இடர்கள் 8th Social Science Lesson 14 Questions in Tamil
8th Social Science Lesson 14 Questions in Tamil
14. இடர்கள்
1) இடர் என பொருள் தரும் ஹசார்டு (Hazard) என்ற சொல் ஹாசர்ட் (Hasart) என்னும்………… வார்த்தையில் இருந்து உருவானது.
A) கிரேக்க
B) லத்தீன்
C) பிரெஞ்சு
D) அரேபிய
(குறிப்பு – ஹசார்டு என்னும் சொல் ஹாசர்ட் என்னும் பிரெஞ்சு வார்த்தையில் இருந்து பெறப்பட்டது. இதன் பொருள் பகடை விளையாட்டு என்பதாகும்)
2) இடர் என்பதை வெவ்வேறு மொழிகளில் அழைத்தலை பொருத்துக.
I. ஹசார்ட் – a) ஸ்பானியம்
II. ஹாசர்ட் – b) அரேபிய
III. அஸ்-சஹர் – c) ஆங்கிலம்
IV. அசார் – d) பிரெஞ்சு
A) I-c, II-d, III-b, IV-a
B) I-d, II-a, III-c, IV-b
C) I-b, II-a, III-c, IV-d
D) I-a, II-b, III-d, IV-c
(குறிப்பு – ஒரு நபரோ, பொருளோ, நிகழ்வோ மக்கள் அல்லது கட்டமைப்புகள் மற்றும் பொருளாதார படங்களுக்கு அச்சுறுத்தலாகவும் இழப்பு ஏற்படுத்தும் வகையிலும் அமைந்தால் அது இடர் எனப்படும். அது வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு விதமாக அழைக்கப்படுகிறது)
3) நிகழ்விற்கான காரணிகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ள இடர்களில் தவறானது எது?
A) இயற்கையினால் ஏற்படும் இடர்கள்
B) மனித செயல்களால் உருவாக்கப்படும் இடர்கள்
C) சமூக இயற்கைக் காரணிகளால் ஏற்படும் இடர்கள்
D) தொழில்நுட்பம் சார்ந்த இடர்கள்
(குறிப்பு – தொழில்நுட்பம் சார்ந்த இடர்கள் தோற்றத்தின் அடிப்படையில் உருவாகும் இடங்கள் ஆகும். )
4) கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்று எது?
I. இயற்கைக் காரணிகளால் உருவாகும் இடர்கள், சூறாவளி புயல்கள் வறட்சி போன்றவை ஆகும்.
II. ரசாயன கழிவு, அணைக்கட்டு உடைதல், உள்நாட்டுக் கலவரங்கள் போன்றவை மனிதனால் ஏற்படும் இடர்கள் ஆகும்.
III. அணைக்கட்டு உடைதல் என்பது இயற்கையால் ஏற்படும் இடர் ஆகும்.
A) I, II மட்டும் சரி
B) I, III மட்டும் சரி
C) II, III மட்டும் சரி
D) எல்லாமே சரி
(குறிப்பு – அணைக்கட்டு உடைதல் என்பது மனிதனால் உருவாக்கப்படும் இடர்கள் ஆகும்.)
5) இயற்கை சக்திகள் மற்றும் மனிதனின் தவறான செயல்பாடுகள் மூலம் விலையும் இடர்களில் தவறானது எது?
A) ஆறுகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள மரங்களை வெட்டுவதால் வெள்ளப்பெருக்கு ஏற்படுதல்
B) மலைப்பகுதிகளில் மரங்களை வெட்டுவதால் ஏற்படும் நிலச்சரிவுகள்.
C) சதுப்பு நில காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் சூறாவளி அலைகள்.
D) எரிமலை வெடிப்பு மற்றும் லாவா வழிதல் ஆகியவற்றால் ஏற்படும் இடர்கள்.
(குறிப்பு – எரிமலை வெடிப்பு மற்றும் லாவா வழிதல் ஆகியவற்றால் ஏற்படும் இடர்கள், மனிதன் மற்றும் இயற்கையால் ஏற்படுவது அல்ல, முற்றிலும் இயற்கையால் ஏற்படும் இடர் ஆகும் )
6) பொருத்துக
I. வளி மண்டலத்தால் ஏற்படும் இடர் – a) கடற்கரை அரிப்பு
II. நிலவியல் சார்ந்த இடர் – b) காட்டுத்தீ
III. நீரியல் தொடர்பான இடர் – c) புவி வெப்பமடைதல்
IV. சுற்றுச்சூழல் சார்ந்த இடர் – d) சுனாமி
A) I-b, II-d, III-a, IV-c
B) I-d, II-a, III-c, IV-b
C) I-b, II-a, III-c, IV-d
D) I-a, II-b, III-d, IV-c
(குறிப்பு – தோற்றத்தின் அடிப்படையில் உருவாகும் இடர்களை எட்டு வகையாகப் பிரிக்கலாம். அவை நிலவியல் சார்ந்த, நீரியல் சார்ந்த, சுற்றுசூழல் சார்ந்த இடர் போன்றவைகள் ஆகும் )
7) தவறான இணை எது?
A) தொழில்நுட்பம் சார்ந்த இடர் – தீ விபத்து
B) மனித தூண்டுதலால் ஏற்படும் இடர் – தீவிரவாதம்
C) உயிரியல் சார்ந்த இடர் – சின்னம்மை
D) சுற்றுச்சூழல் சார்ந்த இடர் – வெள்ளப்பெருக்கு
(குறிப்பு – வெள்ளப்பெருக்கு என்பது நீரியல் தொடர்பான இடர் ஆகும். புவி வெப்பமயமாதல், பாலைவனமாதல் போன்றவை சுற்றுச்சூழல் சார்ந்த இடர்கள் ஆகும்)
8) இந்திய தர நிர்ணய நிறுவனம் இந்தியாவை…………… நில அதிர்வு மண்டலங்களாக வகைப்படுத்தியுள்ளது.
A) ஐந்து
B) ஆறு
C) ஏழு
D) எட்டு
(குறிப்பு – ஒரு பகுதியினுடைய நிலவியல் அமைப்பு, கடந்த காலங்களில் ஏற்பட்ட நில அதிர்வு, அதிர்வு அலைகளின் தன்மைகள் ஆகியவற்றை அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நில அதிர்வு மண்டலங்கள் கண்டறியப்படுகின்றன.இந்தியா ஐந்து நில அதிர்வு மண்டலங்களாக உள்ள வகைப்படுத்தப்பட்டுள்ளது.)
9) இந்தியாவில் எந்த நில அதிர்வு மண்டலத்தின் கீழ் இந்தியப் பகுதிகள் எதுவும் வகை படுத்தப்படவில்லை?
A) மண்டலம்-1
B) மண்டலம்-2
C) மண்டலம்-3
D) மண்டலம்-4
(குறிப்பு – இந்தியாவில் நில அதிர்வு மண்டலங்கள் ஐந்து வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவை மண்டலம்-1, 2, 3, 4 மற்றும் 5 ஆகும். நில அதிர்வு மண்டலம்-1இன் கீழ் இந்தியாவில் எந்த பகுதியும் வகை படுத்தப்படவில்லை)
10) பொருத்துக
I. மண்டலம் 2 – a) மிக அதிகம்
II. மண்டலம் 3 – b) மிதமானது
III. மண்டலம் 4 – c) அதிகம்
IV. மண்டலம் 5 – d) குறைவு
A) I-d, II-b, III-c, IV-a
B) I-a, II-c, III-b, IV-d
C) I-d, II-c, III-b, IV-a
D) I-a, II-b, III-c, IV-d
(குறிப்பு – நில அதிர்வு மண்டலம் 2, 3, 4, 5 முறையே குறைவு, மிதமானது, அதிகம் மற்றும் மிக அதிகம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது)
11) பொருத்துக
I. மண்டலம் 2 – a) அந்தமான், உத்தராகண்ட் போன்றன
II. மண்டலம் 3 – b) கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா போன்றன
III. மண்டலம் 5 – c) புது டில்லி, ஹிமாச்சல பிரதேசம் போன்றன
IV. மண்டலம் 4 – d) நாட்டின் பிற பகுதிகள்
A) I-d, II-b, III-a, IV-c
B) I-a, II-c, III-b, IV-d
C) I-d, II-c, III-b, IV-a
D) I-a, II-b, III-c, IV-d
(குறிப்பு – இந்தியாவின் நில அதிர்வு மண்டலங்களில், மண்டலம்-1 இன் கீழ் இந்தியாவின் எந்த பகுதியும் வகைபடுத்தப்படவில்லை)
12) வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வானிலையியல் காரணிகளுள் அல்லாதவை எது?
A) கனமழை
B) காடழிப்பு
C) அயனமண்டல சூறாவளி
D) மேக வெடிப்பு
(குறிப்பு – வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வானிலையியல் காரணிகளுள் அல்லாதவை காடழிப்பு ஆகும். காடழிப்பு மனிதக் காரணி ஆகும்)
13) வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான மனித காரணிகளுள் அல்லாதவை எது?
A) வண்டல் படிவுகள்
B) முறையற்ற நீர்பாசன முறைகள்
C) போதிய வடிகால் அமைப்பு இல்லாமை
D) முறையற்ற வேளாண்முறைகள்
(குறிப்பு – போதிய வடிகால் அமைப்பு இல்லாமை என்பது வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான இயற்கை காரணி ஆகும்)
14) அடிக்கடி வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் தவறானது எது?
A) கடலோர ஆந்திரம்
B) ஒடிசா
C) குஜராத்
D) கர்நாடகா
(குறிப்பு – இந்தியாவில் அடிக்கடி வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகள் கடலோர ஆந்திரம், ஒடிசா, குஜராத், உத்திரப்பிரதேசம், வட பீகார், மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகள் ஆகும்)
15) தேசிய நீரியல் நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?
A) புது டில்லி
B) அலகாபாத்
C) ஹைதராபாத்
D) திருவனந்தபுரம்
(குறிப்பு – தேசிய நீரியல் நிறுவனம், இந்தியாவின் தலைநகரமான புதுதில்லியில் அமைந்துள்ளது)
16) சூறாவளிப் புயல் குறித்த செய்திகளுள் தவறானது எது?
I. வளிமண்டலத்தில் குறைந்த காற்றழுத்த பகுதிகளில் சூழலும் வலிமையான காற்று சூறாவளி புயல் காற்று எனப்படும்.
II. சூறாவளிப் புயல்களின் போது காற்று வேகம் மணிக்கு 200 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும். நாள் ஒன்றுக்கு மழைப்பொழிவு சுமார் 50 சென்டி மீட்டர் வீதம் பலநாட்கள் பெய்யக்கூடும்.
A) I மட்டும் சரியானது
B) II மட்டும் சரியானது
C) இரண்டும் சரியானது
D) இரண்டும் தவறானது
(குறிப்பு – அயன மண்டல சூறாவளிகள் கடும் காற்று, பேரலைகள் மற்றும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படுத்துகின்றன. இவை சூறாவளி புயல் காற்று என அழைக்கப்படுகிறது.)
17) சூறாவளி புயல் காற்று எந்த அரைக்கோளத்தில் கடிகார திசையில் சுழலும்?
A) வட அரைக்கோளத்தில் மட்டும்
B) தென் அரைக்கோளத்தில் மட்டும்
C) இரண்டு அரை கோளத்திலும்
D) இரண்டு அரைக்கோளத்திலும் அல்ல
(குறிப்பு – சூறாவளி புயல் காற்று தென் அரைக்கோளத்தில் கடிகார திசையில் சுழலும்)
18) வெப்ப மண்டல சூறாவளிகள் காரணமாக திடீரென்று ஏற்படும் கடல்நீர் எழுச்சியை………… என்கிறோம்
A) பொங்கு கடல் அலை
B) புயல் அலை
C) சுனாமி அலை
D) இவை எதுவும் இல்லை
(குறிப்பு – வெப்ப மண்டல சூறாவளிகள் காரணமாக திடீரென்று ஏற்படும் கடல்நீர் எழுச்சியை புயல் அலை என்கிறோம். ஆழமற்ற கடலோரப் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது)
19) புயல் அலைகளால் பாதிப்பிற்குள்ளாகும் கிழக்கு கடற்கரை பகுதிகளில் தவறானது எது?
A) ஒடிசாவின் வடபகுதி
B) மேற்கு வங்காள கடற்கரை
C) கொச்சின் கடற்கரை
D) ஆந்திர கடற்கரை
(குறிப்பு – கொச்சின் கடற்கரை, வடக்கு கடற்கரை பகுதி ஆகும். புயல் அலைகளால் பாதிப்பிற்கு உள்ளாகும் பகுதிகளில் இது தவறானது)
20) தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களின் எண்ணிக்கை என்ன?
A) 12
B) 11
C) 13
D) 15
(குறிப்பு – தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களின் எண்ணிக்கை 13 ஆகும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகியன ஆகும் )
21) புயல் அலைகளால் பாதிப்பிற்கு உள்ளாகும் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் தவறானது எது?
A) கட்ச் வளைகுடாவை சுற்றியுள்ள கடலோர பகுதி
B) மகாராஷ்டிர கடற்கரை
C) பாம்பே வளைகுடாவை சுற்றியுள்ள கடற்கரை பகுதி
D) கொல்லம் கடற்கரை
(குறிப்பு – கொல்லம் கடற்கரை பகுதி புயல் அலைகளால் பாதிப்பிற்குள்ளாகும் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் தவறானது ஆகும்)
22) தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் தவறானது எது?
A) திருவள்ளூர்
B) திருச்சிராப்பள்ளி
C) திருநெல்வேலி
D) விழுப்புரம்
(குறிப்பு – தமிழகத்தில் மொத்தம் 13 கடற்கரை மாவட்டங்கள் உள்ளன. திருச்சிராப்பள்ளி கடற்கரை மாவட்டம் அல்ல. அது காவிரியின் டெல்டா பகுதி ஆகும்)
24) வறட்சியின் வகைகளுள் தவறானது எது?
A) வானிலையியல் வறட்சி
B) சுற்றுச்சூழல் வறட்சி
C) நீரியியல் வறட்சி
D) வேளாண் வறட்சி
(குறிப்பு – வறட்சி மொத்தம் மூன்று வகைப்படுகிறது. அவை வானிலையியல் வறட்சி, நீரியல் வறட்சி, வேளாண் வறட்சி ஆகியன ஆகும்)
25) நீரியல் வறட்சியின் வகைகளுள் சரியானது எது?
I. நிலத்தடி நீர் வறட்சி
II. புவி வளிமண்டல வறட்சி
III.புவி மேற்பரப்பு நீர் வறட்சி
A) I, II மட்டும் சரியானது
B) II, III மட்டும் சரியானது
C) I, III மட்டும் சரியானது
D) எல்லாமே சரியானது
(குறிப்பு – நீரியியல் வறட்சி 2 வகைப்படும். அவை நிலத்தடி மற்றும் புவி மேற்பரப்பு நீர் வறட்சி என்பதாகும் )
26) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
I. பருவ மழை பொய்ப்பதால் இந்தியாவில் வறட்சி ஏற்படுகிறது.
II. இந்தியாவில் பருவமழை சமசீர் அற்ற நிலையில் பொழிகிறது.
A) I மட்டும் சரி
B) II மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறானது
(குறிப்பு – இந்தியாவில் பருவ மழை பொய்ப்பதால் வறட்சி ஏற்படுகிறது. சில பகுதிகளில் அதிக மழை பொழிவையும் மற்ற பகுதிகள் மிதமானது முதல் குறைவான மழை பொழிவை பெறுகின்றன)
27) இந்தியாவின்………… பகுதிகள் வறட்சியினால் பாதிக்கப்படுகின்றன.
A) மூன்றில் ஒரு பங்கு
B) ஐந்தில் இரு பங்கு
C) மூன்றில் இரு பங்கு
D) நான்கில் ஒரு பங்கு
(குறிப்பு – இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு பகுதிகள் வறட்சியினால் பாதிக்கப்படுகின்றன. இது சுமார் 16 சதவீத நிலப்பரப்பையும், 12% மக்கள் தொகையும் கடுமையாக பாதிக்கிறது)
28) இந்தியாவில் எத்தனை சென்டிமீட்டருக்கும் குறைவான மழை பெறும் பகுதிகள் வறட்சிக்கு உள்ளாகும் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது?
A) 60 சென்டிமீட்டர்
B) 70 சென்டிமீட்டர்
C) 80 சென்டிமீட்டர்
D) 90 சென்டிமீட்டர்
(குறிப்பு – இந்தியாவில் 60 சென்டி மீட்டருக்கு குறைவான மழை பொழியும் இடங்கள், வறட்சி பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது)
29) இந்தியாவில் அதிக வறட்சிக்கு உள்ளாகும் முக்கிய பகுதிகளில் தவறானது எது?
I. அகமதாபாத் முதல் கான்பூர் வரை உள்ள வறண்ட மற்றும் வறண்ட பகுதிகள்.
II. கான்பூர் முதல் ஜலந்தர் வரை உள்ள பகுதிகள்
III. மேற்கு தொடர்ச்சி மலையின் காற்று மறைவு பகுதிகளில் அமைந்துள்ள பகுதிகள்.
A) I, II மட்டும் சரி
B) II, III மட்டும் சரி
C) I, III மட்டும் சரி
D) எல்லாமே சரி
(குறிப்பு – குல்லர் அறிக்கை 2014ஆம் ஆண்டின்படி, மேற்கண்ட அனைத்து பகுதிகளும் அதிக வரட்சிக்கு உள்ளாகும் முக்கிய பகுதிகள் ஆகும்.)
30) இந்தியாவில் எத்தனை சதவீத நிலப்பரப்பு நிலச்சரிவு அபாயத்திற்கு உள்ளாகும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது?
A) 15%
B) 20%
C) 30%
D) 25%
(குறிப்பு – இந்தியாவில் சுமார் 15 சதவீத நிலப்பரப்பு நிலச்சரிவு அபாயத்திற்கு உள்ளாகும் பகுதிகளாகும். இமயமலை சரிவுகள், மேற்கு தொடர்ச்சி மலை சரிவுகள் மற்றும் ஆற்றுப் பள்ளத்தாக்கு பகுதிகளில் நிலச்சரிவுகள் அதிகம் காணப்படுகின்றன)
31) நிலச்சரிவுகள் ஏற்பட காரணமானவைகளுள் எது தவறானது
A) காடழிப்பு
B) எரிமலை வெடிப்பு
C) சுரங்கம் தோண்டுதல்
D) நில மாசுபாடு
(குறிப்பு – நிலச்சரிவு ஏற்பட காரணமானவை பலவீனமான தளர்ந்த நில அமைப்பு, காடழிப்பு, நில அதிர்வு, எரிமலை வெடிப்பு, சுரங்கம் தோண்டுதல், மலைப்பகுதிகளில் இருப்புப் பாதைகளின் கட்டுமானம் ஆகியவை ஆகும்)
32) தமிழ்நாட்டில் நிலச்சரிவுகளால் அதிகம் பாதிக்கப்படும் பகுதி கீழ்க்கண்டவற்றுள் எது?
I. கொடைக்கானல்
II. உதகமண்டலம்
III. ஒகேனக்கல்
IV. தேனி
A) I, II மட்டும் சரி
B) II, III மட்டும் சரி
C) III, IV மட்டும் சரி
D) எல்லாமே சரி
(குறிப்பு – தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் மற்றும், நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகமண்டலம் பகுதிகள் நிலச்சரிவால் அதிகம் பாதிக்கப்படும் இடங்களாகும்)
33) சுனாமி அலைகள் ஏற்பட காரணமானவைகளுள் எது சரியானது?
I. கடலடி நில அதிர்வு
II. கடலடி நிலச்சரிவு
III. எரிமலை வெடிப்பு
A) I, II மட்டும் சரி
B) II, III மட்டும் சரி
C) I, III மட்டும் சரி
D) எல்லாமே சரி
(குறிப்பு – மேற்கண்ட மூன்று காரணங்களாலும் சுனாமி அலைகள் ஏற்படுகின்றது. இப்பேரலைகள் பொதுவாக கடற்கரை பகுதிகளில் மணிக்கு சுமார் 640 கிலோ மீட்டரிலிருந்து 960 கிலோ மீட்டர் வேகம் வரை பயணிக்கும். இது கடலோர வாசிகளுக்கு பேராபத்தை ஏற்படுத்துகிறது)
34) சுனாமி என்ற வார்த்தை……………. சொல்லாகும்.
A) ஜப்பானிய மொழி
B) கொரிய மொழி
C) சீன மொழி
D) இந்தோனேஷிய மொழி
(குறிப்பு – சுனாமி என்ற வார்த்தை ஜப்பானிய சொல்லான சுநாமி என்பதிலிருந்து பெறப்பட்டது. சு – துறைமுகம், நாமி – அலை, அதாவது துறைமுக அலை என்பது பொருளாகும்)
35) இந்திய பெருங்கடலில் சுனாமி ஏற்பட்ட ஆண்டு எது?
A) 2002
B) 2003
C) 2004
D) 2005
(குறிப்பு – இந்திய பெருங்கடலில் 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் நாள், சுனாமி பேரலை ஏற்பட்டது. இந்தோனேசியாவின் சுமத்ரா கடற்கரையில் தோன்றியது. இந்த சுனாமியானது 12 நாடுகளை தாக்கி 2 லட்சத்து 25 ஆயிரம் உயிர்களை பலி கொண்டது)
36) செர்னோபில் அணு உலை விபத்து எந்த ஆண்டு நிகழ்ந்தது?
A) 1976ஆம் ஆண்டு
B) 1986ஆம் ஆண்டு
C) 1996ஆம் ஆண்டு
D) 1966ஆம் ஆண்டு
(குறிப்பு – செர்னோபில் அணு உலை விபத்து ஏப்ரல் 26ஆம் நாள் 1986 அன்று நிகழ்ந்தது. ஹிரோஷிமா அணுகுண்டு விட 400 மடங்கு அதிகமான கதிர்வீச்சு இதில் இருந்து வெளிப்பட்டது. செர்னோபில் சோவியத் யூனியனில் உள்ளது)
37) 2016ஆம் ஆண்டு கதிர் இயக்கவியல் சார் மற்றும் சுற்றுச்சூழல் உயிர்கோள பெட்டகம் என அறிவித்துக்கொண்ட நாடு எது?
A) உக்ரைன்
B) ஜப்பான்
C) கொரியா
D) இவை எதுவும் இல்லை
( குறிப்பு – செர்னோபில் அணு உலை விபத்து நடந்த பகுதி தற்போது உக்ரைன் மற்றும் பெலாரசை கொண்ட பகுதியில் உள்ளது. 2016ஆம் ஆண்டு உக்ரைன் நாடு கதிரியக்கவியல் சார் மற்றும் சுற்றுச்சூழல் உயிர்கோள பெட்டகம் என அந்நாட்டு அரசாங்கத்தால் அறிவித்துக் கொண்டது)
38) பொருத்துக
I. மருத்துவ கழிவு – a) மின்கலன்கள்
II. எளிதில் தீப்பற்ற கூடிய கழிவு – b) கட்டுதுணிகள்
III. வெடி பொருட்கள் – c) கரிம கரைப்பான்கள்
IV. குடிசார் அபாயகர கழிவுகள் – d) தொழிலக வாயு கழிவு
A) I-b, II-c, III-d, IV-a
B) I-d, II-a, III-c, IV-b
C) I-a, II-d, III-b, IV-c
D) I-c, II-d, III-a, IV-b
(குறிப்பு – மருத்துவ கழிவுகள், எளிதில் தீப்பற்றக்கூடிய கழிவுகள், வெடிப்பொருட்கள், குடிசார் அபாயகர கழிவுகள் ஆகியவைகள் அபாயகர கழிவுகளாகும். இவை நிலம், நீருக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடர்களை உருவாக்குகின்றது)
39) காற்று மாசுப்படுத்திகளை எவ்வாறு வகைப்படுத்தலாம்?
I. முதல்நிலை மாசுபடுத்திகள்
II. இரண்டாம்நிலை மாசுபடுத்திகள்
III. மூன்றாம் நிலை மாசுபடுத்திகள்
A) I, II மட்டும் சரி
B) I மட்டும் சரி
C) III மட்டும் சரி
D) எல்லாமே சரி
(குறிப்பு – காற்று மாசுப்படுத்திகளை முதன்மை மற்றும் இரண்டாம் நிலை மாசுபடுத்திகள் என இரு வகைப்படுத்தலாம்)
40) காற்றின் முதன்மை மாசுபடுத்திகளுள் தவறானது எது?
A) தரைமட்ட ஓசோன்
B) சல்பர் டை ஆக்சைடு
C) துகள்ம பொருட்கள்
D) கார்பன் டை ஆக்சைடு
(குறிப்பு – தரை மட்ட ஓசோன் என்பது காற்றின் இரண்டாம் நிலை மாசுபடுத்தி ஆகும். சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு, கார்பன் டை ஆக்சைடு, துகள்ம பொருட்கள் போன்றவை காற்றின் முதன்மை மாசுபடுத்திகள் ஆகும்)
41) நீர் மாசு என்பது கீழ்காணும் எவற்றின் பண்புகளில் ஏற்படும் மாற்றம் ஆகும்?
I. இயற்பியல்
II. வேதியியல்
III. உயிரியல்
A) I, II இல் ஏற்படும் மாற்றம்
B) II, III இல் ஏற்படும் மாற்றம்
C) I, III இல் ஏற்படும் மாற்றம்
D) மூன்றிலும் ஏற்படும் மாற்றம்
(குறிப்பு – நீர் மாசு என்பது நீரின் இயற்பியல் வேதியியல் மற்றும் உயிரியல் பண்புகளில் ஏற்படும் மாற்றம் ஆகும். இது நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் மனிதர்களுக்கு தீங்கை விளைவிக்கும்)
42) இந்தியாவில் நீர்மாசடைதலுக்கான முக்கிய காரணங்கள் ஆவன?
I. தொழிற்சாலை கழிவுகள்
II. கழிவுநீர்
III. கடல் நீர் உட்புகுதல்
IV. வேளாண் நீர் வழிந்தோடல்
A) I, II, III மட்டும்
B) II, III, IV மட்டும்
C) I, III, IV மட்டும்
D) அனைத்தும்
(குறிப்பு – இந்தியாவில் நீர் மாசு அடைதலுக்கான முக்கிய காரணங்கள் ஆவன, நகரமயமாக்கல், தொழிற்சாலை கழிவுகள், கழிவு நீர், வேளாண் நீர் வழிந்தோடல், கடல் நீர் உட்புகுதல், திண்ம கழிவுகள் போன்றவை ஆகும் )
43) இந்தியாவில் 2017 ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் சுமார் 22, 000 பேர் பெரும் சுற்றுச்சூழல் பேரழிவு காரணமாக உயிரிழந்துள்ளனர், என்னும் அறிக்கை யாரால் வெளியிடப்பட்டது?
A) உலக சுற்றுசூழல் அமைப்பு
B) ஜெர்மன்-வாட்ச் அமைப்பு
C) ஆஸ்திரேலியா சுற்றுச்சூழல் அமைப்பு
D) இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்.
(குறிப்பு – ஜெர்மன்-வாட்ச் என்ற தனியார் அமைப்பு வெளியிட்டுள்ள உலகளாவிய காலநிலை இடர் குறியீட்டு அறிக்கையின்படி இந்தியாவில் 2017ம் ஆண்டு வரை 22 ஆயிரம் பேரும், உலகில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மோசமான வானிலை நிகழ்வுகளால் இறந்துள்ளனர்)