Answer KeyTnpsc Answer Key

Tnpsc Vocational Counsellor Community Officer Exam Previous Questions Answer Key 2022 – General Tamil And General Studies in Tamil

Tnpsc Vocational Counsellor Community Officer Exam Previous Questions Answer Key 2022 – General Tamil And General Studies in Tamil

VOCATIONAL COUNSELLOR IN MEDICAL EDUCATION DEPARTMENT & COMMUNITY OFFICER IN TAMIL NADU URBAN HABITAT DEVELOPMENT BOARD IN TAMIL NADU MEDICAL SUBORDINATE SERVICE & TAMIL NADU SLUM CLEARANCE BOARD COMMUNITY DEVELOPMENT SERVICE

1. பால்+ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

(அ) பால் ஊறும் (ஆ) பாலூறும் (இ) பால்லூறும் (ஈ) பாஊறும்

2. சேர்த்தெழுதுதல்:

வான்+ஒலி

(அ) வான் ஒலி (ஆ) வானொலி (இ) வாவொலி (ஈ) வானெலி

3. கல் + தீது என்பது ——— எனவும் சேரும்

(அ) கல்தீது (ஆ) கல்லீது (இ) கஃறீது (ஈ)கற்றீது

4. கலம்+ஏறி – சேர்த்து எழுதுக:

(அ) கலம்ஏறி (ஆ) கலமறி (இ) கலன்ஏறி (ஈ) கலமேறி

5. பெயரறியா – பிரித்து எழுதுக:

(அ) பெயர+றியா (ஆ) பெயர்+ரறியா (இ) பெயர்+அறியா (ஈ) பெயர+அறியா

6. நீளுழைப்பு – பிரித்து எழுதுக:

(அ) நீளு+உழைப்பு (ஆ) நீண்+உழைப்பு (இ) நீள்+அழைப்பு (ஈ) நீள்+உழைப்பு

7. பிரித்தெழுதுக: பாடாண்திணை

(அ) பாடாண்+திணை (ஆ) பாட்டு+ஆண்+திணை

(இ) பாடு+ஆண்+திணை (ஈ) பாடா+ஆண்+திணை

8. எதிர்ச்சொல்லை எழுத்து எழுதுக

– “அல்”

(அ) இரவு (ஆ) பகல் (இ) காலை (ஈ) மாலை

9. எதிர்ச்சொல் தருக:

ஐயம்

(அ)சோர்வு (ஆ) தெளிவு (இ) பொய்மை (ஈ) விலகு

10. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:

அக்திணை அல்லாததைக் கண்டறிக:

(அ) குறிஞ்சி (ஆ) காஞ்சி (இ) முல்லை (ஈ) மருதம்

11. தவறான இணையைக் கண்டறிக:

(அ) சிலை-வில் (ஆ) புள்-பறவை (இ) தெவ்-பகைமை (ஈ) சேந்தன-சேர்ந்தன

12. பொருந்தா இணையைக் கண்டறிக:

(அ) கொற்றவை-கிணறு (ஆ) முருகன்-சுனைநீர்

(இ) திருமால்-காட்டாறு (ஈ) இந்திரன்-செங்கழுநீர்

13. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:

(அ) விளம்புதல் (ஆ) செப்புதல் (இ) கேட்டல் (ஈ) மொழிதல்

14. பொருந்தா இணை எது?

(அ) தூறு-புதரின் அடிப்பகுதி (ஆ) வெங்கழி-காய்ந்த கழி

(இ) செம்மல்-வாடிய பூ (ஈ) கொழுந்தாடை-காய்ந்த கட்டை

15. பொருந்தா சொல்லைக் கண்டறிக:

(அ) ஏரி (ஆ) குளம் (இ) குணம் (ஈ) ஆறு

16. பொருந்தா சொல்லைக் கண்டறிக:

சூம்பல், சொத்தை, அழுகல், கடலை

(அ) சூம்பல் (ஆ) சொத்தை (இ) கடலை (ஈ) அழுகல்

17. வழுவற்ற தொடரைக் கண்டறி:

(அ) செழியன் வந்தான் (ஆ) செழியன் வந்தது

(இ) செழியன் வந்தாள் (ஈ) செழியன் வந்துட்டான்

18. மரபுச்சொல்லைப் பொருத்தி எழுதுக:

(அ) சோறு 1. தின்

(ஆ) முறுக்கு 2. குடி

(இ) தண்ணீர் 3. பருகு

(ஈ) பால் 4. உண்

அ ஆ இ ஈ

அ. 2 3 1 4

ஆ 1 4 3 2

இ. 4 1 2 3

ஈ. 3 2 4 1

19. மரபுப்பிழை இல்லாத தொடர் எது?

(அ) கோழி கூவும் (ஆ) சேவல் கொக்கரிக்கும் (இ) நாய் கத்தும் (ஈ) காகம் கரையும்

20. சந்திப்பிழையற்ற தொடர் எது?

(அ) எங்கள் ஊர் கோயிலில் குதிரை சிற்பங்கள் உள்ளன.

(ஆ) அழகிய கலைகளை பற்றி அறிந்தோம்

(இ) மூங்கிலைக் கொண்டு பல வகையான கைவினைப் பொருட்கள் செய்யப்படுகின்றன

(ஈ) பாய் என்பது படுக்க பயன்படுவது

21. பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது?

(அ) கொடுங்கோல் அரசன் அக்ரமம் செய்தான்

(ஆ) குழந்தைக்குக் கண் திருஷ்டி சுற்றிப்போடு

(இ) ஆகாசத்தில் பட்சி பறந்தது

(ஈ) ஆலயத்திற்குச் சென்று இறைவனை வணங்கினேன்

22. சந்திப்பிழை அற்ற வாக்கியங்களைக் கூறுக:

(அ) அந்தக் காட்சியைப் பார் (ஆ) அந்த காட்சியை பார்

(இ) அந்தக் காட்சியை பார் (ஈ) அந்த காட்சியைப் பார்

23. சந்திப்பிழை அற்ற தொடரைக் காண்க:

(அ) மெட்டுக்கு பாட்டு பாடு (ஆ) மெட்டுக்குப் பாட்டுப் பாடு

(இ) மெட்டுக்குப் பாட்டு பாடு (ஈ) மெட்டுக்கு பாட்டுப்பாடு

24. பிறமொழிச் சொற்கள் கலவாத தொடரை எடுத்து எழுதுக:

(அ) காலிங்பெல்லை அழுத்தினான் கணியன் (ஆ) மாதவன் ஷாப்பிங் சென்றான்

(இ) கமலா மில்க் குடித்தாள் (ஈ) மாலையில் விளையாடு

25. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிக:

(அ) பயணப்படகுகள் 1. Commodity

(ஆ) கடற்பயணம் 2. Adulteration

(இ) கலப்படம் 3. Ferries

(ஈ) பண்டம் 4. Voyage

அ ஆ இ ஈ

அ. 3 4 2 1

ஆ. 1 2 3 4

இ. 2 1 4 3

ஈ. 4 3 1 2

26. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்:

வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே –

– இவ்வடி உணர்த்தும் பொருள்

(அ) மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் நிறைந்திருந்தனர்

(ஆ) வறண்ட வயிலில் உழவர் வெள்ளமாய் அமர்ந்திருந்தனர்

(இ) செறிவான வயலில் உழவர் வெள்ளமாயக் கூடியிருந்தனர்

(ஈ) பசுமையான வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்

27. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை எழுதுக:

கூரை, கூறை

(அ) சட்டை, புடவை (ஆ) வீட்டின் கூரை, புடவை

(இ) புடவை, வீட்டின் கூரை (ஈ) புடவை, வீட்டின் சுவர்

28. “மதி” என்பதன் தவறான பொருளைத் தேர்ந்தெடுக்க:

(அ) அறிவு (ஆ) நிலவு (இ) ஞானம் (ஈ) பகலவன்

29. “வேழம்” என்பதன் தவறான பொருளைத் தேர்ந்தெடுக்க:

(அ) பிடி (ஆ) களிறு (இ) சிங்கம் (ஈ) பெண் யானை

30. வேர்ச்சொல்லை தேர்வு செய்க:

“ஓடினான்”

(அ) ஓடி (ஆ) ஓடு (இ) ஓடின (ஈ) ஓடிய

31. வேர்ச்சொல்லை தேர்வு செய்க:

“சொன்னார்”

(அ) சொல் (ஆ) சொன் (இ) சொன்ன (ஈ) சொல்ல

32. வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் காண்க:

கொடு

(அ) கொடுத்தல் (ஆ) கொடுத்த (இ) கொடுத்து (ஈ) கொடுத்தவன்

33. வினைமுற்றுக்குரிய வேர்ச்சொல்லை எழுதுக

– தருகின்றனர்

(அ) தருவி (ஆ) தந்த (இ) தந்து (ஈ) தா

34. அகரவரிசையில் எழுதுக:

(அ) அன்பு,இரக்கம்,ஓசை,ஐந்து,ஒழுக்கம்

(ஆ) அன்பு,இரக்கம், ஐந்து,ஒழுக்கம்,ஓசை

(இ) ஒழுக்கம்,ஓசை,இரக்கம்,அன்பு,ஐந்து

(ஈ) இரக்கம்,ஒழுக்கம்,ஐந்து,ஓசை,அன்பு

35. அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க:

(அ) ஊக்கம், ஈதல், இரக்கம், எளிமை, ஆடு

(ஆ) ஈதல், இரக்கம், ஊக்கம், ஆடு, எளிமை

(இ) ஆடு, இரக்கம், ஈதல், எளிமை, ஊக்கம்

(ஈ) ஆடு, இரக்கம், ஈதல், ஊக்கம், எளிமை

36. அகரவரிசையில் எழுதுக:

(அ) கற்றல்,காணுதல்,கிளி,கீசு,கொம்பு (ஆ) கிளி,கீசு,கொம்பு,காணுதல்,கற்றல்

(இ) கற்றல்,கீசு,கொம்பு,காணுதல்,கிளி (ஈ) கொம்பு,கீசு,கிளி,காணுதல்,கற்றல்

37. அகரவரிசையில் எழுதுக:

(அ) மக்கள்,அலுவலர்,மாந்தர்,மொமி (ஆ) அலுவலர்,மக்கள்,மாந்தர்,மொழி

(இ) மொழி,மக்கள்,மாந்தர்,அலுவலர் (ஈ) மக்கள்,மாந்தர்,மொழி,அலுவலர்

38. அகரவரிசையில் எழுதுக:

(அ) அன்பு,ஊக்கம்,ஏது,ஒளவை,ஆடு (ஆ) ஊக்கம்,ஏது,ஒளவை,ஆடு,அன்பு

(இ) அன்பு,ஆடு,ஊக்கம்,ஏது,ஒளவை (ஈ) ஒளவை,ஏது,ஊக்கம்,ஆடு,அன்பு

39. அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க:

(அ) வாக்கு,வம்பு,விசை,வீழ்ச்சி (ஆ) வம்பு,வாக்கு,விசை,வீழ்ச்சி

(இ) வீழ்ச்சி,விசை,வாக்கு,வம்பு (ஈ) விசை,வாக்கு,வம்பு,வீழ்ச்சி

40. அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:

(அ) துன்பம்,தூண்,தேன்,தாண்டுதல் (ஆ) தூண்,தேன்,துன்பம்,தாண்டுதல்

(இ) தாண்டுதல்,துன்பம்,தூண்,தேன் (ஈ) தேன்,தூண்,துன்பம்,தாண்டுதல்

41. சொற்களை முறைப்படுத்தி சொற்றொடராக்குக:

மிகப்பெரிய சாண்டியாகோ மீனைப் பிடித்தார்

(அ) சாண்டியாகோ மிகப்பெரிய மீனைப் பிடித்தார்

(ஆ) மீனைப் பிடித்தார் மிகப்பெரிய சாண்டியாகோ

(இ) சாண்டியாகோ பிடித்தார் மீனை மிகப் பெரிய

(ஈ) மிகப்பெரிய சாண்டியாகோ மீனைப் பிடித்தார்

42. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்

(அ) புகழ் பெற்ற சான்றோர்கள் உழைத்து உள்ளனர் பிறருக்காக

(ஆ) பிறருக்காக உழைத்துப் புகழ் பெற்ற சான்றோர்கள் உள்ளனர்.

(இ) சான்றோர்கள் தனக்காக புகழ் பெற்று உழைத்து உள்ளனர்

(ஈ) உழைத்துப் புகழ் பெற்று உள்ளனர் சான்றோர்களே

43. “கடைக்குப் போவாயா? என்ற கேள்விக்குப் “போக மாட்டேன்” என மறுத்துக் கூறல்

(அ) நேர்விடை (ஆ) மறை விடை (இ) ஏவல் விடை (ஈ) இனமொழி விடை

44. விடை வகையை கண்டறிக:

“என்னுடன் ஊருக்கு வருவாயா?” என்ற வினாவிற்கு “வராமல் இருப்பேனா?” என்று கூறுவது

(அ) ஏவல் விடை (ஆ) சுட்டு விடை (இ) வினா எதிர் வினாதல் விடை (ஈ) உறுவது கூறல் விடை

45. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க:

தேவநேயப் பாவாணர் மொழி ஞாயிறு என்றழைக்கப்படுகிறார்.

(அ) தேவநேயப் பாவாணர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?

(ஆ) மொழி ஞாயிறு என்றால் என்ன?

(இ) தேவநேயப் பாவாணர் ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறார்?

(ஈ) தேவநேயப் பாவாணர் யார்?

46. விடைக்கேற்ற வினா அமைக்க:

“தொடக்க காலத்தில் மனிதர்கள் தனித்தனிக் குழுக்களாக வாழ்ந்து வந்தனர்”

(அ) தொடக்க காலத்தில் மனிதர்கள் எங்கு வாழ்ந்தனர்

(ஆ) தொடக்க காலத்தில் மனிதர்கள் எப்படி வாழ்ந்தனர்?

(இ) தொடக்க காலத்தில் மனிதர்கள் தனியாக வாழ்ந்தார்களா?

(ஈ) தொடக்க காலத்தில் குழுவாக மனிதர்கள் வாழ்ந்தார்களா?

47. இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிதல்:

சரியான தொடரைத் தேர்ந்தெடு:

பணிந்து-பணித்து

(அ) இறைவனைப் பணித்தால் பெற்றோர் பணிந்தனர்

(ஆ) இறைவனைப் பணிந்து செல்ல வேண்டும் என பெற்றோர் பணித்தனர்

(இ) பெற்றோரை பணிந்து இறைவனை பணித்தனர்

(ஈ) பணிந்து சென்றால் இறைவனை பணியலாம்

48. இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிதல்:

சரியான தொடரைத் தேர்ந்தெடு:

மாறு, மாற்றி

(அ) மாறு வேடத்தில் பரிசு பெற்றவுடன் வேடத்தை மாற்றிக் கொண்டார்

(ஆ) மாறி வந்தவர் பரிசு பெற்று மாற்றிக் கொண்டார்

(இ) வேடம் மாறிக் கொண்டு பரிசை மாற்றினார்

(ஈ) மாறிமாறி வந்தவர் பரிசை மாற்றினார்

49. “உள்ளங்கை நெல்லிக்கனி போல”

– உவமை கூறும் பொருள் தெளிக:

(அ) தெளிவாக (ஆ) சிறப்பாக (இ) நன்றாக (ஈ) வெளிப்படைத் தன்மையாக

50. கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல

– உவமை கூறும் பொருள் தெளிக:

(அ) எதிர்பாரா நிகழ்வு (ஆ) தற்செயல் நிகழ்வு

(இ) பயனற்ற செயல் (ஈ) எதிர்பார்த்த நிகழ்வு

51. சரியனா விடையை பொருத்துக:

(அ) ஏவு ஊர்தி 1. Missile

(ஆ) ஏவுகணை 2. Download

(இ) பதிவிறக்கம் 3. Nautical Mile

(ஈ) கடல்மைல் 4. Launch Vehicle

அ ஆ இ ஈ

அ. 4 2 3 1

ஆ. 2 3 1 4

இ. 4 1 2 3

ஈ. 3 2 4 1

52. சரியான கலைச்சொற்களைக் கண்டறிக:

Consumer-Enrepreneur

(அ) தொழில் முனைவோர்-உணர்பவர் (ஆ) நுகர்வோர்-தொழில்முனைவோர்

(இ) நுகர்வோர்-தொழிலாளி (ஈ) தொழில்முனைவோர்-நுகர்வோர்

53. விடை வகைகள்:

“நீ படிக்கவில்லையா”? என்ற வினாவிற்குத் “தலை வலிக்கும்” என்று உரைப்பது

(அ) இனமொழி விடை (ஆ) வெறுப்பு விடை (இ) உறுவது கூறல் விடை (ஈ) நேர் விடை

54. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக:

சைபர்ஸ்பேஸ் (cyberspace)

(அ) பூஜ்யவெளி (ஆ) இணையவெளி (இ) சமவெளி (ஈ) வையக விரிவு வலை வழங்கி

55. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக:

சாப்ட்வேர் (Software)

(அ) மென்பொருள் (ஆ) மென்னீர் (இ) வலைதளம் (ஈ) இணையவெளி

56. சரியான ஊர்ப்பெயரின் மரூஉவை எழுதுக:

(அ) உதகை-உதகமண்டலம் (ஆ) நெல்லை-மன்னார்குடி

(இ) கும்பை-கும்பகோணம் (ஈ) புதுச்சேரி-புதுகை

57. “வானவன் மாதேவி” எனும் ஊர்ப்பெயரின் மரூஉ எதுவெனக் கண்டறிக:

(அ) மாதேவி (ஆ) வாதாபி (அ) மானாம் பதி (ஈ) வானகரம்

58. நிறுத்தற்குறிகள் (எது சரியானது):

(அ) படிக்கிற பையன்கள் இதை கட்டிகிட்டா பரீட்சையக் கூட சுலபமா எழுதி பாஸ் பண்ணிடலாம்! என்றான் தாயத்து விற்கிறவன்

(ஆ) படிக்கிற பையன்கள் இதைக் கட்டிகிட்டா, பரீட்சையக் கூட சுலபமா எழுதி பாஸ் பண்ணிடலாம்!” என்றான், தாயத்து விற்கிறவன்

(இ) படிக்கிற பையன்கள் இதைக் கட்டிகிட்டா பரீட்சையைக் கூட சுலபமா எழுதி பாஸ் பண்ணிடலாம்! என்றான் தாயத்து விற்பவன்

(ஈ) படிக்கிற பையன்கள் இதைக் கட்டிகிட்டா பரீட்சையைக் கூட சுலபமா! எழுதி பாஸ் பண்ணிடலாம் என்றான் தாயத்து விற்பவன்

59. பின்வருவனவற்றில் எது சரியான நிறுத்தற்குறிகளை பெற்றுள்ளது?

(அ) வீட்டிற்கு வருபவர்களை, “வாங்க வாங்க, உட்காருங்க; அம்மா வந்திடுவாங்க” என்று வரவேற்பாள்.

(ஆ) வீட்டிற்கு வருபவர்களை, வாங்க வாங்க, உட்காருங்க, அம்மா வந்திடுவாங்க என்று வரவேற்பாள்.

(இ) வீட்டிற்கு வருபவர்களை, ‘வாங்க வாங்க”, உட்காருங்க அம்மா வந்திடுவாங்க” என்று வரவேற்பாள்.

(ஈ) வீட்டிற்கு வருபவர்களை, “வாங்க வாங்க”, உட்காருங்க அம்மா வந்திடுவாங்க! என்று வரவேற்பாள்.

60. சரியான எழுத்து வழக்குச் சொல்லினைத் தேர்ந்தெடு

(அ) பதில் சொல்லுச்சு (ஆ) பதில் சொன்னியா

(இ) பதில் சொல்லிக்கினியா (ஈ) பதில் சொல்

61. பேச்சு வழக்கு – எழுத்து வழக்கு:

சரியானதைத் தேர்ந்தெடு:

(அ) மணி நேற்று பள்ளிக்கு வந்தியா? (ஆ) மணி நேற்று பள்ளிக்கு வந்திட்டியா?

(இ) மணி நேற்று பள்ளிக்கு வந்தாயா? (ஈ) மணி நேற்று பள்ளிக்கு வந்துக்கின?

62. சரியான ஆண்பால் பெயருடன் பெண்பால் பெயரைப் பொருத்துக:

(அ) எருது 1. பிடி

(ஆ) களிறு 2. மந்தி

(இ) கலை 3.பசு

(ஈ) கடுவன் 4.பிணை

அ ஆ இ ஈ

அ. 3 2 4 1

ஆ. 4 2 1 3

இ. 3 1 4 2

ஈ. 2 3 1 4

63. ஒரு தொடரில் இரு வினைகளை அமைத்து எழுதுக:

மழைக்காற்று வீசியதால்இ பூவின் இதழ்கள் ——— மயில் தோகையை ——

(அ) சேர்ந்து-சேர்த்து (ஆ) குவிந்து-குவித்து

(இ) விரிந்தன-விரித்தது (ஈ) பொருந்து-பொருத்து

64. பொருத்தமான காலம் கண்டறிக:

(அ) வீட்டிலேயே இருந்தேன் (எதிர்காலம்) (ஆ) நாளை வருவேன் (இறந்தகாலம்)

(இ) வெற்றி பெற்றேன் (எதிர்காலம்) (ஈ) விளையாடுகின்றேன் (நிகழ்காலம்)

65. பொருத்தமான காலம் கண்டறிக:

தவறான இணையைத் தேர்ந்தெடுக்க:

(அ) வாழ்வான்-எதிர்காலம் (ஆ) வீழ்கிறான்-நிகழ்காலம்

(இ) வருவாள்-நிகழ்காலம் (ஈ) வெல்வாள்-எதிர்காலம்

66. வினா எழுத்துகளைத் தேர்ந்தெடு

(அ) எ, யா,ஆ (ஆ) ஓ,ஆ,உ (இ) அ,இ,உ (ஈ) அ,யா,இ

67. கீழ்க்காணும் விடைக்குப் பொருந்தாத வினாச் சொல்லைத் தேர்ந்தெடு:

“பாட்டுக்கொரு புலவன்” என பாராட்டப்பட்டவர் பாரதியார்.

(அ) யார்? (ஆ) எப்படி? (ஈ) ஏன்? (ஈ) எவ்வாறு?

68. தவறான இணைப்புச் சொல் இடம்பெற்றுள்ள வாக்கியத்தைக் கண்டறிக:

(அ) அதிக அளவில் மரங்களை வளர்ப்போம். ஆகையால் மரங்கள்தான் மழைக்கு அடிப்படை

(ஆ) நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. அதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது

(இ) எழிலன் மகிழுந்தில் பயணம் செய்வதை விரும்பாதவர். ஏனெனில் அவர் எளிமையை விரும்பியவர்

(ஈ) கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் இரண்டு நாள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு.

69. சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக:

முருகன் படித்து முடித்துவிட்டான். ——- முகிலன் படிக்கவில்லை

(அ) ஆனால் (ஆ) அதனால் (இ) ஏனெனில் (ஈ) ஆகையால்

70. ஆட்சியாளர்

– இச்சொல்லின் தொழிற்பெயர் விகுதியை கண்டறிக:

(அ) ஆட்சி (ஆ) ஆளர் (இ) யா (ஈ) சி

71. அடைப்புக்குள் உள்ள சொல்லை தொடருக்கு ஏற்றவாறு மாற்றுக:

கபிலர் திறமையானவர் என்று ——- (குமரன்) தெரியும்

(அ) குமரனால் (ஆ) குமரனை (இ) குமரனது (ஈ) குமரனுக்கு

72. கடை என்பதன் சரியான இருபொருள் காண்க:

(அ) காண்க-கருவி (ஆ) கொடுமை-கடினம் (இ) முடிவு-அங்காடி (ஈ) உடுக்கை-உடை

73.இரு பொருள் தருக:

ஆறு

(அ) பதினாறு-பதிநான்கு (ஆ) பாலாறு-தேனாறு

(இ) கண்ணாறு-கடையாறு (ஈ) எண்களில் ஆறு-காவேரி ஆறு

74. குறில் நெடில் மாற்றம்:

சரியான பொருள் வேறுபாடறிந்து தெரிவு செய்க:

சிலை சீலை

1. சிற்பி துணி

2. சிற்பம் துணி

3. வில் அம்பு

4. அம்பு வில்

(அ) 1 (ஆ) 2 (இ) 3 (ஈ) 4

75. பின்வருவனவற்றுள் முறையான தொடர் எது?

(அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு

(ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு

(இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குப் தனித்த இடமுண்டு

(ஈ) தமிழர் வாழை இலைப் பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு

76. கூற்று 1: நாட்டைக் கைப்பற்றல்-மஞ்சள் நிறம் கொண்ட மலர்-கொடி வகை

கூற்று 2: நிரை மீட்டல்-நீலம் கலந்த சிவப்பு மலர்-செடி வகை

கூற்று 3: எதிர்த்து போரிடுவது-நீல நிறமலர்-குறுமர வகை

கூற்று 4: கோட்டையை கைப்பற்றல்-வெண்ணிறம்-செடி வகை

(அ) கூற்று 1,4 மட்டும் சரி (ஆ) கூற்று 2,4 மட்டும் சரி

(இ) கூற்று 1,2 மட்டும் சரி (ஈ) கூற்று 3 மட்டும் சரி

77. மூதுரை குறித்த கூற்றுகளில் தவறான கூற்றைக் கண்டறிக:

(அ) மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள்

(ஆ) இந்நூலின் முப்பந்தொரு பாடல்கள் உள்ளன

(இ) கற்றவரை விட மன்னரே சிறந்தவர் ஆவார்

(ஈ) மன்னனை விட கற்றவரே சிறந்தவர் ஆவார்

78. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் சொல்லை அறிக:

“Tempest”

(அ) நிலக்காற்று (ஆ) பெருங்காற்று (இ) கடற்காற்று (ஈ) சுழல்காற்று

79. சரியான இணையைத் தெரிவு செய்க:

(அ) புதர்-Thicker (ஆ) பள்ளத்தாக்கு-Ridge (இ) சமவெளி-Locust (ஈ) மலைமுகடு-Tribe

80. மலரைக் குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி

(அ) வீ (ஆ) சீ (இ) மீ (ஈ) தீ

81. “வள்ளுவர் பெரும்புகழை உடையவர்” – என்ற தொடர் எவ்வகை பொருளில் வரும்

(அ) உடைமை (ஆ) ஆக்கல் (இ) அடைதல் (ஈ) அழித்தல்

82. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க:

வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே – இவ்வடி உணர்த்தும் பொருள் யாது?

(அ) மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்

(ஆ) வறண்ட வயலில் உழவர் வெள்ளமாய் அமர்ந்திருந்தனர்

(இ) செறிவான வயலில் உழவர் வெள்ளமாயக் கூடியிருந்தனர்

(ஈ) பசுமையான வயலில் உழவர் வெள்ளமாய் நிறைந்திருந்தனர்

83. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க:

அரிச்சுவடி

(அ) அரிசி (ஆ) மண் அரிப்பு (இ) ஓலைச் சுவடிகள் (ஈ) அகர வரிசை எழுத்துகள்

84. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க:

ஆமா என்னும் கலைச்சொல்லின் பொருத்த்மான பொருளைத் தேர்ந்தெடுக்க.

(அ) மாநாடு (ஆ) மாநிலம் (இ) மாநிறம் (ஈ) காட்டுப்பசு

85. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க:

வாரணம்

(அ) வருவாய் (ஆ) தோரணம் (இ) குதிரை (ஈ) யானை

86. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க:

ஆழி

(அ) உலகம் (ஆ) கடல் (இ) பள்ளம் (ஈ) அழித்தல்

87. சொற்களின் கூட்டுப்பெயர்கள்:

ஆடு-கூட்டுப்பெயர்

(அ) ஆட்டுக்கூட்டம் (ஆ) ஆட்டுத்தொழுவம் (இ) ஆட்டுமந்தை (ஈ) ஆட்டுசந்தை

88. வன்தொடர்க் குற்றியலுகரம் எது?

(அ) முதுகு,வரலாறு (ஆ) நாக்கு,வகுப்பு (இ) நெஞ்சு,இரும்பு (ஈ) எஃது,அஃது

89. யாப்பிலக்கணத்தின்படி மூவகை எழுத்துக்கள் யாவை?

(அ) குறில்.உயிர்க்குறில்,ஒற்று (ஆ) உயிர்,மெய்,உயிர்மெய்

(இ) குறில்,நெடில்,ஒற்று (ஈ) மெய்,உயிர்மெய்,ஆய்தம்

90. பிழை திருத்துக – சரியான எண்ணடையைத் தெரிவு செய்க:

ஒன்று+உயிர்

(அ) ஒரு உயிர் (ஆ) ஓர் உயிர் (இ) ஒன்று உயிர் (ஈ) மூன்றும் சரி

91. பிழை திருத்துக – சரியான எண்ணடையைத் தெரிவு செய்க:

இரண்டு+எழுத்து

(அ) இரண்டு எழுத்து (ஆ) இரு எழுத்து (இ) ஈரெழுத்து (ஈ) மூன்றும் சரி

92. சொல் பொருள் பொருத்துக:

அ. அணங்கு 1.கடல்

(ஆ) மாகால் 2.நீர்நிலை

(இ) மந்நீர் 3.தெய்வம்

(ஈ) கயம் 4. பெருங்காற்று

அ ஆ இ ஈ

அ. 3 4 1 2

ஆ. 2 4 3 1

இ. 4 3 1 2

ஈ. 3 2 4 1

93. சொல் பொருள் பொருத்துக:

அ. கொடியனார் 1.பெரியமலை

(ஆ) இசை 2.கொம்பு

(இ) மருப்பு 3.மகளிர்

(ஈ) மால்வரை 4.புகழ்

அ ஆ இ ஈ

அ. 2 4 1 3

ஆ. 1 2 4 3

இ. 4 3 1 2

ஈ. 3 4 2 1

94. ஒருமை பன்மை பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு:

(அ) மனிதன் பொருள் தேடுவதற்காக பல ஊர்களுக்குச் செல்கிறார்கள்

(ஆ) மனிதர்கள் பொருள் தேடுவதற்காக பல ஊர்களுக்குச் செல்கிறார்

(இ) மனிதர்கள் பொருள் தேடுவதற்காக பல ஊர்களுக்குச் செல்கிறார்கள்

(ஈ) மனிதர்கள் பொருள் தேடுவதற்காக ஒரு ஊர்களுக்குச் செல்கிறார்கள்

95. ஒருமை பன்மை பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு:

(அ) பிரம்பினால் செய்யப்பட்ட பலவகையான பொருள்கள் இங்கே உள்ளன.

(ஆ) பிரம்பினால் செய்யப்பட்ட பலவகையான பொருள் இங்கே உள்ளன

(இ) பிரம்பினால் செய்யப்பட்ட பலவகையான பொருள்கள் இங்கே உள்ளது

(ஈ) பிரம்புகளால் செய்யப்பட்ட பலவகையான பொருள்கள் இங்கே உள்ளது

96. கீழ்கண்ட பத்தியினைப் படித்து வினாவிற்கான சரியான விடையைத் தேர்ந்தெடு:

மழை என்றதும் குழந்தைகளின் நினைவுக்கு வருவது காகிதக் கப்பல். முழை நீர்pல் காகிதக் கப்பல் விட்டு விளையாடாத குழந்தைகளே இல்லை எனலாம். அந்த அளவிற்கு நம் ஆழ்மனத்தில் கப்பல் இடம் பெற்றுள்ளது. பழங்காலம் முதல் தமிழர்கள் கப்பல் கட்டும் கலையில் சிறந்திருந்ததன் மரபுத் தொடர்ச்சி என்று இதனைக் கூறலாம். துமிழர்கள் கப்பல்களைக் கட்டினர் என்பதற்கும் கப்பல் மூலம் வெளிநாடுகளுக்குச் சென்றனர் என்பதற்கும் நம் இலக்கியங்களில் ஏராளமான சான்றுகள் உள்ளன. நமக்குக் கிடைத்துள்ள நூல்களிலேயே மிகவும் பழமையானது தொல்காப்பியம். அந்நூல் முந்நீர் வழக்கம் என்று கடற்பயணத்தைக் குறிப்பிடுகிறது. எனவேஇ தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே தமிழர்கள் கடல் பயணம் செய்துள்ளனர் என்பதை அறியலாம்.

மழை என்றதும் குழந்தைகளின் நினைவுக்கு வருவது எது?

(அ) காகிதம் (ஆ) காகிதக்கப்பல் (இ) படகு (ஈ) தோணி

97. பழங்காலம் முதல் தமிழர்கள் எந்த கலையில் சிறந்திருந்தனர்?

(அ) ஓவியக்கலை (ஆ) இசைக்கலை (இ) கப்பல் கட்டும் கலை (ஈ) நாட்டியக்கலை

98. தமிழர்கள் கப்பல் மூலம் வெளிநாடுகளுக்குச் சென்றனர் என்பதற்கு சான்று எது?

(அ) திருக்குறள் (ஆ) இலக்கியங்கள் (இ) காவியம் (ஈ) புறநானூறு

99. நமக்குக் கிடைத்துள்ள மிக பழமையான நூல் எது?

(அ) நன்னூல் (ஆ) நாலடியார் (இ) பரிபாடல் (ஈ) தொல்காப்பியம்

100. தொல்காப்பியம் கடற்பயணத்தை எதுவாகக் குறிப்பிடுகிறது?

(அ) முந்நீர் வழக்கம் (ஆ) நாவாய் (இ) முத்தமிழ் (ஈ) படகு

101. இந்தியாவிற்கு சுதந்திரம் தர வேண்டும் என்ற தீர்மானத்தை காங்கிரஸ் காரிய கமிட்டி —— சந்திப்பில் நிறைவேற்றியது

(அ) டில்லி (ஆ) வார்தா (இ) சூரத் (ஈ) சிம்லா

102. சுதேசி நீராவி போக்குவரத்து நிறுவனத்தின் “எஸ்.எஸ்.காலியோ” என்ற கப்பல் ———க்கு விற்கப்பட்டது

(அ) ஆங்கிலேய நிறுவனம் (ஆ) பிரஞ்சு கிழக்கிந்திய நிறுவனம்

(இ) டச்சு கம்பெனி (ஈ) போர்த்துக்கீசிரியர்களின் கம்பெனி

103. அகாலி இயக்கம் ———ன் மறுவுருவாக செயல்பட்டது

(அ) தேசிய இயக்கம் (ஆ) சீர்திருத்த இயக்கம் (இ) சிங் சபா இயக்கம் (ஈ) புரட்சிகர இயக்கம்

104. சொந்த கணக்கு தொழிலாளர்கள் நிகழ்வுகள் ——– என குறிப்பிடப்படுகிறது

(அ) சுய சுரண்டல் (ஆ) தன்னம்பிக்கை (இ) தன்னிறைவு (ஈ) சுய உதவி

105. தனது கவிதை தனி திறமையினால் வங்காள இலக்கியத்திற்கு புதிய வடிவம் சேர்த்தவர் யார்?

(அ) அபீன்தரநாத் தாகூர் (ஆ) ரவீந்திரநாத் தாகூர்

(இ) பிரபத் குமார் முகர்ஜி (ஈ) அக்ஷய குமார் தத்தா

106. நீண்ட காலமாக இங்கிலாந்திலுள்ள இந்திய செயலருக்கு இந்திய வருவாயிலிருந்து ஊதியம் செலுத்திவரப்பட்டது. எப்பொழுது அது நிறுத்தப்பட்டது?

(அ) 1919 (ஆ) 1909 (இ) 1935 (ஈ) 1947

107. “குர்ரானின் மீதான விளக்க உரை” என்ற நூலின் ஆசிரியர் யார்?

(அ) ஷா அப்துல் (ஆ) சர் சையது அகம்மது கான் (இ) சையது அகம்மது (ஈ) அப்துல் அஸிஸ்

108. 1806-ல் வேலூரில் ஒரு வரலாற்று நிகழ்வு நடந்தது. அதை குறிப்பிடு

(அ) வேலுநாச்சியார் புரட்சி (ஆ) கட்டபொம்மன் தூக்கிலிடல்

(இ) பாளையக்காரர் புரட்சி (ஈ) வேலூர் கலகம்

109. மிகவும் புகழ்பெற்ற பாடலான,

“கத்தியின்றிஇ இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது

சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேர்வீர்”.

தொகுத்து வெளியிட்டவர்

(அ) வெ..ராமலிங்கம் (ஆ) வ.உ.சிதம்பரம் (இ) பாரதியார் (ஈ) சுப்ரமணிய சிவா

110. ஆங்கிலேயர்களுக்கு எதிராக “தென்னிந்திய கூட்டணியை” ஏற்படுத்தியவர்

(அ) மருது பாண்டியன் (ஆ) சிவசுப்ரமணியன் (இ) கட்டபொம்மன் (ஈ) ஊமத்துரை

111. 1841ஆம் ஆண்டு தென் ஆற்காடு பகுதியில் ஏற்பட்ட புரட்சிக்கான காரணம்

(அ) சீர்திருத்தத்தை அறிமுகம் செய்ததால் (ஆ) வரி விதித்ததிற்காக

(இ) நிலங்களை அபகரித்ததற்காக (ஈ) சமயத்தை பரவச் செய்தமைக்கா

112. சீகன் பால்க்கின் சிறப்பான தமிழ் மொழி பெயர்ப்பு

(அ) பழைய ஏற்பாடு (ஆ) புதிய ஏற்பாடு (இ) பழைய மற்றும் புதிய ஏற்பாடு (ஈ) திருக்குறள்

113. 1998ம் ஆண்டு மெட்ராஸில் விதவைகள் இல்லத்தை ஏற்படுத்தியவர்

(அ) வீரசலிங்கம் பந்தலு (ஆ) ஜி.சுப்பிரமணி (இ) காஜா ராமகிருஷ்ணராவ் (ஈ) சிவபிரியம்மாள்

114. 1911ஆம் வருடம், ஜீன் மாதம் 11ஆம் நாள், மாவட்ட ஆட்சியர் ஆஷ் தனது துரதிருஷ்டமான பயணத்தை திருநெல்வேலியிலிருந்து ——– க்கு மேற்கொண்டார்.

(அ) கொடைக்கானல் (ஆ) மதுரை (இ) ஊட்டி (ஈ) மதராஸ்

115. 1920ல் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் மூலம் ——– தமிழ்நாட்டின் முதலமைச்சரானவர்

(அ) இராஜா பனகல் (ஆ) எ.சுப்புராயலூ ரெட்டியார் (இ) பி.சுப்புராயன் (இ) பி.முத்துசாமி நாயுடு

116. சங்க காலத்தில் தங்கத்தினை மதிப்பிடுகிற அளவாக இருந்தது ——- ஆகும்

(அ) வேலி (ஆ) கலஞ்சு (இ) மரக்கால் (ஈ) கூப்பீடு

117. பண்டைய காலங்களில் இந்தியாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்குமிடையே நடைபெற்ற வர்த்தக மார்க்கம் ——– என அழைக்கப்பட்டது

(அ) சில்க் மார்க்கம் (ஆ) ஹர்பல் மார்க்கம் (இ) சிந்து மார்க்கம் (ஈ) கங்கை மார்க்கம்

118. திருவள்ளுவர் நமது குடும்ப வாழ்க்கையின் முக்கியமான கொள்கையாக வலியுறுத்துவது

(அ) அன்பு (ஆ) செல்வம் (இ) பொறுமை (ஈ) தயை

119. “திராவிட நாடு” என்ற வார இதழை வெளியிட்டவர்

(அ) ஈ.வெ.இராமசாமி (ஆ) சி.என்.அண்ணாதுரை

(இ) மு.கருணாநிதி (ஈ) எம்.ஜி.ராமச்சந்திரன்

120. “விவேகா பானு” என்ற தமிழ் மாத இதழின் பதிப்பாசிரியர் பெயர் கூறு?

(அ) வ.உ.சிதம்பரம் (ஆ) கவிமணி தேசிய விநாயகம்

(இ) மறைமலை அடிகள் (ஈ) சுப்ரமணிய பாரதியார்

121. சங்க காலத்தில் நாள் ஒன்றுக்கு ——– நாழிகைகள் இருந்தன

(அ) இருபத்தி நான்கு (ஆ) இருபது (இ) பத்து (ஈ) அறுபது

122. சங்க கால சமூகத்தின் வீரமிக்க பொழுது போக்காக ———ஐ கருதினர்

(அ) ஏறுதழுவுதல் (ஆ) அம்மானை (இ) கிலூக்கிலி (ஈ) கலங்கு

123. தமிழக அரசால் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி +1, +2 மற்றும் (அரசு மற்றும் அரசு உதவி பெறும்) கல்லூரி மாணவ மாணவியற்கு விலையில்லா மடி கணினி வழங்கப்பட்டு வரும் வருடம்

(அ) 2011 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது (ஆ)2012 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது

(இ) 2013 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது (ஈ) 2014 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது

124. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு ——- இடத்தில் உள்ளது.

(அ) முதல் இடம் (ஆ) நான்காவது இடம் (இ) ஏழாவது இடம் (ஈ) இரண்டாவது இடம்

125. விரிவாக்க செய்:

TIIC

(அ) தமிழ்நாடு முதலீட்டு தொழில் கழகம் லிமிடெட்

(ஆ) தமிழ்நாடு முதலீட்டு தொழில் நிறுவனம் லிமிடெட்

(இ) தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் லிமிடெட்

(ஈ) தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனம் லிமிடெட்

126. சட்டப்பிரிவு மாநில ஆளுநரின் சிறப்புரிமைகளை அளிக்கிறது

(அ) சட்டப்பிரிவு 213 (2)ன் படி (ஆ) சட்டப்பிரிவு 356 (4)ன் படி

(இ) சட்டப்பிரிவு 212 (a&b)ன் படி (ஈ) சட்டப்பிரிவு 361 (1)ன்படி

127. அணில் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள இடம்

(அ) கோயம்புத்தூர் (ஆ) உதகமண்டலம் (இ) ஸ்ரீவில்லிப்புத்தூர் (ஈ) திருச்சிராப்பள்ளி

128. UDAN திட்டம் தொடங்கப்பட்டதன் முக்கிய நோக்கம்

(அ) மாநிலத்தின் நகரங்கள் விமான போக்குவரத்து மூலம் இணைப்பது

(ஆ) மாநிலத்தின் நகரங்கள் இடையே பேருந்து வசதியை ஏற்படுத்தல்

(இ) நாடுகளிடையே விமான சேவையை மேம்படுத்தல்

(ஈ) மாநிலத்தின் நகரங்களை நீர்;வழி மூலம் இணைப்பது

129. 2017-18ஆம் ஆண்டில்இ தமிழகத்தில் உற்பத்திதிறன் அளவு தேசிய அளவில் முதல் இடம் பிடித்துள்ள பயிர்கள்

(அ) சோளம்,கம்பு,வேர்க்கடலை மற்றும் பருத்தி

(ஆ) சோளம்,நெல்,வேர்க்கடலை மற்றும் பருத்தி

(இ) சோளம்,நெல்,வேர்க்கடலை மற்றும் பருத்தி

(ஈ) சோளம்,கம்பு,சர்க்கரை மற்றும் பருத்தி

130. திட்டக் குழுவின் குறைந்தளவு தேவைத் திட்டத்தின் முக்கிய குறிக்கோள்

(அ) வறுமை ஒழிப்பு (ஆ) ஆரம்ப கல்வி (இ) தொழில்நுட்ப வளர்ச்சி (ஈ) தொழிலை மேம்படுத்துதல்

131. தமிழக அரசால் அறிமுகபடுத்தப்பட்ட “கூட்டுறவு கைத்தறி நெசவாளர் குடும்ப ஓய்வூதிய திட்டத்தின் மூலமாக ரூ.550 ஓய்வூதியமாக நெசவாளர் உயிர் இழந்த நாளிலிருந்து ———— ஆண்டுகள் மட்டும் வழங்கபடுகிறது

(அ) 5 ஆண்டுகள் மட்டும் (ஆ) 6 ஆண்டுகள் மட்டும்

(இ) 10 ஆண்டுகள் மட்டும் (ஈ) 15 ஆண்டுகள் மட்டும்

132. 2013-14ஆம் ஆண்டில்இ இந்தியாவில் இன்டர்நெட் பயன்படுத்துபவரின் தமிழ்நாட்டில் ——- பங்கு

(அ) 9.9 சதவீதம் (ஆ) 15.9 சதவீதம் (இ) 6.9 சதவீதம் (ஈ) 8.9 சதவீதம்

133. 1,9,25,49,81,—- என்ற தொடரில் விடுபட்ட எண்ணைக் காண்

(அ) 90 (ஆ) 121 (இ) 125 (ஈ) 135

134. 1,1,2,3,5,8,12,— என்ற தொடரியின் அடுத்த உறுப்பு

(அ) 17 (ஆ) 21 (இ) 23 (ஈ) 25

135. ஓர் எண் மற்றும் அதன் வர்க்கத்தின் கூடுதல் 1122 எனில் அந்த எண் யாது?

(அ) 11 (ஆ) 22 (இ) 33 (ஈ) 44

136. சாதாரண ஆண்டில் 53 சனிக்கிழகைகள் வருவதற்கான நிகழ்கதவு என்ன?

(அ) 1/7 (ஆ) 5/7 (இ) 2/7 (ஈ) 1

137. 3/16, 1/8,1/12,1/18— என்ற தொடர்வரிசையின் அடுத்த உறுப்பு

(அ) 1/24 (ஆ) 1/27 (இ) 1/81 (ஈ) 2/3

138. a=1, b=2, …….,z=26 எனக் கொள்வோமானால் OWL என்ற வார்த்தையின் மதிப்பு எதற்கு சமமாக இருக்கும்?

(அ) Fish (ஆ) Pigeon (இ) Snake (ஈ) Bird

139. A மற்றும் B இருவரும் சேர்ந்து ஒரு வேலையை 6 நாட்களில் முடிக்கிறார்கள். அதே வேலையை A மட்டும் தனியாக 18 நாளில் முடிப்பர் எனில் B மட்டும் தனியாக அவ்வேலையை எத்தனை நாளில் முடிப்பர்

(அ) 12 நாட்கள் (ஆ) 15 நாட்கள் (இ) 9 நாட்கள் (ஈ) 10 நாட்கள்

140. 28 செ.மீ ஆரமுள்ள ஒரு வட்டத்திலிருந்து 150O மையக்கோணம் கொண்ட ஒரு வட்ட கோணப்பகுதி வெட்டியெடுத்து அதன் ஆரங்களை ஒன்றிணைத்து ஒரு கூம்பாக்கினால் அதன் வளைபரப்பைக் காண்க: [π=22/7]

(அ) 1026.67 ச.செ.மீ (ஆ) 987.76 ச.செ.மீ (இ) 868.56 ச.செ.மீ (ஈ) 988.64 ச.செ.மீ

141. ஒரு மகிழுந்தின் சக்கரம் 20 சுற்றுகளில் 3520 செ.மீ தொலைவைக் கடக்கிறது எனில் அதன் ஆரம் காண்க:

(அ) செ.மீ (ஆ) 56 செ.மீ (இ) செ.மீ (ஈ) 28 செ. மீ

142. ‘a’ இலகுகள் பக்கமுள்ள ஒரு சதுரத்தின் பரப்பளவானது ‘a’ அலகுகள் அடிப்பக்கமுள்ள ஒரு முக்கோணத்தின் பரப்பளவிற்குச் சமம் எனில் அம்முக்கோணத்தின் குத்துயரம்

(அ) a/2 அலகுகள் (ஆ) a அலகுகள் (இ) 2a அலகுகள் (ஈ) 4a அலகுகள்

143. சமமான விட்டம் மற்றும் உயரம் உடைய ஓர் உருளைஇ ஓர் கோளம், ஒரு கூம்பு இவற்றின் கனஅளவுகளின் விகிதம்

(அ) 1:2:3 (ஆ) 2:1:3 (இ) 3:2:1 (ஈ) 3:1:2

144. ஓர் அரைவட்டத்தை அதன் விட்டத்தை அச்சாகக் கொண்டு ஒரு முழுச்சுற்று சுழற்றும் போது உண்டாகும் திண்ம உருவம்

(அ) வட்டம் (ஆ) உருளை (இ) அரைக்கோளம் (ஈ) கோளம்

145. 4% கூட்டு வட்டிக்கு 2 வருடத்தில் கிடைக்கும் மொத்த தொகை ரூ.1,352 எனில் அசலைக் காண்க:

(அ) ரூ.1,200 (ஆ) ரூ.1,250 (இ) ரூ.1,260 (ஈ) ரூ.1,300

146. 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மோட்டார் வாகனத்தின் விலை ரூ.80,000 இது ஒவ்வொரு வருடமும் 4% குறைகிறது எனில் அதன் தற்போதைய விலை யாது?

(அ) ரூ.72,000 (ஆ) ரூ.72,738 (இ) ரூ.73,728 (ஈ) ரூ.72,728

147. 6 நபர்கள் ஒரு வேலையை 12 நாள்களில் செய்து முடிக்கின்றனர். 2 நாள்கள் கழித்து மேலும் 6 நபர்கள் வந்து சேர்கிறார்கள் எனில் அவ்வேலையைச் செய்ய எத்தனை நாள்கள் எடுத்துக் கொள்வார்கள்?

(அ) 3 நாட்கள் (ஆ) 4 நாட்கள் (இ) 6 நாட்கள் (ஈ) 5 நாட்கள்

148. a:b = b:c எனில் a4 : b4:

(அ) ac:b2 (ஆ) a2 : c2 (இ) c2 : a2 (ஈ) b2 : ac

149. 15 அட்டைகளின் மொத்த எடை 50 கிராம் எனில்இ அதை அளவுடைய 2 1/4 கிகி. ஏடையில் எத்தனை அட்டைகள் இருக்கும்?

(அ) 675 (ஆ) 625 (இ) 765 (ஈ) 725

150. 6 மணிகள் ஒன்றாக மணி ஒலிக்க தொடங்குகின்றன மற்றும் மணி ஒலிக்கும் இடைவெளிகள் முறையே 2,4,6,8,10 மற்றும் 12 நொடி. 1 மணி நேரத்தில் மணிகள் எத்தனை முறை ஒன்றாக ஒலிக்கும்?

(அ) 35 (ஆ) 31 (இ) 21 (ஈ) 16

151. (x4-y4) மற்றும் x2-y2இன் மீ.பொ.வ

(அ) x4-y4 (ஆ) x2-y2 (இ) (x+y) 2 (ஈ) (x+y) 4

152. x+1/x=2 எனில் x-1/x ன் மதிப்பு என்ன?

(அ) -2 (ஆ) 0 (இ) 1 (ஈ) 2

153. ஒரு நபரின் மாத வருமானம் ரூ.5,000. அவரது வருமானம் 30% அதிகரித்தால்இ அவரது புதிய மாத வருமானம் என்ன?

(அ) ரூ.3,500 (ஆ) ரூ.4,500 (இ) ரு.5,500 (ஈ) ரூ.6,500

154. x ன் மதிப்பைக் காண்க:

2 1/3 + 1 5/6 -x + 20/3 = 7 1/3

(அ) -3 1/2 (ஆ) 3 1/2 (இ) 4 1/2 (ஈ) -4 1/2

155. மதிப்பு காண்க: 750ன் 45%-480ன் 25%

(அ) 216 (ஆ) 217.5 (இ) 236.5 (ஈ) 245

156. ஒரு பெட்டியில் சிவப்பு மற்றும் நீல நிறப் பந்துகள் மொத்தமாக 75 இருக்கின்றன. அவற்றுள் 18 சிவப்பு பந்துகள் இருக்குமெனில் நீல நிறப் பந்துகளின் எண்ணிக்கையை சதவீதத்தில் காண்க:

(அ)24% (ஆ) 50% (இ) 76% (ஈ) 67%

157. ஒரு தொலைக்காட்சி வாங்கிய விலையிலிருந்து ஒவ்வொரு வருடமும் 10% குறைகிறது. அத்தொலைக்காட்சியின் தற்போதைய மதிப்பு ரூ.83,835 எனில்இ 3 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய விலை யாது?

(அ) ரூ.1,00,000 (ஆ) ரூ.1,12,500 (இ) ரூ.1,15,000 (ஈ) ரூ.1,17,500

158. ஒற்றை ஜோடி மரபணுக்கள் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட குணாதிசயங்களை உருவாக்குதலை ——- என்று அழைக்கப்படுகிறது.

(அ) பிளிஸ்டோ மரபணுக்கள் (ஆ) பிளாஸ்மோ மரபணுக்கள்

(இ) பிளியோடிரோபிசம் (ஈ) பல மரபணுக்கள்

159. தாவரங்களில் பூக்களின் உற்பத்தியை தூண்டும் வேதிப்பொருள் யாது?

(அ) பிளாரிஜன் (ஆ) எத்திலீன் (இ) அப்ஸிஸிக் அசிட் (ஈ) சூபரின்

160. CITES என்ற நிறுவனத்தின் செயல்பாடு எது?

(அ) வின்வெளி தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது

(ஆ) அழியும் நிலையிலுள்ள உயிரினங்களின் வியாபாரங்களை தடை செய்வது

(இ) உலோகங்களின் வியாபாரங்களை தடை செய்வது

(ஈ) மின்னணு பொருட்களை சந்தைபடுத்துவது

161. கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எந்த மரம் மிகவும் உயரமானது?

(அ) பைனஸ் (ஆ) தூஜா (இ) கிரிப்டோமீரியா (ஈ) செக்கேயா

162. அறை வெப்பநிலையில் திரவ நிலையில் உள்ள ஒரே அலோகம்

(அ) குளோரின் (ஆ) காலியம் (இ) மெர்குரி (ஈ) புரோமின்

163. சூப்பர் ஆக்ஸைடுகளில் ———- உள்ளது

(அ) O2-2அயனி (ஆ) Oஅயனி (இ) O2-2 அயனி (ஈ)O2 அயனி

164. பாகுத்தன்மை என்பது ஒரு பெயர்ச்சி நிகழ்வுஇ இதில்

(அ) நிறை மட்டும் இடம் பெயர்கிறது (ஆ) ஆற்றல் மட்டும் இடம் பெயர்கிறது

(இ) நிறையும்இ ஆற்றலும் இடம் பெயர்கிறது (ஈ) உந்தம் இடம் பெயர்கிறது

165. குவிலென்சின் திறன் 3 டயாப்டர் மற்றும் குழிலென்சின் திறன் 2 டயாப்டர் இணைக்கப்படுகிறது. அதனுடைய திறன் இணைத்த பின்பு எவ்வாறு இருக்கும்?

(அ) குழிலென்சின் திறன் 1 டயாப்டர் (ஆ) குவிலென்சின் திறன் 1 டயாப்டர்

(இ) குழிலென்சின் திறன் 5 டயாப்டர் (ஈ) குவிலென்சின் திறன் 5 டயாப்டர்

166. கீழ்க்கண்டவற்றுள் எது ஐஸ்லா பியட்டா பகுதிகளில் கண்டறியப்பட்ட உலகின் மிகச் சிறிய பச்சோந்தி வகை ஆகும்.

(அ) புரூக்கேசியா மினிமா (ஆ) புரூக்கேசியா பெட்சி

(இ) புரூக்கேசியா நேனா (ஈ) புருக்கேசியா மைக்ரா

167. 2022ஆம் ஆண்டிற்கான டிஜிட்டல் வேலைத் திட்டத்தை இந்தியா ——- கூட்டமைப்புடன் இணைந்து ஏற்றுக்கொண்டது

(அ) சார்க் (ஆ) ஏசியன் (இ) ஜி-20 (ஈ) ஐரோப்பிய ஆணையம்

168. பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்திலிருந்துஇ ஏழை மற்றம் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு ரூபாய் ——– ஒரு ஆண்டுக்கு சுகாதாரக் காப்பீடு ஒரு குடும்பத்திற்குஇ இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை பராமரிப்பு மருத்துவமனைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம்

(அ) ரூ.3 இலட்சம் (ஆ) ரூ.4 இலட்சம் (இ)ரூ.5 இலட்சம் (ஈ) ரூ.7 இலட்சம்

169. குழந்தை பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பின்வரும் திட்டங்கள் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

(அ) தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம்

(ஆ) ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்

(இ) தேசிய புதுமுறை காணல் கழகம்

(ஈ) அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம்

170. தாதாசாகேப் பால்கே விருதுப்பெற்ற முகமது யூசுப் கான் தொழில் ரீதியாக இவ்வாறு அறியப்படுகிறார்.

(அ) அசோக்குமார் (ஆ) மனோஜ் குமார் (இ) திலீப் குமார் (ஈ) ராஜ்குமார்

171. 27 டிசம்பர் 1911-ல் தேசிய கீதம் முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரஸின் ——- அமர்வில் பாடப்பட்டது.

(அ) கல்கத்தா (ஆ) தில்லி (இ) பம்பாய் (ஈ) மெட்ராஸ்

172. கீழே குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளில் எது “பிட்காயின்”ஐ சட்டப்பூர்வ டெண்டராக அங்கீகரிக்கும் சட்டத்தை இயற்றியது?

(அ) க்யூபா (ஆ) இந்தியா (இ) சீனா (ஈ) ஜப்பான்

173. வார்லி பழங்குடி இனத்தவர்கள் கீழ்கண்ட எந்த இந்திய மாநிலத்தில் காணப்படுகிறார்கள்.

(அ) மகாராஷ்டிரா (ஆ) கோவா (இ) ஆந்திரப்பிரதேசம் (ஈ) கர்நாடகா

174. உலக சுகாதார அமைப்பின் கருத்தின் அடிப்படையில், இந்திய மக்கட் தொகையில் எத்தனை சதவீதத்தினர் சுத்தமான குடிநீர் பெறவில்லை?

(அ) 13.0% (ஆ) 22.0% (இ) 33.0% (ஈ) 30.0%

175.பின்வருவற்றில் எது இந்தியாவின் முதலாவது 6 வழி அதிவேக விரைவுப்பாதை ஆகும்

(அ) தேசிய விரைவுப் பாதை 1 (ஆ) தில்லி-கர்காயோன் விரைவுப்பாதை

(இ) மும்பாய்-பூனே விரைவுப் பாதை (ஈ) கங்கை விரைவுப்பாதை

176. இந்தியாவில் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் அமைந்துள்ள இடம்

(அ) பூனே (ஆ) மிட்னாபூர் (இ) நியூடெல்லி (ஈ) கல்கத்தா

177. பின்வரும் மலைகளை அவைகளின் மலைத் தொடர்களுடன் பொருத்துக:

(அ) கஞ்சன்ஜங்கா 1. மேற்கு தொடர்ச்சி மலை

(ஆ) பட்காய் 2. காரகோரம்

(இ) விந்தியம் 3.காரோ-காஸி

(ஈ) மகாபலீஸ்வர் 4. ஆரவல்லி

அ ஆ இ ஈ

அ. 3 4 1 2

ஆ. 2 3 4 1

இ. 2 1 4 3

ஈ. 4 3 1 2

178. மதம்,இனம்,சாதி,பாலினம் அல்லது பிறந்த இடம் போன்றவைகளின் மீது ஒரு சார்பாக இருப்பதை தடை செய்யக்கூடிய சட்டப்பிரிவு எது?

(அ) பதினான்காவது சட்டப்பிரிவு (ஆ) பதினைந்தாவது சட்டப்பிரிவு

(இ) பதினாறாவது சட்டப்பிரிவு (ஈ) பதினேழாவது சட்டப்பிரிவு

179. எந்த தமிழறிஞர் மரவழிபாட்டினையும் பாம்பு வழிபாட்டினையும் ஒப்பாய்வு செய்தார்?

(இ) ஜி.சுப்பிரமணியன் (ஆ) தெ.பொ.மீனாட்சி சுந்தரம்

(இ) வி.கனகசபை (ஈ) வி.அய்.சுப்பிரமணியன்

180. கீழே தரப்பட்டுள்ள எந்த மாநிலத்தில் ஜஜ்மானிமுறை வழக்கத்தில் இருக்கவில்லை?

(அ) ஆந்திரா (ஆ) கர்நாடகா (இ) கேரளா (ஈ) தமிழ்நாடு

181. இடைக்காலத் தென்னிந்தியாவில் கிராமத்தின் கைவினைஞர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

(அ) ஆயகாரர் (ஆ) இனாம்தார் (இ) மிராசிதார் (ஈ) சமீன்தார்

182. கீழ்கண்ட கூற்றுகளில் மெகருன்ஷாவை பற்றியதில் எது சரியான கூற்று:

1. மெகருன்ஷா தந்தை மிஜா லியாஸ் பெக் இவர் ஒரு ஆப்கானியர்.

2. மெகருன்ஷா 1577ல் பிறந்தார்.

3. இவர் அலி குலி பெக் இஸ்குல்லா என்பவரை மணந்தார்.

4. இவருக்கு நூர்ஜகான் என்ற பட்டம் முதலிலும் பின்பு நூர் மகால் என்ற பட்டமும் கொடுக்கப்பட்டது

(அ) 1,2,3 சரியானது 4 மட்டும் தவறானது (ஆ) 2,3 சரியானது 1,4 தவறானது

(இ) 1,2,4 சரியானது 3 மட்டும் தவறானது (ஈ) 1,2,3,4 சரியானது

183. கீழ்காணுகின்ற தளபதிகளில் மராத்திய அரசர் சிவாஜியால் கொல்லப்பட்டவர் யார்?

(அ) அப்ஸல் கான் (ஆ) செயிஷ்டா கான் (இ) மிர் ஜீம்லா (ஈ) ஜெய்சிங்

184. குப்தர் பேரரசர் இரண்டாம் சந்திர குப்தனின் அவைக்கு வருகை தந்த சீன நாட்டு பயணி பாஹியான் எந்த வருடத்தில் வருகை புரிந்தார்?

(அ) 401-410 கி.பி (ஆ) 401-420 கி.பி (இ) 401-425 கி.பி (ஈ) 400-405 கி.பி

185. சிந்து சமவெளி கட்டிடக் கலை குறித்து சரியான கூற்று எது?

1. மொகஞ்சதாரோவில் கட்டிடத்தின் கட்டமைப்பில் ஏழு நிலைகள் காணப்படுகின்றது.

2. மெகாஞ்சதாரோ கட்டி அடித்தளம் சிறிய மாறுதல்கள் காணப்படுகின்றது.

3. சிந்து சமவெளி முத்திரைகள் அதன் காலத்தில் மாற்றம் பெறவில்லை.

4.சிந்து சமவெளி நாகரிகத்தால் ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோவால் கல் கட்டிடங்கள் காணக்கிடைக்கின்றன.

(அ) 1,2,3,4 சரியானது (ஆ) 1,2 மட்டும் சரியானது 3,4 தவறானது

(இ) 1,3,4 சரியானது 2 மட்டும் தவறானது (ஈ) 4 மட்டும் தவறானது

186. தகவல் அறியும் உரிமச்சட்டம் இந்தியாவில் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?

(அ) 2000 (ஆ) 2002 (இ) 2001 (ஈ) 2005

187. மிசா சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு

(அ) 1961 (ஆ) 1971 (இ) 1972 (ஈ) 1973

188. உச்சநீதிமன்றம் நீதிபதியின் ஓய்வுபெறும் வயது

(அ) 60 வருடங்கள் (ஆ) 62 வருடங்கள் (இ) 65 வருடங்கள் (ஈ) 67 வருடங்கள்

189. “இந்தியா முழுமையான கூட்டாட்சி அமைப்பே அல்ல” எனக் கூறியவர் யார்?

(அ) கே.பி.முகர்ஜி (ஆ) ஜவஹர்லால் நேரு (இ) அம்பேத்கர் (ஈ) கோகலே

190. குடியரசு தலைவர் அவசரகால பிரகடனம் செய்யும் முன்பு அதனை ——– முன்பாக வைக்க வேண்டும்

(அ) பிரதம மந்திரி (ஆ) அமைச்சரவை (இ) கேபினட் (ஈ) பாராளுமன்றம்

191. இராஜ்ய சபையின் (மேலவையின்) தலைவர் யார்?

(அ) குடியரசுத் தலைவர் (ஆ) துணைக்குடியரசுத் தலைவர்

(இ) பிரதமர் (ஈ) மேற்கூறிய எதுவுமில்லை

192. 44ம் அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்ட அடிப்படை உரிமை எது?

(அ) சமத்துவ உரிமை (ஆ) சுதந்திர உரிமை (இ) சொத்துரிமை (ஈ) மத உரிமை

193. “மதசார்பின்மை மற்றும் மக்கள் ஆட்சி ஆகியவை அரசின் இருதூண்கள்” என்று கூறியவர் யார்?

(அ) ஜவஹர்லால்நேரு (ஆ) இந்திராகாந்தி (இ) மகாத்மா காந்தி (ஈ) அம்பேத்கார்

194. இந்திய சூழலில் வறுமை பற்றி இயல்பகள் யாரால் உருவாக்கப்பட்டது.

1.தாண்டேக்கர் மற்றுத் ராத்.

2.P.K.பர்தன்.

3.B.S.மின்காஸ்.

4.I.J.அகல்வால்யா.

கீழே குறிக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான பதிலைக் குறிப்பிடவும்:

(அ) 1 மற்றும் 2 (ஆ) 2 மற்றும் 3 (இ) 1,2 மற்றும் 3 (ஈ) 1,2,3 மற்றும் 4

195. பிரதான் மந்திரி கிராம சடக் யோஜனா அறிமுகப்படுத்தப்பட்ட வருடம்

(அ) 1998 (ஆ) 2000 (இ) 2003 (ஈ) 2005

196. ஸ்வர்ண ஜெயந்தி சகாரி ரோஜ்கர் யோஜனா இதோடு தொடர்புடையது.

1. நகர்புறம்.

2.கிராமப்புறம்.

3.பாதிநகர்புறம்

(அ) 1 மட்டும் (ஆ) 1 மற்றும் 2 மட்டும் (இ) 2 மற்றும் 3 மட்டும் (ஈ) 1,2 மற்றும் 3

197. பட்டியல்I மற்றும் பட்டியல் II-ஐ பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையைத் தேர்வ செய்க:

பட்டியல்-I – குழு பட்டியல் II-இந்திய அரசியலமைப்பின் ஷரத்து

(அ) யு.பி.எஸ்.ஸி 1. ஷரத்து-39

(ஆ) திட்டக்குழு 2. ஷரத்து-315

(இ) நிதிக்குழு 3. ஷரத்து-280

(ஈ) தேர்தல் ஆணையம் 4. ஷரத்து-324

அ ஆ இ ஈ

அ. 2 1 3 4

ஆ. 1 2 4 3

இ. 3 4 1 2

ஈஇ 2 3 4 1

198. கீழ்கண்டவற்றுள் நிதிக் கொள்கையின் கருவிகள் யாவை?

1. வங்கி வீதம்

2. பொதுச்செலவு

3. வரிவிதிப்பு

4. பொதுக்கடன்

(அ) 1இ2 மற்றும் 3 மட்டும் (ஆ) 2இ3 மற்றும் 4 மட்டும்

(இ) 1இ3 மற்றும் 4 மட்டும் (ஈ) 1இ2இ3 மற்றும் 4

199. “இந்திய கட்டமைப்பை மாற்றுவதற்கான தேசிய நிறுவன குழு” இந்தியாவில் எப்போது அமைக்கப்பட்டது?

(அ) 01.01.2019 (ஆ) 01.01.2018 (இ) 01.01.2017 (ஈ) 01.01.2015

200. பட்டியல் I மற்றும் II-ஐ பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையைத் தேர்வு செய்க:

பட்டியல் I-ஐந்தாண்டுத்திட்டம் பட்டியல் II-இயல்பு

அ. 9வது திட்டம் 1. 8% GDP வளர்ச்சி இலக்கை அடைதல்

ஆ. 10வது திட்டம் 2. விரைவான,நீடித்த மற்றும் உயர்ந்த உள்ளார்ந்த வளர்ச்சியை அடைதல்

இ. 11வது திட்டம் 3. விரைவான மற்றும் உயர்ந்த உள்ளார்ந்த வளர்ச்சியை அடைதல்

ஈ. 12வது திட்டம் 4. சமூகநீதி மற்றும் சமத்துவத்துடன் கூடிய வளர்ச்சியை அடைதல்

அ ஆ இ ஈ

அ. 3 2 1 4

ஆ. 4 3 2 1

இ. 4 1 3 2

ஈ. 1 2 3 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!