[videopress jVAmdA8Y] அயினி அக்பரி மற்றும் அக்பர் நாமா எனும் இரு நூலினை எழுதியவர் யார்? அபுல் பாசல் பேரரசர் அக்பர் அவையிலிருந்த அரசியல் ஆலோசகர்கள் நவரத்தினங்களுள் ஒருவர். அவருடைய காலம் ஜனவரி 14, 1551 முதல் ஆகஸ்ட் 12, 1602 ஆகும். இவரின் தந்தையார் ஷேக் முபாரக். இவரது சகோதரர் புகழ் பெற்ற பாரசீகக் கவிஞர் அபுல் ஃபைஸி. 1574 ஆம் ஆண்டு அக்பரின் அரசவையில் சேர்ந்தார். அது முதல் இவர் பேரரசர் அக்பரின் நம்பிக்கைக்குரிய மிக நெருங்கிய நண்பராக தன் இறுதிநாள் வரை இருந்தார். இவர் அக்பரின் வாழ்க்கை வரலாறு, ஆட்சி முறை, அக்கால இலக்கிய சமயத் தத்துவங்கள் குறித்து மூன்று பாகங்கள் கொண்ட நூலை எழுதினார். முதல் இரண்டு பாகங்கள் அக்பர் நாமா என்ற பெயரிலும் மூன்றாவது பாகம் அயினி அக்பரி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. அக்பரின் மகன் சலீம் என்னும் ஜஹாங்கீர் அரியணை ஏறுவதை அபுல் பாசல் எதிர்த்ததாகத் தெரிகிறது. அத்தோடு இளவரசன் சலீமுக்கு அபுல் பாசல் செல்வாக்கு கண்ணில் கிடந்த துரும்பாக உறுத்தியது. துரும்பை அகற்றத் திட்டமிட்ட சலீம் பீர்சிங்க் என்பவனைக் கொண்டு 1602 ஆம் ஆண்டு இவர் அரசுமுறைப் பயணமாக ஆக்ரா நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது அவரது தலையைத் துண்டிக்கச் செய்து, அலகாபாத்தில் இருந்த சலீமிடம் அனுப்பப்பட்டது.