General StudiesTnpsc

Tnpsc Model Question Paper 49 – General Studies in Tamil & English

1. பின்வருவனவற்றை பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க:

அ. கிழக்கிந்திய அசோசியேசன் 1. 1885

ஆ. சென்னைவாசிகள் சங்கம் 2. 1884

இ. சென்னை மகாஜன சங்கம் 3. 1852

ஈ. இந்திய தேசிய காங்கிரஸ் 4. 1866

Match and choose the correct answer from code given below:

a. East Indian Association 1. 1885

b. Madras Native Association 2. 1884

c. Madras Mahajana Sabha 3. 1852

d. Indian National Congress 4. 1866

a b c d

a. 1 3 2 4

b. 1 2 3 4

c. 3 4 1 2

d. 4 3 2 1

2. சுபாஷ் சந்திரபோஸ் ____________ என்பதை பொதுவுடைமைக் கட்சியாக மாற்றினார்

Subash Chandra Bose converted the ________ into Socialist Party

(a) சாம்வாதி சங்கம் / Samyavadi Sangha

(b) ஆரிய சமாஜம் / Arya Samaj

(c) பிரம்ம சமாஜம்/ Brahma Samaj

(d) பிரார்த்தன சமாஜம் / Prarthana Samaja

3. பின்வரும் காரணங்களுக்காக 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் நாள் காங்கிரசு ‘வெள்ளையனே வெளியேறு’ தீர்மானத்தை இயற்றியது

1. கிரிப்ஸ் தூதுக்குழுவின் தோல்வியினால்

2. இந்தியாவை நோக்கி ஜப்பானியப் படைகள் புறப்பட்டதனால்

3. ஜின்னாவின் கோரிக்கைக்காக

4. ஆங்கிலேயர்கள் இந்தியர்களின் விடுதலை கோரிக்கையை ஏற்றுக் கொள்ள கட்டாயப்படுத்துவதற்காக

5. சோவியத் யூனியனை ஆதரிப்பதற்காக

The congress passed the ‘Quit India’ Resolution on 8th August, 1942 for the following reasons.

i. Failure of the cripps mission

ii. Japanese forces moved towards India

iii. Jinnah’s demand

iv. To compel the British to accept the demand of Indians for Independence

v. To support the Soviet Union

(a) 1,2 மற்றும் 4 சரி / i,ii and iv are correct

(b) 1,2,3 மற்றும் 5ம் சரி / i,ii,iii and v are correct

(c) 1,2,4 மற்றும் 5ம் சரி / i,ii,iv and v are correct

(d) மேலே கூறிய அனைத்தும் சரி / All the above are correct

4. மாநிலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவும், மதிய உணவும் வழங்குகிறது

_______ state in India provides breakfast in Government schools along with the mid-day meals.

(a) கேரளா / Kerala

(b) கர்நாடகா / Karnataka

(c) தமிழ்நாடு / Tamil Nadu

(d) தெலுங்கானா / Telangana

5. தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான இடங்களின் எண்ணிக்கை

The number of seats in the Tamil Nadu Legislative Assembly for SCs and STs is

(a) 44 மற்றும் 2/ 44 and 2

(b) 46 மற்றும் 4/ 46 and 4

(c) 48 மற்றும் 10/ 48 and 10

(d) 40 மற்றும் 12/ 40 and 12

6. ஏற்றுமதி தயாரிப்பு குறியீடு 2020 இன்படி தமிழ்நாட்டில் ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கைக்கு ________ ஒரு எடுத்துக்காட்டு

_______ is an example of export promotion policy in Tamil Nadu as per the export preparation index 2020

(a) துறைவாரியான திட்டவட்டமான கொள்கை குறைபாடு / Lack of sector-wise definite policy

(b) ஏற்றுமதிச் செய்திமடலை எப்போதாவது வெளியிடுதல் / Export news letters are occasionally published

(c) தொழிற்சாலைகளுக்கான துறை வாரி ஏற்றுமதித் திட்டங்கள் / Sector specific export plans for industries

(d) அனைத்து ஏற்றுமதியாளர்களுக்கும் நிதியுதவியளித்தல் / Financial aid to all exporters

7. பொருத்துக:

பொருட்கள் புவிசார் குறியீட்டு இடங்கள்

அ. மஞ்சள் 1. தஞ்சாவூர்

ஆ. வீணை 2. ஈரோடு

இ. மலைப்பூண்டு 3. காரைக்குடி

ஈ. கண்டாங்கிச் சேலை 4. கொடைக்கானல்

Match the following:

Products Georaphical indications Tagged place

a. Turmeric 1. Thanjavur

b. Veena 2. Erode

c. Hill Garlic 3. Karaikudi

d. Kandangi Saree 4. Kodaikanal

a b c d

a. 1 2 3 4

b. 4 3 2 1

c. 2 1 4 3

d. 2 4 3 1

8. சரியான அறிக்கையைத் தேர்வு செய்க:

IPOP திட்டமானது வயதானவர்களுக்குப் பின்வருவனவற்றைக் கொடுத்து தரத்தை மேம்படுத்துவதாகும்.

1. தங்குமிடம் மற்றும் மருத்துவ பராமரிப்பு

2. தையல் பயிற்சி

3. கடன் வசதி

4. எழுத்தறிவு மேம்பாடு

Choose the correct statement:

IPOP scheme is to improve the quality of the older persons by providing

i. Shelter and medical care

ii. Tailoring Training

iii. Loan facilities

iv. Literacy promotion

(a) 1 மற்றும் 2 மட்டுமே / i and ii only

(b) 2 மற்றும் 4 மட்டுமே / ii and iv only

(c) 1 மட்டும் / i only

(d) 3 மட்டும் / iii only

9. தமிழ்நாட்டின் முதல் மகளிர் சபைக்கூட்டம் நடைபெற்றது

Tamil Nadu’s First Women’s council meeting was held on

(a) 10 ஜனவரி, 2014/ 10 January, 2014

(b) 12, ஜனவரி 2014/ 12 January, 2014

(c) 10, பிப்ரவரி 2014/ 10 February, 2014

(d) 12 பிப்ரவரி 2014/ 12 February, 2014

10. கூற்று (A): சங்கொலியின் ஆசிரியர் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்

காரணம் (R): இவர் பாரதியாரின் பாடல்களைத் தொகுத்தவர்

Assertion (A) : Namakkal Kavignar Ramalingam was the Author of Sangoli

Reasong (R) : He edited Bharathi’s poems

(a) (A) மற்றும் (R) இரண்டும் சரி / Both (A) and (R) are true

(b) (A) தவறு, (R) சரி / (A) is false, (R) is true

(c) (A) சரி ஆனால் (R) தவறு / (A) is correct but (R) is false

(d) (A) மற்றும் (R) இரண்டும் தவறானது / Both (A) and (R) are false

11. அரசியல் கேலிச் சித்திரங்களை வெளியிட்ட முதல் தமிழ செய்தித்தாள்

The first Tamil news paper to publish political cartoons is

(a) யங் இந்தியா / Young India

(b) இந்தியா / The India

(c) நவசக்தி / The Navasakthi

(d) சுதேசமித்ரன் / Swadeshamitran

12. “தேவ பாடையின் இக்கதை செய்தவர் மூவர்” என்ற கம்பரின் கூற்றின்படி

1. இராமாயணம் செய்த மூவர்-வான்மீகி, வசிட்டர், போதாயனர்

2. வசிட்டர் செய்தது வசிட்ட ராமாயணம்

3. போதாயனர் செய்தது போதாயன ராமாயணம்

4. வியாசரும் ஒரு ராமாயணம் செய்துள்ளார். அது அத்யாத்ம ராமாயணம் என்று கூறுவாரும் உளர்

“Deva paadayin ikkadhai Seithavar Moovar” – Sayings of Kambar reveals

1. Ramayana was written by three poets namely – Vaanmeegi, Vashisttar, Bodhayanaar

2. Vashishtar wrote Vashitta Ramayana

3. Bodhayanaar wrote Bodhayana Ramayana

4. Vyasar too wrote a Ramayana which is title as Adhyatma Ramayana

(a) இதில் 4 தவறு, ஏனையன சரி / 4 is incorrect; other correct

(b) 1,2,3,4 ஆகிய அனைத்தும் சரி / 1,2,3,4 all are correct

(c) 3 தவறு, ஏனையன சரி / 3 is incorrect; others correct

(d) 2,3,4 தவறு, 1 மட்டும் சரி / 2,3,4 are incorrect; 1 alone is correct

13. அன்னிபெசன்ட் அம்மையார் அவர்கள் “தியோசோபீகல்” சொசைட்டியில், இணைந்தார். அதில் ‘தியோசோபி” யின் பொருள் விளக்கம் யாது?

Dr.Annie Besant joined “Theosophical Society”, What does “Theosophy” means in this context?

(a) தெய்வீக உரிமை / Divine Right

(b) அரசியல் சுதந்திரம் / Political Freedom

(c) தெய்வீக ஞானம் / Divine wisdom

(d) ஞானம் மற்றும் அறிவு / Wisdom and knowledge

14. நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்

உண்மை அறிவே மிகும் – என்ற குறள் எந்த அதிகாரத்தில் அமைந்துள்ளது?

To which section the following Kural belongs to

“Nunniya Noolpala Karpinum Matrunthan

Unmai Arivae migum”

(a) ஊழ்/ Oozh

(b) கல்வி / Kalvi

(c) பெருமை / Perumai

(d) நிறையழிதல் / Nirai alithal

15. முதலமைச்சர் சுப்பராயன் தலைமையில் மூன்றாவது முறையாக நீதிக்கட்சி ஆட்சி அமைத்தபோது சுதந்திர அமைச்சரவையில் முதல் பெண் சபாநாயகர் யார்?

Who was the first woman speaker of the independent Cabinet when the Justice party ruled for the third time under chief Minister Subbarayan?

(a) டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டி / Dr.Muthu Lakshmi Reddy

(b) ருக்மணி லஷ்மிபதி /Rukmani Lakshmipathy

(c) சரோஜினி நாயுடு / Sarojini Naidu

(d) டாக்டர். அன்னி பெசன்ட் / Annie Besant

16. கூற்று(A) : ஹீமாயூன் மிகக் கொடூரமான பாமினி சுல்தான்

காரணம் (R) : பதவியேற்புக்கு முன் சகோதரர் சண்டை ஏற்பட்டது

Assertion (A) : Humayun was cruel Bhamini Sultan

Reason (R) : There was a fratricidal war before his accession

(a) (A) சரி (R) தவறு / (A) is correct (R) is wrong

(b) (A) (R) இரண்டும் சரி / Both (A) and (R) are correct

(c) (A) (R) இரண்டும் தவறு / Both (A) and (R) are wrong

(d) (A) சரி (R) (A) க்கு சரியான விளக்கம் / (A) is correct (R) is the correct explanation of (A)

17. குப்தர் காலத்தில் இருந்த கணிதவியல் மற்றும் வானியலாளராக சிறந்து விளங்கியவரின் பெயரைக் குறிப்பிடுக

Name the noted Mathematician, Astronomer of the Gupta Period.

(a) வாத்ஸயாயினர் / Vatsyayana

(b) ஆரியபட்டர் / Aryabhata

(c) வராகமித்ரா / Varahamitra

(d) காளிதாஸர் / Kalidasa

18. பின்வருவனவற்றில் எது சரியாக பொருந்தவில்லை?

Which of the following is not correctly matched?

(a) ஆக்சின்-நுனி ஆதிக்கம் / Auxin – Apical dominance

(b) ஜிபெரெலின் – அமைலேஸ் செயல்பாடு அதிகரிக்க செய்தல் / Giberellin – increases amlyase activity

(c) சைட்டோகைனின் – முதிர்ச்சியை ஊக்குவிக்கிறது / Cytokinin – Promotes Senescence

(d) எத்திலீன் – பழங்களை பழுக்க வைக்கும் / Ethylene – Fruit ripening

19. பின்வருவனவற்றுள் ஒன்று தவறான விரிவாக்கம் ஆகும்.

One of the following is incorrect expansion?

(a) ISRO – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் / Indian Space Research Organisation

(b) SCERT – மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் நிறுவனம் / State Council of Educational Research and Teaching

(c) CSIR – அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில் / Council of Scientific and Industrial Research

(d) UNESCO – ஐக்கிய நாடுகளின் கல்வி, மற்றும் கலாச்சார அமைப்பு / United Nations Educational, Scientific and Cultural Organisation

20. ட்ரெபிளான் ________இல் இருந்து தயாரிக்கப்படுகிறது.

The Treflan is manufactured from

(a) p – நைட்ரோ டொலுவீன் / p – Nitro toluene

(b) p – குளோரோ பென்சோடிரைஃபுளோரைடு / p – Chloro Benzotrifluoride

(c) 3 – நைட்ரோ டொலுவீன் / 3 – Chloro toluene

(d) 2 – குளோரோ டொலுவீன் / 2 – Chloro toluene

21. குளிர் சாதனப் பெட்டியில் வைக்கும் போது ஏன் பிஸ்கட் மொருமொருப்பு தன்மை மாறாமல் இருக்கிறது?

How do the biscuits, remain Crisp, when kept in a fridge?

(a) குறைந்த ஈரப்பதம் / Low humidity

(b) குறைந்த வெப்பநிலை / Low Temperature

(c) அதிக பாதுகாத்தல் / High Preservation

(d) இவற்றில் ஏதுமில்லை/ None of these

22. இந்தியாவில் மாவட்ட அளவில் ஏற்றுமதியை ஊக்குவிக்க, மாவட்ட அளவில் ஏற்றுமதி வளர்ச்சிக் குழுக்கள் அமைக்கப்பட்ட நிலையில் இதனை அமைக்காத இந்திய மாநிலம்

To develop exports at district level, district export promotion committees have been formed in all states in India except in

(a) அசாம் / Assam

(b) நாகாலாந்து / Nagaland

(c) தெலுங்கானா / Telangana

(d) மேற்கு வங்காளம் / West Bengal

23. கீழே கொடுக்கப்பட்டுள்ள காற்றுடன் அதன் வீசுகிற இடத்தைப் பொருத்துக:

தலக்காற்று வீசுகின்ற இடம்

அ. சினூக் 1. ராக்கிமலை

ஆ. ஹர்மாட்டன் 2. மத்திய ஆப்பிரிகா

இ. காரபூரன் 3. மத்திய ஆசியா

ஈ. லூ 4. இந்தியா மற்றும் பாகிஸ்தான்

Match the local wind systems with their locations:

Local Winds Locations

a. Chinook 1. Rocky mountains

b. Harmattan 2. Central Africa

c. Karaburan 3. Central Asia

d. Loo 4. Indian and Pakistan

a b c d

a. 1 2 3 4

b. 3 1 2 4

c. 3 1 2 4

d. 3 4 2 1

24. சர்வதேச அளவில் மக்கள் நல அவசரம் கருதி உலக சுகாதார நிறுவனம் அறிவித்த நோயின் பெயர் என்ன?

WHO has recently declared which outbreak as a “Public Health Emergency of International Concern”?

(a) தக்காளிக் காய்ச்சல் / Tomoto Flu

(b) குரங்கு காய்ச்சல் / Monkey pox

(c) பறவைக் காய்ச்சல் / Bird-Flu

(d) ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் / African Swine fever

25. இயற்கை காரத்தன்மையின் முக்கிய ஆதாரங்கள் பாறைகள் ஆகும். இதில் _________ சேர்மங்கள் உள்ளன.

The main sources of natural alkalinity are rocks, which contain _________ compounds

(a) இரும்பு, அலுமினியம், கால்சியம் / Iron, Aluminium, calcium

(b) போரேட்டுகள், சல்பர்கள் மற்றும் பாஸ்பேட்டுகள் / Borates, sulphurs and phosphates

(c) கால்சியம், சோடியம், பொட்டாசியம் / Calcium, sodium, potassium

(d) கார்பனேட், பைகார்பனேட் மற்றும் ஹைட்ராக்சைடு / Carbonate, bicarbonate and hydroxide

26. கீழே கொடுக்கப்பட்டுள்ள மாநிலங்கள் இடையேயான நதி நீர் பிரச்சனைகளை அதன் தொடர்புடைய மாநிலங்களோடு சரியாக பொருத்துக:

அ. யமுனா நதி நீர் பிரச்சனை 1. மகாராஷ்டிரா, கர்நாடகம், ஆந்திரா பிரதேசம்

ஆ. நர்மதா நதி நீர் பிரச்சனை 2. கர்நாடகம், கேரளா, தமிழ்நாடு

இ. கிருஷ்ணா நதி நீர் பிரச்சனை 3. மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, இராஜஸ்தான்

ஈ. காவிரி நதி நீர் பிரச்சனை 4. உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், ஹிமாசல்

பிரதேசம்

Correctly Match the interstate water dispute in India with their respective states given below:

a. Yamuna river Water Dispute 1. Maharashtra, Karnataka, Andhra Pradesh

b. Narmada river Water Dispute 2. Karnataka, Kerala, Tamil Nadu

c. Krishna river Water Dispute 3. Madhya Pradesh, Maharashtra, Rajastan

d. Kaveri river Water Dispute 4. Uttar Pradesh, Madhya Pradesh, Himachal Pradesh

a b c d

a. 3 4 2 1

b. 4 3 1 2

c. 4 1 2 3

d. 3 1 4 2

27. மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

Who introduced Mansabdari system?

(a) பாபர் / Babur

(b) அக்பர் / Akbar

(c) ஜஹாங்கீர் / Jahangir

(d) அவுரங்கசீப் / Aurangazeb

28. பொருத்துக:

புதவியின் பெயர் பணியின் தன்மை

அ. காசியுல்-குசத் 1. நகரத் தலைமை குற்றவியல் நடுவர்

ஆ. முகத்தம் 2. சட்ட விளக்குநர்

இ. முப்தி 3. தலைமை நீதிபதி

ஈ. அமிர்-ஐ-தத் 4. கிராமத் தலைவர்

Match the following:

Post Name Nature of work

a. Qaziul-Quzat 1. Chief City Magistrate

b. Muqaddam 2. Legal Interpreter

c. Mufti 3. Chief Justice

d. Amir-i-dadh 4. Village Headman

a b c d

a. 3 4 2 1

b. 3 2 4 1

c. 3 4 1 2

d. 1 2 3 4

29. காரணம் மற்றும் கூற்று:

கூற்று (A): அலாவுதின் மங்கோலியர்களுக்கு எதிராக ஜாபர்கான் மற்றும் உலுக்கானை அனுப்பினார்

காரணம் (R) : மங்கோலியர்கள் தோற்கடிக்கபட்டனர் மற்றும் ஜாவர்கான் மங்கோலியர்களின் ஆட்சியாளராக நியமிக்கப்ட்டார்.

Reason and Assertion type:

Assertion (A) : Ala-ud-din sent Zafar Khan and Ulugh Khan against the mongols.

Reasong (R) : The Mongols were defeated and Zafar Khan was made the rules Mongols.

(a) (A) சரி ஆனால் (R) தவறு/ (A) is true But (R)is false

(b) இரண்டும் சரி ஆனால் (R), (A)ன் சரியான விளக்கமில்லை/ Both are true But (R)is not the correct explanation of (A)

(c) (A) தவறு (R) சரி/ (A) is false (R) is true

(d) (A) மற்றும் (R) சரி, (R), (A)ன் சரியான விளக்கம் / Both (A) and (R) are True and (R) is the correct explanation of (A)

30. தங்கள் சுயசரிதையை எழுதிய இரண்டு முகலாயப் பேரரசர்கள்

The two Mughal emperors who wrote their autobiographies were

(a) அக்பர் மற்றும் ஜஹாங்கீர் / Akbar and Jehangir

(b) பாபர் மற்றும் ஜஹாங்கீர் / Babur and Jehangir

(c) பாபர் மற்றும் ஹீமாயூன் / Babur and Humayun

(d) அவுரங்கசீப் மற்றும் ஷாஜகான் / Aurangazeb and Shajahan

31. முகம்மது கவான் ஒரு மதரசாவை நிறுவி அதில் 3000 கையெழுத்து நூல்களை வைத்திருந்த இடம்

Mohammed Gawan’s Madrasa is a large Library, containing a collection of 3000 manuscripts situated at.

(a) பெரார் / Berar

(b) பீஜப்பூர் / Bijapur

(c) பீடார் / Bidar

(d) அகமது நகர் / Ahmad Nagar

32. கிராமப் பெண்களை மேம்படுத்துவற்கான மகளிர் திட்டத்தின் நான்கு முக்கியக் கூறுகளில் கீழ்வருவன எவை?

Which of the following are the four key aspects of Mahalir thittam to empower rural women?

(a) சமூகம், அரசியல், பொருளாதாரம் மற்றும் சட்டம் / Social Political, Economic and Legal

(b) சமூகம், அரசியல், பொருளாதாரம் மற்றும் நல்வாழ்வு / Social Political, Economic and Health

(c) சமூகம், அரசியல், பொருளாதாரம் மற்றும் கல்வி/ Social Political, Economic and Education

(d) சமூகம், அரசியல், பொருளாதாரம் மற்றும் தூய்மை / Social Political, Economic and Sanitation

33. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் “குடியுரிமை” என்னும் பகுதி சார்ந்த, சரியான விடையை கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் தேர்ந்தெடுக்கவும்:

Choose the correct answer from the options given below relating to “Citizenship” under the Indian Constitution:

(a) விதி 1-5 பகுதி I / Articles 1 to 5 under part I

(b) விதி 5-8 பகுதி III / Articles 5 to 8 under part III

(c) விதி 5-11 பகுதி II / Articles 5 to 11 under part II

(d) விதி 8-11 பகுதி IV / Articles 8 to 11 under part IV

34. இந்திய அரசியலமைப்பு உறுப்பு 12இன் கீழ் “அரசு” என்ற சொல் எவற்றை உள்ளடக்குகிறது?

1. இந்திய அரசு மற்றும் அதன் நாடாளுமன்றம்

2. மாநில அரசு மற்றும் அதன் சட்டமன்றம்

3. அனைத்து வட்டார அதிகாரிகள்

4. இந்திய அரசின் நிலப்பகுதியில் அமைந்துள்ள அல்லது அதன் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து வட்டார அல்லது இதர அதிகாரக் குழுக்கள்

What is the meaning of the term ‘State’, under Article 12th of the constitution of India?

1. Government of India and Parliament

2. State Government and Legislature.

3. All Regional Authorities.

4. All Regional (or) other Jurisdiction of the Government of India Located in (or) under the control of the government of India.

(a) 1 மட்டும் / 1 only

(b) 2 மற்றும் 3 மட்டும் / 2 and 3 only

(c) 1 மற்றும் 4 மட்டும் / 1 and 4 only

(d) 1,2,3 மற்றும் 4/ 1,2,3 and 4

35. இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் குறித்த சரியான கூற்றை/கூற்றுகளைத் தேர்ந்தெடுக்கவும்.

1. ஒரு குடிமகன் விரும்பினால் தன்கான அடிப்படை உரிமைகளைத் தள்ளுபடி செய்து கொள்ள முடியும்.

2. உச்சநீதிமன்றம் நினைத்தால் அடிப்படை உரிமைகளை இடைநிறுத்தம் செய்ய முடியும்.

3. ஒரு குடிமகன் தனக்கான அடிப்படை உரிமைகளைத் தள்ளுபடி செய்து கொள்ள முடியாது

4. நீதிப்புனராய்வின் அடித்தளமே அடிப்படை உரிமைகள் தாம்

Select the correct statemtent(s) with respect to Fundamental Rights of Indian Constitution:

i. Fundamental Rights can be waived by a citizen

ii. Fundamental Rights can be suspended by a supreme court

iii. Fundamental Rights cannot be waived by a citizen

iv. Fundamental Rights is the basis of Judicial Review

(a) 1 மட்டும் / i only

(b) 1 மற்றும் 2 ஆகியன மட்டும் / i and ii only

(c) 2 மற்றும் 4 ஆகியன மட்டும் / ii and iv only

(d) 3 மற்றும் 4 ஆகியன மட்டும் / iii and iv only

36. பற்றாக்குறை நிதியாக்கத்தின் முதன்மை நோக்கம்

The main aim of deficit financing is

(a) பொருளாதார முன்னேற்றம் / Economic Development

(b) பொருளாதார நிலைத்தன்மை / Economic Stability

(c) பொருளாதாரச் சமநிலை / Economic Equality

(d) புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்குதல் / Creation of employment opportunity

37. தானியங்கித் தொழில் நுட்பத்தினை தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் போது ஏற்படும் வேலையின்மைக்குப் பெயர்

If unemployment occurs due to automation process in industries, it is known as

(a) கட்டமைப்பு வேலையின்மை / Structural unemployment

(b) பருவகால வேலையின்மை/ Seasonal unemployment

(c) மறைமுக வேலையின்மை /Disguised unemployment

(d) மேற்கூறிய அனைத்தும்/ All the above

38. இந்திய அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்ட வரிசையில் பின்வருவனவற்றை ஒழுங்கமைக்கவும்

1. மூலதன வருவாய்

2. மொத்த வருவாய்

3. வரவின வருவாய்

4. மொத்த செலவு

Arrange the following in the order as presented in the budget of government of India.

1. Capital Receipts

2. Total Receipts

3. Revenue Receipts

4. Total Expenditure

(a) 1,2,3,4

(b) 3,2,4,1

(c) 3,2,1,4

(d) 3,1,2,4

39. பிரபலமான முதன்மையான செல்வாக்கு மிக்க நாளிதழான “செர்ச்லைட்” பிரசுரிக்கப்பட் இடம்

“The Searchiligh” was a most important and influential Newspaper was published in

(a) பாட்னா / Patna

(b) அலகாபாத் / Allahabad

(c) மும்பை / Mumbai

(d) மெட்ராஸ் / Madras

40. பின்வரும் பத்தியை படித்து பதிலளிக்கவும்:

பதில்கள் பத்தியின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும்.

தென் இந்தியாவில் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமாவரம். இயக்கத்தின் புயல் மையமாக இருந்தது. கொல்லங்கோட்டில, ஊர்வலமாகச் சென்ற மாணவர்கள் தங்கள் சட்டை பொத்தான்களை கழற்றி காவல்துறையின் தோட்டாக்கள் நிறைந்த துப்பாக்கிகளுக்கு மார்பைக் காட்டினர். துமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற பக்கிங்ஹாம் மற்றும் மெட்ராஸில் உள்ள கர்நாடக ஆலைகள் உட்பட கிட்டத்தட்ட அனைத்து ஆலைகளும் வேலை நிறுத்தம் செய்தன. கோயம்புத்தூரில் உள்ள இராணுவ விமான நிலையமும் முற்றிலும் எரிந்து நாசமாக்கப்பட்டது.

பின்வரும் எந்த இயக்கம் இந்த பத்திக்கு மிகவும் பொருத்தமானது?

Directions for the following item:

Read the following passage and answer the item that follow. Your answers to this item should be based on the passage only.

In south India Bhimavaram in the district ofWest Godavari, was the storm center of the movement. In Kollengode, the students heading a procession unbuttoned their shirts and exposed their chests to the loaded revolvers of the police. In Tamil Nadu almost all the mills including the famous Buckingham and Karnatic mills at Madras struck work. The military aerodrome at Coimbatore was completely burnt down.

Which one of the following movement is best suited in the passage?

(a) சட்டமறுப்பு இயக்கம் / Civil Disobedience Movement

(b) வெள்ளையனே வெளியேறு இயக்கம் / Quit-India Movement

(c) ஒத்துழையாமை இயக்கம் / Non-Cooperation Movement

(d) சுதேசிஇயக்கம் / Swadeshi Movement

41. பின்வருபனவற்றுள் கான் அப்துல் கபார் கான் பற்றிய உண்மையான கூற்றுகள் எவை?

1. கான் அப்துல் கபார் கான் ஒரு பஸ்தூன் தலைவர்

2. கான் அப்துல் கபார் கான் பாட்ஷா கான் என்று அழைக்கப்படுகிறார்

3. கான் அப்துல் கபார் கான் எல்லைக் காந்தி என்று பிரபலமாக அழைக்கப்படுகிறார்

4. கான் அப்துல் கபார் கான், குடை கிட்மாட்கார்ஸ்ஸை நிறுவியவர்

Which of the following statements are true about Khan Abdul Ghaffar Khan?

1. Khan Abdul Ghaffar Khan was the Pasthun Leader.

2. Khan Abdul Ghaffar Khan was known as Badshah Khan

3. Khan Abdul Ghaffar Khan was popularly known as The Frontier Gandhi

4. Khan Abdul Ghaffar Khan was the founder of Khudai Khidmatgars

(a) 1 மற்றும் 2 சரி / 1 and 2 are correct

(b) 4 மற்றும் 1 சரி / 4 and 1 are correct

(c) 3 மற்றும் 2 சரி / 3 and 2 are correct

(d) 1,2,3 மற்றும் 4 சரி / 1,2,3 and 4 are correct

42. எந்தக் கட்சி இந்திய பிரிவினைக்கு எதிராக ஜீலை 1947ம் ஆண்டை “கருப்பு தினமாக” அறிவித்தது?

Which party observed the ‘Black day’ on July 1947 against partition of India?

(a) இந்திய தேசிய காங்கிரஸ் / Indian National Congress

(b) பார்வர்ட் பிளாக் / Forward Bloc

(c) ஹிந்து மகா சபை / Hindu Mahasabha

(d) கம்யூனிஸ்ட் கட்சி / Communist Party

43. சரியான கூற்றினை கண்டுபிடி:

கூற்று (A): நீலகிரி தமிழ்நாட்டின் குறைந்த மக்கள்தொகை கொண்ட மாவட்டம்

காரணம் (R) : இது தமிழ்நாட்டின் வட மேற்கு பகுதியில் அமைந்துள்ளது

Find the correct Assertion:

Assertion (A) : The Nilgiris is the least populated district of Tamil Nadu

Reason (R) : It is located in the North Western part of Tamil Nadu

(a) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது / Both (A) and (R) are true and (R) explains (A)

(b) கூற்று (A) மற்றும் காரணம் (R) சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல / Both (A) and (R) are true and (R) explains (A)

(c) கூற்று (A) சரி ஆனால் காரணம் (R) தவறு/ Both (A) and (R) are true but, (R) does not explain (A)

(d) கூற்று (A) தவறு ஆனால் காரணம் (R) சரி / (A) is true but (R)is false

44. “அரசு, தேசிய வாழ்வின் அமைவனங்கள் அனைத்திலும், சமுதாய, பொருளியல், அரசியல், நீதி நிறைந்து நிலவுவதான ஒரு சமுதாய முறையமைவினைப் பயனுற எய்திப் பாதுகாத்து, மக்களின் நலப்பாட்டை வளர்த்திட அரிதின் முயலுதல் வேண்டும்” என்று கூறும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு

Which article states the ‘state shall strive to promote the welfare of the people by securing and protecting as effectively as it may a social order in which justice, social, economic and political shall inform all the institutions of the national life?

(a) பிரிவு 38 /Article 38

(b) பிரிவு 15/ Article 15

(c) பிரிவு 16/ Article 16

(d) பிரிவு 40/ Article 40

45. கூற்று (A): 1921இல் மக்கள் தொகை வளர்ச்சி கட்டுக்குள் இருந்தது

காரணம் (R): இந்தக் காலகட்டத்தில் பிறப்பு மற்றும் இறப்பு விகிதம் கிட்டத்தட்ட சமமாக இருந்தது

Assertion (A) : The growth of population in 1921 was held in check

Reason (R) : Birth and death rates were more or less equal during this period

(a) (A) சரி ; ஆனால் (R) தவறு/ (A) is true but (R) is false

(b) (A) மற்றும் (R) இரண்டும் சரி மற்றும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம் / Both (A) and (R) are true; and (R) is the correct explanation of (A)

(c) (A) தவறு ; ஆனால் (R) சரி/ (A) is false but (R) is true

(d) (A) மற்றும் (R) இரண்டும் சரி ; ஆனால் (R) என்பது (A)விற்குச் சரியான விளக்கமல்ல / Both (A) and (R) are true but (R)is not the correct explanation of (A)

46. சரியானவற்றைப் பொருத்துக:

அ. உடன்கட்டை ஏறுதலுக்கு எதிரான செயல்பாடு 1. ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன்

ஆ. பல்வேறுபட்ட சாதிகளுக்கிடையேயான

கலப்புத்திருமணத்தை ஊக்குவித்தல் 2. பிரம்ம சமாஜம்

இ. தீண்டாமைக்கெதிரான போராட்டம் 3. பிரார்தனை சமாஜம்

ஈ. மனிதனுக்குச் செய்யக்கூடிய சேவை

கடவுளுக்குச் செய்யும் தொண்டு 4. ஆர்ய சமாஜம்

Match the following:

a. Agianst the practice of sati 1. Sri Ramakrishna Mission

b. Encouraged intermarriage among

different castes 2. Brahmo Samaj

c. Fight against untouchability 3. Prarthana Samaj

d. Service to man is service to God 4. Arya Samaj

a b c d

a. 2 3 1 4

b. 3 4 2 1

c. 3 4 1 2

d. 2 3 4 1

47. ஐங்குறுநூற்றின் முல்லைத்திணையைப் பாடிய புலவர் இவர்

________ sang the songs of Mullai Tinai of Iyngurunooru

(a) அம்மூவனார் / Ammoovanaar

(b) ஓரம்போகியார் / Orampogiyaar

(c) பேயனார் / Peyanaar

(d) கபிலர் / Kabilar

48. கூற்று (A) : ப.ஜீவானந்தம் சுயமரியாதை பொதுவுடைமை கட்சியை ஆரம்பித்தார்

காரணம் (R) : அரசு பணிகளில் வகுப்புவாத பிரதிநிதித்துவத்தை பெற திட்டம் வைத்திருந்தார்

Assertion (A) : P.Jeevanandam formed Self-Respect socialist party.

Reason (R) : He had a plan to get communal representation in government services.

(a) (A) சரி (R) தவறு/ (A) is correct (R) is false

(b) (R) சரி (A) தவறு / (R) is correct (A) is false

(c) (A) மற்றும் (R) சரி/ (A) and (R) are correct

(d) (A) மற்றும் (R) தவறு/ (A) and (R) are false

49. தொடரைப் பொருளோடு பொருத்துக:

அ. முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் 1. காதல்

ஆ. நீரின்றமையா வுலகம் போல 2. கற்பின் மெல்லியல்

இ. அல்லி லாயினும் விருந்துவரின் உவக்கும் 3. நனி நாகரிகர்

ஈ. சாதல் அஞ்சேன் அஞ்சுவன் சாவில் 4. பிரிவு அச்சம்

Match the sentence with its appropriate meaning:

a. Mundhai irundhu nattor koduppin nanjun unbar 1. Kadhal

b. Neerinramaiya ulagam pola 2. Karpin melliyal

c. Alli layinum virunduvarai uvakkum 3. Nani nagarigar

d. Sadhal anjen anjuvan saavil 4. Pirivu achcuam

a b c d

a. 4 2 1 3

b. 2 1 3 4

c. 3 1 2 4

d. 3 2 1 4

50. பாடலைப் படித்துவிட்டுப் பொருத்தமான விடையைத் தேர்வு செய்க:

வள்ளுவர்செய் திருக்குறளை மறவற நன்கு உணர்ந்தோர்கள்

உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக் கொரு நீதி

1. இந்தப் பாடலை பாடியவர் பெ.சுந்தரனார்

2. எல்லாச் சாதியினர்க்கும் பொது நூல் திருக்குறள் மனுநீதி எல்லாச் சாதிக்கும் பொதுவானதில்லை.

3. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற குறளோடு இந்தப் பாடல்வரி பொருத்தமுடையது

4. இந்தப் பாடல் மனோன்மணீயம் என்னும் நாடக நூலில் இடம் பெற்றுள்ளது

Read the verse and pick the right choice:

Valluvarsei Thirukkuralai Maravara Nangu unarnthorgal

Ulluvaro Manuvaathi Orukulothirku Our Needhi

1. This verse was written by Pe.Sundranaar

2. Thirukkural is common for all where as manu is not common to all

3. “Pirapokkum ella Uyirkkum” – a verse that can be associated with this

4. This verse is from the drama text titled Manonmaneeyam

(a) 4 தவறு, 1,2,3 சரி / 4 incorrect; 1,2,3 all correct

(b) 1,4 தவறு 2,3 சரி / 1 and 4 incorrect; 2 and 3 correct

(c) 1,2,3,4 அனைத்தும் சரி / 1,2,3 and 4 all are correct

(d) 2 சரி 1,3,4 தவறு / 2 alone correct, 1, 3 and 4 incorrect

51. “மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர்க்கொடுத்தோரே”

– என்றுரைக்கும் காப்பியம் எது?

“Manthini Gnalathu Vazhvorkku Ellam

Undi Koduthor Uyir Koduthore”

in which epic does this line appear?

(a) சீவகசிந்தாமணி / Seevage Chinthamani

(b) சிலப்பதிகாரம் / Silappathigaram

(c) மணிமேகலை / Manimekalai

(d) குண்டலகேசி / Kundalakesi

52. “கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?

திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோ?”

– என்று பாடியவர் யார்?

“Karpooram Narumo Kamalapoo Narumo

Tiruppavala Chevvaidhaan Thithithirukkumo”

Who sings these lines?

(a) நம்மாழ்வார் / Nammazhwar

(b) மதுரகவியாழ்வார் / Madhura Kaviyazhwar

(c) திருப்பாணாழ்வார் / Thirupaanazhwar

(d) ஆண்டாள் / Aandaal

53. கூற்று (A) : பல்வேறு இனத்தினை சார்ந்தவர்கள் வாழ்வதால் இந்தியா “பல இன கண்காட்சி” என்று கூறப்படுகிறது

காரணம் (R) : திராவிடர்கள் இந்தியாவின் உண்மையான குடிமக்கள்

Assertion (A) : The presence of various races in India earned the titlte of “ethonological museum” for India

Reason (R) : Dravidians were the original inhabitants of India.

(a) (A) சரி ஆனால் (R) தவறு / (A) is true, but (R) is false

(b) (A) மற்றும் (R) ஆகிய இரண்டும் சரி மற்றும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமாகும் / Both (A) and (R) are true, and (R) is the correct explanation of (A).

(c) (A) தவறு ஆனால் (R) சரி / (A) is false but (R) is true.

(d) (A) மற்றும் (R) ஆகிய இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல / Both (A) and (R) are true but (R) is not the correct explanation of (A).

54. தைராய்டு சுரப்பியில் அதிகமாக செறிவூட்டப்படும் தனிமம் எது?

The element that concentrates strongly in the thyroid gland is

(a) குளோரின் / Chlorine

(b) புரோமின் / Bromine

(c) ஐயோடின் / Iodine

(d) கால்சியம் / Calcium

55. __________என்பவர் மரபியலின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்

The Father of Genetics is

(a) உல்ஃப் / Wolff

(b) டார்வின் / Darwin

(c) வெய்ஸ்மேன் / Weismann

(d) மெண்டல் / Mendel

56. இரத்த வகைகளை கண்டறிந்தவர்

Blood grouping was discovered by

(a) ராபர்ட் பிரௌன் / Robert Brown

(b) கேனான் / Cannon

(c) கார்ல் லேன்ட்ஸ்டெய்னர் / Karl Landsteiner

(d) பங்க் / Funk

57. குறுக்கேற்றத்தினால் ஏற்படுவது ___________

Crossing over results in

(a) சைட்டோபிளாஸ்மிக் மறுசீரமைப்பு / Cytoplasmic reorganization

(b) ஜீன்களின் மறு இணைவு / Recombination of genes

(c) முழு பிணைப்பு / Complete linkage

(d) குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை / No significant change

58. முழுவதும் ஒன்றிய அரசின் நிதியளிப்பில் உருவான பொதுப் பயன்பாட்டு மத்திய திட்டம் எத்துறைக்காக ஏற்படுத்தப்பட்டது?

Common Facility Centres (CFCs) Scheme, which is fully funded by the Central Government is for

(a) உள்கட்டமைப்பு / Infrastructure

(b) பால் மற்றும் பால்சார்ந்த பொருட்கள் / Milk and Milk Products

(c) இரத்தினங்கள் மற்றும் நகைகள் / Gems and Jewelry Sector

(d) மின் பகிர்மானம் / Power Distribution

59. டெல்லி, எய்ம்ஸால், விரிவான ஆராய்ச்சிக்கு எடுத்க்கொள்ளப்பட்ட பண்டைய மருத்துவ நூல் எது?

Name the ancient medical text taken for comprehensive research by AIIMS, Delhi

(a) சரகா சம்ஹிதை / Charak Samhita

(b) சுஸ்ருதா சம்ஹிதை / Sushruta Samhita

(c) காசியப்ப சம்ஹிதை / Kashyapa Samhita

(d) ரிக்வேத சம்ஹிதை / Rigveda Samhita

60. CIASC – 2022 விருதானது தமிழ்நாடு பெற்றதற்கான கண்டுபிடிப்பு எதனுடன் தொடர்புடையது?

1. விவசாய மற்றும் சந்தைக் கழிவுகளை மறுசுழற்சி செய்தல்

2. கழிவுநீர் சுத்திகரிப்பு பாதுகாப்பு

3. காகித மறுசுழற்சி தீக்குச்சி உற்பத்தி இயந்திரம்

4. தானியக்கலவை உற்பத்தி

CIASC – 2022 has been awarded to Tamil Nadu for the invention related to

1. Recycling of agriculture and market wastes

2. Sewer Guard

3. Recycled paper matchstick production machine

4. Production of grain mixture

(a) 2 மற்றும் 4 மட்டும் / 2 and 4 only

(b) 4 மட்டும் / 4 only

(c) 1 மற்றும் 4 மட்டும் /1 and 4 only

(d) 1 மற்றும் 3 மட்டும் / 1 and 3 only

61. ஒரு நபர் ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு லிட்டர் தண்ணீரை உட்கொண்டால், இதன் அளவை மோல்களில் எனலாம்

If a person consumes an average of two liters of water per day, then express the quantity in moles

(a) 11.111 மோல் / 11.111 moles

(b) 111.11 மோல் / 111.11 moles

(c) 1111.1 மோல் / 1111.1 moles

(d) 1.1111 மோல் / 1.1111 moles

62. யாரால் புகையிலையை 1508ம் ஆண்டு இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது?

Who brought tobacco into India in the year 1508?

(a) டச்சு / Dutch

(b) பிரிட்டிஷ் / British

(c) பிரஞ்சு / French

(d) போர்ச்சுக்கில் / Portuguese

63. இந்தியாவின் மிகப்பெரிய காற்றாலை தமிழ்நாட்டில் ______ மாவட்டத்தில் அமைந்துள்ளது

The largest wind farm of India ____________ district is located in Tamil Nadu

(a) முப்பண்டல், கன்னியாகுமரி / Muppandal of Kanyakumari

(b) ஒட்டப்பிடாரம், சிதம்பரனார் / Ottapidaram of Chidambaranar

(c) அந்தியூர், கோயம்புத்தூர் / Andhiyur of Coimbatore

(d) எடயர்பாலயம், கோயம்புத்தூர் / Edayarpalayum of Coimbatore

64. இந்தியாவின் வாழ்வாதாரம் வேளாண்மையை முன்னிட்டே உள்ளது, அத்தகைய வேளாண்மை இருப்பு அதிகமாக சார்ந்திருப்பது

Life in India is primarily base on Agriculture, which is dependent for its very existence on the

(a) தென்மேற்கு பருவமழை / South West Monsoon

(b) வடகிழக்கு பருவமழை / North East Monsoon

(c) குளிர் பருவம் / Cold Season

(d) கோடை பருவம்/ Summer Season

65. கீழ்கண்ட லோதல் என்ற சிந்து நதி நகரத்தை பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

1. லோதல் காம்பே வளைகுடாவில் காணப்படுகிறது

2. இது ஒரு துறைமுக நகரமாகும். இதன் நீளம் 37 மீட்டர் அகலம் 216 மீட்டர்

3. இந்நகரம் போகாவா என்ற ஆற்றுடன் இணைக்கப்பட்டிருந்தது

4. இத்துறைமுக நகரத்தில் இருந்து வெளிநாட்டு வர்த்தகம் நடந்தது

Which one of the statement is incorrect regarding Lothal, the Indus city

1. It found at Gulf of Combay

2. It found with a dock yard 216 meter wide and 37 metre long

3. The dock yard connected with Bhogava river

4. It was a port city and where foreign trade was carried an

(a) 1 மட்டும் / 1 only

(b) 2 மட்டும் / 2 only

(c) 3 மட்டும் / 3 only

(d) 4 மட்டும் / 4 only

66. பண்டிகைகளைச் சம்பந்தப்பட்ட மதத்துடன் சரியாகப் பொருத்துக:

அ. கோர்தாத் சால் 1. சீக்கியர்

ஆ. குர்புரப் 2. பார்சி

இ. வீசாக் நாள் 3. பஹாய்

ஈ. நாவ் ரூஸ் 4. திபெத்தியர்

Match correctly the festivals with their corresponding religion

a. Khordad Sal 1. Sikh

b. Gurpurab 2. Parsi

c. Vesak Day 3. Bahai

d. Naw Ruz 4. Tibetan

a b c d

a. 3 4 1 2

b. 2 1 4 3

c. 2 4 1 3

d. 1 4 3 2

67. ஹரப்பா இடங்களை அதன் தொல்லியல் எச்சங்களோடு பொருத்துக:

அ. மெகாஞ்சதாரோ 1. இடுகாடு H

ஆ. ஹரப்பா 2. வெண்கல நடனமாடும் பெண் சிலை

இ. லோதல் 3. டெரகோட்டா கலப்பை

ஈ. பனாவாலி 4. தந்தத்தால் ஆன அளவுகோல்

Match the harappan sites with their archaeological remains:

a. Mohenjodaro 1. Cemetry H

b. Harappa 2. Bronze statue of dancing girl

c. Lothal 3. Terracotta plough

d. Banawali 4. Ivory scale

a b c d

a. 1 2 4 3

b. 3 1 2 4

c. 2 1 4 3

d. 4 3 2 1

68. 1.பொதுப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள துறைகள் மீது மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண்டுமே சட்டம் இயற்றலாம்.

2. இது தொடர்பாக மத்திய அரசிற்கும், மாநில அரசிற்கும் இடையில் முரண்பாடு ஏற்படும் பொழுது மாநில அரசின் அதிகாரமே மேலோங்கும்

மேலே காணப்படும் கூற்றுகளில் சரியானது எது?

I. In the subject enumerated in the “Concurrent List” both the union and State can Legislate

II. In the event of contradictions between the Union and States, the states authority will prevail.

Which of the above statement is/are True?

(a) 1 மட்டும் / I only

(b) 2 மட்டும் / II only

(c) 1 மற்றும் 2/ Both I and II

(d) மேற்கூறிய எவையுமில்லை / None of the above

69. லோக்பால் மற்றும் லோகாயுக்தாவை நிறுவுவதன் முக்கிய நோக்கம்?

The aim of establishing Lokpal and Lokayutha was to

(a) மாநில அரசு தொடர்பான மற்றும் மேல் முறையீடுகளைப் பார்க்க / Look into complaints and appeals pertaining to State Government

(b) மத்திய அரசின் கீழ் அனைத்து கண்காணிப்பு நடவடிக்கைகளையும் கண்காணிக்க / Monitor all vigilance activities under the Central Government

(c) சைபர் குற்றங்களை எதிர்க்க / Fight Cyber Crimes

(d) குடிமக்களின் குறைகளை நிவர்த்தி செய்தல் / Redress Citizens Grievances

70. நடுவண் கண்காணிப்பு ஆணையம் பின்வரும் எந்த ஆணையம்/குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நிறுவப்பட்டது?

The Central Vigilance Commission was established based on the recommendations of which of the following commission / committee?

(a) S.R.தாஸ்ஆணையம் / S.R.Das Commission

(b) நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் / Administration reforms commission

(c) சந்தானம் குழு / Santhanam Committee

(d) சர்காரிய ஆணையம் / Sarkaria Commission

71. சட்டத்தின் ஆட்சி எனும் கருத்தாக்கத்தைச் சரியாக விளக்கும் கூற்றுகளைத் தேர்ந்தெடுக்கவும்.

1. சட்டத்தின் ஆட்சி என்பது சட்டத்தை அரசியலிலிருந்து மீட்டெடுப்பது

2. சட்டத்தின் ஆட்சி என்பது அரசு வெவ்வேறு குழுக்களுக்கு வெவ்வேறு சட்டங்களை இயற்றுவது

3. சட்டத்தின் ஆட்சி என்பது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதாகும்.

4. சட்டத்தின் ஆட்சி என்பது இறைவழிக் கோட்பாட்டை முன் வைத்து செயல்படுவதாகும்.

Select the statements that correctly explain the concept of rule of law:

i. Rule of law is to lift law above politics

ii. Rule of law means state can have different laws for different segments of people

iii. Rule of law means equality before law

iv. Rule of law is premised upon the divine origin of State

(a) 1 மற்றும் 2 மட்டும் / i and ii only

(b) 1 மற்றும் 3 மட்டும் / i and iii only

(c) 2 மற்றும் 3 மட்டும்/ ii and iii only

(d) 2 மற்றும் 4 மட்டும் / ii and iv only

72. கீழ்க்காண்பவர்களில் கூலிப் பொருட்களின் வளர்ச்சி உத்தி மாதிரியை சமர்பித்தவர் யார்?

Who among the following presented the wage – goods strategy of growth model?

(a) ஹேரட்-டோமர் / Harrod-Domar

(b) P.C.மஹலனோபிஸ் / P.C.Mahalanobis

(c) ஜவஹர்லால் நேரு / Jawaharlal Nehru

(d) C.N.வகீல் மற்றும் P.R.பிரம்மானந்தா / C.N.Vakil and P.R.Brahamanda

73. ICRISAT __________ உடன் தொடர்புடையது

ICRISAT is related to

(a) நில உச்சவரம்பு / Land ceiling

(b) வறண்ட நில விவசாயம் / Dry land farming

(c) கால்நடை / Live stock

(d) உரத்துக்கான மானியம் / Fertiliser subsidy

74. 2011 மக்கள் தொகை கணக்கீட்டின்படி, இந்தியாவில் _______சதவீதம் முக்கியத் தொழிலாளர்கள் வேளாண்மை மற்றும் அதன் துணைத் துறைகளின் பணியாற்றுகிறார்கள்

According to 2011 census _________ percent of the main workers in Indian labour force was employed in the agricultural sector and allied activities.

(a) 48.6

(b) 48.9

(c) 49.8

(d) 46.8

75. “வேளாண்மையின் வணிகமயம்” என எதனால் அழைக்கப்படுகிறது?

Why is “Commercialisation of Agriculture” so called

(a) குடும்ப நுகர்வு / Family consumption

(b) குடும்பத்தின் ஒரு பகுதி நுகர்வு / Partly for family consumption

(c) சந்தையின் விற்பனை / Sale in market

(d) இவற்றுள் ஏதுமில்லை / None of the above

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!