Tnpsc

Tnpsc Model Test 68 – General Tamil

Tnpsc Model Question Paper 68 – General Tamil

Congratulations - you have completed Tnpsc Model Question Paper 68 – General Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  1. Forest Conservator - இச்சொல்லுக்கு இணையான தமிழ்க் கலைச்சொல் தேர்க:
A
(அ) வனவியல் ஆராய்ச்சியாளர்  
B
(ஆ) வனவியல் நிபுணர்
C
(இ) வனத்துறை அலுவலர்
D
(ஈ) வனப் பாதுகாவலர்
Question 2
  1. TRANSLATION - என்பதற்கு இணையான கலைச்சொல் தருக:
A
(அ) மொழிபெயர்ப்பு  
B
(ஆ) சீர்திருத்தம்
C
(இ) விழிப்புணர்வு 
D
(ஈ) கதைப்பாடல்
Question 3
  1. பாரதியின் பாடல்கள் உள்ளங்கை நெல்லிக் கனிப் போல அனைவருக்கும் விளங்கும் - உவமையின் பொருளை எழுதுக:
A
(அ) ஒற்றுமையின்மை
B
(ஆ) வெளிப்படைத்தன்மை
C
(இ) தடையின்றி மிகுதியாக
D
(ஈ) எளிதில் மனத்தில் பதிதல்
Question 4
  1. உவமையின் பொருளறிந்து சரியான தொடரை எழுதுக:
உடலும் உயிரும் போல ________
A
(அ) எளிதில் மனதில் பதிதல்
B
(ஆ) இணைபிரியாமை
C
(இ) பயனற்ற நிகழ்வு  
D
(ஈ) எதிர்பாராத நிகழ்வு
Question 5
  1. 'நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல' என்ற உவமைக்கு ஏற்ற பொருள் தருக:
A
(அ) வேற்றுமையில் ஒற்றுமை
B
(ஆ) வெளிப்படைத்தன்மை
C
(இ) ஒற்றுமையின்மை  
D
(ஈ) எதிர்பாரா நிகழ்வு
Question 6
  1. மடைதிறந்த வெள்ளம் போல் - உவமையின் பொருளை எழுதுக:
A
(அ) தற்செயல் நிகழ்வு
B
(ஆ) தடையின்றி மிகுதியாக
C
(இ) எதிர்பாரா நிகழ்வு
D
(ஈ) பயனற்ற செயல்
Question 7
  1. இரு வினைகளின் பொருள் வேறுபாடு அறிந்து சரியான தொடரை தெரிவு செய்க:
பணிந்து, பணித்து _________
A
(அ) கயல்விழி பணித்ததால், பணிந்து படித்தாள்
B
(ஆ) ஆசிரியர் பணிந்து கூறினார், கயல்விழி பணித்து படித்தாள்
C
(இ) கயல்விழி பணித்து படித்ததால் ஆசிரியர் பணிந்தார்
D
(ஈ) ஆசிரியர் பணித்ததால் கயல்விழி பணிந்து படித்தாள்
Question 8
8 சரியான தொடர்களைத் தேர்க: பணிந்து - பணித்து
  1. தலைவர் பணித்த வேலையைத் தொண்டன் பணிந்து செய்தாள்
  2. தலைவர் பணிந்த வேலையைத் தொண்டன் பணித்து செய்தான்
  3. தலைவர் பணித்ததால் தொண்டன் பணிந்தான்
  4. தலைவர் பணிந்ததால் தொண்டன் பணித்தான்
A
(அ) 1 மற்றும் 3 சரி     
B
(ஆ) 2 மற்றும் 4 சரி 
C
(இ) 1 மற்றும் 2 சரி    
D
(ஈ) 2 மற்றும் 3 சரி
Question 9
  1. சொற்கள் ஒழுங்கான வரிசையில் அமைந்த தொடரினைக் கண்டறிக:
A
(அ) ஒத்த அனைவரும் இயல்புடையவர்களே பிறப்பால் மக்கள்
B
(ஆ) பிறப்பால் மக்கள் அனைவரும் ஒத்த இயல்புடையவர்களே
C
(இ) மக்கள் அனைவரும் இயல்புடையவர்களே பிறப்பால் ஒத்த
D
(ஈ) அனைவரும் பிறப்பால் ஒத்த இயல்புடையவர்களே மக்கள்
Question 10
  1. அகர வரிசைப்படுத்தி எழுதப்பட்ட தொடரை தெரிவு செய்க:
பெண்கள், பாரதம், புதுமை, பீலி, பேருந்து, பூமி, பழங்கள், பையன்
A
(அ) பழங்கள், பாரதம் பீலி, புதுமை, பூமி, பெண்கள், பேருந்து, பையன்
B
(ஆ) பழங்கள், பாரதம், புதுமை, பூமி, பீலி, பெண்கள், பேருந்து, பையன்
C
(இ) பழங்கள், பாரதம், பீலி, புதுமை, பூமி, பையன், பெண்கள், பேருந்து
D
(ஈ) பழங்கள், பாரதம், புதுமை, பூமி, பெண்கள், பீலி, பேருந்து, பையன்
Question 11
  1. சொற்களை அகர வரிசைப்படி சீர் செய்க:
கோலம், குருவி, கேணி, கடல்
A
(அ) குருவி, கடல், கோலம், கேணி
B
(ஆ) கடல், கோலம், குருவி, கேணி
C
(இ) கடல், குருவி, கேணி, கோலம்
D
 (ஈ) கோலம், கடல், குருவி, கேணி
Question 12
  1. "கொடு" என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் அறிக:
A
(அ) கொடுத்து  
B
(ஆ) கொடுத்தது
C
(இ) கொடுத்தோர்   
D
(ஈ) கொடுத்தல்
Question 13
  1. வேர்ச்சொல்லைக் கொடுத்து வினைமுற்றை அறிதல்:
பேசு __________
A
(அ) பேசிய 
B
(ஆ) பேசினான்  
C
(இ) பேசுதல் 
D
(ஈ) பேசி
Question 14
  1. "காண்" என்னும் வேர்ச்சொல்லின் பதம் அறிக:
A
(அ) உண்டேன்
B
(ஆ) கண்டேன்
C
(இ) பார்ப்பேன்   
D
(ஈ) கற்பேன்
Question 15
  1. ஒலி வேறுபாடறிந்து பொருள் தருக:
விரை - விறை
A
(அ) விதை-வினை
B
(ஆ) விதை-மரத்தல்
C
(இ) மறத்தல்-மரத்தல்  
D
(ஈ) வித்து-மறத்தல்
Question 16
  1. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான இணையைத் தெரிவு செய்க:
விளை-விழை
A
(அ) மதிப்பு-உண்டாக்குதல் 
B
(ஆ) விரும்பு-மதிப்பு
C
(இ) உண்டாக்குதல்-விரும்பு  
D
(ஈ) விருப்பு-இருப்பு
Question 17
  1. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான சொற்றொடரைத் தெரிவு செய்க:
A
(அ) மணிமேகலை மணி பள்ளவத் தீவிற்குச் சென்றால்
B
(ஆ) மணிமேகலை மணி பல்லவத் தீவிற்குச் சென்றாள்
C
(இ) மணி மேகளை மணி பள்ளவத் தீவிற்குச் சென்றாள்
D
(ஈ) மணிமேகலை மனி பல்லவத் தீவிற்குச் சென்றாள்
Question 18
  1. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் சொல்லறிதல்:
Nautical Mile
A
(அ) கடல்மைல்  
B
(ஆ) தரைமைல்
C
(இ) ஏவுகணை
D
(ஈ) வானத்துக் கோள்கள்
Question 19
  1. ஆங்கிலச் சொல்லுக்குரிய தமிழ்ச்சொல்லை எழுதுக:
க்ராப் (crop)
A
(அ) உலவி
B
(ஆ) ஏவி 
C
(இ) உறை   
D
(ஈ) செதுக்கி
Question 20
  1. எதிர்ச்சொல்லை எடுத்து எழுதுக:
உதித்த என்ற சொல்லின் எதிர்ச்சொல்
A
(அ) நிறைந்த    
B
(ஆ) தோன்றிய
C
(இ) மறைந்த
D
(ஈ) குறைந்த
Question 21
  1. உருவகத் தொடருக்குப் பொருந்தாத சொல்லைத் தேர்க:
A
(அ) முகமதி
B
(ஆ) முகமலர்
C
(இ) முகமன் 
D
(ஈ) முகத்தாமரை
Question 22
பொருந்திய இணைகளைத் தேர்க:
  1. படூஉம்-இன்னிசை அளபெடை
  2. தழீஇ-சொல்லிசை அளபெடை
  3. வாழ்ழ்க்கை-ஒற்றளபெடை
  4. தரூஉம்-செய்யுளிசையளபெடை
A
(அ) 1, 4 
B
(ஆ) 2, 3 
C
(இ) 2, 4    
D
(ஈ) 1, 3
Question 23
  1. சரியான எதிர்ச்சொல் அமைந்த விடையைக் கண்டறிக:
A
(அ) இரவலர்-புரவலர்
B
(ஆ) எளிது-ஏற்றல்  
C
(இ) ஈதல்-உறவினர்  
D
(ஈ) அந்நியர்-அரிது
Question 24
  1. சேர்த்து எழுதுக:
ஆத்தி + சூடி
A
(அ) ஆத்திச்சூடி
B
(ஆ) ஆத்திசூடி 
C
(இ) ஆத்திசுவடி    
D
(ஈ) ஆத்துசூடி
Question 25
  1. கொடுக்கப்பட்டுள்ள சொல்லின் சரியான கூட்டுப்பெயரை தெரிவு செய்க:
ஆடு
A
(அ) ஆடு கூட்டம்
B
(ஆ) ஆட்டு மந்தை  
C
(இ) ஆடு குவியல்  
D
(ஈ) ஆடு சாரை
Question 26
  1. எதிர் + ஒலிக்க என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
A
(அ) எதிரலிக்க    
B
(ஆ) எதிர்ஒலிக்க     
C
(இ) எதிரொலிக்க  
D
(ஈ) எதிர்ரொலிக்க
Question 27
  1. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க:
மக்கள் கரந்தைப் பூவை சூடிச் செல்வது
A
(அ) பகைவர் நாட்டை கைப்பற்றுதல்
B
(ஆ) ஆநிரைகளை மீட்டல்
C
(இ) ஆநிரைகளை கவர்தல்    
D
(ஈ) பகைவரை எதிர்த்து போரிடல்
Question 28
  1. கூற்று, காரணம் - சரியா? தவறா?
கூற்று: பந்து உருண்டது இது தன்வினை காரணம்: எழுவாய் ஒரு வினையைச் செய்தால் அது தன்வினை எனப்படும்.
A
(அ) கூற்று : சரி, காரணம் : சரி 
B
(ஆ) கூற்று : தவறு, காரணம் : தவறு
C
(இ) கூற்று : சரி, காரணம் : தவறு
D
(ஈ) கூற்று : தவறு, காரணம் : சரி
Question 29
  1. கூற்று : 'என் அம்மை வந்தாள்" என்று மாட்டைப் பார்த்து கூறுவது திணைவழுவமைதி
காரணம் : உவப்பின் காரணமாக அஃறிணை, உயர்திணையாகக் கொள்ளப்பட்டது
A
(அ) கூற்றும் காரணமும் தவறு
B
(ஆ) கூற்று சரி காரணம் தவறு
C
(இ) கூற்றும் காரணமும் சரி   
D
(ஈ) கூற்று தவறு காரணம் சரி
Question 30
  1. கூற்றும் காரணமும் பொருந்தி வருகிறதா எனக் கண்டறிக:
கூற்று: தமிழ் மருத்துவத்தில் பக்க விளைவுகள் இல்லை காரணம்: மருந்து என்பதே உணவின் நீட்சியாக இருக்கிறது
A
(அ) கூற்று சரி ; காரணம் பொருந்தவில்லை
B
(ஆ) காரணம் சரி ; காரணத்திற்கேற்ற கூற்று இல்லை
C
(இ) கூற்றும் காரணமும் பொருந்துகிறது
D
(ஈ) கூற்றும் காரணமும் பொருந்தவில்லை
Question 31

கீழ்க்கண்ட பத்தியைப் படித்து வினாவிற்குரிய சரியான விடையைத் தேர்ந்தெடு:

ஆயிரம் யானைகளைப் போரில் வென்ற அரசனுக்காகப் பாடப்படும் இலக்கியவகை பரணி. "ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது பரணி" என்பது பரணியின் இலக்கணம். இவ்விலக்கியம் தொண்ணூற்றாறு சிற்றிலக்கிய வகைகள் ஒன்று. அரசர்கள் இருவருக்கிடையேயான போரில் தோற்ற அரசனது நாட்டின் பெயரால் பரணி பாடப்படும். போருக்குரிய தெய்வமாகக் காளியைக் கருதுவர். புரணி இலக்கியங்களுள் மிகச் சிறந்தது கலிங்கத்துப்பரணி. போரில் குலோத்துங்க மன்னனிடம் கலிங்க நாட்டு மன்னன் தோற்றுப் போனான். அதனால் கலிங்கத்துப்பரணி எனப் பெயர் சூட்டப்பட்டது. இந்நூல் சயங்கொண்டாரால் பாடப்பட்டது

  1. ஆயிரம் யானைகளைப் போரில் வென்ற அரசனுக்காகப் பாடப்படும் இலக்கிய வகை எது?
A
(அ) பள்ளு
B
(ஆ) பரணி  
C
(இ) பரிபாடல்   
D
(ஈ) பத்துப்பாட்டு
Question 32
  1. போருக்குரிய தெய்வமாகக் கருதுவர்
A
(அ) முருகன்
B
(ஆ) திருமால் 
C
(இ) கண்ணன்
D
(ஈ) காளி
Question 33
  1. "அமர்" என்பதன் பொருள் என்ன?
A
(அ) யானை  
B
(ஆ) போர்
C
(இ) வெற்றி
D
(ஈ) பரணி
Question 34
  1. தொண்ணூற்றாறு - பிரிக்கும் முறை __________
A
(அ) தொண்ணூறு + ஆறு
B
 (ஆ) தொண் + ஆறு
C
(இ) தொள்ளாயிரம் + ஆறு   
D
(ஈ) தொள் + ஆறு
Question 35
  1. பரணி இலக்கியம் யாரால் இயற்றப்பட்டது?
A
(அ) திருவள்ளுவர் 
B
(ஆ) இளங்கோவடிகள்  
C
(இ) பாரதியார் 
D
(ஈ) சயங்கொண்டார்
Question 36
  1. சொல் - பொருள் பொருத்துக:
அ. தூசு - 1. பவளம் ஆ, துகிர் - 2. பட்டு இ. வெறுக்கை - 3. விலை ஈ. நோடை - 4. செல்வம்
A
அ.       4        1         2        3
B
ஆ.      3        2        4        1
C
இ.       4        3        2        1
D
ஈ.      2       1        4       3
Question 37
  1. சொல் - பொருள் - பொருத்துக:
அ. நேமி - 1. நற்சொல் ஆ. தூஉய் - 2. தோள் இ. விரிச்சி - 3. சக்கரம் ஈ. சுவல் - 4. தூவி
A
அ.       2        4        3        1
B
ஆ.     3       4       1        2
C
இ.       4        2        1         3
D
ஈ.       3        1         2        4
Question 38
  1. பின்வரும் தொடரில் உள்ள பிழையைத் திருத்தி எழுதுக:
அது ஒரு இனிய பாடல்
A
(அ) ஒரு இனிய பாடல்
B
(ஆ) ஒரு இனிய பாடல் பாடப்படுகிறது
C
(இ) அஃது ஓர் இனிய பாடல்
D
(ஈ) ஓர் இனிய பாடல்
Question 39
  1. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க: (குடி)
A
(அ) தோசை_____ 
B
(ஆ) தண்ணீர் ___________ 
C
(இ) கடலை மிட்டாய் ________
D
(ஈ) சோறு __________
Question 40
  1. அடைப்புக்குள் கொடுக்கப்பட்டுள்ள சொல்லை ஏற்ற இடத்தில் நிரப்புக (மண்டா)
A
(அ) _______என்பது நடுத்திராவிட மொழி      
B
(ஆ) ______ என்பது வட திராவிட மொழி
C
(இ) _______என்பது தென் திராவிட மொழி 
D
(ஈ) __________என்பது சீன-திபெத்திய மொழி
Question 41
  1. பொருத்தமான இணைப்புச் சொல்லைத் தோந்தெடு:
தீயினால் சுடப்பட்டவர் கூட பிழைத்துக் கொள்ள முடியும். _______ பெரியவர்களுக்குத் தீங்கு செய்தவர் தப்ப முடியாது
A
(அ) எனவே
B
(ஆ) அதுபோல
C
(இ) அதனால் 
D
(ஈ) ஆனால்
Question 42
  1. சரியான இணைப்புச் சொல்லைத் தெரிவு செய்க:
"மலேயாவில் உள்ள தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது" என்று சர்ச்சில் கூறினார். _____________ நேதாஜி இந்தத் தமிழினம் தான் ஆங்கிலேயர்களை அழிக்கும் என்று பதில் கூறினார்.
A
(அ) ஆகவே  
B
(ஆ) அதனால்
C
(இ) அவ்வாறு  
D
(ஈ) அதற்கு
Question 43
  1. பொருத்தமான இணையைத் தேர்க:
 
A
(அ) அவன் வந்தான் - இறந்தகாலம்
B
(ஆ) அவள் வருகிறாள் - எதிர்காலம்
C
(இ) அது வந்தது நிகழ்காலம்
D
(ஈ) நீ வந்தாய் - எதிர்காலம்
Question 44
  1. அடைப்புக்குள் உள்ள சொல்லை நிகழ்காலமாக மாற்றுக:
(நடத்து)
A
(அ) ஆசிரியர் இப்போது பாடம் நடத்துகிறார்   
B
(ஆ) ஆசிரியர் நேற்று பாடம் நடத்துகிறார்
C
(இ) ஆசிரியர் நாளை பாடம் நடத்துகிறார்              
D
(ஈ) ஆசிரியர் நாளை பாடம் நடத்தினார்
Question 45
  1. பொருத்தமான சொல்லைச் சேர்த்து புதிய சொல் உருவாக்குக:
தேன்
A
(அ) மழை  
B
(ஆ) விளக்கு
C
(இ) மணி   
D
(ஈ) விலங்கு
Question 46
  1. பிழையான இணையைத் தேர்க:
A
(அ) நாகை - பட்டினம்
B
(ஆ) செங்கல் - புரம்
C
(இ) உதகை - மண்டலம்
D
(ஈ) பட்டு - கோட்டை
Question 47
  1. பேச்சு வழக்கிற்கு இணையான எழுத்து வழக்கைத் தேர்க:
எங்கருந்து வர்ரீங்க
A
(அ) எங்க இருந்து வருகிறீர்கள்  
B
(ஆ) எங்கேயிருந்து வர்ரீங்கள்
C
(இ) எங்க இருந்து வாரீர் 
D
(ஈ) எங்கிருந்து வருகிறீர்கள்
Question 48
  1. பொருத்தமான நூலினைத் தெரிவு செய்:
"மருந்தே ஆயினும் விருந்தொடு உண்" என்ற வரி இடம்பெற்ற நூல் எது?
A
(அ) குறந்தொகை  
B
(ஆ) கொன்றை வேந்தன்
C
(இ) புறநானூறு
D
(ஈ) தொல்காப்பியம்
Question 49
  1. மன்னார்குடியின் மரூஉ - கண்டறிக
A
(அ) மந்தை
B
(ஆ) மஞ்சை
C
(இ) மன்னார்
D
(ஈ) மன்னை
Question 50
  1. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்சசொற்களில் பொருந்தியது தேர்க:
A
(அ) பொக்கிஷம் - செல்வம்
B
(ஆ) சாஸ்தி - குறைவு
C
(இ) விஸ்தாரம் - குறுகிய பரப்பு 
D
(ஈ) சிங்காரம் - கோரம்
Question 51
  1. ‘RATIONAL’ என்ற சொல்லுக்கு இணையான கலைச்சொல் தருக:
A
(அ) சீர்திருத்தம்
B
(ஆ) பகுத்தறிவு
C
(இ) நேர்மை    
D
(ஈ) தத்துவம்
Question 52
  1. ‘Transform’ என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லைத் தேர்க:
A
(அ) உருமாற்றுதல்
B
(ஆ) தேர்தல்
C
(இ) செயல்படுத்துதல்  
D
(ஈ) படியெடுத்தல்
Question 53
  1. அலுவல் சார்ந்த கலைச்சொற்கள்:
தவறான இணையைத் தேர்ந்தெடுக்க:
A
(அ) Morpheme-உருபன்  
B
(ஆ) Treasury-கருவூலம்   
C
(இ) Combintion-புணர்ச்சி
D
(ஈ) Cave Temple-கற்கோவில்
Question 54
  1. சரியான விடை வகையைத் தேர்ந்தெடுத்தெழுதுக:
"நீ விளையாட வரவில்லையா?" என்ற வினாவிற்குக் "கால் வலிக்கும்" என்று விடை கூறுவது ______ விடை ஆகும்
A
(அ) ஏவல் விடை  
B
(ஆ) உறுவது கூறல் விடை
C
(இ) உற்றது உரைத்தல் விடை 
D
(ஈ) வினா எதிர் வினாதல் விடை
Question 55
  1. "கடைக்குப் போவாயா?" என்ற கேள்விக்குப் "போக மாட்டேன்" என மறுத்துக் கூறல் _________ விடை ஆகும்.
A
(அ) நேர் விடை    
B
(ஆ) ஏவல் விடை
C
(இ) மறை விடை
D
(ஈ) உறுவது கூறல் விடை
Question 56
  1. "உனக்குக் கதை எழுதத் தெரியுமா?" என்ற வினாவிற்கு "எனக்குக் கவிதை எழுதத் தெரியும்" என்று கூறுவது
A
(அ) நேர்விடை
B
(ஆ) வினா எதிர் வினாதல் விடை
C
(இ) இனமொழி விடை
D
(ஈ) உற்றது உரைத்தல் விடை
Question 57
  1. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக:
"அப்பா சொன்னார்"
A
(அ) கட்டளை வாக்கியம்     
B
(ஆ) பிறவினை
C
(இ) செய்வினை     
D
(ஈ) செயப்பாட்டு வினை
Question 58
  1. பின்வரும் தொடர்வகையை அறிந்து சரியான விடையை தேர்வு செய்க:
ஏன் அண்ணன் நாளை வருவான்______
A
(அ) விளித்தொடர்     
B
(ஆ) வினாத்தொடர் 
C
(இ) பிறவினைத்தொடர்    
D
(ஈ) செய்தித்தொடர்
Question 59
  1. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க:
பாரதிதாசனின் இயற்பெயர் "சுப்புரத்தினம்"
A
(அ) பாரதிதாசனின் இயற்பெயர் யாது?   
B
(ஆ) பாரதிதாசன் யார்?
C
(இ) சுப்புரத்தினம் என்று யார் அழைத்தது?       
D
(ஈ) பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினமா?
Question 60
  1. விடைக்கேற்ற வினாவை தெரிவு செய்க:
விடை: கல்வி கற்றவர்க்கு அவர் கற்ற கல்வியே அழகு. ஆகையால் அழகு சேர்க்கும் பிற அணிகலன்கள் தேவையில்லை
A
(அ) கல்வி கற்றவர்க்கு ஏன் பிற அணிகலன்கள் தேவையில்லை?
B
(ஆ) எதனால் பிற அணிகலன்களை தேவையில்லை?
C
(இ) யாருக்கு அழகு செய்ய வேறு அணிகலன்கள் தேவை?
D
(ஈ) அழகு செய்ய பிற அணிகலன்கள் தேவையா?
Question 61
  1. சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான தொடரைத் தேர்க:
A
(அ) நம் முன்னோரின் வாழ்க்கை இயைந்தது இயற்கையோடு
B
(ஆ) நம் முன்னோரின் வாழ்க்கை இயற்கையோடு இயைந்தது
C
(இ) இயற்கையோடு வாழ்க்கை நம் முன்னோரின் இயைந்தது
D
(ஈ) இயற்கையோடு இயைந்தது வாழ்க்கை நம் முன்னோரின்
Question 62
  1. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக:
மறையும் கதிரவன் காலையில் மாலையில் உதித்து
A
(அ) கதிரவன் மறையும் காலையில் உதித்து மாலையில்
B
(ஆ) மாலையில் காலையில் உதித்து மறையும் கதிரவன்
C
(இ) கதிரவன் காலையில் உதித்து மாலையில் மறையும்
D
(ஈ) மறையும் காலையில் கதிரவன் உதித்து மாலையில்
Question 63
  1. அகர வரிசைப்படுத்துக:
ஒழுக்கம் உயிர் ஆடு எளிமை அன்பு இரக்கம் ஒசை ஐந்து ஈதல் ஊக்கம் ஏது ஒளவை
A
(அ) அன்பு, ஆடு, இரக்கம், ஈதல், உயிர், ஊக்கம், எளிமை, ஏது, ஐந்து, ஒழுக்கம், ஓசை, ஓளவை
B
(ஆ) இரக்கம், ஊக்கம், ஒழுக்கம், எளிமை, ஓசை, ஒளவை, ஈதல், உயிர், ஐந்து, ஆடு, அன்பு, ஏது
C
(இ) ஒளவை, ஒழுக்கம், ஓசை, ஈதல், உயிர், ஊக்கம், அன்பு, ஆடு, இரக்கம், எளிமை, ஏது, ஐந்து
D
(ஈ) இரக்கம், உயிர், ஊக்கம், ஏது, எளிமை, ஐந்து, அன்பு, ஆடு, ஒழுக்கம், ஓசை, ஒளவை, ஈதல்
Question 64
  1. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க:
நடக்கிறது
A
(அ) நடக்  
B
(ஆ) நடக்கும்
C
(இ) நடந்த
D
(ஈ) நட
Question 65
  1. "தருகின்றனர்" - இதன் வேர்ச்சொல் அறிக:
A
(அ) தா
B
(ஆ) தந்த
C
(இ) தரு 
D
(ஈ) தந்து
Question 66
  1. ஒரு பொருள் தரும் பல சொற்கள்:
முகில்
A
(அ) மஞ்சை, மேகம், கொண்டல்     
B
(ஆ) கொண்டல், களி, மேகம்
C
(இ) கார், கொண்டல், மேகம்
D
(ஈ) கார், மேகம், மஞ்ஞை
Question 67
  1. தாவரத்தின் நுனிப் பகுதிகளைக் குறிக்கும் சொற்களுள் அல்லாதது
A
(அ) துளிர்
B
(ஆ) முறி  
C
(இ) குருத்து
D
(ஈ) தோகை
Question 68
  1. காடு எனும் பொருள் தரும் சொற்களைக் கண்டறிக:
A
(அ) அரண், அடவி 
B
(ஆ) ஆலை, ஆரணி
C
(இ) இலவு, இலை
D
(ஈ) ஈகை, ஈன்று
Question 69
  1. மரபுப் பிழையுள்ள தொடரைச் சுட்டுக:
A
(அ) சிங்கக் குருளை உருண்டு விளையாடுகிறது  
B
(ஆ) குருவிக் குஞ்சு பறக்க முயல்கிறது
C
(இ) மாங்கன்று துளிர்த்து வருகிறது                    
D
(ஈ) கீரிக்குட்டி வரப்பில் ஓடுகிறது
Question 70
  1. வழுவற்ற தொடர் எழுதுக:
A
(அ) கயல் பானை செய்யக் கற்றுக் கொண்டாள்
B
(ஆ) கயல் பானை அமைக்கக் கற்றுக்கொண்டாள்
C
(இ) கயல் பானை சுடக் கற்றுக் கொண்டாள்
D
(ஈ) கயல் பானை வனையக் கற்றுக் கொண்டாள்
Question 71
  1. பிழையை நீக்கி எழுதுக: நல்ல தமிழுக்கு எழுதுவோம்
A
(அ) தமிழ்  
B
(ஆ) தமிழில்
C
(இ) தமிழால்  
D
(ஈ) தமிழுக்கும்
Question 72
  1. "புலி" என்ற விலங்கினுடைய சரியான இளமைப் பெயரைக் கண்டறிக:
A
(அ) குட்டி
B
(ஆ) கன்று
C
(இ) பறழ்
D
(ஈ) குருளை
Question 73
  1. எதிர்ச்சொல்லைத் தேர்ந்தெடுத்தெழுதுதல்: காடுருவாக்கி
A
(அ) காட்டை எரித்து
B
(ஆ) காடழித்து
C
(இ) காட்டை வெட்டி    
D
(ஈ) காட்டை கீரி
Question 74
  1. தொன்மை - என்ற சொல்லின் எதிர்ச்சொல்லை எழுதுக:
A
(அ) புதுமை
B
(ஆ) பழமை 
C
(இ) சிறுமை
D
(ஈ) பெருமை
Question 75
  1. நானிலம் - என்ற சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது
A
(அ) நா + னிலம்
B
(ஆ) நான்கு + நிலம்
C
(இ) நா + நிலம் 
D
(ஈ) நான் + நிலம்
Question 76
  1. பிரித்து எழுதுக:
தானென்று
A
(அ) தானெ + என்று
B
(ஆ) தான் + என்று 
C
(இ) தா + னென்று  
D
(ஈ) தான் + வென்று
Question 77
  1. பிரித்தெழுதுக:
வல்லுருவம்
A
(அ) வல் + உருவம்
B
(ஆ) வன்மை + உருவம்
C
(இ) வல்ல + உருவம் 
D
(ஈ) வல்லு + உருவம்
Question 78
78."கத்துங் குயிலோசை - சற்றே வந்து காதிற் படவேணும்" - பாரதியார் இதில் வந்துள்ள வழுவமைதி
A
(அ) இட வழுவமைதி
B
(ஆ) திணை வழுவமைதி
C
(இ) கால வழுவமைதி
D
(ஈ) மரபு வழுவமைதி
Question 79
  1. ஆய்த எழுத்து - இடமாகக் கொண்டு பிறக்கிறது
A
(அ) மார்பு     
B
(ஆ) கழுத்தை  
C
(இ) மூக்கை
D
(ஈ) தலையை
Question 80
  1. கலைச்சொல் அறிதல்:
CONSONANT
A
(அ) உயிரெழுத்து   
B
(ஆ) மெய்யெழுத்து 
C
(இ) ஒப்பெழுத்து 
D
(ஈ) சார்பெழுத்து
Question 81
  1. கலைச்சொல்லின் சரியான தமிழ்ச்சொல்லை தெரிவு செய்க:
Bio Diversity
A
(அ) உயிரியல் மண்டலம்
B
(ஆ) தாவரவியல் மண்டலம்
C
(இ) பல்லுயிர் மண்டலம்  
D
(ஈ) நுண்ணுயிரி மண்டலம்
Question 82
  1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களுக்கு குறில், நெடில் பொருள் வேறுபாடு அறிந்து சரியானத் தொடரைத் தேர்ந்தெடுக்க:
கல்-கால்
A
(அ) கல் விழுந்து காலில் காயமானது   
B
(ஆ) கால் விழுந்து கல்லில் காயமானது
C
(இ) காலில் சிலை செதுக்க முடியும்       
D
(ஈ) கல் என்பது மனித உடலின் ஓர் உறுப்பு
Question 83
  1. இருபொருள் தருக:
மாலை
A
(அ) அணி, நாள்
B
(ஆ) சினம், தலை  
C
(இ) கடல், முடி 
D
(ஈ) பொழுது, தார்
Question 84
  1. கொடுக்கப்பட்டுள்ள சொல்லுக்கு இரு பொருள் தருக:
தானம்
A
(அ) கொடை, ஈகை 
B
(ஆ) உண்மை, உரிமை  
C
(இ) பாவம், பழி  
D
(ஈ) கோபம், துன்பம்
Question 85
  1. இருபொருள் தரும் இணையைத் தேர்ந்தெடு:
அரண்
A
(அ) பாதுகாப்பு, கோட்டை
B
(ஆ) சிவன், பாதுகாப்பு
C
(இ) மதில், சிவன்
D
(ஈ) கட்டளை, அம்பு
Question 86
  1. ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது?
A
(அ) முருகன் அவர்கள் அருகில் சென்றார்கள்
B
(ஆ) முருகன் அவர் அருகில் சென்றார்கள்
C
(இ) முருகன் அவர்கள் அருகில் சென்றனா           
D
(ஈ) முருகன் அவர்கள் அருகில் சென்றான்
Question 87
  1. பிழையற்ற ஒருமை தொடர் எது?
A
(அ) நான் அல்லோம்
B
(ஆ) நான் அல்லேன்
C
(இ) நீ அல்லீர்
D
(ஈ) நீவீர் அல்லீர்
Question 88
  1. சொல் - பொருள் - பொருத்துக:
அ. கொங்கு - 1. மலர்தல் ஆ. அலர் - 2. மகரந்தம் இ. திகிரி - 3. இமயமலை ஈ. மேரு - 4. ஆணைச்சக்கரம்
A
அ.       4        1         2        3
B
ஆ.     2       1        4       3
C
இ.       2        3        4        1
D
ஈ.       1         2        3        4
Question 89
  1. பிழை திருத்துதல் (ஒரு-ஓர்):
கீழ்க்காணும் தொடர்களில் ஒரு-ஓர் சரியாக அமைந்த தொடர் எது?
A
(அ) ஓர் வண்ணத்துப் பூச்சியின் சிறகசைப்பு, உலகில் எங்கோ ஓர் எதிர்விளைவை ஏற்படுத்தும் என்று அறிவியல் கூறுகிறது
B
(ஆ) ஓரு வண்ணத்துப் பூச்சியின் சிறகசைப்பு, உலகில் எங்கோ ஓர் எதிர்விளைவை ஏற்படுத்தும் என்று அறிவியல் கூறுகிறது
C
(இ) ஓர் வண்ணத்துப் பூச்சியின் சிறகசைப்பு, உலகில் எங்கோ ஓரு எதிர்விளைவை ஏற்படுத்தும் என்று அறிவியல் கூறுகிறது
D
(ஈ) ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகசைப்பு, உலகில் எங்கோ ஓரு எதிர்விளைவை ஏற்படுத்தும் என்று அறிவியல் கூறுகிறது
Question 90
  1. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க:
தேவர் அனையர் ________ அவரும்தாம் மேவன செய்தொழுக லான். விடுபட்ட சீர் எழுதுக:
A
(அ) அன்பர் 
B
(ஆ) நல்லவர்
C
(இ) தீயவர்    
D
(ஈ) கயவர்
Question 91
  1. சரியான தொடரைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
A
(அ) இந்தியாவின் டாக்டர் மனிதர் சலீம் பறவை அலி
B
(ஆ) டாக்டர் அலி சலீம் பறவை இந்தியாவின் மனிதர்
C
(இ) இந்தியாவின் மனிதர் பறவை டாக்டர் சலீம் அலி
D
(ஈ) இந்தியாவின் பறவை மனிதர் டாக்டர் சலீம் அலி
Question 92
  1. "நண்பா படி" இது எவ்வகைத் தொடர்?
A
(அ) வினாத் தொடர்
B
(ஆ) விளித்தொடர்
C
(இ) உணர்ச்சித் தொடர்   
D
(ஈ) எதிர்மறைத் தொடர்
Question 93
  1. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடுத்து நிறைவு செய்க:
மதிப்புக் கூட்டுதல் என்றால் _________
A
(அ) எது?  
B
(ஆ) என்ன? 
C
(இ) யார்? 
D
(ஈ) ஏன்?
Question 94
  1. சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடு:
பெயர்ச்சொல் _________ வகைப்படும்?
A
(அ) எத்துணை     
B
(ஆ) எத்தனை
C
(இ) ஏன்      
D
(ஈ) என்ன
Question 95
  1. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு:
அறநெறிச்சாரம் என்பதன் பொருள் ____________
A
(அ) எப்படி 
B
(ஆ) எவ்வாறு
C
(இ) எதற்கு
D
(ஈ) என்ன
Question 96
  1. பொருத்தமான காலம் அமைத்தல்:
சரியான தொடரைத் தேர்ந்தெடு:
A
(அ) தமிழரசி வள்ளுவரை ஓவியமாக வரைவாள் (இறந்த காலம்)
B
(ஆ) தமிழரசி வள்ளுவரை ஓவியமாக வரைகின்றாள் (எதிர்காலம்)
C
(இ) தமிழரசி வள்ளுவரை ஓவியமாக வரைந்தாள் (இறந்த காலம்)
D
(ஈ) தமிழரசி வள்ளுவரை ஓவியமாக வரைந்து முடித்தாள் (நிகழ்காலம்)
Question 97
  1. பின்வருவனவற்றுள் பேச்சு வழக்கு அல்லாத தொடரைத் தேர்க:
A
(அ) எழுதப் படிக்கத் தெரிந்து கொள்ளணும்னு விரும்பறேன்
B
(ஆ) எழுதப் படிக்கத் தெரிஞ்சிக்கணும்னு விரும்புகிறேன்
C
(இ) எழுதப் படிக்கத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்
D
(ஈ) எழுதப் படிக்கத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பறேன்
Question 98
  1. சரியான எழுத்து வழக்குத் தொடரைத் தேர்க:
A
(அ) யாரப்பா நீ? எங்கே வந்தே?
B
(ஆ) யார் நீ? எங்கு வந்தாய்?
C
(இ) யார் நீ? எங்கே வந்த?
D
(ஈ) யாரப்பா நீ? எங்க வந்த?
Question 99
  1. நிறுத்தற்குறி அறிக:
(எது சரியானது):
A
(அ) நல்லவன் வாழ்வான்; தீயவன் தாழ்வான்  
B
(ஆ) நல்லவன் வாழ்வான், தீயவன் தாழ்வான்
C
(இ) நல்லவன் வாழ்வான்! தீயவன் தாழ்வான் 
D
(ஈ) நல்லவன் வாழ்வான் தீயவன் தாழ்வான்
Question 100
  1. பின்வரும் தொடரின் சரியான நிறுத்தற்குறியிட்டு எழுதப்பட்ட தொடரை தெரிவு செய்க:
காகத்திற்கு காது உண்டா அதற்கு காது கேட்குமா
A
(அ) "காகத்திற்கு காது உண்டா, அதற்கு காது கேட்குமா?"
B
(ஆ) காகத்திற்கு காது உண்டா? அதற்கு காது கேட்குமா?
C
(இ) 'காகத்திற்கு காது உண்டா! அதற்கு காது கேட்குமா?
D
(ஈ) காகத்திற்கு காது உண்டா அதற்கு காது கேட்குமா?
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!