Samacheer NotesTnpsc

அரசியல் சிந்தனை Notes 11th Political Science

11th Political Science Lesson 7 Notes in Tamil

7. அரசியல் சிந்தனை

பிளாட்டொ (Plato) – (பொ.ஆ.மு. 427 – பொ.ஆ.மு. 347)

  • சாக்ரடீசின் மாணவர்
  • அகாடெமியைத் தோற்றுவித்தார் – இது முதலாவது உயர்கல்வி நிறுவனமாகும்.
  • தற்பொழுது வரை தனது படைப்புகள் நீடித்திருக்க கூடிய முதலாவது மேற்கத்திய சிந்தனையாளர்.
  • சாக்ரடீசைப் பற்றி நாம் அறிவதம் பெரும் பகுதி பிளாட்டோவின் படைப்புகளால் ஆகும்.
  • இவ்வுல்கைப் புரிந்துகொள்ள கணிதம் அடிப்படையானது என்ற பிதாகரசின் கருத்தினை ஏற்றுக்கொண்டார்.

பிளாட்டோவின் வாழ்வும் காலமும்

இந்த அறிமுக அலகில் அரசியலின் பொருள் மற்றும் அது எவ்வாறு மனித வாழ்வை பாதிக்கிறது என்பதைப் பற்றிய உட்பார்வை தரப்பட்டுள்ளது.

  • பிளாட்டோ பொ.ஆ.முல் 427 – ல் பிறந்தார். இவர் கிரேக்க நகர அரசில் உள்ள ஏதென்சில் பிரபுத்துவ குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரின் இயற்பெயர் ‘அரிஸ்டோகிள்ஸ்’ (Aristocles) என்பதாகும். இது அவருடைய தாத்தாவின் பெயராகும்.
  • சில வரலாற்று அறிஞர்கள், பீளாட்டோவின் பயிற்சியாளரான ஆர்காசின் அரிஸ்டன் (Ariton of Argos) என்பவர் பிளாட்டோவின் பரந்த உடலமைப்பின் காரணாமாக அவரை ‘பரந்த’ எனப் பொருள்படு ‘பிளாட்டோன்’ (Platon) எனப்பெயரிட்டு அழைத்ததாகக் கூறுகின்றனர்.
  • இவர் கிரேக்கத்தின் முன்னணி தத்துவ ஞானிகளில் ஒருவரான சாக்ரடீசின் சீடராவார். இவருடைய காலத்தில் கிரேக்கத்தின் நகர அரசான ஏதென்சின் அரசியல் வாழ்வு பொரும் குழப்ப, நிறைந்ததாக இருந்தது.
  • இதன் விளைவாக ஏதென்சின் அரசாங்கம் சாக்ரடீசின் போதனைகளுக்காக அவருக்கு மரணதண்டனை அளித்தது. இது பிளாட்டோவின் ஏதென்ஸ் அரசியல் பற்றிய பார்வையில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது.
  • பிளாட்டோ தனது ‘அகோடெமியை’ (Academy) பொ.ஆ.மு. 387 ஆம் ஆண்டுவக்கில் தோற்றுவித்தார். அக்காலத்தில் ஏதென்சின் மிகவும் புகழ்வாய்ந்த நபரான ‘அகடெமோஸ்’ (Akademos) என்பவரின் பெயரால் ‘அகாடெமி’ அமைந்தது. இதில் பிளாட்டோ அரசியல், நன்னெறி , கணிதம் மற்றும் சமூகவியல் ஆகியவற்றை உள்ளடக்கிய அரசியல் தத்துவத்தினை போதித்தார்.

பிளாட்டோவின் படைப்புகள்

குடியரசு (The Republic) – (பொ.ஆ.மு. 386), ராஜதந்திரி (The Statesman) – (பொ.ஆ.மு., 360) மற்றும் சட்டங்கள் (The Laws) – (பொ.ஆ.மு, 347) ஆகியவை பிளாட்டோவின் மூன்று முக்கியப்படைப்புகளாகும். இப்படைப்புகளைத் தவிர பல சிறிய புத்தகங்களையும் பிளாட்டோ எழுதியுள்ளார்.

நல்லொழுக்கம் என்றால் என்ன?

பிளாட்டோ, அது அறிவு என்பதாகும். பிளாட்டோவின் மீது சாக்ரடீஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்.

பிளாட்டோவின் சிந்தனை

பிளாட்டோவின் முக்கிய கருத்துகளை அவரது மூன்று முக்கியப் படைப்புகளில் காணுவதுடன் அவற்றினைப் பின்வருமாறு தொகுத்துரைக்கலாம்.

லட்சிய அரசு (Ideal State)

‘அரசு’ என்பது அரசியல் அறிவியலைக் கட்டியெழுப்பும் மிக முக்கியமான கருத்தாக்கமாகும். அவரைப் பொறுத்தவரை லட்சிய அரசு (பிளாட்டோவின் கூற்றுப்படி மனிதன் வாழ்வதற்கு மிகவும் உகந்த அரசு) என்பது ஆளும் வர்க்கம், இராணுவ வர்க்கம் மற்றும் பொருளாதார வர்க்கம் என மூன்று வர்க்கங்களைக் கொண்டதாகும். இது எவ்வாறு சாத்திய, என அவர் தனது பின்வரும் நீதி மற்றும் கல்வி பற்றிய கருத்துக்களில் விவரிக்கிறார்.

நீதி பற்றிய கருத்து (Idea of Justice)

  • நீதி என்பது ஒரு தனி மனிதனிடம் மட்டுமல்லாமல் அரசிடமும் இருக்கவேண்டும் என பிளாட்டோ நம்புகிறார். ஒவ்வொரு மனிதனிடமும் மூன்று தகுதிகள் வெவ்வேறு விகிதாச்சாரங்களில் இயல்பாக அமைந்திருப்பதாகக் கூறுகிறார். அவை ஒரு மனிதனின் தலைப்பகுதியை உறைவிடமாகக் கொண்ட பகுத்தறிவு, இதயத்தை உறைவிடமாகக் கொண்ட உத்வேகம் மற்றும் வயிற்றுப்பகுதியை உறைவிடமாகக் கொண்ட உணவு நாட்டம் ஆகியவை ஆகும். இவையே மனித ஆத்மாவின் மூன்று பாகங்களாகும் எனக் கூறுகிறார்.
  • முதலாவதாக, உண்மையான நீதி என்பது ஒரு மனிதனை முழுமையாக்க இம்மூன்று பகுதிகளும் தங்களின் பணிகளை சரியாகச் செய்யவேண்டும் என்ஆட்.
  • இரண்டாவதாக, ஒரு மனிதனிடம் உள்ள இம்மூன்று பகுதிகளும், அரசிடம் பிரதிபலிக்க வேண்டும் என்றார். ஏனென்றால் அரசு என்பது ஒட்டுமொத்த மனிதர்களைடும் முழுமையாக உள்ளடக்கியதாகும். இதனால் தான் ஆளும் வர்க்கம் , இராணுவ வர்க்கம் மற்றும் பொருளாதார வர்க்கம் ஆகியவற்றுடன் பிளாட்டோவின் லட்சிய அரசு உருவக்கம் பெற்றது.

மனிதன் அரசு

பகுத்தறிவு ஆளும் வர்க்கம்

உத்வேகம் இராணுவ வர்க்கம்

உணவு நாட்டம் துணை வர்க்கம்

கல்வி பற்றிய கருத்தாக்கம் (Concept of Education)

  • குழந்தைப் பருவத்திலிருந்து வளர்ந்த பருவம் வரை மாணவர்களின் வயதுக்குத் தகுந்த பல்வேறு நிலைகளை அடிப்படையாகக் கொண்டு கல்வி முறையை பிளாட்டோ வடிவமைத்தார்.
  • மனிதர்களுடைய ஆன்மாவின் மூன்று பகுதிகளாக பகுத்தறிவு, உத்வேகம் மற்றும் உணவு நாட்டம் ஆகியவற்றின் விகிதங்கள் அடிப்படையில் கல்வியின் உயர்நிலைகளில் வெளியேற்ற முறையினை உருவாக்கியுள்ளார்.
  • அரசின் பொருளாதாரக் கடமைகளை நிறைவேற்றத் தகுந்தோர் கண்டறியப்பட்டு ஆட்சி மற்றும் இராணுவப் பணிகளில் இருந்து பிரிக்கப்படுவர். இரண்டாம் கட்டமாக தகுதியற்றவர்கள் நீக்கப்பட்டு ஆள்வதற்குத் தகுந்தவர்களுக்கு சிறப்புப் பயிற்சி கொடுக்கப்பட்டு பிளாட்டோவின் லட்சிய அரசினை ஆளுவதற்கான தத்துவ அரனாக உருவாக்கப்படுகின்றனர்.

பிளாட்டோ மக்களாட்சிக்கு எதிராக இருந்தது வியப்பளிக்கிறது. தற்காலத்தில் நாம் மக்களாட்சியை சிறந்த அரசாங்க முறைமைகளில் ஒன்றாகக் கருதுகிறோமே!

ஒவ்வொரு தத்துவ ஞானியும் அவர் வாழ்ந்த காலத்தின் வெளிப்பாடாவார். கிரேக்கத்தின் மிகப்பெரும் ஞானியான சாக்ரடீசின் படுகொலஒயால் பிளாட்டோ மக்களாட்சியின் மீது அவமதிப்புக் கொண்டார். அதனால் மக்களாட்சிக்குப் பதிலாக ஞானிகளின் ஆட்சி மீது நம்பிக்கை கொண்டார்.

மக்களாட்சி பற்றிய கருத்துக்கள்

பீளாட்டோ தனது குடியரசு என்னும் நூலில் மக்களாட்சிக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இவரின் கருத்து யாதெனில் அனைவரும் ஆள்வதற்குத் தகுதியானவர்கள் அல்ல. ஆள்வதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற தத்துவ ஞானிகளே ஆட்சி செய்யவேண்டும். ஏதென்சின் மக்களாட்சியே தனது ஆசிரியரான சாக்ரடீஸ் கொல்லப்பட காரணம் என பிளாட்டோ எண்ணிய அவர் மக்களாட்சிக்கு கண்டனம் தெரிவிக்க காரணமாகும்.

அரசமைப்புக்களை வகைப்படுத்துதல்

  • ‘அரசமைப்பு’ என்ற சொல்லின் தற்காலப் புரிதலில் இருந்து அதனைப் பற்றிய பிளாட்டோவின் கருத்து முற்றிலும் மாறுபட்டதாகும். அவரின் புரிதல்படி அரசமைப்பு என்பது ஓர் சமுதாயத்திலுள்ள மக்கள் தங்களின் நலனுக்காக குறிப்பிட்ட வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுப்பதாகும்.
  • இது சமூக பழக்கவழக்கங்கள், பாரம்பரியங்கள், நடைமுறைகள் மற்றும் இவற்றினை மேற்பார்வையிடும் அரசியல் மற்றும் அரசாங்கத்தினை உள்ளடக்கியதாகும்.
  • பிளாட்டோ தான் வாழ்ந்த காலத்தில் உலகத்தின் பல பகுதிகளில் இருந்த அரசமைப்புக்களை உள்ளவாறே விவாதித்தார். இவர் அரசமைப்புக்களை புரபுக்களாட்சி, புகழ் விரும்புபவர் ஆட்சி, சிறுகுழு ஆட்சி, மக்களாட்சி மற்றும் கொடுங்கோலாட்சி என ஐந்து வகைகளாகப் பிரிக்கிறார்.
  • அவர் கூறுகையில் பிரபுக்களாட்சி தன் இயல்பிலிருந்து சிதைவுற்று புகழ் விரும்புபவர் ஆட்சியாகவும், பின்னர் அது சிறுகுழு ஆட்சியாக உருமாறி அதன் பின்னர் மக்களாட்சியாகிறது. மக்களாட்சியும் தன் பண்பிலிருந்து சிறைவுறும்போது கொடுங்கோலாட்சி ஆகிறது என்கிறார்.

குழந்தைகள் வளர்ப்பு

பிளாட்டோவின் கூற்றுப்படி குழந்தைகளை தேசிய சொத்துக்களாகக் கருதி அவர்களின் மனப்பாங்கிற்குத் தக்கவாறு வளர்ப்பது அரசின் கடமையாகும்.

கோட்பாடாக பிளாட்டோவின் கருத்துகள்

  • பிளாட்டோ இம்முறையினை தனது ‘குடியரசு’ என்னும் நூலில் பின்பற்றினார். இந்நூலானது அவர் தம்மை ஒரு மாணவராகக் கருதிக் கொண்டு சாக்ரடீசிடம் வினாக்களை எழுப்புவது போன்றும் அதற்கு ஆசிரியரான சாக்ரடீஸ் பதிலளிப்பது போன்று அமைந்துள்ளது.
  • ‘தர்க்கவியல்’ என்பது ஒரு கேள்வி பதில் முறையிலான வகையாகும். இதில் மாணவர்கள் சிலவற்றைப் பற்றிய தெளிவற்ற சிந்தனையுடன் ஆசிரியரிடம் கேள்விகள் கேட்பர். அதற்கு ஆசிரியர் அளிக்கும் பதிலிருந்து மீண்டும் கேள்விகள் கேட்பர். இதன் மூலமாக ஆசிரியர் தமது மாணவர்களுக்குச் சிந்தனையை உருவாக்கவும், மறு உருவாக்கம் செய்து புரிந்து கொள்ளவும் உதவுகிறார்.

பிளாட்டோவின் தர்க்கவாத முறை (Plato’s Dialectical Method)

  • பிளாட்டோ தனது ‘குடியரசு’ நூலில் இம்முறையினைப் பின்பற்றினார். இவர் இந்நூலினை எழுதும் போது தம்மை ஒரு மாணவனாகக் கருதி கேள்விகள் கேட்க ஓர் ஆசிரியராக சாக்ரடீஸ் அதற்கு பதிலளிக்கும் வகையில் அமைந்துள்ளார்.
  • ஓர் ஆசிரியர் அனைத்தும் அறிந்தவராக பாடத்தினை மாணவர்களுக்குக் கற்பிக்கும் “அறிவு போதனை” (Didactics) போலன்றி ‘தர்க்கவாதம்’ (Dialectics) என்பது கேள்வி பதில் முறையிலானதாகும்.
  • இம்முறையில் சிலவற்றைப் பற்றிய தெளிவற்ற சிந்தனையில் மாணவர்கள் ஆசிரியர்களிடம் கேள்வி கேட்பர். அதற்கு ஆசிரியர்கள் அளிக்கும் பதிலில் இருந்து மீண்டும் கேள்விகள் கேட்பர்.
  • இதன்மூலமான மாணவர்கள் தங்களின் கருத்தினை உருவாக்கவும், மறுஉருவாக்கம் செய்யவும் ஆசிரியர் உதவி செய்கிறார். இறுதியாக மாணவர்கள் ஓர் கருத்தைப் பற்றிய சரியான புரிதலுக்கு வருகின்றனர்.

மதிப்பீடு

  • பிளாட்டோ முதல் தத்துவஞானி மட்டுமல்லாமல் சந்தேகத்திற்கு இடமின்றி குறிப்பிடத்தகுந்த படைப்புகளையும் முற்காலத்தில் நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்.
  • மக்களுக்குத் தொல்லை தரக்கூடிய பல்வேறு விஷயங்களைக் கேள்விகளாகக் கேட்டு அதற்கான பதில்களை அளிப்பதில் தம் பெரும் பகுதி நேரத்தைச் செலவழித்தார். அவர் மறைந்து பல நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் அரசியல், மக்கள் கூடிவாழ்வதில் உள்ள பிரச்சனைகளோடு மக்கள் மீண்டும், மீண்டும் சந்திக்கும் பிரச்சனைகளை குறித்து அவர்கள் கவனமாகவும், நவநாகரீக முறையிலும் சிந்திக்க பிளாட்டோவின் குடியரசு உதவி செய்கிறது. ஆகவே காலங்களைக் கடந்தும் தீவிரமான தாக்கத்தினை ஏற்படுத்துபவராக பிளாட்டோ கருதப்படுகிறார்.

அரிஸ்டாட்டில் (Aristotle) (பொ.ஆ.மு. 384 – பொ.ஆ.மு. 322)

அரிஸ்டாட்டிலின் வாழ்வும் காலமும்

  • “அரசியல் தத்துவத்தின் வரலாற்றில் அனைத்து தகவல்களையும் தேசிப் பெறும் விருப்பத்தில் அரிஸ்டாட்டிலை மிஞ்சியவர் எவருமில்லை” என்கிறார் வில்லியம் எபென்ஸ்டீன்.
  • அரிஸ்டாட்டில், பிளாட்டோவின் அகாடெமியினுடைய மாணவராவர். பிளாட்டோவின் மரணத்திற்கு பின்னர் அரிஸ்டாட்டில் பொ.ஆ.மு,. 355-ல் ‘லைசீயம்’ (Lyceum) என்ற பள்ளியைத் தானே தொடங்கினார். இங்குதான் அலெக்சாண்டர் அரிஸ்டாட்டிலிடம் கல்வி கற்றார். இங்கு அனைத்து துறைகளிலும் ஆராய்ச்சி மற்றும் கல்வி போதனைகள் நிகழ்ந்தன.
  • அரிஸ்டாட்டில் பொ.ஆ.மு. 384-ல் ஸ்டாகிராவில் பிறந்தார். பிளாட்டோவைப் போலன்றி அரிஸ்டாட்டில் ஒரு உயர் நடுத்தர வகுப்புக்குடும்பத்தில் பிறந்தார். மாசிடோனியாவின் மன்னரான அமின்டாசின் (Amyntas) தனி மருத்துவராக இவரின் தந்தை நிக்கோமாகஸ் (Nicomachus) இருந்தார்.
  • அரிஸ்டாட்டில் என்பதன் பொருள் ‘சிறந்த நோக்கம்’ என்பதாகும். இவரின் பெயர்க்காரணத்தை மெய்ப்பிக்கும் வகையில் பிளாட்டோவின் லட்சிய அரசுக்கு மாற்றாக சிறப்பாக நடைமுறைப்படுத்தக்கூடிய அரசினை முன்மொழிந்தார்.
  • அரிஸ்டாட்டிலின் கூற்றுப்படி அரசு என்பது குறிப்பிட்ட நோக்கத்திற்கானதாகும். இந்நோக்கமே மனிதனின் நீதிநெறி மற்றும் அறிவார்ந்த வாழ்வில் மேலான நன்மையைத் தருவதாகும்.

முழுமை என்பது பகுதிகளின் தொகுப்பைவிட மிகுதியானதாகும்.

அரிஸ்டாட்டில் (Aristotle)

அரிஸ்டாட்டிலின் படைப்புகள்

  • கிரேக்க இலக்கத்திலிருந்து விலங்கியல் வரை இவர் பல்வேறு துறைசார்ந்த புத்தகங்களை எழுதினார். இருப்பினும் இவரின் மிகப் பிரபலமான படைப்பான ‘அரசியல்’ என்னும் நூலிலிருந்து தற்கால அரசியல் அறிவியல் வளர்ந்துள்ளது. இதனால் இவர் ‘அரசியல் அறிவியலின் தந்தை’ என அழைக்கப்படுகிறார். இது வெளியிடப்பட்ட மிகச்சரியான நாள் தெரியவில்லை.
  • எனினும் இப்படைப்பு 1000 பக்கங்களுக்கு மேல் உள்ள 8 புத்தகங்களைக் கொட பொரும் படைப்பாகும்.
  • பிளாட்டோ தனது ஆசிரியரான சாக்ரடீசுடன் ஏற்புடையவராக இருந்தாலும், அரிஸ்டாட்டில் தன் ஆசிரியரான பிளாட்டோ கூறிய பலவற்றில் உடன்பாடின்றி இருந்தார்.

அரிஸ்டாடிலின் சிந்தனைகள்

அரிஸ்டாட்டிலின் அனைத்து விதமான அரசியல் கருத்துக்களை இவருடைய ‘அரசியல்’ என்ற புத்தகத்தில் காணலாம்.

அரசு ஓர் இயற்கை அமைப்பு (State as a natural Institution)

அரிஸ்டாட்டிலின் கூற்றுப்படி அரசு இயற்கையானது. அரசின் அதிகாரம் நீதி நெறியிலானதாகும். குடும்பத்தால் மக்களின் அதிகரித்துக்கொண்டிருக்கக்கூடிய தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாத காரணத்தால் தங்களின் குறுகிய வட்டத்திலிருந்து வெளிவந்து மக்கள் அரசினை உருவக்க நினைக்கின்றனர். குடும்பங்கள் ஒன்றிணைந்து அரசினை ஓர் முழுமையான அமைப்பாக்குகின்றனர். தனி மனிதனின் பெரிய வடிவமே அரசு எனவும் ஓர் அரசில் மட்டுமே தனி மனிதனால் முழுமையாக சிந்திக்க இயலும் எனவும் அரிஸ்டாட்டில் நம்புகிறார்.

அரசின் பணிகள் (Functions of State):

அரிஸ்டாட்டிலின் கூற்றுப்படி அரசின் தலையாய பணி என்பது நல்வாழ்வினை ஊக்குவித்து மக்களின் மனநலம், ஒழுக்கநெறி மற்றும் உடல்வளர்ச்சி ஆகியவற்றிக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்குவதாகும். அரசானது மக்களின் நல்ல பழக்கவழக்கங்களை சிறந்த செயல்பாடுகளாக மாற்றி நலனை மேம்படுத்துவதோடு, மகிழ்வு மற்றும் மதிப்பிற்குரியதாக வாழ்வினை மாற்றும் வகையில் செயல்படவேண்டும்.

குடியுரிமைக் கோட்பாடு

ஒரு நபரின் வாழ்விடம், சட்ட உரிமை மற்றும் பிறப்பு ஆகியவை மட்டுமே குடியுரிமையை வழங்காது என அரிஸ்டாட்டில் நம்பினார். அவர் செய்யக்கூடிய பணியே ஓர் நபரை குடிமகனாக்குகிறது எனக்கூறுகிறார். ஓர் நபர் இறையாண்மை அதிகாரங்களைக் கொண்ட மக்கள் சபையில் பங்கேற்க வேண்டும். ஓர் குடிமகன் அரசாங்கத்தின் முடிவாக்க நடைமுறையில் பங்கேற்க வேண்டும்.

அரசுகளை வகைப்படுத்துதல்

அரிஸ்டாட்டில் அளவு மற்றும் தரத்தின் அடிப்படையில் அரசுகளை வகைப்படுத்துகிறார்.

அளவு தரம்
வகை சிறந்த வடிவம் திரிந்த வடிவம்
ஒன்று முடியாட்சி கொடுங்கோலாட்சி
சிலர் பிரபுக்களாட்சி சிறுகுழு ஆட்சி
பலர் தூய ஆட்சி அமைப்பு முறை மக்களாட்சி
  • அரிஸ்டாட்டிலின் கூற்றுப்படி இறையாண்மையானது ஒருவரிடம் இருந்தால் அது முடியாட்சியாகும். அது பின்னர் கொடுங்கோலாட்சியாக சிதைவுறுகிறது.
  • அப்பொழுது மக்கள் ஆட்சியாளருடன் போராடி அதனை ஆள்வதற்கு சிலரிடம் தருகின்றனர். இவ்வாறு பிரபுக்களாட்சி வருகிறது. இதனால் மக்கள் மீண்டும் புரட்சி செய்து அதிகாரத்தினை பல ஆட்சியாளர்களிடம் அளிக்கின்றனர்.
  • இதனால் அரசு தூய ஆட்சி அமைப்பாகிறது. இது மீண்டும் சிதைவுறும்போது மக்களாட்சியாகிறது. இதன் ஆட்சியாளர்கள் அரசின் அடிப்படை நோக்கத்தைப் பற்றிய பொது நலப் பார்வையற்றவர்களாக இருப்பர். இது மீண்டும் முடியாட்சியின் எழுச்சிக்கு வகை செய்கிறது.

அடிமை முறை பற்றிய கருத்துக்கள்

அரிஸ்டாட்டிலின் கூற்றுப்படி “அடிமைகளே எஜமானரிம் முதல் அடையும் சொத்தாவர். அதாவது ஓர் வீட்டின் தலைவராக எஜமானரின் உயிருள்ள சொய்த்துக்களில் அடிமைகள் முதலாவதாவர். அரிஸ்டாட்டில் நல்லொழுக்கம் இல்லாதவர்களே அடிமையாவர் எனக்கூறுகிறார். ஏனெனில் அடிமை என்பவன் செயல்பாட்டிற்கான கருவியேயன்றி உற்பத்தி இல்லை என்கிறார். ஒருவேளை உற்பத்திப் பணிகளில் ஈடுபட்டால் ஓர் அடிமையாகத் தனது பண்பை இழந்து நல்லொழுக்கம் உள்ளவர்களாவர்.

குடும்பம் பற்றிய கருத்துக்கள்

குடும்பம் என்பது அரசிற்கு முந்தைய இயற்கை அமைப்பாகும். தனி மனிதர்கள் தங்களின் பிறப்பிலிருந்தே உறுப்பினர்களாக இருப்பதால் அது இயற்கையானதாகும். அதுவே நீதிநெறியிலான வாழ்வின் தொடக்கமாகவும் அரசின் மையக்கருவாகவும் உள்ளது.

சொத்து பற்றிய கருத்துக்கள்

தனி நபர் சொத்து என்பது சிறந்த மற்றும் இயல்பான வாழ்விற்கான அடிப்படை என அரிஸ்டாட்டில் ஆதரித்தார். இருப்பினும் தனிநபர்சொத்துக்களுக்கு சில வரையறைகளை அவர் பரிந்துரைத்தார். மேலும் அவர் தனிநபர் சொத்து ஒழிப்பிற்கு ஆட்சேபனை தெரிவித்தார்.

அரிஸ்டாட்டில் அலெக்சாண்டர்க்கு பயிற்றுவித்தது உண்மையா?

ஆம். அவர் அலெக்டாண்டரின் தந்தையும் மாசிடோனியாவின் மன்னருமான இரண்டாம் பிலிப் கேட்டுக்கொண்டதால் பயிற்றுவித்தார்.

ஓய்வு பற்றொய அரிஸ்டாட்டிலின் கருத்து

ஒரு நாட்டின் குடிமக்களுக்கு சொத்து மற்றும் அடிமைகள் அவசியம் என அரிஸ்டாட்டில் கூறுகிறார். இதற்குக் காரணம் என்னவென்றால், அப்பொழுது தான் குடிமக்களுக்கு ஓய்வு கிடைக்கும் என்றும் பயனுள்ள வகையில் சிந்திக்க நேரமும் , நட்டினர் அனைவரின் வாழ்வும் நலம்பெற திட்டமுடவும் இயலும் என்கிறார்.

புரட்சி பற்றிய கருத்துக்கள்:

அரசமைப்பு மாற்றங்களாலேயே முதலில் புரட்சி ஏற்படுவதாக அரிஸ்டாட்டில் கருதுகிறார். இம்மாற்றம் சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ இருக்கலாம். உதாரணமாக ம்யுடியாட்சியில் இருந்து கொடுங்கோலாட்சிக்கு ஏற்படும் மாற்றமானது மக்களிடையே புரட்சியைத் தூண்டுகிறது. இரண்டாவதாக அரசமைப்பில் மாற்றங்கள் நிகழாவிட்டாலும் அரசின் நோக்கங்கள் தவறினால் புரட்சிகள் ஏற்படுவதாகக் கூறுகிறார்.

மதிப்பீடு

அரசியல், உளவியல் மற்றும் நன்னெறி சார்ந்த மிகப்பெரும் அரசியல் சிந்தனையாளர்களில் ஒருவராக அரிஸ்டாட்டில் கருதப்படுகிறார். அவர் பெரும்பான்மையான அறிவியல் மற்றும் கலைகளில் பரந்த அறிவைக் கொண்டிருந்தார். அவரது படைப்புக்கள் பல நூற்றாண்டுகளுக்கான தத்துவத்தின் அடித்தளத்தினை ஏற்படுத்தியுள்ளன. மறுமலர்ச்சி, சீர்திருத்தம் மற்றும் அறிவொளி போன்ற அறிவிப் புரட்சிகள் ஏற்பட்ட காலத்திற்குப் பின்னரும் அரிஸ்டாட்டிலின் கருத்துக்கள் அலகத்தத்துவத்தின் அடித்தளத்தில் இருக்கின்றன. ஆகவே, சந்தேகத்திற்கிடமில்லாமல் எக்காலத்திலும் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தத்துவஞானிகளில் ஒருவராக அரிஸ்டாட்டில் விளங்குகிறார்.

புனித தாமஸ் அக்வினாஸ் (Saint Thomas Azquinas) (பொ.ஆ. 1225 – பொ.ஆ. 1274)

வாழ்வும் காலமும்

  • பதிமூன்றாம் நூற்றாண்டானது மேற்கு ஐரோப்பாவில் இடைக்கால மேற்கத்திய தத்துவத்தின் பொற்காலமாகக் கருதப்படுகிறது. மேற்கு ஐரோப்பாவின் பெரும்பான்மை மதமாக கத்தோலிக்கம் உருவானது.
  • இதன் விளைவாக 13ஆம் நூற்றாண்டில் அரிஸ்டாட்டிலின் அரசியல் மீண்டும் தோன்றியது. அரிஸ்டாட்டிலின் மதச்சார்பற்ற கருத்துக்களுக்கும் புனித அகஸ்டினின் பாவம் பற்றிய மத கருத்துகள், அரசியல் சமூகம் அரிஸ்டாட்டி;இன் அரசியல் மீண்டும் தோன்றியது.
  • அரிஸ்டாட்டிலின் மதச்சார்பற்ற கருத்துக்களுக்கும் புனித அகஸ்டினின் பாவம் பற்றிய மத கருத்துகள், அரசியல் சமூகம் ஆகிய கருத்தாக்கங்களுக்கும் இடையே கூர்மையான வேறுபாடுகள் தோன்றின. இதனை திருச்சபை ஏற்றுக்கொண்டு பிணைப்புக் கோட்பாடாக்கியது.

  • இருப்பினும், சில தத்துவ ஞானிகள் மதச்சார்பற்ற அரசியல் அனுமானங்களுடன் தங்களின் சமயக் கருத்துக்களை உட்புகுத்துவதில் சவால்களைச் சந்தித்தனர். இதனால் இறுதியில் உலகைப் புரிந்துகொள்ளும் இரு வெவ்வேறு வழிமுறைகளுக்கிடையே இது சமரசத்தை ஏற்படுத்தியது.
  • இதனைக் கடைசியில் அரசியல் மற்றும் அரசியல் கோட்பாடு ஆக்குவதன் மூலம் கடவுளுடன் நெருங்கும் மக்களின் உயர்ந்த விருப்பதில் வெற்றி கண்டனர். இம்முக்கிய தத்துவ வெற்றிக்கு சிற்பியாக இருந்த கிறித்துவ சமயவாதிகளில் புனித தாமஸ் அக்வினாஸ் மிக முக்கியமானவராவார்.
  • புனித தாமஸ் அக்வினாஸ் நேப்பிள்சின் வடக்கே உள்ள ராக்காசீக்காவில் (Roccasecca) உள்ள தனது குடும்பத்துக்குச் சொந்தமான கோட்டையில் பொ.ஆ. 225-ல் பிறந்தார்.
  • அவரது தந்தையான அக்வினோ லேண்டல்ஃப் (Landulf of Aquino) ஓர் முக்கிய நிலவுடமைக் குடும்பத்தின் தலைவராவார். தாயாரான தியோடோரா ரோசி (Theodora Rossi) அவர்கள் நியோபாலிட்டன் கராசியோலோ (Neapolitan Carracciolo) குடும்பத்தைச் சேர்ந்தவர்.

அக்வினாசின் படைப்புகள்

  • 19ஆம் நூற்றாண்டில் போப் பதுமூன்றாம் லூயி அவர்கள் அக்வினாஸின் தத்துவார்த்த முறையே கத்தோலிக்க சமயவாதத்தின் அலுவல் மதமாகும் என பிரகடனப்படுத்தினார்.
  • இது கத்தோலிக்கர்கள் அவரின் படைப்புக்களை வாசிப்பதை முக்கியமாக்கியதுடன் கிறித்துவ மதத்தின் இப்பிரிவினை புரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும் முக்கியமானதாக விளங்கியது.
  • அக்வினாசின் படைப்புகளிலுள்ள கருத்துரைகள் அனைத்தும் வரது சமயவாத வடிவமைப்பிலிருந்து தோன்றியதாகும். இவரது முக்கியப் படைப்புகள்
  1. சம்மா காண்ட்ரா ஜெண்டிலஸ் (Summa Contra Gentiles) (பொ.ஆ. 1264)
  2. சம்மா தியாலஜிகா (Summa Threologica) (பொ.ஆ. 1274)
  3. அரசுரிமை (On Kingship).

அக்வினாசின் சிந்தனை

சம்மா காண்ட்ரா ஜெண்டிலெஸ் (Summa Contra Gentiles):

அக்வினாஸ் தனது சம்மா காண்ட்ரா ஜென்டிகெஸ் என்னும் நூலினை ஸ்பெயின் நாட்டில் இஸ்லாமிய மதத்துடனான கணக்கீட்டினை கிறித்துவர்கள் நேர்செய்ய டொமினிக்கன் சமயப் பரப்புக் குழுவினருக்கு ஓர் கையேடு அல்லது பாடநூலாக வடிவமைத்தார் என பரவலாகக் கூறப்படுகிறது. இப்படைப்பு கிறித்துவ மத நம்பிக்கை மீதானா குற்றச்சாட்டுகள் மற்றும் குற்றம்சாட்ட வாய்ப்புள்ளவற்றினை பாதுகாக்கும் வகையிலான படைப்பாகும்.

சம்ம தியாலஜிகா (Summa Teologica)

  • அக்வினாஸ் தன்னுடைய சம்மா தியாலஜிகாவுல் பகுத்தறிவு அடிப்படையில் ஒற்றுமையை ஏற்படுத்த நான்கு நிலைகளிலான சட்டங்களை நிலைநாட்டினார். இவை சட்டத்தினை ஓர் வடிவத்திலிருந்து மற்றொன்றிற்கு வேறுபடுத்துவது சம்பந்தப்பட்ட பகுத்தறிவின் நிலைகளாகும்.
  • இப்பிரபஞ்சம் முழுமைக்கும் செயலாற்றக்கூடிய பகுத்தறிவே இவற்றில் மிகவும் உயர்ந்த மற்றும் விரிவானதாகும். இதனை ‘நித்திய சட்டம்’ (Eternal Law) என பெயரிட்டுள்ளார். இது கடவுளால் நிறுவப்பட்ட இயற்கையான நன்னெறி முறைமையாகும். இதற்கு அடுத்தாக நித்திய சட்டத்தின் சிறப்புப் பிரிவாக ‘தெய்வீக சட்டம்’ (Divine Law) உள்ளது. இது பல்வேறு மத இலக்கியங்களில் கடவுளின் வெளிப்பாடுகளைக் கொண்டதாகும்.
  • இதற்கடுத்த நிலையில் உள்ள சட்டத்தினை அக்வினாஸ் ‘இயற்கைச் சட்டம்’ (Natural Law) என அடையாளம் காட்டுகிறார். இந்த இயற்கைச் சட்ட கருத்தானது உணர்வடக்கத் தத்துவத்தின் அடிப்படையில் பகுத்தறிவினால் கண்டறியப்பட்ட நீதிநெறிச் சட்டமாகும்.
  • இது மனிதனுக்குப் பகுத்தறிவுத் திறன் உள்ளது எனவும், சட்டத்தினால் குறிப்பிடப்பட்டாலும் இல்லாவிடினும் சில நன்னெறிகளுக்கு மனிதனை உட்படுத்துகிறது எனவும் அனுமானிக்கிறது.
  • உதாரணமாக கொலை செய்தல் என்பது தவறு என்றும் தகுந்த முறையிலான நடத்தையினைப் புரிந்துகொள்ள நமக்கு ஓர் குற்றவியல் சட்டம் தேவையில்லை எனவும் கூறுகிறது.
  • அக்வினாசின் இயற்கைச் சட்ட கோட்பாட்டின் தனித்தன்மை யாதெனில் அது இயற்கை மற்றும் தெய்வீகம், அதாவது இயற்கை மற்றும் பரிசுத்த ஆவியுடன் தொடர்பினை ஏற்படுத்துவதாகும்.
  • கடவுளின் நித்திய சட்டத்தால் சரியானவை மற்றும் தவறானவை எவை என தீர்மானிக்கப்படுகிறது. ஆகையால் இயற்கைச் சட்டம் என்பது வேறொன்றுமல்ல நித்திய சட்டத்தில் பகுத்தறிவிலான படைப்பின் பங்கேற்பாகும்.
  • மனிதனின் நீதிநெறியிலான பகுத்தறிவு என்பது சுருக்கமாக இயற்கையைக் கடந்த பரிசுத்த ஆவி கொள்கையின் நீட்டிப்பாகும். இறுதியாக, மனிதச்சட்டம் என்பது குறிப்பிட்ட புவிசார் சூழ்நிலைகளில் இயற்கைச் சட்ட நல்லொழுக்க நெறியுரைகளில் மனித பகுத்தறிவின் செயலாக்கமாகும்.

அரசுரிமை பற்றிய கருத்துக்கள் (On Kingship)

  • அக்வினாசின் அரசியல் கோட்பாடாமது அரிஸ்டாட்டிலின் கோட்பாட்டினை ஒத்துள்ளது. அரசுரிமைன்பற்றிய அக்வினாசின் எழுத்துக்கள் மிகச் சீரான அரசியல் படைப்பாகக் கருதப்படுகிறது.
  • அரிஸ்டாட்டில் தனது ‘அரசியல்’ என்னும் நூலில் பின்பற்றிய தர்க்க முறைபாணியினை அக்வினாசும் பின்பற்றுகிறார். இவர்
    ‘அரசு இயற்கையானது ஏனெனில் அது மனிதனுக்கும் இயற்கையானது. ஓர் சமூக மற்றும் அரசியல் விலங்காக ஓர் குழுவாக வாழ்வதற்கு” என வாதிடுகிறார்.
  • இதன் விளைவாக அரசியல் செயல்பாடுகள் தேவை மற்றும் நன்மையானதாகும் என வலியுறுத்துகிறார். அரிஸ்டாட்டிலைப் போலவே அக்வினாசும் மக்களின் அரசியல் தன்மைக்கு அவர்களின் பகுத்தறிவு மற்றும் பேச்சுத்திறன் ஆகியவை அடிப்படையாகும் என்கிறார்.
  • இதற்கு அடுத்ததாக அரசியல் அரங்கில் பகுத்தறிவிலான நடவடிக்கையின் மூலமாக மனிதர்கள் நல்லொழுக்கத்தை பெற்று மகிழ்ச்சி மற்றும் நிறைவடைகின்றனர் என கூறுகிறார். இவர் அரிஸ்டாட்டிலைப் போன்றே ‘அரசு’ என்பது நீதிநெறியிலான சமூகம் என நம்பினார்.
  • மேலும் அதன் நோக்கமே உறுப்பினர்களின் நீதிநெறியிலான நன்மையாகும். இவ்வாறு அரசு என்பது நீதியின் அடிப்படையிலானது எனவும் சட்டவரையறைக்கு உட்பட்ட குடிமக்களின் நன்மைக்காக சிறந்தவர்களே ஆளவேண்டும் எனவும் வாதிட்டார்.
  • இத்தகைய வாதமானது நம்மை நேரடியாக அரசமைப்பு வகைப்படுத்தல் பிரச்சனைக்கு வழிநடத்திச் செல்கிறது என்பதால் மீண்டும் அக்வினாஸ் அவர்கள் அர்ஸ்டாட்டிலின் கொள்கைகளை பின்பற்றி தரம் மற்றும் அளவீட்டு முறைகளை பயன்படுத்தினார். இவர் அரசமைப்பினை ஆள்பவர்களின் எண்ணிக்கை மற்றும் ஆட்சியின் தரத்தின் அடிப்படையில் வகைப்படுத்துகிறார்.
  • சட்டம் என்பது சமூக அக்கறையுடன் உள்ள நபரால் பொது நலனுக்காக பகுத்தறிவின் அடிப்படையில் குறிப்பிட்ட விதிமுறைகளை ஏற்படுத்துவதன்றி வேறொன்றுமில்லை.
  • தாமஸ் அக்வினாஸ் (Thomas Aqinas)

மதிப்பீடு

  • புனித தாமஸ் அக்வினாஸ் இடைக்காலச் சிந்தனையாளர்களில் பெரும் சிந்தனையாளர்களில் பெரும் சிந்தனையாளராகக் கருதப்படுவதுடன் புதிய மரபினையும் தோற்றுவித்தார். இது ‘தாமிசம்’ (Thomism) என அழைக்கப்படுகிறது.
  • இவரது அரசியல் கோட்பாட்டின் அடிப்படைகளை இவரின் அரிஸ்டாட்டிலினுடைய அரசியல் பற்றிய கருத்துரையான ‘டி ரெஜிமினிபிரின்சியம்’ (de regimineprincipum இறைமை ஆட்சி) என்பதில் காணலாம்.
  • அப்பொழுது அவர் போப்பின் அவையில் இத்தாலி நாட்டில் (1259 – 68) இருந்தார். அரிஸ்டாட்டிலைப் போன்றே அரசு இயற்கையானது என்றும் அது மரபார்ந்த நிறுவனமல்ல மிகச்சரியான சமுதாயமாகும் எனவும் கூறுகிறார்.
  • மனிதர்கள் சமூக விலங்காக இருப்பதால் அரசு என்பது மரபார்ந்ததல்ல என்பதுடன் இயற்கையானதாகும் என்கிறார். அவர்கள் வாழ்வதற்காகவும், வளம் பெற்று பண்பாட்டு மேம்பாடு அடைவதற்காகவும் சமுதாயத்தை உருவாக்க விழைகின்றனர்.
  • இதனைக் கூடிவாழும் விலங்குகள் உள்ளுணர்வின் அடிப்படையிலும், மனிதர்கள் பகுத்திறிவின் அடிப்படையிலும் மேற்கொள்கின்றனர்.
  • அக்வினாசின் கூற்றுப்படி அனைத்து வலிமையும் கடவுளிடம் இருந்தே வருகின்றன. இதற்குக் காரணம் வாழ்வின் வலிமை மற்றும் இறப்பு ஆகியவை திருச்சபை கோட்பாட்டின்படி கடவுளின் தனிச்சிறப்புரிமையாகும்.
  • இச்சந்தர்ப்பத்தில் அக்வினாஸ் அவர்கள் அரிஸ்டாட்டிலிடம் இருந்து மாறுபட்டாலும் இறையாண்மை இயற்கையானது எனும் கேள்வியில் மீண்டும் திரும்பிகிறார். மக்களைக் கட்டுப்படுத்தும் முடிவுகளை எடுக்கக்கூடிய ஆளும் அமைப்பு இல்லாவிடில் குழப்பம் விளைந்து மக்கள் ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்வர் என்கிறார்.
  • அக்வினாசின் கருத்துப்படி இறையாண்மை மிக்க அரசன் அல்லது அரசாங்கம் என்பது ஆளப்படுவோரின் பிரதிநிதியாகும்.
  • இங்ஙனம் அரசு என்பது எவ்வகையிலும் திருச்சபையினை சாராததாகும். இவை ஒவ்வொன்றும் தனித்தனி பங்கு மற்றும் நோக்கங்களைக் கொண்டதாகும் என அக்வினாஸ் வாதிடுகிறார்.
  • அக்வினாசின் கருத்துப்படி திருச்சபை அரசிற்கு கீழானதல்ல. ஆனால் அரசு என்பது திருச்சபையினை கருத்தில் கொள்ளவேண்டும். இதற்லி திருச்சபையின் நோக்கம் அரசின் நோக்கத்தினை விட உயரந்ததாக இருப்பதுடன் குடிமக்களின் அடிப்படை நோக்கமாகவும் இருப்பதாகும்.
  • அக்வினாஸ் திருச்சபைக்கும், அரசுக்கும் உள்ள உறவினை ஆன்மாவிற்கும், உடம்பிற்கும் உள்ள உறவாக கருதுகிறார். ஒவ்வொன்றும் தனிப்பட்ட பங்கினை கொண்டிருந்தாலும் ஆன்மாவின் நோக்கம் உயர்ந்ததாகும்.

நிக்கோலோ மாக்கியவல்லி (Niccolo Machiavelli) (பொ.ஆ. 1469 – பொ.ஆ. 1527)

வாழ்வும் காலமும்

  • இத்தாலிய பண்பாட்டின் மையமான ஃபிளாரன்சில் மாக்கியவல்லி பிறந்தார். பிற பகுதிகளை விட அங்கு ஐரோப்பிய மறுமலர்ச்சியின் தாக்கம் அதிகமாக இருந்தது. இவர் வழக்கறிஞரான பெர்னார்டோ டி நிக்கோலோ மக்கியவல்லி (Bernardo di Niccolo Machiavelli) மற்றும் அவரது துணைவியரான ஸ்டெஃ பானோ நெல்லி பார்த்தோ லோமியா (Bartolomea of Stefano Nelli) ஆகியோருக்கு மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார்.
  • மறுமலர்ச்சி விழுமியங்களின் அடிப்படையில் சிறப்பான மனிதநேயக் கல்வியை இவர் பெற்றுள்ளதை அவரதி எழுத்துக்கள் வெளிப்படுத்துகின்றன. இவர் பொ.ஆ. 1494-ல் மெடிசி (Medici) வீழ்ந்த பிறகு குடியரசு அரசாங்கத்தின் பணியில் நுழைந்தார்.
  • பொ.ஆ. 1498 முதல் 1512 வரை வேந்தர் பணியகத்தின் செயலராக இருந்தார். இப்பதவி தூதாண்மை, இராணுவம் மற்றும் நிர்வாக விவகாரங்கள் தொடர்பான முக்கியப் பதவியாகும்.
  • பொ.ஆ. 1512-ல் மெடிசி மீண்டும் நிறுவப்பட்டதன் விளைவாக மாக்கியவல்லி தனது பதவியை இழந்து சில காலத்திற்கு சிறைப்படுத்தப்பட்டார். இதன் பின்னர் அவர் இலக்கியப் பாதையில் பயணித்தார். பொ.ஆ. 153-ல் லோரென்சோ டி மெடிசிக்கா (Lorenzo de Medici) ‘இளவரசன்’ (The Prince) என்னும் தனி வரைவு நூலை எழுதினார். இக்காலகட்டத்திலேயே அவர் தனது அடுத்த முக்கியப் படைப்பான டைட்டஸ் லிவியசின் முதல் பத்து புத்தகங்களுக்கான உரைக்கோவை (சுருங்கக்கூறின் லிவி மீதான உரைக்கோவை –Discourses on Livy) என்னும் நூலினை 1517-ல் நிறைவுசெய்தார். இருப்பினும் இவ்விரு படைப்புகளும் அவரது மறைவிற்குப் பின்னர் 1531-ல் வெளியிடப்பட்டன. மாக்கியவல்லி மேலும் சில சிறிய இலக்கிய படைப்புகளை உருவாக்கினாலும் ஓர் அரசியல் சிந்தனையாளராக அவரது மதிப்பு இவ்விரு புத்தகங்களின் அடிப்படையிலேயே நீடிக்கிறது.

மனிதனின் தன்மை பற்றிய மக்கியவல்லியின் கருத்துக்கள் (Machiavelli on Human Nature)

  • மாக்கியவல்லியின் அரசாங்கம் பற்றிய கோட்பாடானது அவரது மனிதனின் தன்மை பற்றிய கருத்தாக்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவரும் ஹாப்சைப் போன்றே மனிதனின் தன்மை மீது அவநம்பிக்கை கொண்டிருந்தார்.
  • மனிதர்கள் இயற்கையினால் முழுமையான சுயநலம் கொண்டிருப்பதுடன் அவர்களின் வாழ்விலும் சுயநல விருப்பங்களால் உந்தப்படுகின்றனர் என நம்புகிறார்.
  • இளவரசன் நூலின் ஓரிடத்தில் மனிதன் நன்றி மறந்தவன், நிலையற்றவன், ஏமாற்றுபவ, கோழைத்தனம் மற்றும் கஞ்சத்தனமுள்ளவன் என கூறுகிறார்.
  • மன்னரானவர் மக்களால் விரும்பப்படுவதைக் காட்டிலும் அவரைக் கண்டு மக்கள் அஞ்சுவதையே இலக்காக்க வேண்டும் என பரிந்துரைக்கிறார். மாக்கியவல்லியைப் பொறுத்தவரை அன்பு என்பது ஓர் கடப்பாட்டுப் பிணையாகும். மனிதர்கள் அடிப்படையில் சுயநலமாக இருப்பதால் தங்களின் தேவைக்குத் தக்கவாறு அதனை ஒவ்வொரு சமயத்திலும் மீறுவர்.
  • ஆனால் பயம் என்பது அக்காரணத்திற்காகவே அவர்களைக் காலவரையறையின்றி கட்டுப்படுத்தி வைக்கிறது. மனிதர்கள் தோற்றத்தின் அடிப்படையிலேயே விஷயங்களைத் தீர்மானிக்கின்றனர் என்பதால் இதனை ஆட்சியாளர் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு செயல்படவேண்டும்.
  • அவரைப் பொறுத்தவரை மனிதர்கள் பலவீனமானவர்களாகவும், அறியாமையிலும் உள்ளதுடன் அடிப்படையில் கெட்டவர்களாகவும் , தேவையின் அடிப்படையில் நல்லவர்களாகவும் உள்ளனர்.
  • இதனால் ஆட்சியாளர் தனது மன்ற உறுப்பினர்களை எப்பொழுதும் நம்பாமல் தனது சுய முடிவினைப் பயன்படுத்துமாறு எச்சரிக்கிறார்.
  • மனிதர்கள் முடிவற்ற விருப்பமுள்ளவர்கள் என்றும் அதில் மிக முக்கியமான விருப்பமாக தனிநபர் சொத்து உள்ளது எனவும் கூறுகிறார். அவர் பொருள்முதல்வாத தனிமனிதத்துவத்தினை சுதந்திரம் மற்றும் சுய அரசாங்கத்தின் மீதான விருப்பத்தின் விளக்கமாக கூறுகிறார்.
  • அவர் தனது உரைக்கோவையில் (The Discourses) மனிதனின் தன்மை மீதான அவநம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். மனிதனின் அடிப்படை விருப்பமாக பொருளாதார ஆதாயமே உள்ளது என்பதைப் பேணுகிறார்.
  • மக்களின் இந்நோக்கமே அவர்களை குடியரசினை விரும்பவும், முடியாட்சியை வெறுக்கவும் வைக்கிறது என்கீறார். குடியரசிலான அரசாங்கத்தின் கீழ் மக்கள் அதிகமான பொருளாதார ஆதாயங்களை பெறும் வாய்ப்பு அதிகமாகும். இது முடியாட்சியில் சாத்தியமாகாததற்குக் காரணம் யாதெனில் இளவரசன் அனைத்து ஆதாயங்கள் மற்றும் லாபங்களை தனக்கே எடுத்துக்கொள்வதாகும்.
  • ஓர் சுதந்திரமான தேசம் விரும்பப்படுவதற்கான காரணம் என்னவெனில் அச்சுதந்திர தேசத்திலேயே மக்களின் வளம் பன்மடங்காகப் பெருக வாய்ப்புள்ளது.

அரசியல் மற்றும் நீதிமுறைமையைப் பிரித்தல்

  • கிரேக்க அரசியல் சிந்தனையில் அரசியலின் அடிப்படையாக நன்னெறி கருதப்படுகிறது. ஆனால் மாக்கியவல்லி இம்மரபார்ந்த லட்சியத்திலிருந்து குறிப்பிடத்தகுந்த அளவில் மாறுபட்டிருக்கிறார்.
  • அரசியல் என்பது அதன் சுதந்திரமான சுயமதிப்பளவின் அடிப்படையிலானதாகும். ஆகவே அதனை மரபார்ந்த நன்னெறி மதிப்பளவின் கீழ் வரையறை செய்ய முடியாது என்கிறார்.
  • மேலும் அவர் அரசியல் மற்றும் நன்னெறியினை பிரிப்பதனை வலியுறுத்துகிறார். அவரைப் பிறுத்தவரையில், ஆட்சியாளர் ஒழுங்கானவராகவும், நேர்மையானவராகவும் தனது வார்த்தைப்படி நடப்பராகவும் இருக்க வேண்டும். உண்மையில் எந்தவிரு ஆட்சியாளரும் இத்தகைய தகுதிகளுடன் இருப்பதில்லௌ.
  • கெட்ட எண்ணமுள்ள மக்களை ஆள்வதற்காக ஆட்சியாளருக்கு இத்தகுதிகள் உகந்தவையல்ல. மேலும் நீதிநெறி கட்டுப்பாடுகளற்ற அரசைப் பாதுகாப்பதில் இளவரசன் கவனம் செலுத்தவேண்டும்.
  • ‘முடிவுகளே வழிமுறைகளைத் தீர்மானிக்கின்றன, என்பதனுடன் மாக்கியவல்லி திருப்தியடையவில்லை, மக்கள் தீர்ப்பின் அடிப்படையிலேயே ஆட்சியாளரின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது’.
  • நம்பத்தகாத வழிமுறைகளைப் பின்பற்றினாலும் இறுதியில் வெற்றியடைந்தால் இளவரசன் மன்னிக்கப்படுகிறார். அரசியல் செயல்பாடுகளுக்கு அவசியப்படும்போது மரபார்ந்த நீதிமுறைமையை ஒதுக்கி வைத்துவிட்டு வெற்றிகரமான அரசியலுக்கு மேற்செல்ல வேண்டும்.
  • ஓர் இளவடசன் அரசினைக் கைப்பற்றி நிர்வகிக்கும் பணியினை செய்யமுற்படுவதால் அவரது முறைகள் எப்பொழுதுமே மேன்மையானதாகக் கருதப்படுவதுடன் அனைத்து தரப்பினராலும் பாராட்டப்படுகிறார்.

மாக்கியவல்லி (இளவரசன்)

மாக்கியவல்லியின் முறைமை ( Machiavelli’s Method)

மாக்கியவல்லியைப் பொறுத்தவரை வரலாற்று முறையே அரசியல் அறிவியலைக் கற்கும் சரியான முறையாகும். இவர் மனித விருப்பங்கள் மற்றும் பேரார்வம் ஆகியவை எப்பொழுதும் ஒரே மாதிரியானவை எனக்கூறுகிறார். வாழ்விலுள்ள சம்பவங்களை ஒப்பிடும்போது மனித இனம் ஒரே மாதிரியான பரிகாரங்களைத் தேட முனைவதுடன் ஒரே மாதிரியான நடத்தையை மீண்டும் கொண்டிருக்கின்றன எனக்கூறுகிறார். ஆகவே கடந்த காலத்தைப் படித்தறிவது என்பது தற்காலத்தைப் புரிந்து கொள்வதுடன் எதிர்காலத்திற்கான முன்கணித்தலை மேற்கொள்வதை எளிமையாக்குகிறது என்கிறார். அவர் அரசியலை வரலாறு மற்றும் மெய்மைவாத அடிப்படையில் கற்பதுடன் குறிப்பாக அரசியல் நடத்தையைக் கற்றறிவதற்கு செயலறிவு முறையினைச் சார்ந்துள்ளார். அவர் நடத்தையியலின் முன்னோடியாக விவரிக்கப்படுகிறார். இளவரசன் மற்றும் உரைக்கோவை ஆகிய இரண்டிலுமே இம்முறையினை அவர் பின்பற்றுகிறார். அவர் அதிகாரத்தினை கையகப்படுத்தி, பாதுகாத்து விரிவாக்கம் செய்யும் கருவியே அரசியல் என்பதுடன் அவற்றினை அடைவதற்காக இம்மெய்யான உலகில் உள்ள மக்களின் அறிவுத்திறனுக்குத் தக்கவாறு அணிதிரட்டி அடைவதாகக் கருதுகிறார்.

மாக்கியவல்லியின் முறையானது உய்த்தறிதல் அல்லது அறிவியல் மூறையாக அழைக்கப்படுகிறது. இதற்கான அடிப்படை யாதெனில் அவர் பல்வேறு அரசியல் ஆட்சி காலங்களின் மனிதனின் தன்மை பற்றிய நடைமுறை அல்லது வரலாற்று அனுபவங்களின் அடிப்படையில் முடிவுரைகளை எட்டுகிறார். அரசியலைப் பகுத்தறியும் சில நீதிநெறிகளுக்கு மாற்றாக மனித நடத்தையின் பாங்கில் கவனம் செலுத்துவதில் அவருடைய சுயத்தன்மை உள்ளது. இருப்பினும் மாக்கியவல்லியின் முறையானது மேலோட்டமான அறிவியல் மற்றும் வரலாற்று முறையாகும் என விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். அவர் குறிப்பிட்டவற்றிலிருந்து பொதுவானவற்றை (Particular to General) நோக்கிய நடைமுறையிலான உய்த்தறிதல் முறையினைப் (Inductive Method) பின்பற்றவில்லை. அதே நேரத்தில் ‘பொதுவானவற்றிலிருந்து குறிப்பிட்டவற்றிற்கான’ (General to Particular) நசைமூறையில் கொணர்முறையினையும் (Deductive Method) பின்பற்றவில்லை. அவர்களைப் பொறுத்தவரையிலும் மாக்கியவல்லி அரசியல் தத்துவத்தின் மையப் பிரச்சனைகளை எப்பொழுதும் தொடவில்லை. உதாரணமாக அரசு நீடித்தலுக்கான நியாயவாதம் மற்றம் அரசியல் கோட்பாட்டின் அடிப்படைகள் மற்றும் வரையறைகளைக் குறிப்பிடலாம். அவருடைய பார்வை பரந்ததாக இருந்தாலும் நடைமூறை அரசியலின் தேவைகளைத் தாண்டி அவர் எப்பொழுதும் பார்த்ததில்லை.

“அரசுகளைக் கண்டறிய மற்றும் சீர்திருத்த ஓர் ஆட்சியாளர் தேவை. அவை நிறுவப்பட்ட பின்னர் தாங்கிப் பிடிப்பதில் குடியரசிலான அரசாங்கங்கள் சிறந்தவையாகும்”.

அரசியல் மற்றும் மதத்தினை பிரிப்பது பற்றி நிக்கோலோ மாக்கியவல்லி

அரசின் நன்னெறி நோக்கம் பற்றிய பிளாட்டோ, அரிஸ்டாட்டில், புனித தாமஸ் அக்வினாஸ் மற்றும் பலரின் நம்பிக்கையில் இருந்து மாக்கியவல்லி மாறுபட்டுள்ளார். அவர் அரசியலை மதம் மற்றும் நீதிமுறைமை ஆகியவற்றிலிருந்து பிரித்து அரசியலுக்கு ஓர் தன்னாட்சி நிலையினைத் தருகிறார். மதம் மற்றும் நீதிநெறி ஆகியவை இளவரசனின் ஆட்சிக்கலையில் நடைமுறைக் கொள்கையாகாது என மாக்கியவல்லி கூறுகிறார்.

மாக்கியவல்லி ஏன் முடியாட்சி மற்றும் குடியரசினைப் பற்றி பேசுகிறார்?

குடியரசு என்பது ஓர் லட்சிய வடிவிலான அரசாங்கம் என்றும் முடியாட்சி என்பது ஓர் நடைமுறை வடிவிலான அரசாங்கம் என்றும் அவர் கூறுகிறார்.

மாக்கியவல்லி (லிவி மீதான உரைக்கோவை – Discourses on Livy)

மாக்கியவல்லியின் இரு முன்னணி புத்தகங்களான ‘இளவரசன்’ மற்றும் ‘லிவி மீதான உரைக்கோவை’ ஆகியவற்றிற்கிடையே எத்தகைய முரண்பாடுகளும் இல்லை என ஜார்ஜ் H.சபைன் என்னும் அறிஞர் சரியாக உற்று நோக்குகிறார். இரண்டுமே ஒரே பொருளைப் பற்றியவையாகும். அதாவது அரசுகளின் எழுச்சி மற்றும் வீழ்ச்சிக்கான காரணங்கள் மற்றும் அவற்றை நிரந்தரமாக்குவதற்கான வழிமுறைகள் ஆகியவை ஆகும். ‘இளவரசன்’ நூல் முடியாட்சிகள் அல்லது முழுமையான அரசாங்கங்களைப் பற்றியும் உரைகோவையானது முக்கியமாக ரோமப் பேரரசின் விரிவாக்கம் பற்றியதாகும்.

மாக்கியவல்லியின் ஆட்சிக்கலை (Machiavelli’s Statecraft)

ஆட்சிக்கலை என்பது மாக்கியவல்லி எடுத்தியம்பியவற்றில் குறிப்பிடத்தகுந்த மற்றும் சர்ச்சைக்குரிய பங்களிப்பாகும். அது தனித்தன்மையான வழிகாட்டு முறைகளைக் கொண்டிருப்பதால் குறிப்பிடத்தகுந்ததாகவும், வெற்றிகரமான ஆளுகைக்கான ஆட்சியாளர் குறிப்பிட்ட அநீதியான நடைமுறைகளைப் பயன்படுத்துவதால் சர்ச்சைக்குரியதாகவும் உள்ளது. ஆட்சியாளர் தமது நோக்கத்தினை எட்டுவதற்காக நீதிநெறியிலான கட்டமைப்பினை ஒதுக்கிவைக்க வேண்டுமென மாக்கியவல்லி அறிவுரை குஊறுகிறார். இருப்பினும் மரபார்ந்த நீதிமுறைமை என்பது அரசியலுக்கு முற்றிலும் தேவையற்றது எனவும் அவர் நினைக்கவில்லை. ஒன்று ஆட்சியாளருக்கும் மற்றொன்று அவரது பணியாளர்களுக்கும், குடிமக்களுக்குமாக அவர் நீதிநெறியில் இரட்டை மதிப்பளவினை எடுத்தியம்புகிறார். ஆட்சியாளரின் நீதிநெறி என்பது அரசினை வலிமைப்படுத்தும் அவரது குறைவுபடாத அர்ப்பணிப்பு மற்றும் தமது வலிமையை உயர்த்தி அரசின் சட்டம் மற்றும் ஒழுங்கினைப் பாதுகப்பதுடன் வெளிநாட்டு படையெடுப்பாளர்களிடம் இருந்து சிறந்த பாதுகாப்பினை உறுதி செய்வதில் உணர்த்துகிறது. அவர் தமதுகடமையை நிறைவேற்றுவதில் வெற்றியடைவதில் இருந்து அவரது திறன் மதிப்பிடப்படுகிறது. ஆனால் அவரது பணியாளர்களும், குடிமக்களும் மரபார்ந்த நீதிமுறைமையில் இருந்து விலகிச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. ஏனெனில் அவ்வாறு செய்தால் அரசின் அடிப்படையே அர்த்தமற்றுப் போய்விடும்.

இளவரசன் தமது குடிமக்கள் மத்தியில் தாம் மிகவும் உயர்ந்த மதிப்பீட்டில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டுமென மாக்கியவல்லி விரும்புகிறார். உலகளாவிய தன்முனைப்பு வாதம் பற்றி இளவரசன் கவனமுடன் இருக்கவேண்டும். அரசாங்கமானது உள்நாட்டு குற்றவாளிகள் மற்றும் வெளிநாட்டு எதிரிகளிடமிருந்து மக்களைப் பாதுகாக்கவேண்டும். ஓர் அறிவார்ந்த ஆட்சியாளர் மக்களின் உயிர் மற்றும் உடமைக்கான பாதுகப்பு மற்றும் மக்களின் மாண்பினைப் பாதுகாக்கும் சூழலை ஏற்படுத்தும் வகையிலான கொள்கைகளை உருவாக்குகிறார். தம் அரசிலுள்ள பெண்களுக்குத் தகுந்த பாதுகாப்பினை அளிக்க அவர் இளவரசனுக்கு அறிவுறுத்துகிறார். ஓர் அரசில் மக்கள் தங்களது உயிர், உடமை மற்றும் பெண்கள் பாதுகாப்பாக இருந்தால் தங்களின் ஆட்சியாளருக்கு விசுவாசமாக இருப்பர்.

மதிப்பீடு

சமூகத்தில் நீதிமுறைமையின் அடித்தளத்தினை கீழ்நிலைப்படுத்த மாக்கியவல்லி கருதவில்லை. ஒரு உண்மையான தேசபக்தனாக ஓர் வலுவான தேசிய அரசாக இத்தாலியைக் கட்டியெழுப்ப அவர் ஏங்கினார். அக்காலத்தில் இத்தாலி ஐந்து பகுதிகளாகப் பிரிந்து கிடந்தது. அவை ஃபிளாரன்ஸ், வெனிஸ் கத்தோலிக்க திருச்சபை நிலப்பரப்பு ஆகியவை ஆகும். ஐரோப்பாவின் பிற தேசிய அரசுகளிடம் ஓர் மதிக்கத்தக்க இடத்தினை தன் நாடு பெறவேண்டும் என அவர் விரும்பினார். ஆனால் இத்தாலியர்களிடம் இருந்த நீதிநெறி சீர்கேட்டினைப் பற்றி அவர் மிகவும் கவலையடைந்தார். அவர் ஓர் குடியரசினை விரும்பினாலும் அக்கால இத்தாலியின் சூழ்நிலைகளால் முடியாட்சியை முன்மொழிந்தார்.

தாமஸ் ஹாப்ஸ் (Thomas Hobbles)

(பொ.ஆ. 1588 – பொ.ஆ. 1679)

வாழ்வும் காலமும்

பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆங்கிலேய தத்துவ ஞானியான தாமஸ் ஹாப்ஸ் அறிவியல் புரட்சி (Scientific Revolution) நிகழ்ந்த காலத்தவர். தற்காலச் சமூகக் கோட்பாட்டிற்கான முதல் முயற்சியினை இவரே மேற்கொண்டார். அவர் தனது கருத்துக்களை நீதிநெறி சார்புநிலைவாதத்தின் (Moral Relativism) அடிப்படையில் கூறுவதுடன் இயற்கை நிலை மீதான அதிகபட்ச அவநம்பிக்கையுடன் அனைவருக்கெதிராகவும் அனைவரும் மேற்கொள்ளும் யுத்தம் என்கீறார். தாமஸ் ஹாப்ஸ் ஏப்ரல் 5, 1588-ல் மால்ம்ஸ்பெரி (Malmesbury) என்னுமிடத்தில் இங்கிலாந்தின் கடற்பகுதிக்கு அருகில் ஸ்பானிஷ் கடற்படைத்தொகுதி (Spanish Armada) தென்பட்டதாக வந்த செய்தியைக் கேட்ட தாய்க்கு குறைப்பிரசவத்தில் பிறந்தாட். ஹாப்சின் தந்தை அக்குடும்பத்தைக் கைவிட்ட பின்னர் ஹாப்ஸ் தனது வசதியான மாமாவின் வீட்டில் வளர்ந்தார். ஹாப்ஸ் தனது பள்ளிக்கல்வியை விரைவில் துவக்கியதுடன் பின்னர் ஆக்ஸ்போர்டின் மெக்தலீன் கல்லூரியில் சேர்ந்தார். தமது பத்தொன்பதாவது வயதில் பட்டம்பெற்ற பிறகு கேவன்டிஷ் குடும்பத்தினருடன் தொடர்பு ஏற்பட்டு வில்லியம் கேவண்டிஷ்க்கு ஆசிரியரானார். தத்துவக் கூறுகளின் மீது ஹாப்ஸ் சிறிதளவே விருப்பம் காட்டினாலும் ஐரோப்பா கண்டத்தில் வில்லியம் கேவண்டிசுடன் சுற்றுப்பணம் மேற்கொண்டபிறகு மரபுநடை கொண்டவற்றில் விருப்பம் காட்டினார். அவர் வரலாற்றின் நகர்வுகள், தேசங்கள் மற்றும் பேரரசுகளின் விதியினைப் பற்றி அறிவதில் விருப்பம் கொண்டார். 1692ஆம் ஆண்டு தூசிடிடசின் ‘பெலோப்பனீசியப் போர் வரலாறு’ (History of the peliponnesian War) என்னும் நூலினை மொழி மாற்றம் செய்து பதிப்பித்தார்.

ஹாப்சின் பல படைப்புகளில் டி சைவ் (De CIve) மற்றும் லெவியதான் (Leviathan) ஆகியவை மிகவும் முக்கியமானவையாகும். ஹாப்சின் லெவியதான் அவரின் மிகவும் முதிர்ந்த மற்றும் அற்புதமான படைப்பாகும். இதில் கலிலியோவில் இயற்சியல் வழியில் மனித உளவியலுக்கு செயல்விளக்கமளிக்க முயற்சித்ததுடன் தற்கால அரசியலுக்கு அடித்தளமிடுகிறார். மனிதனின் தன்மை பற்றிய கருத்தாக்கம், இயற்கை நிலை, சமூக ஒப்பந்தம் மற்றும் அவரது இறையாண்மை பற்றிய கருத்துக்கள் ஆகியவை அவருடைய அரசியக் தத்துவத்தினை படிக்கும் அனைவரின் விருப்பத்தினையும் கவர்ந்துள்ளது. கீழ்க்காணும் பகுதிகளில் ஹாப்சின் முக்கியப் படைப்புக்களை ஆராய்ந்து புரிந்துகொள்ள முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

  • “அச்சமும் நானு இரட்டையர்களாகப் பிறந்தவர்கள்.” – ஹாப்ஸ் (Hobbes)
  • மனிதகுலம் முழுமைக்கும் உள்ள பிதுவான மனச்சார்பாக நான் முன்வைப்பது யாதெபில் அவர்கள் அதிகாரத்தின் மேல் கொண்டுள்ள இடைவிடாத மற்றும் ஓய்வற்ற விருப்பம் ஆகும். ஆவிருப்பம் அவர்கள் மரணத்தின் போதுதான் முடிவுக்கு வருகிறது. – ஹாப்ஸ் (Hobbes)

மனிதனின் தன்மை (Humman Nature)

  • பல சமயங்களில் ஹாப்சின் லெவியதான் ,அனிதனைப் பற்றி தெளிவும், எளிமையும் கொண்ட கோட்பாட்டுடன் தொடங்குவதாகவும் அரசியலைப் புரிந்துகொள்வதன் முன்தேவையாகவும் இருக்கிறது.
  • அரசியல் அறிஞர்கள் அடிக்கடி ‘ஹாப்சியன்’ (Hobbesian) என்ற பதத்தினை பயன்படுத்துகின்றனர். இது மனிதனின் மீதான அவநம்பிக்கைக் கருத்தினைக் குறிப்பதாகும். அதாவது மனிதன் அடிப்படையில் சமூகவிரோதி, சுயநலமிக்கவன், கொடுமைமிக்கவன் மற்றும் அதிகார ஆசையுடையவன் என்பதாகும். மனிதன் சமூகம் மற்றும் அரசிற்கு முன்னரே இருந்தவம் என்ற ஹாப்சின் அனுமானங்களை ஏற்றுக்கொண்டால் பின்னர் மனிதன் தன் தேவை மற்றும் விருப்பங்களை மட்டுமே திருப்திப்படுத்துவதை மேற்கொள்வான் என்பதையும் ஏற்றுக்கொள்வதாகும். ஹாப்சின் வார்த்தைப்படி மனித இனம் தனது உணர்ச்சி வழி நடப்பதாகும். தங்களின் அறிவுத்திறனை அவர்கள் அதிக மகிழ்ச்சி மற்றும் குறைவான வலி ஆகியவற்றினை பெறுபவை எவை என தீர்மானித்து பயன்படுத்துகிறார்கள். ஹாப்ஸ் மேலும் கூறுகையில் மனிதனின் நோக்கமானது ஒரே ஒரு தடவை தனது விருப்பத்தை நிறைவெஏற்றுவதோ மற்றும் ஒரு நிகழ்வில் மட்டுமல்லாமல் தனது எதிர்கால விருப்பங்களை உறுதியுடன் நிறைவேற்றுவது ஆகும். ஹாப்ஸ் மிகவும் கவனமாகக் கூறுவது யாதெனில் பல்வேறு மக்கள் பலதரப்பட்ட மகிழ்வின் வடிவங்களை விரும்பினாலும் மக்களிடம் பொதுவாக உள்ள ஒரு விருப்பம் அதிகாரமாகும். மகிழ்ச்சியைத் தேடுபவர்கள் அனைவருமே தர்க்கத்தின் அடிப்படையில் அதிகாரத்தைத் தேடுபவர்களாவர். இங்ஙனம் ஹாப்ஸ் மனிதனின் தன்மை முழுமையான தன்னலப் பற்றுள்ளதாகவும், தன்னைப் பற்றியதாகவும் மட்டுமானது எனக் கருதுகிறார்.

இறையாண்மை உள்லவரிடம் மக்கள் தங்கள் உரிமைகளை ஒப்படைத்தனரா?

இல்லை, சுயபாதுகாப்புரிமை, அதாவது வாழும் உரிமையைத் தங்களிடம் வைத்துக் கொண்டனர்.

இயற்கை நிலை (State of Nature)

  • ஹாப்ஸ் தனது இயற்கை நிலை கோட்பாட்டில் மனித நட்த்தையைப் புரிந்துகொள்வதற்கான அனுமான முறையினை தந்துள்ளார். இயற்கை நிலை என்பது முழுமையான சுதந்திரம் மற்றும் சமத்துவம் உள்ள சூழல் என வாதிடுகிறார்.
  • தனி மனிதர்களைக் கட்டுப்படுத்த எவ்விதச் சட்டமும் இல்லாத முழுமையான சுதந்திரத்தில் அனைத்தையும் செய்யும் உரிமை உண்டு. அதில் மனிதர்கள் ஏறத்தாழ சமமான உடல் மற்றும் அறிவுத்திறனைப் பெற்றிருப்பது முழுமையான சமநிலையாகும்.
  • மேலும் அத்தகைய சூழலில் அனைத்தையும் செய்யும் உரிமை அனைவர்க்கும் உள்ளதாலும், அனைவருமே தங்கள் உரிமைகளைச் செயல்படுத்துவதில் சமமான திறனுள்ளவர்களாக இருப்பதாலும் அனைவரும் அனைவராலும் தாக்கப்படுகின்றனர். ஆகவே, இயற்கை நிலை என்பது ஓர் போர்ச் சூழ்நிலையாக உள்ளது.
  • உயிர் வாழ்தல் என்பது மனிதர்கள் அதிகாரத்தைப் பெறுவதன் அடிப்படை நோக்கமாக உள்ளது. ஆகவே. இயற்கை நிலையில் அனைவருமே மற்றவரின் மீதான நிலையான பயத்திலேயே வாழ்கின்றனர். இதனால் மனிதர்கள் இயற்கையில் சமூக விரோதமாக அதிகாரத்தைப் பெறுபவர்களாக உள்ளனர்.
  • பிறர் உனக்கும் பாதகமானவற்றை செய்வதற்கு முன் நீ அவர்களுக்குப் பாதகமானவற்றைச் செய்துவிடு. – ஹாப்ஸ் (Hobbes)

சமூக ஒப்பந்தம் (Social Contract)

  • மனிதனின் தன்மை பற்றிய ஹாப்சின் கருத்துக்கள் அவரது அரசியல் கோட்பாட்டில் ஆழ்ந்த தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. மனிதனின் உண்மையான தன்மையை அறிந்ததால் ஹாப்ஸ் அரசியலின் அறிவியல் கோட்பாடாக சமூக ஒப்பந்தத்தினை முன் வைத்தார்.
  • சமூக ஒப்பந்தத்தின் அடிப்படைக் கருத்து மிகவும் எளிமையானதாகும். மனிதர்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் விளைவே அரசாகும். அதில் அரசாங்கத்தின் அதிகார எல்லையானது ஒப்பந்தத்தின் வரையறைகளால் பகுப்பாய்வு செய்யப்பட்டு தீர்மானிக்கப்படுகிறது. அரசானது பரஸ்பஎஅ ஒப்பந்தம் அல்லது உறுப்பினர்களின் ஒப்புதல் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது. இதன் விளைவாக மக்கள் ஒப்புதல் அளித்ததற்குத் தகுந்தவாறு இருக்கும்போது அரசாங்கம் சட்டப்பூர்வமானதாகிறது.
  • இது தற்கால மதச்சார்பற்ற அரசினைப் பற்றிய புதிய கருத்தாக்க உள்ளதுடன் மதச்சார்பற்ற அரசாங்கம் இறைவழி ஒப்புதலுடன் நீடிக்கீறது என்ற இடைக்கால சிந்தனைக்கு முரணானதாகும்.
  • அத்தகைய கருத்தினை அரச வம்சத்தினர் இன்றும் பயன்படுத்துவதுடன் இறைவழி உரிமையின்படியே மன்னர் ஆளுகிறார் எனவும் வாதிடுகின்றனர். ஆனால் ஒப்புதல் – ஒப்பந்தம் இதனை ஒரேயடியாக நிராகரிப்பதுடன் அதற்கு முரணாக மக்கள் ஒப்புதல் அளித்ததற்கு தகுந்தவாறே அரசாங்கம் சட்டப்பூர்வமானதாக உள்ளதாக கோருகிறது.
  • ஹாப்சின் சமூக ஒப்பந்தக் கோட்பாட்டின் முக்கியத்துவம் யாதெனில் அதனை அரசைப் பற்றிய ஓர் தர்க்க மற்றும் அறிவியல் பகுப்பாய்வாக அவர் நம்பினார்.
  • மனிதர்லள் தங்களுடைய பகுத்தறிவின் அடிப்படையில் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்குத் தக்கவாறே ஒப்புதல் அளிப்பர் எனவும் அவர் வாதிடுகிறார்.

இறையாண்மை (Sovereignty)

  • ஹாப்சின் அரசன் / இறையாண்மை பற்றிய கருத்தாக்கத்தினை தனிமனிதனுக்கும் , அரசனுக்கும் இடையேயான உறவின் தொகுப்பாகப் பார்க்கலாம்.
  • தனிமனிதனுக்கும், அரசனுக்கும் இடையேயான உறவு என்பது முழுமையான அதிகாரமற்ற நிலை மற்றும் முழுமையான அதிகார ஒன்றிப்பு ஆகியவற்றிகு இடையேயானதாகும்.
  • பொதுநலக் கூட்டமைப்பில் (Commonwealth) தனிமனிதனின் அனைத்து அதிகார அடிப்படைகளையும் நீக்குவதுடன் அதனை அரசனிடம் ஒருமுகப்படுத்துவது அவசியமாகும் என ஹாப்ஸ் வாதிடுகிறார். வேறு வழியில் கூறவேண்டுமென்றால் மனிதனின் பகுத்தறிவின்மைக்குத் தக்கவாறு சட்டம் மற்றும் ஒழுங்கினை நிலைநாட்டிவதில் சற்று அதிகாரக் குறைவுபடாத ஓர் முழுமையான இறைமையாளரை உருவாக்குவதற்கு ஹாப்ஸ் ஆதரவளித்தார்.
  • ஓர் முழுமையான அதிகாரத்தை உருவக்கும் முழுமையான தேவை அவரது அரசியல் சிந்தனைக்குத் திறவுகோலாக அமைகிறது. இறைமையாளர் ஒருவராகவோ ஓர் அவையாகவோ இருப்பினும் ஹாப்ஸ் தனி மனிதனின் இறையாண்மை மிக்க அதிகாரத்தை விரும்பித் தேர்வுசெய்கிறார்.
  • அச்சம் மற்றும் சுதந்திரம் ஆகியவை நிலையானது ஆகும்.
  • சுதந்திரம் மற்றும் தேவைகள் ஆகியவை நிலையானது ஆகும்.
  • சமர்ப்பித்தல் என்பது நமது கடப்பாடு மற்றும் சுதந்திரம் ஆகும் இரண்டையும் உள்ளடக்கியதாகும்.
  • சட்டத்தின் அமைப்பைச் சார்ந்தே பிற சுதந்திரங்கள் உள்ளன.

மதிப்பீடு

ஹாப்சின் முக்கியத்துவம் அவரது அரசியல் தத்துவத்தில் மட்டுமல்ல அரிஸ்டாட்டிலின் சிந்தனைக்கு எதிரான அவருடைய பங்ங்களிப்பு மற்றும் அரசியலைப் பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தாக்கம் ஆகியவற்றிலும் உள்ளது. அவருடைய படைப்புகளின் வாயிலாக இலக்கற்ற நோக்கில் அரசியலைப் புரிந்து கொள்வது என்பது தொடங்கியது எனலாம். அவரது அரசியல் தத்துவமே ஜான்லாக், ஜீன் ஜாக்குவஸ் ரூசோ, இம்மானுவேல் காண்ட் போன்ற பிற அரசியல் சிந்தனையாளர்களுக்கு அடிப்படையாக இருந்தது. அவர்கள் தற்கால அறிவியல் அணுகுமுறையின் வழியே அரசியலை ஆராயும் ஹாப்சின் மரபினைப் பின்பற்றினர்.

ஜான் லாக் (John Locke)

(பொ.ஆ. 1632 – பொ.ஆ. 1704)

வாழ்வும் காலமும்

இங்கிலாந்தின் சோமர்செட்ஷயரில் உள்ள ரிங்டன் என்னுமிடத்தில் ஆகஸ்ட்ட் 29, 1632-ல் தத்துவார்த்தமான சுதந்திரத்துவத்தின் தந்தையான ஜான் லாக் பிறந்தார். பிரிஸ்டல் அருகிலுள்ள பென்ஸ்போர்டு என்னுமிடத்தில் தனது குழந்தைப்பருவத்த அவர் கழித்தார். ஆரஞ்சின் இளவரசி வில்லியமுடன் (William of Orange) லாக்கிற்கு நட்பு ஏற்பட்டது. 1688-ல் நடைபெற்ற மகத்தான புரட்சியின் (Glorious Revolution) விளைவாக வில்லியம் இங்கிலாந்தின் அரியணை ஏறினார். 1689-ல் மூன்றாம் வில்லியம் லாக்கை முறையீட்டு ஆணையாளராக்கினார். ஆனால் சாதகமற்ற அரசியல் சூழ்நிலை அவரை பதவி விலக வைத்ததுடன் எஸ்ஸெக்சில் குடியமர வைத்தது. அவர் தனது பொது வாழ்வினை தேயிலை வாரிய ஆணையாளர் பணியுடன் முடித்துக் கொண்டார்.

லாக்கின் படைப்புகள்

சகிப்புத்தன்மை தொடர்பான கடிதங்கள் (1689), மனிதப் புரிதலைப் பற்றிய கட்டுரை (1690), குடிமை அரசாங்கம் பற்றிய இரு ஆய்வு நூல்கள் (1690), சகிப்புத்தன்மை பற்றிய இரண்டாவது கடிதம் (1692), சகிப்புத்தன்மை பற்றிய மூன்றாவது கடிதம் (1692), சகிப்புத்தன்மை பற்றிய நான்காவது கடிதம் (1693) கல்வி தொடர்பான சில சிந்தனைகள் (1693).

மைய கருத்துக்கள்

லாக்கின் மைய கருத்துக்களை கீழ்க்கண்டவாறு விவாதிக்கலாம்.

மனிதனின் தன்மை பற்றிய கருத்தாக்கம் (Conception of Human Nature)

  • மனிதனின் தன்மைப் பற்றிய லாக்கின் புரிதலை அவரது மனிதப் புரிதல் பற்றிய கட்டுரையில் அறியலாம். ஹாப்சைப் போல மனிதனின் தன்மை மீதான அவநம்பிக்கையை லாக் பரிந்துரைக்கவில்லை. காரணங்களை ஆராய்வதே மனிதர்களின் பகுத்தறிவு உருவாக்கக் காரணமாகும் என அடையாளப்படுத்துகிறார்.
  • தனிமனித மற்றும் சமூக வாழ்வின் அடிப்படையாக பகுத்தறிவினை ஒப்புக் கொள்கிறார். மனிதர்கள் சமூகமயமானவர்கள், பகுத்தறிவு , நாகரீகம், நிலையான மனநிலை மற்றும் தன்னாட்சித் திறனுள்ளவர்கள் ஆவர்.
  • தனிமனிதனின் இயற்கைச் சமநிலையை லாக்கின் கருத்து ஆதரிக்கிறது. அவரை பொறுத்தவரை மனிதர்கள் இயற்கையில் சுதந்திரமானவர்கள். எத்தகைய மேலான அதிகாரத்திடமிருந்தும் சுதந்திரமாக இருக்கக்கூடிய உள்ளார்ந்த முன்னுரிமைத் தகுதியான மற்றும் இயற்கையின் வழிகாட்டுதல் படி நடப்பவர்களாக உள்ளனர்.
  • அறிவு, வலிமை மற்றும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தனிமனிதர்கள் சிறிய அளவிலான மாறுபாடுகளைக் கொண்டிருப்பதாக ஒப்புக்கொள்கிறார். எனினும் அவரது தனிமனிதர்களின் ஒற்றுமைகள் மீதான சார்பு, வேறுபாடுகளை விட அதிகமாகவே உள்ளது. மனிதர்களின் பயன்பாட்டுவாதப் பண்பினை லாக் குறிப்பாக பிரதிபலிக்கிறார்.
  • பெந்தாமின் அடியொற்றி லாக் கூறுவது யாதெனில் மனிதர்கள் மகிழ்வு மற்றும் வலி ஆகியவற்றிற்கிடையே ஓர் சமநிலையை ஏற்படுத்த முயல்வதாக கூறுகிறார். அவரது உடன்படிக்கையின் அடிப்படையாக மகிழ்வு அல்லது பயன்பாடு பற்றிய கருத்தே உள்ளது.

இயற்கை நிலை (State of Nature)

  • லாக்கின் இரண்டாவது ஆய்வு நூலில் ‘இயற்கை நிலை’ பற்றிய சிந்தனையைக் காணலாம். ஹாப்சின் இயற்கை நிலைக்கு முரணாக மனிதனுடைய சமூக உள்ளுணர்வின் காரணமாக நல்லொழுக்கத்தினால் அமைதியான சூழ்நிலை ஏற்படுவதாக அனுமானிக்கிறார்.
  • இயற்கைச் சட்ட நியதிகளின்படி அவரது இயற்கை நிலை முழுமையான சுதந்திரத்தின் அடிப்படையிலானதாகும். பரஸ்பர வலிமை மற்றும் அதிகார எல்லையால் வரையறுக்கப்பட்ட சமத்துவமே இக்காலகட்டத்தின் பண்பியல்பாகும்.
  • அவருடைய வார்த்தைகளின்படி இயற்கை நிலை என்பது ஓர் அமைதியான நிலை, நல்விருப்பம், பரஸ்பர உதவி மற்றும் பாதுகாப்பாகும். சுருங்கக் கூறின், மனிதர்களின் மீதான தனது நம்பிக்கையினை அடிக்கோடிடுகிறார்.
  • உரிமைகள் மற்றும் கடமைகளின் ஆதாரமாக ‘இயற்கைச்சட்டம்’ கருதப்படுகிறது.மனிதர்கள் தங்களின் உரிமைகளை இயற்கைச் சட்டத்திலிருந்து பெறுகிறார்கள். மேலும் விதிக்கப்பட்டுள்ள உரிமைகளை பரஸ்பர அடிப்படையில் பாதுகாப்பதற்காக மதிக்க வேண்டுமென இயற்கைச் சட்டம் எதிர்பார்க்கீறது.
  • இயற்கைச் சட்டத்தைக் கடவுளால் இயற்றப்பட்ட நீதிநெறிச் சட்டமாக குறிப்பதுடன் பகுத்தறிவின் மூலம் அதனை உணரலாம் என்கிறார். அவரது இயற்கை நிலையினை ‘அமைப்பெதிர்வாதிகளின் சொர்க்கம்’ என்றால் அது தவறாகாது.
  • இறுதியாக, இயற்கை நிலையின் சமநிலைக்கு அச்சுறுத்தலாக உள்ள மூன்று அடிப்படைக் கூறைபாடுகளை லாக் அடையாளம் காட்டுகிறார்.
  • முதலாவதாக, சட்டப்படியான கட்டமைப்பு இல்லாததாகும். இரண்டாவதாக, அறிவார்ந்த மற்றும் நடுநிலையான நீதிபதி இல்லாமையாகும். மூன்றாவதாக, முடிவுகளைச் செயலாக்கப்படுத்த ஓர் ஆட்சித்துறை அமைப்பின் தேவையாகும். ஆகவே இப்பணியிலிருந்து விடுபடும் வழிமுறையே அரசும் எனும் நிகழ்வாகும்.
  • லாக்கின் இயற்கை நிலை என்பது உண்மைகளுக்கு முரணானதாக உள்ளதை மனதில் கொள்ள வேண்டும். இது எத்தகைய வரலாற்று நியாயவதத்தின் ஆதரவும் இல்லாத புனைவு முதற்கோளாகும்.

அரசாங்கத்திற்கு எதிராக மக்களால் புரட்சி செய்ய இயலுமா?

ஆம், அவர்களால் இயலும். இருப்பினும் அவர்களால் அரசினைக் கலைக்க முடியாது. அவர்களால் அரசாங்கத்தை மட்டுமே மாற்ற முடியும்.

சமூக ஒப்பந்தம் (Social Contract)

  • குடிமைச் சமூகத்தில் நுழைவதற்கான கருவியாகவே சமூக ஒப்பந்தம் கட்டமைக்கப்பட்டுள்ளது. லாக்கின் கருத்துப்படி இரு சமூக ஒப்பந்தங்கள் முன்மொழியப்படுகின்றன.
  • முதலாவது குடிமைச் சமூகத்தை நிறுவவும், இரண்டாவது அரசமைப்பிலான அரசாங்கத்திற்கானதும் ஆகும். ஒப்பந்தத்தின் அஸ்திவாரமாக ஒப்புதலை லாக் அங்கீகரிக்கிறார்.
  • அவரைப் பொறுத்தவரை பொது நலக்கூட்டமைப்பில் யாருடைய சுய ஒப்புதலின்றியும் சேர்க்க முடியாது. லாக் இரண்டு வகையான ஒப்புதலைப் பற்றி பேசுகிறார்.
  1. இயற்கையால் மாற்ற இயலாத முறையான அல்லது உயிர்ப்புள்ள ஒப்புதல்
  2. உட்கிடையான அல்லது மறைமுகமான ஒப்புதல்.
  • இது பங்கேற்பாளர்களை நம்பிக்கை என்ற நிலையிலிருந்து புதிய முறைமையைத் துவக்க அனுமதிக்கிறது. ஒப்பந்தத்தைப் பொறுத்தவரியில் லாக் முன்கூறியதற்கே முன்னுரிமை அளிப்பதுடன் மீண்டும் இயற்கை நிலைக்குத் திரும்ப இயலாது என தெளிவுப்படுத்துகிறார்.
  • லாக்கினுடைய ஒப்பந்தத்தின் முக்கிய இயற்பண்பு யாதெனில் தனிமனிதர்கள் இயற்கை நிலையில் பெற்றிருந்த உரிமைகளை ஒப்படைக்க மாட்டார்கள் என்பதாகும்.
  • உரிமைகளை ஒப்படைத்தல் என்பது ஒப்பந்தத்தின் நோக்கத்தையே தோல்வியடையக் செய்துவிடும். ஏனெனில் அரசு என்பது உரிமைகளின் உத்திரவாதி மற்றும் பாதுகாவலனாகவே கட்டி எழுப்பப்படுகிறது. ஆகவே ஒப்பந்தமானது சுதந்திரச் சாசனம் எனப் பொருள்படுமேயன்றி அடிமைப்படுத்துதலுக்கான உரிமமாக இருக்காது.
  • லாக்கின் சமூக ஒப்பந்தமானது ஒருவேளை கொடுங்கோலாட்சி முறையில் ஆளுகை இருப்பின் புரட்சி செய்யும் விருப்பத்தேர்விற்கு அதிகாரமளிக்கிறது. தனிமனிதர்களுடைய இயற்கை உரிமைகளின் பாதுகாவலனாக அரசின் பங்கினை உறுதிப்படுத்துவதற்காக இந்நடவடிக்கை இணைக்கப்பட்டது.
  • மேலும் புரட்சி பற்றிய முடிவினை சட்டமன்றத்திடம் விடுவதுடன் ஒப்புதல் மற்றும் பெரும்பான்மைத்துவக் கோள்கையில் லாக் கவனம் செலுத்திகிறார்.
  • அதிகாரத்தின் தன்மை பற்றிய கேள்விக்கு , லாக் வரையறுக்கப்பட்ட இறையாண்மை (Limited Sovereignty) என்னும் கருத்தினைக் கோடிட்டுக் காட்டுகிறார்.
  • முழுமையான இறையாண்மை என்பது அவரது குடிமைச் சமூகக் கட்டமைப்பிற்கு எதிரானதாகும். அதிகாரப் பிரிவினைக்கான மாற்று செயல்திட்டத்தினை வழங்கவும் லாக் தயங்கவில்லை. அவரைப் பொறுத்தவரையிலும் அரசாங்கத்தின் அதிகாரங்கள் மூன்று அங்கங்களிடம் பிரிக்கப்பட்டுள்ளன.
  • முதலாவதாக சட்டமன்றம் ஆகும். இதனைப் பொதுநல கூட்டமைப்பின் மேலான அதிகாரம் எனக் குறிப்பிடுகிறார். இரண்டாவதாக நீதித்துறையின் அதிகாரங்களை உள்ளடக்கிய ஆட்சித்துறையின் அதிகாரங்களை உள்ள்டக்கிய ஆட்சித்துறையாகும். மூன்றாவதாக அரசின் வெளியுறவு அதிகாரத்தைக் குறிக்கும் கூட்டாட்சியாகும்.
  • ஒருவரின் கையில் அனைத்து அதிகாரங்களையும் கொண்ட ஆட்சியாளர் பற்றிய கருத்தை லாக் ஏற்றதுடன் அது பெரும்பான்மையினருடைய ஒப்புதலின் வெளிப்பாடாகும் என்கிறார்.
  • சொத்தினைப் பாதுகாப்பதைத் தவிர அரசாங்கத்திற்கு வேறு நோக்கம் கிடையாது. – ஜான் லாக் (John Locke)

மதிப்பீடு

ஜான் லாக் தமது அறிவியல் மனப்பாங்கு மற்றும் பகுத்தறிவிலான நன்னடத்தையின் மூலமாக மேற்கத்திய அரசியல் சிந்தனையில் குறிப்பிடத்தகுந்த இடத்தினைப் பெற்றுள்ளார். தனிமனிதவாதியாக தமது மனத்திண்மையின் அடிப்படையில் அவர் நம்புவது என்னவெனில் தமது தலையெழுத்தினை மனிதர்கள் தாமே தீர்மானிக்கின்றனர் என்பதாகும். வால்டேர் (Voltaire) , டிடராட் (Diderot), ரூசோ (Rousseau) போன்ற சிந்தனையாளர்களுக்கு மட்டுமல்லாமல், பிரெஞ்சுப் புரட்சிக்கும் கூட தூண்டுதல் மற்றும் உத்வேகம் அளித்த பெரும் மூல ஆதாரமாக அவரது படைப்புக்கள் உள்ளன. பாரிங்டனின் (Parrington) கூற்றுப்படி லாக்கின் அரசாங்கம் பற்றிய இரு ஆய்வு நூல்கள் அமெரிக்கப்புரட்சியின் பாடப்புத்தகமாகவே மாறின. சுதந்திரத்தைப் பெறுவதே அரசின் மிக முக்கியப் பிரச்சினையாக லாக் பார்த்தார். இதனை தனிமனித நலனுக்காக வரையறுக்கவே அவர் கடும்முயற்சி செய்தார்.

ஜீன் ஜாக்குவஸ் ரூசோ (Jean Jacques Rousseau)

(பொ.ஆ. 1712 – பொ.ஆ. 1778)

வாழ்வும் காலமும்

  • தற்கால அரசியல் உரைக்கோவையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் தத்துவஞானிகளுள் ஒருவரான ஜீன் ஜாக்குவஸ் ரூசோ ஜூலை 28, 1772 –ல் ஜெனீவாவில் பிறந்தார்.
  • சிதறுண்ட குடும்பத்திலிருந்து வந்த ரூசோ பராமரிப்புடனான குழந்தைப் பருவ வாய்ப்பினை இழந்தார். ஒருசில பணிப்பயிற்சிகளுக்குப் பின்னர் தம்மை விடுத்துக்கொண்டு ஜெனீவாவை விட்டுச் சென்று சுற்றித்திரியும் ஆவலில் வாழ்ந்தார்.
  • இளம் விதவையான டி வாரன்ஸ் அம்மையார் (Madame de Warens) உதவியுடன் தூரனிலுள்ள (Turin) மடாலயத்திலும் பின்னர் அன்னெசியிலுள்ள (Annecy) ஓர் இறையியல் கல்லூரியிலும் ரூசோவுக்கு முறைசார்ந்த கல்வியைக் கைவிடத் தூண்டியது.
  • தொடர் தோல்விகளால் 1730-ல் அவரை லியான்ஸ் நகருக்கு அனுப்ப அம்மையார் கட்டாய சூழலுக்குள்ளானார். ஓராண்டு அங்கு அலைந்து திரிந்த பின்னர் மீண்டும் 1731-ல் அம்மையாரிடம் ரூசோ அடைக்கலமானார்.
  • 1740வரை அம்மையாரின் கொடையிலேயே அவர் வாழ்ந்தார். அம்மையாருடைய அறிவு ஒளியின் தாக்கத்தினாலும், அவரது மதிப்புமிக்க உதவியினாலும் மாண்டியர் டி மால்பை (Monsier de Malby) குடும்பத்தில் ஆசிரியராக ரூசோ பணியில் சேர்ந்தார்.
  • இருப்பினும் அவர் தனது பணியை விட்டு விலகி இலக்கற்ற ஆத்மாவாக தனது பயணத்தினை தொடர்ந்தார்.
  • 1744-ல் பிரான்சுக்கு அவர் மேற்கொண்ட இரண்டாவது பயணம் அவரது வாழ்வில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தியது. இடை, நாடகம், கவிதை மற்றும் பிறவற்றில் வெற்றிகரமில்லாத பல பரிசோதனைகளுக்குப் பின்னரும் ரூசோ தனது உறுதி மற்றும் நேர்மறை மனநிலையினை தக்க வைத்துக்கொண்டார்.
  • 1749-ல் வருடம் அவரது வாழ்வில் ஓர் திருப்பு முனையாக அமைந்தது. டிஜோன் அகாடெமியானது ‘அறிவியல் மற்றும் கலைகளின் முன்னேற்றம் நீதிநெறிகளை வீழ்ச்சியடைய வைத்துள்ளதா அல்லது தூய்மைப்படுத்த பங்களித்துள்ளதா?’ என்னும் தலைப்பில் சிறந்த கட்டுரைக்கான பரிசினை அறிவித்தது.
  • ரூசோ தனது ஒப்புதலில் பின்னர் எழுதும்போது நான் உடனடியாக மற்றொரு பிரபஞ்சத்தைப் பார்த்தேன், நான் வேறொரு மனிதனானேன் என்றார். 1750-ல் இவர் சமர்ப்பித்த படைப்பிற்கு முதல் பரிசு கிடைத்தது. அது பின்னர் ‘கலைகள் மற்றும் அறிவியல்களினுடைய நீதிநெறி விளைவுகளின் சொற்கோவை’ என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டது.
  • 1754-ல் ஜெனீவாவிற்குத் திரும்பிய பின்னர் கத்தோலிக்கரான ரூசோ கால்வினிச சமயப்பிரிவினை ஏற்றுக் கொண்டு குடியுரிமையை மீண்டும் பெற்றார்.
  • பாரீசுக்குப் பயணப்பட்ட பின்னர் அவர் எட்டு ஆண்டுகள் தமது வாழ்வினை மாண்ட்மோரென்சியில் (Montmorency) டி எஃபினே அம்மையாரின் (Madame d’ Epinay) மாணவராகக் கழித்தார்.
  • புதிய ஹெலாய்சே – New Helosie (1761), எமிலி – Emile (1762), சமூக ஒப்பந்தம் – Social Contracy (1762) ஆகிய மிக முக்கியப் படைப்புக்களை இக்காலகட்டத்தில் தா ரூசோ உருவாக்கினார்.
  • அவரது புத்தகங்களுக்குப் பதிலாகக் கண்டனங்களையே பெற்றதால் பல்வேறு இடங்களுக்கு அவர் குடிபெயர வேண்டியதாயிற்று. ஜூலை 2, 1778-ல் ரூசோவின் மறைவு அதிர்ச்சியுடனும், தத்துவத்திற்குப் பெரும் இழப்பாகவும் பார்க்கப்பட்டது.

மையக் கருத்துக்கள்

அரசியல் த்த்துவ உலகினில் ரூசோ முக்கிய நிலையினை வகிக்கிறார். அவரது சமூக ஒப்பந்தக் கோட்பாட்டிற்காக அவர் முக்கியமாக அறியப்படுகிறார். தீவிர சமூக ஒப்பந்தக் கோட்பாட்டாளரான ரூசோ ‘பொதுவிருப்பம்’ (General Will) மூலமாக அரசின் தோற்றத்தினை வெளிப்படுத்த முனைகிறார். ‘இயற்கை நிலை’ மற்றும் ‘சமூக ஒப்பந்தம்’ ஆகிய இரு வளர்ச்சி நிலைகளின் விளைவே அரசின் தோற்றத்திற்கான இயற்பண்பாகிறது என்று கூறுகிறார்.

இயற்கை நிலை (State of Nature)

  • ஹாப்சைப் போலன்றி ரூசோவின் கருத்துரைப்படி நிறைவான சுதந்திரம், சமத்துவம் மற்றும் நிறைவான பேதைமை ஆகியவற்றின் சுருக்கமே இயற்கை நிலை ஆகும். அதனை அவர் மிகவும் அமைதியான மற்றும் மகிழ்வூட்டும் ரம்மியமான சூழலாக அடையாளம் காட்டுகிறார்.
  • இயற்கை நிலையில் மனிதன் தனிமையில் ஆசைகளற்ற சுதந்திரமான வாழ்வு வாழ்ந்தான். முன்பின் முரணான சீரமை வாழ்வு மற்றும் தெளிவற்ற பேச்சு இருப்பினும் வாழ்வு என்பது மனநிறைவு, சுதந்திரம், தன்னிறைவு மற்றும் வளம் ஆகியவற்றால் வடிவம் பெறுகிறது.
  • போல்லாங்கின்மையே ரம்மியமான மகிழ்ச்சிக்கு வழிவகுக்கிறது. அவருடைய வார்த்தையின்படி ‘மேலான பேரின்பம்’ காலத்தின் விதிமுறையாகும்.
  • காலப்போக்கில் மனித வாழ்வினுடைய நாகரிகத்தின் மாற்றங்களால் அந்நிலைக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இயற்கை நிலை நீடிப்பதற்குச் சவால்களாக மாறுபடும் தட்பவெப்ப, பருவகாலம் மற்றும் மண் சார் தொழில் அமைவு , தனிநபர் சொத்து ஆகிய பலதரப்பட்ட காரணிகளை அவர் ஒப்புக்கொள்கிறார்.
  • ரூசோவின் கருத்துப்படி மனிதனின் முன்னேற்றம் மற்றும் உயர்வான பகுத்தறிவுடன் கூடிய புரட்சி என்பது மனித சிந்தனை மற்றும் வாழ்வில் இருப்பின் அதன் தொடர்ச்சியாக புதிய அடுக்கிலான தீமைகளைக் கொண்டு வரும்.
  • இத்தொடர் மாற்றங்களே இயற்கை நிலையின் கட்டமைப்பினை அசைத்துப் பார்த்து சமத்துவமின்மையின் தோற்றத்திற்கு வகை செய்வதாக அடையாளப்படுத்துகிறார்.
  • தனிநபர் சொத்து என்னும் கருத்தாக்கமே சமூக கோளத்தில் ஏழை மற்றும் பணக்காரன் என்ற புதிய பிளவினை உருவக்கியுள்ளது. அவரின் சொற்படி ‘முதல் மனிதன் ஒரு துண்டு நிலத்தை வேலி போட்டுத் தனக்குத் தானே இது என்னுடையது என்று கூறிக்கொண்டதை மக்கள் நம்புவதைக் கண்டான். அவனே குடிமைச் சமூகத்தின் உண்மையான நிறுவனராவான்’ என்று கூறுகிறார்.
  • அக்காலமானது தொடர் போர்கள் , கொலைகள் மற்றும் ஏழை, பணக்காரன் பிளவு ஆகியவற்றின் சாட்சியாக இருந்தது. இப்புதிய முறைமை காட்டுமிராண்டி அரசில் காணப்படாத பிரபஞ்ச அளவிலான தீமைகளை அனுமதித்தது.
  • இத்தகைய திருப்பம் நிறைந்த சம்பவங்களின் தவிர்க்க முடியாத உச்சகட்டமாக சமத்துவமின்மை உதயமானதுடன் எஜமானர் மற்றும் அடிமைகள் என்ற அடுக்கினை உருவாக்கியது.
  • இரண்டு மெய்க்கோள்களின் அடிப்படையில் காட்டுமிராண்டித்தனமான செயல்பாடு இருப்பதாக ரூசோ கருத்து தெரிவிக்கிறார்.
  • முதலாவதாக ஒவ்வொருவரும் தனது சுய நல்வாழ்விற்காகவும், சுய பாதுகப்பு தேவைக்காவும் உந்தப்படுகின்றனர். இரண்டாவது மரணத்தைப் பற்றிய பயமாகும். அவர் பகுத்தறிவு மற்றும் காரண காரிய அறிவின் தொஓற்றத்தினை ஆழ்ந்த உணர்வு நிலையில் காண்கிறார்.
  • மனிதர்கள் இயற்கையில் சிந்திக்கும் திறனற்றவர்கள் என்பது ரூசோவின் கருத்தாகும். குடிமைச் சமூகம் இயற்கைக்கு முரணானதாகவும், மனிதனின் பகுத்தறிவினுடைய வெளிப்பாடாகவும் உள்;லது. இயற்கைக்குத் திரும்புதல் என்னும் முழக்கத்தினை இவர் வலியுறுத்தினார். அவருடைய கோரிக்கையான இயற்கைக்கு பின்னோக்கிச் செல்லுதல் என்பது புதிதாகப் பின்னப்பட்ட சமூகக் கட்டமைப்பினை தகர்ட்ந்ஹு போகச் செய்வதைக் குறிப்பதற்கு ஒப்பானதல்ல, ஆனால் இயற்கை விதிக்கானதாகும். தத்துவம் மற்றும் பகுத்தறிவே மனித வாழ்வினை கவர்வதுடன் இயல்பாற்றலை வெளிப்படுத்துவதாக ரூசோ கூறுகிறார்.

தனிநபர் விருப்பம் என்பது பொது விருப்பத்திற்குக் கீழ்நிலைப்பட்டதாக உள்ளது ஏன்?

ஏனெனில் பொது விருப்பம் என்பது அனைவரின் விருப்பமாகவும், பொதுநலனை நோக்கியதாகவும் உள்ளது.

சமூக ஒப்பந்தம் (Social Contract)

  • இயற்கை நிலையின் ரம்மியமான பண்பு குறுகிய காலமே நீடித்தது. பொருளாதார உயர்வு மற்றும் சமூகத்தின் பரிணாம வளர்ச்சி ஆகியவற்றால் வரையறுக்கப்பட்ட மனிதனின் சிக்கலான வார்ப்புருக்கள் வெளிப்பட்டது பேரழிவிற்கு வகை செய்கின்றன.
  • குடிமை அரசினை அமைப்பதைத் தவிர மனிதர்களுக்கு வேறு வழியில்லை. அது சமூக ஒப்பந்த அம்சம் மூலமாக நிறைவேறியது. சமூக ஒப்பந்தத்தின் ஆறாவது அத்தியாயத்தில் ரூசோ கூறுவது யாதெனில் ‘மனிதர்கள் தொடக்க நிலையில் ஜீவித்திருந்த வரன்முறைகளைத் தாண்டியச் ஓர் நிலையில், தான் நீடித்திருக்கும் முறையினை மாற்றிக் கொள்ளாவிடில் மனித இனமே அழிந்து விடும் என அனுமானிக்கிறேன்’ என்பதாகும்.
  • இயற்கை நிலை என்பதன் வெற்றி தனிமனிதர்களின் சுயநலத்திற்கான தேடலின் ஒரு குறிப்பிட்ட நிலையில், பிறரின் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பாதுகாப்பின்மைக்கு முன் தமது சுயபாதுகாப்புத் திறன் அடிப்படையில் போதுமான வலிமையற்றவராக உணர்வது வரையிலாகும்.
  • சமூக ஒப்பந்தத்தின் பயன்பாடு என்பது ஒப்பந்தத்தில் நுழைவது வரை தனிமனிதர்களிடம் இருந்த பெறப்பட்ட பாதுகாப்பிற்கான வாய்ப்புச் சூழலை ஏற்படுத்துவதாகும்.
  • அடுத்ததாக பாதுகாப்பு தொடர்பான சக்தியைப் பற்றிய கேள்வியே தனிமனிதர்களிடம் உள்ள குழப்பமாகும். அவரைப் பொறுத்தவரையிலும் மனிதர்கள் எவ்வகைப் புதிய சக்தியையும் உருவாக்கும் திறனற்றவர்கள். ஏற்கனவே உள்ளவற்றை வழிகாட்டி திசைதிருப்ப மட்டுமே அவர்களால் இயலும். ஆகவே இப்பாதையில் ஒருங்கமைந்த அணுகுமுறையே அவரால் பரிந்துரைக்கப்படுகிறது.
  • எத்தகைய வடிவில் இருந்தாலும், ஒப்புதல் இல்லாத அதிகாரம் என்பது எளிதில் காணாமல் போகும் என கைவிடுகிறார். அவரது வாக்கின்படி உடன்படிக்கை மற்றும் ஒப்புதல் இல்லாத ஒரு மனிதனின் மீதான மற்றொரிஉ மனிதனின் அதிகாரம் எத்தகைய பகுத்தறிவு அடிப்படையும் இல்லாததாகும்.
  • குடிமை அரசு பற்றிய ரூசோவின் சமன்பாடு பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது. “ஒவ்வொருவரும் தான் மற்றும் தனது அதிகாரத்தினை பொது விருப்பம் என்ற மேலான வழிகாட்டுதலின் கீழ் ஒரே பெருநிறுவனத் திறனாக்கி பின் ஒவ்வொன்றும் பிரிக்க இயலாத முழுமையாக பெறப்படுகிறது”.
  • ஆகவே அரசு அரசு என்பது தனௌ உறுப்பினர்களிடமிருந்து மாறுபட்ட வாழ்வு மற்றும் சுய விருப்பம் கொண்ட ஒரு நீதிநெறியிலான அமைப்பாக உருவாகிறது.
  • அரசாங்கம் என்பது தனிமனிதர்களை இணைத்து ஒன்றாக்குவது மட்டுமல்ல உள்ளார்ந்த அடையாளம், ஆளுகை மற்றும் சுயஉயிர்ப்பு கொண்ட புதிய அமைப்பாகும் என ரூசோ கூறுகிறார்.
  • அனைத்திற்கும் மேலாக அரசு என்பது தனக்கென சுயவிருப்பம் கொண்டது எனவும் அதனைப் ‘பொது விருப்பம்’ (General Will) என்ற பதமிட்டு அழைக்கிறார். ஏதேனும் தனிப்பட்ட அல்ல குறிப்பிட்ட விருப்பம் இருப்பின் அது பொது விருப்பத்திற்குக் கீழானதாகும்.
  • இயற்கை நிலையில் உள்ளுணர்வினால் உந்தப்பட்ட வாழ்க்கை என்பதற்குப் பதிலாக நீதி மற்றும் நீதிநெறிமுறையிலான வாழ்வில் புதிய குடிமை அரசு அமைகிறது.
  • தனிமனிதர்கள் தங்களின் இயற்கை சுதந்திரம் மற்றும் அனைத்திற்குமான வரையறையற்ற உரிமையை இழந்து அதற்குப் பதிலாக குடிமை சுதந்திரம் மற்றும் சொத்துரிமையைப் பெறுகின்றனர்.
  • இயற்கை நிலையில் உள்ள சுதந்திரன் தவறானது என்றும் தங்களின் கட்டுப்படுத்தமுடியாத விருப்பங்களுக்கு அது அடிமையாக்குகிறதே தவிர வேறொன்றுமில்லை எனவும் கண்டனம் தெரிவிக்கின்றனர். இதற்கு மாறாக, குடிமைச் சமூகத்தினால் வழங்கப்படும் நீதிநெறியிலான சுதந்திரம் என்பது அவர்களைத் தாங்களே தங்களின் எஜமானர்களாக ஆக்குகிறது.
  • அவரின் வார்த்தைப்படி ‘சட்டத்திற்குக் கீழ்ப்படிதல்’ என்பதனைக் குறிப்பது நமது சுதந்திரமாகும். ஹாப்ஸ் மற்றும் லாக்கைப் போலன்றி, ரூசோ ’தனிமனிதன் இறையாண்மை மிக்க சமூகத்திடம் சமத்துவத்தை அடையும் பொருட்டு முழுமையாகச் சரணடைய வேண்டும்’ என கூறுகிறார்.
  • தனிமனிதன் தனது உரிமைகளை அரசாங்க அமைப்பிடம் ஒப்படைப்பதால் சுதந்திரம் மற்றும் அதிகாரத்திற்கு இடையே இணக்கமான சூழல் வளர்கிறது.
  • மாற்றித்தர இயலாத, பிரிக்க முடியாத, முழுமையான மற்றும் நிரந்தரமான தன்மையுடைய இறையாண்மை பற்று ரூசோ குறிப்பாக உள்ளார்.
  • மாற்றித்தர இயலாத, பிரிக்க முடியாத, முழுமையான மற்றும் நிரந்தரமான தன்மையுடைய இறையாண்மை பற்றி ரூசோ குறிப்பாக உள்ளார். அவரைப் பொறுத்தவரையிலும் இறையாண்மையே பொது விருப்பமாகும். சிலரிடம் நிர்வாக அதிகாரங்கள் கொடுக்கப்பட்டதாலேயே அவர்கள் இறையாண்மை மிக்கவர்களாகிவிட முடியாது, அவர்கள் வெறும் சார்நிலை முகவர்களாவர்.
  • இறையாண்மையை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அம்முகவர்களின் ஒருவரிடம் மாற்றித்தர சமூகம் முயன்றால் அது அரசியல் அமைப்பின் இறங்குமுகத்தில் முடியும். ரூசோவின் ஒப்பந்தத்தில் இறையாண்மை அதிகாரமிக்கவர் ஓர் அங்கமாவார். மேலும் அவர் ‘மக்கள் இறையாண்மை’ (Popular Sovereignty) என்ற கருத்தினை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்.
  • மனிதனின் சுதந்திரமாகப் பிறக்கிறான், ஆனால் எங்கெங்கு காணினும் அவன் விலங்கிடப்பட்டிருக்கிறான். ஒரு மனிதன் தன்னையே பிறரின் எஜமானராக எண்ணுகிறான், எனினும் பிறரைக் காட்டிலும் மிகவும் அடிமையாகவே தொடர்ந்து காணப்படுகின்றான். – ரூசோ (Rousseau)

பொது விருப்பம் (General Will)

பொது விருப்பம் மற்றும் சமூகம் ஆகியவை அரசிற்கு ஒரேமாதிரியானதாகும். மக்கள் தங்களின் அதிகாரம் மற்றும் ஆளுகை ஆகியவற்றினை பொது விருப்பத்தினுடைய விருப்பத்தினை விஞ்சியதாகும். மேலும் இறையாண்மை என்பது முறைமை முழுவதும் நிறைந்திருப்பதுடன் பொதுவிருப்பத்தைத் தவிர வேறு எதனுடனும் ஒத்துப்போவதில்லை. சமூகத்தில் பொது விருப்பம் உறைந்துள்ளதை வைத்துப் பார்க்கும்போது அது மக்களின் இறையாண்மை மற்றும் மேலாதிகாரத்தைச் சுமப்பதான ‘மக்கள் இறையாண்மை’ ஆகும். ரூசோ அதிகாரத்தின் மாற்றத்தக்க முறையினை வலியுறுத்துகிறார். பொது விருப்பம் என்பது அனைவரின் விருப்பத்திற்கும் சமமானதல்ல. ஏனென்றால் முன்னது பொது நலனையும் கொண்டதாகும். பொது விருப்பத்தினை இரண்டுமெய்க்கோள்கள் தீர்மானிக்கின்றன. முதலாவது பொது நலனை நாடுகிறது. இது விருப்பத்தின் நோக்கத்தினை குறிப்பதாகும். இரண்டாவதாக அது அனைவரிடமிருந்தும் வருவதாகவும் அனைவருக்கும் பொருந்துவதாகவும் உள்ளது. இது அதன் தோற்றத்தினை முன்மொழிகிறது. பொது விருப்பம் என்பது பிரதிநிதித்துவப் பண்பு இல்லாததாகும். இதற்குக் காரணம் பிரதிநிதித்துவ அமைப்புகள் சமூகத்தின் தேவைகளில் கவனம் செலுத்தாமல் தங்களின் தனிப்பட்ட விருப்பத்தினை மேம்படுத்தும் மனப்போக்கினைக் கொண்டிருப்பதாகும். நன்னெறி விழுமியங்கள் மற்றும் நல்மனப்பாங்கு ஆகியவை அனைவரின் விருப்பத்துடனும் ஒன்றிப்பொருந்துகிறது. பொது விருப்பம் என்பது மனசாட்சி மற்றும் உள்ளார்ந்த விருப்பத்தின் தவிர்க்க இயலாத வெளிப்பாடாகும். மேலும் அது சரியான பொது நலத்திலானதாகவும், பிரபஞ்சத்தின் பொது நன்மை அடிப்படையிலானது எனவும் அங்கீகரிக்கப்படுகிறது.

மதிப்பீடு

ரூசோவின் ஆளுமை மற்றும் அவரது படைப்புக்களைப் பற்றி பல்வகையான கருத்துக்கள் உள்ளன. ஜி,டி.எச்.கோல் என்னும் அறிஞர் அவரது ‘சமூக ஒப்பந்தம்’ பற்றி கருத்து கூறும் பொழுது ‘இன்றுவரை உள்ள அரசியல் தத்துவப் பாட நூல்களில் இது மிகச் சிறந்ததாகும்’ என்கிறார். மார்லே பிரபு அவர்கள் ரூசோவின் ‘தத்துவார்த்தமான சொற்கோவை’ பற்றிய தமது மாறுபட்ட கருத்தினை வெளிப்படுத்தும் போது “ரூசோ பிறக்காமலே இருந்திருப்பின் உலகம் மேலும் சிறந்திருக்காதோ?” என்று கூறுகிறார். அவர் கூற முயல்வது யாதெனில் ரூசோ வாழ்ந்திருக்காவிட்டால் பிரெஞ்சுப் புரட்சியின் மிக மோசமான அனுபவங்களைத் தவிர்த்திருக்கலாம். ஏனென்றால் அவரது கருத்துக்களே அந்த இயக்கத்தின் அடிப்படையாக இருந்ததாகும்.

அவரது தத்துவமானது சமதர்மத்தின் பின்னணியைக் கொண்டதாகும். முதலாளித்துவம் என்பது ரூசோவின் கைகளில் மிக மோசமாக நடத்தப்பட்டது. அவர் கல்வியை தேசியமயமாக்குதலை ஆதரித்ததுடன் தனிநபர் சொத்து என்னும் கருத்தினை எதிர்த்தார். மேலும் அவரது சொற்கோவையில் முற்றாட்சி மற்றும் அதிகாரப் போக்கினை இணைக்கமாக்கினார். பொது விருப்பம் என்னும் சாக்கில் அவர் கிட்டத்தட்ட பெரும்பான்மையின் கொடுங்கோன்மையை ஆதரிக்கிறார். இவை அனைத்திற்கும் மாறாக, தற்கால அரசியல் தத்துவ ஞானிகளுள் ரூசோ ஈடு செய்ய முடியாத இடத்திற்குத் தகுந்தவராவார்.

ஜான் ஸ்டீவர்ட் மில் (John Stuart Mill)

(பொ.ஆ. 1806 – பொ.ஆ. 1873)

வாழ்க்கை மற்றும் படைப்புகள்

மே 20, 1806-ல் ஜான் ஸ்டூவர்ட் மில் லண்டனின் வடக்கு புறநகர்ப்பகுதியில் உள்ள பென்டன் வில்லே (Bentonville) என்னுமிடத்தில் ஹரியத் பரோ (Harriet Barrow) மற்றும் ஜேம்ஸ் மில் (James Mill) ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவரது தந்தையார் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் பயிப்ற ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவராவார். ஒரு சமூக மற்றும் அரசியல் சிந்தனையாளராக ஜான் ஸ்டூவர்ட் மில்லின் வளர்ச்சியினை மூன்று குறிப்பிட்ட காலகட்டங்களாகப் பிரிக்கலாம். முதலாவது காலகட்டம், இவரின் குழந்தைப் பருவ பயிற்சி காலமாகும். இக்காலகட்டத்தில் இவர் தனது தந்தை ஜேம்ஸ் மில் மற்றும் ஜெரேமி பெந்தாம் ஆயோரிடம் குழந்தைப்பருவத்தில் பயிற்சி பெற்றார். இரண்டாவது காலகட்டமாக 1830 களின் இறுதியில் அவர்தம் முன்னிருபது வயதினில் சந்தித்த மனப்போராட்டங்களில் இருந்து மீளுதலும், தீவிர தத்துவப்போக்கு கலைந்து தனித்துவம் பெறுதல் ஆகியவையுமாகும். இக்காலகட்டத்தில் தான் அவர் பலதரப்பட்ட அறிவுப்பூர்வமான மற்றும் உணர்வுப்பூர்வமான தாக்கங்களின் அடிப்படையில் தன் சிந்தனையை மறுவடிவமைத்துக் கொண்டார். அவரது வாழ்வின் இறுதிக் காலகட்டமான அடுத்த முப்பது ஆண்டுப் பணியில் அவரது முக்கியப் படைப்புகளான தர்க்கவாத முறைமை (A System of Logic), அரசியல் பொருளாதாரத் தத்துவத்தின் கொள்கைகள் (Principles of Political Economy), சுதந்திரம் (On Liberty), பிரதிநிதித்துவ அரசாங்கம் மீதான பரிசீலனைகள் (Consideration of Representative Government) போன்றவை பதிப்பிக்கப்பட்டன.

சுதந்திரம் (On Liberty)

1859-ல் வெளியிடப்பட்ட ‘சுதந்திரம்’ (On Liberty) என்னும் நூல் மில்லிற்கு நீடித்த புகழைத் தேடித்தந்தது. அவரது பிற படைப்புக்களைக் காட்டிலும் முன்னறிவித்ததைப் போன்று இதுவே மிக நீண்டகாலம் நீடித்திருக்க விதிக்கப்பட்டிருக்கிறது. பிரபுக்களாட்சியிலிருந்து மக்களாட்சிக்கு அமைப்புகள் மாற்றம் பெற்ற போது அதனுடன் நன்மைகள் மற்றும் தீமைகளும் உடன் வந்தன. அதற்கு முந்தைய சகாப்தங்களின் ஆட்சிகளை விட சமூகப் பெருந்திரளான மக்களின் ஆட்சியாக மிகவும் வலிமையுடன், சீராகவும் எங்கும் நிறைந்திருக்கக்கூடியதாகவும் மக்களாட்சி விளங்குகிறது. பெரும்பான்மையின் ஆதிக்கம் என்பது முடியாட்சியை விட இடர்நிறைந்ததாகவும், சட்டமியற்றுவதன் மூலம் தனிமனிதர்களின் சுதந்திரத்திற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கும் திறனுள்ளதாகவும் உள்ளது. மக்களாட்சியிலான சமூகத்தில் சமுதாய அழுத்தம் மற்றும் எதிர்பார்ப்பு போன்ற முறைசாராத வழிமுறைகள் அனைத்தையும் கட்டுப்படுத்துவதாக உள்ளது. கருத்து, பண்பு மற்றும் நடவடிக்கையை அனுசரிக்கக்கூடியவற்றினை மறைக்கும் திறன் அத்தகைய அதிகாரங்களுக்கு ஊண்டு என மில் வெளிப்படுத்துகிறார். இத்தகைய சூழலில் தான் சுதந்திரம் என்ற நூல் எழுதப்பட்டது. இப்படைப்பின் நோக்கம் அதன் முதல் அலகில் எழுதப்பட்டதுடன் ஒரு எளிமையான கொள்கையை உறுதியாகக் கூறுகிறது. ‘மனிதகுலத்திற்குத் தனியாவிஓ அல்லது ஒட்டுமொத்தமாகவோ தேவைப்படும் ஒரே நோக்கம் என்னவெனில் எத்தகைய எண்ணிக்கையிலான சுதந்திரமான நடவடிக்கை என்றாலும் சுய பாதுகாப்பிற்காக தலையிடக்கூடியதாகும்.’ (சுதந்திரம் XVIII 223) இவ்வாறு மில்லின் இந்த நடைமுறைத் தத்துவம் அடிப்படையில் பயன்பாட்டுவாதமாகும்.

மில் தனது சுதந்திரம் என்னும் நூலில் கருத்து, விவாதம், பண்பு மற்றும் செயல்பாட்சு சுதந்திரத்திற்கான பல்வேறு மூல உபாயங்களை முன்வைத்து வாதிடுகிறார். கருத்து மற்றும் விவாதத்திற்கான சுதந்திரம் பற்றி ‘சுதந்திரம்’ என்னும் நூலின் இரண்டாவது அலகில் விவாதிக்கப்பட்டுள்ளது. அதில் உணர்ச்சி வெளிப்பாட்டினைக் கட்டுப்படுத்துவதற்கு எதிரான வாதங்களை விளக்கியுள்ளார். சுதந்திரத்தின் மூன்றாவது அலகில் பண்பியல் சுதந்திரம் (தனி மனிதத்துவம்) என்பதற்கு சாதகமான வாதங்களை விளக்கியுள்ளார். சுதந்திரத்தின் மூன்றாவது அலகில் பண்பியல் சுதந்திரம் (தனி மனித்துவம்) என்பதற்கு சாதகமான வாதங்களை முன்வைக்கிறார். மில் தனிமனிதர்களின் சுயபண்பியல்புகளின் மேம்பாட்டினாலான தனிமனித புறவெளிச் சுதந்திரத்திற்காக வாதிடுகிறார். அது சமுதாயத்திற்கு எஅன்மை பயக்கும் என்று கூறுகிறார். ‘மனிதனின் தன்மை என்பது எந்திரத்தைப் போல ஒரு மாதிரியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டு, குறித்துக் கொடுத்த பணியினைத் துல்லியமாக செய்யுமாறு உள்ளதல்ல. ஆனால் ஒரு மரமாக , அனைத்து பகுதிகளிலும் தானே வளர்ந்து மேம்படுவதுடன் உள்ளார்ந்த சக்திகளின் மனப்போக்கின் படி அது உயிருள்ளதாகிறது’. (சுதந்திரம் XVIII 263). மில்லின் கருத்திப்படி பெருந்திரள் சமுதாயம் என்பது சுய அடக்குமுறைத் தன்மையுடையதாகவும் மனிதனின் ஆற்றல் மற்றும் திறனை நலிவடையச் செய்வதாகவும் உள்ளது. விக்டோரியா சமுதாயம் (Victorian Society) எனொஅது மரியாதையான நடத்தைத் தொகுதியால் கிறிஸ்துவ சுயமறுப்பின் அடிப்படையில் கிறிஸ்துவ சுயமறுப்பின் அடிப்படையில் ஆளப்படுகிறது எனக் கூறுகிறார். இதற்கு மாறாக மில் சுயமேம்பாட்டின் கிரேக்க மாதிரியினை ஊக்கப்படுத்துகிறார். தனிமனிதர்கள் தங்களின் வாழ்வாதாரங்களைத் தாங்களே மேம்படுத்திக்கொள்ளும் சூழலை உருவாக்குவது சமுதாயத்திற்கு முக்கியமானதாகும். இது பலவகை வேற்றுமையை பண்பு மற்றும் பண்பாட்டில் இயலச் செய்வதுடன் உற்பத்தி இழுவிடை எந்திரமாக மாறி தேசத்தினை முன்னெடுத்துச் செல்கிறது. ‘சுதந்திரம்’ எனும் நூல் முழுவதுமே மில் சட்டமன்றம் அல்லது அரசின் வலிந்த மாற்றத்திலிருந்தும், ஏமாற்றக்கூடிய சமூக வலிந்த மாற்றத்தின் வடிவகளிலிருந்தும் தனிமனித சுதந்திரத்தினை பாதுகாக்க நாடுகிறார்.

பிரதிநிதித்துவ அரசாங்கத்தின் மீதான பரிசீலனைகள் (Considerations on Representatived Government)

1861 ஆம் ஆண்டு முல்லின் அரசியல் பற்றிய கருத்துக்களைக் கோண்ட பிரதிநிதித்துவ அரசாங்கத்தின் மீதான பரிசீலனைகள் பதிப்பிக்கப்பட்டது. மில் ஒரு பற்றுறுதியுள்ள மக்களாட்சி வாதியாவார். எனினும் அவரது படைப்பு தன்னாட்சி அரசாங்கம் பற்றிய ஏமாற்றங்கள், சந்தேகங்கள் மற்றும் சிக்கல்களை வெளிப்படுத்துகிறது. அவரது கருத்து முரண்பாடான தன்மை கொண்டதாக உள்ளது. அதாவது பெரும்பான்மையினரே ஆட்சி செய்தாலும் சிறுபான்மையினர் ஆட்சியே அநேகமாக சரியாக உள்ளது எனக் கருதுகிறார். பெரும்பான்மையிடம் அகிகாரம் இருந்தாலும் சிறுபான்மையினரிடமே ஞானம் உள்ளது என வாதிடுகிறார். இப்படைப்பில் மில் நல்ல அரசாங்கத்தை வரன்முறைப்படுத்துவதற்காக பெரும்பான்மையின் கொடுங்கோன்மையினால் ஏர்படும் அபாயங்களை வெளிப்படுத்துகீறார். ஒட்டுமொத்த சமூகத்திடம் இறையாண்மை உள்ள பிரதிநிதித்துவ முறையே லட்சிய அடிப்படையில் சிறந்த அரசாங்க முறையாகும் என நிறைவு செய்கிறார். ஒவ்வொரு குடிமகனுக்கும் எப்பொழுதேனும் அரசாங்கத்தின் பொதுவான மக்கள் பணிகளில் உண்மையாகப் பங்கேற்க அழைப்பு வரும் என்கிறார்.

மதிப்பீடு

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பரந்து விரிந்த அறிவியல் சிந்தனை வரலாற்றில் ஜான் ஸ்டூவர்ட் மில் முக்கிய இடத்தினைப் பெறுகிறார். அவரது படைப்புக்கள் அரசினைப் புரிந்துகொள்ளவும், முறையாகக் கற்றறியவும், மனிதனின் தன்மையினுடைய முக்கியத்துவத்தினையும் வலியுறுத்துகிறது. அவர் வாக்குரிமை பற்றிய சுயதத்துவத்தினைத் தானே மேம்படுத்தினார். மில் கூறுகையில் ‘சுவாசிக்கும் காற்றைப் போல மனிதனுக்கு அரசியல் விலங்காக வாக்களித்தல் அவசியமாகும்’ என்கிறார். மில்லைப் போன்று வாக்களித்தலைப் பற்றிய கருத்தாக்கத்தினை வேறு எந்த அரசியல் சிந்தனையாளரும் வலியுறுத்தியதில்லை. மில்லின் மீதான பயன்பாட்டுவாத்தின் தாக்கமானது அவரது பொருளாதாரக் கொள்கை மற்றும் பிரதிநிதித்துவ அரசாங்கம் பற்றிய கருத்துகளை உருவாக்கியதில் முக்கியமானதாகும். பிரதிநிதித்துவ அரசாங்கத்தில் தனிமனிதன் தனது திறனை மேம்படுத்துவதற்கான சுதந்திரத்தில் தலையீடு இருக்கவே கூடாது என்றார். மில்லின் இந்த ஒவ்வொரு தலைப்பும் ஆர்வத்தைத் தூண்டக் கூடியதாக இருப்பதனை இத்துறையின் எந்தவொரு மாணவனும் புறந்தள்ளிவிடமுடியாது.

  • பயன்பாட்டுவாதம் என்பது அதிக எண்ணிக்கையிலானவர்களின் அதிகப்படியான மகிழ்ச்சியாகும்.
  • ஜேம்ஸ் மில் மற்றும் ஜெரேமி பெந்தாம் ஆகிய பயன்பாட்டு சிந்தனையாளர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஜே.எஸ். மில் கொண்டு வரப்பட்டாலும் பயன்பாட்டு வாதத்தினைப் பற்றிய மாறுபட்ட சிந்தனையினை அவர் தந்தார்.

காரல் மார்க்ஸ் (Karl Marx)

(பொ.ஆ. 1818 – பொ.ஆ. 1883)

அறிமுகம்

நாம் உலகினைப் பார்க்கக்கூடிய பார்வையினை மாற்றிய ஒரு சிலரில் காரல்மார்க்சும் ஒருவராவார். மார்க்சைப் பொறுத்தவரையிலும் கோட்பாடு என்பது நம்மைச் சுற்றியுள்ள உலகைப் புரிந்து கொள்வதற்கு மட்டுமல்ல ஒருபடி முன்னே சென்று உலகை மாற்றுவதற்கும் ஆதரவளிக்கவேண்டும். இவரது படைப்புக்களான –பொதுவுடைமை அறிக்கை, வரலாற்றுப் பொருள் முதல்வாதக் கருத்தாக்கம் மற்றும் மூலதனம் ஆகியவை உழைக்கும் வர்க்கத்தின் சுயவிடுதலை என்னும் ஒரே இலக்கை நோக்கிய பல்வேறு பொருளாதார கருத்துகளின் உச்ச நிலையாகும். ஹெகல், புனித சைமன், ஜே.சி.எல் டி சிஸ்மாண்டொ, டேவிட் ரிக்கார்டோ, சார்லஸ் ஃபோரியர் மற்றும் லூயிஸ் பிளான்க் போன்ற முந்தைய சிந்தனையாளர்களிடமிருந்து பல்வேறு கூறுகளை மார்க்ஸ் பெறுகிறார் என்பதனை அறிவது முக்கியமாகும்.

ஐரோப்பாவில் சமதர்மத்தின் வளர்ச்சிக்கு 18 மற்றும் 18ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதி சாட்சியானது எனலாம். இக்காலகட்டம் ‘இரட்டைப்புரட்சி சகாப்தம்’ என அறியப்படுகிறது. பிரான்ஸ் நாட்டில் அரசியல் அடிப்படையில் 1789ஆம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சி ஏற்பட்டு முழுமையான முடியாட்சி தூக்கி எறியப்பட்டதுடன் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் உள்ள குடியரசு பிரகடனப்படுத்தப்பட்டு ஒவ்வொரு பிரெஞ்சு மனிதனின் உரிமையும் பறைசாட்டப்பட்டது. இக்காலத்தின் இரண்டாவது முக்கியப் புரட்சியாக ஐரோப்பாவில் நீண்ட நெடிய தாக்கத்தினை ஏற்படுத்தியது ‘தொழிற் புரட்சியாகும்’ (Industrial Revolution). இவ்விரண்டு நிகழ்வுகளும் மார்க்சின் படைப்புகளின் மீது பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தின.

  • உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் நீங்கள் இழப்பதற்கு உங்கள் விலங்கினைத் தவிர வேறோன்றுமில்லை. – காரல் மார்க்ஸ் (Karl Marx)

மார்க்சின் படைப்புகள்

பொதுவுடைமை அறிக்கை (Communist Manifesto)

பொதுவுடைமை அறிக்கை (1848) என்பது கார்ல் மார்க்ஸ் மற்றும் ஃபிரடெரிக் ஏங்கல்சின் கூட்டுப் படைப்பாகும். இது 1850ஆம் ஆண்டிற்கு முன்னர் ஐரோப்பாவில் இருந்த சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பெருங்குழப்பங்களின் விளைவான படைப்பாகும்.

இக்கட்டுரை புரட்சியின் வாயிலான சமூக மாற்றத்தினை விளக்குகிறது. வர்க்கப் போராட்டத்தின் தன்மை என்பது உற்பத்தியின் தன்மைக்குத் தக்கவாறு மாறுபடும் என பொதுவுடைமை அறிக்கை வாதிடுகிறது. ஆகவே விவசாய உற்பத்தியை முக்கிய வடிவமாகக் கொண்ட நிலப்பிரத்துவ சமுதாய முறைகளில் வர்க்கப் போராட்டம் என்பது உடமையாளர்களுக்கும் (தொழிற்சாலை அல்லது தொழில் உரிமையாளர்கள்), பாட்டாளிகளுக்கும் (தொழிற்சாலை பணியாளர்கள்) இடையே நடப்பதாகும். உண்மையில் முழுமையான சமுதாயமானது மேன்மேலும் பிளவுபட்டு இரும்பெரும் பகைமை முகாம்களாகிவிட்டது. அவை ஒன்றையொன்று நேரடியாக எதிர்த்து நிற்கக்கூடிய இருபெரும் வர்க்கங்களாக, உடமையாளர்கள் மற்றும் பாட்டாளிகள் என்றானது. மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் ஆகியோர் இம்மெய்க்கோளின் சாட்சியாக கூறுவது யாதெனில் தற்பொழுது வரையிலான அனைத்து சமுதாயங்களின் வரலாறுமே வர்க்கப் போராட்ட வரலாறு என்பதாகும்.

பொதுவுடைமை அறிக்கையை நிறைவு செய்யும் வகையில் இரு கருத்துக்கள் அருகருகே வைக்கப்படுகின்ரன. ஒன்று பாட்டாளிகளை ஆளும் வர்க்கம் என்ற நிலைக்கு உயர்த்துவது ஆகும். மற்றொன்று மக்களாட்சி யுத்தத்தில் வெற்றி பெறுவதாகும். மார்க்ஸ் இப்படைப்பில் தனிநபர் சொத்து என்பதற்குப் பதிலாக அனைத்து சொத்துக்களையும் பொதுவான கட்டுப்பாட்டில் வைப்பதை பொதுவுடைமைவாதிகள் இலக்காக கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மூலதனம் (Das Capital)

மார்க்சின் தலைசிறந்த படைப்பான மூலனம் 1867-ல் பெர்லினில் வெளியிடப்பட்டபோது அது ‘உழைக்கும் வர்க்கத்தின் வேதாகமம்’ (Bible of the Working Class) என்று விவரிக்கப்பட்டது. மார்க்சின் வாழ்நாளில் அதன் முதல் தொகுதி மட்டுமே நிறைவுபெற்று வெளியிடப்பட்டது. மார்க்ஸ் நிறைவு செய்யாத இரண்டாவது மற்றும் மூன்றாவது தொகுதிகள் ஏங்கல்ஸ் அவர்களால் தொகுத்து அமைக்கப்பட்டு 1885 மற்றும் 1894ல் வெளியிடப்பட்டது. முதல் தொகுதியானது மூலதனத்தின் உற்பத்தி நடைமுறையினைப் பற்றியதாகும். இரண்டாவது தொகுதி மூலதனத்தின் சுழற்சி நடைமுறையினைப் பற்றியதாகும். மூன்றாவது தொகுதி முதலாளித்துவ உற்பத்தியின் ஒட்டுமொத்த நடைமுறையினைப் பற்றியதாகும்.

  • தற்பொழுது வரையிலான அனைத்து சமுதாயங்களின் வரலாறுமே வர்க்கப் போராட்டத்தின் வரலாறாகும். – காரல் மார்க்ஸ் (Karl Marx)

இயங்கியல் பொருள் முதல்வாதம் (Dialectical Materialism)

இயங்கியல் பொருள் முதல்வாதம் என்பது காரல் மார்க்ஸ் மற்றும் ஃபிரடெரிக் ஏங்கல்ஸ் ஆகியோரின் போதனைகளிலிருந்து உண்மையில் பெறப்பட்ட தத்துவார்த்த அணுகுமுறையாகும். கோட்பாடு அளவில் தர்க்கவாதப் பொருள்முதல்வாதம் என்பது அறிவியல் பிரச்சனைகளைப் புலனாய்வு செய்ய பொதுவான உலகளாவிய பார்வை மற்றும் அதற்கான முறையினைத் தந்துள்ளது. மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் ஆகியோர் சமுதாயத்தினுடைய ஒவ்வொரு அடிப்படைப் பிரிவினையையும் பொருளாகப் பார்ப்பதுடன் சமூக மாற்றம் என்பது எதிர்த்தரப்பினரின் போராட்டத்தின் மூலமே நிகழும் என்றனர். கொள்கையளவில் பொருள்முதல்வாதம் என்பது சமுதாய உலகைப்பற்றியதாகும். பொருள் சார்ந்த உலகம் எப்பொழுதும் இயக்க நிலையிலும், முரண்பாடுகள் மற்றும் மாற்றங்களுடனும் இருக்கும். சமுதாயத்தின் நிலையான இயக்கத்தினால் ஏற்படும் உராய்வுகள் சமூக முரண்பாடுகளுக்கு வழி செய்வதன் விளைவாக சமூக மாற்றம் ஏற்படுகிறது. தர்க்கவாதப் பொருள்முதல்வாதம் என்பது சமுதாய உலகைப் பற்றியதாகும். தர்க்கவாதப் பொருள்முதல்வாதம் என்பது சமுதாய உபரி நடைமுறைகள் தொடர்பானதாகும்.

உபரி மதிப்புக் கோட்பாடு (Theory of Surplus Value)

உபரி மதிப்புக் கோட்பாடு என்பது மூலதனம் என்ற நூலில் உள்ளதாகும். மனிதனின் உழைப்பு என்பது பொருளாதார மதிப்பின் ஆதாரமாகும் என காரல் மார்க்ஸ் கருதுகிறார். ஆகவே ‘உபரி மதிப்பு’ என்னும் பதம் உழைப்பு மற்றும் உழைப்பாளர் சக்தியின் வேறுபாட்டினைக் குறிப்பதாகும். தொழிலாளியின் அதிகப்படியான உழைப்பினால் கிடைக்கும் ‘உபரி மதிப்பு’ முதலாளிகளைச் சென்று சேர்கிறது. எத்தனை நீண்ட வேலை நாள் என்பது முக்கியமல்ல. ஆனால் உபரி மதிப்பு என்பது உருவாகிறது. ஒருவேளை தொழிற்சாலையில் ஒரு மணிநேரம் வேலை நடந்தாலும் முதலாளிகள் அவர்களது பங்கான உபரி உழைப்பினை வலிந்து வெளிக்கொணர்கின்றனர். இதுவே உபரி மதிப்பாகும். முதலாளிகள் தங்களின் தொழிலாளர்களுடைய உழைப்பின் மதிப்பினை விடக் குறைவாகவே ஊதியமளிக்கின்றனர். அது பெரும்பாலான தருணங்களில் தொழிலாளர்களை ஜீவன நிலையில் வைத்திருக்க மட்டுமே போதுமானதாக இருக்கிறது.

மார்க்சின் படைப்புகள்

  • ஹெகலின் உரிமைகள் பற்றிய தத்துவம் மீதான கூர்மதிப்பீடு.
  • புனிதக் குடும்பம், பியுபர்சேச் பற்றிய ஆய்வேடு.
  • ஜெர்மானிய லட்சியவாதம்.
  • பொய்துவுடைமை அறிக்கை
  • கோதா திட்டத்தின் கூர்மதிப்பீடு.
  • மூலதனம்.

வர்க்கப் போராட்டம் மற்றும் புரட்சி (Class Struggle and Revolutuion)

வர்க்க உணர்வு நிலை மற்றும் போராட்டம் ஆகியவை உற்பத்தியின் சமூக உறவுகளுடன் தொடர்புடையது ஆகும். மார்க்ஸ் வர்க்கத்தை ஓர் லட்சியவாதக் காரணியாகப் பார்க்காமல் குறிப்பிட்ட சமூக நிலையிலுள்ள மனிதனாகப் பார்க்கிறார். ‘வர்க்கம்’ என்னும் பதம் சொத்து அடிப்படையிலான உரிமையினைக் குறிப்பதாகும். உதாரணமாக உடமையாளர்கள் (உற்பத்தி வழிமுறைகளைச் சொந்தமாக்கியவர் மற்றும் நில உடமையாளர்கள்) மற்றும் பாட்டாளிகள் ஊதியத்திற்காக தனது உழைப்பினை விற்பவர்) ஆகியோரைக் குறிப்பிடலாம்.

மார்க்சின் படைப்பான ‘பிரான்சின் வர்க்கப் போராட்டம்’ என்னும் நூல் 1848 முதல் 1850 வரையிலான காலகட்டத்தில் வர்க்கப்போராட்டத்தின் வாதங்கள் மற்றும் புரட்சியின் தேவையினை மதிப்பிடுகிறது. 1848ம் ஆண்டு நடந்த பிரெஞ்சுப் புரட்சியின் அடிப்படையில் தமது வர்க்கப் பிளவு கருத்தை மார்க்ஸ் கொண்டிருந்தார். இப்புரட்சியின் போது உடமையாளர்கள் மற்றும் பாட்டாளிகள் ஆகியோர் இணைந்து பிரபுக்களாட்சிக்கு எதிராகப் போராடி குடியரசினைப் பிரகடனப்படுத்துவதில் வெற்றியடைந்தனர். பிப்ரவரி புரட்சியின் மூலம் பாட்டாளிகளின் ஆதரவுடன் ஆட்சிக்குவந்த பின்னர் உடமையாளர் வர்க்கமானது உழைப்பாளர் வர்க்கத்தினை தமது அனைத்து தளைகளிலிருந்தும் விடுவிப்பதற்குப் பதிலாக அதிகமாக அவர்களை அந்நியப்படுத்தியது எனலாம்.

உடமையாளர்கள் அதிகாரத்திற்கு வந்த பின்னர் அரசு மற்றும் படைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க ஆரம்பித்ததுடன் பாட்டாளிகளை நசுக்க ஆரம்பித்தனர். இது முன்னதை உண்மையில் உள்நாட்டுப் போராக்கியது. வர்க்கப் போரட்டம் என்பது புரட்சிக்கு வழிகோலுவதாகவும், பாட்டாளிகளின் சர்வாதிகாரம் மற்றும் தனியார் உற்பத்தி ஒழிப்பு சமதர்மத்தில் முடிவதாகவும் வலியுறுத்துகிறார்.

பாட்டாளிகளின் சர்வாதிகாரம் (Dictatorship of the Probletariat)

‘பாட்டாளிகளின் சர்வாதிகாரம்’ என்பது உழைக்கும் வர்க்கமானது அதிகாரத்தில் அமர்வதைக் குறிக்க காரர்ல் மார்க்ஸ் பயன்படுத்திய சொற்றொடராகும். மார்க்சைப் பொறுத்தவரை அது உடமையாளர்களின் அரசியல் ஆட்சியைத் தூக்கி எறிவதற்கும், வர்க்கமற்ற சமுதாயம் உருவாவதற்கும் இடைப்பட்ட காலமாகும். அரசியல் சிந்தனைக்கான மார்க்சின் அனைத்து பங்களிப்புகளைக் காட்டிலும் பாட்டாளிகளின் சர்வாதிகாரம் என்பது உண்மையான ஆளுகைக்கான பெரிதும் ஆழ்ந்த பொதி பொருளைக் கொண்டதாக விளங்குகிறது.

முதலாவது குழுவான உழைப்பாளர் வர்க்கம் (பாட்டாளிகள்), பாரம்பரியமான ஆளும் வர்க்கத்தின் (உடமையாளர்கள்) மீது தங்களின் அதிகாரத்தினை அழுத்தந்திருந்தமாக்கிய பின்னர் அனைத்து முதலாளித்துவ உற்பத்தி முறைகளும் ஒழிக்கப்பட்டு சமதர்ம உற்பத்தி முறைகள் முதன்மையாகின. சமதர்மத்திலான உற்பத்தி முறைகளை நிறுவியதன் விளைவாக சமுதாயத்தின் வர்க்கக் குழுக்கள் மறைந்து பாட்டாளிகளின் சர்வாதிகாரம் வந்தது.

அரசு உதிர்த்தல் (Withering Away of the State)

சமுதாயம் பல வர்க்கங்களாகப் பிளவுபட்டதன் விளைவாக ஒடுக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட குழுக்கள் உருவாகி அரசு சுரண்டலுக்கான கருவியாகிறது. இந்த வர்க்கப் பிளவு மிகவும் தீவிரமடைந்து பாட்டாளிகளின் சர்வாதிகாரத்திற்கு வழிகாட்டுகிறது. அரசாங்கத்தைக் கைப்பற்றுவதன் மூலமாக பாட்டாளிகளின் வெற்றிக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. பாட்டாளிகள் அரசின் கட்டுப்பாட்டினை எடுத்துக்கொள்வதுடன் உற்பத்தியின் வழி முறைகளாக மாற்றுகின்றனர். அரசு மற்றும் உற்பத்தியைக் கட்டுபாட்டில் கொண்டு வந்த பின்னர் பாட்டாளிகள் அனைத்து வர்க்க பேதங்கள் மற்றும் வர்க்கப் பகை முரண்பாடுகளையும் அழிக்கின்றனர். இதன் விளைவாக இறுதியில் அரசு உதிர்தல் நிகழ்கிறது.

மார்க்ஸ் பிரகடனப்படுத்திய பல்வேறு நிலைகள்:

  • தொடக்க நிலை பொதுவுடைமை
  • ஏகாதிபத்யம்
  • நிலபிரபுத்துவம்,,
  • முதலாளித்துவம்,
  • சமதர்மம்,
  • பொதுவுடைமை

மதிப்பீடு

1852ஆம் ஆண்டு மார்க்ஸ் தமது பங்களிப்புக்களை மூன்று பிரிவுகளாகத் தொகுத்துள்ளார்:

அ) வர்க்கங்கள் (பாட்டாளிகள் மற்றும் உடைமையாளர்கள்) சமுதாயத்தின் நிரந்தர இயல்பு அல்ல.

ஆ) வர்க்கப் போராட்டமானது பாட்டாளிகளின் சர்வாதிகாரம் என்பதற்கு வழிசெய்து இறுதியாக உற்பத்தியை உழைப்பாளர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது.

இ) ‘பாட்டாளிகளின் சர்வாதிகாரம்’ என்பது வர்க்கமற்ற சமுதாயத்திற்கு வழிசெய்வதுடன் சமூக வேற்றுமைகள் மறைவதால் அரசு உதிர்ந்து போகிறது.

மார்க்ஸ் எதிர்நோக்கியவாறு இவ்வுலகம் அரசற்ற நிலைக்கு மாறிவிட்டதா? உண்மை வேறு மாதிரியாக அல்லவா இருக்கிறது. மனிதகுலத்தின் மீதான மார்க்சியத்தின் தாக்கத்தினை மனிதனின் மீதான மதத்தின் தாக்கத்துடன் மட்டுமே ஒப்பிட இயலும். ஏறத்தாழ உலகின் பாதி மக்கள் தொகை மார்க்சிய வாதத்தின் தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கிறது. அதே சமயத்தில், மார்க்ஸ் தான் எழுதியவை அனைத்தையும் பின்பற்றாவிட்டாலும் , அவரது படைப்புகள் பலரின் மீது தாக்கத்தினை ஏற்படுத்தின. மார்க்சியக் கோட்பாடுகளின் தாக்கத்திற்கு உள்ளான லெனின், ஸ்டாலிம், மாவோ போன்ற தலைவர்கள் ரஷ்ய, சீனா, கியூபா, வியட்நாம் போன்ற நாடுகளில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு முயன்று சாதித்தனர். தற்காலத்தில் பெரும்பாலான முன்னாள் பொதுவுடைமை நாடுகள் மக்களாட்சி தன்மையுடையவர்களாக மாறி உள்ளனர். இருப்பினும் வர்க்க மாறுபாடுகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டிருப்பதை இச்சமூகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆகவே , சமுதாயத்தில் முதலாளித்துவவாதிகள் மற்றும் சுரண்டல் ஆகியவை இருக்கின்ற வரையிலும் மார்க்சின் கருத்துகளை புறக்கணிக்கவோ, மறக்கவோ இயலாது எனலாம்.

  • மார்க்சியவாதத்தின் மீதான தற்கால விவாதங்களின் முக்கிய அடிப்படைச் சால்புகள் தற்காலச் சமுதாயத்தில் உருவாகும் சில முக்கிய வடிவங்களிலான பிளவுகளை அடையாளம் காட்டுகின்றன. இவ்வகை விவாதங்கள் புதிய மார்க்சியவாதத்தின் எழுச்சிக்கு வகை செய்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!