Tnpsc Model Question Paper 5 – General Studies in Tamil & English
1. கருத்து வளர்ச்சியின் முதல் நிலை
The first stage in the development of a concept is
(a) வாசித்தல் / Reading
(b) வினா கேட்டல் / Questioning
(c) புலன் அகழ்வாராய்ச்சி / Sensory exploration
(d) காரணம் காணல் / Reasoning
2. சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டுக்கான ஐ.நா.மாநாடு பிரபலமாக ———– என அழைக்கப்படுகிறது.
The UN conference of Environment and development is popularly known as ———–
(a) மான்ட்ரியல் நெறிமுறை / Montreal protocol
(b) பேசல் மாநாடு / Basel conference
(c) கியோட்டோ நெறிமுறை / Kyoto protocol
(d) பூமி உச்சி மாநாடு / Earth summit
3. ஆங்கில ஆட்சிக்கு எதிராக முதன் முதலில் எழுந்த சன்நியாசி அன்டோலன் கிளர்ச்சி தோன்றிய இடம்
The Sanyasi Andolan was the earliest uprising against British rule. It broke out in
(a) சென்னை / Madras
(b) டெல்லி / Delhi
(c) காஷ்மீர் / Kashmir
(d) வங்காளம் / Bengal
4. ——— ஆனது பொது வருவாய் மற்றும் செலவுத் திட்டம் ஆகியவற்றில் விரும்பதக்க விளைவுகளை தருவதற்கும், தேசிய வருமானம், உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் விரும்பதகாத விளைவுகளை தடுப்பதற்கும் காரணமாக உள்ளது.
———– is responsible to produce desirable effects on public Revenue and expenditure; and also responsible to avoid undesirable effects on the national income, production and employment.
(a) நிதிக்கொள்கை / Fiscal policy
(b) பணக்கொள்கை / Money policy
(c) பேரிய பொருளாதார கொள்கை / Macro Economic policy
(d) நிதி மற்றும் பணக்கொள்கை / Fiscal and monetary policy
5. வேளாண்மையில் எவ்வாறு வேதி உரங்களை தவிர்க்கலாம்?
அ. சொட்டு நீர்ப்பாசனம்
ஆ. எண்ணெய் வித்து சாகுபடி
இ. சிறு தானிய சாகுபடி
ஈ. உயிர் உரங்கள்
How the chemical fertilizers can be avoided in agriculture?
i. Drip irrigation
ii. Cultivation of oil seeds
iii. Cultivation of cereals
iv. Bio-fertilisers
(a) இ மற்றும் ஈ / iii and iv
(b) ஈ மட்டும் / iv only
(c) ஆ மற்றும் இ / ii and iii
(d) மேற்கூறியவை அனைத்தும் / All of the above
6. மனித மேம்பாட்டுக் குறியீடு கீழ்வருவனவற்றுள் எதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது?
அ. வாழ்நாள் (ஆயுட்காலம்)
ஆ. வாழ்க்கை தரம்
இ. கல்வி தகுதி
ஈ. நோயுற்ற தன்மை
Human Development Index is constructed on the basis of
i. Life expectancy at birth
ii. Standard of living
iii. Educational attainments
iv. Morbidity
(a) அ, ஆ மற்றும் இ சரி / i, ii and iii are correct
(b) ஆ மற்றும் இ சரி / ii and iii are correct
(c) இ மற்றும் ஈ சரி / iii and iv are correct
(d) அ, ஆ, இ மற்றும் ஈ சரி / i, ii, iii and iv are correct
7. அரசின் நெறிமுறைக் கொள்கைகளைக் கொண்ட இந்திய அரசிலமைப்பு, விதிகள் 38, 39, 41, 42 மற்றும் 43 ——– கொள்கைளை வெளிப்படுத்துகின்றன.
The ———– principles are included in the Articles 38, 39, 41, 42 and 43 of Indian Constitution. Which are related to Directive principles of State policy?
(a) காந்தியவாத / Gandhian
(b) சமதர்ம / Socialistic
(c) தாராளவாத / Liberal
(d) பொதுவான / General
8. பட்டியல் I-ம் (அரசியல் கட்சி) பட்டியல் II (தலைவர்) உடன் ஒப்பிட்டு, சரியான விடையை தேர்வு செய்யவும்.
பட்டியல் I (கட்சி) பட்டியல் II (தலைவர் உறுப்பினர்)
a. சுதந்திர உழைப்பாளர் கட்சி 1. சி.ராஜகோபாலாச்சாரி
b. பாரதிய ஜன சங்கம் 2. ஏ.கே.கோபாலன்
c. சுதந்திரக் கட்சி 3. பி.ஆர்.அம்பேத்கர்
d. கம்யூனிஸ்ட் கட்சி 4. தீன் தயால் உபாத்யாய்
Match List I (Party) with List II (Associate/Founder) and choose the correct answer from the codes given below:
List I (Party) List II (Founder/Associated with)
a. Independent Labour Party 1. C.Rajagopalachari
b. Bharathiya Jana Sangh 2. A.K.Gopalan
c. Swatantra Party 3. B.R.Ambedhkar
d. Communist Party 4. Deen Dayal Upadhyaya
a b c d
a. 1 2 3 4
b. 3 4 1 2
c. 4 3 1 2
d. 3 4 2 1
9. “அடிப்படை உரிமைகள் என்பது மக்களாட்சியின் கவசம்” எனக் கூறியவர் யார்?
Who stated that “Fundamental Rights are the shield of Democracy?”
(a) பதஞ்சலி சாஸ்திரி / Patanjali Sastri
(b) லால் பகதூர் சாஸ்திரி / Lal Bahadur Sastri
(c) ஸ்ரீ விஷ்ணு சாஸ்திரி / Sri Vishnu Sastri
(d) ராமகிருஷ்ண சாஸ்திரி / Ramakrishna Sastri
10. முகவுரையின் 6ம் பத்தியில் 1976ஆம் ஆண்டு அரசியல் சாசன திருத்தல் சட்டம் மூலமாக சேர்த்த வார்த்தையை தெரிந்து எடுக்கவும்.
Select the word that was inserted in the 6th para of the preamble by an amendment in 1976
(a) சோசலிச/சமதாமமான / Socialist
(b) மதச்சார்பற்ற / Secular
(c) நேர்மை / Integrity
(d) கண்ணியம் / Dignity
11. ———– வழிபாட்டில் துளசிதாசர் மிக சிறந்த துறவி
Tulsidasa was the most prominent saint of ———- cult.
(a) காளி / Kali
(b) இராம / Rama
(c) சிவ / Shiva
(d) வைஷ்ணவ / Vaishnava
12. வர்தாம்பிகா பரிணாயம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
Who was the author of Varadambika Parinayam?
(a) பெத்தண்ணா / Peddanna
(b) திருமலாம்பா தேவி / Thirumalamba Devi
(c) கங்கா தேவி / Ganga Devi
(d) கிருஷ்ணதேவராயர் / Krishna Devaraya
13. அக்பரின் காலத்தில் எந்த மாநிலம் ஏழு போர் புரிந்துகொள்ளும் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது?
Which state was divided into “Seven waring principalities” during Akbar’s reign?
(a) பீஹார் / Bihar
(b) பெங்கால் / Bengal
(c) குஜராத் / Gujarat
(d) ஒரிஸ்ஸா / Orissa
14. சிந்து சமவெளி நாகரிகம் பற்றிய கீழ்க்கண்ட கூற்றில் எது சரியான கூற்று? தேர்வு செய்க:
1. இது மதச்சார்பற்ற நாகரிகம் முதன்மையானதாக காணப்பட்டது. மேலும் மதமானது ஒரு போதும் சமுதாயத்தில் ஆக்கிரமிக்கவில்லை.
2. இக்காலத்தில் ஜவுளித் தொழிற்சாலை உற்பத்தியில் பருத்தி முக்கிய பங்கு வகித்தது.
Regarding the Indus Valley Civilization, consider the following statement:
1. It was predominantly a secular civilization and the religious element though present did not dominate the scene.
2. During the period, Cotton was used for manufacturing textiles in India.
Which of the statements given above is/are correct?
(a) 1 மட்டும் / 1 only
(b) 2 மட்டும் / 2 only
(c) 1 மற்றும் 2 மட்டும் / Both 1 and 2
(d) 1ம் இல்லை 2ம் இல்லை / Neither 1 nor 2
15. இந்திய அரசாங்கத்தின் எந்த நிறுவனம் நாட்டில் ஏற்படும் நில அதிர்வுகளை கண்காணிக்கிறது
The nodal agency responsible for monitoring seismic activity in and around one country is
(a) இந்திய புவியியல் ஆய்வு மையம் / Geological survey of India
(b) இந்திய வானிலை ஆய்வு மையம் / Indian meteorological Dept
(c) அவசர கால செயல்பாட்டு மையம் / Emergency operation centre
(d) தேசிய பேரிடர் மேலாண்மை மையம் / National Disaster Management centre
16. காதர் வகை மண் எங்கே காணப்படுகிறது?
Name the place where the Khadar soil is found.
(a) மலை அடிவாரம் / Foot hills
(b) பீட்மான்ட் சமவெளி / Piedmont plain
(c) வெள்ளச் சமவெளி / Flood plain
(d) மேலே உள்ள அனைத்தும் / All the above
17. மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள மிக உயரமான சிகரம்
——— is the highest peak in the state of Maharashtra
(a) கல்சுபாய் / Kalsubai
(b) குடர்முக் / Kudarmukh
(c) மகாபலேஸ்வர் / Mahabaleshwar
(d) ஹரிஷ்சந்திரா / Harishchandra
18. 2014ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு, ஜப்பானிய இசாமு அகாசாகிக்கு எந்த கண்டுபிடிப்புக்காக வழங்கப்பட்டது?
What is the discovery of Japansese Isamu Akasaki who was awarded Nobel Prize for physics in the year 2014?
(a) சார்பியல் பொதுவான கோட்பாட்டின் கணிப்பு தான் கருந்துகளை உருவாக்கம் என்பதை கண்டுபிடித்தார் / Discovered that black ole formation is a prediction of general theory of relativity.
(b) கோட்பாட்டு அண்டவியல் துறையில் கண்டுபிடிப்புகள் / Discoveries in theoretical cosmology.
(c) லேசர் இயற்பியல் துறையில் கண்டுபிடிப்புகள் / Inventions in the field of laser pysics
(d) நீல ஒளி உமிழும் டையோடு கண்டுபிடிப்பு / Invention of blue light emitting diode
19. “வெங்கட சுப்பையா” எனும் கர்நாடகாவின் புகழ் பெற்ற ஆளுமை ஓர்
“Venkatasubbiah” of Karnataka well known personality, is a
(a) வரலாற்றாசிரியர் / Historian
(b) விரிநில நூலாலர் / Chorographer
(c) இசை வழக்கில் வாய்ப்பட்டாளர் / Vocalist
(d) சொற்களஞ்சிய ஆசிரியர் / Lexicographer
20. பின்வரும் கூற்றில் எவை சரியான கூற்று:
1. இத்தாலி நாட்டினைச் சேர்ந்த Sabaf நிறுவனம் வீட்டு சமையல் சாதனங்களுக்கான பொருளை தயாரிக்கிறது.
2. Cubic modular Systems நிறுவனம் Denmark நாட்டினை சேர்ந்தது
3. Stan a dyne ஒரு இந்திய நாட்டை சார்ந்த நிறுவனமாகும்
4. Eickhoff wind Asia Pvt. Ltd. என்ற நிறுவனம் சிங்கப்பூரை சேர்ந்தது.
From the following statement, which are correct?
1. Italian company Sabaf Manufacturers components for household cooking appliances.
2. Cubic modular systems is from Denmark
3. Stan a dyne is an Indian based company.
4. Eickhoff wind Asia Pvt. Ltd., is from Singapore
(a) 1 மற்றும் 2 / 1 and 2
(b) 2 மற்றும் 3 / 2 and 3
(c) 3 மற்றும் 4 / 3 and 4
(d) 4 மட்டும் / 4 only
21. மரபணுக்கள் மற்றும் குரோமோசோம்களில் ஏற்படும் திடீர் மாற்றம் அழைக்கப்படுவது
A sudden change of a gene or chromosome from one form to another is called
(a) இழத்தல் / Deletion
(b) பன்மடங்காதல் / Duplication
(c) சடுதி மாற்றம் / Mutation
(d) தலைகீழாதல் / Inversion
22. இந்தியாவில் கோட் மல்ஸ் பழங்குடியினர் எங்கே வாழ்கிறார்கள்?
Where Khod Mals tribes live in India?
(a) திரிபுரா / Tripura
(b) சிக்கிம் / Sikkim
(c) குஜராத் / Gujarat
(d) ஒரிசா / Orissa
23. கீழ்காண்பவற்றுள் எந்த கிரகம் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சுற்றும்?
Which of the following planet rotates from East to West?
(a) பூமி / Earth
(b) வியாழன் / Jupiter
(c) செவ்வாய் / Mars
(d) வெள்ளி / Venus
24. அறிவியலை கற்பதால் கற்பவர் வளர்த்துக் கொள்ளுவது
Learning of science mainly helps a learner to develop
(a) மனதின் அறிவியல் அணுகுமுறை / Scientific attitude of mind
(b) புதிய கருத்துகள் / New ideas
(c) பரிசோதனை திறன் / Experimentation skills
(d) வாழ்க்கையை குறித்த நேர்மறையான அணுகுமுறை / Positive attitude towards life
25. தமிழகத்தில் இ-மிஷன் குழு (SEMT) ஏன் உருவாக்கப்பட்டது?
Why the State E-mission team (SEMT) is formulated in Tamil Nadu?
(a) பொருளாதார வளர்ச்சிக்காக IT வல்லுநர்களைப் பயிற்றுவித்தல் / To train IT professionals for economic development
(b) தேசிய மின் ஆளுமை திட்டத்தின்படி திறன் மேம்பாட்டு முயற்சியின் ஓர் பகுதி / As part of capacity building initiatives under National e-Governance plan
(c) தொழிற்சாலைகளுக்கு ஆலோசனைகள் வழங்குதல் / To provide consultancy services for industries
(d) மாவட்ட அளவிலான மின் ஆளுமைத் திட்டங்களுக்கு வழிகாட்டுதல் / To provide guidance to e-Governance projects at the district level
26. நிதி ஆயோக்-ன் அறிக்கையின் படி தமிழ்நாட்டின் நிலையான வளர்ச்சி இலக்கு 2019 குறியிடானது மாநிலங்களின் வரிசையில் ———- இடத்தில் உள்ளது.
According to the (SDG India Index) report of 2019 of NITI Aayog. Tamil Nadu is placed ——— in the sustainable Development Goals India Index?
(a) முதலாவது / First
(b) நான்காவது / Fourth
(c) மூன்றாவது / Third
(d) ஆறாவது / Sixth
27. தமிழ்நாட்டில் குக்கிராமங்களின் மேம்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் பெயர் என்ன?
Name of the scheme introduced for the improvement of village habitation in Tamil Nadu?
(a) சுய உதவித்திட்டம் / Self help scheme
(b) தாய் திட்டம் / Thai scheme
(c) பசுமை திட்டம் / Green scheme
(d) அன்னை திட்டம் / Annai Scheme
28. அரசாங்க வேலைகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை சிபாரிசு செய்த கமிட்டி குழு எது?
Which committee recommended the 27% reservation of the OBC in the government jobs in 1991?
(a) பல்வந்த ராய் கமிட்டி / Balwant Rai Mehta Committee
(b) பிந்தேஷ்வரி பிரசாத் மண்டல் கமிட்டி / Bindeshwari Prasad Mandal Committee
(c) அசோக் மேத்தா கமிட்டி / Ashok Mehta Committee
(d) இதில் எதுவும் இல்லை / None of these
29. தென்னிந்திய நல உரிமைச்சங்கம் பிற்காலத்தில் கீழ்கண்ட பெயரில் அறியப்பட்டது.
The south Indian Liberal Federation was renamed as ———–
(a) சிப்கோ இயக்கம் / Chipko movement
(b) நீதிக் கட்சி / Justice party
(c) திராவிட இயக்கம் / Dravidian party
(d) சுய மரியாதை இயக்கம் / Self Respect movement
30. தமிழ்நாட்டில் உள்ள ——— செயலியல் கற்றல் முறை (ALM) செயல்படுத்தப்படுகிறது
Active Learning Methodology (ALM) is being implemented at the ———- in Tamil Nadu
(a) தொடக்ககல்வி பள்ளிகளில் / Primary school
(b) நடுநிலைப்பள்ளிகளில் / Middle School
(c) உயர்நிலைப்பள்ளிகளில் / High School
(d) மேல்நிலைப் பள்ளிகளில் / Higher Secondary School
31. எந்த குப்த வம்ச ஆட்சியாளர் அலகாபாத் கல் தூண் கல்வெட்டை வெளியிட்டார்?
Which Gupta ruler issued Allahabad stone Pillar Inscription?
(a) முதலாம் சந்திரகுப்தர் / Chandragupta I
(b) சமுத்திரகுப்தர் / Samudragupta
(c) முதலாம் குமாரகுப்தர் / Kumaragupta I
(d) ஸ்கந்த குப்தர் / Skandagupta
32. பொருத்துக:
a. அம்மு ஸ்வாமிநாதன் 1. இளைஞர் கூட்டிணைவு
b. ருக்மணி லக்குமிபதி 2. அரசியல் அமைப்புச்சபை
c. கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் 3. நீல் சிலை சத்யாகிரகம்
d. அஞ்சலி அம்மாள் 4. பூதான இயக்கம்
Match:
a. Ammu Swaminathan 1. Youth League
b. Rukamani Lakshmapathy 2. Constituent Assembly
c. Krishnammal Jaganatha 3. Neil Statue Satyagraha
d. Anjali Ammal 4. Bhoodan Movement
a b c d
(a) 3 1 4 2
(b) 2 1 4 3
(c) 1 4 3 2
(d) 4 1 2 3
33. “நெடுநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்துஇவ் வுலகு”
என்ற குறள் கூறும் கருத்து யாது?
“Alive was he yesterday, but not today.
It is a marvel in the world’s way”.
What is the meaning of this Thirukural?
(a) உலகம் நிலைத்தது / Everthing is permanent in this world.
(b) உலகம் நிலையில்லாதது / Nothing is permanent in, this world
(c) பிறப்பும் இறப்பும் இயற்கை / Birth and Death is natural
(d) உலகம் பெருமையுடையது / The world is a proud place.
34. அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் இந்நான்கு குணங்களும் இடைவிடாது நிற்றல் யாரது இயல்பு?
Whose quality is it to have courage, a liberal hand, wisdom and energy?
(a) அரசனது இயல்பு / Quality of King
(b) அமைச்சனது இயல்பு / Quality of Minister
(c) வீரனது இயல்பு / Quality of a Soldier
(d) புலவரது இயல்பு / Quality of a Poet
35. “கல்லாதவரின் கடை” என்று வள்ளுவர் யாரைக் கூறுகிறார்?
Thiruvalluvar refers to the last stage of the uneducated?
(a) நூல்களைக் கற்று அதிகம் பேசுபவர் / Noolgalai Katru Adhigam Peasupaver (Who read texts and talk too much)
(b) நூல்களைக் கற்று பேச மறுப்பவர் / Noolgalai Katru Peasa Maruppavar (Refusal to read texts)
(c) நூல்களைக் கற்றுக் கொண்டிருப்பவர் / Noolgalai Katru Kondiruppavar (one who reads the text)
(d) நூல்களைக் கற்று அவைக்கு அஞ்சுபவர் / Noolgalai Katru Avaikku Anjubavar (Read the books and Afraid to speak in the congregation)
36. உலகம் உருண்டை வடிவமானது எனக்கூறிய முதல் தமிழ்நூல் எது?
Identify the first Tamil Text which states that the globe is spherical in shape?
(a) திருக்குறள் / Thirukkural
(b) நாலடியார் / Nalladiyar
(c) ஏலாதி / Yeelathi
(d) முதுமொழிக்காஞ்சி / Mudhumozhi Kanchi
37. வரலாற்றுச் செய்திகள் மிகுதியாகக் கொண்ட எட்டுத்தொகை நூல் எது?
Which of the Ettuthogai book contains ample historical incidents?
(a) அகநானூறு / Agananooru
(b) கலித்தொகை / Kalithogai
(c) நற்றிணை / Natrinai
(d) குறுந்தொகை / Kurunthogai
38. பின்வரும் எட்டுத்தொகை நூல்களுள் அதிகமான பாடல்களைக் கொண்ட நூல் எது?
Which one of the following Ettuthokai books consists of more number of songs?
(a) நற்றிணை / Nattrinai
(b) குறுந்தொகை / Kurunthokai
(c) கலித்தொகை / Kalithokai
(d) ஐங்குறுநூறு / Ainkurunooru
39. 1887-ல் தேவ சமாஜத்தை தோற்றுவித்தவர்
The founder of Deva Samaj in 1887 was
(a) சுவாமி தயானந்த சரஸ்வதி / Swamy Dhayananda Saraswathi
(b) சிவ் நாராயண அக்னி ஹோத்திரி / Shiv Narain Agnihotri
(c) ஆத்மராவ் பாண்டுரங் / Athmarao Pandurang
(d) கேசவசந்திர சென் / Kesavachandra Sen
40. எந்த காங்கிரஸ் மாநாட்டில் வகுப்பு வாத பிரதிநிதித்துவம் தவறு என்ற மசோதாவை முகமது அலி ஜின்னா கொண்டு வந்தார்?
In which congress session did Mohammad Ali Jinnah moved a resolution condemning the system of communal representation?
(a) 1910
(b) 1911
(c) 1912
(d) 1913
41. அனைத்திந்தியப் பட்டியல் இனத்தினரின் கூட்டமைப்பினை நிறுவியவர் யார்?
Who was the founder of “All India Scheduled Castes Federation”?
(a) பாபு ஜெகஜீவன் ராம் / Babu Jaga Jeevan Ram
(b) B.R.அம்பேத்கர் / B.R.Ambedkar
(c) Y.P. சவான் / Y.P.Chavan
(d) S.B.சவான் / S.B.Chavan
42. கீழ்க்கண்டவர்களில் யாரை பாலகங்காதர திலகர் “மோட்ச குரு”வாக கருதினார்?
Who among the following was regarded as “Moksha Guru” by Bal Gangadar Tilak?
(a) அன்னாசாகிப் / Anna Sahib
(b) V.D.சவார்க்கர் / V.D.Savarkar
(c) M.G.ராணடே / M.G.Ranade
(d) W.C.பாணர்ஜி / W.C.Banerjee
43. மக்கட் தொகையியல் மாற்றக் கோட்பாட்டின் பல்வேறு கட்டத்தில் “தாழ்ந்த பிறப்பு வீதம் மற்றும் தாழ்ந்த இறப்பு வீதம்” உடைய கட்டத்தில் பின்வரும் எந்த நிலையை ஒத்திருக்கிறது.
Out of various stages in demographic transition theory the stage that exhibits “Low birth rate and low death rate” corresponds to
(a) மக்கள் தொகையில் விரைவான அதிகரிப்பு / Rapid increase in population
(b) மக்கள் தொகையில் நிலையான அல்லது மெதுவான அதிகரிப்பு / Stable or slow increase in population
(c) மக்கள் தொகையில் விரைவான குறைவு / Rapid decrease in population
(d) மக்கள் தொகை வெடிப்பு / Population explosion
44. இந்திய அரசு 2005ஆம் ஆண்டில் பாரத் நிர்மான் என்று அழைக்கப்படும் ஒரு கால எல்லைக்குட்பட்ட திட்டத்தை அறிமுகப்படுத்தியது. கீழ்கண்டவற்றில் பாரத் நிர்மான் திட்டத்துடன் தொடர்பில்லாதது எது?
The government of India launched a time bound plan in 2005 called Bharath Nirman Yojana. Which one of below is not connected with Bharat Nirman Yojana?
(a) கிராமப்புற இணைப்பு / Rural connectivity
(b) கிராமப்புற வீட்டு வசதி / Rural housing
(c) சுய உதவி குழு / Self help group
(d) கிராமப்புற நீர் அளிப்பு / Rural water supply
45. பின்வருவனவற்றில் எது மத்திய அரசின் கீழ் வருகிறது?
Which of the following subject comes under Central Government?
(a) வங்கி / Banking
(b) விவசாயம் / Agriculture
(c) சிறை / Prison
(d) பொது சுகாதாரம் / Public Health
46. மீள் ரெப்போ விகிதம் என்பது:
1. வணிக வங்கிகளுக்கு மைய வங்கி குறுகிய கால கடன் வழங்கும் பொழுது விதிக்கும் வட்டி விகிதம்
2. வணிக வங்கிகளிடமிருந்து வாங்கும் கடனுக்கான இந்திய ரிசர்வ் வங்கி கொடுக்க விரும்பும் வட்டி விகிதம்
3. வங்கி விகிதக் கொள்கை
4. மாறும் தொகுப்பு வரையறை
Reverse Repo Rate (RRR) means:
1. The rate at which the RBI is willing to lend to commercial banks
2. The rate at which the RBI is willing to borrow from the commercial banks
3. Bank rate policy
4. The variable portfolio ceiling.
(a) 1
(b) 3
(c) 2
(d) 4
47. பின்வரும் எந்த குழு மைய அரசு வலிமை குறைவாகவும் மாநில அரசுகள் அதிகாரமான சுதந்திரத்தோடு செயல்படுவதற்கு வித்திட்டது?
Which mission endorsed the plan for a Central Government with limited powers and relatively strong provinces having considerable degree of autonomy with all the residuary powers?
(a) 1946, கேபினட் பணிக்குழு / 1946, Cabinet Mission
(b) 1942, கிர்ப்ஸ் பணிக்குழு / 1942, Cripps Mission
(c) அரசியல் சாசன அமைப்புக்குழு, 1949 / Constituent Assembly 1949
(d) சைமன் ஆணையம், 1928 / Simon Commission, 1928
48. பின்வரும் பொறுப்பாளர்களுள் யார் கீழ் அவை மற்றும் மேலவையின் செயலகத்தை கட்டுப்படுத்தி, தலைமையேற்று வழி நடத்தி செல்கின்றனர்?
Who among the following controls the Secretariat of the Loksabha and Rajya Sabha, respectively?
(a) ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி / President and Vice President respectively
(b) பிரதம மந்திரி மற்றும் மத்திய பாராளுமன்றத்துறை அமைச்சர் / Prime Minister and Union Parliamentary Affairs Minister
(c) பிரதம மந்திரி மற்றும் உள்துறை அமைச்சர் / Prime Minister and Home Minister
(d) கீழவையின் சபாநாயகர் மற்றும் மேலவையின் தலைவர் முறையாக / Speaker and Chairman respectively
49. இந்திய அரசியலமைப்பின் எந்த அட்டவணையில் பஞ்சாயத்து முறையின் ஆற்றல், அதிகாரம் மற்றும் பொறுப்புக்களைப் பற்றி குறிப்பிடுகிறது?
Which schedule of the Indian Constitution specifies powers, authority and responsibilities of Panchayat?
(a) ஏழாவது அட்டவணை / Seventh schedule
(b) ஆறாவது அட்டவணை / Sixth Schedule
(c) பத்தாவது அட்டவணை / Tenth Schedule
(d) பதினொன்றாம் அட்டவணை / Eleventh Schedule
50. துணை ஜனாதிபதிகளின் சரியான வரிசையை தேர்ந்தெடுக்கவும்.
Choose the correct order of the Vice Presidents based on the succession.
(a) கே.ஆர்.நாராயணன், பி.டி.ஜெட்டி, ஜாகிர் ஹீசேன், பி.எஸ்.ஷெகாவட் / K.R.Narayanan, B.D.Jatti, Zakir Hussain, B.S.Shekhawat
(b) ஜாகிர் ஹீசேன், பி.எஸ்.ஷெகாவட், பி.டி.ஜெட்டி, கே.ஆர்.நாராயணன் / Zakir Hussain, B.S.Shekhawat, B.D.Jatti, K.R.Narayanan
(c) ஜாகிர் ஹீசேன், பி.டி.ஜெட்டி, கே.ஆர்.நாராயணன், பி.எஸ்.ஷெகாவட் / Zakir Hussain, B.D.Jatti, K.R.Narayanan, B.S.Shekhawat
(d) பி.எஸ்.ஷெகாவட், ஜாகிர் ஹீசேன், பி.டி.ஜெட்டி, கே.ஆர்.நாராயணன் / B.S.Shekhawat, Zakir Hussain, B.D.Jatti, K.R.Narayanan
51. 1976-ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பின் முகப்புரையில், “சமயசார்பற்ற” என்ற வார்த்தை எத்தனையாவது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின்படி சேர்க்கப்பட்டது?
Which amendements in 1976, inserting the word secular in the preamble of the Indian constitution?
(a) 41வது அரசியலமைப்பு திருத்தம் / 41 Amendment
(b) 42வது அரசியலமைப்பு திருத்தம் / 42 Amendment
(c) 44வது அரசியலமைப்பு திருத்தம் / 44 Amendment
(d) 45வது அரசியலமைப்பு திருத்தம் / 45 Amendment
52. மனிதனின் தடயங்கள் முதன் முதலில் இந்தியாவில் எங்கு கண்டெடுக்கப்பட்டன?
The first traces of a human being in India is found in the
(a) தக்காணம் / Deccan
(b) நர்மதா / Narmada
(c) இந்து-கங்கை / Indo-Gangetic
(d) சம்பால் / Chambhal
53. பசுமை ஆற்றலின் மிகப்பெரிய உற்பத்தியாளர்
The largest producer of green energy is
(a) சூரிய சக்தி / Solar power
(b) புனல் மின்சக்தி / Hydro power
(c) காற்று சக்தி / Wind power
(d) புவிவெப்ப சக்தி / Geothermal power
54. எந்த மரம் “படைப்பு மற்றும் அறிவின் மரமாக” சிந்து சமவெளி நாகரீக காலத்தில் கருதப்பட்டது?
Which tree was regarded as the tree of creation and knowledge during Indus Valley civilization?
(a) அரச மரம் / Pipal Tree
(b) மாமரம் / Mango Tree
(c) வேப்ப மரம் / Neem Tree
(d) புளியமரம் / Tamarind Tree
55. அஸ்பெஸ்டாசிஸ் என்ற நாள்பட்ட அழற்சி நிலையால் திசுக்கள் பாதிப்படையும் உறுப்பு
Asbestosis is a chronic inflammatory condition that effects the tissue of
(a) மூளை / Brain
(b) இதயம் / Heart
(c) நுரையீரல் / Lungs
(d) சிறுநீரகம் / Kidney
56. கீழ்க்கண்டவற்றை பொருத்துக:
பழங்குடியினர் மாநிலம்
(a) அகா 1. அஸ்ஸாம்
(b) அகிர்ஸ் 2. லடாக்
(c) பெடா 3. அருணாச்சல் பிரதேஷ்
(d) கார்பி 4. உத்திரப்பிரதேஷ்
Match the following:
Tribe State
a. Aka 1.Assam
b. Ahirs 2. Ladakh
c. Beda 3. Arunachal Pradesh
d. Karbe 4. Uttar Pradesh
a b c d
(a) 3 4 2 1
(b) 3 2 4 1
(c) 4 1 2 3
(d) 2 3 1 4
57. சீனாவில் சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் நாள்
International Children’s day celebrated in China on
(a) 21 மே / 21st May
(b) 1 ஜீன் / 1st June
(c) 31 ஆகஸ்ட் / 31st August
(d) 1 நவம்பர் / 1st November
58. வேளாண்மை உற்பத்தியில் முதன்மையான நாடுகளை இறங்கு வரிசையில் தெரிந்தெடுக்க:
Arrange in descending, the top agricultural producing countries in the world?
(a) சீனா-இந்தியா-அமெரிக்க ஐக்கிய நாடுகள்-பிரேசில் / China-India-United States-Brazil
(b) சீனா-அமெரிக்க ஐக்கிய நாடுகள்-பிரேசில்-இந்தியா / China-United States-Brazil-India
(c) சீனா-அமெரிக்க ஐக்கிய நாடுகள்-இந்தியா-பிரேசில் / China-United States-India-Brazil
(d) அமெரிக்க ஐக்கிய நாடுகள்- சீனா -இந்தியா-பிரேசில் / United States-China-India-Brazil
59. கீழ்கண்டவற்றை பொருத்துக:
கட்சியின் பெயர் சின்னம்
(a) ஜனதா தலம் (U) 1. ஏர்கலப்பை
(b) ஜார்கண்ட முக்தி மோர்சா (JMM) 2. ஏணிப்படி
(c) இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 3. வில்லும் அம்பும்
(d) ஜம்மு காஷ்மீர் மாநாட்டு கட்சி 4. அம்பு
Match the following:
Name of the party Symbol
(a) Janata Dal (JD (U)) 1. Plough
(b) Jharkhand Mukti Morcha (JMM) 2. Ladder
(c) Indian Union Muslim League 3. Bow and Arrow
(d) Jammu & Kashmir National Conference 4. Arrow
a b c d
a. 2 3 4 1
b. 3 4 1 2
c. 4 3 2 1
d. 1 2 3 4
60. “ECLGS” திட்டம் என்பது
“ECLGS” scheme is a
(a) அவசரகாலக் கடன் உத்தரவாதத் திட்டம் / Emergency Credit Line Guarantee Scheme
(b) அவசரகாலக் கடன் மற்றும் சட்ட உத்தரவாதத் திட்டம் / Emergency Credit and Law Guarantee Scheme
(c) அவசரகாலக் கடன் மற்றும் ஆயுள் உத்தரவாதத் திட்டம் / Emergency Credit and Life Guarantee Scheme
(d) அவசரகாலக் கடன் உத்தரவாத அமைப்பு / Emergency Credit Loan Guarantee System
61. போலியோவிற்க்கான தடுப்பூசி என்ன?
What is the Vaccine given for polio?
(a) மந்தமாக்கப்பட்ட போலியோ மருந்து / IPV (inactivated Polio Vaccine)
(b) வாய்வழி போலியோ தடுப்பு மருந்து / OPV (Oral Polio Vaccine)
(c) பிசிஜி / BCG
(d) மந்தமாக்கப்பட்ட போலியோ தடுப்பு மருந்து மற்றும் வாய்வழி போலியோ தடுப்பு மருந்து / IPV and OPV
62. பழங்களின் கெடா நிலைக்காலத்தைக் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும் கதிர்களானவை
The rays markedly increasing Shelf-Life of fresh fruits are
(a) X கதிர்கள் / X rays
(b) காமா கதிர்கள் / Gamma Rays
(c) பீட்டா கதிர்கள் / Beta rays
(d) ஆல்பா கதிர்கள் / Alpha rays
63. ஒலி ஆற்றல் பெருக்கியின் அலகு டெசிபல் என்று குறிப்பதற்கான காரணம் என்ன?
The reason for expression audio power amplification in dB unit is
(a) நம்முடைய செவியுணர்வு / our ear response
(b) எளிதில் கணக்கிட முடியும் / easy calculation
(c) வேறு எந்த அலகும் இல்லை / no other unit
(d) கிரகாம் பெல்-லை கவுரவிப்பதற்காக / to honour Graham Bel
64. பிரச்சினைகளை ———- வேகத்தையும் திறனையும் பகுத்தறிதல் ஆய்வு திறன் மேம்படுத்துகிறது.
Deductive reasoning enhances the speed and efficiency ——— problems.
(a) தீர்ப்பதில் / in solving
(b) உருவாக்குவதில் / in creating
(c) துவக்க முயற்சியில் / in initiating
(d) போலச் செய்வதில் / in imitating
65. சென்னையின் 5-வது நீர்த்தேக்கம் கட்டப்படுவது
Chennai 5th water reservoir is being built in
(a) பூண்டி / Poondi
(b) திருவள்ளுர் / Thiruvallur
(c) சோளாவரம் / Cholavaram
(d) செங்குன்றம் / Redhills
66. தமிழக கல்வித் திட்டத்தில் மூன்று மொழி ஏற்றுக் கொண்ட ஆண்டு
Three language formula was adopted in the education system of Tamil Nadu in the year?
(a) 1975
(b) 1965
(c) 1985
(d) 1970
67. 1987ல் தொடங்கப்பட்ட, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிக்கான ஆதரவுத் திட்டம், யாருக்கான நலத்திட்டம்?
The programme of support to Training-cum-employement (STEP) was launched in 1987, for the welfare of
(a) இளைஞர்கள் / Youth
(b) பெண்கள் / Women
(c) மாற்றுத்திறனாளிகள் / Differently abled
(d) மாணவர்கள் / Studetns
68. வரிசை I ஐ வரிசை II-உடன் பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடுக்க:
வரிசை I வரிசை II
a. தொட்டில் குழந்தை திட்டம் 1. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்களை பாதுகாப்பது
b. சேவை இல்லங்கள் 2. கிராமப்புற பெண்களுக்கு அதிகாரமளிப்பு
c. சகி 3. பெண் குழந்தைகளை பாதுகாப்பது
d. மகிளா சக்தி கேந்திரா 4. வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவுவது
Match List I with List II and choose the right answer:
List I List II
(a) Cradle Baby scheme 1. Take care of economically backward women
(b) Service Homes 2. Empowerment of rural women
(c) “SAKTHI” 3. Save the girl children
(d) Mahila Sakti Kendra 4. Support women affected by violence
a b c d
(a) 1 4 2 3
(b) 2 1 4 3
(c) 3 1 4 2
(d) 4 2 1 3
69. பெரியார் ஆதரித்த சுயமரியாதை திருமணங்கள் பற்றிய பின்வரும் சொற்றொடர்களை கவனிக்கவும்.
சுயமரியாதை திருமணத்தோடு தொடர்பில்லாத சொற்றொடரை விளக்கவும்.
Consider the following statements regarding self respect marriages advocated by Periyar.
Bring out the statement which is not a part self respect marriages.
(a) பிராமண புரோகிதர் இல்லாது நடத்தப்பட்டது / Marriage-conducted without a Brahmin priest
(b) எந்த மதச்சார்பு வழக்கங்களும் பின்பற்றப்படவில்லை / No religious ceremony in the marriages
(c) அரசுப் பதிவாளர் முன்னிலையில் நடைபெற்றது / Took place in the presence of a Government Registrar
(d) மணமகன் மற்றும் மணமகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் / Ooth taken by the bride and bridegroom
70. காலமுறைப்படி வரிசைப்படுத்துக:
அ. சாட்லர் குழு
ஆ. ரெலிக் குழு
இ. பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு
ஈ. இராதாகிருஷ்ணன் குழு
Arrange Chronologically
i. Sadlar commission
ii. The Raleigh Commission
iii. University Grants Commission
iv. Radhakrishna Comission
(a) ஆ, அ, ஈ, இ / ii, i, iv, iii
(b) அ, ஆ, ஈ, இ / i, ii, iv, iii
(c) இ, அ, ஆ, ஈ / iii, i, ii, iv
(d) ஆ, அ, இ, ஈ / ii, i, iii, iv
71. கீழ்க்கண்ட இணைகளைக் கவனி:
அ. கோபால கிருஷ்ண கோகலே ஜி.ஏ.நடேசன்
ஆ. விஜய ராகவாச்சாரியார் லாலா லஜ்பத் ராய்
இ. வ.உ.சிதம்பரம் சுப்ரமணிய சிவா
ஈ. டி.ரங்காச்சாரியார் வி.எஸ்.சீனிவாசன் சாஸ்திரி
மேற்கண்ட இணையில் எது தவறானது?
Consider the following pairs:
I. Gopala Krishna Gokhale G.A.Natesan
II. vijaya Ragavachari Lala Lajpat Roi
III. V.O.Chidambaram Subramaniya Siva
IV. T.Rengnchari V.S.Srinivasa Sastri
Which of the pair/pairs given above is/are incorrect?
(a) அ மற்றும் ஈ மட்டும் / I and IV only
(b) ஆ மட்டும் / II only
(c) ஈ மட்டும் / IV only
(d) ஆ மற்றும் இ மட்டும் / II and II only
72. இடை பழங்கற்காலம் பற்றிய பின்வரும் சொற்றொடர்களை கவனிக்க, பின் சரியான பதில்களை தேர்ந்தெடுத்து எழுதுக:
அ. கருவிகள் அளவில் சிறியன.
ஆ. அதிராம்பாக்கம், குடியம், வடமதுரை ஆகிய இடங்களில் நடந்த அகழ்வராய்ச்சியில் கிடைத்துள்ளன.
இ. முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன.
ஈ. உணவுப்பயிர்கள் பயிரிட்டனர்
Consider the statements on the middle Palaeolithic period and pick out the correct answer.
i. The tools are smaller in size
ii. They are found a Attirampakkam, Gudiyam and Vadamadurai
iii. Urn burials have been found
iv. Cultivation of food plants is an important trait
(a) அ மற்றும் ஆ சரி / i and ii are correct
(b) ஆ மற்றும் இ சரி / ii and iii are correct
(c) இ மற்றும் ஈ சரி / iii and iv are correct
(d) அ மற்றும் ஈ சரி / i and iv are correct
73. எந்த இனக்கூட்டம் சிந்துவெளி நாகரிகத்தினை உருவாக்கியது?
Which racial group authored Indus valley civilisation?
(a) ஆரியர் / Aryan
(b) திராவிடர் / Dravidian
(c) ஆரியர் அல்லாதார் / Non-Aryan
(d) முந்தைய ஆரியர் / Pre-Aryan
74. ——–, ———-, ———–, இவை மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
மேற்காணும் திருக்குறளில் எம்மூன்றும் கெட நோய் கெடும் என்கிறார் வள்ளுவர்?
———— and ———— and ———– error’s triple tyranny is oer. Their very names for aye extinct, then pain shall be no more.
In this Thirukkural what three things that far away from human being?
(a) காமம், வெகுளி, மயக்கம் / Lust, Innocent, Dizzy
(b) அழுக்காறு, அவா, வெகுளி / Envy, Aspiration, Innocent
(c) நிம்பிரி, மயக்கம், அவா / Nimpiri, Dizzy, Aspiration
(d) மயக்கம், அவா, காமம் / Dizzy, Aspiration, Lust
75. “சூல்” நாவலின் மையக் கதை எது?
Which is the central theme of the Novel “Sool”?
(a) சாதிப்பாகுபாடு / Caste discrimination
(b) தண்ணீர் பிரச்சினை / Water Problem
(c) மகளிர் மேம்பாடு / Women Empowerment
(d) குழந்தைத் திருமணம் / Child Marriage
76. புக்கர் சீனாவின் —— வம்சத்திற்கு தூதுவரை அனுப்பினார்.
Bukka sent an embassy to ——- dynbasty in China.
(a) மிங் / Ming
(b) சோ / Zhou
(c) ஹான் / Han
(d) சுய் / Sui