General StudiesTnpsc

Tnpsc Model Question Paper 45 – General Studies in Tamil & English

1. “ஆசிய சமூகம்” என்பது “வங்காள ஆசிய சமூகம்” என்று ________ம் ஆண்டில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது

“The Asiatic Society” was changed and renamed as, “The Asiatic Society of Bengal” in the year _______

(a) கி.பி. 1935 / 1935 A.D

(b) கி.பி.1936/ 1936 A.D

(c) கி.பி.1937/ 1937A.D

(d) கி.பி.1938/ 1938 A.D

2. கூற்று (A): காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை திரும்பபெற முடிவு செய்தார்

காரணம் (R): மக்களால் பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் நடத்தப்பட்டன குறிப்பாக 1922-ல் சௌரி சௌரா சம்பவம் நடத்தப்பட்டது

Assertion (A): Gandhiji decided to withdraw from non-cooperation movement.

Reason (R) : Various incidents of violence perpetrated by the masses, especially the Chauri-Chaura incident too place in 1922

(a) (A) சரியானது ஆனால் (R) தவறு / (A) is true but (R) is false

(b) (A) தவறானது, (R) சரியானது / (A) is false, (R) is true

(c) (A) மற்றும் (R) சரியானவை, (R) கூற்று (A)க்கு சரியான விளக்கமாகும் / Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)

(d) இரண்டும் (A) மற்றும் (R) சரியானவை ஆனால் (R) கூற்று (A)க்கு சரியான விளக்கமல்ல / Both (A) and (R) are true but (R) is not the correct explanation of (A)

3. பின்வருவனவற்றுள் சரியான விடையை தேர்ந்தெடுக்க:

கீழ்காண்பவையில் எது பாரதியாரின் கவிதை இல்லை

Choose the right answer:

Which one of the following is not Bharathiar’s Poem?

(a) புரட்சிக் கவி / Puratchi Kavi

(b) கண்ணன்பாட்டு / Kannan Pattu

(c) குயில் பாட்டு / Kuyil Pattu

(d) நிலவும் வான்மீனும் காற்றும் / NilavumVanminumKatrum

4. ‘தொழிலாளன்’ என்னும் தமிழ்ச்செய்தித்தாளை வெளியிட்டவர் யார்?

Who published the Tamil Newspaper, “Thozhilalan?”

(a) எம்.சி.ராஜா / M.C.Raja

(b) ம.சிங்காரவேலர் / M.Singaravelar

(c) இரட்டைமலை சீனிவா / Rettaimalai Srinivasan

(d) டாக்டர்.சி.நடேசனார் / Dr.C.Natesanar

5. இந்திய தேசிய கீதம் “ஜனகன மன” முதன் முதலாகப் பாடப்பட்டது

India’s National Anthem “Janagana Mana” first sung in

(a) 1911 ம் ஆண்டு பம்பாயில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் / 1911 at INC Boambay Session

(b) 1912ம் ஆண்டு டெல்லியில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் / 1912 at INC Delhi Session

(c) 1911ம் ஆண்டு கல்கத்தாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் / 1911 at INC Calcutta Session

(d) 1912ம் ஆண்டு காராச்சியில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் / 1912 at INC Karachi Session

6. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை

The first Fort constructed by the British in India was

(a) செயின்ட் வில்லியம் கோட்டை / Fort.St.Willaim

(b) செயின்ட் ஜார்ஜ் கோட்டை / Fort.St.George

(c) ஆக்ரா கோட்டை / Agra Fort

(d) செயின்ட் டேவிட் கோட்டை / Fort St.David

7. கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகளை கால வரிசைப்படி எழுதுக:

அ. கிரிப்ஸ் தூதுக்குழு

ஆ. தண்டி யாத்திரை

இ. காந்தி இர்வின் ஒப்பந்தம்

ஈ. முதல் வட்டமேஜை மாநாடு

Arrange the following events in Chronological order

i. Cripps Mission

ii. Dandi March

iii. Gandhi Irwin Pact

iv. First Round Table Conference

(a) ஆ, இ, ஈ., அ / ii, iii, iv, I

(b) ஆ, ஈ, இ, அ / ii, iv, iii, i

(c) அ, ஆ, இ, ஈ / i, ii, iii, iv

(d) இ, ஆ, ஈ, அ / iii, ii, iv, i

8. பொருத்தமான விடையைத் தேர்வு செய்க:

நூல் அடிகள்

அ. குறிஞ்சிப்பாட்டு 1. 103

ஆ. முல்லைப்பாட்டு 2. 261

இ. நெடுநல்வாடை 3. 583

ஈ. மலைபடுகடாம் 4. 188

Match the following:

Book Lines

a. Kurinchipattu 1. 103

b. Mullaipattu 2. 261

c. Nadunalvaadai 3. 583

d. Malaipadukadaam 4. 188

a b c d

a. 4 3 2 1

b. 3 4 1 2

c. 2 1 4 3

d. 1 2 3 4

9. ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் (The Tamils-Engihteen Hundred Years ago) என்னும் நூலை எழுதியவர் யார்?

Who authored the book,

“The Tamils-Eighteen Hundred Years ago?”

(a) கே.கே.பிள்ளை / K.K.Pillai

(b) கே.எஸ்.ஸ்ரீநிவாஸ பிள்ளை / K.S.Srinivasa Pillai

(c) கனகசபைப்பிள்ளை / Kanakasabhai Pillai

(d) பவானந்தம் பிள்ளை / Bavanandham Pillai

10. பொருத்துக:

List I List II

அ. இரட்டையர்கள் 1. கந்தர் அந்தாதி

ஆ. கச்சியப்ப முனிவர் 2. திருவானைக்கா உலா

இ. காளமேகப் புலவர் 3. தில்லைக் கலம்பகம்

ஈ. அருணகிரிநாதர் 4. தணிகைப் புராணம்

Match the following :

List I List II

a. Irattaiyarkal 1. Kanthar Anthaadhi

b. KachiyappaMunivar 2. Thiruvaanaikka Ula

c. KaalamegaPulavar 3. Thillai Kalambagam

d. ArunakiriNathar 4. Thanigai Puranam

a b c d

a. 1 4 3 2

b. 3 4 2 1

c. 3 2 4 1

d. 2 3 1 4

11. “ஒரு ரூபாய் படியரிசி திட்டம்” நடைமுறைப் படுத்தப்பட்ட நகரங்கள் _____ மற்றும் ஆகும்.

“One Rupee-PadiarisiThittam” was implemented in _______ and ________ cities

(a) சென்னை மற்றும் கேயம்புத்தூர் / Madras and Coimbatore

(b) சென்னை மற்றும் மதுரை / Madras and Madurai

(c) சென்னை மற்றும் தஞ்சாவூர் / Madras and Tanjore

(d) சென்னை மற்றும் சேலம் / Madras and Salem

12. இதனை தொடர்ந்து திருவாங்கூர் மகாராஜா திருவாங்கூரில் கோயில் நுழைவு பிரகடனத்தை வழங்கினார்

The Maharaja of Travancore issued the Temple Entry Proclamation as a result of ___________

(a) சாம்பிரான் சத்தியா கிரக / champaron Satyagraha

(b) பர்டோலி சத்தியாகிரகம் / Bardoli Satyagraha

(c) சானர் கலகம் / Channar Revolt

(d) வைக்கம் சத்தியாகிரகம் / Vaikom Satyagraha

13. மூன்றாவது சுய மரியாதை மாநாடு _________ல் நடைபெற்றது

The Third Self Respect Movement conference was held at _____

(a) செங்கல்பட்டு / Chengalpat

(b) ஈரோடு / Erode

(c) விருதுநகர் / Virudunagar

(d) கோயம்புத்தூர் / Coimbatore

14. நீதிக்கட்சியின் முதல் மாநாடு _________ல் நடைபெற்றது

The first conference of justice party was held at ____

(a) கோம்புத்தூர் / Coimbatore

(b) கடப்பை / Kadappai

(c) விஜயவாடா / Vijayavada

(d) T திருநெல்வேலி / irunelveli

15. கீழ்க்காணும் குறளின் வழியாக அறிவது யாது?

“அருள் என்னும் அன்பீன் குழவி பொருள் என்னும்

செல்வச் செவிலியால் உண்டு”

What does the Kural reveals?

ArulennumAnpeenKuzhaviPorulennum

SelvachCheviliyaalUntu

(a) அருள் – தாய்; அன்பு – குழந்தை; செல்வம் – செவிலித்தாய் / Mercy-Mother; Love-Infant; Wealth-Bounteous Nurse

(b) அன்பு – தாய்; அருள் – குழந்தை; செல்வம் – செவிலித்தாய் / Love-Mother; Mercy-Infant; Wealth-Bounteous Nurse

(c) அருள் தாய்; செல்வம் – குழந்தை; அன்பு – செவிலித்தாய் / Mercy-Mother; Wealth-Infant; Love-Bounteous Nurse

(d) அன்பு – தாய்; செல்வம் – குழந்தை; அருள் – செவிலித்தாய் / Love-Mother; Walth-Infant; Mercy-Bounteous Nurse

16. உலக வாழ்க்கையின் இயல்புகளையும் நடைமுறைகளையும் அனுபவ வெளிப்பாடுகளாகக் குறிப்பிடும் திருக்குறள் பகுதி எது?

Under what part does the Thirukkural contains the experience of exploring the pleasures and practices of worldly life?

(a) அறத்துப்பால் / Arathuppal

(b) பொருட்பால் / Portpal

(c) காமத்துப்பால் / Kamathuppal

(d) பாயிரப்பிரிவு / Paayirappirivu

17. அரம்போல் கூர்மையான அறிவுடையவராக இருந்தாலும் மக்கட்பண்பில்லாதவரைத் திருவள்ளுவர் எதனோடு ஒப்பிடுகின்றார்?

Who according Valluvar, though a person might be sharp as a sword and intelligent; if he does not possesshumaneness, he is as good as _______

(a) விலங்கு / Animal (Vilangu)

(b) செடி / Plant (Chedi)

(c) மரம் / Tree (Maram)

(d) பாம்பு / Snake (Paambu)

18. “பொறுத்தல் இறப்பினை என்றும் ___________

__________“

மேற்கண்ட திருக்குறள், வாழ்க்கையில் பிறர் செய்யும் தவறுகளை என்ன செய்ய வேண்டும் என்கிறது?

அ. பிறர் தவறுகளைப் பொறுத்தல்

ஆ. பிறர் தவறுகளை மறத்தல்

“PorutthalIrappinaienrum __________

The above Thirukkural tells us what to do with the mistakes others make in life?

i. Tolerance of the faults of others

ii. Forgetting the mistakes of others

(a) அ மட்டும் / i only (b) ஆ மட்டும் / ii only

(c) அ மற்றும் ஆ/ and ii (d) மேற்காணும் எவையும் அல்ல / None of the above

19. தமிழில் தோன்றிய முதல் குழந்தை இதழ் எது?

Which is the first children’s magazine published in Tamil?

(a) பால விநோதினி / Bala Vinodhini

(b) கோகுலம் / Gokulam

(c) பாலதீபிகை / Bala Deepigai

(d) அம்புலிமாமா / Ambulimama

20. தேம்பாவனி காப்பியத்தின் பாட்டுடைத் தலைவர் இவர்

Who is the protagonist of the epic “Thembaavani?”

(a) ஜோசப் / Joseph

(b) பீட்டர் / Peter

(c) இயேசு / Jesus

(d) வின்சென்ட் / Vincent

21. இலக்கிய சான்றுகளுடன் தொல்லியல் துறையால் உறுதி செய்யப்பட்ட முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘ரோமானிய தொழிற்சாலை’ பாண்டிச்சேரியின் அருகில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. அவ்விடம் எங்கே அமையப் பெற்றுள்ளது?

Archaeology through literary evidence confirms the presence of a “Roman Factory” in the neighbourhood of Pondicherry during the first century A.D. and where was it located?

(a) அரிக்கமேடு / Arikkamedu

(b) பூம்புகார் / Poombuhar

(c) மகாபலிபுரம் / Mahabalipuram

(d) கொடுமணல் / Kodumanal

22. கடியலூர் ருத்திரன் கண்ணனாரின் பட்டினப்பாலை செய்யுளுக்காக 1, 600, 000 பொற்காசுகக்களை வழங்கிய அரசர் யார்?

Name the ruler who gave 1.600, 000 gold coins to Kadiyalur Rudran Kannanar for his poem Pattinapalai?

(a) சேரன் செங்குட்டுவன் / Cheran Senguttuvan

(b) கரிகாலன் / Karikalan

(c) மலையமான் / Malaiyaman

(d) நெடுஞ்சேரல் ஆதன் / Nedunjeral Adan

23. தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (TRRI) அமைந்துள்ள இடம் எது?

Tamil Nadu Rice Research Institute (TRRI) is located in __________

(a) கோயம்புத்தூர் / Coimbatore

(b) தஞ்சாவூர் / Thanjavur

(c) ஆடுதுறை / Adutthurai

(d) நாகப்பட்டினம் / Nagapattinam

24. 6-14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை அரசு வழங்க வேண்டும் என்று எந்த அரசியலமைப்புச் சட்டம் (பிரிவு) அறிவிக்கிறது?

Which article declares that the state shall provide free and compulsory education to all children of the age 6-14 years?

(a) பிரிவு 21/ Article 21

(b) பிரிவு 14/ Article 14

(c) பிரிவு 21 A / Article 21A

(d) பிரிவு 17/ Article 17

25. எந்த ஷரத்து மாநிலம் தனியாக மலைவாழ் ஜாதியினருக்காக அமைச்சரை நியமிக்க வழிவகை செய்கிறது?

Which article empowers the state to appoint a separate minister for Tribals?

(a) 46

(b) 319

(c) 164 (1)

(d) 329

26. OSCC பின்வரும் இடர்பாடுகளுக்கான அவசரகால சேவைகளை வழங்குகிறது.

அ. அவசர காலத்திற்கேற்ற தகவலும், மீட்பு, சேவைகளும் வழங்குதல்

ஆ. உளவியல் – சமூக ஆதரவு/ஆலோசனை வழங்குதல்

இ. பெண் குழந்தைகளின் கல்வியில் கவனம் செலுத்துதல்

ஈ. மாற்றுத்திறனாளி பெண்களுக்கு உதவுதல்

OSCC will facilitate access to following services:

i. Emergency Response and Rescue Services.

ii. Psycho-social support/counselling

iii. Focus on education of girl children

iv. Differently abled women

(a) அ மட்டும் / i only

(b) அ மற்றும் இ மட்டும்/ i and iii only

(c) ஆ மற்றும் ஈ மட்டும் / ii and iv only

(d) அ மற்றும் ஆ மட்டும் / i and ii only

27. இந்திய அரசியல் சட்டத்தின் முப்பதாம் பிரிவு, சிறுபான்மையினர், தங்கள் விருப்பம்போல _______ தொடங்குவதற்காக உரிமையை உறுதி செய்கிறது

Article 30, of Indian constitution assures the right of minorities to establish _______ of their choice

(a) அரசியல் கட்சிகள் / Political parties

(b) கல்வி நிறுவனங்கள் / Educational institutions

(c) அரசியல் அமைப்புகள்/ Political organisations

(d) சமய அமைப்புகள் / Religious association

28. 2019-20ஆம் ஆண்டில், மகப்பேறுகால இறப்புத் தடுப்பு விகிதாச்சாரத்தில், பின்வரும் எந்த மாநிலங்கள், இலக்கை நோக்கி நிலையான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளன?

(அ) கேரளா

(ஆ) பஞ்சாப்

(இ) ஹிமாசல் பிரதேசம்

(ஈ) தமிழ்நாடு

The following states have achieved the sustainable development goal target in maternal mortality rate during 2019-20 are

i. Kerala

ii. Punjab

iii. Himachal Pradesh

iv. Tamil Nadu

(a) அ மட்டும் / i only

(b) அ மற்றும் ஈ / ii and iv

(c) அ மற்றும் ஈ / I and iv

(d) அ, இ மற்றும் ஈ / i, iii and iv

29. தமிழ்நாடு மாநிலமாக உருவாகும் போது ________ மாவட்டங்கள் மட்டுமே இருந்தன

The state of Tamil Nadu had only _______ districts at the time of its formation.

(a) 13

(b) 23

(c) 10

(d) 20

30. பிராமணரல்லாத இயக்கத்திற்கு அடித்தளமிட்டவர்

The foundation for the Non-Brahmin movement was laid by

(a) ஈ.வெ.ராமசாமி / E.V.Ramasamy

(b) மகாத்மா ஜோதிராவ் புலே/ Mahatma Jyothirao Phule

(c) டாக்டர்.அம்பேத்கர் / Dr.Ambedkar

(d) வீரசலிங்கம் பந்துலு / VeerasalingamPantulu

31. வைக்கம் சித்தியாகிரகம் என்பது எதனுடையப் போராட்டம்?

Vaikom Satyagraha was an agitation to demand

(a) பிராமணர் அல்லாதவர்களுக்கு கோவில் கட்டும் உரிமை / Right to build a temple for non-brahmins

(b) பிராமணர் அல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழைவதற்கான உரிமை / Right to entry of temple for non-brahimins

(c) வாக்கு செலுத்துவதற்கான உரிமை / Right to Vote

(d) பிராமணர்களை கோவிலில் இருந்து வெளியேற்ற / To oust the Brahmins out of Temple

32. 2020-21ல் நிலையான வளர்ச்சியில் தமிழகத்தின் ஒட்டு மொத்த செயல்திறன் __________ ஆகும்

In 2020-21 the overall performance of Tamil Nadu in the sustainable development was ____

(a) 1 தரம் / 1 Rank

(b) 2 தரம் / 2 Rank

(c) 3 தரம் / 3 Rank

(d) 4 தரம் / 4 Rank

33. அங்கீகரிக்கப்பட்ட உடல் புலன்கள் மூலம் பெறப்படாத, ஆனால் மனதினால் உணரப்படும் தகவல்களின் உரிமை கோரல் ஏற்புத்தன்மை இதில் அடங்கும்.

மேலே உள்ள வரையறைக்கு பொருத்தமானது

It includes claimed reception of information not gained through the recognized physical senses, but sensed with the mind.

The above definition is Apt for

(a) Brain cognition / மூளை அறிவாற்றல்

(b) Extra sensory perception / புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட உணர்வு

(c) Super Brain / சூப்பர் மூளை

(d) Artificial Intelligence / செயற்கை நுண்ணறிவு

34. ஒரு புத்தகத்தின் அத்தியாவசியப் பகுதியானது

Essential part of a book is _______

(a) அறிவு / Knowledge

(b) கல்வி / Education

(c) பக்கங்கள் / Pages

(d) படங்கள் / Pictures

35. நிறுவனத்தின் திறனை உயர்த்துவதற்காக “கட்டை விரல் விதிமுறைக்குப்” பதிலாக அறிவியல் பூர்வ வேலை பகுப்பாய்வு மூலம் வளர்ச்சியடைந்த முறைகள் பயன்படுத்தப்பட வேண்டும். கட்டைவிரல் விதி என்பது மேலாளர் தனது தனிப்பட்ட தீர்ப்புகள் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவு ஆகும். டைலரின் கருத்துப்படி, சாதாரண சிறிய உற்பத்தியைக் கூட அறிவியல் பூர்வமாகத் திட்டமிட இயலும். இது மனித திறனையும், நேரத்தையும் சேமிக்க உதவும்.

In order to increase organizational efficiency, the “Rule Of Thumb” method should be substituted by the methods developed through scientific analysis of work. Rule of thumb means decisions taken by manager as per their personal judgements. According to Taylor, even a small production can be scientifically planned. This will help in saving time as well as human energy.

Which one of the following is not implied in this passage?

(a) அறிவியல் முறைகள் நிறுவனச் செயல்திறனை அதிகரிக்கின்றன / Scientific methods increase organizational efficiency

(b) நேரத்தையும் மனித ஆற்றலையும் மிச்சப்படுத்துவது அறிவியல் ஆய்வு மூலம் சர்தியமாகும் / Saving of time as well as human energy is possible through scientific analysis.

(c) தனிப்பட்ட தீர்ப்பு “கட்டை விரல் விதி” என்று அழைக்கப்படுகின்றது / Personal judgement is called “Rule of Thumb”

(d) டைலரால் தோற்றுவிக்கப்பட்ட “கட்டை விரல் விதி” நிறுவனச் செயல்திறனை அதிகரிக்கும் / “Rule of Thumb” method initiated by Taylor increases organizational efficiency

36. கீழ்கண்டவற்றில் எந்த ஒரு பாக்டீரியம் உணவை நஞ்சாக்குவதில் பங்கு பெறுகிறது?

Which one of the following bacterium involved for food poisoning?

(a) லாக்டோபெசில்லஸ் பல்காரிக்கஸ் / Lactobacillus bulgaricus

(b) பேசில்லஸ் துரின்ஜென்சிஸ்/ Bacillus thuringiensis

(c) ரைசோஃபியம் மெலிலோட்டை / Rhizobium meliloti

(d) கிளாஸ்டிரிடியம் போட்டுலினம் / Clostridium botulinum

37. பகல் நேரத்தில் சுற்றுச்சுழல் வீழ்ச்சி விகிதம் இவற்றின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது

1. காற்றின் வேகம்.

2. சூரிய ஒளி.

3. நிலப்பரப்பு அம்சங்கள்.

4. முகிலுறை

The environmental laps rate during day time in governed by

i. Wind speed

ii. Sunlight

iii. Topographical features

iv. Cloud cover

(a) 1 மற்றும் 2 மட்டும் / i and ii only

(b) 2 மற்றும் 3 மட்டும்/ ii and iii only

(c) 1, 2 மற்றும் 3 மட்டும் / i, ii and iii only

(d) 1 மற்றும் 4 மட்டும் / i and iv only

38. கீழ்க்கண்ட நூல் ஐசக் நியூட்டனால் 1685-1686இல் எழுதப்பட்டது

This book was written by Isaac Newton during 1685 and 1686

(a) நோவம் ஆர்கானம் / Novm Organum

(b) டூ சீப் வேர்ல்டு சிஸ்டம்ஸ் / Two chief world systems

(c) பிசிக்கா / Physica

(d) பிரின்சிப்பியா மாத்மாட்டிக்கா / Principia Mathematica

39. கீழ்வருவனவற்றுள் எது ‘என் வழி மட்டுமே வழி அல்ல’ என்ற வாக்கியத்தின் மூலம் விளக்கப்படுகிறது?

(1) நேர்மை

(2) பகுத்தறிவு

(3) திறந்த மனப்பான்மை

(4) படைப்பாற்றல்

Which of the following is explained by the sentence, “My way is not the only way”?

i. Honesty

ii. Rationality

iii. Open Mindedness

iv. Creativity

(a) 1 மட்டும் / i only

(b) 2 மட்டும் / ii only

(c) 3 மட்டும் / iii only

(d) 4 மட்டும் / iv only

40. ஹபல் விதி எதனை அடிப்படையாகக் கொண்டது?

Hubble’s law is based on

(a) ஹீக் விதி / Hooke’s law

(b) காஸ் விதி / Gauss law

(c) கூலும் விதி / Coulomb’s law

(d) டாப்ளர்-விளைவு / Doppler Effect

41. அரசியல் சாசனத்தின்படி ஆளுநர் தாமாகச் செயல்பட முடியாது. ஆயினும் சில கடமைகளைத் தவிர என்பதை _______ கூறினார்

“The Governor under the constitution has no functions which he can discharge by himself” and that he has only “certain duties to perform” Whose statement is this?

(a) பிஸ்வந்த தாஸ் / Biswanth Das

(b) ரோஹினிகுமார் சௌத்திரி / Rohini Kumar Chaudhri

(c) ஹெச்.வி.காமத் / H.V.Kamath

(d) பி.ஆர்.அம்பேத்கர் / B.R.Ambedkar

42. பின்வரும் கருத்தியல்களைக் கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகளைப் பற்றிய சரியானவற்றைக் கண்டறியவும்

1. அரசியல் கட்சிகள் வாக்காளர்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன.

2. இருகட்சி மற்றும் பலகட்சி அமைப்பு முறை ஜனநாயகத்தின் பாதுகாப்பிற்கு அவசியம

3. அமைச்சரவைக்கும், சட்டப்பேரவைக்கும் இடையே சுமூகமான ஒத்துழைப்பை அரசியல் கட்சிகள் உருவாக்குகின்றன.

Consider the following statements and identify the correct ones about political parties.

1. Political parties create political consciousness among the voters.

2. Bi party and multi party systems are necessary for the protection of democracy.

3. Political parties create cooperation between the executive and legislature.

(a) 1 மற்றும் 2/ 1 and 2

(b) 2 மற்றும் 3/ 2 and 3

(c) 1 மற்றும் 3/ 1 and 3

(d) 1, 2 மற்றும் 3 / 1, 2 and 3

43. மருத்துவத்துறைக்கான 2021ம் ஆண்டின் நோபல் பரிசு வென்றவர்கள் யார்?

The noble prize for medicine in 2021 was awarded to ________

(a) டேவிட் ஜீலியஸ் மற்றும் ஆர்டெம் பாட்ட பூட்டியான் / David Julius and Ardem Patapoutian

(b) சையூகியூரோ மற்றும் ஹேசல்மேன் / Syukuro and Hasselmann

(c) பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் டேவிட் மேக்மிலன் / Benjamin list and David Mac Millan

(d) அப்துல் ரசாக் மற்றும் மரியா ரெஸா / Abdul Razak and Maria Reza

44. சமீபத்தில், குவஹாத்தியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) ஆராய்ச்சியாளர்கள் அலட்ராசவுண்ட் உதவியுடனான நொதித்தல் முறையில் உருவாக்கிய பாதுகாப்பான சர்க்கரை மாற்றுப் பொருள் எது?

Recently, researchers at the Indian Institute of Technology (IIT), Guwahati have developed and ultrasound-assisted fermentation method to produce a safe sugar substitute from baggare is called _____

(a) குளுசிட்டால் / Glucitol

(b) சைலால் / Xylol

(c) சைலிடால் / Xylitol

(d) மேனிட்டால் / Mannitol

45. 1970ஆம் ஆண்டில் 100 சதவித கிராமப்புற மின்மயமாக்கலைப் பெற்ற இந்தியாவின் முதல் மாநிலம்

_______ Was the first state in India to achieve 100% rural electrification in 1970

(a) அஸ்ஸாம் / Assam

(b) ஹரியானா / Haryana

(c) உத்தரப்பிரதேசம் / Uttar Pradesh

(d) கர்நாடகா / Karnataka

46. கோவிட்-19 வைரஸில் எந்த மரபுப்பொருள் உள்ளது

Name the type of genome found in Covid 19 virus

(a) இரு இழை டி.என்.ஏ / ds DNA

(b) ஒரு இழை டி.என்.ஏ / ss DNA

(c) ஒரு இழை ஆர்.என்.ஏ / ss RNA

(d) இரு இழை ஆர்.என்.ஏ / ds RNA

47. இந்தியாவின் எந்த மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் உயிரிவாயு உற்பத்தி ஆலைகள் அமைந்துள்ளது?

Which Indian state has largest number of biogas plants?

(a) தமிழ்நாடு / Tamil Nadu

(b) கேரளா / Kerala

(c) ஒடிசா/ Odisha

(d) மகாராஷ்டிரா / Maharashtra

48. உழவு இல்லாத விவசாயத்தின் பழமையான வடிவம் எது?

Primitive form of agriculture in which absence of plough is called ________

(a) மண்வெட்டி விவசாயம் / Hoe Farming

(b) உலர் விவசாயம் / Dry Farming

(c) ஈரமான விவசாயம் / Wet Farming

(d) இயற்கை விவசாயம் / Organic Farming

49. சதுப்பு நிலக்காடுகளில் காணப்படும் முக்கிய மரவகை எது?

Which is the major tree species of tidal forest?

(a) ஆலிவ் / Olive

(b) சுந்தரி / Sundri

(c) பைன் / Pine

(d) சந்தனம் / Sandal

50. மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்டம் எந்தக் கனிமத்திற்குப் பெயர் பெற்றது?

Panna district of Madhya Pradesh is famous for which mineral?

(a) வைரம் / Diamond

(b) டோலமைட் / Dolomite

(c) மைக்கா / Mica

(d) பாக்சைட் / Bauxite

51. இந்தியாவின் மிக உயரமான ஈர்ப்பு விசை அணை எது?

Which is the highest straight gravity dam in India?

(a) பக்ரா அணை / Bhakra dam

(b) ஹிராகுட் அணை / Hirakud dam

(c) நர்மதா சாகர் அணை / Narmada sagar dam

(d) தெஹ்ரி அணை / Tehri dam

52. இமயமலையில் காங்க்ரா பள்ளத்தாக்கு அமைந்துள்ள இடம்

Kangra valley is located in _________ Himalayas

(a) ஹிமாத்ரி / Himadri

(b) ஹிமாச்சல் / Himachal

(c) குமாயுன்/ Kumaun

(d) மிரி / Miri

53. சரியான விடையை தேர்வு செய்யுக:

குப்த அரசர்களில் ‘மகா ராஜாதிராஜா’ என்ற பட்டப்பெயரை சூட்டிக்கொண்டவர் யார்?

Choose the right answer:

Among the Gupta rulers who adopted the title “Mahrajadhiraja”?

(a) ஸ்ரீ குப்தர் / Sree Gupta

(b) முதலாம் சந்திர குப்தர் I / Chandra Gupta-I

(c) சமுத்திர குப்தர் / Samudra Gupta

(d) குமார குப்தர் / Kumara Gupta

54. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மத சமத்துவம் பிரிவு ________இல் வழங்கப்பட்டுள்ளது

Religious equality in the Indian Constitution has been provided in _______

(a) பிரிவு எண் 15/ Article 15

(b) பிரிவு எண் 25/ Article 25

(c) பிரிவு எண் 26/ Article 26

(d) பிரிவு எண் 27/ Article 27

55. ராம் மோகன் ராய் பற்றிய கீழ்வரும் கூற்றுகளில் எவை உண்மையானவை?

1. குழந்தைத் திருமணத்திற்கு எதிராகப் போராடினார்.

2. உடன்கட்டைக்கு எதழராகப் பிரச்சாரம் செய்தார். மேலும் பிரிட்டிஷ் அரசுடன் சேர்ந்து அதை ஒழிப்பதில் வெற்றி பெற்றார்.

3. இந்து மதத்தில் இருக்கும் உருவ வழிபாட்டையும் வழிபாட்டு முறைகளையும் எதிர்த்தார்

4. சமஸ்கிருத மொழி மூலம் பாரம்பரிய கல்வியைப் பரப்ப போராடினார்.

Which of the following statements about Ram Mohan Roy are True?

1. He fought against child marriage

2. He campaigned against the practice of Sati and succeeded in getting it abolished by the British Government.

3. He opposed the Hindu system of Idolatry and cult.

4. He fought for the spread of Traditional education through the medium of Sanskrit.

(a) 1, 2, 3, 4

(b) 1, 2, 4

(c) 1, 2, 3

(d) 2, 3, 4

56. ‘மலிந்த பன்கா’ வை எழுதியவர் என்ற பெருமைக்குரியவர் யார்?

Which writer is credited with having written ‘Milinda-Panha’?

(a) அசுவகோசர் / Asvaghosha

(b) நாகசேனர் / Nagasena

(c) புத்தகோசர்/ Buddhaghosha

(d) தம்மபாலர் / Dhammapala

57. புகழுர் கல்வெட்டு எந்த இராஜ்ஜியத்துடன் தொடர்புடையது?

Pugalur Inscription refers to which dynasty?

(a) சேரர்கள் / Cheras

(b) சோழர்கள் / Cholas

(c) பாண்டியர்கள் / Pandyas

(d) பல்லவர்கள் / Pallavas

58. எந்த இணைகள் சரியாகப்பொருந்துகின்றன:

1. இத்மத்-உத்தௌலா கல்லறை – நூர்ஜஹான்

2. சம்பலிலுள்ள மசூதி – பாபர்

3. ஜிம்மா மசூதி – ஷாஜஹான்

4. பானிப்பட்டிலுள்ள காபுலிபாக் மசூதி – ஒளரங்கசீப்

Which are the pairs are correctly matched?

1. Tomb of Itmud-Uddaula – Nurjahan

2. Mosque at Sambal – Babur

3. Jama Masjid – Shajahan

4. Kabuli Bagh Mosque at Panipat – Aurangazeb

(a) 1, 2, 3

(b) 1, 2, 4

(c) 1&2

(d) 1, 2, 3, 4

59. கூற்று (A): 1299இல் அலாவுத்தீன் கில்ஜி மால்வாவையும், குஜராத்தையும் கைப்பற்ற தனது இரண்டு தளபதிகளின் கீழ் ஒரு பெரிய படையை அனுப்ப முடிவு செய்தார்

காரணம் (R): இந்தப் படையெடுப்புக்கு அவரிடம் வலுவான காரணங்கள் இருந்தன. இந்தப் பகுதிகள் வளமானவையாகவும், மக்கள் தொகை கொண்டவையாகவும் இருந்ததோடு, மேற்குக் கடல் துறைமுகங்களைக் கட்டுப்பாட்டில் வைத்து, கங்கை சமவெளிகளோடு வர்த்தகம் செய்வதற்கான இணைப்பு வழிகளாகவும் இருந்தன

Assertion (A) : IN 1299, Ala-ud-din Khalji decided to capture Malwa and Gujarat and sent a large army under two of his generals.

Reason (R) : He had strong reasons for this expedition, as not only were these areas fertile and populous, but also controlled the Western Sea-Ports and Trade-Routes-connection them with Ganga valley

(a) (A)_மற்றும் (R) ஆகிய இரண்டும் சரி (R) என்பது (A)விற்க சரியான விளக்கமாகும் / Both (A) and (R) are true and (R) explains (A)

(b) (A) மற்றும் (R) ஆகிய இரண்டும் சரி ஆனால் (R) என்பது (A)விற்கான சரியான விளக்கமல்ல / Both (A) and (R) are true but (R) does not explain (A)

(c) (A) மட்டுமே சரி / Only (A) is true

(d) (R) மட்டுமே சரி / Only (R) is true

60. கூற்று (A) : சிந்து மக்கள் உலோக நாணயத்தைப் பயன்படுத்தவில்லை

காரணம் (R): உலோக நாணயங்களை உருவாக்கும் தொழில்நுட்பம் அவர்களிடம் இல்லை

Assertion (A): The Indus people did not use coins.

Reasong (R): They did not have the technology make metallic coins.

(a) (A) சரி ஆனால் (R) தவறு / (A) is true but (R) is false.

(b) (A) மற்றும் (R) ஆகிய இரண்டும் சரி மற்றும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமாகும் / Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)

(c) (A) தவறு ஆனால் (R) சரி / (A) is false but (R) is true

(d) (A) மற்றும் (R) ஆகிய இரண்டும் சரி. ஆனால் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல / Both (A) and (R) are true but (R) is not the correct explanation of (A)

61. முதன் முதலில் லோக் அயுக்தா அமைப்பினை நிறுவியது

The institution of Lokayuktha was established first in

(a) ஒடிசா / Odisha

(b) மஹாராஷ்ட்டிரா / Maharashtra

(c) ராஜஸ்தான் / Rajasthan

(d) பீஹார் / Bihar

62. சட்டமியற்றும் அதிகார ஒப்படைப்பு என்பது, இதன் ஆட்சிப்பரப்பிற்கு உட்பட்டதாகும்.

“Delegated Legislation” belongs to the realm of

(a) நிர்வாகச் சட்டம் / Administrative law

(b) இயற்கைச் சட்டம்/ Natural Law

(c) பாராளுமன்றச் சட்டம் / Parliamentary legislation

(d) நீதிமன்றத்தீர்ப்புரைகள் / Judicial Pronouncements

63. கீழ்வருவனவற்றுள் எது ஒன்றிய அரசின் பட்டியலில் இடம் பெறவில்லை?

1. பொது மற்றும் தனியார் துறை நிறுவன வரி

2. பணம் மற்றும் நாணயம்

3. பொதுக்கடன்

4. மூலதன வரி

Which of the following is not placed under the Union List?

1. Corporation Tax

2. Currency and coinage

3. Public Debt

4. Capitation Tax

(a) 1 மற்றும் 4 ஆகியன மட்டும் / 1 and 4 only

(b) 2 மற்றும் 4 ஆகியன மட்டும் / 2 and 4 only

(c) 4 மட்டும் / 4 only

(d) 3 மற்றும் 4 ஆகியன மட்டும் / 3 and 4 only

64. தவறான இணையைத் தெரிவு செய்க:

1. DDA – தில்லி வளர்ச்சி முகமை

2. PRI – பஞ்சாயத்து ராஜ் கருவிகள்

3. CDP – சமூக மேம்பாட்டுத் திட்டம்

4. NES – தேசிய விரிவாக்கச் சேவைகள்

Choose the wrong mathes:

1. DD – Delhi development Authority

2. PRI – Panchayat Raj Institutions

3. CDP – Community Development Programme

4. NES – National Extension Services

(a) 1 and 2 only / 1 மற்றும் 2 ஆகியன மட்டும்

(b) 2 and 3 only / 2 மற்றும் 3 ஆகியன மட்டும்

(c) 3 and 4 only / 3 மற்றும் 4 ஆகியன மட்டும்

(d) 1 and 4 only / 1 மற்றும் 4 ஆகியன மட்டும்

65. பிழையான கூற்றினைத் தேர்வு செய்க:

1. குடியரசுத் தலைவர் அரசாங்கத்தின் தலைவராவார்

2. பிரதமரே உண்மையான செயலாட்சியாளர்

3. விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை பிரதமர் தேர்தலுடன் தொடர்புடையது

4. ஒன்றியத்தின் செயலாட்சி அதிகாரம் குடியரசுத் தலைவருடையது, எண்ணம் அது பெயரளவிலானது

Choose the wrong statements:

1. President is the head of the Government

2. Prime Minister is the Real Executive

3. Proportional Representation is Associated with Priministerial Election.

4. The executive power of the Union is vested with the president but he is only a nominal head.

(a) 1 மற்றும் 3 ஆகியன மட்டும் / 1 and 3 only

(b) 2 மற்றும் 3 ஆகியன மட்டும் 2 and 3 only

(c) 4 மற்றும் 2 ஆகியன மட்டும் / 4 and 2 only

(d) 1 மற்றும் 2 ஆகியன மட்டும் / 1 and 2 only

66. கீழ்வருவனவற்றுள் எது அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடு அல்ல

Which of the following is not a directive principle’s of State Policy?

(a) பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் சம வேலைக்குச் சமமான ஊதியம் வழங்கல் / Securing equal pay for equal work for both men and women

(b) பணியிட வசதிகளை மேம்படுத்தல் / Improving working conditions

(c) அட்டவணைப்படுத்தப்பட்ட சாதி மற்றும் பழங்குடியினர்களின் நிலைமையை உயர்த்துதல் / Upliftment of SCs/STs

(d) தீண்டாமையை ஒழித்தல் / Abolition of untouchability

67. குடியுரிமை பெறும் வழிகள்

அ. பிறப்பு

ஆ. மரபு வழி.

இ. பதிவு முறை.

ஈ. இயற்கை மயமாக்கல்

Ways of Acquisition of citizenship

(b) Birth

(b) Descent

(c) Registration

(d) Naturalisation

(a) அ மற்றும் ஆ மட்டும் / a and b only

(b) ஆ மற்றும் இ மட்டும் / b and c only

(c) அ, ஆ மற்றும் இ மட்டும் / b and c only

(d) அ, ஆ, இ மற்றும் ஈ / a, b and c only

68. பட்டியல் Iனைப் பட்டியல் IIஉடன் பொருத்திச் சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

பட்டியல் I பட்டியல் II

அ. சட்டப்பிரிவு 110 1. அகில இந்திய பணிகள்

ஆ. சட்டப்பிரிவு 312 2. சட்டத்தின் முன் சமத்துவம்

இ. சட்டப்பிரிவு 280 3. பண மசோதா

ஈ. சட்டப்பிரிவு 14 4. நிதி ஆணையம்

Match List I with List II and choose the correct answer from options given below:

List I List II

(a) Art, 110 1. All India Services

(b) Art, 312 2. Equality before law

(c) Art, 280 3. Money bill

(d) Art, 14 4. Finance commission

a b c d

(a) 3 1 4 2

(b) 4 2 1 3

(c) 1 2 3 4

(d) 3 2 4 1

69. பொருளாதாரத்தில் ‘சுய சார்பு’ என்ற சொல் ________ஐக் குறிக்கிறது

In Economics the term “Self reliance” refers to _____

(a) தன்னிறைவு / Self Sufficient

(b) சுய தேவை / Self need

(c) சுய ஆதரவு / Self Support

(d) சமூகப் பொருளாதாரத்திறன் / Socio-Economic ability

70. தவறான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:

வனத்துறையின் இலக்கு மற்றும் நோக்கங்கள்

Choose the wrong answer:

The objectives of the forest department are

(a) சுற்றுச்சூழல் உறுதிப்படுத்தல் மற்றும் வன உற்பத்தியை மேம்படுத்துதல் / Environmental statbilization and enhancement of forest productivity.

(b) காடழிப்பு மற்றும் வாழ்விட அழிவு / Deforestation and Habitat destruction

(c) இயற்கை காடு மற்றும் வன உயிரினங்களைப் பாதுகாத்தல்/ Preserving natural forests and wildlife

(d) சுற்றுச்சூழல் அமைப்புகளின் பாதுகாப்பு மற்றும் அவற்றின் மரபணு வேறுபாடு / Conservation of eco systems and their genetic diversity

71. ஐந்தாவது ஐந்தாண்டு திட்ட (1974-79) காலத்தில், ‘கரிபி ஹட்டோ’, என்ற கோஷம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பொருளைக் குறிப்பிடவும்.

During the Fifth Five Year Plan (1974-79) the government introduced the slogan of “Garibi Hatao”, Mention the meaning of the slogan.

(a) வறுமை ஒழிப்பு / Removal of poverty

(b) தன்னிறைவை நோக்கி நகர்தல் / Move towards self-Reliance

(c) சமதர்ம சமூக முறை / Socialistic pattern of society

(d) வேலை வாய்ப்பை உருவாக்குதல் / Generate employment

72. உலக வங்கி 2017 வெளியீட்டின்படி ஏழ்மைக் கோட்டின் ‘அதீத ஏழ்மை’ அளவீடு என்பது

As per World Bank Guidelines 2017, the extreme poverty line is set at

(a) $ 1.2 ஒருநாள் / $ 1.2 per day

(b) $ 1 ஒருநாள் / $ 1 per day

(c) $ 1.5 ஒருநாள் / $ 1.5 per day

(d) $ 1.90 ஒருநாள் / $ 1.90 per day

73. 1991ஆம் ஆண்டின் புதிய தொழில் கொள்கை இதற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது?

(அ) தாராள மயம்

(ஆ) தனியார் மயம்

(இ) உலகமயமாதல்

கீழ்கண்ட குறியீட்டிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:

The New Industrial Policy 1991 concentrated on:

i. Liberalisation

ii. Privatisation

iii. Globalisation

Select the correct answers from the codes given below:

(a) அ மற்றும் ஆ/ i and ii

(b) ஆ மற்றும் இ / ii and iii

(c) அ மற்றும் இ/ i and iii

(d) அ, ஆ மற்றும் இ / i, ii and iii

74. கீழ்காண்பனவற்றுள் எது இந்திய ரிசர்வ் வங்கியில் மத்திய அலுவலகத் துறைகளின் ஒரு பகுதி அன்று?

Which one of the followings is not a part of central office departments in Reserve Bank of India?

(a) வங்கி செயல்பாடு மற்றும் வளர்ச்சித் துறை / Department of Banking Operations and Development

(b) பண மேலாண்மைத்துறை / Department of Currency Management

(c) மனித வள ஆள் சேர்ப்புத் துறை / Department of Recruiting Human Resources

(d) பொருளாதார கோட்பாடு மற்றும் ஆய்வுத் துறை / Department of Economic Analysis and Policy

75. இந்தியாவின் முன்னாள் பிரதமர் நேரு அவர்கள் ________ ஆண்டில் திட்டக் குழுவை அமைத்தார்

Jawaharlal Nehru, the former Prime Minister of India set up the planning commission in ______

(a) 1950

(b) 1951

(d) 1952

(d) 1953

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!