

91) பிற்கடை என்பது எவ்வகை உரிமை?

A) சொத்துரிமை

B) நில பிரபுத்துவ உரிமை

C) வாரிசு உரிமை

D) திருமண உரிமை

விளக்கம்: குஷாணர்களின் ஆட்சி முறையில், அரசனே நாட்டின் தலைவன். அரசர்கள் மகேசுவரன், தேவபுத்திரன் போன்ற விருதுப்பெயர்களைச் சூட்டிக்கொண்டனர். அரசனுக்குப் பின் மூத்த மகன் அரசனாவது பிற்கடை (வாரிசு) உரிமையாகும்.

92) குஷாணர் காலத்தில், யார் நிர்வாகத்தில் முக்கிய இடம் வகித்தார்?

A) சேனாதிபதி

B) நீதிபதி

C) மகாசேனாதிபதி

D) ஆளுநர்

விளக்கம்: குஷாணர் ஆட்சியில், பரந்த பேரரசு சத்ரப்புகள், அகாரா, ஜனபதா, தேசா என்ற பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. மதுரா, காசி, கௌசாம்பி, அயோத்தி ஆகிய பகுதிகள் சிறப்புற்று விளங்கின. மகாசேனாதிபதி என்பவர் நிர்வாகத்தில் முக்கிய இடம் வகித்தார்.

93) குஷாணர் பற்றிய கூற்றுகளில் தவறானதைத் தேர்வு செய்க.

A) குஷாணர் கால சமுதாயத்தில் கருணாசிரமமுறை நடைமுறையில் இருந்தது. இருப்பினும், சமுதாயத்தில் பல தரப்பட்ட தொழிலாளர்களும் வணிகர்களும் இருந்துள்ளனர்.

B) சமூகத்தில் பெண்கள் தாழ்நிலையில் காணப்பட்டனர்

C) வீரக் கழலணிதல், கையில் கங்கணம் கட்டுதல், காதணி போன்றவற்றை ஆண்கள் அணிந்திருந்தனர்.

D) மற்போர் செய்தல் மற்றும் உடல் வலிமையை வளர்க்கும் விளையாட்டுகள் விளையாடப்பட்டன.

விளக்கம்: சமூகத்தில் பெண்கள் உயர்நிலையில் காணப்பட்டன.

குஷாணர் கால சமுதாயத்தில் கருணாசிரமமுறை நடைமுறையில் இருந்தது. இருப்பினும், சமுதாயத்தில் பல தரப்பட்ட தொழிலாளர்களும் வணிகர்களும் இருந்துள்ளனர்.

வீரக் கழலணிதல், கையில் கங்கணம் கட்டுதல், காதணி போன்றவற்றை ஆண்கள் அணிந்திருந்தனர்.

மற்போர் செய்தல் மற்றும் உடல் வலிமையை வளர்க்கும் விளையாட்டுகள் விளையாடப்பட்டன.

94) குஷாணர் காலத்தில் வணிகக் குழுவின் தலைவனாக செயல்பட்டவர் யார்?

A) மகாசேனாதிபதி

B) பிரமுக்

C) ஆளுநர்

D) அரசர்

விளக்கம்: குஷாணர் காலத்தில், நாட்டின் முக்கிய தொழிலாக வேளாண்மை விளங்கியது. வேளாண்மை சார்ந்த பிற தொழில்களும் வளர்ச்சி பெற்றிருந்தன. குஷாணர்கள் காலத்தில் உள்நாட்டு வாணிகமும் அயல்நாட்டு வாணிகமும் தடையின்றி நடந்தன. உரோம நாட்டுடன் நடந்த வணிகத்தால் அந்நாட்டுத் தங்கம் இந்தியச் சந்தைகளில் மிகுதியாகக் காணப்பட்டன. இந்தியாவின் மஸ்லின் துணி, ரோம் நாட்டில் மிகுதியாக விற்பனையாயிற்று. தொழிற்கழகங்களும், வாணிகக்கழகங்களும் செயல்பட்டன. இவ்வணிகக் குழுவின் தலைவனாகப் ‘பிரமுக்’ என்பவர் செயல்பட்டார்.

95) குஷாணர் காலத்தில், மகாயான பௌத்த சமயத்தின் மொழியாக விளங்கியது எது?

A) பாலி

B) பிராகிருதம்

C) சமஸ்கிருதம்

D) தமிழ்

விளக்கம்: குஷாணர் காலத்தில் பௌத்த சமயம், இந்து சமயம், சமண சமயம் ஆகியவை செல்வாக்குப் பெற்றிருந்தன. இவர்கள் சமயப்பொறையைக் கடைபிடித்தனர். இக்காலத்தில் தான், மகாயான பௌத்த சமயத்தின் மொழியாகச் ‘சமஸ்கிருதம்’ இருந்தது. இந்து சமயத்திற்கு நிகராகப் பௌத்த சமயமும் வளர்ச்சி பெற்றது.

96) ‘குந்தல வனம்’ எங்குள்ளது?

A) இராஜகிருகம்

B) பாடலிபுத்திரம்

C) வைசாலி

D) காஷ்மீர்

விளக்கம்: 4-வது பௌத்த சமய மாநாடு, காஷ்மீரிலுள்ள ‘குந்தல் வனம்’ என்ற இடத்தில் ‘வசுமித்திரர்’ தலைமையில் நடைபெற்றது. அஸ்வகோசர் முன்னிலை வகித்தார். இம்மாநாட்டில் பௌத்த பீடகங்களுக்கான விளக்க உரை தொகுக்கப்பட்டது. இவ்விளக்க உரை ‘விபாஷங்கள்’ எனப்பட்டன. மேலும், மகாயான பௌத்த கருத்துக்களைப் பரப்ப நெறிமுறைகள் வகுக்கப்பட்டன. புத்த சமயமும் இரு பிரிவுகளாகப் பிரிந்தது. (ஹீனயானம், மகாயானம்)

97) கூற்றுகளை ஆராய்க.

1. ஹீனயானத்தைப் பின்பற்றிய புத்த பிரிவினர், பௌத்த சமய தத்துவ நூலை செப்புப் பட்டயத்தில் எழுதினர். இவர்கள் பௌத்த ஸ்தூபிகளை எழுப்பினர்.

2. மகாயானம் மத்திய ஆசியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும், ஹீனயானம் இலங்கை, பர்மா, தாய்லாந்து மற்றும் தென்கிழக்காசிய நாடுகளிலும் பரவின.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. ஹீனயானத்தைப் பின்பற்றிய புத்த பிரிவினர், பௌத்த சமய தத்துவ நூலை செப்புப் பட்டயத்தில் எழுதினர். இவர்கள் பௌத்த ஸ்தூபிகளை எழுப்பினர்.

2. மகாயானம் மத்திய ஆசியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும், ஹீனயானம் இலங்கை, பர்மா, தாய்லாந்து மற்றும் தென்கிழக்காசிய நாடுகளிலும் பரவின

98) குஷாணர்கள் காலத்தில் எந்த மொழி செல்வாக்குப் பெற்றிருந்தது?

A) பாலி

B) சமஸ்கிருதம்

C) பிராகிருதம்

D) துளுவம்

விளக்கம்: குஷாணர்கள் காலத்தில் சமஸ்கிருதமொழி செல்வாக்குப் பெற்றிருந்தது. இவர்கள் காலத்தில் பல சமஸ்கிருத நூல்கள் எழுதப்பட்டன. புத்தசரிதம், சௌந்தரநத்தம், மத்தியமிகசூத்திரம், மகாவிபாசசரித்திரம் போன்றவை.

99) பொருத்துக.

அ. புத்தசரிதம் – 1. நாகார்ஜுனர்

ஆ. சௌந்தரநத்தம் – 2. அஷ்வகோஷர்

இ. மத்தியமிகசூத்திரம் – 3. வசுமித்திரர்

ஈ. மகாவிபாசசரித்திரம் – 4. அஷ்வகோஷர்

A) 4, 3, 2, 1

B) 2, 4, 1, 3

C) 1, 4, 2, 3

D) 2, 4, 3, 1

விளக்கம்: புத்தசரிதம், சௌந்தரநத்தம் – அஷ்வகோஷர்

மத்தியமிகசூத்திரம் – நாகார்ஜுனர்

மகாவிபாசசரித்திரம் – வசுமித்திரர்

100) ‘புருஷபுரம்’ என் புதிய நகரை நிர்மாணித்தவர் யார்?

A) அசோகர்

B) ஹர்சர்

C) கனிஷ்கர்

D) சமுத்திரகுப்தர்

விளக்கம்: கனிஷ்கர், பெஷாவர் என்ற நகரில் ஸ்தூபிகளை எழுப்பினார். கனிஷ்கபுரம் (புருஷபுரம்) என்ற புதிய நகரை நிர்மாணித்தார். கனிஷ்கர் காலத்தில் காந்தாரக்கலையும் மதுரா சிற்பக்கலையும் சிறப்புப் பெற்று விளங்கின.

101) காந்தாரக்கலை என்பது எது?

A) இந்தியச் சிற்பக்கலை மற்றும் கிரேக்கக்கலை

B) இந்தியச் சிற்பக்கலை மற்றும் ரோமானியக்கலை

C) இந்தியக் கட்டடக்கலை மற்றும் ரோமானியக்கலை

D) இந்தியக் கட்டக்கலை மற்றும் கிரேக்ககலை

விளக்கம்: காந்தாரப் பகுதியில் தோன்றி வளர்ந்த கலையே காந்தாரக்கலையாகும். இந்தியச் சிற்பக்கலையும் கிரேக்கக்கலையும் ஒன்றிணைந்து உருவான கலையே காந்தாரக்கலை ஆகும்

102) காந்தாரக்கலையின் சிறப்பம்சம் எது?

A) மனித உருவத்தில் தசைகள், மீசை, சிகை தெரியும்படி உருவத்தை வடித்தல்

B) தடித்த ஆடைகள் அவற்றின் மடிப்புகள் தெரியும்படி வடிவமைத்தல்

C) அழகான சிற்பங்கள், அழகான ஆபரணங்கள் மற்றும் சிற்ப நுணுக்கங்கள் மூலமாக கருத்துகளை உணர்த்துதல்

D) அனைத்தும் சரி

விளக்கம்: மனித உருவத்தில் தசைகள், மீசை, சிகை தெரியும்படி உருவத்தை வடித்தல்

தடித்த ஆடைகள் அவற்றின் மடிப்புகள் தெரியும்படி வடிவமைத்தல்

அழகான சிற்பங்கள், அழகான ஆபரணங்கள் மற்றும் சிற்ப நுணுக்கங்கள் மூலமாக கருத்துகளை உணர்த்துதல்

103) காந்தாரக்கலையின் சிறப்புகள் எது?

A) இக்கலையின் முக்கிய கருப்பொருள், ‘சிற்பக்கலை வாயிலாகவே மகாயான பௌத்த சமயக் கோட்பாடுகளைப் பரப்புதலாகும்’.

B) நின்ற வடிவில் புத்தரது சிலை (மதுரா கலை) வடிவமைக்கப்பட்டிருத்தல்.

C) காந்தாரக் கலையில் சிலையின் தலைக்குப் பின்னால் வட்ட வடிவ ஞான ஒளியை இடம்பெறச் செய்தல்.

D) அனைத்தும்.

விளக்கம்: இக்கலையின் முக்கிய கருப்பொருள், ‘சிற்பக்கலை வாயிலாகவே மகாயான பௌத்த சமயக் கோட்பாடுகளைப் பரப்புதலாகும்’.

நின்ற வடிவில் புத்தரது சிலை (மதுரா கலை) வடிவமைக்கப்பட்டிருத்தல்

காந்தாரக் கலையில் சிலையின் தலைக்குப் பின்னால் வட்ட வடிவ ஞான ஒளியை இடம்பெறச் செய்தல்.

104) ‘மதுரா’ எங்கு உள்ளது?

A) கேரளா

B) ஹரியானா

C) மத்திய பிரதேசம்

D) உத்திரப் பிரதேசம்

விளக்கம்: தற்போதைய உத்திரப்பிரதேசதிலுள்ள மதுரா என்னுமிடத்தில் தோன்றி வளர்ந்த கலையே மதுரா கலையாகும். தொடக்கக் காலத்தில் மதுரா கலைபாணி, உள்நாட்டு கலைநயத்துடன் வளர்ச்சி பெற்றது. புத்தரது உருவங்களில் குறிப்பாக அவரது முகம் ஆன்மீகப் பொலிவு நிறைந்து காணப்பட்டது. இத்தகைய ஆன்மீகப் பொலிவு காந்தாரக்கலைச் சிற்பங்களில் இல்லை எனலாம்.

105) கூற்றுகளை ஆராய்க.

1. மதுரா கலைபாணியில் அமைக்கப்பட்ட சிவபெருமான், பார்வதி, விஷ்ணு, லட்சுமி போன்ற கடவுளர்களின் உருவங்கள், மதுராவில் கலைநயத்துடன் செதுக்கப்பட்டன.

2. யக்சினிகள், அப்சரஸ்கள் ஆகிய உருவங்கள் காந்தார கலைபாணியின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: யக்சினிகள், அப்சரஸ்கள் ஆகிய உருவங்கள் மதுரா கலைபாணியின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன.

106) இந்தியப் பண்பாட்டில் குஷாணர்களின் கொடை என்ன?

A) குஷாணர்கள் காலத்தில் பௌத்த சமயம் சீனா, ஜப்பான், தென் கிழக்காசிய நாடுகளில் பரவியது.

B) இந்தியாவில் காந்தாரக்கலை, மதுராகலை போன்றவை புதிதாகக் தோன்றின.

C) பாலி மொழிக்கு பதிலாகச் சமஸ்கிருத மொழியில் பல நூல்கள் இயற்றப்பட்டன.

D) அனைத்தும் சரி

விளக்கம்: குஷாணர்கள் காலத்தில் பௌத்த சமயம் சீனா, ஜப்பான், தென் கிழக்காசிய நாடுகளில் பரவியது.

இந்தியாவில் காந்தாரக்கலை, மதுராகலை போன்றவை புதிதாகக் தோன்றின.

பாலி மொழிக்கு பதிலாகச் சமஸ்கிருத மொழியில் பல நூல்கள் இயற்றப்பட்டன.

107) இந்தியப் பண்பாட்டில் குஷாணர்களின் கொடை என்ன?

A) கனிஷ்கர் காலத்தில், நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்ததால் இவரை இரண்டாம் அசோகர் என்றழைத்தனர்.

B) இந்து சமயம், பௌத்த சமயம் மற்றும் பிற சமயங்களும் வளர்ச்சி பெற்றன.

C) இக்காலத்தில் புத்தரது உருவ சிலைகள் நின்ற நிலையில் வடிக்கப்பட்டன.

D) அனைத்தும் சரி

விளக்கம்: கனிஷ்கர் காலத்தில், நாடு அனைத்து துறைகளியலும் முன்னேற்றம் அடைந்ததால் இவரை இரண்டாம் அசோகர் என்றழைத்தனர்.

இந்து சமயம், பௌத்த சமயம் மற்றும் பிற சமயங்களும் வளர்ச்சி பெற்றன.

இக்காலத்தில் புத்தரது உருவ சிலைகள் நின்ற நிலையில் வடிக்கப்பட்டன.

108) இந்தியப் பண்பாட்டில் குஷாணர்களின் கொடை பற்றியக் கூற்றுகளை ஆராய்க.

1. குஷாணர் காலத்தில் புத்தரது சிலையின் தலைக்குப் பின்னால் வட்ட வடிவ ஞானச்சுடர் உள்ளபடி இக்காலம் முதல் செதுக்கப்பட்டது.

2. இம்முறை பிற்காலத்தில் இந்துக் கடவுளர் சிலை உருவாக்கத்தில் பின்பற்றப்பட்டது

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1.குஷாணர் காலத்தில் புத்தரது சிலையின் தலைக்குப் பின்னால் வட்ட வடிவ ஞானச்சுடர் உள்ளபடி இக்காலம் முதல் செதுக்கப்பட்டது.

2. இம்முறை பிற்காலத்தில் இந்துக் கடவுளர் சிலை உருவாக்கத்தில் பின்பற்றப்பட்டது

109) இரண்டாம் அசோகர் என அழைக்கப்பட்டவர் யார்?

A) ஹர்சர்

B) முதலாம காட்பீசஸ்

C) கனிஷ்கர்

D) சமுத்திரக் குப்தர்

விளக்கம்: கனிஷ்கர் காலத்தில் நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்ததால், இவரை இரண்டாம், அசோகர் என்றழைத்தனர். கனிஷ்கர் குஷாணர்களில் புகழ்பெற்ற மன்னர் ஆவார்.

110) குப்த பேரரசு யாரால் தோற்றுவிக்கபபட்டது?

A) ஸ்ரீகுப்தர்

B) குமார குப்தர்

C) சமுத்திர குப்தர்

D) முதலாம் சந்திர குப்தர்

விளக்கம்: கி.பி(பெ.ஆ) 3-ஆம் நூற்றாண்டின் இறுதியில் குப்தப்பேரரசு ‘ஸ்ரீகுப்தர்’ என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. முதலாம் சந்திரகுப்தர், முதலாம் சமுத்திக்குப்தர், இரண்டாம் சந்திரகுப்தர், முதலாம் குமாரகுப்தர் போன்றோர்கள் இப்பேரரசின் சிறந்த மன்னர்களாகத் திகழ்ந்தனர். இந்தியப் பண்பாட்டிற்குக் குப்தர்கள் பல வகையிலும் உதவினர். ஆட்சிமுறை, சமூக, பொருளாதார, சமய, நுண்கலைகள், இலக்கியங்கள், அறிவியல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு வகையான பண்பாட்டுக் கூறுகளில் தங்களின் முத்திரையைப் பதித்துள்ளனர்.

111) குப்தர்களைப் பற்றி அறிவதற்கான சான்றுகளாகத் திகழ்வது எது?

A) விசாகதத்தர், காளிதாசர் ஆகியோரின் இலக்கியங்கள்

B) அலகாபாத் கற்றூண் கல்வெட்டு, மெஹ்ரோலி இரும்புத்தூண்

C) சீனப்பயணி பாஹியானின் ‘போகோகி’ எனப்பட்ட பயணக்குறிப்புகளும், நாணயங்கள் மற்றும் வரலாற்றுச் சின்னங்கள்

D) அனைத்தும்

விளக்கம்: விசாகதத்தர், காளிதாசர் ஆகியோரின் இலக்கியங்கள்

அலகாபாத் கற்றூண் கல்வெட்டு, மெஹ்ரோலி இரும்புத்தூண்

சீனப்பயணி பாஹியானின் ‘போகோகி’ எனப்பட்ட பயணக்குறிப்புகளும், நாணயங்கள் மற்றும் வரலாற்றுச் சின்னங்கள்

112) முதல் சீனப்பயணி இந்தியாவில் எத்தனை ஆண்டுகள் தங்கியிருந்தார்?

A) 4

B) 8

C) 9

D) 11

விளக்கம்: இந்தியாவிற்கு வந்த முதல் சீனப்பயணி பாஹியான். இவர், பெஷாவர், காசி உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று பார்வையிட்டார். இவர் இந்தியாவில் 9 ஆண்டுகள் தங்கியிருந்தார்.

113) எந்த குப்த அரசரின் அரசியல், சமூக, பொருளாதார சமய நிலைகளைப் பற்றி பாஹியான் குறிப்புகள் கூறுகின்றன?

A) முதலாம் சந்திரகுப்தர்

B) சமுத்திரகுப்தர்

C) இரண்டாம் சந்திரகுப்தர்

D) ஸ்ரீகுப்தர்

விளக்கம்: சீனப் பயணி இந்தியாவில் 9 ஆண்டுகள் தங்கியிருந்தார். பாடலிபுத்திரத்தில் இருந்த 3 ஆண்டுகளில் சமஸ்கிருத மொழியையும், பௌத்த இலக்கியங்களையும் கற்றார். இவருடைய குறிப்புகள் இரண்டாம் சந்திரகுப்தரின் அரசியல், சமூக, பொருளாதார சமய நிலைகளைப் பற்றிக் கூறுகின்றன.

114) குப்தர்கள் பற்றிய கூற்றுகளில் தவறானதைத் தேர்வு செய்க.

A) குப்தப் பேரரசர்கள் பரம பட்டாரகா, மகாராஜாதி ராஜா, பரமேஸ்வரா, சாம்ராட் போன்ற விருதுப் பெயர்களைச் சூட்டிக் கொண்டனர்.

B) பேரரசருக்குக் கீழ் முதலமைச்சர், படைத்தலைவர் உள்ளடக்கிய அமைச்சரவையும் ஆலோசனை வழங்கினர்

C) குப்தர் காலத்தில் குமாரமாத்யர்கள் என்ற வெளியுறவுத் துறை அமைச்சர்கள் இருந்தனர்.

D) குப்தர் காலத்தில் மகாசந்திவிக்ரஹா என்ற வெளியுறவுத்துறை அமைச்சர் இருந்தார்

விளக்கம்: குப்தர காலத்தில் குமாரமாத்யர்கள் என்ற வருவாய்த்துறை உயரதிகாரிகள் பற்றியும், மகாசந்திரவிக்ரஹா என்ற வெளியுறவுத் துறை அமைச்சர் பற்றியும் குப்தர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன.

115) நீதித்துறை மற்றும் இராணுவத்துறையில் பொறுப்பு வகித்த அமைச்சர்களை முறையே தண்டநாயகர், மகாதண்டநாயகர் என்ற பெயரில் குறிப்பிட்டதை கூறும் கல்வெட்டு எது?

A) சாரநாத் கல்வெட்டு

B) உத்திரமேரூர் கல்வெட்டு

C) அலகாபாத் கல்வெட்டு

D) சாஞ்சி ஸ்தூபி

விளக்கம்: குப்தர்கள் காலத்தில் நீதித்துறை மற்றும் இராணுவத்துறையில் பொறுப்பு வகித்த அமைச்சர்களை முறையே தண்டநாயர், மகாதண்டநாயகர் என்ற பெயர்களால் குறிப்பிட்டதை அலகாபாத் கற்றூண் கல்வெட்டு மூலம் அறியமுடிகிறது.

116) குப்தர் காலத்தில், குதிரைப்படைத் தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

A) மகாஅஸ்வபதி

B) மகாசந்திவிக்ரஹா

C) குமாரமாத்யர்

D) தண்டநாயக்கர்

விளக்கம்: மகாஅஸ்வபதி – குதிரைப்படைத் தலைவர்

மகாசந்திவிக்ரஹா – வெளியுறவுத் துறை அமைச்சர்

குமாரமாத்யர் – வருவாய்த்துறை உயரதிகாரிகள்

தண்டநாயக்கர் – நீதித்துறை அமைச்சர்

மகாதண்டநாயகர் – இராணுவத்துறை அமைச்சர்

117) அலகாபாத் கற்றூண் கல்வெட்டு எத்தனை வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது?

A) 22

B) 44

C) 11

D) 33

விளக்கம்: அலகாபாத் கற்றூண் கல்வெட்டு “அரிசேனர்” என்பவரால் 33 வரிகளில் பொறிக்கப்பட்டது. இதில் முதலாம் சந்திரகுப்தரின் போர் வெற்றிகள், படைத்திறன் ஆகியவை பற்றியும், குப்த பேரரசின் ஆட்சி எல்லைகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன.

118) எந்த பேரரசு தேசம் அல்லது புக்தி என்ற பெயர்களைக் கொண்ட மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது?

A) மௌரியப் பேரரசு

B) முகலாயப் பேரரசு

C) ஹர்சப் பேரரசு

D) குப்த பேரரசு

விளக்கம்: குப்தர்களின் பேரரசு தேசம் அல்லது புக்தி என்ற பெயர்களைக் கொண்ட மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. இம்மாநிலங்களை ‘உபாரிகா’ என்ற ஆளுநர்கள் ஆட்சி செய்தனர். இவர்கள் பேரரசரால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ‘உபாரிகா’ மாநில நிர்வாகத்துடன் யானைப்படை, குதிரைப்படை வீரர்களையும் படைத்துறை நிர்வாகத்தையும் மாநில அளவில் நிர்வகித்தார்.

119) குப்தர்களின் ஆட்சிமுறை பிரிவுகள் பற்றி சரியானக் கூற்றைத் தெரிவு செய்க

A) மாநிலங்களின் பெயர் – தேசம், புக்தி

B) மாநிலங்களை நிர்வகித்த ஆளுநர் – உபாரிகா

C) மாநிலங்கள் ‘விஷயம்’ என்ற மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. இவற்றை ஆட்சி செய்தவர்கள் விஷயபதிகள் எனப்பட்டனர். இவர்கள் மாநில ஆளுநரால் நியமிக்கப்பட்டனர்.

D) அனைத்தும் சரி

விளக்கம்: மாநிலங்களின் பெயர் – தேசம், புக்தி

மாநிலங்களை நிர்வகித்த ஆளுநர் – உபாரிகா

மாநிலங்கள் ‘விஷயம்’ என்ற மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. இவற்றை ஆட்சி செய்தவர்கள் விஷயபதிகள் எனப்பட்டனர். இவர்கள் மாநில ஆளுநரால் நியமிக்கப்பட்டனர்.

120) கூற்றுகளை ஆராய்க

1. குப்தர் காலத்தில் ‘லோகபாலா’ என்ற அலுவலரைப் பற்றி ஈரன் என்ற கல்வெட்டுச் செய்தி குறிப்பிடுகிறது

2. குப்தர் காலத்தில் மாவட்டங்கள் பூமி, பதாகா, பீடா போன்ற பல்வேறு வித ஆட்சிப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. குப்தர் காலத்தில் ‘லோகபாலா’ என்ற அலுவலரைப் பற்றி ஈரன் என்ற கல்வெட்டுச் செய்தி குறிப்பிடுகிறது

2. குப்தர் காலத்தில் மாவட்டங்கள் பூமி, பதாகா, பீடா போன்ற பல்வேறு வித ஆட்சிப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன.

121) குப்தர் காலத்தில், மகதராசவின் கீழ் எத்தனை உறுப்பினர்களைக் கொண்ட குழு செயல்பட்டது?

A) 4

B) 6

C) 8

D) 12

விளக்கம்: குப்தர்கள் காலத்தில் மாவட்டங்கள் பூமி, பதாகா, பீடா போன்ற பல்வேறு வித ஆட்சிப்பிரிவுகள் பிரிக்கப்பட்டன. இவற்றை ஆயுக்தகா, மகதரா போன்ற அதிகாரிகள் ஆட்சி செய்தனர். மகதராவின் கீழ் 8 உறுப்பினர்களைக் கொண்ட குழு செயல்பட்டது.

122) யார் காலத்தில் ‘பஞ்ச மண்டலி’ என்ற குழு பற்றிய குறிப்புகள் சாஞ்சிக் கல்வெட்டில் காணப்படுகின்றன?

A) முதலாம் சந்திர குப்தர்

B) இரண்டாம் சந்திரகுப்தர்

C) முதலாம் சமுத்;திரகுப்தர்

D) ஸ்ரீகுப்தர்

விளக்கம்: இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் ‘பஞ்ச மண்டலி’ என்ற குழுமத்தைப் பற்றிய குறிப்புகள் சாஞ்சிக் கல்வெட்டில் காணப்படுகின்றன. இதேபோல் ‘லோகபாலா’ என்ற அலுவலரைப் பற்றி ‘ஈரன்’ என்ற கல்வெட்டுச் செய்தி குறிப்பிடுகிறது.

123) குப்தர்கள் காலத்தில், விஷயபதிகளுக்கு நிர்வாக முறையில் ஆலோசனை கூறிய குழு எது?

A) மதராவின் 8 பேர் கொண்ட குழு

B) பஞ்ச மண்டலி

C) அத்யஷா

D) B மற்றும் C

விளக்கம்: குப்தர்கள் காலத்தில் மாவட்ட அளவிலிருந்து, ஆலோசனைக் குழு விஷயபதிகளுக்கு நிர்வாக முறையில் ஆலோசனை கூறியது. இக்குழுவிற்கு ‘அத்யஷா’ என பெயர். கிராமப் பஞ்சாயத்துகளும் சிறப்புப் பெற்று திகழ்ந்தன.

124) கூற்றுகளை ஆராய்க (குப்தர்கள் காலம்)

1. வங்காளம், பீகார், உத்தரப்பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகள், மன்னரின் நேரடி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டன.

2. குப்தர்கள் ஆட்சி முறை, வாகாடகர்கள், காலச்சூரிகள், சாளுக்கியர்கள், ராஷ்டிரகூடர்கள் போன்றோர்க்கு முன்னோடியாகத் திகழ்ந்தது எனலாம். குப்தப்பேரரசின் பல்வேறு நிர்வாக முறைகளை இவர்கள் பின்பற்றினர்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. வங்காளம், பீகார், உத்தரப்பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகள், மன்னரின் நேரடி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டன.

2. குப்தர்கள் ஆட்சி முறை, வாகாடகர்கள், காலச்சூரிகள், சாளுக்கியர்கள், ராஷ்டிரகூடர்கள் போன்றோர்க்கு முன்னோடியாகத் திகழ்ந்தது எனலாம். குப்தப்பேரரசின் பல்வேறு நிர்வாக முறைகளை இவர்கள் பின்பற்றினர்.

125) குப்தர்கள் காலத்தில் காலாட்படையின் தலைவர் யார்?

A) பாலாதிகிருதியா

B) சேனாதிபதி

C) ரணபந்தகர்

D) மகாபிரதிஹாரா

விளக்கம்: குப்தர்கள் காலத்தில் காலாட்படை, குதிரைப்படை, தேர்ப்படை, யானைப்படை ஆகிய படைகள் இருந்தன. மன்னரால் சிறப்பாக வழி நடத்தப்பட்ட இப்படை நிர்வாகம் குப்தர்களின் வெற்றிக்குக் காரணமாகத் திகழ்ந்தது. காலாட்படையின் தலைவர் ‘பாலாதிகிருதியா’ என்றழைக்கப்பட்டார்.

126) குப்தர்கள் காலத்தில் குதிரைப்படையின் தலைவர் யார்?

A) பாலாதிகிருதியா

B) சேனாதிபதி

C) ரணபந்தகர்

D) மகாபிரதிஹாரா

விளக்கம்: காலாட்படை தலைவர் – பாலாதிகிருதியா

குதிரைப்படை தலைவர் – சேனாதிபதி

அரண்மனைக் காவலர்கள் – மகாபிரதிஹாரா

127) குப்தர் காலத்தில் இராணுவக் கிடங்குகளின் தலைமை அலுவலகம் எவ்வாறு அழைக்கப்பட்டது?

A) மகாபிரதிஹாரா

B) சத்யதபகிதா

C) துடாகா

D) ரணபந்தகர்

விளக்கம்: குப்தர்கள் காலத்தில் இராணுவக் கிடங்குகளின் தலைமை அலுவலகம் ரணபந்தகர் எனப்பட்டது. மேலும் மகாபிரதிஹாரா என்ற அரண்மனைக் காவலர்களும், சத்யதபகிதா என்ற அரச சமையலறைக் கண்காணிப்பாளரும் முக்கிய இடம் பெற்றனர்.

128) குப்தர்கள் காலத்தில் ஒற்றர்களைக் கொண்ட உளவு அமைப்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?

A) மகாபிரதிஹாரா

B) சத்யதபகிதா

C) துடாகா

D) ரணபந்தகர்

விளக்கம்: குப்தர்கள் காலத்தில், அமாத்யா, சச்சிவா போன்ற அலுவலர்கள் நிர்வாக அதிகாரிகளாகப் பணியாற்றினர். ஒற்றர்களைக் கொண்ட உளவு அமைப்பு ‘துடாகா’ என்றழைக்கப்பட்டது.

129) குப்தர் கால சமூகநிலையில் தவறானக் கூற்றைத் தேர்வு செய்க.

A) குப்தர் கால சமூகநிலை சிறந்து விளங்கியது. குடும்பங்கள் கூட்டுக்குடும்பமாக இருந்தன.

B) வர்ணாஸ்ரமமுறை அடிப்படையிலான குப்தர்கள்கால சமூகத்தில், பல்வேறு தொழிற்பிரிவு மக்களும் வாழ்ந்தனர்.

C) உயர்குடியினர்கள் சமூகத்தில் அனைத்து உரிமைகளையும் பெற்றிருந்தனர்.

D) பெண்கள் உயர்ந்த நிலையில் வைத்து மதிக்கப்பட்டனர். எனினும் பெண்களுக்கு கல்வி நிராகரிக்கப்பட்டது.

விளக்கம்: பெண்கள் உயர்ந்த நிலையில் வைத்து மதிக்கப்பட்டனர். இவர்கள் கல்வியறிவு பெற்று சமூகத்தில் சிறந்து விளங்கினர்.

130) குப்தர்கள் காலத்தில் ‘ஆச்சார்யா’ எனப்பட்டவர் யார்?

A) புரோகிதர்

B) மருத்துவர்

C) ஆசிரியர்

D) கணக்காளர்

விளக்கம்: குப்தர்கள் காலத்தில் ‘ஆச்சார்யா’ எனப்பட்ட ஆசிரியர்களுக்குச் சமூகத்தில் உயர்ந்த மதிப்பிருந்தது. பெண்கள் காதணிகள், கழுத்தணிகள், வளையல்கள் போன்றவற்றை அணிந்தனர். தங்கம், வெள்ளி போன்றவற்றிலான ஆபரணங்களுக்கும் மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. போர்க்கைதிகள், கடனாளிகள், சூதாட்டத்தில் தோற்றவர்கள் அடிமைப்படுத்தப்பட்டனர்.

131) குப்தர்கள் காலத்தில், நிலம் எத்தனை வகையாகப் பிரிக்கப்பட்டது?

A) 3

B) 4

C) 5

D) 6

விளக்கம்: குப்தர்கள் காலத்தில் வேளாண்மையே முக்கிய தொழிலாக விளங்கியது. நெல், கோதுமை, பார்லி போன்ற தானியங்கள் பயிரிடப்பட்டன. விளைச்சல் மற்றும் நிலத்தின் தன்மை அடிப்படையில் நிலம் 5 வகையாகப் பிரிக்கப்பட்டது. நீர்ப்பாசனத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

132) குப்தர்கள் காலத்தில் ‘ஜலநிர்கமா’ என்பது என்ன?

A) ஆறு

B) ஏரி

C) குளம்

D) வடிகால்

விளக்கம்: குப்தர்கள் காலத்தில் ‘ஜலநிர்கமா’ என்ற வடிகால்கள் மூலம் நீரானது, பாசனப்பகுதிகளுக்கு அனுப்பப்பட்டது. “சுதர்சன ஏரி” குப்தர்கள் கால நீர்ப்பாசனத்தில் முக்கிய இடம் பிடித்தது.

133) குப்தர் காலத்தில் எவ்வளவு வரி வசூலிக்கப்பட்டது?

A) விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு

B) விளைச்சலில் பத்தில் ஒரு பங்கு

C) விளைச்சலில் 12-ல் ஒரு பங்கு

D) விளைச்சலில் 18-ல் ஒரு பங்கு

விளக்கம்: குப்தர்கள் காலத்தில் விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு மக்களிடமிருந்து வரியாக வசூலிக்கப்பட்டது. இது ‘பாகா’ எனப்பட்டது.

134) குப்தர் காலத்தில் கிராமங்களில் வாழ்வோர் மீது விதிக்கப்பட்ட வரி எது?

A) பாகா

B) கரா

C) ஹிரண்யா

D) டஸ்டக்

விளக்கம்: குப்தர் கால வரிகள்:

பாகா – விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு வரி

கரா – கிராமங்களில் வாழ்வோர் மீதான வரி

ஹிரண்யா – சங்க நாணயங்கள் வைத்திருப்போர் செலுத்தும் வரி

135) குப்தர்கள் காலத்தில், இரும்புப் படிவுகள் எங்கிருந்து கண்டறியப்பட்டன?

A) பீகார்

B) இராஜஸ்தான்

C) மகாராஷ்டிரா

D) அசாம்

விளக்கம்: குப்தர்கள் காலத்தில் சிறந்து விளங்கிய உலோகத் தொழில், சுரங்கத் தொழில் பற்றிய செய்திகளை வராகமிகிரர், காளிதாசர் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். இக்காலத்தில் பீகாரிலிருந்து இரும்புப் படிவுகளும் ராஜஸ்தானிலிருந்து செம்புப் படிவுகளும் கண்டறியப்பட்டன.

136) குப்தர் காலத்தில் வணிகர்களுக்குள் எத்தனை பிரிவினர் இருந்தனர்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: வணிகர்களுக்குள் வணிக், சிரேஷ்டி, சார்த்தவாஹா என்ற மூன்று பிரிவினர் இருந்தனர். குப்தர்களின் காலம் வரலாற்றின் பொற்காலம் எனப்படுகிறது.

137) முதன் முதலில் சூரியனைப் பூமி வலம் வருகிறது என்று கண்டறிந்த இந்தியர் யார்?

A) கோபர்நிக்கஸ்

B) தாலமி

C) கெப்ளர்

D) ஆரியபட்டர்

விளக்கம்: ஆரியபட்டர், சூரியனைப் பூமி வலம் வருகிறது என்றும், கோள்களின் சுழற்சியைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

138) ‘அலகாபாத்’ என அழைக்கப்படும் ஊர் எது?

A) உஜ்ஜனி

B) காசி

C) கயா

D) பிரயாகை

விளக்கம்: உஜ்ஜனி, காசி, வைசாலி. கயா, பிரயாகை (அலகாபாத்), மதுரா ஆகிய இடங்கள் குப்தர்கள் கால முக்கிய வணிக மையங்களாகத் திகழ்ந்தன. கங்கை, கிருஷ்ணா, காவிரி, பிரம்மபுத்திரா ஆகிய நதிகள் உள்நாட்டு நீர்வழி வாணிகத்திற்குப் பயன்பட்டன

139) வாத்ய வித்யாதரன், ஆதோத்ய தம்புரு ஆகிய விருதுப் பெயர்களை பெற்றவர் யார்?

A) முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்

B) முதலாம் நரசிம்மவர்ம பல்லவன்

C) இராஜசிம்மன்

D) மாமல்லன்

விளக்கம்: வாத்ய வித்யாதரன், ஆதோத்ய தம்புரு ஆகிய விருதுப் பெயர்களை இராஜசிம்மன் பெற்றிருந்தார். ‘ஆதோத்ய’ என்ற வீணையை வாசிப்பதில் வல்லவன்.

140) விருபாஷர் கோயிலைக் கட்ட எந்த ஊரிலிருந்து சிற்பிகள் பட்டாடக்கல் சென்றனர்?

A) காஞ்சிபுரம்

B) மதுரை

C) தஞ்சை

D) காரைக்கால்

விளக்கம்: சாளுக்கியர் காலத்தில் பட்டாடக்கல் என்ற இடத்தில் திராவிடக் கலைப்பாணியில் அமைந்த விருபாஷர் கோயிலைக் கட்ட காஞ்சிபுரத்திலிருந்து சிற்பிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

141) எந்தப் பகுதியை ‘பாஹியான்’ என்ற சீனப்பயணி ‘பிராணமர்களின் பூமி’ என்று குறிப்பிட்டார்?

A) காவிரி டெல்டா பகுதிகள்

B) கங்கைச் சமவெளி

C) சோட்டாநாக்பூர் பீடபூமி

D) பிரம்மபுத்திரா சமவெளி

விளக்கம்: கங்கைச் சமவெளிப் பகுதிகளைப் ‘பாஹியான்’ என்ற சீனப்பயணி, ‘பிராமணர்களின் பூமி’ என்று குறிப்பிட்டுள்ளார். குப்த மன்னர்கள் பெரும்பான்மை இந்துவாக இருந்தாலும் சமய சகிப்புத்தன்மையுடன் வாழ்ந்தனர்.

142) குப்தர்கள் காலத்தில் “பாகவதம்” என்ற பெயரில் எந்தக் கடவுளின் வழிபாடு வட இந்தியா முழுவதும் பரவியது?

A) மகாவிஷ்ணு – லட்சுமி வழிபாடு

B) சிவபெருமான் – பார்வதி

C) பிரம்மன் – சரஸ்வதி

D) முருகன் – வள்ளி

விளக்கம்: இந்து சமயத்தில் புதிய ஆன்மீக நம்பிக்கைகள் குப்தர்கள் காலத்தில் தோன்றின. மகாவிஷ்ணுவின் வாகனமாகக் கருடனையும் வணங்கினர். “பாகவதம்” என்ற பெயரில் மஹாவிஷ்ணு வழிபாடும் லட்சுமி வழிபாடும் புதிய சமய வழிபாட்டு முறைகளும் வட இந்தியா முழுவதும் பரவியது.

143) குப்தர்கள் கால மக்களின் வழிபாடு, தெய்வம் பற்றிய சரியானக் கூற்றை தெரிவு செய்க

1. மஹாவிஷ்ணுவின் தசாவதாரக் கருத்துக்கள் மக்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்தன.

2. இராமாயணத்தின் நாயகனாக ‘இராமனை’ மக்கள் கடவுளாக வழிபட்டனர்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. மஹாவிஷ்ணுவின் தசாவதாரக் கருத்துக்கள் மக்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்தன.

2. இராமாயணத்தின் நாயகனாக ‘இராமனை’ மக்கள் கடவுளாக வழிபட்டனர்.

144) குப்தர் காலத்தில், வாகாடக, கடம்பவம்ச மன்னர்கள் எந்தக் கடவுளை பெரிதும் வழிபட்டனர்?

A) விஷ்ணு

B) பிரம்மன்

C) சிவபெருமான்

D) முருகன்

விளக்கம்: குப்தர்கள் காலத்தில், சிவபெருமான் வழிபாடும் மக்களால் பின்பற்றப்பட்டது. வாகாடக, கடம்பவம்ச மன்னர்கள் சிவ வழிபாட்டைப் பெரிதும் பின்பற்றினர். ‘பாசுபதம்’ என்ற சிவ வழிபாட்டுப் பிரிவு வட இந்தியாவில் பரவியது. பிரம்மன், சூரியன், கார்த்திகேயன், கணேசன், துர்க்கை, சரஸ்வதி போன்ற கடவுளரும் மக்களால் வழிபடப்பட்டனர்.

145) கூற்றுகளை ஆராய்க

1. பாசுபதம் – மகாவிஷ்ணு வழிபாடு

2. பாகவதம் – சிவபெருமான் வழிபாடு

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. பாசுபதம் – சிவபெருமான் வழிபாடு

2. பாகவதம் – மகாவிஷ்ணு வழிபாடு

146) கூற்றுகளை ஆராய்க.

1. குப்தர்கள் காலத்தில், பசு, பாம்பு (நாகவழிபாடு) போன்ற விலங்குகளையும் மக்கள் வழிபட்டனர்.

2. குப்தர்கள் கங்கை, யமுனை போன்ற நதிகளையும் புனிதமாகக் கருதி வழிபட்டனர்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. குப்தர்கள் காலத்தில், பசு, பாம்பு (நாகவழிபாடு) போன்ற விலங்குகளையும் மக்கள் வழிபட்டனர்.

2. குப்தர்கள் கங்கை, யமுனை போன்ற நதிகளையும் புனிதமாகக் கருதி வழிபட்டனர்.

147) குப்தர்கள் காலத்தில் எந்த இடம் புனிததலமாக விளங்கியது?

A) காசி

B) பிரயாகை

C) A மற்றும் B

D) மதுரா

விளக்கம்: காசி, பிராயகை போன்ற இடங்கள் புண்ணியத் தலங்களாகக் கருதப்பட்டன. புனிதத் தலங்களுக்கு யாத்திரை செல்லும் வழக்கம், மக்களிடையே பரவலாக இருந்தது.

148) பாண்டியர் கால ஆட்சியில் வரித்தண்டல் செய்த அதிகாரி எவ்வாறு அழைக்கப்பட்டார்?

A) முதலி

B) மகாமந்திரர்

C) மகாசாமந்தன்

D) திணைக்களநாயகம்

விளக்கம்: பாண்டியர் ஆட்சியில் வரி நிர்ணயம் செய்வோர் நாடு வகை செய்வோர் என்றும், வரித்தண்டல் செய்த அதிகாரி ‘முதலி’ என்றும் அழைக்கப்பட்டார்.

149) கூற்றுகளை ஆராய்க.

1. சாளுக்கிய மனனர்கள் போர்க்கலை மட்டுமின்றி மனுசாஸ்திரம், தர்மசாஸ்திரம், வேதங்கள் போன்றவற்றையும் அறிந்திருந்தனர்.

2. சாளுக்கியர்களின் ஆட்சி சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் மகாராஜா, சத்யாசிராயன், ஸ்ரீ பிருத்தி வல்லவன், பரமேஸ்வரன் போன்ற பட்டங்களை மன்னர்கள் சூட்டிக் கொண்டனர்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. சாளுக்கிய மனனர்கள் போர்க்கலை மட்டுமின்றி மனுசாஸ்திரம், தர்மசாஸ்திரம், வேதங்கள் போன்றவற்றையும் அறிந்திருந்தனர்.

2. சாளுக்கியர்களின் ஆட்சி சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் மகாராஜா, சத்யாசிராயன், ஸ்ரீ பிருத்தி வல்லவன், பரமேஸ்வரன் போன்ற பட்டங்களை மன்னர்கள் சூட்டிக் கொண்டனர்.

150) எந்த நூற்றண்டில் இந்தியப் பண்பாடு சிறப்புற்று இருந்ததாக ‘இட்சிங்’ குறிப்பிட்டுள்ளார்?

A) கி.பி.6-ஆம் நூற்றாண்டு

B) கி.பி.7-ஆம் நூற்றாண்டு

C) கி.பி.8-ஆம் நூற்றாண்டு

D) கி.பி.9-ஆம் நூற்றாண்டு

விளக்கம்: கி.பி(பொ.ஆ) 7-ஆம் நூற்றாண்டில் ‘இந்தியப் பண்பாடு சிறப்புற்று இருந்ததாகச் சீனப்பயணி ‘இட்சிங்’, தமது குறிப்பில் குறிப்பிடுகிறார்.

151) ‘வசுபந்து’ என்ற பௌத்த சமய அறிஞரை ஆதரித்த மன்னன் யார்?

A) ஸ்ரீகுப்தர்

B) முதலாம் சந்திரகுப்தர்

C) பால்பன்

D) முதலாம் சமுத்திரகுப்தர்

விளக்கம்: குப்தர்கள் காலத்தில், இந்து சமயம் செல்வாக்கு பெற்றிருந்தாலும் பௌத்தமும், சமணமும் மக்களால் பின்பற்றப்பட்டு வந்தன. வங்காளம், பீகார், உத்திரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் பௌத்த சமயம் செல்வாக்குடன் திகழ்ந்தது. ‘வசுபந்து’ என்ற பௌத்த சமய அறிஞரை முதலாம் சமுத்திரகுப்தர் ஆதரித்தார்.

152) குப்தர்காலத்தில் புகழ்பெற்றிருந்த இலங்கை நாட்டுப் பௌத்த சமய அறிஞர் யார்?

A) புத்தகோசர்

B) அசுவகோசர்

C) வசுபந்து

D) அசோகர்

விளக்கம்: புத்தகோசர் என்ற இலங்கை நாட்டு பௌத்த சமய அறிஞர், குப்தர்காலத்தில் புகழ்பெற்றிருந்தார். காஷ்மீர், காந்தாரம் போன்ற பகுதிகளில் இந்து சமயமும், பௌத்த சமயமும் செல்வாக்கு பெற்றிருந்தன. அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்களும் வட இந்தியாவில் ஸ்தூபிகளும் பௌத்த சமயத்தை மக்கள் பின்பற்றியதற்கான ஆதாரமாகத் திகழ்கின்றன.

153) மதுரா, வல்லபி, உதயகிரி போன்ற இடங்களில் செல்வாக்கு பெற்றிருந்த சமயம் எது?

A) புத்தம்

B) சமணம்

C) இந்து

D) சீக்கியம்

விளக்கம்: சமண சமயம் மதுரா, வல்லபி, உதயகிரி போன்ற இடங்களில் செல்வாக்கு பெற்றிருந்தது. குப்தர் காலத்தில் பல கவிஞர்கள் பல்வேறு வகையான இலக்கியங்களைப் படைத்து வடமொழியில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தினர். சாகுந்தலம், அமரகோசம், பிருகத் சம்கிதை போன்றவை.

154) காளிதாசர் எழுதிய நூல்களில் பொருந்தாததைத் தேர்வு செய்க

A) சாகுந்தலம்

B) விக்கிரமோர்வசியம்

C) மாளவிகாக்கினிமித்திரம்

D) முத்ரா ராஷஸம்

விளக்கம்: காளிதாசரின் நூல்கள்:

சாகுந்தலம், விக்கிரமோர்வசியம், மாளவிகாக்னிமித்திரம், ரகுவம்சம், குமாரசம்பவம், மேகதூதம், ரிதுசம்ஹாரம்

மேற்காணும் அனைத்தும் வடமொழி இலக்கியங்கள்.

155) ‘முத்ரா ராஷஸம்’ என்ற நூலின் ஆசிரியர் யார்?

A) விசாகதத்தர்

B) வாத்ஸ்யாயனர்

C) வராகமிகிரர்

D) சந்திரர்

விளக்கம்: ‘முத்ரா ராஷஸம்’ என்ற நூலின் ஆசிரியர் விசாகதத்தர். இவர் தேவி சந்திரகுப்தம் என்ற

நூலையும் எழுதியுள்ளார். இரண்டுமே வடமொழி இலக்கியங்கள்.

156) பொருத்துக

அ. வாத்ஸ்யாயனர் – 1. அமரகோசம்

ஆ. வராகமிகிரர் – 2. சந்திராச்சாரிய வியாக்கரணம்

இ. சந்திரர் – 3. பிருகத் சம்கிதை

ஈ. அமரர் – 4. காமசூத்திரம்

A) 4, 3, 2, 1

B) 3, 4, 2, 1

C) 3, 4, 1, 2

D) 4, 3, 1, 2

விளக்கம்: வாத்ஸ்யாயனர் – காமசூத்திரம்

வராகமிகிரர் – பிருகத் சம்கிதை

சந்திரர் – சந்திராச்சாரிய வியாக்கரணம்

அமரர் – அமரகோசம்

இவை அனைத்தும் வடமொழி இலக்கியங்கள் ஆகும்.

157) பொருத்துக.

அ. வாக்பட்டார் – 1. அஷ்டாங்க சங்கிரக

ஆ. ஆரியபட்டர் – 2. வியாகரணம்

இ. சாமண்டகர் – 3. கணித நூல்கள்

ஈ. வீரசேனர் – 4. நீதி சாஸ்திரம்

A) 4, 3, 2, 1

B) 1, 4, 3, 2

C) 3, 4, 1, 2

D) 1, 3, 4, 2

விளக்கம்: வாக்பட்டர் – அஷ்டாங்க சங்கிரக

ஆரியபட்டர் – கணித நூல்கள், வானவியல்

சரமண்டகர் – நீதிசாஸ்திரம்

வீரசேனர் – வியாகரணம்

மேற்காண் அனைத்தும் வடமொழி இலக்கியங்கள்.

158) வாகபட்டர் எழுதிய நூல்களில் மருத்துவ நூல் எது?

A) அஷ்டாங்க சங்கிரக

B) அஷ்டாங்க கிருதய சம்ஹிதை

C) A மற்றும் B

D) மருத்துவ நூல் இல்லை

விளக்கம்: வாக்பட்டர் எழுதிய ‘அஷ்டாங்க கிருதய சம்ஹிதை’ என்ற நூல் மருத்துவம் பற்றியது. மேலும் இவர் ‘அஷ்டாங்க சங்கிரக’ என்ற நூலையும் எழுதியுள்ளார். இரண்டுமே வடமொழி இலக்கியங்களாகும்.

159) குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த தலைசிறந்த அறிஞர் யார்?

A) ஆரியபட்டர்

B) வசுபந்து

C) சாமண்டகர்

D) வராகமிகிரர்

விளக்கம்: குப்தர்கள்; காலத்தில், அறிவியல் தொழில்நுட்பம் படிப்படியாக வளர்ச்சி பெறத் தொடங்கியது. ஆரியப்பட்டர் குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த தலைசிறந்த அறிஞராவார். இவர் கணிதம், வானவியல் போன்ற துறைகளில் சிறந்து விளங்கினார்.

160) ஆரியபட்டர் பற்றிய கூற்றுகளில் சரியானதைத் தேர்க

A) ஆரியபட்டர் ‘ஆரியபட்டியம்’ என்ற நூலை எழுதினார்.

B) 1 முதல் 9 வரையிலான எண்ணிற்கு முன்னும் பின்னும் சுழியத்தைப் (பூஜ்ஜியம்) பயன்படுத்தும் முறை இவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

C) கணிதத்தில் இயற்கணிதம், வர்க்கமூலம் போன்றவற்றைக் கண்டறிந்தார்

D) அனைத்தும் சரி

விளக்கம்: ஆரியபட்டர் ‘ஆரியபட்டியம்’ என்ற நூலை எழுதினார்.

1 முதல் 9 வரையிலான எண்ணிற்கு முன்னும் பின்னும் சுழியத்தைப் (பூஜ்ஜியம்) பயன்படுத்தும் முறை இவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

கணிதத்தில் இயற்கணிதம், வர்க்கமூலம் போன்றவற்றைக் கண்டறிந்தார்.

161) குப்தர் காலத்தில், இலாபம் வேண்டி ஊரெங்கும் வாணிகம் செய்வோர்கள் யார்?

A) வணிக்

B) சிரோஷ்டி

C) சார்த்தவஹா

D) A மற்றும் B

விளக்கம்: குப்தர்கள் காலத்தில், வணிக், சிரேஷ்டி, சார்த்தவஹா என்ற 3 வணிகப்பிரிவினர் இருந்தனர். அதில்,

சார்த்தவாஹா – இலாபம் வேண்டி ஊரெங்கும் வாணிகம் செய்தனர்.

வணிக் மற்றும் சிரோஷ்டி – உள்ளுர் வணிகளர்களாவர்.

162) இராஷ்டிரகூட கால நூல்களை ஆசிரியருடன் பொருத்துக.

அ. நலிசம்பு – 1. திருவிக்ரமன்

ஆ. கவிரஹஸ்யம் – 2. பொன்னா

இ. சாந்திபுராணம் – 3. ஹாளாயூதா

A) 3, 2, 1

B) 1, 2, 3

C) 1, 3, 2

D) 3, 1, 2

விளக்கம்: நலிசம்பு – திருவிக்ரமன்

கவிரஹஸ்யம் – ஹாளாயூதா

சாந்திபுராணம் – பொன்னா.

163) கூற்றுகளை ஆராய்க

1. குப்தர் காலத்தில் வாழ்ந்த, அறிவியல் மேதை வராகமிகிரர் ‘பிருகத்சம்ஹிதை’ என்ற நூலை எழுதினார்.

2. இவர் விண்வெளி, கோள்கள், தாவரங்கள், நில அமைப்பு போன்றவற்றைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. குப்தர் காலத்தில் வாழ்ந்த, அறிவியல் மேதை வராகமிகிரர் ‘பிருகத்சம்ஹிதை’ என்ற நூலை எழுதினார்.

2. இவர் விண்வெளி, கோள்கள், தாவரங்கள், நில அமைப்பு போன்றவற்றைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

164) கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் பற்றியும் அவற்றிற்கான சிகிச்சை முறைகள் பற்றியும் குறிப்பிடும் நூல் எது?

A) பிருகத்சம்ஹிதை

B) சரகசம்ஹிதா

C) அஸ்தசாஸ்திரம்

D) ஆரியபட்டம்

விளக்கம்: அஸ்தசாஸ்திரத்தில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் பற்றியும் அவற்றிற்கான சிகிச்சை முறைக்ள பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன.

165) குப்தர் காலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற மருத்துவர் யார்?

A) சரகர்

B) வைத்தியநாதர்

C) பதஞ்சலி

D) அகத்தியர்

விளக்கம்: சரகர், குப்தர் காலத்தில் புகழ்பெற்ற மருத்துவராகத் திகழ்ந்தார். “சரகசம்ஹிதா” என்ற மருத்துவ நூலை எழுதினார்.

166) குப்தர் காலத்தில் வாழ்ந்த தலைசிறந்த ஆயர்வேத மருத்துவ மேதை யார்?

A) தன்வந்திரி

B) வைத்தியநாதர்

C) பதஞ்சலி

D) அகத்தியர்

விளக்கம்: தன்வந்திரி என்பவர் குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த தலைசிறந்த ஆயர்வேத மருத்துவ மேதையாவார். இவர் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் பற்றியும் அதற்கான சிகிச்சை முறைகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

167) குப்தர்கள் கால கட்டடங்கள் மற்றும் கோயில் எத்தனை வகையான சிறப்ப்ம்சங்களுடன் காணபபடுகிறது?

A) 2

B) 3

C) 5

D) 6

விளக்கம்: குப்தர்கள்கால கட்டடங்கள் மற்றும் கோயில்கள் பின்வரும் 5 வகையான சிறப்பம்சங்களுடன் காணப்படுகின்றன.

1. தட்டையான கூரை கொண்ட சதுரக் கோயில்கள்

2. விமானத்துடன் கூடிய (2-ம் மாடி) தட்டையான கூரை கொண்ட சதுரக் கோயில்கள்

3. வளைகோட்டுக் கோபுரம் (சிகரம்) கொண்ட சதுரக் கோயில்கள்

4. செவ்வக வடிவிலான கோயில்கள்

5. வட்ட வடிவக் கோயில்கள்.

168) கூற்றுகளை ஆராய்க.

1. குப்தர்கள் கோயில்கள் வட இந்தியாவில் நாகர கட்டக்கலைப் பாணியில் கட்டப்பட்டன.

2. குப்தர்கால கோயில்கள் தென்னிந்தியாவில் திராவிடக் கட்டடக்கலைப் பாணியில் கட்டப்பட்டன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. குப்தர்கள் கோயில்கள் வட இந்தியாவில் நாகர கட்டக்கலைப் பாணியில் கட்டப்பட்டன.

2. குப்தர்கால கோயில்கள் தென்னிந்தியாவில் திராவிடக் கட்டடக்கலைப் பாணியில் கட்டப்பட்டன.

169) தியோகர் என்ற இடத்தில் குப்தர் காலத்தில் பஞ்சயாதன முறைப்படி எந்தக் கடவுளுக்கு கோயில் கட்டப்பட்டது?

A) சிவபெருமான்

B) முருகன்

C) பிரம்மா

D) விஷ்ணு

விளக்கம்: தியோகர் என்ற இடத்தில் பஞ்சயாதன முறைப்படி மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களை மையப்படுத்தித் தசாவதாரக் கோயில் கட்டப்பட்டது. மேலும், அங்கு ‘சாந்தி நாதர்’ என்ற சமணத்துறவிக்கு கோயிலும், ஜபல்பூர் அருகில் திகாவா என்ற இடத்தில் மகாவிஷ்ணுவிற்கு கோயிலும் கட்டப்பட்டன. இவை அனைத்தும் குப்தர்கல கோயில்கள் ஆகும்.

170) குப்தர்களின் கட்டடக்கலைச் சான்றாகத் திகழும் செங்கற்களால் கட்டப்பட்ட கோயில் எங்குள்ளது?

A) பூமரா

B) நச்சனக்குதாரோ

C) பிதாரகன்

D) திலோகர்

விளக்கம்: பூமரா, நச்சனக்குதாரோ இடத்தில் நகரப் பாணியில் கோயில்கள் கட்டப்பட்டன. கான்பூர் அருகில் ‘பிதார்கன்’ என்ற இடத்தில் செங்கற்களால் கட்டப்பட்ட கோயில் குப்தர்களின் கட்டடக்கலைக்குச் சான்றாகத் திகழ்கிறது.

171) குப்தர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களில் எத்தனை வகை மண்டபங்கள் இடம்பெற்றிருந்தன?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: குப்;தர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களில் 4 வகை மண்டபங்கள் இடம்பெற்றிருந்தன. குப்தர்களின் பெரும்பாலான கோயில்கள் ஹ{ணர்களின் படையெடுப்பின்போது இடிக்கப்பட்டன. ராஜகிருகம், சாரநாத் போன்ற இடங்களில் அழகிய பௌத்த ஸ்தூபிகள் அமைக்கப்பட்டன.

172) குப்தர்கள் காலத்தில் எந்த இடத்தில் அமைக்கப்பட்ட புத்தர் சிலையில் கிரேக்கக் கலையின் சாயல் உள்ளது?

A) சாரநாத்

B) மதுரா

C) இலங்கை

D) டெல்லி

விளக்கம்: குப்தர் காலத்தில் சிற்பக்கலை சிறப்புற்றிருந்தது. மதுராவில் குப்தர் காலத்தில் அமைக்கப்பட்ட புத்தர் சிலையில் கிரேக்கக் கலையின் சாயல் உள்ளது. சாரநாத்தில் நின்ற வடிவிலுள்ள புத்தர் சிலை சிறப்பாக அமைக்கப்பட்டது.

173) கூற்றுகளை ஆராய்க

1. சாரநாத்தில் நின்ற வடிவிலுள்ள புத்தர் சிலை சிறப்பாக அமைக்கப்பட்டது. சாரநாத் கலை பாணி இந்தியாவில் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது.

2. இது கனிஷ்கர் காலத்தின் காந்தாரக் கலையை நினைவூட்டுகிறது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. சாரநாத்தில் நின்ற வடிவிலுள்ள புத்தர் சிலை சிறப்பாக அமைக்கப்பட்டது. சாரநாத் கலை பாணி இந்தியாவில் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது.

2. இது கனிஷ்கர் காலத்தின் காந்தாரக் கலையை நினைவூட்டுகிறது.

விஷ்ணு, கார்த்திகேயர், துர்க்கை, நாகர் போன்ற கடவுளர்களுக்கச் சுடுமண்ணால் செய்யப்பட்ட சிற்பங்கள் சிறப்பான வேலைப்பாடுடையனவாகும். உதயகிரி கோயிலிலுள்ள மகாவிஷ்ணுவின் வராக அவதாரச் சிற்பமும், தியோகர் கோயிலிலுள்ள தசாவதாரச் சிற்பங்களும், பரத்பூர் கோயில்களிலுள்ள சிற்பங்களும் குப்தர் காலத்தில் சிறப்புப்பெற்றவை.

174) கூற்றுகளை ஆராய்க (குப்தர் காலத்தில்).

1. சைவ, வைணவ (பாகவத) சமய நம்பிக்கைகளும் தத்துவங்களும் கோயில்களில் சிற்பங்களாக வடிவமைக்கபட்டன.

2. பிதாரி என்ற இடத்திலுள்ள விஷ்ணுகுப்தரின் ஒற்றைக் கற்றூண் சிறப்பாக வடிவமைக்கபட்டது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: பிதாரி என்ற இடத்திலுள்ள ஸ்கந்தகுப்தரின் ஒற்றைக் கற்றூண் சிறப்பாக வடிவமைக்கபட்டது. சிவபெருமான், விஷ்ணு, ராமன், கிருஷ்ணன் ஆகிய கடவுளரின் சிலைகள் அழகாகவும் நேர்த்தியாகவும் இவர்கள் காலத்தில் வடிவமைக்கப்பட்டன.

175) அஜந்தாவிலுள்ள எத்தனையாவது குகை ஓவியங்கள் புத்தரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுகின்றன?

A) 14, 15

B) 11, 12

C) 18, 19

D) 16, 17

விளக்கம்: குப்தர்கள் காலத்தில் அஜந்தா, பாக் (குவாலியர் அருகில்) ஆகிய இடங்களில் ஓவியங்கள் அழகுற தீட்டப்பட்டன. அஜந்தாவிலுள்ள 16, 17-ஆவது குகை ஓவியங்கள் புத்தரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுகின்றன. போதிசத்துவர்களின் ஓவிங்களும் அழகிய பறவைகளின் ஓவியங்களும் சிறப்புப் பெற்றிருந்தன.

176) தென்னிந்திய வரலாற்றில் முதல் முறையாக குடைவரைக் கோயில்கள் யாரால் உருவாக்கப்பட்டன?

A) சேரர்

B) சோழர்

C) பாண்டியர்

D) பல்லவர்

விளக்கம்: தென்னிந்திய வரலாற்றல் முதல் முதலாகப் பல்லவ மன்னரான முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில், மலைகளைக் குடைந்து கோயில் உருவாக்கப்பட்டன. இவை “குடைவரைக் கோயில்கள்” எனப்பட்டன.

177) சாளுக்கியர் காலத்தில் பட்டாடக்கல் என்ற இடத்தில் கட்டப்பட்ட 10 கோயில்களில் வடஇந்திய கலைப்பாணியில் அமைந்த கோயில் எது?

A) பாபாநாதர் கோயில்

B) சங்கமேஸ்வரர் கோயில்

C) விருபாஷர் கோயில்

D) B மற்றும் C

விளக்கம்: வட இந்தியக் கலை பாணியில் கட்டப்பட்ட பாபநாதர்கோயில் சிறப்பான கலை நுணுக்கங்களுடன் அமைக்கப்பட்டது. திராவிட கலை பாணியிலமைந்த சங்கமேஸ்வரர் கோயிலும், விருபாஷர் கோயிலும் சிறப்புப் பெற்றவையாகும்.

178) கூற்றுகளை ஆராய்க.

1. குப்தர்கள் நடனக்கலைக்கு பேராதரவு தந்தனர். நடனக்கலை கலைஞர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.

2. திருவிழா நேரங்களில், கோயில்களில் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பெற்றன. அரசவையிலும் நடனங்கள் இடம்பெற்றன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. குப்தர்கள் நடனக்கலைக்கு பேராதரவு தந்தனர். நடனக்கலை கலைஞர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.

2. திருவிழா நேரங்களில், கோயில்களில் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பெற்றன. அரசவையிலும் நடனங்கள் இடம்பெற்றன.

179) கீழ்க்கண்டவற்றுள் எது காளிதாசரின் நாடகம் அல்ல?

A) சாகுந்தலம்

B) ரகுவம்சம்

C) குமாரசம்பவம்

D) கௌமுகிமகோத்சவம்

விளக்கம்: சாகுந்தலம், ரகுவம்சம், குமாரசம்பவம், மேகதூதம் ஆகியவை காளிதாசர் இயற்றிய நாடகங்களாகும். தேவிசந்திகுப்தம், கௌமுகிமகோத்சவம் போன்ற நாடகங்களும் குப்தர் காலத்தில் நடைபெற்றன.

180) கூற்றுகளை ஆராய்க.

1. ஹொய்சாளர்கள், காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள் நட்சத்திர வடிவாகவோ அல்லது பல கோணங்கள் கொண்டவையாகவோ விளங்குகின்றன.

2. உச்சியில் பூந்தொட்டி போன்ற அலங்கார வேலைப்பாடு கொண்டு காணப்படுகிற. பல கட்டடங்களில் ஒன்று, இரண்டு அல்லது 4 கோபுரங்கள் காணப்படுகின்றன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. ஹொய்சாளர்கள், காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள் நட்சத்திர வடிவாகவோ அல்லது பல கோணங்கள் கொண்டவையாகவோ விளங்குகின்றன.

2. உச்சியில் பூந்தொட்டி போன்ற அலங்கார வேலைப்பாடு கொண்டு காணப்படுகிற. பல கட்டடங்களில் ஒன்று, இரண்டு அல்லது 4 கோபுரங்கள் காணப்படுகின்றன.

181) இந்தியப் பணபாட்டிற்குக் குப்தர்களின் கொடை என்ன?

A) மத்திய அரசு நிர்வாகத் துறைகள், மாநில அரசு நிர்வாகத் துறைகள், மாவட்ட ஆட்சிமுறை, நகர மற்றும் கிராம நிர்வாக சபைகள் போன்றவை இந்திய பண்பாட்டிற்குக் குப்தர்கள் வழங்கிய கொடைகளாகும்.

B) காளிதாசரின் சாகுந்தலம், விக்கிரமோர்வசியம், இரகுவம்சம், குமாரசம்பவம், மேகதூதம் மற்றும் பல இலக்கிய படைப்புகள் குப்தர்காலக் கொடையாகும்

C) ஆரியபட்டரின் ‘கணிதநூல்’, வானவியல், வாக்பட்டரின் அஷ்டாங்க சங்கிரகம் (மருத்துவம்), வராகமிகிரரின் பஞ்சசித்தாந்தகம் (வானவியல்) சந்திரரின் சந்திராச்சாரிய வியாக்கரணம் (இலக்கணம்) மற்றும் அமரரின் நிகண்டு போன்ற நூல்கள் இந்தியப் பண்பாட்டு மற்றும் அறிவியல் வளர்ச்சிக்குக் குப்தர்கள் அளித்த கொடையாகும்.

D) அனைத்தும்.

விளக்கம்: மத்திய அரசு நிர்வாகத் துறைகள், மாநில அரசு நிர்வாகத் துறைகள், மாவட்ட ஆட்சிமுறை நகர மற்றும் கிராம நிர்வாக சபைகள் போன்றவ இந்திய பண்பாட்டிற்குக் குப்தர்கள் வழங்கிய கொடைகளாகும்.

காளிதாசரின் சாகுந்தலம், விக்கிரமோர்வசியம், இரகுவம்சம், குமாரசம்பவம், மேகதூதம் மற்றும் பல இலக்கிய படைப்புகள் குப்தர்காலக் கொடையாகும்

ஆரியபட்டரின் ‘கணிதநூல்’, வானவில், வாக்பட்டரின் அஷ்டாங்க சங்கிரகம் (மருத்துவம்), வராகமிகிரரின் பஞ்சசித்தாந்தகம் (வானவியல்) சந்திரரின் சந்திராச்சாரிய வியாக்கரணம் (இலக்கணம்) மற்றும் அமரரின் நிகண்டு போன்ற நூல்கள் இந்தியப் பண்பாட்டு மற்றும் அறிவியல் வளர்ச்சிக்குக் குப்தர்கள் அளித்த கொடையாகும்.

182) இந்தியப் பண்பாட்டிற்குக் குப்தர்களின் கொடை என்ன?

A) குப்தர் கால நீதித்துறை, இன்றைய நீதித்துறை வளர்ச்சிக்கு முன்னோடியாகத் திகழ்கிறது.

B) குப்தர் காலத்தின் சமயசார்பற்ற ஆட்சிமுறையானது, தற்போதைய இந்திய பன்முக பண்பாட்டிற்கு அடிகோலியது எனலாம்.

C) குப்தர்கால குகைக் கோயில்கள் மற்றம் கட்டுமானக் கோயில்கள் கலை வளர்ச்சிக்கும், சமயவளர்ச்சிக்கும் சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்வதுடன் இந்தியப் பண்பாட்டு வளர்ச்சிக்கும் துணை புரிந்தன.

D) அனைத்தும்

விளக்கம்: குப்தர் கால நீதித்துறை, இன்றைய நீதித்துறை வளர்ச்சிக்கு முன்னோடியாகத் திகழ்கிறது.

குப்தர் காலத்தின் சமயசார்பற்ற ஆட்சிமுறையானது, தற்போதைய இந்திய பன்முக பண்பாட்டிற்கு அடிகோலியது எனலாம்.

குப்தர்கால குகைக் கோயில்கள் மற்றம் கட்டுமானக் கோயில்கள் கலை வளர்ச்சிக்கும், சமயவளர்ச்சிக்கும் சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்வதுடன் இந்தியப் பண்பாட்டு வளர்ச்சிக்கும் துணை புரிந்தன.

183) கூற்றுகளை ஆராய்க.

1. சாரநாத், மதுரா, அஜந்தா, எல்லோரா, பாக் போன்ற இடங்களிலுள்ள சிற்பங்கள், ஓவியங்கள் போன்ற கலை நுட்பங்கள் யாவும் இந்தியப் பண்பாட்டின் சிறந்த கூறுகளாக விளங்குகின்றன.

2. குப்தர் காலம் ‘செவ்வியல் கலைகளின் காலம்’ என்று அழைக்கப்படுகிறது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. சாரநாத், மதுரா, அஜந்தா, எல்லோரா, பாக் போன்ற இடங்களிலுள்ள சிற்பங்கள், ஓவியங்கள் போன்ற கலை நுட்பங்கள் யாவும் இந்தியப் பண்பாட்டின் சிறந்த கூறுகளாக விளங்குகின்றன.

2. எனவே, குப்தர் காலம் ‘செவ்வியல் கலைகளின் காலம்’ என்று அழைக்கப்படுகிறது.

184) முதலாம் புலிகேசி, 2-ஆம் புலிகேசி ஆகியோர் யார்?

A) குப்தர்கள்

B) மௌரியர்கள்

C) சாளுக்கியர்கள்

D) குஷாணர்கள்

விளக்கம்: தென்னிந்தியாவை ஆட்சிபுரிந்த சிறந்த அரச வம்சங்களுள் சாளுக்கிய வம்சமும் ஒன்றாகும். முதலாம் புலிகேசி, 2-ஆம் புலிகேசி ஆகியோர் இவ்வம்சத்தின் சிறந்த மன்னர்களாகத் திகழ்ந்தனர்.

185) பொருத்துக.

அ. விக்ரமாங்கசரிகம் – 1. சாளுக்கிய வம்சம்

ஆ. சியூக்கி – 2. பில்ஹனர்

இ. ஐஹோலே கல்வெட்டு – 3. யுவான்சுவாங்

A) 3, 2, 1

B) 1, 3, 2

C) 2, 3, 1

D) 3, 1, 2

விளக்கம்: பல்ஹணர் எழுதிய விக்ரமாங்கசரிதம் என்ற நூல், சீனப்பயணி யுவான்சுவாங்கின் கியூக்கி என்றழைக்கப்படும் பயணக் குறிப்புகள், ஐஹோலே கல்வெட்டு ஆகியவை சாளுக்கிய வம்சத்தைப் பற்றி அறிய உதவும் சான்றாகும்.

186) சாளுக்கியர் பற்றிய தவறானக் கூற்றைத் தெரிவு செய்க.

A) மன்னரே நாட்டின் தலைவராவார். அவருக்கு உதவ அமைச்சரவை இருந்தது.

B) நாடு பல மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. மகாணத்தின் தவைராக ஆளுநர் நியமிக்கப்பட்டார்

C) சாளுக்கிய வம்சத்தில் மன்னர் பதவி பரம்பரைப் பதவியாகும். தந்தைக்குப்பின் மூத்த மகன் ஆட்சிக்கு வருவார்

D) சாளுக்கிய வம்சத்தில் அண்ணன் இறந்த பின், அரியணையேறும் வழக்கம் இருந்தது.

விளக்கம்: சாளுக்கிய வம்சத்தில் மன்னர் பதவி பரம்பரைப் பதவியாக அங்கீகரிக்கப்படவில்லை. தந்தைக்குப் பின் மூத்த மகன் ஆட்சிக்கு வரும் நிலையில்லை. அண்ணன் இறந்தபின், தம்பி அரியணையேறும் வழக்கம் இருந்தது என்பது இவ்வம்சத்தின் சிறப்பம்பசமாகும்.

187) எந்தப் பேரரசுக் காலத்தில் இந்துசமயம் இந்தியாவிலிருந்து பாலித்தீவிற்குப் பரவியது?

A) குப்தர்கள்

B) மௌரியர்கள்

C) குஷாணர்கள்

D) சந்தேலர்கள்

விளக்கம்: குப்தப் பேரரசில் இந்துசமயம் இந்தியாவிலிருந்து பாலித்தீவிற்குப் பரவியது, இந்தியப் பண்பாடும் விழாக்களும் இன்றளவும் அங்குள்ள மக்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன.

188) சாளுக்கிய அரசர்கள் சிறப்பாக ஆட்சி செய்தததை கூறுவது எது?

A) ஐஹோல் கல்வெட்டு

B) சாரநாத் கற்றூண்

C) ஹிரகதஹள்ளி செப்புப்பட்டயம்

D) A மற்றும் C

விளக்கம்: அரசர்கள் சிறப்பாக ஆட்சி செய்தததை ஹிரகதஹள்ளி என்ற செப்புப்பட்டயம் கூறுகிறது. சாளுக்கிய இளவரசிகள் மாநில ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர்.

189) சாளுக்கியர்களின் அரசன், ஆளுநர், தலைமை அமைச்சர், அமத்தியா, சமகர்த்தா ஆகியோர் பற்றி கூறுவது எது?

A) ஐஹோல் கல்வெட்டு

B) சாரநாத் கற்றூண்

C) ஹிரகதஹள்ளி செப்புப்பட்டயம்

D) A மற்றும் C

விளக்கம்: அரசர், ஆளுநர், தலைமை அமைச்சர், அமத்தியா என்ற வருவாய்த்துறை அமைச்சர், சமகர்த்தா என்ற கருவூல அமைச்சர் ஆகியோர் பற்றி ஐஹோலே கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

190) கூற்றகளை ஆராய்க.

1. சாளுக்கிய பேரரசு பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. அவை விஷயம், ராஷ்டிரம், நாடு, கிராமம் ஆகியவையாகும்.

2. விஷயபதி, சமந்தா, கிராமபோகி, மபத்ரா ஆகிய அதிகாரிகள் அரசனுக்கும் ஆளுநருக்கும் சாளுக்கிய நிர்வாகத்தில் உதவினர்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. சாளுக்கிய பேரரசு பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. அவை விஷயம், ராஷ்டிரம், நாடு, கிராமம் ஆகியவையாகும்.

2. விஷயபதி, சமந்தா, கிராமபோகி, மபத்ரா ஆகிய அதிகாரிகள் அரசனுக்கும் ஆளுநருக்கும் சாளுக்கிய நிர்வாகத்தில் உதவினர்.

191) பொருத்துக.

அ. சமந்தா – 1. விஷயபதி

ஆ. கிராமயோகி – 2. கணக்கர்

இ. கர்ணா – 3. கிராம நிர்வாகம்

ஈ. விஷயா – 4. நிலப்பிரபுக்கள்

A) 4, 3, 2, 1

B) 1, 4, 2, 3

C) 4, 2, 3, 1

D) 2, 3, 4, 1

விளக்கம்: சாளுக்கிய நிர்வகாத்தில் சமந்தா என்பவர் நிலப்பிரபுக்களாவர். கிராமபோகி கிராம நிர்வாகத்தை கண்காணித்தார். அவருக்குக் கர்ணா என்ற கணக்கர் உதவினார். விஷயா எனப்பட்ட மாவட்டத்தின் தலைவர் விஷயாபதி ஆவார்.

192) கூற்றுகளை ஆராய்க.

1. சாளுக்கிய நிர்வாகத்தில் ‘மகாஜனம்’ எனப்பட்ட மக்கள்குழு நகரங்களின் சட்டம் ஒழுங்கை பராமரித்து வந்தது.

2. சாளுக்கியர்கள் காலத்தில் சமூகமானது வர்ணாசிரம முறையின்படியே இருந்தது. ஆனால், சாதிய வேற்றுமைகள் காணப்படவில்லை. உயர்குடிப் பெண்கள் உரிமை பெற்றுக் காணப்பட்டனர்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: சாளுக்கிய நிர்வாகத்தில் ‘மகாஜனம்’ எனப்பட்ட கிராம மக்கள்குழு, கிராமங்களின் சட்டம் ஒழுங்கை பராமரித்து வந்தது.

193) கூற்றுகளை ஆராய்க.

1. சாளுக்கியர்கள் காலத்தில் வேளாண்மை முக்கியத் தொழிலாக இருந்தது. நெசவு, உலோக, தச்சுத் தொழிலாளர்கள் சிறப்பிடம் பெற்றிருந்தனர்

2. காவிரி, நர்மதை நதிகளால் வளம்பெற்ற நிலங்களில் உற்பத்தி செய்யப்பட்ட தானியங்களை வணிகர்கள் வட இந்தியாவிற்குக் கொண்டு சென்று விற்பனை செய்தனர்,

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. சாளுக்கியர்கள் காலத்தில் வேளாண்மை முக்கியத் தொழிலாக இருந்தது. நெசவு, உலோக, தச்சுத் தொழிலாளர்கள் சிறப்பிடம் பெற்றிருந்தனர்

2. காவிரி, நர்மதை நதிகளால் வளம்பெற்ற நிலங்களில் உற்பத்தி செய்யப்பட்ட தானியங்களை வணிகர்கள் வட இந்தியாவிற்குக் கொண்டு சென்று விற்பனை செய்தனர்.

194) சாளுக்கியர் பற்றிய தவறானக் கூற்றை தெரிவு செய்க.

A) இந்து, சமணம், பௌத்தம் ஆகிய சமயங்களைப் பின்பற்றும் மக்கள் இருந்தனர். சாளுக்கிய மன்னர்கள் சமய சகிப்புத்தன்மையைப் பெற்றிருந்தனர்..

B) முதலாம் புலிகேசியின் ஆட்சிக்காலத்தில் இந்து, சமண, பௌத்த சமயங்களும் வளர்ச்சி பெற்றன. இவரது அவையிலிருந்து ரவி கீர்த்தி என்ற அறிஞர் சமண சமயத்தைப் பின்பற்றினார்.

C) சீனப் பயணி யுவான் சுவாங் 2-ஆம் புலிகேசியின் அவைக்கு வருகை புரிந்தார். இவர் சாளுக்கிய நாட்டில் மகாயனாம், ஹீனயானம் ஆகிய பிரிவுகளைப் பின்பற்றும் பௌத்தர்கள் வாழ்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

D) ஐஹோலே கல்வெட்டைப் பொறித்தவர் ரவி கீர்த்தி.

விளக்கம்: இரண்டாம் புலிகேசியின் ஆட்சிக்காலத்தில் இந்து, சமண, பௌத்த சமயங்களும் வளர்ச்சி பெற்றன. இவரது அவையிலிருந்து ரவி கீர்த்தி என்ற அறிஞர் சமண சமயத்தைப் பின்பற்றினார்.

195) கூற்றுகளை ஆராய்க

1. சாளுக்கியர், கலைவளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளனர். கோயில்களைக் கட்டுவதற்கு அவர்கள் வேசர கலைப்பாணியைப் பின்பற்றினர்

2. ஐஹோலே, பாதாமி, பட்டாடக்கலை; ஆகிய இடங்களில் சாளுக்கியர்களின் கட்டுமானக் கோயில்களைக் காணலாம்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. சாளுக்கியர், கலைவளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளனர். கோயில்களைக் கட்டுவதற்கு அவர்கள் வேசர கலைப்பாணியைப் பின்பற்றினர்

2. ஐஹோலே, பாதாமி, பட்டாடக்கலை; ஆகிய இடங்களில் சாளுக்கியர்களின் கட்டுமானக் கோயில்களைக் காணலாம்.

196) சாளுக்கியர்களின் குடைவரைக் கோயில்கள் இல்லாத இடம் எது?

A) அஜந்தா

B) எல்லோரா

C) நாசிக்

D) பாதாமி

விளக்கம்: அஜந்தா, எல்லோரா, நாசிக் ஆகிய இடங்களில் இவர்களது குடைவரைக் கோயில்கள் உள்ளன. பாதாமி குகைக்கோயிலும் இவர்களது காலக்கட்டத்தில் உருவாக்கப்பட்டது.

197) ஐஹோலே நகரில் எத்தனை கோயில்கள் சாளுக்கியர்கள் காலத்தில் கட்டப்பட்டன?

A) 48

B) 56

C) 60

D) 70

விளக்கம்: ஐஹோலே நகரில் 70 கோயில்கள் சாளுக்கியர்கள் காலத்தில் கட்டப்பட்டன. இதனால், இந்நகரம் ‘கோயில் நகரம்’ என அழைக்கப்பட்டது. ஐஹோலே நகரில் சமதானக் கூரையுடன் நிறைய தூண்களைக் கொண்டு கட்டப்பட்ட லட்கன் கோயிலும் ஒரு பௌத்த சைத்தியத்தை போல (சைத்தியம் – பௌத்தர்களின் தியானக் கூடம்) அமைக்கப்பட்ட துர்க்கையம்மன் கோயிலும், ஹீச்சிமல்லிக்குடி கோயிலும் புகழ்பெற்றவை. ஐஹோலே அருகிலுள்ள ‘மெகுடி’ என்ற இடத்திலுள்ள சமணர் கோயிலும் அழகாக அமைக்கப்பட்டுள்ளது.

198) பாதாமி-வில் உள்ள முக்தீஸ்வரர் கோயிலும் மேலக்குட்டி சிவபெருமான் கோயிலும் யார் காலத்தவை?

A) குப்தர்கள்

B) மௌரியர்கள்

C) முகலாயர்

D) சாளுக்கியர்கள்

விளக்கம்: ஐஹோலே நகரைப்போல் ‘பாதாமி’ என்ற இடத்திலும் சாளுக்கியர்கள் பல கோயில்களைக் கட்டினர். அவற்றில் முக்தீஸ்வரர் கோயில் மற்றும் மேலக்குட்டி சிவபெருமான் கோயிலும் இவர்களின் கட்டிடக்கலை நுணுக்கத்தால் புகழ்பெற்றன.

199) சாளுக்கியர்கள் காலத்தில் பட்டாடக்கல் என்ற இடத்தில் கட்டப்பட்ட கோயில்களில் எத்தனை கோயில்கள் திராவிடக்கலைபாணியில் கட்டப்பட்டன?

A) 10

B) 14

C) 6

D) 12

விளக்கம்: சாளுக்கியர்கள் காலத்தில் பட்டாடக்கல் என்ற இடத்தில் 10 கோயில் கட்டப்பட்டன. அவற்றுள் 6 கோயில்கள் திராவிட கலைப்பாணியிலும், 4 கோயில்கள் வட இந்தியக் கலை பாணியிலும் கட்டப்பட்டன.

200) குப்தப் பேரரசின் எந்த மன்னன் வீணைவாசிப்பது போன்ற உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்பட்டது?

A) முதலாம் சந்திர குப்தர்

B) இரண்டாம் சமுத்திகுப்தர்

C) முதலாம் சமுத்திர குப்தர்

D) இரண்டாம் சந்திர குப்தர்

விளக்கம்: குப்தர்கள் காலம் இசையும், நடனமும் செழித்தோங்கிய காலமாகும். குப்தர்கள் இசைக்கலைக்குப் பேராதரவு தந்து, இசைக் கலைஞர்களை ஊக்குவித்தனர். மத்தளம், யாழ், சங்கு போன்ற இசைக்கருவிகளைப் பயன்படுத்தினர். குப்த மன்னரான முதலாம் சமுத்திர குப்தர் வீணை வாசிப்பது போன்று உருவம் பொறித்த நாணயங்கள் காணப்பட்டன. இதன்மூலம், இவர் இசைக்கலைக்கு ஆதரவு தந்தார் என அறியமுடிகிறது.

201) யாருடைய காலத்தில் இந்து சமயம் முழுமையடையந்தது?

A) மௌரியர்

B) சந்தேலர்

C) ஹர்சர்

D) குப்தர்

விளக்கம்: குப்தர்கள் காலத்தில் இந்து சமயம் முழுமையடைந்தது. சமண, பௌத்த சமயங்களும் மக்களால் பின்பற்றப்பட்டன. தசாவதாரக் கதைகள் போன்றவற்றைக் கேட்டறிந்த மக்களுக்கு இந்து சமயத்தின் மீது மிகுந்த மதிப்பு ஏற்பட்டது. புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவை கதைகளாகக் கூறப்பட்டன.

202) பட்டாடக்கல்லில் அமைந்த விருபாஷர் கோயில் தமிழகத்திலுள்ள எந்த கோயிலை போன்று கட்டப்பட்டது?

A) தஞ்சை பெரிய கோயில்

B) மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

C) காஞ்சி காமாட்சியம்மன் கோயில்

D) காஞ்சி கைலாசநாதர் கோயில்

விளக்கம்: காஞ்சிபுரத்திலுள்ள கைலாசநாதர் கோயில் போன்றே பட்டாடக்கல் திராவிடக் கலைபாணியில் காஞ்சிபுர சிற்பிகளால் “விருபாஷர் கோயில்” கட்டப்பட்டது.

203) “திரிபுவனச்சாரியா” என்பதன் பொருள் என்ன?

A) மூவுலகையும் ஆள்பவர்

B) மூவுலகின் கடவுள்

C) மூவுலகையும் உருவாக்கியவர்

D) எதுவுமில்லை

விளக்கம்: பட்டாடக்கல் நகரில் கோயில்களை அமைத்த கட்டக்கலை வல்லுநர்களுக்குத் ‘திரிபுவனச்சாரியா’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. திரிபுவனச்சாரியா என்பதன் பொருள் ‘மூவுலகையும் உருவாக்கியவன்’ என்பதாகும்.

204) ‘ரேவதி ஓவஜா’ என்பவர் எந்தக் கோயிலின் கருவறையை வடிவமைத்தார்?

A) சங்கமேஸ்வரர் கோயில்

B) கைலாசநாதர் கோயில்

C) விருபாஷர் கோயில்

D) பாபநாதர் கோயில்

விளக்கம்: விருபாஷர் கோயிலின் அடித்தளக் கட்டுமானத்தின்படி கட்டப்பட்ட பாபநாதர் கோயிலில், இராமாயணத்தின் முக்கிய காட்சிகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. ‘ரேவதி ஓவஜா’ என்பவர் இக்கோயிலின் கருவறையை வடிவமைத்தார் என்று இங்குள்ள கன்னட கல்வெட்டு குறிப்பிடுகிறது.205) சாளுக்கியர் பற்றிய கூற்றுகளை ஆராய்க

1. பாதாமி அருகில் ஒரே இடத்திலுள்ள 4 குடைவரைக் கோயில்கள், கலை நயத்துடன் அமைக்கப்பட்டன.

2. அவற்றின் சுவர்களும், தூண்கள் தாங்கும் மண்டபங்களும், கடவுளர் மற்றும் மனிதர்களின் அழகான சிற்பங்கள் போன்றவையும் இக்குடைவரைக் கோயில்களில் இடம்பெற்றுள்ளன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. பாதாமி அருகில் ஒரே இடத்திலுள்ள 4 குடைவரைக் கோயில்கள், கலை நயத்துடன் அமைக்கப்பட்டன.

2. அவற்றின் சுவர்களும், தூண்கள் தாங்கும் மண்டபங்களும், கடவுளர் மற்றும் மனிதர்களின் அழகான சிற்பங்கள் போன்றவையும் இக்குடைவரைக் கோயில்களில் இடம்பெற்றுள்ளன.

206) ஓவியக் கலையில் சாளுக்கியர்கள் __________________என்ற அரச வம்ச கலை பாணியைப் பின்பற்றினர்?

A) திராவிடக் கலைபாணி

B) வட இந்தியக் கலைபாணி

C) மதுரா கலைபாணி

D) வாகாடகர்கள் கலைபாணி

விளக்கம்: ஓவியக் கலையில் சாளுக்கியர்கள், வாகாடகர்கள் என்ற அரச வம்ச கலை பாணியைப் பின்பற்றினர். விஷ்ணுவின் தசாவதாரங்கள் சாளுக்கியர்களால் ஓவியங்களாக வரையப்பட்டன. பாதாமி நகரில் உள்ள குகைக்கோயிலில் அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டன. சாளுக்கிய மன்னன் ‘மங்களேசன்’ கட்டிய அரண்மனையிலும் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.

207) சாளுக்கியர்களின் பண்பாட்டுக் கொடையில் சரியானதைத் தேர்வு செய்க.

A) சாளுக்கியர்கள் சமய சகிப்புத்தன்மையைக் கடைபிடித்தனர். இந்து, பௌத்தம், சமணம் போன்ற சமயத்திலிருந்து அறிஞர்களை ஆதரித்தனர்.

B) 2-ஆம் புலிகேசி, தலைசிறந்த கலை, இலக்கிய புரவலராகத் திகழ்ந்தார். இவருடைய அவைப்புலவரான ரவிகீர்த்தி, ஐஹோலே கல்வெட்டைப் பொறித்தார். இக்கல்வெட்டு 2-ஆம் புலிகேசியின் வெற்றிச் சிறப்புகளையும், அரசியல், சமூகம், பொருளாதார, சமய நிலையையும் குறிப்பிடுகிறது.

C) சாளுக்கியர்கள் ஐஹோல் நகரில் 70-க்கும மேற்பட்ட கோயில்களைக் கட்டினர்.

D) அனைத்தும் சரி

விளக்கம்: சாளுக்கியர்கள் சமய சகிப்புத்தன்மையைக் கடைபிடித்தனர். இந்து, பௌத்தம், சமணம் போன்ற சமயத்திலிருந்து அறிஞர்களை ஆதரித்தனர்.

2-ஆம் புலிகேசி, தலைசிறந்த கலை, இலக்கிய புரவலராகத் திகழ்ந்தார். இவருடைய அவைப்புலவரான ரவிகீர்த்தி, ஐஹோலே கல்வெட்டைப் பொறித்தார். இக்கல்வெட்டு 2-ஆம் புலிகேசியின் வெற்றிச் சிறப்புகளையும், அரசியல், சமூகம், பொருளாதார, சமய நிலையையும் குறிப்பிடுகிறது.

சாளுக்கியர்கள் ஐஹோல் நகரில் 70-க்கும் மேற்பட்ட கோயில்களைக் கட்டினர்.

208) சாளுக்கிய நாட்டின் ‘கோயில் நகரம்’ எது?

A) பாதாமி

B) ஐஹோல்

C) பட்டாடக்கல்

D) காஞ்சிபுரம்

விளக்கம்: சாளுக்கியர்கள் ஐஹோல் நகரில் 70-க்கும மேற்பட்ட கோயில்களைக் கட்டினர். இந்நகரம் சாளுக்கிய நாட்டின் ‘கோயில் நகரம்’ என்று அழைக்கப்படுகிறது. காஞ்சிபுரத்தின் கைலாசநாதர் கோயிலைப் போன்று கட்டப்பட்ட விருபாஷர் கோயில், சாளுக்கியர்கள் அளித்த பண்பாட்டுக் கொடையாகும்.

209) பாண்டியரின் சமூகநிலை பற்றிய மார்க்கோபோலோ மற்றும் வாசப் ஆகியோரின் குறிப்புகளின்படி பின்வரும் கூற்றுகளில் எது சரி எனக் கூறுக.

A) சாதாரண மக்களின் ஆடைகள் எளிமையாகவும், அரசக் குடும்பங்களின் ஆடைகள் ஆடம்பரமாகவும் இருந்தன

B) குளித்த பிறகே காலை உணவுண்ணும் பழக்கத்தை மேற்கொண்டனர்

C) மது அருந்துதல் பெருங்குற்றமாகக் கருதப்பட்டது. அவ்வாறு மது அருந்திவிட்டுப் பேசுவோரின் வாக்கினைப் புறக்கணித்தல் சமூக மரபாயிற்று.

D) அனைத்தும் சரி

விளக்கம்: சாதாரண மக்களின் ஆடைகள் எளிமையாகவும், அரசக் குடும்பங்களின் ஆடைகள் ஆடம்பரமாகவும் இருந்தன

குளித்த பிறகே காலை உணவுண்ணும் பழக்கத்தை மேற்கொண்டனர்

மது அருந்துதல் பெருங்குற்றமாகக் கருதப்பட்டது. அவ்வாறு மது அருந்திவிட்டுப் பேசுவோரின் வாக்கினைப் புறக்கணித்தல் சமூக மரபாயிற்று.

210) ஹொய்சாளரின் தலைநகரம் என்ன?

A) துவாரகை

B) மதுரா

C) துவார சமுத்திரம்

D) பாடலிபுத்திரம்

விளக்கம்: ஹொய்சாளர் அரசர்களின் தலைநகரம் “ஹளபேடு” (துவாரசமுத்திம்) ஆகும். ஹளபேட்டில் அமைந்துள்ள ஹொய்சளேஸ்வர் கோயில் “கேதரோஜா” என்பவரால் கட்டப்பட்டது.

211) இராஷ்டிரக்கூடர் காலத்தில் சமயநிலை பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. இராஷ்டிரகூடர் காலத்தில் சைவமும், வைணவமும் பெரும்பாலான மக்களால் பின்பற்றப்பட்டன.

2. இவர்களின் முத்திரைகளில் விஷ்ணு அமர்ந்திருக்கும் காட்சியும், கருடனின் உருவமும் காணப்படுகிறது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: இவர்களின் முத்திரைகளில் சிவபெருமான் அமர்ந்திருக்கும் காட்சியும், கருடனின் உருவமும் காணப்படுகிறது.

212) துலாபாரம், இரண்யகர்ப்பம் போன்ற இந்து சமய விழாக்கள் யாருடைய காலத்தில் கொண்டாடப்பட்டன?

A) சாளுக்கியர்கள்

B) குப்தர்கள்

C) இராஷ்டிரகூடர்கள்

D) மௌரியர்கள்

விளக்கம்: துலாபாரம், இரண்யகர்ப்பம் போன்ற இந்து சமய விழாக்கள் இராஷ்டிரகூடர்கள் காலத்தில் கொண்டாடப்பட்டன. சமண சமயமும், இந்து கோயில்களும் சிறப்புடன் வளர்ச்சி பெற்றன.

213) ‘உத்ரங்கம்’ என்ற இராஷ்டிரகூடர்களால் விதிக்கப்பட்ட வரி எவ்வளவு?

A) விளைச்சலில் 6-ல் ஒரு பங்கு

B) விளைச்சலில் 4-ல் ஒரு பங்கு

C) விளைச்சலில் 10-ல் ஒரு பங்கு

D) விளைச்சலில் 12-ல் ஒரு பங்கு

விளக்கம்: இராஷ்டிரகூட அரசர்களுக்குப் பல துறைகளிலிருந்து வருவாய் கிடைத்தது. தம் மேலாண்மையை ஏற்றுக்கொண்டவர்களிடமிருந்தும், காடுகள், நிலங்கள் மூலமாகவும் வரிகள் வசூலிக்கப்பட்டன. விளைநிலத்திற்கு வசூலிக்கப்பட்ட வரி ‘உத்தரங்கம்’ என்றழைக்கப்பட்டது. இது விளைச்சலில் 4-ல் ஒரு பங்கு என வசூலிக்கப்பட்டது.

214) இராஷ்டிரகூடர்கள் கால இலக்கியங்களைப் பொருத்துக.

அ. சமணசேனர் – 1. அமோகவிருத்தி

ஆ. மகாவீர ஆச்சாரியார் – 2. கணித சாரசம்கிரகம்

இ. கத்தியானர் – 3. ஆதிபுராணம்

A) 3, 2, 1

B) 2, 3, 1

C) 1, 3, 2

D) 2, 1, 3

விளக்கம்: ஆசிரியர் நூல்

சமணசேனர் – ஆதிபுரணம்

மகாவீர ஆச்சாரியார் – கணித சாரசம்கிரகம்

கத்தியானார் – அமோகவிருத்தி

215) இராஷ்டிரகூட அரசன் அமோகவர்ஷன் எழுதிய நூல் எது?

A) கவிராஜமார்க்கம்

B) நலிசம்பு

C) ஹாளாயூதா

D) கவிரஹஸ்யம்

விளக்கம்: இராஷ்டிரகூட அரசன் அமோகவர்ஷன் “கவிராஜமார்;க்கம்” என்னும் கன்னட நூலை எழுதியுள்ளார். இவர்கள் வடமொழியை பெரிதும் ஆதரித்தனர்.

216) மெஹ்ராலி இரும்புத் தூண் யாருடைய காலத்தில் உருவாக்கப்பட்டது?

A) மௌரியர்

B) குஷாணர்

C) குப்தர்

D) முகலாயர்

விளக்கம்: குப்தர் காலத்தில் எழுப்பப்பட்ட மெஹ்ராலி இரும்புத் தூண் இன்று வரை பல்வேறு இயற்கை சீற்றங்களுக்கிடையேயும் துருப்பிடிக்காமல் உள்ளது. இது குப்தர்களின் உலோகக் கலைக்குச் சிறந்த சான்றாகத் திகழ்கிறது.

217) இராஷ்டிரகூடர்கள் காலத்தில், கன்னட மொழிக் கவிஞர்களுள் தலைசிறந்தவர் யார்?

A) நலிசம்பு

B) அமோகவர்ஷன்

C) பொன்னா

D) பம்பா

விளக்கம்: பம்பா என்பவர், கன்னட மொழிக் கவிஞர்களுள் தலைசிறந்தவராவார். இராஷ்டிரகூட அரசன் அமோகவர்ஷன் ‘கவிராஜமார்க்கம்’என்னும் கன்னட நூலை எழுதியது குறிப்பிடத்தக்கது.

218) எல்லோர கைலாசநாதர் கோயில் எங்குள்ளது?

A) மகாராஷ்டிரா

B) மத்தியப்பிரதேசம்

C) குஜராத்

D) இராஜஸ்தான்

விளக்கம்: எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோயில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ளது. இக்கோயில், முதலாம் கிருஷ்ணர் காலத்தில் பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்டது. இது ராஷ்டிரகூடர் காலத்தவை.

219) ‘இந்தியக் கலை வரலாற்றின் ஈடு இணையற்ற பொக்கிஷம்’ எது?

A) தஞ்சை கைலாசநாதர் கோயில்

B) அஜந்த குகை ஓவியம்

C) எல்லோரா கைலாசநாதர் கோயில்

D) அனைத்தும்

விளக்கம்: மகாராஷ்டிராவிலுள்ள எல்லோராவில் அமைந்த கைலாசநாதர் கோயில் “தக்காணப் பாறை படிவு” என்று அறியப்படும் மகாராஷ்டிராவின் எரிமலைப் பாறை உருவாக்கங்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. “இந்தியக் கலை வரலாற்றில் ஈடு இணையற்ற பொக்கிஷமான” இக்கோயில் கட்டுமான கோயில் போன்றே செதுக்கப்பட்ட அழகிய ஒற்றைக் கற்றளி குடைவரைக் கோயிலாகும். இவ்வகைக் குடைவரைகளில் மிக பெரியதான ஏதென்ஸின் புகழ்மிக்க பாத்தினான் கட்டுமானத்தின் மரபையும் அதனைவிட ஒன்றை மடங்கு உயரத்தையும் உடையதாகும்.

220) எல்லோரா கைலாசநாதர் கோயிலின் வெளிமுற்றத்தின் நீளம் என்ன?

A) 276 அடி

B) 272 அடி

C) 242 அடி

D) 262 அடி

விளக்கம்: எல்லோரா கைலாசநாதர் கோயிலின் வெளிமுற்றமானது, 276 அடி நீளமுடையதாய் அமைந்துள்ளது. மரபுப்படியான கல்கட்டுமான கோயில் போன்றே 4 அடிப்படைப் பகுதிகளைக் கொண்டது. அவை,

1. கோபுரத்துடன் கூடிய நுழைவுவாயில்

2. நந்தி மண்டபம்

3. பெரிய அளவிலான தூண்கள் உள்ள முகமண்டபம்

4. விமானத்துடன் கூடிய கருவறை

221) எலிபெண்டா குகை எந்த கடலில் உள்ளது?

A) அரபிக் கடல்

B) வங்காள விரிகுடா

C) இந்தியப் பெருங்கடல்

D) ஜாவா கடல்

விளக்கம்: எலிபெண்டா குகைகள் மும்பை துறைமுகத்திலிருந்து 10கி.மீ தொலைவில் அரபிக் கடலில் தீவாக அமைந்துள்ளது. இக்குகைக்கு ‘காராபுரி’ என்ற பழைய பெயரும் உண்டு.

222) காராபுரி குகைக்கு எலிபெண்டா குகை என்று பெயரிட்டவர் யார்?

A) ஆங்கிலேயர்

B) டேனியர்

C) டச்சுக்காரர்

D) போர்ச்சுகீசியர்

விளக்கம்: பெரிய யானையின் சிற்பங்களைக் கொண்ட போர்ச்சுக்கீசியர்கள் காராபுரி குகைக்கு “எலிபெண்டா குகைகள்” எனப் பெயரிட்டனர். இக்குகையின் மேற்கூரையை ஒரு கற்றூண் தாங்கி நிற்பதுபோல், குடைந்து இருப்பது இக்குகையின் தனிச்சிறப்பாகும்.

223) எலிபெண்டா குகை பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. எலிபெண்டா குகைக்குள் உள்ள சுவரில் சிவபெருமான், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திச் சிற்பங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளன.

2. இறைவனின் முத்தொழிலைக் குறிக்கும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய குண இயல்புகளைக் கொண்ட மகேசுவரமூர்த்தியின் வடிவம் அழகுமிக்கது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. எலிபெண்டா குகைக்குள் உள்ள சுவரில் சிவபெருமான், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திச் சிற்பங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளன.

2. இறைவனின் முத்தொழிலைக் குறிக்கும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய குண இயல்புகளைக் கொண்ட மகேசுவரமூர்த்தியின் வடிவம் அழகுமிக்கது.

224) எல்லோராவில் உள்ள ஓவியங்கள் எந்த சமயத்தை சேர்ந்தவை?

A) சமணம்

B) பௌத்தம்

C) சைவம்

D) இந்து

விளக்கம்: எல்லோராவில் உள்ள ஓவியங்கள் பௌத்த சமய ஓவியங்களாகும். கைலாசநாதர், தசாவதார கோயில்களில் காணப்படும் ஓவியங்கள் சிறப்பு வாய்ந்தவை. மேலும் சிவபெருமான், பார்வதி, முருகன், கணபதி ஆகியோரின் ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன.

225) இ;ந்தியப் பண்பாட்டிற்கு இராஷ்டிரகூடர்களின் கொடை என்ன?

A) எல்லோரா கைலாசநாதர் கோயில், மகாராஷ்டிரா எலிபெண்டா குகைகள் போன்றவை உலகப் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட இடங்களாகும்.

B) இராஷ்டிரகூடர்கள் ‘சுவர்ணா’ என்ற தங்க நாணயத்தை வெளியிட்டனர்

C) இராஷ்டிரகூடர்கள் ‘திரம்மா’ என்ற வெள்ளி நாணயத்தை வெளியிட்டனர்.

D) அனைத்தும்

விளக்கம்: எல்லோரா கைலாசநாதர் கோயில், மகாராஷ்டிரா எலிபெண்டா குகைகள் போன்றவை உலகப் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட இடங்களாகும்.

இராஷ்டிரகூடர்கள் ‘சுவர்ணா’ என்ற தங்க நாணயத்தை வெளியிட்டனர்

இராஷ்டிரகூடர்கள் ‘திரம்மா’ என்ற வெள்ளி நாணயத்தை வெளியிட்டனர்.

226) இந்தியப் பண்பாட்டிற்கு இராஷ்டிரகூடர்களின் கொடை என்ன?

A) இவர்களுடைய காலத்தில் ஒற்றைக்கல்லில் வரையப்பட்ட குகை ஓவியங்கள் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.

B) இவர்கள் சமயப் பொறையுடன் இருந்ததற்குச் சான்றுகளாகக் குகைகளில் இந்து, சமண சமயச் சிற்பங்களைக் காணலாம்.

C) இவர்கள் காலத்தில் வடமொழி இலக்கியங்களும், கன்னடமொழி இலக்கியங்களும் வளர்ச்சி பெற்றன.

D) அனைத்தும் சரி

விளக்கம்: இவர்களுடைய காலத்தில் ஒற்றைக்கல்லில் வரையப்பட்ட குகை ஓவியங்கள் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.

இவர்கள் சமயப் பொறையுடன் இருந்ததற்குச் சான்றுகளாகக் குகைகளில் இந்து, சமண சமயச் சிற்பங்களைக் காணலாம்.

இவர்கள் காலத்தில் வடமொழி இலக்கியங்களும், கன்னடமொழி இலக்கியங்களும் வளர்ச்சி பெற்றன.

227) இந்து சமயம், கோவில்கள், கலாச்சாரங்களைப பாதுகாப்பதற்கென உருவாக்கப்பட்ட பேரரசு எது?

A) முகலாயப் பேரரசு

B) விஜயநகரப் பேரரசு

C) மௌரியப் பேரரசு

D) ஹர்சப் பேரரசு

விளக்கம்: விஜயநகரப் பேரரசை, சங்கம. சாளுவ, துளுவ, ஆரவீடு வம்சத்தினர் போற்றி வளர்த்தனர். இந்துசமயம், கோவில்கள், கலாச்சாரங்களைப் பாதுகாப்பதற்கென உருவாக்கப்பட்டது இப்பேரரசு என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

228) ஹொய்சாளர்கள் காலத்தில் “ருத்ரபட்டா” என்ற கவிஞர் எந்த அரசரால் ஆதரிக்கப்பட்டார்?

A) நர்பகாமா

B) 3-ம் வீர பல்லாளர்

C) 2-ம் வீர பல்லாளர்

D) 2-ம் நிர்பகாமா

விளக்கம்: ஹொய்சாளர் மரபில்,

நிர்பகாமா – கி.பி(பெ.ஆ) 1026-47 முதல் 3-ம் வீர பல்லாளர்.- கி.பி.(பெ.ஆ) 1292- 1343 வரையிலான மன்னர்கள் ஆட்சி புரிந்தனர் ருத்ரபட்டா என்ற கவிஞர் 2-ஆம் வீர பல்லாலரால் ஆதரிக்கப்பட்டார். இவருடைய குறிப்புகள் அரசியல் நிலை சமூக, பொருளாதார, சமயநிலைகளைப் பற்றி குறிப்பிடுகின்றன.

229) கூற்றுகளை ஆராய்க

1. ஹொய்சாளர்கள் தம்முடைய நிர்வாக வசதிக்காக நாடு, விஷயம், கம்பணா, தேசம் என்று பிரித்து ஆட்சி செய்தனர்.

2. ஒவ்வொரு மாகாணமும் மகாபிராதனா, நீதி, நிர்வாகம் ‘தண்டநாயகா’ என்பவரின் கீழ் செயல்பட்டன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. ஹொய்சாளர்கள் தம்முடைய நிர்வாக வசதிக்காக நாடு, விஷயம், கம்பணா, தேசம் என்று பிரித்து ஆட்சி செய்தனர்.

2. ஒவ்வொரு மாகாணமும் மகாபிராதனா, நீதி, நிர்வாகம் ‘தண்டநாயகா’ என்பவரின் கீழ் செயல்பட்டன.

230) “செவ்வியல்கலைகளின் காலம்” எனப் போற்றப்படும் காலம் எது?

A) மௌரியர் காலம்

B) அசோகர் காலம்

C) முகலாயர் காலம்

D) குப்தர் காலம்

விளக்கம்: குப்தர்கள் காலத்தில் கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, நடனக்கலை, நாடகக்கலை போன்றவை பெரிதும் வளர்ச்சியடைந்தது. இந்திய வரலாற்றில் குப்தர்களின் காலம் ஒரு முக்கிய காலகட்டமாக அறிஞர்களால் கருதப்படுகிறது. எனவே இது “செவ்வியல்கலைகளின் காலம்” எனவும் போற்றப்படுகிறது

231) பேளுர் சென்னக்கேசவா கோவிலில் எத்தனை மாதனிக்க சிற்பங்கள் உள்ளன?

A) 18

B) 32

C) 42

D) 48

விளக்கம்: ஹொய்சாளர் காலத்தில் கட்டப்பட்ட பேளுர் சென்னக்கேசாவா கோவிலில் எங்கு நோக்கினும் சிற்பங்கள். உயிருள்ள மனிதர்களை போன்றே காணப்படும் மொத்தம் 42 மாதனிக்க சிற்பங்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு சிற்பமும் கோபம், பெருமை, மகிழ்ச்சி, துக்கம், அன்பு போன்ற பண்புகளை வெளிப்படுத்தும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வகை சிற்பங்கள் ‘மாக்கல்’ என்ற ஒரு வகை கல்லால் உருவாக்கப்பட்டவை.

232) இராஷ்டிரகூடர்கள் பற்றிய தவறானக் கருத்தைத் தேர்க.

A) நாட்டின் எல்லா துறைகளுக்கும் அரசனே தலைவன்

B) பட்டத்து இளவரசன் தகுதியின் அடிப்படையிலே தேர்ந்தெடுக்கப்பட்டார்

C) அரசர், தம் நிர்வாக வசதிக்காக அமைச்சரவையை ஏற்படுத்தினார்.

D) பேரரசு ராஷ்டிரம், விஷ்யம், புத்திகள் எனப் பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டது. இராஷ்டிரத்தின் தலைவர் ‘ராஜன்’ ஆவார்.

விளக்கம்: பேரரசு ராஷ்டிரம், விஷ்யம், புத்திகள் எனப் பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டது. இராஷ்டிரத்தின் தலைவர் ‘ராஷ்டிரபதி’ ஆவார்.

233) எந்தக் கோயில் “தெய்வீக ஆபரணம்” என்று அழைக்கப்படுகிறது?

A) தஞ்சைப் பெரிய கோவில்

B) வரதராஜ பெருமாள் கோயில்

C) கேதாரீஸ்வரர் கோயில்

D) மீனாட்சியம்மன் கோயில்

விளக்கம்: கேதாரீஸவரர் கோயில் “தெய்வீக ஆபரணம்” என்றழைக்கப்படுகிறது. இக்கோயிலின் அனைத்துப் பகுதியிலும் காணப்படும் நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகள் வியப்பிற்குரியவை. இது ஹொய்சாளர் காலத்தவை.

234) குப்தர்கள் காலத்தில் கீழ்க்காணும் எந்த பகுதியில் பௌத்த சமயம் செல்வாக்கு பெற்று திகழவில்லை?

A) பீகார்

B) வங்காளம்

C) உத்தரப்பிரதேசம்

D) மத்தியப் பிரதேசம்

விளக்கம்: குப்தர்கள் காலத்தில், இந்து சமயம் செல்வாக்கு பெற்றிருந்தாலும் பௌத்தமும், சமணமும் மக்களால் பின்பற்றப்பட்டு வந்தன. வங்காளம், பீகார், உத்திரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் பௌத்த சமயம் செல்வாக்குடன் திகழ்ந்தது. ‘வசுபந்து’ என்ற பௌத்த சமய அறிஞரை முதலாம் சமுத்திரகுப்தர் ஆதரித்தார்.

235) பேளுரில் உள்ள சென்னக் கேசவன் கோயில் யாரால் கட்டப்பட்டது?

A) பார்சுவநாதர்

B) ரேவதி ஓவஜா

C) விஷ்ணு வர்த்தன்

D) கேதரோஜா

விளக்கம்: பேளுரிலுள்ள விஜயநாராயணன் கோயில் (சென்னக்கேசவன் கோயில்) விஷ்ணு வர்த்தன், என்பவரால் கட்டப்பட்டது. இக்கோயில் பச்சை கருநீலநிற மாக்கல் எனப்படும் நுண்மணற்பாறைக் கற்களைப் பயன்படுத்திக் கட்டப்பட்டது.

236) எங்கு உள்ள தூண்கள் “மாயாஜால தூண்கள்” என்றழைக்கப்படுகின்றன?

A) பஸ்திஹள்ளி பார்சுவநாதர் கோயில்

B) சோம்நாத்பூர் கேசவன் கோயில்

C) சரஸ்வதி மகால்

D) அனைத்தும்

விளக்கம்: பார்சுவநாதருக்கு பஸ்திஹள்ளியில் சமணர் கோயில் கட்டப்பட்டது. இங்குள்ள தூண்களை “மாயாஜால தூண்கள்” எனலாம். இவை நம்முடைய உருவத்தைப் பிரதிபலித்துக் காட்டும் தன்மை உடையன.

237) ஹொய்சாளர்களால் கட்டப்பட்ட ‘திரிகுடசலம்’ என்று அழைக்கப்படும் கோயில் எது?

A) பஸ்திஹள்ளி பார்சுவநாதர் கோயில்

B) சோம்நாத்பூர் கேசவன் கோயில்

C) சரஸ்வதி மகால்

D) அனைத்தும்

விளக்கம்: ஹொய்சாளர்களின் கலைபாணிக்குச் சான்றாக சோம்நாத்பூரில் உள்ள கோயிலைக் கூறலாம். இக்கோயில் ஸ்ரீரங்கப்பட்டிணத்திலிருந்து 20மைல் தொலைவில் உள்ளது. இக்கோயில் ‘திரிகுடசலம்’ என்றழைக்கப்படும் மூன்று சன்னதி கோயில் ஆகும்.

238) ‘அரிகேசரி’ என்ற கோயில், ஹெய்சாளரால் எந்த கடவுளுக்காக கட்டப்பட்டது?

A) விஷ்ணு

B) பிரம்மா

C) சிவபெருமான்

D) முருகன்

விளக்கம்: வேசரா கலைப்பாணியில் கட்டப்பட்ட லட்சுமி நரசிம்மர் கோயில், நுகுஹள்ளி கோயில், ஈஸ்வர கோயில் (அரிசேகரி) போன்றவை ஹொய்சாளர் கால கட்டக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

239) ஹொய்சாளர்கள் எந்த மொழிக்கு முக்கியத்துவம் அளித்தனர்?

A) தெலுங்கு

B) கன்னடம்

C) மலையாளம்

D) தமிழ்

விளக்கம்: ஹொய்சாளர்கள் கன்னட மொழிக்கு முக்கியத்துவம் அளித்தனர். இவர்கள் காலத்தில் கன்னட மொழியில் பல இலக்கியங்கள் தோன்றின. சமஸ்கிருத மொழியும் வளர்ச்சி பெற்றிருந்தது.

240) பொருத்துக.

அ. நாகச்சந்திரா – 1. அரிச்சந்திரா காவியம்

ஆ. இராசாத்தியன் – 2. கிரிஜா கல்யாணம்

இ. நேமிசந்திரன் – 3. லீலாவதி

ஈ. அரீஸ்வரன் – 4. கணித நூற்சட்டங்கள்

உ. இராகவளங்கள் – 5. இராமாயணம்

A) 5, 4, 3, 2, 1

B) 5, 4, 2, 1, 3

C) 4, 3, 5, 1, 2

D) 2, 5, 1, 4, 3

விளக்கம்: விஷ்ணுவர்த்தனால், ஆதரிக்கப்பட்ட நாகச்சந்திரா என்ற சமணர், இராமாயணம் எழுதினார். இராசாத்தியன் கணித நூற் சட்டங்களைச் செய்யுளட்களாக்கினார். நேமிசந்திரன் என்ற சமணர் லீலாவதி என்னும் புதுமைக் கதையை எழுதினார். இவர்கள் அனைவரும் சமணர்கள் ஆவர். கிரிஜா கல்யாணம் எழுதிய அரீஸ்வரன், அரிச்சந்திரா காவியம் எழுதிய இராகவாங்கன் ஆகியோர் வீரசைவர்களாவர்.

241) ஹொய்சாளர்களின் இந்தியப் பண்பாட்டுக் கொடை என்ன?

A) இவர்களின் அனைத்துக் கோயில்களிலும் கர்ப்பகிருகம், மண்டபம், முகமண்டபம் காணப்படுகின்றன.

B) ஹொய்சாளர் கால கட்டடக்கலை நட்சத்திர வடிவ கட்டடக்கலையாகும்.

C) நடனம், நாடகம், இசை போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தனர்.

D) அனைத்தும்

விளக்கம்: இவர்களின் அனைத்துக் கோயில்களிலும் கர்ப்பகிருகம், மண்டபம், முகமண்டபம் காணப்படுகின்றன.

ஹொய்சாளர் கால கட்டடக்கலை நட்சத்திர வடிவ கட்டடக்கலையாகும்.

நடனம், நாடகம், இசை போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தனர்.

242) ஹொய்சாளர்களின் இந்தியப் பண்பாட்டுக் கொடை எது?

A) பக்தி இலக்கியவாதிகளான இராமானுஜர், மத்துவர் ஆகியோர் ஹொய்சாளர்கள் காலத்தில் வாழ்ந்தவர்கள்.

B) மத்துவர் எழுதிய ரிக்பாஷ்யம் இக்காலத்தில் எழுதப்பட்டது.

C) கன்னட மொழியில் சிறப்புப் பெற்ற ஹரிஹரர், ராகவங்கா, ஜனா போன்றோர் இக்காலத்தில் வாழ்ந்தவர்கள்

D) அனைத்தும்

விளக்கம்: பக்தி இலக்கியவாதிகளான இராமானுஜர், மத்துவர் ஆகியோர் ஹொய்சாளர்கள் காலத்தில் வாழ்ந்தவர்கள்.

மத்துவர் எழுதிய ரிக்பாஷ்யம் இக்காலத்தில் எழுதப்பட்டது.

கன்னட மொழியில் சிறப்புப் பெற்ற ஹரிஹரர், ராகவங்கா, ஜனா போன்றோர் இக்காலத்தில் வாழ்ந்தவர்கள்.

243) ஹொய்சாளர்களின் இந்தியப் பண்பாட்டுக் கொடையில் தவறானதை; தேர்வு செய்க.

A) இக்காலத்தில் வீரசைவம், சிவ வழிபாட்டுப் பிரிவு வளர்ச்சி பெற்றது.

B) ஹொய்சாளர்களின் நிர்வாக அமைப்பு ‘பஞ்ச பிரதான்’ எனப்பட்டது. இதில் 8 அமைச்சர்கள் இடம்பெற்றனர்.

C) பிற்காலத்தில் சிவாஜி ஆட்சியில் “அஷ்டபிரதான்” முறை கொண்டு வருவதற்கு ‘பஞ்சபிரதான்’ முறையே முக்கிய காரணமாக அமைந்தது.

D) யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட புராதனச் சின்னங்களாகப் பேளுர், ஹளபேடு கோயில்கள் உள்ளன. இவை, ஹொய்சாளர்களின் கலைப் பண்பாட்டிற்கு எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றன.

விளக்கம்: ஹொய்சாளர்களின் நிர்வாக அமைப்பு ‘பஞ்ச பிரதான்’ எனப்பட்டது. இதில் 5 அமைச்சர்கள் இடம்பெற்றனர்.

244) தொண்டை மண்டலப் பகுதியை ஆட்சி செய்தவர்கள் யார்?

A) சேரர்

B) சோழர்

C) முற்காலப் பல்லவர்

D) பிற்காலப் பல்லவர்

விளக்கம்: தொண்டை மண்டலப் பகுதிகளை ஆட்சி செய்தவர்கள் பிற்காலப் பல்லவர்களாவர். சிம்மவிஷ்ணு, முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன், இராஜசிம்மன், 3-ம் நந்திவர்மன் போன்றோர் சிறந்த மன்னர்களாவர்.

245) பொருத்துக

அ. காசக்குடி – 1. மத்தவிலாச பிரகசனம்

ஆ. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் – 2. நந்திக்கலம்பகம்

இ. 3-ம் நந்திவர்மன் – 3. யுவான் சுவாங்

ஈ. சீனப்பயணி – 4. செப்புப்பட்டயம்

A) 4, 3, 2, 1

B) 3, 4, 2, 1

C) 4, 1, 2, 3

D) 4, 1, 3, 2

விளக்கம்: காசக்குடி – செப்புப்பட்டயம்

முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் – மத்தவிலாச பிரகசனம்

3-ம் நந்திவர்மன் – நந்திக்கலம்பகம்

சீனப்பயணி – யுவான்சுவாங்கின் குறிப்புகள் ஆகியவை பிற்காலப் பல்லவர்களைப் பற்றி அறிய உதவும் சான்றுகளாகும்.

246) பொருத்துக

அ. ஆம்பூர் – 1. மாமல்லபுரம்

ஆ. மாமல்லபுரம் – 2. வீரக்கற்கள்

இ. கடற்கரைக்கோயில் – 3. பஞ்சபாண்டவ இரதங்கள்

A) 3, 2, 1

B) 2, 3, 1

C) 3, 1, 2

D) 1, 3, 2

விளக்கம்: ஆம்பூர் மற்றும் ஒலிக்கூரிலுள்ள வீரக்கற்கள், மாமல்லப்புரத்துப் பஞ்சபாண்டவ இரதங்கள், கடற்கரைக் கோயில், குடைவரைக் கோயில்கள் ஆகியவை பிற்காலப் பல்லவர்களைப் பற்றி அறிய உதவும் சான்றுகளாகும்.

247) எந்த நாட்டின் தலைவர் அல்லது மன்னர் ‘இறை’, ‘கோன்’ ஆகிய பெயர்களில் அழைக்கப்பட்டார்?

A) பாண்டிய நாடு

B) பல்லவ நாடு

C) சோழ நாடு

D) சேர நாடு

விளக்கம்: பல்லவ நாட்டின் தலைவர் மன்னராவார். அவர் ‘இறை’, ‘கோன்’ ஆகிய பெயர்களால் அழைக்கப்பட்டார். நீதி, நிர்வாகம், இராணுவம் போன்றவற்றிற்கு அரசரே தலைவனாக இருந்தார்.

248) பல்லவர் ஆட்சியில் அமைச்சரவைக்குழு எவ்வாறு அழைக்கப்பட்டது?

A) மந்திரிசபை

B) ஆளுநர்குழு

C) மந்திரிமண்டலம்

D) A மற்றும் B

விளக்கம்: பல்லவர் ஆட்சியில் அரசனுக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவைக் குழு இருந்தது. இவ்வமைச்சரவை ‘மந்திரிமண்டலம்’எனப்பட்டது.

249) ‘பிரம்மராஜன்’, ‘பேரரையன்’ போன்ற பட்டப்பெயர்கள் பல்லவர் காலத்தில் யாருக்கு வழங்கப்பட்டது?

A) அரசன்

B) இளவரசன்

C) அமைச்சர்

D) இராஜகுரு

விளக்கம்: பிரம்மராஜன்’, ‘பேரரையன்’ போன்ற பட்டப்பெயர்கள் பல்லவர் காலத்தில் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டன. அரசனுக்கு உதவியாகத் தனி ஆலோசகர், வாயில் காப்போர், பட்டய எழுத்தர, ; காரணிகர், தமிழ்மாணிக்கம் பிள்ளைக் காப்பான், கொடுக்காப்பிள்ளை, அதிகருணீகர் ஆகியோர் இருந்தனர்.

250) பல்லவர் காலத்தில் ‘கருவூலக் காப்பாளர்’ எவ்வாறு அழைக்கப்பட்டார்?

A) பிரம்மராஜன்

B) பேரரையன்

C) தமிழ் மாணிக்கம் பிள்ளைக் காப்பான்

D) கொடுக்காப்பிள்ளை

விளக்கம்: தமிழ் மாணிக்கம் பிள்ளைக் காப்பான் – கருவூலக் காப்பாளர்

கொடுக்காப்பிள்ளை – நன்கொடைகளுக்கான அதிகாரி

251) பல்லவர் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. பல்லவ நாடு, வருவாய்த்துறை, நிலவரித்துறை, நிலஅளவைத்துறை, காவல்துறை, வனத்துறை, இராணுவத்துறை எனப் பல்வேறு துறைகளாகப் பிரித்து நிர்வகிக்கப்பட்டன.

2. பல்லவ நாடு பல ராஷ்டிரங்கள் – கோட்டங்கள் – நாடுகள் – ஊர்கள் என ஒன்றன்கீழ் ஒன்றாகப் பிரிக்கப்பட்டது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. பல்லவ நாடு, வருவாய்த்துறை, நிலவரித்துறை, நிலஅளவைத்துறை, காவல்துறை, வனத்துறை, இராணுவத்துறை எனப் பல்வேறு துறைகளாகப் பிரித்து நிர்வகிக்கப்பட்டன.

2. பல்லவ நாடு பல ராஷ்டிரங்கள் – கோட்டங்கள் – நாடுகள் – ஊர்கள் என ஒன்றன்கீழ் ஒன்றாகப் பிரிக்கப்பட்டது.

252) பல்லவர்கள் பற்றிய தவறானக் கூற்றைத் தேர்க.

A) பல்லவ நாடு பல ராஷ்டிரங்கள் அதாவது பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது.

B) ராஷ்டிரங்கள் கோட்டங்களாக, அதாவது வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டன.

C) பல்லவ நிர்வாகத்தின் கீழ் 26 கோட்டங்கள் (வளநாடுகள்) இருந்தன.

D) ‘ராஷ்டிரிகர்’ என்பவர் மாநில ஆளுநராகத் திகழ்ந்தார்

விளக்கம்: பல்லவ நிர்வாகத்தின் கீழ் 24 கோட்டங்கள் (வளநாடுகள்) இருந்தன.

253) தவறானக் கூற்றைத் தேர்வு செய்க.

A) பல்லவர் காலத்தில் நாடு என்பது சிற்றூர்களை விடப் பெரியதாகவும், கோட்டங்களைவிடச் சிறியதாகவும் இருந்தது.

B) ‘நாடு’ என்ற பகுதியை ஆட்சி செய்தோர் ‘நாட்டார்’ என்றழைக்கப்பட்டனர்

C) ‘ஊர்’ என்ற பகுதியை ‘ஆழ்வார்’ எனப்பட்ட அவையினர் ஆட்சி செய்தனர்.

D) மன்னர் அறிவிக்கும் ஆணைகளை பொதுமக்களுக்கு அறிவிப்பது நாட்டார்களின் முக்கியப் பணியாகும். இவ்வாணை ‘அறை ஓலை’ எனப்பட்டது

விளக்கம்: ‘ஊர்’ என்ற பகுதியை ‘ஊரார்’ என்பவரும், சிற்றூர்களை, ‘ஆழ்வார்’ எனப்பட்ட அவையினர் ஆட்சி செய்தனர்.

254) பல்லவ ஆட்சிப்பிரிவின் கடைசி அங்கம் எது?

A) ராஷ்டிரங்கள்

B) ஊர்

C) நாடு

D) சிற்றூர்

விளக்கம்: பல்லவ ஆட்சிப்பிரிவின் கடைசி அங்கம் சிற்றூராகும். இச்சிற்றூர்கள் பிரம்மதேயச் சிற்றூர்கள், தேவதானச் சிற்றூர்கள் என்றும் அழைக்கப்பட்டன. ஒவ்வொரு சிற்றூரிலும் கிராமசபையே கிராமப் பணிகளை மேற்கொண்டன.

255) சரியானக் கூற்றைத் தெரிவு செய்க

A) பல்லவர்கள் காலத்தில் நகரங்களிலிருக்கும் அறங்கூறும் அவையங்கள் ‘அதிகரணங்கள்’ என்றழைக்கப்பட்டன.

B) இதன் தலைவர் அதிகரணிகள் மற்றும் அதிகரண போசகர் எனப்பட்டனர்

C) இவர்கள் நீதி வழங்குமிடம் ‘அதிகரணமண்டபம்’ எனப்பட்டது.

D) அனைத்தும் சரி

விளக்கம்: பல்லவர்கள் காலத்தில் நகரங்களிலிருக்கும் அறங்கூறும் அவையங்கள் ‘அதிகரணங்கள்’ என்றழைக்கப்பட்டன.

இதன் தலைவர் அதிகரணிகள் மற்றும் அதிகரண போசகர் எனப்பட்டனர்.

இவர்கள் நீதி வழங்குமிடம் ‘அதிகரணமண்டபம்’ எனப்பட்டது.

256) பல்லவர் காலத்தில் தலைமை நீதிமன்றம் எவ்வாறு அழைக்கப்பட்டது?

A) அதிகரணம்

B) அதிகரணமண்டபம்

C) தருமாசனம்

D) கர்ணதண்டம்

விளக்கம்: பல்லவர் காலத்தில் சிறிய ஊர்களிலிருந்த நீதிச்சபை ‘கரணம்’ எனப்பட்டது. இதன் தலைவர் ‘கரணத்தார்’ எனப்பட்டார். பல்லவர் கால நீதிமன்றங்கள் சாட்சி, ஆவணம், அயலார் சாட்சி ஆகிய 3 ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குகளை விசாரித்தன. தலைமை நீதிமன்றம் ‘தருமாசனம்’ எனப்பட்டது. இஃது அரசரின் நேரடிக்கண்காணிப்பில் இருந்தது. மன்னரே தலைமை நீதிபதியாவார்.

257) பல்லவர் காலத்தில் விதிக்கப்பட்ட அபராதங்களை பற்றி கூறுவது எது?

A) காசக்குடி செப்பேடுகள்

B) மத்தவிலாச பிரகசனம்

C) நந்திக்கலம்பகம்

D) A மற்றும் B

விளக்கம்: பல்லவர் காலத்தில் விதிக்கப்பட்ட அபராதங்களைப் பற்றி நந்திவர்மப் பல்லவனின் காசாக்குடி செப்பேடுகள் கூறுகின்றன.

258) கூற்றுகளை ஆராய்க.

1. பல்லவர் காலத்தில், மேல்நிலை நீதிமன்றங்களில் விதிக்கப்பட்ட அபராதங்கள் ‘கர்ணதண்டம்’எனப்படும்.

2. அதே கீழ்நிலை நீதிமன்றங்களில் விதிக்கப்பட்ட அபராதங்கள் ‘அதிகரண தண்டம்’ எனப்படும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. பல்லவர் காலத்தில், மேல்நிலை நீதிமன்றங்களில் விதிக்கப்பட்ட அபராதங்கள் ‘கர்ணதண்டம்’எனப்படும்.

2. அதே கீழ்நிலை நீதிமன்றங்களில் விதிக்கப்பட்ட அபராதங்கள் ‘அதிகரண தண்டம்’ எனப்படும்.

259) பல்லவ மன்னர்கள் எத்தனை வகைப் படைகளைக் கொண்டிருந்தனர்?

A) 3

B) 4

C) 5

D) 6

விளக்கம்: ஐவகைப் படைகள்:

1. யானைப்படை

2. குதிரைப்படை

3. காலாட்படை

4. தேர்ப்படை

5. கடற்படை

260) கூற்றுகளை ஆராய்க.

1. பல்லவர்களின் படைவலிமை, போர் முறை போன்றவை பற்றிக் ‘கூரம் பட்டயம்’ தெரிவிக்கிறது.

2. பல்லவர்களின் போர்க்கருவிகள் பற்றி ‘வேலூர் பட்டயம்’ கூறுகிறது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. பல்லவர்களின் படைவலிமை போர் முறை போன்றவை பற்றிக் ‘கூரம் பட்டயம்’ தெரிவிக்கிறது.

2. பல்லவர்களின் போர்க்கருவிகள் பற்றி ‘வேலூர் பட்டயம்’ கூறுகிறது.

261) தன் கடற்படை வலிமையால் இலங்கையை வென்ற பல்லவ மன்னன் யார்?

A) முதலாம் மகேந்திரவர்மன்

B) ராஜசிம்மன்

C) முதலாம் நரசிம்மவர்மன்

D) A மற்றும் C

விளக்கம்: தங்களின் வலிமையான கடற்படையால் முதலாம் நரசிம்மவர்மன், தம் நண்பன் மானவர்மனுக்காக இலங்கை மீது படையெடுத்து வென்றார்.

262) இராஜசிம்ம பல்லவன் வென்ற தீவு எது?

A) மாலத்தீவு

B) இலட்சத்தீவு

C) ஜாவா தீவு

D) அந்தமான்

விளக்கம்: இராஜசிம்ம பல்லவன் தன் கடற்படை வலிமையால் இலட்சத்தீவை வென்றார். முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் ‘சித்திரக்காரப்புலி’ எனப் போற்றப்பட்டார்.

263) பல்லவர் காலத்தில் எத்தனை சமூகப் பிரிவினர் இருந்தனர்?

A) 2

B) 3

C) 4

D) 6

விளக்கம்: பல்லவர் காலச் சமூகத்தில் வர்ணாசிரம முறை பின்பற்றப்பட்டது. பிராமணர், சத்திரியர், வைசியர்;, சூத்திரர் என்ற 4 பிரிவுகள் சமுதாயத்தில் இருந்தனர்.

264) பல்லவர் கால சமூக அமைப்பில் ‘இந்து சாஸ்திரக் கோட்பாடுகள்’ முக்கியத்துவம் பெற்றன எனக் கூறுவது எது?

A) முதலாம் பரமேஸ்வரனின் கூரம் பட்டயம்

B) நந்திவர்மனின் காசக்குடிப்பட்டயம்

C) கல்வெட்டுகள்

D) A மற்றும் B

விளக்கம்: பல்லவர் கால சமூக அமைப்பில் ‘இந்து சாஸ்திரக் கோட்பாடுகள்’ முக்கியத்துவம் பெற்றன என முதலாம் பரமேஸ்வரனின் கூரம் பட்டயம் மற்றும் நந்திவர்மனின் காசக்குடிப்பட்டயம் ஆகியவை குறிப்பிடுகின்றன. உழவர், வணிகர், கலைஞர், பொற்கொல்லர், கருமார், தச்சர், மீனவர், கைவினைஞன், கால்நடை வளர்ப்போர் உட்பட பல பிரிவினர் பல்லவர் கால சமுதாயத்தில் வாழ்ந்தனர்.

265) கூற்றுகளை கவனி (பல்லவர் காலம்).

1. 4 வேதங்களையும் கற்றுத் தேர்ந்த அந்தணர்களுக்கு, அரசன் கொடையாக வழங்கும் நிலம் ‘பிரம்மதேயம்’ எனப்படும்

2. இந்நிலங்கள் ‘இறையிலி’ நிலங்களாக வழங்கப்படுவதால், அந்தணர்கள் இந்நிலத்திற்கு வரி செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. 4 வேதங்களையும் கற்றுத் தேர்ந்த அந்தணர்களுக்கு, அரசன் கொடையாக வழங்கும் நிலம் ‘பிரம்மதேயம்’ எனப்படும்

2. இந்நிலங்கள் ‘இறையிலி’ நிலங்களாக வழங்கப்படுவதால், அந்தணர்கள் இந்நிலத்திற்கு வரி செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டது.

266) பல்லவர் காலத்தில் வணிகர்கள் தங்களுக்கென ஏற்படுத்திக் கொண்ட குழு எது?

A) சுதேசி

B) நானாதேசிகன்

C) ஐந்நூற்றுவர்

D) அனைத்தும்

விளக்கம்: பல்லவர் காலத்தில் வணிகர்கள் தங்களுக்கென சுதேசி, நானாதேசிகன், ஐந்நூற்றுவர் போன்ற பெயர்களில் வணிகக் குழுக்களை ஏற்படுத்திக் கொண்டனர்.

267) பல்லவர்களின் எந்த வணிகக் குழு வெளிநாடுகளுடன் வாணிகத்தில் ஈடுபட்டது?

A) சுதேசி

B) நானாதேசிகன்

C) ஐந்நூற்றுவர்

D) அனைத்தும்

விளக்கம்: ‘நானாதேசிகன்’ என்ற குழு வெளிநாடுகளுடன் வாணிகத்தில் ஈடுபட்டது. சுதேசி ஐந்நூற்றுவர் என்பன உள்நாட்டு வாணிகத்தில் ஈடுபட்டன.

268) கூற்றுகளை ஆராய்க

1. பல்லவர் காலத்தில் சைவம், வைணவம், சமணம் ஆகியவை மக்களால் பின்பற்றப்பட்டன.

2. திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் போன்றோர் தமிழகம் முழுவதும் சைவ சமயத்தைப் பரப்பினர். மக்களும் இவர்களின் பாடல்களையும், போதனைகளையும் பின்பற்றினர்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. பல்லவர் காலத்தில் சைவம், வைணவம், சமணம் ஆகியவை மக்களால் பின்பற்றப்பட்டன.

2. திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் போன்றோர் தமிழகம் முழுவதும் சைவ சமயத்தைப் பரப்பினர். மக்களும் இவர்களின் பாடல்களையும், போதனைகளையும் பின்பற்றினர்.

269) யார் காலத்து தூண்களில் சிங்கம் பின்னங்கால்களில் அமர்ந்தும், முன்னங்காலில் நின்றும் காணப்படும்?

A) முதலாம் மகேந்திரவர்மன்

B) ராஜசிம்மன்

C) முதலாம் நரசிம்மவர்மன்

D) நந்திவர்மன்

விளக்கம்: முதலாம் நரசிம்மவர்மன் காலத்து மண்டபங்களில் காணப்படும் தூண்களில் சிங்கம் முன்னங்காலில் நின்று, பின்னங்கால்களில் அமர்ந்துள்ளது போலக் காணப்படுகிறது.

270) பொருத்துக.

அ. சாக்தம் – 1. சக்தி வழிபாடு

ஆ. கௌமாரம் – 2. முருக வழிபாடு

இ. சௌரம் – 3. சூரிய வழிபாடு

ஈ. காணாபத்யம் – 4. கணபதி வழிபாடு

A) 1, 2, 3, 4

B) 3, 4, 1, 2

C) 1, 4, 3, 2

D) 4, 2, 1, 3

விளக்கம்: சாக்தம் – சக்தி வழிபாடு

கௌமாரம் – முருக வழிபாடு

சௌரம் – சூரிய வழிபாடு

காணாபத்யம் – கணபதி வழிபாடு

271) கூற்றுகளை கவனி.

1. பல்லவர் காலத்தில் தான் ‘காணாபத்யம்’ என்ற கணபதி வழிபாடு சாளுக்கிய நாட்டிலிருந்து பல்லவ நாட்டிற்கு அறிமுகமாயிற்று.

2. இவர்கள் காலத்தில் இந்து சமயத்தில் அறுவகை வழிபாடுகள் நடைமுறையில் இருந்தன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. பல்லவர் காலத்தில் தான் ‘காணாபத்யம்’ என்ற கணபதி வழிபாடு சாளுக்கிய நாட்டிலிருந்து பல்லவ நாட்டிற்கு அறிமுகமாயிற்று.

2. இவர்கள் காலத்தில் இந்து சமயத்தில் அறுவகை வழிபாடுகள் நடைமுறையில் இருந்தன.

272) கூற்றுகளை ஆராய்க.

1. சைவ, சமண சமயத்தார்களிடையே பல்லவர் காலத்தில், அடிக்கடி சமய கருத்து மோதல்கள் இருந்து வந்தன.

2. காஞ்சிபுரம், வள்ளிமலை, பொன்னர் திருகாட்டுப்பள்ளி, செந்தலை, திருப்பாதிரிப்புலியூர் போன்ற இடங்களில் சமணர்கள் வசித்தனர்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. சைவ, சமண சமயத்தார்களிடையே பல்லவர் காலத்தில் , அடிக்கடி சமய கருத்து மோதல்கள் இருந்து வந்தன.

2. காஞ்சிபுரம், வள்ளிமலை, பொன்னர் திருகாட்டுப்பள்ளி, செந்தலை, திருப்பாதிரிப்புலியூர் போன்ற இடங்களில் சமணர்கள் வசித்தனர்.

273) சீனப்பயணி யுவான்சுவாங்கின் குறிப்புகள் காஞ்சிபுரத்தில் எத்தனை பௌத்த மடங்கள் இருந்ததாக தெரிவிக்கிறது?

A) 108

B) 100

C) 1000

D) 10000

விளக்கம்: பல்லவ நாட்டில் பௌத்த சமயமும் மக்களால் பின்பற்றப்பட்டதை சீனப்பயணி யுவான்சுவாங்கின் பயணக் குறிப்புகளிலிருந்து அறிகிறோம். மேலும், காஞ்சிபுரத்தில் 100 பௌத்த மடங்களும், 1000 பௌத்தத்துறவிகளும் இருந்ததாக இக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. போதிமங்கை, பழையாறை, நாகப்பட்டினம் போன்ற இடங்களில் பௌத்தசமயம் செல்வாக்கு பெற்றிருந்தது.

274) தவறான கூற்றைத் தெரிவு செய்க

A) பல்லவர் காலத்தில் பெண்கள் உயர்வாகக் கருதப்பட்டனர். சமயத்திலும், கோயிற்பணிகளிலும் அவர்கள் ஈடுபட்டனர்

B) பெண்களுக்கு சொத்துரிமை இல்லை

C) அரசியர், அரசகுலப் பெண்கள் கோயிற்பணிகளில் ஈடுபட்டனர். கோயில்களுக்கு நிவந்தங்களும் அளித்தனர்.

D) நெசவுத்தொழில், பூவிற்றல், பால்விற்றல் போன்ற வியாபாரத்தில் பெண்கள் ஈடுபட்டனர்.

விளக்கம்: பெண்களுக்கு சொத்துரிமை அளிக்கப்பட்டது.

275) பல்லவர் காலத்தில் மக்கள் மீது எத்தனை வகையான வரிகள் விதிக்கப்பட்டன?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: பல்லவர்கள் காலத்தில் வேளாண்மை முக்கிய தொழிலாக விளங்கியது. மக்கள் மீது இருவகைப்பட்ட வரிகள் விதிக்கப்பட்டன. ஒன்று அரசிடம் செலுத்தும் வரி. மற்றொன்று உள்ளுர் தேவைக்காக வசூலிக்கப்பட்ட வரி.

276) பல்லவர் கால வரிகள் பற்றிய சரியான கூற்றை தெரிவு செய்க

A) முதல் வகை, விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு வரியை கிராம அதிகாரிகள் வசூல் செய்து அரசிடம் செலுத்தினர்.

B) இரண்டாவது வகை உள்ளுர் அளவில் வசூலிக்கப்பட்டது. இவ்வரி கிராமத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பயன்படுத்தப்பட்டது. (நீர்ப்பாசனம், கோயில் விளக்கேற்றுதல் போன்றவை)

C) பல்லவர் காலத்தில் கால்நடை வளர்ப்போர், திருமண வீட்டார், மட்பாண்டம் செய்வோர், நெசவுத்தொழில் செய்வோர் ஆகியோரும் அரசிற்கு வரி செலுத்தினர்

D) அனைத்தும் சரி

விளக்கம்: முதல் வகை விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு வரியை கிராம அதிகாரிகள் வசூல் செய்து அரசிடம் செலுத்தினர்.

இரண்டாவது வகை உள்ளுர் அளவில் வசூலிக்கப்பட்டது. இவ்வரி கிராமத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பயன்படுத்தப்பட்டது. (நீர்ப்பாசனம், கோயில் விளக்கேற்றுதல் போன்றவை).

பல்லவர் காலத்தில் கால்நடை வளர்ப்போர், திருமண வீட்டார், மட்பாண்டம் செய்வோர், நெசவுத்தொழில் செய்வோர் ஆகியோரும் அரசிற்கு வரி செலுத்தினர்.

277) பல்லவர் காலத்தில் முக்கியத் துறைமுக நகரமாக விளங்கியது எது?

A) பூம்புகார்

B) வஞ்சி

C) காஞ்சி

D) மாமல்லபுரம்

விளக்கம்: வாணிகத்தில் பொதுவாகப் பண்டமாற்றுமுறை நடைமுறையிலிருந்து. அதே நேரத்தில் தங்கம், வெள்ளி நாணயங்களும் புழக்கத்திலிருந்தன. பருத்தி ஆடைகள், நறுமணப்பொருட்கள், விலையுயர்ந்த கற்கள், மூலிகைகள் போன்றவை ஜாவா, சுமத்ரா, கம்போடியா, இலங்கை, சீனா, பர்மா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. மாமல்லபுரம் முக்கிய துறைமுக நகரமாக விளங்கியது. தலைநகரமான காஞ்சிபுரம் முக்கிய வாணிக மையமாகத் திகழ்ந்தது.

278) மாமல்லபுரத்தில் ஒற்றைக்கல்லால் செதுக்கப்பட்ட ரதங்களை உருவாக்கியவர் யார்?

A) முதலாம் மகேந்திரவர்மன்

B) ராஜசிம்மன்

C) முதலாம் நரசிம்மவர்மன்

D) நந்திவர்மன்

விளக்கம்: முதலாம் நரசிம்மவர்மனின் சாதனை மாமல்லபுரத்தில் ஒற்றைக்கல்லால் செதுக்கப்பட்ட ரதங்களை உருவாக்கியது. ஒரே இடத்தில் அமைக்கப்பட்ட 5 ரதங்கள் “பஞ்சபாண்டவ ரதங்கள்” என்று அழைக்கப்படுகின்றன.

அவை,

1. திரௌபதி ரதம்

2. அர்ச்சுன ரதம்

3. பீம ரதம்

4. தர்மராஜ ரதம்

5. நகுல, சகாதேவ ரதம்.

279) பல்லவர் கால இலக்கியங்களை ஆசிரியருடன் பொருத்துக.

அ. பாகவஜீகம் – 1. போதயானர்

ஆ. தசகுமார சரிதம் – 2. சர்வநந்தி

இ. லோகவிபாகம் – 3. தண்டி

A) 1, 2, 3

B) 1, 3, 2

C) 3, 2, 1

D) 2, 1, 3

விளக்கம்: போதயானர் – பாகவஜீகம்

தண்டி – தசகுமார சரிதம், அவந்திசுந்தரி, கதச்சாரம்

சர்வநந்தி – லோகவிபாகம்

இவை அனைத்தும் வடமொழியில் இயற்றப்பட்டன.

280) கூற்றுகளை ஆராய்க.

1. பல்லவர்கள் காலத்தில் தமிழிலும், வடமொழியிலும் இலக்கியங்கள் இயற்றப்பட்டன.

2. அவர்தம் கல்வெட்டுகள், பட்டயங்கள், ஆகியவற்றின் பெரும்பகுதி தமிழ்மொழியிலும் இடம்பெற்றிருந்தது

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. பல்லவர்கள் காலத்தில் தமிழிலும், வடமொழியிலும் இலக்கியங்கள் இயற்றப்பட்டன.

2. அவர்தம் கல்வெட்டுகள், பட்டயங்கள், ஆகியவற்றின் பெரும்பகுதி தமிழ்மொழியிலும் இடம்பெற்றிருந்தது

281) சேரமான் பெருமாள் நாயனார் எழுதாத நூல் எது?

A) கொங்கு வேளிர்

B) ஞானவுலா

C) பொன்வண்ணத்து அந்தாதி

D) மும்மணிக்கோவை

விளக்கம்: சேரமான் பெருமாள் நாயனார் எழுதிய நூல்கள்:

1. ஞானவுலா

2. பொன்வண்ணத்து அந்தாதி

3. மும்மணிக்கோவை

282) “சிவத்தளி வெண்பா” என்ற நூலை எழுதியவர் யார்?

A) கங்கநாட்டு மன்னன் கொங்கு வேளிர்

B) மூன்றாம் சிம்மவர்மன்

C) தோலா மொழித்தேவர்

D) பெருந்தேவனார்

விளக்கம்: சிவத்தளி வெண்பா – மூன்றாம் சிம்மவர்மன்

கங்கநாட்டு மன்னன் கொங்கு வேளிர் – கொங்கு வேளிர் மாக்கதை (பெருங்கதை)

283) ‘தேவாரம்’இயற்றியவர் யார்?

A) அப்பர்

B) சுந்தரர்

C) சம்பந்தர்

D) அனைவரும்

விளக்கம்: திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் இணைந்து ‘தேவாரம்’ பாடலை இயற்றினர்.

284) நந்திக்கலம்பம் எந்த மன்னனைப் பற்றிய நூல்?

A) முதலாம் நந்திவர்மன்

B) இரண்டாம் நந்திவர்மன்

C) மூன்றாம் நந்திவர்மன்

D) முதலாம் மகேந்திரவர்மன்

விளக்கம்: மூன்றாம் நந்திவர்மனைப் பற்றிய நூல் நந்திக்கலம்பம். முதலாம் மகேந்திரவர்மன் இயற்றிய நூல் மத்தவிலாசப் பிரகசனம்.

285) ‘முத்தொள்ளாயிரம்’ யாரைப் பற்றிய நூல்?

A) மும்மூர்த்திகள்

B) மூவேந்தர்கள்

C) ஆழ்வார்கள்

D) சிவனடியார்கள்

விளக்கம்: முத்தொள்ளாயிரம் மூவேந்தர்களைப் பற்றிய (சேர, சோழ, பாண்டியர்) பற்றிய நூலாகும். தேவாரம், நந்திக்கலம்பகம், முத்தொள்ளாயிரம், இலக்கண நூல்களாக சங்கயாப்பு பாட்டியல் நூல், மாபுராணம் போன்றவை பல்லவர் காலத்தைச் சார்ந்தவையாகும்.

286) பல்லவர்கள் கால கட்டடக்கலை எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: பல்வர் கால கட்டடக்கலை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது

1. குடைவரைக் கோயில்கள்

2. ஒற்றைக்கல் ரதங்கள்

3. கட்டுமானக் கோயில்கள்

287) பொருத்துக.

அ. குடைவரைக்கோயில்கள் – 1. ராஜசிம்மன் பாணி

ஆ. ஒற்றைக்கல் ரதங்கள் – 2. முதலாம் மகேந்திரவர்மன் பாணி

இ. கட்டுமானக் கோயில்கள் – 3. முதலாம் நரசிம்மவர்மன் பாணி

A) 3, 2, 1

B) 1, 2, 3

C) 2, 3, 1

D) 1, 3, 2

விளக்கம்: குடைவரைக் கோயில்கள் – முதலாம் மகேந்திரவர்மன் பாணி

ஒற்றைக்கல் ரதங்கள் – முதலாம் நரசிம்மவர்மன் பாணி

கட்டுமானக் கோயில்கள் – ராஜசிம்மன் பாணி, நந்திவர்மன் பாணி

288) அஜந்தா குகை எப்போது உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது?

A) 1945

B) 1975

C) 1983

D) 1990

விளக்கம்: யுனெஸ்கோ – ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனம். இது 1983-ஆம் ஆண்டில் அஜந்தா குகையை உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்தது.

289) “சேத்தகாரி” என அழைக்கப்பட்ட பல்லவ மன்னன் யார்?

A) முதலாம் மகேந்திரவர்மன்

B) ராஜசிம்மன்

C) முதலாம்; நரசிம்மவர்மன்

D) நந்திவர்மன்

விளக்கம்: மண்டகப்பட்டு, பல்லாவரம், வல்லம், மாமண்டூர், மகேந்திரவாடி, சீயமங்கலம், தளவானூர், திருச்சி ஆகிய இடங்களில் முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் குடைவரைக் கோயில்கள் உருவாக்கப்பட்டன. கோயில் கட்டும் கலையில் வல்லவனாக இருந்ததால் முதலாம் மகேந்திரவர்மன் “சேத்தகாரி” என்று அழைக்கப்பட்டார்.

290) “மாமல்லன்” என அழைக்கப்பட்ட பல்லவ மன்னர் யார்?

A) முதலாம் மகேந்திரவர்மன்

B) ராஜசிம்மன்

C) முதலாம் நரசிம்மவர்மன்

D) நந்திவர்மன்

விளக்கம்: ‘மாமல்லன்’ என்றழைக்கப்பட்டவர், முதலாம் நரசிம்மன். இவர் காலத்தில், மாமல்லபுரத்தில் குடைவரைக் கோயில்கள் கட்டப்பட்டன. இக்கோயில்களுடன் இரதங்கள் உருவாக்கப்பட்டன.

291) கூற்றுகளை ஆராய்க. (பல்லவர் காலம்).

1. பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கையாழ்வார் போன்றோர் சைவ சமயத்தின் கருத்துக்களைப் பரப்பினர்.

2. சப்தமாதர், ஜேஷ்டா வழிபாடுகளும் சிறப்பு பெற்றிருந்தன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கையாழ்வார் போன்றோர் வைணவ சமயத்தின் கருத்துக்களைப் பரப்பினர்.

292) பின்பவருவனவற்றுள் நாடக நூல் எது?

A) மத்தவிலாச பிரகசனம்

B) பாகவஜீகம்

C) தசகுமார சரிதம்

D) லோகவிபாகம்

விளக்கம்: பல்லவர்கள் காலத்தில் தமிழிலும், வடமொழியிலும் இலக்கியங்கள் இயற்றப்பட்டன. பல்லவ மன்னனாக முதலாம் மகேந்திர வர்மன் ‘மத்தவிலாச பிரகசனம்’ என்ற வடமொழி நாடக நூலை எழுதினார்.

293) பஞ்ச பாண்டவ ரதங்களில், எந்த ரதத்தில் சிவபெருமான், விஷ்ணு, மிதுனா, துவாரபாலகர் சிலைகள் செதுக்கப்பட்டன?

A) அர்ச்சுன ரதம்

B) தர்மராஜ ரதம்

C) பீம ரதம்

D) திரௌபதி ரதம்

விளக்கம்: அர்ச்சுனரதத்தில் கலைநுணுக்கத்துடன் சிவபெருமான், விஷ்ணு, மிதுனா, துவாரபாலகர் ஆகியோர் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன.

294) பஞ்சபாண்டவ ரதங்களில் நேர்த்தியானதும், அளவில் பெரியதுமானது எது?

A) அர்ச்சுன ரதம்

B) தர்மராஜ ரதம்

C) பீம ரதம்

D) திரௌபதி ரதம்

விளக்கம்: பஞ்சபாண்டவ ரதங்களில் நேர்த்தியானதும், அளவில் பெரியது தர்மாராஜ ரதமாகும். இது சதுர வடிவிலான அடித்தளத்தையும் மூன்றடுக்கு விமானத்தையும் கொண்டுள்ளது.

295) பஞ்சபாண்டவ ரதங்களில் செவ்வக வடிவிலான அடித்தளத்தைக் கொண்டது எது?

A) அர்ச்சுன ரதம்

B) தர்மராஜ ரதம்

C) பீம ரதம்

D) திரௌபதி ரதம்

விளக்கம்: பீமரதம் செவ்வக வடிவிலான அடித்தளத்தையும், மூன்றடுக்கு விமானத்தையும் கொண்டுள்ளது. ஹரிஹரர், பிரம்மா, விஷ்ணு, ஸ்கந்தர் (முருகர்), சிவபெருமான், அர்த்தநாரிஸ்வரர், கங்காதரர் ஆகியோரின் சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன.

296) பஞ்ச பாண்டவ ரதங்களில் மிகச்சிறியது எது?,

A) அர்ச்சுன ரதம்

B) தர்மராஜ ரதம்

C) பீம ரதம்

D) திரௌபதி ரதம்

விளக்கம்: பஞ்ச பாண்டவ ரதங்களில் மிகச்சிறியது திரௌபதி ரதம், இது துர்க்கைக்கு அர்பணிக்கப்பட்டதாகும். திரௌபதி பஞ்ச பாண்டவரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

297) பகீரதன் தவம் அல்லது அர்ஜுனன் தவம் எதில் செதுக்கப்பட்டுள்ளது?

A) அர்ச்சுன ரதம்

B) தர்மராஜ ரதம்

C) பீம ரதம்

D) மாமல்லபுர திறந்தவெளிப் பாதை

விளக்கம்: மாமல்லபுரத்தில் திறந்தவெளியில் பாறையில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள், கலை வெளிப்பாட்டில் முக்கியமானவையாகும். இவற்றில் கங்கை நதி ஆகாயத்திலிருந்து இறங்கிவரும் கங்காதர் காட்சி, சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இது பகீரதன் தவம் அல்லது அர்ஜுனன் தவம் எனப்படும்.

298) கட்டுமானக் கோயில்களை அறிமுகப்படுத்திய பல்லவ மன்னன் யார்?

A) ராஜசிம்மன்

B) முதலாம் மகேந்திரவர்மன்

C) மாமல்லன்

D) இரண்டாம் நரசிம்ம வர்மன்

விளக்கம்: பல்லவ மன்னனான ராஜசிம்மன் கட்டுமானக் கோயில்களை அறிமுகப்படுத்தினார். இதன்படி, கற்கள் செதுக்கப்பட்டு அவற்றைக் கொண்டு கருவறை, அதன் மேல் விமானம், அர்த்தமண்டபம், முகமண்டபம் சுற்றுப்புறச்சுவர் போன்றவை ஏற்படுத்தப்பட்டன.

299) கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றிகண்டவர்கள் யார்?

A) சேரர்

B) சோழர்

C) பாண்டியர்

D) பல்லவர்

விளக்கம்: கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றிக்கண்டவர்கள், பிற்காலச் சோழர்களேயாவர். இவர்களது கொடியில் புலிச்சின்னம் இடம் பெற்றிருந்தது.

300) மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் இராஜசிம்மன் காலத்தில் எத்தனை கருவறைகளுடன் கட்டப்பட்டது?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் இராஜசிம்மன் காலத்தில் 3 கருவறைகளுடன் கட்டப்பட்டது. சிவபெருமான், விஷ்ணு ஆகிய கடவுளர்களுக்குத் தனித்தனியே கருவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. விஷ்ணுவின் கருவறைப் பகுதியில் சுற்றுச்சுவரின் வெளிப்பக்கமும், சுற்றுச்சுவரிலும் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டள்ளன.

301) தென்னிந்தியாவிலுள்ள கட்டுமானக் கோயில்களில் முதனமையானது எது?

A) மாமல்லபுரம் கடற்கரை கோயில்

B) காஞ்சி முக்தேஸ்வரர் கோயில்

C) சுரம் பெருமாள் கோயில்

D) திருத்தணி வாடாமல்லீஸ்வரர் கோயில்

விளக்கம்: தென்னிந்தியாவில் கட்டுமானக் கோயில்களில் முதன்மையானது “மாமல்லபுரம் கடற்கரை கோயில்”. இக்கோயில், பாறையில் செதுக்கப்பட்ட 4 அடுக்குகளைக் கொண்டுள்ளது.

302) நந்திவர்மன் கால கோயில் எது?

A) குடிமல்லம் பரமேஸ்வரர் கோயில்

B) காஞ்சி முக்தேஸ்வரர் கோயில்

C) கூரம் பெருமாள் கோயில்

D) அனைத்தும்

விளக்கம்: காஞ்சி முத்தேஸ்வரர் கோயில், கூரம் பெருமாள் கோயில், திருத்தணி வாடாமல்லீஸ்வரர் கோயில், குடிமல்லம் பரமேஸ்வரர் கோயில் போன்றவை நந்திவர்ம பல்லவன் காலக் கோயில்களாகும்.

303) கூற்றுகளை கவனி

1. பல்லவர்களது சிற்பங்களில் பெரும்பாலானவை புடைப்புச் சிற்பங்கள்

2. அவர்களது கட்டுமானக் கோயில்கள் சோமாஸ்கந்த புடைப்புச் சிற்பமும், 16 பட்டைகளை உடைய நன்கு மெருகூட்டப்பட்ட சிவலிங்கமும் அமைந்திருப்பது, பல்லவர்கால சிற்பக்கலையின் தனிச்சிறப்பாகும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. பல்லவர்களது சிற்பங்களில் பெரும்பாலானவை புடைப்புச் சிற்பங்கள்

2. அவர்களது கட்டுமானக் கோயில்கள் சோமாஸ்கந்த புடைப்புச் சிற்பமும், 16 பட்டைகளை உடைய நன்கு மெருகூட்டப்பட்ட சிவலிங்கமும் அமைந்திருப்பது, பல்லவர்கால சிற்பக்கலையின் தனிச்சிறப்பாகும்.

304) பல்லவர் கலைப் பற்றிய சரியானக் கூற்றை தெரிவு செய்க.

A) இக்காலச் சிற்பங்களில், உயிரோட்டதையும் இயக்க நிலைகளையும் காணலாம்

B) தமிழகத்தில் முதன்முதலில் அரசர், அரசியரின் முழு உருவச் சிற்பங்கள் செதுக்கப்பட்டதும் இவர்களது காலத்தவையே சாரும்.

C) மாமல்லபுரத்தில் காணப்படும் ஒற்றைக்கல் சிங்கம், யானை, குரங்கு பேன்பார்க்கும் காட்சி, திரௌபதி ரதத்தில் காணப்படும் சிற்பங்கள், கோவர்த்தனகிரியைக் கண்ணன் தாங்கிப் பிடிக்கும் காட்சி ஆகியவை சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. இது பல்லவர்களின் சிற்பக்கலை சிறப்புகளை எடுத்தியம்புகிறது

D) அனைத்தும் சரி

விளக்கம்: இக்காலச் சிற்பங்களில், உயிரோட்டதையும் இயக்க நிலைகளையும காணலாம்

தமிழகத்தில் முதன்முதலில் அரசர், அரசியரின் முழு உருவச் சிற்பங்கள் செதுக்கப்பட்டதும் இவர்களது காலத்தவையே சாரும்.

மாமல்லபுரத்தில் காணப்படும் ஒற்றைக்கல் சிங்கம், யானை, குரங்கு பேன்பார்க்கும் காட்சி, திரௌபதி ரதத்தில் காணப்படும் சிற்பங்கள், கோவர்த்தனகிரியைக் கண்ணன் தாங்கிப் பிடிக்கும் காட்சி ஆகியவை சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. இது பல்லவர்களின் சிற்பக்கலை சிறப்புகளை எடுத்தியம்புகிறது.

305) கூற்றுகளை ஆராய்க.

1. பல்லவர்கள் இசைக்கலைக்கு ஊக்கம் அளித்தனர்

2. ‘சித்தம் நமசிவாய’ எனத் தொடங்கும் குடுமியான் இசைக் கல்வெட்டு பல்வேறு விதமான இசை நுணுக்கங்களையும் இராகங்களையும் பற்றிக் குறிப்பிடுகிறது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. பல்லவர்கள் இசைக்கலைக்கு ஊக்கம் அளித்தனர்

2. ‘சித்தம் நமசிவாய’ எனத் தொடங்கும் குடுமியான் இசைக் கல்வெட்டு பல்வேறு விதமான இசை நுணுக்கங்களையும் இராகங்களையும் பற்றிக் குறிப்பிடுகிறது.

306) “சங்கீரணசாதி” என்று அழைக்கப்பட்டவர் யார்?

A) முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்

B) முதலாம் நரசிம்மவர்ம பல்லவன்

C) இராஜசிம்மன்

D) மாமல்லன்

விளக்கம்: “உருத்திராச்சாரியார்” என்பவரின் மாணவனான பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன், ‘பிரிவாதினி’ என்னும் வீணையை மீட்டுவதில் வல்லவனாக இருந்தார். இதனால், இவருக்குச் “சங்கீரணசாதி” என்ற விருதுப்பெயர் கிடைக்கப்பெற்றது.

307) கல்யாண், புரோச், காம்பே, தாமிரலிப்தி ஆகியவை யாருடைய துறைமுகங்கள்?

A) மௌரியர்

B) சந்தேலர்

C) ஹர்சர்

D) குப்தர்

விளக்கம்: குப்தர்கள் காலத்தில் கல்யாண், புரோச், காம்பே, தாமிரலிப்தி ஆகிய துறைமுகப் பகுதிகளிலிருந்து அரேபியா, பாரசீகம் போன்ற நாடுகளோடு அயல்நாட்டு வாணிபம் நடைபெற்றது.

308) யாழ், குழல், கின்னரி, கொக்கரி, வீணை போன்ற இசைக்கருவிகள் பல்லவர் காலத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறும் நூல் எது?

A) தேவாரம்

B) குடுமியான் மலை இசைக்கல்வெட்டு

C) திருமுறைகள்

D) நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

விளக்கம்: யாழ், குழல், கின்னரி, கொக்கரி, வீணை, தக்கை, முழவம், மொந்தை, மிருதங்கம், மத்தளம், துந்துபி, தமுருகம், துடி, தாளம், உடுக்கை, கொடுகட்டி, கூத்தலம், குடமுழா, முரசம் ஆகிய இசைக்கருவிகள் பல்லவர் காலத்தில் பயன்படுத்தப்பட்டதாகத் தேவாரப் பாடல்கள் கூறுகின்றன.

309) இசைநுணுக்கங்களைப் பற்றி கூறுவது எது?

A) தேவாரம்

B) குடுமியான் மலை இசைக்கல்வெட்டு

C) திருமுறைகள்

D) நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

விளக்கம்: இசை நுணுக்கங்களைப் பற்றி குடுமியான் மலைக் கல்வெட்டு குறிப்பிடுகின்றது. இசைக்கருவிகள் பற்றிய தேவாரப்பாடல்கள் கூறுகின்றது.

310) கூற்றுகளை ஆராய்க.

1. காஞ்சி வைகுந்தபொருமாள் கோயிலின் சுவர் சிற்பங்கள், காஞ்சி கைலாசநாதர் கோயில் சிற்பங்கள், ஓவியங்கள் போன்றவை பல்லவர்கள் கால நடனக்கலையின் சிறப்பைக் கூறுகின்றன.

2. நடனக்கலையுடன் நாடகக் கலையும் சிறப்புப் பெற்றிருந்தது. பல்லவமன்னன் முதலாம் மகேந்திரவர்மனின் மத்தவிலாச பிரகசனம் என்ற வடமொழி நாடகநூல் சமயக் கருத்தோடு மக்களின் வாழ்க்கை முறையையும் கூறுகிறது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. காஞ்சி வைகுந்தபொருமாள் கோயிலின் சுவர் சிற்பங்கள், காஞ்சி கைலாசநாதர் கோயில் சிற்பங்கள், ஓவியங்கள் போன்றவை பல்லவர்கள் கால நடனக்கலையின் சிறப்பைக் கூறுகின்றன.

2. நடனக்கலையுடன் நாடகக் கலையும் சிறப்புப் பெற்றிருந்தது. பல்லவமன்னன் முதலாம் மகேந்திரவர்மனின் மத்தவிலாச பிரகசனம் என்ற வடமொழி நாடகநூல் சமயக் கருத்தோடு மக்களின் வாழ்க்கை முறையையும் கூறுகிறது.

311) ‘சித்திரகாரப் புலி’ என்ற விருதுப்பெயர் பெற்றவர் யார்?

A) முதலாம் மகேந்திரவர்மன்

B) மாமல்லன்

C) முதலாம் நரசிம்மவர்மன்

D) இராஜசிம்மன்

விளக்கம்: காஞ்சி கைலாசநார் கோயில், பனைமலை தாளகிரீஸ்வரர் கோயில் போன்றவற்றின் சுவர்களிலும், தூண்களிலும் மிக அழகிய வண்ண ஓவியங்கள் காணப்படுகின்றன. முதலாம் மகேந்திரவர்மன் ஓவியக்கலையில் வல்லவனாக இருந்ததால் ‘சித்திரக்காரப்புலி’ என்ற விருதுப்பெயர் பெற்றார்.

312) எந்த நாட்டை சேர்ந்தவர் மு.வே.துப்ரெய்ல்?

A) சீனா

B) பிரான்சு

C) டச்சு

D) பிரிட்டிஸ்

விளக்கம்: பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த மு.வே.துப்ரெய்ல் என்பவர் பல்லவர் காலத்து ஓவியங்களைக் கண்டறிந்து வெளியிட்டார். காஞ்சி கைலாசநாதர் கோயிலில் காணப்படும் சிற்பங்கள், நடராஜரின் பல்வேறு நடனக் கோலங்களை வெளிப்படுத்துகின்றன.

313) பல்லவர் காலத்தில் கல்விக் கூடங்கள் இருந்த இடம் எது?

A) காஞ்சி

B) பாகூர்

C) பழம்பதி

D) அனைத்தும்

விளக்கம்: பல்லவர் காலத்தில் காஞ்சி, பாகூர், பழம்பதி போன்ற இடங்களில் கல்விக்கூடங்கள் இருந்தன. இவை உயர்கல்வி போதிக்கும் இடமாகவும் வடமொழி கற்பிக்கும் கூடங்களாகவும் திகழ்ந்தன.

314) “தர்மபாலர்” எங்கு கல்வி கற்றார்?

A) காஞ்சிபுரம்

B) நாளந்தா

C) பனாரஸ்

D) A மற்றும் B

விளக்கம்: காஞ்சியில் கல்வி கற்ற தர்மபாலர் நாளந்தா பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இவர் பல்லவர் காலத்தில் காஞ்சியில் பயின்றார்.

315) “கல்வியிற் கரையில காஞ்சிமாநகர்” என்று புகழ்ந்தவர் யார்?

A) அப்பர்

B) சுந்தரர்

C) சம்பந்தர்

D) திருமூலர்

விளக்கம்: “கல்வியிற் கரையிலாத காஞ்சிமாநகர்” என்று, காஞ்சிபுரத்தின் கல்வி நிலைமையை அப்பர் புகழ்ந்து பாடியுள்ளார். கோயில்கள், மடங்கள், அஹ்ரஹாரங்கள் போன்றவை கல்வி மையங்களாத் திகழ்ந்தன.

316) ‘கடிகை’ என்றழைக்கப்பட்டவை எவை?

A) வீடுகள்

B) கோயில்கள்

C) கல்வி நிறுவனம்

D) மருந்தகம்

விளக்கம்: காஞ்சி கைலாசநாதர் கோயிலில் சிற்பம், ஓவியம், இசை, நடனம், நாடகம், இராமாயணம், மகாபாரததம் போன்றவை கற்பிக்கப்பட்டன. காஞ்சியிலிருந்த பௌத்தக் கல்வி நிறுவனங்கள் ‘கடிகை’ என்றழைக்கப்பட்டன.

317) பல்லவர்களின் பண்பாட்டுக் கொடை என்ன?

A) தமிழ் இலக்கியமும், வடமொழி இலக்கியமும் ஒருங்கே சிறப்புப் பெற்றன.

B) தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு நாயன்மார்கள், ஆழ்வார்கள் பெரும் பங்காற்றினர். இதனால் சைவமும், வைணவமும் தழைத்தோங்கின.

C) கலம்பகம் என்ற சிற்றிலக்கியப் பகுதி புதியதாகத் தோன்றியது. இவ்விலக்கிய வகைக்கு நந்தி கலம்பகம் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

D) அனைத்தும்

விளக்கம்: தமிழ் இலக்கியமும், வடமொழி இலக்கியமும் ஒருங்கே சிறப்புப் பெற்றன.

தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு நாயன்மார்கள், ஆழ்வார்கள் பெரும் பங்காற்றினர். இதனால் சைவமும், வைணவமும் தழைத்தோங்கின.

கலம்பகம் என்ற சிற்றிலக்கியப் பகுதி புதியதாகத் தோன்றியது. இவ்விலக்கிய வகைக்கு நந்தி கலம்பகம் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

318) பல்லவர்களின் பண்பாட்டுக் கொடை என்ன?

A) திராவிட கலை பாணியிலமைந்த கோயில்கள் பிற்காலச் சோழர்கால கட்டடக்கலைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தன.

B) பல்லவ மன்னர்கள் கலை, இலக்கியங்களை ஆதரிக்கும் புரவலர்களாகத் திகழ்ந்தனர்.

C) சப்தமாதர், ஜேஷ்டாதேவி போன்ற பெண் தெய்வ வழிபாட்டுமுறை சிறப்பு பெற்றிருந்தன

D) அனைத்தும்

விளக்கம்: திராவிட கலை பாணியிலமைந்த கோயில்கள் பிற்காலச் சோழர்கால கட்டடக்கலைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தன.

பல்லவ மன்னர்கள் கலை, இலக்கியங்களை ஆதரிக்கும் புரவலர்களாகத் திகழ்ந்தனர்.

சப்தமாதர், ஜேஷ்டாதேவி போன்ற பெண் தெய்வ வழிபாட்டுமுறை சிறப்பு பெற்றிருந்தன.

319) பல்லவர்களின் பண்பாட்டுக் கொடை என்ன?

1. குடைவரைக் கோயில்களும், ஒற்றைக்கல் ரதங்களும் இவர்கள் காலத்தில் ஏற்படுத்தப்பட்டன.

2. ‘காணபத்யம்’ என்ற கணபதி வழிபாடு இவர்கள் காலத்தில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. குடைவரைக் கோயில்களும், ஒற்றைக்கல் ரதங்களும் இவர்கள் காலத்தில் ஏற்படுத்தப்பட்டன.

2. ‘காணபத்யம்’ என்ற கணபதி வழிபாடு இவர்கள் காலத்தில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

320) காவிரிப் பகுதியில் நெல் மிகுதியாக விளைந்த நாடு எது?

A) சேர நாடு

B) சோழ நாடு

C) பாண்டிய நாடு

D) பல்லவ நாடு

விளக்கம்: பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒருவர் சோழர்களாவர். காவிரி பகுதியில் நெல் மிகுதியாக விளைந்த நாடு சோழ நாடெனப்படடது.

321) “சோழநாடு சோறுடைத்து” எனக்கூறுவது எது?

A) முதுமொழி

B) திருக்குறள்

C) நன்னூல்

D) நாலடியார்

விளக்கம்: ‘சோழ நாடு சோறுடைத்து’ என்பது முதுமொழி. எனவே, ‘சோறுடைத்த நாடு’ பின் சோழ நாடாகியது.

322) எந்த நூற்றாண்டிற்குப் பிறகு வலிமை பெற்று விளங்கிய சோழமன்னர்கள் ‘பிற்காலச் சோழர்கள்’ எனப்படுகின்றனர்?

A) கி.பி (பொ.ஆ) 5-ஆம் நூற்றாண்டு

B) கி.பி (பொ.ஆ) 6-ஆம் நூற்றாண்டு

C) கி.பி (பொ.ஆ) 8-ஆம் நூற்றாண்டு

D) கி.பி (பொ.ஆ) 9-ஆம் நூற்றாண்டு

விளக்கம்: கி.பி (பொ.ஆ) 9-ஆம் நூற்றாண்டுற்குப் பிறகு வலிமை பெற்று விளங்கிய சோழமன்னர்கள் ‘பிற்காலச் சோழர்கள்’ எனப்படுகின்றனர். இந்திய வரலாற்றில் முதலாம் ராஜராஜ சோழனும், அவரது மகன் முதலாம் ராஜேந்திர சோழனும் குறிப்பிடத்தக்க சோழ மன்னர்களாவர்.

323) முதலாம் ராஜராஜ சோழன் மற்றும் முதலாம் இராஜேந்திர சோழனின் ஆட்சி எல்லைகளைப் பொருத்துக.

அ. கிழக்கு – 1. ஒடிசா

ஆ. வடக்கு – 2. மாலத்தீவுகள்

இ. தெற்கு – 3. ஜாவா, சுமித்ரா, மலேசியா

A) 3, 2, 1

B) 1, 2, 3

C) 3, 1, 2

D) 2, 1, 3

விளக்கம்: இவர்களுடைய எல்லை வடக்கே ஒடிசா வரையிலும், கிழக்கில் ஜாவா, சுமித்ரா, மலேசியா வரையிலும், தெற்கே மாலத்தீவுகள் வரையிலும் பரந்து விரிந்திருந்தது.

324) யுனெஸ்கோ எப்போது மாமல்லபுரத்திலுள்ள கோயிலை உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்தது?

A) 1982

B) 1984

C) 1986

D) 1989

விளக்கம்: ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு, 1984-ஆம் ஆண்டு மாமல்லபுரத்திலுள்ள கோயில்களை உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்தது. மாமல்லபுரம், இந்தியாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று.

325) யாருடைய காலத்தில் கங்கை வரை படையெடுத்து மலாய் தீபகற்பத்திலுள்ள கடாரம், ஸ்ரீவிஜயம் வரை சென்றும் வெற்றிக் கண்டது சோழப் பேரரசு?

A) முதலாம் ராஜராஜசோழன்

B) முதலாம் இராசேந்திரச் சோழன்

C) .இரண்டாம் ராஜராஜசோழன்

D) இரண்டாம் ரஜேந்திரசோழன்

விளக்கம்: முதலாம் இராஜேந்திரச்சோழனது காலத்தில் வடஇந்தியாவிலுள்ள கங்கை வரை படையெடுத்தும் கடற்படை மூலம் மலாய் தீபகற்பத்திலுள்ள கடாம், ஸ்ரீவிஜயம் வரை சென்றும் வெற்றிக் கண்டது சோழப் பேரரசு.

326) பொருத்துக

அ. சேரர் – 1. வில்-அம்பு

ஆ. சோழர் – 2. மீன்

இ. பாண்டியர் – 3. புலி

A) 2, 3, 1

B) 1, 3, 2

C) 3, 2, 1

D) 1, 2, 3

விளக்கம்: சேரர் – வில்-அம்பு

சோழர் – புலி

பாண்டியர் – மீன்

327) கூற்றுகளை ஆராய்க

1. பிற்காலச் சோழர்களின் வரலாற்றை அறிந்துகொள்ள வரலாற்று ஆசிரியர்கள் வெங்கையா, உல்ச், கிருஷ்ணசாஸ்திரி ஆகியோர்கள் தொகுத்த கல்வெட்டுகளும், அன்பில் பட்டயங்கள், திருவாலங்காட்டுச் செப்பேடுகள், கரந்தை செப்பேடுகள், ஆனைமங்கலம் செப்பேடுகள், லெய்டன் செப்பேடுகள் போன்றவையும் சான்றுகளாகத் திகழ்கின்றன.

2. இலக்கியங்கள், மெய்க்கீர்த்திகள், நாணயங்கள், கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, படிமக்கலை முதலியனவும், சோழர்களின் ஆட்சிமுறையைப் பற்றி அறிய உதவும் சான்றுகளாக உள்ளன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. பிற்காலச் சோழர்களின் வரலாற்றை அறிந்துகொள்ள வரலாற்று ஆசிரியர்கள் வெங்கையா, உல்ச், கிருஷ்ணசாஸ்திரி ஆகியோர்கள் தொகுத்த கல்வெட்டுகளும், அன்பில் பட்டயங்கள், திருவாலங்காட்டுச் செப்பேடுகள், கரந்தை செப்பேடுகள், ஆனைமங்கலம் செப்பேடுகள், லெய்டன் செப்பேடுகள் போன்றவையும் சான்றுகளாகத் திகழ்கின்றன.

2. இலக்கியங்கள், மெய்க்கீர்த்திகள், நாணயங்கள், கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, படிமக்கலை முதலியனவும், சோழர்களின் ஆட்சிமுறையைப் பற்றி அறிய உதவும் சான்றுகளாக உள்ளன.

328) அரசனின் புகழுக்குரிய சாதனைகளை விளக்கிக் கூறுவது எது?

A) கல்வெட்டு

B) மெய்க்கீர்த்தி

C) படிமக்கலை

D) நடுகல்

விளக்கம்: மெய்கீர்த்தி என்பது, அசரனின் புகழுக்குரிய சாதனைகளை விளக்கிக்கூறும் ஆவணமாகும். இவை, முதலாம் இராஜராஜ சோழன் காலத்தில் முக்கியத்துவம் பெற்றன. இவருக்குப்பின் வந்த சோழ மன்னர்கள், தங்கள் சாதனைகளை குறிப்பிடும் அரச ஆவணமாக இவற்றை உருவாக்கினர்.

329) சோழப் பேரரசு எத்தனை மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது?

A) 4

B) 6

C) 8

D) 9

விளக்கம்: சோழப் பேரரசு 9 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது.அவை,

1. சோழ மண்டலம்

2. இராஜராஜ யாண்டி மண்டலம்

3. ஜெயங்கொண்ட சோழ மண்டலம்

4. மும்முடி சோழ மண்டலம்

5. முடிகொண்ட சோழ மண்டலம்

6. நிகிரிலி சோழ மண்டலம்

7. அதிராஜராஜ சோழ மண்டலம்

8. மலை மண்டலம்

9. வேங்கை மண்டலம்

330) சோழர்களின் ஆட்சிப்பிரிவுகளில் சரியானதைத் தேர்வு செய்க

A) சோழப்பேரரசின் சிறிய பிரிவு, கிராமம், பல கிராமங்கள் கொண்டது ‘நாடு’ ஆகும்.

B) பல நாடு கொண்டது ‘வளநாடு’ ஆகும்

C) பல வளநாடுகள் கொண்டது ‘ஒரு மண்டலம்’ ஆகும்

D) அனைத்தும் சரி

விளக்கம்: சோழப்பேரரசின் சிறிய பிரிவு, கிராமம், பல கிராமங்கள் கொண்டது ‘நாடு’ ஆகும்.

பல நாடு கொண்டது ‘வளநாடு’ ஆகும்

பல வளநாடுகள் கொண்டது ‘ஒரு மண்டலம்’ ஆகும்.

331) பொருத்துக

அ. திருச்சி தஞ்சை – 1. ஜெயங்கொண்ட சோழ மண்டலம்

ஆ. பாண்டிய நாடு – 2. இராஜராஜ பாண்டி மண்டலம்

இ. தொண்டை நாடு – 3. சோழ மண்டலம்

A) 3, 2, 1

B) 1, 3, 2

C) 1, 2, 3

D) 2, 3, 1

விளக்கம்: திருச்சி, தஞ்சை – சோழ மண்டலம்

பாண்டிய நாடு – இராஜராஜ பாண்டி மண்டலம்

தொண்டை நாடு – ஜெயங்கொண்ட சோழ மண்டலம்

332) பொருத்துக.

அ. மும்முடிச் சோழ மண்டலம் – 1. இலங்கை

ஆ. முடிகொண்ட சோழ மண்டலம் – 2. கங்கப்பாடி

இ. நிகரிலி சோழ மண்டலம் – 3. நுளாம்பாடி

A) 3, 2, 1

B) 1, 3, 2

C) 1, 2, 3

D) 2, 3, 1

விளக்கம்: மும்முடிச் சோழ மண்டலம் – இலங்கை

முடிகொண்ட சோழ மண்டலம் – கங்கப்பாடி

நிகரிலி சோழ மண்டலம் – நுளாம்பாடி

333) பொருத்துக.

அ. அதிராஜ சோழ மண்டலம் – 1. கொங்கு மண்டலம்

ஆ.. மலை மணடலம் – 2. கேரளா

இ. வேங்கை மண்டலம் – 3. கீழை சாளுக்கிய நாடு

A) 3, 2, 1

B) 1, 3, 2

C) 1, 2, 3

D) 2, 3, 1

விளக்கம் அதிராஜ சோழ மண்டலம் – கொங்கு மண்டலம்

மலை மணடலம் – கேரளா

வேங்கை மண்டலம் – கீழை சாளுக்கிய நாடு

334) சோழர் ஆட்சிமுறை பற்றிய தவறானக் கூற்றை தெரிவு செய்க

A) சோழர்கள் முடியாட்சி முறையைப் பின்பற்றினர்.

B) மன்னர்கள் தங்களுக்குப் பிறகு குடவோலை முறை மூலம் இளவரசர் தேர்வு.

C) சோழ மன்னர்கள் முடிசூட்டிய அரச உரிமைபெறும், நன்னாளில் சக்கரவர்த்திகள், திரிபுவன சக்கரவர்த்திகள், இராஜகேசரி வர்மன், பரகேசரி வர்மன், இராஜாதி ராஜன் போன்ற பட்டங்களைச் சூட்டிக் கொண்டனர்

D) மன்னனின் கீழ் செயல்பட்ட அதிகாரிகள் ‘சிறுதனம்’ மற்றும் ‘பெருதனம்’ என அழைக்கப்பட்டனர்

விளக்கம்: மன்னர்கள் தங்களுக்குப் பிறகு புதல்வர்களில் மூத்தோருக்கு இளவரசர் பட்டம் சூட்டினர்.

335) சோழ பேரரசின் அதிகாரிகளைப் பொருத்துக.

அ திருவாய் கேள்வி – 1. அரசனின் ஆணைகளை வெளியிடுபவர்

ஆ. திருமந்திர ஓலை நாயகம் – 2. அரசின் ஆணைகளை ஓலையில் எழுதுபவர்

இ. கருமவிதிகள் – 3. ஆணைகளை நாட்டின் பல இடங்களுக்குக் கொண்டு செல்பவர்.

A) 3, 2, 1

B) 2, 1, 3

C) 1, 3, 2

D) 1, 2, 3

விளக்கம்: திருவாய் கேள்வி – அரசனின் ஆணைகளை வெளியிடுபவர்

திருமந்திர ஓலை நாயகம் – அரசின் ஆணைகளை ஓலையில் எழுதுபவர்

கருமவிதிகள் – ஆணைகளை நாட்டின் பல இடங்களுக்குக் கொண்டு செல்பவர்.

336) சோழ பேரரசின் அதிகாரிகளைப் பொருத்துக.

அ. புரவுவரி திணைக் களத்தார் – 1. அரண்மணைக் கணக்கர்

ஆ. வரிப்பொத்தக் கணக்கு – 2. தணிக்கை அதிகாரி

இ. திருமுகக் கணக்கு – 3. நிலவரிக் கழகம்

ஈ. நாடுவகை செய்வார் – 4. விளை நிலத்தின் ஆதாரத்தைப் பிரிப்பவர்.

A) 2, 3, 4, 1

B) 3, 2, 1, 4

C) 2, 1, 4, 3

D) 1, 2, 3, 4

விளக்கம்: புரவுவரி திணைக் களத்தார் – நிலவரிக் கழகம்

வரிப்பொத்தக் கணக்கு – தணிக்கை அதிகாரி

திருமுகக் கணக்கு – அரண்மணைக் கணக்கர்

நாடுவகை செய்வார் – விளை நிலத்தின் ஆதாரத்தைப் பிரிப்பவர்

337) சோழ பேரரசில் ‘நாடு காவல் அதிகாரி’ என்பவர் யார்?

A) மன்னன்

B) அமைச்சர்

C) அமைதியை நிலைநாட்டுபவர்

D) நீதிபதி

விளக்கம்: பிற்காலச் சோழ பேரரசில் ‘நாடு காவல் அதிகாரி’ என்பவர் நாட்டில் அமைதியை நிலைநாட்டுபவர் ஆவார்

338) கிராம சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை பற்றி கூறும் கல்வெட்டு எது?

A) குடுமியான் மலை கல்வெட்டு

B) அசோகர் மலை கல்வெட்டு

C) உத்திரமேரூர் கல்வெட்டு

D) எதுவுமில்லை

விளக்கம்: சோழர் காலத்தில் கிராம ஆட்சிமுறை சிறப்புப் பெற்றிருந்தது. கிராம சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை பற்றியும், அதன் செயல்பாடுகள் குறித்தும் உத்திரமேரூர் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

339) யாருடைய காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டில் ‘குடவோலை’ பற்றி கூறப்பட்டுள்ளது?

A) முதலாம் ராஜராஜ சோழன்

B) முதலாம் ரஜேந்திர சோழன்

C) முதலாம் கரிகாலச் சோழன்

D) முதலாம் பராந்தகச் சோழன்

விளக்கம்: முதலாம் பராந்தகச் சோழன் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டில் குடவோலை முறை மூலம் சபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட முறைகள் பற்றி விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன.

340) சோழர் காலத்தில் சபை உறுப்பினராவதற்கான தகுதிகளில் தவறானதைத் தேர்வு செய்க

A) உறுப்பினராவதற்கு கால்வேலி நிலம் சொத்தாக இருக்க வேண்டும்

B) சொந்த நிலத்தில் வீடு இருக்க வேண்டும்

C) 35-60 வயதிற்குள் இருக்க வேண்டும்

D) வேதங்கள், புராணங்கள் கற்றுத்தேர்ந்தவராக இருக்க வேண்டும்

விளக்கம்: 25-70 வயதிற்குள் இருக்க வேண்டும்.

341) சோழர் காலத்தில் சபை உறுப்பினராய் இருந்தோர் மீண்டும் எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு சபை உறுப்பினராக முடியும்?

A) 4

B) 5

C) 6

D) 3

விளக்கம்: 1. உறுப்பினராவதற்கு கால்வேலி நிலம் சொத்தாக இருக்க வேண்டும்

2. சொந்த நிலத்தில் வீடு இருக்க வேண்டும்

3. 25-70 வயதிற்குள் இருக்க வேண்டும்.

4. வேதங்கள், புராணங்கள் கற்றுத்தேர்ந்தவராக இருக்க வேண்டும்

5. ஒருமுறை சபை உறுப்பிராய் இருந்தோர், அடுத் 5 ஆண்டுக்குப் பிறகே உறுப்பினராக முடியும்.

342) குடவோலை முறை பற்றிய சரியான கூற்றை தேர்வு செய்க

A) ஊர் பல குடும்புகளாகப் பிரிக்கப்படும்

B) ஒவ்வொரு குடும்பிலும் தகுதியுடையவர்களின் பெயர்களைப் பனை ஓலையில் எழுதி அதனைக் குடத்தில் இடுவார்கள்

C) தேர்தல் நாளன்று அக்குடத்தைச் சபையோர்முன் நன்றாகக் குலுக்கிய பின், 5 வயதிற்குட்பட்ட சிறுவனைக் குடத்திலுள்ள ஓர் ஓலையை எடுக்கச் செய்வர். அந்த ஓலையிலுள்ள நபரே சபையின் உறுப்பினராவார்.

D) அனைத்தும்

விளக்கம்: ஊர் பல குடும்புகளாகப் பிரிக்கப்படும்

ஒவ்வொரு குடும்பிலும் தகுதியுடையவர்களின் பெயர்களைப் பனை ஓலையில் எழுதி அதனைக் குடத்தில் இடுவார்கள்

தேர்தல் நாளன்று அக்குடத்தைச் சபையோர்முன் நன்றாகக் குலுக்கிய பின், 5 வயதிற்குட்பட்ட சிறுவனைக் குடத்திலுள்ள ஓர் ஓலையை எடுக்கச் செய்வர். அந்த ஓலையிலுள்ள நபரே சபையின் உறுப்பினராவார்.

343) ‘மூன்று கை மகர்சேனை’ என்ற சிறப்புப்படை யார் காலத்தில் இருந்தது?

A) முதலாம் ராஜராஜன்

B) முதலாம் ராஜேந்திரன்

C) முதலாம் பராந்தகன்

D) A மற்றும் B

விளக்கம்: கடல் கடந்த நாடுகளைக் கைப்பற்றுபவர்கள் சோழர்கள். எனவே, சோழப் பேரரசில் ஆற்றல்மிக்க குதிரைப்படை, யானைப்படை, கடற்படை இருந்தது. முதலாம் இராசராசன், முதலாம் ராசேந்திரன் காலத்தில் ‘மூன்று கை மகாசேனை’ என்ற சிறப்புப் படை இருந்தது. அப்படை உள்நாடு மற்றும் வெளிநாட்டில் வெற்றிகளைப் பெற்றுத் தந்தது.

344) சரியானதைத் தேர்வு செய்க

A) சோழர் காலத்தில் சாதிமுறை குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருந்தது

B) இவர்கள் காலத்தில் அந்தணர், வணிகர், வெள்ளாளர், படைவீரர் தவிர அவரவர் செய்யும் தொழிலின் அடிப்படையில் தனித்தனி சாதிகளாகப் பிரிக்கப்பட்டனர்.

C) உயர்ந்தோர், தாழ்ந்தோர் என வேறுபாடு நிலவியது

D) அனைத்தும்

விளக்கம்: சோழர் காலத்தில் சாதிமுறை குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருந்தது

இவர்கள் காலத்தில் அந்தணர், வணிகர், வெள்ளாளர், படைவீரர் தவிர அவரவர் செய்யும் தொழிலின் அடிப்படையில் தனித்தனி சாதிகளாகப் பிரிக்கப்பட்டனர்.

உயர்ந்தோர், தாழ்ந்தோர் என வேறுபாடு நிலவியது.

345) ‘இறையிலி நிலங்கள்’ யாருக்கு கொடுக்கப்பட்டது?

A) அந்தணர்

B) ராஜகுரு

C) அமைச்சர்

D) உழவர்

விளக்கம்: சோழமன்னர்கள் அந்தணர்களுக்கு பிரம்மதேயம், சதுர்வேதிமங்கலம் போன்ற இறையிலி நிலங்களைக் கொடுத்துக் கோயில்களைப் பராமரித்தனர்.

346) பொருத்துக.

அ. வேதங்களை விளக்குபவர் பெற்றது – 1. வேதவிருத்தி

ஆ. பாரதக்கதை கூறுவோர் பெற்றது – 2. பாரதவிருத்தி

இ. புராணம் கூறுவோர் பெற்றது – 3. புராண விருத்தி

A) 1, 2, 3

B) 3, 2, 1

C) 1, 3, 2

D) 3, 1, 2

விளக்கம்: வேதங்களை விளக்குபவர் பெற்றது – வேதவிருத்தி

பாரதக்கதை கூறுவோர் பெற்றது – பாரதவிருத்தி

புராணம் கூறுவோர் பெற்றது – புராண விருத்தி

வேதவிருத்தி, புராண விருத்தி, பாரத விருத்தி என்பன நிலங்களாகும்.

347) கூற்றகளை கவனி.

1. சோழர் காலத்தில் கோயில் பணிகளும் அவற்றின் அறக்கட்டளைகளும் அந்தணர்களிடமே ஒப்படைக்கப்பட்டன.

2. கோயில் பணிகளும் அவற்றின் அறக்கட்டளைகளும் ஏற்று நடத்துபவர்களுக்கு ‘மூலப்பருடையோர்’ என்று பெயர்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. சோழர் காலத்தில் கோயில் பணிகளும்அவற்றின் அறக்கட்டளைகளும் அந்தணர்களிடமே ஒப்படைக்கப்பட்டன.

2. கோயில் பணிகளும் அவற்றின் அறக்கட்டளைகளும் ஏற்று நடத்துபவர்களுக்கு ‘மூலப்பருடையோர்’ என்று பெயர்.

348) சரியானதைத் தேர்க.

A) சோழர் காலத்தில் சமூக வாழ்க்கையில் பெண்கள் உயர்ந்த இடத்தைப் பெற்றனர்

B) ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற நியதி நடைமுறையில் இருந்தது

C) கணவரை இழந்த பெண் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறுவதைப் பற்றிச் சில கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன

D) அனைத்தும் சரி

விளக்கம்: சோழர் காலத்தில் சமூக வாழ்க்கையில் பெண்கள் உயர்ந்த இடத்தைப் பெற்றனர்

‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற நியதி நடைமுறையில் இருந்தது

கணவரை இழந்த பெண் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறுவதைப் பற்றிச் சில கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

349) எந்தக் கோயிலின் விமானச்சுவரில் 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றுச் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன?

A) தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்

B) ஸ்ரீரங்கம்

C) தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில்

D) கங்கைகொண்ட சோழீஸ்வரம் கோயில்

விளக்கம்: தாராசுரம், ஐராவதீஸ்வரர் கோயிலின் விமான சுவர்களில் 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றுச் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன

350) முதலாம் இராஜேந்திர சோழனின் தாத்தா யார்?

A) முதலாம் ராஜராஜன்

B) சுந்தர சோழன்

C) முதலாம் பராந்தகன்

D) கரிகாலன்

விளக்கம்: முதலாம் இராஜேந்திர சோழனின் தாத்தா சுந்தர சோழன் ஆவார். முதலாம் பராந்தகன் ஆட்சிக் காலத்தில் வீரச்சோழ இளங்கோவேள் என்ற கொடும்பாளுர் சிற்றரசனின் மனைவி கங்காதேவியார் தீக்குளித்த செய்தியும், இராசராச பேரரசனின் தாயாரும் சுந்தர சோழனின் மனைவியுமான வானவன் மதேவியார் உடன்கட்டை ஏறிய செய்தியும் திருவாலங்காட்டு செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

351) வாகாடகர்கள், காலச்சூரிகள், சாளுக்கியர்கள், ராஷ்டிரகூடர்கள் போன்றோர்க்கு முன்னோடியாக திகழ்தவர்கள் யார்?

A) குஷாணர்கள்

B) குப்தர்கள்

C) மௌரியர்கள்

D) சேரர்கள்

விளக்கம்: குப்தர்கள் ஆட்சி முறை, வாகாடகர்கள், காலச்சூரிகள், சாளுக்கியர்கள், ராஷ்டிரகூடர்கள் போன்றோர்க்கு முன்னோடியாகத் திகழ்ந்தது எனலாம். குப்தப்பேரரசின் பல்வேறு நிர்வாக முறைகளை இவர்கள் பின்பற்றினர்.

352) கீழ்க்காண்பனவற்றில் எது இலக்கண நூல்?

A) கல்பசூத்திரம்

B) வியாக்கரணம்

C) அஸ்டத்யாயி

D) வாசவததத்தா நாட்டிய தாரா

விளக்கம்: பத்ரபாகு – கல்பசூத்திரம்

வ்யாதி – வியாக்கரணம் (இலக்கணம்)

பாணினி – அஸ்டத்யாயி

சுபந்து – வாசவதத்தா நாட்டிய தாரா (நாட்டிய கலை)

353) வேதபாட சாலை நடத்துவதற்காக, மான்யம் அளித்தவர் யார்?

A) முதலாம் பராந்தகன்

B) முதலாம் ராஜராஜன்

C) முதலாம் ராஜேந்திரன்

D) கரிகாலன்

விளக்கம்: முதலாம் பராந்தகன் வேதபாட சாலை நடத்துவதற்காக, மான்யம் அளித்துள்ள செய்தியைக் காமபுல்லூர் கல்வெட்டு பகர்கின்றது.

354) யார் காலத்தில் வேதங்களையும், இலக்கணங்களையும் கற்பிக்கும் ஆசிரியரின் தகுதிகளை அணியூர் கல்வெட்டு குறிப்பிடுகிறது?

A) முதலாம் பராந்தகன்

B) முதலாம் ராஜராஜன்

C) முதலாம் ராஜேந்திரன்

D) கரிகாலன்

விளக்கம்: முதலாம் ராஜராஜன் காலத்தில் வேதங்களையும், இலக்கணங்களையும் கற்பிக்கும் ஆசிரியரின் தகுதிகளை அணியூர் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

355) யார் காலத்தில் வேதங்களைப் போதிக்கும் கல்விக்கூடங்கள் திரிபுவனம், எண்ணாயிரம் போன்ற இடங்களில் இருந்தன?

A) முதலாம் பராந்தகன்

B) முதலாம் ராஜராஜன்

C) முதலாம் ராஜேந்திரன்

D) கரிகாலன்

விளக்கம்: முதலாம் இராஜேந்திரன் காலத்தில் வேதங்களைப் போதிக்கும் கல்விக்கூடங்கள் திரிபுவனம், எண்ணாயிரம், திருவொற்றியூர், வேம்பந்தூர் போன்ற இடங்களில் இருந்தன. பிற்காலச் சோழர்கள் காலத்தில் தமிழிலக்கியம் அதன் உச்சத்தை அடைந்தது. இறவாப் புகழ் பெற்ற தமிழிலக்கியங்கள் இவர்கள் காலத்தில் இயற்றப்பட்டன.

356) ‘கொன்றை வேந்தன்’ – ஆசிரியர் யார்?

A) ஒளவையார்

B) சேக்கிழார்

C) கம்பர்

D) புகழேந்திப் புலவர்

விளக்கம்: ஒளவையார் எழுதிய நூல்கள்:

1. ஆத்திச்சூடி

2. கொன்றை வேந்தன்

3. நல்வழி

4. மூதுரை.

357) திருத்தொண்டர் புராணம் -ஆசிரியர் யார்?

A) ஒளவையார்

B) சேக்கிழார்

C) கம்பர்

D) புகழேந்திப் புலவர்

விளக்கம்: பெரியபுராணம் என்ற நூலை எழுதியவர் சேக்கிழார். இது, சிவனடியார்களைப் பற்றிய நூல் என்பதால் ‘திருத்தொண்டர் புராணம்’ எனவும் அழைக்கப்படும்.

358) ஏரெழுபது – ஆசிரியர் யார்?

A) ஒளவையார்

B) சேக்கிழார்

C) கம்பர்

D) புகழேந்திப் புலவர்

விளக்கம்: கம்பரின் நூல்கள்:

1. இராமவதாரம் (கம்பராமாயணம்)

2. ஏரெழுபது

3. சடகோபரந்தாதி

4. சரஸ்வதி அந்தாதி

5. இலக்குமி அந்தாதி

6. சிலை எழுபது

359) பொருத்துக.

அ. புகழேந்திப்புலவர் – 1. கந்த புராணம்

ஆ. ஒட்டக்கூத்தர் – 2. கலிங்கத்துப்பரணி

இ. ஜெயங்கொண்டார் – 3. மூவருலா

ஈ. கச்சியப்ப சிவாச்சாரியார் – 4. நளவெண்பா

A) 4, 3, 2, 1

B) 4, 3, 1, 2

C) 3, 2, 1, 4

D) 1, 4, 3, 2

விளக்கம்: புகழேந்திப்புலவர் – நளவெண்பா

ஒட்டக்கூத்தர் – மூவருலா, குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ்

ஜெயங்கொண்டார் – கலிங்கத்துப்பரணி

கச்சியப்ப சிவாச்சாரியார் – கந்தபுராணம்

360) மூவருலா நூலுடன் தொடர்பில்லாத அரசனைத் தேர்வு செய்க.

A) விக்கிரமசோழன்

B) இரண்டாம் குலோத்துங்கச்சோழன்

C) கரிகாலச்சோழன்

D) இரண்டாம் ராஜராஜசோழன்

விளக்கம்: உலா என்ற சிற்றிலக்கிய வகையை பின்பற்றி ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்ட நூல் மூவருலா ஆகும். விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்கச்சோழன், இரண்டாம் இராஜராஜசோழன் ஆகிய 3 சோழ மன்னர்களைப் புகழந்து பாடியதால் இது ‘மூவருலா’ எனப்பட்டது.

361) கூற்றுகளை கவனி

1. நம்பியாண்டார் நம்பி சைவத் திருமுறைகளைத் தொகுத்தார்

2. சைவ, சமயக் சாத்திரங்கள் 14 நூல்களும் சேக்கிழார் காலத்தைத் தொடர்ந்து இயற்றப்பட்டன

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. நம்பியாண்டார் நம்பி சைவத் திருமுறைகளைத் தொகுத்தார். 2. சைவ, சமயக் சாத்திரங்கள் 14 நூல்களும் சேக்கிழார் காலத்தைத் தொடர்ந்து இயற்றப்பட்டன.

362) ‘சிவஞானபோதம்’ என்ற நூலை இயற்றியவர் யார்?

A) நம்பியாண்டார் நம்பி

B) மெய்கண்டார்

C) வாகீசர்

D) தேவநாயனார்

விளக்கம்: சோழ பேரரசு முழுவதும் கோயில்களிலும், மடங்களிலும் திருப்பாவை, திருவெம்பாவை ஓதப்பட்டன. சைவ சித்தாந்த நூல்களும், இக்காலத்தே மலர்ந்தன. மெய்கண்டார் ‘சிவஞானபோதம்’ என்ற நூலை இயற்றியுள்ளார்.

363) பொருத்துக

அ. வாசீக முனிவர் – 1. சிவஞானசித்தியார்

ஆ. உய்யவந்த தேவநாயனார் – 2. திருவுந்தியார்

இ. அருள்நந்தி சிவாச்சாரியார் – 3. ஞானாமிர்தம்

A) 1, 2, 3

B) 3, 2, 1

C) 2, 1, 3

D) 1, 3, 2

விளக்கம்: வாகீச முனிவர் – ஞானாமிர்தம்

திருவிய்யலூர் உய்யவந்த தேவநாயனார் – திருவுந்தியார்

அருள்நந்தி சிவாச்சாரியார் – சிவஞானசித்தியார்

364) உமாபதி சிவாச்சாரியார் எத்தனை நூல்களை சோழர் காலத்தில் இயற்றினார்?

A) 4

B) 5

C) 8

D) 10

விளக்கம்: சோழ பேரரசு முழுவதும் கோயில்களிலும், மடங்களிலும் திருப்பாவை, திருவெம்பாவை ஓதப்பட்டன. சைவ சித்தாந்த நூல்களும், இக்காலத்தே மலரந்தன. மெய்கண்டார் ‘சிவஞானபோதம்’ என்ற நூலை இயற்றியுள்ளார். உமாபதி சிவாச்சாரியாரின் 8 நூல்கள் சோழர்காலத்தில் இயற்றப்பட்டன.

365) சோழர்கள் எந்த சமயத்தைச் சார்ந்தவர்கள்?

A) சைவம்

B) வைணவம்

C) சமணம்

D) பௌத்தம்

விளக்கம்: இவர்கள் காலத்தில் சைவசமயம் உயர்ந்த நிலையிலிருந்தது. வைணவமும் சிறப்புப் பெற்றிருந்தது. சைவ, வைணவ மடங்களும் கோயில்களும் அமைக்கப்பட்டன. இம்மடங்களில் உணவிடுதல், விளக்கேற்ற எண்ணெய் வழங்குவது, நோய்க்கு மருத்துவம் செய்வது அகியன மேற்கொள்ளப்பட்டன.

366) பொருத்துக

அ. திருக்கட்டளை – 1. சுந்தரேஸ்வரர் கோயில்

ஆ. நார்த்தாமலை – 2. விஜயாலய சோழீஸ்வரம் கோயில்

இ. கொடும்பாளுர் – 3. மூவர் கோயில்

A) 1, 2, 3

B) 3, 2, 1

C) 2, 1, 3

D) 1, 3, 2

விளக்கம்: திருக்கட்டளை – சுந்தரேஸ்வரர் கோயில்

நார்த்தாமலை – விஜயாலய சோழீஸ்வரம் கோயில்

கொடும்பாளுர் – மூவர் கோயில்.

367) தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்டியவர் யார்?

A) முதலாம் ராஜராஜசோழன்

B) முதலாம் ரஜேந்திர சோழன்

C) அனபாயச் சோழன்

D) கரிகாலச் சோழன்

விளக்கம்: இக்கோயில் கி.பி (பொ.ஆ) 1003 முதல் கி.பி (பொ.ஆ) 1010 வரை கட்டப்பட்டது. இது “தஞ்சைப் பெருவுடையார் கோயில்” எனவும் அழைக்கப்படும். இது சோழர்கள் காலத்தில் மிகவும் முக்கியத்துவம் பெற்றது.

368) சோழர்கால கட்டடக்கலையில் மணிமகுடமாக விளங்குவது எது?

A) தஞ்சை பெரியக் கோயில்

B) காஞ்சி கைலாசநாதர் கோயில்

C) ஸ்ரீரங்கம்

D) மதுரை மீனாட்சியம்மன் கோயில்

விளக்கம்: தஞ்சை பெரியக் கோயில் சோழர் கால கட்டடக்கலையின் முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது. சோழர்கால கட்டடக்கலையின் மணிமகுடமாக இக்கோயில் திகழ்கிறது.

369) தஞ்சை பெரியக்கோயிலின் விமானத்தின் உயரம் என்ன?

A) 90 அடி

B) 60 அடி

C) 216 அடி

D) 206 அடி

விளக்கம்: தஞ்சை பெரியக்கோயில் 90 அடி அகலம் 90 அடி நீளமுடைய கருவறைக்குமேல் நிலத்திலிருந்து 216 அடி உயரமுடைய விமானத்தைக் கொண்டது.

370) தஞ்சை பெரியக் கோயில் விமானத்தின் பெயர் என்ன?

A) இராசரசன் தச்சிண மேரு

B) தென்னகத்தின் இமயமலை

C) இராஜராஜேஸ்வரம்

D) அனைத்தும்

விளக்கம்: 216 அடி உயரம் கொண்ட தஞ்சை பெரியக் கோயில் விமானம் ‘இராசராசன் தட்சிணமேரு’ என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள் ‘தென்னகத்தின் இமயமலை’ என்பதாகும். இது ‘இராஜராஜேஸ்வரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

371) தஞ்சை பெரியக் கோயிலின் 1000-வது ஆண்டு விழா எப்போது நடைபெற்றது?

A) செப்டம்பர் 25, 2000

B) செப்டம்பர் 25, 2010

C) செப்டம்பர் 25, 2020

D) செப்டம்பர் 25, 2005

விளக்கம்: தஞ்சை பெருவுடையார் கோயில் என்பதன் வடமொழியாக்கமே பிரகதீஸ்வரர் கோயில். இது தொடக்கக் காலத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும் தஞ்சை பெருவுடையார் கோயில் என்றும் மராட்டிய மன்னர்கள் காலத்தில் பிரகதீஸ்வரம் என்றும் அழைக்கப்பட்டது. இக்கோயிலின் நந்தி ஒரே கல்லால் ஆனது. இதன் 1000-வது ஆண்டுவிழா செப்டம்பர் 25, 2010 அன்று நடைபெற்றது.

372) கங்கை கொண்ட சோழிஸ்வர கோயிலைக் கட்டியவர் யார்?

A) முதலாம் ராஜராஜசோழன்

B) முதலாம் இராஜேந்திர சோழன்

C) அனபாயச்சோழன்

D) கரிகாலச்சோழன்

விளக்கம்: முதலாம் ராஜேந்திர சோழன் தனது கங்கை வெற்றியின் நினைவாக உருவாக்கிய கங்கை கொண்ட சோழபுரத்தில் கட்டிய கோயில், கங்கைகொண்ட சோழீஸ்வர கோயில் என்று அழைக்கப்படுகிறது.

373) கங்கை கொண்ட சோழீஸ்வர கோயில் விமானத்தின் உயரம் என்ன?

A) 60 அடி

B) 90 அடி

C) 150 அடி

D) 216 அடி

விளக்கம்: இக்கோயிலின் விமானம் 150அடி உயரமுடையது. இக்கோயிலின் உட்பகுதியில் தெற்கில் நடராசர் கோயிலும், வடக்கில் சண்டிகேசுவரக் கோயிலும், மேற்கில் சுடரி லிங்கமும் அமைந்துள்ள. அம்மனுக்குத் தனிக் கோயில் உள்ளது. இவ்வூரில் கங்கை கொண்ட சோழன் ஏற்படுத்திய ஏரி ‘சோழ கங்கம்’ எனப்பட்டது.

374) தாராசுரம் – ஐராவதீஸ்வரர் கோயில் யார் காலத்தில் கட்டப்பட்டது?

A) இரண்டாம் ராஜராஜசோழன்

B) முதலாம் இராஜேந்திர சோழன்

C) அனபாயச்சோழன்

D) கரிகாலச்சோழன்

விளக்கம்: தாராசுரம் – ஐராவதீஸ்வரர் கோயில் – இரண்டாம் ராஜராஜசோழன். இதில் சக்கரங்கள் அமைத்த தேரை இழுத்துச் சொல்வது போன்ற கல்தேர் அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டடத்தை உற்று நோக்கினால், நாகரம், கேசரம், திராவிடம் ஆகிய 3 கலைபாணிகளை உள்ளடக்கியதை காணலாம்.

375) யாருடைய ஆட்சிக்காலத்தில் வீரச்சோழ இளங்கோவேள் என்ற கொடும்பாளுர் சிற்றரசனின் மனைவி தீக்குளித்த செய்தி திருவாலங்காட்டு செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது?

A) முதலாம் இராஜராஜன்

B) முதலாம் இராஜேந்திரன்

C) முதலாம் பராந்தகன்

D) கரிகாலன்

விளக்கம்: முதலாம் பராந்தகச் சோழன் காலத்தில் வீரச்சோழ இளங்கோவேள் என்ற கொடும்பாளுர் சிற்றரசின் மனைவி தீக்குளித்த செய்தி திருவாலங்காட்டு செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

376) திரிபுவனம் – கம்பகரேசுவரர் கோயிலைக் கட்டியவர் யார்?

A) முதலாம் குலோத்துங்க சோழன்

B) இரண்டாம் குலோத்துங்க சோழன்

C) மூன்றாம் குலோத்துங்க சோழன்

D) ஆதித்ய சோழன்

விளக்கம்: மூன்றாம் குலோத்துங்க சோழன், பாண்டியரை வென்று, மதுரையில் ‘திரிபுவனம் வீரத்தேவன்’ என்ற பட்டம் சூட்டியதன் விளைவாக இக்கோயிலைக் கட்டினான்

377) ‘சித்திரக்காரப்புலி’ என்று அழைக்கப்பட்டவர் யார்?

A) முதலாம் மகேந்திரவர்மன்

B) ராஜசிம்மன்

C) முதலாம் நரசிம்மவர்மன்

D) இரண்டாம் நரசிம்மவர்மன்

விளக்கம்: முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் ‘சித்திரக்காரப்புலி’ எனப் போற்றப்பட்டார்.

378) சோழர் கால படிமக்கலை பற்றிய சரியானக் கூற்றைத் தெரிவு செய்க

A) கல்லில் சிலை வடித்ததைப் போன்று உலோகங்களினால் வார்ப்புச் சிலைகள் உண்டாக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.

B) செம்பு, வெண்கலம், வெள்ளி போன்றவற்றால் சிலைகள் வடிவமைக்கப்பட்டன.

C) நடராசர் சிலை, சோழர் காலச் செப்புத் திருமேனிகளில் தலை சிறந்ததும் உலகப் புகழ்பெற்றதுமாகும்

D) அனைத்தும் சரி

விளக்கம்: கல்லில் சிலை வடித்ததைப் போன்று உலோகங்களினால் வார்ப்புச் சிலைகள் உண்டாக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.

செம்பு, வெண்கலம், வெள்ளி போன்றவற்றால் சிலைகள் வடிவமைக்கப்பட்டன.

நடராசர் சிலை, சோழர் காலச் செப்புத் திருமேனிகளில் தலை சிறந்ததும் உலகப் புகழ்பெற்றதுமாகும்.

379) கூற்றுகளை கவனி.

1. சோழர் காலத்தில் தஞ்சை கோயிலின் கருவறைச் சுவரில் காணப்படும் ஓவியங்கள் மிகச் சிறப்புடையனவாகும்.

2. தஞ்சை கோயிலின் கருவறைச் சுவரில் காணப்படும் ஓவியங்களில், தடுத்தாட்கொண்ட சுந்தரர் வரலாறும், சிவபெருமான் புலித்தோல்மீது அமர்ந்துள்ள கைலாயக் காட்சியும், சுந்தரர் வெள்ளை யானை மீது அமர்ந்து செல்லும் காட்சியும் மிகவும் சிறப்பானதாகும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. சோழர் காலத்தில் தஞ்சை கோயிலின் கருவறைச் சுவரில் காணப்படும் ஓவியங்கள் மிகச் சிறப்புடையனவாகும்.

2. தஞ்சை கோயிலின் கருவறைச் சுவரில் காணப்படும் ஓவியங்களில், தடுத்தாட்கொண்ட சுந்தரர் வரலாறும், சிவபெருமான் புலித்தோல்மீது அமர்ந்துள்ள கைலாயக் காட்சியும், சுந்தரர் வெள்ளை யானை மீது அமர்ந்து செல்லும் காட்சியும் மிகவும் சிறப்பானதாகும்.

380) சோழர் காலத்தில் நடனக் கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட பட்டம் என்ன?

A) மாணிக்கம்

B) காவிதி

C) தலைக்கோலி

D) அனைத்தும்

விளக்கம்: சிதம்பரம், தஞ்சை, காஞ்சி போன்ற கோயில்களில் காணப்படும் நடன மாந்தர்களின் சிற்பங்களும், பெரியபுராணம், கம்பராமாயணம் காட்டும் நடனக்கலையும் சோழர்கால நடனக்கலைக்குச் சான்றாகும். சோழர் கால நடனக் கலைஞர்களுக்கு மாணிக்கம், காவிதி, தலைக்கோலி ஆகிய பட்டங்கள் வழங்கப்பட்டன.

381) ஆய்ச்சியர் குரவை பற்றிய சரியான கூற்றைத் தெரிவு செய்க.

A) சோழர்கால இசைக்கலையில் ஆய்ச்சியர் குரவை குறிப்பிடத்தக்கது

B) 7 பண்புகளை மாறிமாறிப்பாடி இசை எழுப்புபவர், நமசிவாயா என்பதை மாற்றி உச்சரித்து ஓசைநயம் காட்டிப்பாடுவர். இதுவே ஆய்ச்சியர் குரவை எனப்படும்.

C) A மற்றும் B

D) எதுவுமில்லை

விளக்கம்: 1. சோழர்கால இசைக்கலையில் ஆய்ச்சியர் குரவை குறிப்பிடத்தக்கது

2. 7 பண்புகளை மாறிமாறிப்பாடி இசை எழுப்புபவர் நமசிவாயா என்பதை மாற்றி உச்சரித்து ஓசைநயம் காட்டிப்பாடுவர். இதுவே ஆய்ச்சியர் குரவை எனப்படும்.

382) பாண்டியர் ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு எத்தனை வகை சபை இருந்தது?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: பாண்டியர்களின் ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகள் வலிமை பெற்றுத் திகழ்ந்தன. இதில் 3 வகை சபைகள் இருந்தன.

1. பிராமணர்கள் இருந்த பிரம்மதேயச் சபை

2. பிரம்மதேயமல்லாத ஊர்களிலிருந்த சபை

3. வணிகர்கள் வாழ்ந்த நகரசபை

383) இந்திய பண்பாட்டிற்குச் சோழர்களின் கொடை என்ன?

A) மன்னருக்கு வாரிசு இல்லாத போது, அரச குடும்பம் சார்ந்த அல்லது சாராத ஒருவர் மன்னராகத் தேர்வு செய்யும் முறை நல்லாட்சிக்கு ஓர் சிறந்த உதாரணம்

B) கிராமசபை உறுப்பினர்களைக் குடவோலை முறையில் தேர்வு. இது இந்தியப் பண்பாட்டிற்கு சோழர்கள் நல்கிய சிறந்த கொடை

C) சோழர்களால் கொண்டுவரப்பட்ட குடும்புகள் (வார்டு) முறை, தற்கால கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு அடிப்படையானது.

D) அனைத்தும் சரி

விளக்கம்: மன்னருக்கு வாரிசு இல்லாத போது, அரச குடும்பம் சார்ந்த அல்லது சாராத ஒருவர் மன்னராகத் தேர்வு செய்யும் முறை நல்லாட்சிக்கு ஓர் சிறந்த உதாரணம்

கிராமசபை உறுப்பினர்களைக் குடவோலைமுறையில் தேர்வு. இது இந்தியப் பண்பாட்டிற்கு சோழர்கள் நல்கிய சிறந்த கொடை

சோழர்களால் கொண்டுவரப்பட்ட குடும்புகள் (வார்டு) முறை, தற்கால கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு அடிப்படையானது.

384) யாருடைய காலத்தில் ‘புதுக்களிகைப் பணம்’ என்ற நாணயம் வணிகத்தில் பயன்படுத்தப்பட்டது?

A) சேரர்

B) சோழர்

C) பாண்டியர்

D) பல்லவர்

விளக்கம்: பிற்காலப் பாண்டியர் காலத்தில் புதுக்களிகைப் பணம், அன்றாட நற்புதுக்காசு, தனபாலன்குளிகை ஆகிய நாணயஙகள் வாணிகத்தில் பயன்படுத்தப்பட்டன

385) இந்திய பண்பாட்டிற்கு சோழர்களின் கொடை என்ன?

A) நிலங்கள் தரம் வாரியாக பிரிக்கப்பட்டு வரிவிதிக்கப்பட்டது

B) நாதமுனிகள் தொகுத்தளித்த நாலாயிரத்திவ்வியபிரபந்தம், சோழர் காலத்தில் வழங்கப்பட்ட சிறந்த இலக்கியக் கொடையாகும்

C) ஐம்பெரும் மற்றும் ஐஞ்சிறு காப்பியங்கள், இலக்கண நூல்கள், நிகண்டுகள் போன்றவை தமிழ் இலக்கியப் படைப்பிற்கும், இந்தியப் பண்பாட்டிற்கும் சிறந்த கொடையாகும்

D) அனைத்தும்

விளக்கம்: நிலங்கள் தரம் வாரியாக பிரிக்கப்பட்டு வரிவிதிக்கப்பட்டது

நாதமுனிகள் தொகுத்தளித்த நாலாயிரத்திவ்வியபிரபந்தம், சோழர் காலத்தில் வழங்கப்பட்ட சிறந்த இலக்கியக் கொடையாகும்

ஐம்பெரும் மற்றும் ஐஞ்சிறு காப்பியங்கள், இலக்கண நூல்கள், நிகண்டுகள் போன்றவை தமிழ் இலக்கியப் படைப்பிற்கும், இந்தியப் பண்பாட்டிற்கும் சிறந்த கொடையாகும்.

386) இந்தியப் பண்பாட்டிற்கு சோழர்களின் கொடை என்ன?

A) குலோத்துங்க சோழப்பேரி, இசேந்திர சோழப் பேரி போன்றவை சோழர் காலத்தில் வெட்டப்பட்ட ஏரிகளாகும்.

B) ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையும் அவர்களின் தகுதியும், கடமையும் பற்றிச் சோழர் கால கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது.

C) சோழர்காலத்தில் வேதக்கல்வி மற்றும் மருத்துவக் கல்வி போன்றவை இந்தியப் பண்பாட்டிற்கு சோழர்கள் அளித்த நன்கொடையாகும்

D) அனைத்தும்

விளக்கம்: குலோத்துங்க சோழப்பேரி, இசேந்திர சோழப்பேரி போன்றவை சோழர் காலத்தில் வெட்டப்பட்ட ஏரிகளாகும்.

ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையும் அவர்களின் தகுதியும், கடமையும் பற்றிச் சோழர் கால கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது.

சோழர்காலத்தில் வேதக்கல்வி மற்றும் மருத்துவக் கல்வி போன்றவை இந்தியப் பண்பாட்டிற்கு சோழர்கள் அளித்த நன்கொடையாகும்.

387) பிற்காலப் பாண்டியர் எப்போது எழுச்சி பெற்றனர்?

A) 2-ம் நூற்றாண்டின் இறுதியில்

B) 8-ஆம் நூற்றாண்டின் இறுதியில்

C) 10-ஆம் நூற்றாண்டின் இறுதியில்

D) 12-ஆம் நூற்றாண்டின் இறுதியில்

விளக்கம்: பிற்காலப் பாண்டியர்கள் கி.பி (பொ.ஆ) 12-ஆம் நூற்றாண்டின் இறுதியில் முதலாம் மாறவர்மன் தலைமையில் எழுச்சி பெற்றனர். முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன், முதலாம் மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் ஆகியோர் பிற்காலப் பாண்டிய வம்சத்தின் சிறந்த மன்னர்களாவர்.

388) கோப்பெருஞ்சிங்கனின் கல்வெட்டு, யாரைப் பற்றி குறிப்பிடுகிறது?

A) பிற்காலச் சோழர்

B) முற்காலச் சோழர்

C) பிற்காலப் பாண்டியர்

D) முற்காலப் பாண்டியர்

விளக்கம்: கோப்பெருஞ்சிங்கனின் வயலூர் கல்வெட்டு, பிற்காலப் பாண்டியர்களைப் பற்றி அறிய உதவும் சான்றாக உள்ளது.

389) பிற்காலப் பாண்டியப் பேரரசு எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: பேரரசு, மண்டலம்-வளநாடு-ஊர் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. கல்வெட்டுச் சான்றுகள் மதுரோதய வளநாடு, ஸ்ரீவல்லப வளநாடு, பராந்தக வளநாடு, சுமிதரணவளநாடு ஆகிய வளநாடுகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.

390) கூற்றுகளை கவனி (சரியானதைத் தேர்வு செய்க).

A) பிற்காலப் பாண்டியர் ஆட்சியில் நாட்டின் தலைவன் மன்னன் ஆவான்

B) மன்னனுக்கு ஆட்சியில் உதவ ‘மகாமந்திரர்’ எனப்பட்ட அமைச்சரவை இருந்தது.

C) படைத்தலைவர் சேனாதிபதி என்றும், அனைத்துப் படைகளுக்கும் பொதுவான தலைவர் “மகாசாமந்தன்” எனவும் அழைக்கப்பட்டனர்

D) அனைத்தும் சரி

விளக்கம்: பிற்காலப் பாண்டியர் ஆட்சியில் நாட்டின் தலைவன் மன்னன் ஆவான். மன்னனுக்கு ஆட்சியில் உதவ ‘மகாமந்திரர்’ எனப்பட்ட அமைச்சரவை இருந்தது.

படைத்தலைவர் சேனாதிபதி என்றும், அனைத்துப் படைகளுக்கும் பொதுவான தலைவர் “மகாசாமந்தன்” எனவும் அழைக்கப்பட்டனர்.

391) பாண்டியர் ஆட்சியில் பல அரண்மனைப் பணிகளைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டவர் யார்?

A) அகப்பரிவர முதலி

B) திருவாசல் முதலி

C) திணைக்களநாயகம்

D) A மற்றும் B

விளக்கம்: பாண்டியர் ஆட்சியில் இருந்த அமைச்சரவை – மகாமந்திர்.

அனைத்துப் படைகளுக்கும் பொதுவான தலைவர் – மகாசாமந்தன்

பல அரண்மனைப் பணிகளைக் கண்காணித்தவர்கள் – அகப்பரிவர முதலி மற்றும் திருவாசல் முதலி

392) கூற்றுகளை ஆராய்க

1. பாண்டியர் ஆட்சியில், வரிவசூல் செய்வதற்குப் ‘புரவுவரித் திணைகளத்து முகவெட்டி’ என்ற வருவாய் அதிகாரி நியமிக்கப்பட்டார்

2. தலைமை அதிகாரி ‘திணைக்களநாயகம்’ என்றழைக்கப்பட்டார்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. பாண்டியர் ஆட்சியில், வரிவசூல் செய்வதற்குப் ‘புரவுவரித் திணைகளத்து முகவெட்டி’ என்ற வருவாய் அதிகாரி நியமிக்கப்பட்டார்

2. தலைமை அதிகாரி ‘திணைக்களநாயகம்’ என்றழைக்கப்பட்டார்.

393) பிற்காலப் பாண்டியரின் சமூகநிலை பற்றிய யாருடைய குறிப்புகள் கூறுகின்றன?

A) யுவான் சுவாங்

B) மார்க்கோபோலோ

C) வாசப்

D) B மற்றும் C

விளக்கம்: பிற்காலச் பாண்டியர்களின் சமூகநிலை பற்றி மார்க்கோபோலோ மற்றும் வாசப் ஆகிய அயல்நாட்டுப்பயணிகள் தங்களது குறிப்புகளில் பதிவு செய்துள்ளனர்.

394) பிற்கால பாண்டியர்கள் எத்தனை படைப்பிரிவுகளைப் பெற்றிருந்தனர்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: பிற்காலப் பாண்டியர் 4 படைப்பிரிவுகளைப் பெற்றிருந்தனர்.

1. யானைப்படை

2. குதிரைப்படை

3. தேர்ப்படை

4. காலாட்படை.

395) பாண்டியர் ஆட்சியில் அவசர காலத்தில் பயன்படுத்த எத்தனை படைப்பிரிவுகள் இருந்தன?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: பாண்டியரின் பொதுவாக 4 படைப்பிரிவுகளுடன், மேலும் 2 சிறப்புப்படைப்பிரிவுகளும் இருந்தன. அவை

1. முனையெதிர்மோகர்

2. தென்னவன் உதவிகள்

இவை அவசர காலத்தில் பயன்படுத்தப்பட்டன. படைப்பாசறையைக் கண்காணிக்கும் அதிகாரி “ஆராய்ச்சி நாயகம்”எனப்பட்டடார்.

396) பாண்டியர் கால நீதித்துறை பற்றிய சரியானக் கூற்றைத் தெரிவு செய்க.

A) பிற்காலப் பாண்டியர்களின் நீதித்துறை “தருமாசனம்” என்றழைக்கப்பட்டது

B) அதற்கு அரசனே தலைவராக இருந்தார்

C) உள்ளாட்சி அமைப்புகள் (ஊரவை) குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்தன. ஊரவை நிராகரித்த வழக்குகள் அரசவைக்கு கொண்டு செல்லப்பட்டன

D) அனைத்தும் சரி

விளக்கம்: பிற்காலப் பாண்டியர்களின் நீதித்துறை “தருமாசனம்” என்றழைக்கப்பட்டது

அதற்கு அரசனே தலைவராக இருந்தார்

உள்ளாட்சி அமைப்புகள் (ஊரவை) குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்தன. ஊரவை நிராகரித்த வழக்குகள் அரசவைக்கு கொண்டு செல்லப்பட்டன.

397) எது இசைப்பாடல் அல்ல?

A) கலிகத்துப்பரணி

B) சீவகசிந்தாமணி

C) சிலப்பதிகாரம்

D) பெரியபுராணம்

விளக்கம்: கலிங்கத்துப்பரணி, சீவகசிந்தாமணி, பெரியபுராணம், திருவிசைப்பா முதலியன சிறந்த இசைப்பாடல்களாகும். (சோழர் காலத்தில்), தேவாரப்பாடல்களை ஓதவும் திருப்பதிகங்களை விண்ணப்பிக்கவும் இசைக் கலைஞர்களுக்குத் ‘திருத்தாண்டகம்’ என்ற நிலம் அளிக்கப்பட்டது.

398) பாண்டியர் ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளிலிருந்த 3 வகை சபைகள் பற்றிக் கூறும் கல்வெட்டு எது?

A) உத்திரமேரூர் கல்வெட்டு

B) குடுமியான்மலை கல்வெட்டு

C) அசோகர் கல்வெட்டு

D) மானூர் கல்வெட்டு

விளக்கம்: பாண்டியர் ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளிலிருந்த 3 வகை சபைகள் பற்றி மானூர் கல்வெட்டு குறிப்பிடுகிறது. சபை உறுப்பினர்கள் “குடவோலை” முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தகுதிக்கேற்ப பணிகளில் நியமிக்கப்பட்டனர்.

399) பாண்டியர் காலத்தில் எத்தனை பிரிவு மக்கள் வாழ்ந்தனர்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: பாண்டியர்கள் காலத்தில் அரசனர், அந்தணர், வணிகர், வேளாளர் ஆகிய 4 பிரிவு மக்கள் வாழ்ந்தனர். மறவர். தச்சர், ஆயர், கொல்லர், மருத்துவர், நெசவாளர், முத்துக்குளிப்போர் போன்ற பிறபிரிவு மக்களும் வாழ்ந்து வந்தனர்.

400) ‘அவனி வேந்த சதுர்வேதி மங்கலம்’ யார் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது?

A) முதலாம் மாறவர்ம பாண்டியன்

B) முதலாம் இராஜராஜசோழன்

C) முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்

D) சேரன் செங்குட்டுவன்

விளக்கம்: முதலாம் மாறவர்மன் காலத்தில் அந்தணர்களுக்கென “அக்ரஹாரங்கள்” என்ற குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டன. அதற்கு ‘அவனி வேந்த சதுர்வேதி மங்கலம்’ எனப் பெயரிடப்பட்டது.

401) பிற்காலப் பாண்டியர்கள் காலத்தில் எது முக்கியத் தொழிலாக இருந்தது?

A) உப்பு விளைவித்தல்

B) வேட்டையாடுதல்

C) மீன் பிடித்தல்

D) முத்துக்குளித்தல்

விளக்கம்: பிற்காலப் பாண்டியர் காலத்தில் முத்துக்குளித்தல் முக்கிய தொழிலாக இருந்தது. கடலில் மூழ்கி முத்துக் குளிப்போர் மிகுதியாயிருந்தனர்.

402) ‘நானாதேசிகப் பெருந்தெரு’ என்பது யார் வாழ்ந்த பகுதி?

A) அந்தணர்

B) வணிகர்

C) வேளாளர்

D) அரசர்

விளக்கம்: வணிகர்கள் வாழ்ந்த பகுதிகள் நானாதேசிகப் பெருந்தெரு, ஐந்நூற்றுவர் பெருந்தெரு எனப் பிற்காலப் பாண்டியர் காலத்தில் அழைக்கப்பட்டது. ஆலங்களுக்குத் திருப்பணி செய்வதிலும் வணிகர்கள் ஈடுபட்டனர்.

403) பூமிபுத்திரர்கள் எனப்படுபவர்கள் யார்?

A) அந்தணர்

B) வணிகர்

C) வேளாளர்

D) அரசர்

விளக்கம்: வேளாளர்கள் வேளாண்மைத் தொழிலைச் செய்தனர். இவர்கள் தங்களை ‘பூமிபுத்திரர்கள்’ என்றும், ‘நாட்டு மக்கள்’ என்றும் அழைத்துக் கொண்டனர்.

404) பொருத்துக

அ. நிலக்கிழார் மற்றும் வேளாளர் – 1. இரதகாரர்கள்

ஆ. ஏர் உழவர்கள் – 2. சித்திரமேழி பெரிய நாட்டார்

இ. 18 வகை தொழில் செய்வோர் – 3. மேழிச் செல்வம்

A) 3, 2, 1

B) 2, 3, 1

C) 1, 3, 2

D) 2, 1, 3

விளக்கம்: நிலக்கிழார் மற்றும் வேளாளர் – சித்திரமேழி பெரிய நாட்டார்

ஏர் உழவர்கள் – மேழிச் செல்வம்

18 வகை தொழில் செய்வோர் – இரதகாரர்கள்

405) யாருடைய காலம், ‘இந்தியச் செவ்வியல் கலைகளின் காலம்’ என்றழைக்கப்படுகிறது?

A) குப்தர்கள்

B) மௌரியர்கள்

C) குஷாணர்கள்

D) சந்தேலர்கள்

விளக்கம்: குப்தர்கள் காலத்தில் இந்து சமயம் மெசபடாமியா பகுதிகளிலும், ஜாவா, சுமத்ரா, போர்னியோ ஆகிய தென்கிழக்காசிய நாடுகளிலும் பரவியது. குப்தர்கள் காலம், ‘இந்தியச் செவ்வியல் கலைகளின் காலம்’ என்றழைக்கப்படுகிறது. இந்துக் கடவுளர்களுக்குக் கோயில்கள் கட்டப்பட்டன.

406) பாண்டியரின் சமூகநிலை பற்றிய மார்க்கோபோலோ மற்றும் வாசப் ஆகியோரின் குறிப்புகளின்படி பின்வரும் கூற்றுகளில் எது சரி எனக் கூறுக.

A) பாண்டிய நாட்டில் வாழும் மக்கள் பசுக்களைப் போற்றி வணங்குவர்.

B) தங்களின் வீட்டைச் சுத்தமாக வைத்திருந்தனர். வீட்டின் தரைகளைச் சாணத்தால் மெழுகுச் சுத்தப்படுத்தினர்.

C) உயர்வு-தாழ்வின்றி அனைவரும் தரையிலேயே அமர்ந்தனர்.

D) அனைத்தும் சரி

விளக்கம்: பாண்டிய நாட்டில் வாழும் மக்கள் பசுக்களைப் போற்றி வணங்குவர். தங்களின் வீட்டைச் சுத்தமாக வைத்திருந்தனர். வீட்டின் தரைகளைச் சாணத்தால் மெழுகுச் சுத்தப்படுத்தினர்.

உயர்வு-தாழ்வின்றி அனைவரும் தரையிலேயே அமர்ந்தனர்.

407) கி.பி (பொ.ஆ) 7-ஆம் நூற்றாண்டில் கிடைத்த, நிலக்கொடை குறித்த செப்புப் பட்டயம் யாருடைய ஆட்சி பற்றி நமக்குக் கிடைத்த முதல் ஆவணம் ஆகும்?

A) சாளுக்கியர்கள்

B) குப்தர்கள்

C) இராஷ்டிரகூடர்கள்

D) மௌரியர்கள்

விளக்கம்: இராஷ்டிரகூடர்கள் கி.பி (பொ.ஆ) 6 முதல் 10-ஆம் நூற்றாண்டுவரை இந்தியாவை ஆண்ட அரச மரபினர் ஆவர். கி.பி (பொ.ஆ) 7-ஆம் நூற்றாண்டில் கிடைத்த நிலக் கொடை குறித்த செப்புப் பட்டயமே இவர்களின் ஆட்சி பற்றி நமக்குக் கிடைத்த முதல் ஆவணமாகும்.

408) பாண்டியரின் சமூகநிலை பற்றிய மார்க்கோபோலோ மற்றும் வாசப் ஆகியோரின் குறிப்புகளின்படி பின்வரும் கூற்றுகளில் எது சரி எனக் கூறுக.

A) பெண்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்தனர்.

B) அரசக்குலப் பெண்கள் கோயில்களுக்காக நிலங்களைத் தானமாக வழங்கினர்

C) மார்கழி மாதம் விடியற்காலையில், பெண்கள் வீட்டு வாசலில் கோலமிட்டு நோன்பிருந்தனர்

D) அனைத்தும் சரி

விளக்கம்: பெண்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்தனர். அரசக்குலப் பெண்கள் கோயில்களுக்காக நிலங்களைத் தானமாக வழங்கினர். மார்கழி மாதம் விடியற்காலையில், பெண்கள் வீட்டு வாசலில் கோலமிட்டு நோன்பிருந்தனர்.

409) பாண்டியரின் சமூகநிலை பற்றிய மார்க்கோபோலோ மற்றும் வாசப் ஆகியோரின் குறிப்புகளின்படி பின்வரும் கூற்றுகளில் எது சரி எனக் கூறுக.

A) பெண்கள் வீட்டார் மணமகனுக்குச் சீதனம் தந்து திருமணம் செய்யும் வழக்கம் இருந்தது.

B) பெண்கள் கோயில்களிலேயே தங்கி, இறைப்பணி செய்தனர்.

C) 13 வயதுடைய ஆண்மகன், தன் தாய்க்குத் தன் உழைப்பில் பொருளீட்டி உணவளித்தார். தந்தையின் உழைப்பில் அவன் வாழவில்லை

D) அனைத்தும் சரி

விளக்கம்: பெண்கள் வீட்டார் மணமகனுக்குச் சீதனம் தந்து திருமணம் செய்யும் வழக்கம் இருந்தது. பெண்கள் கோயில்களிலேயே தங்கி, இறைப்பணி செய்தனர். 13 வயதுடைய ஆண்மகன், தன் தாய்க்குத் தன் உழைப்பில் பொருளீட்டி உணவளித்தார். தந்தையின் உழைப்பில் அவன் வாழவில்லை.

410) பிற்கால பாண்டியர் காலத்தில், வேதபாடசாலைகளிலிருந்து ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட மானியம் எது?

A) பட்டவிருத்தி

B) சாலபோகம்

C) வித்யாஸ்தானம்

D) கடிகை

விளக்கம்: பிற்கால பாண்டியர் காலத்தில் வேதபாடசாலைகள் இருந்தன. இப்பாடசாலைகளில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ‘பட்டவிருத்தி’ என்ற விருதும் ‘சாலபோகம்’ என்ற மானியமும் வழங்கப்பட்டன. அந்தணர்கள் நடத்திய பாடசாலைகள் கடிகை, வித்யாஸ்தானம் என்றழைக்கப்பட்டன.

411) கூற்றுகளை ஆராய்க

1. பிற்கால பாண்டியர்களின் கல்விச் சாலைகளில் கணிதம், வேதம், தத்துவம், சமயம் போன்றவை போதிக்கப்பட்டன

2. மாணவர்களின் ஒழுக்கம், கட்டுப்பாடு போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. பிற்கால பாண்டியர்களின் கல்விச் சாலைகளில் கணிதம், வேதம், தத்துவம், சமயம் போன்றவை போதிக்கப்பட்டன

2. மாணவர்களின் ஒழுக்கம், கட்டுப்பாடு போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தன.

412) பொருத்துக

அ. சைவ சித்தாந்த வல்லுநர்கள் – 1. சரஸ்வதி பண்டாரங்கள்

ஆ. ஸ்ரீவல்லபப் பெருஞ்சாலை – 2. கன்னயாகுமரி

3. நூலகங்கள் – 3. சிவகங்கை

A) 3, 2, 1

B) 3, 1, 2

C) 1, 3, 2

D) 2, 3, 1

விளக்கம்: பிற்காலப் பாண்டியர் காலத்தில், சைவ சித்தாந்த வல்லுநர்கள் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மடத்தில் தங்கிப் பாடம் கற்பித்தனர். ஸ்ரீவல்லபப் பெருஞ்சாலை என்ற உயர்கல்விக் கூடம் கன்னியாக்குமரியிலும், காந்தளுர் சாலையிலும் (திருவனந்தபுரம்) நிறுவப்பட்டன. இவர்கள் காலத்திலிருந்த நூலகங்கள் ‘ சரஸ்வதி பண்டாரங்கள்’ என அழைக்கப்பட்டன.

413) கூற்றுகளை ஆராய்க

1. பாண்டியர் காலத்தில் ‘சரஸ்வதி பண்டாரங்கள்’ எனப்படும் நூல்கங்கள் சிதம்பரம், சேரன்மாதேவி போன்ற இடங்களில் இருந்தன.

2. இவர்கள் காலத்தில் மாணவர்களுக்கு இலவச உணவு வழங்க நிலதானம் அரசர்களால் வழங்கப்பட்டன. மேலும் தமிழ் வளர்ச்சிக்குப் பாண்டியர் பேராதரவு தந்தனர்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. பாண்டியர் காலத்தில் ‘சரஸ்வதி பண்டாரங்கள்’ எனப்படும் நூல்கங்கள் சிதம்பரம், சேரன்மாதேவி போன்ற இடங்களில் இருந்தன.

2. இவர்கள் காலத்தில் மாணவர்களுக்கு இலவச உணவு வழங்க நிலதானம் அரசர்களால் வழங்கப்பட்டன. மேலும் தமிழ் வளர்ச்சிக்குப் பாண்டியர் பேராதரவு தந்தனர்

414) பாண்டியர் காலத்தில் நெசவாளர் செலுத்திய வரி எது?

A) சுங்க வரி

B) தறியிறை

C) பஞ்சுபீலி

D) B மற்றும் C

விளக்கம்: நெசவுத் தொழில் மிகச்சிறப்பாக பாண்டியர் காலத்தில் நடைபெற்றது. நெசவாளர்கள் தங்கள் வருமானத்திற்கேற்றார்போல் தறியிறை, பஞ்சுபீலி ஆகிய வரிகளைச் செலுத்தினர்

415) பிற்காலப் பாண்டியர் காலத்து வாணிகச்சங்கம் எது?

A) நானாதேசிகன்

B) மணிக்கிராமம்

C) திசையாயிரத்து ஐந்நூற்றுவர்

D) அனைத்தும்

விளக்கம்: பிற்காலப் பாண்டியர் காலத்து வாணிகச் சங்கங்கள்:

1. நானாதேசிகன்

2. மணிக்கிராமம்

3. திசையாயிரத்து ஐற்றூற்றுவர்

4. நகரத்தார்சபை

5. அஞ்சுவண்ணத்தார்.

416) கூற்றுகளை ஆராய்க

1. சீனா, இலங்கை, நேபாளம், சுமத்ரா, அரேபியா, ஏடன் போன்ற நாடுகளுடன் பிற்காலப் பாண்டிய நாட்டு வாணிகர்கள் வாணிகம் செய்தனர்.

2. நவமணிகள், மிகவும் அரிய வகைக் கற்கள், மிளகு, இலவங்கம், ஏலம், கிராம்பு, மூலிகைகள், உணவு தானியங்கள் போன்றவற்றை ஏற்றுமதி செய்தனர்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. சீனா, இலங்கை, நேபாளம், சுமத்ரா, அரேபியா, ஏடன் போன்ற நாடுகளுடன் பிற்காலப் பாண்டிய நாட்டு வாணிகர்கள் வாணிகம் செய்தனர். 2. நவமணிகள், மிகவும் அரிய வகைக் கற்கள், மிளகு, இலவங்கம், ஏலம், கிராம்பு, மூலிகைகள், உணவு தானியங்கள் போன்றவற்றை ஏற்றுமதி செய்தனர்.

417) பாண்டியர் காலத்திலிருந்த இஸ்லாமிய வணிகக் குழுவினர் யார்?

A) நானாதேசிகன்

B) மணிக்கிராமம்

C) திசையாயிரத்து ஐந்நூற்றவர்

D) அஞ்சுவண்ணத்தார்

விளக்கம்: அஞ்சுவண்ணத்தார் என்ற இஸ்லாமிய வணிக குழுவினர் நாகப்பட்டினத்தில் தங்கி வாணிகம் செய்தனர். இவர்கள் மூலமாகவே அரேபியாவில் இருந்து குதிரை வியாபாரம் மிகச் சிறப்பாக நடைபெற்றது என மார்க்கோபோலோ மற்றும் வாசப் தமது குறிப்புகளில் பதிவு செய்துள்ளனர்.

418) பாண்டியர் காலத்தில் அரசின் முக்கிய வருவாய் என்ன?

A) வணிக வரி

B) சுங்க வரி

C) நிலவரி

D) அனைத்தும்

விளக்கம்: நிலவரியே நாட்டின் முக்கிய வருவாய் ஆகும். மொத்த வருவாயில் ஆறில் ஒரு பங்கு, வரியாகப் பெறப்பட்டது. இதைத் தவிர, இளஞ்சினைப்பேறு, உழுதுக்குடி, பாடிக்காவல், தட்டாரப்பாட்டம், இடைவெளி, பொன்வரி, தறிக்குறை, செக்கிறை போன்ற வரிகளும் பாண்டியர்கள் காலத்தில் வசூலிக்கப்பட்டன.

419) கூற்றுகளைக ஆராய்க.

1. ஐந்து வகைப் பொருட்களை விற்பனை செய்த இஸ்லாமிய வணிகர் ‘ஐந்துவண்ணத்தார்’ என அழைக்கப்பட்டனர்

2. இவர்கள் பாண்டிய நாட்டில் தீதாண்டதான புரத்திலும், சோழ நாட்டிலுள்ள நாகப்பட்டினத்திலும் தங்கி வாணிபம் செய்தனர்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. ஐந்து வகைப் பொருட்களை விற்பனை செய்த இஸ்லாமிய வணிகர் ‘ஐந்துவண்ணத்தார்’ என அழைக்கப்பட்டனர்.

2. இவர்கள் பாண்டிய நாட்டில் தீதாண்டதான புரத்திலும், சோழ நாட்டிலுள்ள நாகப்பட்டினத்திலும் தங்கி வாணிபம் செய்தனர்.

420) பாண்டியர் காலம் பற்றிய சரியானக் கூற்றைத் தெரிவு செய்க

A) நிலங்கள் முறையாக அளக்கப்பட்டன.

B) நிலம் அளக்க குடிதாங்கி, அருள்நீதி ஊர்க்கோல் என்ற அளவுகோல்கள் பயன்படுத்தப்பட்டன.

C) நிலவரி கடமை, காணிக்கடன் ஆகிய பெயர்களில் அழைக்கப்பட்டது.

D) அனைத்தும் சரி

விளக்கம்: நிலங்கள் முறையாக அளக்கப்பட்டன. நிலம் அளக்க குடிதாங்கி, அருள்நீதி ஊர்க்கோல் என்ற அளவுகோல்கள் பயன்படுத்தப்பட்டன. நிலவரி கடமை, காணிக்கடன் ஆகிய பெயர்களில் அழைக்கப்பட்டது.

421). ‘உலகளந்த சோழன்’ என்று புகழப்பட்டவர் யார்?

A) முதலாம் இராஜராஜ சோழன்

B) முதலாம் இராஜேந்திர சோழன்

C) அநபாய சோழன்

D) கரிகாலச் சோழன்

விளக்கம்: சோழர் காலத்தில் நிலங்கள் அளக்கப்பட்டு தரம் வாரியாக வரி விதிக்கப்பட்டது. முதலாம் இராஜராஜ சோழன் நிலம் அளந்து தரம் பிரித்ததால் ‘உலகளந்த சோழன்’ என்று புகழப்பட்டார்.

422) கூற்றுகளை ஆராய்க

1. மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் சீன அரசன் குப்ளய்கானுடன் நட்புறவு கொண்டிருந்தார்.

2. அதன் காரணமாக அவர் கி.பி (பொ.ஆ). 1291-இல் ஒரு தூதுக் குழுவைச் சீனாவிற்கு அனுப்பினர்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் கி.பி (பொ.ஆ). 1281-இல் ஒரு தூதுக் குழுவைச் சீனாவிற்கு அனுப்பினர்.

423) பாண்டியர் காலச் சமய நிலை பற்றிய சரியான கூற்றைத் தேர்வு செய்க.

A) சைவம், வைணவம் போன்ற சமயங்கள் மக்களால் பின்பற்றப்பட்டன

B) இக்காலத்தில்தான் மெய்கண்டதேவர், சிவஞானபோதம் என்ற நூலை எழுதினார்.

C) கி.பி 13-ஆம் நூற்றாண்டில் சைவ சித்தாந்த மடங்கள் ஏற்படுத்தப்பட்டன

D) அனைத்தும் சரி

விளக்கம்: சைவம், வைணவம் போன்ற சமயங்கள் மக்களால் பின்பற்றப்பட்டன.

இக்காலத்தில்தான் மெய்கண்டதேவர், சிவஞானபோதம் என்ற நூலை எழுதினார்.

கி.பி 13-ஆம் நூற்றாண்டில் சைவ சித்தாந்த மடங்கள் ஏற்படுத்தப்பட்டன.

424) திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் சைவ சித்தாந்த நூல்களை ஓதுவதற்காக எத்தனை துறவி ஓதுவார்கள் (தபஸ்விகள்) பாண்டியர் காலத்தில் அமர்த்தப்பட்டனர்?

A) 9

B) 10

C) 11

D) 13

விளக்கம்: பாண்டியர் காலத்தில் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் சைவ சித்தாந்த நூல்களை ஓதுவதற்காக 11 துறவி ஓதுவர்கள் (தபஸ்விகள்) அமர்த்தப்பட்டனர் என்று 2-ஆம் மாறவர்மன் சுந்தர பாண்டியனின் கல்வெட்டு கூறுகிறது.

425) பாண்டியர் காலத்தில் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் சைவ சித்தாந்த நூல்களை ஓதுவதற்காக நியமிக்கப்பட்ட தபஸ்விகள் எந்த மடத்தைச் சார்ந்தவர்கள்?

A) தேவசந்தான மடம்

B) பட்டவீர சந்தான மடம்

C) திருவாரூர் மடம்

D) அனைத்தும்

விளக்கம்: பாண்டியர் காலத்தில் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் சைவ சித்தாந்த நூல்களை ஓதுவதற்காக 11 துறவி ஓதுவர்கள் (தபஸ்விகள்) அமர்த்தப்பட்டனர். இந்த 11 தபஸ்விகளும், தேவசந்தான மடம், பட்டவீர சந்தான மடம், திருவாரூர் மடம், பிட்சாமடம், மதுரை மடம், அழகிய நாயக சந்தான மடம் (நெல்லை) ஆகியவற்றைச் சேர்ந்தவர்களாவர்.

426) பாண்டிய மன்னர்கள் காலத்தில், சுந்தரபாண்டியன் எந்த சமயத்தை ஆதரித்தார்?

A) சைவம்

B) வைணவம்

C) சீக்கியம்

D) சமணம்

விளக்கம்: பாண்டிய மன்னர்கள் காலத்தில் வைணவ சமயமும் சிறப்புப் பெற்றிருந்தது. இவர்களில் சுந்தரபாண்டியன் வைணவ சமயத்தை ஆதரித்தார். இவரது கோயில் திருப்பணிகளை விளக்கும் வகையில் ‘கோயிலொழுகு’ என்ற நூலும் வெளிப்பட்டது. திருவைகுண்டம் என்ற இடத்திலுள்ள பெருமாள் கோயில் கோபுரத்தைச் சுந்தரபாண்டியன் கட்டினார்.

427) திருப்பதியிலுள்ள ஏழுமலையான் கோயிலுக்குப் பொன்னாலான கலகத்தைச் செய்வித்த பாண்டிய மன்னன் யார்?

A) சுந்தரப்பாண்டியன்

B) சடையவர்மன்

C) குலசேகரப்பாண்டியன்

D) விக்கிரம பாண்டியன்

விளக்கம்: திருப்பதியிலுள்ள ஏழுமலையான் கோயிலுக்குப் பொன்னாலான கலகத்தைச் செய்வித்தவர் சுந்தரப்பாண்டியன் ஆவார். சடையவர்மன் குலசேகரப் பாண்டியன், விக்கிரம பாண்டியன், முதலாம் மாறவர்மன் முதலிய மன்னர்களும் வைணவத் திருத்தலங்களுக்கு நிவந்தம் அளித்தனர். அகோபில மடம், வானமாமலை மடம் போன்ற வைணவ மடங்கள் சிறப்புப் பெற்றன.

428) தர்ம கீர்த்தி என்பவர், பாண்டியர் காலத்தைச் சேர்ந்த ________சமய அறிஞர்?

A) சைவம்

B) வைணவம்

C) சமணம்

D) பௌத்தம்

விளக்கம்: தர்மகீர்த்தி என்பவர் பிற்காலப் பாண்டியர் காலத்தில் வாழ்ந்த பௌத்த சமய அறிஞராவார். இதேபோல், சுந்தரபாண்டியன், சடையவர்மன் குலசேகரப் பாண்டியன், விக்கிரம பாண்டியன், முதலாம் மாறவர்மன் முதலிய மன்னர்கள் வைணவ திருத்தலங்களுக்கு நிவந்தம் அளித்தனர்.

429) கூற்றுகளை கவனி.

1. பிற்கால பாண்டியர் காலத்தில், கோயில் கட்டடக்கலையினை விரிவாக்கும் புதிய அமைப்பு முறைகள் தொடங்கின. வெளிப்புறத்தில் உயர்ந்த அளவிலான கோபுரங்கள், கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், சுற்றுப்புறப் பிரகாரங்கள், பல தூண்களைக் கொண்ட மண்டபங்கள் போன்றவை எழுப்பப்பட்டன.

2. இக்காலக் கோயிலின் நுழைவுவாயிலில் உயர்ந்த கோபுரங்களை எழுப்பி, கட்டடக்கலையில், புதிய மாற்றத்தை ஏற்படுத்தினர்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. பிற்கால பாண்டியர் காலத்தில், கோயில் கட்டடக்கலையினை விரிவாக்கும் புதிய அமைப்பு முறைகள் தொடங்கின. வெளிப்புறத்தில் உயர்ந்த அளவிலான கோபுரங்கள், கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், சுற்றுப்புறப் பிரகாரங்கள், பல தூண்களைக் கொண்ட மண்டபங்கள் போன்றவை எழுப்பப்பட்டன.

2. இக்காக் கோயிலின் நுழைவுவாயிலில் உயர்ந்த கோபுரங்களை எழுப்பி, கட்டடக்கலையில், புதிய மாற்றத்தை ஏற்படுத்தினர்

430) எந்தக் கோயில் குலசேகரப் பாண்டியர் காலத்தில் சிறப்படைந்தன?

A) மீனாட்சியம்மன் கோயில்

B) நெல்லையப்பர் கோயில்

C) அழகர் கோயில்

D) அனைத்தும்

விளக்கம்: பிற்காலப் பாண்டியர்கள், சிதம்பரம், ஸ்ரீரங்கம் போன்ற இடங்களிலுள்ள கோயில்களில் துணைக் கோயில்களையும், மண்டபங்களையும், கோபுரங்களையும் கட்டினர். மீனாட்சியம்மன் கோயில், நெல்லையப்பர் கோயில், அழகர் கோயில் போன்றவை குலசேகரப் பாண்டியர் காலத்தில் சிறப்படைந்தன. இவற்றில் அர்த்த மண்டபம், மணிமண்டபம், சன்னதி, முன்கோபுரம் போன்றவை கட்டப்பட்டன.

431) பொருத்துக.

அ. சிதம்பரம் – 1. நெல்லையப்பர் கோவில்

ஆ. மதுரை – 2. நடராஜர் கோயில்

இ. திருநெல்வேலி – 3. அழகர் கோயில்

ஈ. தென்காசி – 4. மீனாட்சியம்மன் கோயில்

A) 4, 3, 2, 1

B) 2, 4, 1, 3

C) 3, 4, 1, 2

D) 2, 4, 3, 1

விளக்கம்: சிதம்பரம் – நடராஜர் கோயில்

மதுரை – மீனாட்சியம்மன் கோயில்

திருநெல்வேலி – நெல்லையப்பர் கோயில்

தென்காசி – அழகர் கோயில்.

432) பிற்காலப் பாண்டியர்களின் இறுதி காலச் சிற்பங்கள் எந்த அரசு காலச் சிற்பங்களுடன் ஒத்திருந்தன?

A) பாமினி அரசு

B) விஜயநகர அரசு

C) மகத அரசு

D) முகலாய அரசு

விளக்கம்: திருப்பரங்குன்றத்தில், காணப்படும் சோமஸ்கந்தர், திருமால், துர்க்கை, கணபதி ஆகியோரின் சிற்பங்களும், நரசிம்மர், வராகர், நடராஜன் போன்றோரின் சிற்பங்களும் முக்கியத்துவம் பெற்றன. மதுரை, திருநெல்வேலி, தென்காசி, சிதம்பரம் போன்ற இடங்களில் உள்ள சிற்பங்களும் சிற்பக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். பிற்காலப் பாண்டியரின் இறுதி காலச் சிற்பங்கள் விஜயநகர அரசு காலச் சிற்பங்களுடன் ஒத்திருந்தன.

433) கூற்றுகளை கவனி.

1. பிற்காலப் பாண்டியர்கள் வார்ப்புக்கலையில் சிறந்து விளங்கினர்.

2. உற்சவ மூர்த்திகள் மற்றும் ஆழ்வார்கள், நாயன்மார்களின் செப்புப்படிமங்கள், சிதம்பரம் நடராசரின் சிலை போன்றவை வார்ப்புக்கலை வளர்ச்சிக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. பிற்காலப் பாண்டியர்கள் வார்ப்புக்கலையில் சிறந்து விளங்கினர்.

2. உற்சவ மூர்த்திகள் மற்றும் ஆழ்வார்கள், நாயன்மார்களின் செப்புப்படிமங்கள், சிதம்பரம் நடராசரின் சிலை போன்றவை வார்ப்புக்கலை வளர்ச்சிக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்

434) நடராஜரின் ‘சதுரத்தாண்டவத் திருக்கோலம்’ எந்தக் கோயிலில் காணப்படுகிறது?

A) சிதம்பரம்

B) திருப்பரங்குன்றம்

C) திருத்தணி

D) A மற்றும் B

விளக்கம்: பிற்காலப் பாண்டியர் காலத்தில் நடனக்கலைஞர்கள் அரண்மனையிலும், தேவரடியார் கோயில்களிலும் நடனம் ஆடினர். நடனக்கலையின் சிறப்பு மற்றும் அதன் வளர்ச்சியைக் கோயில்களில் காணப்படும் நடனச் சிற்பங்கள் மூலம் அறியலாம். சிதம்பரம், திருப்பரங்குன்றம் ஆகிய இடங்களிலுள்ள நடராஜரின் ‘சதுரத்தாண்டவத் திருக்கோலம்’ நடனக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

435) கூற்றுகளை கவனி

1. இசைக்கலை பிற்காலப் பாண்டியர் காலத்தில் முக்கியத்துவம் பெற்றது.

2. வீரத்தளம், மத்தளம், திமிலை, சேமக்கலை, திருச்சின்னம் போன்ற இசைக்கருவிகள் யாவும் கோயிற்சிற்பங்களில் காணப்படுவதின் மூலம் பாண்டியர் இசையைப் போற்றி வளர்த்தனர் என்பதை அறிய முடிகிறது

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. இசைக்கலை பிற்காலப் பாண்டியர் காலத்தில் முக்கியத்துவம் பெற்றது.

2. வீரத்தளம், மத்தளம், திமிலை, சேமக்கலை, திருச்சின்னம் போன்ற இசைக்கருவிகள் யாவும் கோயிற்சிற்பங்களில் காணப்படுவதின் மூலம் பாண்டியர் இசையைப் போற்றி வளர்த்தனர் என்பதை அறிய முடிகிறது.

436) பொருத்துக

அ. அழகிய பாண்டியன் கூடம் – 1. நாடக அரங்கம்

ஆ. கூத்துக்காணி – 2. நாடகத்தில் நடிப்போர்

இ. தலைக்கோல் – 3. ஆடல் மகளிருக்கு வழங்கும் பட்டம்

A) 1, 2, 3

B) 3, 2, 1

C) 1, 3, 2

D) 2, 3, 1

விளக்கம்: அழகிய பாண்டியன் கூடம் – நாடக அரங்கம்

கூத்துக்காணி – நாடகத்தில் நடிப்போர்

தலைக்கோல் – ஆடல் மகளிருக்கு வழங்கும் பட்டம்

437) பிற்காலப் பாண்டியர் காலத்தில் எத்தனை வகை கூத்துக்கள் இருந்தன என ஆத்தூர் கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: பாண்டிய மன்னர்கள் நாடக்கலையைப் போற்றி வளர்த்தனர். கோயில்களில் நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. “சாந்திக்கூத்து”, “வினோதக்கூத்து” என இரு வகைக் கூத்துக்கள் இருந்தன என்று ஆத்தூர் கோயில் கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

438) இந்தியப் பண்பாட்டிற்குப் பிற்காலப் பாண்டியரின் கொடை என்ன?

A) கோபுர கட்டடக்கலையில் புதிய மாற்றங்களைக் கொண்டுவந்தனர்

B) கல்விச் சாலையில் இலவச உணவுடன் மாணவர்களுக்கு அரசு நிர்வாகப் பயிற்சி அளித்தனர்.

C) சரஸ்வதி பண்டாரம் போன்ற நூலங்கள் ஏற்படுத்தப்பட்டதன் மூலம் வேதங்கள், புராணங்கள் பயிற்றுவிக்கப்பட்டு, இந்தியப் பண்பாட்டு வளர்ச்சிக்குப் பெரிதும் துணை புரிகின்றன

D) அனைத்தும் சரி

விளக்கம்: கோபுரம் கட்டடக்கலையில் புதிய மாற்றங்களைக் கொண்டுவந்தனர்

கல்விச் சாலையில் இலவச உணவுடன் மாணவர்களுக்கு அரசு நிர்வாகப் பயிற்சி அளித்தனர்.

சரஸ்வதி பண்டாரம் போன்ற நூலகஙகள் ஏறு;படுத்தப்பட்டதன் மூலம் வேதங்கள்;, புராணங்கள் பயிற்றுவிக்கப்பபட்டு, இந்தியப் பண்பாட்டு, வளர்ச்சிக்குப் பெரிதும் துணை புரிந்தன.

பாண்டியர்கள் காலத்தில் இசை, நடனம், ஓவியம், சிற்பம் போன்ற நுண்கலைகள் வளர்ச்சி பெற்றன.

439) இந்திய வரலாற்றில் யாருடைய தோற்றமும், வளர்ச்சியும் புதிய பரிமாணத்தைக் கொடுத்தது?

A) சேரர்

B) பாண்டியர்

C) சாளுக்கியர்

D) டெல்லி சுல்தானியர்

விளக்கம்: இந்திய வரலாற்றில் டெல்லி சுல்தானியர்களின் தோற்றமும், வளர்ச்சியும் புதிய பரிமாணத்தைக் கொடுத்தது. இம்மாற்றம் இந்திய ஆட்சி முறையில் கலாச்சார மாற்றத்தைக் கொண்டுவந்தது

440) கி.பி 1206 முதல் கி.பி 1526 வரை எத்தனை மரபினர் டெல்லியை ஆட்சி செய்தனர்?

A) 4

B) 5

C) 6

D) 3

விளக்கம்: கி.பி (பொ.ஆ) 1206 முதல் கி.பி (பொ.ஆ) 1526 வரை 5 மரபினர் டெல்லியை ஆட்சி செய்தனர். இவர்களுடைய ஆட்சியில் சமயம் சார்ந்த ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது.

1. அடிமை மரபு

2. கில்ஜி மரபு

3. துக்ளக் மரபு

4. சையது மரபு

5. லோடி மரபு

441) டெல்லி சுல்தானிய ஆட்சியில் நாணயங்களின் இரு பக்கங்களாக திகழ்ந்தவை எவை?

A) சமயம், அரசியல்

B) போர், அரசியல்

C) சமயம், போரிடல்

D) எதுவுமில்லை

விளக்கம்: டெல்லி சுல்தானிய ஆட்சியில் நாணயங்களின் இரு பக்கங்களாக சமயமும், அரசியலும் திகழ்ந்தன. சுல்தான் என்பது, முஸ்லீம் ஆட்சியாளர்கள் சூட்டிக்கொண்ட பட்டப்பெயராகும். இவர்கள் பெயரளவுக்குக் கலிபாவிற்குக் கட்டுப்பட்ட அரசர்களாகத் திகழ்ந்தன.

442) பொருத்துக

அ. அல்பெருனி – 1. தாரிக்-உல்-ஹிந்து

ஆ. ஹாசன் நிசாமி – 2. தாஜ்-உல்-மாசீர்

இ. மின்ஹஜ்-சிராஜ்-உஸ் – 3. தபகத்-இ-நாசீரி

ஈ. அமீர்குஸ்ரு – 4. துக்ளக் நாமா

A) 4, 3, 2, 1

B) 3, 2, 4, 1

C) 1, 2, 3, 4

D) 3, 1, 4, 2

விளக்கம்: அல்பெருனி – தாரிக்-உல்-ஹிந்து

ஹாசன் நிசாமி – தாஜ்-உல்-மாசீர்

மின்ஹஜ்-சிராஜ்-உஸ் – தபகத்-இ-நாசீரி

அமீர்குஸ்ரு – துக்ளக் நாமா

டெல்லி சுல்தானியங்கள் காலத்து இலக்கியங்கள் அக்கால வரலாற்றை அறிய ஆதாரமாக உள்ளன. இவை அக்கால மன்னர்களின் வரிசை, மக்கள் வாழ்க்கை நிலை, பண்பாடு போன்றவை பற்றி அறிய உதவுகின்றன.

443) கூற்றுகளை கவனி

1. இடைக்கால இந்தியாவிற்கு வருகை புரிந்த அயலவர்களின் பயணக்குறிப்புகள், டெல்லி சுல்தானியர்களின் அரசியல் முன்னேற்றம், சமூக பண்பாட்டு வரலாறு பற்றிக் குறிப்பிடுகின்றன.

2. இபின் பதூதாவின் பயணக் குறிப்புகள், டெல்லி மற்றும் மதுரையில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை நிலையினை விளக்குகிறது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. இடைக்கால இந்தியாவிற்கு வருகை புரிந்த அயலவர்களின் பயணக்குறிப்புகள், டெல்லி சுல்தானியர்களின் அரசியல் முன்னேற்றம், சமூக பண்பாட்டு வரலாறு பற்றிக் குறிப்பிடுகின்றன.

2. இபின் பதூதாவின் பயணக் குறிப்புகள், டெல்லி மற்றும் மதுரையில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை நிலையினை விளக்குகிறது.

444) தென்னிந்திய மக்களின் வாழ்க்கை, அவர்களின் நிலை, பண்பாட்டு நிலை ஆகியவற்றைப் பற்றி யாருடைய பயணக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது?

A) இபின் பதூதா

B) அப்துர் ரசாக்

C) நிக்கோலோ கோண்டி

D) பயஸ்

விளக்கம்: ‘அப்துர் ரசாக்’ தன்னுடைய பயணக் குறிப்பில் தென்னிந்திய மக்களின் வாழ்க்கை, அவர்களின் நிலை, பண்பாட்டு நிலை ஆகியவற்றைப் பற்றிக் குறிப்பிடுகிறார். மேலும், மார்க்கோபோலோ, நிக்கோலோ கோண்டி, பார்போசோ, பயஸ் ஆகியோரின் டெல்லி, மதுரை சுல்தானியர் பற்றியக் குறிப்புகளும் குறிப்பிடத்தக்கது.

445) “தமிழ்க் கூடல் நகர்” என அழைக்கப்பட்ட ஊர் எது?

A) முக்கூடல்

B) தஞ்சை

C) மதுரை

D) சிவகாசி

விளக்கம்: “தமிழ்க் கூடல் நகர்” என்று மதுரையைக் குறிப்பிடுவர். இத்தகவலை “சிவகாசி செப்பேடு” குறிப்பிடுகிறது.

446) “சகானா-இ-மண்டி” அங்காடிகளை நிர்வகித்தவர் யார்?

A) அலாவுதீன் கில்ஜி

B) இல்துமிஸ்

C) அமிர்குஸ்ரு

D) இபின் பதூதா

விளக்கம்: அனைத்து அங்காடிகளிலும் ஒரே விலையில் கலப்படமற்ற பொருள்கள் விற்பனை செய்யப்பட்டன. ‘சகானா-இ-மண்டி’ அங்காடிகளை ‘அலாவுதீன் கில்ஜி’ நிர்வகித்தார்.

447) சுல்தான்கள் ஆட்சிப் பிரிவுகளை பற்றியக் கூற்றுகளை ஆராய்க

1. ‘இக்தா’ என்பது ஆட்சியின் முக்கிய பிரிவாக இருந்தது. இக்தா – ஷிக்குகளாக (மாவட்டம்) பிரிக்கப்பட்டன

2. ஷிக்குகளின் தலைவர் – ஷிக்தார் ஆவார்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. ‘இக்தா’ என்பது ஆட்சியின் முக்கிய பிரிவாக இருந்தது. இக்தா – ஷிக்குகளாக (மாவட்டம்) பிரிக்கப்பட்டன.

2. ஷிக்குகளின் தலைவர் – ஷிக்தார் ஆவார்.

448) டெல்லி சுல்தானியரின் ஆட்சிப் பிரிவுகளை இறங்கு வரிசைப்படுத்துக.

A) இக்தா, ஷிக்குகள், பர்கானா, கிராமம்

B) இக்தா, பர்கானா, ஷிக்குகள், கிராமம்

C) பர்கானா, ஷிக்குகள், இக்தா, கிராமம்

D) கிராமம், பர்கானா, ஷிக்குகள், இக்தா

விளக்கம்: இக்தா – ஷிக்குகளாகப் (மாவட்டம்) பிரிப்பு

ஷிக்குகள் – பர்கானா (வட்டம்) –ஆகப் பிரிப்பு

பர்கானா – கிராமங்களாகப் பிரிப்பு

இங்கு இராணுத்துறை அதிகாரி தன் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் சட்டம், ஒழுங்கை நிலை நிறுத்துதல் இவரின் கடமையாகும்.

449) பொருத்துக

அ. நாயிப்-சுல்தான் – 1. செய்தி மற்றும் ஆவணக் காப்பகம்

ஆ. வாசீர் – 2. தலைமைத்தளபதி

இ. அரிஸ்-இ-மாலிக் – 3. நிதி அமைச்சர்

ஈ. திவான் இன்ஷா – 4. சுல்தானுக்கு அடுத்த நிலை

A) 3, 2, 4, 1

B) 1, 4, 3, 2

C) 4, 3, 2, 1

D) 1, 3, 4, 2

விளக்கம்: நாயிப்-சுல்தான் – சுல்தானுக்கு அடுத்த நிலை

வாசீர் – நிதி அமைச்சர்

அரிஸ்-இ-மாலிக் – தலைமைத்தளபதி

திவான் இன்ஷா – செய்தி மற்றும் ஆவணக் காப்பகம்.

சுல்தான் தன் கடமைகளை நிறைவேற்றுவதற்காகவும், அவருக்குத் தக்க ஆலோசனைகளை வழங்கவும் அமைச்சர்கள் துணைபுரிந்தனர்.

450) பொருத்துக

அ. திவானி ரிசாலத் – 1. உளவுத்துறை

ஆ. தலைமை காஸி – 2. சமயத்துறை

இ. பாரித்-ஐ-முமலிக் – 3. நீதித்துறைத் தலைவர்

A) 3, 2, 1

B) 1, 2, 3

C) 2, 3, 1

D) 2, 1, 3

விளக்கம்: திவானி ரிசாலத் – உளவுத்துறை

தலைமை காஸி – சமயத்துறை

பாரித்-ஐ-முமலிக் – நீதித்துறைத் தலைவர்

இவர்களின்றி வேறு பல அதிகாரிகளும் சுல்தானுக்கு உதவியாக இருந்தனர்.

451) பல்லவர் காலத்தில் சிற்றூர்களை ஆட்சி செய்தவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

A) ஊரார்

B) நாட்டார்

C) ஆழ்வார்

D) சிற்றூரார்

விளக்கம்: நாடு – நாட்டார்.

ஊர் – ஊரார்.

சிற்றூர் – ஆழ்வார்.

452) கி.பி.13ஆம் நூற்றாண்டில் எத்தனை வகையான ஆட்சி வகுப்பைச் சேர்ந்த பிரபுக்கள், சுல்தான்கள் காலத்தில் இந்தியாவில் இருந்தனர்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: துருக்கியர், ஐரோப்பியர்கள், அபிசீனியர்கள், எகிப்தியர்கள் ஆகியோர் ஆட்சி வகுப்பினராக இருந்தனர். கி.பி 13-ஆம் நூற்றாண்டில் 3 வகையான ஆட்சி வகுப்பைச் சேர்ந்த பிரபுக்கள் இருந்தனர். அவர்கள்,

1. கான்கள்.

2. மாலிக்குகள்.

3. அமீர்கள்.

453) டெல்லி சுலதான் காலத்தில் பெண்களின் நிலை என்ன?

A) அரச குடும்பத்துப் பெண்களும், உயர் வகுப்பினப் பெண்களும் கல்விகற்று, சில அரசு சலுகைகளுடன் செல்வாக்கு பெற்றிருந்தனர்

B) இஸ்லாமியப் பெண்கள், “பர்தா முறையைப்” பின்பற்றினர். பல பெண்கள் குடிசைத் தொழில்களில் சிறப்புற்றிருந்தனர்.

C) சமுதாயத்தில் கீழ்நிலை மக்கள் கிராமங்களில் கணவருக்குக் கட்டுப்பட்டும், விவசாயத் தொழில்களுக்கு உதவியாகவும் இருந்தனர்.

D) அனைத்தும் சரி

விளக்கம்: அரச குடும்பத்துப் பெண்களும், உயர் வகுப்பினப் பெண்களும் கல்விகற்று, சில அரசு சலுகைகளுடன் செல்வாக்கு பெற்றிருந்தனர்.

இஸ்லாமியப் பெண்கள், “பர்தா முறையைப்” பின்பற்றினர். பல பெண்கள் குடிசைத் தொழில்களில் சிறப்புற்றிருந்தனர்.

சமுதாயத்தில் கீழ்நிலை மக்கள் கிராமங்களில் கணவருக்குக் கட்டுப்பட்டும், விவசாயத் தொழில்களுக்கு உதவியாகவும் இருந்தனர்.

454) யாருடைய பயணக் குறிப்புகள் “ரெகிலா” என்று அழைக்கப்படுகின்றன?

A) யுவான் சுவாங்

B) இபின் பதூதா

C) அமிர்குஸ்ரு

D) மெகஸ்தனிஸ்

விளக்கம்: இபின் பதூதாவின் பயணக் குறிப்புகள் “ரெகிலா” என்று அழைக்கப்படுகிறது. இக்குறிப்புகள் முகமது பின் துக்ளக் கால அரசியல், சமூக, பொருளாதார மற்றும் சமயநிலை பற்றிக் குறிப்பிடுகின்றன

455) சுல்தான் காலத்தில் அதிகாரிகளுக்கு ஊதியத்திற்குப் பதிலாக வழங்கப்பட்ட நிலம் எது?

A) இக்தா

B) கலிகா

C) இனாம்

D) A மற்றும் B

விளக்கம்: சுல்தான் ஆட்சிக்காலத்தில், இக்தா எனப்படும் நிலங்கள் அரசு அதிகாரிகளுக்கு ஊதியம் வழங்குவதற்குப் பதிலாக வழங்கப்பட்டன.

456) சுல்தான் காலத்தில் மைய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள நிலங்கள் எது?

A) இக்தா

B) கலிகா

C) இனாம்

D) A மற்றும் B

விளக்கம்: சுல்தான் ஆட்சியில் நிலம் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டது. அதில் காலிகா என்பது அரச நிலங்களாகும். இது மைய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள நிலங்களாகும்.

457) சுல்தான் காலத்தில் சமய அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட நிலம் எது?

A) இக்தா

B) காலிகா

C) இனாம்

D) A மற்றும் B

விளக்கம்: இக்தா – அரசு அதிகாரிக்கு ஊதியத்திற்குப் பதிலாக வழங்கப்பட்ட நிலம்.

காலிசா – அரச நிலம்.

மரபு வழி ஜமீன்தார் நிலங்கள் – சுல்தானுக்கு கட்டுப்பட்ட நிலங்கள்.

இனாம் – சமய அறக்கட்டளைகளுக்கு வழங்கப்பட்ட நிலங்கள்.

458) அங்காடி சீர்த்திருத்த முறையை அறிமுகப்படுத்தியர் யார்?

A) அலாவுதீன் கில்ஜி

B) இல்துமிஸ்

C) அமீர் குஸ்ரு

D) இபின் பதூதா

விளக்கம்: ‘அலாவுதீன் கில்ஜி’ அங்காடி சீர்திருத்த முறையை அறிமுகப்படுத்தினார். இதன்படி பொருள்கள் நியாமான முறையில் விற்கப்பட்டன. அங்காடி விற்பனையாளர்கள், எடை குறைவாக விற்றாலோ, அதிக விலைக்கு விற்றாலோ கடுமையாக தண்டிக்கப்பட்ட.னர்.

459) டெல்லி சுல்தானியம் பற்றிய கூற்றுகளை ஆராய்க

1. மைய அரசின் தலைவர் ‘சுல்தான்’ ஆவார். இவரிடம் சட்டம், நீதித்துறை, இராணுவத் தலைமை போன்ற அதிகாரங்கள் இருந்தன

2. மைய அரசு, அதிகாரக் குவியல் முறையில் அமைக்கப்பட்டிருக்கும்

A) 1 மட்டும்சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. மைய அரசின் தலைவர் ‘சுல்தான்’ ஆவார். இவரிடம் சட்டம், நீதித்துறை, இராணுவத் தலைமை போன்ற அதிகாரங்கள் இருந்தன

2. மைய அரசு, அதிகாரக் குவியல் முறையில் அமைக்கப்பட்டிருக்கும்

460) தவறானக் கூற்றைத் தெரிவு செய்க.

A) அலாவுதீன் கில்ஜி ‘அங்காடி சீர்திருத்த முறையை’ அறிமுகப்படுத்தினார்

B) அலாவுதீன் கில்ஜி நில மேலாண்மை, நில அளவை மற்றும் நிலவரி வசூல் முறையை ஒழுங்குப்படுத்தினார்

C) முகமது பின் துக்ளக் நிலவரியை அதிகமாக உயர்த்தினார்

D) பெரோஸ் துக்ளக் சாலை வசதிகளைப் பெருக்கினார்.

விளக்கம்: பெரோஸ் துக்ளக் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கி , விவசாய வளர்ச்சிக்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

461) சுல்தான் காலத்தில் முக்கிய தொழில் எது?

A) விவசாயம்

B) முத்துக்குளித்தல்

C) கொள்ளை

D) அனைத்தும்

விளக்கம்: வேளாண்மை முக்கிய தொழிலாக கருதப்பட்டாலும், பிற தொழில்களும் வளர்ச்சியடைந்தன. விலையுயர்ந்த கற்கள் உடைய ஆபரணங்கள் செய்தல், காலிக்கோ அச்சிடுதல், நெசவு, சாயம் தோய்த்தல் போன்ற துணி சார்ந்த தொழில்கள், செம்பு, பித்தளை, இரும்பு போன்ற உலோகம் சம்பந்தப்பட்ட தொழில்கள், தோல் தொழில்கள், கப்பல் கட்டும் தொழில் போன்ற தொழில்களும் வளர்ச்சியடைந்தன.

462) சுல்தான் காலத்தில் முக்கிய வர்த்தக மையமாக விளங்கியது எது?

A) டெல்லி

B) ஆக்ரா

C) சோழ மண்டலம்

D) அனைத்தும்

விளக்கம்: உள்நாட்டு வர்த்தகம் சந்தைகள் மூலம் நடைபெற்றது. அரிசி, சர்க்கரை, வெண்ணெய் போன்ற பொருட்களை சோழ மண்டலத்துக்கு அனுப்பினர். ஆக்ரா முக்கிய வர்த்தக மையமாக விளங்கியது.

463) சுல்தான் கால வாணிகம் பற்றிய கூற்றுகளை ஆராய்க

1. வெளிநாட்டு வாணிகம் வடமேற்குக் கணவாய்கள் மூலம் நடைபெற்றது. லாகூரும், மூல்தானும் வாணிக மையங்களாகத் திகழந்தன.

2. கடல்வழி வாணிகத்தின் மூலம் ஆக்ராவிலிருந்து பல பொருட்கள் உலகின் பல பகுதிகளுக்கு அனுப்பப்பட்டன. காஷ்மீரிலிருந்து குங்குமப்பூ, சால்வை, ஆக்ராவிலிருந்து நீலச்சாயம் போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. வெளிநாட்டு வாணிகம் வடமேற்குக் கணவாய்கள் மூலம் நடைபெற்றது. லாகூரும், மூல்தானும் வாணிக மையங்களாகத் திகழந்தன.

2. கடல்வழி வாணிகத்தின் மூலம் ஆக்ராவிலிருந்து பல பொருட்கள் உலகின் பல பகுதிகளுக்கு அனுப்பப்பட்டன. காஷ்மீரிலிருந்து குங்குமப்பூ, சால்வை, ஆக்ராவிலிருந்து நீலச்சாயம் போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன.

464) சுல்தான் காலத்தில் ‘சந்தைப் பொருளதாரத்தை’ உருவாக்கியவர் யார்?

A) அலாவுதீன் கில்ஜி

B) குத்புதீன் ஐபக்

C) முகமது பின் துக்ளக்

D) பெரோஸ் துக்ளக்

விளக்கம்: அலாவுதீன் கில்ஜி, விவசாய வர்த்தகக் கொள்கை மூலம் விவசாயத்தையும், வர்த்தகத்தையும் நவீனமயமாக்கிச் சந்தைப் பொருளாதாரத்தை உருவாக்கினார்.

465) சுல்தான் காலத்தில் இந்துக்கள் மீது விதிக்கப்பட்ட வரி என்ன?

A) ஜெசியா

B) புஸியா

C) எனம்

D) தினா

விளக்கம்: டெல்லி சுல்தானியர்கள் காலத்தில் இந்து சமுதாயத்தின் மீது, இஸ்லாமிய சமயத்தின் தாக்கம் இருந்தது. இஸ்லாமிய சமயச் சட்டப்படி இந்துக்கள் என்பவர்கள் மாற்று சமயத்தவர்கள். இந்துக்கள் மீது ஜெசியா (சமய வரி) என்ற வரி விதிக்கப்பட்டது. இதனால் இந்துக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். பெரோஸ்-துக்ளக், சிக்கந்தர் லோடி போன்றோர் மதமாற்றத்தை வெகுவாக ஊக்குவித்தனர்.

466) சுல்தான்களின் காலத்தில் இலக்கியங்கள் பற்றிய சரியானக் கூற்றை தெரிவு செய்க

A) சுல்தான்களின் ஆட்சிக்காலத்தில் அரசாங்க உதவியுடன், கவிதை, உரைநடை, இலக்கியம் போன்றவை வளர்ச்சி பெற்றன.

B) குறிப்பாக வரலாறு சார்ந்த இலக்கியத்திற்குச் சிறப்பிடம் அளிக்கப்பட்டது. டெல்லி சுல்தான்கள், தத்துவம், நாடகம், மருத்துவம், ஜோதிடம் பற்றிய நூல்கள் எழுதப்படுவதை ஆதரித்தனர்.

C) இந்தி, வங்காளம், மராத்தி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் பிராந்திய இலக்கியங்களும் இயற்றப்பட்டன.

D) அனைத்தும் சரி

விளக்கம்: சுல்தான்களின் ஆட்சிக்காலத்தில் அரசாங்க உதவியுடன், கவிதை, உரைநடை, இலக்கியம் போன்றவை வளர்ச்சி பெற்றன.

குறிப்பாக வரலாறு சார்ந்த இலக்கியத்திpற்குச் சிறப்பிடம் அளிக்கப்பட்டது. டெல்லி சுல்தான்கள், தத்துவம், நாடகம், மருத்துவம், ஜோதிடம் பற்றிய நூல்கள் எழுதப்படுவதை ஆதரித்தனர்.

இந்தி, வங்காளம், மராத்தி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் பிராந்திய இலக்கியங்களும் இயற்றப்பட்டன.

467) அமிர்குஸ்ரு பற்றிய தவறானக் கூற்றை தெரிவு செய்க.

A) அபுல் ஹாசன் யாமினித் குஸ்ரு என்பது இவர் இயற்பெயர்

B) இவர் மிகச்சிறந்த கவிஞராகவும், இசை வல்லுநராகவும் திகழ்ந்தவர்

C) இவர் பாலி மொழிக் கவிஞராகத் திகழ்ந்தவர்

D) இவர் எழுதிய பாரசீக மொழி கவிதை ‘கஜல்’ என்ற புதிய இசை தொடங்குவதற்கு வழிகோலியது

விளக்கம்: அமீர்குஸ்ரு பாரசீக மொழிக் கவிஞராகத் திகழ்ந்தார்.

468) “தாரிக்-.-அலாய்” என்னும் நூல் யாரைப் பற்றி அமிர்குஸ்ரு எழுதிய நூலாகும்?

A) குத்புதீன் துக்ளக்

B) அலாவுதீன் கில்ஜி

C) இபின் பதூதா

D) முகமது பின் துக்ளக்

விளக்கம்: அலாவுதீன் கில்ஜி பற்றி அமிர் குஸ்ரு எழுதிய “தாரிக்-இ-அலாய்” என்னும் நூல் மிகச் சிறந்த நூலாகும். இந்நூல் அலாவுதீனைப் பற்றிய செய்திகள், அங்காடி சீர்த்திருத்தங்கள் நிர்வாகத் திறன் மக்களின் வாழ்க்கைநிலை பற்றி குறிப்பிடுகின்றது.

469) இபின் பதூதா யாருடைய காலத்தில் இந்தியாவிற்கு வருகைப் புரிந்தார?

A) குத்புதீன் ஐபக்

B) அலாவுதீன் கில்ஜி

C) பெரோஸ் துக்ளக்

D) முகமது பின் துக்ளக்

விளக்கம்: அபு அப்துல்லா முகமது இபின் பதூதா என்ற இயற்பெயர் கொண்ட இவர், முகமது பின் துக்ளக் காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்தார்.

470) சுல்தான்களின் ஆட்சிக் காலத்தில் நிலம் எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: சுல்தான்களின் ஆட்சிக் காலத்தில் நான்கு பிரிவுகளாக நிலம் பிரிக்கப்பட்டது. அவை,

1. இக்தா.

2. காலிசா.

3. மரபுவழி ஜமீன்தார் நிலங்கள்.

4. இனாம்.

471) இபின் பதூதாவின் குறிப்புகள் பற்றிய சரியானக் கூற்றைத் தெரிவு செய்க

A) முகமது பின் துக்ளக் காலத்தில் தினமும் சிலர் கைகால்களில் விலங்கிட்டு அவைக்குக் கொண்டு வரப்படுதல், துன்புறுத்தப்படுதல் போன்றவை நடைபெற்றதாக இவர் குறிப்பிடுகிறார்.

B) இந்தியாவில் காணப்பட்ட பல்வேறு பழக்கங்கள், புது வழக்காறுகள் பற்றியும் குறிப்பிடுகிறார்.

C) சதி எனும் உடன்கட்டை ஏறும் வழக்கம் இந்துக்களிடையே காணப்பட்டதை விளக்குகிறார். மேலும் கடிதங்களை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டு சென்ற ஓட்டக்காரர்களைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.

D) அனைத்தும் சரி

விளக்கம்: முகமது பின் துக்ளக் காலத்தில் தினமும் சிலர் கைகால்களில் விலங்கிட்டு அவைக்குக் கொண்டு வரப்படுதல், துன்புறுத்தப்படுதல் போன்றவை நடைபெற்றதாக இவர் குறிப்பிடுகிறார். இந்தியாவில் காணப்பட்ட பல்வேறு பழக்கங்கள், புது வழக்காறுகள் பற்றியும் குறிப்பிடுகிறார். சதி எனும் உடன்கட்டை ஏறும் வழக்கம் இந்துக்களிடையே காணப்பட்டதை விளக்குகிறார். மேலும் கடிதங்களை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டு சென்ற ஓட்டக்காரர்களைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.

472) கூற்றுகளை ஆராய்க.

1. செருகேடுகள் (ஆல்பம்) தயாரிக்கும் முறையும் முகலாயர் காலத்தில் உருவாக்கப்பட்டன.

2. ஓவியக்கலையின் மீதுள்ள ஆர்வத்தால் பாரசீகத்திலிருந்து மீர்சையது அலி, அப்துல் சமது ஆகிய இரு ஓவியர்களை ஹீமாயூன் அழைத்து வந்தார். இவ்விருவரும் அக்பர் காலத்தில் புகழ் பெற்றனர்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. செருகேடுகள் (ஆல்பம்) தயாரிக்கும் முறையும் முகலாயர் காலத்தில் உருவாக்கப்பட்டன. 2. ஓவியக்கலையின் மீதுள்ள ஆர்வத்தால் பாரசீகத்திலிருந்து மீர்சையது அலி, அப்துல் சமது ஆகிய இரு ஓவியர்களை ஹீமாயூன் அழைத்து வந்தார். இவ்விருவரும் அக்பர் காலத்தில் புகழ் பெற்றனர்.

473) இந்தியக் கலையில் இஸ்லாமிய கலை கலந்தமைக்கு காரணம் என்ன?

A) துருக்கியர்கள் இந்தியக் கைவினைஞர்களையும் தக்கர்களையும் பயன்படுத்தினர்

B) இந்துக்கள் மற்றும் சமணர்களின் கோயில்களை அழித்து அவற்றின் கட்டிடங்களின் மீது பல கட்டிடங்களைக் கட்டினர்.

C) சில இந்துக்கோயில்களை மசூதிகளாக மாற்றினர். எனவே, சுல்தான்கள் கலைபாணியில் இந்தியக் கலைபாணியைக் காணமுடிகிறது

D) அனைத்தும் சரி

விளக்கம்: துருக்கியர்கள் இந்தியக் கைவினைஞர்களையும் தக்கர்களையும் பயன்படுத்தினர். இந்துக்கள் மற்றும் சமணர்களின் கோயில்களை அழித்து அவற்றின் கட்டிடங்களின் மீது பல கட்டிடங்களைக் கட்டினர். சில இந்துக்கோயில்களை மசூதிகளாக மாற்றினர். எனவே, சுல்தான்கள் கலைபாணியில் இந்தியக் கலைபாணியைக் காணமுடிகிறது.

474) சுல்தானியர் கால கட்டடங்களின் சிறப்பம்சங்கள் என்ன?

A) தூண்கள், உயர்மாடிகள், மலர் வேலைப்பாடுகள் ஏராளமாக இருந்தன.

B) முகடுகள் உயரமாகவும், சமமான அளவிலும் அமைக்கப்பட்டன.

C) முன் சுவர்கள் தாழ்வாகவும் பின்னால் உள்ள கட்டடங்களுக்குப் பொருத்தமாகவும் அமைந்திருக்கின்றன

D) அனைத்தும் சரி

விளக்கம்: தூண்கள், உயர்மாடிகள், மலர் வேலைப்பாடுகள் ஏராளமாக இருந்தன. முகடுகள் உயரமாகவும், சமமான அளவிலும் அமைக்கப்பட்டன. முன் சுவர்கள் தாழ்வாகவும் பின்னால் உள்ள கட்டடங்களுக்குப் பொருத்தமாகவும் அமைந்திருக்கின்றன. மேலும், பிரம்மாண்டமான வளைவுகள் இவர்கள் காலத்தில் கலை நுட்பத்துடன் எழுப்பப்பட்டன.

475) கூற்றுகளை கவனி.

1. பள்ளிவாயில்களில் தொழுகைக்குக் கூவி அழைப்பவர்கள் ‘மினார்’

2. பள்ளிவாயில் அருகிலுள்ள உயர்ந்த கோபுரங்கள் ‘மூயாசின்’.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: பள்ளிவாயில்களில் தொழுகைக்கு கூவி அழைப்பவர்கள் ‘மூயாசின்’ என்று பெயர். இவர்கள் பள்ளிவாயில் அருகில் இருந்த உயர்ந்த கோபுரங்களிலிருந்து கூவி அழைத்தனர். இந்த உயர்ந்த கோபுரங்கள் ‘மினார்’ என்பர். இக்கட்டத்திற்குக் கலையழகு கூட்ட வாயிலில் இருமருங்கிலும் இரு கோபுரங்கள் அமைத்தனர்

476) குதுப்மினார் யாருடைய காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது?

A) குத்புதீன் ஐபக்

B) முகமது பின் துக்ளக்

C) பெரோஸா துக்ளக்

D) இல்துமிஷ்

விளக்கம்: டெல்லியிலுள்ள குதுப்மினார் குத்புதீன் ஐபக் காலத்தில் கட்டத் தொடங்கப்பட்டு, ‘இல்துமிஷ்’ காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது. இது சிவந்த மணற் கற்களால் கட்டப்பட்டது.

477) குதுப்மினாரின் உயரம் என்ன?

A) 242 அடி

B) 272 அடி

C) 232 அடி

D) 292 அடி

விளக்கம்: டெல்லியிலுள்ள குதுப்மினாரின் உயரம் 232 அடியாகும். இதில் குரானிலுள்ள இறைவசனங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

478) குதுப்மினார் எப்போது உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது?

A) 1989

B) 1990

C) 1993

D) 1997

விளக்கம்: குதுப்பினார், யுனெஸ்கோவினால் கி.பி. (பொ.ஆ) 1993-இல் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.

479) “அலாய் தர்வாசா” என்ற கட்டிடம் யாருடைய காலத்தில் கட்டப்பட்டது?

A) முகமது பின் துக்ளக்

B) அலாவுதீன் கில்ஜி

C) பெரோஸ் துக்ளக்

D) முகமது கோரி

விளக்கம்: அலாவுதீன் கில்ஜி காலத்தில் கட்டப்பட்டவையாகும். இது செல்சக் – துருக்கியர் கலைப்பாணியில் கட்டப்பட்டவையாகும். மிக உயரமான மேடையிலிருந்து செம்மணற் கற்களாலும், வெள்ளைச் சலவை கற்களாலும், உருவாக்கப்பட்ட இக்கட்டடம் அருகில் காணும்போது வண்ணங்களின் கோப்புகளாகக் காணப்படுகிறது.

480) “நீர்ப்பாசனத்தின் தந்தை” என அழைக்கப்பட்டவர் யார்?

A) முகமது பின் துக்ளக்

B) அலாவுதீன் கில்ஜி

C) பெரோஸ் துக்ளக்

D) முகமது கோரி

விளக்கம்: முகமது பின் துக்ளக்கிற்குப் பின் வந்த பிரோஸ் துக்ளக் கட்டப்பிரியர், கட்டடக்கலைவேந்தர். இவர் 1200 மலர்வனங்களை டில்லியைச் சுற்றி அமைத்தார். இவரை பூங்கா பிரியர், நீர்ப்பாசனத்ததின் தந்தை என்றழைப்பர். பிரோஷா துக்ளக் “பிரோஷாபாத்” என்னும் நகரை அமைத்தார். இந்நகருக்குள் “பிரோஸ் ஷா கோட்லா” என்னும் அரண்மனைக் கோட்டை உள்ளது.

481) ‘வராகன்’ என்ற தங்கநாணயத்தை அகதிகளவில் வெளியிட்டவர்கள் யார்?

A) மௌரியப் பேரரசு

B) குப்தப்பேரரசு

C) பாமினி பேரரசு

D) விஜயநகரப் பேரரசு

விளக்கம்: விஜயநகர அரசர்கள் ‘வராகன்’ என்ற தங்கநாணயத்தை அதிகளவில் வெளியிட்டனர். தங்கத்தாலான இந்நாணயங்களில் இந்து தெய்வ உருவமும், காளை, யானை, காண்டபெருண்டா என்ற கற்பனை பறவையும் இடம்பெற்றிருந்தன. மேலும் ‘பக்கோடா’ என்ற நாணயமும் புழக்கத்தலிருந்தது.

482) இந்தியப் பண்பாட்டிற்கு டெல்லி சுல்தானியர்களின் பங்களிப்பு என்ன?

A) இந்தியாவில் திராவிட கலைபாணி வளர்ச்சி குறைந்து இந்தோ-அராபிக் கலை வளர்ச்சி பெற்றது

B) வேளாண்மை முறையை மேம்படுத்த முகமது-பின்-துக்ளக் ஏற்படுத்திய துறை ‘திவான்-இ-கோஹி’ ஆகும்.

C) டெல்லியிலுள்ள பிரோஸா கோட்லா மைதானம், ஆக்ரா நகரம் மற்றும் அழகிய பூங்காக்கள் இவர்கள் காலத்திற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

D) அனைத்தும் சரி

விளக்கம்: இந்தியாவில் திராவிட கலைபாணி வளர்ச்சி குறைந்து இந்தோ-அராபிக் கலை வளர்ச்சி பெற்றது. வேளாண்மை முறையை மேம்படுத்த முகமது-பின்-துக்ளக் ஏற்படுத்திய துறை ‘திவான்-இ-கோஹி’ ஆகும்.

டெல்லியிலுள்ள பிரோஸா கோட்லா மைதானம் ஆக்ரா நகரம் மற்றும் அழகிய பூங்காக்கள் இவர்கள் காலத்திற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

483) ‘தாக்’ என்ற குதிரைக்குச் சூடுபோடும் முறை யாருடைய காலத்தில் இருந்தது?

A) முகமது பின் துக்ளக்

B) அலாவுதீன் கில்ஜி

C) பெரோஸ் துக்ளக்

D) முகமது கோரி

விளக்கம்: அலாவுதீன் கில்ஜியின் காலத்தில் ‘தாக்’ என்ற குதிரைகளுக்குச் சூடுபோடும் முறை (அரச விலங்கு என்பதற்கு அடையாளமாக), அங்காடி சீர்திருத்தமும், மிகச் சிறந்த கொடையாகும்.

484) இந்தியப் பண்பாட்டிற்கு டெல்லி சுல்தானியர்களின் பங்களிப்பு என்ன?

A) பிரோஷ் துக்ளக் ஆட்சிக் காலத்தில் வேலைவாய்ப்பு அலுவலகம் உருவாக்கப்பட்டது

B) பிரோஷ் துக்ளக் காலத்தில் அனாதை மற்றும் கைம்பெண்களுக்கு நல வாழ்வுத் துறை (திவானி கெய்ரத்) உருவாக்கப்பட்டது

C) டெல்லி சுல்தானியர் ஆட்சியில் பெண் அரசாள்வது (ரஷியா சுல்தானா) இந்து, இஸ்லாமிய ஆட்சி மரபில் மாற்றத்தை உருவாக்கின.

D) அனைத்தும்

விளக்கம்: பிரோஷ் துக்ளக் ஆட்சிக் காலத்தில் வேலைவாய்ப்பு அலுவலகம் உருவாக்கப்பட்டது

பிரோஷ் துக்ளக் காலத்தில் அனாதை மற்றும் கைம்பெண்களுக்கு நல வாழ்வுத் துறை (திவானி கெய்ரத்) உருவாக்கப்பட்டது

டெல்லி சுல்தானியர் ஆட்சியில் பெண் அரசாள்வது (ரஷியா சுல்தானா) இந்து, இஸ்லாமிய ஆட்சி மரபில் மாற்றத்தை உருவாக்கின.

485) விஜயநகரப் பேரரசை உருவாக்கியது யார்?

A) ஹரிஹரர்

B) புக்கர்

C) மாதவ வித்யாரண்யர்

D) A மற்றும் B

விளக்கம்: ஹரிஹரர், புக்கர் என்ற இரு சகோதரர்கள் ‘மாதவ வித்யாரண்யர்’ என்பவரின் உதவிகொண்டு 1336-ல் துங்கபத்திரா நதிக்கரையில் விஜயநகரப் பேரரசை உருவாக்கினார்கள். இப்பேரரசு சுமார் 4 நூற்றாண்டுக் காலம் தென்னக வரலாற்றில் பெரும் சாதனைகளைப் புரிந்தது எனலாம்.

486) இன்றைய கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூர் பகுதியை ஆட்சி செய்தவர் யார்?

A) இராஷ்டிரகூடர்

B) ஹொய்சாளர்கள்

C) மௌரியர்

D) சாளுக்கியர்

விளக்கம்: இன்றைய கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூர் பகுதியை ஆட்சி செய்தவர்கள் ஹொய்சாளர்கள் ஆவர். இவர்களுடைய தலைநகரம் முதலில் சோசவூரிலும் பின் ஹளபேட்டுக்கும் மாற்றப்பட்டது.

487) பெரிஸ்டாவின் கூற்றுகளை ஆராய்க

1. 3-ஆம் வல்லாளதேவன் தம் நாட்டின் வடக்கு எல்லையை இஸ்லாமிய படையெடுப்புகளின்றிக் காப்பதற்குத் துங்கபத்திரை நதியின் தென்கரையில் தம்முடைய மகன் வீரவிஜயவல்லாளின் பெயரில் விஜயநகரத்தை அமைத்தார்

2. இந்நகரமே பிற்காலத்தில், விருபாட்சபுரம், ஹோசப்பட்டணம், வித்திய நகரம், விஜய நரகரம் என அழைக்கப்படுகிறது

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. 3-ஆம் வல்லாளதேவன் தம் நாட்டின் வடக்கு எல்லையை இஸ்லாமிய படையெடுப்புகளின்றிக் காப்பதற்குத் துங்கபத்திரை நதியின் தென்கரையில் தம்முடைய மகன் வீரவிஜயவல்லாளின் பெயரில் விஜயநகரத்தை அமைத்தார்.

2. இந்நகரமே பிற்காலத்தில், விருபாட்சபுரம், ஹோசப்பட்டணம், வித்திய நகரம். விஜய நரகரம் என அழைக்கப்படுகிறது.

488) பொருத்துக

அ. கிருஷ்ணதேவராயர் – 1. மனுசரிதம்

ஆ. கங்காதேவி – 2. ஆமுக்தமால்யதம்

இ. அல்லசானி பெத்தண்ணா – 3. மதுரா விஜயம்

A) 3, 2, 1

B) 1, 3, 2

C) 2, 3, 1

D) 2, 1, 3

விளக்கம்: விஜய நகர கால இலக்கியச் சான்றுகள் வடமொழி, தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் காணப்படுகின்றன. கிருஷ்ணதேவராயரின் ஆமுக்தமால்யதம், கங்காதேவி எழுதிய மதுரவிஜயம், அல்லசானி பெத்தண்ணாவின் மனுசரிதம் போன்றவை விஜயநகரப் பேரரசைப் பற்றிய அறிவதற்கான முக்கியச் சான்றுகளாகும்.

489) ‘விருபாஷர் கோயில்’ எங்குள்ளது?

A) தும்பா

B) மதுரா

C) ஹம்பி

D) செஞ்சி

விளக்கம்: விஜயநகர ஆட்சிகாலத்தைப் பற்றி அறிய, ஹம்பியிலுள்ள விருபாஷர் கோயில், பெனுகொண்டா, சந்திரகிரி, வேலூர், செஞ்சி ஆகிய இடங்களில் காணப்படும் கோட்டைகளும், திருவண்ணாமலை, சிதம்பரம், மதுரை, திருப்பதி போன்ற இடங்களில் காணப்படும் கோபுரங்களும் முக்கிய தொல்பொருள் சான்றுகளாகத் திகழ்கின்றன.

490) பொருத்துக

அ. மொராக்கோ நாடு – 1. இபின் பதூதா

ஆ. வெனஷ் நாடு – 2. நிக்கோலோ கோண்டி

இ. பாரசீகம் – 3. அப்துர் ரசாக்

A) 1, 2, 3

B) 3, 2, 1

C) 2, 3, 1

D) 1, 3, ;

விளக்கம்: மொராக்கோ நாடு – இபின் பதூதா

வெனஷ் நாடு – நிக்கோலோ கோண்டி

பாரசீகம் – அப்துர் ரசாக்

இவர்கள் போன்ற பயணிகள் விஜயநகர காலச் சமூக, பொருளாதார நிலையைப் பற்றி தங்களது பயணக்குறிப்புகளில் விவரித்துள்ளனர்.

491) விஜயநகரம் பற்றிய சரியானக் கூற்றைத் தெரிவு செய்க

A) விஜயநகரப் பேரரசின் கீழ் ஆட்சித்துறை நன்கு சீரமைக்கப்பட்டது.

B) வாரிசுரிமை நிர்வாகம், நீதி, சட்டம் ஆகியவற்றில் அரசர் முழு ஆதிகாரம் பெற்று விளங்கினார்

C) பரம்பரை வழக்கத்திலிருந்து, சில சமயம் அரியணையைக் கைப்பற்றிக் கொள்ளும் வழக்கமும் இருந்தது.

D) அனைத்தும் சரி

விளக்கம்: விஜயநகரப் பேரரசின் கீழ் ஆட்சித்துறை நன்கு சீரமைக்கப்பட்டது

வாரிசுரிமை நிர்வாகம், நீதி, சட்டம் ஆகியவற்றில் அரசர் முழு ஆதிகாரம் பெற்று விளங்கினார்

பரம்பரை வழக்கத்திலிருந்து, சில சமயம் அரியணையைக் கைப்பற்றிக் கொள்ளும் வழக்கமும் இருந்தது.

492) கூற்றுகளை ஆராய்க.

1. விஜயநகர பேரரசு பல மண்டலங்களாகவும், மண்டலங்கள் பல நாடுகளாகவும், நாடு ஸ்தலங்களாகவும், ஸ்தலம் பல கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தது

2. ஒவ்வொரு மண்டலமும் ‘மண்டலேஸ்வரர்’ என்ற ஆளுநரின் கீழ் செயல்பட்டது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. விஜயநகர பேரரசு பல மண்டலங்களாகவும், மண்டலங்கள் பல நாடுகளாகவும், நாடு ஸ்தலங்களாகவும், ஸ்தலம் பல கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தது

2. ஒவ்வொரு மண்டலமும் ‘மண்டலேஸ்வரர்’ என்ற ஆளுநரின் கீழ் செயல்பட்டது.

493) விஜயநகர பேரரசின் சமூகத்தில் எத்தனை பிரிவுகள் இருந்தன?

A) 2

B) 3

C) 4

D) 6

விளக்கம்: சமூகத்தில் பிராமணர், சத்ரியர், வைசியர், சூத்திரர் என்ற 4 பிரிவுகள் இருந்ததாக அல்லசானி பெத்தண்ணா தனது மனுசரிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பட்டு, பருத்தி ஆடைகளை மக்கள் அணிந்தனர். நடனம், இசை, மல்யுத்தம், சூதாட்டம், சேவல் சண்டை போன்றவை இவர்களது பொழுதுபோக்குகளாகும்.

494) விஜயநகரப் பேரரசில் மக்கள் சமயச் சுதந்திரம் பெற்று திகழ்ந்தனர் எனக் கூறும் போர்ச்சுகீசியப் பயணி யார்?

A) மார்க்கோபோலோ

B) பார்போசா

C) பார்த்தலோமியாடயஸ்

D) நூனிஸ்

விளக்கம்: சங்கம மரபினர் சைவர்களாகத் திகழ்ந்தனர். விருப்பாஷர் அவர்களின் குலதெய்வம். மற்ற மரபைச் சேர்ந்தவர்கள் வைணவர்கள். எல்லா அரசர்களும் பிற சமயங்கள் மீது சகிப்புத்தன்மையுடன் நடந்துக் கொண்டனர். மக்கள் அனைவரும் சமயச் சுதந்திரம் பெற்று திகழ்ந்தனர் என போர்ச்சுக்கீசியப் பயணி பார்போசா குறிப்பிடுகிறார்.

495) விஜயநகரப் பேரரசுக் காலத்தில் மகளிரின் நிலைப் பற்றிய சரியானக் கூற்றை தெரிவு செய்க

A) பெண்கள் பழைமையில் அதிக நம்பிக்கை கொண்டிருந்தனர். அரசகுலப்பெண்கள் கல்வியிற் சிறந்து விளங்கினர்.

B) குமாரகம்பணரின் மனைவி கங்காதேவி மற்றும் ஹன்னம்மா, திருமலம்மா ஆகியோர் அக்காலத்தில் புகழ் வாய்ந்த பெண்பாற் புலவர்கள் ஆவர்.

C) ஆலயங்களுக்குச் சேவை செய்ய மகளிர் இருந்தனர். தேவதாசிமுறை வழக்கிலிருந்ததாகவும், அரசகுடும்பங்களில் பலதாரமணம் வழக்கத்திலிருந்ததாகவும், சதி வழக்கம் பெருமையாக கருதப்பட்டதாகவும் போர்ச்சுகீசியப் பயணி நூனிஸ் விளக்கமாக கூறியுள்ளார்.

D) அனைத்தும்

விளக்கம்: பெண்கள் பழைமையில் அதிக நம்பிககை கொண்டிருந்தனர். அரசகுலப்பெண்கள் கல்வியிற் சிறந்து விளங்கினர். குமாரகம்பணரின் மனைவி கங்காதேவி மற்றும் ஹன்னம்மா, திருமலம்மா ஆகியோர் அக்காலத்தில் புகழ் வாய்ந்த பெண்பாற் புலவர்கள் ஆவர். ஆலயங்களுக்குச் சேவை செய்ய மகளிர் இருந்தனர். தேவதாசிமுறை வழக்கிலிருந்ததாகவும், அரசகுடும்பங்களில் பலதாரமணம் வழக்கத்திலிருந்ததாகவும், சதி வழக்கம் பெருமையாக கருதப்பட்டதாகவும் போர்ச்சுகீசியப் பயணி நூனிஸ் விளக்கமாக கூறியுள்ளார்.

496) விஜயநகரப் பேரரசு பற்றிய கூற்றுகளை ஆராய்க

1. விஜயநகர அரச சின்னம் ‘வராகன்’ ஆகும். வராகன் என்பது திருமாலின் வராக அவதாரத்தை குறிப்பிடும் வகையில் இவர்களால் பின்பற்றப்பட்ட அரச சின்னமாகும்.

2. இம்மனர்களில் பெரும்பாலனோர் வைணவர்களாவர்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. விஜயநகர அரச சின்னம் ‘வராகன்’ ஆகும். வராகன் என்பது திருமாலின் வராக அவதாரத்தை குறிப்பிடும் வகையில் இவர்களால் பின்பற்றப்பட்ட அரச சின்னமாகும்.

2. இம்மனர்களில் பெரும்பாலனோர் வைணவர்களாவர்.

497) இந்தியப் பண்பாட்டிற்கு டெல்லி சுல்தானியத்தின் பங்களிப்பு என்ன?

A) அமிர் குஸ்ரு ‘கவாலி’ என்ற இசை பாணியில் சித்தார். காயல் போன்ற இசைக்கருவிகளைக் கண்டறிந்தார். இந்தோ-அரேபிய சங்கீதக் கலைகள் ஒன்றுபட்டு “இந்துஸ்தானி” என்ற சங்கீதமாகப் புது வடிவம் பெற்றது.

B) டெல்லி சுல்தான் காலத்தில் கோரா, சானம் போன்ற புதிய ராகங்களையும், இந்து மற்றும் ஈரானிய முறைகளை ஒன்றிணைத்து ‘குவாலிஸ்’ என்ற புதிய வகை மெல்லிசைகளும் உருவாக்கப்பட்டது.

C) பிரோஸ் துக்ளக் ஆட்சிக் காலத்தில் ‘ராகதர்பன்’ என்ற இந்திய இசை நூல் பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டது.

D) அனைத்தும்

விளக்கம்: அமிர் குஸ்ரு ‘கவாலி’ என்ற இசை பாணியில் சித்தார். காயல் போன்ற இசைக்கருவிகளைக் கண்டறிந்தார். இந்தோ-அரேபிய சங்கீதக் கலைகள் ஒன்றுபட்டு “இந்துஸ்தானி” என்ற சங்கீதமாகப் புது வடிவம் பெற்றது. டெல்லி சுல்தான் காலத்தில் கோரா, சானம் போன்ற புதிய ராகங்களையும், இந்து மற்றும் ஈரானிய முறைகளை ஒன்றிணைத்து ‘குவாலிஸ்’ என்ற புதிய வகை மெல்லிசைகளும் உருவாக்கப்பட்டது.

பிரோஸ் துக்ளக் ஆட்சிக் காலத்தில் ‘ராகதர்பன்’ என்ற இந்திய இசை நூல் பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டது.

498) விஜயநகரப் பேரரசு பற்றிய தவறானக் கூற்றைத் தெரிவு செய்க

A) வேளாண்மையே நாட்டின் முக்கிய தொழிலாகக் கருதப்பட்டன. நீர்ப்பாசனத்தைப் பெருக்க ஏரிகள், கால்வாய்கள், துங்கப்பத்திரா ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் அமைக்கப்பட்டன.

B) பல்வேறு தொழில்கள் சிறந்து விளங்கின. நில வருவாய்த் துறை ‘அதவானே’ என்று அழைக்கப்பட்டது.

C) கர்நூல், அனந்தப்பூர் மாவட்டங்களில் வைரச் சுரங்கங்கள் இருந்தன

D) இவர்களது தங்க நாணயங்களில் சைவச் சமயச் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

விளக்கம்: தங்க நாணயங்களில் வைணவச் சமயச் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

499) கூற்றுகளை ஆராய்க.

1. விஜயநகரம் புகழ்மிக்க ஒரு வர்த்தக மையமாகத் திகழ்ந்தது. தங்க நாணயம் ‘வராகன்’ என்றழைக்கப்பட்டது.

2. இந்நாணயங்களில் கன்னட, தேவநாகிரி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. வைணவச் சமயச்சின்னங்களும் பொறிக்கப்பட்டிருந்தன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும தவறு

விளக்கம்: 1. விஜயநகரம் புகழ்மிக்க ஒரு வர்த்தக மையமாகத் திகழ்ந்தது. தங்க நாணயம் ‘வராகன்’ என்றழைக்கப்பட்டது.

2. இந்நாணயங்களில் கன்னட, தேவநாகிரி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. வைணவச் சமயச்சின்னங்களும் பொறிக்கப்பட்டிருந்தன.

500) விஜயநகர பேரரசு காலத்தில் இருந்த துறைமுகங்களில் முக்கியமானது எது?

A) கொச்சின்

B) கோவா

C) கண்ணனூர்

D) கோவலன

விளக்கம்: மலபார் கடற்கரையில் பல துறைமுகங்கள் இருந்தன. அவற்றில் கண்ணனூர் மிக முக்கியமான துறைமுகமாகும். இத்துறைமுகத்தில் அரேபியா, பாரசீகம், தென்ஆப்பிரிக்கா, போர்ச்சுக்கல் நாடுகளுடன் வாணிகத் தொடர்பு இருந்தது. பருத்தி, பட்டு, நறுமணப் பொருட்கள், அரிசி, வெடியுப்பு, சர்க்கரை போன்றவை முக்கிய ஏற்றுமதி பொருளாகும். குதிரைகள், முத்து, செம்பு, பவழம், பாதரசம், சீனத்துப்பட்டு, வெல்வெட் துணிகள் முதலியவை இறக்குமதி செய்யப்பட்டன. கப்பல் கட்டும் தொழில் வளர்ச்சியடைந்தது.

501) விஜயநகர பேரரசு காலத்திலான நீதிமுறைகள் பற்றிய சரியானக் கூற்றைத் தெரிவு செய்க

A) தண்டணைகள் தருமசாஸ்திரங்களின் அடிப்படையில் அமைந்திருந்தன

B) கிராமங்களில் கிராமத்து மகாஜனங்கள் தலைமை வகித்த நீதிமன்றங்களும், கோயில்களில் ஸ்தானிகர்கள் வழங்கிய கோயில் நீதிமன்றங்களும் வியாபார நீதிமன்றங்களும் வழக்கத்திலிருந்தன.

C) சிவில் வழக்குகள், ஆவணம், சாட்சி, வாக்குமூலத்தின் அடிப்படையில் தீர்ப்பு அளிக்கப்பட்டன.

D) அனைத்தும்

விளக்கம்: தண்டணைகள் தருமசாஸ்திரங்களின் அடிப்படையில் அமைந்திருந்தன

கிராமங்களில் கிராமத்து மகாஜனங்கள் தலைமை வகித்த நீதிமன்றங்களும், கோயில்களில் ஸ்தானிகளர்கள் வழங்கிய கோயில் நீதிமன்றங்களும் வியாபார நீதிமன்றங்களும் வழக்கத்திலிருந்தன.

சிவில் வழக்குகள், ஆவணம், சாட்சி, வாக்குமூலத்தின் அடிப்படையில் தீர்ப்பு அளிக்கப்பட்டன.

502) கூற்றுகளை ஆராய்க.

1. விஜயநகரப் பேரரசு காலத்தில், அரச துரோகத்திற்கு மிகக் கொடிய தண்டனையாக நஞ்சு கொடுப்பதும், கண்களைகக் குருடாக்குவதும் இருந்தது.

2. கோயில் சொத்துக்களைத் திருடியவருக்கு உடல் உறுப்புகள் குறைத்தல் போன்ற கடுமையான தண்டணை வழங்கப்பட்டன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. விஜயநகரப் பேரரசு காலத்தில், அரச துரோகத்திற்கு மிகக் கொடிய தண்டனையாக நஞ்சு கொடுப்பதும், கண்களைகக் குருடாக்குவதும் இருந்தது.

2. கோயில் சொத்துக்களைத் திருடியவருக்கு உடல் உறுப்புகள் குறைத்தல் போன்ற கடுமையான தண்டணை வழங்கப்பட்டன.

503) சோழ மன்னர்கள் காலத்தில் எத்தனை வகையான நிலவுடைமை உரிமைகள் இருந்தன?

A) 2

B) 3

C) 5

D) 4

விளக்கம்: விஜயநகர ஆட்சிக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட “நாயன்கார முறை” தென்னாட்டில் நிலவிய கிராம சுயாட்சி முறையின் அடிப்படையைத் தகர்ந்து எறிந்தன. சோழ மன்னர்கள் காலத்தில் நிலவிய “கானபோகம், ஏகபோகம்” என்ற இருவகையான நிலவுடைமை உரிமைகள் இருந்தன.

504) கூற்றுகளை ஆராய்க

1. விஜயநரகப் பேரரசு காலத்தில், கணபோக நிலங்கள் அனைத்தும் படைப்பற்று நிலங்களாகப் மாற்றப்பட்டு நாயக்கர்களுக்கு வழங்கப்பட்டன.

2. நில மானிய முறையில் படைப்பற்றாக நிலங்களைப் பெற்றுக் கொண்ட நாயக்கர்கள் வரிவசூல் செய்வதிலும் படை வீரர்களைத் திரட்டுவதிலும் ஆர்வம் கொண்டனர். இவர்கள் மன்னருக்குத் தேவையான படைகளைக் கொடுத்தும் உதவினர்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. விஜயநரகப் பேரரசு காலத்தில், கணபோக நிலங்கள் அனைத்தும் படைப்பற்று நிலங்களாகப் மாற்றப்பட்டு நாயக்கர்களுக்கு வழங்கப்பட்டன.

2. நில மானிய முறையில் படைப்பற்றாக நிலங்களைப் பெற்றுக் கொண்ட நாயக்கர்கள் வரிவசூல் செய்வதிலும் படை வீரர்களைத் திரட்டுவதிலும் ஆர்வம் கொண்டனர். இவர்கள் மன்னருக்குத் தேவையான படைகளைக் கொடுத்தும் உதவினர்.

505) எந்த நூற்றாண்டில் தென்னிந்தியாவில் ‘ஆயக்காரர்’ முறை தோற்றுவிக்கப்பட்டது?

A) கி.பி 12

B) கி.பி 13

C) கி.பி 14

D) கி.பி 15

விளக்கம்: கி.பி. 15-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தென்னிந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட முறை ‘ஆயக்காரர் முறை’ அல்லது ‘கிராம அதிகாரிகளின் முறை’ ஆகும். இவை விஜயநகர அரசர்களால் அமைக்கப்பட்டது.

506) கூற்றுகளை ஆராய்க

1. விஜயநகரப் பேரரசுக் காலத்தில், கிராம அரசியல் அமைப்புகளான சபைகள், ஊர், நாடு முதலியவைகள் மாற்றப்பட்டு ‘ஆயக்காரர்’ முறைப்படி ‘ஆயக்காரர்’ என்ற அதிகாரிகளும், கிராமத் தொழிலாளர்கள் கொண்ட அமைப்பாக மாறியது

2. விஜயநகர ஆட்சிக்காலத்தில் ஏரி வாரியம், தோட்டவாரியம், பஞ்சவார வாரியம் போன்றவற்றைக் ‘கர்ணம்’ என்பவர் செய்ய வேண்டியிருந்தது. இவரிடம் கிராமத்திலுள்ள நன்செய், புன்செய் நிலங்கள், தோப்புகள், சுடுகாடு, மேய்ச்சல் நிலங்கள், நிலவரி போன்ற தகவல்கள் அடங்கிய அட்டவணை அல்லது அடங்கல் என்ற புத்தகமும் சிட்டா என்ற குறிப்பேடும் இருந்தது

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. விஜயநகரப் பேரரசுக் காலத்தில், கிராம அரசியல் அமைப்புகளான சபைகள், ஊர், நாடு முதலியவைகள் மாற்றப்பட்டு ‘ஆயக்காரர்’ முறைப்படி ‘ஆயக்காரர்’ என்ற அதிகாரிகளும், கிராமத் தொழிலாளர்கள் கொண்ட அமைப்பாக மாறியது

2. விஜயநகர ஆட்சிக்காலத்தில் ஏரி வாரியம், தோட்டவாரியம், பஞ்சவார வாரியம் போன்றவற்றைக் ‘கர்ணம்’ என்பவர் செய்ய வேண்டியிருந்தது. இவரிடம் கிராமத்திலுள்ள நன்செய், புன்செய் நிலங்கள், தோப்புகள், சுடுகாடு, மேய்ச்சல் நிலங்கள், நிலவரி போன்ற தகவல்கள் அடங்கிய அட்டவணை அல்லது அடங்கல் என்ற் புத்தகமும் சிட்டா என்ற குறிப்பேடும் இருந்தது.

507) கூற்றுகளை ஆராய்க

1. விஜயநகரப் பேரரசுக் காலத்தில், ஆயக்காரர்களோடு சேர்ந்து கிராம மக்களுக்குச் சேவை புரிவதற்கு புரோகிதர், பொற்கொல்லர், தச்சர், குயவர் போன்ற தொழிலாளர்களும் நியமனம் பெற்றனர்.

2. இவர்கள் செய்த தொழிலுக்கு ‘இறையிலி’ நிலங்கள் வழங்கப்பட்டன. பரம்பரை பரம்பரையாக இந்நிலங்களை அனுபவித்துக் கொண்டு கிராம மக்களுக்குச் சேவைகள் புரிந்தனர். விவசாயிகள் அறுவடை காலங்களில் மகசூலின் சிறு பகுதியை இவர்களுக்கு அளிப்பதும் உண்டு. இம்முறை கிராம அமைப்புகளாகிய கிராம சபைகள் மறைவதற்குக் காரணங்களாக இருந்தன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. விஜயநகரப் பேரரசுக் காலத்தில், ஆயக்காரர்களோடு சேர்ந்து கிராம மக்களுக்குச் சேவை புரிவதற்கு புரோகிதர், பொற்கொல்லர், தச்சர், குயவர் போன்ற தொழிலாளர்களும் நியமனம் பெற்றனர்.

2. இவர்கள் செய்த தொழிலுக்கு ‘இறையிலி’ நிலங்கள் வழங்கப்பட்டன. பரம்பரை பரம்பரையாக இந்நிலங்களை அனுபவித்துக் கொண்டு கிராம மக்களுக்குச் சேவைகள் புரிந்தனர். விவசாயிகள் அறுவடை காலங்களில் மகசூலின் சிறு பகுதியை இவர்களுக்கு அளிப்பதும் உண்டு. இம்முறை கிராம அமைப்புகளாகிய கிராம சபைகள் மறைவதற்குக் காரணங்களாக இருந்தன.

508) விஜயநகரப் பேரரசுக் காலத்தில், ஹோனவர் என்னுமிடத்தில் ஆண் பிள்ளைகளுக்கு பள்ளிகள் செயல்பட்டதாக குறிப்பிடுபவர் யார்?

A) யுவான் சுவாங்

B) இபன் பதூதா

C) அரிஸ்

D) மெகஸ்தனிஸ்

விளக்கம்: விஜயநகரப் பேரரசுக் காலத்தில், ஹோனவர் என்னுமிடத்தில் ஆண் பிள்ளைகளுக்கு பள்ளிகள் செயல்பட்டதாக குறிப்பிடுபவர் இபன் பதூதா. கிராமங்களில் திண்ணைப் பள்ளிகள் மூலம் அடிப்படைக் கல்வி கற்பிக்கப்பட்டது. புத்தகங்களும், காகிதங்களும் பயன்பாட்டில் இல்லாத காலத்தில் மணலின் மீது எழுதுவதும் வாய்ப்பாட்டினை மனப்பாடம் செய்வதும் வழக்கத்திலிருந்தன.

509) வைணவக் கோயில்களில் வேதங்களையும், பிரபந்தகளையும், வேதாந்த சாத்திரங்களையும் பாராயணம் செய்வதற்கு யார் ஆட்சியில் நிலங்கள் தானமாக அளிக்கப்பட்டன?

A) கிருஷ்ணதேவராயர்

B) பெரோஷா துக்ளக்

C) முகமது கோரி

D) இபின் பதூதா

விளக்கம்: வைணவக் கோயில்களில் வேதங்களையும், பிரபந்தங்களையும், வேதாந்த சாத்திரங்களையும் பாராயணம் செய்வதற்குக் கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் நிலங்கள் தானமாக அளிக்கப்பட்டன. வானநூல், சோதிடம், மருத்துவம் முதலிய கலைகளையும் விஜயநகர அரசர்கள் ஆதரித்தனர்.

510) விஜயநகரப் பேரரசுக் காலத்தில் ‘ஆதித்தராயன்’ என்ற அந்தணருக்கு________________-என்ற கிராமத்தை மல்லிகார்ச்சுணராயர் பட்ட விருத்தியாக அளித்துள்ளார்?

A) தேவராயபுரம்

B) விருஞ்சிபுரம்

C) A மற்றும் B

D) ராயபுரம்

விளக்கம்: வேதங்கள், சாத்திரங்கள், புராணங்கள் ஆறுவகையான தரசனங்கள் முதலியவற்றில் புலமைபெற்ற ‘ஆதித்தராயன்’ என்ற அந்தணருக்குத் தேவராயபுரம் (விருஞ்சிபுரம்) என்ற கிராமத்தை மல்லிகார்ச்சுணராயர் பட்ட விருத்தியாக அளித்துள்ளார்.

511) ரிதுசம்ஹாரம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

A) விசாகதத்தர்

B) வாத்ஸ்யாயனர்

C) வராகமிகிரர்

D) காளிதாசர்

விளக்கம்: காளிதாசரின் நூல்கள்:

சாகுந்தலம், விக்கிரமோர்வசியம், மாளவிகாக்னிமித்திரம், ரகுவம்சம், குமாரசம்பவம், மேகதூதம், ரிதுசம்ஹாரம்.

மேற்காணும் அனைத்தும் வடமொழி இலக்கியங்கள்.

512) “நானார்த்த ரத்தினமாலை” என்ற வடமொழி நூலை இயற்றியவர் யார்?

A) இரண்டாம் ஹரிஹரர்

B) இருகப்ப தண்டநாதர்

C) அப்பய்ய தீட்சிதர்

D) இரண்டாம் வேங்கட தேவர்

விளக்கம்: “நானார்த்த ரத்தினமாலை” என்ற வடமொழி நூலை இயற்றியவர் “இருகப்ப தண்டநாதர்” ஆவார் . இந்து சமயத்தில் ஆழ்ந்த பற்றுள்ள இரண்டாம் ஹரிஹரர், இருகப்ப தண்டநாதர் என்ற சமண சமயத்தைச் சேர்ந்தவரை ஆதரித்துள்ளார்.

513) அத்வைத கோட்பாட்டில் பற்றுள்ள யாரை இரண்டாம் வேங்கட தேவர் ஆதரித்தார்?

A) இரண்டாம் ஹரிஹரர்

B) இருகப்ப தண்டநாதர்

C) அப்பய்ய தீட்சிதர்

D) இரண்டாம் வேங்கட தேவர்

விளக்கம்: அத்வைத கோட்பாட்டில் பற்றுள்ள அப்பய்ய தீட்சிதரை வைணவ பற்றுள்ள இரண்டாம் வேங்கட தேவர் ஆதரித்தார்.

514) ‘இரகுநாத ஆப்யூதயம்’ என்ற நூலை எழுதியவர் யார்?

A) குமார கம்பணர்

B) கங்காதேவி

C) இராம பத்திராம்பாள்

D) எவருமில்லை

விளக்கம்: குமார கம்பணருடைய அரசியார் கங்காதேவி ‘மதுராவிஜயம்’ என்ற நூலையும், இராம பத்திராம்பாள் இரகுநாத ஆப்யூதமும், திருமலாம்பாள் வரதாம்பிகா பரிணயம் என்ற நூலையும் இயற்றியுள்ளார். இவர்கள் இலக்கியச் செல்வம் படைத்த அரசிகளாவர்.

515) ‘உஷாபரிணயம்’ என்ற நூலை எழுதியவர் யார்?

A) குமார கம்பணர்

B) கங்காதேவி

C) இராம பத்திராம்பாள்

D) எவருமில்லை

விளக்கம்: கிருஷண்தேவராயர் இயற்றிய நூல்கள்:

1. உஷாபரிணயம்

2. ஜாம்பவதி கல்யாணம்.

516) கூற்றுகளை கவனி.

1. விஜயநரகப் பேரரசின் ஆட்சியில் தெலுங்கு மொழி மறுமலர்ச்சியடைந்தது எனலாம்.

2. கிருஷ்ணதேவராயர் அவையில் ‘அஷ்டதிக்கஜங்கள்’ எனப்பட்ட எட்டுப் புலவர்கள் இருந்தனர்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. விஜயநரகப் பேரரசின் ஆட்சியில் தெலுங்கு மொழி மறுமலர்ச்சியடைந்தது எனலாம்.

2. கிருஷ்ணதேவராயர் அவையில் ‘அஷ்டதிக்கஜங்கள்’ எனப்பட்ட எட்டுப் புலவர்கள் இருந்தனர்.

517) ‘ஆந்திரக் கவி பிதாமகன்’ என அழைக்கப்பட்டவர் யார்?

A) அல்லசானி பெத்தண்ணா

B) நந்தி திம்மண்ணா

C) துர்ஜாதி

D) பிங்காலி சூரன்னா

விளக்கம்: ‘ஆந்திரக் கவி பிதாமகன்’ என அழைக்கப்பட்டவர். அல்லசானி பெத்தண்ணா. இவர் எழுதிய நூல் ‘மனுசரிதம்’ ஆகும்.

518) பொருத்துக

அ. அல்லசானி பெத்தண்ணா – 1. பாரி ஜாதப கரணமு

ஆ. நந்தி திம்மண்ணா – 2. மனுசரிதம்

இ. துர்ஜாதி – 3. பிரபாவதி பிரத்யும்

ஈ. பிங்காலி சூரன்ன – 4. காளத்தி மகாத்யம்

A) 4, 3, 2, 1

B) 3, 4, 1, 2

C) 2, 1, 4, 3

D) 2, 1, 3, 4

விளக்கம்: அல்லசானி பெத்தண்ணா – மனுசரிதம்

நந்தி திம்மண்ணா – பாரி ஜாதப கரணமு

துர்ஜாதி – காளத்தி மகாத்யம்

பிங்காலி சூரன்ன – பிரபாவதி பிரத்யும்

519) பொருத்துக.

அ. தெனாலிராம கிருஷ்ணன் – 1. வசுமித்திரர்

ஆ. மதகிரி மல்லார்ணா – 2. ராமபுத்யாமு

இ. ஹயலாராஜுபத்ரடூ – 3. இராஜசேகர சரித்திரமு

ஈ. இராமராஜபூஷணர் – 4. விகடகவி

A) 1, 4, 3, 2

B) 2, 3, 4, 1

C) 1, 4, 3, 2

D) 4, 3, 2, 1

விளக்கம்: தெனாலிராம கிருஷ்ணன் – விகடகவி

மதகிரி மல்லார்ணா – இராஜசேகர சரித்திரமு

ஹயலாராஜுபத்ரடூ – ராமபுத்யாமு

இராமராஜபூஷணர் – வசுமித்திரர்.

520) விஜயநகர கட்டடக்கலை பற்றிய கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க.

A) விஜயநகர ஆட்சிக்காலத்தில் கலைநயத்துடன் கோயில்கள் கட்டப்பட்டன. சோழ மன்னர்கள் காலத்தில் கோயில்களின் சர்ப்பகிரகத்தின் மேலுள்ள விமானமே சிறந்து விளங்கியது.

B) அந்நிலைமாறி கோயில்களில் நடைபெறும் வழிபாடுகளும் திருவிழாக்களுக்கு ஏற்ப கல்யாண மண்டபங்களும், நூற்றுக்கால், ஆயிரங்கால் மண்டபங்களும், பரிவாரத் தெய்வங்களும் ஏற்பச் சிறு கோயில்களும், அம்மனுக்கு தனிக் கோயில்களும் அமைக்கப்பட்டன

C) குதிரை மண்டபங்களும், வசந்த மண்டபங்களும் காணப்படுகின்றன.

D) அனைத்தும் சரி

விளக்கம்: விஜயநகர ஆட்சிக்காலத்தில் கலைநயத்துடன் கோயில்கள் கட்டப்பட்டன. சோழ மன்னர்கள் காலத்தில் கோயில்களின் சர்ப்பகிரகத்தின் மேலுள்ள விமானமே சிறந்து விளங்கியது.

அந்நிலைமாறி கோயில்களில் நடைபெறும் வழிபாடுகளும் திருவிழாக்களுக்கு ஏற்ப கல்யாண மண்டபங்களும், நூற்றுக்கால், ஆயிரங்கால் மண்டபங்களும், பரிவாரத் தெய்வங்களும் ஏற்பச் சிறு கோயில்களும், அம்மனுக்கு தனிக் கோயில்களும் அமைக்கப்பட்டன

குதிரை மண்டபங்களும், வசந்த மண்டபங்களும் காணப்படுகின்றன.

521) விஜயநகரப் பேரரசுக் காலத்தில் கட்டப்பட்ட ஆயிரங்கால் மண்டபத் தூண்களில் முன் கால்களை தூக்கிப் பாய்ந்து செல்வது போன்ற____________மற்றும் யாளிகளும் காணப்படுகின்றன

A) குதிரை

B) சிங்கம்

C) புலி

D) யானை

விளக்கம்: ஆயிரங்கால் மண்டபத் தூண்களில் முன் கால்களை தூக்கிப் பாய்ந்து செல்வது போன்ற குதிரைகளும், யாளிகளும் காணப்படுகின்றன. தூண்களின் உச்சியில் அலங்காரத்துடன் தொங்குகின்ற தாமரை மொட்டு போன்ற அமைப்புகளும் காணப்படுகின்றன

522) கூற்றுகளை ஆராய்க.

1. விஜயநகரப் பேரரசு கால தூண்களில் காணப்படும் “நாகபந்தம்” என்ற அமைப்பு விஜய நகர ஆட்சிக்காலத்தில் பின்பற்றப்பட்டது.

2. ‘கூடு’ என்ற கட்டுமானத்தல் வரையப்பட்ட செடி, கொடிகளை இக்காலத் தூண்களில் காணலாம்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. விஜயநகரப் பேரரசு கால தூண்களில் காணப்படும் “நாகபந்தம்” என்ற அமைப்பு விஜய நகர ஆட்சிக்காலத்தில் பின்பற்றப்பட்டது.

2. ‘கூடு’ என்ற கட்டுமானத்தல் வரையப்பட்ட செடி, கொடிகளை இக்காலத் தூண்களில் காணலாம்.

523) கூற்றுகளை ஆராய்க

1. விஜயநகரப் போரரசுக் காலத்தில் ஓவியக்கலைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

2. இவர்களின் ஓவியக்கலைச் சிறப்பைக் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவாரூர், திருவரங்கம், கும்பகோணம், உத்திரமேரூர், திருவொற்றியூர், சிதம்பரம், மதுரை, அழகர்கோயில், கோவில்பட்டி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ஸ்ரீ வைகுண்டம் போன்ற இடங்களில் காணலாம்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. விஜயநகரப் போரரசுக் காலத்தில் ஓவியக்கலைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

2. இவர்களின் ஓவியக்கலைச் சிறப்பைக் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவாரூர், திருவரங்கம், கும்பகோணம், உத்திரமேரூர், திருவொற்றியூர், சிதம்பரம், மதுரை, அழகர்கோயில், கோவில்பட்டி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ஸ்ரீ வைகுண்டம் போன்ற இடங்களில் காணலாம்.

524) கூற்றுகளை ஆராய்க

1. ஹொய்சாளர் காலத்தில் கட்டப்பட்ட விருபாஷர் கோயில், கிருஷ்ண தேவராயர் ஆட்சிக்காலத்தில் மெருகூட்டப்பட்டது.

2. கோயிலின் மேற்குப் பகுதியில், கர்ப்ப கிரகமும், அம்மன் சன்னதியும், பரிவார தெய்வங்களின் கோயிலகளும் உள்ளன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. ஹொய்சாளர் காலத்தில் கட்டப்பட்ட விருபாஷர் கோயில், கிருஷ்ண தேவராயர் ஆட்சிக்காலத்தில் மெருகூட்டப்பட்டது.

2. கோயிலின் மேற்குப் பகுதியில், கர்ப்ப கிரகமும், அம்மன் சன்னதியும், பரிவார தெய்வங்களின் கோயில்களும் உள்ளன.

525) கூற்றுகளை ஆராய்க

1. விஜயநகரப் பேரரசுக் காலத்தில் கட்டப்பட்ட விருபாஷர் கோயிலுக்கு துங்கபத்ரா நதிக்கரையிலிருந்து சிறிய ஒரு கோபுர வாயிலின் வழியாக வரமுடியும்.

2. கிழக்கிலுள்ள கோபுரம் புறங்குவிந்த முறையில் கட்டப்பட்டுள்ளது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. விஜயநகரப் பேரரசுக் காலத்தில் கட்டப்பட்ட விருபாஷர் கோயிலுக்கு துங்கபத்ரா நதிக்கரையிலிருந்து சிறிய ஒரு கோபுர வாயிலின் வழியாக வரமுடியும்.

2. கிழக்கிலுள்ள கோபுரம் புறங்குவிந்த முறையில் கட்டப்பட்டுள்ளது.

526) விஜயநகர காலத்துக் குதிரை மண்டபங்கள் எந்தக் கோயிலில் காணப்படுகின்றன?

A) திருவரங்கம் அரங்கநாதர்கோயில்

B) காஞ்சி வரதராஜகோயில்

C) வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில்

D) அனைத்தும்

விளக்கம்: விஜயநகர காலத்துக் குதிரை மண்டபங்கள், திருவரங்கம் அரங்கநாதர் கோயிலிலும், காஞ்சி வரதராஜர்கோயிலிலும், வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலிலும் காணப்படுகின்றன.

527) விஜயநகர ஆட்சிக்காலத்தில் தலைநகரமாக விளங்கிய நகரம் எது?

A) ஹம்பி

B) மதுரா

C) துவாரகை

D) மகதம்

விளக்கம்: விஜயநகர ஆட்சிக்காலத்தில் தலைநகரமாக ‘ஹம்பி’ விளங்கியது. பன்னாட்டு வாணிகத் தளமாகவும் விளங்கியது. விஜயநரக ஆட்சிக்கால சிதைப்பாடுகள் இந்நகரில் காணப்படுகின்றன. கி.பி 16 –ஆம் நூற்றாண்டில், இங்குக் கட்டப்பட்ட ‘விட்டாலா சுவாமி’ கோயில்களும், ‘ஹசாரா இராமசாமி’ கோயில்களும் சிறப்புப்பெற்றவையாகும்.

528) தலைக்கோட்டைப் போர் எப்போது நடைபெற்றது?

A) பொ.ஆ. 1565

B) கி.மு. 1565

C) பொ.ஆ 1665

D) கி.மு. 1665

விளக்கம்: தலைக்கோட்டைப்போர் பொ.ஆ 1565-ல் நடைபெற்றது. இதில் விஜயநகரப் பேரரசு தோல்வியுற்றது. இப்போரில் அழிக்கப்பட்ட ‘ஹம்பி’ நகரம் தற்போது உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

529) கூற்றுகளை ஆராய்க

1. விஜயநகர மன்னர்களின் ஆட்சிக்காலத்தின்போது, வடமொழியிலும் மற்ற திராவிட மொழிகளிலும் இலக்கியம் வளர்ச்சி பெற்றது.

2. விஜய நகர அரசர்கள் சமய வேற்றுமை பாராமல் இலக்கியத்தில் புலமை பெற்ற சான்றோர்களை ஆதரித்தவர்கள்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. விஜயநகர மன்னர்களின் ஆட்சிக்காலத்தின்போது, வடமொழியிலும் மற்ற திராவிட மொழிகளிலும் இலக்கியம் வளர்ச்சி பெற்றது.

2. விஜய நகர அரசர்கள் சமய வேற்றுமை பாராமல் இலக்கியத்தில் புலமை பெற்ற சான்றோர்களை ஆதரித்தவர்கள்.

530) மகாநவமி திருவிழாக் காட்சிகள், கிருஷ்ண பகவானுடைய திருவிளையாடல் காட்சிகள் போன்றவை எந்தக் கோயிலில் காணப்படுகிறது?

A) ஹாசாரா இராமசுவாமி கோயில்

B) திருவரங்கம் அரங்கநாதர் கோயில்

C) காஞ்சி வரதராஜர் கோயில்

D) வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில்

விளக்கம்: விஜயநகர ஆட்சிக்காலத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட மகாநவமி திருவிழாக் காட்சிகள், பாகவதத்தில் கூறப்படும் கிருஷ்ண பகவானுடைய திருவிளையாடல்கள் போன்றவை ஹசாரா இராமசாமி கோயிலில் காணப்படுகின்றன.

விஜயநகர ஆட்சிக்காலத்தில் முக்கிய திருவிழாக்களாக மகாநவமி, தீபாவளி, மகரசங்கராந்தி, யுகாதி, கார்த்திகைத் திருவிழா, கல்யாண உற்சவம், சிவராத்தி, திருவாதிரைத் திருவிழா, ராமநவமி, வைகாசி விசாகம், கிருஷ்ண ஜெயந்தி, ஏகாதசி, மார்கழி நீராடல், தசமி, மகாஉற்சவம் போன்ற திருவிழாக்கள் கொண்டாடப்பட்டன.

531) கிருஷ்ணபகவானை ‘விட்டலர்’ எனக் குறிப்பிடும் மாநிலம் எது?

A) மராட்டியம்

B) குஜராத்

C) பீகார்

D) அசாம்

விளக்கம்: மராட்டிய பகுதியில் கிருஷ்ண பகவானை விட்டலர், விட்டோபா, பாண்டுரங்கன் என்ற பெயர்களுடன் வழிபட்ட முறைக்கு (வித்தலர்) ‘விட்டலர் வழிபாடு’ என்று பெயர். இந்த விட்டலர் சுவாமிகோயிலில் மகாமண்டபத்தில் 12 அடி உயரமுள்ள 56 தூண்கள் எழுப்பப்பட்டுள்ளன. தூண்களில் உச்சிப்பகுதியின் அடுக்குப் பேழைகளில் நாகபந்தமும், தாமரை மொட்டுகளும் காணப்படுகின்றன. இங்குள்ள மகாமண்டபம் திராவிடக் கோயில் அமைப்புக்கலைக்கு ஓர் அணிகலன் போல் விளங்குகிறது என்று ‘பெர்லி ப்ரௌன்’ குறிப்பிடுகிறார்.

532) கூற்றுகளை கவனி.

1. விஜயநகர அரசர்கள் தமிழ்நாட்டில் காணப்படும் கோயில்களை விரிவுபடுத்தி ஆயிரங்கால் மண்டபம், நூற்றுக்கால் மண்டபங்கள், திருக்குளங்கள், இராஜகோபுரங்கள் முதலியவற்றை உருவாக்கினர்.

2. காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோயில் கோபுரத்தையும், காளஹஸ்தி மற்றும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோபுரங்களும் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்டன. சிதம்பரம் நடராஜர் கோயிலில் வடக்குக் கோபுரம் இவர்கள் காலத்தில் கட்டப்பட்டது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. விஜயநகர அரசர்கள் தமிழ்நாட்டில் காணப்படும் கோயில்களை விரிவுபடுத்தி ஆயிரங்கால் மண்டபம், நூற்றுக்கால் மண்டபங்கள், திருக்குளங்கள், இராஜகோபுரங்கள் முதலியவற்றை உருவாக்கினர்.

2. காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோயில் கோபுரத்தையும், காளஹஸ்தி மற்றும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோபுரங்களும் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்டன. சிதம்பரம் நடராஜர் கோயிலில் வடக்குக் கோபுரம் இவர்கள் காலத்தில் கட்டப்பட்டது.

533) விஜயநகர அரசர்கள் காலத்து கோபுரங்களில் எத்தனை தளங்கள் எழுப்பப்பட்டன?

A) 9 முதல் 12 வரை

B) 8 முதல் 11 வரை

C) 9 முதல் 11 வரை

D) 8 முதல் 12 வரை

விளக்கம்: விஜயநகர அரசர்கள் காலத்து கோபுரங்களில் 9 முதல் 11 தளங்கள் வரை எழுப்பப்பட்டன. மேலும் சமயம் சாரா கட்டடங்கள் கட்டப்பட்டன. இவர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட கோபுரங்கள் ‘இராயகோபுரங்கள்’ என்றழைக்கப்படுகின்றன.

534) இந்தியப் பண்பாட்டிற்கு விஜயநகரப் பேரரசின் கொடை என்ன?

A) விஜயநகர ஆட்சியாளர்கள் ஐரோப்பாவில் நிலவி வந்த நிலமானிய முறையைத் தென்னகத்தில் ‘நாயன்கார முறையாக’ அறிமுகப்படுத்தினர்

B) விஜயநகர ஆட்சியாளர்கள் இராமநவமி, புத்தாண்டு போன்ற பண்டிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.

C) தமிழகத்தில் தெலுங்கு மொழி பரவவும், தெலுங்கு இலக்கியம் வளரவும் முக்கிய காரணமாக இருந்தார்கள்.

D) அனைத்தும்

விளக்கம்: விஜயநகர ஆட்சியாளர்கள் ஐரோப்பாவில் நிலவி வந்த நிலமானிய முறையைத் தென்னகத்தில் ‘நாயன்கார முறையாக’ அறிமுகப்படுத்தினர்

விஜயநகர ஆட்சியாளர்கள் இராமநவமி, புத்தாண்டு போன்ற பண்டிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.

தமிழகத்தில் தெலுங்கு மொழி பரவவும், தெலுங்கு இலக்கியம் வளரவும் முக்கிய காரணமாக இருந்தார்கள்.

535) இந்தியப் பண்பாட்டிற்கு விஜயநகரப் பேரரசின் கொடை என்ன?

A) திருப்பதி திருமலையிலுள்ள வெங்கடாசலபதி கோயிலை நவீனப்படுத்தியதுடன் மலையில் பாதைகளை சீரமைத்தது இவர்கள் செய்த முக்கிய பணியாகும்.

B) வடஇந்தியாவிலிருந்தும் இஸ்லாமியப் படையெடுப்பாளர்களிடமிருந்து பழைமையான இந்தியப் பண்பாட்டுக் கூறுகளான கோயில்கள், கலைகள் போன்றவற்றைப் பாதுகாத்தது இவர்கள் பண்பாட்டிற்குத் தந்த கொடையாகும்.

C) இவர்கள் காலத்தில், கோயில்களில் மிக உயர்ந்த இராயகோபுரங்கள் கட்டப்பட்டன.

D) அனைத்தும்

விளக்கம்: 1. திருப்பதி திருமலையிலுள்ள வெங்கடாசலவதி கோயிலை நவீனப்படுத்தியதுடன் மலையில் பாதைகளை சீரமைத்தது இவர்கள் செய்த முக்கி பணியாகும்.

வடஇந்தியாவிலிருந்தும் இஸ்லாமியப் படையெடுப்பாளர்களிடமிருந்து பழைமையான இந்தியப் பண்பாட்டுக் கூறுகளான கோயில்கள், கலைகள் போன்றவற்றைப் பாதுகாத்தது இவர்கள் பண்பாட்டிற்குத் தந்த கொடையாகும்.

இவர்கள் காலத்தில், கோயில்களில் மிக உயர்ந்த இராயகோபுரங்கள் கட்டப்பட்டன.

536) கூற்றுகளை கவனி (விஜயநகர கோயில்கள் பற்றியதில்)

1. விஜயநகரப் பேரரசுக் காலத்தில் கோயில்களில் திருச்சுற்றுகள் (பிரகாரங்கள்) எண்ணிக்கை பெருகின.

2. கல்யாணமண்டபம், குதிரை மண்டபங்கள், யாளி மண்டபங்கள், ஆயிரங்கால் மண்டபங்கள் எழுப்பப்பட்டன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும ;சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. விஜயநகரப் பேரரசுக் காலத்தில் கோயில்களில் திருச்சுற்றுகள் (பிரகாரங்கள்) எண்ணிக்கை பெருகின.

2. கல்யாணமண்டபம், குதிரை மண்டபங்கள், யாளி மண்டபங்கள், ஆயிரங்கால் மண்டபங்கள் எழுப்பப்பட்டன.

537) பாமினி அரசு பற்றிய சரியானக் கூற்றை தெரிவு செய்க

A) “அலாவுதீன் ஹாசன் பாமன்ஷா” என்றழைக்கப்பட்ட ஹாசன்கங்கு பாமினி அரசைத் தோற்றுவித்தார்

B) இவர் டெல்லி சுல்தான், முகமது பின் துக்ளக் ஆட்சியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, சுதந்திர அரசை நிறுவினார்

C) பாமினி அரசின் தலைநகர் ‘குல்பர்கா’ ஆகும்.

D) அனைத்தும்

விளக்கம்: “அலாவுதீன் ஹாசன் பாமன்ஷா” என்றழைக்கப்பட்ட ஹாசன்கங்கு பாமினி அரசைத் தோற்றுவித்தார்

இவர் டெல்லி சுல்தான் முகமது பின் துக்ளக் ஆட்சியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, சுதந்திர அரசை நிறுவினார்

பாமினி அரசின் தலைநகர் ‘குல்பர்கா’ ஆகும்.

538) கூற்றை ஆராய்க.

1. பாமினி அரசைப் பற்றி அறிந்துகொள்ளவதற்குக் கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளிலுள்ள கல்வெட்டுகளும், சமஸ்கிருத மொழியிலுள்ள செப்புப்பட்டயங்கள், இலக்கியச் சான்றுகள், கோயில்கள், அரண்மனைகள், கோட்டைகள் ஆகிய தொல்லியல் சான்றுகளும் உதவுகின்றன

2. பாமினி அரசைப் பற்றி அறிந்துகொள்ளவதற்கு, அயல்நாட்டுப் பணிகளான இபின் பதூதா, அப்துர் ரசாக், நிகிடின், நுனிஸ் ஆகியோரின் குறிப்புகளும் உதவுகின்றன

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: . பாமினி அரசைப் பற்றி அறிந்துகொள்ளவதற்குக் கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளிலுள்ள கல்வெட்டுகளும், சமஸ்கிருத மொழியிலுள்ள செப்புப்பட்டயங்கள், இலக்கியச் சான்றுகள், கோயில்கள், அரண்மனைகள், கோட்டைகள் ஆகிய தொல்லியல் சான்றுகளும் உதவுகின்றன

2. பாமினி அரசைப் பற்றி அறிந்துகொள்ளவதற்கு, அயல்நாட்டுப் பணிகளான இபின் பதூதா, அப்துர் ரசாக், நிகிடின், நுனிஸ் ஆகியோரின் குறிப்புகளும் உதவுகின்றன.

539) பாமினி அரசின் மைய அரசு நிர்வாகம், பற்றிய சரியான்க் கூற்றைத் தெரிவு செய்க.

A) பாமினிசுல்தான் அரசின் நிர்வாகமுறை, இஸ்லாமிய ஆட்சிமுறையை முன் மாதிரியாகக் கொண்டிருந்தது.

B) மன்னர் அனைத்து அதிகாரங்களையும் கொண்டிருந்தார். சுல்தான் அமைச்சர்களின் கருத்துப்படி, நிர்வாகத்தை நடத்தி வந்தார்.

C) பாமினி சுல்தான் கலீபாவின் மேன்மையான அதிகாரத்தை ஏற்றார்.

D) அனைத்தும்

விளக்கம்: பாமினிசுல்தான் அரசின் நிர்வாகமுறை, இஸ்லாமிய ஆட்சிமுறையை முன் மாதிரியாகக் கொண்டிருந்தது.

மன்னர் அனைத்து அதிகாரங்களையும் கொண்டிருந்தார். சுல்தான் அமைச்சர்களின் கருத்துப்படி, நிர்வாகத்தை நடத்தி வந்தார்.

பாமினி சுல்தான் கலீபாவின் மேன்மையான அதிகாரத்தை ஏற்றார்.

540) பாமினி அரசவையில் அமைச்சர்களைப் பொருத்துக

அ. வகில்-உல்-சுல்தான் – 1. நாட்டின் துணைத் தலைவர்

ஆ. வசீல் குல் – 2. அமைச்சர்களின் பணியை மேற்பார்வையிடுபவர்

இ. அமீர்-இ-ஜும்லா – 3. நிதியமைச்சர்

ஈ. வசீர்-இ-அஸ்ரப் – 4. வெளியுறவு அமைச்சர்

A) 4, 3, 2, 1

B) 2, 3, 1, 4

C) 1, 2, 3, 4

D) 3, 4, 1, 2

விளக்கம்: வகில்-உல்-சுல்தான் – நாட்டின் துணைத் தலைவர்

வசீல் குல் – அமைச்சர்களின் பணியை மேற்பார்வையிடுபவர்

அமீர்-இ-ஜும்லா – நிதியமைச்சர்

வசீர்-இ-அஸ்ரப் – வெளியுறவு அமைச்சர்.

541) பாமினி அரசவையின் அமைச்சர்களைப் பொருத்துக.

அ. நசீர் – 1. அரசப் படை பொறுப்பாளர்

ஆ. பேஷ்வா – 2. நிதித்துறை அமைச்சர்

இ. சுதர்-இ.ஜஹான் – 3. காவல் துறைத் தலைவர்

ஈ. கொத்வால்; – 4. தலைமை நீதிபதி

A) 4, 3, 2, 1

B) 1, 3, 4, 2

C) 2, 1, 3, 4

D) 2, 1, 4, 3

விளக்கம்: நசீர் – நிதித்துறை அமைச்சர்

பேஷ்வா – அரசப் படை பொறுப்பாளர்

சுதர்-இ.ஜஹான் – தலைமை நீதிபதி

கொத்வால – காவல் துறைத் தலைவர்.

8 அமைச்சர்களைக் கொண்டு ஆட்சி புரிந்தனர். இம்முறை பிற்காலத்தில் மராட்டிய ஆட்சியாளர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தது.

542) அலாவுதீன் ஹாசன் பாமன்ஷா பாமினி அரசை எத்தனைப் பிரிவுகளாகப் பிரித்தார்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: அலாவுதீன் ஹாசன் பாமன்ஷா பாமினி அரசை ஆசானாபாத், தௌலதாபாத், பீரார், பீடார் என 4 முதன்மைப் பிரிவுகளாகப் பிரித்தார். நிர்வாகதத்தை ஆளுநர்கள் நடத்தினர். முகமதுஷாவின் காலத்தில் பேரரசு ‘தரப்புகள்’ என்ற பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஆட்சி புரிந்தனர்.

543) பாமினி ஆட்சியின் அடிப்படை அலகு என்ன?

A) தரப்புகள்

B) சர்க்கார்

C) பர்கானா

D) கிராமம்

விளக்கம்: பேரரசு-தரப்புகள்-சர்க்கார்கள்-பர்க்கானாக்கள்-கிராமங்கள்.

எனப் பிரிக்கப்பட்டு முகமது ஷாவின் ஆட்சிக் காலத்தில் பாமினி ஆட்சி நடைபெற்றது. ஆட்சியின் அடிப்படை அலகு ‘கிராமம்’ ஆகும்.

544) கூற்றுகளை கவனி

1. பாமினி அரசு இந்து-இஸ்லாமிய சமயங்களின் இணைப்பாக இருந்தது.

2. சமூகத்தில் வேளாண்மை செய்வோர், நெசவாளர்கள், உலோக வேலை செய்வோர், கைத்தொழில் செய்வோர் போன்றோர் முக்கிய இடம் வகித்தனர்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. பாமினி அரசு இந்து-இஸ்லாமிய சமயங்களின் இணைப்பாக இருந்தது.

2. சமூகத்தில் வேளாண்மை செய்வோர், நெசவாளர்கள், உலோக வேலை செய்வோர், கைத்தொழில் செய்வோர் போன்றோர் முக்கிய இடம் வகித்தனர்.

545) ‘காசா-இ-சுல்தானி’ என்பவை என்ன?

A) நிலவருவாய்

B) அரசருக்கான நிலம்

C) வருவாய் அதிகாரி

D) வரி வசூலிக்கும் உரிமை

விளக்கம்: ‘முகமது கவான்’ என்னும் அமைச்சர், நிலங்களை அளந்து எல்லைகளை நகர, கிராமிய நிலங்களின் எல்லைகள் எனச் சரியாகக் கணக்கிட்டு, அதனை அரசுக் குறிப்பேட்டில் இடம் பெறச் செய்தார். ஒவ்வொரு மாநிலத்திலும் அரசருக்கான நிலங்கள் ஒதுக்கப்பட்டன. அவை, ‘காசா-இ-சுல்தானி’ எனப் பெயரிடப்பட்டன. அரசிற்கு நிலங்கள் மூலம் வருவாய் கிடைக்கப்பெற்றது.

546) பாமினி சுல்தான்கள் காலத்தில் ஆதரவற்றவர்களுக்கு ஒரு பள்ளியை ஏற்படுத்தியவர் யார்?

A) முஜாஹித் ஷா

B) சுல்தான் பிரோஷ் ஷா

C) முகமது கவான்

D) A மற்றும் B

விளக்கம்: பாமினி சுல்தான்கள் கல்வியில் ஆர்வம் உடையவர்களாகத் திகழ்ந்தனர். இவர்கள் பல பள்ளிகள் தொடங்கினார்கள். ‘முஜாஹித் ஷா’ என்பவர் ஆதரவற்றவர்களுக்கு ஒரு பள்ளியை ஏற்படுத்தினார். குல்பர்க்கா, பீடார் போன்ற இடங்களில் கல்விக் கூடங்கள் நிறுவப்பட்டன

547) பாமினி சுல்தான் காலத்தில், அரபு, பாரசீகம் போன்ற நாடுகளிலிருந்து கல்வியாளர்களை வரச் செய்து மக்களுக்கு கல்வி போதித்தவர் யார்?

A) முஜாஹித் ஷா

B) சுல்தான் பிரோஷ் ஷா

C) முகமது கவான்

D) A மற்றும் B

விளக்கம்: சுல்தான் பெரோஷ் ஷா இறையியல், அறிவியல், ஜியோமிதி, கணிதம் ஆகியவற்றில் புலமை பெற்றிருந்தார். அரபு, பாரசீகம் போன்ற நாடுகளிலிருந்து கல்வியாளர்களை வரச் செய்து மக்களுக்குக் கல்வி போதித்தார்.

548) பாமினி, சுல்தான் காலத்தில், பீடாரில் ‘மதராசா’ என்ற பள்ளியை நிறுவி அதில் பெரிய நூலகத்தை அமைத்தவர் யார்?

A) முஜாஹித் ஷா

B) சுல்தான் பிரோஷ் ஷா

C) முகமது கவான்

D) A மற்றும் B

விளக்கம்: பாரசீகத்தில் பிறந்த ‘முகமது கவான்’ பாரசீக மொழியிலும் கணிதத்திலும் புலமை பெற்றவராகத் திகழ்ந்தார். மேலும், சிறந்த கவிஞராகவும் மற்றும் எழுத்தாளராகவும் விளங்கினார். பீடாரில் ‘மதராசா’ என்ற பள்ளியை நிறுவி அதில் பெரிய நூலகத்தை அமைத்தார். அதில் மூவாயிரம் கையெழுத்துப் பிரதி நூல்கள் இடம்பெற்றிருந்தன என பதிவு செய்யப்பட்டுள்ளது.

549) ஜாமி மசூதி எங்குள்ளது?

A) மெக்கா

B) குல்பர்கா

C) கோல்கொண்டா

D) கோல்கும்பாஸ்

விளக்கம்: பாமினி அரசர்கள் காலத்தில் கட்டடங்கள் மிகுந்த எண்ணிக்கையில கட்டப்பட்டன. குல்பர்காவில் கட்டப்பட்ட ‘ஜாமி மசூதி’ பாரசீக முஸ்லீம் கைவினைஞர்களால் கட்டப்பட்டதாகும். இவர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோல்கொண்டா, கோல்கும்பாஸ் போன்றவை மிகச் சிறந்த கட்டடங்களாகும்.

550) குல்பர்காவின் ஜாமி மசூதி எத்தனை. அரைகோள வடிவக் குவிமாடங்கள் கொண்ட விதான அமைப்பால் முற்றிலும் மூடப்பட்டுள்ளது?

A) 1367

B) 636

C) 64

D) 63

விளக்கம்: இம்மசூதி முதலாம் முகமது ஷா காலத்தில் தொடங்கப்பட்டு, கி.பி (பொ.ஆ) 1367-இல் முடிக்கப்படடது. இம்மசூதி 63 அரை கோளவடிவக் குவிமாடங்கள் கொண்ட விதான அமைப்பால் முற்றிலும் மூடப்பட்டுள்ளது. மைய மைதானம் விதானத்தின் கிழக்கு, வடக்கு, தெற்கு விளம்புகளில் இடம்பெற்றிருக்கும் உருளை வடிவ விதானத்துடன் அழகாக உள்ளன. இவை பாமினி கட்டடக்கலைக்குச் சிறந்த சான்றாக அமைந்துள்ளன.

551) 17-ஆம் நூற்றாண்டில் கோல்கொண்டா ஒரு சிறந்த____________சந்தையாக திகழ்ந்தது?

A) வைரச் சந்தை

B) தங்கச் சந்தை

C) முத்துச் சந்தை

D) பவளச் சந்தை

விளக்கம்: “இராஜாகிருஷ்ணதேவ்” என்ற காகத்திய அரசரால் கட்டப்பட்ட கோட்டை “கோல்கொண்டா கோட்டை” ஆகும். இக்கோட்டை இருந்த பகுதி முகம்மது நகர் எனப்பட்டது. ‘குதுப்ஷா’ வம்சத்தின் தலைநகரமாக விளங்கியது. கோட்டையின் ஒலிஅமைப்பு அடிப்படையில் இது சிறந்த கட்டக்கலையின் அம்சமாகும். இக்கோட்டையின் உயர்ந்த பகுதி ‘பாலாஹிசார்’ என்றழைக்கப்படுகிறது. இக்கோட்டையின் நுழைவாயில் ‘பதேதர்வாசா’ என்றழைக்கப்படுகிறது. 17-ஆம் நூற்றாண்டில் கோல்கொண்டா ஒரு சிறந்த வைரச் சந்தையாக திகழ்ந்தது.

552) “கோல் கும்பாஸ் மசூதி” எங்குள்ளது?

A) மகாராஷ்டிரா

B) குஜராத்

C) ஆந்திரா

D) கர்நாடகா

விளக்கம்: இது கர்நாடகா மாநிலத்தில் பீஜப்பூர் மாவட்டத்திலுள்ள அடக்கத் தலக்கட்டடம் ஆகும். இது ‘தக்காண சுல்தானகம்’ கட்டக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது.

553) கோல்கும்பாஸ் எந்த வடிவ கட்டம் ஆகும்?

A) சதுரம்

B) கனசதுரம்

C) முக்கோணம்

D) கனச்செவ்வகம்

விளக்கம்: கோல்கும்பாஸ் கனசதுர வடிவ கட்டடமாகும். ஒவ்வொரு பக்கமும் நீளம், அகலம் மற்றும் உயரம் 47.5 மீட்டர் சமமாகக் கொண்டுள்ளது. இந்த அடக்கத்தலம் உலகின் மிகப்பெரிய ஒற்றை அறை இடைவெளிகள் கொண்டதாகும். இக்கட்டடத்தின் மையத்திலிருந்து சாதாரணமாகப் பேசினாலும் அனைத்துப் பகுதிகளுக்கும் தெளிவாகக் கேட்கும்படி ஒலியமைப்பு இருப்பது இதன் சிறப்பம்சமாகும்.

554) கூற்றுகளை ஆராய்க

1. பாரசீக கட்டடக்கலையை மையமாகக் கொண்டு, பாமினி சுல்தான்கள் கட்டடங்களைக் கட்டினர்.

2. இக்கலையில் வட்டவடிவ கட்டடங்கள், கனசதுர வடிவ கட்டடங்கள் கட்டப்பட்டன. இக்கலையே தக்காண சுல்தான் கலையாகும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. பாரசீக கட்டடக்கலையை மையமாகக் கொண்டு, பாமினி சுல்தான்கள் கட்டடங்களைக் கட்டினர்.

2. இக்கலையில் வட்டவடிவ கட்டடங்கள், கனசதுர வடிவ கட்டடங்கள் கட்டப்பட்டன. இக்கலையே தக்காண சுல்தான் கலையாகும்.

555) “மன்சப்தாரி” என்ற முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

A) அக்பர்

B) ஹீமாயூன்

C) பாபர்

D) ஒளரங்கசீப்

விளக்கம்: முகலாய மன்னர்கள் குதிரைப்படை, காலாட்படை, பீரங்கிப்படை, கடற்படை, யானைப்படை ஆகிய படைகளைப் பெற்றிருந்தனர். “மன்சப்தாரி” என்ற முறையை “அக்பர்” அறிமுகப்படுத்தினார். இம்முறையின்படி படைகள் முறைப்படுத்தப்பட்டன. குதிரைப்படை வீரர்கள் “சில்லேஷ்தா” எனப்பட்டனர்.

556) கூற்றுகளை ஆராய்க

1. பீஜப்பூரில் கட்டப்பெற்ற இப்ராகீம் ரௌஸாவிற்கும், அகமத் நகரிலுள்ள பாரபாக் ஆகியவற்றிற்கும் தக்காண சுல்தானிக்கலையே அடிப்படையாகும்.

2. பாமினி சுல்தான்கள் பரந்த மனப்பான்மையுடன் விளங்கினர். பாமினி சுல்தான்கள் ஆட்சிக்காலம், இந்தியக்கலை கட்டடக்கலை போன்றவற்றில் மாற்றத்தை உருவாக்கியது எனலாம்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. பீஜப்பூரில் கட்டப்பெற்ற இப்ராகீம் ரௌஸாவிற்கும், அகமத் நகரிலுள்ள பாரபாக் ஆகியவற்றிற்கும் தக்காண சுல்தானிக்கலையே அடிப்படையாகும்.

2. பாமினி சுல்தான்கள் பரந்த மனப்பான்மையுடன் விளங்கினர். பாமினி சுல்தான்கள் ஆட்சிக்காலம், இந்தியக்கலை கட்டடக்கலை போன்றவற்றில் மாற்றத்தை உருவாக்கியது எனலாம்.

557) பாமினி அரசு அளித்த கொடை என்ன?

A) பாமினி அரசு காலத்தில் எண்ணற்ற மசூதிகள், நூலகங்கள் கட்டப்பட்டன.

B) தென்னிந்தியாவில் மதராசாக்கள் மூலம் முஸ்லீம்களுக்கு முதன்முதலில் கல்வியை கற்பித்தவர்கள் இவர்களே ஆவார்கள்.

C) முகமது கவானின் நிர்வாக சீர்த்திருத்தங்கள் பிற்கால இஸ்லாமிய சுல்தானுக்கு முன்னோடியாக திகழ்ந்தன.

D) அனைத்தும்

விளக்கம்: பாமினி அரசு காலத்தில் எண்ணற்ற மசூதிகள், நூலகங்கள் கட்டப்பட்டன.

தென்னிந்தியாவில் மதராசாக்கள் மூலம் முஸ்லீம்களுக்கு முதன்முதலில் கல்வியை கற்பித்தவர்கள் இவர்களே ஆவார்கள்.

முகமது கவானின் நிர்வாக சீர்த்திருத்தங்கள் பிற்கால இஸ்லாமிய சுல்தானுக்கு முன்னோடியாக திகழ்ந்தன.

558) பாமினி அரசு அளித்த கொடை என்ன?

A) குல்பர்க்காவில் உள்ள ஜும்மா மசூதி, கோல்கொண்டா கோட்டை, கோல்கும்பாஸ் கட்டடம் ஆகியவை இந்தியக் கட்டடக்கலைக்குப் பாமினி அரசின் கொடையாகும்.

B) நிலமானிய முறைப்படி தென்னிந்தியாவில் ஏற்படுத்தப்பட்ட முதல் இஸ்லாமிய அரசு இதுவாகும்.

C) முதலாம் முகமது ஷாவின் சீர்த்திருத்தங்கள் பிற்கால பாமினி சுல்தான்கள் மற்றும் மராத்தியர்களுக்கு முன்னோடியாகத திகழ்ந்தன.

D) அனைத்தும்

விளக்கம்: குல்பர்க்காவில் உள்ள ஜும்மா மசூதி, கோல்கொண்டா கோட்டை, கோல்கும்பாஸ் கட்டடம் ஆகியவை இந்தியக் கட்டடக்கலைக்குப் பாமின் அரசின் கொடையாகும்.

நிலமானிய முறைப்படி தென்னிந்தியாவில் ஏற்படுத்தப்பட்ட முதல் இஸ்லாமிய அரசு இதுவாகும்.

முதலாம் முகமது ஷாவின் சீர்த்திருத்தங்கள் பிற்கால பாமினி சுல்தான்கள் மற்றும் மராத்தியர்களுக்கு முன்னோடியாகத திகழ்ந்தன.

559) முகலாயப் பேரரசை இந்தியாவில் தோற்றுவித்தவர் யார்?

A) பாபர்

B) ஹீமாயூன்

C) அக்பர்

D) ஷாஜகான்

விளக்கம்: பாபர் என்பவரால் கி.பி. (பொ.ஆ) 1526-ஆம் ஆண்டில் இந்தியாவில் முகலாயப் பேரரசு தோற்றுவிக்கப்பட்டது. ஹீமாயூன், அக்பர், ஜஹாங்கீர், ஷாஜகான், ஒளரங்கசீப் ஆகியோர் முகலாயர்களின் முக்கிய மன்னர்களாவர். இவர்களின் ஆட்சிமுறையில் சமூக, பொருளாதார, சமயநிலை, நுண்கலைகள் போன்றவற்றில் வியத்தகு முன்னேற்றங்கள் ஏற்பட்டன.

560) பொருத்துக

அ. பாபர் – 1. அயினி அக்பரி

ஆ. குல்பதான் பேகம் – 2. பாபர் நாமா

இ. அபுல்பாசல் – 3. ஹீமாயூன் நாமா

A) 3, 2, 1

B) 2, 3, 1

C) 1, 3, 2

D) 2, 1, 3

விளக்கம்: பாபர் எழுதிய சுயசரிதையான பாபர் நாமா, அவரது மகள் குல்பதான் பேகம் எழுதிய ஹீமாயூன் நாமா, அபுல்பாசல் எழுதிய அயினி அக்பரி, அக்பர் நாமா ஆகிய நூல்களும், டாவர்னியர், பெர்னியர், மனூச்சி ஆகிய வெளிநாட்டவர்களின் குறிப்புகளும், பதேபூர்சிக்ரி, தாஜ்மஹால், ஜும்மா மசூதி, டெல்லி செங்கோட்டை போன்ற கட்டடங்களும் முகலாயர்களைப் பற்றி அறிவதற்கான சான்றுகளாகத் திகழ்கின்றன.

561) முகலாயப் பேரரசை எண்ணத்தில் கொண்டு பொருத்துக

அ. பேரரசு (பரந்த நிலப்பரப்பை ஆட்சி செய்த மன்னர்) – 1. பாதுஷா

ஆ. வகீல் – 2. தலைமை அமைச்சர்

இ. திவானி ஆலா – 3. நிதியமைச்சர்

ஈ. மீர்பஷி – 4. இராணுவத் தலைவர்

A) 1, 2, 3, 4

B) 3, 2, 4, 1

C) 1, 4, 3, 2

D) 4, 3, 2, 1

விளக்கம்: பேரரசு (பரந்த நிலப்பரப்பை ஆட்சி செய்த மன்னர்) – பாதுஷா

வகீல் – தலைமை அமைச்சர்

திவானி ஆலா – நிதியமைச்சர்

மீர்பஷி – இராணுவத் தலைவர்.

562) முகலாயப் பேரரசை எண்ணத்தில் கொண்டு பொருத்துக

அ. சதர்-உஸ்-சுடூர் – 1. சமயத்துறை அமைச்சர்

ஆ. கான்-இ-சாமன் – 2. உயர் அரண்மனை அலுவலர்

இ. தலைமை காஸி – 3. தலைமை நீதிபதி

A) 3, 2, 1

B) 2, 1, 3

C) 1, 3, 2

D) 1, 2, 3

விளக்கம்: சதர்-உஸ்-சுடூர் – சமயத்துறை அமைச்சர்

கான்-இ-சாமன் – உயர் அரண்மனை அலுவலர்

தலைமை காஸி – தலைமை நீதிபதி.

563) முகலாயப் பேரரசை எண்ணத்தில் கொண்டு பொருத்துக

அ. தரோகா-இ-தாக் – 1. ஒற்றர் துறையின் தலைவர்

ஆ. மீர்-ஐ-அடிஷ் – 2. பீரங்கிப் படைத்தலைவர்

இ. மீர்-ஐ-பஹரி – 3. சிறுகப்பற்படையின் தலைவர்

ஈ. மீர்பார் – 4. காடுகளின் பொறுப்பாளர்

உ. மீர்தோசக் – 5. அவைச்சடங்குகளின் பொறுப்பாளர்

A) 1, 2, 3, 4, 5

B) 1, 3, 4, 2, 5

C) 1, 4, 5, 3, 2

D) 1, 4, 3, 5, 2

விளக்கம்: தரோகா-இ-தாக் – ஒற்றர் துறையின் தலைவர்

மீர்-ஐ-அடிஷ் – பீரங்கிப் படைத்தலைவர்

மீர்-ஐ-பஹரி – சிறுகப்பற்படையின் தலைவர்

மீர்பார் – காடுகளின பொறுப்பாளர்

மீர்தோசக் – அவைச்சடங்குகளின் பொறுப்பாளர்

564) முகலாயப் பேரரசில் மைய அரசு எத்தனை வகை வருவாய்களைப் பெற்றது?

A) 2

B) 4

C) 5

D) 8

விளக்கம்: மைய அரசின் 8 வகை வருவாய்கள்:

1. நிலவரி

2. சுங்கவரி

3. அன்பளிப்பு

4. அக்கசாலை

5. ஸகாத்

6. வாரிசற்ற மன்சப்தார் சாத்து

7. உப்பு வரி

8. கர்காணா.

ஆகியவை மூலம் பெறப்பட்ட வருவாய்.

565) முகலாயப் பேரரசின் நிலவருவாய் முறையை வரையறுத்தவர் யார்?

A) பாபர்

B) அக்பர்

C) ஹீமாயூன்

D) ஷாஜகான்

விளக்கம்: முகலாயப் பேரரசின் நிலவருவாய் முறையை அக்பர் வரையறுத்தார். “ராஜா தோடர்மால்” என்ற நில வருவாய்த் துறை அமைச்சரின் ஆலோசனைப்படி, “ஜப்தி” என்ற முறையை அக்பர் செயல்படுத்தினார்.

566) முகலாயர்கள் காலத்தில் விளைச்சலின் அடிப்படையில் நிலங்கள் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டது?

A) 2

B) 4

C) 6

D) 5

விளக்கம்: விளைச்சலின் அடிப்படையில் நிலங்கள்:

1. பொலாஜ்

2. பரௌதி

3. சச்சார்

4. பான்சார் ஆகிய 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டு, வரி வசூல் செய்யப்பட்டது.

567) கூற்றுகளை ஆராய்க

1. பீஜப்பூரிலுள்ள கோல்கும்பாஸ் “முணுமுணுக்கும் அரங்கம்” என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.

2. கோல்கும்பாஸ்-இல் உள்ள அரங்கத்தின் ஒரு மூலையில் நின்று, மெல்லப் பேசினாலே, அதன் எதிரொலியை எதிர்முனையில் துல்லியமாகக் கேட்க முடியும் என்ற கட்டடக்கலை அமைப்பு முறையில் கட்டப்பட்டுள்ளது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. பீஜப்பூரிலுள்ள கோல்கும்பாஸ் “முணுமுணுக்கும் அரங்கம்” என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.

2. கோல்கும்பாஸ்-இல் உள்ள அரங்கத்தின் ஒரு மூலையில் நின்று, மெல்லப் பேசினாலே, அதன் எதிரொலியை எதிர்முனையில் துல்லியமாகக் கேட்க முடியும் என்ற கட்டடக்கலை அமைப்பு முறையில் கட்டப்பட்டுள்ளது.

568) “மன்சப்தாரி” முறைப் பற்றிய சரியானக் கூற்றைத் தேர்க.

A) கி.பி (பொ.ஆ). 1571-ஆம் ஆண்டு அக்பர் ஏற்படுத்திய படைநிர்வாக முறை ‘மன்சப்தாரி’ ஆகும்.

B) ‘மன்சப்’ என்ற அரபுச் சொல்லுக்கு ‘தரம்’ அல்லது ‘தகுதி’ என்று பொருள்

C) 10 முதல் 10, 000 வரையிலான தரவரிசை அடிப்படையில் வீரர்கள் பிரிக்கப்பட்டனர்

D) அனைத்தும் சரி

விளக்கம்: கி.பி (பொ.ஆ). 1571-ஆம் ஆண்டு அக்பர் ஏற்படுத்திய படைநிர்வாக முறை ‘மன்சப்தாரி’ ஆகும்.

‘மன்சப்’ என்ற அரபுச் சொல்லுக்கு ‘தரம்’ அல்லது ‘தகுதி’ என்று பொருள்

10 முதல் 10, 000 வரையிலான தரவரிசை அடிப்படையில் வீரர்கள் பிரிக்கப்பட்டனர்.

569) முகலாயர்களின் சமூக நிலைப் பற்றி ஆராய்க

A) இந்துக்கள், இஸ்லாமியர்கள் கொண்ட புதிய சமூக கட்டமைப்பு முகலாயர்கள் காலத்தில் நிலைபெற்றது.

B) இந்துக்களில் ராஜபுத்திரர்கள், பிராமணர்கள், வணிகர்கள் போன்றோர் உயர்ந்த நிலையிலிருந்தனர். இவர்கள் தத்தம் தொழில்களைச் சிறப்பாகச் செய்தனர்.

C) போர் வீரர்கள், மதகுருமார்கள், கைவினைஞர்கள், உலோகத் தொழில் செய்வோர், சமூகத்தில் முக்கிய இடம் பெற்றனர்

D) அனைத்தும்

விளக்கம்: இந்துக்கள், இஸ்லாமியர்கள் கொண்ட புதிய சமூக கட்டமைப்பு முகலாயர்கள் காலத்தில் நிலைபெற்றது.

இந்துக்களில் ராஜபுத்திரர்கள், பிராமணர்கள், வணிகர்கள் போன்றோர் உயர்ந்த நிலையிலிருந்தனர். இவர்கள் தத்தம் தொழில்களைச் சிறப்பாகச் செய்தனர்.

போர் வீரர்கள், மதகுருமார்கள், கைவினைஞர்கள், உலோகத் தொழில் செய்வோர், சமூகத்தில் முக்கிய இடம் பெற்றனர்

570) கூற்றுகளை கவனி

1. இஸ்லாமியர்களின் அரசு நடைபெற்றதால், முகலாயர்கள் காலத்தில் அரேபிய, துருக்கிய, மங்கோலிய, அபிசீனிய, ஆப்கானிய முஸ்லீம்கள் முக்கியத்துவம் பெற்றனர்.

2. ஷேக்சதாஸ் எனப்பட்ட இந்திய முஸ்லீம்களுக்குச் சமூகத்தில் உயர் மதிப்பு இருந்தது

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. இஸ்லாமியர்களின் அரசு நடைபெற்றதால், முகலாயர்கள் காலத்தில் அரேபிய, துருக்கிய, மங்கோலிய, அபிசீனிய, ஆப்கானிய முஸ்லீம்கள் முக்கியத்துவம் பெற்றனர்.

2. ஷேக்சதாஸ் எனப்பட்ட இந்திய முஸ்லீம்களுக்குச் சமூகத்தில் உயர் மதிப்பு இருந்தது.

571) முகலாயர் காலத்தில் மகளிர் நிலை பற்றிய சரியானக் கூற்றை தெரிவு செய்க

A) சமூகத்தில் ஆணாதிக்கம் முக்கியத்துவம் பெற்றாலும், ராஜபுத்திர, முகலாய அரசகுலப் பெண்களுக்கு அடிப்படைக் கல்வி மற்றும் சமயம் சார்ந்த கருத்துக்கள் போதிக்கப்பட்டன.

B) இக்காலப் பெண்கள் குழந்தைத் திருமணமுறையால் பாதிக்கப்பட்டனர்

C) விதவைகள் மறுமணம் ஆதரிக்கப்படவில்லை

D) அனைத்தும் சரி

விளக்கம்: சமூகத்தில் ஆணாதிக்கம் முக்கியத்துவம் பெற்றாலும், ராஜபுத்திர, முகலாய அரசகுலப் பெண்களுக்கு அடிப்படைக் கல்வி மற்றும் சமயம் சார்ந்த கருத்துக்கள் போதிக்கப்பட்டன.

இக்காலப் பெண்கள் குழந்தைத் திருமணமுறையால் பாதிக்கப்பட்டனர்

விதவைகள் மறுமணம் ஆதரிக்கப்படவில்லை.

572) கூற்றுகளை ஆராய்க

1. இந்துக்களுக்கு என்று முகலாயர் காலத்தில் தொடக்கக் கல்வி நிறுவனங்களிலும், பாடசாலைகளிலும் அரசகுடும்பத்தினருக்கு அரண்மனையிலும் கல்வி பயிற்றுவிக்கப்பட்டது.

2. மக்தப், மராஸா என்ற உயர்கல்வி நிறுவனங்களும் இஸ்லாமியர்களுக்குக் கல்வியைப் போதித்தன

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் சரி

விளக்கம்: 1. இந்துக்களுக்கு என்று முகலாயர் காலத்தில் தொடக்கக் கல்வி நிறுவனங்களிலும், பாடசாலைகளிலும் அரசகுடும்பத்தினருக்கு அரண்மனையிலும் கல்வி பயிற்றுவிக்கப்பட்டது.

2. மக்தப், மராஸா என்ற உயர்கல்வி நிறுவனங்களும் இஸ்லாமியர்களுக்குக் கல்வியைப் போதித்தன.

573) முகலாயர் காலத்தில், இஸ்லாமியக் கல்வி முறையின் பயிற்று மொழியாக இருந்தது எது?

A) பாலி

B) சமஸ்கிருதம்

C) உருது

D) பாரசீகம்

விளக்கம்: பனாரஸ், நாதியா, அயோத்தி, மதுரா, அலகாபாத், உஜ்ஜயினி போன்ற இடங்களில் இந்துக்களுக்கான கல்வி நிறுவனங்கள் இருந்தன. டெல்லி, ஆக்ரா, பதேப்பூர் சிக்ரி, லாகூர் ஆகிய இடங்களில் இஸ்லாமிய உயர்கல்வி நிலையங்கள் இருந்தன. பாரசீக மொழி, அரசவை மொழியாகவும், இஸ்லாமியக் கல்வி முறையின் பயிற்று மொழியாகவும் இருந்தது.

574) முகலாயர் காலத்தில் முக்கிய தொழில் என்ன?

A) வேளாண்மை

B) போரிடல்

C) கொள்ளையடித்தல்

D) அனைத்தும்

விளக்கம்: முகலாயர்கள் காலத்தில் வேளாண்மை முக்கியத் தொழிலாக இருந்தது. கோதுமை, நெல், பருப்பு வகைகள், பார்லி, பருத்தி, கரும்பு, அவுரி, எண்ணெய் வித்துக்கள் ஆகியவை பயிரிடப்பட்டன 17-ஆம் நூற்றாண்டில் புகையிலை, மக்காச்சோளம், உருளைக்கிழங்கு, மிளகாய் போன்ற வேளாண்மைப் பயிர்கள் இவர்கள் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.

575) முகலாயர் காலத்தில், உள்நாட்டு வாணிகத்தில் ஈடுபட்ட வணிகர்கள் எவ்வாறு அடைக்கப்பட்டனர்?

A) சேக்

B) போரா

C) பானிக்

D) பஞ்சாரங்கள்

விளக்கம்: அயல்நாட்டு வாணிகத்தில் ஈடுபட்ட வணிகர்கள் – சேத் மற்றும் போரா

உள்நாட்டு வாணிகத்தில் ஈடுபட்ட வணிகர்கள் – பானிக்

மொத்த தானிய வாணிகத்தில் ஈடுபட்ட வணிகர்கள் – பஞ்சாராக்கள்.

576) முகலாயர் காலத்தில், எங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்ட சர்க்கரை, அரிசி, மெல்லிய மஸ்லின் துணிகள், பட்டாடைகள் போன்றவை ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன?

A) மகாராஷ்டிரா

B) பீகார்

C) டெல்லி

D) வங்காளம்

விளக்கம்: வங்காத்தில் சர்க்கரை, அரிசி, மெல்லிய மஸ்லின் துணிகள், பட்டாடைகள் ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டு மத்திய ஆசிய நாடுகளுக்கு முகலாயர் காலத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டன.

577) முகலாயர் காலத்தில், ஜவுளி ஏற்றுமதி மையமாக விளங்கிய இடம் எது?

A) சோழ மண்டலக் கடற்கரை

B) மேற்கு கடற்கரை

C) கொல்கத்தா துறைமுகம்

D) குஜராத் துறைமுகம்

விளக்கம்: வங்காளத்தில் சர்க்கரை, அரிசி, மெல்லிய மஸ்லின் துணிகள், பட்டாடைகள் ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டு மத்திய ஆசிய நாடுகளுக்கு முகலாயர் காலத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டன. ஜவுளி ஏற்றுமதி மையமாக சோழ மண்டலக் கடற்ரைத் திகழ்ந்தது.

578) முகலாயர் காலத்தில் ஆடம்பரப் பொருட்களின் விற்பனை மையமாகத் திகழ்ந்த இடம் எது?

A) காஷ்மீர்

B) டெல்லி

C) குஜராத்

D) மகாராஷ்டிரா

விளக்கம்: காஷ்மீர் சால்வைகள், கம்பளிவிரிப்புகள், ஆடம்பரப் பொருட்கள் போன்வற்றின் விற்பனை மையமாக ‘குஜராத்’ திகழ்ந்தது. காரீயம், செம்பு, போர்க்குதிரைகள், தந்தம் போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன.

579) முகலாயர் காலத்தில் அழகிய மண்பாண்டங்கள் செய்யப்பட்ட இடம் எது?

A) டெல்லி

B) பனாரஸ்

C) குனார்

D) அனைத்தும்

விளக்கம்: டெல்லி, பனாரஸ், சூனார் ஆகிய இடங்களில் அழகிய மட்பாண்டங்களும், குஜராத் பகுதியில் பருத்தி ஆடைகளும் தயாரிக்கப்பட்டன. இவை அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

580) அக்பர் காலத்தில் இருந்த ‘கர்க்காணாக்கள்’ எனப்படுவது என்ன?

A) வரி வசூலிக்கும் அலுவலகம்

B) விளைநிலம்

C) மானிய நிலம்

D) தொழிற்சாலை

விளக்கம்: அக்பர் காலத்தில் 1000-க்கும் மேற்பட்ட ‘காக்காணாகள்’ என்ற தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்பட்டதாக ‘அபுல்பாசல்’ கூறுகிறார். இந்தியப் பருத்தியாடைகளைச் சீனா, ஜப்பான், பாரசீக, எகிப்திய, அரேபிய, ஐரோப்பிய வணிகர்கள் விரும்பி வாங்கினர்.

581) முகலாயர் காலத்தில் ‘சர்க்கார்’ என்பவை என்ன?

A) மாநிலம்

B) மாவட்டம்

C) வட்டம்

D) கிராமம்

விளக்கம்: பேரரசு சுபாக்கள் என்ற மாநிலங்களாகவும், சுபாக்கள், சர்க்கார் என்ற மாவட்டங்களாகவும், சர்க்கார் பர்கானக்கள் என்ற வட்டங்களாகவும் பிரிக்கப்பட்டன.

பேரரசு-சுபாக்கள்-சர்க்கார்கள்-பர்க்கானாக்கள்

சுபாக்கள் என்ற மாநிலங்களைச் “சுபேதார்” என்பவர் ஆட்சி செய்தார்.

582) பொருத்துக

அ. திவான் – 1. சமயத்துறை அமைச்சர்

ஆ. மாநில சதர் – 2. மாநில நிதியமைச்சர்

அ. மாநில பஷி – 3. நகரச் சிறப்பு நிர்வாக அலுவலர்

ஈ. கொத்வால் – 4. வழக்கு அலுவலர்

A) 4, 3, 2, 1

B) 3, 4, 1, 2

C) 2, 1, 4, 3

D) 4, 1, 3, 2

விளக்கம்: முகலாயப் பேரரசு காலத்தில், சுபாக்கள் என்ற மாநிலங்களைச் ‘சுபேதார்’ ஆட்சி செய்தார். அவருக்கு உதவ ‘திவான்’ என்ற மாநில நிதியமைச்சர், ‘மாநில சதர்’ என்ற சமயத்துறை அமைச்சர், ‘மாநில பாஷி’ என்ற வழக்கு அலுவலர், ‘கொத்வால்’ என்ற நகரச் சிறப்பு நிர்வாக அலுவலர் போன்றோர் கொண்ட மாநில அமைச்சரவை செயல்பட்டது.

583) பொருத்துக.

அ. சுபாக்கள் – 1. சுபேதார்

ஆ. சர்க்கார்கள் – 2. பாஜ்தார்

இ. பார்கானாக்கள் – 3. ஷிக்தார்

A) 2, 1, 3

B) 3, 1, 2

C) 1, 3, 2

D) 1, 2, 3

விளக்கம்: முகலாயப் பேரரசுக் காலத்தில், சுபாக்களை ‘சுபேதார்’ என்பவரும், சர்க்கார்களை ‘பாஜ்தார்’ என்பவரும், பர்க்கானாக்களை ‘ஷிக்தார்’ என்பவரும் ஆட்சி செய்தனர். பிடிக்ஷி, பொட்தார், அமால் குஜார் போன்ற அலுவலர்கள் மாநில, மாவட்ட அரசு நிர்வாகத்திற்கு உதவினர்.

584) கூற்றுகளை கவனி.

1. முகலாயர் காலத்தில் இஸ்லாமிய சமய அடிப்படையிலான அரசு நடைபெற்றது என்றாலும் அக்பர் சமய சார்பற்றவராகவே இருந்தார்.

2. ராஜபுத்திரர்களுடன் கொண்டிருந்த நட்பின் காரணமாகக் கி.பி.1563-இல் புனிதப் பயணிகள் மீதான வரியையும், கி.பி 1564-இல் இஸ்லாமியரல்லாதோர் செலுத்திய “ஜிசியா” என்ற வரியையும் நீக்கினார்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. முகலாயர் காலத்தில் இஸ்லாமிய சமய அடிப்படையிலான அரசு நடைபெற்றது என்றாலும் அக்பர் சமய சார்பற்றவராகவே இருந்தார்

2. ராஜபுத்திரர்களுடன் கொண்டிருந்த நட்பின் காரணமாகக் கி.பி.1563-இல் புனிதப் பயணிகள் மீதான வரியையும், கி.பி 1564-இல் இஸ்லாமியரல்லாதோர் செலுத்திய “ஜிசியா” என்ற வரியையும் நீக்கினார்.

585) அக்பர் காலம் பற்றிய சரியானக் கூற்றைத் தேர்வு செய்க

A) அக்பர் காலத்தில், இந்துக்கள் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினர்

B) இந்துக்களிடத்தில் சதி, ஜௌஹார் என்ற முறைகளை (இந்துப்பெண்கள் தீக்குளிக்கும் முறை) எதிர்த்தார்.

C) கி.பி. (பொ.ஆ) 1575-இல் இபாதத்கானா என்ற சமய பிரார்த்தனை மற்றும் விவாதக் கூடத்தை நிறுவிய இவர் கி.பி. (பொ.ஆ) 1579-இல் தவறுபடா ஆணையை வெளியிட்டார்.

D) அனைத்தும் சரி

விளக்கம்: அக்பர் காலத்தில், இந்துக்கள் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினர்

இந்துக்களிடத்தில் சதி, ஜௌஹார் என்ற முறைகளை (இந்துப்பெண்கள் தீக்குளிக்கும் முறை) எதிர்த்தார்.

கி.பி. (பொ.ஆ) 1575-இல் இபாதத்கானா என்ற சமய பிரார்த்தனை மற்றும் விவாதக் கூடத்தை நிறுவிய இவர் கி.பி. (பொ.ஆ) 1579-இல் தவறுபடா ஆணையை வெளியிட்டார்.

சமய விவகாரத்தில் மன்னர் தவறிழைக்கப்பட்டார் என்று மன்ன ர் வெளியிடும் அறிவிப்பே “தவறுபடா ஆணை” ஆகும்.

586) “தீன் இலாகி” என்ற புதிய சமயத்தைத் தோற்றுவித்தவர் யார்?

A) பாபர்

B) அக்பர்

C) அலாவுதீன்

D) ஜஹாங்கீர்

விளக்கம்: இந்து, இஸ்லாம், கிறித்துவம், சமணம் உள்ளிட்ட பல சமய அறிஞர்களுடன் கலந்துரையாடலில் ‘அக்பர்’ ஈடுபட்டார். இவ்வரையாடலில் புருஷோத்தம், தேவி (இந்துமதம்), மெகர்ஜிராணா (ஜொராஸ்டிரிய மதம்) அக்வாவிபா, மான்சரேட் (கிறித்துவம்) ஹிர விஜய சூரி (சமண மதம்) ஆகியோர் பங்கு பெற்றனர். உரையாடலின் விளைவாக அக்பர் ‘தீன் இலாகி’ (தெய்வீக சமயம்) என்ற புதிய சமயத்தை தோற்றுவித்தார்.

587) சீக்கியர்களின் பொற்கோயில் எங்குள்ளது?

A) புவனேஸ்வர்

B) பாட்னா

C) ஆக்ரா

D) அமிர்தசரஸ்

விளக்கம்: அக்பர் இந்து, இஸ்லாம், சீக்கிய சமயத்தவரைச் சமமாக நடத்தினார். சீக்கியர்களுடன் நல்லுறவு கொண்டிருந்ததன் அடையாளமாக அவர்களுக்குப் பொற்கோயில் (அமிர்தசரஸ்) கட்ட நிலம் தானமாக வழங்கப்பட்டது. ஜஹாங்கீர், ஷாஜகான், ஒளரங்கசீப் ஆகியோர் சமய விவகாரங்களில் அக்பரைப்போல தாராள மனத்துடன் செயல்படாததால், இஸ்லாமியரல்லாத மக்களின் ஆதரவை இழந்தனர்.

588) “புலந்தர்வாசா” என்பது என்ன?

A) பதேபூர் சிக்ரி நுழைவுவாயில்

B) ஹீமாயூன் கல்லறை

C) சிக்கந்தாரா நுழைவுவாயில்

D) ஷாஜஹான் கல்லறை

விளக்கம்: பாபர், ஹீமாயூன் ஆகியோர் காலத்தைவிட அக்பர், ஷாஜஹான் காலத்தில்தான் கட்டக்கலை வளர்ச்சிபெற்றது. செங்கற்களாலான கட்டடங்கள் அக்பர் காலத்தில் கட்டப்பட்டன. கட்டடங்கள் கட்டுவதில் பாரசீக பாணி பின்பற்றப்பட்டது. அக்பர் காலத்தில் ஹீமாயூனிற்குக் கல்லறை, பதேபூர் சிக்ரியில் பல அழகிய கட்டடங்கள், புலந்தர்வாசா (பதேபூர் சிக்ரியின் நுழைவுவாயில்) போன்றவை கட்டப்பட்டன. அக்பருக்குப்பின் ஆட்சிக்கு வந்த ஜஹாங்கீர், சிக்கந்தாரா என்ற இடத்தில் அக்பரின் கல்லறையைக் கட்டினார்.

589) யாருடைய காலம் “முகலாயக் கட்டடக்கலையின் பொற்காலம்” எனப்படுகிறது?

A) அக்பர்

B) பாபர்

C) ஹீமாயூன்

D) ஷாஜஹான்

விளக்கம்: ஷாஜஹான் காலத்தில் முகலாயக் கட்டடக்கலை அதன் புகழின் உச்சத்தை அடைந்தது. இவரது காலம் முகலாயக் கட்டடக்கலையின் பொற்காலம் என்றழைக்கப்பட்டது. ஷாஜகான் காலத்தில் கட்டப்பட்ட மிகச்சிறந்தக் கட்டடம் ‘தாஜ்மஹால்’ ஆகும்.

590) ‘அர்ஜுமன் பானு பேகம்’ என்பவர் யாருடைய மனைவி?

A) அக்பர்

B) பாபர்

C) ஹீமாயூன்

D) ஷாஜஹான்

விளக்கம்: ‘அர்ஜுமன் பானு பேகம்’ என்ற இயற்பெயர் கொண்ட மும்தாஜ் ஷாஜகானின் மனைவி ஆவார். இவரின் நினைவாக ஆக்ராவில் யமுனை நதியோரத்தில் ‘தாஜ்மஹால்’ கட்டப்பட்டது. இந்திய, பாரசீக, ஆப்கான், துருக்கி உள்ளிட்ட நாடுகளின் கட்டக்கலை வல்லுநர்கள் தாஜ் மஹாலின் கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

591) தாஜ்மஹாலின் கட்டுமானப் பணியை ஒருங்கிணைத்தவர் யார்?

A) உஸ்தாத் அகமதுலஹாரி

B) சாதுல்லாகான்

C) பியட்ராடியூரா

D) ஷாஜஹான்

விளக்கம்: தாஜ்மஹாலின் கட்டுமானப் பணியை சாதுல்லாகான் என்ற அதிகாரி மேற்பார்வையிட்டார். இது வெள்ளைப்பளிங்குக் கற்களால் கட்டப்பட்டது. இப்பளிங்குக் கற்கள் மெகர்க்ரானா என்ற பகுதியிலிருந்து பெறப்பட்டது. தாஜ்மகாலின் கட்டுமானப் பணியை ஒருங்கிணைத்துத் தந்தவர் “உஸ்தாத் அகமதுலஹாரி” என்பவராவார். இதிலுள்ள அழகிய பூ வேலைப்பாடுகளுக்கு ‘பியட்ராடியூரா’ என்று பெயர்.

592) கூற்றுகளை ஆராய்க

1. டெல்லியில் செங்கோட்டை, ஜும்மா மசூதி போன்றவை ஷாஜஹான் காலத்தில் கட்டப்பட்டன.

2. மோதி மசூதி, முத்து மசூதி, திவானி காஸ், திவானி; ஆம் போன்றவையும் இவரது காலத்தில் கட்டப்பட்ட பிற கட்டடங்களாகும்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. டெல்லியில் செங்கோட்டை, ஜும்மா மசூதி போன்றவை ஷாஜஹான் காலத்தில் கட்டப்பட்டன.

2. மோதி மசூதி, முத்து மசூதி, திவானி காஸ், திவானி; ஆம் போன்றவையும் இவரது காலத்தில் கட்டப்பட்ட பிற கட்டடங்களாகும்.

593) ‘தாரிக் இ ரஷீத்’ என்ற நூல் யாரைப் பற்றிய தகவல்களைத் தருகிறது?

A) மிர்சா வைதர்

B) பாபர், ஹீமாயூன்

C) அக்பர்

D) ஷாஜஹான்

விளக்கம்: ‘தாரிக் இ ரஷீதி’ என்ற நூலை மிர்சா ஹைதர் என்பவர் எழுதினார். இந்நூல் பாபர், ஹீமாயூன் ஆகியோர் பற்றிய தகவல்களைத் தருகிறது.

594)’தபாகத்-இ-அக்பரி’ என்ற நூல் யாருடைய ஆட்சி முறையைக் குறிப்பிடுகிறது?

A) மிர்சா வைதர்

B) பாபர், ஹீமாயூன்

C) அக்பர்

D) ஷாஜஹான்

விளக்கம்: ‘நிஜாம உத்தின் பஷி’ என்பவர் எழுதிய ‘தபாகத்-இ-அக்பரி’ என்ற நூல் அக்பரின் ஆட்சிமுறையைக் குறிப்பிடுகிறது. முகலாய மன்னரான ஜஹாங்கீர் ‘துசுக்-இ-ஜஹாங்கிரி’ என்ற சுயசரிதை நூலை எழுதினார்.

595) ரோஜா இதழ்களாலான வாசனை திரவியத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?

A) ஜஹாங்கீர்

B) மும்தாஜ்

C) நூர்ஜஹான்

D) ரஷியா

விளக்கம்: ஜஹாங்கீரின் மனைவியான நூர்ஜஹான் ரோஜா இதழ்களாலான வாசனை திரவியத்தை அறிமுகப்படுத்தினார். முகலாயர்களின் வாணிகத்தில் இத்திரவியம் முக்கியத்துவம் பெற்றது. இது முகலாயர் இந்தியப் பண்பாட்டிற்கு அளித்த கொடையாகும்.

596) தாஜ்மஹால் உலகப் பாரம்பரியச் சின்னமாக எப்போது அறிவிக்கப்படடது?

A) 1983

B) 1984

C) 1989

D) 1990

விளக்கம்: தாஜ்மாலை உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ கி.பி.(பொ.ஆ) 1983-இல் அங்கீகரித்தது.

597) ‘நக்காரா’ என்ற இசைக் கருவியை வாசிப்பதில் வல்லவர் யார்?

A) அக்பர்

B) பாபர்

C) ஹீமாயூன்

D) ஷாஜஹான்

விளக்கம்: முகலாய மன்னரான அக்பர் ஆட்சிக்காலத்தில் இசைக்கலை முக்கியத்துவம் பெற்றது. ‘நக்காரா’ என்ற இசைக் கருவியை வாசிப்பதில் அக்பர் வல்லவராகத் திகழ்ந்தார். இவரது அரசவையை ‘மியான்தான்சேன்’ என்ற இசைக்கலைஞர் அலங்கரித்தார். ஜஹாங்கீர் மற்றும் ஷாஜஹான் காலத்தில் இசைக்கலைஞர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.

598) மத்திய, மாநில, நகர, கிராம என்ற நிர்வாக அடுக்கு முறைகள் யார் அறிமுகப்படுத்திய முறை?

A) மௌரியர்கள்

B) குஷாணர்கள்

C) குப்தர்கள்

D) அரேபியர்கள்

விளக்கம்: மத்திய அரசு நிர்வாகத் துறைகள், மாநில அரசு நிர்வாகத் துறைகள், மாவட்ட ஆட்சிமுறை, நகர மற்றும் கிராம நிர்வாக சபைகள் போன்றவை இந்திய பண்பாட்டிற்குக் குப்தர்கள் வழங்கிய கொடைகளாகும்.

599) ரவி கீர்த்தி என்ற அறிஞர் யாருடைய அவையில் இருந்தார்?

A) முதலாம் புலிகேசி

B) இரண்டாம் புலிகேசி

C) முதலாம் சமுத்திரகுப்தர்

D) கனிஷ்கர்

விளக்கம்: ஐஹோலே கல்வெட்டைப் பொறித்தவர் ரவி கீர்த்தி. ரவி கீர்த்தி இரண்டாம் புலிகேசியின் அவையில் இருந்தார். இவர சமண சமயத்தைப் பின்பற்றினார்.

600) மீர்சையது அலி, அப்துல் சமது ஆகிய இரு ஓவியர்களும் யாரால் பாரசீகத்திலிருந்து இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டனர்?

A) பாபர்

B) அக்பர்

C) ஹீமாயூன்

D) ஷாஜகான்

விளக்கம்: மீர்சையது, அலி அப்துல் சமது ஆகிய இரு ஓவியர்களும், ஹீமாயூனால் பாரசீகத்திலிருந்து இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டனர். அக்பர் காலத்தில் இந்த ஓவியர்கள் புகழினை பெற்றனர். பல்வேறு இலக்கிய மற்றும் சமய நூல்களுக்கு உருவங்கள் (வரையப்பட்ட ஓவியம்) மூலம் விளக்கமளிக்கும் பணியை அக்பர் தொடங்கி வைத்தார்.

601) அக்பர் ஆதரித்த ஓவியக் கலைஞர் யார்?

A) பஸ்வான்

B) மிஸ்கினா

C) தஸ்வந்த்

D) அனைத்தும்

விளக்கம்: பஸ்வான், மிஸ்கினா, தஸ்வந்த் ஆகிய ஓவியக் கலைஞர்களை அக்பர் ஆதரித்தார். இவது காலத்தில் இராமாயணத்திலும், மகாபாரதத்திலும் இடம்பெற்றுள்ள கருத்துகளும், காட்சிகளும் ஓவியங்களாகத் தீட்டப்பட்டன.

602) “ஹம்சா நாமா” என்ற ஓவியத் தொகுப்பு யார் காலத்தில் உருவாக்கப்பட்டது?

A) பாபர்

B) அக்பர்

C) ஹீமாயூன்

D) ஷாஜகான்

விளக்கம்: ‘ஹம்சா நாமா’ என்ற ஓவியத் தொகுப்பு அக்பர் காலத்தில் உருவாக்கப்பட்டது. இத்தொகுப்பில் 1000-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் இடம் பெற்றிருந்தன. ஓவியர்கள் நீலம், சிகப்பு ஆகிய வண்ணங்களைத் தமது ஓவியங்களில் மிகுதியாகப் பண்படுத்தினர்.

603) யார் காலத்தில் ஓவியக்கலை அதன் புகழின் உச்சியை அடைந்தது?

A) அக்பர்

B) ஹீமாயூன்

C) ஷாஜகான்

D) ஜஹாங்கீர்

விளக்கம்: ஜஹாங்கீர் காலத்தில் ஓவியக்கலை அதன் புகழின் உச்சியை அடைந்தது. அபுல்ஹாசன், பிஷன்தாஸ், மது, ஆனந்த், கோவர்தன், உஸ்தாத் மன்சூர் ஆகிய ஓவியர்கள் இவர் காலத்தில் புகழ்பெற்றுத் திகழந்தனர். அரசன், அரசியர், அரசவை, வேட்டையாடுதல், போர்க்கருவிகள், விலங்குகள் போன்றவை இவர்கள் வரையும் ஓவியங்களில் முக்கியத்துவம் பெற்றன.

604) இந்திய இஸ்லாமியக் கலையின் ஒருங்கிணைப்பே டெல்லி சுல்தானிய கால கட்டக்கலை என்று குறிப்பிடுபவர் யார்?

A) அமீர்குஸ்ரு

B) இபன் பதூதா

C) பெர்கூசன்

D) யுவான் சுவாங்

விளக்கம்: இந்திய இஸ்லாமியக் கலையின் ஒருங்கிணைப்பே டெல்லி சுல்தானிய கால கட்டடக்கலை என்று பெர்கூசன் குறிப்பிடுகிறார். இந்தியக் கலையில் இஸ்லாமிய, கலை கலந்தமைக்குப் பல காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன.

605) முதன் முதலில் யாரால் இந்தியாவில் பீரங்கிப்படை அறிமுகப்படுத்தப்பட்டது?

A) பாபர்

B) ஹீமாயூன்

C) அக்பர்

D) ஷாஜகான்

விளக்கம்: முகலாய மன்னரான பாபரால் இந்தியாவில் முதன் முதலில் ‘பீரங்கிப்படை’ அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்தியாவின் படையமைப்பில் புதிய மாற்றத்தை உருவாக்கியது. இவரது “துலுக்மா” என்ற போர் முறை மராத்தியரின் ‘கொரில்லா போர்’ முறைக்கு அடிப்படையாக அமைந்தது.

606) இந்தியப் பண்பாட்டிற்கு முகலாயர்களின் கொடை என்ன?

A) முகலாயர் காலத்தில் அரேபிய, பாரசீக, துருக்கிய மொழிகள் வளர்ச்சி பெற்றன.

B) அக்பர் நிலவருவாய் முறை, ஜப்தி முறை, பிற்காலத்தில் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களின் நிலவருவாய் முறைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தது.

C) அக்பர் அவையில் ‘தான்சேன்’ இடம்பெற்றிருந்தார். பிற்காலத்தில் எழுந்த இந்திய இசையின் பரிணாம வளர்ச்சிக்கு இவர் வித்திட்டார்

D) அனைத்தும்

விளக்கம்: முகலாயர் காலத்தில் அரேபிய, பாரசீக, துருக்கிய மொழிகள் வளர்ச்சி பெற்றன.

அக்பர் நிலவருவாய் முறை, ஜப்தி முறை, பிற்காலத்தில் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களின் நிலவருவாய் முறைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தது.

அக்பர் அவையில் ‘தான்சேன்’ இடம்பெற்றிருந்தார். பிற்காலத்தில் எழுந்த இந்திய இசையின் பரிணாம வளர்ச்சிக்கு இவர் வித்திட்டார்.

607) பொருத்துக.

அ. அப்துல்ஹமீதுலாகூரி – 1. ஆலம்கீர் நாமா

ஆ. இனாயத்கான் – 2. ஷாஜகான் நாமா

இ. மிர்ஷா முகம்மதுகான் – 3. பாதுஷா நாமா

A) 3, 2, 1

B) 1, 3, 2

C) 1, 2, 3

D) 2, 3, 1

விளக்கம்: அப்துல்ஹமீதுலாகூரி எழுதிய ‘பாதுஷா நாமா’ என்ற நூலும், இனாயத்கான் எழுதிய ‘ஷாஜகான் நாமா’ என்ற நூலும் ஷாஜஹானின் ஆட்சிக்காலத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. மிர்சா முகம்மதுகான் எழுதிய ‘ஆலம்கீர் நாமா’ என்ற நூல் ஒளரங்கசீப்பின் ஆட்சிக்காலத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றது.

608) கூற்றுகளை ஆராய்க.

1. ஜஹாங்கீர் மனைவி நூர்ஜஹான் ஆவார். இவர் ரோஜா இதழாலான வாசனை திரவியத்தை அறிமுகப்படுத்தினார்.

2. பிரியாணியையும், மைதாவினாலான உணவு வகைகளையும் முகலாயர்கள் அறிமுகப்படுத்தினர்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. ஜஹாங்கீர் மனைவி நூர்ஜஹான் ஆவார். இவர் ரோஜா இதழாலான வாசனை திரவியத்தை அறிமுகப்படுத்தினார்.

2. பிரியாணியையும், மைதாவினாலான உணவு வகைகளையும் முகலாயர்கள் அறிமுகப்படுத்தினர்.

இவை முகலாயர்கள் இந்தியாவிற்கு அளித்த கொடையாகும்

609) பொருத்துக.

அ. காஷ்மீர் – 1. பங்க்சோர் தோட்டப்பூங்கா

ஆ. லாகூர் – 2. ஷாலிமர் தோட்டம்

இ. பஞ்சாப் – 3. நிஷத்பாக்

A) 3, 2, 1

B) 2, 1, 3

C) 1, 3, 2

D) 2, 3, 1

விளக்கம்: காஷ்மீரிலுள்ள நிஷத்பாக், லாகூரிலுள்ள ஷாலிமார் தோட்டம், பஞ்சாபிலுள்ள பங்க்சோர் தோட்டப்பூங்கா ஆகியவை இந்தியாவிற்கு முகலாயர்களின் கொடையாகும். அவை இன்றளவும் நிலைத்துள்ளன.

610) யாருடைய நீதிச் சங்கிலி முறை பிற்கால நீதி வழங்கும் முறைக்கு வழிகோலியது?

A) ஜஹாங்கீர்

B) ஒளரங்கசீப்

C) பாபர்

D) அக்பர்

விளக்கம்: ஜஹாங்கீரின் நீதிச் சங்கிலி முறை பிற்கால நீதி வழங்கும் முறைக்கு வழிகோலியது எனலாம். இது முகலாயர் இந்தியாவிற்கு அளித்த கொடையாகும்.

611) சரியானக் கூற்றைத் தெரிவு செய்க

A) மௌரியர்களின் காலத்தில் கல்வி, ஆட்சிமுறை, பண்பாடு, நுண்கலைகள் போன்றவை வியத்தகு வளர்ச்சியைப் பெற்றன.

B) அசோகர் காலத்தில் பரப்பபட்ட பௌத்தம், ஆசிய நாடுகளில் பரவி இந்தியாவின் பண்பாட்டை உலகிற்கே பறைசாற்றுகிறது

C) குப்தர்கள் காலத்தில், இந்துசமயம் மறுமலர்ச்சி பெற்றதாலும் கலை, கட்டடக்கலை, அறிவியல் போன்றவற்றில் வியத்தகு முன்னேற்றம் ஏற்ப்பட்டதாலும் இக்காலம் இந்தியாவின் செவ்வியல் காலம் என்றழைக்கப்பட்டது

D) அனைத்தும் சரி

விளக்கம்: மௌரியர்களின் காலத்தில் கல்வி, ஆட்சிமுறை, பண்பாடு, நுண்கலைகள் போன்றவை வியத்தகு வளர்ச்சியைப் பெற்றன.

அசோகர் காலத்தில் பரப்பபட்ட பௌத்தம், ஆசிய நாடுகளில் பரவி இந்தியாவின் பண்பாட்டடை உலகிற்கே பறைசாற்றுகிறது.

குப்தர்கள் காலத்தில், இந்துசமயம் மறுமலர்ச்சி பெற்றதாலும் கலை, கட்டடக்கலை, அறிவியல் போன்றவற்றில் வியத்தகு முன்னேற்றம் ஏற்ப்பட்டதாலும் இக்காலம் இந்தியாவின் செவ்வியல் காலம் என்றழைக்கப்பட்டது.

612) சரியானக் கூற்றை தெரிவு செய்க

A) குஷாணர்கள் காலத்தில் காந்தாரக் கலையின் சிறப்பம்சங்கள், இந்தியக் கலையில் தாக்கத்தை ஏற்படுத்தின.

B) சாளுக்கியர்கள், பல்லவர்கள் போன்றோர் காலத்தில் இலக்கியங்கள், கட்டடக்கலைகள் வளர்ச்சியடைந்தன

C) சோழர்கள் காலத்தில் இலக்கியம், கலை, கட்டடக்கலை போன்றவற்றில் வியத்தகு மாற்றம் ஏற்பட்டது

D) அனைத்தும் சரி

விளக்கம்: குஷாணர்கள் காலத்தில் காந்தாரக் கலையின் சிறப்பம்சங்கள், இந்தியக் கலையில் தாக்கத்தை ஏற்படுத்தின.

சாளுக்கியர்கள், பல்லவர்கள் போன்றோர் காலத்தில் இலக்கியங்கள், கட்டடக்கலைகள் வளர்ச்சியடைந்தன.

சோழர்கள் காலத்தில் இலக்கியம், கலை, கட்டடக்கலை போன்றவற்றில் வியத்தகு மாற்றம் ஏற்பட்டது.

613) கூற்றுகளை ஆராய்க

1. சோழர்களது கிராம ஆட்சிமுறை இன்றைய உள்ளாட்சி நிர்வாகத்திற்கு சிறந்த எடுத்துகாட்டாகத் திகழ்கிறது.

2. பாண்டியர்கள் காலத்தில் சைவ, வைணவ சமயங்கள் முக்கியத்துவம் பெற்றன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. சோழர்களது கிராம ஆட்சிமுறை இன்றைய உள்ளாட்சி நிர்வாகத்திற்கு சிறந்த எடுத்துகாட்டாகத் திகழ்கிறது.

2. பாண்டியர்கள் காலத்தில் சைவ, வைணவ சமயங்கள் முக்கியத்துவம் பெற்றன.

614) கூற்றுகளை ஆராய்க

1. விஜயநகர காலத்தில், நாயன்கார, ஆயக்கார முறை கிராம வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது.

2. உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழும் தாஜ்மகால் முகலாயர்களின் கட்டடக்கலை நுட்பத்திற்குச் சான்றாகத் திகழ்கிறது

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. விஜயநகர காலத்தில், நாயன்கார, ஆயக்கார முறை கிராம வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது.

2. உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழும் தாஜ்மகால் முகலாயர்களின் கட்டடக்கலை நுட்பத்திற்குச் சான்றாகத் திகழ்கிறது.

615) கூற்றுகளை கவனி

1. முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட பல கட்டடங்கள், இந்தியாவின் கட்டடக்கலையின் சிறப்பை உலகிற்கு எடுத்தியம்புகின்றன.

2. முகலாயர்கள் இந்தியாவில் பீரங்கிப்படை, ஜப்தி முறை, வாசனை திரவியம், பிரியாணி முதலியவற்றை அறிமுகம் செய்தனர்.

A) 1 மட்;டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட பல கட்டடங்கள், இந்தியாவின் கட்டடக்கலையின் சிறப்பை உலகிற்கு எடுத்தியம்புகின்றன.

2. முகலாயர்கள் இந்தியாவில் பீரங்கிப்படை, ஜப்தி முறை, வாசனை திரவியம், பிரியாணி முதலியவற்றை அறிமுகம் செய்தனர்.

616) குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ் என்ற நூலை எழுதியவர் யார்?

A) ஒட்டக்கூத்தர்

B) தண்டி

C) புகழேந்திப் புலவர்

D) ஜெயங்கொண்டார்

விளக்கம்: புகழேந்திப்புலவர் – நளவெண்பா

ஒட்டக்கூத்தர் – மூவருலா, குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ்

ஜெயங்கொண்டார் – கலிங்கத்துப்பரணி.

617) பாசுபதம் என்பது குப்தர்கள் காலத்தில் எந்த கடவுள் வழிபாட்டைக் குறிக்கும்?

A) விஷ்ணு

B) பிரம்மன்

C) சிவபெருமான்

D) முருகன்

விளக்கம்: குப்தர்கள் காலத்தில், சிவபெருமான் வழிபாடும் மக்களால் பின்பற்றப்பட்டது. வாகாடக, கடம்பவம்ச மன்னர்கள் சிவ வழிபாட்டைப் பெரிதும் பின்பற்றினர். ‘பாசுபதம்’ என்ற சிவ வழிபாட்டுப் பிரிவு வட இந்தியாவில் பரவியது. பிரம்மன், சூரியன், கார்த்திகேயன், கணேசன், துர்க்கை, சரஸ்வதி போன்ற கடவுளரும் மக்களால் வழிபடப்பட்டனர்.

618) கூற்று: மௌரியர்களின் காலம் ‘இந்தியச் செவ்வியல் கலைகளின் காலம்’ என்று அழைக்கப்பட்டது.

காரணம்;: மௌரியர்கள் காலத்தில் இந்துக் கடவுளர்களுக்கு கோயில்கள் கட்டப்பட்டன

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி

D) கூற்று, காரணம் இரண்டும் தவறு

விளக்கம்: குப்தர்கள் காலத்தில் இந்து சமயம் மெசபடோமியா பகுதிகளிலும், ஜாவா, சுமத்ரா, போர்னியோ ஆகிய தென்கிழக்காசிய நாடுகளிலும் பரவியது. குப்தர்கள் காலம், ‘இந்தியச் செவ்வியல் கலைகளின் காலம்’ என்றழைக்கப்படுகிறது. இந்துக் கடவுளர்களுக்குக் கோயில்கள் கட்டப்பட்டன.

619) கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் இந்தியப் பண்பாடு சிறப்புற்று இருந்ததாக கூறியவர் இட்சிக் என்ற அறிஞர். இவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

A) சீனா

B) மெசபடோமியா

C) வங்காளம்

D) பாபிலோனியா

விளக்கம்: கி.பி(பொ.ஆ) 7-ஆம் நூற்றாண்டில் ‘இந்தியப் பண்பாடு சிறப்புற்று இருந்ததாகச் சீனப்பயணி ‘இட்சிங்’, தமது குறிப்பில் குறிப்பிடுகிறார்.

620) கூற்று: பார்சுவநாதருக்கு பஸ்திஹள்ளியில் சமணர் கோயில் கட்டப்பட்டது. இங்குள்ள தூண்களை “மாயாஜால தூண்கள்” எனலாம்.

காரணம்: நம்முடைய உருவத்தைப் பிரதிபலித்துக் காட்டும் தன்மை உடையன.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: பார்சுவநாதருக்கு பஸ்திஹள்ளியில் சமணர் கோயில் கட்டப்பட்டது. இங்குள்ள தூண்களை “மாயாஜால தூண்கள்” எனலாம். இவை நம்முடைய உருவத்தைப் பிரதிபலித்துக் காட்டும் தன்மை உடையன.

621) ஆரியபட்டருக்கு பொருத்தமானது எது?

A) சூரியன் பூமியை வலம் வருகிறது

B) நிலா சூரியனை வலம் வருகிறது

C) பூமி சூரியனை வலம் வருகிறது

D) பூமி, சந்திரன் சூரியனை வலம் வருகிறது

விளக்கம்: ஆரியபட்டர், சூரியனைப் பூமி வலம் வருகிறது என்றும், கோள்களின் சுழற்சியைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

622) குப்தர்களின் பெரும்பாலான கோயில் எந்த படைபெயடுப்பின்போது இடிக்கப்பட்டன?

A) அரேபியர்

B) முகலாயர்கள்

C) துருக்கியர்கள்

D) ஹீணர்கள்

விளக்கம்: குப்தர்களின் பெரும்பாலான கோயில்கள் ஹீணர்களின் படையெடுப்பின்போது இடிக்கப்பட்டன. ராஜகிருகம், சாரநாத் போன்ற இடங்களில் அழகிய பௌத்த ஸ்தூபிகள் அமைக்கப்பட்டன.

623) முதலாம் நரசிம்மவர்ம வர்மன் யாருக்காக இலங்கை மீது படையெடுத்து வென்றார்?

A) இராஜசிம்ம பல்லவன்

B) மானவர்மன்

C) ராஜசிம்மன்

D) முதலாம் மகேந்திரவர்மன்

விளக்கம்: தங்களின் வலிமையான கடற்படையால் முதலாம் நரசிம்மவர்மன், தம் நண்பன் மானவர்மனுக்காக இலங்கை மீது படையெடுத்து வென்றார்.

624) கூற்று: முதலாம் சமுத்திர குப்தர் இசைக்கலைக்கு ஆதரவு தந்தார்.

காரணம்: இவர் வீணை வாசிப்பது போன்ற உருவம் பொறித்த நாணயங்கள் உள்ளன

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: குப்தர்கள் காலம் இசையும், நடனமும் செழித்தோங்கிய காலமாகும். குப்தர்கள் இசைக்கலைக்குப் பேராதரவு தந்து, இசைக் கலைஞர்களை ஊக்குவித்தனர். மத்தளம், யாழ், சங்கு போன்ற இசைக்கருவிகளைப் பயன்படுத்தினர். குப்த மன்னரான முதலாம் சமுத்திர குப்தர் வீணை வாசிப்பது போன்று உருவம் பொறித்த நாணயங்கள் காணப்பட்டன. இதன்மூலம், இவர் இசைகலைக்கு ஆதரவு தந்தார் என அறியமுடிகிறது.

625) கூற்று: குப்தர்களின் காலம் செவ்வியல் கலைகளின் காலம் என போற்றப்படுகிறது.

காரணம்: குப்தர்கள் காலத்தில் அதிகப்படியான நூல்கள் எழுதப்பட்டன

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: குப்தர்கள் காலத்தில் கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, நடனக்கலை, நாடகக்கலை போன்றவை பெரிதும் வளர்ச்சியடைந்தது. இந்திய வரலாற்றில் குப்தர்களின் காலம் ஒரு முக்கிய காலகட்டமாக அறிஞர்களால் கருதப்படுகிறது. எனவே இது “செவ்வியல்கலைகளின் காலம்” எனவும் போற்றப்படுகிறது.

626) பாபர்நாமா என்ற நூலை பாபர் எந்த மொழியில் எழுதினார்?

A) துருக்கி

B) ஆங்கிலம்

C) உருது

D) பாரசீகம்

விளக்கம்: பாபர்நாமா – இந்நூல் பாபரால் துருக்கி மொழியில் எழுதப்பட்டது. பாபர் தமது இளமைக்காலம், தாம் சந்தித்த வெற்றிகள். தோல்விகள் போன்றவற்றையும், அக்காலத்தைய இந்திய சமூக, சமய நிலையையும் தாவரங்கள், விலங்குகள் பற்றியும் இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.

627) பொருத்துக.

அ. அஷ்டாங்க சங்கிரகம் – 1. மருத்துவம்

ஆ. பஞ்சசித்தாந்தகம் – 2. வானவியல்

இ. சந்திராச்சாரிய வியாக்கரணம் – 3. இலக்கணம்

A) 1, 2, 3

B) 2, 3, 1

C) 3, 1, 2

D) 2, 1, 3

விளக்கம்: அஷ்டாங்க சங்கிரகம் – மருத்துவம்

பஞ்சசித்தாந்தகம் – வானவியல்

சந்திராச்சாரிய வியாக்கரணம் – இலக்கணம்.

628) சமயசார்பற்ற ஆட்சிமுறை என்ற முறையை கையாண்டவர்கள் யார்?

A) மௌரியர்கள்

B) குப்தர்கள்

C) குஷணர்கள்

D) மேற்காணும் யாருமில்லை

விளக்கம்: குப்தர் காலத்தின் சமயசார்பற்ற ஆட்சிமுறையானது, தற்போதைய இந்திய பன்முக பண்பாட்டிற்கு அடிகோலியது எனலாம். குப்தர் கால நீதித்துறை, இன்றைய நீதித்துறை வளர்ச்சிக்கு முன்னோடியாகத் திகழ்கிறது.

629) கியூக்கி என்று அழைக்கப்படும் பயணக் குறிப்பு யாருடன் தொடர்புடையது?

A) பாகியான்

B) யுவான்சுவாங்

C) பிர்தௌசி

D) பிளனி

விளக்கம்: சீனப்பயணி யுவான்சுவாங்கின் கியூக்கி என்றழைக்கப்படும் பயணக் குறிப்புகள் சாளுக்கிய வம்சத்தைப் பற்றி அறிய உதவும் சான்றாகும்.

630) சாளுக்கிய நிர்வாகம் பற்றியதில் பொருந்தாதது எது?

A) விஷயா – மாவட்டத்தின் தலைவர்

B) கர்ணா – கணக்கர்

C) சமந்தா – நகர நிர்வாகத்தை கவனித்தவர்

D) கிராமபோகி – கிராம நிர்வாகத்தை கவனித்தவர்

விளக்கம்: விஷயா – மாவட்டத்தின் தலைவர்

கர்ணா – கணக்கர்

சமந்தா – நிலப்பிரபுக்கள்

கிராமபோகி – கிராம நிர்வாகத்தை கவனித்தவர்.

631) பல்லவர் காலத்தில் சிறிய ஊர்களிலிருந்த நீதிச்சபை எவ்வாறு அழைக்கப்பட்டது?

A) அதிகரணம்

B) அதிகரணமண்டபம்

C) தருமாசனம்

D) கரணம்

விளக்கம்: பல்லவர் காலத்தில் சிறிய ஊர்களிலிருந்த நீதிச்சபை ‘கரணம்’ எனப்பட்டது. இதன் தலைவர் ‘கரணத்தார்’ எனப்பட்டார். பல்லவர் கால நீதிமன்றங்கள் சாட்சி, ஆவணம், அயலார் சாட்சி ஆகிய 3 ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குகளை விசாரித்தன. தலைமை நீதிமன்றம் ‘தருமாசனம்’ எனப்பட்டது. இஃது அரசரின் நேரடிக்கண்காணிப்பில் இருந்தது. மன்னரே தலைமை நீதிபதியாவார்.

632) பாபர்நாமா நூலை வேறு வேறு மொழியில் மொழிப்பெயர்த்தவர்களை பொருத்துக.

அ. அப்துல் ரஹீம் – 1. பிரெஞ்ச்

ஆ. வில்லியம் எர்ஸ்கின், லெய்டன் – 2. ஆங்கிலம்

இ. பாவெட்டி-கோர்ட்லி – 3. பாரசீகம்

A) 3, 2, 1

B) 1, 3, 2

C) 1, 2, 3

D) 3, 1, 2

விளக்கம்: பாபர்நாமா நூலை அக்பரின் வேண்டுகோளுக்கு இணங்க அப்துல் ரஹீம் பாரசீக மொழியில் மொழிபெயர்த்தார். வில்லியம் எர்ஸ்கின், லெய்டன் ஆகியோரால் இந்நூல் ஆங்கிலத்திலும், பாவெட்டி-கோர்ட்லி என்பவரால் பிரெஞ்சு மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டது.

633) சீனப்பயணி யுவான் சுவாங் யாருடைய அவைக்கு வந்தார்?

A) முதலாம் புலிகேசி

B) இரண்டாம் புலிகேசி

C) மூன்றாம் புலிகேசி

D) ஐந்தாம் புலிகேசி

விளக்கம்: சீனப் பயணி யுவான் சுவாங் 2-ஆம் புலிகேசியின் அவைக்கு வருகை புரிந்தார். இவர் சாளுக்கிய நாட்டில் மகாயானம், ஹீனயானம் ஆகிய பிரிவுகளைப் பின்பற்றும் பௌத்தர்கள் வாழ்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

634) கூற்று: “ஐஹோலே” கோயில் நகரம் என்று அழைக்கப்படுகிறது

காரணம்: ஐஹோலே நகரில் 70 கோயில்கள் குப்தர்கள் காலத்தில் கட்டப்பட்டன.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

விளக்கம்: ஐஹோலே நகரில் 70 கோயில்கள் சாளுக்கியர்கள் காலத்தில் கட்டப்பட்டன. இதனால், இந்நகரம் ‘கோயில் நகரம்’ என அழைக்கப்பட்டது. ஐஹோலே நகரில் சமதானக் கூரையுடன் நிறைய தூண்களைக் கொண்டு கட்டப்பட்டள்ள லட்கன் கோயிலும், ஒரு பௌத்த சைத்தியத்தை போல (சைத்தியம் – பௌத்தர்களின் தியானக் கூடம்) அமைக்கப்பட்ட துர்க்கையம்மன் கோயிலும், ஹீச்சிமல்லிக்குடி கோயிலும் புகழ்பெற்றவை. ஐஹோலே அருகிலுள்ள ‘மெகுடி’ என்ற இடத்திலுள்ள சமணர் கோயிலும் அழகாக அமைக்கப்பட்டுள்ளது.

635) உத்தரங்கம் என்பது கீழ்க்காணும் எதனுடன் தொடர்புடையது?

A) வீட்டு வரி

B) நீர்ப்பாசன வரி

C) விளை நிலங்களுக்கு விதிக்கப்பட்ட வரி

D) புனிதப் பயணவரி

விளக்கம்: இராஷ்டிரகூட அரசர்களுக்குப் பல துறைகளிலிருந்து வருவாய் கிடைத்தது. தம் மேலாண்மையை ஏற்றுக்கொண்டவர்களிடமிருந்தும், காடுகள், நிலங்கள் மூலமாகவும் வரிகள் வசூலிக்கப்பட்டன. விளைநிலத்திற்கு வசூலிக்கப்பட்ட வரி ‘உத்தரங்கம்’ என்றழைக்கப்பட்டது. இது விளைச்சலில் 4-ல் ஒரு பங்கு என வசூலிக்கப்பட்டது

636) எல்லோராவில் உள்ள கைலாசநாதர்கோயில் யாருடைய காலத்தில் கட்டப்பட்டது?

A) இரண்டாம் கிருஷ்ணர்

B) முதலாம் புலிகேசி

C) இரண்டாம் புலிகேசி

D) முதலாம் கிருஷ்ணர்

விளக்கம்: எல்லோராவிலுள்ள கைலாநாதர் கோயில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ளது. இக்கோயில், முதலாம் கிருஷ்ணர் காலத்தில் பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்டது. இது ராஷ்டிரகூடர் காலத்தவை.

637) நாகச்சந்திரா என்ற சமணர் இராமாயணம் எழுதினார். இவரை ஆதரித்தவர் யார்?

A) விஷ்ணுவர்த்தன்

B) இரண்டாம் புலிகேசி

C) முதலாம் சமுத்திரகுப்தர்

D) சந்திர குப்த மௌரியர்

விளக்கம்: விஷ்ணுவர்த்தனால், ஆதரிக்கப்பட்ட நாகச்சந்திரா என்ற சமணர், இராமாயணம் எழுதினார்.

638) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க

A) மூதுரை

B) தண்டியலங்காரம்

C) நல்வழி

D) கொன்றை வேந்தன்

விளக்கம்: ஒளவையார் எழுதிய நூல்கள்:

1. ஆத்திச்சூடி

2. கொன்றை வேந்தன்

3. நல்வழி

4. மூதுரை.

639) இராமானுஜர் எந்த காலத்தைச் சேர்ந்தவர்?

A) குப்தர்கள்

B) மௌரியர்கள்

C) சாளுக்கியர்கள்

D) ஹொய்சாளர்கள்

விளக்கம்: பக்தி இலக்கியவாதிகளான இராமானுஜர், மத்துவர் ஆகியோர் ஹொய்சாளர்கள் காலத்தில் வாழ்ந்தவர்கள்.

640) பல்லவ நிர்வாகத்தின் கீழ் எத்தனை கோட்டங்கள் (வளநாடுகள்) இருந்தன?

A) 25

B) 28

C) 24

D) 20

விளக்கம்: பல்லவ நாடு பல ராஷ்டிரங்கள் அதாவது பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது. ராஷ்டிரங்கள் கோட்டங்களாக, அதாவது வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டன. பல்லவ நிர்வாகத்தின் கீழ் 24 கோட்டங்கள் (வளநாடுகள்) இருந்தன.

641) மாளவிகாக்னிமித்திரம் என்ற நூலை எழுதியவர் யார்?

A) விசாகதத்தர்

B) வாத்ஸ்யாயனர்

C) வராகமிகிரர்

D) காளிதாசர்

விளக்கம்: காளிதாசரின் நூல்கள்:

சாகுந்தலம், விக்கிரமோர்வசியம், மாளவிகாக்னிமித்திரம், ரகுவம்சம், குமாரசம்பவம், மேகதூதம், ரிதுசம்ஹாரம்

மேற்காணும் அனைத்தும் வடமொழி இலக்கியங்கள்.

642) தேவி சந்திரகுப்தம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

A) விசாகதத்தர்

B) வாத்ஸ்யாயனர்

C) வராகமிகிரர்

D) காளிதாசர்

விளக்கம்: ‘தேவி சந்திரகுப்தம்’ என்ற நூலின் ஆசிரியர் விசாகதத்தர். இவர்; முத்ரா ராஷஸம் என்ற

நூலையும் எழுதியுள்ளார். இரண்டுமே வடமொழி இலக்கியங்கள்.

643) பாரசீக மொழியில் ‘ஹசாரா’ என்றால் என்ன?

A) ஓராயிரம்

B) ஈராயிரம்

C) ஐயாயிரம்

D) பத்தாயிரம்

விளக்கம்: பாரசீக மொழியில் ‘ஹசாரா’ என்றால் ‘ஓராயிரம்’ எனப் பொருள்படும். ஹசாரா இராமசுவாமி கோயிலில், இராமாயணம் தொடர்புடைய காட்சிகள் அதிகமாக காணப்படுகின்றன. இராமாயணத்தில் வரும் கதைகளைச் சிற்ப வடிவில் இங்கே காணலாம். ரிஷி சிருங்கேரிமுனிவர் புத்திர காமமேட்டி யாகம் செய்வது, தாடாகையை இராமன் கொல்வது, இராமர், சீதை, இலக்குவன் ஆகிய மூவரும் கங்கை நதியைக் கடப்பது, சீதையைத் தூக்கிச் சென்ற இராவணனைத் தடுப்பதற்கு ஜடாயு போர்புரிவது போன்ற காட்சிகளையும் இங்குக் காணலாம்.

644) பிருகத் சம்கிதை என்ற நூலை எழுதியவர் யார்?

A) அமரர்

B) வாத்ஸ்யாயனர்

C) வராகமிகிரர்

D) சந்திரர்

விளக்கம்: வாத்ஸ்யாயனர் – காமசூத்திரம்

வராகமிகிரர் – பிருகத் சம்கிதை

சந்திரர் – சந்திராச்சாரிய வியாக்கரணம்

அமரர் – அமரகோசம்

இவை அனைத்தும் வடமொழி இலக்கியங்கள் ஆகும்.

645) போகோகி என்பது யாருடைய பயணக்குறிப்பு?

A) யுவான் சுவாங்

B) பாகியான்

C) இபன்பதூதா

D) பிளனி

விளக்கம்: சீனப்பயணி பாஹியானின் ‘போகோகி’ எனப்பட்ட பயணக்குறிப்புகள் குப்தப்பேரரசு பற்றி அறிய உதவும் சான்று ஆகும்.

646) கூரம் பட்டயம் கீழ்க்காணும் யாருடன் தொர்புடையது?

A) முதலாம் மகேந்திரவர்மன்

B) முதலாம் பரமேஸ்வரவர்மன்

C) நந்திவர்மன்

D) A மற்றும் B

விளக்கம்: கூரம் பட்டயம் – முதலம் மகேந்திரவர்மன்

காசக்குடிப்பட்டயம் – நந்திவர்மன்.

647) பிரோஸ் துக்ளக்கிற்கு பொருந்தாதது எது?

A) கட்டடப்பிரியர்

B) நீர்ப்பாசனத்தின் தந்தை

C) கட்டடக்கலை வேந்தர்

D) பொறியியல் இளவரசர்

விளக்கம்: முகமது பின் துக்ளக்கிற்குப் பின் வந்த பிரோஸ் துக்ளக் கட்டப்பிரியர், கட்டடக்கலைவேந்தர். இவர் 1200 மலர்வனங்களை டில்லியைச் சுற்றி அமைத்தார். இவரை பூங்கா பிரியர், நீர்ப்பாசனத்ததின் தந்தை என்றழைப்பர். பிரோஷா துக்ளக் “பிரோஷாபாத்” என்னும் நகரை அமைத்தார். இந்நகருக்குள் “பிரோஸ் ஷா கோட்லா” என்னும் அரண்மனைக் கோட்டை உள்ளது.

648) மத்தவிலாச பிரகசனம் என்ற நாடக நூலை எழுதியவர் யார்?

A) ராஜசிம்மன்

B) முதலாம் நரசிம்மவர்மன்

C) அவனிசிம்ம பல்லவன்

D) முதலாம் மகேந்திரவர்மன்

விளக்கம்: பல்லவர்கள் காலத்தில் தமிழிலும், வடமொழியிலும் இலக்கியங்கள் இயற்றப்பட்டன. பல்லவ மன்னனாக முதலாம் மகேந்திர வர்மன் ‘மத்தவிலாச பிரகசனம்’ என்ற வடமொழி நாடக நூலை எழுதினார்.

649) பல்லவர்கள் காலத்தில் சூரிய வழிபாடு எவ்வாறு அழைக்கப்பட்டது?

A) கௌமாரம்

B) சாக்தம்

C) சௌரம்

D) காணபாபத்யம்

விளக்கம்: சாக்தம் – சக்தி வழிபாடு

கௌமாரம் – முருக வழிபாடு

சௌரம் – சூரிய வழிபாடு

காணாபத்யம் – கணபதி வழிபாடு

650) அவந்தி சுந்தரி என்ற நூலை எழுதியவர் யார்?

A) போதனார்

B) தண்டி

C) சர்வநந்தி

D) மேற்காணும் யாருமில்லை

விளக்கம்: போதயானர் – பாகவஜீகம்

தண்டி – தசகுமார சரிதம், அவந்திசுந்தரி, கதச்சாரம்

சர்வநந்தி – லோகவிபாகம்

இவை அனைத்தும் வடமொழியில் இயற்றப்பட்டன.

651) கூற்று: சேத்தாகரி என்று அழைக்கப்பட்ட பல்லவ மன்னன் – முதலாம் மகேந்திரவர்மன்

காரணம்: கோயில் கட்டும் கலையில் வல்லவன்

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: மண்டகப்பட்டு, பல்லாவரம், வல்லம், மாமண்டூர், மகேந்திரவாடி, சீயமங்கலம், தளவானூர், திருச்சி ஆகிய இடங்களில் முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் குடைவரைக் கோயில்கள் உருவாக்கப்பட்டன. கோயில் கட்டும் கலையில் வல்லவனாக இருந்ததால் முதலாம் மகேந்திரவர்மன் “சேத்தகாரி” என்று அழைக்கப்பட்டார்.

652) கூற்றுகளை ஆராய்க.

1. நான்காம் பௌத்த சமய மாநாடு காஷ்மீரிலுள்ள ‘குந்தல்வனம்’ என்ற இடத்தில் நடைபெற்றது.

2. நான்காம் பௌத்த சமய மாநாடு ‘பத்ரபாகு’ தலைமையில் நடைபெற்றது

3. நான்காம் பௌத்த சமய மாநாடு ‘அஸ்வகோசர்’ முன்னிலையில் நடைபெற்றது

4. நான்காம் பௌத்த சமய மாநாட்டில் பௌத்த பீடகங்களுக்கான விளக்க உரை தொகுக்கப்பட்டது.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) 4 மட்டும் தவறு

விளக்கம்: 4-வது பௌத்த சமய மாநாடு, காஷ்மீரிலுள்ள ‘குந்தல் வனம்’ என்ற இடத்தில் ‘வசுமித்திரர்’ தலைமையில் நடைபெற்றது. அஸ்வகோசர் முன்னிலை வகித்தார். இம்மாநாட்டில் பௌத்த பீடகங்களுக்கான விளக்க உரை தொகுக்கப்பட்டது.

653) பஞ்ச பாண்டவர் ரதங்கள் பற்றிய கூற்றில் தவறானதை தேர்வு செய்க.

A) செவ்வ அடித்தளம் – பீமரதம்

B) அளவில் பெரியது – தர்மராஜ ரதம்

C) அளவில் சிறியது – திரௌபதி ரதம்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: பஞ்சபாண்டவ ரதங்களில் நேர்த்தியானதும், அளவில் பெரியது தர்மாராஜ ரதமாகும். இது சதுர வடிவிலான அடித்தளத்தையும் மூன்றடுக்கு விமானத்தையும் கொண்டுள்ளது.

பீமரதம் செவ்வக வடிவிலான அடித்தளத்தையும், மூன்றடுக்கு விமானத்தையும் கொண்டுள்ளது.

பஞ்ச பாண்டவ ரதங்களில் மிகச்சிறியது திரௌபதி ரதம்..

654) கூற்று: சங்கீரணசாதி என்று அழைக்கப்பட்டவர் முதலாம் நரசிம்மவர்ம பல்லவன்

காரணம்: ‘ஆதோத்ய’ என்னும் வீணையை மீட்டுவதில் வல்லவன்

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி

D) கூற்று, காரணம் இரண்டும் தவறு

விளக்கம்: “உருத்திராச்சாரியார்” என்பவரின் மாணவனான பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன், ‘பிரிவாதினி’ என்னும் வீணையை மீட்டுவதில் வல்லவனாக இருந்தார். இதனால், இவருக்குச் “சங்கீரணசாதி” என்ற விருதுப்பெயர் கிடைக்கப்பெற்றது.

655) கூற்று: சித்திரக்காரப்புலி – முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்

காரணம்: ஓவியக்கலையில் வல்வனாக இருந்தவர் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: முதலாம் மகேந்திரவர்மன் ஓவியக்கலையில் வல்லவனாக இருந்ததால் ‘சித்திரக்காரப்புலி’ என்ற விருதுப்பெயர் பெற்றார்.

656) கலம்பகம் என்ற சிற்றிலக்கிய வகை புதிதாக யாருடைய காலத்தில் தோன்றியது?

A) மௌரியர்கள்

B) பல்லவர்கள்

C) விஜயநகரப்பேரரசு

D) மராட்டியர்கள்

விளக்கம்: கலம்பகம் என்ற சிற்றிலக்கியப் பகுதி பல்லவர்கள் காலத்தில் தோன்றியது. இவ்விலக்கிய வகைக்கு நந்தி கலம்பகம் சிறந்த எடுத்துக்காட்டாகும். நந்திக்கலம்பகம் என்பது மூன்றாம் நந்திவர்மனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட நூல் ஆகும்.

657) திருச்சி, தஞ்சை போன்ற பகுதிகள் எவ்வாறு அழைக்கப்பட்டது?

A) ஜெயங்கொண்ட சோழ மண்டலம்

B) இராஜராஜ பாண்டி மண்டலம்

C) சோழ மண்டலம்

D) மும்முடிச் சோழ மண்டலம்

விளக்கம்: திருச்சி, தஞ்சை – சோழ மண்டலம்

பாண்டிய நாடு – இராஜராஜ பாண்டி மண்டலம்

தொண்டை நாடு – ஜெயங்கொண்ட சோழ மண்டலம்

இலங்கை – மும்முடிச் சோழ மண்டலம்

658) கேரளா எவ்வாறு அழைக்கப்பட்டது?

A) அதிராஜ சோழ மண்டலம்

B) மலை மண்டலம்

C) வேங்கை மண்டலம்

D) முடிகொண்ட சோழ மண்டலம்

விளக்கம்: அதிராஜ சோழ மண்டலம் – கொங்கு மண்டலம்

மலை மண்டலம் – கேரளா

வேங்கை மண்டலம் – கீழை சாளுக்கிய நாடு

முடிகொண்ட சோழ மண்டலம் – கங்கப்பாடி.

659) சோழப் பேரரசின் தணிக்கை அதிகாரி எவ்வாறு அழைக்கப்பட்டார்?

A) புரவுவரி திணைக் களத்தார்

B) வரிப்பொத்தாக் கணக்கு

C) திருமுகக் கணக்கு

D) நாடுவகை செய்வோர்

விளக்கம்: புரவுவரி திணைக் களத்தார் – நிலவரிக் கழகம்

வரிப்பொத்தக் கணக்கு – தணிக்கை அதிகாரி

திருமுகக் கணக்கு – அரண்மணைக் கணக்கர்

நாடுவகை செய்வார் – விளை நிலத்தின் ஆதாரத்தைப் பிரிப்பவர்

660) யாருடைய காலத்தில் தமிழிலக்கியம் அதன் உச்சத்தை அடைந்தது?

A) முற்கால சோழர்கள்

B) பிற்காலச் சோழர்கள்

C) பல்லவர்கள்

D) சாளுக்கியர்கள்

விளக்கம்: பிற்காலச் சோழர்கள் காலத்தில் தமிழிலக்கியம் அதன் உச்சத்தை அடைந்தது. இறவாப் புகழ் பெற்ற தமிழிலக்கியங்கள் இவர்கள் காலத்தில் இயற்றப்பட்டன.

661) ‘திரிபுவனம் வீரத்தேவன்’ என்ற பட்டப்பெயரை சூட்டிக்கொண்டவர் யார்?

A) முதலாம் குலோத்துகங்க சோழன்

B) ராஜேந்திர சோழன்

C) இராஜராஜசோழன்

D) மூன்றாம் குலோத்துங்க சோழன்

விளக்கம்: மூன்றாம் குலோத்துங்க சோழன், பாண்டியரை வென்று, மதுரையில் ‘திரிபுவனம் வீரத்தேவன்’ என்ற பட்டம் சூட்டியதன் விளைவாக திரிபுவனம் – கம்பகரேசுவரர் கோயிலைக் கட்டினார்.

662) தற்கால கிராம ஊராட்சிகளுக்கு அடிப்படையான வார்டு என்ற அமைப்பு முறையை ஏற்படுத்தியவர்கள்?

A) சேரர்கள்

B) பாண்டியர்கள்

C) பல்லவர்கள்

D) சோழர்கள்

விளக்கம்: சோழர்களால் கொண்டுவரப்பட்ட குடும்புகள் (வார்டு) முறை, தற்கால கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு அடிப்படையானது. கிராமசபை உறுப்பினர்களைக் குடவோலை முறையில் தேர்வு செய்த முறை இந்தியப் பண்பாட்டிற்கு சோழர்கள் நல்கிய சிறந்த கொடை.

663) கூற்று: “உலகளந்த சோழன்” என்ற அழைக்கப்பட்டவர் முதலாம் இராஜராஜ சோழன்

காரணம்: வட இந்தியா முதல் இந்தியாவின் தெற்குப் பகுதியில் உள்ள தீவு வரை போரிட்டு வெற்றி பெற்றார்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: சோழர் காலத்தில் நிலங்கள் அளக்கப்பட்டு தரம் வாரியாக வரி விதிக்கப்பட்டது. முதலாம் இராஜராஜ சோழன் நிலம் அளந்து தரம் பிரித்ததால் ‘உலகளந்த சோழன்’ என்று புகழப்பட்டார்.

664) நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தை தொகுத்தவர் யார்?

A) பின்னத்தூர் நாராயணசாமி அய்யர்

B) இராமானுஜர்

C) நாதமுனி

D) மேற்காணும் யாருமில்லை

விளக்கம்: நாதமுனிகள் தொகுத்தளித்த நாலாயிரத்திவ்விபிரபந்தம், சோழர் காலத்தில் வழங்கப்பட்ட சிறந்த இலக்கியக் கொடையாகும்.

665) வேதக்கல்வி மற்றும் மருத்துவக் கல்வி போன்றவற்ற இந்தியப் பண்பாட்டிற்கு அளித்தவர்கள் யார்?

A) பல்லவர்கள்

B) பாண்டியர்கள்

C) சோழர்கள்

D) சேரர்கள்

விளக்கம்: வேதக்கல்வி மற்றும் மருத்துவக் கல்வி போன்றவை இந்தியப் பண்பாட்டிற்கு சோழர்கள் அளித்த நன்கொடையாகும். ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையும் அவர்களின் தகுதியும், கடமையும் பற்றிச் சோழர் கால கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

666) பிற்கால பாண்டியர்கள் யார் தலைமையில் எழுச்சி பெற்றனர்?

A) முதலாம் மாறவர்மன்

B) முதலாம் சடையவர்ம சுந்தர பாண்டியன்

C) இரண்டாம் மாறவர்ம குலசேகரப் பாண்டியன்

D) இரண்டாம் மாறவர்ம சுந்தரபாண்டியன்

விளக்கம்: பிற்காலப் பாண்டியர்கள் கி.பி (பொ.ஆ) 12-ஆம் நூற்றாண்டின் இறுதியில் முதலாம் மாறவர்மன் தலைமையில் எழுச்சி பெற்றனர். முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன், முதலாம் மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் ஆகியோர் பிற்காலப் பாண்டிய வம்சத்தின் சிறந்த மன்னர்களாவர்.

667) பிற்காலப் பாண்டியர்கள் ஆட்சியில் மகாசாந்தன் என்பவர் கீழ்க்காணும் எதற்குப் பொருத்தமானவர்?

A) படைத்தலைவர்

B) அமைச்சர்

C) தலைமை நீதிபதி

D) அனைத்து படைகளுக்கும் பொதுவான தலைவர்

விளக்கம்: படைத்தலைவர் சேனாதிபதி என்றும், அனைத்துப் படைகளுக்கும் பொதுவான தலைவர் “மகாசாமந்தன்” எனவும் அழைக்கப்பட்டனர்.

668) தவறாக பொருந்தியுள்ளதை தெரிவு செய்க

1. பாண்டியர் ஆட்சியல் இருந்த அமைச்சரவை – மகாமந்திர்.

2. அனைத்துப் படைகளுக்கும் பொதுவான தலைவர் – மகாசாமந்தன்

3. பல அரண்மனைப் பணிகளைக் கண்காணித்தவர்கள் – அகப்பரிவர முதலி மற்றும் திருவாசல் முதலி

4. படைத்தலைவர் – சேனாதிபதி

A) 2, 3

B) 1 மட்டும்

C) 2, 3, 4

D) எதுவுமில்லை

விளக்கம்: பிற்காலப் பாண்டியர் ஆட்சியில் நாட்டின் தலைவன் மன்னன் ஆவான். மன்னனுக்கு ஆட்சியில் உதவ ‘மகாமந்திரர்’ எனப்பட்ட அமைச்சரவை இருந்தது. படைத்தலைவர் சேனாதிபதி என்றும், அனைத்துப் படைகளுக்கும் பொதுவான தலைவர் “மகாசாமந்தன்” எனவும் அழைக்கப்பட்டனர்.

பல அரண்மனைப் பணிகளைக் கண்காணித்தவர்கள் – அகப்பரிவர முதலி மற்றும் திருவாசல் முதலி.

669) யாருடைய காலத்தில் அந்தணர்களுக்கென “அக்ரஹாரங்கள்” என்ற குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டன?

A) முதலாம் மாறவர்ம பாண்டியன்

B) முதலாம் இராஜராஜசோழன்

C) முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்

D) சேரன் செங்குட்டுவன்

விளக்கம்: முதலாம் மாறவர்மன் காலத்தில் அந்தணர்களுக்கென “அக்ரஹாரங்கள்” என்ற குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டன. அதற்கு ‘அவனி வேந்த சதுர்வேதி மங்கலம்’ எனப் பெயரிடப்பட்டது.

670) டெல்லி சுல்தானிய மரபை வரிசைப்படுத்துக

1. அடிமை மரபு 2. கில்ஜி மரபு 3. சையது மரபு 4. துக்ளக் மரபு 5. லோடி மரபு

A) 1, 2, 3, 4, 5

B) 1, 2, 4, 3, 5

C) 1, 3, 2, 4, 5

D) 1, 4, 2, 3, 5

விளக்கம்: கி.பி (பொ.ஆ) 1206 முதல் கி.பி (பொ.ஆ) 1526 வரை 5 மரபினர் டெல்லியை ஆட்சி செய்தனர். இவர்களுடைய ஆட்சியில் சமயம் சார்ந்த ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது.

1. அடிமை மரபு

2. கில்ஜி மரபு

3. துக்ளக் மரபு

4. சையது மரபு

5. லோடி மரபு

671) நிலவரியை அதிகமாக உயர்த்திய சுல்தான் யார்?

A) அலாவுதீன் கில்ஜி

B) குத்புதீன் ஐபக்

C) முகமது பின் துக்ளக்

D) பெரோஸ் துக்ளக்

விளக்கம்: அலாவுதீன் கில்ஜி நில மேலாண்மை, நில அளவை மற்றும் நிலவரி வசூல் முறையை ஒழுங்குப்படுத்தினார். முகமது பின் துக்ளக் நிலவரியை அதிகமாக உயர்த்தினார்.

672) மதமாற்றத்தை வெகுவாக ஊக்குவித்த சுல்தான்கள் யார்?

A) முகமது பின் துக்ளக் மற்றும் அலாவுதீன் கில்ஜி

B) பெரோஸ் துக்ளக் மற்றும் சிக்கந்தர் லோடி

C) பால்பன் மற்றும் ஜலாலுதீன் கில்ஜி

D) இல்துமிஷ் மற்றும் இப்ராஹிம் லோடி

விளக்கம்: டெல்லி சுல்தானியர்கள் காலத்தில் இந்து சமுதாயத்தின் மீது, இஸ்லாமிய சமயத்தின் தாக்கம் இருந்தது. இஸ்லாமிய சமயச் சட்டப்படி இந்துக்கள் என்பவர்கள் மாற்று சமயத்தவர்கள். இந்துக்கள் மீது ஜெசியா (சமய வரி) என்ற வரி விதிக்கப்பட்டது. இதனால் இந்துக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். பெரோஸ்-துக்ளக், சிக்கந்தர் லோடி போன்றோர் மதமாற்றத்தை வெகுவாக ஊக்குவித்தனர்.

673) ‘கஜல்’ என்ற புதிய இசை தொடங்குவதற்கு வழிகோலியவர் யார்?

A) ஹசன் நிசாமி

B) அமீர் ஹாசன்

C) அமீர் குஸ்ரு

D) தான்சேன்

விளக்கம்: அமீர் குஸ்ரு: அபுல் ஹாசன் யாமினித் குஸ்ரு என்பது இவர் இயற்பெயர். இவர் மிகச்சிறந்த கவிஞராகவும், இசை வல்லுநராகவும் திகழ்ந்தவர். இவர் பாரசீக மொழிக் கவிஞராகத் திகழ்ந்தவர். இவர் எழுதிய பாரசீக மொழி கவிதை ‘கஜல்’ என்ற புதிய இசை தொடங்குவதற்கு வழிகோலியது674) கூற்று: பூங்கா பிரியர் என்று அழைக்கப்பட்டவர் முகமது பின் துகளக்

காரணம்: இவர் 1200 மலர்வனங்களை டில்லியைச் சுற்றி அமைத்தார்

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி

D) கூற்று, காரணம் இரண்டும் தவறு

விளக்கம்: பிரோஸ் துக்ளக் 1200 மலர்வனங்களை டில்லியைச் சுற்றி அமைத்தார். இவரை பூங்கா பிரியர், என்றழைப்பர்.

675) பல்லவர்களின் எந்த வணிகக் குழு வெளிநாட்டு வாணிகத்தில் ஈடுபட்டது?

A) சுதேசி

B) நானாதேசிகன்

C) ஐந்நூற்றுவர்

D) அனைத்தும்

விளக்கம்: பல்லவர் காலத்தில் வணிகர்கள் தங்களுக்கென சுதேசி, நானாதேசிகன், ஐந்நூற்றுவர் போன்ற பெயர்களில் வணிகக் குழுக்களை ஏற்படுத்திக் கொண்டனர். ‘நானாதேசிகன்’ என்ற குழு வெளிநாடுகளுடன் வாணிகத்தில் ஈடுபட்டது. சுதேசி ஐந்நூற்றுவர் என்பன உள்நாட்டு வாணிகத்தில் ஈடுபட்டன.

676) இந்துஸ்தானி என்ற சங்கீதம் கீழ்க்காணும் எதன் புது வடிவமாகும்?

A) இந்தோ-கிரேக்க

B) இந்தோ-அரேபிய

C) இந்தோ-துருக்கிய

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: அமிர் குஸ்ரு ‘கவாலி’ என்ற இசை பாணியில் சித்தார். காயல் போன்ற இசைக்கருவிகளைக் கண்டறிந்தார். இந்தோ-அரேபிய சங்கீதக் கலைகள் ஒன்றுபட்டு “இந்துஸ்தானி” என்ற சங்கீதமாகப் புது வடிவம் பெற்றது.

677) கூற்றுகளை ஆராய்க.

1. நான்காம் பௌத்த சமய மாநாட்டில் ஹீனயான பௌத்த கருத்துக்களைப் பரப்ப நெறிமுறைகள் வகுக்கப்பட்டன.

2. நான்காம் பௌத்த சமய மாநாட்டில் பௌத்த சமயமும் இரண்டு பிரிவுகளாக (ஹீனயானம், மகாயானம்) எனப் பிரிந்தது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. நான்காம் பௌத்த சமய மாநாட்டில் மகாயான பௌத்த கருத்துக்களைப் பரப்ப நெறிமுறைகள் வகுக்கப்பட்டன.

2. நான்காம் பௌத்த சமய மாநாட்டில் பௌத்த சமயமும் இரண்டு பிரிவுகளாக (ஹீனயானம், மகாயானம்) எனப் பிரிந்தது.

678) விஜயநகரப் பேரரசு எப்போது உருவாக்கப்பட்டது?

A) கி.பி. 1337

B) கி.பி. 1346

C) கி.பி. 1336

D) கி.பி. 1347

விளக்கம்: ஹரிஹரர், புக்கர் என்ற இரு சகோதரர்கள் ‘மாதவ வித்யாரண்யர்’ என்பவரின் உதவிகொண்டு 1336-ல் துங்கபத்திரா நதிக்கரையில் விஜயநகரப் பேரரசை உருவாக்கினார்கள். இப்பேரரசு சுமார் 4 நூற்றாண்டுக் காலம் தென்னக வரலாற்றில் பெரும் சாதனைகளைப் புரிந்தது எனலாம்.

679) விஜயநகரப் பேரரசின் மரபுகளை வரிசைப்படுத்துக.

1. சாளுவ 2. சங்கம 3.ஆரவீடு 4. துளுவ

A) 1, 2, 4, 3

B) 2, 1, 3, 4

C) 2, 1, 4, 3

D) 1, 2, 3, 4

விளக்கம்: விஜயநகரப் பேரரசை, சங்கம. சாளுவ, துளுவ, ஆரவீடு வம்சத்தினர் போற்றி வளர்த்தனர். இந்துசமயம், கோவில்கள், கலாச்சாரங்களைப் பாதுகாப்பதற்கென உருவாக்கப்பட்டது இப்பேரரசு என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

680) விஜயநகரம் என்ற நகரத்தை உருவாக்கியவர் யார்?

A) மூன்றாம் வல்லாளதேவன்

B) வித்யாரண்யர்

C) ஹரிஹரர், புக்கர்

D) வீரவிஜயவல்லாளன்

விளக்கம்: 3-ஆம் வல்லாளதேவன் தம் நாட்டின் வடக்கு எல்லையை இஸ்லாமிய படையெடுப்புகளின்றிக் காப்பதற்குத் துங்கபத்திரை நதியின் தென்கரையில் தம்முடைய மகன் வீரவிஜயவல்லாளின் பெயரில் விஜயநகரத்தை அமைத்தார்

681) விஜயநகரத்தின் பெயர்களில் பொருந்தாதது எது?

A) விருபாட்சபுரம்

B) ஹோசப்பட்டணம்

C) வித்திய நகரம்

D) விருச்சிக புரம்

விளக்கம்: 3-ஆம் வல்லாளதேவன் தம் நாட்டின் வடக்கு எல்லையை இஸ்லாமிய படையெடுப்புகளின்றிக் காப்பதற்குத் துங்கபத்திரை நதியின் தென்கரையில் தம்முடைய மகன் வீரவிஜயவல்லாளின் பெயரில் விஜயநகரத்தை அமைத்தார். இந்நகரமே பிற்காலத்தில், விருபாட்சபுரம், ஹோசப்பட்டணம், வித்திய நகரம். விஜய நகரம் என அழைக்கப்படுகிறது.

682) கீழ்க்காணும் எந்த விஜயநகர மரபு சைவ மரபு?

A) சங்கம

B) சாளுவ

C) துளுவ

D) ஆரவீடு

விளக்கம்: சங்கம மரபினர் சைவர்களாகத் திகழ்ந்தனர். விருப்பாஷர் அவர்களின் குலதெய்வம். மற்ற மரபைச் சேர்ந்தவர்கள் வைணவர்கள். எல்லா அரசர்களும் பிற சமயங்கள் மீது சகிப்புத்தன்மையுடன் நடந்துக் கொண்டனர். மக்கள் அனைவரும் சமயச் சுதந்திரம் பெற்று திகழ்ந்தனர் என போர்ச்சுக்கீசியப் பயணி பார்போசா குறிப்பிடுகிறார்.

683) கூற்று: விஜய நகரப் பேரரசு காலத்தில் கிராமசபைகள் மறையத் தொடங்கின

காரணம்: விஜயநகரப் பேரரசுக் காலத்தில், ஆயக்காரர்களோடு சேர்ந்து கிராம மக்களுக்குச் சேவை புரிவதற்கு புரோகிதர், பொற்கொல்லர், தச்சர், குயவர் போன்ற தொழிலாளர்களும் நியமனம் பெற்றனர்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி

D) கூற்று, காரணம் இரண்டும் தவறு

விளக்கம்: 1. விஜயநகரப் பேரரசுக் காலத்தில், ஆயக்காரர்களோடு சேர்ந்து கிராம மக்களுக்குச் சேவை புரிவதற்கு புரோகிதர், பொற்கொல்லர், தச்சர், குயவர் போன்ற தொழிலாளர்களும் நியமனம் பெற்றனர்.

2. இவர்கள் செய்த தொழிலுக்கு ‘இறையிலி’ நிலங்கள் வழங்கப்பட்டன. பரம்பரை பரம்பரையாக இந்நிலங்களை அனுபவித்துக் கொண்டு கிராம மக்களுக்குச் சேவைகள் புரிந்தனர். விவசாயிகள் அறுவடை காலங்களில் மகசூலின் சிறு பகுதியை இவர்களுக்கு அளிப்பதும் உண்டு. இம்முறை கிராம அமைப்புகளாகிய கிராம சபைகள் மறைவதற்குக் காரணங்களாக இருந்தன.

684) தான்சேன் என்ற இசைஞானி யாருடைய அவையை அலங்கரித்தார்?

A) அக்பர்

B) ஹீமாயூன்

C) ஜஹாங்கீர்

D) ஷாஜகான்

விளக்கம்: தான்சேன் என்ற இசைஞானி அக்பரின் அவையை அலங்கரித்தார். அக்பர் இசைக்கு முக்கியத்துவம் அளித்தார்.

685) இந்தியாவில் பீரங்கிபடை கீழ்க்காணும் எந்த போரின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது?

A) முதலாம் பானிபட் போர்

B) இரண்டாம் பானிபட் போர்

C) மூன்றாம் பானிபட் போர்

D) முதல் தரைய்ன் போர்

விளக்கம்: முதலாம் பானிபட் போர் கி.பி.1526-இல் முகலாயப் பேரரசை நிறுவிய பாபருக்கும் டெல்லி சுல்தானியத்தின் கடைசி மரபின் கடைசி அரசரான இப்ராஹிம் லோடிக்கும் இடையில் நடைபெற்றது. இப்போரில் பாபர் பீரங்கிப் படை மூலம் வெற்றியடைந்தார். இதன் மூலம் பாபரால் முகலாயப் பேரரசு தோற்றுவிக்கப்பட்டது.

686) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.

A) நானார்த்த ரத்தினமாலை – வேங்கட தேவர்

B) மதுரா விஜயம் – கங்காதேவி

C) இரகுநாத ஆப்யூதம் – இராம புத்திராம்பாள்

D) வரதாம்பிகா பரிணயம் – திருமலாம்பாள்

விளக்கம்: நானார்த்த ரத்தினமாலை – இருகப்பட்ட தாண்டநாதர்

மதுரா விஜயம் – கங்காதேவி

இரகுநாத ஆப்யூதம் – இராம புத்திராம்பாள்

வரதாம்பிகா பரிணயம் – திருமலாம்பாள்.

687) எந்த போரில் விஜயநகரப் பேரரசு வீழ்ச்சியடைந்தது?

A) மூன்றாம் பானிபட் போர்

B) தலைக்கோட்டைப் போர்

C) மைசூர் போர்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: தலைக்கோட்டைப்போர் பொ.ஆ 1565-ல் நடைபெற்றது. இதில் விஜயநகரப் பேரரசு தோல்வியுற்றது. இப்போரில் அழிக்கப்பட்ட ‘ஹம்பி’ நகரம் தற்போது உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

688) யாருடைய ஆட்சிக்காலத்தில் பாமினி அரசு தோற்றுவிக்கப்பட்டது?

A) அலாவுதீன் கில்ஜி

B) பெரோஸ் ஷா

C) முகமது பின் துக்ளக்

D) ஒளரங்கசீப்

விளக்கம்: “அலாவுதீன் ஹாசன் பாமன்ஷா” என்றழைக்கப்பட்ட ஹாசன்கங்கு பாமினி அரசைத் தோற்றுவித்தார். இவர் டெல்லி சுல்தான் முகமது பின் துக்ளக் ஆட்சியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, சுதந்திர அரசை நிறுவினார். பாமினி அரசின் தலைநகர் ‘குல்பர்கா’ ஆகும்.

689) முகமது நகர் என்பது எந்த வம்சத்தின் தலைநகரமாக விளங்கியது?

A) பாமினி

B) குதுப்ஷா

C) சாளுக்கிய

D) கில்ஜி

விளக்கம்: “இராஜாகிருஷ்ணதேவ்” என்ற காகத்திய அரசரால் கட்டப்பட்ட கோட்டை “கோல்கொண்டா கோட்டை” ஆகும். இக்கோட்டை இருந்த பகுதி முகம்மது நகர் எனப்பட்டது. ‘குதுப்ஷா’ வம்சத்தின் தலைநகரமாக விளங்கியது. கோட்டையின் ஒலிஅமைப்பு அடிப்படையில் இது சிறந்த கட்டக்கலையின் அம்சமாகும்.

690) தென்னிந்தியாவில் மதராஸாக்கள் மூலம் முஸ்லீம்களுக்கு முதன்முதலில் கல்வியை கற்பித்தவர்கள் யார்?

A) விஜயநகரப் பேரரசு

B) பாமினி பேரரசு

C) முகலாயப் பேரரசு

D) டெல்லி சுல்தானியப் பேரரசு

விளக்கம்: பாமினி அரசு காலத்தில் எண்ணற்ற மசூதிகள், நூலகங்கள் கட்டப்பட்டன. தென்னிந்தியாவில் மதராசாக்கள் மூலம் முஸ்லீம்களுக்கு முதன்முதலில் கல்வியை கற்பித்தவர்கள் இவர்களே ஆவார்கள்.

691) முகலாயர் காலத்தில் ஜப்தி என்ற முறையை கொண்டு வந்தவர் யார்?

A) ஹீமாயூன்

B) ஜஹாங்கீர்

C) அக்பர்

D) ஒளரங்கசீப்

விளக்கம்: முகலாயப் பேரரசின் நிலவருவாய் முறையை அக்பர் வரையறுத்தார். “ராஜா தோடர்மால்” என்ற நில வருவாய்த் துறை அமைச்சரின் ஆலோசனைப்படி, “ஜப்தி” என்ற முறையை அக்பர் செயல்படுத்தினார்.

692) அக்பர் எந்த ஆண்டு மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தினார்?

A) 1572

B) 1571

C) 1579

D) 1582

விளக்கம்: கி.பி (பொ.ஆ). 1571-ஆம் ஆண்டு அக்பர் ஏற்படுத்திய படைநிர்வாக முறை ‘மன்சப்தாரி’ ஆகும்.

‘மன்சப்’ என்ற அரபுச் சொல்லுக்கு ‘தரம்’ அல்லது ‘தகுதி’ என்று பொருள்.

10 முதல் 10, 000 வரையிலான தரவரிசை அடிப்படையில் வீரர்கள் பிரிக்கப்பட்டனர்.

693) எந்த நூற்றாண்டில் புகையிலை, உருளைக்கிழங்கு போன்றவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன?

A) கி.பி 15

B) கி.பி 16

C) கி.பி 17

D) கி.பி 18

விளக்கம்: முகலாயர்கள் காலத்தில் வேளாண்மை முக்கியத் தொழிலாக இருந்தது. கோதுமை, நெல், பருப்பு வகைகள், பார்லி, பருத்தி, கரும்பு, அவுரி, எண்ணெய் வித்துக்கள் ஆகியவை பயிரிடப்பட்டன 17-ஆம் நூற்றாண்டில் புகையிலை, மக்காச்சோளம், உருளைக்கிழங்கு, மிளகாய் போன்ற வேளாண்மைப் பயிர்கள் இவர்கள் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.

694) முகலாயப் பேரரசு காலத்தில் மாநில சதர் என்பவர் யார்?

A) மாநில நிதியமைச்சர்

B) சமயத்துறை அமைச்சர்

C) வழக்கு அலுலர்

D) நகரச் சிறப்பு நிர்வாக அலுவலர்

விளக்கம்: முகலாயப் பேரரசு காலத்தில், சுபாக்கள் என்ற மாநிலங்களைச் ‘சுபேதார்’ ஆட்சி செய்தார். அவருக்கு உதவ ‘திவான்’ என்ற மாநில நிதியமைச்சர், ‘மாநில சதர்’ என்ற சமயத்துறை அமைச்சர், ‘மாநில பாஷி’ என்ற வழக்கு அலுவலர், ‘கொத்வால்’ என்ற நகரச் சிறப்பு நிர்வாக அலுவலர் போன்றோர் கொண்ட மாநில அமைச்சரவை செயல்பட்டது.

695) ‘விபாஷங்கள்’ என்பவை என்ன?

A) பௌத்த பீடகங்களுக்கான உரை

B) சமண சமயத்தின் நூல்களுக்கான விளக்க உரை

C) புத்தரின் வாழ்க்கை வரலாற்று நூல்

D) மகாவீரரின் வாழ்க்கை வரலாற்று நூல்

விளக்கம்: 4-வது பௌத்த சமய மாநாடு, காஷ்மீரிலுள்ள ‘குந்தல் வனம்’ என்ற இடத்தில் ‘வசுமித்திரர்’ தலைமையில் நடைபெற்றது. அஸ்வகோசர் முன்னிலை வகித்தார். இம்மாநாட்டில் பௌத்த பீடகங்களுக்கான விளக்க உரை தொகுக்கப்பட்டது. இவ்விளக்க உரை ‘விபாஷங்கள்’ எனப்பட்டன.

696) முகலாயர் கால கட்டடங்கள் கட்டுவதில் யாருடைய பாணி பின்பற்றப்பட்டது?

A) கிரேக்கப்பாணி

B) பாரசீக பாணி

C) இஸ்லாமிய பாணி

D) அரேபிய பாணி

விளக்கம்: பாபர், ஹீமாயூன் ஆகியோர் காலத்தைவிட அக்பர், ஷாஜஹான் காலத்தில்தான் கட்டக்கலை வளர்ச்சிபெற்றது. செங்கற்களாலான கட்டடங்கள் அக்பர் காலத்தில் கட்டப்பட்டன. கட்டடங்கள் கட்டுவதில் பாரசீக பாணி பின்பற்றப்பட்டது. அக்பர் காலத்தில் ஹீமாயூனிற்குக் கல்லறை, பதேபூர் சிக்ரியில் பல அழகிய கட்டடங்கள், புலந்தர்வாசா (பதேபூர் சிக்ரியின் நுழைவுவாயில்) போன்றவை கட்டப்பட்டன. அக்பருக்குப்பின் ஆட்சிக்கு வந்த ஜஹாங்கீர், சிக்கந்தாரா என்ற இடத்தில் அக்பரின் கல்லறையைக் கட்டினார்.

697) ஒளங்கசீப்-ன் ஆட்சிக் காலத்தைப் பற்றிக் கூறும் நூலை எழுதியவர் யார்?

A) அப்துல்ஹமீதுலாகூரி

B) இனாயத்கான்

C) மிர்சா முகம்மதுகான்

D) மேற்காணும் யாருமில்லை

விளக்கம்: மிர்சா முகம்மதுகான் எழுதிய ‘ஆலம்கீர் நாமா’ என்ற நூல் ஒளரங்கசீப்பின் ஆட்சிக்காலத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றது.

698) பல்வேறு இலக்கிய மற்றும் சமய நூல்களுக்கு உருவங்கள் (வரையப்பட்ட ஓவியம்) மூலம் விளக்கமளிக்கும் பணியை தொடங்கி வைத்தவர் யார்?

A) ஜஹாங்கீர்

B) அக்பர்

C) ஹீமாயூன்

D) ஷாஜகான்

விளக்கம்: மீர்சையது, அலி அப்துல் சமது ஆகிய இரு ஓவியர்களும், ஹீமாயூனால் பாரசீகத்திலிருந்து இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டனர். அக்பர் காலத்தில் இந்த ஓவியர்கள் புகழினை பெற்றனர். பல்வேறு இலக்கிய மற்றும் சமய நூல்களுக்கு உருவங்கள் (வரையப்பட்ட ஓவியம்) மூலம் விளக்கமளிக்கும் பணியை அக்பர் தொடங்கி வைத்தார்.

699) யாருடைய போர் முறை மராத்தியரின் ‘கொரில்லா’ போர்முறைக்கு அடிப்படையாக அமைந்தது?

A) பாபர்

B) ஹீமாயூன்

C) அக்பர்

D) ஷாஜகான்

விளக்கம்: முகலாய மன்னரான பாபரால் இந்தியாவில் முதன் முதலில் ‘பீரங்கிப்படை’ அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்தியாவின் படையமைப்பில் புதிய மாற்றத்தை உருவாக்கியது. இவரது “துலுக்மா” என்ற போர் முறை மராத்தியரின் ‘கொரில்லா போர்’ முறைக்கு அடிப்படையாக அமைந்தது.

700) இந்திய இசையின் பரிணாம வளர்ச்சிக்கு வித்திட்டவர் யார்?

A) அமீர் குஸ்ரு

B) அமீர் ஹாசன்

C) தான்சேன்

D) பிர்தௌசி

விளக்கம்: அக்பர் அவையில் ‘தான்சேன்’ இடம்பெற்றிருந்தார். பிற்காலத்தில் எழுந்த இந்திய இசையின் பரிணாம வளர்ச்சிக்கு இவர் வித்திட்டார்.

701) ஆங்கிலேயரின் நிலவருவாய் முறைக்கு யாருடைய நிலவருவாய் முறை அடிப்படையாக அமைந்தது?

A) அக்பர்

B) ஷெர்ஷா

C) அலாவுதீன் கில்ஜி

D) பெரோஸ் துக்ளக்

விளக்கம்: அக்பரின் நிலவருவாய் முறையான, ஜப்தி முறை, பிற்காலத்தில் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களின் நிலவருவாய் முறைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தது.

702) குப்தர்கள் காலத்தில் சிறந்து விளங்கிய உலோகத் தொழில், சுரங்கத் தொழில் பற்றிய செய்திகளை குறிப்பிட்டுள்ள அறிஞர்?

A) பதௌனி

B) யுவான் சுவாங்

C) வராக மிகிரர்

D) பாஹியான்

விளக்கம்: குப்தர்கள் காலத்தில் சிறந்து விளங்கிய உலோகத் தொழில், சுரங்கத் தொழில் பற்றிய செய்திகளை வராகமிகிரர், காளிதாசர் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். இக்காலத்தில் பீகாரிலிருந்து இரும்புப் படிவுகளும், ராஜஸ்தானிலிருந்து செம்புப் படிவுகளும் கண்டறியப்பட்டன.

703) மௌரியர்கள் காலத்தில் ‘தர்மாதிகாரி’ என்பவருக்கு பொருத்தமானது எது?

A) தர்மத்தைப் பரப்புபவர்

B) நிதியமைச்சர்

C) சமய நூல்களை பரப்புபவர்

D) நீதிபதிகள்

விளக்கம்: மௌரியர் காலத்தில் நிறுவப்பட்ட உரிமையியல் நீதிமன்றங்கள் தர்மஸ்தானியம் என்று அழைக்கப்பட்டன.

மௌரியர் காலத்தில் நிறுவப்பட்ட குற்றவியல் நீதிமன்றங்கள் கண்டக சோதனங்கள் என்று அழைக்கப்பட்டன.

நீதிபதிகள் ‘தர்மாதிகாரி’ என்றழைக்கப்பட்டார்.

704) மௌரியர் காலத்தில் பலி என்பது ஒரு வகையான வரியாகும். இது கீழ்க்காணும் எதனுடன் தொடர்புடையது?

A) சமய வரி

B) பழ வரி

C) நில வரி

D) நீர்ப்பாசன வரி

விளக்கம்: மௌரியர் காலத்தில், அயல்நாட்டு வாணிகத்தை முறைப்படுத்தும் விதமாகச் சுங்கவரி விதிக்கப்பட்டது. நிலவரி ‘பாகா’ என்ற பெயரிலும், பழங்கள் மீதான வரி ‘பலி’ என்ற பெயரிலும் அழைக்கப்பட்டது.

705) வெற்றிக்குப் பின் போரிடுவதைக் கைவிட்ட அரசர் யார்?

A) பாபர்

B) முகமது கஜினி

C) அக்பர்

D) அசோகர்

விளக்கம்: கி.மு (பொ.ஆ.மு) 261-இல் நடைபெற்ற கலிங்கப்போரில் அசோகர் வெற்றிபெற்றார். கலிங்கம் என்பது தற்போதைய ஒடிசா மாநிலமாகும். இப்போருக்குப்பின் அசோகர் போரிடுவதை கைவிட்டார்.

706) பத்ரபாகு என்பவர் எழுதிய நூல் எது?

A) கல்பசூத்திரம்

B) வியாக்கரணம்

C) அஸ்டத்யாயி

D) வாசவதத்தா நாட்டிய தாரா

விளக்கம்: பத்ரபாகு – கல்பசூத்திரம்

வ்யாதி – வியாக்கரணம் (இலக்கணம்)

பாணினி – அஸ்டத்யாயி

சுபந்து – வாசவதத்தா நாட்டிய தாரா (நாட்டிய கலை)

707) குப்தர்கள் காலத்தில் செம்புப் படிவுகள் எங்கு கண்டறியப்பட்டன?

A) பீகார்

B) இராஜஸ்தான்

C) மேற்கு வங்காளம்

D) மகாராஷ்டிரா

விளக்கம்: குப்தர்கள் காலத்தில் சிறந்து விளங்கிய உலோகத் தொழில், சுரங்கத் தொழில் பற்றிய செய்திகளை வராகமிகிரர், காளிதாசர் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். இக்காலத்தில் பீகாரிலிருந்து இரும்புப் படிவுகளும், ராஜஸ்தானிலிருந்து செம்புப் படிவுகளும் கண்டறியப்பட்டன.

708) சாஞ்சி ஸ்தூபி போபால் என்ற இடத்தில் உள்ளது. இது யாருடைய காலத்தில் கட்டப்பட்டது?

A) சந்திர குப்த மௌரியர்

B) ஸ்ரீகுப்தர்

C) சமுத்திர குப்தர்

D) அசோகர்

விளக்கம்: அசோகர் காலத்தில் மத்தியப் பிரதேசத்திலுள்ள போபால் அருகே சாஞ்சி என்ற இடத்தில் கட்டப்பட்ட ஸ்தூபி புகழ்பெற்றதாகும். இது அடர்வெண்சாம்பல் நிறக்கற்களால் கட்டப்பட்டது.

709) சாரநாத் கற்றூணில் உள்ள விலங்குகளில் பொருந்தாதது எது?

A) குதிரை

B) பசு

C) சிங்கம்

D) யானை

விளக்கம்: சாரநாத் கற்றூணில் உள்ள தர்ம சக்கரம் 24 ஆரங்கள் உடையது. மேலும், அதன் 4 பக்கங்களிலும் சிங்கம், குதிரை, எருது மற்றும் யானை உருவங்களும் காணப்படுகின்றன. மௌரியர்கால புகழை வெளிப்படுத்தும் இந்தக் கலைப்படைப்பு, நமது நாட்டின் தேசிய சின்னத்திலும் பணத்தாள் மற்றும் நாணயங்களிலும் இடம்பெற்றுள்ளது. தர்மசக்கரம் நம் தேசியக் கொடியை அலங்கரிக்கிறது.

710) சாரநாத் கற்றூணில் ஏன் நான்கு விலங்குகளின் உருவங்கள் இடம்பெற்றுள்ளன?

A) இறைவனை அடைய நான்கு பேருண்மைகளை புத்தர் கூறினார் என்பதன் அடையாளமாக

B) புத்தர், மனைவி, மகன், தாய் ஆகியோரின் அடையாளமாக

C) புத்தர் வாழ்வில் நடந்த 4 முக்கிய நிகழ்வுகள் காரணமாக

D) நான்கு புத்தசமய மாநாடு காரணமாக

விளக்கம்: சாரநாத் கற்றூணில் யானை, திமிலுடன் கூடிய எருது, குதிரை, சிங்கம் ஆகிய விலங்குகளின் உருவங்கள் ஓடும் நிலையில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மூலம் புத்தர் வாழ்வில் நடந்த 4 முக்கிய நிகழ்வுகள் குறிப்பிடப்படுகின்றன. அதில் ‘யானை’ புத்தரின் அன்னை மாயாதேவி கனவில் வெள்ளை யானைக் கண்டதை நினைவுப்படுத்துகிறது.

711) மௌரியர் கால மொழி பற்றிய கூற்றில் தவறானதை தேர்வு செய்க

A) ஆட்மொழி – பிராகிருதம்

B) இலக்கிய மொழி – சமஸ்கிருதம்

C) எளிய மக்கள் பேசும் மொழி – பாலி

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: மௌரியரின் கல்வி, கலை, இலக்கிய வளர்ச்சியில் கவனம் செலுத்தியது போன்று, பிராகிருதம் (ஆட்சிமொழி), சமஸ்கிருதம் (இலக்கியமொழி), பாலி (எளிய மக்கள் போசும் மொழி) போன்ற மொழிகளின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்தனர்.

712) குஷாண மரபின் கடைசி மன்னர் யார்?

A) முதலாம் காட்பீசஸ்

B) கனிஷ்கர்

C) இரண்டாம் காட்பீசஸ்

D) வாசுதேவர்

விளக்கம்: முதலாம் காட்பீசஸ் – மரபைத் தோற்றுவித்தவர்

கனிஷ்கர் – புகழ்பெற்ற மன்னர்

வாசுதேவர் – கடைசி மன்னர்.

713) குஷாணர் காலத்தில் எந்த நாட்டுடன் நடந்த வணிகத்தால் அந்நாட்டுத் தங்கம் இந்தியச் சந்தைகளில் மிகுதியாகக் காணபபடட்டது?

A) கிரேக்கம்

B) எகிப்து

C) துருக்கி

D) ரோம்

விளக்கம்: குஷாணர்கள் காலத்தில் உள்நாட்டு வாணிகமும் அயல்நாட்டு வாணிகமும் தடையின்றி நடந்தன. உரோம நாட்டுடன் நடந்த வணிகத்தால் அந்நாட்டுத் தங்கம் இந்தியச் சந்தைகளில் மிகுதியாகக் காணப்பட்டன. இந்தியாவின் மஸ்லின் துணி, ரோம் நாட்டில் மிகுதியாக விற்பனையாயிற்று.

714) பஞ்சபாண்டவ ரதங்களில் பொருந்தாதது எது?

A) திரௌபதி ரதம்

B) கண்ணகி ரதம்

C) நகுல, சகாதேவ ரதம்

D) தர்மராஜ ரதம்

விளக்கம்: முதலாம் நரசிம்மவர்மனின் சாதனை மாமல்லபுரத்;தில் ஒற்றைக்கல்லால் செதுக்கப்பட்ட ரதங்களை உருவாக்கியது. ஒரே இடத்தில் அமைக்கப்பட்ட 5 ரதங்கள் “பஞ்சபாண்டவ ரதங்கள்” என்று அழைக்கப்படுகின்றன.

அவை,

1. திரௌபதி ரதம்

2. அர்ச்சுன ரதம்

3. பீம ரதம்

4. தர்மராஜ ரதம்

5. நகுல, சகாதேவ ரதம்

715) அக்பர் எப்போது இஸ்லாமியர் அல்லாதோர் மீதான வரியை நீக்கினார்?

A) 1562

B) 1563

C) 1564

D) 1565

விளக்கம்: முகலாயர் காலத்தில் இஸ்லாமிய சமய அடிப்படையிலான அரசு நடைபெற்றது என்றாலும் அக்பர் சமய சார்பற்றவராகவே இருந்தார். ராஜபுத்திரர்களுடன் கொண்டிருந்த நட்பின் காரணமாகக் கி.பி.1563-இல் புனிதப் பயணிகள் மீதான வரியையும், கி.பி 1564-இல் இஸ்லாமியரல்லாதோர் செலுத்திய “ஜிசியா” என்ற வரியையும் நீக்கினார்.

716) பௌத்த கருத்துக்களைப் பரப்ப எந்த பௌத்த மாநாட்டில் நெறிமுறைகள் வகுக்கப்பட்டன?

A) முதல் மாநாடு

B) இரண்டாம் மாநாடு

C) மூன்றாம் மாநாடு

D) நான்காம் மாநாடு

விளக்கம்: 4-வது பௌத்த சமய மாநாடு, காஷ்மீரிலுள்ள ‘குந்தல் வனம்’ என்ற இடத்தில் ‘வசுமித்திரர்’ தலைமையில் நடைபெற்றது. அஸ்வகோசர் முன்னிலை வகித்தார். இம்மாநாட்டில் பௌத்த பீடகங்களுக்கான விளக்க உரை தொகுக்கப்பட்டது. இவ்விளக்க உரை ‘விபாஷங்கள்’ எனப்பட்டன. மேலும், மகாயான பௌத்த கருத்துக்களைப் பரப்ப நெறிமுறைகள் வகுக்கப்பட்டன. புத்த சமயமும் இரு பிரிவுகளாகப் பிரிந்தது. (ஹீனயானம், மகாயானம்)

717) யாருடைய ஆட்சிக் காலத்தில் “ராகதர்பன்” என்ற இந்திய இசை நூல் பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டது?

A) அலாவுதீன் கில்ஜி

B) குத்புதீன் ஐபக்

C) முகமது பின் துக்ளக்

D) பெரோஸ் துக்ளக்

விளக்கம்: டெல்லி சுல்தான் காலத்தில் கோரா, சானம் போன்ற புதிய ராகங்களையும் இந்து மற்றும் ஈரானிய முறைகளை ஒன்றிணைத்து ‘குவாலிஸ்’ என்ற புதிய வகை மெல்லிசைகளும் உருவாக்கப்பட்டது. பிரோஸ் துக்ளக் ஆட்சிக் காலத்தில் ‘ராகதர்பன்’ என்ற இந்திய இசை நூல் பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டது.

718) பௌத்த மதத்தின் எந்த பிரிவு இலங்கை, பர்மா, தாய்லாந்து மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் பரப்பப்பட்டது?

A) ஹீனயானம்

B) மகாயானம்

C) இரண்டும்

D) எதுவுமில்லை

விளக்கம்: மகாயானம் மத்திய ஆசியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும், ஹீனயானம் இலங்கை, பர்மா, தாய்லாந்து மற்றும் தென்கிழக்காசிய நாடுகளிலும் பரவின.

719) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க

A) புத்தசரிதம் – அஷ்வகோஷர்

B) மத்தியமிகசூத்திரம் – நாகார்ஜுனர்

C) மகாவிபாசசரித்திரம் – வசுமித்திரர்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: புத்தசரிதம், சௌந்தரநத்தம் – அஷ்வகோஷர்

மத்தியமிகசூத்திரம் – நாகார்ஜுனர்

மகாபவிபாசசரித்திரம் – வசுமித்திரர்

720) சிற்பக்கலை வாயிலாகவே மாகாயான பௌத்த சமயக் கோட்பாடுகளைப் பரப்புதல் என்பது எந்தக் கலையின் முக்கிய கருப்பொருள்?

A) இந்திய கலை

B) காந்தாரக் கலை

C) இஸ்லாமிய கலை

D) மதுரா கலை

விளக்கம்: காந்தாரக்கலையின் முக்கிய கருப்பொருள், ‘சிற்பக்கலை வாயிலாகவே மகாயான பௌத்த சமயக் கோட்பாடுகளைப் பரப்புதலாகும்’. காந்தாரக் கலையில், சிலையின் தலைக்குப் பின்னால் வட்ட வடிவ ஞான ஒளியை இடம்பெறச் செய்தலும் அறிமுகப்படுத்தப்பட்டது.

721) புத்தரது உருவச் சிலைகள் நின்ற நிலையில் யாருடைய காலத்தில் வடிக்கப்பட்டன?

A) மௌரியர்கள்

B) குப்தர்கள்

C) குஷாணர்கள்

D) ஹர்சப்பேரரசு

விளக்கம்: குஷாணர்கள் காலத்தில் புத்தரது உருவ சிலைகள் நின்ற நிலையில் வடிக்கப்பட்டன. இக்காலத்தில இந்து சமயம், பௌத்த சமயம் மற்றும் பிற சமயங்களும் வளர்ச்சி பெற்றன.

722) கூற்று: இரண்டாம் அசோகர் என்று அழைக்கப்பட்டவர் அலாவுதீன் கில்ஜி

காரணம்: இவரது காலத்தில், நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்தது

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: கனிஷ்கர் காலத்தில், நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்ததால் இவரை இரண்டாம் அசோகர் என்றழைத்தனர்.

723) ‘போகோகி’ எனப்பட்ட பயணக் குறிப்புகள் யாருடையது?

A) யுவான்சுவாங்

B) பாஹியான்

C) மனூச்சி

D) பிளனி

விளக்கம்: சீனப்பயணி பாஹியானின் ‘போகோகி’ எனப்பட்ட பயணக்குறிப்புகளும், நாணயங்கள் மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் குப்தர்களைப் பற்றி அறிவதற்கான சான்றுகள் ஆகும்.

724) பரம பட்டாரகா, மகாராஜாதி ராஜா, பரமேஸ்வரா, சாம்ராட் போன்ற விருதுப் பெயர்களைச் சூட்டிக் கொண்டவர்கள்?

A) மௌரியர்கள்

B) குப்தர்கள்

C) சாளுக்கியர்கள்

D) குஷாணர்கள்

விளக்கம்: குப்தப் பேரரசர்கள் பரம பட்டாரகா, மகாராஜாதி ராஜா, பரமேஸ்வரா, சாம்ராட் போன்ற விருதுப் பெயர்களைச் சூட்டிக் கொண்டனர். குமாரமாத்யர்கள் என்ற வருவாய்த்துறை உயரதிகாரிகள் பற்றியும், மகாசந்திரவிக்ரஹா என்ற வெளியுறவுத் துறை அமைச்சர் பற்றியும் குப்தர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன.

725) குப்தர்கள் காலத்தில் நீதித்துறை அமைச்சர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

A) மகாஅஸ்வபதி

B) மகாசந்திவிக்ரஹா

C) குமாரமாத்யர்

D) தண்டநாயக்கர்

விளக்கம்: மகாஅஸ்வபதி – குதிரைப்படைத் தலைவர்

மகாசந்திவிக்ரஹா – வெளியுறவுத் துறை அமைச்சர்

குமாரமாத்யர் – வருவாய்த்துறை உயரதிகாரிகள்

தண்டநாயக்கர் – நீதித்துறை அமைச்சர்

மகாதண்டநாயகர் – இராணுவத்துறை அமைச்சர்

726) அலகாபாத் கற்றூண் கல்வெட்டு “அரிசேனர்” என்பவரால் 33 வரிகளால் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் கீழ்க்காணும் எந்த அரசர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது?

A) முதலாம் சமுத்திர குப்தர்

B) இரண்டாம் சந்திர குப்தர்

C) குமார குப்தர்

D) முதலாம் சந்திரகுப்தர்

விளக்கம்: அலகாபாத் கற்றூண் கல்வெட்டு “அரிசேனர்” என்பவரால் 33 வரிகளில் பொறிக்கப்பட்டது. இதில் முதலாம் சந்திரகுப்தரின் போர் வெற்றிகள், படைத்திறன் ஆகியவை பற்றியும், குப்த பேரரசின் ஆட்சி எல்லைகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன.

727) குப்தர்கள் காலத்தில் சங்க நாணயங்கள் வைத்திருப்போர் செலுத்தும் வரியின் பெயர் என்ன?

A) பாகா

B) கரா

C) ஹிரண்யா

D) டஸ்டக்

விளக்கம்: பாகா – விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு வரி

கரா – கிராமங்களில் வாழ்வோர் மீதான வரி

ஹிரண்யா – சங்க நாணயங்கள் வைத்திருப்போர் செலுத்தும் வரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!