General StudiesTnpsc

Tnpsc Model Question Paper 47 – General Studies in Tamil & English

1. இது அறிவியல் மனநிலையைப் பொறுத்தவரை உண்மை.

Which is true of Scientific temper?

(a) திறந்த மனப்பான்மை மற்றும் அறிவுசார் நேர்மை / open mindedness and intellectual honesty

(b) நிகழ்வுகளைத் தீவிரமாகக் கவனித்தல் / Keen observation

(c) நுண்ணறிவு மற்றும் நினைவகம்/ intelligence and memory

(d) அறிவியலைப் பாராட்டுதல் / appreciation of science

2. பொருத்துக:

அ. சார்லஸ் டார்வின் 1. மரபியல்

ஆ. கிரிகர் மெண்டல் 2. பரிணாமம்

இ. ராபர்ட் கோச் 3. நவீன நுண்ணுயிரியல்

ஈ. கிளாட் பெர்னாடு 4. உடற்செயலியல்

Match the following:

a. Charles Darwin 1. Genetics

b. Gregor Mendel 2. Evolution

c. Robert Koch 3. Modern Microbiology

d. Clande Bernard 4. Physiology

a b c d

a. 2 1 3 4

b. 2 3 1 4

c. 3 1 4 2

d. 3 4 1 2

3. பின்வரும் பத்தியைப் படித்து, அதற்கான கேள்விக்கு உங்களது பகுத்தறிவுத்திறனை உபயோகித்து பதிலளிக்கவும்:

முதுகெலும்பு நெடுவரிசை எலும்பகளால் (முதுகெலும்புகள்) உருவாக்கப்படுகிறது. அவை நெடுவரிசைக்கு அதிர்ச்சி உறிஞ்சிகாக செயல்படும் குருத்தெலும்பு பட்டைகள் (டிஸ்க்குகள்) மூலம் பிரிக்கப்படுகின்றன. முதுகெலும்பின் முதுகெலும்பு எலும்புகளில் உள்ள துளைகள் வழியாக நரம்பகள் சுற்றளவில் செல்கின்றன. இந்த நரம்புகள் டிஸ்க்குகளுக்கு மிக அருகில் இயங்குகின்றன. அதனால்தான் தன்னிடம் நீங்கி நீண்டு கொண்டிருக்கும் டிஸ்க்குகள் இந்த நரம்புகளுடன் சேர்ந்து வலியை ஏற்படுத்தும்.

மேலே உள்ள பத்தியில் என்ன விளக்கப்படுள்ளது?

Read the following passage and answer the question using your resoning capacity:

The Spinal column is composed of Bones (Vertebrae) that are separated by Certilaginous Pads (Discs) that act as shock absorbers for the column. Nerves run through openings in the vertebral bones of the Spinal Cord to the periphery. These nerves run very close to the Discs, which is why protruding discs can cause pain along those nerves.

In the above passage what is being explained?

(a) முதுகெலும்புகளில் அமைப்பு / Structure of Backbones

(b) இடைப்பட்ட காரணத்தைப் பற்றி விவாதிக்கிறது / Discussing the Intervening Causal Mechanism

(c) தன்னிடம் நீங்கி நீண்டு செல்லும் வட்டு, நரம்பு வலியை ஏற்படுத்தும் விதம் / The manner in which a protruding disc can cause nerve pain

(d) முதுகெலும்பு வட்டு ஒரு வகையான அதிர்ச்சி உறிஞ்சியாக செயல்படுகிறது / Vertebral Disc serving as a kind of shock absorber

4. ‘டவுன்சின்ரோம்’ தோன்ற குரோமோசோமில் ஏற்படும் பகுதிமாற்ற நிலையை கண்டுபிடிக்கவும்.

Identify the condition of Chromosomal mutation which results in Down’s Syndrome.

(a) 2n+2

(b) 2n+1

(c) 2n-2

(d) 2n-1

5. அமோனியாக்கதலில் ஈடுபடும் பாக்டீரியத்தை கண்டுபிடிக்கவும்.

Identify the Ammonifying bacterium

(a) பேசில்லஸ் ராமோசஸ் / Bacillus ramosus

(b) ஸ்டெஃபிலோகோக்ஸ் ஆரியஸ் / Staphylococcus aureus

(c) ரைசோபியம் லெகுமினோசாரம் / Rhizobium leguminosarum

(d) ஸ்ட்ரெப்டோகாக்கஸ் ஆரியஸ் / Streptococcus aureus

6. அறிவியல மனப்பான்மையை, கீழ் உள்ளவற்றில் எது தவிர மற்றவை புகுத்த முடியும்?

1. கேள்விகள் கேட்டல்

2. ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவியல் தகவல்களைப் படித்தல்

3. சோதனைகள் செய்தல்

4. மனப்பாடம் செய்தல்

Inculation of Scientific temper could be achieved except by

1. Asking Questions

2. Reading Literatures

3. Doing Experiments

4. Memorising

(a) 1 மட்டும் / 1 only

(b) 2 மட்டும் / 2 only

(c) 3 மட்டும் / 3 only

(d) 4 மட்டும்/ 4 only

7. கீழ்க்காண்பவற்றுள் எது/எவை சரியானது? அணுக்கரு உலைகளில் நியூட்ரான் மட்டுப்படுத்தி/தணிப்பான்களாக செயல்படும் தனிமங்கள் எத்தகைய தன்மையை கொண்டிருக்க வேண்டும்?

1. அதிக அணு எடை கொண்டவை

2. நியூட்ரானை உட்கவரும் குறுக்கு வெட்டுப்பரப்பு அதிகம் கொண்டவை

3. குறைந்த அணு எடை கொண்டவை

4. நியூட்ரானை உட்கவரும் குறுக்குவெட்டுப் பரப்பு குறைந்த அளவு கொண்டவை

Which of the following is/are correct?

In Nuclear Reactors the materials used as moderators have

1. High Atomic Wight

2. High Absorption cross section for Neutrons

3. Low Atomic Weight

4. Low Absorption cross section for Neutrons

(a) 3 மற்றும் 4 மட்டும் சரி / 3 and 4 only correct

(b) 3 மட்டும் சரி / 3 only correct

(c) 1 மற்றும் 2 மட்டும் சரி / 1 and 2 only correct

(d) 1 மற்றும் 4 மட்டும் சரி / 1 and 4 only correct

8. கோபால கிருஷ்ண கோகலேவை, “இந்தியாவின் வைரம்”. ‘மகாராஷ்டிராவின் அணிகலன்’ மற்றும் ‘தொழிலாளர்களின் இளவரசன்’ என்று புகழ்ந்தவர்

Who described Gopal Krishna Gokhale as the ‘Diamond of India’, the ‘Jewel of Maharahtra’ and the ‘Prince of Workers’

(a) மகாத்மா காந்தி/ Mahatma Gandhi

(b) லாலா லஜபதி ராய் / Lala lajput Rai

(c) ஜவகர்லால் நேரு / Jawaharlal Nehru

(d) பால கங்காதர திலகர் / Bala Gangadhar Tilak

9. நியூசிலாந்தின் புகையில்லா சுற்றுச்சூழல் மசோதாவைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எவை உண்மையானவை?

1. சட்டம் டிசம்பர், 2022ல் நிறைவேறியது

2. 2008க்கு பிறகு பிறந்தவர்கள் ஒருபோதும் சிகரெட் அல்லது புகையிலை பொருட்களை பொருட்களை வாங்க முடியாது.

3. புகையிலை தயாரிப்புகளில் நிகோடின் அளவு குறைக்கப்பட வேண்டும்

Which of the following statements are true about smoke free environment bill of Newzealand?

i. Legislation was passed on December 2022

ii. Anyone born after 2008 will never be able to buy cigarettes or tobacco products

iii. Nicotine levels in tobacco products to be reduced.

(a) 1 மட்டும்/ i only

(b) 1 மற்றும் 3 மட்டும் / i and iii only

(c) 2 மற்றும் 3 மட்டும் / ii and iii only

(d) 1.2 மற்றும் 3/ i, ii and iii

10. எந்த மாநிலம் உள்நாட்டில் விளையும் ‘பறவைகள் கண் மிளகாய்’ அல்லது ‘தாய் மிளகாயை’ அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது?

Which state has exported locally grown “Birds Eye Chilli’ or “Thai Chilli” to the USA?

(a) ஆந்திரப்பிரதேசம் / Andhra Pradesh

(b) மிசோராம் / Mizoram

(c) தெலுங்கானா / Telengana

(d) மஹாராஷ்டிரா / Maharastra

11. ஈர்ப்பு அலைகள் எவ்வாறு உருவாகின்றன?

How the gravitational waves are formed?

(a) இரண்டு கருந்துளைகளுக்கு இடையிலான மோதலில் இருந்து / From a collision between two black holes

(b) இரண்டு விண்மீன் திரள்களுக்கு இடையிலான மோதலில் இருந்து / From a collision between two galaxies

(c) இரண்டு நட்சத்திரங்களுக்கு இடையிலான மோதலில் இருந்து / From a collision between two stars

(d) இரண்டு கிரகங்களுக்கு இடையிலான மோதலில் இருந்து / From a collision between two planets

12. ஜப்பானிய இயற்பியலாளர்களால் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட யுரேனியம் ஐசோடோப்பின் அணு எண் மற்றும் நிறை எண் என்ன?

What is the atomic number and mass number of recently discovered isotope of uranium discovered by Japan physicists?

(a) 240, 92

(b) 92, 241

(c) 90, 241

(d) 241, 91

13. ஒரு அரசியல் கட்சி தோற்றுவிக்கப்பட்ட எத்தனை நாட்களுக்குள் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் பதிவுரிமை பெறுவதற்காக விண்ணப்பித்திருக்க வேண்டும்

Within how many days of the date of formation of a political party an application has to be put up before the Election Commission of India for getting it egistered?

(a) 30 நாட்கள்/ 30 days

(b) 60 நாட்கள் / 60 days

(c) 90 நாட்கள் / 90 days

(d) 180 நாட்கள் / 180 days

14. ஜீன் 2022இல் _______ நகரங்களில் சுத்தம் செய்வதற்கும் அவற்றை குப்பைகள் இல்லா பகதியாக்க தமிழ் நாட்டில் இயக்கம் தொடங்கப்பட்டது

In June 2022 ——– movement was launched in Tamil Nadu “to clean up the cities and make them garbage free”

(a) தூய்மை பிரச்சாரம் / The Cleanliness campaign

(b) தூய்மைக்கான மக்கள் இயக்கம் / The clean people’s movement

(c) தூய்மையான நகரங்கள் இயக்கம் / The clean cities movement

(d) குப்பைகள் அற்ற இயக்கம் / The clean garbage movement

15. நிதி அமைச்சகத்தின் செலவின துறையானது எதை ஏற்படுத்துவதற்கு விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மாநிலங்களுக்கு வழங்கியுள்ளது.

The Finance Ministry though its office issued detailed guidelines to states for the construction of

(a) விளையாட்டுப் பல்கலைகழகம் / Sporty University

(b) ஒற்றுமை வணிக வளாகம் / Unity Mall

(c) ஆராய்ச்சி மையம் / Research Centre

(d) திறன் வளர்ச்சி மையம் / Skill Development centre

16. பின்வருவனவற்றில், இந்தியாவில் மிகக் குறைவான புகையிலை உற்பத்தியாளர்கள்

Which among the following are the least producer of tobacco in India?

(a) ஆந்திரப்பிரதேசம் / Andhra Pradesh

(b) கர்நாடகா / Karnataka

(c) தமிழ் நாடு / Tamil Nadu

(d) பீகார் / Bihar

17. உயிர்ச்சிதைவு செயல்முறை, காற்றுநிலை சுவாசம் அல்லது காற்றில்லா சுவாசம் ஆகியவற்றின் முன்னிலையில் உயிர்ப்பொருளை உடைக்கிறது

2 (CH2O)🡪 CO2 (g) + CH4 (g)

மேலே உள்ள சமன்பாடு குறிப்பது

The Biodegradation process, breaks down biomass either in the presence of aerobic respiration or anaerobic respiration

2 (CH2O)🡪 CO2 (g) + CH4 (g)

(a) உயிர்ச்சிதைவு செயல்முறை / Biodegradation process

(b) காற்றுநிலை செயல்முறை / Aerobic process

(c) காற்றில்லா செயல்முறை / Anaerobic process

(d) ஒளிச்சேர்க்கை / Photosynthesis

18. தாவர வகை மற்றும் சராசரி ஆண்டு மழைப்பொழிவை (செ.மீட்டர்) சரியாகப் பொருத்துக:

தாவர வகைகள்ள சராசரி ஆண்டு மழைப்பொழிவு (செ.மீ)

1. பசுமை மாறாக்காடுகள் 1. 200 செமீட்டருக்கு மேல்

2. பருவமழைக்காடுகள் 2. 100-200 செ.மீ

3. வறண்டக் காடுகள் 3. 50-100 செ.மீ

4. பாலைவன காடுகள் 4. 50 செ.மீட்டருக்கும் குறைவாக

Match correctly the vegetation type and Average annual rainfall (in cm)

Vegetation type Average Annual rainfall (in cm)

a. Evergreen Forests 1. Above 200 cm.

b. Monsoon forests 2. 100-200 cm

c. Dry Forests 3. 50-100 cm

d. Desert forests 4. Below 50 cm

a b c d

a. 1 2 3 4

b. 2 4 1 3

c. 4 2 1 3

d. 1 4 3 2

19. கூற்று மற்றும் காரணம் வகை:

கூற்று (A): வட இந்தியாவில் காணப்படும் ஆறுகள் வற்றாதவை

காரணம் (R): இவ்வாறுகள் வருடம் முழுவதும் நீரைப் பெற்று இருக்கின்றன

Reason and Assertion type

Assertion (A): North Indian Rivers are perennial

Reasons (R): They have water throughout the year

(a) (A) சரி ஆனால் (R) தவறு / (A) is true but (R) is false

(b) (A) மற்றும் (R) சரி / Both (A) and (R) are true

(c) (A) தவறு (R) சரி / (A) is false, (R) is true

(d) (A) மற்றும் (R) சரி. ஆனால் (R) என்பது (A)க்கு சரியான விளக்கமல்ல / Both (A) and (R) are true but (R) is not correct explanation of (A)

20. இந்தியாவில் உள்ள இமயமலை _________ஆக பிரிக்கப்பட்டுள்ளன.

In India, the Himalayas are divided into ——— ranges.

(a) இரண்டு இணைகள் / Two parallel

(b) மூன்று இணைகள் / Three Parallel

(c) நான்கு இணைகள் / Four Parallel

(d) ஆறு இணைகள் / Six Parallel

21. _______மேற்கொண்ட முயற்சியின் காரணமாக கி.பி.1872ல் பூர்விக திருமணச் சட்டத்தை அரசு இயற்றியது.

Due to the efforts made by ———— the Government passed the Native Marriage Act is 1870 A.D

(a) ஸ்ரீபாத் பானர்ஜி / Shripad Banerji

(b) கேஷ்வ சந்திர சென் / Keshava Chandra Sen

(c) ராஜா ராம் மோகன் ராய் / Raja Ram Mohan Roy

(d) ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் / Ishwar Chandr Vidyasagar

22. இந்தியா மதசார்பற்ற நாடு என கூறுவதற்கு எது முக்கிய காரணம்?

Which is the most important reason to consider India as a secular state?

(a) அனைத்து மதத்தினருக்கும் அரசாங்க வேலை / Government works for the welfare of people of all religions

(b) மத சிறுபான்மையினருக்கு சிறப்பு பாதுகாப்பு / Minority religions are given special protection

(c) பல்வேறு மதத்தை சார்ந்த மக்கள் இந்தியாவில் வசிக்கின்றார்கள் / Peoples of different religions live in India

(d) மதம் என்பது அரசியலில் இருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளது / Religion is separated from politics

23. 1895ம் ஆண்டு கட்டப்பட்ட முல்லை பெரியார் அணையின தலைமை பொறியாளர் யார்?

Who worked as the Chief Engineeer of the Mullaiperiyar Dam in 1895?

(a) பால் பென்ஃபில்டு / Paul Benfield

(b) எட்வர்டு லுட்டியன்ஸ் / Edward Lutyens

(c) கர்னல் ஜான் பென்னிகுவிக் / Colonel John Pennycuick

(d) கர்னல் ஜேம்ஸ் அஃபுல்பலர் / Col. James. A.Fuller

24. சிந்து சமவெளி நாகரீகத்தின் போது எந்த மரம் உச்ச தெய்வமாக கருதப்பட்டது?

Which tree was considered as supreme deity during the Indus Valley Civilizaion?

(a) ஆலமரம் / Banyan

(b) வேப்பமரம் / Neem

(c) பனை மரம் / Palm

(d) அரசமரம் / Pipal

25. பின்வருவனவற்றுள் ‘ஏக் பாரத் ஷ்ரேஸ்தா பாரத்’ திட்டம் பற்றிய கூற்று சரியானது

1. சர்தார் வல்லபாய் படேலின் 140-வது பிறந்த நாள் அன்று அறிவிக்கப்பட்டது.

2. நமது தேசத்தின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதே இதன் குறிக்கோள்

3. மற்ற நாடுகளின் சிறந்த நடைமுறைகளைக் கற்றுக்கொள்வதற்கான சூழலை உருவாக்குதல்

Which of the following statements are true about “EK Bharat Shreshtha Bharat’

i. It was announced on the occasion of the 140th Birth anniversary of “Sardar Vallabhabhai Patel”

ii. The objective was to celebrate the unity in diversity of our nation

iii. To create an environment to learn the best practices of other countries.

(a) 1 மட்டும் / i only

(b) 1 மற்றும் 3 மட்டும் / i and iii only

(c) 1 மற்றும் 2 மட்டும் / i and ii only

(d) 2 மற்றும் 3 மட்டும் / ii and iii only

26. எந்த மொகலாய இளவரசரின் படத்தொகுப்பு இன்றும் லண்டனில் உள்ள இந்திய அலுவலக நூலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுளள்து?

Which Mughal Prince album is still preserved in the library of the Indian office at London?

(a) ஜவான் பக்த் / Jawan Bakht

(b) அசாம் ஷா / Azam Shah

(c) பகதூர் ஷா ஜாபர் / Bahadur Shah Zafar

(d) தாராசுக்கோ / Darasukoh

27. பாமினி சுல்தான்கள் ________ என அழைக்கப்படும் தமது தனிப்பட்ட மெய்க்காப்பாளர்களை வைத்திருந்தனர்

The Bahmani Sultan’s kept his personal bodyguards called the

(a) காஸ்-ஐ-கேல் / Khas-i-Khel

(b) அமீர்-உல்-உம்ரா / Amir-Ul-Umra

(c) கிலேதர்கள் / Kiledars

(d) மான்சாப்கள் / Mansabs

28. கீழ்க்கண்டவற்றுள் சமுத்திர குப்தர் காலத்தைச் சார்ந்த கல்வெட்டுகள் எவை?

1. அலகாபாத் தூண் கல்வெட்டுகள்

2. நாளந்தாச் செப்புப் பட்டயம்

3. ஈரான் கல்வெட்டுகள்

4. மெக்ரலி தூண் கல்வெட்டுகள்

Which of the following inscriptions belong to Samudragupta?

i. Allahabad Pillar Inscription

ii. Nalanda Copper Plate

iii. Eran Stone Inscription

iv. Mehrauli Pillar Inscription

(a) 1, 2, 3 மற்றும் 4/ i, ii, iii and iv

(b) 1, 2 மற்றும் 4/ i, ii and iv

(c) 1, 2 மற்றும் 3/ i, ii and iii

(d) 1, 3 மற்றும் 4/ i, iii and iv

29. கீழ்வருவனவற்றை அவை அமைக்கப்பட்ட ஆண்டின் அடிப்படையில் வரிசைப்படுத்துக:

1 அசோக் மேத்தா குழு

2. GVK.ராவ் குழு

3. L.M.சிங்வி குழு

4. பல்வந்த் ராய் மேத்தா குழு

Arrange the following committees in chronological order

1. Ashok Mehta Committee

2. GVK Rao Committee

3. L.M.Singhvi Committee

4. Balwant Rai Mehta Committee

(a) 4, 1, 2, 3

(b) 3, 4, 2, 1

(c) 2, 1, 4, 3

(d) 4, 3, 2, 1

30. மாநிலங்களில் பின்வருவனவற்றுள் எது துணை நீதிமன்றங்களின் கீழ் வருவதில்லை?

Which of the following does out come under the subordinate courts of the states?

(a) குற்றவியல் நீதிமன்றங்கள் / Criminal Courts

(b) நுகர்வோர் நீதிமன்றங்கள்/ Consumer Courts

(c) குடிமை நீதிமன்றங்கள் / Civil Courts

(d) வருவாய் நீதிமன்றங்கள் / Revenue Courts

31. 9வது அட்டவணையைப் பற்றிய கீழ்க்காணப்படும் வாக்கியங்களில் எது/எவை தவறானது/வை?

With respect to the 9th schedule of the Indian constitution, which of the following statements are not correct?

(a) 9வது அட்டவணை நம் அரசியல் அமைப்பு சாசனத்தின் அசாதாரண அம்சம் / 9th schedule is an unusual feature of the constitution

(b) 9வது அட்டவணையில் கிட்டதட்ட 300 சட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன / About 300 Acts are listed in the 9th schedule

(c) அரசியலமைப்பு சட்ட விதி 31ன் படி 9வது அட்டவணையில் உள்ள அனைத்து சட்டங்களும் நீதி புனராய்விற்கு உட்படாது என்று தெரிவிக்கின்றது / Art.31 declares that all the acts under 9th schedule are not immune from judicial review

(d) அடிப்படை உரிமை மீறல்களுக்கு, 9வது அட்டவணையின் சட்டங்கள் நீதிபுனராய்விற்கு உட்படாது / Acts of the 9th schedule are not immune to judicial review on the ground of violation of a fundamental right

32. 2010ல் திருத்தப்பட்ட 1951ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவம் குறித்த சட்டம் _________க்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குகிறது

The representation of the people Act of 1951, as amended in 2010 gives voting rights to

(a) அனைத்துத இந்திய குடிமக்களுக்கும் / All the Indian citizens

(b) பிற நாடுகளில் இருந்து குடியேறியவர்கள் / Migrants from other nations

(c) இந்தியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட / People deported from India

(d) வெளிநாடுகளில் உள்ள இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் / Overseas Indian passport holders

33. இந்திய நாடாளுமன்றத்தில் மசோதாவை நிதி மசோதா அல்லது சாதாரண மசோதா என முடிவு செய்வது யார்?

In the Indian parliament, who decides whether a bill is a money bill or non money bill

(a) குடியரசு தலைவர் / Presient

(b) இராஜ்ய சபையின் தலைவர்/ Chairman of Rajya Sabha

(c) சபா நாயகர் / The Speaker

(d) இராஜ்ய சபையின் துணை தலைவர் /Deputy chairman of Rajya Sabha

34. இந்திய அரசியலமைப்பின 360வது விதியானது எதனைப் பற்றி குறிப்பிடுகிறது?

Article 360 of the Indian constitution deals about

(a) தேசிய அவசர நிலை / National emergency

(b) மாநில அவசர நிலை / State emergency

(c) நிதி அவசர நிலை / Financial emergency

(d) நீதித்துறை அவசர நிலை /Judicial emergency

35. பஞ்சாயத்துராஜ் தேர்தல் தொடர்பான சர்ச்சைகளை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாநிலத்திலும் நீதித்துறை தீர்ப்பாயத்தை பரிந்துரை செய்த குழு எது?

Which committee recommends the establishment of a judicial tribunal in each state to adjudicate controversies about election of Panchayat Raj Institution

(a) பல்வந்த்ராய் மேத்தா / Balwant Raj Mehta

(b) L.M.சிங்வி / L.M.Singhvi

(c) V.R.ராவ் / V.R.Rao

(d) துங்கன்/ P.K.Thungon

36. குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவர் பதவிகளை யாரும் வகிக்காத ஒரு சூழலில், குடியரசுத் தலைவராக பதவி வகித்த, இந்திய தலைமை நீதிபதி யார்?

Name the chief Justice of India who acted as president of India, when the offices of president and vice president fell vacant

(a) நீதிபதி K.N.வான்ச்சூ / Justice K.N.Wancho

(b) நீதிபதி M.ஹிதயதுல்லா / Justice M.Hidayatullah

(c) நீதிபதி Y.V.சந்திரசூட் / Justice Y.V.Chandrachud

(d) நீதிபதி B.P.சின்சா / Justice B.P.Sinha

37. கூற்று (A): பயனுள்ள பொருளாதார வளர்ச்சி என்பது வளர்ச்சிக்கான திட்டமிடலைப் பொறுத்தது

காரணம் (R): பொருளாதார மேம்பாட்டிற்கான திட்டமிடல் அமைப்பைக் கொண்டிருப்பது நவீன அரசாங்கத்தின் தரப்பில் கட்டாயமாகிவிட்டது.

Assertion (A): Effective economic development depends on “Planning for development.

Reason (R): It has become imperative on the part of modern Government to have a planning body for economic development

(a) (A) சரி ஆனால் (R) தவறு / (A) is true, but (R) is false

(b) (A) மற்றும் (R) இரண்டும் சரி மற்றும் (R) என்பது (A)க்கான சரியான விளக்கமாகும் / Both (A) and (R) are true; and (R) is the correct explanation of (A)

(c) (A) தவறு (R) என்பது சரி / (A) is false, (R) is true

(d) (A) மற்றும் (R) இரண்டும் சரி மற்றும் (R) என்பது (A)க்கான சரியான விளக்கமல்ல / Both (A) and (R) are true, and (R) is not the correct explanation of (A) is correct

38. வேலைநிறைவு நிலை என்பது எவ்வகையான வேலையின்மையை உள்ளடக்கியது?

Which type of unemployment is included in full employment?

(a) மறைமுக வேலையின்மை / Disguised

(b) கட்டமைப்பு வேலையின்மை / Structural

(c) தொழில் நுட்ப வேலையின்மை / Technological

(d) பிறழ்ச்சி கால வேலையின்மை/ Frictional

39. நீடித்து நிலைக்கும் பசுமைப்புரடசியின் உட்கருத்துகள்

1. குறைந்த இடுபொருட்களில் அதிக உற்பத்தி

2. புதுப்பிக்கத்தக்க சக்தி பயன்பாடு

3. மண்வளம் பாதுகாக்க சுற்றுச்சூழலை பேணுதல்

4. நிலம் துண்டாடப்படுவதைத் தடுத்தல்

The components of Evergreen Revolution are

1. Produce more using fewer resources

2. Using renewable sources of energy

3. Maintaining environment for soil health

4. Prevention of land subdivision

(a) 1, 2, 3 மட்டும் / 1, 2, 3 only

(b) 2, 3, 4 மட்டும் / 2, 3, 4 only

(c) 1, 3, 4 மட்டும் / 1, 3, 4 only

(d) 2, 1, 4 மட்டும் / 2, 1, 4 only

40. ________ குழுவின் முக்கிய பணி என்பது இந்திய அரசாங்கச் செலவுக்காக பாராளுமன்றத்தால் ஒதுக்கப்பட்ட நிதிகளை ஆய்வு செய்வதாகும்

The ——- committee’s main function is to examine the appropriation of sums granted by the Parliament for the expenditure of the Government of India.

(a) பொதுக்கணக்குக் குழு / Public Accounts committee

(b) மதிப்பீட்டுக்குடு / The Estimates committee

(c) பொதுத்துறைகளுக்கான குழு / The committee on Public Undertaking

(d) வரவு செலவு திட்டக்குழு / Budget committee

41. பின்வருபனவற்றுள் எது சரக்கு மற்றும் சேவை வரியின் இயல்பு இல்லை?

Which of the following is not a feature of GST?

(a) இது பொருள்கள் மற்றும் சேவைகளின் அளிப்பின் மீது விதிக்கப்படுகிறது / Tax on supply of goods and services

(b) இது ஒருமுனை வரியாகும் / Single tax

(c) உள்ளீடுகளின் மீதான வரி வரவு இதில் உள்ளது / input tax credit is available

(d) தயாரிப்பாளர்கள் வாங்கும் மூலப்பொருள் மீது வரி கிடையாது / no GST on manufacturers on raw materials

42. இந்திய ரிசர்வ் வங்கி மலிவு பணக்கொள்கையை பின்பற்ற முடிவெடுத்தால் அதன் விளைவாக

If the RBI wishes to practice cheap money policy, it may lead to

(a) அரசின் பத்திரங்களை விற்பனை செய்யும் / Self government securities

(b) வங்கிகளின் இருப்புத்தொகை வீதத்தை அதிகரிக்கும் / Raise bank’s required reserve ratios

(c) வங்கி வட்டி வீதத்தைக் குறைக்கும் / Lower the bank rate

(d) வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் கடன் பெறுவதை கட்டுப்படுத்தும் / Discourage member banks from borrowing from the RBI

43. ஒரு சமதர்மப் பொருளாதார அமைப்பில் உற்பத்தி, பகிர்வ மற்றும் தீர்வுகளை முடீவு செய்வது எவை?

Who decide, production, distribution and decision in a socialist pattern of Economy?

(a) சந்தை / Market

(b) மத்திய திட்டக்குழு/ Central Planning Commission

(c) பழக்க வழக்கமும், மரபுகளும் / Behavious and traditional activities

(d) தனியார் துறை / Private sector

44. 1. இந்திய தேசிய காங்கிரஸ் கி.பி. 1885இல் பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் நிறுவப்பட்டது

2. இதன் நிறுவனர்களின் ஆலன் ஆக்டேவியன் ஹியூம், தாதாபாய் நௌரோஜி மற்றும் தீன்ஷா வாச்சா ஆகியோர் அடங்குவர்

3. இது இந்தியப் பொருளாதார இயக்கத்தில் ஒரு முக்கிய பங்கேற்பாளராக மாறியது

மேலே காணப்படும் கூற்றுகளில் சரியானது/வை எது/எவை?

i. The Indian National Congress was founded during the British colonial times in A.D.1885

ii. The founders included Allan Octavian Hume, Dadabhai Naoroji and Dinshaw Wachan

iii. This became a pivotal participant in the Indian Economic movement.

Which of the above statement/s is/are true?

(a) 1 மற்றும் 3 மட்டும் / i and iii only

(b) 2 மற்றும் 3 மட்டும் / ii and iii only

(c) 3 மற்றும் 2 மட்டும் / iii and ii only

(d) 1 மற்றும் 2 மட்டும் / i and ii only

45. இராஜா ராம் மோகன் ராய் அவர்கள் _______ கொள்கையில் தீவிர நம்பிக்கை கொண்டவராக இருந்தார்

Rajaram Mohan Roy was a strict believer of

(a) நர்திகம் / Atheism

(b) ஓரிறைக் கொள்கை / Monotheism

(c) மறுசீரமைப்பு இயக்கம் / Mormonism

(d) பலதெய்வ வழிபாடு / Polytheism

46. இந்திய பிரிவினைத் தொடர்பாக பின்வரும் வாக்கியங்களில் எவை சரியானவை?

1. பிரிவினையைக் காங்கிரஸ் அங்கீகரித்தது

2. மௌன்ட்பேட்டன் இந்தியப் பிரிவினைத் திட்டத்தினை ஜீன் 2, 1947ல் வகுத்தார்.

3. 1947ம் ஆண்டுச் சட்டம் இரண்டு சுதந்திர நாடுகளை உருவாக்க வழி செய்தது.

Regarding the partition of India, which of the following statements are true?

1. The congress accepted the partition

2. Mountbatten put his plan for the partition of India on June 2nd 1947

3. The act of 1947 provided for the creation of two independent dominions.

(a) 1 மட்டும் / 1 only

(b) 2 மட்டும் / 2 only

(c) 1 மற்றும் 2/ Both 1 and 2

(d) 1, 2 மற்றும் 3/ 1, 2 and 3

47. தமிழ்நாட்டில் இராஜாஜி தலைமையின் கீழ் நடைபெற்ற வேதாரண்யம் நடையின் போது கலந்து கொண்ட சத்தியகிரகிகள் எத்தனை பேர்?

How many Satyagrahis were participated in the Vedaranyam March under Rajaji in Tamil Nadu?

(a) 90

(b) 95

(c) 98

(d) 100

48. அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளை முறையே ஷஹித் மற்றும் ஸ்வராஜ் என பெயர் மாற்றம் செய்தது யார்?

Who renamed Andaman and Nicobar Islands as Shaheed and Swaraj islands respectively?

(a) சோஹன் சிங் பக்னா / Sohan Singh Bhakna

(b) ராஷ்பிஹாரி போஸ் / Rashbihari Bose

(c) சத்யேந்திரநாத் போஸ் / Satyendranath Bose

(d) சுபாஷ் சந்திர போஸ்/ Subash Chandra Bose

49. இரவிந்திரநாத் தனது துவக்க கால எழுத்து பதிவுகளை குடும்ப இதழிலே வெளியிட்டுள்ளார். அவ்விதழ் ________ என அழைக்கப்பட்டது

Rabindranath early writings were published in the family magazines called

(a) தாமரை/ Lotus

(b) இயற்கை / Nature

(c) சூரியன் / Sun

(d) பாரதி / Bharati

50. சரியானவற்றைப் பொருத்துக:

பிரிட்டிஷ் இந்தியாவின் சுதேசி இயக்கத்துடன் தொடர்புடைய ஆளுமைகள்

1. சுதேசிவஸ்து பிரசாரினி சபா – லோகமான்ய பாhல கங்காதர திலக்

2. சுதேசி சங்கம் – சுப்ரமணிய பாரதி

3. சுதேசி சங்கம் – V.O.சிதம்பரம்

4. சுதேசி பண்ட்சுப் சமிதி – G.சுப்ரமணியன்

Which of the following are correctly matched?

Founder personalities associated with Swadeshi Movement of British India

1. Swadeshivastu Pracharini Sabha – Lokmanya Bal Gangadhar Tilak

2. Swadeshi Sangam – Subramania Bharathi

3. Swadeshi Steam Navigation company – V.O.Chidambaram

4. Swadesh Bandhab Smiti – G.Subramanian

(a) 1, 2 மற்றும் 3/ 1, 2 and 3

(b) 2 மற்றும் 4 / 2 and 4

(c) 3 மற்றும் 4/ 3 and 4

(d) 1 மற்றும் 4/ 1 and 4

51. ‘மாலை மணி’ என்ற பத்திரிக்கையை ஆரம்பித்தவர் யார்?

Who started the Journal namely “Malai Mani”?

(a) அண்ணாதுரை / Anna Durai

(b) ஈ.வெ.ராமசாமி / E.V.Ramasamy

(c) கருணாநிதி / Karunanith

(d) எம்.ஜி.ராமசந்திரன் / M.G.Ramachandrran

52. பின்வருவனவற்றுள் சரியாக பொருத்தப்படாததை கூறுக

1. SIPA – தென்னிந்திய மக்கள் சங்கம்

2. SILF – தென்னிந்திய சட்ட கூட்டமைப்பு

3. AMS – ஆந்திரா மகா சபை

4. MPA – மதராஸ் மாகாண சட்டசபை

Which of the following are incorrectly paired?

1. SIP – South Indian People’s Association

2. SILF – South Indian Legal Federation

3. AMS – Andhra Mahasabha

4. MPA – Madras Presidency Assembly

(a) 1 மற்றும் 2ம் தவறு / 1 and 2 are incorrect

(b) 2 மற்றும் 3ம் தவறு / 2 amd 3 are incorrect

(c) 2 மற்றும் 4ம் தவறு / 1 and 4 are incorrect

(d) 1 மற்றும் 4ம் தவறு / 1 and 4 are incorrect

53. கீழ்கண்டவற்றை பொருத்துக:

அ. வைத்தியாநத அய்யர் 1. மதுரை ஹார்வி தொழிற் சங்க வேலை நிறுத்தம்

ஆ. ருக்மணி லெட்சுமிபதி 2. ஆந்திரக் கேசரி

இ. பிரகாசம் 3. துணை சபாநாயகர்

ஈ. வரதாராஜலு நாயுடு 4. ஆலய நுழைவு

Match the following:

a. Vaithiyanatha Iyer 1. Madurai Harvey Industry Strike

b. Rukmani Lakshmipathi 2. Lion of Andhra

c. Prakasam 3. Deputy Speaker

d. Vartharajulu Naidu 4. Temple Entry

a b c d

a. 1 3 4 2

b. 2 4 1 3

c. 4 3 2 1

d. 3 2 4 1

54. 1951ஆம் ஆண்டு ஜமீன்தார் ஒழிப்பு முறை சட்டத்தின் விளைவு யாது?

What was the impact of Zamindari Abolition Act of 1951?

(a) நில சீர்திருத்தங்களில் வெற்றி / Success for land reforms

(b) அதன் நடவடிக்கைகள் நில பயன்பாட்டின் செயல் திறனை மேம்படுத்தும் / Its measures would improve the efficiency of land use

(c) விவசாயிகளின் நிலையை மேம்படுத்துகிறது / Empowering the status of peasants

(d) குத்தகைதாரர்கள் மற்றும் பங்குதாரர்கள் 62 லட்சம் ஹெக்டேர் நிலத்தின் உரிமையைப் பெற்றனர் / Tenanats and sharecroppers gained ownership of 62 lakh heactares of Land

55. எந்த சமூகச் செயற்பாட்டாளர் ஐரிஷ் புரட்சியாளர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார் என்று சொல்லப்படுகிறது?

Which social activist is said to have had link with Irish Revolutionaries?

(a) அன்னி பெசன்ட் / Annie Besant

(b) கலோனல் ஆல்காட் / Colonel Alcott

(c) மார்கரெட் நோபிள் / Margaret Noble

(d) ஹெலனா பிளவட்ஸ்கி / Helena Blavatsky

56. இவைகளில் வேலு தம்பியைப் பற்றிய சரியான கூற்றை எழுதுக:

1. இவர் பூர்வீக மக்களையும் சேர்த்து இகசிய தாக்குதலை நடத்த திட்டமிட்டார்

2. இவர் தெற்கு திருவிதாங்கூர் பகுதிக்கு தாசில்தாராக இருந்தார்

3. இவர் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்றினார்

Which of the following are true about Velu Thambi?

i. Thambi had planned a secret attack with the native people

ii. He was a Tahsildar incharge of a Southern Travancore tract

iii. He worked closely with the British Government

(a) 3 மட்டும்/ iii only

(b) 1 மட்டும்/ i only

(c) 2 மட்டும் / ii only

(d) 1 மற்றும் 2 மட்டும் / i and ii only

57. வலியுறுத்தல் (A): பருத்திச் செடியின் பிறப்பிடம் தண்டகா காடு.

காரணம் (R): புதிய கற்கால மனிதன் பருத்தி இழையை நூலாக சுழற்றவும், நூலை பருத்தி துணியில் நெசவு செய்யவும் கற்றுக் கொண்டான்

Assertion (A): Dantaka forest was the birth place of cotton plant

Reason (R): Neolithic man learnt to spin the cotton fibre into thread and weave the thread into cotton cloth

(a) (A) சரி ஆனால் (R) தவறு / (A) is true but (R) is fales

(b) (A) மற்றும் (R) இரண்டும் சரி (R) (A)விற்கு சரியான விளக்கம் / Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)

(c) (A) தவறு (R) சரி / (A) is false, (R) is true

(d) (A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (R) (A)விற்கு சரியான விளக்கமல்ல / Both (A) and (R) are true but (R) is not the correct explanation of (A)

58. கி.மு. பத்தாம் நூற்றாண்டின் அரசனாகிய சாலமனுக்குத் தமிழ் நாட்டுக் கப்பல்கள் வாயிலாகக் கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் எவை?

Which of these items were shipped to King Solomon from Tamil Nadu in the 10th Century BC?

(a) மயில் தோகை, அரிசி, இஞ்சி / Peacock Feather, rice, ginger

(b) மயில் தோகை, யானைத்தந்தம், வாசனைப் பொருட்கள் / Peacock Feather, Elephant ivory, perfumes

(c) இஞ்சி, திப்பிலி, வாசனைப்பொருட்கள் / Ginger, Tippili, Perfume

(d) இஞ்சி, திப்பிலி, அரிசி / Ginger, Tippili, Rice

59. ‘_______ உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது’

மேற்காணும் திருக்குறளில் எவை இரண்டைத் திருவள்ளுவர் இல்வாழ்க்கைக்கு உகந்தது எனக் குறிப்பிடுகிறார்?

“—— in the household reign,

This is of life the perfect grace and gain”.

Which of the two graces are mentioned as necessary for a successful marital life in the above Thirukkural?

(a) அறமும் பொருளும் / Virtue and Wealth

(b) பண்பும் பயனும் / Attribute and use

(c) அன்பும் அறனும் / Love and affection

(d) பொன்னும் பொருளும் / Gold and Wealth

60. வள்ளுவரின் அரசியல், பொருளாதார, சமுதாயச் சிந்தனைகளின் களஞ்சியமாக அமையும் திருக்குறளின் பொருத்தமான பிரிவாக எதைக் கூறலாம்?

Thiruvalluvar’s political, economic, social thought treasures are found in which of the following parts of Thirukkural?

(a) அறத்துப்பால் / Aarathupal (Virtue)

(b) பொருட்பால் / Porutpal (Wealth)

(c) காமத்துப்பால் / Kamathupal (Nature of Love)

(d) மேற்கண்ட மூன்றும் / All of the above three

61. கீழ்க்காணும் கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்ற நான்கு அதிகாரங்களும் பாயிரம் என அழைக்கப்படும்.

2. திருக்குறள் கடவுள் வாழ்த்தில், கடவுள் என்ற சொல் மூன்று குறள்களில் வருகிறது.

3. வான் சிறப்பு என்ற அதிகாரத்தில் வருணதேவன் என்ற சொல் வரவில்லை.

4. மனத்தில் குற்றமில்லாமல் இருப்பதே அறம் என்கிறார் வள்ளுவர்.

Choose the correct answer:

1. Kadavul Vazhthu, Van Sirappu, Neethaar Perumai, Aran Valiyurathal – All four parts (Adhigarams) are called as Payiram.

2. In Invocation, the word ‘Kadavul’ takes place in three places.

3. In part, ‘Van Sirappu’, the word ‘Varuna Devan’ does not take place

4. According to Valluvar, Being pure at heart is virtue.

(a) 1, 2, 3 சரி / 1, 2.3 are correct

(b) 1, 3, 4 சரி / 1, 3, 4 are correct

(c) 1, 2, 4 சரி / 1, 2, 4 are correct

(d) 2, 3, 4 சரி / 2, 3 and 4 are correct

62. தமிழின் முதல் கள ஆய்வு நூலாகக் கருத்தப்படுவது எது?

1. பெரியபுராணம்

2. திருவாசகம்

3. திருமந்திரம்

4. திருப்பல்லாண்டு

Which literature is considered as the first field research of Tamil?

1. Periyapuranam

2. Thiruvasagam

3. Thirumanthiram

4. Thirupallaandu

(a) 1 மட்டும் சரி / 1 alone is correct

(b) 2 மட்டும் சரி / 2 alone is correct

(c) 3 மட்டும் சரி / 2 alone is correct

(d) எதுவும் சரியில்லை / 3 alone is correct

63. சரியான ஆசிரியர், நூல் இணைவைக் கண்டறிந்து பொருத்துக:

ஆசிரியர் நூல்

1. சாண்ல்யன் 1. கடல் சொன்ன கதை

2. வண்ணநிலவன் 2. ஆழிசூழ் உலகு

3. ஜோ டி குருஸ் 3. கடல் புறா

4. வறீதையா கான்ஸ்தந்த் 4. குடல் புரத்தில்

Identify the authors with their books:

Author Book

a. Chandilyan 1. Kadal Sonna Kathai

b. Vannanilavan 2. Aazhisool Ulagam

c. Joe D’Cruz 3. Kadal Pura

d. Vareethiah Konstantine 4. Kadal Purathil

a b c d

a. 3 4 2 1

b. 4 3 2 1

c. 2 1 3 4

d. 1 4 2 3

64. கீழ்க்காணும் கூற்றுகளில் முதுமொழிக் காஞ்சி குறித்த செய்திகளில் ஒரு செய்தி தவறானதை எடுத்து எழுதுக:

Identify the wrong statement about Mudumozhi Kaanchi stated below:

(a) முதுமொழி என்றால் பழமொழி, காஞ்சி என்றால் நிலையாமை. இது பழமொழியில் நிலையாமையைக் கூறுகிறது / ‘Mudhumozhi’ means ‘Pazhamozhi’, Kanchi means ‘Nilaiyamai’ This shows Nilayamai (uncertainty)

(b) இதை எழுதியவர் கூடலூர் கிழார் / Mudhumozhi Kanchi was written by Koodalur Kizhar

(c) தொல்காப்பியர் கூறும் அம்மை என்னும் வனப்பில் இப்பாடல்கள் அடங்கும் / There poems are from ‘ammai enum Vanappu’ mentioned by Tholkappiar

(d) ஆத்திசூடி நூல்களுக்கு முன்னோடி முதுமொழிக் காஞ்சி/ Mudhumozhi Kanchi is considered to be the forerunner of the book Aathichoodi

65. பண்டைய பாறை ஓவியங்கள் கிடைக்கும் இடங்கள்

1. மல்லப்பாடி

2. பெரு முக்கல்

3. பையம்பள்ளி

4. சிறுமலை

The ancient Rock Paintings found at the places of

i. Malla Padi

ii. Peru Mukkal

iii. Paiyampalli

iv. Siru Malai

(a) 1, 2 மட்டும் / i, ii only

(b) 2, 3 மட்டும் / ii, iii only

(c) 3, 4 மட்டும் / iii, iv only

(d) அனைத்தும் சரி / All the above

66. இந்தியாவில், _____ பள்ளிகளின் அடிப்பகை; கல்வித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ‘கரும்பலகைத் திட்டம்’ செயல்படுத்தப்பட்டது

‘Operation Blackboard’ was implemented in India to provide basic amenities in education in ——- schools.

(a) ஆரம்பப் / Primary

(b) நடுநிலைப் / Middle

(c) மேல்நிலைப் / Higher Secondary

(d) கிராமப்புற / Rural

67. பொருத்துக:

திட்டம் திருமண உதவி

அ. டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் 1. கலப்பு திருமணம்

ஆ. மணியம்மையார் நினைவு 2. அனாதை பெண்கள்

இ. டாக்டர் முத்துலெட்சுமி (ரெட்டி) நினைவு 3. ஏழை விதவை தாயின் பெண்கள்

ஈ. அன்னை தெரசா நினைவு 4. தவை மறுமணம்

Match the following:

Scheme Marriage Assistance

a. Dr.Dharmambal Ammaiyar 1. For Inter caste marriage

b. EVR Maniammaiyar Ninaivu 2. For orphan girls

c. Dr.Muthulakshmi (Reddy) Ninaivu 3. For daughters of poor widows

d. Annai Therasa Ninaivu 4. For widow remarriage

a b c d

a. 3 4 1 2

b. 4 3 1 2

c. 4 3 2 1

d. 1 2 3 4

68. இந்திய அரசியலமைப்பு பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை வரையறுக்கவில்லை. ஆனால் ஒரு குறிப்பை செய்கிறது. அந்த பிரிவை அடையாளம் காணவும்.

Indian Constitution does not define OBC, but makes a reference, identify the article

(a) பிரிவு 16(4)/ Article 16 (4)

(b) பிரிவு 17/ Article 17

(c) பிரிவு 18(A)/ Article 18 (A)

(d) பிரிவு 344/ Article 344

69. தமிழ்நாடு மாநில மனித மேம்பாட்டு அறிக்கை 2017யில் மாவட்ட வாரியாக வறுமை மற்றும் வருவாய் நிலையில் கீழ் இருக்கும்

Tamil Nadu State Human Development Report, 2017, in this District level low income districts like

(a) காஞ்சிபுரம் / Kancheepuram

(b) அரியலூர் / Ariyalur

(c) சென்னை / Chennai

(d) கடலூர் / Cuddalore

70. தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மக்கள் போர்டலின் நோக்கம் யாது?

What is the purpose of introduction of ‘Makkal Portal’ in Tamil Nadu?

(a) ஆதாருக்கு மாற்று / Alternate to AADHAAR

(b) அரசு ஊழியர்களின் விவரங்களை மின்னணு முறையில் பராமரித்தல் / To maintain government employee’s data base in digital form

(c) மாநில அளவிலான முழுமையான குடியிருப்போர் தரவுகளை மின்னணு முறையில் நிர்வகித்தல் / Manage Complete State Level Resident Data in a digital form

(d) NPRக்கு மாற்று / Alternate to NPR

71. தமிழகத்தில் எந்த பயிர் உற்பத்திக்காக மிக அதிகளவு நிலப்பரப்பு பயன்படுத்தப்படுகிறது?

In Tamil Nadu the largest area of land is used for the cultivation of

(a) கரும்பு / Sugarcane

(b) நெல் / Paddy

(c) நிலக்கடலை / Groundnut

(d) தேங்காய் / Coconut

72. STEP என்பது, பெண்களுக்குப் பயிற்சி மற்றும் ________க்கான ஆதரவைக் குறிக்கிறது

STEP denotes support to Training – cum ———– for women

(a) கல்வி / Education

(b) வேலைவாய்ப்பு / Employment

(c) ஆற்றல்படுத்துதல் / Empowerment

(d) தொழில்முனைவோர் திறன் / entrepreneurship

73. பொருத்துக:

அட்டவணை I அட்டவணை II

அ. பேட்டி பச்சாவோ, பேட்டி பதாவோ 1. இழி வணிக தொடர்பு தடுப்பு

ஆ. RGSEAG 2. பாலின விகித முன்னேற்றம் மற்றும் பெண் கல்வி உறுதிபடுத்தல்

இ. IGMSY 3. வளர் இளம் பருவ பெண்களின் ஒட்டுமொத்த முன்னேற்றம்

ஈ. உஜாவாலா 4. கருவுற்ற மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு பண உதவி

Match the following:

List I List II

a. Beti Bachao, Beti Padhao 1. Prevention of Trafficking

b. RGSEAG 2. Improving sex ratio and ensuring girls education

c. IGMSY 3. All round development of adolescent girls

d. Ujjawala 4. Cash incentives for pregnant and lactating

women

a b c d

a. 2 1 4 3

b. 2 3 1 4

c. 2 3 4 1

d. 3 2 4 1

74. 1931யில் நடந்த இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் இந்தியாவின் பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதி யார்?

Who represented the Women’s organization of India at the second Round Table conference in 1931?

(a) சரோஜினி நாயுடு / Sarojini Naidu

(b) முத்துலெட்சுமி ரெட்டி / Muthulakshmi Reddy

(c) அன்னி பெசன்ட் / Annie Besant

(d) விஜயலெட்சுமி பண்டிட் / Vijayalakshmi Pandit

75. ஆண்களுக்குக் கல்வி அவசியம் என்பது போல் பெண்களுக்கும் கல்வி அவசியம். பெண்கள் சிறு வயதிலேயே திருமணம் செய்து கொள்ளாமல் உயர் கல்விக்குச் செல்ல வேண்டும் என்ற கோட்பாட்டின் வழிக்கல்வி பெறுதலைக் குறித்து அறிவுரை கூறியவர் யார்?

Who advised education is necessary for women as it is for males through his educational philosophy, he also advised them not to marry at an early age and go for higher education?

(a) டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் / Dr.B.R.Ambedkar

(b) மகாத்மா காந்தி / Mahatma Gandhi

(c) ஜவஹர்லால் நேரு / Jawaharlal Nehru

(d) ஈ.வெ.ரா.பெரியார் / E.V.R.Periyar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!