அரசியல் அறிவியலின் அறிமுகம் Online Test 11th Political Science Lesson 1 Questions in Tamil
அரசியல் அறிவியலின் அறிமுகம் Online Test 11th Political Science Lesson 1 Questions in Tamil
Question 1 |
'பொலிஸ் 'என்னும் நகர அரசு என பொருள்படும் சொல் கீழ்காணும் எந்த மொழியினுடையது ஆகும்?
கிரேக்கம் | |
இலத்தீன் | |
பிரெஞ்ச் | |
ஆங்கிலம் |
Question 2 |
அரசியல் பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
- அரசியலை கற்பது என்பதை பொ.ஆ.மு ஐந்தாம் நூற்றாண்டில் கிரேக்கத்தில் வாழ்ந்த பிளாட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் ஆகிய அரசியல் தத்துவ ஞானிகளின் அளப்பரிய பங்களிப்பினால் தொடங்கப்பட்டதாகும்.
- அரசியல் என்பது அடிப்படையில் நன்னெறியை பற்றிய கல்வி ஆகும்.
- இருபதாம் நூற்றாண்டுக்கு முன்பு வரையிலும் அரசியலை கற்றறிவது என்பது வரலாறு மற்றும் தத்துவம் போன்ற பிற துறைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு இருந்தது.
I, II மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 3 |
அரசியல் அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
பிளாட்டோ | |
அரிஸ்டாட்டில் | |
மாக்கியவல்லி | |
புனித அகஸ்டின் |
Question 4 |
கடவுளின் நகரம் என்னும் நூல் கீழ்கண்ட யாரால் படைக்கப்பட்டதாகும்?
அரிஸ்டாட்டில் | |
பிளாட்டோ | |
புனித அகஸ்டின் | |
மாக்கியவல்லி |
Question 5 |
கீழ்கண்டவர்களில் இத்தாலியைச் சேர்ந்த தத்துவஞானி யார்?
அரிஸ்டாட்டில் | |
பிளாட்டோ | |
புனித அகஸ்டின் | |
மாக்கியவல்லி |
Question 6 |
"அரசியல் அறிவியல் என்பது, யார், எப்போது, எதனை, எப்படி அடைகிறார்கள் என்பதாகும்" என்னும் கூற்று கீழ்கண்டவர்களில் யாருடையதாகும்?
அரிஸ்டாட்டில் | |
மாக்கியவல்லி | |
ஹெரால்ட் லாஸ்வெல் | |
புனித அகஸ்டின் |
Question 7 |
அரசியல் என்பது அரசியல் அதிகாரம் மற்றும் வகுப்பு மோதல்கள் பற்றியதாகும் என்னும் கூற்று யாருடையதாகும்?
மாக்கியவல்லி | |
ஹெரால்டு லாஸ்வெல் | |
காரல் மார்க்ஸ் | |
டேவிட் ஈஸ்டன் |
Question 8 |
மனிதன் என்பவன் இயற்கையாகவே ஒரு அரசியல் விலங்கு என்னும் கூற்று கீழ்க்கண்டவர்களில் யாருடையதாகும்?
மாக்கியவல்லி | |
ஹெரால்டு லாஸ்வெல் | |
அரிஸ்டாட்டில் | |
பிளாட்டோ |
Question 9 |
- "படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
- உடையான் அரசருள் ஏறு"
- என்னும் குறள் மூலம் ஒரு அரசன் சிறந்து விளங்குவதற்கு தேவையான அடிப்படை கூறுகள் அமைந்திருக்க வேண்டும் என திருவள்ளுவர் கூறுகிறார். அவற்றுள் சரியானது எது?
- சிறந்த படை மற்றும் அறிவார்ந்த அமைச்சர்கள்
- நல்ல குடிமக்கள் மற்றும் பாதுகாப்பு மிக்க அரண்கள்
- நல்ல மூலவளங்கள் மற்றும் நட்பு நாடுகளின் ஆதரவு
I, II மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 10 |
- " அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
- எஞ்சாமை வேந்தர்க் கியல்பு"
- என்னும் குறளில், அரசர் பெற்றிருக்க வேண்டிய குணநலன்களாக சொல்லப்படாதது எது?
துணிவு | |
ஈகைக்குணம் | |
பொதுஅறிவு | |
போர்க்குணம் |
Question 11 |
கீழ்காணும் கூற்றுகளில் சரியானது எது?
- கூற்று 1 - பண்டைய கிரேக்கத்தின் சிறிய நகர அரசுகளின் விவகாரங்களை குறிப்பது அரசியல் என்ற சொல்லாகும்.
- கூற்று 2 - அரசியல் என்ற சொல் "அரசாங்கங்களின் தற்கால பிரச்சனைகளை பற்றியது " என்பது ஆடம் கில்கிறிஸ்ட் என்பவரின் கூற்று ஆகும்.
- கூற்று 3 - ஒரு நாட்டின் அரசியல் என்பது மற்றொரு நாட்டின் அரசியலில் இருந்து வேறுபட்டதாகும்.
கூற்று 1, 2 மட்டும் சரி | |
கூற்று 2, 3 மட்டும் சரி | |
கூற்று 1, 3 மட்டும் சரி | |
எல்லா கூற்றுகளும் சரி |
Question 12 |
அரசியல் அறிவியல் பாடத்திற்கு என தனியாக ஒரு துறையை உருவாக்கியவர் கீழ்கண்டவர்களில் யார்?
ஜான் W.பர்ஜெஸ் | |
ராபர்ட் மிக்செல்ஸ் | |
டேவிட் ஈஸ்டன் | |
ஆடம் கில்கிறிஸ்ட் |
Question 13 |
அரசியல் பாடத்தினை சமுதாயப் பிரச்சினைகளைப் பற்றிப் படிக்கும் பாடமாக மாற்றியமைக்க வலியுறுத்திய அமெரிக்க ஜனாதிபதி யார்?
உட்ரோ வில்சன் | |
ஜிம்மி கார்ட்டர் | |
ரொனால்டு ரீகன் | |
ரிச்சர்ட் நிக்சன் |
Question 14 |
அரசியல் அதிகாரம் என்னும் நூலை எழுதியவர் கீழ்க்கண்டவரில் யார்?
பிரான்ஸ் குட்நவ் | |
ஆர்த்தர் பென்ட்லி | |
சார்லஸ் E.மெர்ரியம் | |
ஹெரால்டு லாஸ்வெல் |
Question 15 |
நடத்தையியல் புரட்சியினை தொடக்கி வைத்ததாக கருதப்படுபவர் யார்?
பிரான்ஸ் குட்நவ் | |
ஆர்த்தர் பென்ட்லி | |
டேவிட் ஈஸ்டன் | |
ஹெரால்டு லாஸ்வெல் |
Question 16 |
அரசியல் அறிவியல் பற்றி அறிஞர்களின் கீழ்க்காணும் கூற்றுகளில் தவறான இணை எது?
கார்னர் - அரசிடம் ஆரம்பித்து அரசிடமே முடியும் பாடம் | |
லீக்காக் - அரசாங்கத்தினை பற்றி படிக்கும் பாடம். | |
லாஸ்வெல் - அதிகாரம் மற்றும் செல்வாக்கு ஆகியவைகளைப் பற்றிய படிப்பு. | |
சீலே - அரசிடம் ஆரம்பித்து அரசிடமே முடியும் ஒரு பாடம் |
Question 17 |
எதிர்காலத்தை நம்பிக்கையோடு சந்திப்போம் என்னும் உரை கீழ்க்கண்டவர்களில் யாரால் நிகழ்த்தப்பட்டது?
சர்தார் வல்லபாய் பட்டேல் | |
மகாத்மா காந்தி | |
ஜவகர்லால் நேரு | |
அம்பேத்கர் |
Question 18 |
ஜவஹர்லால் நேருவின் " எதிர்காலத்தை நம்பிக்கையோடு சந்திப்போம்" என்னும் உரையில் சொல்லப்பட்டிருப்பவைகளில் கீழ்க்கண்டவற்றில் சரியானது எது?
பழமையிலிருந்து புதுமையை நோக்கி பயணிக்க தயாராகிவிட்டோம் | |
நீண்டகாலம் ஒடுக்கி வைக்கப்பட்ட ஒரு தேசத்தின் ஆன்மா உயிர்ப்பித்திருக்கிறது | |
உலகின் அனைத்து தேசங்கள் மற்றும் மக்கள் ஒன்றாக இருப்பதால் தனித்து இயங்குவதை கற்பனைகூட செய்ய முடியாது | |
இவை அனைத்தும் சரி |
Question 19 |
அரசியல் அறிவியலின் தன்மை குறித்த கீழ்க்காணும் கூற்றுக்களில் சரியானது எது?
- கூற்று 1 - மனிதன் என்பது ஒரு சமூக விலங்கு ஆவான். மனிதன் தனிமையை விட பிறருடன் இருப்பதையே விரும்புகிறான்.
- கூற்று 2 - சமூகத்தின் ஒரு அங்கமாக விளங்கும் மனிதர்கள் பொதுவான நடத்தை விதிகளை கடைபிடித்து வாழ வேண்டியுள்ளது.
- கூற்று 3 - சமுதாயம் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளதால் அதனை ஏற்பது மிகவும் நன்றாகும்.
கூற்று 1, 2 மட்டும் சரி | |
கூற்று 2, 3 மட்டும் சரி | |
கூற்று 1, 3 மட்டும் சரி | |
எல்லா கூற்றுகளும் சரி |
Question 20 |
1948ஆம் ஆண்டு நடந்த பன்னாட்டு அரசியல் அறிவியல் சங்க மாநாடு கீழ்காணும் எந்த பரப்பெல்லைகளை குறிப்பிட்டது?
- அரசியல் கோட்பாடு
- அரசியல் நிறுவனங்கள்
- அரசியல் இயக்கவியல்
- பன்னாட்டு உறவுகள்
I, II, III மட்டும் | |
II, III, IV மட்டும் | |
I, III, IV மட்டும் | |
இவை அனைத்தையும் |
Question 21 |
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
- கூற்று 1 - அரசியல் என்பது அரசு என்பதைப் பற்றி மட்டும் படிப்பதாக கூறுகிறார் பிளான்ட்சிலி.
- கூற்று 2 - அரசியல் அறிவியல் என்பது அரசாங்கங்களை பற்றி மட்டுமே படிப்பது என்பது கார்ல் டாஷ் என்பவரின் கூற்றாகும்.
- கூற்று 3 - அரசியல் அறிவியல் என்பது அரசுகள் மற்றும் அரசாங்கங்கள் ஆகிய இரண்டையும் படிப்பதாக கூறுகிறார் ஹெரால்ட் லாஸ்கி.
கூற்று 1, 2 மட்டும் சரி | |
கூற்று 2, 3 மட்டும் சரி | |
கூற்று 1, 3 மட்டும் சரி | |
எல்லா கூற்றுகளும் சரி |
Question 22 |
- அகஸ்ட் கோம்டே
- பிளான்ட்சிலி
- மைட்லேன்ட்
I, II மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
இவை எல்லாமே சரி |
Question 23 |
அரசியல் அறிவியல் என்பது ஒரு அறிவியல் பாடம் என்று கூறியவர்களில் அல்லாதவர் கீழ்க்கண்டவருள் யார்?
மாண்டெஸ்க்க்யூ | |
போடின் | |
ஹாப்ஸ் | |
அகஸ்டே கோம்டே |
Question 24 |
நீ அரசியலின் மீது ஆர்வம் இல்லாமல் கூட இருக்கலாம்.ஆனால் அரசியல் உன்மீது ஆர்வமாக இருக்கிறது என்னும் கூற்று கீழ்க்கண்டவர்களில் யாருடையது ஆகும்?
மார்ஷல் பெர்மென் | |
பிளண்ட்சிலி | |
மான்டேஸ்க்யூ | |
இவர்கள் யாரும் அல்ல |
Question 25 |
தத்துவார்த்த அணுகுமுறை சிந்தனையாளர் அல்லாதவர் யார்?
பிளாட்டோ | |
அரிஸ்டாட்டில் | |
மாக்கியவல்லி | |
லியோ ஸ்டிராஸ் |
Question 26 |
சட்டப்பூர்வ அணுகுமுறை சிந்தனையாளர் அல்லாதவர் யார்?
சீசேரோ | |
ஜீன் போடின் | |
ஜான் ஆஸ்டின் | |
சபைன் |
Question 27 |
- தத்துவ அணுகுமுறை - a) ஆர்தர் பென்ட்லீ
- வரலாற்று அணுகுமுறை - b) மாக்கியவல்லி
- சட்டபூர்வ அணுகுமுறை - c) அரிஸ்டாட்டில்
- நிறுவன அணுகுமுறை - d) ஜான் ஆஸ்டின்
I-c, II-b, III-d, IV-a | |
I-d, II-a, III-c, IV-b | |
I-b, II-a, III-c, IV-d | |
I-a, II-d, III-b, IV-c |
Question 28 |
அரசியல் அறிவியலை படிப்பதற்கான நவீன அணுகுமுறைகளில் அல்லாதது எது?
சமூகவியல் அணுகுமுறை | |
பொருளியல் அணுகுமுறை | |
நடத்தையியல் அணுகுமுறை | |
நிறுவன அணுகுமுறை. |
Question 29 |
- சமூகவியல் அணுகுமுறை - a) காரல் மார்க்ஸ்
- உளவியல் அணுகுமுறை - b) விளாடிமிர் லெனின்
- பொருளியல் அணுகுமுறை - c) டேவிட் ட்ரூமன்
- மார்க்சிய அணுகுமுறை - d) மேக் ஐவர்
I-d, II-c, III-a, IV-b | |
I-d, II-a, III-c, IV-b | |
I-b, II-a, III-c, IV-d | |
I-a, II-d, III-b, IV-c |
Question 30 |
அரசியலை கற்பதற்கான மிகவும் பழமையான அணுகுமுறையாக கருதப்படுவது எது?
வரலாற்று அணுகுமுறை | |
சட்டபூர்வ அணுகுமுறை | |
தத்துவார்த்த அணுகுமுறை | |
நிறுவன அணுகுமுறை |
Question 31 |
அரசியலின் முறையான அமைப்புகளான சட்டமன்றம், நீதித்துறை மற்றும் செயலாட்சித்துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகளின் அடிப்படையில் அரசியல் அறிவியலை அணுகுவது கீழ்க்கண்டவற்றுள் எது?
தத்துவார்த்த அணுகுமுறை | |
சட்டபூர்வ அணுகுமுறை | |
நிறுவனம் சார்ந்த அணுகுமுறை | |
மார்க்சிய அணுகுமுறை |
Question 32 |
சமூகவியல், சட்டம் மற்றும் பொருளியல் காரணிகளை புறந்தள்ளும் அணுகுமுறையாக கருதப்படுவது எது?
சமூகவியல் அணுகுமுறை | |
உளவியல் அணுகுமுறை | |
பொருளியல் அணுகுமுறை | |
நடத்தையியல் அணுகுமுறை |
Question 33 |
மார்க்சிய அணுகுமுறை கீழ்க்கண்டவற்றில் எதை விளக்குகிறது?
சமூக உறுப்பினர்களின் அரசியல் நடத்தையை சமூக சூழலில் புரிந்து கொள்ளுதல் | |
சமூக நிறுவனங்கள் உளவியல் விதிமுறைகளின் அடிப்படையில் இயங்க வேண்டும். | |
அரசியல் மற்றும் பொருளியல் சக்திகள் இரண்டையும் பிரிக்க முடியாது. | |
ஒரு அரசின் கீழ் வாழும் மனிதர்களின் மனப்பாங்கு மற்றும் முன்னுரிமைகளை விளக்குதல். |
Question 34 |
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
- அரசும் அதன் நிறுவனங்களும் வரலாற்றின் படிப்படியான வளர்ச்சியால் உருவானவையாகும்.
- அரசு தனக்குரிய பல பொதுவான சட்டங்களையும் கொள்கைகளையும் வரலாற்று உண்மைகளின் அடிப்படையிலேயே கண்டறிந்துள்ளது.
- அரசியல் வரலாறு என்பது அரசியல் நிகழ்வுகளையும் அரசியல் இயக்கங்களையும் விவரிப்பது ஆகும்.
I, II மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 35 |
"அரசியல் அறிவியல் இல்லாத வரலாறு பழமே இல்லாத ஒரு மரம்" என்னும் புகழ்மிக்க கூற்று யாருடையது ஆகும்?
ஃபிரீமேன் | |
ஜான் சீலே | |
ராபர்ட் ஏ தால் | |
விளாடிமிர் லெனின் |
Question 36 |
_________ என்பது அரசியல் அறிவியலின் ஒரு கிளை பிரிவு என்று பண்டைய கிரேக்கர்கள் கருதினார்கள்.
தத்துவம் | |
வரலாறு | |
பொருளியல் | |
நடத்தையியல் |
Question 37 |
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
- அறவியல் என்பது அரசியலோடு நெருங்கிய தொடர்புடைய சமுதாயத்தில் தனி மனிதனுடைய நடத்தையை கட்டுப்படுத்தும் விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளை உருவாக்குவதாகும்.
- அறவியல் என்பது நீதி முறைமையின் அறிவியலாகும்.
I மட்டும் சரி | |
II மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 38 |
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
- கூற்று 1 - அரசியல் அறிவியலும், சமூகவியலும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்புடைய பாடங்கள் ஆகும்.
- கூற்று 2 - அரசு மற்றும் பிற அரசியல் நிறுவனங்கள் அனைத்தும் எவ்வாறு தோன்றி வளர்ந்தன என்பதன் அடிப்படை தகவல்களை சமூகவியல் பாடமே நமக்கு தர முடியும்.
- கூற்று 3 - அரசியல் அறிவியல் பாடத்தினை கொள்கை அறிவியல் பாடம் என்று அழைக்கலாம்.
கூற்று 1, 2 மட்டும் சரி | |
கூற்று 2, 3 மட்டும் சரி | |
கூற்று 1, 3 மட்டும் சரி | |
எல்லா கூற்றுகளும் சரி |
Question 39 |
மனிதர்களின் பல புதிரான நடவடிக்கைகளை பற்றி அறிந்துகொள்ளும் விடை பகுதி உளவியல் பாடத்தில் உள்ளது என்னும் கூற்று கீழ்கண்டவர்களில் யாருடையதாகும்?
ஜான் சீலே | |
ஃபிரீமேன் | |
மார்ஷல் பெர்மேன் | |
பார்க்கர் |
Question 40 |
அரசியல் அறிவியல் பாடம் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
- அரசியல் அறிவியல் பாடம் என்பது ஆளுகை என்பதனை முறையாக படிக்க உதவும் ஒரு பாடமாகும்.
- அரசியல் அறிவியல் பாடத்தில் அறிவியல்பூர்வமான முறைகளும், செயலறிவிலான பகுப்பாய்வும் செயல்படுத்தப்படுகின்றன.
- அரசியல் அறிவியலானது அரசு அதன் அங்கங்கள் மற்றும் நிறுவனங்களை ஆராய்கிறது.
I, II மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 41 |
கௌடில்யரால் எழுதப்பட்ட அர்த்தசாஸ்திரம் கீழ்காணும் எந்த நூற்றாண்டினை சார்ந்தது ஆகும்?
முதலாம் நூற்றாண்டு | |
மூன்றாம் நூற்றாண்டு | |
ஆறாம் நூற்றாண்டு | |
ஒன்பதாம் நூற்றாண்டு |
Question 42 |
சமூகத்தில் ஒரு சிலருக்கு பாரம்பரியம், உள்ளுணர்வு, அதிக அறிவு போன்றவைகளின் அடிப்படையில் மற்றவர்களை விடவும் சிறப்பு தகுதிகளையும் அதிகாரங்களையும் வழங்குவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அரசியல் நடத்தை | |
வர்க்க முரண்பாடு | |
அதிகாரத்துவம் | |
உயர்குடியினவாதம் |
Question 43 |
ஒரு பேரரசு அல்லது நாடு தனது ஆதிக்க அதிகார வரம்பினை வேறொரு நாட்டின் மீது செலுத்தி அதனை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
முற்றதிகாரம் | |
ஏகாதிபத்தியம் | |
காலனி ஆதிக்கம் | |
பிரபுக்களாட்சி |
Question 44 |
கருத்தறிவு என்பதற்கான சரியான விளக்கம் கீழ்க்கண்டவற்றுள் எது?
சரியான நடத்தையின் அடிப்படையில் அனுமானித்து எடுக்கப்படும் தரநெறியிலான கருத்து முடிவாகும் | |
சரியான பேச்சின் அடிப்படையில் அனுமானித்து எடுக்கப்படும் தரநெறியிலான கருத்து முடிவாகும். | |
சரியான எழுத்தின் அடிப்படையில் அனுமானித்து எடுக்கப்படும் தரநெறியிலான கருத்து முடிவாகும் | |
இவை அனைத்தும் சரியானது ஆகும் |
Question 45 |
அரசியல் நிறுவனங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கும் தன்மை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அரசியல் நிலைத்தன்மை | |
அரசியல் இயக்கவியல் | |
அரசியல் நடத்தையியல் | |
அரசியல் பொருளியல் |