Tnpsc Model Question Paper 51 – General Studies in Tamil & English
1. அரசியலமைப்பின் கருத்தாக்கம் முதலில் தோன்றிய நாடு
The concept of constitution was first originated in __________ country.
(a) ரஷ்யா / Russia
(b) அமெரிக்க ஐக்கிய நாடு / United States of America
(c) இந்தியா / India
(d) இங்கிலாந்து / England
2. இந்தியாவின் நாடாளுமன்றக் கட்டித்தை வடிவமைத்தவர்கள்
The parliament house in India was designed by the British architects
(a) எட்வின் ஹெட்யென்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் / Edwin Hetyens and Herbert Baker
(b) ஹெர்பர்ட் பேக்கர் மற்றும் தாகூர் / Herbert Baker and Tagore
(c) ஜவகர்லால் நேரு மற்றும் எட்வின் ஹெட்யென்ஸ் / Jawaharlal Nehru and Edwin Hetyens
(d) இராணி விக்டோரியா மற்றும் ஜவகர்லால் நேரு / Queen Victoria and Jawaharlal Nehru
3. இந்தியாவின் முதல் மாநகராட்சி (சென்னை) ________ ஆண்டில் தொடங்கப்பட்டது.
The first municipal corporation in India was inaugurated at Madras (Chennai) in the year
(a) 1763
(b) 1688
(c) 1668
(d) 1663
4. கீழ்க்காணும் எந்த விதியின் அடிப்படையில் குடியரசு தலைவர் மாநில அரசை கலைக்கும் அதிகாரம் பெற்றுள்ளார்?
Under which Article the President is vested with the power to proclaim State Emergency?
(a) சட்டப்பிரிவு 352/ Article 352
(b) சட்டப்பிரிவு 360/ Article 360
(c) சட்டப்பிரிவு 365/ Article 365
(d) சட்டப்பிரிவு 356/ Article 356
5. எந்த நாட்டில் இரு கட்சி ஆட்சி முறை நடைமுறையில் உள்ளது?
In which country is ruling Two-Party system?
(a) இங்கிலாந்து / UK
(b) சீனா / China
(c) சோவியத் யூனியன் / USSR
(d) பிரான்ஸ் / France
6. கீழ்க்கண்டவற்றுள் அடிப்படை உரிமைகளை அதன் சரியான உரிமைகளோடு முறையே பொருத்தவும்:
அ. வாக்களிக்கும் உரிமை 1. பண்பாட்டு உரிமை
ஆ. சங்கம் அமைக்கும் உரிமை 2. சுரண்டலுக்கெதிரான உரிமை
இ. பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் உரிமை 3. அரசியல் உரிமை
ஈ. குழந்தை தொழிலாளர் 4. சுதந்திர உரிமை
Match correctly the rights with their fundamental rights respectively:
a. Right to vote 1. Cultural rights
b. Right to form union 2. Right against exploitation
c. Right to preserve tradition 3. Political rights
d. Child labour 4. Right to freedom
a b c d
a. 3 4 1 2
b. 2 4 1 3
c. 4 2 1 3
d. 1 4 3 2
7. வளர்ச்சி விகித்தின் அடிப்படையில் இலக்கை அடையாத ஐந்தாண்டுத் திட்டங்கள்:
1. முதல் ஐந்தாண்டுத் திட்டங்கள்:
2. இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டங்கள்:
3. மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டங்கள்:
4. நான்காம் ஐந்தாண்டுத் திட்டங்கள்:
According to growth rate which five year plans were plans were did not attain the Target:
1. First five year plan
2. Second five year plan
3. Third five year plan
4. Fourth five year plan
(a) 1, 2 மற்றும் 3/ 1, 2 and 3
(b) 2 மற்றும் 3/ 2 and 3
(c) 2, 3 மற்றும் 4/ 2, 3 and 4
(d) 1 மற்றும் 3/ 1 and 3
8. இந்தியஅரசு முதல் தொழிற்கொள்யை அறிவித்த ஆண்டு
The Government of India declared its First Industrial policy on
(a) 1948 மார்ச் 6/ 6th Marth 1948
(b) 1948 ஏப்ரல் 6/ 6th April 1948
(c) 1948 மார்ச் 16/ 16th March 1948
(d) 1948 ஏப்ரல் 16/ 16th April 1948
9. இந்தியாவில் உள்ள வரிகள்
In India Taxes are including
(a) நேர்முக வரிகள் / Direct Taxes
(b) முறைமுக வரிகள் / Indirect Taxes
(c) இரண்டும் (அ) மற்றும் (ஆ)/ Both (A) and (B)
(d) எதுவுமில்லை / None of these
10. சரியான விடையை தேர்ந்தெடுத்தல்:
பண்டங்கள் மற்றும் பணிகள் வரி இந்தியப் பாராளுமன்றத்தில் எந்த ஆண்டு நிறைவெற்றப்பட்டது?
Choose the right answer:
The Goods and Services Tax was passed in parliament on
(a) 1 ஜீலை, 2017 / 1st July 2017
(b) 29 மார்ச், 2017/ 29th March 2017
(c) 22 மார்ச், 2016/ 22nd March 2016
(d) 22 மார்ச், 2017/ 22nd March 2017
11. சரியாகப் பொருந்தியுள்ள இணையைத் தேர்ந்தெடு:
1. ஜமீன்தாரி முறை 1. நிலச்சுவான்தார் முறை
2. மஹல்வாரி முறை 2. சொந்த சாகுபடி முறை
3. இரயத்துவாரி முறை 3. இனவாரி முறை
4. நில உடைமை முறை 4. நிலங்களுக்கான உரிமை மற்றும் நிர்வகித்தல் பற்றியது
Choose the right matches among type.
1. Zamindari System – Landlord system
2. Mahalwari system – The owner of cultivator system
3. Ryotwari system – Communal system
4. Land Tenure system – The system of land ownership and management
(a) 1 மற்றும் 3 சரி / 1 and 3 are correct
(b) 1 மற்றும் 2 சரி / 1 and 2 are correct
(c) 3 மற்றும் 4 சரி / 3 and 4 are correct
(d) 1 மற்றும் 4 சரி / 1 and 4 are correct
12. பின்னலாடைகளை ஏற்றுமதி செய்யும் திருப்பூரின் வேறுபெயர்
Tirupur known as __________ is the exporter of garments.
(a) “நூல் கிண்ணம்” / “Yarn Bowl”
(b) ‘எஃகு நகரம்” / Steel City
(c) “ஆசியாவின் டெட்ராய்ட்” / “The Detroit of Asia”
(d) “பின்னலாடைகளின் நகரம்” / “Knitting City”
13. 1945இல் சிம்லா மாநாட்டைக் கூட்டி யஅரச பிரதிநிதி
Which Viceroy convened the ‘Simla Conference’ in 1945?
(a) வேவல் பிரபு / Lord Wavell
(b) லின்லித்கோ பிரபு / Lord Linlithgow
(c) மௌண்ட்பேட்டன் பிரபு / Lord Mountbatten
(d) கிளமண்ட் அட்லி / Clement Atlee
14. பொருத்துக:
அ. மங்களுர் உடன்படிக்கை 1. 1765
ஆ. பாரிஸ் உடன்படிக்கை 2. 1794
இ. ஸ்ரீரங்கபட்டண உடன்படிக்கை 3. 1783
ஈ. ஆலகாபாத் உடன்படிக்கை 4. 1784
Match the following:
a. Treaty of Mangalore 1. 1765
b. Treaty of Paris 2. 1794
c. Treaty of Srirangapatnam 3. 1783
d. Treaty of Allahabad 4. 1784
a b c d
a. 3 2 1 4
b. 4 3 2 1
c. 1 3 2 4
d. 2 1 4 3
15. பின்வருவனவற்றை பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க:
இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடுகள் நடைபெற்ற இடம் மற்றும் ஆண்டுகள்
அ. டெல்ல 1. 1887
ஆ. லாகூர் 2. 1888
இ. அலகாபாத் 3. 1893
ஈ. சென்னை 4. 1932
Match the following:
Venues of congress sessions with the year
a. Delhi 1. 1887
b. Lahor 2. 1888
c. Allahabad 3. 1893
d. Madras 4. 1932
a b c d
a. 3 2 1 4
b. 1 4 3 2
c. 2 4 3 1
d. 4 3 2 1
16. “மூக்நாயக்” இதழை அம்பேத்கர் எந்த மொழியில் வெளியிட்டார்?
In which language did Ambedkar Publish “MOOK NAYAK” magazine?
(a) இந்தி / Hindi
(b) மஹர் / Mahar
(c) மராத்தி/ Marathi
(d) ஆங்கிலம் / English
17.”சந்திரிகையின் கதை” யாரோடு தொடர்புடையது?
“Story of Santirigai” is related to
(a) பாரதிதாசன் / Bharathidasan
(b) சுத்தானந்த பாரதி / Suddhanantha Bharathi
(c) பாரதியார் / Bharathiyar
(d) ராஜாஜி / Rajaji
18. தாகூரின் மனைவி
Spouse name of Tagore
(a) ஸ்வரூப ராணி / Swarupa Rani
(b) கஸ்தூரியாய் Kasthuri Bai
(c) மிருனாளிணி தேவி / Mirnalini Devi
(d) லீலாவதி / Lilavati
19. இந்திய தேசிய ராணுவத்தை நிறுவியர் யார்?
Who founded the Indian National Army?
(a) கேப்டன் மோகன் சிங் / Col.Mohan Singh
(b) சுபாஷ் சந்திர போஸ்/ Subash Chandra Bose
(c) ஷா நவாஸ் கான் / Shah Nawaz Khan
(d) ஷெகல் / P.K.Sehgal
20. தமிழ்நாட்டுச் சுதேசி இயக்கத் தலைவர்கள் பிபின் சந்திரபால் விடுதலை செய்யப்பட்ட அந்த நாளை ____________ தினமாக திருநெல்வேலியில் கொண்டாட திட்டமிட்டனர்
The Swadeshi leaders in Tamilnadu planned to celebrate the day of Bipin Chandra Pal’s release as a ___________ in thirunelveli
(a) தொழிலாளர்கள் தினம் / Labours Day
(b) சுதேசி தினம் / Swarajya Day
(c) வெற்றி தினம் / Victory Day
(d) சென்னை தினம் / Chennai Day
21. கல்லாதவர்களை வள்ளுவர் எதனுடன் ஒப்பிடுகிறார்?
Valluvar composes the uneducated to?
(a) பேய் / A fiend/Devil
(b) பூதம் / A Ghost
(c) கூற்றம் / Death
(d) விலங்கு / Animal
22. என்பும் உரியர் பிறர்க்கு – என்று வள்ளுவர் யாரைக் குறிப்பிடுகின்றார்?
What does Valluvar state about persons who will give away even their bones to the loved ones?
(a) மாண்புடையார் / Persons or men of Distinction
(b) பண்புடையார் / Men of Courtesy
(c) அன்புடையார் Men of Love
(d) அறிவுடையார் / Men of sensibility
23. ‘பலகற்றும் கல்லா ரறிவிலாதார்’ என வள்ளுவர் யாரைக் குறிப்பிடுகின்றார்?
“___ Who know not with the world in harmony
To dwell, may many things have learned,
But nothing well”.
Who is referred as a fool inspite of vast learning?
(a) பொருளோடு வாழாதார் / Men without riches
(b) அருளோடு வாழாதார் / Men without grace
(c) புகழோடு வாழாதார்/ Men without fame
(d) உலகியலோடு வாழாதார் / Men who without live in harmony with the outside world
24. புத்தேன் உலக வாழ்க்கையை யார் உறுதியாக வாழ்வர் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்?
Who according to Valluvar will gain heaven?
(a) திருடாதார் / One who is Honest
(b) பொய் சொல்லாதார் / One who never lies
(c) புறங்கூறாதார் / One who never slanders
(d) சினம் கொள்ளாதார் / One who is never angry
25.பொருள் இல்லாரை எல்லாரும் எவ்வாறு கருதுவார் என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்?
How will those who possess no wealth be treated according to Valluvar?
(a) இரங்குவர் / Be commiserate
(b) அருளுவர் / Be blessed
(c) எள்ளுவர்/ Be despised
(d) பழிப்பர் / Be blamed
26. ஐம்புலன்களையும் அடக்கி ஆள்வதையும்; அப்புலன்கள் விரும்புவனவற்றை எல்லாம் விட்டுவிடுவதையும் எதற்குரிய இலக்கணமாக வள்ளுவர் குறிப்பிடுகின்றார்?
What according to Valluvar is the grammar to conquer the desires of all the five senses?
(a) முதமை/ Antiquity
(b) குறிக்கோள் / Perseverance
(c) துறவு / Abstinence
(d) கல்வி / Education
27. இரு கூம்புகளுடைய கன அளவுகளின் விகிதம் 2:3 ஆகும். இரண்டாம் கூம்பின் உயரம் முதல் கூம்பின் உயரத்தைப்போல் இரு மடங்கு எனில், அவற்றின் ஆரங்களின் விகிதம் காண்க:
The ratio of the volume of two cones is 2:3. Find the ratio of their radii if the height of second cone is double its height of the first
28. ___________ என்றும் தமிழ் இலக்கிய நூல் ‘நடுகல்’ நடுவதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கிறது
______ Tamil work describes the procedures for erecting hero-stones.
(a) தொல்காப்பியம் / Tholkappiyam
(b) எட்டுத்தொகை நூல்கள் / Ettuthogai
(c) பத்துப்பாட்டு / Pattupattu
(d) பதினெண்கீழ்க்கணக்கு / Pathinenkeelkanakku
29. சரியான கூற்றை தேர்வு செய்யவும்:
அ. சென்னை வாசிகள் சங்கம் 1852இல் நிறுவப்பட்டது
ஆ. தமிழில் வெளிவந்த தேசியப் பருவ இதழ் சுதேசமித்திரன் 1891ல் தொடங்கப்பட்டது
இ. குடிமைப் பணித் தேர்வுகள் இந்தியாவில் மட்டுமே நடத்தப்பட வேண்டுமென சென்னை மகாஜன சபை கோரியது
ஈ. V.S.சீனிவாசனார் ஒரு தீவிர தேசியவாதியாவார்
Choose the correct statement:
i. Madras Native Association was found in 1852
ii. Tamil Nationalist periodical Swadesamitran was started in 1891
iii. The Madras Mahajana sabha demanded conduct of Civil Services Examinations only in India
iv. V.S.Srinivasanar was an extremist
(a) (அ) மற்றும் (ஆ) ஆகியன சரி / i and ii are correct
(b) (இ) மட்டும் சரி/ iii is correct
(c) (ஈ) மட்டும் சரி / iv is correct
(d) அனைத்தும் சரி /All are correct
30. கூற்று (A): சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் P.ரங்கையா
காரணம் (R): தென்னிந்தியாவில் தெளிவான தேசிய நோக்கங்களுடன் தொடங்கப் பெற்ற தொடக்ககால அமைப்பு சென்னை மகாஜன சபையாகும்.
Assertion (A) : P.Rangaiah was the first President of the Madras Mahajana Sabha
Reason (R) : Madras Mahajana Sabha was the earliest organization in South India with clear nationalist objectives.
(a) கூற்று (A) மற்றும் காரணம் (R) எனும் இரண்டும் சரி / Both (A) and (R) are correct
(b) கூற்று (A) சரி ; ஆனால் காரணம் (R) கூற்றின் சரியான விளக்கமல்ல / (A) is correct but (R) is not the correct explanation
(c) காரணம் (R) கூற்று (A) இரண்டுமே தவறு / Both (A) and (R) are wrong
(d) காரணம் (R) சரி ; ஆனால் கூற்று (A)-உடன் அது பொருந்தவில்லை / (R) is correct but it has no relevance to (A)
31. 1806ஆம் ஆண்டு நடந்த வேலூர் புரட்சியின் பின் விளைவுகள் பற்றி கூறப்படும் பின்வரும் கூற்றுகளில் எது ‘சரியானது அல்ல’?
Which of the following statements in “NOT TRUE” about the consequences of Vellore Revolt of 1806?
(a) திப்புவின் மகன்களை கல்கத்தாவுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது / Tipu’s sons were ordered to be sent to Calcutta
(b) கர்னல் ஜில்லஸ்பிக்கு 7000 பகோடாக்கள் வெகுமதியாக அளிக்கப்பட்டது / Col.Gillespie was given a reward of 7000 pagodas
(c) வில்லியம் பெண்டிங் இங்கிலாந்துக்கு திருப்பி அழைக்கப்பட்டார் / William Bentinck was recalled to England
(d) புதிய இராணுவ விதிமுறைகள் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டது / The New military regulations were continued to be implemented
32. ‘சாக்கிய பௌத்த சங்கம்’ எனும் அமைப்பை நிறுவியவர்
‘Sakya Buddhist Society’ was founded by
(a) ஸ்ரீ நாராயண குரு / Sri Narayana Guru
(b) சாவித்திரிபாய் பூலே / Savitribai Phule
(c) அய்யன்காளி / Ayyankali
(d) அயோத்திதாசர் / Iyothithassar
33. பொருத்துக:
அ. பிரார்த்தனா சமாஜ் 1. 1870
ஆ. விதவை மறுமணச் சங்கம் 2. 1884
இ. புனே சர்வஜனிக் சபா 3. 1867
ஈ. தக்காண கல்விக் கழகம் 4. 1861
Match the following:
a. Prarthana Samaj 1.1870
b. Widow Marriage Association 2. 1884
c. Poona Sarvajanik Sabha 3. 1867
d. Deccan Education Society 4. 1861
a b c d
a. 4 3 1 2
b. 3 2 4 1
c. 3 4 1 2
d. 2 4 3 1
34. இந்து சமய அறநிலையச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு ___________ ஆகும்.
Hindu Religious Endowment Act was introduced in
(a) 1922
(b) 1924
(c) 1926
(d) 1929
35. பின்வருவனவற்றைப் பொருத்துக:
அ. உலக சமூக நீதி நாள் 1. 11 ஏப்ரல்
ஆ. நியாயமான உலகமயமாக்கலுக்காக சவுக நீதி 2. 2 ஆகஸ்ட்
இ. பிலடெல்பியா பிரகடனம் 3. 20 பிப்ரவரி
ஈ. சர்வதேச தொழிலாளர் அமைப்பு 4. 10 ஜீன்
Match the following:
a. World Day of Social Justice 1. 11th April
b. Social Justice for a Fair Globalization 2. 2nd August
c. Philadelphia Declaration 3. 20th February
d. ILO 4. 10th June
a b c d
a. 2 4 1 3
b. 3 2 4 1
c. 4 3 2 1
d. 3 4 2 1
36. பின்வருவனவற்றை காலவரிசைப்படி வரிசைப்படுத்தவும்
1. பிரம்ம சமாஜ்
2. பிரார்த்தனா சமாஜ்
3. சாரதா சதன்
4. ஆர்ய சமாஜ்
Arrange the following in chronological order
1. Brahma Samaj
2. Prasthana samaj
3. Sarada Sadan
4. Arya samaj
(a) 1, 2, 3, 4
(b) 1, 3, 2, 4
(c) 1, 4, 3, 2
(d) 1, 2, 4, 3
37. “14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை சுரங்கங்களில் தொழிற்சாலைகளில் அல்லது பிற வேலைக்கு அமர்த்துவது சட்டத்திற்கு எதிரானது”. இது மனித உரிமைகளின் எந்த வகையில் வருவது?
“It is against the law to employ children below 14 years of age in mines, factories or other occupation”. This comes under which category of human rights?
(a) சுதந்திர உரிமை / Right to freedom
(b) அரசியலமைப்பு வழி தீர்வுகளுக்கான உரிமை / Right to constitutional remedies
(c) சுரண்டலுக்கு எதிரான உரிமை / Right against exploitation
(d) அடிப்படை கடமைகள் / Fundamental duties
38. கல்வி என்பது ஒரு
Education is
(a) நுகர்வுப் பண்டம் / Consumption good
(b) மூலதனப் பண்டம் / Investment good
(c) எதுவுமில்லை / None
(d) இரண்டும் / Both
39. கலைஞர் கருணாநிதி அவர்களின் 97வது பிறந்த தின விழாவின் போது தமிழ்நாடு அரசு_________ உருவாக்குவதாக அறிவித்தது
On the occasion of 97th Birth anniversary of Kalaignar Karunanithi the Government of Tamil Nadu has announced
(a) சென்னையில் உயர் தர பல்நோக்கு மருத்துவமனை / A high class super multi-speciality hospital at chennai
(b) சென்னையில் ஒரு நூலகத்தை / A library at Chennai
(c) கோயம்புத்தூரில் ஒரு மருத்துவமனையை / A hospital at Coimbatore
(d) மலைவாழ மக்களுக்கென ஒரு வீட்டு திட்டத்தை / A housing scheme for tribes
40. பின்வரும் பிரிவில் எதில் கல்விக்கான உரிமை சேர்க்கப்பட்டது
Right to education was inserted in which of the following article
(a) பிரிவு 21-A / Article 21-A
(b) பிரிவு 22-A / Article 22A
(c) பிரிவு 23/ Article 23
(d) பிரிவு 24/ Article 24
41. தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் காடுகளைக் கொண்ட மாவட்டம்
Which district has the largest forest cover in Tamilnadu?
(a) தர்மபுரி / Dharmapuri
(b) வேலூர் Vellore
(c) திண்டுக்கல் / Dindigul
(d) ஈரோடு / Erode
42. தமிழ்நாட்டில் எத்தனை ஈர நிலங்கள் உள்ளன?
How many Wetlands are there in Tamil Nadu?
(a) 24684
(b) 24685
(c) 24686
(d) 24687
43. தமிழகத்தின் கனவு : தமிழகத்தை டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மாற்றுவதே எங்கள் பார்வை அவை இவற்றை பாதிக்காமல்
Dream of Tamil Nadu : Our vision in to transform Tamil Nadu into a trillion dollar economy without affecting the
(a) மகிழ்ச்சி மற்றும் மக்களின் சமூக பிரச்சனை / Happiness and social problem of the people
(b) மகிழ்ச்சி, சுற்றுச் சூழல் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் / Happiness environment and livelihood of the people
(c) மக்களின் மகிழ்ச்சி மற்றும் வறுமை / Happiness and poverty of the people
(d) மக்களின் மகிழ்ச்சி மற்றும் மக்களின் சைபர் குற்றங்கள் / Happiness and cyber crime of the people
44. ஹரப்பா மக்கள் கத்திகளும் பிற கருவிகளும் செய்வதற்கு இது பயன்பட்டது
It was used by the Harappans for making stone blades and tools.
(a) ரோரி செர்ட் / Rohri Chert
(b) ஸ்டீட்டைட் / Steatite
(c) வைடூரியம் / Lapis lazuli
(d) கார்னிலியன் / Carnelian
45. __________ வம்சம், மம்லக் வம்சம் என்று அழைக்கப்படுகிறது
_________ dynasity is known as the Mamluk dynasity
(a) அடிமை / Slave
(b) அரசர் / King
(c) இராணி / Queen
(d) படைவீரர் / Soldier
46. பின்வரும் ஆட்சியாளர்களின் லிச்சவி இளவரசி குமாரதேவியை மணந்தவர் யார்?
Who among the following ruler married the Lichchavi princess Kumaradevi?
(a) முதலாம் சந்திர குப்தர்-I / Chandra Gupta-I
(b) இரண்டாம் சமுத்திர குப்தர்-II / Samudra Gupta-II
(c) குமாரா குப்தர் / Kumara Gupta
(d) ஸ்கந்த குப்தர் / Skanda Gupta
47. வெடிமருந்தை முதன் முதலில் கண்டுபிடித்தவர்
Gun powder was first Invented by
(a) இந்தியா / India
(b) ஐரோப்பா / Europe
(c) சீனா / Chinese
(d) அமெரிக்கா / America
48. ‘வசிஷ்டபுத்ர புலுமாயி’ என்பவர்
‘Vasisthiputra Palumayi’ was
(a) சங்ககால பெண் புலவர் / Women scholar in Sangam Age
(b) வணிகர் / Trader
(c) அரசர் / King
(d) புரோகிதர் / Priest
49. _________ தொண்டை மண்டலத்தில் தங்கள் ராஜ்யத்தை நிறுவினார்
______ established their Kingdom in Tondaimandalam.
(a) சேரர்கள் / Cheras
(b) சோழர்கள் / Cholas
(c) பல்லவர்கள் / Pallavas
(d) பாண்டியர்கள் / Pandias
50. சமயச்சார்பின்மை என்ற சொல் __________ மொழி வார்த்தையிலிருந்து பெறப்பட்டது
The term Secularism is derived from _________ language word
(a) உருது / Urdu
(b) ஆங்கிலம் / English
(c) லத்தீன் / Latin
(d) இந்தி / Hindi
51. 2013ஆம் ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்ட மொழி
In which language was announced as classical language in 2013?
(a) தெலுங்கு / Telugu
(b) ஓரியா / Oriya
(c) கன்னடம் / Kannada
(d) மலையாளம் / Malayalam
52. வெப்பக் குறைவு விகிதமானது புவிப்பரப்பிலிருந்து உயரே செல்லச் செல்ல வளிமண்டலத்தில் ஒவ்வொரு 1000 மீட்டர் உயரத்திற்கும் __________ என்ற அளவில் வெப்பநிலை குறைகிறது
In normal lapse rate the temperature decreases at the rate of ________ for every 1000 meters of altitude above earth surface in atmosphere.
(a) 6.5O C
(c) 8.5O C
(c) 4.5O C
(c) 7.5O C
53. கீழ்கண்ட தேசிய பூங்காக்களில் தவறாக பொருந்தி உள்ளது எது?
Pick out the odd one out:
(a) கிர் தேசிய பூங்கா – குஜராத் / Gir National park-Gujarat
(b) கார்பெட் தேசிய பூங்கா – உத்தரகாண்ட் / Corbet National Park-Uttarakhand
(c) ரந்தம்போர் தேசிய பூங்கா – இராஜஸ்தான் / Ranthambore National Park-Rajasthan
(d) கன்ஹா தேசிய பூங்கா – ஒடிஷா / Kanha national park-Odisha
54. பின்வருவனவற்றுள் எந்த அருவி பாம்பார் ஆற்றிலிருந்து உருவாகி வருகின்றது?
Which of the following water falls forms from the river Pambar?
(a) கும்பக்கரை அருவி / Kumbakkarai falls
(b) ஒகனேக்கல் அருவி / Hogenakal falls
(c) குரங்கு அருவி / Money falls
(d) கிள்ளியூர் அருவி / Killiyur falls
55. அணுசக்தி பற்றிய சரியான வாக்கியங்கள் எவை?
1. யுரேனியம் மற்றும் தோரியம் தாதுக்களிலிருந்து அணுசக்தி பெறப்படுகிறது
2. அணுக்கரு பிளவு இணைப்பின் போது ஆற்றல் வெளிப்படுகிறது
3. இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் கல்பாக்த்தில் நிறுவப்பட்டது
Which of the following statements are true about Nuclear power.
i. It is generated mainly from the minerals of Uranium and Thorium
ii. The energy released during nuclear fission/fussion
iii. India’s first nuclear power station was setup at Kalpakkam
(a) 1 மட்டும் / i only
(b) 1 மற்றும் 2 மட்டும் / i and ii only
(c) 1 மற்றும் 3 மட்டும் / i and iii only
(d) 2 மற்றும் 3 மட்டும்/ ii and iii only
56. கீழ்கண்டவற்றுள் எது தமிழ்நாட்டில் இல்லாத உயிர்க்கோளம் பெட்டகம்?
Which of the following Biosphere Reserves is not located in Tamil Nadu?
(a) நீலகிரி உயிர்க்கோளப் பெட்டகம் / Nilgiri Biosphere Reserve
(b) நந்தா தேவி உயிர்ககோளப்பெட்டகம் / Nandadevi Biosphere Reserve
(c) மன்னார் வளைகுடா உயிர்ககோளப் பெட்டகம் / Gulf of Mannar Biosphere Reserve
(d) அகத்தியர் மலை உயிர்க்கோளப் பெட்டகம் / Agasthiyarmalai Biosphere Reserve
57. மசாகான் கப்பல் கட்டும் தளம் அமைந்துள்ள இடம்
Mazagaon Dock shipyard is located at
(a) விசாகப்பட்டினம் / Vishakhapatnam
(b) கொல்கத்தா/ Kolkata
(c) மும்பை / Mumbai
(d) கொச்சி / Kochi
58. பொமிடிலா கணவாய் அமைந்துள்ள மாநிலம்
Bomdila pass is located in the state of
(a) அருணாச்சல பிரதேசம்/ Arunachal Pradesh
(b) இமாச்சல பிரதேசம் / Himachal Pradesh
(c) ஜம்மு மற்றும் காஷ்மீர் / Jammu and Kashmir
(d) சிக்கிம் / Sikkim
59. ஆத்மா நிர்பார் பாரத் என அழைக்கப்படுவது
Aatma NIrbhar Bharat is known as
(a) உலகளாவிய சுகாதார பாதுகாப்பு / Universal health care
(b) உலகளாவிய ஆரம்பக் கல்வி / Universal primary education
(c) சுயசார்பு இந்தியா / Self reliant India
(d) உள்ளடக்கிய வளர்ச்சி / Inclusive growth
60. 2021ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் நடத்திய காலநிலை மாற்ற மாநாடு எங்கு நடைபெற்றது?
The UN climate change conference – 2021 was held in
(a) பாரிஸ் / Paris
(b) மாஸ்கோ / Moscow
(c) கிளாஸ்கோ / Glasgow
(d) நியூயார்க் / New York
61. மயில் இந்தியாவின் தேசியப் பறவையாக அறிவிக்கப்பட்ட ஆண்டு
The Peacock was declared the National Bird of India in
(a) 1960
(b) 1963
(c) 1965
(d) 1969
62. “இதயத்திலிருந்து நேராக ஒரு சுயசரிதை” எழுதிய கிரிக்கெட் வீரர், கீழ் காணப்படுபவர்களில் யார்? கண்டுபிடி
One among the following cricketers has authored the book, “Straight from the Heart : An Autobiography” – Identify
(a) சுனில் காவஸ்கர் / Sunil Gavaskar
(b) கபில் தேவ் / Kapil Dev
(c) சவுரவ் கங்குலி / Saurav Ganguly
(d) சச்சின் டெண்டுல்கர் / Sachin Tendulkar
63. 2022ஆம் ஆண்டில் பின்வரும் எந்த இணையால் 30வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது?
1. இந்தியா – SAARC
2. இந்தியா – ASEAN
3. இந்தியா – WHO
In the year 2022, 30th Anniversary will be celebrated by which of the following?
1. India – SAARC
2. India – ASEAN
3. India – WHO
(a) 1 மட்டும் / 1 only
(b) 1 மற்றும் 2 மட்டும் / 1 and 2 only
(c) 2 மட்டும் / 2 only
(d) 3 மட்டும் / 3 Only
64.தென்னிந்திய நல உரிமைச் சங்கம் பிற்காலத்தில் ___________ என அறியப்பட்டது
The South India People’s Association, later on came to be known as the
(a) தமிழ்நாடு உழைப்பாளிகள் கட்சி / Tamilnadu Toilers Party
(b) பார்வட் பிளாக் / Forward Block
(c) நீதிக்கட்சி / Justice Party
(d) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி / Communist party of India
65. கடவுள் துகளின் மறு பெயர்
The alternate name for ‘God-particle’ is
(a) எலக்ட்ரான் – நியூட்ரினோ / Electron neutrino
(b) குவார்க் / Quark
(c) ஹிக்ஸ் போசான்/ Higgs boson
(d) பை-மெசான்/ Pi-meson
66. வன மகோத்சவம் என்பது
Van mahotsav involves
(a) வன உயிரிகளை பாதுகாத்தல் / Protecting wild life
(b) மரங்களை பாதுகாத்தல் / Protecging trees
(c) பறவைகளை பாதுகாத்தல் / Protecting birds
(d) கார்பனை நிலை நிறுத்துதல் / Act as carbon sink
67. மெட்டாஸ்டாசிஸ் இதனுடன் தொடர்புடையது
Metastasis is associated with
(a) மேலிக்னன்ட் கட்டி / Malignant tumour
(b) தீங்கற்ற அல்லது மேலிக்னனட் வகை அல்லாத கட்டி / Benign tumour
(c) அ மற்றும் ஆ / Both (a) and (b)
(d) மகுடக் கழலை கட்டி / Crown gall tumour
68. செல்லின் ஆற்றல் மையம் அல்லது செல்லின் ATP தொழிற்சாலை எனப்டுவது
“Power House of the Cell” or ATP factory of the cell is
(a) மைட்டோ காண்டரியா / Mitochondria
(b) லைசோசோம் / Lysosome
(c) சென்ட்ரியோல் / Centriole
(d) பசுங்கணிகம் / Chloroplast
69. உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளின் பண்புகளைப் பெற்றவை
_________ show both living and non-living characteristics.
(a) புரோட்டோசோவா / Protozoa
(b) வைரஸ் / Virus
(c) பாக்டீரியா / Bacteria
(d) பூஞ்சை / Fungi
70. நவீன தனிமவரிசை அட்டவiணியல் சுமார் 118 தனிமங்கள் உள்ளன. அதில் ___________ தனிமங்கள் இயற்கையில் காணப்படுகின்றன.
There are 118 elements in modern periodic table, Among them, ___________ are naturally occurring elements.
(a) 91
(b) 92
(c) 93
(d) 94
71. குவார்ட்ஸ் படிகத்தின் மேல் உள்ள இரும்பு படிவுகளை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும சேர்மம்
The compound used to clean iron deposits on quartz crystals is
(a) நைட்ரிக் அமிலம் / Nitric acid
(b) கால்சியம் ஹைட்ராக்சைடு / Calcium hydroxide
(c) சோடியம் ஹைட்ராக்சைடு / Sodium hydroxide
(d) ஆக்ஸாலிக் அமிலம் / Oxalic acid
72. அருங்காட்சியகங்களில் உள்ள பழங்கால நினைவுச் சின்னங்களை பாதுகாக்க பயன்படும் வாயு
The gas used in museums to protect the monuments is
(a) உற்பத்தி வாயு / Producer Gas
(b) இயற்கை வாயு / Natural Gas
(c) நிலக்கரி வாயு / Coal Gas
(d) உயிரி வாயு / Bio-Gas
73. நாசாவின் மனிதனால் கையாளப்பட்ட ____________ திட்டம் முதன் முதலில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பியது
______ was the first manned mission of NASA to go to the moon
(a) அப்போலோ-5/ Apollo-5
(b) அப்போலோ-8/ Apollo-8
(c) அப்போலோ-10/ Apollo-10
(d) அப்போலோ-11/ Apollo-11
74. ஒரு வெர்னியர் அளவியின் முதன்மை அளவுகோலின் அளவு 8 செ.மீ வெர்னியர் ஒன்றிப்பு 4 மற்றும் நேர் சுழிப்பிழை 0.05 செ.மீ எனில், சரியான அளவைக் கணக்கிடு
Calculate the correct reading, if the main scale reading of a Vernier, Caliphers in 8 cm, Vernier coincidence is 4 and positive zero error is 0.05 cm
(a) 8 cm
(b) 7.99 cm
(c) 4.22 cm
(d) 8.09 cm
75. அழுதத்த்தின் SI அலகு
The SI unit of pressure is
(a) ஜீல் / Joule
(b) வாட் / Watt
(c) நியூட்டன் / Newton
(d) பாஸ்கல் / Pascal