Samacheer NotesTnpsc

அரசியல் அறிவியலின் அறிமுகம் Notes 11th Political Science

11th Political Science Lesson 1 Notes in Tamil

1. அரசியல் அறிவியலின் அறிமுகம்

அரசியல் அறிவியலின் பொருள், வரையறை மற்றும் தோற்றம்

அரசியல்

  • அரசியல் என்ற சொல் கிரேக்க மொழியில் நகர அரசு என்ற பொருள்படும் “பொலிஸ்” (Polis) என்ற சொல்லோடு நெருங்கிய தொடர்புடையதாகும். அரசியலைக் கற்பது என்பதை பொ.ஆ.மு. ஐந்தாம் நூற்றாண்டில் கிரேக்கத்தில் வாழ்ந்த பிளாட்டோ (Plato) (428 BCE – 347 BCE) மற்றும் அரிஸ்டாட்டில் (Aristotle) (384 BCE – 322 BCE) ஆகிய அரசியல் தத்துவஞானிகளின் அளப்பரிய பங்களிப்பினால் தொடங்கப்பட்டதாகும்.
  • இருபதாம் நூற்றாண்டிற்கு முன்பு வரையிலும் அரசியலைக் கற்றறிவது என்பது வரலாறு மற்றும் தத்துவம் போன்ற பிற துறைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது எனலாம்.
  • அரசியல் என்பது அடிப்படையில் நன்னெறியைப் பற்றிய கல்வியாகும். அரசியல் பாடத்தின் பார்வை அரசு பற்றிய கருத்தாக்கங்கள், அரசியல் நிறுவனங்கள், அவற்றின் செயல்பாடுகள் போன்றவற்றோடு, அரசுகளுக்கிடையேயான உறவுமுறைகள் பற்றியதாகவும் மட்டுமே இருந்தது.
  • 19-ஆம் மற்றும் 20-ஆம் நூற்றாண்டுகளில் அரசியல் பாடத்தின் பார்வையானது சுதந்திரம் மற்றும் பாடத்தின் பார்வையானது சுதந்திரம் மற்றும் சமத்துவம் ஆகிய இரண்டிற்கும் இடையேயான பிரச்சனைகளைச் சுற்றியே இருந்து வந்தது.
  • 21-ஆம் நூற்றாண்டில் அரசியக் பாடத்தின் மையக்கரு சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு ஆகிய இரண்டிற்கும் இடையேயான மோதல்கள் பற்றியதாகவே இருந்து வருகிறது. இது தவிர மேம்பாடு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, பாலின சமத்துவம், பன்னாட்டு அமைதி மற்றும் ஒத்துழைப்பு போன்றவை அரசியலின் முக்கியமாகக் கருத்தப்படாத பிற மையக் கருக்களாக இருந்தன.
  • வரலாற்றுக்காலம் முதலே அரசியலின் மையக்கருத்து பற்றி அரசியல் தத்துவஞானிகளுக்கு இடையே மாறுபட்ட கருத்துக்களே நிலவி வந்தது. அரசியல் அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவரும், மாபெரும் கிரேக்க சிந்தனையாளருமான அரிஸ்டாட்டில் அரசியல் பற்றிய உண்மைகள் மற்றும் அரசுக்கும் மக்களுக்கும் உள்ள உறவு முறைகளையும் முறைப்படி படித்து அறிந்துகொள்வதே அரசியல் பாடத்தின் முக்கியமான பணி என்கிறார்.
  • அவர் மேலும் பல்வேறு அரசியல் முறைமைகளைப் பற்றி வகைப்படுத்தி விளக்குகிறார். அரசியல் பாடத்தின் உருவாக்கம் மற்றும் மேம்பாட்டுக்கு பிளாட்டோவும், அரிஸ்டாட்டிலும் பெரும் பங்களிப்பினை ஆற்றியுள்ளனர்.
  • அரிஸ்டாட்டில் தனது குருவான பிளாட்டோவின் அரசியல் வகைப்பாட்டினை மேலும் வரலாற்று ரீதியாக பகுப்பாய்வு செய்து விளக்கியுள்ளார். இவர்கள் இருவரும் பல்வேறு வகையான அரசாங்கங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதனை புரிந்து கொள்ள முயற்சி செய்தனர்.
  • இடைக்காலத்தில் புனித ரோமானிய பேரரசின் காலத்தில் அரசியல் அதிகாரம் முழுவதும் பேராலயங்களின் கட்டுப்பாட்டில் இருந்ததால் அரசியல் பற்றி பேசும் இடமாக பேராலயம் மட்டுமே இருந்தது.
  • புனிதஅகஸ்டியன் (St.Augustine) போன்ற தத்துவஞானியின் நூலான ‘கடவுளின் நகரம்’ (The City of God) எனும் படைப்பில் அரசியல் தத்துவம் என்பது மதத்தின் ஒரு அங்கமாகவே வலியுறுத்தப்பட்டுள்ளது. இப்படியாக இடைக்கால ஐரோப்பிய தத்துவஞானிகள் மற்றும் கிரேக்க சிந்தனையாளர்கள் அனைவருமே அரசியல் என்பதனை அரசின் ஒரு அங்கமாகக் கருதாமல் மதம் மற்றும் பக்தி சார்ந்ததாகவும் , சமூகம் சார்ந்ததாகவும் மட்டுமே பார்த்து வந்தனர் என்பது இங்கே குறிப்பிடத்தகுந்ததாகும்.
  • இத்தாலிய மறுமலர்ச்சிக் காலத்தின் போது நிக்காலோ மாக்கியவல்லி (Niccolo Machiavelli) என்பவர்தான் செயலறிவிலான கூர்நோக்குதல் மற்றும் பட்டறிவின் (empiricism) அடிப்படையில் அரசியல் அமைப்புகள் மற்றும் அரசியல் நடத்தைகள் பற்றிய தனது மதச்சார்பற்ற அணுகிமுறையின் மூலம் நவீன அரசியல் அறிவியல் பாடத்திற்குச் அடிகோலினார் என்று கூறலாம்.
  • அமெரிக்க அரசியல் அறிவியல் அறிஞர் ஹெரால்ட் லாஸ்வெல் (Harold Lasswell) என்பாரின் கூற்றுப்படி அரசியல் அறிவியல் என்பது “யார், எப்போது, எதனை, எப்படி அடைகிறார்கள்?” என்பது பற்றியதாகும்.
  • “எல்லா சமூகங்களும் வேறுபட்ட தங்களின் விருப்பங்களையும் தேடல்களையும் அடைவதற்கு முயற்சிப்பதும், இந்த வேறுபட்ட தேடல்களின் விளைவாக எழும் மோதல்களை ஒழுங்குபடுத்த உருவானதே அரசியல்” என்பதும் லாஸ்வெல்லின் இந்த விளக்கத்தினால் நாம் உணர்ந்துகொள்ளவேண்டிய செய்தியாகும்.
  • மேலும், தற்கால சமூகங்களில் காணப்படும் பற்றாக்குறை மூலவளங்களை அதிகமான தேவைகளுக்கு முறையாக மற்றும் திறமையாக பகிர்ந்து அளிப்பதே அரசியல் எந்திரம் என்பதும் உணரப்பட வேண்டிய செய்தியாகும்.
  • காரல்மார்க்சின் (KarlMarx) கூற்றுப்படி “அரசியல் என்பது அரசியல் அதிகாரம் மற்றும் வகுப்பு மோதல்கள்” பற்றியதாகும். இதனையே டேவிட் ஈஸ்டன் (David Easton) “விழுமியங்களை அதிகாரப் பூர்வமாக ஒதுக்கீடு செய்தல்” (Authoritative Allocation of Values) என்று கூறுகிறார்.
  • அரசியல் அறிஞர்கள் பலரும் அரசியல் என்பதனை அதிகாரம், முறையான ஒழுங்கமைவு, மற்றும் நீதி ஆகியவற்றை அடிப்படையாக வைத்தே விவரித்துள்ளனர். விதிமுறைகளை உருவாக்கவும், நடைமுறைப்படுத்தவும் அதன் மூலம் மனிதர்களின் செயல்பாடுகளை/நடத்தையை ஆட்கொள்ள வல்ல ஆற்றல் எதுவோ அதுவே அதிகாரம் எனப்படும்.
  • அதிகாரம் சட்டப்படியோ அல்லது சட்டப்படி இல்லாமலோ கூட இருக்கலாம். இங்கே அதிகாரம் மற்றும் அதிகாரத்துவம் என்ற இரண்டு கருத்தாக்கங்களுக்கிடையே உள்ள வேறுபாட்டினை நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.
  • சட்ட அங்கீகாரம் இல்லாமல் வெறும் ஒப்புதலை மட்டுமே பெற்றதனை “அதிகாரம்” (Power) என்றும், சட்ட அங்கீகாரம் பெற்ற செயல்பாட்டினை “அதிகாரத்துவம்” (Authority) என்றும் நாம் உணர்ந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.
  • அதிகாரம் என்பது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் மூலம் செயல்படுத்தப்படும்போது மக்கள் அதனை முறையாக ஏற்றுக்கொள்கின்றனர்.
  • அரசியல் என்பது அரசியல் அமைப்பை உருவாக்கும் கட்டமைப்பு, விதிமுறைகள், வழிமுறைகள், செயல்முறைகள் மற்றும் நடைமுறைகள் ஆகியவற்றின் ஒழுங்கமைவிலும் அக்கறை கொண்டதாகும்.
  • பெரும்பான்மையான மக்கள் ஒரு சிலரால் ஆளப்படும்போது அத்தகைய அரசு இயந்திரம் நியாயமானதாக அமைந்திருக்கவேண்டியது அவசியமானதாகும். எனவே அதிகாரத்தினை செயல்படுத்தும்போது அதி நீதியின் மீது கட்டமைக்கப்பட்டதாக இருக்க வேண்டியது முக்கியமாகும்.
  • இவ்வாறாக அதிகாரம், முறையான ஒழுங்கமைவு, மற்றும் நீதி ஆகியவை அரசியல் பாடத்தின் அடிப்படை கருத்தாக்கங்கள் ஆகும். 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து அரசியல் குறித்த கல்விப்புல படிப்பு அரசியல் அறிவியல் என அழைக்கப்படலாயிற்று.
  • அரசியல் என்பது அனைவருக்கும் இன்றியமையாததாகும்.

மகிழ்ச்சி பற்றிய அரிஸ்டாட்லின் கருத்து

மகிழ்ச்சி என்பது வாழ்க்கையின் ஒரு முக்கியமான அம்சம் என்பது அரீஸ்டாட்டிலின் கருத்தாகும்.. ஒரு மனிதன் தற்காலிக இன்பத்தை தேடுவதில் நேரத்தை செலவிடுவதைக் காட்டிலும், நிரந்தரமான மகிழ்ச்சியை தேடுவதே சிறந்தது என்பது அரிஸ்டாட்டிலின் கருத்தாகும். ஒருவனின் மகிழ்ச்சி என்பது பொருள் அடிப்படையிலானவற்றில் இல்லை என்பதும் அவனுடைய முழுமையான திறமை மற்றும் உண்மையான தன்மையை அறிந்துகொள்வதில்தான் இருக்கிறது என்பதும் அரிஸ்டாட்டிலின் கருத்தாகும். சுருங்கக் கூறின் மகிழ்ச்சி என்பது ஒருவனின் உள்ளேயே இருக்கிறதே தவிர வெளியில் இல்லை என்பது அவரின் கருத்து. அரிஸ்டாட்டிலின் புகழ்பெற்ற கருத்தாக்கம் ஒன்று பின்வருமாறு “மனிதனின் உயிர்வாழ்தலின் நோக்கம் மற்றும் பொருளே மகிழ்ச்சியை தேடுவதேயாகும்”

  • பொ.ஆ.மு. 300-இல் கௌடில்யரால் எழுதப்பட்ட அர்த்தசாஸ்திரம் என்ற நூல் மிகவும் பழமையான நூலாக இருந்தாலும் அது ‘அரசியல் பொருளாதாரம்’ என்பதில் அதிகம் கவனம் செலுக்கிறது. ஆனால் திருவள்ளுவரின் திருக்குறள் அதிகமாக அரசியல் ஆளுகையைப் பற்றி பேசுகிறது.

கௌடில்யர்

பொ.ஆ.மு. 300-இல் வடஇந்தியாவை ஆண்ட சந்திர குப்த மௌரியர் என்பவரின் முதலமைச்சராக இருந்தவர்தான் கௌடில்யர். அவர் எழுதிய நூலின் பெயர்தான் அர்த்தசாஸ்திரம். சமஸ்கிருதத்தில் அர்த்தம் என்றால் ‘பொருள்’ சாஸ்திரம் என்றால் ‘அறிவு’ சுருக்கமாக கூறினால் அர்த்தசாஸ்திரம் என்பது ஒரு அரசியல் பொருளாதார நூல் ஆகும்.

  • திருக்குறலில் இருந்து நாம், அரசின் கூறுகள், இலட்சிய அரசின் தன்மைகள், நல்ல அரசரின் குணக்குஊறுகள், அமைச்சர்களுக்கான தகுதிகள், அரசு அலுவலர்களை தேர்ந்தெடுக்கத் தேவையான தகுதிகள், அதிகார ஒப்படைப்பு போன்ற பலவற்றினை அறிய முடிகிறது. திருக்குறளில் அரசு, மற்றும் அரசன் ஆகியோரின் தன்மைகள் மற்றும் பண்பு நலன்கள் பற்றி இறைமாட்சி என்ற ஓர் அதிகாரம் முழுவதும் எழுதப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக,

“படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்

உடையான் அரசருள் ஏறு” (கூறள் எண் : 381)

என்று கூறுகிறார். அதாவது ஒரு அரசன் சிறந்து விளங்குவதற்கு ஆறு அடிப்படைக் கூறுகள் அமைந்திருக்க வேண்டுமென திருவள்ளுவர் கூறுகிறார்.

  1. சிறந்த படை
  2. நல்ல குடிமக்கள்
  3. நல்ல மூலவளங்கள்
  4. அறிவார்ந்த அமைச்சர்கள்
  5. சிறந்த பாதுகாப்பு மிக்க அரண்கள்
  6. நட்பு நாடுகளின் ஆதரவு ஆகிய ஆறும் சிறந்த அரசனுக்கு வேண்டுமெனக் கூறுகிறார்.

அதேபோல அரசராக இருக்க வேண்டுபவர் என்னென்ன குணநலன்களைப் பெற்றிருக்க வேண்டுமென திருவள்ளுவர் கூறுகிறாறெனில்,

“அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்

எஞ்சாமை வேந்தர்க் கியல்பு”. (குறள் எண்: 382)

அதாவது ஓர் அரசன் என்பவன்,

  1. துணிவு
  2. ஈகைக்குணம்
  3. பொது அறிவு
  4. செயலூக்கம் ஆகியவற்றுடன் விளங்க வேண்டுவது அவசியம் என்று கூறுகிறார்.

அதுபோலவே,

“தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்

நீங்கா நிலனாள் பவர்க்கு” (குறள் எண்: 383)

நிலத்தை ஆளும் அரசனுக்கு

  1. காலம் தாழ்த்தாத தன்மை
  2. கல்வியுடைமை
  3. நல்ல காரியங்களை செய்வதற்கான துணிவுடமை ஆகிய மூன்றும் அவசியமான குணம் என்கிறார் திருவள்ளுவர்.

இதுபோலவே ஒரு நாடு சிறந்த நாடாக விளங்குவதற்கு என்னென்ன தன்மைகள் அமைந்திருக்க வேண்டுமென்பதனை,

“உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும்

சேராதியல்வது நாடு” (குறள் எண்: 734)

என்ற கூறளில் உண்ண உணவில்லாத பஞ்சநிலை, தீராத பல நோய்கள், எப்போதும் தாக்குவதற்கு தயாராக இருக்கும் பகைநாடுகள் ஆகிய மூன்றும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

அதேபோல,

“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்லது அரசு” (குறள் எண்: 385)

என்ற குறளில் வருவாயை அடையாளம் காணுதலும், அதனை திறமையாக திரட்டுவதும், திரட்டிய வருவாயை அரசுக்கருவூலத்தில் பாதுகாத்து வைப்பதும், அவ்வாறு பாதுகாத்த செல்வத்தை மக்களுக்கு முறையாக வழங்குதலும் செய்ய வல்லது தான் சிறந்த அரசு என்று வள்ளுவர் கூறுகிறார்.

குறிப்பிடத்தக்க மேற்கோள்

இவ்வுலகமே அரசியலைச் சுற்றி சுழன்று வருகிறது. ஒட்டுமொத்த மனித இனமும் ஒருவிதமான அரசிய கூட்டமைவுக்குள் உள்ளிழுக்கப்பட்டு, அதற்கு உள்ளேயே மனிதர்களுக்கிடையேயான செயல்பாடுகளும் மோதல்களும் நிகழ்ந்து வருகின்றன.

  • டி.ஜி, ஹிட்ச்னர் (D.H.Hitchner)

அதிகாரத்துவம் என்பது சட்டபூர்வமானது எனில் மக்களாட்சி என்பது மட்டுமே சட்டபூர்வமான அரசாங்கம் என எடுத்துக்கொள்ளலாம?

இல்லை. முடியாட்சி, சர்வாதிகார ஆட்சி போன்றவைகளும் மக்கள் அவைகளை ஏற்றுக்கொள்ளும் வரௌ சட்டபூர்வமான ஆட்சிகள்தான்.

இங்கிலாந்து நாட்டில் அரசியார் தலைமையில் முடியாட்சி நடப்பதற்குக் காரணம் மக்கள் அந்த அரசமைப்பிலான முடியாட்சியின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினை சட்டபூர்வமாக ஏற்றுக் கொள்வதால் அதுவும் அதிகாரத்துவமானதுதான்.

மனிதன் என்பவன் இயற்கையாகவே ஓர் அரசியல் ஓர் அரசியல் விலங்கு! இயற்கையில் ஒரு மனிதன் அரசு இல்லாமல் வாழ முடியாது! அவ்வாறு அரசின்றி வாழ்பவன் மனித குலத்திற்கு மேலானவன் அல்லது கீழானவன் ஆவான்!

  • அரசியல் என்ற நூலில் அரிஸ்டாட்டில்

அதிகாரம் என்பது

எல்லாம் சமூகத்திலும் ஒரு குறிப்பிட்ட அளவிலான அதிகாரம் இருக்கிறது. அது ஒரே நேரத்தில் ஒருவராலோ அல்லது ஒரு குழுவினாலோ கையாளப்படுகிறது.

  • காரல் மார்க்ஸ் (Karl Marx)

அதிகாரம் என்பது ஒரு குழு மற்றொரு குழுவின் செயல்பாடுகள் மற்றும் போக்குகளைத் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கும் உறவுமுறையே ஆகும்.

  • டேவிட் ஈஸ்டன் (David Easton)

அதிகாரம் மேலும் அதிகாரங்களை உருவாக்கி கொள்கிறது. அதிகாரமே உயர்குடியினவாதத்தின் மையச்சார்பாக அமைந்துள்ளது.

  • ராபர்ட் மிச்செல்ஸ் (Robert Michels)

அரசியல் அறிவியல்

  • தற்காலத்தில் ‘அரசியல்’ என்ற பாடம் ‘அரசியல் அறிவியல்’ என்ற பெயரில் புதியதொரு தனித்து இயங்கும் பாடமாக மாறியுள்ளது. பண்டைய கிரேக்கத்தின் சிறிய நகர அரசுகளின் விவகாரங்களைக் குறிப்பது அரசியல் என்ற சொல்லாகும்.
  • ஆனால் இப்போது அரசியல் என்ற சொல் “அரசாங்கங்களின் தற்கால பிரச்சனைகளைப் பற்றியது” என ஆடம் கில்கிறிஸ் (Adam Gilchrist) என்ற அறிஞர் கூறுகிறார். ஒருவன் தனக்கு அரசியலின்மீது ஆர்வம் உள்ளது என்று கூறுவானெனில் அவன் அரசியல் பிரச்சனைகள், சட்டமியற்றல் , தொழிலாளர் பிரச்சனைகள், கட்சி நடவடிக்கைகள் ஆகியவற்றின் மீதும் ஆர்வமாக இருக்கிறான் என்பதே பொருளாகும்.
  • ஆனால் அரசியல் கல்வி என்பது தற்கால அரசியல் நிகழ்வுகளிலிருந்து வேறுபட்டதாகும். மேலும் ஒரு நாட்டின் அரசியல் என்பது மற்றொரு நாட்டின் அரசியலிருந்து வேறுபட்டதாகும்.
  • இந்தியாவில் அரசியலைப்பற்றி நாம் புரிந்துகொண்டிருப்பது மாதிரியே உலகின் எல்லா நாடுகளிலும் அரசியல் இருப்பதில்லை. அது நாட்டுக்கு நாடு வேறுபடும். ஆனால் ‘அரசியல் அறிவியல்’ என்பது உலகம் முழுவதும் ஒரே பொருளில் அறியப்படுகிறது. அதனால்தான் இப்பாடத்தினை அரசியல் என்று அமைப்பதைக்காட்டிலும் அரசியல் அறிவியல் என்று அழைப்பதே சிறப்பானது ஆகும்.
  • 1948-ல் பிரான்சு நாட்டின் பாரிஸ் நகரில் கூடிய அரசியல் அறிஞர்கள் இப்பாடத்தினை அரசியல் அறிவியல் என்று மட்டுமே அழைப்பது என்பதில் ஏற்புடைய கருத்தினைக் கொண்டிருந்தனர்.
  • எனவே ஒரே பாடத்தினை ‘அரசியல்’ என்றும் ‘அரசியல் அறிவியல்’ என்றும் இரண்டு பெயர்களில் அழைக்காமல் இனி அரசியல் அறிவியல் என்று அழைப்பதே சரியானதாகும்.
  • இப்பாடத்தினை ஒரு தனித்தியங்கும் துறை சார்ந்த பாடமாக மாற்றியமைத்த பெருமை அமெரிக்க ஐக்கிய நாட்டையே சாரும். அதுவரையிலும் இப்பாடம் தத்துவம், வரலாறு, சட்டம் , பொருளியல் போன்ற பாடங்களில் ஒரு துணைப்பாடமாகவேதான் இருந்து வந்தது.
  • 1880-ல் ஜான் W.பர்ஜெஸ் (John W Burgess) என்பவர் கொலம்பிட பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பாடத்திற்கென தனியாக ஒரு துறையை உருவாக்கிய போதுதான் இப்பாடம் தன்னாட்சியான துறையாக உருவானது என்று கூறலாம்.
  • அதன் பின்பு படிப்படியாக வளர்ச்சி பெற்று 1920-களில் உலகின் பெரும்பாலான பல்கலைக் கழகங்களில் இப்பாடத்திற்கென தனியான துறைகள் ஏற்படுத்தப்பட்டன. தத்துவம், சட்டம், வரலாறு போன்ற பாடங்களின் கீழ் இயங்கிவந்த அரசியல் பாடத்தினை தனிப்பெரும் பாடமாக மாற்றியமைத்த பெருமை முழுவதும் அமெரிக்க அரசியல் அறிஞர்களையே சேரும்.
  • இப்பாடம் அதன் பிறகும், இரண்டாம் உலகப்போர் நடைபெறும் காலம் வரையிலும் கூட மிகவும் முறைசார்ந்ததாகவும் நிறுவனம் சார்ந்த அணுகுமுறையிலும் மட்டுமே இருந்தது.
  • நிலையான நிறுவனங்கள் சார்ந்த படிப்பாக மட்டுமே இருந்த அரசியல் பாடத்தினை சமுதாயப் பிரச்சனைகளைப் பற்றி படிக்கும் பாடமாக மாற்றியமைக்க அமெரிக்காவின் முன்னாள் ஜனாதுபதி – உட்ரோ வில்சன் (Woodrow Wilson) என்ற அறிஞரும், பிரான்க் குட்னவ் (Frank Goodnow) என்ற அறிஞரும் பெரும் முயற்சிகளை எடுத்துக்கொண்டனர்.
  • அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த ஆர்தர்பென்ட்லி (Arthur Bentley) என்ற அறிஞர் இப்பாடத்தை விழுமியங்கள் நீக்கிய நடுநிலையான அரசியல் பகுப்பாய்வு செய்யும் ஆற்றல் பெற்றதாக (value-free analysis of politics) மாற்றியமைக்க பெரும்பாடு பட்டவர் ஆவார்.
  • மேலும் சார்லஸ் ஈ.மெர்ரியம் (Charles E.Merriam) என்ற அறிஞர் இப்பாடத்தை செயலறிவிலான கூர்நோக்குதல் மற்றும் அளவீடுகளை உள்ளடக்கியதாகவும் மாற்றியமைக்க பெரும் முயற்சிகளை எடுத்துக்கொண்டார். இம்முயற்சியில் சார்லஸ் ஈ.மெர்ரியத்தின் (Charles E.Merriam) “அரசியல் அதிகாரம்” என்ற நூலும், ஹெரால்ட் லாஸ்வெல் என்பாரின் “அரசியல்: யார் எப்போது, எத்தனை , எப்படி அடைகிறார்கள்?” (Political : Who Gets What, When, How?) என்ற நூலும் அரசியலின் மையக் கருத்தாக அதிகாரம் என்னும் அம்சத்தினை உருவாக்கின.
  • 1920-களிலும் 1930-களிலும் ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் நிலவிய முற்றதிகார ஆட்சிகள் மற்றும் இரண்டாம் உலகப்போரின் விளைவாக இந்த அரசியல் அறிவியல் பாடம் தனது அமைப்புகள் மற்றும் நடைமுறைகளின் மீதான கவனத்திலிருந்து மாறி அரசியல் கட்சிகள், அழுத்தக்குழுக்கள், உயர்குடியினர் நடத்தை, தேர்தல் விருப்ப நடத்தை என ஒரு நடத்தையியல் (Behavioralism) பாடமாக மாறியது. இதன் விளைவாக ‘நடத்தையியல்’ (Behavioralism) என்ற ஒரு புதிய பாடம் பிறந்தது.
  • ‘நடத்தையில்’ என்ற இந்த சில் உளவியல் பாடத்திலுருந்து பெறப்பட்டதாகும். அதன்பிறகு 1960-களில் ‘பின்தோன்றிய நடத்தையியல்’ (Post –Behavioralism) என்ற புதிய பாடமும் பிறந்தது.
  • நடத்தையியல் என்பது அளவுக்கு அதிகமான பழமைவாத அணுகுமுறைகளை உருவாக்கியதாலேயே இந்த புதிய முறையான “பின்தோன்றிய நடத்தையியல்” உருவானது. இதில் ஒரு விந்தை என்னவெனில் இப்புதிய போக்கினை மேம்படுத்து உருவாக்கிய டேவிட் ஈஸ்டன் (David Easton) என்பவரே நடத்தையியல் புரட்சியினை தொடக்கி வைத்தார்.
  • டேவிட் ஈஸ்டனின் கருத்துப்படி நடத்தையியல் என்பது யதார்த்தம் மற்றும் உண்மைத்தன்மை ஆகியவற்றுக்கு எதிரானதாக மாறிவிட்டதாக கருதப்பட்டது. ஆகவே பின்தோன்றிய நடத்தையியல் என்பது ஆய்வுகள், விழுமியகளை மட்டுமே முழுமையாக சார்ந்திருக்காமல் துல்லியத்தன்மையையும் சார்ந்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இவ்வாறாக அரசியல் அறிவியலின் அறிவுசார் புரட்சி என்பது சமூகவியல், மானுடவியல் மற்றும் உளவியல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைந்தது.
  • மேலும் இந்த அறிவுசார் புரட்சியாளர்கள் பழமைவாத கருத்துக்களையும், குறுகிய நோக்கம் கொண்ட அணுகுமுறைகளையும் தீவிரமாக எதிர்த்தனர். முற்கால அரசியல் அறிஞர்கள் அரசு, அரசின் கூறுகள் , அரசின் நிறுவனங்கள், அவைகளின் முறையான கட்டமைப்புகள் போன்றவற்றை படித்தனரே தவிர மனிதர்களின் அரசியல் நடத்தையையும் அவர்களுக்குள் உள்ள உறவுமுறைகள் அவர்களுக்குள் உள்ள உறவுமுறைகள் குறித்தும் படிக்கவில்லை. எனவேதான் தற்கால அரசியல் பகுப்பாய்வாளர்கள் பின்வரும் நான்கு அடிப்படைக் கூறுகளில் கவனம் செலுத்தினர்.
  • பல்முனைப் பரப்பெல்லையை உள்ளடக்குவதற்கான ஒரு தேடல்
  • யதார்த்தத்திற்கான தேடல்
  • தெளிவும் சுருக்கமும் பெறுவதற்கான தேடல்

அரசியல் அறிவியலின் வரையறை

  • அரசியல் அறிவியல் பற்றி பல்வேறு அறிஞர்கள் மாறுபட்ட விளக்கங்களை அளித்துள்ளனர். கார்னர் (Garner) இதனை ‘அரசிடம் ஆரம்பித்து அரசிடமே முடியும் ஒரு பாடம்’ என்கிறார்.
  • ‘லீகாக்’கும் ‘சீலே’வும் (Leacock) (Seeley) இப்பாடம் ‘அரசாங்கத்தினைப் பற்றி படிக்கும் பாடம்’ லாஸ்வெல் (Lasswell) ஆகிய இருவரும் இப்பாடம் ‘அதிகாரம் மற்றும் செல்வாக்கு ஆகியவைகளைப் பற்றிய படிப்பு’ என்கின்றனர்.
  • சில அறிஞர்கள் இதனை ஒருங்கிணைக்கப்பட்ட மனித சமூகத்தின் அரசியல் அம்சங்களைப் படிக்கும் பாடம் என்கின்றனர். இவ்வாறாக இப்பாடத்தின் பரப்பெல்லையானது பலமுனைகளிலும் வளர்ந்துகொண்டே வருகிறது.
  • அரசியல் அறிவியல் என்பது வரலாற்றுப்பூர்வமக அரசு, அதன் அமைப்புகள், சட்டங்கள், அதன் செயலாக்கங்கள் பற்றிய படிப்பாகவே அறியப்பட்டது. நடத்தைசார் புரட்சிக்குப் பின்னர் தனிமனிதர்கள் மற்றும் குழுக்களின் அரசியல் நடத்தைகளும் இதன் அங்கமாகிவிட்டன. அரசியல் அறிவியல் பாடத்தில் அண்மைக்காலத்தில் சேர்ந்துகொண்ட கருத்தாக்கம் ‘ஆளுகை’ (Governance) என்பதாகும்.

தூய அரசியல் அமைப்பு (Polity) என்றால் என்ன?

தூய அரசியல் அமைப்பில் மேலான அதிகாரம் என்பது பெருவாரியாக மக்களிடம் இருப்பதுடன் அது பொது நன்மைக்காகப் பயன்படுத்துகிறது.

  • அரசியல் அறிவியலானது அரசு என்பதைப்பற்றியும், அதன் தன்மைகள், பல்வேறு வடிவங்கள், செயல்பாடுகள் மற்றும் அதன் மேம்பாட்டினைப் பற்றியும் படிக்கும் ஓர் அறிவியலாகும்.
  • ப்லன்ட்சிலி (BLuntschli)
  • அரசியல் அறிவியல் என்பது அரசின் தோற்றம், மேம்பாடு, நோக்கம் மற்றும் அதன் பல்வேறு அரசிய பிரச்சனைகளைப் பற்றி அறிந்து கொள்வதாகும்.
  • கேரிஸ் (Garris)
  • அரசியலைக் கற்றல் என்பது ஒருங்கிணைக்கப்பட்ட ஓர் அரசுடன் மக்களின் வாழ்க்கைக்கு உள்ள தொடர்பினைப் படிப்பதாகும்.
  • ஹெரால்ட் லாஸ்கி (Harold Laski)
  • அரசியல் அறிவியல் என்பது அரசாங்கம் மற்றும் அரசியல் பொருளாதாரம் என்பவைகளை வளம், உயிரியல் வாழ்க்கை , இயற்கணிதம், வரைகணிதம், விண்வெளிபோன்றவற்றோடு தொடர்புபடுத்தி படிப்பதாகும்.
  • சீலே (Seeley)
  • அதிகாரம் வடிவமைத்து பங்கிடப்படுவதை அனுபவ விசாரணை செய்வதே அரசியல் அறிவியல் ஆகும்.
  • ஹெரால்ட் லாஸ்வெல் (Harold Lasswell)
  • அரசியல் அறிவியல் என்பது கடந்த காலத்தை வரலாற்று ரீதியாகவும் , நிகழ் காலத்தினை பகுப்பாய்வு ரீதியாகவும் , எதிர்காலத்தினை நன்னெறி ரீதியாகவும் படிக்க உதவும் ஒரு பாடமாகும்.
  • கெட்டல் (Gettel)
  • ஒரு சமுதாயத்தின் எல்லைக்குள் ஒரு நகரத்திற்கோ, ஒரு அரசுக்கோ, ஒரு தேசத்திற்கோ அந்த சமுதாயத்தில் நிலவும் பற்றாக்குறையான மனிதவளம், பொருளியல் வளம் போன்றவற்றினை மனித தேவைகளுக்கும், மனித விருப்பங்களுக்கும் ஏற்ப முறைப்படுத்தி வழங்கும் செயல்முறையே அரசியல் ஆகும். – டேவிட் ஈஸ்டன் (David Easton)

“எதிர்காலத்தினை நம்பிக்கையோடு சந்திப்போம்”

“Tryst with Destiny”

நிகழ் ஆய்வு

ஜவஹர்லால் நேருவின் வரலாற்று புகழ் மிக்க உரையான “எதிர்காலத்தினை நம்பிக்கையோடு சந்திப்போம்” என்ற உரை குறித்து 14.08.1947 அன்று இந்து நாளிதழில் வெளியான செய்தி பின்வருமாறு-

“நீண்ட வருட காலமாக நாம் நம்பிக்கையோடு காத்திருந்த எதிர்காலம் இப்போது நமக்கு முழுமையாக கிடைக்கவில்லை எனினும் மிகவும் கூடுதலாகவே உறுதிமொழியாக வந்து வாய்த்துள்ளது” என துவங்கிய பண்டித ஜவஹர்லால் நேரு அரசமைப்பு நிர்ணய சபையில் அன்றிரவு பதவியேற்கவிருந்த உறுப்பினர்களுக்கான உறுதிமொழி தீர்மானத்தின்போது பின்வருமாறு கூறுகிறார்.

“உலகமே உறங்கிக்கொண்டிருக்கும்போது இந்தியா இந்த நள்ளிரவில் விழித்தெழுந்திருக்கிறது. பழமையிலிருந்து புதுமை நோக்கி பயணிக்கத்தயாராகிவிட்டோம். நீண்ட காலம் ஒடுக்கி வைக்கப்பட்ட ஒரு தேசத்தின் ஆன்மா உயிர்ப்பித்திருக்கிறது. இந்த சமயத்தில் இந்திய தேசத்தீற்கும், இந்திய மக்களுக்கும் சேவை செய்ய நாம் தியாக உணர்வுடன் சில உறுதிமொழிகளை எடுத்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம்”.

“சுதந்திரமும், அதிகாரமும் நமக்கு பொறுப்புணர்வினை அதிகமாகக்கொண்டுவந்துள்ளது. அந்த பொறுப்புணர்வு இறையாண்மையுள்ள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இறையாண்மை கொண்ட இந்த அவையிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சுதந்திரத்தை நாம் பல வலிகளையும், துன்பங்களையும் , துயரங்களையும் தாங்கி, கனத்த இதயத்துடனேயே பெற்று இருக்கிறோம். இவற்றுள் பல வலிகள் இன்னும் தொடரவே செய்கின்றன. எப்படியிருப்பினும் கடந்த காலம் முடிவுக்கு வந்து புதிய எதிர்காலம் நம் கண் முன் வந்துள்ளது.

இந்தியாவுக்கான நமது சேவை கோடிக்கணக்கான இந்திய மக்களை அவர்களின் வறுமை, அறியாமை, பிணி சமத்துவமின்மை ஆகியவைகளிலிருந்து மீட்டெடுக்க செய்யும் சேவையை பொறுத்தே அமையும். இந்த தலைமுறையின் மிகச்சிறந்த மனிதர்களாக நாம் வாழ விரும்பினால் இந்தியர்கள் ஒவ்வொருவரின் கண்ணில் இருந்து வழியும் கண்ணீரை துடைப்பதற்கு முன்வரவேண்டும் . அது நமது சக்திக்கு அப்பாற்பட்டு கூட இருக்கலாம். கண்ணீரும் , துன்பங்களும் தொடரும்வரை நமது பணிகளும் ஓயப்போவது கிடையாது. ஆகவே நம் கனவுகளை நனவாக்க நாம் மேன்மேலும் கடினமாக உழைக்க வேண்டும். இக்கனவுகள் இந்தியாவுக்கானது மட்டுமல்ல, உலகிற்கானது , உலகின் அனைத்து தேசங்கள் மற்றும் மக்கள் ஒன்றாக இருப்பதால் தனித்து இயங்குவதை கற்பனை கூட செய்ய முடியாது. அமைதி என்பது பிரிக்க முடியாதது. சுதந்திரமும் அது போலத்தானே, தற்பொழுது வளமும் அப்படியே ஆகும். பேரழிவும் அப்படியே இருப்பதால் இந்த ஒரே உலகில் அவற்றினை தனித்தனி பாகங்களாகப் பிரிக்க முடியாது”.

அரசியல் அறிவியலின் தன்மை (Nature of Political Science)

  • மனிதன் என்பவன் ஒரு சமூக விலங்கு ஆவான். மனிதன் தனிமையைவிட பிறருடன் இருப்பதையே விரும்புகிறான். மனிதன் தனது பரந்துபட்ட தேவைகளுக்கும், திருப்திக்கும் சக மனிதனைச் சார்ந்தே வாழவேண்டியுள்ளது.
  • இத்தகைய சமுதாயம் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளதால் அதை ஏற்பது மிகவும் நன்றாகும். இவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்ட சமுதாயம், அரசு, அக்கறை கொண்டுள்ளது. இவ்வாறாக அரசியல் அறிவியல் என்பது மனித இனத்திற்கு, அரசு மற்றும் அரசாங்கத்துடனான தொடர்பினை முக்கியமாக விளக்குகிறது.
  • அரசியல் அறிவியல் என்பாது கோட்பாடு மற்றும் செயல்முறை ஆகியவற்றை பற்றியதாகும். இது அரசியல் முறைமைகளையும், அரசியல் நடத்தைகளையும் விவரித்து பகுப்பாய்கிறது.
  • அரசின் தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றி கண்டறிகிறது. அரசுக்கும் அதன் கீழ் உள்ள சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியனவற்றுக்கும் உள்ள தொடர்பினைப் படிக்கிறது. அரசியல் சூழல்களில் ஆடவர் மற்றும் மகளிர் ஆகியோர் என்ன செய்கிறார்கள் என்பதனை விளக்குகிறது.
  • ஆரம்ப காலகட்டத்தில் இப்பாடம் வரலாறு மற்றும் தத்துவம் ஆகிய பாடங்களோடு இணைந்து செயல்பட்டது. 1903-இல் தோன்றிய ‘அமெரிக்க அரசியல் அறியல் கழகம்’ (Amrican Political Science Association) இப்பாடத்தினை வரலாறு, பொருளியல் மற்றும் பல சமூக அறிவியல் பாடங்களின் பிசியிலிருந்து மீட்டெடுத்து ஒரு தனிப்பாடமாக உருவாக வழிவகை செய்தது.
  • பிற்காலத்தில் அதிகமான அறிவியல் அணுகுமுறை ஏற்பட்ட பிறகு இப்பாடம் உளவியல் மற்றும் மானுடவியல் போன்ற பாடங்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்தது. நடத்தையியல் புரட்சி ஏற்பட்ட பிறகு இப்பாடம் தனிமனிதன், குழுக்கள் ஆகியவற்றின் நடத்தைகள் பற்றி ஆய்ந்தது.
  • பின்னர் தோன்றிய நடத்தையியலால் இப்பாடம் சமூகத்தின் அன்றாட பிரச்சனைகளையும், அரசியல் உண்மைகளையும் பற்றிய படிப்பாக மாறியது.

அரசியல் அறிவியலின் பரப்பெல்லை (Scope of Political Science)

  • அரசியல் அறிவியல் பாடத்தின் பரப்பெல்லை என்பது இந்தப் பாடத்தின் வரம்பு மற்றும் பாட உள்ளடக்கங்கள் பற்றியதாகும். இது அடிப்படையில் ‘அரசு’ என்பதைப் பற்றி படிப்பது மிகவும் பரந்த பகுதிகளை கொண்டதாகும்.
  • ‘அரசு’ என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைப் பகுதிக்குள் தனது சொந்த மக்களின் முறையான மற்றும் மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழிசெய்யும் அரசாங்கத்தையும் கொண்டதாகும். மனித நடத்தை என்பது நிலையாக இல்லாமல் மாறிக்கொண்டேயிருப்பதால் இப்பாடத்தின் பரப்பெல்லை தொடர்ந்து விரிவடைந்துகொண்டே செல்கிறது.
  • இப்பாடம் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடன் மற்ற மனிதர்களுக்கும் உள்ள தொடர்பினைப் பற்றிய சட்டமாக்கல் பற்றி படிப்பதால், இதன் பரப்பெல்லையானது பொருளியல், வணிகவியல், சமூகவியல், சட்டம் என பலவகையாக விரிவடைந்து கொண்டே செல்கிறது.
  • 1948-ல் நடந்த பன்னாட்டு அரசியல் அறிவியல் சங்கமாநாடு இப்பாடத்திற்கு பின்வரும் பரப்பெல்லைகளை குறிப்பிட்டது.
  • அரசியல் கோட்பாடு
  • அரசியல் நிறுவனங்கள்
  • அரசியலின் இயக்கவியல்
  • பன்னாட்டு உறவுகள்

அரசியல் அறிவியல் பாடத்தின் பரப்பெல்லையை மேற்கண்ட நான்கு உபதலைப்புகளில் அடக்கிவிட முடியாது என்பதால் பின்வரும் படவிளக்கம் அரசியல் அறிவியலின் பரந்த பரப்பெல்லையை விளக்குகிறது.

  • அரசியல் அறிவியல் பாடமானது அரசு மற்றும் அரசாங்கங்களின் பிரச்சனைகளைப் பற்றி முக்கியமாகப் படிக்கிறது. தனது குடிமக்களை ஆள்வதற்கான சட்டங்களை உருவாக்கும் அதிகாரத்தினை அரசு பெற்றுள்ளது.
  • அரசு தனது அதிகாரங்களை அரசாங்கள் மூலமாக செயல்படுத்துகிறது. அரசாங்கம் என்பது அரசின் ஒரு முகமை ஆகும். அரசு என்பது அரசாங்கங்களை உள்ளடக்கியதாக இருப்பதால் பிளண்ட்சிலி (Bluntschli) போன்ற அரசியல் கோட்பாட்டாளர்கள் அரசியல் அறிவியலின் பரப்பெல்லையை முகவும் குறைத்து அது ‘அரசு’ என்பதைப் பற்றி மற்றும் படிப்பதாக கூறுகின்றனர்.
  • அரசாங்கம் என்பது அரசின் ஒரு பகுதியே ஆகும். அதே சமயம் கார்ல் டாஷ் (Karl Deutsch) போன்ற அறிஞர்கள் ‘அரசியல் அறிவியல் என்பது அரசாங்கங்களைப் பற்றி மட்டுமே படிப்பது’ என்கின்றனர்.
  • ஹெரால்ட் லாஸ்கி (Harold Laski) போன்ற அறிஞர்கள் ‘அரசியல் அறிவியல் என்பது அரசுகள் மற்றும் அரசாங்கங்கள் ஆகிய இரண்டையும் படிப்பதாக’ வாதிடுகின்றனர்.
  • அரசு மற்றும் அரசாங்கம் ஆகிய இரண்டுக்கும் அடிப்படையான வேறுபாடுகள் இருந்தாலும் அவைகளின் பரப்பெல்லைகளை ஆயும்போது ஒன்றினை விட்டு மற்றதை தனியாகப் படிக்க முடியாது. அரசியல் அறிவியலின் பரப்பெல்லையானது, அரசின் கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்கால வளர்ச்சிகளையும் அரசின் மேம்பாட்டினையும் பற்றிப் படிப்பதாகக் கூறலாம்.
  • அரசியல் கோட்பாடு என்பது அரசியல் அறிவியலின் ஒரு முக்கியமான பகுதியாகக் கருதப்படுகிறது. அரசியல் கோட்பாடு என்பது அரசியல் சிந்தனைகள் மற்றும் அரசியல் தத்துவங்களை உள்ளடக்கிய அரசியல் அறிவியலின் முக்கிய கருத்தாக்கங்களை விவரிக்கும் ஒரு பாடமாகும்.
  • அரசியல் அறிவியல் பாடமானது அரசியல் நிறுவனங்களின் தன்மை, அமைப்பு மற்றும் செயல்பாடு ஆகியவைகளைப் பற்றியதாகும். இப்பாடம் மேலும் பலவகையான அரசமைப்புச் சட்டங்களையும் மற்றும் பிற அரசாங்கங்களை ஒப்பிட்டு பகுப்பாய்வு செய்யும் பணியினையும் செய்கிறது.
  • இப்பாடத்தின் பரப்பெல்லை தற்கால அரசியல் மற்றும் அரசாங்கங்களின் சக்திகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இப்பாடம் அரசியல் கட்சிகள், தன்னலக்குழுக்கள் மற்றும் அழுத்தக்குழுக்கள் ஆகியவைகளைப் பற்றி படிப்பதாகவும் அமைந்துள்ளது.
  • அரசியல் இயக்கவியல் பற்றிய செயலறிவிலான கற்றலாக தனிமனிதர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவைகளின் நடத்தைகள் பற்றியும் ஆராய்கிறது. முக்கியமாக அரசியல் அறிவியல் என்ற பாடம் தனி மனிதனுக்கும், அரசுக்கும் உள்ள உறவுமுறைகளின் மீது பெரிதும் ஆர்வம் காட்டுகிறது.
  • இதன் விளைவாக தற்கால அரசியல் அறிஞர்கள் அரசியல் அறிவியலின் நடத்தையியல் மற்றும் முறைமை அணுகுமுறையின் அடிப்படையில், அரசியல் அறிவியல் பாடத்தின் பரப்பெல்லையை மிகவும் விரிவுபடுத்தியுள்ளனர்.
  • இதனால் ‘அரசியல் சமூகமயமாதல்;, ‘அரசியல் பண்பாடு’. ‘அரசியல் மேம்பாடு’, ‘முறைசாரா அமைப்புகள்’, ‘அழுத்தக் குழுக்கள்’ போன்றவைகளும் அரசியல் அறிவியல் பாடத்தின் பரப்பெல்லைக்குள் வருகின்றன.
  • மேலும் அரசியல் அறிவியலின் பரப்பெல்லையின் கீழ் தூதாண்மை (Diplomacy), பன்னாட்டுச் சட்டங்கள் , பன்னாட்டு அமைப்புகள் போன்றவைகளும் உள்ளடங்கியுள்ளன. அரசாங்கம் சார்ந்த மற்றும் அரசாங்கம் சாராத நிறுவனங்களின் அரசியல் பிரச்சனைகளின் மீதான பொதுக்கொள்கைகளை வகுப்பு பற்றியும் அரசியல் அறிவியல் பாடம் தனது பரப்பெல்லையில் உள்ளடக்கியுள்ளது.

அரசியல் அறிவியல் என்பது ஒரு அறிவியலா? அல்லது ஓர் கலையா?

(Is Political Science, a Science or an Art?)

  • அரசியல் அறிவியல் என்ற இந்த பாடம் ஒரு கலைப் பாடமா? அல்லது ஒரு அறிவியல் பாடமா? என்பது பற்றியான ஒரு பெரிய விவாதமே அரசியல் அறிவியல் அறிஞர்களிடையே நிலவி வருகிறது.
  • சில அறிஞர்கள் இப்பாடமானது அரசு மற்றும் அரசாங்கம் என்பது பற்றிய ஒரு அறிவியல் பாடம் என்று கருதுகின்றனர். மற்றும் சிலரோ இப்பாடத்தினை மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள ஒரு கலைப் பாடம் என்கின்றனர். இப்பாடத்தின் தன்மை, வழிமுறைகள், அணுகுமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அறிவியல் தன்மை மிகவும் குறைவாக காணப்படுவதால் அகஸ்டே கோம்டே (Auguste Comte) மற்றும் மைட்லேன்ட் (Mairland) போன்ற அறிஞர்கள் இப்பாடத்தினை ஒரு கலைப் பாடமாகக் கருதுகின்றனர்.
  • ஏனெனில் இப்பாடத்தில் தொடர்ச்சி, மேம்பாட்டுத்தன்மை, அடிப்படை தெளிவு போன்றவைகளும், உலகம் முழுவதும் ஒப்புக்கொள்ளக் கூடிய பொதுவான கொள்கைகளும், அறிவியல் பூர்வ அணுகுமுறைகளும், பரிசோதனை முறைகளும் மிகவும் குறைவாகவே இருக்கிறது என்று இவர்கள் வாதிடுகின்றனர்.
  • மேலும் நம்பகத்தன்மை, சரிபார்ப்புத்தன்மை, தெளிவு, துல்லியம் போன்ற தூய அறிவியலின் கூறுகள் இப்பாடத்தில் இல்லை என்பதும் இவர்களின் வாதமாகும். தூய அறிவியல் பாடங்களான இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களில் உள்ள போல காரணங்களையும் விளைவுகளையும் (Cause and Effect) தொடர்புப்படுத்தி உருவக்கும் பொதுக்கோட்பாடுகள் உலகம் முழுவதும் இப்பாடத்தில் ஒரே மாதிரியாக இல்லை என்பதனால இப்பாடத்தினை ஒரு கலைப் பாடம் என்றே பல அறிஞர்களும் கருதுகின்றனர்.
  • இப்பாடத்தினை ஒரு கலைப் பாடமே என்று வாதிடுவோர் மத்தியில் அரிஸ்டாட்டில்தான் இதனை ஒரு மேலான அறிவியல் என்று முதன்முதலாக அழைத்தார்.
  • ப்லன்ட்சிலி (Bluntschli), மாண்டெஸ்கியூ (Montesquieu), போடின் (Bodin) , ஹாப்ஸ் (Hobbes) போன்ற அறிஞர்கள் இந்த கருத்தினை ஒப்புக்கொண்டு இப்பாடம் ஒரு அறிவியல் பாடமே என்கின்றனர்.
  • முனைவர் கார்னர் (Dr. Garner) போன்றோர் இப்பாடத்திலும் முறைமையான அணுகுமுறை, உற்றுநோக்கல், பரிசோதனை போன்றவை இருப்பதாக கூறுகின்றனர்.
  • தூய அறிவியல் பாடங்களில் உள்ளதுபோல உலகம் முழுவதும் ஒப்புக்கொள்ளப்பட்ட கோட்பாடுகள் அரசியல் அறிவியல் பாடத்தில் முழுக்க இல்லாமல் போனாலும் கூட இந்த அரசியல் அறிவியல் பாடத்திலும் பல கருத்துக்களை பொதுமைப்படுத்தி நிரூபிக்க முடியும் என்பது இவர்களின் கருத்தாகும்.
  • உதாரணமாக சமூக நல மேம்பாட்டுக்கும், பன்முகத் தன்மை கொண்ட சமுதாயங்களுக்கும் மக்களாட்சியே சிறந்த ஆட்சிமுறை என்ற கருத்து பொதுவானதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து முடிவு முற்காலம் , இடைக்காலம், நவீனகாலம் ஆகியவற்றில் பல்வேறு வகையான ஆட்சி முறைகளை ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே உருவாக்கப்பட்டது.
  • ஆனால் அதே சமயத்தில் இப்பாடத்தின் தன்மை, வழிமுறை, கோட்பாடுகள் ஆகியன பற்றி ஒத்த கருத்துக்களை ஏற்படுத்த முடியவில்லை. ஏனெனில் இப்பாடத்தில் அரசியல் நிறுவனங்கள் அனைத்திலுமே மனித உறவுகள் தொடர்பில் இருக்கின்றன.
  • மனிதனோடு தொடர்புடைய எந்த ஒரு செயல்பாடும் நிலையானதாக இல்லாமல் மாறக்கூடியதாகும். இந்த காரணத்தாலேயே இப்பாடத்திற்கு முழுமையான அறிவியல் என்ற தகுதியினை கொடுக்க இயலவில்லை.
  • எப்படியிருப்பினும் ஏகாதிபத்தியம், காலனியாதிக்கம், சமத்துவமின்மை, எழுத்தறிவின்மை, வறுமை போன்றவை சமுதாயத்தினை பெரிதும் பாதிக்கும் காரணிகள் என்பதை அனைத்து அரசியல் அறிஞர்களும் ஏகமனதாக ஒப்புக்கொள்கின்றனர்.
  • அதேபோல ‘காரணங்கள் மற்றும் அதன் விளைவுகள்’ பற்றிய தூய அறிவியல் கோட்பாடு அரசியல் அறிவியலுக்கு பொருந்தாது என்று கூறினாலும், ‘வறுமை, வேலையின்மை போன்ற காரணிகள் புரட்சியினை ஏற்படுத்திவிடும்’ என்பது அரசியல் அறிவியலிலும் ‘காரண விளைவுக் கோட்பாடு’ (Cause and Effect Theory) உள்ளதைக் காட்டுகிறது. எனவேதான் சில அரசியல் அறிஞர்கள் இப்பாடத்தினை ஒரு அறிவியல் பாடம் என தொடர்ந்து கூறி வருகின்றனர்.
  • எப்படியிருப்பினும், அரசியல் அறிவியலை இயற்கை அறிவியலுடன் ஒப்பிட முடியாமல் இருந்தாலும் அது அரசு மற்றும் அரசாங்கத்துடனான தனிமனிதர்களின் உறவினைப் பற்றிய ஓர் சமூகவியலாகும்.
  • அரசியல் அறிவியல் என்பது கலையா அல்லது அறிவியலா என்பது கற்பதற்கு எடுத்துக் கொண்ட பொருள் மற்றும் அதனைக் கற்றறிய பயன்படுத்தும் அணுகுமுறையைப் பொறுத்ததாகும்.

அரசியல் அறிவியல் என்றால் என்ன?

  • அரசியல் அறிவியல் என்றால் என்ன?

அரசு அரசாங்கம் மற்றும் அரசியல் பற்றிய அறிவியல் பூர்வ படிப்பே அரசியல் அறிவியல் எனலாம்.

  • அரசியல் அறிவியல் பாடம் எதுவாக இல்லை?

அரசியல் அறிவியல் என்பது அனைத்து விடைகளையும் தன்னகத்தேகொண்ட முழுநிறைவான அறிவியலாக இல்லை.

  • அரசியல் அறிவியல் ஓர் அறிவியலா? தன்மையுடையதாகிறதா?

‘அரசியல்’ எண்ற இந்த பாடம் அமெரிக்க அரசியல் அறிவியல் சிந்தனையாளர்களின் அறிவியல் பூர்வ அணுகு முறைகளுக்குப் பிறகுதான் ““ரசியல் அறிவியல்” எனப் பெயரிட்டு அழைக்கப்பட்டது. எனினும் தூய அறிவியல் பாடங்களான இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற பாடங்களுக்கு இணையாக இந்த அரசியல் அறிவியல் பாடத்தினைக் கருத முடியாது. ஆகவே, மனித நடத்தையைப் பற்றியதாக இருப்பதால் மற்றொரு புறத்தில் அரசியல் அறிவியல் என்பது அரசு மற்றும் அரசாங்கத்தைப் பற்றிய அறிவியலாகும் என வாதிட்டனர். அரசியல் அறிவியல் பாடத்தினை ஓர் சமூக அறிவியல் பாடம் என்று அழைப்பதுதான் பொருத்தமானதாக இருக்கும்.

எந்த ஒரு சமுதாயத்திலும் அரசியல், பொருளாதாரம், சமூகம் மற்றும் மதம் சம்மந்தமான பலவித செயல்பாடுகள் ஒரே நேரத்தில் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கின்றன. இந்த செயல்பாடுகள் அனைத்திலும் தனிமனிதர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவை தவிர உட்புற, வெளிப்புற அமைப்புகளும் உள்ளன. இத்தகைய செயல்பாடுகள் மற்றும் அதில் ஈடுபட்டுள்ள அனைவருமே அரசின் சட்டங்களால் ஆளப்படுவதுடன் கட்டுப்படுத்தப்படுகின்றனர்.

குடிமக்களுக்கும் அரசின் சட்டங்களை மதித்து ஏற்றுக் கொள்வதற்கான கட்டுப்பாடு உள்ளது. சட்டத்திற்கு மேலானவர் என்று எவருமில்லை. சட்டங்களை மீறுவது தண்டனைக்குரிய குற்றமாகும். அவ்வாறு சட்டத்தினை கடைபிடிக்காத நபர்களை தண்டிப்பதும் சமுதாய அமைதி மற்றும் ஒழுங்கிணை நிலைநாட்டி அதன் மூலமாக சட்டத்தினை கடைபிடிப்பவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிப்பதும் அரசின் கடமையே ஆகும். இதனால் அறியப்படுவது என்னவெனில் ஒருவர் விரும்பினாலும் அல்லது விரும்பாவிட்டாலும் அவர் அரசின் கீழ் அதன் சட்டத்திற்கு உட்பட்டு வாழ்வது அவசியமாகிறது.

குறிப்பிடத்தக்க மேற்கோள்

நீ யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். நீ எப்படியாக வேண்டுமானாலும் மாற விரும்பலாம். நீ அரசியலின் மீது ஆர்வம் இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால் அரசியல் உன் மீது ஆர்வமாக இருக்கிறது!

  • மார்ஷல் பெர்மன் (Marshall Bermen)

அரசியல் அறிவியலை படிப்பதற்கான அணுகுமுறைகள்

அணுகுமுறை என்பது ஒரு அரசியல் நிகழ்வினைக் கண்டுணர்ந்து பின்பு அதனை விளக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டது ஆகும். அரசியல் அறிவியலை பற்றி அறிந்து கொள்ள பல்வேறு அணுகுமுறைகள் உள்ளன. அவைகளை பாரம்பரிய அணுகுமுறைகள் மற்றும் தற்கால அணுகுமுறைகள் என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம். பாரம்பரிய அணுகுமுறைகள் என்பவை அனுமானங்கள் மற்றும் கருத்தறிவு அடிப்படையிலானவை. தற்கால அணுகுமுறைகள் என்பவை அனுபவ அறிவு மற்றும் அறிவியல் தன்மையை அடிப்படையாக கொண்டவை ஆகும்.

  1. பாரம்பரிய அணுகுமுறை (Traditional Approach)

அ) தத்துசார்த்த அணுகுமுறை (Philosphical Approach)

இந்த அணுகுமுறைதான் அரசியலைக் கற்பதற்கான மிகவும் பழமையான அணுகுமுறையாகும். இதனை அனுமானங்கள் மற்றும் மனோதத்துவ அல்லது நன்னெறி சார்ந்த அணுகுமுறை என்றும் கூறலாம். இந்த அணுகுமுறைப்படி அரசு, அரசாங்கம் மற்றும் மனிதனின் அரசியல் நடத்தையைப் பற்றிய படிப்பானது சில இலக்குகள், நீதிநெறிகள் மற்றும் உண்மைகள் , ஆகியவற்றை அடைவதில் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. இந்த அணுகுமுறைப்படி இந்த அரசியல் அறிவியல் பாடம் நன்நெறி உலகத்தோடு நெருக்கமாக கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் இந்த அணுகுமுறை மிகவும் மேலோட்டமானதாகவும் மிகுந்த யூகங்கள் அடிப்படையிலானதாகவும் இருப்பதாக பல விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

ஆ) வரலாற்று அணுகுமுறை (Historical Approach)

இந்த அணுகுமுறையானது ‘அரசியல் அறிவியல்’ என்ற இந்த பாடம் கடந்த காலங்களில் அரசுகளும், அரசாங்கங்களும் அரசியல் நிறுவனங்களும் எவ்வாறு தோன்றி படிப்படியாக வளர்ச்சிபெற்று வளர்ந்து வந்தன என்பதை அறிந்துகொள்வதில் இருந்து தொடங்குகிறது. தனி மனிதர்களும், அவர்களின் தனிப்பட்ட விருப்பங்களும் எவ்வாறு அரசியல் அமைப்புகளின் வெற்றி தோல்விகளுக்கு காரணமாக இருந்தன என்பதைப்பற்றியும் , அதனால் கற்றுக்கொண்ட பாடங்கள் எவ்வாறு எதிர்கால அரசியல் அமைப்புகளுக்கு உதவின என்பதும் இந்த அணுகுமூறையினால் பெறப்படும் சில தகவல்களாகும். தற்கால அரசியல் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதற்கு அதே போன்ற வரலாற்று நிகழ்வுகள் அறியப்பட்டன. இதனை விமர்ச்சிப்பவர்கள் கூறுவது என்னவென்றால் பழங்காலத்தைப் பற்றிய பல தகவல்கள் பிரகாசமாக தோன்றிய போதிலும் அவைகளில் சில மேலோட்டமான ஒற்றுமைகள் தந்து பல சமயங்களில் நம்மை தவறான பாதைக்கு கொண்டு சேர்த்து விடும் என்பது இவர்களின் வாதமாகும்.

இ) சட்டபூர்வ அணுகுமுறை (Legal Approach)

அரசியல் அறிவியலைப் பற்றி கற்பது என்பது அரசினால ஓர் அரசியல் அமைப்பினை நிர்வகிக்க உருவாக்கப்பட்ட சமூக நிறுவனங்களுடனான தொடர்புடையதாகும். மேலும் அரசு என்பது சட்டம் மற்றும் ஒழுங்கு பற்றியதாக இருப்பதால் அரசியல் கோட்பாட்டாளர்கள் நீதித்துறை நிறுவனங்கள் மீது அதிகக் கவனம் செலுத்துகின்றனர். இந்த அணுகுமுறையானது சட்டத்தினை, உருவாக்கி அதனை செயல்படுத்தும் ஒரு நிறுவனமாகவே அரசினைப் பார்க்கின்றது. சில அரசியல் விமர்சகர்கள் இந்த அணுகுமுறை மிகவும் குறுகிய பார்வையிலானது என்பதுடன் சட்ட மற்றும் ஒழுங்கினைச் செயல்படுத்துவதைத் தவிர அரசுக்கு பல்வேறு பணிகள் உள்ளனவென்றும், சட்டம் என்பது தனி மனித வாழ்வின் ஒரே ஒரு அம்சம் பற்றியதாகும் என்றும், சட்டத்தை வைத்தே மனிதனின் அரசியல் நடத்தையை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது எனவும் குறிப்பிடப்படுகின்றனர்.

ஈ) நிறுவனம் சார்ந்த அணுகுமுறை (Institutional Approach)

அரசியலின் முறையான அமைப்புகளான சட்டமன்றம், நீதித்துறை மற்றும் செயலாட்சித் துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகளின் அடிப்படையில் அரசியல் அறிவியலை அணுகுவது நிறுவனம் சார்ந்த அணுகுமுறையாகும். இந்த அணுகுமுறையை கட்டமைப்பு அணுகுமுறை (Structural Apporach) என்றும் சிலர் கூறுகிறார்கள். இந்த அணுகுமுறையில் பல்வேறு முறைசாரா அமைப்புகளைப் பற்றி படிப்பதோடு பல்வேறு வகையான அரசாங்கங்களும் ஒப்பீட்டு முறையில் படிக்கப்படுகின்றன. இந்த அணுகுமுறையில் துறை சார்ந்த மற்றும் முறை சாராத அமைப்புகளை மட்டும் கவனத்தில் எடுத்துக்கொள்கிறார்களே தவிர அதனுடன் தொடர்புடைய மனிதர்களின் நடத்தையினை கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை என்பது ஒரு குறைபாடாகும்.

  1. நவீன அணுகுமுறைகள் (Modern Approach)

அ) சமூகவியல் அணுகுமுறை(Sociological Approach)

சமூகவியல் அணுகுமுறையானது சமூக உறுப்பினர்களின் அரசியல் நடத்தையை சமூக சூழலில் புரிந்து கொள்வது குறித்து வலியுறுத்துகிறது. அரசு என்பது அடிப்படையில் ஒரு சமூக உயிரினமாகும். எனவே, அரசியல் என்பதை சமூக காரணிகளின் மூலம் புரிந்து கொள்ளமுடியும். ஆனால், அரசியல் அறிஞர்கள் சிலர் அரசியல் அறிவியல் பாடத்தில் சமூகவியல் பிரச்சனைகளுக்கு அதிகக் கவனம் மற்றும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது அரசியல் அறிவியலின் தனித்தன்மைக்கு ஏற்புடையதன்று என்று கருதுகின்றனர்.

ஆ) உளவியல் அணுகுமுறை (Psychological Approach)

உளவியல் அணுகுமுறையானது அரசியல் மற்றும் சமூக நிறுவனங்கள் உளவியல் விதிமுறைகளின் அடிப்படையில் இயங்க வேண்டுவதின் அவசியத்தை விளக்குகின்றன. இவ்வணுகுமுறை அரசியல் தலைவர்களைப் பற்றி குறிப்பிடத்தகுந்த அறிவு வெளிப்படுவதாக என அனுமானிக்கிறது. இருந்தபோதிலும் இந்த அணுகுமுறையானது சமூகவியல் , சட்டம் மற்றும் பொருளியல் காரணிகளை புறந்தள்ளுகிறது என்பது இந்த அணுகுமுறையின் ஒரு குறையாகக் கருதப்படுகிறது.

இ) பொருளியல் அணுகுமுறை (Economical Approach)

பொருள்களின் உற்பத்தி மற்றும் பகிர்ந்தளித்தல் ஆகிய இரண்டும் ஒரு அரசுக்கு மிக முக்கியமான பணிகள் என்பதால் அரசியல் அறிவியலை பொருளியல் அடிப்படையில்தான் படிக்க வேண்டும் என்று கூறுவது பொருளியல் அணுகுமுறையாகும். பொருளாதார விவகாரங்களை ஒழுங்குபடுத்தும் அரசின் பங்கு மற்றும் அரசினுடைய அரசியல் நடைமுறையுடனான பொருளாதாரத்தின் தொடர்பு பற்றியும் இந்த அணுகுமுறை வலியுறுத்துகிறது. ஒரு மனிதனின் அரசியல், மற்றும் பொருளாதார வாழ்விபை புரிந்து கொண்டு தொடர்புபடுத்துவது இந்த அணுகுமுறையாகும். இருந்தபோதிலும் இந்த அணுகுமுறையில் பொருளாதார விவாகரங்களை மட்டுமே கருத்தில் கொண்டு உளவியல் மற்றும் சமூகவியல் பிரச்சனைகளைப் புறந்தள்ளுவது என்பது ஒரு குறைபாடாகும்.

ஈ) நடத்தையில் அணுகுமுறை (Behavioural Approach)

நடத்தையியல் அணுகுமுறையானது அரசியல் நடத்தை என்பதனை மையமாகக் கொண்டதாகும். ஓர் அரசின் கீழ் வாழும் மனிதர்களின் மனப்பாங்கு மற்றும் முன்னுரிமைகளை அரசியல் சூழலில் கற்பதற்கு இந்த அணுகுமுறை அதிகக் கவனம் செலுத்துகிறது. இந்த அணுகுமுறை அரசியலை முறைமைவாதம் மற்றும் கருத்தறிவுவாதத்தின் அடிப்படையில் கற்பதலிருந்து விலகி மனிதனின் அரசியல் நடத்தையை படிப்பதில் கவன் செலுத்துகிறது. இருந்தபோதிலும் சில அரசியல் அறிவியல் விமர்சகர்கள் நடத்தையியல் அணுகுமுறை அரசியல் அறிவியல் பாடத்தை அறிவியல் முறைகளின் தவறான கருத்தாக்கப் புரிதலோடு அணுகுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

உ) மார்க்சிய அணுகுமுறை (Marxist Approach)

பிற தற்கால அணுகுமுறைகளைக் காட்டிலும் மார்க்சிய அணூகுமுறை அடிப்படையில் மிகவும் வேறுபட்டதாகும். இந்த அணுகுமுறையானது வர்க்கப் போராட்டத்தில் அரசு என்பது ஒரு தவிர்க்க முடியாத விளைவினால் உருவான அமைப்பு என்று கூறுகிறது. மேலும் அரசியல் மற்றும் பொருளியல் சக்திகள் ஆகியவை ஒன்றோடு ஒன்று உட்செயல்பாட்டிலான தொடர்பு கொண்டவை என்பதனையும் , இவை இரண்டையும் ஒன்றைவிட்டு ஒன்றினைப் பிரிக்க முடியாது என்பதனையும் விளக்குகிறது. இந்த அணுகுமுறை பொருளியல் காரணிகளுக்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுப்பதாகவும், பிற முக்கியமான காரணிகளை இந்த அணுகுமுறை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்பதும் இந்த முறையை பற்றிய விமர்சகர்களின் கருத்தாகும்.

மேற்கண்ட பல அணுகுமுறைகளையும் பகுப்பாய்வு செய்து பார்க்கிறபோது, ஒவ்வொரு அணுகுமுறையிலும் ஒருசில குறைபாடுகள் இருப்பினும் ஒவ்வொரு விதத்தில் அவை முக்கியமானவைதான் என்பதும், அரசியல் அறிவியலை முழுமையாகப் புரிந்து கொள்ள இந்த அணுகுமுறைகள் அனைத்துமே பயன்படுகின்ற என்பதும் உணரப்படுகிறது.

  1. அரசியல் அறிவியலுக்கும் பிற சமூக அறிவியல்களுக்கும் இடையேயான தொடர்பு

அ) அரசியல் அறிவியல் மற்றும் வரலாறு (Political Science and History)

அரசும் அதன் நிறுவனங்களும் வரலாற்றின் படிப்படியான வளர்ச்சியால் உருவானவை ஆகும். அரசு தனக்குரிய பல பொதுவான சட்டங்களையும், கொள்கைகளையும் வரலாற்று உண்மைகளின் அடிப்படையிலேயே கண்டறிந்துள்ளது என்பது உண்மை ஆகும். அரசியல் வரலாறு என்பது அரசியல் நிகழ்வுகளையும், அரசியல் இயக்கங்களையும் விவரிப்பதாகும். ஃபிரிமேன் (Freeman) என்பவரின் கூற்றுப்படி “வரலாறு என்பது கடந்தகால அரசியல், அரசியல் என்பது நிகழ்காலத்தின் வரலாறு” என்பது ஒரு சரியான மற்றும் பொருத்தமான விளக்கமாகும். ஜான் சீலே (John seeley) தனது மேற்கோளில் “அரசியல் அறிவியல் இல்லாத வரலாறு பழமே இல்லாத ஓர் மரம் எனும் அதேபோல வரலாறு இல்லாத அரசியல் அறிவியல் என்பது வேர் இல்லாத ஓர் மரமாகும்” என்று விளக்குகிறார். இந்த உதாரணம் இந்த இரண்டு பாடங்களுக்கும் உள்ள நெருங்கிய உறவு முறையை தெளிவாக உணர்த்துகிறது.

ஆ) அரசியல் அறிவியல் மற்றும் பொருளியல் (Political Science and Economics)

பொருளியல் என்பது அரசியல் அறிவியலின் ஒரு கிளைப்பிரிவு என்று பண்டைய கிரேக்கர்கள் கருதினார்கள் . அவர்கள் அரசியல் அறிவியல் பாடத்தினை அரசியல் பொருளாதாரம் (Political Economy) என்றே அழைத்தனர். அரசியல் பொருளாதாரம் என்ற பாடமானது அரசியல் நிறுவனங்களும், அரசியல் சூழல்களும் பொருளியலுடன் நெருங்கிய உறவுமுறையில் இருப்பதனை விளக்குகிறது. நாட்டிலுள்ள ஒவ்வொரு குழுக்களும் தங்களது பொருளியல் விருப்பங்களை நிறைவு செய்து கொள்ள அரசியல் செயல்பாடுகளையும், அரசியல் சூழல்களையும் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தக்கொண்டு செயல்படுகிறார்கள். இந்த இரண்டு பாடங்களையும் இணைக்கும் பல கருத்துக்கள் பாடத்தில் இருக்கின்றன. இவை ஒரே நோக்கம் கொண்டதாக இருப்பதுடன் மக்களுக்கு சிறந்த வாழ்வினைத் தரும் நோக்கமுடையதாகும்.

இ) அரசியல் அறிவியல் மற்றும் அறவியல் (Political Science and Ethics)

அறவியல் என்பது அரசியலோடு நெருங்கிய தொடர்புடைய சமுதாயத்தில் , தனிமனிதர்களுடைய நடத்தையைக் கட்டுப்படுத்தும் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் ஆகியவற்றை உருவாக்குவதுடன், நீதிநெறி மூறைமையோடும் தொடர்புடைய அறவியலாகும். அரவியல் என்பது நீதி முறைமையின் அறிவியலாகும். அதேபோல அரசியல் அறிவியல் என்பது அரசியல் முறைமையின் அறிவியல் ஆகும். அரசியல் அறிவியல் மற்றும் அறவியல் ஆகிய இரண்டு பாடங்களும் மனித சமுதாயத்தை மிகவும் சரியான மற்றும் மாண்பான வாழ்வினை நோக்கி நெறிப்படுத்துவனவாகும்.

ஈ) அரசியல் அறிவியல் மற்றும் சமூகவியல் (Political Science and Sociology)

அரசியல் அறிவியலும், சமூகவியலும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்புடைய பாடங்களாகும். அரசு மற்றும் பிற அரசியல் நிறுவனங்கள் அனைத்தும் எவ்வாறு தோன்று வளர்ந்தன என்பதன் அடிப்படைத் தகவல்களை சமூகவியல் பாடமே நமக்கு தரமுடியும். அரசியல் அறிவியல் பாடத்தினை கொள்கை அறிவியல் (Policy science) பாடம் என்றும் கூறுகின்றனர். அரசின் பொதுக்கொள்ஐ (Public Policies) களை வகுக்க மக்களின் சமூக தேவைகளைப் பற்றிய அறிவு மிகவும் அவசியமாகத் தேவைப்படுகிறது. சமூகவியல் அறிவு இல்லாமல் எந்தவொரு நாட்டின் அரசியலையும் சிறப்பாக நடத்தமுடியாது. அதேபோல சமூகவியலுக்கு அரசியல் அறிவியலானது அரசின் அமைப்பு மற்றும் பணிகள், அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் சமுதாயத்தை எவ்வாறு பெருமளவில் பாதிக்கிறது என்பன பற்றிய தகவல்களைத் தருகிறது.

உ) அரசியல் அறிவியல் மற்றும் உளவியல் (Political Science and Psycology)

உளவியல் என்பது மனித நடத்தையின் அனைத்து அம்சங்களையும் பற்றி படிக்கும் ஒரு பாடமாகும். அரசியல் அறிவியல் என்பது மனிதர்களின் அரசியல் நடவடிக்கைகளைப் பற்றிய ஒரு பாடமாகும். உளவியல் என்பது தனிமனிதர்கள் மற்றூம் குழுக்களின் குறிப்பிட்ட நடத்தைப் பாங்கிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. உளவியல் பாடம் அரசியல் கட்சிகளின் நடத்தை மற்றும் அரசிலுள்ள பிற குழுக்களின் செயல்பாடுகள் ஆகியவற்றினை புரிந்து கொள்ள அரசியல் அறிவியலுக்கு உதவி செய்கிறது. பார்க்கர் (Barker) என்ற அறிஞர் கூறியது போல “மனிதர்களின் பல புதிரான நடவடிக்கைகளைப் பற்றி அறிந்து கொள்ளும் விடைப்பகுதி உளவியல் பாடத்திலேயே உள்ளது”. நமது முன்னோர்கள் உயிரியல் அடிப்படையில் சிந்தித்தார்கள் என்றால் நாம் உளவியல் அடிப்படையில் சிந்திக்கிறோம் என்கிறார்.

ஊ) அரசியல் அறிவியல் மற்றும் பொதுநிர்வாகம் (Political Science and Public Administration)

அரசியல் அறிவியலும், பொது நிர்வாகமும் முகவும் நெருங்கிய தொடர்புடைய பாடங்களாகும். பொது நிர்வாகப்பாடத்தில் வரும் ‘பொது’ என்ற வார்த்தை அரசாங்கத்தை குறிக்கும். பொது நிர்வாகம் என்பது அரசு சாரா அமைப்புகளையும் உள்ளடக்கியதாகும். பொது நிர்வாகம் என்பது அரசாங்கத்தின் கொள்கைகளை செயல்படுத்துவதாகும். அரசியல் அறிவியல் என்பது பொதுக் கொள்கை உருவாக்க நடைமுறையாகும். அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகம் ஆகிய இரண்டு தூறைகளின் நோக்கங்களுமே ஒப்புமை உள்ளவையாகும். இவை இரண்டுமே வளங்களைத் தகுந்த முறையில் பயன்படுத்துவதுடன் சமூக நலனை மேம்படுத்துகின்றன. இவ்வாறு அரசியல் அறிவியல் பாடம் என்பது ஆளுகை (Governance) என்பதை முறையாகப் படிக்க உதவும் ஒருபாடமாகும். அரசியல் அறிவியல் பாடத்தில் அறிவியல் பூர்வமான முறைகளும், செயலறிவிலான பகுப்பாய்வும் செயல்படுத்தப்படுகின்றன. அதில் செயலறிவிலான புலனாய்வுகள் இருப்பினும், துல்லியமான முன்கணிப்புகள் மிகவும் கூறைவாகவே உள்ளன. அரசியல் அறிவியலானது அரசு , அதன் அங்கங்கள் மற்றும் நிறுவனங்களை ஆராய்கிறது. மேலும் அரசியல் அறிவியல் பாடத்தில் சமூகம், பண்பாடு, பொருளாதாரம் மற்றும் உளவியல் காரணிகள் அதிகம் கலந்துள்ளன. பிற சமூக அறிவியல் பாடங்கள் அனைத்திலிருந்தும் அரசியல் அறிவியல் பாடம் நிறைய கருத்துக்களையும், தகவல்களையும் பெற்றிருந்தாலும் அதிகாரத்தின் மீதான அதன் தனிக்கவனம் அதனை பிற துறைகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. அரசியல் அறிவியல் என்ற இப்பாடத்தில், அதிகாரம், ஒப்பீட்டு அரசியல், பன்னாட்டு உறவுகள், அரசியல் கோட்பாடுகள், பொதுச்சட்டங்கள், பொதுக்கொள்கைகள் என அரசியல் அறிவியலில் பல உட்பிரிவுபாடங்களில் கவனம் செலுத்தப்படுகிறது. அரசியல் அறிவியலைக் கற்பதன் மூலமாக அரசியல் நடைமுறைகள், அரசாங்க மூறைமை மற்றும் குடிமக்களின் வழ்வில் அது எங்ஙனம் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது என்பதன் அடிப்படைகளைப் புரிந்து கொள்ள முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!