General StudiesTnpsc

Tnpsc Model Question Paper 46 – General Studies in Tamil & English

1. அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் – என்ன செய்யும்?

With none to console, tears of hapless citizens will

(a) நாட்டை அழிக்கும் / Ruin the country

(b) மனிதனை மாய்க்கும் / Kill human beings

(c) செல்வத்தைத் தேய்க்கும் / Destroy the wealth

(d) வலிமையை வீழ்த்தும் / Reduce strength

2. பொருத்துக:

நூல் சிறப்புப்பெயர்

அ. திருமுருகாற்றுப்படை 1. மலைபடுகடாம்

ஆ. கூத்தராற்றுப்படை 2. நெஞ்சாற்றுப்படை

இ. அகநானூறு 3. புலவராற்றுப்படை

ஈ. முல்லைப்பாட்டு 4. நெடுந்தொகை

Match the following:

Books Special Titles

a. Tirumurukatruppadai 1. Malaipadukadaam

b. Kootharatrupadai 2. Nenjaatrupadai

c. Agananooru 3. Pulavaraatrupadai

d. Mullaipattu 4. Nedunthogai

a b c d

a. 4 3 2 1

b. 3 1 4 2

c. 2 3 1 4

d. 1 2 3 4

3. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடு

அ. சிறுபஞ்சமூலம் 1. காப்பிய இலக்கியம்

ஆ. குடும்ப விளக்கு 2. சங்க இலக்கியம்

இ. சீவக சிந்தாமணி 3. அற இலக்கியம்

ஈ. கலித்தொகை 4. தற்கால இலக்கியம்

Match the following:

a. Sirupanjamoolam 1. Epic Literature

b. Kudumpa Vilakku 2. Sangam Literature

c. Seevaga Sinthamani 3. Moral Literature

d. The Kalithokai 4. Contemporary Literature

a b c d

a. 3 4 1 2

b. 3 1 4 2

c. 2 3 1 4

d. 4 1 2 3

4. திருக்குறளில் “மாந்தரின் உள்ளத்து உயர்வு” எதனோடு ஒப்பிடப்படுகிறது?

To what is the Humane Quality of person compared in Thirukkural as: “Maandhar Ullathin Uyarvu”

(a) வெள்ளத்தனைய மலர் நீட்டம் / Vellathanaiya Malar Neetam

(b) கடலின் அன்ன ஆழம் / Kadalin Anna Aazham

(c) வானத்தளவு உயர்வு / Vanathalavu Uyarvu

(d) நிலத்தைப் போன்ற பரப்பு / Nilathai Pondra Parappu

5. கீழ்காணும் கூற்றுக்குரிய சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1. பகல்வெல்லும் கூகையைக் காக்கை

2. நெடும் புனலுள் வெல்லும் முதலை

3. பீலிபெய் சாகாடும் அச்சிறும்

4. காலாழ் களரின் நரியடும்

Choose the correct answer:

1. Pagalvellum Kookaiyai Kakkai

2. Nedum Punalul Vellum Mudhalai

3. Peelipei Sagadum Achchirum

4. Kaalal Kalarin Nariyadum

(a) 1 மற்றும் 2 காலம் அறிதல், 3-இடம் அறிதல், 4-வலி அறிதல் / 1 and 2 Kaalam Arithal; 3-Idam Arithal; 4-Valiyarithal

(b) 1-காலம் அறிதல், 2 மற்றும் 4-இடம் அறிதல், 3-வலி அறிதல் / 1-Kaalam Arithal; 2 and 4-Idam Arithal; 3-Valiyarithal

(c) 1-காலம் அறிதல், 2 மற்றும் 3-இடம் அறிதல், 4-வலி அறிதல் / 1-Kaalam Arithal; 2 and 3-Idam Arithal; 4-Valiyarithal

(d) 1 மற்றும் 4 காலம் அறிதல், 2-இடம் அறிதல், 3-வலி அறிதல் / 1 and 4 Kaalam Arithal; 2-Idam Arithal; 3-Valiyarithal

6. கோவலன் கண்ணகி கதையைக் கூறிய சீத்தலைச் சாத்தனார் இளங்கோவடிகளிடம் எம்முறையில் கூறினார்?

How did Seethalai Sathanaar say to Ilango Adigal after he had narrated the story of Kovalan and Kannagi?

(a) நீரே அடிகள் அருளுக / Neerae Adigal Aruluga

(b) அருளுக அடிகள் நீரே / Aruluga Adigal Neerae

(c) நீரே அருளுக அடிகள் / Neerae Aruluga Adigal

(d) அடிகள் நீரே அருளுக / Adigal Neerae Aruluga

7. “தென்னிந்திய பிராமி கல்வெட்டுகள் எல்லாம் சந்தேகப்பட முடியாத அளவிற்கு பௌத்தர்களோடு தொடர்புடையவை என்பதே உண்மையாகும்… அப்படியாயின் பிராக்ருத அடிப்படைக் கொள்கைகளே கல்வெட்டியலில் கோலோச்சின என்றால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை” இது யாருடைய கூற்று?

“It is an indubitable fact that the South Indian Brahmi epigraphs are all associated with the Buddhists… Little wonder therefore that the inscriptions are dominated by Prakrit element.” Who said this?

(a) முனைவர் K.A. நீலகண்ட சாஸ்திரி / Dr.K.A.Nilakanta Sastri

(b) முனைவர் N.P.சக்கரவர்த்தி / Dr.N.P.Chakravarti

(c) முனைவர் K.K பிள்ளை / Dr.K.K.Pillay

(d) முனைவர் T.V.மஹாலிங்கம் / Dr.T.V.Mahalingam

8. பொருட்கலவை நூல் என்று அழைக்கப்படும் நூல் எது?

Which book is referred to as ‘Porutkalavai Nool’?

(a) பதிற்றுப்பத்து / Padhitrupathu

(b) நற்றிணை / Natrinai

(c) ஐங்குறுநூறு / Iyngurunooru

(d) பரிபாடல் / Paripaadal

9. திருக்குறள் – அறத்துப் பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை எத்தனை?

How many chapters are there in the section of virtue in Thirukkural (Arathupal)?

(a) 38

(b) 48

(c) 58

(d) 68

10. இடிபஸ் உளச்சிக்கலை (Oedipus Complex) மையமாகக் கொண்டு ஜெயகாந்தன் எழுதிய நாவல் எது?

Which novel of Jeyaganthan is centered on Oedipus Complex?

(a) சிலநேரங்களில் சிலமனிதர்கள் / Sila Nerangalil Sila Manithargal

(b) வாழ்க்கை அழைக்கிறது / Valkai Alaikirathu

(c) ரிஷிமூலம் / Rishimoolam

(d) சமூகம் என்பது நாலுபேர் / Samugam Yenbathu Naaluper

11. லக்னோவின் ராணி ஹஸ்ரத் மஹல் பேகம் பிரிட்டிஷாரை எதிர்த்தது ஏன்?

Why did the Queen Hazrat Mahal Begum of Lucknow fight against the British?

(a) பிரிட்டிஷாருக்கு வரி கட்ட மறுத்து / Refused to pay tax to the British

(b) அவகாசியிலி கொள்கையை எதிர்த்து / Against the Doctrine of Lapse

(c) வருவாய் கொள்கையை எதிர்த்து / Against the Revenue Policy

(d) பிரிட்டிஷாரை வெளியேற்ற / To expel the British

12. நூல் ஆசிரியர்களை அதன் படைப்புகளுடன் சரியாக பொருத்துக:

அ. ஈ.வே.ரா பெரியார் 1. கமலாம்பாள் சரித்திரம்

ஆ. சி.என்.அண்ணாதுரை 2. பத்மாவதி சரித்திரம்

இ. மாதவய்யா 3. குடியரசு

ஈ. ராஜம் அய்யர் 4. வேலைக்காரி

Match correctly the Authors with their works

(i) E.V.R.Periyar 1. Kamalambal Charithiram

(ii) C.N.Annadurai 2. Padmavathi Charithiram

(iii) Madavaiya 3. Kudiyarasu

(iv) Rajam Aiyar 4. Velaikkari

(a) (b) (c) (d)

(a) 2 3 4 1

(b) 1 2 3 4

(c) 3 2 1 4

(d) 3 4 2 1

13. எங்கே? எப்போது பெரியார் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தார்

When and where Periyar came out of congress and stated the Salt Respect Movement?

(a) காஞ்சிபுரம் / Kanchipuram – 1925

(b) செங்கல்பட்டு / Chengalpet – 1929

(c) ஈரோடு / Erode – 1930

(d) விருதுநகர் / Viruthunagar – 1937

14. கி.பி.இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இசை ஸ்வரங்கள் அடங்கிய பிராமி கல்வெட்டு எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?

Where did the Brahmi inscription mentioning musical svaras belong to the 2nd century A.D. has been discovered?

(a) அரச்சலூர் / Arachalur

(b) அரிக்கமேடு / Arikkamedu

(c) ஆதிச்சநல்லூர் / Adichanallur

(d) வனகிரி / Vangiri

15. கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்தவில்லை

அ. குறிஞ்சி – புணர்தல்

ஆ. முல்லை – இருத்தல்

இ. மருதம் – ஊடல்

ஈ. நெய்தல் – பிரிதல்

Which one is not matching correctly?

(i) Kurinji – Punarthal

(ii) Mullai – Iruthal

(iii) Marudam – Udal

(iv) Neydal – Pirithal

(a) அ மட்டும் / (i) only

(b) ஆ மட்டும் / (ii) only

(c) இ மட்டும் / (iii) only

(d) ஈ மட்டும் / (iv) only

16. கற்றல் மேம்பாட்டுத் திட்ட முறைகள் தொடர்பான கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனிக்கவும்

1. ஆங்கிலம் தமிழ் சித்திர அகராதி

2. ஆசிரியர் வடிவியல் பெட்டி

3. எண்ணியல் ஒளிக்காட்சி தட்டு வடிவிலான கதைகள்

4. பள்ளிகளுக்கிடையிலான கூட்டு

கற்றல் மேம்பாட்டுத்திட்ட முறைகள் தொடர்பான மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரி எனக் கூறவும்

Consider the following statement about Learning Enhancement Programme’s methods

(i) English Tamil Picture Ditionary

(ii) Teacher Geometry Box

(iii) Story DVD

(iv) Twinning of Schools

Which one of the above statement is/are true with regard to Learning Enhancement Programme’s methods?

(a) 1, 2 / (i), (ii)

(b) 1, 2 மற்றும் 3 / (i), (ii) and (iii)

(c) 1, 2 மற்றும் 4 / (i), (ii) and (iv)

(d) 1, 3 மற்றும் 4 / (i), (iii) and (iv)

17. 12ம் வகுப்பு பொதுத்தேர்வில், ஒவ்வொரு மாவட்ட அளவில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் விருது

Name the Award to the Boys and Girls who secure the first and second rank in the 12th Public examination in each district

(a) பேரறிஞர் அண்ணா நினைவு விருது / Peraringar Anna Memorial Award

(b) M.G.ராமச்சந்திரன் நினைவு விருது / M.G.Ramachandran Memorial Award

(c) M.கருணாநிதி நினைவு விருது / M.Karunanithi Memorial Award

(d) J.ஜெயலலிதா நினைவு விருது / J.Jeyalalitha Memorial Award

18. இந்தியாவில் —— பெரிய மின்னணு வன்பொருள் உற்பத்தி மையமாக சென்னை விளங்குகிறது

Chennai is the ______ largest electronic hardware manufacturing hub in India.

(a) முதலாவது / First

(b) இரண்டாவது / Second

(c) மூன்றாவது / Third

(d) நான்காவது / Fourth

19. தமிழ்நாடு மின்-நிர்வாக நிறுவனம் —- கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tamilnadu e-governance Agency has been registered under ______

(a) தகவல் பெறும் உரிமைச்சட்டம் / Right to Information Act

(b) கல்வி உரிமைச்சட்டம் / Right to Education Act

(c) சமூக சட்டம் / Societies Act

(d) நிறுவனச் சட்டம்/ Companies Act

20. பொருத்துக:

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பின்வரும் மாவட்டங்களில் சிறார் பாலின விகிதம் மாநிலச் சராசரியை விட குறைவாக உள்ளது (943)

அ. நாமக்கல் 1. 916

ஆ. கடலூர் 2. 914

இ. சேலம் 3. 891

ஈ. அரியலூர் 4. 896

Match the following:

As per the 2011 census, the juvenile sex ratio in the following districts are lower than the state average (943)

i. Namakkal 1. 916

ii. Cuddalore 2. 914

iii. Cuddalore 3. 891

iv. Ariyalur 4. 896

i ii iii iv

a. 2 4 1 3

b. 1 3 2 4

c. 4 1 3 2

d. 3 2 1 4

21. 108 அவசர மருத்துவ ஊர்திக்கு நாட்டிலேயே முதலாவதாக நியமிக்கப்பட்ட பெண் ஓட்டுநர் யார்?

The first women driver who appointed for 108 Ambulance Van for the first time in the country.

(a) திருமதி. ஜெயலட்சுமி / Tmt. Jeyalakshmi

(b) திருமதி. மகாலட்சுமி / Tmt. Mahalakshmi

(c) திருமதி. வீரலட்சுமி / Tmt. Veeralakshmi

(d) திருமதி. முத்துலட்சுமி / Tmt. Muthulakshmi

22. கல்வியில் சீர்திருத்தங்களுக்கான பின்வரும் நோக்கங்களை கோத்தாரி ஆணையம் (1964-66) பதிவு செய்தது

i. வேலைவாய்ப்பிற்கான கல்வி

ii. சமூக மற்றும் தேசிய ஒருங்கிணைப்பை அடைதல்

iii. நவீனமயமாக்கல் செயல்முறைகளை துரிதப்படுத்துதல்

iv. சமூக, தார்மீக மற்றும் ஆன்மிக மதிப்பீடுகளை வளர்ப்பது

மேற்கண்டவற்றில் எவை சரியானவை?

The Kothari Commission (1964-66) suggested the following objectives for reforms in education

i. Empolyability of education

ii. Achieve Social and National Integration

iii. Accelerate the process of modernization

iv. Cultivate social, moral and spiritual values

Which of the above are correct?

(a) i, iii, iv

(b) ii, iii, iv

(c) i, ii, iv

(d) i, ii, iii

23. சோ தர்மனின் —— நூல், ——யின் முக்கியத்துவம் பற்றி பேசியது, அந்நூலிற்காக அவர் 2019ஆம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருதினை வென்றார்.

2019, Sahitya Akademi Award was won by Cho Dharman for his book ______ which talks about the importance of __________

(a) சூல், “நீர்நிலைகள்” / Sool, ‘Water bodies’

(b) கூகை, ‘சாதி அற்ற சமூகம்”/ Koogai, ‘Caste less ness society’

(c) தூர்வை, ‘நவீனம், தொழில்மயமாதலின் தாக்கம்”/ Dhoorvai, ‘Modernization and industrialization impact’

(d) மருந்து, ‘கதை சொல்லியின் உணர்வுகள்’/ Marunthu, ‘Story teller’s feeling’

24.ஜெய் சக்தி அபியன் தொடங்கப்பட்ட குறிக்கோள்கள்

1. மழை நீர் சேகரிப்பு

2. பள்ளி கல்வியின் தரத்தினை மேம்படுத்த

3. கிரீமி விதிமுறைகளை பொருளாதார பின்தங்கிய நிலைக்கு விரிவுபடுத்தல்

4. மீள்நிரப்பு கிணறுகள் கட்டுதல்

5. விளக்கப்பட்டவர்களையும் சேர்க்க வேண்டும்

6. மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க

Jai shakthi Abiyan launched with the objectives:

i. to capture rain water

ii. to enhance the quality of school education

iii. to extend the creamy norms to economic backwardness

iv. for building recharge wells

v. to include the excluded

vi. to increase the enrolment ratio

(a) 2, 6 சரி / ii, vi correct

(b) 1, 4 சரி / i, iv correct

(c) 3, 5 சரி / iii, v correct

(d) 2, 5, 6 சரி / ii, v, vi correct

25. ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்தின் (UNDP) ஒருங்கிணைந்த மனிதவள மேம்பாட்டுக் குறியீடு (Composite HDI) கணக்கீட்டில் சேர்க்கப்படாத மாறிலியை தேர்வு செய்க

Select the variable which is not included in the calculation of composite HDI in UNDP:

(a) சரிசெய்யப்பட்ட உண்மை மொத்த உள்நாட்டு தலா உற்பத்தி (PPP) வாங்குதிறன் சமநிலை / Adjusted real GDP per capita (PPP)

(b) (மோசடி) இழப்பு குறியீடு / A deprivation index

(c) ஆயள் எதிர்பபார்ப்பு குறியீடு / Life expectancy index

(d) கல்வி அடைதல் குறியீடு / Educational attainment index

26. பின்வருவனவற்றுள் எந்த வேதிப் பொருளானது சமையல் எரிவாயு (LPG) உருளைகளில் அடைக்கப்படும் எரிவாயுவில் சேர்க்கப்படுகின்றது?

Which among the following chemical is mixed with LPG (Liquified Petroleum Gas) in LPG cylinders?

(a) கந்தக டை ஆக்ஸைடு / Sulphur Dioxide

(b) எத்தில் மெர்காப்டன் / Ethyl Mercaptan

(c) மெர்காப்டோ எத்தனால் / Mercapto ethanol

(d) நைட்ரஜன் டை ஆக்ஸைடு / Nitrogen dioxide

27. கூற்று (A): வளிமண்டலச் சுழற்சி பல்வேறு அளவுகளினால் ஆன காற்றுச்சுழிகளால் வகைப்படுத்தப்படும்

காரணம் (R): வளிமண்டலத்தில் மாசுக்களைக் கரைப்பதிலும் கடத்துவதிலும் வளிமண்டலக் காற்றுச் சுழிகள் முதன்மைப் பங்கு வகுக்கின்றன

Assertion (A): Atmospheric turbulence is characterised by different size eddies.

Reason (R): Eddies are primarily responsible for diluting and transporting the pollutants injected into the atomosphere.

(a) (A) மற்றும் (R) இரண்டும் சரி; மேலும் (R) என்பது (A)-விற்கான சரியான விளக்கமாகும்./ Both (A) and (R) are true, and (R) is the correct explanation of (A)

(b) (A) மற்றும் (R) இரண்டும் சரி; ஆனால் (R) என்பது (A)-விற்கான சரியான விளக்கமல்ல / Both (A) and (R) are true; but (R) is not the correct explanation of (A)

(c) (A) சரி; ஆனால் (R) தவறு / (A) is true, but (R) is false

(d) (A) தவறு, ஆனால் (R) சரி / (A) is false but (R) is true

28. வகைப்பாட்டியலின் படிநிலையில் கீழ்நிலையில் உள்ள அலகு யாது?

The lowest category in Taxonomic hierarchy is

(a) உலகம் / Kingdom

(b) குடும்பம் / Family

(c) பேரினம் / Genus

(d) சிற்றினம் / Species

29. காலா அசார்/கருங்காய்ச்சல் கீழ்கண்டவற்றுள் எவற்றால் உண்டாகின்றது?

Kala azar is caused by

(a) லீஸ்மேனியா ட்ராபிகா / Leishmania tropica

(b) லீஸ்மேனியா டோனாவானி / Leishmania donovani

(c) லீஸ்மேனியா பிரேசிலியன்ஸிஸ் / Leishmania brasiliensis

(d) ட்ரிப்னோசோமா குருசி / Trypanosoma cruzi

30. பின்வருவனவற்றில் எது லூயிஸ் அமிலம் இல்லை?

Which one of the following is not a Lewis acid?

(a) BF3

(b) NH3

(c) A1Cl3

(d) BH3

31. கூற்று (A): நல்ல உரம் காரத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்

காரணம் (R): சிறிது காரத்தன்மை கொண்ட மண், தாவரங்களின் வளர்ச்சிக்குக் கட்டாயம் தேவை.

Assertion (A): A good fertilizer should be basic

Reason (R): Slightly basic soil is must for proper growth of plants.

(a) (A) என்பது தவறு (R) என்பது சரி / (A) is false; (R) is true

(b) (A) என்பது சரி (R) என்பது சரி / (A) is true; (R) is true

(c) (A) என்பது சரி (R) என்பது தவறு / (A) is true; (R) is false

(d) (A) மற்றும் (R) இரண்டும் தவறு / Both (A) and (R) are false

32. ஒரு மனிதன் 5 நாட்களில் 100 திராட்சைகளை சாப்பிட்டான். ஓவ்வொரு நாளும் அவன் முந்தைய நாட்களில் சாப்பிட்டதை விட 6 திராட்சைகளைக் கூடுதலாக சாப்பிடுவதாக வைத்துக்கொண்டால், முதல் நாளில் எத்தனை திரட்சைகளைச் சாப்பிட்டான்?

A man ate 100 grapes in 5 days. Each day he ate 6 more graphes than those he ate on the earlier days. How many grapes did he eat on the first day?

(a) 8

(b) 12

(c) 54

(d) 76

33. —- மற்றும் ——- அலைவரிசையில் TV நிகழ்ச்சிகள் ஒளிபரப்படுகிறது

____ and __________ bands are used for transmission of TV programmes.

(a) THF, VHF

(b) THF, UHF

(c) SHF, VHF

(d) VHF, UHF

34. இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகமானது (ICAR) இந்திய வேளாண்மையை காலநிலை மாறுபாடுகள் போன்ற காரணிகளிலிருந்து மீட்டெடுப்பதற்காக நிலையான ஆய்வு, செயல்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றிற்காக ஏற்படுத்தியுள்ள தொடர் திட்டமானது.

Name the network project of the Indian Council of Agriculture Research (ICAR) that aims to enhance the resilience of Indian Agricultural to climate change through strategic research and technology demonstratican is

(a) ICMSR

(b) ICRISAT

(c) NICRA

(d) CDRI

35. இந்தியாவின் எந்த மாநிலத்தில் துலிப் மலர்த்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது?

In which state of India Tulip flower festival is being celebrated?

(a) ஹிமாச்சலப் பிரதேசம் / Himachal Pradesh

(b) ஜம்மு-காஷ்மீர் / Jammu-Kashmir

(c) கேரளா / Kerala

(d) மணிப்பூர் / Manipur

36. குறிப்பிட்ட இனங்களின் பாதுகாப்புத் திட்டங்களை அவற்றிற்குத் தொடர்புடைய இடங்களுடன் சரியாகப் பொருத்தவும்:

அ. சிறுத்தை திட்டம் 1. பர்தா வனவிலங்கு சரணாலயம்

ஆ. சஞ்சீவனி திட்டம் 2. பாலைவன தேசியப் பூங்கா

இ. சிங்கம் திட்டம் 3. குனோ தேசியப் பூங்கா

ஈ. கானமயில் திட்டம் 4. இமாச்சலப் பிரதேசம்

Match correctly the specific species conservation projects with their corresponding places:

a. Project Cheetah 1. Barda Wildlife Sanctuary

b. Project Sanjeevani 2. Desert National Park

c. Project Lion 3. Kuno National Park

d. Project Great Indian Bustard 4. Himachal Pradesh

a b c d

a. 4 2 3 1

b. 3 4 1 2

c. 2 3 4 1

d. 3 1 2 4

37. இந்திய தேர்தல் ஆணையத்திடம் பதிவுரிமை பெற்ற அரசியல் கட்சி எனும் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக ஒவ்வொரு அரசியல் கட்சியும் கட்சியின் அனைத்து மட்டப் பொறுப்பாளர்களுக்கானத் தேர்தலைத் தொடர்ச்சியாகத் தவறாமல் குறைந்தது எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறையவாது நடத்த வேண்டும்

In order to get the status of registered political party, all political parties have to conduct periodic and regular election to all positions of office-bearers and organs of the party at least once in

(a) 4 ஆண்டுகள் / 4 years

(b) 5 ஆண்டுகள்/ 5 years

(c) 8 ஆண்டுகள் / 8 years

(d) 10 ஆண்டுகள் / 10 years

38. 2023 ஜனவரியில் மொத்த பயனாளிகளின் எண்ணிக்கையில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்களை மத்திய அரசு வழங்கியது

The Central Government is the provide free food grains to under the National Food Security Act in the total number of beneficiaries in January 2023

(a) 81.35 கோடி / 81.35 crore

(b) 80.50 கோடி / 80.50 crore

(c) 100 கோடி / 100 crore

(d) 90.60 கோடி / 90.60 crore.

39. பின்வருவனவற்றுள் எது இந்திய கடற்படையின் புதிய அடையாளச்சின்னமான நிஷானில் காணப்படவில்லை?

Which of the following is NOT found in Indian Navy’s new ensign ‘Nishaan’?

(a) சத்ரபதி சிவாஜியின் ராஜமுத்திரை / Royal Seal of Chhatrapathi Sivaji

(b) தேசியக்கொடி / National Emblem

(c) தேசியச்சின்னம் / National Emblem

(d) புனித ஜார்ஜ் சிலுவை / St.George’s Cross

40. —— வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தனியார் மற்றும் பொது இடங்களில் குடும்பம் சமூகம் மற்றும் பணியிடத்தில் ஆதரவளிக்கும் நோக்கம் கொண்டது

__________- intended to support women affected by violence, in private and public spaces, within the family, community and at the work place.

(a) சமூக மையம் / Community Centre (b) ஒரு நிறுத்த நெருக்கடி மையம் / One stop crisis centre

(c) குறுகிய தங்கும் வீடு / Short stay home (d) தங்குமிடம் / Shelter home

41. கென்ட்ரூ மற்றும் ஸ்டாம்ப் அவர்களின் காலநிலை வகைபாட்டை வெப்பநிலை வேறுபாட்டினை அடிப்படையாகக் கொண்டு மாற்றியயமைத்தவர் யார்?

Who modified the climatic divisions of Stamp and Kendrew on the basis of variations in temperature?

(a) கோப்பன்.W / Koppen.W (b) சிங்.R.L / Singh.R.L

(c) தாந்துவைத்.C.W. / Thornthuwaite.C.W (d) திரிவார்த்தா.G.T./ Trewartha.G.T

42. குறைந்தபட்ச தேவை திட்டதிற்கு பின்வரும் வளர்ச்சி உத்திகளில் ஒன்று பயன்படுத்தப்படுகிறது

Which one of the following development strategy is used for the minimum Need Programme?

(a) நாக்பூர் திட்டம் / Nagpur Plan

(b) இருபது ஆண்டு சாலைத் திட்டம் / Twenty-Year Road Plan

(c) கிராம வளர்ச்சித் திட்டம்/ Rural Development Plan

(d) மத்திய சாலை நிதி / Central Road Fund

43. மகாநதி, கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளின் கழிமுகங்களில் காணப்படும் காடுகளின் வகை எது?

Which type of forests are found in the deltas of Mahanadi, Godavari and Krishna rivers?

(a) சதுப்புநில காடுகள் / Mangrove forests (b) கடலோர காடுகள் / Coastal forests

(c) ஆல்பைன் காடுகள் / Alpine forests (d) நதி காடுகள் / Reverine forests

44. இந்தியாவில் எந்த ஆறு மேற்கு நோக்கிப் பாய்கின்றது?

Which river flows towards the west in India?

(a) சிந்து / Sindhu

(b) கங்கா / Ganga

(c) நர்மதா / Narmadha

(d) காவேரி / Cauvery

45. (மரபுசாரா) புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் மற்றும் புதுபிக்கயியலாத (மரபுசார்) ஆற்றல் வளங்கள் எந்த அமைச்சகத்தின் கீழ்வரும்?

Non-renewable sources of energy and renewable sources of energy come under the ministry of

(a) மரபுசாரா ஆற்றல், இந்தியா / Non-Conventio Energy India

(b) சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் – இந்திய அரசு / Environment. Forest and Climate change (GOI)

(c) நிலக்கரி மற்றும் பெட்ரோலியம் இந்தியா / Coal and Petroleum, India

(d) மரபுசார் ஆற்றல்- இந்தியா / Conventional energy, India

46. கில்ஜி வம்ச ஆட்சியில் வணிகர்கள் தாங்கள் விற்பனை செய்யும் பொருட்களை ———– இடத்திற்கு கொண்டு வரவேண்டும்

During the rule of the Khalji dynasty, the merchants had to bring all their goods for sale to

(a) ஸராய் அடில் / Sarai-e-Adl

(b) கர்கானா / Karkhana

(c) கொத்வால் / Kotwal

(d) இக்தா/ Iqta

47. ——– விஜய நகர மன்னர் ஆட்சியில் துங்கபத்ரா ஆற்றில் ஒரு பெரிய அணையைக் கட்டினார்

_______- the ruler of Vijayanagar constructed a huge dam on the river Tungabhadra.

(a) இரண்டாம் ஹரிஹரா / Harihara-II

(b) இரண்டாம் புக்கர் / Bukka-II

(c) இரண்டாம் விருபாக்ஷா / Virupaksa-II

(d) இரண்டாம் தேவராயா/ Devaraya-II

48. சிவாஜியின் கீழ் உள்ள நிதி மற்றும் வருவாய் அமைப்புகளில் பின்வருவனவற்றில் எது உண்மை?

1. சௌத் மற்றும் சர்தேஷ்முகி

2. தேஷ்முக் மற்றும் பாட்டீல்கள் கிராம அதிகாரிகள்

3. சிவாஜியினால் நியமிக்கப்பட்ட வருவாய் அதிகாரிக்கு கற்குன், என்று பெயர்

Which of the following is true about the finance and revenue system under Shivaji?

i. The Chauth and the Sardeshmukhi

ii. Village officials were Deshmuks and Patil’s

iii. The Revenue Officer appointed by Shivaji was called Karkuns

(a) 1 மட்டுமே / i only

(b) 1 மற்றும் 3 மட்டுமே / i and iii only

(c) 1 மற்றும் 2 மட்டுமே / i and ii only

(d) 2 மற்றும் 3 மட்டுமே / ii and iii only

49. பின்வருவனவற்றுள் சரியாகப் பொருத்தப்பட்டவை எவை?

1. அபுல் காசிம்கான் நம்கின் – முன்ஷாத்-இ-நம்கின்

2. இணயத்துல்லா கான் – கலிமத்-இ-தையாகத்

3. முகம்மது சாதிக் – நிகர்நாமா-இ-முன்ஷி

4. மாலிக்ஜடா – ஆடம்-இ-ஆலம்கரி

Which of the following are correctly paired?

1. Abul Qasim Khan Namkin-Munshat-i-Namkin

2. Inayatullah Khan-Kalimat-i-Tayyakat

3. Muhammed Sadiq-Nigarnama-i-Munshi

4. Malikzada-Adam-i-Alamgiri

(a) 1 மற்றும் 2 சரி / 1 and 3 are correct

(b) 1 மற்றும் 3 சரி / 1 and 3 are correct

(c) 2 மற்றும் 4 சரி / 2 and 4 are correct

(d) 3 மற்றும் 4 சரி / 3 and 4 are correct

50. முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப்பிற்கு பதிலாக புரந்தர் உடன்படிக்கையில் சிவாஜியோடு கையெழுத்திட்டது யார்?

On behalf of Mughal Emperor Aurangzeb who signed the treaty of Purandhar with Shivaji?

(a) மான்சிங் / Mansingh

(b) ஜெய்சிங்/ Jai Singh

(c) ஷயிஸ்தா கான் / Shaista Khan

(d) அஃப்ஸல் கான் / Afzal Khan

51. கி.பி.1891இல் நிறுவப்பட்ட திராவிட மகாஜன சபை அதன் முதல் மாநாட்டை ———-ல் நடத்தியது

In A.D.1891, the Dravida Mahajana Sabha was founded and organized its first conference at

(a) மதுரை / Madurai

(b) சேலம் / Salem

(c) நீலகிரி/ Nilgiris

(d) செங்கல்பட்டு/ Chengalpattu

52. விஜயநகரப் பேரரசு பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?

1. கடல் வர்த்தகம் புறக்கணிக்கப்பட்டது

2. புகழ்பெற்ற பெர்சியன் தூதுவர் அப்துல் ரசாக்கை இரண்டாம் தேவராயர் தனது அரசபைக்கு அழைத்தார்

3. விஜயநகரப் பேரரசு முதலாம் ஹரிஹரரால் நிறுவப்பட்டது

4. விஜயநகரப் படைகள் பாமினி படைகளால் தோற்கடிக்கப்பட்டன

Which of the following statements is true about the Vijayanagar Empire?

i. Sea Trade was ignored

ii. The Famous Persian Ambassador Abdur Razzaq was invited by Devarayar II

iii. Vijayanagar Kingdom was founded by Harihara I

iv. Vijayanagar forces were defeated by Bahmani armies.

(a) 2 மற்றும் 4/ ii and iv

(b) 1 மற்றும் 2/ i and ii

(c) 2 மற்றும் 3/ ii and iii

(d) 1 மற்றும் 4/ i and iv

53. பின்வருவனவற்றுள் தவறான கருத்தை குறிப்பிடுக:

I. சிந்து முத்திரைகள் இதுவரை முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை

II. சிந்து சமவெளி நாகரிகம் ஒரு குறிப்பிடத்தக்க நகர கலாச்சாரம் ஆகும்.

III. சிந்து சமவெளி மக்கள் அதிக அளவிலான அளவை முறைகளை பயன்படுத்தினர்.

IV. சிந்து சமவெளி மக்கள் இரும்பை பயன்படுத்தும் கலையை அறிந்திருந்தனர்

Point out the wrong statement of the following:

I. The Indus Seals have not been deciphered so far

II. Indus civilization was a notable urban culture.

III. Indus people used large number of weights.

IV. Indus people knew the art of using the metal iron

(a) I

(b) II

(c) III

(d) IV

54. கீழே கொடுக்கப்பட்டுள்ள பத்தியை படித்து, கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு விடையளிக்கவும். உங்களுடைய விடை இப்பத்தியை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும்.

அடிப்படையில் ஊழல் என்பது இந்தியாவின் அரசியல் நிர்வாகமாகத் தன்மையாகிவிட்டது. ஊழல் என்பது பல்வேறு படிநிலைகளிலும் ஒரு முறைப்படுத்தப்பட்ட தன்மையோடு அரசாங்கத்தின் நிர்வாகத்திலும் அரசியலிலும் மிக ஆழமாகப் பரவி விட்டது. இரண்டாவதாக இந்த ஊழல் என்பது மேல்மட்ட அரசியலிலும் நிர்வாகத்திலும் நிறைந்திருக்கிறது. இப்படி மேல் மட்டத்திலும் ஊழல் நிறைந்திருப்பதால் அதனை ஒழிப்பது நடைமுறை சாத்தியமில்லாத ஒன்றாகி விட்டது. மேல் உள்ள பத்தியின்படி, ஊழலை ஒழிப்பது முடியாத ஒன்றாக இருப்பதற்கான காரணம் என்ன?

Read the following passage and answer the item that follows. Your answers to this item should be based on the passage only:

Corruption in India is basically Politico-Administrative. It pervades both the political and the administrative levels in government. It runs deep, is well organized and systematic. Secondly it often emanates at the top political and administrative levels. This top level involvement makes it’s eradication nearly impossible. According to the passage what is the reason for impossibility of eradication of corruption.

(a) ஊழல் இந்தியாவில் செயல்படுகிறது / Corruption prevails in India

(b) ஊழல் நிர்வாகம் மற்றும் அரசியல் நிலைகளில் செயல்படுகிறது / Corruption is found both in Administration and in politics

(c) ஊழல் ஆழமாகவும் முறையாகவும் உள்ளது / Corruption is found both in Administration and in politics

(d) ஊழல் நிர்வாக மற்றும் அரசியல் மேல் நிலைகளில் ஆழமாது வேர் ஊன்றியுள்ளது / Corruption deeply rooted out the Higher Levels of the Administration and Politics.

55. கீழ்கண்ட கூற்றை கருதவும்:

ஆதிகாரப் பிரிவினை மற்றும் சுதந்திரமான நீதித்துறை என்ற கருத்துக்களை உச்ச நீதிமன்றம் உயர்த்திப் பிடித்த வழக்கு

Consider the followings statements:

The concepts of “Separation of Power” and “Independent Judiciary” were upheld by the Supreme Court in the case of

(a) பீகார் மாநில அரசு Vs பால் முகுந்து ஷா / State of Bihar Vs. Bal Mukund, Sah

(b) மினர்வா மில் நிறுவனம் Vs இந்திய ஒன்றியம் / Minerva Mill Vs. Union of India

(c) இந்திரா காந்தி Vs ராஜ் நாராயன் / Indira Gandhi Vs. Raj Narain

(d) தார்வாடு தொழிலாளர்கள் Vs கர்நாடக மாநில அரசு / Dharward Employees Vs. State of Karnataka

56. மத்திய மாநில உறுவகளுக்கான இரண்டாவது குழுவின் தலைவர் யார்?

Who was the Chairman of the Second commission on centre-state Relations?

(a) மதன் மோகன் பூன்சி / Madan Mohan Punchhi

(b) ஆர்.எஸ்.சர்க்காரியா / R.S.Sarkaria

(c) மொரார்ஜி தேசாய் / Morarji Desai

(d) பி.வி.ராஜமன்னார் / P.V.Raja Mannar

57. கீழ்வருவனவற்றுள் மாநில சட்டமன்றத்தில் மேலவையை கொண்டுள்ள மாநிலங்களை தெரிந்தெடுக:

Choose the correct states from the following which have upper house in the State Legislature

(a) பீகார், உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா, ஜம்மு மற்றும் காஷ்மீர், கர்நாடகா, ஆந்திரபிரதேசம், தெலுங்கானா / Bihar, U.P, Maharashtra, Jammu and Kashmir, Karnataka, Andrapradesh, Telangana

(b) ராஜஸ்தான், ஹரியானா, அசாம், மத்தியபிரதேசம், கேரளா, ஒரிசா / Rajasthan, Hariyana, Assam, M.P., Kerala, Orissa

(c) குஜராத், நாகாலாந்து, பஞ்சாப், மேற்கு வங்காளம், மணிப்பூர் / Gujarat, Nagaland, Punjab, West Bengal, Manipur

(d) திரிபுரா, இமாச்சல பிரதேசம், மேகாலையா, சிக்கிம், மிசோரம் / Tripura, Himachal Pradesh, Meghalaya, Sikkim, Mizoram

58. நாடாளுமன்ற கூட்டு கூட்டத் தொடரை தலைமையேற்று நடத்துபவர் யார்?

Who Presides over the joint sitting of the parliament?

(a) மக்களவை சபா நாயகர் / Speaker of the Lok Sabha

(b) மக்களவை துணை சபாநாயகர் / Deputy Speacker of the Lok Sabha

(c) மாநிலங்களவை தலைவர் / Chairman of the Rajya Sabha

(d) இந்திய குடியரசுத் தலைவர் / President of India

59. அரசு வழிகாட்டு நெறிமுறைகளை நீதிமன்றம் மூலம் செயல்படுத்த முடியாது என தெரிவிக்கும் அரசியலமைப்பு ஷரத்து யாது?

Which of the following Articles says that the Directive Principal cannot be enforceable by any court?

(a) ஷரத்து 37/ Article 37

(b) ஷரத்து 38/ Article 38

(c) ஷரத்து 39/ Article 39

(d) ஷரத்து 40/ Article 40

60. அவசர நிலையில் மக்களின் அடிப்படை உரிமைகள்

In an Emergency the fundamental rights of citizens

(a) நிறுத்தி வைக்கப்படும் / May be suspended

(b) தானாகவே நின்று விடும் / Stand automatically suspended

(c) தலைமை நீதிமன்ற ஒப்புதலின் பேரில் அனுபவிக்கலாம் / Can be enjoyed approval of the supreme Court

(d) உயர்நீதிமன்ற ஒப்புதலின் பேரில் அனுபவிக்கலாம் / Can be enjoyed with the approval of the High Court

61. கூற்று (A): அரசியல் சாசன நிர்ணய சபையை, மாநில சட்டமன்றத்தின் உறுப்பினர்கள் மறைமுகமாக தேர்ந்தெடுக்கிறார்கள்.

காரணம் (R): மாநில சட்ட மன்றத்தின் ஒவ்வொரு சமுதாயமும் தன் உறுப்பினர்களை ஒற்றை மாற்றத்தக்க விகிதாச்சார வாக்கு முறையில் தேர்வு செய்கிறார்கள்.

கீழ்கண்டவற்றில் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Assertion (A): The constituent Assembly was elected by indirect election by the members of the Provincial Legislative Assemblies.

Reason (R): Members of each community in the Provincial Legislative Assemblies elect their representatives by the method of proportional representation by single transferable vote.

Choose the correct option from below:

(a) (A) மற்றும் (R) சரி மற்றும் (R), (A)வின் சரியான காரணி தான் / (A) and (R) are true and (R) is the correct explanation for (A)

(b) (A) சரி ஆனால் (R) தவறு / (A) is true but (R) is false

(c) (A) மற்றும் (R) சரி ஆனால் (R), (A) வின் சரியான காரணி அல்ல / (A) and (R) are true but (R) is not the correct explanation for (A)

(d) (A) is false and (R) is true / (A) தவறு ஆனால் (R) சரி

62. வங்கி சேவையில் அதிகமானவர்களை இணைக்க இந்திய அரசு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியது

Which sheme was launched by the Government of India to connect more and more peoples from the banking services?

(a) மேக் இன் இந்தியா / Make in India

(b) ஸ்கில் இந்தியா மிஷன் / Skill India Mission

(c) பிரதான மந்திரி முத்ரா யோஜனா / PM Mudra Yojana

(d) பிராதான மந்திரி ஜன் தன் யோஜனா / PM Jan Dhan Yojana

63. இந்திய ரிசர்வ் வங்கியினை ஏன் கடைசி நிலைக்கடன் ஈவோன் என அழைக்கிறோம்.

1. காகித பணத்தை அச்சடித்தல்

2. நாணயங்களை அச்சடித்தல்

3. இக்கட்டான சூழலில், வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் மட்டுமே கடன் பெற இயலும்

4. இக்கட்டான சூழலில், ரிஸர்வ் வங்கிக்கு வங்கிகள் கடன் வழங்குகின்றன.

Why the Reserve Bank of India is called the Lender of last resort?

i. It private the currency notes

ii. It mints the coin

iii. At times of crisis, it is the only source capable of lending for commercial bank

iv. At times of crisis, Banks lend to Reserve Bank

(a) 1 மற்றும் 2/ i and ii

(b) 3 மற்றும் 4 / iii and iv

(c) 3 மட்டும் / iii and iv

(d) 4 மட்டும் / iv only

64. இங்கு குறிப்பிடப்பட்டுள்ளவைகளில் மறு நிதியாக்க நிறுவனங்கள் யாவை?

Which of the following is a Refinance Institution?

(a) இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் / Life Insurance Corporation of India

(b) இந்திய யூனிட் டிரஸ்ட் / Unit trust of India

(c) தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி / National Bank for Agriculture and Rural Development

(d) மாநில நிதிக் கழகங்கள் / State Financial Corporation

65. பின்வருவனவற்றை பொருத்துக:

அ. மறைமுக வரி 1. நெகிடும் தன்மை விதி

ஆ. அரசு பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள் 2. பொறுப்பேற்ப்பு

இ. நேர்முக வரி 3. சுங்க வரி

ஈ. கூட்டமைப்பு நிதி 4. உள்நாட்டு பொதுக்கடன்

Match the following:

a. Indirect Tax 1. Canon of Elasticity

b. Bonds and Securities 2. Principle of Accountability

c. Direct tax 3. Custom duty

d. Federal Finance 4. Internal Public debt

a b c d

a. 3 2 1 4

b. 4 3 2 1

c. 3 4 1 2

d. 1 3 4 2

66. கீழே காணப்படும் திட்டங்களில் எந்த திட்டம் பத்தாவது ஐந்தாண்டு திட்டத்தில் பயன்படுத்தப்பட்டது?

Which one of the following plan was used in Tenth Five Year plan?

(a) சீர்திருத்த திட்டம் / Reform Plan

(b) வளத்திட்டம் /Resource Plan

(c) சுழலும் திட்டம் / Rolling plan

(d) தேசிய திட்டம் / National Plan

67. வரிசாரா வருவாயின் ஆதாரங்களாவன

The source of non-tax revenue are

(a) வணிக வருவாய் மற்றும் பொது துறை மேற்பார்வை வருவாய் / Commercial Revenues and Public Adminisrative Revenues.

(b) வருமான வரி மற்றும் பெருந்நிறுவனங்களின் வருமான வரி / Income Tax and Corporate Income Tax

(c) மரண வரி / Death duty

(d) கலால் வரி / Excise duty

68. “எதிர்கால வளர்ச்சிக்கான கட்டமைப்புகளை பொதுத்துறை தனியார் துறை இரண்டும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே வளர்ச்சி அடைய இயலும்” என்பது ——— நோக்கமாகும்.

“Public-Private Partnership (PPP) model is emerging as a rule for future development of Infrastructure” – is the objective of

(a) நிதிக்குழு / Finance Commission

(b) நிதி ஆயோக் / Niti Ayog

(b) தொழிலாளர் ஆணையம் / Labour Commission

(d) திட்டக்குழு / Planning Commission

69. பாகிஸ்தான் பிரிவினை கோட்பாட்டை முதன் முதலில் கூறியவர்

The theory of Pakistan was inspired by

(a) முகமது அலி ஜின்னா / Muhammad Ali Jinnah

(b) சர் சையது அகமதுகான் / Sir Syed Ahamad Khan

(c) முகம்மது இக்பால் / Muhamad Iqbal

(d) மௌலானா அபுல்கலாம் ஆசாத் / Maulane Abdulkalam Azad

70. பின்வருவனவற்றை பொருத்துக:

அ. சிட்டகாங் ஆயுதப் படைதாக்கு 1. M.N.ராய்

ஆ. கான்பூர் சதி வழக்கு 2. பெஞ்சமின் ப்ராட்லி

இ. லூகூர் சதி வழக்கு 3. கல்பனா தத்தா

ஈ. மீரட் சதி வழக்கு 4. பகத்சிங்

Match the following:

a. Chittagang Armed Ride 1. M.N.Roy

b. Kanpur Conspiracy case 2. Benjamin Bradley

c. Lahore Conspiracy case 3. Kalpana Datta

d. Meerut Conspiracy case 4. Bhagat Singh

a b c d

a. 4 3 2 1

b. 3 1 4 2

c. 2 4 3 1

d. 1 2 4 3

71. ஜவஹர்லாலின் இறப்பு இந்தியா மட்டுமல்லாது ஒட்டு மொத்த மனித சமுதாயம் ஓர் ஒப்பற்ற இராஜ தநதிரியை இழந்ததும் அவர் சுதந்திரத்திற்கான போராட்டத்திலும் மற்றும் உலகளாவிய புரிதலுக்காக பெரிதும் மதிக்கப்பட்டவர் என யார் கூறியது?

“With the death of Mr.Jawaharlal Nehru India and the whole mankind had lost an eminent statesmen who was held in esteem throughout the world as leader in the struggle for peace and international understanding”. Who said this?

(a) Dr.இராதா கிருஷ்ணன் / Dr.Radha Krishnan

(b) ட்விட் D.ஐஸ்னோவர் / Dwight.D.Eisenhower

(b) Dr.ஹென்ரிக் லுபாக் / Dr.Heinrich Lubake

(d) டேவோன்ஷயரின் கோமான் / Duke of Devonshire

72. கீழ்கண்டவற்றில் இந்தியாவில் ஆங்கில அரசிற்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்பட்ட தொழிலாளர்களின் முதல் வேலை நிறுத்தங்களில் ஒன்றாகும்.

Which one of the following is the earliest organised labour agitation against British Government in India?

(a) சம்பரான் இயக்கம் / Champaran Movement

(b) அகமதாபாத் மில் தொழிலாளர் வேலை நிறுத்தம் / Mill workers Strike at Ahmadabad

(c) கோரல் நூற்பாலை வேலை நிறுத்தம் / The Coral Mill Strike

(d) கேதா இயக்கம் / The Kheda Struggle

73. “ஒரு நாள் பிறக்கும், இந்தியர்கள் தங்கள் சுதந்திரத்தை மீட்டெடுக்க மஹராஷ்டிரர்களின் வழியை தேர்ந்தெடுப்பர். அவர்கள் வீர சிவாஜியின் வழியை பின்பற்றுவார்கள்” என்று கூறியது யார்?

“A day will drawn when the Indians will have to follow the Maharashtrian way for the regaining of freedom. They will have to copy the example of Great Shivaji”. Who said it?

(a) பால கங்காதர் திலகர் / Bal Gangadar Tilak

(b) தாஸ் / C.R.Das

(c) சுபாஷ் சந்திர போஸ் / Subash Chandra Bose

(d) சந்திர சேகர் ஆசாத் / Chandra Shekhar Azad

74. “இந்திய சமுதாயத்தில் நிலவிய பல்வேறு முரண்பட்ட சக்திகளுக்கு அப்பாலும் ஆங்கிலேயரின் ஏகாதிபத்தியம் இந்தியாவிற்கு ஓர் அரசியல் ஒற்றுமையை அளித்தது” இதனை கூறியது யார்?

“British imperialism in India gave her a political unity under a third party in spite of the many discordant elements in Indian Society”. Who said the above statement?

(a) பேராசிரியர். மூன்/ Prof. Moon

(b) மோனியர்-வில்லியம்ஸ்/ Monier-Williams

(c) கோல்ப்ரூக்ஸ் / Colebrooks

(d) M.G.ராணடே / M.G.Ranade

75. பத்திரிக்கை சுதந்திரம் வேண்டி உச்ச நீதிமன்றத்தில் ஓர் மனுவை தாக்கல் செய்த சமூக சீர்திருத்தவாதி யார்?

Name the social reformer who submitted a memorial for the free press in the Supreme Court?

(a) M.G.ராணடே / M.G.Ranade

(b) இராஜா ராம் மோகன் ராய்/ Raja Ram Mohan Roy

(c) ஜோதிபா பூலே / Jothiba Phule

(d) ஈஸ்வர சந்திர வித்யாசாகர் / Ishwar Chandra Vidyasagar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!