Advanced Tamil Questions

அரங்கவியல் 11th Advanced Tamil Unit 2 Questions

11th Advanced Tamil Unit 2 Questions

2] அரங்கவியல்

1) விவேகானந்தர் அமெரிக்காவில் எப்போது சொற்பொழிவாற்றினார்?

A) செப்டம்பர் 11, 1983

B) செப்டம்பர் 13, 1983

C) செப்டம்பர் 23, 1983

D) செப்டம்பர் 17, 1983

விளக்கம்: விவேகானந்தர் அமெரிக்காவின் சிகாகோ நகரில் செப்டம்பர் 11, 1983 அன்று நடைபெற்ற உலகச் சமய மாநாட்டுக் கூட்டத்தில் சொற்பொழிவாற்றினார்.

2) அரங்கவியல் கீழ்க்காணும் எதனை குறித்த ஆய்வு ஆகும்?

A) இயற்றமிழ், இசைத்தமிழ்

B) நாடகக்கலை, பேச்சுக்கலை

C) இசைத்தமிழ், நாடகத்தமிழ்

D) இயற்றமிழ், நாடகத்தமிழ்

விளக்கம்: முத்தமிழான இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் ஆகியவை சார்ந்த நிகழ்த்துக்கலைகள் அவற்றுக்காக வடிவமைக்கப்பட்ட அரங்கங்கள் வழியாகவே வெளிப்படுகின்றன. அத்தகைய கலைகளான நாடகக்கலை, பேச்சுக்கலை ஆகியன குறித்து ‘அரங்கவியல்’ பேசுகிறது.

3) கூற்றுகளை ஆராய்க.

1. உரையாடல்தான் நாடகத்தின் அடிப்படை அலகு

2. நூலின் இடப்பக்க ஓரத்தில் ஒருவர் மாற்றி ஒருவர் பேசுவதாக இருப்பதுதான் நாடக நூலின் தனித்த அடையாளம்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. உரையாடல்தான் நாடகத்தின் அடிப்படை அலகு

2. நூலின் இடப்பக்க ஓரத்தில் ஒருவர் மாற்றி ஒருவர் பேசுவதாக இருப்பதுதான் நாடக நூலின் தனித்த அடையாளம்.

4) கூற்றுகளை ஆராய்க.

1. உரையாடல் இல்லாமல் மௌன நாடகங்களும் நடைபெறும்.

2. உரையாடல், காட்சி, அங்கம் ஆகிய மூன்றும் இணைந்தது நாடகம் என்பர்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. உரையாடல் இல்லாமல் மௌன நாடகங்களும் நடைபெறும்.

2. உரையாடல், காட்சி, அங்கம் ஆகிய மூன்றும் இணைந்தது நாடகம் என்பர். இம்மூன்றையும் புறக்கட்டமைபின் கூறுகள் என்பர்.

5) நாடக கூறுகளில் மிகச்சிறிய அலகு எது?

A) உரையாடல்

B) காட்சி

C) அங்கம்

D) வரையறுக்க இயலாது

விளக்கம்: உரையாடல், காட்சி, அங்கம் ஆகிய மூன்றும் இணைந்தது நாடகம். இம்மூன்றையும் புறக்கட்டமைப்பின் கூறுகள் என்கிறோம். உரையாடல் என்பது சிறிய அலகு. உரையாடல்களால் ஆனது காட்சி. காட்சிகளால் ஆனது அங்கம். அங்கங்களால் ஆனது நாடகம் ஆகும்.

6) பொதுவாக நாடகத்தின் கதையை எத்தனை அங்கமாகப் பிரிப்பர்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: நாடகத்தின் கதையைப் பிரித்து அமைக்கும் பிரிவு அங்கம் எனப்படும். பொதுவாக நாடகத்தின் கதையை ஐந்து அங்கமாகப் பிரிப்பர். இதனடிப்படையில் ஓர் அங்கம் மட்டுமே உள்ள நாடகத்தை ஓரங்க நாடகம் என்பர்

7) பொதுவாக எத்தனை அங்கங்களில் முழுமை அடையும் நாடகங்களே சிறந்த நாடகங்களாகக் கருதப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: பல அங்கநாடகம் ஒன்றில், தொடக்கத்தை முதல் அங்கத்திலும் வளர்நிலையை அடுத்த அங்கத்திலும் முடிவை மூன்றாவது அங்கத்திலும் அமைக்க வேண்டும். அப்படி அமைப்பதுதான் நல்ல நாடகத்தின் வடிவம். பொதுவாக மூவங்கங்களில் முழுமை அடையும் நாடகங்களே சிறந்த நாடகங்களாகக் கருதப்படுகின்றன.

8) பொதுவாக _____________ அங்கங்களைக் கொண்ட அமைப்பு நாடகத்தில் இல்லை.

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: ஒரே அங்கத்திற்குள் தொடக்கம், வளர்நிலை, முடிவு என்று அமைக்கும் நாடகங்கள் ஓரங்க நாடகங்கள். பல அங்கங்களைக் கொண்டும் நாடகங்கள் வளரும். ஈரங்கம் என்ற அமைப்பு நாடகத்தில் இல்லை.

9) கூற்றுகளை ஆராய்க.

1. ஐந்து அங்கங்களுக்குமேல் நாடகம் வளர்த்தெடுக்கப்படுவதில்லை.

2. தொடக்கம், வளர்நிலை, முடிவு என்பது நாடகத்தில் முக்கிய கூறு ஆகும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. ஐந்து அங்கங்களுக்குமேல் நாடகம் வளர்த்தெடுக்கப்படுவதில்லை.

2. தொடக்கம், வளர்நிலை, முடிவு என்பது நாடகத்தில் முக்கிய கூறு ஆகும்.

10) நாடகத்தின் அகக்கட்டமைப்பு எத்தனை?

A) 5

B) 6

C) 3

D) 4

விளக்கம்: தொடக்கம், மோதல், வளர்ச்சி, உச்சநிலை, வீழ்ச்சி, முடிவு அகிய ஆறும் நாடகத்தின் அகக்கட்டமைப்புகள் ஆகும்.

11) வருங்காலம் உங்களை எதிர்நோக்கி நிற்கிறது. அதற்கு முதலாவது உடலை ஓம்பிக் கல்வி பயின்று, விஞ்ஞானக் கலைகளில் ஊக்கம் செலுத்துங்கள் – என்று கூறியவர் யார்?

A) திரு.வி.க

B) அறிஞர் அண்ணா

C) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

D) காந்தியடிகள்

விளக்கம்: வருங்காலம் உங்களை எதிர்நோக்கி நிற்கிறது. அதற்கு முதலாவது உடலை ஓம்பிக் கல்வி பயின்று, விஞ்ஞானக் கலைகளில் ஊக்கம் செலுத்துங்கள் – திரு.வி.க

12) சரியான வரிசையை தேர்வு செய்க.

A) உரையாடல்🡪காட்சி🡪அங்கம்🡪நாடகம்

B) உரையாடல்🡪அங்கம்🡪காட்சி🡪நாடகம்

C) காட்சி🡪அங்கம்🡪உரையாடல்🡪நாடகம்

D) நாடகம்🡪காட்சி🡪அங்கம்🡪உரையாடல்

விளக்கம்: உரையாடல், காட்சி, அங்கம் ஆகிய மூன்றும் இணைந்தது நாடகம். இம்மூன்றையும் புறக்கட்டமைப்பின் கூறுகள் என்கிறோம். உரையாடல் என்பது சிறிய அலகு. உரையாடல்களால் ஆனது காட்சி. காட்சிகளால் ஆனது அங்கம். அங்கங்களால் ஆனது நாடகம் ஆகும்.

13) கூற்றுகளை ஆராய்க.

1. நாடகத்தின் கூறுகளில் ஒன்றான காட்சிதான் நிகழ்வு என்று கூறுகிறோம்.

2. காட்சியை வரையறை செய்ய களம் அவசியம். நாடகம் நிகழும் சூழலை உணர்த்துவது களம். இதனை வெளி என்றும் கூறலாம்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. நாடகத்தின் கூறுகளில் ஒன்றான காட்சிதான் நிகழ்வு என்று கூறுகிறோம்.

2. காட்சியை வரையறை செய்ய களம் அவசியம். நாடகம் நிகழும் சூழலை உணர்த்துவது களம். இதனை வெளி என்றும் கூறலாம்.

14) கூற்றுகளை ஆராய்க.

1. நாடகத்தின் கதையைப் பிரித்து அமைக்கும் பிரிவு அங்கம் எனப்படும்.

2. பொதுவாக நாடகத்தின் கதையை ஐந்து அங்கமாகப் பிரிப்பர்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. நாடகத்தின் கதையைப் பிரித்து அமைக்கும் பிரிவு அங்கம் எனப்படும்.

2. பொதுவாக நாடகத்தின் கதையை ஐந்து அங்கமாகப் பிரிப்பர்.

15) சங்கரதாச சுவாமிகளின் காலம் என்ன?

A) 1867-1922

B) 1892-1952

C) 1873-1964

D) 1860-1904

விளக்கம்: 1867- 1922 – சங்கரதாச சுவாமிகள்

1892-1952-மதுரகவி பாஸ்கரதாஸ்

1873-1964-பம்மல் சம்பந்தனார்

1860-1904-ஆண்டன் செகாவ்

16) தமிழ்நாடகத்தந்தை என்று அழைக்கப்பட்டவர் யார்?

A) மதுரகவி பாஸ்கரதாஸ்

B) சங்கரதாசு சுமாமிகள்

C) பரிதிமாற்கலைஞர்

D) பம்மல் சம்பந்தனார்

விளக்கம்: தமிழ் நாடகத்தந்தை என்று அழைக்கப்பட்ட பம்மல் சம்பந்தனார் நாடக அமைப்பிலும் நடிப்பு முறையிலும் மாற்றங்களை ஏற்படுத்தியதின் மூலம் தமிழ் நாடகத்தை மேனாட்டு நாடகங்களுக்கு நிகராக மாற்றினார்.

17) சிறுவர்களைக் கொண்டு ‘பாய்ஸ் கம்பெனி’ என்ற பாலர் நாடக்குழுவை உருவாக்கியவர் யார்?

A) மதுரகவி பாஸ்கரதாஸ்

B) சங்கரதாசு சுவாமிகள்

C) பரிதிமாற்கலைஞர்

D) பம்மல் சம்பந்தனார்

விளக்கம்: சங்கரதாசு சுவாமிகள் சிறுவர்களைக் கொண்ட ‘பாய்ஸ் கம்பெனி’ என்ற பாலர் நாடக்குழுவை உருவாக்கினார். இதைத் தொடர்ந்து பல குழுக்கள் உருவாயின. இவரைத் தமிழ் நாடகத் தலைமையாசிரியர் என அழைப்பர்.

18) கூற்று: தமிழ் நாடக உலகில் ‘நாடகக் காவலர்’ என்று போற்றப்பட்ட நடிகர் ஆர்.எஸ்.மனோகர் ஆவார்

காரணம்: இரவு முழுவதும் நடைபெற்ற நாடகங்களை மூன்று மணி அல்லது நான்கு மணி நேரத்திற்குள் முடிக்கும் முறையைக் கொண்டுவந்தவர்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

விளக்கம்: தமிழ் நாடக உலகில் ‘நாடகக் காவலர்’ என்று போற்றப்பட்ட நடிகர் ஆர்.எஸ்.மனோகர் ஆவார். கல்லூரி நாடகத்தில் ‘மனோகர்’ கதாபாத்திரத்தில் நடித்ததால், அதையே தன் பெயராக மாற்றிக் கொண்டவர்.

19) “இந்தியா என்றோர் நாடுண்டு, அது ஆங்கிலேயர்க்கு நல்ல வேட்டைக்காடு என்று உலகம் இழித்தும் பழித்தும் பேசிக்கொண்டது” என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) திரு.வி.க

B) காந்தியடிகள்

C) அண்ணா

D) குன்றக்குடி அடிகளார்

விளக்கம்: “இந்தியா என்றோர் நாடுண்டு, அது ஆங்கிலேயர்க்கு நல்ல வேட்டைக்காடு என்று உலகம் இழித்தும் பழித்தும் பேசிக்கொண்டது”என்ற வரிகளை எழுதியவர் அறிஞர் அண்ணா ஆவார்.

20) ஆண்டன் செகாவ் என்பவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

A) அமெரிக்கா

B) இத்தாலி

C) ரஷ்யா

D) பிரேசில்

விளக்கம்: ஆண்டன் செகாவ் (1860-1904) என்பவர் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த நாடக ஆசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் புனைகதை இலக்கிய உலகில் தலைசிறந்தவராகக் கருதப்படுகிறார்.

21) ஆண்டன் செகாவ் எழுதிய நாடகங்களில் பொருந்தாதது எது?

A) செர்ரிப் பழத்தோட்டம்

B) மூன்று சகோதரிகள்

C) கடல் மீன்

D) அங்கிள் வான்யா

விளக்கம்: ஆண்டன் செகாவ் என்பவர் படைத்த கடல் பறவை, அங்கில் வான்யா, மூன்று சகோதரிகள், செர்ரிப் பழத்தோட்டம் ஆகிய நான்கு நாடகங்கள் மற்றும் அவரது சிறந்த சிறுகதைகள் ஏனைய எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்களிடம் தனி மரியாதையை ஏற்படுத்தின.

22) தன்னலமற்ற, விளைவு பற்றிய கவலையற்ற போராட்ட மனோபாவத்தை நாட்டிலே யாரால் உண்டாக்க முடிந்தது என்று பேரறிஞர் அண்ணா கூறினார்?

A) ஜவஹர்லால் நேரு

B) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

C) திலகர்

D) காந்தியடிகள்

விளக்கம்: தன்னலமற்ற, விளைவு பற்றிய கவலையற்ற போராட்ட மனோபாவத்தை நாட்டிலே காந்தியடிகளால்தான் உண்டாக்க முடிந்தது என்று காந்தியடிகள் பற்றி அவரின் மறைவுக்கு அறிஞர் அண்ணா ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார்.

23) எதன் மூலம் பெறும் அறிவு ஆறாவது அறிவு என குன்றக்குடி அடிகளார் கூறுகிறார்?

A) வாழ்வதன் வழி

B) செய்யும் தொழிலின் மூலம்

C) தான் வாழும் காலத்தில் சூழ்நிலைத் தாக்கத்தலிருந்து காத்துக்கொள்வதன் மூலம்

D) இயற்கை இயக்கத்தின் மூலம் பெறும் அறிவு

விளக்கம்: 1. வாழ்வதன் வழி முதல் அறிவு பெறுகிறான்.

2. செய்யும் தொழிலின் மூலம் இரண்டாம் நிலை அறிவு பெறுகிறான்.

3. தான் வாழும் காலத்தில் சூழ்நிலைத் தாக்கத்தலிருந்து காத்துக்கொள்வதன் மூலம் மூன்றாம் அறிவு பெறுகிறான்.

4. நல்ல நூல்களைத் தேர்ந்து கற்பதன்வழி நான்காவது அறிவு பெறுகிறான். பட்டறிவு நூல்களைப் படிப்பது நம் காலத்தை மிச்சப்படுத்தும்.

5. கலந்து கேட்டுப் பேசிப் பழகி, அதன் வழி பெறும் அறிவு ஐந்தாம் நிலையாகும்.

6. இயற்கை இயக்கத்தின் மூலம் பெறும் அறிவு ஆறாவது அறிவாகும்- குன்றக்குடி அடிகளார்.

24) பழங்கதைகளில் குறைவான பாத்திரங்களின் தர்க்கத்திற்கு இடமளித்து நாடகங்களை உருவாக்கியவர் யார்?

A) மதுரகவி பாஸ்கரதாஸ்

B) சங்கரதாசு சுவாமிகள்

C) பரிதிமாற்கலைஞர்

D) பம்மல் சம்பந்தனார்

விளக்கம்: பழங்கதைகளின் குறைவான நிகழ்ச்சிகளை எடுத்துக்கொண்டு பாத்திரங்களின் தர்க்கத்திற்கு இடமளித்து நாடகங்களை உருவாக்கியவர் சங்கரதாசு சுவாமிகள் ஆவார்.

25) மதுரகவி பாஸ்கரதாஸ்-ன் காலம் என்ன?

A) 1867-1922

B) 1892-1952

C) 1873-1964

D) 1860-1904

விளக்கம்: 1867- 1922 – சங்கரதாச சுவாமிகள்

1892-1952-மதுரகவி பாஸ்கரதாஸ்

1873-1964-பம்மல் சம்பந்தனார்

1860-1904-ஆண்டன் செகாவ்

26) தமிழ் நாடகத் தலைமையாசிரியர் என்று அழைக்கப்படுபவர் யார்?

A) மதுரகவி பாஸ்கரதாஸ்

B) சங்கரதாசு சுமாமிகள்

C) பரிதிமாற்கலைஞர்

D) பம்மல் சம்பந்தனார்

விளக்கம்: சங்கரதாசு சுவாமிகள் சிறுவர்களைக் கொண்ட ‘பாய்ஸ் கம்பெனி’ என்ற பாலர் நாடக்குழுவை உருவாக்கினார். இதைத் தொடர்ந்து பல குழுக்கள் உருவாயின. இவரைத் தமிழ் நாடகத் தலைமையாசிரியர் என அழைப்பர்.

27) ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயிரத்து ஒன்றாம் புலவர்

வார்த்தை பதினாயிரத்து ஒருவர் – என்று பேச்சுக்கலை பற்றிய கூற்றை கூறியவர் யார்?

A) பேரறிஞர் அண்ணா

B) ஒளவையார்

C) விவேகாகனந்தர்

D) திரு.வி.க

விளக்கம்: கருத்து வெளிப்பாட்டிற்கான பேச்சுமொழி, கலை வடிவமாக உருப்பெற்றுச் சமூகத்தின் மிக இன்றியமையாத அடையாளமாகவும் ஆளுமைத் திறனாகவும் வளர்ந்திருக்கிறது. இதன் காரணமாகவே, “ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயிரத்து ஒன்றாம் புலவர்

வார்த்தை பதினாயிரத்து ஒருவர்” என்று ஒளவையார் பாடியுள்ளார்.

28) பேச்சுக்கலையைச் சரியாகக் கைவரப் பெற்றவர்கள் அரசனைவிட அதிகாரம் பெற்றவர்கள் என்று கூறியவர் யார்?

A) வின்ஸ்டன் சர்ச்சில்

B) உட்ரோ வில்சன்

C) மார்ட்டின் லூதர் கிங்

D) ஆபிரகாம் லிங்கன்

விளக்கம்: “மனிதனுக்கு உள்ள திறமைகளில் மிகுந்த போற்றுதலுக்குரியது பேச்சாற்றல், அதைச்சரியாகக் கைவரப் பெற்றவர்கள் அரசனைவிட அதிகாரம் பெற்றவர்கள். அந்தக் கலையைக்கற்றவர்கள், இந்த உலகில் விடுதலை பெற்ற ஆற்றலாக இயங்கக்கூடியவர்கள்” – வின்ஸ்டன் சர்ச்சில்.

29) கட்டியங்காரன் உரையாடலுடன் கூடிய கூத்துக்கள் தமிழகத்தின் வட பகுதியில் நடத்தப்படுகின்றன. இவற்றிற்கு பதிலாக தென் பகுதியில் ஸ்பெஷல் நாடகங்கள் நடத்தப்படுகின்றன. இத்தகைய ஸ்பெஷல் நாடக முறையை உருவாக்கியவர் யார்?

A) பரிதிமாற்கலைஞர்

B) சங்கரதாசு சுவாமிகள்

C) ஆர்.எஸ்.மனோகர்

D) கவிராயர்

விளக்கம்: கட்டியங்காரன் உரையாடலுடன் கூடிய கூத்துக்கள் தமிழகத்தின் வட பகுதியில் நடத்தப்படுகின்றன. இவற்றிற்கு பதிலாக தென் பகுதியில் ஸ்பெஷல் நாடகங்கள் நடத்தப்படுகின்றன. இத்தகைய ஸ்பெஷல் நாடக முறையை உருவாக்கியவர் சங்கரதாசு சுவாமிகள். பின்பு நடிகர் நடிகையர்கள் ஒருவரோடு ஒருவர் வெவ்வேறு இடங்களில் மாறி மாறி இணைந்து நடிப்பது இந்நாடகத்தின் இயல்புகளுள் ஒன்றாகும்.

30) கூற்று: தமிழகத்தின் தொன்மையான கலைவடிவங்களுள் ஒன்று, கூத்துக்கலை. இது தெருக்கூத்து எனப்படுகிறது.

காரணம்: தெருவில் நடத்தப்படும் கூத்து என்பதால், இது தெருக்கூத்து என அழைக்கப்படுகிறது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: தமிழகத்தின் தொன்மையான கலைவடிவங்களுள் ஒன்று, கூத்துக்கலை. இது தெருக்கூத்து எனவும்அழைக்கப்படுகிறது. தெருவில் நடத்தப்படும் கூத்து என்பதால், இது தெருக்கூத்து என அழைக்கப்படுகிறது

31) இசையை முதன்மைப்படுத்தி கூத்து மரபுகளை உள்வாங்கி நாடகங்களைப் படைத்தவர் யார்?

A) மதுரகவி பாஸ்கரதாஸ்

B) சங்கரதாசு சுவாமிகள்

C) பரிதிமாற்கலைஞர்

D) பம்மல் சம்பந்தனார்

விளக்கம்: இசையை முதன்மைப்படுத்திக் கூத்து மரபுகளை உள்வாங்கி நாடகங்களைப் படைத்தவர் சங்கரதாசு சுவாமிகள் ஆவார்.

32) “விஞ்ஞானக் கலைகளில் ஊக்கம் செலுத்துங்கள், நாட்டுக் காவியங்களுடன் உறவுகொண்டு, அவற்றின் இயற்கை அமிழ்தை உண்ணுங்கள்” என்று கூறியவர் யார்?

A) காந்தியடிகள்

B) என்.எஸ்.கிருஷ்ணன்

C) விவேகானந்தர்

D) திரு.வி.க

விளக்கம்: “விஞ்ஞானக் கலைகளில் ஊக்கம் செலுத்துங்கள், நாட்டுக் காவியங்களுடன் உறவுகொண்டு, அவற்றின் இயற்கை அமிழ்தை உண்ணுங்கள்” – திரு.வி.க

33) திரைப்படங்கள் அல்லாத அக்கால கட்டத்தில் மதுரகவி பாஸ்கரதாஸ்-ன் நாடகப்பாடல்களை எந்த இசைத்தட்டு நிறுவனம் கிராமபோன் இசைத்தட்டுகளில் பதிவேற்றி உலகம் முழுவதும் கொண்டு சென்றது?

A) ஹிஸ் மாஸ்டர் வாய்ஸ்

B) பிக் மாஸ்டர் வாய்ஸ்

C) சவுண்ட் மாஸ்டர் வாய்ஸ்

D) மியூக் மாஸ்டர் வாய்ஸ்

விளக்கம்: திரைப்படங்கள் அல்லாத அக்கால கட்டத்தில் மதுரகவி பாஸ்கரதாஸ்-ன் நாடகப்பாடல்களைப் புகழ்பெற்ற ஹிஸ் மாஸ்டர் வாய்ஸ் இசைத்தட்டு நிறுவனம் கிராமபோன் இசைத்தட்டுகளில் பதிவேற்றி உலகம் முழுவதும் கொண்டு சென்றது

34) ஆட்டம், இசை, சிறிதளவு வசனம் என்று இருந்த தெருக்கூத்து நாடகங்களின் அமைப்பைக் குறைத்து, கற்பனைச் சிறப்பும் சந்தநயம் மிக்கதுமான பாடல்களை படைத்தவர் யார்?

A) மதுரகவி பாஸ்கரதாஸ்

B) சங்கரதாசு சுவாமிகள்

C) பரிதிமாற்கலைஞர்

D) பம்மல் சம்பந்தனார்

விளக்கம்: ஆட்டம், இசை, சிறிதளவு வசனம் என்று இருந்த தெருக்கூத்து நாடகங்களின் அமைப்பைக் குறைத்து, கற்பனைச் சிறப்பும் சந்தநயம் மிக்கதுமான பாடல்களை படைத்தவர் சங்கரதாசு சுவாமிகள் ஆவார்.

35) தமிழ் நாடக உலகில் ‘நாடகக் காவலர்’ என்று போற்றப்படுபவர் யார்?

A) ஆர்.எஸ்.மனோகர்

B) பாலமணி அம்மையார்

C) கவிராயர் முத்துச்சாமி

D) பரிதிமாற்கலைஞர்

விளக்கம்: தமிழ் நாடக உலகில் ‘நாடகக் காவலர்’ என்று போற்றப்பட்ட நடிகர் ஆர்.எஸ்.மனோகர் ஆவார். கல்லூரி நாடகத்தில் ‘மனோகர்’ கதாபாத்திரத்தில் நடித்ததால், அதையே தன் பெயராக மாற்றிக் கொண்டவர்.

36) தமிழ் நாடகத் தலைமையாசிரியர் என்ற நாடக நூலை எழுதியவர் யார்?

A) சங்கரதாசு சுவாமிகள்

B) கவிராயர்

C) டி.கே.சண்முகம்

D) ஒளவை சண்முகம்

விளக்கம்: தமிழ் நாடகத் தலைமையாசியர் என்னும் நூலை எழுதியவர் டி.கே.சண்முகம் ஆவார்.

கவிராயர், சுவாமிகளை நோக்கி, “சங்கரதாச சுவாமிகளே, உம்முடைய பாடல்கள் முள்ளும் முரடும்போல் இருக்கின்றன.” என்றார். அவர் கூறியதனைக் கேட்டவுடன். சங்கரதாச சுவாமிகள் சிரித்துக்கொண்டே, “கவிராயர் பாடல்கள் கல்லும் கரடும்போல் இருக்கின்றனவே” என்றாராம்.

இங்கும் முள்ளும் முரடும் என்றால் பலாச்சுளைப்போல் இனிக்கிறது என்று பொருள்.

கல்லும் கரடும் என்றால், கற்கண்டடைப்போல் இனிக்கிறது என்று பொருள்.

மேற்காணும் சொல்லாற்றல் இடம்பெற்றுள்ள நூல் – தமிழ் நாடகத் தலைமையாசிரியர்

37) “விடிவெள்ளி தோன்றுவது போலத் திலகர் காலத்திலே விடுதலைக்கு முயற்சி செய்யப்பட்டது என்ற போதிலும், காந்தியடிகள் காங்கிரசுக்குள் புகுந்த பிறகே, இந்தியா என்றோர் நாடுண்டு, அங்கு விழிப்பும் எழுச்சியும் மிகஉண்டு என்று அறிந்துகொள்ள முடிந்தது” என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) திரு.வி.க

B) விவேகானந்தர்

C) அறிஞர் அண்ணா

D) குன்றக்குடி அடிகளார்

விளக்கம்: “விடிவெள்ளி தோன்றுவது போலத் திலகர் காலத்திலே விடுதலைக்கு முயற்சி செய்யப்பட்டது என்ற போதிலும், காந்தியடிகள் காங்கிரசுக்குள் புகுந்த பிறகே, இந்தியா என்றோர் நாடுண்டு, அங்கு விழிப்பும் எழுச்சியும் மிகஉண்டு என்று அறிந்துகொள்ள முடிந்தது” என்ற வரிகள் காந்தியடிகள் மறைவுக்கு அறிஞர் அண்ணா ஆற்றிய உரையாகும்.

38) ஜெயந்தன் எழுதிய எந்த வானொலி நாடகம், அகில இந்திய வானொலியில் முதல் பரிசு பெற்றது?

A) நினைக்கப்படும்

B) சிந்தனைக்கூடல்

C) சிறகை விரி, வானம் உனது

D) சிந்தனைக்களஞ்சியம்

விளக்கம்: ஜெயந்தன் என்னும் புனைப்பெயர் கொண்டவர் பெ.கிருஷ்ணன். இவர் திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்தவர். இவரது ‘நினைக்கப்படும்’ என்ற நாடகம் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்றது. ‘சிறகை விரி, வானம் உனது’ என்னும் இவரது வானொலி நாடகம், அகில இந்திய வானொலியில் முதல் பரிசு பெற்றது. இவர், ‘சிந்தனைக்கூடல்’ என்னும் அமைப்பைத் தொடங்கி, இளைஞர்களுக்கு எழுத்துப் பயிற்சியையும் பேச்சுப் பயிற்சியையும் அளித்தவர் ஆவார்.

39) பம்மல் சம்பந்தனார் வெளியிட்ட இதழ் எது?

A) நாடகத்தமிழ்

B) நாடகஅரங்கம்

C) இந்திய நாடகமேடை

D) தமிழன் நாடகம்

விளக்கம்: நாடகத்தமிழ், நாடகமேடை நினைவுகள், பேசும்பட அனுபவங்கள் ஆகியன பம்மல் சம்பந்தனார் நாடகம் தொடர்பாக எழுதிய நூல்களாகும். ‘இந்திய நாடக மேடை’ என்ற இதழையும் இவர் வெளியிட்டார்.

40) தமிழ் நாடக மரபை பின்பற்றியும் கால மாற்றங்களுக்கேற்ப நாடகம் படைத்தவர் யார்?

A) மதுரகவி பாஸ்கரதாஸ்

B) சங்கரதாசு சுவாமிகள்

C) பரிதிமாற்கலைஞர்

D) பம்மல் சம்பந்தனார்

விளக்கம்: தமிழ் நாடக மரபைபின்பற்றியும் கால மாற்றங்களுக்கேற்ப நாடகம் படைத்தவர் சங்கரதாசு சுவாமிகள் ஆவார்.

41) ஆங்கிலேயர் இந்தியாவிற்கு வந்த பிறகு அறிமுகமான அரங்க அமைப்பு எது?

A) அண்மை அரங்கம்

B) திறந்தவெளி அரங்கம்

C) படச் சட்ட அரங்கம்

D) அரை வட்ட வடிவ அரங்கம்

விளக்கம்: அரங்கத்தில் பார்வையாளர்களை அமரவைக்கின்ற நிலையையும் காட்சிகள் நடக்கும் இடத்தில் கருத்தில்கொண்டு, நாடக அரங்கங்களைக் கீழக்காணுமாறு வகைப்படுத்தலாம்,

1. படச் சட்ட அரங்கம்

2. வட்ட வடிவ அரங்கம்

3. அரை வட்ட வடிவ அரங்கம்

4. சதுர அரங்கம்

5. செவ்வக அரங்கம்

6. முக்கோண அரங்கம்

7. அண்மை அரங்கம்

8. திறந்தவெளி அரங்கம்

படங்களுக்குப் போடும் சட்டத்தைப் போன்று அமைந்திருப்பதைப் படச்சட்ட அரங்கம் என்பர். இந்த அமைப்பு நமக்கு ஆங்கிலேயர் இந்தியாவிற்கு வந்த பிறகு அறிமுகமானது. சென்னைக் கன்னிமாரா நூலக வளாகத்தில், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட முன்மேடை அமைப்போடு அமைந்த படச்சட்ட அரங்கம் உள்ளது.

42) பம்மல் சம்பந்தனாரின் காலம் என்ன?

A) 1867- 1922

B) 1892-1952

C) 1873-1964

D) 1860-1904

விளக்கம்: 1867- 1922 – சங்கரதாச சுவாமிகள்

1892-1952-மதுரகவி பாஸ்கரதாஸ்

1873-1964-பம்மல் சம்பந்தனார்

1860-1904-ஆண்டன் செகாவ்

43) நடிகர்கள் விருப்பம்போல் வசனங்களைப் பேசிவந்த நிலையை மாற்றி வரையறுத்த நாடகப் பிரதிகளை உருவாக்கியவர் யார்?

A) மதுரகவி பாஸ்கரதாஸ்

B) சங்கரதாசு சுவாமிகள்

C) பரிதிமாற்கலைஞர்

D) பம்மல் சம்பந்தனார்

விளக்கம்: நடிகர்கள் விருப்பம்போல் வசனங்களைப் பேசிவந்த நிலையை மாற்றி வரையறுத்த நாடகப் பிரதிகளை உருவாக்கியவர் சங்கரதாசு சுவாமிகள் ஆவார்.

44) இன்பநாள், உலகம் சிரிக்கிறது ஆகிய சமூக நாடகங்களை அரங்கேற்றியவர் யார்?

A) ஆர்.எஸ்.மனோகர்

B) பாலமணி அம்மையார்

C) கவிராயர் முத்துச்சாமி

D) பரிதிமாற்கலைஞர்

விளக்கம்: பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், நாடகத்தின் மீது கொண்ட காதலால் ‘நேஷனல் தியேட்டர்ஸ்’ என்ற நாடக நிறுவனத்தை 1954இல் தொடங்கினார். ‘இன்ப நாள்’, ’உலகம் சிரிக்கிறது’ ஆகிய சமூக நாடகங்களை அரங்கேற்றினார் ஆர்.எஸ்.மனோகர்.

45) பத்தாயிரம் பேரில் ஒருவரே சிறந்த பேச்சாளராகத் திகழ்வார் என்று வலியுறுத்தியவர் யார்?

A) திரு.வி.க

B) ஒளவையார்

C) அறிஞர் அண்ணா

D) விவேகானந்தர்

விளக்கம்: கற்றிந்த அறிஞர்கள் கூடியிருக்கும் உயர்ந்த சபைகளில் அமரும் தகுதி, நூறுபேரில் ஒருவருக்கே கிடைக்கும். ஆயிரம் பேரில் ஒருவரே கவிஞராகத் திகழ்வார். ஆனால், பத்தாயிரம் பேரில் ஒருவரே சிறந்த பேச்சாளராகத் திகழ்வார் என்று ஒளவையார் வலியுறுத்தியுள்ளார். இத்தகைய ஆற்றல்வாய்ந்தது பேச்சுக்கலை ஆகும்.

46) மதுரகவி என்று அழைக்கப்பட்டவர் யார்?

A) சங்கரதாஸ் சுவாமிகள்

B) பரிதிமாற்கலைஞர்

C) பாஸ்கரதாஸ்

D) பம்மல் சம்பந்தனார்

விளக்கம்: மதுரகவி என்று அழைக்கப்பட்டவர் பாஸ்கரதாஸ் ஆவார். சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் இந்திய அளவில் புகழ்பெற்றுத் திகழ்ந்தவர், தமிழ் நாடக் கலைஞர் மதுரகவி பாஸ்கரதாஸ். ஆங்கிலேய அரசின் அடக்குமுறையை எதிர்த்தவர். நாடு முழுவதும் விடுதலை அரசியல் வீறுகொண்ட காலகட்டத்தில் தேசிய விடுதலை இயக்கத்தின் மீதும் காந்தியடிகளின் அகிம்சைவழிப் போராட்டங்களின் மீதும் பற்றுக்கொண்ட இவர், தம் நாடகங்களில் பாடல்களின்வழி விடுதலைக்கருத்துகளைப் பொதுமக்களிடத்தில் கொண்டு சேர்த்தார்.

47) “நீங்கள் கால்மணி நேரம் சொற்பொழிவாற்ற எத்தனை நாள்கள் தயார் செய்வீர்கள்?” என்று கேட்டதற்கு, இரண்டு வாரம் என்று பதிலளித்தவர் யார்?

A) அறிஞர் அண்ணா

B) குன்றக்குடி அடிகளார்

C) திரு.வி.க

D) உட்ரோ வில்சன்

விளக்கம்: அமெரிக்கக் குடியரசுத்தலைவராக இருந்த உட்ரோ வில்சனிடம் நண்பவர் ஒருவர், “நீங்கள் கால்மணி நேரம் சொற்பொழிவற்ற எத்தனை நாள்கள் தயார் செய்வீர்கள?” என்று கேட்டார். அதற்கு அவர், “இரண்டு வாரம்” என்றாராம். பிறகு, “ஒரு மணி நேரம் பேச ஒரு வாரம்”என்றாராம். பிறகு, “இரண்டு மணி நேரம் பேச வேண்டும் என்றால், எத்தனை நாள் தயார் செய்வீர்கள்?” என்று கேட்டதற்கு “இப்போதே பேசுகிறேன்” என்றாராம்.

48) மனிதனுக்கு உரிய திறமைகளில் மிகுந்த போற்றுதலுக்குரியது பேச்சாற்றல் என்று கூறியவர் யார்?

A) வின்ஸ்டன் சர்ச்சில்

B) உட்ரோ வில்சன்

C) மார்ட்டின் லூதர் கிங்

D) ஆபிரகாம் லிங்கன்

விளக்கம்: “மனிதனுக்கு உள்ள திறமைகளில் மிகுந்த போற்றுதலுக்குரியது பேச்சாற்றல், அதைச்சரியாகக் கைவரப் பெற்றவர்கள் அரசனைவிட அதிகாரம் பெற்றவர்கள். அந்தக் கலையைக்கற்றவர்கள், இந்த உலகில் விடுதலை பெற்ற ஆற்றலாக இயங்கக்கூடியவர்கள்” – வின்ஸ்டன் சர்ச்சில்.

49) பம்மல் சம்பந்தனார் நாடகம் தொடர்பாக எழுதிய நூல்களில் பொருந்தாது எது?

A) நாடகத்தமிழ்

B) நாடகமேடை நினைவுகள்

C) பேசும்பட அனுபவங்கள்

D) இந்திய நாடகமேடை

விளக்கம்: நாடகத்தமிழ், நாடகமேடை நினைவுகள், பேசும்பட அனுபவங்கள் ஆகியன பம்மல் சம்பந்தனார் நாடகம் தொடர்பாக எழுதிய நூல்களாகும். ‘இந்திய நாடக மேடை’ என்ற இதழையும் இவர் வெளியிட்டார்.

50) பாடல்கள் மிகுந்திருந்த தமிழ் நாடகங்களில் உரையாடல்களை முதன்மைப்படுத்தியவர் யார்?

A) மதுரகவி பாஸ்கரதாஸ்

B) சங்கரதாசு சுவாமிகள்

C) பரிதிமாற்கலைஞர்

D) பம்மல் சம்பந்தனார்

விளக்கம்: புராண, வரலாற்று, நாடகங்களுடன் மக்களின் வாழ்க்கையை ஒட்டிய கதைகளைக் கொண்ட, இயல்பான பேச்சு மொழியில் அமைந்த சமூக நாடகங்களையும் இவர் நடத்தினார். பாடல்கள் மிகுந்திருந்த தமிழ் நாடகங்களில் உரையாடல்களை முதன்மைப்படுத்தினார் பம்மல் சம்பந்தனார்.

51) இயற்கை இயக்கத்தின் மூலம் பெறும் அறிவு ஆறாவது அறிவாகும் என்று கூறியவர் யார்?

A) திரு.வி.க

B) விவேகானந்தர்

C) அறிஞர் அண்ணா

D) குன்றக்குடி அடிகளார்

விளக்கம்: 1. வாழ்வதன் வழி முதல் அறிவு பெறுகிறான்.

2. செய்யும் தொழிலின் மூலம் இரண்டாம் நிலை அறிவு பெறுகிறான்.

3. தான் வாழும் காலத்தில் சூழ்நிலைத் தாக்கத்தலிருந்து காத்துக்கொள்வதன் மூலம் மூன்றாம் அறிவு பெறுகிறான்.

4. நல்ல நூல்களைத் தேர்ந்து கற்பதன்வழி நான்காவது அறிவு பெறுகிறான். பட்டறிவு நூல்களைப் படிப்பது நம் காலத்தை மிச்சப்படுத்தும்.

5. கலந்து கேட்டுப் பேசிப் பழகி, அதன் வழி பெறும் அறிவு ஐந்தாம் நிலையாகும்.

6. இயற்கை இயக்கத்தின மூலம் பெறும் அறிவு ஆறாவது அறிவாகும்- குன்றக்குடி அடிகளார்.

52) தமிழனுக்கு நாடக அரங்குகளும் திரைப்படக் கொட்டகைகளும் பொழுதுபோக்குகளாக இருந்த காலகட்டத்தில் புத்தொளி வெளிச்சமாக யாருடைய மேடைப்பேச்சு மலரத்தொடங்கியது?

A) திரு.வி.க

B) அறிஞர் அண்ணா

C) விவேகானந்தர்

D) ம.பொ.சிவஞானம்

விளக்கம்: தமிழனுக்கு நாடக அரங்குகளும் திரைப்படக் கொட்டகைகளும் பொழுதுபோக்குகளாக இருந்த காலகட்டத்தில் புத்தொளி வெளிச்சமாக அறிஞர் அண்ணாவின் மேடைப்பேச்சு மலரத்தொடங்கியது

53) அவர் உரையில் அதிர்வோ ஆர்ப்பாட்டமோ இருக்காது. எளிமையான கருத்துப் பொழிவில் எழில் சேர்ப்பார். கருத்துக்களை தெள்ளிய நீரோடைபோலக் கேட்போர் இதயங்களில் பாயச் செய்வார் – இவ்வரியில் குறிப்பிடப்படுபவர் யார்?

A) அறிஞர் அண்ணா

B) திரு.வி.க

C) குன்றக்குடி அடிகளார்

D) காந்தியடிகள்

விளக்கம்: “திரு.வி.கலியாணசுந்தரனாரின் உரை மேடையில் மெல்லிய பூங்காற்றாக வீசியது. அவர் உரையில் அதிர்வோ ஆர்ப்பாட்டமோ இருக்காது. எளிமையான கருத்துப் பொழிவில் எழில் சேர்ப்பார். கருத்துக்களைத் தெள்ளிய நீரோடைப் போலக் கேட்போர் இதயங்களில் பாயச் செய்வார்”

54) பாலாமணி அம்மையார் குறித்து அவ்வை சண்முகம் என்பவர் எழுதிய நூல் எது?

A) பாலாமணி அம்மை நாடக வாழ்க்கை

B) எனது நாடக வாழ்க்கை

C) பெண்மையின் நாடக வாழ்க்கை

D) நாடக மேடை நினைவுகள்

விளக்கம்: பாலாமணி அம்மையார் குறித்து, அவ்வை சண்முகம் “எனது நாடக வாழ்க்கை”என்ற நூலை எழுதியுள்ளார்.

55) ‘நினைக்கப்படும்’ என்ற நாடகத்தை எழுதியவர் எங்கு பிறந்தார்?

A) திருச்சி

B) சிவகங்கை

C) திருநெல்வேலி

D) தூத்துக்குடி

விளக்கம்: ஜெயந்தன் என்னும் புனைப்பெயர் கொண்டவர் பெ.கிருஷ்ணன். இவர் திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்தவர். இவரது ‘நினைக்கப்படும்’ என்ற நாடகம் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்றது. ‘சிறகை விரி, வானம் உனது’ என்னும் இவரது வானொலி நாடகம், அகில இந்திய வானொலியில் முதல் பரிசு பெற்றது. இவர், ‘சிந்தனைக்கூடல்’ என்னும் அமைப்பைத் தொடங்கி, இளைஞர்களுக்கு எழுத்துப் பயிற்சியையும் பேச்சுப் பயிற்சியையும் அளித்தவர் ஆவார்.

56) அரங்கம் 8 வகைப்படும். இதில் பொருந்தாதது எது?

A) சதுர அரங்கம்

B) செவ்வக அரங்கம்

C) முக்கோண அரங்கம்

D) அறுங்கோண அரங்கம்

விளக்கம்: அரங்கத்தில் பார்வையாளர்களை அமரவைக்கின்ற நிலையையும் காட்சிகள் நடக்கும் இடத்தில் கருத்தில்கொண்டு, நாடக அரங்கங்களை கீழக்காணுமாறு வகைப்படுத்தலாம்,

1. படச் சட்ட அரங்கம்

2. வட்ட வடிவ அரங்கம்

3. அரை வட்ட வடிவ அரங்கம்

4. சதுர அரங்கம்

5. செவ்வக அரங்கம்

6. முக்கோண அரங்கம்

7. அண்மை அரங்கம்

8. திறந்தவெளி அரங்கம்

57) பகத்சிங் தூக்கிலேற்றப்பட்ட நிகழ்வு, காந்தியடிகள் பங்கேற்ற வட்டமேசை மாநாடு, பஞ்சாப் படுகொலை ஆகிய நிகழ்வுகளை கொண்டு யார் இயற்றிய நாடகப் பாடல்கள் ஆங்கில அரசால் தடைசெய்யப்பட்டன?

A) பம்மல் சம்பந்தனார்

B) மதுரகவி பாஸ்கரதாஸ்

C) சங்கரதாசு சுவாமிகள்

D) பரிதிமாற்கலைஞர்

விளக்கம்: பகத்சிங் தூக்கிலேற்றப்பட்ட நிகழ்வு, காந்தியடிகள் பங்கேற்ற வட்டமேசை மாநாடு, பஞ்சாப் படுகொலை ஆகிய நிகழ்வுகளைகொண்டு மதுரகவி பாஸ்கரதாஸ் இயற்றிய நாடகப் பாடல்கள் ஆங்கில அரசால் தடைசெய்யப்பட்டன.

58) பழந்தமிழ் இலக்கிய வரிகளை, உரையாடலில் பயன்படுத்தியவர் யார்?

A) மதுரகவி பாஸ்கரதாஸ்

B) சங்கரதாசு சுவாமிகள்

C) பரிதிமாற்கலைஞர்

D) பம்மல் சம்பந்தனார்

விளக்கம்: சங்கரதாசு சுவாமிகள் பழந்தமிழ் இலக்கிய வரிகளை உரையாடலில் பயன்படுத்தினார். இவரது நாடகங்களில் பாடல்களின் ஆதிக்கம் இருந்தது.

59) முதன் முதலாக முழுவதும் பெண்களே பங்கேற்ற நாடகக் குழுவை தொடங்கியவர் யார்?

A) எம்.எஸ்.சுப்புலட்சுமி

B) அம்புஜதம்மாள்

C) அஞ்சலையம்மாள்

D) பாலாமணி அம்மையார்

விளக்கம்: பாலாமணி அம்மையார் முதன் முதலாக முழுவதும் பெண்களே பங்கேற்ற ‘பாலாமணி அம்மாள் நாடகக் குழு’ வினைத் தொடங்கி நடத்தியவர். இவரின் குழுவில் 70 பெண்கள் இருந்தனர்.

60) பேச்சுக் கலையைக்கற்றவர்கள், இந்த உலகில் விடுதலை பெற்ற ஆற்றலாக இயங்கக்கூடியவர்கள் என்று கூறியவர் யார்?

A) வின்ஸ்டன் சர்ச்சில்

B) உட்ரோ வில்சன்

C) மார்ட்டின் லூதர் கிங்

D) ஆபிரகாம் லிங்கன்

விளக்கம்: “மனிதனுக்கு உள்ள திறமைகளில் மிகுந்த போற்றுதலுக்குரியது பேச்சாற்றல், அதைச்சரியாகக் கைவரப் பெற்றவர்கள் அரசனைவிட அதிகாரம் பெற்றவர்கள். அந்தக் கலையைக்கற்றவர்கள், இந்த உலகில் விடுதலை பெற்ற ஆற்றலாக இயங்கக்கூடியவர்கள்” – வின்ஸ்டன் சர்ச்சில்.

61) ஒரு நாளில் இருவேறு கூட்டங்களில் பேசினாலும் கூறிய கருத்துகளை மீண்டும் கூறாதவர் யார்?

A) அறிஞர் அண்ணா

B) திரு.வி.க

C) காந்தியடிகள்

D) குன்றக்குடி அடிகளார்

விளக்கம்: அண்ணா பேசும்போது உலக வரலாறும், உவமைகளும் அவரின் உரையில் தவழும். அவரின் மிகப்பெரிய சிறப்பு, ஒரு நாளில் இருவேறு கூட்டத்தில் பேசினாலும் கூறிய கருத்துக்களை மீண்டும் கூறமாட்டார். அதே உவமைகள் இருக்காது. மடைதிறந்த வெள்ளம்போல உரையாற்றும் ஆற்றல் பெற்றவர்.

62) யாருடைய காலத்தில் படிப்படியாக நாடகங்கள் நகரங்களை நோக்கி நகர்ந்தன?

A) மதுரகவி பாஸ்கரதாஸ்

B) சங்கரதாசு சுவாமிகள்

C) பரிதிமாற்கலைஞர்

D) பம்மல் சம்பந்தனார்

விளக்கம்: சங்கதாசு சுவாமிகள் காலத்தில் படிப்படியாக நகரங்களை நோக்கி நாடகங்கள் நகர்ந்தன.

63) கூற்று: தமிழ் நாடகத்தை மேனாட்டு நாடகங்களுக்கு நிகராக மாற்றியவர் பம்மல் சம்பந்தனார்.

காரணம்: நாடக அமைப்பிலும், நடிப்பு முறையிலும் மாற்றங்களை ஏற்படுத்தினார்

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனார் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

விளக்கம்: தமிழ் நாடகத்தந்தை என்று அழைக்கப்பட்ட பம்மல் சம்பந்தனார் நாடக அமைப்பிலும் நடிப்பு முறையிலும் மாற்றங்களை ஏற்படுத்தியதின் மூலம் தமிழ் நாடகத்தை மேனாட்டு நாடகங்களுக்கு நிகராக மாற்றினார்.

64) எப்போது பம்மல் சம்பந்தனாரால் நிறுவப்பட்ட சுகுண விலாச சபை, தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட முதல் பயில்முறை நாடகக் குழுவானது?

A) 1891

B) 1981

C) 1897

D) 1987

விளக்கம்: 1891இல் பம்மல் சம்பந்தனாரால் நிறுவப்பட்ட சுகுண விலாச சபை, தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட முதல் பயில்முறை நாடகக் குழுவாகும்.

65) தேசிய கருத்துக்களை நுட்பமாக இணைத்து நாடகப் பாடல்களை இயற்றிக் கவி புனைவதில், புதிய முறைகளை உருவாக்கியவர் யார்?

A) பம்மல் சம்பந்தனார்

B) மதுரகவி பாஸ்கரதாஸ்

C) சங்கரதாசு சுவாமிகள்

D) பரிதிமாற்கலைஞர்

விளக்கம்: ஆங்கிலேய அரசின் அடக்குமுறைச் சட்டங்கள் நாடகங்களைக் கட்டுப்படுத்திய போது தேசிய கருத்துக்களை நுட்பமாக இணைத்து நாடகப் பாடல்களை இயற்றிக் கவி புனைவதில், புதிய முறைகளை உருவாக்கியவர் மதுரகவி பாஸ்கரதாஸ் ஆவார்

66) ஆண்டன் செகாவ்-ன் காலம் என்ன?

A) 1867- 1922

B) 1892-1952

C) 1873-1964

D) 1860-1904

விளக்கம்: 1867- 1922 – சங்கரதாச சுவாமிகள்

1892-1952- மதுரகவி பாஸ்கரதாஸ்

1873-1964- பம்மல் சம்பந்தனார்

1860-1904- ஆண்டன் செகாவ்

67) ‘சிந்தனைக்கூடல்’ என்னும் அமைப்பைத் தொடங்கி, இளைஞர்களுக்கு எழுத்துப் பயிற்சியையும் பேச்சுப் பயிற்சியையும் அளித்தவர் யார்?

A) ஜெயகாந்தன்

B) அப்துல் ரகுமான்

C) பம்மல் சம்பந்தனார்

D) மேற்காணும் யாருமில்லை

விளக்கம்: ஜெயந்தன் என்னும் புனைப்பெயர் கொண்டவர் பெ.கிருஷ்ணன். இவர் திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்தவர். இவரது ‘நினைக்கப்படும்’ என்ற நாடகம் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்றது. ‘சிறகை விரி, வானம் உனது’ என்னும் இவரது வானொலி நாடகம், அகில இந்திய வானொலியில் முதல் பரிசு பெற்றது. இவர், ‘சிந்தனைக்கூடல்’ என்னும் அமைப்பைத் தொடங்கி, இளைஞர்களுக்கு எழுத்துப் பயிற்சியையும் பேச்சுப் பயிற்சியையும் அளித்தவர் ஆவார்.

68) மனிதன் தான் வாழும் காலத்தில் சூழ்நிலைத் தாக்கத்தலிருந்து காத்துக்கொள்வதன் மூலம் மூன்றாம் அறிவு பெறுகிறான் என்று கூறியவர் யார்?

A) திரு.வி.க

B) விவேகானந்தர்

C) அறிஞர் அண்ணா

D) குன்றக்குடி அடிகளார்

விளக்கம்: 1. வாழ்வதன் வழி முதல் அறிவு பெறுகிறான்.

2. செய்யும் தொழிலின் மூலம் இரண்டாம் நிலை அறிவு பெறுகிறான்.

3. தான் வாழும் காலத்தில் சூழ்நிலைத் தாக்கத்தலிருந்து காத்துக்கொள்வதன் மூலம் மூன்றாம் அறிவு பெறுகிறான்.

4. நல்ல நூல்களைத் தேர்ந்து கற்பதன்வழி நான்காவது அறிவு பெறுகிறான். பட்டறிவு நூல்களைப் படிப்பது நம் காலத்தை மிச்சப்படுத்தும்.

5. கலந்து கேட்டுப் பேசிப் பழகி, அதன் வழி பெறும் அறிவு ஐந்தாம் நிலையாகும்.

6. இயற்கை இயக்கத்தின மூலம் பெறும் அறிவு ஆறாவது அறிவாகும்- குன்றக்குடி அடிகளார்.

69) ராவணன், சூரபதுமன் உள்ளிட்ட எதிர்மறைக் கதாபாத்திரங்களைக் கொண்ட நாடகங்களை படைத்தவர் யார்?

A) ஆர்.எஸ்.மனோகர்

B) பாலமணி அம்மையார்

C) கவிராயர் முத்துச்சாமி

D) பரிதிமாற்கலைஞர்

விளக்கம்: ராவணன், சூரபதுமன் உள்ளிட்ட எதிர்மறைக் கதாபாத்திரங்களைக் கொண்ட நாடகங்களைக் படைத்தவர் ஆர்.எஸ்.மனோகர் ஆவார். சிறப்பான மேடை அமைப்பும், தந்திரக் காட்சிகளும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.

70) புராண, வரலாற்று நாடகங்களுடன் மக்களின் வாழ்க்கையை ஒட்டிய கதைகளைக் கொண்ட, இயல்பான பேச்சு மொழியில் அமைந்த சமூக நாடகங்களை நடத்தியவர் யார்?

A) மதுரகவி பாஸ்கரதாஸ்

B) சங்கரதாசு சுவாமிகள்

C) பரிதிமாற்கலைஞர்

D) பம்மல் சம்பந்தனார்

விளக்கம்: புராண, வரலாற்று, நாடகங்களுடன் மக்களின் வாழ்க்கையை ஒட்டிய கதைகளைக் கொண்ட, இயல்பான பேச்சு மொழியில் அமைந்த சமூக நாடகங்களையும் இவர் நடத்தினார். பாடல்கள் மிகுந்திருந்த தமிழ் நாடகங்களில் உரையாடல்களை முதன்மைப் படுத்தினார் பம்மல் சம்பந்தனார்.

71) அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து தம் உரைகள் மூலம் சமத்துவத்தை எடுத்துரைத்தவர் யார்?

A) வின்ஸ்டன் சர்ச்சில்

B) உட்ரோ வில்சன்

C) மார்ட்டின் லூதர் கிங்

D) ஆபிரகாம் லிங்கன்

விளக்கம்: அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து தம் உரைகள் மூலம் சமத்துவத்தை எடுத்துரைத்தவர் மார்ட்டின் லூதர் கிங். கறுப்பின மக்களுக்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற அவரின் போராட்டங்கள் அவரின் சிறந்த உரைகள் மூலமே மக்களைச் சென்றடைந்தன. 1963-ஆம் ஆண்டு ஆற்றிய ‘எனக்கொரு கனவு உள்ளது’ என்ற உரை மிகச்சிறந்த உரையாக இன்றும் போற்றப்படுகிறது.

72) அவருடைய உடலமைப்போ பேச்சோ நடவடிக்கையோ இராணுவ மனப்பான்மையை ஏற்படுத்தக்கூடிய விதமாக இல்லை – இவ்வரிகளில் குறிப்பிடப்படுபவர் யார்?

A) பேரறிஞர் அண்ணா

B) அம்பேத்கர்

C) காந்தியடிகள்

D) பசும்பொன் முத்துராமலிங்தேவர்

விளக்கம்: அவருடைய உருவமோ உடலமைப்போ பேச்சோ நடவடிக்கையோ இராணுவ மனப்பான்மையை ஏற்படுத்தக்கூடிய விதமாக இல்லை என்று காந்தியடிகள் பற்றி அறிஞர் அண்ணா குறிப்பிட்டுள்ளார்.

73) “அறிவு ஒரு கருவியே. இதனைச் செயற்பாட்டுக்குத்தான் பயன்படுத்த வேண்டும்” என்று கூறியவர் யார்?

A) திரு.வி.க

B) விவேகானந்தர்

C) அறிஞர் அண்ணா

D) குன்றக்குடி அடிகளார்

விளக்கம்: நம் நாட்டில் பேசுகின்ற திறன் நிறைய வளர்ந்துள்ளது. இதை வைத்துக்கொண்டு அவனுக்கு நிறைய தெரிந்திருப்பதாக எண்ணுகிறோம். அறிவு ஒரு கருவியே. இதனைச் செயற்பாட்டுக்குதான் பயன்படுத்த வேண்டும். தான் கற்ற கருத்தைச் செயல்படுத்துவதில்தான் அறிவின் திறன் இருக்கிறது – குன்றக்குடி அடிகளார்.

74) சுகுண விலாச சபை என்ற நாடகக்குழுவை நிறுவியவர் யார்?

A) பம்மல் சம்பந்தனார்

B) மதுரகவி பாஸ்கரதாஸ்

C) சங்கரதாசு சுமாமிகள்

D) பரிதிமாற்கலைஞர்

விளக்கம்: 1891இல் பம்மல் சம்பந்தனாரால் நிறுவப்பட்ட சுகுண விலாச சபை, தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட முதல் பயில்முறை நாடகக் குழுவாகும்.

75) ‘வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே’ என்று கூறியவர் யார்?

A) திருநாவுக்கரசர்

B) மணிக்கவாசகர்

C) சுந்தரர்

D) திருஞானசம்பந்தர்

விளக்கம்: “வாழ்கின்றாய் வாழாதே நெஞ்சமே” என்பார் மாணிக்கவாசகர். அறிவார்ந்த ஆள்வினையோடு வாழ்தல் வேண்டும்.

76) அரிச்சந்திரன் கதையை சந்திரஹரி என்று பொய் மட்டுமே பேசுகிற ஒருவரைப் பற்றிய கதையாக மாற்றியதன் மூலம் ‘எதிர்க்கதை நாடகம்’ என்னும் புதிய வகையையும் உருவாக்கியவர் யார்?

A) பம்மல் சம்பந்தனார்

B) மதுரகவி பாஸ்கரதாஸ்

C) சங்கரதாசு சுவாமிகள்

D) பரிதிமாற்கலைஞர்

விளக்கம்: அரிச்சந்திரன் கதையை சந்திரஹரி என்று பொய் மட்டுமே பேசுகிற ஒருவரைப் பற்றிய கதையாக மாற்றியதன் மூலம் ‘எதிர்க்கதை நாடகம்’ என்னும் புதிய வகையையும் உருவாக்கியவர் பம்மல் சம்பந்தனார் ஆவார்.

77) ‘நாடக அரசி’ எனப்போற்றப்பட்டவர் யார்?

A) எம்.எஸ்.சுப்புலட்சுமி

B) அம்புஜதம்மாள்

C) அஞ்சலையம்மாள்

D) பாலாமணி அம்மையார்

விளக்கம்: ‘நாடகஅரசி’ எனச் சிறப்பிக்கப்பட்ட பாலாமணி அம்மையாரின் நாடகங்கள், சமுதாய சீர்த்திருத்தங்களையே உள்ளடக்கங்களாகக் கொண்டிருந்தன. நாடக மேடையில் பெட்ரோமாக்ஸ் விளக்குகளை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் இவரே.

78) அவரால் ராணுவங்களையும் எதிர்த்துக் நிற்கக்கூடிய வீர உணர்ச்சியை இலட்சக்கணக்கானவர்களிடத்தில் உண்டாக்க முடிந்தது – இதில் குறிப்பிடப்படுபவர் யார்?

A) அறிஞர் அண்ணா

B) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

C) திரு.வி.க

D) காந்தியடிகள்

விளக்கம்: காந்தியடிகளின் உருவமோ உடலமைப்போ பேச்சோ நடவடிக்கையோ இராணுவ மனப்பான்மையை ஏற்படுத்தக்கூடிய விதமாக இல்லை. ஆனால் அவரால் இராணுவங்களையும் எதிர்த்து நிற்கக்கூடிய வீர உணர்ச்சியை இலட்சக்கணக்கானவர்களிடத்தில் உண்டாக்க முடிந்தது என்று அறிஞர் அண்ணா குறிப்பிட்டுள்ளார்.

79) பார்வையாளரின் மனத்தில் சோர்வை நீக்குவதற்கு நாடகங்களில்___________________ என்னும் உத்தி பயன்படுத்தப்படுகிறது?

A) பாடல்

B) எதிர்நிலை

C) நகைச்சுவை

D) மேற்காணும் அனைத்தும்

விளக்கம்: பார்வையாளரின் மனத்தில் சோர்வை நீக்குவதற்கு நாடகங்களில் எதிர்நிலை என்னும் உத்தி பயன்படுத்தப்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் காண்ட்ராஸ்ட் என்பர். ஒரு கதைமாந்தர் அவசரப்படும் நிலையில் இருந்தால், மற்றொரு கதைமாந்தர் நிதானத்தன்மை கொண்டவராகக் காட்டப்படுவார்.

80) யாருடைய பாடல்கள் முள்ளும் முரடும் போல் இருக்கின்றன என்று கவிராயர் குறிப்பிட்டார்?

A) சங்கரதாசு சுவாமிகள்

B) பரிதிமாற்கலைஞர்

C) பாலாமணி அம்மையார்

D) ஆர்.எஸ்.மனோகர்

விளக்கம்: கவிராயர், சுவாமிகளை நோக்கி, “சங்கரதாச சுவாமிகளே, உம்முடைய பாடல்கள் முள்ளும் முரடும்போல் இருக்கின்றன.” என்றார். அவர் கூறியதனைக் கேட்டவுடன். சங்கராச சுவாமிகள் சிரித்துக்கொண்டே, “கவிராயர் பாடல்கள் கல்லும் கரடும்போல் இருக்கின்றனவே” என்றாராம்.

இங்கும் முள்ளும் முரடும் என்றால் பலாச்சுளைப்போல் இனிக்கிறது என்று பொருள்.

கல்லும் கரடும் என்றால், கற்கண்டடைப்போல் இனிக்கிறது என்று பொருள்.

81) “இலங்கேஸ்வரன்” நாடகத்தை இலங்கையில் தொடர்ந்து 21 நாள்கள் நடத்தியவர் யார்?

A) ஆர்.எஸ்.மனோகர்

B) பாலமணி அம்மையார்

C) கவிராயர் முத்துச்சாமி

D) பரிதிமாற்கலைஞர்

விளக்கம்: ஆர்.எஸ்.மனோகரின், ‘இலங்கேஸ்வரன்’ நாடகம் வியக்கத்தக்க அளவில் தயாராகியிருந்தது. இலங்கையில் இந்த நாடகத்தை தொடர்ந்து 21 நாள்கள் நடத்துவதற்கான வாய்ப்பு கிடைத்து. நாடகத்தைப் பார்த்து வியந்த மக்கள், இவருக்கு ‘இலங்கேஸ்வரன்’ என்ற பட்டத்தைக் கொடுத்து கவுரவித்தனர்.

82) “ஆறு அறிவுடையவன் எல்லாம் உடையவன். அவன் ஆவது அறிவான். செய்திகளைச் சேகரிப்பதுதான் அறிவா? நூலறிவு அறிவின் அளவுகோலா?” என்று கூறியவர் யார்?

A) காந்தியடிகள்

B) திரு.வி.க

C) விவேகானந்தர்

D) குன்றக்குடி அடிகளார்

விளக்கம்: “ஆறு அறிவுடையவன் எல்லாம் உடையவன். அவன் ஆவது அறிவான். செய்திகளைச் சேகரிப்பதுதான் அறிவா? நூலறிவு அறிவின் அளவுகோலா?” – குன்றக்குடி அடிகளார்.

83) திரு.வி.க. எப்போது நடைபெற்ற தமிழ் மாணாக்கர் மாநாட்டில் தலைமையுரையாற்றினார்?

A) 08.07.1923

B) 07.08.1923

C) 08.07.1933

D) 07.08.1933

விளக்கம்: திரு.வி.க. தமிழ் மாணாக்கர் மாநாட்டில் 07.08.1923 இல் ஆற்றிய தலைமையுரையில், “சகோதரிகளே, சகோதரர்களே இன்னும் உங்கள் அரிய காலத்தைக் கொள்ளை இடுவதற்கு என் மனம் எழவில்லை. இதுகாறும் பொறுமையுடன் என் புன்மொழிகளைச் செவிமடுத்த உங்களுக்கு எனது நன்றியறிதலான வணக்கம் உரியதாகுக” என்று கூறினார்.

84) தற்காலத்தில் ‘பட்டிமன்றம்’ என்று அழைக்கப்படுவது, முன்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?

A) பட்டிமண்றம்

B) பட்டிமண்டபம்

C) வழக்காடு மன்றம்

D) பட்டுமன்றம்

விளக்கம்: தற்காலத்தில் ‘பட்டிமன்றம்’ என்று அழைக்கப்படுவது, முன்பு ‘பட்டிமண்டபம்’ என்று அழைக்கப்பட்டது. பட்டிமண்டபம் என்ற சொல் சிலப்பதிகாரம், மணிமேகலை, திருவாசகம், கம்பராமாயணம் முதலான நூல்களில் காணப்படுகிறது.

85) திரைச்சீலைகளை மூன்று வகை என சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. இதில் கரந்துவரல் எழினி என்பது என்ன?

A) மேலிருந்து கீழே இறங்கும் திரை

B) கீழிலிருந்து மேலே செல்லும் திரை

C) ஒரே பக்கத்தில் இழுக்கப்படுகின்றன திரை

D) இரு பக்கமும் திரையைத் திறக்கின்ற துணி

விளக்கம்: திரைச்சீலைகளை மூன்று வகைகளாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. அவை,

1. ஒரு முக எழினி- ஒரே பக்கத்தில் இழுக்கப்படுகின்றன திரை

2. பொரு முக எழினி- இரு பக்கமும் திரையைத் திறக்கின்ற துணி

3. கரந்துவரல் எழினி- மேலிருந்து கீழே இறங்கும் திரை

86) கூத்து தொடங்கும்முன் அரைமணி நேரத்திற்கு மிருதங்கம், ஜால்ரா உள்ளிட்ட இசைக்கருவிகள் அனைத்தும் ஒரு சேர ஒலிக்கும். இவ்வொலி, ஊராரை அழைப்பதற்கு உதவியாக இருக்கும். இதனை தென்னாற்காடு மாவட்டத்தில் ____________________என்பர்.

A) தாளக்கட்டு

B) களரிதட்டுதல்

C) இசைத்தட்டு

D) அழைப்புதட்டு

விளக்கம்: கூத்து தொடங்கும்முன் அரைமணி நேரத்திற்கு மிருதங்கம், ஜால்ரா உள்ளிட்ட இசைக்கருவிகள் அனைத்தும் ஒரு சேர ஒலிக்கும். இவ்வொலி, ஊராரை அழைப்பதற்கு உதவியாக இருக்கும். இதனைக் களரிகட்டுதல் என்பர். இதனை தென்னாற்காடு மாவட்டத்தில் தாளக்கட்டு என்பர். களரி கட்டுக்குப் பிறகு, பார்வையாளர்கள் முன் தோன்றுகிற, குறிப்பிடத்தக்க முதல் கதைமாந்தனைக் கட்டியங்காரன் என அழைக்கிறோம்.

87) கட்டியம் என்பதன் பொருள் என்ன?

A) பொன்மொழி

B) புகழ்மொழி

C) இசைமொழி

D) மேற்காணும் அனைத்தும்

விளக்கம்: கட்டியம் என்றால், அரசன் முன் புகழ்மொழி கூறுதல் என்று பொருள். தெருக்கூத்துக் கதைமாந்தர்களின் அருமை பெருமைகளைச் சொல்லிப் பார்வையாளர்களுக்கு அவர்களை அறிமுகப்படுத்துவதாலும் கட்டியங்காரன் எனப் பெயர்பெற்றுள்ளான்.

88) யாருடைய பாடல்கள் கல்லும் கரடும் போல் இருக்கின்றன என்று சங்கரதாசு சுவாமிகள் குறிப்பிட்டார்?

A) சங்கரதாசு சுவாமிகள்

B) பரிதிமாற்கலைஞர்

C) பாலாமணி அம்மையார்

D) கவிராயர்

விளக்கம்: கவிராயர், சுவாமிகளை நோக்கி, “சங்கரதாச சுவாமிகளே, உம்முடைய பாடல்கள் முள்ளும் முரடும்போல் இருக்கின்றன.” என்றார். அவர் கூறியதனைக் கேட்டவுடன். சங்கரதாசு சுவாமிகள் சிரித்துக்கொண்டே, “கவிராயர் பாடல்கள் கல்லும் கரடும்போல் இருக்கின்றனவே” என்றாராம்.

இங்கும் முள்ளும் முரடும் என்றால் பலாச்சுளைப்போல் இனிக்கிறது என்று பொருள்.

கல்லும் கரடும் என்றால், கற்கண்டடைப்போல் இனிக்கிறது என்று பொருள்.

89) நாடக மேடையில் பெட்ரோமாக்ஸ் விளக்குகளை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்?

A) ஆர்.எஸ்.மனோகர்

B) பாலமணி அம்மையார்

C) கவிராயர் முத்துச்சாமி

D) பரிதிமாற்கலைஞர்

விளக்கம்: ‘நாடகஅரசி’ எனச் சிறப்பிக்கப்பட்ட பாலாமணி அம்மையாரின் நாடகங்கள், சமுதாய சீர்த்திருத்தங்களையே உள்ளடக்கங்களாகக் கொண்டிருந்தன. நாடக மேடையில் பெட்ரோமாக்ஸ் விளக்குகளை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் இவரே.

90) “வாழ்வதன்வழி முதல் அறிவு பெறுகிறான், செய்யும் தொழிலின் மூலம் இரண்டாம் நிலை அறிவு பெறுகிறான்” என்று கூறியவர் யார்?

A) திரு.வி.க

B) விவேகானந்தர்

C) அறிஞர் அண்ணா

D) குன்றக்குடி அடிகளார்

விளக்கம்: 1. வாழ்வதன் வழி முதல் அறிவு பெறுகிறான்.

2. செய்யும் தொழிலின் மூலம் இரண்டாம் நிலை அறிவு பெறுகிறான்.

3. தான் வாழும் காலத்தில் சூழ்நிலைத் தாக்கத்தலிருந்து காத்துக்கொள்வதன் மூலம் மூன்றாம அறிவு பெறுகிறான்.

4. நல்ல நூல்களைத் தேர்ந்து கற்பதன்வழி நான்காவது அறிவு பெறுகிறான். பட்டறிவு நூல்களைப் படிப்பது நம் காலத்தை மிச்சப்படுத்தும்.

5. கலந்து கேட்டுப் பேசிப் பழகி, அதன் வழி பெறும் அறிவு ஐந்தாம் நிலையாகும்.

6. இயற்கை இயக்கத்தின மூலம் பெறும் அறிவு ஆறாவது அறிவாகும்- குன்றக்குடி அடிகளார்.

91) ‘எதிர்க்கதை நாடகம்’ என்னும் புதிய வகையை உருவாக்கியவர் யார்?

A) பம்மல் சம்பந்தனார்

B) மதுரகவி பாஸ்கரதாஸ்

C) சங்கரதாசு சுவாமிகள்

D) பரிதிமாற்கலைஞர்

விளக்கம்: அரிச்சந்திரன் கதையை சந்திரஹரி என்று பொய் மட்டுமே பேசுகிற ஒருவரைப் பற்றிய கதையாக மாற்றியதன் மூலம் ‘எதிர்க்கதை நாடகம்’ என்னும் புதிய வகையை உருவாக்கியவர் பம்மல் சம்பந்தனார் ஆவார்.

92) யாருடைய புகழொளி மூலமே, உலகம் இந்தியாவைக் கண்டுவந்தது என அறிஞர் அண்ணா கூறுகிறார்?

A) திலகர்

B) பசும்பொன் முத்துராமலிங்தேவர்

C) காந்தியடிகள்

D) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

விளக்கம்: காந்தியடிகளின் புகழொளி மூலமே, உலகம் இந்தியாவைக் கண்டுவந்தது என அறிஞர் அண்ணா காந்தியடிகள் மறைவுக்கு ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார்.

93) கூற்று: கூத்துக்களில் பார்வையாளர்கள் முன் தோன்றுகிற, குறிப்பிடத்தக்க முதல் கதைமாந்தனைக் கட்டியங்காரன் என அழைக்கிறோம்.

காரணம்: தெருக்கூத்துக் கதைமாந்தர்களின் அருமை பெருமைகளைக் சொல்லிப் பார்வையாளர்களுக்கு அவர்களை அறிமுகப்படுத்துவதால் கட்டியங்காரன் எனப் பெயர்பெற்றுள்ளான்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: கூத்துக்களில் பார்வையாளர்கள் முன் தோன்றுகிற, குறிப்பிடத்தக்க முதல் கதைமாந்தனைக் கட்டியங்காரன் என அழைக்கிறோம். கட்டியம் என்றால், அரசன் முன் புகழ்மொழி கூறுதல் என்று பொருள். தெருக்கூத்துக் கதைமாந்தர்களின் அருமை பெருமைகளைக் சொல்லிப் பார்வையாளர்களுக்கு அவர்களை அறிமுகப்படுத்துவதால் கட்டியங்காரன் எனப் பெயர்பெற்றுள்ளான்.

94) கறுப்பின மக்களுக்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற அவரின் போராட்டங்கள் அவரின் சிறந்த உரைகள் மூலமே மக்களைச் சென்றடைந்தன. இதில் குறிப்பிடப்படுபவர் யார்?

A) வின்ஸ்டன் சர்ச்சில்

B) உட்ரோ வில்சன்

C) மார்ட்டின் லூதர் கிங்

D) ஆபிரகாம் லிங்கன்

விளக்கம்: அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து தம் உரைகள் மூலம் சமத்துவத்தை எடுத்துரைத்தவர் மார்ட்டின் லூதர் கிங். கறுப்பின மக்களுக்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற அவரின் போராட்டங்கள் அவரின் சிறந்த உரைகள் மூலமே மக்களைச் சென்றடைந்தன. 1963-ஆம் ஆண்டு ஆற்றிய ‘எனக்கொரு கனவு உள்ளது’ என்ற உரை மிகச்சிறந்த உரையாக இன்றும் போற்றப்படுகிறது.

95) “வாழ்க்கையின் இலட்சியமே மக்களை அறிவு நலமுடையராக்குதலும் பண்பு நலமுடையோராக்குதலுமே. இவ்விரண்டு குறிக்கோளும் இன்று அடையத்தக்க வழியில் மக்களுடைய வாழ்க்கை நடைமுறை இல்லை” என்று கூறியவர் யார்?

A) காந்தியடிகள்

B) திரு.வி.க

C) விவேகானந்தர்

D) குன்றக்குடி அடிகளார்

விளக்கம்: “மக்களாகப் பிறந்தோர், இயற்கை வழங்கிய அறிவு வாயில்களைப் பயன்படுத்தி, மக்களுக்குரிய தகுதியினைப் பெறுதல் வேண்டும். வாழ்க்கையின் இலட்சியமே மக்களை அறிவு நலமுடையராக்குதலும் பண்பு நலமுடையோராக்குதலுமே. இவ்விரண்டு குறிக்கோளும் இன்று அடையத்தக்க வழியில் மக்களுடைய வாழ்க்கை நடைமுறை இல்லை” – குன்றக்குடி அடிகளார்.

96) இரவு முழுவதும் நடைபெற்ற நாடகங்களை மூன்று மணி அல்லது நான்கு மணி நேரத்திற்குள் முடிக்கும் முறையைக் கொண்டுவந்தவர் யார்?

A) பம்மல் சம்பந்தனார்

B) மதுரகவி பாஸ்கரதாஸ்

C) சங்கரதாசு சுவாமிகள்

D) பரிதிமாற்கலைஞர்

விளக்கம்: இரவு முழுவதும் நடைபெற்ற நாடகங்களை மூன்று மணி அல்லது நான்கு மணி நேரத்திற்குள் முடிக்கும் முறையைக் கொண்டுவந்தவர் பம்மல் சம்பந்தனார் ஆவார்.

97) ஜெயந்தன் என்னும் புனைப்பெயர் கொண்டவரின் இயற்பெயர் என்ன?

A) பெ.கிருஷ்ணன்

B) ராஜம் கிருஷ்ணன்

C) ஜெயகாந்தன்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: ஜெயந்தன் என்னும் புனைப்பெயர் கொண்டவர் பெ.கிருஷ்ணன். இவர் திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்தவர். இவரது ‘நினைக்கப்படும்’ என்ற நாடகம் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்றது. ‘சிறகை விரி, வானம் உனது’ என்னும் இவரது வானொலி நாடகம், அகில இந்திய வானொலியில் முதல் பரிசு பெற்றது. இவர், ‘சிந்தனைக்கூடல்’ என்னும் அமைப்பைத் தொடங்கி, இளைஞர்களுக்கு எழுத்துப் பயிற்சியையும் பேச்சுப் பயிற்சியையும் அளித்தவர் ஆவார்.

98) நல்ல நூல்களைத் தேர்ந்து கற்பதன்வழி நான்காவது அறிவு பெறுகிறான். பட்டறிவு நூல்களைப் படிப்பது நம் காலத்தை மிச்சப்படுத்தும் என்று கூறியவர் யார்?

A) திரு.வி.க

B) விவேகானந்தர்

C) அறிஞர் அண்ணா

D) குன்றக்குடி அடிகளார்

விளக்கம்: 1. வாழ்வதன் வழி முதல் அறிவு பெறுகிறான்.

2. செய்யும் தொழிலின் மூலம் இரண்டாம் நிலை அறிவு பெறுகிறான்.

3. தான் வாழும் காலத்தில் சூழ்நிலைத் தாக்கத்தலிருந்து காத்துக்கொள்வதன் மூலம் மூன்றாம் அறிவு பெறுகிறான்.

4. நல்ல நூல்களைத் தேர்ந்து கற்பதன்வழி நான்காவது அறிவு பெறுகிறான். பட்டறிவு நூல்களைப் படிப்பது நம் காலத்தை மிச்சப்படுத்தும்.

5. கலந்து கேட்டுப் பேசிப் பழகி, அதன் வழி பெறும் அறிவு ஐந்தாம் நிலையாகும்.

6. இயற்கை இயக்கத்தின மூலம் பெறும் அறிவு ஆறாவது அறிவாகும்- குன்றக்குடி அடிகளார்.

99) “உங்களை நன்முறையில் பயன்படுத்த தமிழ்த்தாய் உங்கள் முகத்தை நோக்கிய வண்ணமாய் இருக்கிறாள். அவளைப் பற்றியுள்ள பீடிகைகள் எல்லாவற்றையும் தொலைக்க எழுங்கள்” என்று கூறியவர் யார்?

A) திரு.வி.க

B) விவேகானந்தர்

C) காந்தியடிகள்

D) அறிஞர் அண்ணா

விளக்கம்: “உங்களை நன்முறையில் பயன்படுத்த தமிழ்த்தாய் உங்கள் முகத்தை நோக்கிய வண்ணமாய் இருக்கிறாள். அவளைப் பற்றியுள்ள பீடிகைகள் எல்லாவற்றையும் தொலைக்க எழுங்கள்” என்று கூறியவர் திரு.வி.க ஆவார்

100) விடிவெள்ளி தோன்றுவது போல யார் காலத்திலே விடுதலைக்கு முயற்சி செய்யப்பட்டது என்ற போதிலும், காந்தியடிகள் காங்கிரசுக்குள் புகுந்த பிறகே, இந்தியா என்றோர் நாடுண்டு, அங்கு விழிப்பும் எழுச்சியும் மிகஉண்டு என்று அறிந்துகொள்ள முடிந்தது?

A) கோபால கிருஷ்ண கோகலே

B) ஜவஹர்லால் நேரு

C) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

D) திலகர்

விளக்கம்: “விடிவெள்ளி தோன்றுவது போலத் திலகர் காலத்திலே விடுதலைக்கு முயற்சி செய்யப்பட்டது என்ற போதிலும், காந்தியடிகள் காங்கிரசுக்குள் புகுந்த பிறகே, இந்தியா என்றோர் நாடுண்டு, அங்கு விழிப்பும் எழுச்சியும் மிகஉண்டு என்று அறிந்துகொள்ள முடிந்தது” என்ற வரிகள் காந்தியடிகள் மறைவுக்கு அறிஞர் அண்ணா ஆற்றிய உரையாகும்.

101) ‘நேஷனல் தியேட்டர்ஸ்’ என்ற நாடக நிறுவனத்தை 1954-இல் தொடங்கியவர் யார்?

A) ஆர்.எஸ்.மனோகர்

B) பாலமணி அம்மையார்

C) கவிராயர் முத்துச்சாமி

D) பரிதிமாற்கலைஞர்

விளக்கம்: ஆர்.எஸ்.மனோகர் பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனாலும் நாடகத்தின் மீதான காதலால் ‘நேஷனல் தியோட்டர்ஸ்’ என்ற நாடக நிறுவனத்தை 1954-இல் தொடங்கினார்.

102) கூற்றுகளை ஆராய்க.

1. கட்டியங்காரன் உரையாடலுடன் கூடிய கூத்துக்கள் தமிழகத்தின் தென் பகுதியில் நடத்தப்படுகின்றன.

2. இவற்றிற்கு பதிலாக வட பகுதியில் ஸ்பெஷல் நாடகங்கள் நடத்தப்படுகின்றன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. கட்டியங்காரன் உரையாடலுடன் கூடிய கூத்துக்கள் தமிழகத்தின் வட பகுதியில் நடத்தப்படுகின்றன.

2. இவற்றிற்கு பதிலாக தென் பகுதியில் ஸ்பெஷல் நாடகங்கள் நடத்தப்படுகின்றன.

103) பட்டிமண்டபம் என்ற சொல் கீழ்க்காணும் எந்த நூலில் காணப்படவில்லை?

A) சிலப்பதிகாரம்

B) மணிமேகலை

C) சீவகசிந்தாமணி

D) திருவாசகம்

விளக்கம்: தற்காலத்தில் ‘பட்டிமன்றம்’ என்று அழைக்கப்படுவது, முன்பு ‘பட்டிமண்டபம்’ என்று அழைக்கப்பட்டது. பட்டிமண்டபம் என்ற சொல் சிலப்பதிகாரம், மணிமேகலை, திருவாசகம், கம்பராமாயணம் முதலான நூல்களில் காணப்படுகிறது.

104) ஒரு ரூபாய் என்ற நாடகத்தை எழுதியவர் யார்?

A) ஜெயந்தன்

B) சங்கரதாஸ் சுவாமிகள்

C) பம்மல் சம்பந்தனார்

D) ஜெயகாந்தன்

விளக்கம்: ஒரு ரூபாய் என்ற நாகடத்தை எழுதியவர் ஜெயந்தன் ஆவார். இது ஒரு ஒற்றை நடிகர் நாடகம் ஆகும்.

105) யாருடைய நாடகங்களைப் பார்ப்பதற்கு ஆங்கில அரசாங்கம் சிறப்புத் தொடர்வண்டி விட்டது?

A) பம்மல் சம்பந்தனார்

B) மதுரகவி பாஸ்கரதாஸ்

C) சங்கரதாசு சுவாமிகள்

D) பாலாமணி அம்மையார்

விளக்கம்: “கும்பகோணத்தில் இரவு ஒன்பதரை மணிக்கு நாடகம் ஆரம்பமாகும். இதற்காகப் பார்வையாளர்களை ஏற்றிக்கொண்டு மாயாவரத்திலிருந்து இரவு எட்டு மணிக்கு ஒரு இரயில் கும்பகோணத்திற்கு வரும். அதேபோல எட்டரை மணிக்குத் திருச்சியிலிருந்து ஒரு ரயில் வரும். அந்த ரயில்கள், கும்பகோணத்தில் நின்று விட்டு, இரவு மூன்று மணிக்கு மீண்டும் புறப்பட்டு, மாயவரத்திற்கும், திருச்சிக்கும் போய்விடும். பாலாமணி நாடகங்களைப் பார்க்க ரசிகர்களுக்காக ஆங்கில அரசு இத்தகைய சிறப்புத் தொடர்வண்டி விட்டது. அத்தொடர்வண்டியை “பாலாமணி ஸ்பெஷல்” என்று அழைத்தனர்.

106) 1963-ஆம் ஆண்டு ‘எனக்கொரு கனவு உள்ளது’ என்ற தலைப்பில் உரையாற்றியவர் யார்?

A) வின்ஸ்டன் சர்ச்சில்

B) உட்ரோ வில்சன்

C) மார்ட்டின் லூதர் கிங்

D) ஆபிரகாம் லிங்கன்

விளக்கம்: அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து தம் உரைகள் மூலம் சமத்துவத்தை எடுத்துரைத்த மார்ட்டின் லூதர் கிங் சிறந்த பேச்சாளர். கறுப்பின மக்களுக்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற அவரின் போராட்டங்கள் அவரின் சிறந்த உரைகள் மூலமே மக்களைச் சென்றடைந்தன. 1963-ஆம் ஆண்டு ஆற்றிய ‘எனக்கொரு கனவு உள்ளது’ என்ற உரை மிகச்சிறந்த உரையாக இன்றும் போற்றப்படுகிறது.

107) கலந்து கேட்டுப் பேசிப் பழகி, அதன் வழி பெறும் அறிவு ஐந்தாம் நிலையாகும் என்று கூறியவர் யார்?

A) திரு.வி.க

B) விவேகானந்தர்

C) அறிஞர் அண்ணா

D) குன்றக்குடி அடிகளார்

விளக்கம்: 1. வாழ்வதன் வழி முதல் அறிவு பெறுகிறான்.

2. செய்யும் தொழிலின் மூலம் இரண்டாம் நிலை அறிவு பெறுகிறான்.

3. தான் வாழும் காலத்தில் சூழ்நிலைத் தாக்கத்தலிருந்து காத்துக்கொள்வதன் மூலம் மூன்றாம் அறிவு பெறுகிறான்.

4. நல்ல நூல்களைத் தேர்ந்து கற்பதன்வழி நான்காவது அறிவு பெறுகிறான். பட்டறிவு நூல்களைப் படிப்பது நம் காலத்தை மிச்சப்படுத்தும்.

5. கலந்து கேட்டுப் பேசிப் பழகி, அதன் வழி பெறும் அறிவு ஐந்தாம் நிலையாகும்.

6. இயற்கை இயக்கத்தின மூலம் பெறும் அறிவு ஆறாவது அறிவாகும்- குன்றக்குடி அடிகளார்.

108) எந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் நொண்டி நாடகங்கள் தோன்றின?

A) 15

B) 16

C) 17

D) 18

விளக்கம்: 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதில் நொண்டி நாடகங்கள் தோன்றின. திருக்கச்சூர் நொண்டி நாடகம், பழனி நொண்டி நாடகம், சீதக்காதி நொண்டி நாடகம் என்பன அவற்றுள் சில.

109) “எழுங்கள் இளம்பரிதிகளே சாதிவேற்றுமை, பெண்ணடிமை, தீண்டாமை முதலிய கட்டுகள் இரிந்து ஓட தமிழ்க்கதிர் பரப்பி எழுங்கள் எழுங்கள்” என எழுச்சியுடன் கூறியவர் யார்?

A) காந்தியடிகள்

B) விவேகானந்தர்

C) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

D) திரு.வி.க

விளக்கம்: “எழுங்கள் இளம்பரிதிகளே சாதிவேற்றுமை, பெண்ணடிமை, தீண்டாமை முதலிய கட்டுகள் இரிந்து ஓட தமிழ்க்கதிர் பரப்பி எழுங்கள் எழுங்கள்” என எழுச்சியுடன் கூறியவர் திரு.வி.க ஆவார்.

110) பேச்சின் கூறுகள் எத்தனை?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: பேசும் பொருளை ஒழுங்குமுறைக்குக் கொண்டுவந்து தொடக்கம், இடைப்பகுதி, முடிவு எனப்பகுத்துப் பேசுவதையே பேச்சின் கூறுகள் என்கிறோம். இதனை எடுத்தல், தொடுத்தல், முடித்தல் எனவும் கூறலாம்.

111) பேச்சின் அடிப்படை என்பது கீழ்க்காண்பனவற்றில் எது?

A) சுருக்கமாக பேசுதல்

B) தெளிவாக பேசுதல்

C) விரிவாக பேசுதல்

D) நடுநிலையுடன் பேசுதல்

விளக்கம்: பேச்சின் அடிப்படை, தெளிவாகப் பேசுதலாகும். ஆகையால் சொல் தெளிவும் கருத்துத் தெளிவும் மிக முக்கியமானவை. கருத்து, சுருக்கமாக இருக்கும்போது தான் பேச்சு சுவைக்கும்.

112) “இந்தியா என்றோர் நாடுண்டு. அங்கு ஏலம், கிராம்பு பெறுவது உண்டு. பொன்னும் பொருளும் மிக உண்டு. போக்கறியாதார் நிரம்ப உண்டு என்ற அளவில் 16-ஆம் நூற்றாண்டிலேயே உலகம் அறிந்திருக்கிறது” என்ற வரிகளை கூறியவர் யார்?

A) திரு, வி.க

B) காந்தியடிகள்

C) அண்ணா

D) குன்றக்குடி அடிகளார்

விளக்கம்: “இந்தியா என்றோர் நாடுண்டு. அங்கு ஏலம், கிராம்பு பெறுவது உண்டு. பொன்னும் பொருளும் மிக உண்டு. போக்கறியாதார் நிரம்ப உண்டு என்ற அளவில் 16-ஆம் நூற்றாண்டிலேயே உலகம் அறிந்திருக்கிறது”என்ற வரிகள் காந்தியடிகள் மறைவுக்கு அண்ணா ஆற்றிய உரை ஆகும்.

113) “நான் எனது பேச்சின்மூலம் வெற்றி பெறுவேன். என் பேச்சைக் கேட்பதற்காகவே நீங்கள் எல்லாரும் காத்துக்கொண்டு இருப்பீர்கள்” எனச் சூளுரைத்தவர் யார்?

A) வின்ஸ்டன் சர்ச்சில்

B) உட்ரோ வில்சன்

C) மார்ட்டின் லூதர் கிங்

D) டிஸ்ரேலி

விளக்கம்: பிரிட்டன் நாட்டு முதன்மை அமைச்சராய் இருந்தவர் டிஸ்ரேலி. அவர், பொதுக் கூட்டங்களில் பேசிப் பழக்கமில்லாதவர். முதன் முதலில், அவையினர் முன் பேசுவதற்காக அவர் எழுந்தபோது, உடல் நடுங்கியது, நா குழறியது. பேச முடியாமல், உடல் வியர்த்தது, அமைதியாக உட்கார்ந்துவிட்டார். அதனால், அவையினரின் ஏளனப்பார்வைக்கு ஆளானர். இருந்தபோதிலும், அவர் கூட்டத்தினரைப் பார்த்து, “நான் எனது பேச்சின்மூலம் வெற்றி பெறுவேன். என் பேச்சைக் கேட்பதற்காகவே நீங்கள் எல்லாரும் காத்துக்கொண்டு இருப்பீர்கள்” என்று சூளுரைத்தார்.

114) உடல் மனநலத்தைக் கெடுத்து இயக்க ஆற்றலைக் குறைப்பது கிரணம் எனும் உண்மையையும் ஓசோன் சார்ந்து சுறுசுறுப்பையும் உயிரியக்கத்தையும் மிகுதிப்படுத்தும் என்பதையும் அறியும் அறிவே ஆறாவது அறிவு என்று கூறியவர் யார்?

A) குன்றக்குடி அடிகளார்

B) என்.எஸ்.கிருஷ்ணன்

C) அறிஞர் அண்ணா

D) திரு.வி.க

விளக்கம்: உடல் மனநலத்தைக் கெடுத்து இயக்க ஆற்றலைக் குறைப்பது கிரணம் எனும் உண்மையையும் ஓசோன் சார்ந்து சுறுசுறுப்பையும்உயிரியக்கத்தையும் மிகுதிப்படுத்தும் என்பதையும் அறியும் அறிவே ஆறாவது அறிவு – குன்றக்குடி அடிகளார்

115) “நான் என்ன செய்வேன்? எனக்குள்ளதையெல்லாம் சேர்த்துத்தான் உங்கள் மன்னர் அணிந்திருக்கிறாரே” என்று கூறியவர் யார்?

A) அம்பேத்கர்

B) காந்தியடிகள்

C) அறிஞர் அண்ணா

D) ஜவஹர்லால் நேரு

விளக்கம்: வட்ட மேஜை மாநாட்டுக்கு மகாத்மா காந்தி போயிருக்கும் போது, “இந்த வெறும் வேஷ்டியுடன், இப்படியேவா, மன்னரைப் பார்க்கப் போகிறீர்கள்?நல்ல ஆடைகள் அணிந்து கொள்ள வேண்டாவா?” என்று அங்குள்ள ஒருவர் கேட்டாராம். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே, “நான் என்ன செய்வேன்? எனக்குள்ளதையெல்லாம் சேர்த்துத்தான், உங்கள் மன்னர் அணிந்திருக்கிறாரே” என்று கேட்டுவிட்டாராம்.

116) பெரியார் தன் பேச்சின் மூலம் ஏற்படுத்திய தாக்கம், அவர் உருவாக்கிய இயக்கம் அறிஞர்களை, தலைவர்களை, சிறந்த பேச்சாளர்களை மக்களுக்கு அடையாளம் காட்டியது. அவர்களுள் முதன்மையானவர் யார்?

A) திரு.வி.க

B) பேரறிஞர் அண்ணா

C) மு.வ

D) குன்றக்குடி அடிகளார்

விளக்கம்: பெரியார் தன் பேச்சின் மூலம் ஏற்படுத்திய தாக்கம், அவர் உருவாக்கிய இயக்கம் அறிஞர்களை, தலைவர்களை, சிறந்த பேச்சாளர்களை மக்களுக்கு அடையாளம் காட்டியது. அவர்களுள் முதன்மையானவர் அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தால் ‘அறிஞர்’ எனப் பட்டமளித்துச் சிறப்பிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா ஆவார்.

117) கூற்றுகளை ஆராய்க.

1. கட்டியங்காரனை கோமாளி என்றும் பபூன் என்றும் கூறுவர்.

2. இயக்குநரை நெறியாளர் எனவும் அழைப்பர்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. கட்டியங்காரனை கோமாளி என்றும் பபூன் என்றும் கூறுவர்.

2. நடிகர், நடிகைகளை இயக்கக்கூடிய முழுப்பொறுப்பையும் ஏற்பவர் இயக்குநர். இயக்குநரை நெறியாளர் எனவும் அழைப்பர்.

118) கூற்று: அண்ணா தனித்துவமான உரைகள் நிகழ்த்தக் கூடியவர் ஆவார்.

காரணம்: சென்னை கன்னிமாரா நூலகத்தில் அவர் கைபடாத நூல்கள் இல்லை என்னும் அளவிற்குச் சிறந்த வாசிப்பாளர்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

விளக்கம்: அண்ணா மடைதிறந்த வெள்ளம்போல உரையாற்றும் ஆற்றல் பெற்றவர். சென்னைக் கன்னிமாரா நூலகத்தில் அவர் கைபடாத நூல்கள் இல்லை என்னும் அளவிற்குச் சிறந்த வாசிப்பாளர். அந்த வாசிப்புத்தான் அவரின் தனித்துவமான உரைகளுக்குக் காரணம் ஆகும்.

119) “ஆகாயத் தாமரையைப் பறித்துக் கொடுக்கும் அற்புதம் அவர் காட்டினாரில்லை. ஆனால், ஊமைகளாக இருந்து வந்த மக்களைப் பேச செய்தார்” – இவ்வரிகளில் குறிப்பிடப்படுபவர் யார்?

A) திரு, வி.க

B) காந்தியடிகள்

C) அண்ணா

D) குன்றக்குடி அடிகளார்

விளக்கம்: “ஆகாயத் தாமரையைப் பறித்துக் கொடுக்கும் அற்புதம் அவர் காட்டினாரில்லை. ஆனால், ஊமைகளாக இருந்து வந்த மக்களைப் பேச வைத்தார். உரிமை முழக்கமிடச் செய்தார்”- காந்தியடிகள் மறைவுக்கு அண்ணா ஆற்றிய உரை.

120) மக்களாய் பிறந்தோர் இயற்கை வழங்கிய அறிவு வாயில்களைப் பயன்படுத்தி, மக்களுக்குரிய தகுதியினைப் பெறுதல் வேண்டும் என்று கூறியவர் யார்?

A) காந்தியடிகள்

B) திரு.வி.க

C) விவேகானந்தர்

D) குன்றக்குடி அடிகளார்

விளக்கம்: “மக்களாகப் பிறந்தோர், இயற்கை வழங்கியஅறிவு வாயில்களைப் பயன்படுத்தி, மக்களுக்குரிய தகுதியினைப் பெறுதல் வேண்டும். வாழ்க்கையின் இலட்சியமே மக்களை அறிவு நலமுடையராக்குதலும் பண்பு நலமுடையோராக்குதலுமே. இவ்விரண்டு குறிக்கோளும் இன்று அடையத்தக்க வழியில் மக்களுடைய வாழ்க்கை நடைமுறை இல்லை” – குன்றக்குடி அடிகளார்.

121) பேச்சின் தொடக்கமாக இருந்தாலும் முடிவாக இருந்தாலும் தம் கருத்தை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கத்தில் வெற்றியடைந்துள்ளவர் யார்?

A) திரு.வி.க

B) பெரியார்

C) அறிஞர் அண்ணா

D) காந்தியடிகள்

விளக்கம்: பேச்சின் தொடக்கமாக இருந்தாலும் முடிவாக இருந்தாலும் தம் கருத்தை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கத்தில் வெற்றியடைந்துள்ளவர் திரு.வி.க ஆவார். இவரைத் ‘தமிழ்த்தென்றல்’ எனவும் அழைப்பர்.

122) ஏதென்ஸ் நகரில் வீதி வீதியாகச் சென்று இளைஞர்களைத் தம்கருத்துக்கள் மூலம் சிந்திக்க வைத்தவர் யார்?

A) டிஸ்ரேலி

B) ஆப்ரகாம் லிங்கன்

C) வின்ஸ்டன் சர்ச்சில்

D) சாக்ரடீஸ்

விளக்கம்: தமிழக வரலாற்றில் பல ஆண்டுகளாகச் சிந்தனை இன்றி உழன்ற மக்களைச் சிந்திக்க வைத்து, பகுத்தறிவுடன் வாழ வழிகாட்டிய தலைவர் தந்தை பெரியார். ஏதென்ஸ் நகரில் சாக்ரடீஸ் எப்படி வீதி வீதியாகச் சென்று, இளைஞர்களைத் தம் கருத்துக்கள் மூலம் சிந்திக்க வைத்தாரோ, அதே போன்று மிகப்பெரிய சிந்தனை எழுச்சியைத் தமிழ்நாட்டு வீதிகளில் ஏற்படுத்தியவர் தந்தை பெரியார்.

123) “ஆயுதம் தாங்கியவர் எதிரில் சாகப் பயப்படாதாரின் ஓர் அணிவகுப்பை நிறுத்திக்காட்டினார்” என்ற வரிகளில் குறிப்பிடப்படுவர் யார்?

A) திரு, வி.க

B) காந்தியடிகள்

C) அண்ணா

D) குன்றக்குடி அடிகளார்

விளக்கம்: “ஆயுதம் தாங்கியவர் எதிரில் சாகப் பயப்படாதாரின் ஓர் அணிவகுப்பை நிறுத்திக் காட்டினார். சிட்டுக்குருவிகளுக்கு வல்லூற்றை எதிர்த்திடும் ஆற்றல் ஏற்படச் செய்தார்” என்ற வரிகளில் குறிப்பிடப்படுபவர் காந்தியடிகள்.

மேற்காணும் வரி காந்தியடிகள் மறைவுக்கு அண்ணா ஆற்றிய உரை ஆகும்.

124) பேச்சில் இலக்கிய நயம் இல்லாவிட்டாலும், இயல்பான பேச்சுத்தமிழ் மூலம் மக்களைச் சிந்திக்க வைத்தவர் யார்?

A) திரு.வி.க

B) தந்தை பெரியார்

C) பேரறிஞர் அண்ணா

D) காந்தியடிகள்

விளக்கம்: தந்தை பெரியாரின் பேச்சில் இலக்கிய நயம் இருந்ததில்லை. இயல்பான பேச்சுத்தமிழில்தான் உரையாற்றுவார். ஆனால், அந்த இயல்பான பேச்சுத்தமிழ் மக்களைச் சிந்திக்க வைத்தது.

125) “வேந்தன் பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண்டபம்” என்று குறிப்பிடும் நூல் எது?

A) சிலப்பதிகாரம்

B) மணிமேகலை

C) திருவாசகம்

D) கம்பராமாயணம்

விளக்கம்: சிலப்பதிகாரத்தில், “வேந்தன் பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண்டபம்” (5-102) என குறிக்கப்பட்டுள்ளது.

126) அரங்குகள் அமைய வேண்டியமுறை பற்றி கீழ்க்காணும் எதில் குறிப்பிடப்பட்டுள்ளது?

A) மணிமேகலை

B) சிலப்பதிகாரம்

C) சீவக சிந்தாமணி

D) கம்பராமாயணம்

விளக்கம்: தமிழின் முதல் காப்பியமாக சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக்காதையில், அரங்குகள் அமைய வேண்டியமுறை, அரங்கின் உயரம், திரைச்சீலைகளின் வகைகள், தூண்களின் நிழலைக்காட்டாது விளக்குகளை அமைக்க வேண்டியமுறை குறித்தெல்லாம் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

127) நாடகத்தில் இரண்டு கதைமாந்தர்கள் உச்சத்தில் தங்களுக்கு என்ன நடக்கப்போகிறது? எனத் தெரியாமல் இருப்பார்கள். இதனை _______________என்பர்.

A) எதிர்பார்ப்பு

B) கிளைமாக்ஸ்

C) குறிப்பு முரண்

D) காண்ட்ராஸ்ட்

விளக்கம்: நாடகத்தில் இரண்டு கதைமாந்தர்கள் உச்சத்தில் தங்களுக்கு என்ன நடக்கப்போகிறது? எனத்தெரியாமல் இருப்பார்கள். ஆனால் பார்வையாளர்களுக்கு நடக்கப்போவது முன்னதாகவே தெரிந்துவிடும். இதனையே குறிப்புமுரண் என்பர். நாடக ஆசிரியர்கள் குறிப்புமுரண் மிகநுட்பமாகப் பயன்படுத்துவர். இதனை, நாடகமுரண் என்றும் கூறுவர்.

128) மனோகரா, சபாபதி, சந்திரஹரி, சிறுத்தொண்டர் நாடகம் முதலிய நாடகங்களை எழுதியவர் யார்?

A) பம்மல் சம்பந்தனார்

B) மதுரகவி பாஸ்கரதாஸ்

C) சங்கரதாசு சுவாமிகள்

D) பரிதிமாற்கலைஞர்

விளக்கம்: பம்மல் சம்பந்தனார் எழுதிய 94 நாடகங்களும் அச்சு நூலாக வெளிவந்துள்ளன. அவற்றுள் மனோகரா, சபாபதி, சந்திரஹரி, சிறுத்தொண்டர் நாடகம், உத்தமபத்தினி போன்றவை குறிப்பிடத்தக்கன.

129) திரைப்படங்கள் அல்லாத அக்கால கட்டத்தில் யாருடைய நாடகப்பாடல்களைப் புகழ்பெற்ற ஹிஸ் மாஸ்டர் வாய்ஸ் இசைத்தட்டு நிறுவனம் கிராமபோன் இசைத்தட்டுகளில் பதிவேற்றி உலகம் முழுவதும் கொண்டு சென்றது?

A) மதுரகவி பாஸ்கரதாஸ்

B) சங்கரதாசு சுமாமிகள்

C) பரிதிமாற்கலைஞர்

D) பம்மல் சம்பந்தனார்

விளக்கம்: திரைப்படங்கள் அல்லாத அக்கால கட்டத்தில் மதுரகவி பாஸ்கரதாஸ்-ன் நாடகப்பாடல்களைப் புகழ்பெற்ற ஹிஸ் மாஸ்டர் வாய்ஸ் இசைத்தட்டு நிறுவனம் கிராமபோன் இசைத்தட்டுகளில் பதிவேற்றி உலகம் முழுவதும் கொண்டு சென்றது.

130) எந்த பல்கலைக்கழகத்தால் ‘அறிஞர்’ எனப் பட்டமளித்துச் சிறப்பிக்கப்பட்டவர் பேரறிஞர் அண்ணா?

A) ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்

B) சென்னைப் பல்கலைக்கழகம்

C) யேல் பல்கலைக்கழகம்

D) நியூயார்க் பல்கலைக்கழகம்

விளக்கம்: அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் ‘அறிஞர்’ எனப் பட்டமளித்துச் சிறப்பிக்கப்பட்டவர் பேரறிஞர் அண்ணா.

131) கீழ்க்காணும் எந்த பல்கலைக்கழகத்தில் நாடகப்பள்ளி உள்ளது?

A) தஞ்சாவூர்த் தமிழ்ப்பல்கலைக்கழகம்

B) பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகம்

C) சென்னைப் பல்கலைக்கழகம்

D) மேற்காணும் அனைத்தும்

விளக்கம்: பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் நாடகப்பள்ளி இருக்கிறது. தஞ்சாவூர்த் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நாடகப்புலம் இருக்கிறது.

132) திரைச்சீலைகளை எத்தனை வகைகளாக சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: திரைச்சீலைகளை மூன்று வகைகளாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. அவை,

1. ஒரு முக எழினி- ஒரே பக்கத்தில் திரை இழுக்கப்படுகின்றன திரை

2. பொரு முக எழினி- இரு பக்கமும் திரையைத் திறக்கின்ற துணி

3. கரந்துவரல் எழினி- மேலிருந்து கீழே இறங்கும் திரை

133) “பட்டிமண்டபத்து பாங்கு அறிந்து ஏற்றுமின்” என்று குறிப்பிட்டுள்ள நூல் எது?

A) சிலப்பதிகாரம்

B) மணிமேகலை

C) கம்பராமாயணம்

D) திருவாசகம்

விளக்கம்: சிலப்பதிகாரத்தில், “வேந்தன் பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண்டபம்” (5-102) எனவும், மணிமேகலையில் “பட்டிமண்டபத்துப் பாங்கு அறிந்து ஏற்றுமின்” (1-16) எனவும் குறிக்கப்பட்டுள்ளது.

134) நாடகத்தின் அடிப்படை அலகு எது?

A) களம்

B) அங்கம்

C) காட்சி

D) உரையாடல்

விளக்கம்: உரையாடல்தான் நாடகத்தின் அடிப்படை அலகு. இது நாடகம் என்னும் இலக்கிய வடிவத்தை உருவாக்குகிறது.

135) “87 ஆண்டுகளுக்கு முன்பு நமது முன்னோர்கள் இந்தக் கண்டத்தில் சுதந்திரத்தை மனத்திற்கொண்டும் எல்லா மனிதர்களும் சமமானவர்கள் என்ற எண்ணத்திற்கு அர்ப்பணித்தும் ஒரு புதிய நாட்டை உருவாக்கினர்” என்று கூறியவர் யார்?

A) விவேகானந்தர்

B) அபிரகாம் லிங்கன்

C) வின்ஸ்டன் சர்ச்சில்

D) டிஸ்ரேலி.

விளக்கம்: கட்டிஸ்பர்க்கில் 1863 நவம்பர் 19ஆம் நாள் நடைபெற்ற நினைவுச்சின்னம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு அபிரகாம் லிங்கன் உரை நிகழ்த்தினார். அதில், “87 ஆண்டுகளுக்கு முன்பு நமது முன்னோர்கள் இந்தக் கண்டத்தில் சுதந்திரத்தை மனத்திற்கொண்டும் எல்லா மனிதர்களும் சமமானவர்கள் என்ற எண்ணத்திற்கு அர்ப்பணித்தும் ஒரு புதிய நாட்டை உருவாக்கினர்” என்று கூறினார்.

136) திரைச்சீலைகளை மூன்று வகை என சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. இதில் பொருமுக எழினி என்பது என்ன?

A) மேலிருந்து கீழே இறங்குகும் திரை

B) கீழிலிருந்து மேலே செல்லும் திரை

C) ஒரே பக்கத்தில் இழுக்கப்படுகின்றன திரை

D) இரு பக்கமும் திரையைத் திறக்கின்ற துணி

விளக்கம்: திரைச்சீலைகளை மூன்று வகைகளாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. அவை,

1. ஒரு முக எழினி- ஒரே பக்கத்தில் இழுக்கப்படுகின்றன திரை

2. பொரு முக எழினி- இரு பக்கமும் திரையைத் திறக்கின்ற துணி

3. கரந்துவரல் எழினி- மேலிருந்து கீழே இறங்கும் திரை

137) “பட்டிமண்டபம் ஏற்றினை” என்று குறிப்பிடப்பட்டுள்ள நூல் எது?

A) சிலப்பதிகாரம்

B) மணிமேகலை

C) கம்பராமாயணம்

D) திருவாசகம்

விளக்கம்: திருவாசகத்தில் “பட்டிமண்டபம் ஏற்றினை”(சதகம் – 41) என்று சொல்லப்பட்டிருக்கிறது.

138) அரங்கம் எத்தனை வகைப்படும்?

A) 7

B) 9

C) 5

D) 8

விளக்கம்: அரங்கத்தில் பார்வையாளர்களை அமரவைக்கின்ற நிலையையும் காட்சிகள் நடக்கும் இடத்தை கருத்தில்கொண்டு, நாடக அரங்கங்களை கீழக்காணுமாறு வகைப்படுத்தலாம்,

1. படச் சட்ட அரங்கம்

2. வட்ட வடிவ அரங்கம்

3. அரை வட்ட வடிவ அரங்கம்

4. சதுர அரங்கம்

5. செவ்வக அரங்கம்

6. முக்கோண அரங்கம்

7. அண்மை அரங்கம்

8. திறந்தவெளி அரங்கம்

139) கெட்டிஸ்பர்க்கில் எப்பேர்து நடைபெற்ற நினைவுச்சின்னம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு அபிரகாம் லிங்கன் உரை நிகழ்த்தினார்?

A) 1863 நவம்பர் 19

B) 1873 நவம்பர் 19

C) 1883 நவம்பர் 19

D) 1893 நவம்பர் 19

விளக்கம்: கெட்டிஸ்பர்க்கில் 1863 நவம்பர் 19ஆம் நாள் நடைபெற்ற நினைவுச்சின்னம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு அபிரகாம் லிங்கன் உரை நிகழ்த்தினார்.

140) “பன்னஅரும் கலைதெரி பட்டிமண்டபம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ள காப்பியம் எது?

A)கம்பராமாயணம்

B) சிலப்பதிகாரம்

C) மணிமேகலை

D) சீவக சிந்தாமணி

விளக்கம்: “பன்னஅரும் கலைதெரி பட்டிமண்டபம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது காப்பியம் கம்பராமாயணம் ஆகும்.

141) பொதுவாக மேடைப்பேச்சில் எத்தனை வகையான நடைகள் உள்ளன?

A) 4

B) 5

C) 6

D) 7

விளக்கம்: பொதுவாக மேடைப்பேச்சில் கடின நடை, எளிய நடை, இலக்கிய நடை, அடுக்குமொழி நடை, கொச்சை நடை என ஐவகை நடைகள் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!