Tnpsc Research Assistant Exam Previous Questions and Answer key in Tamil
Tnpsc Research Assistant Exam Previous Questions and Answer key in Tamil
RESEARCH ASSISTANT IN EVALUATION AND APPLIED RESEARCH DEPARTMENT IN TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE
1. பின்வரும் நிகழ்வுகளை காலமுறைப்படி பட்டியலிடுக:
அ. சுதேசி இயக்கம்
ஆ. தன்னாட்சி இயக்கம்
இ. ஒத்துழையாமை இயக்கம்
ஈ. சட்ட மறுப்பு இயக்கம்
(அ) அ,ஆ,இ,ஈ
(ஆ) ஆ,இ,ஈ,அ
(இ) இ,ஈ,அ,ஆ
(ஈ) இ,ஆ,அ,ஈ
2. அலன் ஆக்டேவியன் ஹியூம் பற்றிய கூற்றுகளில் எது உண்மை?
அ. இந்திய தேசிய காங்கிரஸின் தந்தை
ஆ. ஒரு சிறந்த பொருளாதார நிபுணர்
இ. 1893 இல் லாகூர் அமர்வின் தலைவர்
(அ) அ மட்டும்
(ஆ) அ மற்றும் இ மட்டும்
(இ) அ மற்றும் ஆ மட்டும்
(ஈ) ஆ மற்றும் இ மட்டும்
3. தேவதாசி பற்றி நாவல் எழுதியது யார்?
(அ) பால சரஸ்வதி
(ஆ) ராமாமிர்தம் அம்மையார்
(இ) நாகரத்தினம்மா
(ஈ) எம்.எஸ்.சுப்புலட்சுமி
4. கூற்று : மூவலூர் இராமாமிருதம் அனாதை விடுதியான அவ்வை இல்லத்தை நிறுவினார்
காரணம் : அவர் பெரியாரின் தீவிர சீடர்
(அ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றை உறுதிபடுத்துகிறது
(ஆ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றுக்கு பொருந்தவில்லை
(இ) கூற்று சரி காரணம் தவறு
(ஈ) கூற்று தவறு காரணம் சரி
5. “நாடென்ப நாடா வளத்தன”
என்ற குறளில் கூறப்படும் செய்தி
(அ) நல்ல நாட்டிற்கான இலக்கணம்
(ஆ) நாட்டின் வளம்
(இ) நாட்டில் ஏற்படும் தீங்கு
(இ) தீய நாட்டிற்கான இலக்கணம்
6. “விழுமத் துடைத்தவர் நட்பு”
– என வள்ளுவர் எத்தகைய நட்பைக் குறிப்பிடுகிறார்?
(அ) கற்றோர் நட்பு
(ஆ) துன்பம் கொடுத்தவர் நட்பு
(இ) சான்றோர் நட்பு
(ஈ) துன்பம் நீக்கிய நல்லோர் நட்பு
7. பொருத்துக:
அ. மன்றம் 1. பொது இடம்
ஆ. சப்தாங்கா 2. நிர்வாக குழு
இ. எண்பேராயம் 3. கூடுகை நடத்தும் இடம்
ஈ. பொதியில் 4. ஏழு பிரிவுகள்
அ ஆ இ ஈ
அ. 3 4 2 1
ஆ. 3 2 1 4
இ. 4 3 2 1
ஈ. 4 2 1 3
8. தமிழர்களின் வேதம் என்று அழைக்கப்படும் நூல்
(அ) தேவாரம்
(ஆ) திருவாசகம்
(இ) திருக்குறள்
(ஈ) நாலடியார்
9. “கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி”
– எனத் தொடங்கும் குறுந்தொகைப் பாடலின் இரண்டாவது அடி எது?
(அ) மைப்பட்டன்ன மாமுக முசுக்கலை
(ஆ) காமம் செப்பாது கண்டது மொழிமோ
(இ) வரை இழி அருவியில் தோன்று நாடன்
(ஈ) புனக்கிளி கடியும் பூங்கண் பேதை
10. ஒவ்வொரு ஆண்டும் “மனித உறுப்பு தானம்” தினமாக கொண்டாடப்படும் நாள்
(அ) மே,1
(ஆ) ஆகஸ்டு, 13
(இ) அக்டோபர், 20
(ஈ) டிசம்பர், 26
11. தமிழ நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம் எதனால் ரப்பருக்கு புகழ் பெற்றுள்ளது
அ. வறட்சியான காலநிலை
ஆ. நில அமைப்பு
இ. தேவையான அளவு மழை
ஈ. அருகாமையில் சந்தை உள்ளது
(அ) அ மற்றும் ஆ
(ஆ) அ,ஆ மற்றும் இ
(இ) ஆ மற்றும் இ
(ஈ) மேற்கூறியன ஏதுமில்லை
12. ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் ———– அவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது
(அ) ஆதரவற்ற பெண்கள் (ஆ) கலப்புத் திருமணம் செய்யும் தம்பதிகள்
(இ) ஏழை விதவையர் மகள்கள் (ஈ) விதவை மறுமணம்
13. ஸ்ரீ நாராயண குருசாமி துவங்கிய, நாராயண தர்ம பரிபாலன இயக்கம் எந்த விஷயங்களை முன்னெடுத்தது?
அ. கலப்புத் திருமணத்தை ஊக்குவித்தல்
ஆ. பொதுப் பள்ளிகளில் அனுமதி
இ. அரசு பள்ளிகளில் தேர்ந்தெடுக்கப்படுதல்
ஈ. கோவில்கள் மற்றும் சாலைகளில் செல்ல அனுமதி
(அ) அ,ஆ மற்றும் இ (ஆ) ஆ,இ மற்றும் ஈ (இ) அ,இ மற்றும் ஈ (ஈ) அ,ஆ,இ மற்றும் ஈ
14. புது வாழ்வுத் திட்டம் ஏன் தொடங்கப்பட்டது?
(அ) வறுமையை ஒழித்தல் (ஆ) வேலை வாய்ப்பை குறைத்தல்
(இ) பொருளாதார வளர்ச்சியை குறைத்தல் (ஈ) பணக்காரர்களுக்கு உதவுதல்
15. “தமிழ்நாடு நீர்வள ஆதாரப் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம்” தொடங்கப்பட்டதன் நோக்கம்
(அ) புதிய அணைகள் கட்டுவது
(ஆ) அருகிவரும் நீர் வளங்களை, மக்கள் பெருமளவில் நன்மையடையும் வகையில் பயன்படுத்திட வகை செய்வது
(இ) தொழிற்சாலைகள் அதிகளவு நீர் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துதல்
(ஈ) தண்ணீர் விநியோகத்தை கண்காணித்தல்
16. ஒரு A.P. ல் 10 மற்றும் 14வது உறுப்புகளின் விகிதம் 8 : 11 எனில் அக்கூட்டு தொடரில் 6 மற்றும் 16வது உறுப்புகளில் விகிதம்
(அ) 3 : 8 (ஆ) 5 : 7 (இ) 3 : 7 (ஈ) 2 : 5
17. 200 இல் ½% ஐக் காண்க
(அ) 1 (ஆ) 20 (இ) 50 (ஈ) 100
18. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடரில் பொருந்தாத உறுப்பைக் காண்க:
1CV, 5FU, 9IT, 15LS, 17OR
(அ) 5 FU (ஆ) 15 LS (இ) 9 IT (ஈ) 17 OR
19. A இக்குப் பதில் + எனவும் B இக்குப் பதில் – எனவும் C இக்குப் பதில் X எனவும் D இக்குப் பதில் % எனவும் எடுத்துக்கொண்டால் 4B3C5A30D2 என்ற அமைப்பின் விடையைக் காண்க:
(அ) 3 (ஆ) 4 (இ) 5 (ஈ) 0
20. A என்பவர் தனியே ஒரு வேலையை 10 நாள்களிலும் B ஆனவர் தனியே 15 நாள்களிலும் முடிப்பர். அவர்கள் இந்த வேலையை ₹.2,00,000 தொகைக்கு ஒப்புக் கொண்டனர் எனில் A பெறும் தொகை —————-ஆகும்.
(அ) ₹.1,20,000 (ஆ) ₹.90,000 (இ) ₹.60,000 (ஈ) ₹.40,000
21. A மற்றும் B ஒரு வேலையை 12 நாட்களில் செய்ய முடியும். B மற்றும் C 15 நாட்களிலும், C மற்றும் A 20 நாட்களிலும் செய்ய முடியுமென்றால் அவர்கள் எத்தனை நாட்களில் அதை ஒன்றாகச் செய்து முடிப்பார்கள்.
(அ) 47 நாட்கள் (ஆ) 10 நாட்கள் (இ) 23 நாட்கள் (ஈ) 360 நாட்கள்
22. அசல் ₹.1,000-க்கு 10% ஆண்டு வட்டியில் 2 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டு வட்டியைக் காண்க:
(அ) ₹.190 (ஆ) ₹.210 (இ) ₹.1210 (ஈ) ₹.200
23. ஒரு நகரத்தின் மக்கள் தொகை ஆண்டுக்கு 6% அதிகரிக்கிறது. 2018-ஆம் ஆண்டு மக்கள் தொகை 238765-ஆக இருந்தது எனில் 2020-ஆம் ஆண்டின் மக்கள் தொகையைக் காண்க:
(அ) 286276 (ஆ) 268276 (இ) 248274 (ஈ) 268876
24. y : 36 = 2 : x = 8 : 12 எனில் x மற்றும் y மதிப்புகளைக் காண்க:
(அ) 24, 3 (ஆ) 3, 24 (இ) 3, 54 (ஈ) 54, 3
25. 1/2, 2/3, ¾ என்ற விகித சமத்தில் ₹.782 ஆனது பிரிக்கப்படுகிறது எனில், முதல் பகுதியின் தொகை என்ன?
(அ) 205 (ஆ) 105 (இ) 200 (ஈ) 204
26. மீப்பெரு பொதுக் காரணி காண்க: x3 – x2 + x – 1, x4 – 1
(அ) x 2 + 1 (ஆ) (x – 1) (x2 +1) (இ) (x + 1) (x2 + 1) (ஈ) x2 – 1
27. 3 மற்றும் 9 ஆகிய எண்களின் மீ.சி.ம 9 எனில் அவற்றின் மீ.பெ.வ
(அ) 1 (ஆ) 3 (இ) 9 (ஈ) 27
28. எலெக்ட்ரானை கண்டுபிடித்தவர் ———— ஆவார்
(அ) நியூட்டன் (ஆ) ஜெ.ஜெ.தாம்சன் (இ) ராண்ட்ஜன் (ஈ) சாட்விக்
29. ஃபிரானஃபர் வரிகள் ———- நிறமாலைக்கு எடுத்துக்காட்டு ஆகும்.
(அ) வரி வெளிவிடு (ஆ) வரி உட்கவர் (இ) பட்டை வெளியிடு (ஈ) பட்டை உட்கவர்
30. பின்வரும் கூற்றுகளை கருத்தில் கொள்க:
அ. CO2 பசுமை இல்ல வாயு, உலக வெப்பமாதலை அதிகரிக்கிறது
ஆ. CO2 அகச்சிவப்பு கதிர் வீச்சுகளை ஈர்த்து கொள்கிறது
மேறகூறியவற்றுள் சரியானது எது/எவை?
(அ) அ மட்டும (ஆ) ஆ மட்டும் (இ) அ மற்றும் ஆ (ஈ) இரண்டுமில்லை
31. இந்திய பாராளுமன்றத்தில் அறிவியல் கொள்கை தீர்மானம் எந்த ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது?
(அ) 1960 (ஆ) 1959 (இ) 1958 (ஈ) 1957
32. கீழ்கண்டவற்றை பொருத்துக:
குறியீட்டின் பெயர் உருவாக்கப்பட்ட ஆண்டு
அ. மனித மேம்பாட்டு குறியீடு (HDI) 1. 2000
ஆ. பாலின-தொடர்பான மேம்பாட்டு குறியீடு (GDI) 2. 1997
இ. முனித வறுமை குறியீடு (HPI) 3. 1995
ஈ. ஆயிரமாண்டு மேம்பாட்டு இலக்கு (MDG) 4. 1990
அ ஆ இ ஈ
அ. 1 2 3 4
ஆ. 4 3 2 1
இ. 3 2 1 4
ஈ. 2 1 4 3
33. சரியானவற்றை பொருத்துக:
அ. குவின்டன் டி காக் 1. ஸ்டைரியன் கிராண்ட் பிரிக்ஸ், 2020
ஆ. வால்டேரி போட்டஸ் 2. லா லிகா சேம்பியன், 2020
இ. லீவீஸ் ஹமில்டன் 3. கிரிக்கெட்-தென் ஆப்பிரிக்க தேசிய விருது
ஈ. ரியல் மேட்ரிட் 4. ஆஸ்டிரியன் கிராண்ட் பிரிக்ஸ், 2020
அ ஆ இ ஈ
அ. 3 4 1 2
ஆ. 2 3 4 1
இ. 1 4 2 3
ஈ. 4 1 3 2
34. சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதல் கட்டம் எத்தனை கிலோ மீட்டர் கொண்டது?
(அ) 25 (ஆ) 35 (இ) 45 (ஈ) 55
35. ஐ.எஸ்.ஆர்.ஓ பள்ளி குழந்தைகளுக்காக ஏற்படுத்திய சிறப்பு நிகழ்ச்சியின் தலைப்பு
(அ) இளம் விஞ்ஞானிக்கான நிகழ்ச்சி (ஆ) குழந்தைகளுக்கான அறிவியல் நிகழ்ச்சி
(இ) இளைஞர்கள் நிகழ்ச்சி (ஈ) சிறப்பு குழந்தைகள் நிகழ்வு
36. கொடுக்கப்பட்டுள்ள பழங்குடியினர் பட்டியிலிருந்து இந்தியாவில் அதிக அளவில் காணப்படும் பழங்குடியினம் எதுவென கண்டறிக:
(அ) கோண்டர்கள் (ஆ) சாந்தள்கள் (இ) நாகர்கள் (ஈ) தோடர்கள்
37. வற்றாத நதிகள் என்றழைக்கப்படக்கூடிய நதிகள்
(அ) தீபகற்ப நதிகள் (ஆ) மேற்கு நோக்கி பாயும் நதிகள்
(இ) கிழக்கு நோக்கி பாயும் நதிகள் (ஈ) இமாலய நதிகள்
38. அரசூர் மலை அமைந்துள்ள பிரதேசமானது
(அ) கிழக்கு கேரளா (ஆ) கிழக்கு குஜராத் (இ) மேற்கு ஆந்திரப்பிரதேசம் (ஈ) மேற்கு தமிழ்நாடு
39. “மக்கட் தொகையில் இனக்கூறுகள்” என்ற நூலினை எழுதியவர் யார்?
(அ) பிரஜாசங்கர் குஹா (ஆ) ரொமிலா தாப்பர் (இ) சதிஷ் சந்திரா (ஈ) அஜய் மித்ரா சாஸ்திரி
40. எந்த மாநிலத்தில் இந்துக்களின் புனிதத் தலங்களில் ஒன்றான துவாரகா அமைந்துள்ளது?
(அ) உத்திர பிரதேசம் (ஆ) உத்ரகாண்ட் (இ) குஜராத் (ஈ) மத்தியபிரதேசம்
41. கூற்று (A) : அபுல் பாசலின் அக்பர் நாமா 3 பாகத்தை கொண்டது
காரணம் (R) : முதல் பாகம் அக்பரின் முன்னோர்கள் பற்றிறது. இரண்டாம் பாகம் அக்பரின் ஆட்சியைப் பற்றி விரிவாகக் கூறுவது. மூன்றாம் பாகம் அயினி அக்பரின் தனி தலைப்பு
(அ) (A) சரி ஆனால் (R) தவறு
(ஆ) (A) மற்றும் (R) ஆகிய இரண்டும் சரி (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமாகும்.
(இ) (A) தவறு, ஆனால் (R) சரி
(ஈ) (A) மற்றும் (R) ஆகிய இரண்டும் சரி ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
42. இபான் பதூதா ———— காலத்தில் இந்தியாவிற்கு விஜயம் செய்தார்
(அ) முஹம்மத் பின் துக்ளக் (ஆ) பெரோஸ்ஷா துக்ளக்
(இ) கியாஸீத்தீன் துக்ளக் (ஈ) ஷம்ஸீத்தின் முஹம்மத்
43. குறை தீர்க்கும் மையம் எங்கு முதன் முதலில் தோற்றுவிக்கப்பட்ட இடம்
(அ) நார்வே (ஆ) சுவீடன் (இ) டென்மார்க் (ஈ) அமெரிக்கா
44. இந்திய அரசியலமைப்பின் 326-ம் விதி கீழ் காணப்படும் எவை/எதை குறிக்கின்றது. (பற்றியது)?
(அ) மக்களவைக்கான தேர்தல் வயது வந்ததோர் வாக்குரிமை-ன் அடிப்படையில் நடத்துவது
(அ) குடியரசுத்தலைவர்
(இ) பாராளுமன்றம்
(ஈ) உச்ச நீதிமன்றம்
45. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 78-வது சரத்தின் கீழ் பாரதப் பிரதமரின் கடமையாகச் சொல்லப்படுவது
(அ) அமைச்சரவையின் அனைத்து முடிவுகளையும் குடியரசுத் தலைவருக்குத் தெரிவித்தல்
(ஆ) அமைச்சரவையின் அனைத்து முடிவுகளையும் பாராளுமன்றத்திற்குத் தெரிவித்தல்
(இ) அமைச்சரவையின் அனைத்து முடிவுகளையும் உச்ச நீதிமன்றத்திற்குத் தெரிவித்தல்
(ஈ) அமைச்சரவையின் அனைத்து முடிவுகளையும் இந்தியக் கணக்காயர் மற்றும் தலைமைத் தணிக்கையரிடம் தெரிவித்தல்
46. எந்த திருத்தத்தின் மூலம் அடிப்படை உரிமைகள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது?
(அ) 12ம் (ஆ) 22ம் (இ) 32ம் (ஈ) 42ம்
47. வரி சாரா வருவாயின் ஆதாரங்களாவன:
அ. பொதுத்துறை நிறுவனங்களின் வருவாய்கள்
ஆ. மரண தீர்வை
இ. விற்பனை வரி
ஈ. செஸ்
மேலே கண்டவற்றுள் எவை சரியான விடைகள்?
(அ) ஆ மறறும் இ (ஆ) அ மற்றும் ஈ (இ) அ மற்றும் ஆ (ஈ) இ மற்றும் ஈ
48. கீழ்கண்ட வரி நேரடி வரி அல்ல
அ. சரக்கு மற்றும் சேவை வரி
ஆ. சொத்து வரி
இ. கொடை வரி
(அ) அ மட்டும் (ஆ) அ மற்றும் ஆ மட்டும் (இ) ஆ மற்றும் இ மட்டும் (ஈ) இ மட்டும்
49. NITI Ayog என்பதன் விரிவாக்கம் என்ன?
(அ) National Information and Taxes in India
(ஆ) National Institution for Trade in India
(இ) National Institution for Transforming India
(ஈ) National Integrated Trade Institute
50. சரியான விடையை தேர்ந்தெடுக:
அ. இந்திய லீக் ஆரம்பிக்கப்பட்ட வருடம் 1843
ஆ. ஆங்கில இந்திய சங்கம் வங்காளத்தில் 1875 ஆரம்பிக்கப்பட்டது
இ. இந்திய சங்கம் 1876 ஆரம்பிக்கப்பட்டது
ஈ. பூனா சார்வஜனச் சபா 1878 ல் அமைக்கப்பட்டது
(அ) அ மட்டும் (ஆ) ஆ மட்டும் (இ) இ மட்டும் (ஈ) ஈ மட்டும்
51. இந்துகளும் மற்றும் முஸ்லீம்களும் இந்திய மணப் பெண்ணின் அழகான இரண்டு கண்கள் என்று வருணித்தவர்
(அ) சர் சய்யிது அகமது கான் (ஆ) M.A.ஜின்னா (இ) அகா கான் (ஈ) சய்யிது வசிர்ஹீசைன்
52. கீழ்க்காணும் சொற்பொழிவுகளில் காந்தியடிகளின் முதல் அரசியல் உரை என புகழ்பெற்றது எது?
(அ) பனாரஸ் இந்து பல்கலைக் கழகம் சொற்பொழிவு
(ஆ) தண்டி யாத்திரை சொற்பொழிவு
(இ) முதல் வட்ட மேஜை மாநாட்டு சொற்பொழிவு
(ஈ) வெள்ளையனே வெளியேறு இயக்க சொற்பொழிவு
53. 1939-ம் ஆண்டு தேர்தலில் சுபாஷ் சந்திர போஸ் எந்த வேட்பாளரை தோற்கடித்து காங்கிரசின் தலைவரானார்?
(அ) பட்டாபி சீதாராமய்யா (ஆ) ஜவஹர்லால் நேரு (இ) ராஜேந்திர பிரசாத் (ஈ) சர்தார் வல்லபாய் படேல்
54. சத்யேந்திரநாதத் தாகூர், இந்திய குடிமைப் பணி தேர்வு எழுதி வெற்றி பெற்ற முதல் இந்தியர் ஆவர். இந்த தேர்வு எழுதிய ஆண்டு
(அ) 1861 (ஆ) 1862 (இ) 1863 (ஈ) 1864
55. சுய மரியாதை இயக்கத்தின் எழுச்சியிலும், வளர்ச்சியிலும் இரண்டு கட்டம் உண்டு. இவற்றில் எது சரியானவை?
அ. பகுத்தறிவுவாதம்
ஆ. நாத்திகம்
(அ) அ (ஆ) ஆ (இ) அ மற்றும் ஆ (ஈ) எதுவுமில்லை
56. கீழ்க்கண்டவற்றில் திருச்சி பிரகடனம் பற்றி தவறான கூற்று எது?
அ. இப்பிரகடனம் மருதுபாண்டியார்களால் வெளியிடப்பட்டது
ஆ இப்பிரகடனம் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது
இ. பிரகடனம் தேசிய சிந்தனையை வெளிப்படுத்துவதாக அமையவில்லை
ஈ, ஆற்காடு நவாப் மற்றும் முகமது அலியின் அரசியல் நடவடிக்கைகளை இப்பிரகடனம் கண்டித்தது.
(அ) அ மட்டும் (ஆ) ஆ மட்டும் (இ) இ மட்டும் (ஈ) ஈ மட்டும்
57. மூன்றாவது இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு ————- தலைமையில் நடைபெற்றது
(அ) A.O.ஹீயூம் (ஆ) அன்னிபெசன்ட் (இ) பக்ரூதின் தியாப்ஜி (ஈ) தாதாபாய் நௌரோஜி
58. திருநங்கைகளைப் பற்றி புதுக்கவிதையில் பாடியவர் யார்? குறிப்பிடுக:
(அ) மீ.ராஜேந்திரன் (ஆ) நா.காமராஜன் (இ) மு.மேத்தா (ஈ) அப்துல் ரஹ்மான்
59. ஆபுத்திரனுக்கு அட்சய பாத்திரம் அளித்தவர்?
(அ) சிந்தா தேவி (ஆ) மணிமேகலா தெய்வம் (இ) கண்ணகி (ஈ) மாதவி
60. கீழ்க்காண்பனவற்றில் நம்மாழ்வார் பாடாத நூல்
(அ) திருவிருத்தம் (ஆ) நான்முகன் திருவந்தாதி (இ) பெரிய திருவந்தாதி (ஈ) திருவாய்மொழி
61. ரோமானிய தொழிற்சாலையை மார்டிமர் வீலர் கண்டுபிடித்த இடம்
(அ) ஆதிச்சநல்லூர் (ஆ) அரிக்காமேடு (இ) களியூர் (ஈ) காஞ்சி
62. திராவிட மொழிகளுள் பழமையானது எது?
(அ) கன்னடம் (ஆ) மலையாளம் (இ) தமிழ் (ஈ) தெலுங்கு
63. மனித மேம்பாட்டுக் குறியீடு இதை அடிப்படையாகக் கொண்டு அமைகிறது
(அ) வாழ்நாடு (ஆ) குழந்தை இறப்பு (இ) இறப்பு வீதம் (ஈ) பிறப்பு வீதம்
64. பின்வருவனவற்றுள் தமிழக அரசு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் செயல்பாடு(கள்) எது?
அ. அழகு சாதனப் பொருட்கள் உற்பத்திக்கு உரிமம் அளித்தல்
ஆ. அலோபதி மருந்துகள் உற்பத்திக்கு உரிமம் அளித்தல்
இ. இரத்த சேமிப்பு மையத்திற்கு ஒப்புதல் அளித்தல்
ஈ. ஆய்வகங்களுக்கு ஒப்புதல் மற்றம் உரிமம் அளித்தல்
(அ) அ,ஆ,இ மற்றும் ஈ (ஆ) ஆ,இ மற்றும் ஈ மட்டும் (இ) ஆ மட்டும் (ஈ) ஆ மற்றும் இ மட்டும்
65. பின்வரும் கூற்றை ஆராய்க:
அ. பேட்டி பச்சோ பேட்டி பதோ திட்டம் கடலூரில் துவங்கப்பட்டது
ஆ. மாநிலத்திலேயே குழந்தை பாலின விகிதம் குறைவாக உள்ளதால் தர்மபுரியில் பேட்டி பச்சோ பேட்டி பதோ திட்டம் துவங்கப்பட்டது.
இ. 2011-ல் தமிழ்நாட்டில் குழந்தை பாலின விகிதம் 943/1000 மக்கள் தொகை கணக்கெடுப்பில் என்பதாகும்.
ஈ. 2011-ல் குழந்தை பாலின விகிதம் தர்மபுரியில் 647/1000 ஆக இருக்கிறது
(அ) அ மற்றும் இ சரி (இ) ஆ மற்றும் ஈ சரி (இ) அ,ஆ மற்றும் இ சரி (ஈ) ஈ மட்டும்
66. பயிர் உற்பத்தியில் எந்த பயிரைத்தவிர தமிழகம் முன்னணியில் உள்ளது?
(அ) வாழைப்பழம் (ஆ) தேங்காய் (இ) தோட்டப்பயிர்கள் (ஈ) ஏலக்காய்
67. எத்தனை ஆண்டுகளில் ரூ.5,600 ஆண்டுக்கு 6% தனிவட்டி வீதத்தில் ரூ.6,720 ஆக உயரும்?
(அ) 3 1/2 வருடங்கள் (ஆ) 3 1/3 வருடங்கள் (இ) 2 1/2 வருடங்கள் (ஈ) 2 1/3 வருடங்கள்
68. 11 செமீ, 12 செமீ, 13 செமீ ……….. 24 செமீ பக்க அளவுகளைக் கொண்ட 14 சதுரங்களின் மொத்தப் பரப்பளவு காண்க:
(அ) 5975 செமீ2 (ஆ) 3818 செமீ2 (இ) 4515 செமீ2 (ஈ) 3939 செமீ2
69. மூன்று பகா எண்களின் கூடுதல் 80, அவற்றுள் இரு எண்களின் வேறுபாடு 4 எனில் அந்த மூன்று எண்கள்
(அ) 2, 31, 47 (ஆ) 2, 37, 41 (இ) 2, 11, 67 (ஈ) 2, 17, 61
70. [p/q] 1-3x = [q/p] 1/2 எனில் X-ன் மதிப்பு காண்க:
(அ) 4-1 (ஆ) 3-1 (இ) 2-1 (ஈ) 1-1
71. ஒரு சதுரங்க பலகையில் எத்தனை சதுரங்கள் இருக்கும்?
(அ) 64 (ஆ) 128 (இ) 204 (ஈ) 256
72. 45 செ.மீ உயரமுள்ள ஓர் இடைக் கண்டத்தின் இரு புற ஆரங்கள் முறையே 28 செ.மீ மற்றும் 7 செ.மீ எனில், இடைக்கண்டத்தின் கன அளவைக் காண்க:
(அ) 48510 செ.மீ3 (ஆ) 48501 செ.மீ3 (இ) 48105 செ.மீ3 (ஈ) 48511 செ.மீ3
73. ஒரு கனசதுரர வடிவ நீர்த் தொட்டியானது 64,000 லிட்டர் நீர் கொள்ளும் எனில் அந்த தொட்டியின் பக்கத்தின் நீளத்தை மீட்டரில் காண்க
(அ) 6 மீ (ஆ) 5 மீ (இ) 4 மீ (ஈ) 7 மீ
74. ஒரு குறிப்பிட்ட தொகையானது 10% வட்டி வீதம் 5 ஆண்டுகளுக்கு ரூ.10,050 கிடைக்கிறது எனில் அசல் எவ்வளவு?
(அ) ரூ.6,500 (ஆ) ரூ.6,700 (இ) ரூ.6,000 (ஈ) ரூ.3,350
75. ரூ 7,200-க்கு ஆண்டு வட்டி 12 3/4% என்ற வீதத்தில் 9 மாதங்களுக்கான தனி வட்டி காண்க:
(அ) ரூ.962.4 (ஆ) ரூ.800.3 (இ) ரூ.784.2 (ஈ) ரூ.688.5
76. 96 மற்றும் 120 ஆகிய எண்களால் சரியாக வகுபடக்கூடிய மிகச்சிறிய 5 இலக்க எண் என்ன?
(அ) 10608 (ஆ) 16008 (இ) 10080 (ஈ) 18600
77. மீ.சி.ம. காண்க: : (2x2 – 3xy) 2 , (4x – 6 y) 3 , 8x3 – 27 y3
(a) 23 x3 (2x – 3y) 2 (b) 23 x3 (4x2 + 6xy + 9 y2 )
(c) 23 x2 (2x – 3y) 3 (4x2 + 6xy + 9y2) (d) 23 x3 (2x – 3y) 3 (4x2 + 6xy + 9y2)
78. 10,000 இன் 25% மதிப்பின் 15% என்பது ———- ஆகும்
(அ) 375 (ஆ) 400 (இ) 425 (ஈ) 475
79. ஒருவருடைய வருமானம் 10% அதிகரித்து அதன் பின் 10% குறைந்தது. அவருடைய வருமானத்தில் ஏற்பட்ட மாற்றம் என்ன சதவீதம்?
(அ) 0% (ஆ) 1 % (இ) 10 % (ஈ) 100 %
80. வாட்டின் கணக்கீட்டில் 1 hp-யின் மதிப்பு ———— ஆகும்
(அ) 726 W (ஆ) 736 W (இ) 746 W (ஈ) 756 W
81. சூரிய புள்ளிகள் ———- ஆண்டுக்கு ஒரு முறை ஏற்படும்
(அ) 15 (ஆ) 11 (இ) 21 (ஈ) 10
82. அறிவியல் மனப்பான்மையின் பரிணாமங்கள் என்பவை
அ. கூர்ந்த உற்றுநோக்கல்
ஆ. அறிவார்ந்த நேர்மை
இ. பாகுபாடற்ற சிந்தனை
ஈ. பிரதிபலிக்கும் சிந்தனை
(அ) அ மற்றும் ஆ மட்டும் (ஆ) இ மற்றும் ஈ மட்டும்
(இ) ஆ,இ மற்றும் ஈ மட்டும் (ஈ) அ,ஆ,இ மற்றும் ஈ
83. “சர்வதேச உயிரினப் பன்மை” நாள்
(அ) மே 22 (ஆ) மே 12 (இ) மே 2 (ஈ) ஜீன் 12
84. பின்வரும் ஆசிரியர் அவர் புத்தங்களையும் பொருத்தமாக இணையிடுக:
ஆசிரியர் புத்தகம்
அ. போப் பிரான்சிஸ் 1. மை லைப் இன் டிசைன்
ஆ. கௌரி காண் 2. வாய்சஸ் ஆப் டிசன்ட்
இ. விகாஸ் கண்ணா 3. லெட் அஸ் டிரீம்
ஈ. ரோமிலா தபார் 4. கிச்சன்ஸ் ஆப் கிராட்டிடியூட்
அ ஆ இ ஈ
அ. 3 1 4 2
ஆ. 1 2 4 3
இ. 4 1 2 3
ஈ. 2 4 1 3
85. அடையார் புற்றுநோய் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சாந்தா அவர்களுக்கு எந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது?
(அ) 1984 (ஆ) 1986 (இ) 1998 (ஈ) 2002
86. இந்தியாவின் தேசிய நீர்வாழ் உயிரினம்
(அ) ஆற்று டால்பின் (ஆ) கடல் குதிரை (இ) கடல் பசு (ஈ) கடல் சிங்கம்
87. நிலையான வகை வேளாண்மை ———- என்று அழைக்கப்படுகிறது
(அ) இடைவிடாத விவசாயம் (ஆ) மொட்டைமாடி விவசாயம்
(இ) செறிந்த முறை விவசாயம் (ஈ) வணிக விவசாயம்
88. ஹேமடைட் வகை இரும்பத்தாதுகளில் உள்ள சுத்தமான இருப்பின் சதவீதம் என்ன?
(அ) 60% முதல் 70% (ஆ) 20% முதல் 30% (இ) 50% முதல் 60% (ஈ) 40% முதல் 50%
89. யுவான் சுவாங் யாருடைய ஆட்சிக் காலத்தில் காஞ்சிபுரத்திற்கு வருகை புரிந்தார்
(அ) முதலாம் மகேந்திரவர்மன் (ஆ) முதலாம் நரசிம்மவர்மன்
(இ) இராஜ சிம்மன் I (ஈ) இரண்டாம் மகேந்திரவர்மன்
90. சிவாஜி சபையின் “அஷ்டப்பிரதானில்” வெளியுறவு அமைச்சராக செயல்பட்டவர் யார்?
(அ) சுமந்த் (ஆ) பீஷ்வா (இ) மந்திரி (ஈ) பண்டிட் ராவ்
91. கீழ்கண்ட கூற்றுகளில் கிருஷ்ண தேவராயருக்கும் போர்த்துகீசியருக்கும் உள்ள உறவுகளை குறித்த கூற்றுகளில் சரியான கூற்று எது?
அ. அல்புகர்க் கிருஷ்ண தேவராயரின் சமகாலத்தவர் ஆவார்
ஆ. அல்புகர்க் கிருஷ்ண தேவராயரின் அரசவைக்கு லுயிஸ் என்ற பாதிரியாரை தூதுவராக அனுப்பினர்
இ. போர்த்துகீசிய வணிகர்கள் கிருஷ்ண தேவராயர் காலத்தில் விஜயநகரத்தில் தங்கி இருந்தனர்
ஈ. போர்த்துகீசியர்கள் விஜயநகர அரசுக்கு படை உதவி செய்துள்ளார்
(அ) அ மட்டும் (ஆ) ஆ மட்டும் (இ) இ மட்டும் (ஈ) அ,ஆ,இ,ஈ
92. கீழே உள்ளவற்றை பொருத்துக:
அ. ரிக் வேதம் 1. யாகம் செய்முறை
ஆ. யஜீர் வேதம் 2. பாடல்கள்
இ. சாம வேதம் 3. மாந்த்ரீகம்
ஈ. அதர்வ வேதம் 4. கீர்த்தனைகள் மற்றும் மெல்லிசைகள்
அ ஆ இ ஈ
அ. 1 2 3 4
ஆ. 2 1 4 3
இ. 3 4 2 1
ஈ. 4 3 1 2
93. எந்த விதியின் கீழ், பாராளுமன்ற மாநிலங்களுக்கு நிதியுதவி அளிக்கும் அதிகாரம் பெற்றுள்ளது?
(அ) விதி 235 (ஆ) விதி 245 (இ) விதி 275 (ஈ) விதி 265
94. இந்திய அளவில் கீழ்கண்டவர்களில் மாநகராட்சியின் முதல் குடிமகன் என்பவர் யார்?
(அ) மாநகராட்சி மன்ற தலைவர் (ஆ) தலைவர் (இ) ஊர்த்தலைவர் (ஈ) சட்டமன்ற உறுப்பினர்
95. இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955-ன் கீழ் ஒருவர் இந்தியக் குடிமகனாக வேண்டுமென்றால்
அ. இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும்
ஆ. இந்திய வம்சாவளியாக இருக்க வேண்டும்
இ. இந்தியரை மணந்திருக்க வேண்டும்
ஈ. குடியுரிமைக்காகப் பதிவு செய்திருக்க வேண்டும்
(அ) அ மட்டும் (ஆ) ஆ மட்டும் (இ) அ,ஆ மற்றும் இ (ஈ) அ,ஆ மற்றும் ஈ
96. எந்த ஆண்டு இந்திய அரசியலமைப்பின் முகப்புரை திருத்தம் செய்யப்பட்டது?
(அ) 1956 (ஆ) 1966 (இ) 1976 (ஈ) 1980
97. பணத்தின் மதிப்பைக் குறைத்தல் விளக்கம்
(அ) பொருளாதாரத்தில் புதிய நாணயத்தை அறிமுகப்படுத்துவது
(ஆ) மற்ற நாணயங்களுடன் தொடர்புடைய நாணயத்தின் அதிகாரப்பூர்வ மதிப்பை குறைப்பது
(இ) ஒரு நாணய சட்டமுறை பேறு, அதன் நிலையை அகற்றுவதை உள்ளடக்கியது.
(ஈ) மற்ற நாணயங்களுடன் தொடர்புடைய நாணயத்தின் அதிகாரப்பூர்வ மதிப்பை அதிகரிப்பதை உள்ளடக்கியது.
98. கீழே தரப்பட்டுள்ளவற்றுள் எது MGNREGS-யின் சாதனை அல்ல?
(அ) வேலை வாய்ப்பினை அதிகப்படுத்துதல்
(ஆ) உள்ளாக்க நிதியம்
(இ) குறைந்தபட்ச கூலியை அதிகப்படுத்துதல்
(ஈ) நடைமுறைபடுத்துதலில் உள்ள ஒழுங்கற்ற தன்மை
99. பின்வரும் சிறப்பு பொருளாதார மண்டலம் பற்றிய உண்மையான கூற்றை குறிப்பிடு
அ. உற்பத்திக்கான மூலப் பொருட்களுக்கு வரியல்லா இறக்குமதி
ஆ. முதல் 5 ஆண்டுகளுக்கு ஏற்றுமதி வருமானத்தில் 100 விழுக்காடு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
(அ) அ மட்டும் (ஆ) ஆ மட்டும் (இ) அ மற்றும் ஆ மட்டும் (ஈ) இவற்றில் எதுவும் இல்லை
100. ரெப்போ விகிதம் என்பதன் பொருள்
(அ) வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம்
(ஆ) ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம்
(இ) அந்நிய செலாவணி மாற்று விகிதம்
(ஈ) பொருளாதார வளர்ச்சி விகிதம்