Tnpsc Principal Industrial Training Institute – Assistant Director of Training Exam Previous Questions in Tamil
Tnpsc Principal Industrial Training Institute – Assistant Director of Training Exam Answer Key
1. விலைமதிப்பற்ற சேவைகளால் இந்தியாவின் வைரமாக பாராட்டப்பட்டவர் யார்?
A) கோபால கிருஷ்ண கோகலே
B) பால கங்காதர் திலகர்
C) சர்தார் வல்லபாய் பட்டேல்
D) லாலா லஜ்பத்ராய்
2. 1941 – ஆம் ஆண்டு விருதுநகர் நகராட்சி தலைவராக காமராஜர் தேர்ந்தெடுக்கப்பட்ட போது அவர் இருந்த இடம்
A) வேலூர் சிறை
B) பாளையங்கோட்டை சிறை
C) விருதுநகர் சிறை
D) மெட்ராஸ் சிறை
3. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் பின்பற்றிய கொள்கை
A) சாதியற்ற சமுதாயம்
B) வேற்றுமையில் ஒற்றுமை
C) திறந்தவெளிக் கொள்கை
D) பிரித்தாளும் கொள்கை
4. நானே சாகேப் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மன வெறுப்பை வளர்த்து கொண்டது ஏன்?
A) வாரிசில்லை
B) சிறந்த நிர்வாகியல்ல
C) ஓய்வூதியம் மறுக்கப்பட்டது
D) துரோகி
5. மக்கள்தொகை காரணமாக நிலத்தில் உண்மையில் தேவைப்படுவதை விட அதிகமான நபர்கள் வேலை செய்கிறார்கள். அது _____ ஆகும்.
A) மறைமுக வேலையின்மை
B) வேலையின்மை
C) குறை வேலையின்மை
D) நிறை வேலையின்மை
6. முத்ரா திட்டத்தின் கீழ் கடன்களை பெறுவது
A) பெரு வணிக நிறுவனங்கள்
B) பன்னாட்டு நிறுவனங்கள்
C) சிறு விவசாயிகள்
D) நுண் தொழில் நிறுவனங்கள்
7. ‘வானவில் புரட்சி’ என ஏன் அழைக்கிறோம்
A) வேளாண் புரட்சி
B) வேளாண் மற்றும் தொழிற் உற்பத்தியில் புரட்சி
C) தகவல் தொழிற் நுட்ப புரட்சி
D) தொழிற் புரட்சி
8. பின்வருபவனவற்றை பொருத்துக :
a) VAT – 1. அடித்தள விளைவுள்ள பல்முனை வரியாகும்
b) GST – 2. அடித்தள விளைவில்லாத ஒரு முனை வரியாகும்
c) விற்பனை வரி – 3. அடித்தள் விளைவில்லாத பல்முனை வரியாகும்
d) CGST – 4. மாநில அரசுகளுக்கு இடையேயான விற்பனையில் மத்திய அரசால்
வசூலிக்கப்படுவதாகும்
f) IGST – 5. மாநிலத்திற்குள்ளே நடைபெறுகிற விற்பனையில் மத்திய அரசால்
வசூலிக்கப்படுவதாகும்
A) 1 2 4 5 3
B) 3 2 1 5 4
C) 4 3 1 2 5
D) 2 1 3 5 4
9. (ஜனாதிபதி பற்றிய) பட்டியல் I ஐ பட்டியல் II உடன் ஒப்பிடுக :
பட்டியல் I – பட்டியல் II
a) விதி 53 – 1. தேசிய அவசர நிலை
b) விதி 352 – 2. பிரதமர் நியமனம்
c) விதி 76 – 3. மத்திய அரசின் இந்தியாவின் நிர்வாக அதிகாரம் குடியரசுத் தலைவரிடம் உள்ளது
d) விதி 75 – 4. இந்திய தலைமை வழக்குரைஞர் நியமனம்
a) b) c) d)
A) 1 3 4 2
B) 3 1 4 2
C) 3 4 2 1
D) 4 2 3 1
10. இந்திய அரசியல் சாசனத்தின் எந்தப் பகுதி மூன்று நிலை பஞ்சாயத்து அமைப்புகள் நிறுவ வழி வகுக்கின்றது?
A) பகுதி – IX
B) பகுதி – X
C) பகுதி – XI
D) பகுதி – XII
11. மத்திய அமைச்சரவை தொடர்பாக பின்வரும் கூற்றுக்களை ஆராய்க :
I. இந்திய அரசியலமைப்பு விதி 74வது அமைச்சரவையை விளக்குகிறது
II. அது கூட்டுப் பொறுப்பை பெற்றிருக்கவில்லை
இவற்றுள் :
A) I மட்டும் சரியானது
B) II மட்டும் சரியானது
C) I மற்றும் II சரியானது
D) I மற்றும் II தவறானது
12. பின்வரும் வாக்கியங்களில் 42வது இந்திய அரசியலமைப்பு திருத்தத்துடன் பொருந்தாத கூற்று எது?
A) ‘சமய சார்பற்ற’ என்ற வார்த்தை அரசியலமைப்பு முகப்புரையில் சேர்க்கப்பட்டது
B) அரசாங்கம் அனைத்து சமயங்களையும் சமமாக பாதுகாத்தது
C) சமய சார்பற்ற மற்றும் சோஷியலிச என்ற வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது
D) சில திருத்தங்கள் முகப்புரையில் கடைசி பத்தியில் ஏற்படுத்தப்பட்டது
13. பெண் சிசுக்கொலை வழக்கம் ______ மத்தியில் அதிகமாக இருந்தன.
A) ஜாட்கள்
B) மராத்தியர்கள்
C) இராஜபுத்திரர்கள்
D) கோண்டு
14. “அயின்-இ-அக்பரி” என்ற நூலை எழுதியவர் யார்?
A) அக்பர்
B) அல்பரூணி
C) அபுல்பாசல்
D) தோடர்மால்
15. குப்தர் காலத்தில் கிழக்கு கடற்கரையில் உள்ள முக்கிய துறைமுகம் யாது?
A) புரோஜ்
B) ஜாபரா
C) தாமிரலிப்தி
D) கல்யாண்
16. நீர்நிலைச் சூழலில் வெப்பமாக ஏற்படுத்தும் பாதிப்புகளில் முதன்மையானதாக அறியப்படுவது?
A) நீரில் ஆக்ஸிஜன் அளவு குறைதல்
B) நீரின் நச்சு அதிகரித்தல்
C) பயன்பாட்டுக்கு உகந்ததற்றதாக மாற்றுதல்
D) ஆவியாதலை துரிதப்படுத்தல்
17. பாதிக்கப்பட்டவர்களின் தேவைகள் மற்றும் ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்படுவதையும் துன்பங்கள் குறைக்கப்படுவதையும் உறுதிசெய்ய எடுக்கப்படும் நடவடிக்கைகள்
A) அவசர கால பதில் நடவடிக்கை
B) பதில் மற்றும் மீட்பு நடவடிக்கை
C) ஆயத்த நடவடிக்கைகள்
D) பேரிடர் மேலாண்மை
18. வண்டல் மண்ணை பொறுத்தவரை பின்வரும் எந்த கூற்று தவறானது?
A) மழைக் காலங்களில் அடிக்கடி வெள்ளத்தால் மூழ்கும்
B) குறைந்த நைட்ரஜன் மற்றும் கால்சியம் கார்பனேட்டின் மாறுபட்ட சதவீதம்
C) மண்ணின் நிறம் வெளிர் சாம்பல் முதல் அடர் சாம்பல் வரை மாறுபடும்
D) மட்கிய, பாஸ்போரிக் அமிலம், சுண்ணாம்பு மற்றும் கரிமப் பொருட்கள் நிறைந்தவை
19. ஜம்மு மற்றும் காஷ்மீரின் முதல் தொழில்நுட்ப (Smart) பழங்குடி கிராமம் கீழ்காண்பவையில் எது?
A) ஸ்ரீநகர்
B) பராமுலா
C) ஹப்பி
D) ரஜவ்ரி
20. உலகின் மிக உயர்ந்த செயல்படும் எரிமலை காணப்படும் நாடு
A) ஜப்பான்
B) இத்தாலி
C) ஈக்வடார்
D) கென்யா
21. பின்வரும் கூற்றுகளை கருத்தில் கொள்க.
1. வினோத் குமார் சுக்லா மாத்ரு பூமி வருட சிறந்த புத்தக விருதை முதன் முதலில் பெற்றவர் ஆவார்
2. அவர் ஒரு மலையாள கவிதையாளர் மற்றும் நாவலாசிரியர்
3. நீலம் நீலமாக இருக்கிறது என்ற நூலை மொழி பெயர்த்தவர்
4. இவர் 1999-இல் சாகித்ய அகாடமி விருதை பெற்றவர்
மேலே கண்டவற்றுள் சரியானவை எவை?
A) 1, 2 மற்றும் 3 சரி
B) 1, 3 மற்றும் 4 சரி
C) 2, 3 மற்றும் 4 சரி
D) 1, 2 மற்றும் 4 சரி
22. விலங்குகளின் உள்நிலையை சீராக வைத்திருப்பதற்கு ______ என்று அழைக்கப்படுகிறது.
A) மெட்டாபாலிசம்
B) ஹிமோஸ்டாடிஸிஸ்
C) ஹைப்போஸ்டாடிஸிஸ்
D) எபிஸ்டாடிஸிஸ்
23. இதயத்தை சுற்றியுள்ள இழையுறை எது?
A) மையோகார்டியம்
B) எண்டோகார்டியம்
C) பெரிக்கார்டியம்
D) அரிக்குலோகார்டியம்
24. சூரியனின் வெப்பத்தால் மலைகளில் படிந்திருக்கும் பனி ஒரே நேரத்தில் உருகாமல் இருப்பதற்கான காரணம்
A) அதன் குறைவான வெப்ப ஏற்பு திறன்
B) அதன் அதிகமான உருகலின் மறை வெப்பம்
C) அது மிகவும் கடினமாக இருப்பதால்
D) அது சூரியனிலிருந்து வரும் வெப்பத்தை அதிக அளவு பிரிதி பலிப்பதால்
25. சுய மரியாதை இயக்கம் கீழ்க்கண்டவற்றுள் எதை பின்பற்றியது?
(i) மேல்தட்டு மக்களை எதிர்க்க வன்முறையான போராட்டங்கள்
(ii) பிராமண அர்ச்சகர்களின்றி திருமணங்களை நடத்தி அவர்களுடைய நிலையை குறைத்தது
(iii) கோவில்கள் மற்றும் பிராமணர்கள் வசிக்கும் இடங்களை புறக்கணித்தல்
A) (i) மற்றும் (iii)
B) (ii) மட்டும்
C) (iii) மட்டும்
D) மேற்கண்ட அனைத்தும்
26. _________ நினைவுப் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் தமிழக அரசால் ஆரம்பிக்கப்பட்டது.
A) Dr. முத்துலட்சுமி ரெட்டி நினைவு
B) ராணி மெய்யம்மை நினைவு
C) சிவகாமி அம்மையார் நினைவு
D) ராமாமிர்தம் அம்மையார் நினைவு
27. தமிழ்நாட்டில் இரும்புத் தாதுக்கள் அதிகம் நிறைந்த சரியான மாவட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
A) அரியலூர்
B) மதுரை
C) சேலம்
D) கள்ளக்குறிச்சி
28. பட்டியல் சாதியினர் நிதி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், பட்டியல் சாதியினர் குடும்பங்களின் _____ மேம்பாட்டிற்கென இயங்குகிறது.
A) அரசியல்
B) சமூக
C) கல்வி
D) பொருளாதார
29. கருவுற்ற ஏழை தாய்மார்களுக்கு ஊட்ட உணவு மற்றும் உதவி திட்டம்
A) டாக்டர். முத்துலெட்சுமி மகப்பேறு உதவித் திட்டம்
B) மூவலூர் இராமமிர்தம் மகப்பேறு உதவித் திட்டம்
C) அஞ்சுகம் அம்மையார் மகப்பேறு உதவித் திட்டம்
D) அன்னை சத்யா மகப்பேறு உதவித் திட்டம்
30. பொருத்துக
சமூக சீர்திருத்தம் – சீர்திருத்தவாதிகள்
a) உடன்கட்டை முறை ஒழிப்பு – 1. ஈஸ்வர்சந்திர வித்யாசாகர்
b) தலித் மக்களுக்கான ஆலய பிரவேசம் – 2. தந்தை பெரியார்
c) விதவை மறுமண சட்டம் – 3. ராஜராம் மோகன் ராய்
d) தீண்டாமைக்கெதிரான சுயமரியாதை இயக்கம் – 4. அம்பேத்கர்
a) b) c) d)
A) 3 4 1 2
B) 4 3 2 1
C) 1 3 4 2
D) 3 2 4 1
31. நீதி கட்சியின் முதல் மாநாடு நடைபெற்ற இடம்
A) கோயம்புத்தூர்
B) சேலம்
C) திருச்சி
D) மதுரை
32. அயோத்திதாசரால் தோற்றுவிக்கப்பட்டது எது?
A) சத்யசோதக் சமாஜ்
B) சமரச வேத சன்மார்க்க சங்கம்
C) அத்வைதானந்த சபா
D) அய்யாவழி
33. வாஞ்சிநாதனைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடுக்க.
(i) அவர் அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்தவர்
(ii) அவர் புனலூரில் வனபாதுகாப்பாளராக பணியாற்றினார்
(iii) பாரத மாதா சங்கத்தின் உறுப்பினர்
(iv) பாண்டிச்சேரியில் சுப்பிரமணிய சிவாவால் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றவர்
A) (i), (iii) மற்றும் (iv) சரி
B) (i), (ii) மற்றும் (iii) சரி
C) (i), (ii), (iii) மற்றும் (iv) சரி
D) (ii), (iii) மற்றும் (iv) சரி
34. ‘வெஃகாமை’ என்ற அதிகாரத் தலைப்பின் பொருள்
A) வெட்கம் கொள்ளாமை
B) பிறரை இகழாமை
C) பிறரிடம் இரந்து வாழாமை
D) பிறர் பொருள்மேல் ஆசை கொள்ளாமை
35. ‘தந்தை மகற்கு ஆற்றும் நன்றி’ – எனும் திருக்குறளில் தந்தை மகனுக்குச் செய்யும் கடனாகக் குறிப்பிடப்படுவது
A) பொருள் சேர்த்து வைத்தல்
B) வீரனாக உருவாக்குதல்
C) கற்றவர் சபையில் முந்தி இருக்கச் செய்தல்
D) தானம் செய்தல்
36. சென்சஸ் 2011 இன்படி தமிழ் நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி
A) 550 / ச. கிமீ
B) 555 / ச. கிமீ
C) 560 / ச. கிமீ
D) 565 / ச. கிமீ
37. சங்ககால மக்களின் மணமுறைகளைக் குறிப்பிடும் நூல் எது?
A) புறநானூறு
B) நற்றிணை
C) அகநானூறு
D) குறுந்தொகை
38. மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட முத்திரைகள் எதனால் செய்யப்படவில்லை?
A) தந்தம்
B) சங்கு
C) சித்திர வேலைப்பாடு செய்யப்பட்ட மட்கலன்
D) சவர்க்காரம்
39. அலகாபாத்திலிருந்து இந்தியன் பிரஸ்ஸால் வெளிவந்த ஆங்கில மாத இதழான “இந்துஸ்தான் ரிவிவ்”-வின் ஆசிரியராக இருந்தவர்
A) சச்சிதானந்த சின்கோ
B) டி. எம். நாயர்
C) சுரேந்திரநாத் பானர்ஜி
D) ஹென்றி விவியன் டேரோசியோ
40. நிரந்தர நிலவரியை ஆதரித்தும் மற்றும் அரசினால் விதிக்கப்படும் அதிகப்படியான வரியை ஒவ்வொரு தனி நபரே கட்டவேண்டுமென கூறியது யார்?
A) காரன்வாலிஸ் பிரபு
B) இராஜா ராம் மோகன்ராய்
C) மன்ரோ பிரபு
D) தாதாபாய் நௌரோஜி
41. கூற்று (A) : நீதிக்கட்சி பிராமணரல்லாதோருக்கான வாரி பிரிதிநிதித்துவத்தை வேண்டியது.
காரணம் (R) : பெரியாரின் வேண்டுதலை வகுப்புவாத பிரதிநிதித்துவம் காங்கிரஸால் நிராகரிக்கப்பட்ட காரணத்தால் பெரியார் காங்கிரஸிலிருந்து விலகினார்.
A) (A) மற்றும் (R) இரண்டும் சரி (R) என்பது (A)க்கான சரியான விளக்கமாகும்
B) (A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (R) என்பது (A)க்கான சரியான விளக்கமல்ல
C) (A) சரி ஆனால் (R) தவறு
D) (A) தவறு ஆனால் (R) சரி
42. வளர்ச்சிக்கு வழிகாட்டும் நிதி நிறுவனங்களின் கீழ் வருவன
1. IFCI
2. ICICI
3. IDBI
4. UTI
சரியான விடையை தேர்ந்தெடுக்க
A) 1 மற்றும் 2
B) 3 மற்றும் 4
C) 1 மற்றும் 3
D) 1, 2, 3 மற்றும் 4
43. மத்திய மற்றும் மாநில உறவுகளை சீர்திருத்த, முக்கியமான பரிந்துரைகளை வழங்குபவை
(i) சர்க்காரியா குழு
(ii) பஞ்சி குழு
(iii) ராஜமன்னார் குழு
(iv) ராயல் குழு
குறியீடுகளை உபயோகித்து சரியான விடையை தேர்ந்தெடுக்க
A) (i) மற்றும் (ii)
B) (ii), (iii) மற்றும் (iv)
C) (i), (iii) மற்றும் (iv)
D) (i), (ii) மற்றும் (iii)
44. முதல் ஐந்தாண்டு திட்டம் எந்த திட்ட மாதிரியை அடிப்படையாக கொண்டது
A) மெகலாநோபிஸ் மாதிரி
B) கரிபி ஹட்டோ மாதிரி
C) நேருவின் மாதிரி
D) ஹாராட்-டோமார் மாதிரி
45. கீழ்கண்டவற்றுள் எது லோக்பால் அமைப்பை பரிந்துரைத்தது?
A) முதல் நிர்வாக சீர்திருத்த ஆணையம்
B) இரண்டாவது நிர்வாக சீர்திருத்த ஆணையம்
C) வீரப்ப மொய்லி குழு
D) சிங்வி குழு
46. ராஜஸ்தானில் பஞ்சாயத்து ராஜ் நிறுவிய முதல் மாவட்டம்
A) கோடா
B) ஜலாவார்
C) மாதோபூர்
D) நாகவர்
47. ஒரு கட்சி ‘தேசிய கட்சி’ என்ற அங்கீகாரத்தை பெற கீழ்கண்ட எந்த அளவுகோல்களின்படி இருக்க வேண்டும்?
(i) ஏதேனும் 4 மாநிலங்களில் 6% வாக்குகளை பெற்றிருத்தல்
(ii) மக்களவைக்கான தேர்தலில் 2% உறுப்பினர்களை ஏதேனும் 3 மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்
(iii) ஏதேனும் 4 மாநிலங்களில் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை பெற்றிருத்தல்
(iv) ஏதேனும் மூன்று மாநிலங்களில் 8% வாக்குகளை பெற்றிருத்தல்
A) (i), (ii) மற்றும் (iii) இவற்றில் ஏதேனும் ஒன்று அவசியம்
B) (iii) மற்றும் (iv) இவற்றில் ஏதேனும் ஒன்று அவசியம்
C) (ii), (iii) மற்றும் (iv) இவற்றில் ஏதேனும் ஒன்று அவசியம்
D) (i), (iii) மற்றும் (iv) இவற்றில் ஏதேனும் ஒன்று அவசியம்
48. அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்கள் மாற்ற இயலாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது கீழ்வரும் எந்த வழக்கின்படி?
A) சங்கரி பிரசாத் டியோ (Vs) இந்திய அரசு
B) சஜ்ஜன் சிங் (Vs) ராஜஸ்தான் மாநிலம்
C) ரகுவீர் சிங் (Vs) இந்திய அரசு
D) மினர்வா மில்ஸ் (Vs) இந்திய அரசு
49. இந்திய அரசியல் சாசனத்தின் முதல் விதி இந்தியாவை
A) ஐக்கிய மாநிலங்கள் என்றழைக்கின்றது
B) ஒன்றிய மாநிலங்கள் என்றழைக்கின்றது
C) கூட்டாட்சி மாநிலங்கள்
D) அனைத்தும் சரியே
50. சூஃபிஸம் ______ மதத்திலிருந்து தோன்றி வளர்ந்தது.
A) கிறிஸ்துவம்
B) இந்து
C) இஸ்லாம்
D) ஜொராஸ்டிரியானிசம்
51. விஜய நகர பேரரசுக்கு விஜயம் செய்த நிக்கோலா காண்டி என்பவர் ஒரு
A) இத்தாலி பயணி
B) பாரசீக பயணி
C) போர்த்துகீசிய பயணி
D) சீன பயணி
52. 1863ம் ஆண்டு யாரால் பழைய கற்கால கருவிகள் முதலில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது?
A) லி மெசிரி
B) ராபர்ட் புரூஸ்
C) மைல்ஸ் பர்கிட்
D) சுப்பா ராவ்
53. சிந்து சமவெளி மக்களின் எழுத்து முறை
A) பிராமி எழுத்து
B) வட்டெழுத்து
C) கிரந்த எழுத்து
D) சித்திர எழுத்து
54. கீழ்கண்டவற்றை பொருத்துக :
பழங்குடியினர் – மாநிலம்
a) பஞ்சாரால் – 1. பீகார்
b) கோரஸ் – 2. இராஜஸ்தான்
c) பதர் – 3. மத்தியப் பிரதேஷ்
d) ரபரி – 4. குஜராத்
a) b) c) d)
A) 1 3 4 2
B) 2 4 3 1
C) 3 1 4 2
D) 3 1 2 4
55. கீழ்கண்டவற்றை பொருத்துக :
மலை – உயரம்
a) சிவாலிக்குன்று – 1. 1220 மீ குறைவாக
b) இமயமலை (அல்லது) ஹிமாத்ரி – 2. 6100 மீ சராசரியாக
c) கிழக்கு உயர் நிலங்கள்(பர்வாச்சல்) – 3. 4578 மீ உயரமானப் பகுதி
d) நீல மலை – 4. 2157மீ
a) b) c) d)
A) 2 1 4 3
B) 1 3 2 4
C) 2 3 4 1
D) 4 2 3 1
56. தமிழக அரசின் கீழ்கண்ட திட்டத்தின் மூலம் விதவை மறுமணம் மற்றும் மறுவாழ்வை மேம்படுத்தும் திட்டத்தை அடையாளம் காண்க
A) சத்தியவாணி முத்து நினைவுத் திட்டம்
B) தர்மாம்பாள் நினைவுத் திட்டம்
C) ஈ. வே. ரா. மணியம்மையார் நினைவுத் திட்டம்
D) மூவளூர் இராமமிர்தம் அம்மாள் நினைவுத் திட்டம்
57. அரசியலில் பிளவுவாதம் என்பது ஒரு கீழ்வரும் குறைபாடாகும்
A) கட்சி முறை
B) தேர்தல் போட்டி
C) ஜனநாயகம்
D) கூட்டணி அரசியல்
58. இந்தியாவில் அதிக பழுப்பு நிலக்கரி படிவுகள் உள்ள மாநிலம்
A) ஜார்க்கண்ட்
B) தமிழ்நாடு
C) ஆந்திரப் பிரதேசம்
D) மேற்கு வங்கம்
59. நமது தேசத்தின் புதிய கல்விக் கொள்கையில் (2020), 10 + 2 என்ற அமைப்பு ______ என மாற்றப்பட உள்ளது.
A) 5 + 4 + 3 + 3
B) 4 + 5 + 3 + 3
C) 5 + 3 + 3 + 4
D) 3 + 3 + 5 + 4
60. தாங்கல் கரைசல் எதற்காக பயன்படுகிறது?
A) pH மதிப்பை குறைக்க
B) pH மதிப்பை மாற்றுவதற்கு
C) pH மதிப்பை அதிகரிக்க
D) pH மதிப்பை மாறாமல் வைத்திருக்க
61. ரோமங்களை மாற்றுவதற்கு பயன்படும் லேசர்
A) லேசர்
B) Nd : YAG லேசர்
C) ரூபி லேசர்
D) டையோடு லேசர்
62. மனித அனுபவங்கள் கடந்த, நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் கற்றல் திறனைப் பாதிக்கிறது என்று கூறியவர்?
A) பாவ்லோ
B) ஜான் டூயி
C) எம். கே. காந்தி
D) சுவாமி விவேகானந்தா
63. அறிவியல் அறிவு உள்ளெடுக்கப்பட பயன்படுவது
A) தர்க்க திறன்
B) பரிசோதனை திறன்
C) சிக்கல் தீர்க்கும் திறன்
D) தர்க்க மற்றும் பரிசோதனை திறன்
64. 2019-ம் ஆண்டில் தமிழ் நாட்டில் உருவாக்கப்பட்ட புதிய 5- மாவட்டங்கள்
A) திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி
B) திருவாரூர், தென்காசி, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு
C) திருவாரூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, தென்காசி
D) அரியலூர், ராணிப்பேட்டை, தென்காசி, திருப்பத்தூர், செங்கல்பட்டு
65. உறுதிபடக் கூறல் (உ) : ஒரு மாநிலத்தின் சுகாதார நிலை என்பது அதன் பயனுள்ள,
திறமையான சுகாதார பராமரிப்பு உள்கட்டமைப்பைச் சார்ந்துள்ளது.
காரணம் (கா) : உலகம் முழுவதிலும் இருந்த மருத்துவச் சுற்றுலாவைத் தமிழ்நாடு ஈர்க்கிறது.
A) (உ), (கா) – இரண்டும் சரி, இத்துடன் (கா) என்பது (உ)-வின் சரியான விளக்கம்
B) (உ), (கா) – இரண்டும் சரி, இத்துடன் (கா) என்பது (உ)-வின் சரியான விளக்கம் அல்ல
C) (உ) – சரி, ஆனால் (கா) தவறு
D) (உ) தவறு ஆனால் (கா) சரி
66. 1926, சென்னை மாகாணத்தின் முதல் பெண் சட்ட சபை உறுப்பினர் யார்?
A) டாக்டர். முத்துலட்சுமி
B) இராமாமிர்தம் அம்மையார்
C) டாக்டர். சுப்புலட்சுமி
D) டாக்டர். அன்னி பெசன்ட் அம்மையார்
67. தமிழக அரசால் வழங்கப்படும் கலப்புத் திருமண உதவித் திட்டம், யாரின் பெயரால் வழங்கப்படுகிறது?
A) டாக்டர். முத்துலட்சுமி
B) மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
C) அன்னை தெரசா
D) டாக்டர். தர்மாம்பாள் அம்மையார்
68. தமிழ்நாட்டில் எந்த மாவட்டம் அதிக HDI கொண்டுள்ளது?
A) தேனி மாவட்டம்
B) கன்னியாகுமரி
C) அரியலூர்
D) சென்னை
69. 1947, ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது சென்னை மாகாணத்தில் (தமிழ்நாடு) முதலமைச்சராக இருந்தவர்
A) தங்குதூரி பிரகாசம்
B) O. P. ராமசாமி
C) C. ராஜகோபாலாச்சாரி
D) P. S. குமாரசாமி ராஜா
70. கீழ்கண்டவற்றில் வேலு நாச்சியார் குறித்த சரியான கூற்று எது?
(i) தாண்டவராயன் பிள்ளை தளவாய் மற்றும் பிரதானியாக வேலு நாச்சியாரிடம் பணிபுரிந்தார்
(ii) வேலுநாச்சியார் கணவர் முத்து வடுக உடைய தேவரை பிரிட்டிஷ் படை காளையார் கோவில் போரில் கொன்றது.
(iii) பெரிய மருது வேலு நாச்சியாருக்கு படைத் தலைவராக இருந்தார்
(iv) மருது சகோதரர்கள் திருச்சி பிரகடனத்தை வெளியிட்டனர்
A) (i) சரி (ii), (iii), (iv) தவறானது
B) (i), (ii) சரி (iii) மற்றும் (iv) தவறானது
C) (i), (ii), (iii) சரி (iv) மட்டும் தவறானது
D) (i), (ii), (iii), (iv) சரியானது
71. இடும்பைக்கு இடும்பைப் படுப்பர் – யார்?
A) துன்பத்திற்குத் துன்பம் தருபவர்
B) துன்பம் கண்டு துவள்பவர்
C) துன்பம் கண்டு விலகுபவர்
D) துன்பம் கண்டு சிரிப்பவர்
72. சுக்கிரநீதி, மனுநூல் முதலியவற்றின் வழி நூல் திருக்குறள் என்பாரின் கூற்றை மறுத்து திருக்குறள் முதல் நூலே என்றவர்
A) நக்கீரனார்
B) ஔவையார்
C) மணக்குவர்
D) பரிமேலழகர்
73. பின்வரும் காரணங்களுக்காக பிற்கால சோழர்களால் விரிவான நில அளவை மேற்கொள்ளப்பட்டது
(i) விவசாய நிலங்களை அளப்பதற்காக
(ii) பல்வேறு படிநிலைகளில் நிலத்தை வகைப்படுத்த
(iii) நில உரிமைகளில் மோசடிகளைத் தவிப்பதற்காக
(iv) வணிகக் குழுக்களை ஆதரிப்பதற்காக
மேற்கூறியவற்றில் எவை சரியானவை?
A) (i), (ii) மற்றும் (iii) சரி
B) (i) மற்றும் (iii) சரி
C) (ii) மற்றும் (iii) சரி
D) (i), (ii), (iii) மற்றும் (iv) சரி
74. சிறந்த பெண் எழுத்தாளர் பெயரினை மட்டும் சுட்டுக
A) சுரதா
B) சுஜாதா
C) மௌனி
D) அம்பை
75. ‘செல்வம் சகடக் கால்போல் வரும்’ – என்று கூறும் நூல்?
A) திருக்குறள்
B) நாலடியார்
C) நான்மணிக்கடிகை
D) ஆசாரக்கோவை